மாயா மச்சேந்திரா, நர சிம்மம் பார்க்க வந்தீரா?
இந்த இரவி செஞ்சது சரியா நீங்களே சொல்லுங்க. மாதவிப் பந்தல்ல இது தான் கடைசி இடுகைன்னு ஒரு Dash அடிச்சுட்டு ஓரமா போயி உக்காந்துட்டாரு. ஆனா நம்ம நாச்சியாரு உடுவாங்களா?
'டேய் தோழா. நீ இங்க ஓரமா வந்து குந்திக்க. ஓம் நமோ Dashல படம் படமா போட்டு விளக்குனீயே அவுக (அ) - நானு (உ) - எங்கப்பா (ம).
எல்லாரும் ஒரே லெவல்ல நின்னு ஒரு இரகசியம் சொல்றோம் - எங்கப்பா இடத்துல வேணா நீ நின்னுக்கோ.
பந்தல்ல 'அவுக' பேரு வச்சிருக்கிற இன்னொரு குயில் உக்காந்து பாடட்டும்'ன்னு இரவியோட தோழி சொல்லிட்டாங்க.
நியூயார்க்கன் நண்பனா இருந்தாலும் இன்னும் இந்தத் தென்பாண்டி வழக்கத்தை கோதை விடலை பாருங்க. ரங்கன்னு புருசன் பேரைச் சொல்லாம அவுகன்னு சொல்றாங்க.
கோதை சொல்லை கோவிந்தனே தட்ட மாட்டான் மத்தவுங்க தட்டிட முடியுமா? நம்மாளு இரவி ஓரமா குந்திக்கினு இருக்காரு இப்ப. பந்தல் பக்கம் எட்டிப் பாத்தா ஆட்டோ அனுப்புவேன்னு சொல்லியிருக்கேன்.
'முத்தைத் தரு பத்தித் திருநகை'ன்னு முருகன் அருணகிரிநாதருக்கு எடுத்துக் குடுத்த மாதிரி இந்தப் புதுக்குயிலுக்கும் 'கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனா கண்டேன்'ன்னு வல்லியம்மா... சாரி சாரி...கோதையம்மா எடுத்துக் குடுத்திருக்காங்க.
(நாச்சியாரு நரசிம்மனுன்னு சொன்னாலே வல்லியம்மா ஞாபகம் தானே வருது. அதுனால நடுவுல கோதையம்மான்னு சொல்ல வந்து வல்லியம்மான்னு சொல்லிட்டேன்.)
இந்தக் குயிலாரும் 'யாரு அந்த கோளரி ஆளரி'ன்னு கிண்டல் செய்யாம பொறுமையா உக்காந்து 'தாயே. அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாக நீ வந்தாய்.
நீயும் உன் அஞ்சுக்குடியைச் சேர்ந்தவர்களும் அழகிய சிங்கனின் மேல் என்ன என்ன பாடியிருக்கிறீர்களோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் படித்து எழுதுகிறேன்'ன்னு படிச்சு இங்கன எழுதப் போறாரு.
யாரு இந்தப் புதுக்குயில்?
'டேய் தோழா. நீ இங்க ஓரமா வந்து குந்திக்க. ஓம் நமோ Dashல படம் படமா போட்டு விளக்குனீயே அவுக (அ) - நானு (உ) - எங்கப்பா (ம).
எல்லாரும் ஒரே லெவல்ல நின்னு ஒரு இரகசியம் சொல்றோம் - எங்கப்பா இடத்துல வேணா நீ நின்னுக்கோ.
பந்தல்ல 'அவுக' பேரு வச்சிருக்கிற இன்னொரு குயில் உக்காந்து பாடட்டும்'ன்னு இரவியோட தோழி சொல்லிட்டாங்க.
நியூயார்க்கன் நண்பனா இருந்தாலும் இன்னும் இந்தத் தென்பாண்டி வழக்கத்தை கோதை விடலை பாருங்க. ரங்கன்னு புருசன் பேரைச் சொல்லாம அவுகன்னு சொல்றாங்க.
கோதை சொல்லை கோவிந்தனே தட்ட மாட்டான் மத்தவுங்க தட்டிட முடியுமா? நம்மாளு இரவி ஓரமா குந்திக்கினு இருக்காரு இப்ப. பந்தல் பக்கம் எட்டிப் பாத்தா ஆட்டோ அனுப்புவேன்னு சொல்லியிருக்கேன்.
'முத்தைத் தரு பத்தித் திருநகை'ன்னு முருகன் அருணகிரிநாதருக்கு எடுத்துக் குடுத்த மாதிரி இந்தப் புதுக்குயிலுக்கும் 'கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனா கண்டேன்'ன்னு வல்லியம்மா... சாரி சாரி...கோதையம்மா எடுத்துக் குடுத்திருக்காங்க.
(நாச்சியாரு நரசிம்மனுன்னு சொன்னாலே வல்லியம்மா ஞாபகம் தானே வருது. அதுனால நடுவுல கோதையம்மான்னு சொல்ல வந்து வல்லியம்மான்னு சொல்லிட்டேன்.)
இந்தக் குயிலாரும் 'யாரு அந்த கோளரி ஆளரி'ன்னு கிண்டல் செய்யாம பொறுமையா உக்காந்து 'தாயே. அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாக நீ வந்தாய்.
நீயும் உன் அஞ்சுக்குடியைச் சேர்ந்தவர்களும் அழகிய சிங்கனின் மேல் என்ன என்ன பாடியிருக்கிறீர்களோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் படித்து எழுதுகிறேன்'ன்னு படிச்சு இங்கன எழுதப் போறாரு.
யாரு இந்தப் புதுக்குயில்?
ஆளரி கோளரின்னா யாரு?
அஞ்சுக்குடி பத்துக்குடி சாத்துக்குடின்னு எல்லாம் வருதே; அப்புடின்னா என்னா?
ஆமாங்க. என்ன தான் லோகல்ல பேசுனாலும் சில நேரம் பேசுற விசயம் என்னான்னு புரிபடறதுக்கு கொஞ்சம் நேரம் ஆகத் தான் செய்யுது. அந்த கஷ்டம் எனக்கும் இராம் தம்பிக்கும் தான் தெரியும். சரி தானா ராம் பபு?
அஞ்சுக்குடின்னா நம்ம டகால்டி இரவி அடிக்கடி சொல்லுவாரே அந்த ஆழ்வாருங்க தானுங்க.
அவங்க பாடுன பாட்டெல்லாம் சேத்து நாலாயிர திவ்விய பிரபந்தம்ன்னு நம்ம இரவி அடிக்கடி சொல்லுவாரே.
அந்தப் பாட்டுல நம்ம பல்ராம் நாயுடு...சாரி..சாரி..நரசிம்ம நாயுடு எங்க எல்லாம் வர்றாருன்னு நம்ம புதுக்குயில் புட்டு புட்டு வைக்கப்போகுது. அம்புட்டுத் தாங்க விசயமே.
கோளரி ஆளரின்னா நம்ம சின்னத்தம்பி பிரபு... ஐயய்யோ தப்பு தப்பு... சின்னத்தம்பி பெருகலாதன் (ப்ரஹ்லாதன்) கூப்புட்டவுடனே கோவிச்சுக்காம ஓடி வந்தாரே நம்ம நரசிம்ம பிரபு அவரு தாங்க.
நம்ம புதுக்குயிலைப் பத்தி இப்ப சொல்லணும்ல. இவரு இரவிசங்கரை விட பெரிய ஆளா இருப்பாரு போலிருக்குங்க. எப்பப் பாரு 'கண்ணன் லீலைகள் செய்வானே. கண்ணன் மாயங்கள் புரிவானே'ன்னு பாடிக்கிட்டே இருக்காரு. கேட்டா அவரோட maayaa.net க்கு விளம்பரமாம்.
சரி விளம்பரம் தான் பண்றாரே; அப்புடி என்ன தான் அங்கன இருக்குன்னு போயி பாக்கலாம்ன்னு போனா அசந்து போயிட்டேங்க. பாடுறாரு ஆடுறாரு கதை சொல்றாரு இன்னும் நிறைய நிறைய பண்றாரு. ஆடுறாருன்னா சொன்னேன். அத மட்டு எடுத்துருங்க. மத்ததெல்லாம் பண்றாரு அங்க. நீங்களும் ஒருவாட்டி போயி பாருங்க. அப்புறம் அங்கயே குடியிருந்திருவீங்க. பந்தல்ல ஆளில்லாம போயிரும்.
இந்தச் சின்ன குயில் சீரங்கன் (Rangan Anna) இனிமே கொஞ்ச நாளுக்கு பந்தல்ல Guest-ஆ குடி வரப் போறாரு. 'நாலாயிரத்தில் நரசிம்மன்'ங்கற டாபிக்ல தொடர்ந்து பேசுவாரு.
பேசுவாருன்னா சொன்னேன். ஆமாங்க பெங்களூருவுல நிறைய இடத்துல பிரசங்கம் பண்ற குயில் தான் இந்தக் குயில். அதனால பேசுவாருன்னு சொல்றது சரி தான். இவரு என்ன தான் சொல்லப்போறாருன்னு இனி மேல் உக்காந்து கேட்டா தெரிஞ்சிரும்.
நான் ரெடி நீங்க ரெடியா?
ஆமாங்க. என்ன தான் லோகல்ல பேசுனாலும் சில நேரம் பேசுற விசயம் என்னான்னு புரிபடறதுக்கு கொஞ்சம் நேரம் ஆகத் தான் செய்யுது. அந்த கஷ்டம் எனக்கும் இராம் தம்பிக்கும் தான் தெரியும். சரி தானா ராம் பபு?
அஞ்சுக்குடின்னா நம்ம டகால்டி இரவி அடிக்கடி சொல்லுவாரே அந்த ஆழ்வாருங்க தானுங்க.
அவங்க பாடுன பாட்டெல்லாம் சேத்து நாலாயிர திவ்விய பிரபந்தம்ன்னு நம்ம இரவி அடிக்கடி சொல்லுவாரே.
அந்தப் பாட்டுல நம்ம பல்ராம் நாயுடு...சாரி..சாரி..நரசிம்ம நாயுடு எங்க எல்லாம் வர்றாருன்னு நம்ம புதுக்குயில் புட்டு புட்டு வைக்கப்போகுது. அம்புட்டுத் தாங்க விசயமே.
கோளரி ஆளரின்னா நம்ம சின்னத்தம்பி பிரபு... ஐயய்யோ தப்பு தப்பு... சின்னத்தம்பி பெருகலாதன் (ப்ரஹ்லாதன்) கூப்புட்டவுடனே கோவிச்சுக்காம ஓடி வந்தாரே நம்ம நரசிம்ம பிரபு அவரு தாங்க.
நம்ம புதுக்குயிலைப் பத்தி இப்ப சொல்லணும்ல. இவரு இரவிசங்கரை விட பெரிய ஆளா இருப்பாரு போலிருக்குங்க. எப்பப் பாரு 'கண்ணன் லீலைகள் செய்வானே. கண்ணன் மாயங்கள் புரிவானே'ன்னு பாடிக்கிட்டே இருக்காரு. கேட்டா அவரோட maayaa.net க்கு விளம்பரமாம்.
சரி விளம்பரம் தான் பண்றாரே; அப்புடி என்ன தான் அங்கன இருக்குன்னு போயி பாக்கலாம்ன்னு போனா அசந்து போயிட்டேங்க. பாடுறாரு ஆடுறாரு கதை சொல்றாரு இன்னும் நிறைய நிறைய பண்றாரு. ஆடுறாருன்னா சொன்னேன். அத மட்டு எடுத்துருங்க. மத்ததெல்லாம் பண்றாரு அங்க. நீங்களும் ஒருவாட்டி போயி பாருங்க. அப்புறம் அங்கயே குடியிருந்திருவீங்க. பந்தல்ல ஆளில்லாம போயிரும்.
இந்தச் சின்ன குயில் சீரங்கன் (Rangan Anna) இனிமே கொஞ்ச நாளுக்கு பந்தல்ல Guest-ஆ குடி வரப் போறாரு. 'நாலாயிரத்தில் நரசிம்மன்'ங்கற டாபிக்ல தொடர்ந்து பேசுவாரு.
பேசுவாருன்னா சொன்னேன். ஆமாங்க பெங்களூருவுல நிறைய இடத்துல பிரசங்கம் பண்ற குயில் தான் இந்தக் குயில். அதனால பேசுவாருன்னு சொல்றது சரி தான். இவரு என்ன தான் சொல்லப்போறாருன்னு இனி மேல் உக்காந்து கேட்டா தெரிஞ்சிரும்.
நான் ரெடி நீங்க ரெடியா?
- கான மயில்களாட கண்டிருந்த வான்கோழி
அன்பன் குமரன்.
_____________________________________________________________________
இப்போ ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பிப்போமா?
நேரம்: சுமார் 15 வருஷம் முன்பு, ஒரு மாலைப் பொழுது
விஞ்ஞானம் மீண்டும் பேசுகிறது: ஏன்?
மீண்டும் அங்கு சிறிது மௌனம் ...
அன்பன் குமரன்.
_____________________________________________________________________
நம்மையுடையவன் நாராயணன் நம்பியை வணங்கி, மாதவிப்பந்தல் அன்பர்களுக்கு என் வணக்கங்கள்.
ஆலமரம் போன்று விருத்தியடைந்திருக்கும் மாதவிப்பந்தலில் எழுத வாய்ப்பளித்த கண்ணபிரான் ரவிசங்கருக்கும்,
அறிமுகப்படுத்திய கூடல் குமரனாருக்கும், கண்ணபிரானை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்த ராகவனுக்கும் என் நன்றிகள்.
ஆலமரம் போன்று விருத்தியடைந்திருக்கும் மாதவிப்பந்தலில் எழுத வாய்ப்பளித்த கண்ணபிரான் ரவிசங்கருக்கும்,
அறிமுகப்படுத்திய கூடல் குமரனாருக்கும், கண்ணபிரானை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்த ராகவனுக்கும் என் நன்றிகள்.
இப்போ ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பிப்போமா?
இடம்: ஒரு கல்லூரி விடுதி
நேரம்: சுமார் 15 வருஷம் முன்பு, ஒரு மாலைப் பொழுது
சில கல்லூரி மாணவர்கள் தேநீர் அருந்திக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். பல இடங்களையும், மிருகங்களையும், பொருட்களையும், மனிதர்களையும், நண்பர்களையும் கேலி செய்து நடந்த அந்த அரட்டை, ஒரு நேரத்தில் தெய்வத்தைப் பற்றித் திரும்பியது.
'ஆகா, இது நமக்குப் பிடித்ததாயிற்றே!' என்று ஆத்திக மாணவர்களும், 'ஆகா, இது நமக்கு மிகவும்பிடித்த தலைப்பாயிற்றே!' என்று நாத்திக மாணவர்களும், மிகவும் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்தனர். சில மாணவர்கள், இரண்டு பக்கமும் இல்லாமல், 'நான்', 'விஞ்ஞானம்','அறிவு', லாஜிக், என்று, போலி நடுநிலையாக - 'மூன்றாவது பக்கம்' நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.
மிகவும் உச்ச கட்டத்தில்:
ஒரு விஞ்ஞானம் பேசுகிறது ('யௌவன கர்வம்' தலை விரித்தாட): கடவுள் இருந்தால், அவனைக் காண்பி!
ஒரு ஆத்திக மாணவன்: அவர் இருக்கிறார், ஆனால் நானோ நீயோ கூப்பிட்டால் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
விஞ்ஞானம் மீண்டும் பேசுகிறது: ஏன்?
அதே ஆத்திக மாணவன்: ஒரு அரசியல்வாதியோ, ஒரு அரசாங்க அதிகாரியோ,
நீ கேட்டவுடன், உடனே கேட்டதைக் கொடுக்கின்றார்களா? அவருக்கு வேண்டியதை' நீ கொடுத்தவுடன் தானே உனக்கு வேண்டியதைக் கொடுக்கின்றனர்!
நீ கேட்டவுடன், உடனே கேட்டதைக் கொடுக்கின்றார்களா? அவருக்கு வேண்டியதை' நீ கொடுத்தவுடன் தானே உனக்கு வேண்டியதைக் கொடுக்கின்றனர்!
விஞ்ஞானம்: இதெல்லாம் சுத்த சால்ஜாப்பு! ஏதோ நரசிம்மர் அவதாரமாமே? யாரோ ஒரு பையன் கூப்பிட்டானாம்! உடனே அவர் தூணைப் பிளந்து கொண்டு வந்தாராம்! இதெல்லாம் சுத்தக் கதை!
அந்த அரட்டை அரங்கத்தில் சிறிது மௌனம் ...
விஞ்ஞானம் (மீண்டும்): பார்த்தாயா! உன்னால் பதில் சொல்ல முடியாது! ஏனென்றால் இது உண்மை இல்லை! இதில் 'லாஜிக்' எதுவும் இல்லை!
இன்னொரு ஆத்திக மாணவன் (சற்றுத் தளர்வுடன்): அது ... அதெல்லாம் உண்மை. அவர் நினைத்தால் வருவார்!
விஞ்ஞானம் (வெற்றிப் பெருமிதத்துடன்): டேய் வாழைப்பழம்! நழுவாதடா! நான் இப்போதுகூப்பிடுகிறேன். இந்த நாற்காலியில் இருந்து வருகிறாரா பார்க்கலாம். அப்படி வரவில்லை என்றால் கடவுள் இல்லை என்று நீ ஒத்துக் கொள்ள வேண்டும்! ஒருவேளை அவர் வந்துவிட்டால், நான், கடவுள் இருக்கிறார், நம் புராணங்கள் எல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்கிறேன்.
மீண்டும் அங்கு சிறிது மௌனம் ...
இன்னொரு ஆத்திக மாணவன் (மிகவும் நிதானமாக, ஆனால் கம்பீரத்துடன்): டேய் விஞ்ஞானம்! நீ முதலில் பிரகலாதனாய் இருடா. நீ அப்படி இருந்தால், உனக்கு உண்மையான ஆபத்து வரும்போது உன்னைக் காப்பாற்ற உனக்காகக் கட்டாயம் எதில் இருந்தும் வருவார்!
மேலும் மௌனம் ...
ஆத்திக மாணவன் (விஞ்ஞானத்தைப் பார்த்து): டேய் விஞ்ஞானம்! என்னடா பம்முற! பதில் இல்லையா? நல்லா 'உக்காந்து யோசி'. அதுக்குள்ள நாங்க போய் டிபன் சாப்பிட்டுட்டு வரோம்.
எல்லோரும் கலைந்து செல்ல, அரட்டை முடிவடைகிறது. ஆனால் அந்த விஞ்ஞானம் மட்டும் எழுந்திருக்கவே இல்லை!! ஒரு வேளை நிஜமாவே உக்காந்து யோசிக்கிறானோ?
***
இப்பொழுது புரிந்திருக்குமே, அந்த விஞ்ஞானம் யாரென்று! அடியேன் தான்!
அன்று அத்துடன் அந்த அரட்டை முடிந்து விட்டது. ஆனால், அந்தக் கேள்விக்கு பதிலை, பதினைந்து வருடம் உட்கார்ந்து யோசித்தேன். தேடினேன். ஆரம்பத் தேடலில், ’நரசிம்மர் வருவாரா’ என்று தேடினேன். பின்னர், அது தவறு என்று சீக்கிரமே புரிந்தது.
'நான் பிரகலாதன் ஆவது எப்படி?’ என்று தேட வேண்டும் என்று தெரிந்தது. நான் ஒரு விஞ்ஞானம் ஆயிற்றே! எனவே, இதற்கும், வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ,
'(a+b)(a+b) = a*a + 2ab + b*b'
மாதிரி ஏதாவது 'சிம்பிள் ஃபார்முலா' இருக்குமா அல்லது ”நீங்களும் 30 நாட்களில் பிரஹலாதன் ஆகலாம்” போன்ற புராணப் புத்தகங்கள் கிடைக்குமா என்று தேடினேன் (அதிகமாகத் தேடவேண்டியிருக்காது என்ற நினைப்பு தான்). தலை முடி எல்லாம் உதிர்ந்தது தான் மிச்சம். பின்னர் தான் புரிந்தது, நான் உடனே பிரகலாதன் ஆவது என்பது ’தவறான சயண்டிஃபிக் அப்ரோச்’ என்று.
பிரகலாதன் மாதிரி ஆக வேண்டும் என்றால், முதலில் 'பிரகலாதன் எப்படி இருந்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்' என்று புரிந்தது. உடனே இதற்கான பதிலைத் தேட முயற்சித்தேன்.
இத்தனை வருடங்களில், 10-15 சதவிகிதம் தான் தேடி முடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். முழுவதும் தேடி முடிப்பதற்கு முன்னமேயே, அந்த ஆத்திகன் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை கிடைத்து விட்டது.
ஆம்! நான் பிரகலாதனாக இருந்திருந்தால், கட்டாயம் நரசிம்மர் அன்றே வந்திருப்பார்; என் முன்னே நரசிம்மர் வராததற்குக் காரணம், 'நான்' தான் என்று! இதைப் பற்றி, பின்னால் சந்தர்ப்பம் வரும்போது, மேலும் விளக்குகின்றேன்.
***
இந்தத் தேடலின் போது, அடியேனுக்கு, அந்த நரசிம்மர் அருளாலேயே, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை, முறையாகப் படிக்கும் அனுபவமும் கிடைத்தது (சிறு வயதில் படித்திருந்தாலும், அது தேர்வுக்காகப் படித்தது - தேர்வு முடிந்ததும், மறந்து விட்டது). நரசிம்மர் மீது ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்களில் தனி ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தேன். அவற்றில் உள்ள தமிழ் இன்பத்தை அடியேன் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. எனவே கிறுக்க ஆரம்பித்துள்ளேன்.
எழுதியதில் தப்பிருந்தால் அது அடியேனுடையது
எழுதியது பிடித்திருந்தால் அது அவனுடையது
எழுதியது பிடித்திருந்தால் அது அவனுடையது
இந்த முன்னுரையில் அதிகம் ஆங்கிலம் இருப்பதற்கு மன்னிக்கவும். 'அன்று நடந்ததை அப்படியே எழுதினால் என்ன?' என்று நினைத்ததனால் ஆங்கிலம் அதிகம் வந்து விட்டது. பாசுர விளக்கங்களின் போது, ஆங்கில வார்த்தைகளைக் குறைப்பதற்கு மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றேன்.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பம்மணமஸ்து
நரசிம்மன் திருவடிகளே சரணம்
ஓம் நமோ நாராயணாய
நரசிம்மன் திருவடிகளே சரணம்
ஓம் நமோ நாராயணாய
வருக! வளர்க! வழங்குக! என வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅறிமுகம் எழுதியது குமரனா? ரொம்ப சந்தேகமா இருக்கே :)
ReplyDeleteசின்னக்குயில் சீரங்கனுக்கு மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துகளும்!
வாங்க ரங்கன். முதல் பதிவே அமர்க்களமா இருக்கு
ReplyDelete(ஆனாலும் கேஆரெ பந்தல்ல கடைசிப்பதிவுன்னு போட்டது ஏமாற்றம்தான் )
>>நீங்களும் 30 நாட்களில் பிரஹலாதன் ஆகலாம்<<
ReplyDeleteநல்ல சுவையான துவக்கம். அருளமுதம் வழங்கும்
நல்ல படைப்புகளுக்கு அச்சாரமாய் இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்,
ஜீவா
ரங்கன் என்று பெயர் வைத்துக் கொண்டு நரசிம்மனைத் தேடும் புதியவருக்கு வாழ்த்துகள். அன்பு ரவியும் ,அன்பு குமரனும் எங்கள் சமர்த்துக் குழந்தைகள். அவர்களுக்கு ஆசீர்வாதங்கள். இத்தனை நாட்கள்
ReplyDeleteபண்தல் பக்கம்தென்றலும் வாசமும் அனுபவித்தோம். இன்னும் நரசிம்மனே வரப் போகிறான் என்றால் படிக்கக் கசக்குமா.
ரவி,குமரன் உங்கள் இருவருக்கும் எப்படி நன்றி சொல்கிறதென்று தெரியவில்லை.
பூவோடு சேர்ந்த நாராக,அஹோபில ராஜனை பெயரில் சேர்த்துக் கொண்டால் இவ்வளவு மகிமையா.!!எங்கள் சிங்கத்திடமும் சொல்கிறேன். நன்றிம்மா.
ஸ்ரீரங்கனுக்கு மீண்டும் வாழ்த்துகள்
//முதலில் பிரகலாதனாய் இருடா. நீ அப்படி இருந்தால், உனக்கு உண்மையான ஆபத்து வரும்போது உன்னைக் காப்பாற்ற உனக்காகக் கட்டாயம் எதில் இருந்தும் வருவார்!//
ReplyDeleteஆன்மீக அன்பர்கள் எப்படி இருக்க வேண்டும் எனபதற்கு நல்ல விளக்கம்..
வாழ்த்துக்கள் நண்பரே
எதிர்பார்ப்பை கிளப்பும் முன்னுரை. சிங்க தரிசனம் காண ஆவலாய் காத்திருகிறோம்.
ReplyDeleteரங்கன் அண்ணா,
ReplyDeleteநமஸ்காரம். உங்களை பற்றி முன்பே ரவி கண்ணபிரான் சொல்லி இருக்கார். அட்டகாசமான சிரிப்புடன், பிராட்டியுடன் பேழ்வாய் சிங்கம். குறைஒன்றும் இல்லை அட்டை படமா?
குமரன்,
smileys மட்டும் தான் மிஸ்ஸிங். ரவி தான் முன்னுரை எழுதினாரோன்னு இன்னும் சந்தேகமா இருக்கு. :)
~
ராதா
திரு KRS அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்!
ஓம் நமோ Dash பதிவை பார்த்து மாதவி பந்தலுக்கு முதன் முதலில் வந்தாலும், மற்ற எல்லா பதிவையும் படித்து முடித்து follow Blog set செய்தேன்.
ஆனால் நாம வந்த நேரம் ஓம் நமோ Dash பதிவுடன் நிறைவு என்றது மிகுந்த வருத்தம் அளித்தது.
கண்ணபிரான் ரவி ஷங்கரிடம் கேட்க வேண்டிய கேள்வியையும் வருத்தத்தையும் அந்த கண்ணபிரானிடமே தெரிவித்தேன்.
Blog reopen ஆனதில் மகிழ்ச்சி.
குமரன் முன்னுரையில் KRS ன் நடை தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. :)
ஆனால் மறுபடி KRS ன் பதிவை பார்த்தால் தான் மேலும் மகிழ்ச்சி ஏற்படும் என நினைக்கிறேன்.
மற்ற படி Blog reopen க்கு முயற்சித்த அனைவருக்கும் நன்றி!! :)
இந்த பதிவும் நன்று.
தங்கள் எழுத்து நடைக்கு என் வாழ்த்துக்கள். கடவுள் பற்றிய விவாதங்கள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன தான்! ஆனாலும் நாம் சிந்திப்பது அனைத்துமே வெறும் மேம்போக்கானதாகவே படுகிறது சற்று ஆழ்ந்து நோக்கினால். எனக்குப்பட்ட்டவரை சொல்கிறேன், ஆத்திக நாத்திக நம்பிக்கைகளை விட்டு.. நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் பிரகலாதன் ஆகமுடியாது. ஒருத்தரைப்போலவே முயற்சி செய்து அல்லது காப்பியடித்து இன்னொருவர் ஞானமடைத்தார் என்று புத்தன் யேசு சங்கரர் மகாவீரர் சைதன்யர் விவேகானந்தர், ராமானுசர், ஆண்டாள் .. ம்ஹூம்! இது நம்ம கருத்து இல்லங்க.. நிறையவே கடன் வாங்கியது! மற்றபடி தொடர்ந்து வாசிப்பேன்! நன்றி!
ReplyDeleteதல குமரன் மற்றும் ரங்கன் இவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteமுதல் பதிவே கலக்கல்...வேற ஒன்னும் சொல்ல முடியல..எழுத்து நடை அப்படி ;)
\\மாதவிப் பந்தல்ல இது தான் கடைசி இடுகைன்னு ஒரு Dash அடிச்சுட்டு ஓரமா போயி உக்காந்துட்டாரு. ஆனா நம்ம நாச்சியாரு உடுவாங்களா?
\\
தல
இது என்ன புதுகதை !??
எல்லாரும் ஒருமுடிவோடதான் இருக்கீங்க போல:-)
ReplyDeleteநல்வரவு சீஈஈஈஈஈ ரங்கா.
விஎஸ்கே அவர்களே
ReplyDelete//வருக! வளர்க! வழங்குக! என வாழ்த்துகிறேன்.//
நன்றி.
ரங்கன்
கவிநயா,
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
ரங்கன்
ஹலோ சின்ன அம்மிணி
ReplyDeleteமிக்க நன்றி.
இப்போ ரொம்ப பயமா இருக்கு - எல்லாமே இப்படியே நன்றாக வரணுமே என்று
ரங்கன்
ஜீவா
ReplyDeleteநன்றி.
’30 நாட்கள்’ என்னுடைய அனுபவம். மதுரையில் இருந்து பெங்களூர் வந்தவுடன் வாங்கிய முதல் புத்தகம். 30 நாட்கள் படித்தவுடன் கன்னடமும் வரவில்லை, இருந்த அரைகுறை தமிழும் மறந்து விட்டது.
வணக்கத்துடண் ரங்கன்
வல்லிசிம்ஹனுக்கு என் வணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
தங்கள் பெயர் வித்தியாசமாக, ஆனால் அழகாக உள்ளது.
அன்புடன்
ரங்கன்
நிகழ்காலமே
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.
குறிப்பு: உங்கள் புகைப்படம் மிக அருமை. இந்த வயதிலும் இவ்வலளவு இளமையா?
அன்புடன்,
ரங்கன்
அம்பி,
ReplyDeleteநன்றியும் வணக்கமும்.
உங்கள் எதிர்பார்ப்பு வீணாகிவிடக்கூடாது என்ற பயம் தோன்றிவிட்டது.
ராதா,
ReplyDeleteஆரம்பமே பயமாயிருக்கு. கே ஆர் எஸ் என்ன சொன்னாரோ?
நரசிம்மரைப் பற்றி நினைக்க ஆரம்பித்தவுடனே நரசிம்மர் கோயில்களைப் பற்றியும் விஷயங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன். எந்தப் பத்திரிகையிலும் நரசிம்மர் பற்றிய குறிப்போ அல்லது படமோ வந்தால், கட் செய்து கொள்வேன்.
இந்தப் படம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள வாடபல்லி என்னும் நரசிம்மர் கோயில் உள்ள மூலவர்.
‘ஆதிப்பிரான்’ என்ற பத்திரிகையில், ஒரு அன்பர் இந்தக் கோயிலைப் பற்றி எழுதியிருந்தார். அத்துடன் வந்த படம் இது.
ரங்கன்
செல்லா அவர்களே
ReplyDeleteநீங்கள் கூறுவதை 200% ஆமோதிக்கிறேன். ஆனால் ஒரே வித்தியாசம். இன்னொருவரைப் பார்த்து ஞானம் வாராது என்பது கட்டிக் களிமண் படைத்த என் போன்றோருக்குப் புரிவதற்குள், ஒரு மில்லியன், பதினெட்டாகி விட்டது - என் தலை முடியின் எண்ணிக்கையைத் தான் சொல்கிறேன். உங்களைப் போன்றோரின் தலை முடிகளையாவது (பொறாமை தான் :-) இந்தத் தொடரினால் காப்பாற்ற முடியுமானால், காரியம் நிறைவேறியதாக எண்ணிப் பெருமை அடைவேன்.
நன்றி
ரங்கன்
கோபி*
ReplyDeleteஉங்கள் இருவர் வரவேற்புக்கும் நன்றி.
ரங்கன்.
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
ReplyDeleteபாடிப் பாடி கண்ணீர் மல்கி - எங்கும்
நாடி நாடி "நரசிங்கா" என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
பந்தலில்,
பந்தலுக்குச் சொந்தக்காரனாய் இல்லாமல்,
பந்தல் வாசகனாய்...
அடியேன் இடும் முதல் பின்னூட்டம்! :))
வாழி வாழி ரங்கன் அண்ணா!
என்னைச் சிறு வயதில் ஆட்கொண்டு, இன்னமும் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரே கதை - பிரகலாதக் கதை!
பிரகலாதக் குழந்தை திருவடிகளே சரணம்!
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
//’நரசிம்மர் வருவாரா’ என்று தேடினேன். பின்னர், அது தவறு என்று சீக்கிரமே புரிந்தது.
ReplyDelete'நான் பிரகலாதன் ஆவது எப்படி?’ என்று தேட வேண்டும் என்று தெரிந்தது//
ஹா ஹா ஹா
சூப்பரோ சூப்பர்!
f(x) = x^2
எனக்கு f(x) வேணும் வேணும்-ன்னா ஒன்னும் வராது!
x-க்கு ஒரே ஒரு சின்னூண்டு value போட்டுப் பாருங்க! f(x) வரும்!
:))
அழகா, எனக்குப் பிடிச்சா மாதிரி, Scientific-aa துவங்கி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!
பந்தல் வாசகர்கள் மிகுந்த ஞானம் மிக்கவர்கள்!
ஆத்திகம், நாத்திகம் என்று இரு துறைகளிலுமே வல்லவர்கள்! அதே சமயம் நல்லவர்கள்!
அவர்களுக்கு ஆரா இன்பத்தைத் தொடர்ந்து வழங்குங்கள்!
@ராதா
ReplyDelete//குமரன்,
smileys மட்டும் தான் மிஸ்ஸிங். ரவி தான் முன்னுரை எழுதினாரோன்னு இன்னும் சந்தேகமா இருக்கு. :)//
தோடா! எங்க இருந்துய்யா இப்படிக் கெளம்பறீங்க? :)
@குமரன்
குமரன், எனக்கும் கொஞ்சம் சந்தேகமாத் தான் இருக்கு! நீங்க தானே எழுதினீங்க? இல்லை மதுரையில் மண்டபத்தில் வேற யாராவது எழுதிக் குடுத்து.....:))
//யாரு இந்தப் புதுக்குயில்? ஆளரி கோளரின்னா யாரு? அஞ்சுக்குடி பத்துக்குடி சாத்துக்குடின்னு எல்லாம் வருதே; அப்புடின்னா என்னா?//
ReplyDeleteஹா ஹா ஹா
குமரனா இப்படியெல்லாம் லோக்கல் பாஷையில் எறங்குவது? சேர்க்கை சரியில்லை! நான் வேற என்னத்த சொல்ல? ஆளையே இப்படி மாத்திருச்சே! :))
//அஞ்சுக்குடி பத்துக்குடி சாத்துக்குடின்னு எல்லாம் வருதே//
இதுல வேர் இஸ் மை தூத்துக்குடி? :)
என் தோழன் ஊருக்குப் பக்கத்துல தான் என் தோழி ஊரு! ஓக்கேவா? :)
//நிகழ்காலமே
ReplyDeleteஉங்கள் புகைப்படம் மிக அருமை. இந்த வயதிலும் இவ்வலளவு இளமையா?\\
அது நானில்லீங்கோ..
என்னோட சின்ன மகள்...
வாழ்த்துக்கள்
arambame arputhama irukku
ReplyDeleteபுதுக்குயிலாரே!
ReplyDeleteநம்மையுடையவன் நாராயணன் நம்பின்னு தொடங்கியிருக்கீங்க. அருமையான தொடக்கம். எனக்கும் அது ரொம்ப பிடிக்கும். கண்ணன் பாட்டு குழுப்பதிவைத் தொடங்குறப்ப இரவி பதிவுக்கு என்ன தலைப்பு வைக்கலாம்ன்னு கேட்டாரு. அப்ப நான் அதைத் தான் சொன்னேன். அவரு அது ரொம்ப கஷ்டமா இருக்கு; எளிமையா வேணும்ன்னு சொல்லிட்டு கண்ணன் பாட்டுன்னு பேரு வச்சாரு. இதுல என்ன கஷ்டம்ன்னு கேக்கத் தோணுதுல்ல?! என்ன பண்றது? எல்லாம் நரிக்கு நாட்டாமை கொடுத்தா....ன்னு ஏதோ ஒரு பழமொழி இருக்காம்ல. அது தான் நினைவுக்கு வருது. :-) இப்ப கூட கண்ணன் பாட்டு பதிவுல ஓரத்துல 'இவன் என்னமோ சொல்றான். போட்டு வைப்போம்'ன்னு 'நம்மை உடையவன் நாராயணன் நம்பி'ன்னு போட்டு வச்சிருப்பாரு.
மாதவிக் கொடியால பந்தல் போட்டா இவரு ஆலமரம் ஆக்கிப்புட்டாரு இல்ல?! என்ன பண்றது சொல்லுங்க. எப்புடியோ நல்லா இருந்தா சரி.
இப்ப உங்க கல்லூரி நிகழ்ச்சிக்கு வருவோம். அறிவியல் மட்டும் தான் இளமைச் செருக்கோட பேசுமா என்ன? எல்லாமும் அப்படித் தான். எங்களை மாதிரி சின்னப் பசங்க எத்தனை பேரு பெரியவங்க என்ன சொன்னாலும் நான் புடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு இளமைச் செருக்கோட திரியுறோம். வல்லியம்மா, தி.ரா.ச., கீதாம்மா, எஸ்.கே, திவா ஐயா (துளசியக்கா?!) இவுங்களைக் கேட்டா தெரியும்.
அடுத்த இடுகையை விரைவில் இடவும். பட்டர் பிரானுக்கு முன்னாடி இந்த இடுகையில பட்டர் பிரான் கோதை வந்துட்டாங்க. அடடா இப்படி அவசரப்பட்டுட்டோமேன்னு அவங்க நினைக்கிறதுக்கு முன்னாடி அவங்க அப்பா என்ன என்ன சொன்னாருன்னு சொல்லுங்க.
கவிநயா அக்கா. அறிமுகம் எழுதியது நான் நான் நானே தான். அதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். மாதவிப்பந்தல்ல எழுதுறோமேன்னு தான் இப்படி எழுதியிருக்கேன்.
ReplyDeleteஉங்கள் அன்பிற்கு நன்றி வல்லியம்மா.
இராதா, அதுக்குத் தானே 'கான மயில்களாட கண்டிருந்த வான்கோழி'ன்னு கையொப்பம் போட்டிருக்கேன். இந்த வான்கோழி காப்பியடிக்க நினைக்கும் ஒரு கானமயில் இரவிசங்கர் தானே. இன்னொரு மயில் யாருன்னு கேக்கறீங்களா? நீங்க தான். :-) அரங்கன் அண்ணாவும் இன்னொரு குயில் - ஆனா இந்தக் குயில் பாடற மாதிரி நம்மால பாட முடியாது.
இரவியோட இடுகைகளின் அடையாள சூத்திரங்கள் என்ன என்னன்னு கொஞ்சம் சிந்திச்சேன். அவை எல்லாம் வர்றமாதிரி எழுதினேன். ஆனா சிரிப்பான் மட்டும் போட மறந்துட்டேன். இந்த வான்கோழி நல்லா மயில் வேடம் போடுதுங்கறது இப்ப தெரிஞ்சுதா?! அதுல எனக்கு மகிழ்ச்சி தான்.
இரவி, பரத் போன்ற அன்பர்களுக்காகவும் பெரியவர்கள் சொல்லும் பேச்சைக் கேட்கவும் நீங்கள் மீண்டும் எழுதத் தொடங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
ReplyDeleteகோபி., எனக்கு முந்தி இருந்த அஜீத்குமார் பிடிக்கும். கொஞ்ச நாள் தொய்வுக்கு பின்னாடி அவர் மீண்டும் நடிக்க வந்தாரே அப்ப இருந்து அவரைப் பிடிக்கறதில்லை. அதனால என்ன சொல்ல வர்றேன்னா.... நான் தல இல்லை. அம்புட்டு தான். :-)
ReplyDeleteஇரவிக்கும் ஒரு தலயா? அப்ப சரி!
//
ReplyDeleteபந்தலில்,
பந்தலுக்குச் சொந்தக்காரனாய் இல்லாமல்,
பந்தல் வாசகனாய்...
அடியேன் இடும் முதல் பின்னூட்டம்! :))
//
வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது.
அதோட நான் சொன்ன மாதிரி ஆட்டோவும் வருது. எங்கே இந்தப் பக்கம்?! வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல.
நான் எழுதலை இரவி; தன்னைத் தானே அரங்கன் எழுதிக்கொண்டான் - இப்படி சொல்லணும்ன்னு தானே எதிர்பார்க்கிறீங்க?
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDeleteநான் எழுதலை இரவி; தன்னைத் தானே அரங்கன் எழுதிக்கொண்டான் - இப்படி சொல்லணும்ன்னு தானே எதிர்பார்க்கிறீங்க?//
தன் ஆழியானைத் தானே சொக்கன் எழுதிக்கொண்டான் - இப்படித் தான் எதிர்பார்க்கிறோம்! :)))
//அதோட நான் சொன்ன மாதிரி ஆட்டோவும் வருது. எங்கே இந்தப் பக்கம்?! வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல.//
ReplyDeleteஅடக் கொடுமையே! என்ன குமரன் இது? பந்தலுக்கு பதிவுல தான் வரக் கூடாது! பின்னூட்டத்தில் கூடவா வர எனக்கு அனுமதி இல்லை? முருகா! இதைக் கேட்பார் இல்லையா? :)
//இரவியோட இடுகைகளின் அடையாள சூத்திரங்கள் என்ன என்னன்னு கொஞ்சம் சிந்திச்சேன்//
ஓ மை காட்! அடையாள சூத்திரமா? அப்படியெல்லாம் வேற இருக்கா? :)
//இன்னொரு மயில் யாருன்னு கேக்கறீங்களா? நீங்க தான். :-)//
Hurrah! Hurrah!
Radha Mayil vaazhga!
// குமரன் (Kumaran) said...
ReplyDeleteநம்மையுடையவன் நாராயணன் நம்பி...
அவரு அது ரொம்ப கஷ்டமா இருக்கு; எளிமையா வேணும்ன்னு சொல்லிட்டு கண்ணன் பாட்டுன்னு பேரு வச்சாரு//
அதை இன்னுமா நீங்க மறக்கலை குமரன்? :)
முருகனருள்! கண்ணன் பாட்டு!!
எப்படி ரைமிங்-கா இருக்கு! அதை விட்டுப்போட்டு ந.நா.நம்பி, நி.நீ.தும்பி-ன்னு எல்லாம் பெருசா பெருசா பேரு வச்சா? மனுசன் கூப்பிட வேணாங்களா? :)
//எல்லாம் நரிக்கு நாட்டாமை கொடுத்தா....ன்னு ஏதோ ஒரு பழமொழி இருக்காம்ல. அது தான் நினைவுக்கு வருது. :-)//
ஹா ஹா ஹா!
நரியைப் பரி ஆக்குங்கள் குமரன்! அடியேன் தங்கள் நியமனத்துக்கு கட்டுப்பட்ட கண்ணபிரான்! :)
//இப்ப கூட கண்ணன் பாட்டு பதிவுல ஓரத்துல 'இவன் என்னமோ சொல்றான். போட்டு வைப்போம்'ன்னு 'நம்மை உடையவன் நாராயணன் நம்பி'ன்னு போட்டு வச்சிருப்பாரு//
அடப் பாவமே!
குமரன் சொன்னதை மீறியதா இருக்கக்கூடாதே-ன்னு அதையும் அருகில் போட்டு வச்சா, இப்படி ஒரு பேரா எனக்கு? ராகவா, காகுத்தா, மயிலேறி வந்து என்னான்னு கேளு! என்னைய காப்பாத்து! :)
Vanakkam sir,
ReplyDeleteWelcome, you started writing for AZHAGAZHAGAN,good.In srivaishnavam all mutt main murthy is AKKARAKKANIYE, Arangane Narasimhan endru azhwars mentioned in their pasuram (Amalanadhibiran).
Arangan arulvanaga.
anbudan
k.srinivasan.
ஓகோ, காகுத்தன் இப்ப மயிலுக்கு மாறிட்டாரா? :)
ReplyDelete//கவிநயா said...
ReplyDeleteஓகோ, காகுத்தன் இப்ப மயிலுக்கு மாறிட்டாரா? :)//
காகுத்தன்-க்கு வாகனமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டானா? பாதுகை கூட தம்பிக்காரன் வாங்கிட்டுப் போயிட்டான்! ஐயா வெறுங் காலு!அதான் முருகன் கிட்ட பேசி, மயிலை டெம்பரரியா அவனுக்கு கொடுத்து வச்சிருக்கேன்-க்கா! :)
நான் சொன்னா என் முருகன் கேட்டுக்குவான்! ராகவன் தான் கேட்டுக்க மாட்டான்! மை முருகன் இஸ் ஏ கூல் கைய்! :)
கண்ணபிரான் மற்றும் நண்பர்களுக்கு,
ReplyDeleteஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடிப் பாடி கண்ணீர் மல்கி - எங்கும்
நாடி நாடி "நரசிங்கா" என்று
'அழகழகனின்' கதை கேட்கக் கொடுப்பினை வேண்டுமே..
இந்தப் பகுதி முடியட்டும், கடைசியில் சேர்ந்து கொள்கிறேன்.. அனுபவிக்க வேண்டாமா..
திவாகர்
வாருங்கள் ரங்கன், அழகிய சிங்கன் அனு்பவத்தை அற்புத அளிக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteஅனைத்து பின்னூட்டங்களுமே அருமையாக இருக்கிறது! அப்புரம் ரங்கரிடம் கேட்கநினைத்தது விட்டுப்போய்விட்டது. அது இப்போ .. ஒரு பழைய பாடலில் டி எம் எஸ் உருகுவார் .. “மாமனுக்கு பிள்ளையில்லை.. மருமகன் (முருகன்) தான் திருமகன்” என்று! எனக்கு புரியாத வரிகள் அவை. திருமாலுக்கு பிரமன் மகன் தானே? ராமனுக்கும் லவகுசர்கள்.. கிருஷ்னனுக்கு பிரத்யும்னன் என்று இருக்கையில் இது என்ன கலாட்டா? சொன்னால் மகிழ்வேன்!
ReplyDeleteமற்ற மதங்களில் மாதவன்: ஒரு தகவலுக்காக மட்டும்.. Bahá'í Faith
ReplyDeleteBahá'ís believe that Krishna was a "Manifestation of God," or one in a line of prophets who have revealed the Word of God progressively for a gradually maturing humanity. In this way, Krishna shares an exalted station with Buddha, Zoroaster, the Báb, and the founder of the Bahá'í Faith, Bahá'u'lláh.[111]
[edit] Ahmadiyya Islam
Members of the Ahmadiyya Muslim Community believe Krishna to be a great prophet of God as described by their founder, Mirza Ghulam Ahmad. Ghulam Ahmad also claimed to be the likeness of Krishna as a latter day reviver of religion and morality whose mission was to reconcile man with God.[112] Ahmadis maintain that the term Avatar is synonymous with the term 'prophet' of the middle eastern religious tradition as God's intervention with man; as God appoints a man as his vicegerent upon earth. In Lecture Sialkot, Ghulam Ahmed wrote:
Let it be clear that Raja Krishna, according to what has been revealed to me, was such a truly great man that it is hard to find his like among the Rishis and Avatars of the Hindus. He was an Avatar—i.e., Prophet—of his time upon whom the Holy Spirit would descend from God. He was from God, victorious and prosperous. He cleansed the land of the Aryas from sin and was in fact the Prophet of his age whose teaching was later corrupted in numerous ways. He was full of love for God, a friend of virtue and an enemy of evil.
(ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து)
ஆனால் என் மனங்கவர் கள்வன் நிச்சயம் கிருஷ்ணன் தான்! குழந்தை பாலகிருட்டிணனாய் தவழ்ந்து ஒரு முனிவன் போல் கீதா உபதேசம் அருளியது முதல் அவன் ஆடிய லீலைகள் மாதிரியான ஒரு விளையாட்டை இன்னொரு கடவுள் இன்னொருமுறை நிகழ்த்திக்காட்ட இயலுமா என்று என்னால் சிந்திக்கக்கூட இயலவில்லை. I used to tell to my friends.. Even though if we analyse Krishna as an imagination of Theist.. it must be heralded as an immaculate imagination .. unparalleled in the human history!
ReplyDeleteAlmost all hindu Gods ( except Sarasvathy ) were serious faces with (IRAQ fame) WMDs (lol)in their hands Krish is the lord with that ever charming smiling face with a lovely flute in his hands! The most Jovial Lord with a Most Jovial Friend (grand son in some way! lol!) Naratha Muni!
ReplyDeleteKrishna worship or reverence has been adopted by several new religious movements since the 19th century, and he is sometimes a member of an eclectic pantheon in occult texts, along with Greek, Buddhist, Biblical and even historical figures. For instance, Édouard Schuré, an influential figure in perennial philosophy and occult movements, considered Krishna a Great Initiate; while Theosophists regard him as an incarnation of Maitreya (one of the Masters of the Ancient Wisdom), the most important spiritual teacher for humanity after Buddha. Krishna was canonized by Aleister Crowley and is recognized as a saint in the Gnostic Mass of Ordo Templi Orientis.
ReplyDeleteஓசை செல்லா அண்ணாச்சி
ReplyDeleteஇப்படியெல்லாம் ஆன்மீகப் பின்னூட்டமா போட்டுத் தாக்குறீயளே! அதுவும் கண்ணா கண்ணா-ன்னு! ஆனா இதுக்கெல்லாம் பந்தலை உங்க பேர்-ல எழுதி வைக்க முடியாது! ஹா ஹா ஹா :))))
உங்கள் கேள்விகளுக்கு புதுக்குயிலார் பதில் சொல்றாரா-ன்னு பார்ப்போம்! இல்லீன்னா பழைய குயில் பைய வந்து சொல்லுதேன்! :)
இப்போத்திக்கு
//மாமனுக்கு பிள்ளையில்லை.. மருமகன் (முருகன்) தான் திருமகன்//
மாமன்-ன்னா மாயானோகிய திருமால்!
அவருக்குப் பிள்ளை இல்லை! ரெண்டு பொண்ணுங்க தான்! :)
இருந்த ஒரே மானசீகப் பிள்ளை மாரன் (மன்மதன்)! ஈசனார் கண்ணழலால் உடல் இல்லாமல் ஆனான்!
பெண்கள் தான் வள்ளி/தேவயானை! முருகன் மணந்து மருகன் ஆனான்!
அவதாரங்களில் வரும் போது ஏற்படும் பிள்ளைகள் - லவ குசன், பிரத்யும்னன் - எல்லாம் கணக்குல வராது! அவதாரம் நிறைந்ததும், அவையும் நிறைந்து விடும்!
அவதாரம் என்பதே பிறவி-ன்னா என்ன? எப்படி வாழணும்? நல்லது, தீயது ரெண்டுமே செய்து காட்டி, அதன் விளைவுகளை எப்படி ஏற்பது என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கத் தானே! பிறவி முடிஞ்சதும், நமக்கு எப்படி மகன் என்பது இல்லையோ, அதே போல் அவதாரம் நிறைந்ததும், மகன் என்பதெல்லாம் இல்லை! :)
அவதாரங்களையும் கடந்த நிலையில், நிலையாய் இருக்கும் நிலையில், பிள்ளை இல்லை, பொண்ணு உண்டு என்று கண்ணதாசன் ஒரு நயத்துக்குச் சொல்வதாக எடுத்துக் கொள்ளுங்கள்! :)
//முருகனருள்! கண்ணன் பாட்டு!!
ReplyDeleteஎப்படி ரைமிங்-கா இருக்கு! அதை விட்டுப்போட்டு ந.நா.நம்பி, நி.நீ.தும்பி //
ந.நா.நம்பி
நி.நீ.தும்பி
ஆஹா ! எவ்ளோ ரைமிங்கா இருக்கு !! :))
ஆஹா ! நான் மயிலா? மிக்க மகிழ்ச்சி. :)
ReplyDeleteகுமரன், நீங்க வான்கோழியா?
கடம்ப மர கருடன்னு தானே நெனைச்சிட்டு இருந்தேன். :)
~
ராதா
//இந்தப் படம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள வாடபல்லி என்னும் நரசிம்மர் கோயில் உள்ள மூலவர். //
ReplyDeleteரங்கன் அண்ணா,
தகவலுக்கு நன்றி.
மாதா நரஸிம்ஹ.பிதா நரஸிம்ஹ.
~
ராதா
//Radha said...
ReplyDeleteமாதா நரஸிம்ஹ.பிதா நரஸிம்ஹ//
ராதா...
அப்பப்ப இப்படி எதுனா சொல்லி, மனசை இன்னும் ஆழமா ஆழ்த்திட்டு போயிடறீக! அந்தச் சின்னக் குழந்தைக்கு, அன்னையும் ஆளரி! அப்பனும் ஆளரி! ஆகா!
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே
-ன்னு நம்மாழ்வார் சொல்லுறாப் போலவே இருக்கே!
தாயும் நீ, தந்தையும் நீ என்று வரும் வேறு பாசுரங்கள் என்ன ராதா?
>>>இந்தப் படம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள வாடபல்லி என்னும் நரசிம்மர்<<<
ReplyDeleteராதா!
அது மட்டப்பள்ளி ம்மா!
இந்தமுறை கிருஷ்ணா நதி வெள்ளம் நரசிம்மரையும் நல்லா ஃபுல்லா வந்து தரிசனம் பண்ணிட்டு போயிடுத்து!
திவாகர்
அன்பு சூரியனே
ReplyDelete//>>>இந்தப் படம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள வாடபல்லி என்னும் நரசிம்மர்<<<
ராதா!
அது மட்டப்பள்ளி ம்மா!
இந்தமுறை கிருஷ்ணா நதி வெள்ளம் நரசிம்மரையும் நல்லா ஃபுல்லா வந்து தரிசனம் பண்ணிட்டு போயிடுத்து!
திவாகர்//
நீங்கள் சொல்லும் ஊர் மட்டபல்லி. அது வாடபல்லியில் இருந்து கொஞ்ச தூரம் உள்ளது (150 கி. மி. தான்). இந்தப் படம் வாடபல்லி கோயிலின் மூலவர் வரைபடம்.
அடுத்த ‘post'-ல் மட்ட பல்லி மூலவர் படம் போடுகிறேன்.
கண்ணபிரானே
ReplyDelete//மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே
-ன்னு நம்மாழ்வார் சொல்லுறாப் போலவே இருக்கே!
தாயும் நீ, தந்தையும் நீ என்று வரும் வேறு பாசுரங்கள் என்ன ராதா?//
நம்மாழ்வார் எழுதிய சில பாசுரங்கள் நாராயணனைத் தாய், தந்தை என விளிக்கும். எம்பருமானைத் தந்தை (எந்தை) என்று சொல்வது அடிக்கடி வரும். தாயைஉம், தந்தையையும் சேர்த்துச் சொல்வது அரிது.
1-10-5 நீயும் நானும் ...
6-3-9 என்னப்பன் ...
ஒப்பிலியப்பன் மேல் பாடியது - ‘என் அப்பன் என்றே தொடங்குகிறார். மிகவும் அருமையான பாசுரம்
7-4-1 மாயா வாமனனே ...
அடியேனுக்கு மிகவும் பிடித்த திருமொழி
8-1-11 பெரிய அப்பனை
உலகுக்கு அப்பன், பெரிய அப்பன், என் தனி அப்பன் என்கின்றார்
9-1 கொண்ட பெண்டிர்
இந்தத் திருமொழி முழுவதும், திருமாலே எல்லா உறவினரும் எனக்கு என்ற கருத்து. ஆனால், தார்-தந்தை என்று குறிப்பாகச் சொல்லவில்லை
பெரிய திருமொழி
1-9-1 தாயே தந்தையே ...
2-2-7 திங்கள் அப்பு
எங்கள் அப்பன் என்கின்றார்
2-2- 8 முனிவன் ...
’சேயன்’ தன்னைச் சேயன் என்பதனால், எம்பெருமானை, தாய் என்கின்றாரா? இல்லை தந்தை என்கின்றாரா?
பொதுவாக, வைணவத்தில், எம்பெருமான் ஒருவனே ‘புருஷன்’. எனவே, அவனை அழைக்கும்போது தந்தை என்று அழைப்பதே அதிகம். காதல் அதிகம் வரும்போது, மங்கையாரும், நம்மவரும், தங்களை நாயகியாகத்தானே நினைக்கின்றனர்?
செல்லண்ணா
ReplyDelete// .. ஒரு பழைய பாடலில் டி எம் எஸ் உருகுவார் .. “மாமனுக்கு பிள்ளையில்லை.. மருமகன் (முருகன்) தான் திருமகன்” என்று! எனக்கு புரியாத வரிகள் அவை. திருமாலுக்கு பிரமன் மகன்//
ஸாரி ... அந்தப் பாட்டை நான் கேட்டதில்லை; எனவே நழுவுறேன்... (உண்மையில் எனக்குத் தெரியாது ... ஹி .. ஹி ..)
ம்..... நரசிம்மர் பாசுர விளக்கங்களா ம் அமிர்தம் அமிர்தம்
ReplyDeleteஇப்பவே நாக்கு ஊறுதே
regards
rajesh narayanan
http://srikamalakkanniamman.blogspot.com
//இந்தக் குயிலாரும் 'யாரு அந்த கோளரி ஆளரி'ன்னு கிண்டல் செய்யாம பொறுமையா உக்காந்து 'தாயே. அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாக நீ வந்தாய்.
ReplyDeleteநீயும் உன் அஞ்சுக்குடியைச் சேர்ந்தவர்களும் அழகிய சிங்கனின் மேல் என்ன என்ன பாடியிருக்கிறீர்களோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் படித்து எழுதுகிறேன்'ன்னு படிச்சு இங்கன எழுதப் போறாரு.
//
அரைசதம் மடல்கள் கட்ந்த பின்பு ஆமைநடைபோட்டு வந்திருக்கிறேன். காரணம் அமெரிக்க திக்விஜயம் முடிச்சி சமீபத்துல தாய்மண்ணுக்கு வணக்கம் சொல்லி வந்ததுதான்!
சிங்கநடைபோட்டு பந்தலில் வரும் புதுப்பதிவருக்கு நல்வரவு!
இப்படிக்கு ஷைலஜா எனும் திருவரங்கப்ரியா!
//
ReplyDeleteபேசுவாருன்னா சொன்னேன். ஆமாங்க பெங்களூருவுல நிறைய இடத்துல பிரசங்கம் பண்ற குயில் தான் இந்தக் குயில்....
ஆஹா எங்க ஊர்க்குயிலா? இனிமைக்குக்குறை இருக்காது. பந்தலோரத்துல பழைய ஓனர்பதிவர் பக்கத்துல நானும் உட்கார்ந்து கேக்க ஆவலா இருக்கேன்!...
குமரன்! உங்க முன்னுரை கலக்கல்ஸ்!
ReplyDelete// நரசிம்மர் மீது ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்களில் தனி ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தேன். அவற்றில் உள்ள தமிழ் இன்பத்தை அடியேன் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. எனவே கிறுக்க ஆரம்பித்துள்ளேன்.
ReplyDelete///////
அவசர அவசரமாகப்போட்டுக்கொண்ட அற்புத அவதாரமல்லவா இது?
யோசித்து எடுத்த ராமர் அவதாரம்போல இல்லாமல், தேவதைகளின் பிராரத்தனைக்கிரங்கி தோன்றிய க்ருஷ்ணாவதாரம் போல இல்லாமல் பக்தன் ப்ரஹ்லாதனின் வாக்கைக்காப்பாற்ற எடுக்கப்பட்ட உடனடி அவதாரம்.எங்கும் இருக்கிறான் ஹரி அவன் இல்லாத இடமே இல்லை என்று ப்ரஹ்லாதன் கூறியபோது அதை உண்மையாக்கவே அவசரத்திருக்கோலம் பூண்டு சர்வ பதார்த்தத்திலேயும் நிறைந்தான்.
நரசிம்மனுக்கு பெரியபெரிய பெருமாள் என்றும் பெயர் பெருமாள்களால் ஆராதனம் ப்ண்ணியதால் இந்தப்பெயர்.
எல்லா அவதாரங்களிலும் உயர்ந்த இந்த அவதாரப்பெருமைக்குரியவரைப்பற்றி
ஆழ்வார்கள் கூறி உள்ளதை தாங்கள் விளக்கப்போவதைப்படிக்குமுன்பாக நான் ஏதேதோ கிறுக்கிவிட்டேன் வழக்கம்போல மன்னிக்கவும் பிழை இருந்தால்.
நரசிம்மப்ப்பெருமானின் திருவடிகளே சரணம்.
யோகா யோக விதாம் நேதா ப்ரதான புருஷேஸ்வர
நாரசிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேசவ; புருஷோத்தம:
ஷைலஜா அக்கா
ReplyDelete//அவசர அவசரமாகப்போட்டுக்கொண்ட அற்புத அவதாரமல்லவா இது?
யோசித்து எடுத்த ராமர் அவதாரம்போல இல்லாமல், தேவதைகளின் பிராரத்தனைக்கிரங்கி தோன்றிய க்ருஷ்ணாவதாரம் போல இல்லாமல் பக்தன் ப்ரஹ்லாதனின் வாக்கைக்காப்பாற்ற எடுக்கப்பட்ட உடனடி அவதாரம்//
கலக்குறீங்களே! நீங்களே எழுதலாம் போல் இருக்குதே. கூடவே மாட்டிக்கிட்டேனோ என்ற நினைப்பு இப்பவே கண்ண கட்டுதே.
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
ReplyDeleteகாரியம், ஆராய்ந்து அருள்!
Adiyen
//பெரிய திருமொழி
ReplyDelete1-9-1 தாயே தந்தையே ...//
"தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன்"
என்ற பாசுரமா ?
இதில் திருமங்கை ஆழ்வார் சம்சார வாழ்க்கையில் சிக்கி பகவானை மறந்தமையை நொந்து கொண்டு பாடுவதாக பொருளுரை படித்துள்ளேன்.
//8-1-11 பெரிய அப்பனை
ReplyDeleteஉலகுக்கு அப்பன், பெரிய அப்பன், என் தனி அப்பன் என்கின்றார் //
"பெரிய அப்பனே !" என்று முந்தைய பாசுரம் (8-1-10) முடிவு. :-)
இந்த பத்தில் முதல் பாசுரத்திலும்(8-1-1) "ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே !..."
"வானோர் காணமாட்டாப் பீடுடை அப்பனையே?" (4-7-4)
ReplyDelete"அப்பனே! அடல் ஆழியானே !" (4-7-5)
"ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே !" (5-7-6)
"என் வாய் முதல் அப்பன் ..."(7-9-3)
"அப்பனை என்று மறப்பேன் ?..." (7-9-4)
"இன்கவி பாடிய அப்பன் ..."(7-9-10)
"திருக்குறள் அப்பன்" (திருவள்ளுவர் இங்கே எங்கு வந்தார் ? :)) 7-10-2
"பாம்பணை அப்பன்" 7-10-5
"இமையவர் அப்பன், என் அப்பன்" 8-4-2
"துழாய் முடி அப்பன்" - (8-6-1)
"அப்பன் திருவருள் மூழ்கினேனே" - (8-9-5)
காட்கரை பத்தில் சில பாசுரங்கள் (9-6)
"முனியே நான்முகனே முக்கண் அப்பா !"
...
...
...
எந்தை எந்தாய் பாசுரங்கள் இன்ன பிற.
"ஆழி எழ சங்கும் வில்லும் எழ ....அப்பன்" என்று இந்த பத்தில் (7-4) "அப்பன்" என்று எல்லா பாசுரங்களிலும் வரும்.
ReplyDelete"மானியை நிலம் கொண்ட மாயன் என் அப்பன் " (6-4-8)
"எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன்" (1-5-3)
"எவ்வுயிர்க்கும் தாயோன் தம்மான் என் அம்மான் "(1-5-9)
"நறுந்துழாயின் கண்ணி அம்மா ! " (4-7-6)
"முடி சேர் சென்னி அம்மா !" (8-5-3)
"எங்கள் பெற்றத் தாயன் வடமதுரை மைந்தன்" (9-1-6)
"தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் ஈசன், மணிவண்ணன் எந்தையே" (1-10-6)
"அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து அத்தா..." (2-3-2)
"போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிர் ஆகின்றாய் !" (2-6-10)
"உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே !" (5-7-7)
நம்மாழ்வார் வாயினாலே அவர் பாவனை:
"சிந்தையாலும் ....தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண்குருகூரவர் சடகோபன்..." (6-5-11)
ஆழ்வார் திருவடிகளே சரணம் !
typo corrected...
ReplyDelete"மாணியாய் நிலம் கொண்ட மாயோன் என்
அப்பன் " (6-4-8)
//கூடவே மாட்டிக்கிட்டேனோ என்ற நினைப்பு இப்பவே கண்ண கட்டுதே.//
ReplyDeleteரங்கன் அண்ணா !
இதுக்கு எல்லாம் மாட்டிகிட்டேன்னு சொன்ன எப்படி? :)
அவங்க "நாரஸிம்ஹ வபு..." என்றால் நாம் உடனே... "த்ரிலோகாத்மா த்ரிலோகேச கேசவ கேசிஹா ஹரி:" அப்படின்னோ இல்லை "அதுல ஷரபோ பீம: சமயஞோ ஹவிர் ஹரி:" அப்படின்னோ
பதில் ஸ்லோகம் கொடுத்துடனும். :)
இங்கே உண்மையா மாட்டபோவது அவசர அவசரமா காணாமல் போன நரசிங்கம் தான்.:)
அடடா நான் வந்ததால் குழப்பம் ஏதும் வராமல் இருந்தால் சரி! நான் தெரிந்தவரை கிருஷ்ணன் அவதாரம் என்பது நமது தெற்கத்திய நிலை! வடநாட்டில் அதுவும் குறிப்பாக நான் படித்த பெங்காளி வைஷ்ணவத்தின் படி கோலோக விருந்தாவனில் இருக்கும் கண்ணன் அவதாரி .. He eternally lives there. He is not an incarnation. அவன் தேவதைகளின் விருப்பம் படி எடுத்த அவதாரம் இல்லை!
ReplyDeleteVENUM KVANANTAM ARAVINDA-DALAYATAKSAM
ReplyDeleteBARHAVATAMSAM ASITAMBUDA-SUNDARANGAM
KANDARPA-KOTI-KAMANIYA-VISESA-SOBHAM
GOVINDAM ADI-PURUSAM TAM AHAM BHAJAMI - Brahma Samhitha
ete camsa-kalah pumsah
ReplyDeletekrsnas tu bhagavan svayam
indrari-vyakulam lokam
mrdayanti yuge yuge
isvarah paramah krsnah
ReplyDeletesac-cid-ananda-vigrahah
anadir adir govindah
sarva-karana-karanam
ஆனாலும் இவற்றை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.. இதோ நான் ஒரு இணையதளத்தில் சமீபத்தில் சொன்னது...
ReplyDeleteMy humble pranams to all devotees. I just want to share one thought here. Where are we when compared to Krishna, Vishnu or Mahadeva/Yogeshwara/shiva?
Do we have any commonsense to compare them? Instead let us know our simple/humble position and worship the lord Krishna or Vishnu or Lord Shiva and weighing them one against another is not for ignorant souls ( that too in Kaliyuga) like us though we simply published / read a few books and sutras in these few years of time. Shiva is the greatest mystic or yogeshwara.. if not a god head .. but can we even think about his opulence when Rama worshiped him in Rameshwaram? So instead of writing or vomitting from our impure memory we must look our own humble positions and let us continue our OWN Journey!
"தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்கள் என்றும்
ReplyDeleteநோயே பட்டு ஒழிந்தேன்"
என்ற பாசுரமா ?
இதில் திருமங்கை ஆழ்வார் சம்சார வாழ்க்கையில் சிக்கி பகவானை மறந்தமையை நொந்து கொண்டு பாடுவதாக பொருளுரை படித்துள்ளேன்.
ஆம். அடியேன் தவறான அர்த்தம் புரிந்து கொண்டேன்.
//அடியேன் தவறான அர்த்தம் புரிந்து கொண்டேன்.//
ReplyDeleteவருத்தம் வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. :)