Friday, December 29, 2006
முந்தைய பாகம் இங்கே!ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்!நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ! வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்தில், இன்று வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!மோக்ஷ ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லுவார்கள்!கீதை...
Thursday, December 28, 2006
ரங்கா - அடியேன் உனக்கு அடியேன்! - 2
இதற்கு முந்தைய பதிவு இங்கே!அகார உகார மகாரங்களின் சேர்க்கை "ஓம்"காரம். ஆங்காரம் அழிய ஒங்காரம் வேண்டும்! நண்பர் ஜிரா ஓங்காரம் பற்றி ஒரு நல்ல பதிவிட்டிருந்தார். அது அடியேனைப் போன்ற ஆன்மீக ஞானமில்லாத் தற்குறிகளுக்குப் புரியுமா?அடியேனுக்குத் தெரிந்த ஓங்காரம் எல்லாம், பானைக்குள் இருந்து வரும் ஓங்கார சப்தம் தான்! என்னது, பானைக்குள் ஓங்காரமா? ஆம், ஆழ்வார் பாசுரக் காட்சி!குட்டிக் கண்ணன், வெண்ணெய் முழுதும்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: சிறுகதை, திருவரங்கம்
Wednesday, December 27, 2006
பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!! - 1

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?=திருவரங்கம்.திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து,...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: சிறுகதை, திருவரங்கம்
Sunday, December 24, 2006
கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்! எத்தனை மகிழ்ச்சி!சிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;அன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்!வீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: Christianity
Tuesday, December 19, 2006
அனுமனுக்கு மூல நட்சத்திரம்!

இன்று ஹனுமத் ஜெயந்தி (Dec 20); மார்கழி மாதம், மூல நட்சத்திரம் அனுமனின் (மறு) பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது!"ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்" என்று சிலர் உளறுவதைக் கேட்டிருப்பீர்கள் :-)இங்கே அனுமன் ஆண் மூலம். அரசாண்டானா? இல்லையே!அடக்கமான அன்புத் தொண்டனாகத் தானே இருந்தான்!எகனை மொகனையா யாரோ சொல்லப் போய், இந்த மூல நட்சத்திரப் பெண்கள் (நடுத்தர வர்க்கப் பெண்கள்) பலர் படும் பாடு, பாவம் சொல்லி மாளாது!சரியா...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Monday, December 11, 2006
குறையொன்றுமுண்டோ? - எம்.எஸ்.நினைவு நாள்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்; Behind every successful man there is a Woman! என்பார்கள்.
ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால், ஆண் பக்க பலமாக இருந்தார். Behind a successful woman, there was a Man!
யார் என்று உங்களுக்கே தெரியாதா என்ன?
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி - கல்கி சதாசிவம் தம்பதியரே அவர்கள்!
இன்று பாரத ரத்னா,எம்.எஸ் அம்மாவின் நினைவு நாள் (Dec 12).
தமிழிசைக்கு அவர்கள் இருவரும் புரிந்த தொண்டு மகத்தானது.
முன்னணியில் எம்.எஸ். தமிழிசைப் பாடல்கள் பாடினாலும்,
பின்னணியில்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: MS Subbulakshmi, tamizh isai, எம். எஸ்
Sunday, December 10, 2006
கணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி

Dec 11, பாரதி பிறந்த நாள்;முன்னொரு முறை, திருமதி செல்லம்மாள் பாரதி, தில்லி வானொலியில் ஆற்றிய உரையின் பகுதிகள் கீழே.எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.சில...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Thursday, December 07, 2006
புதிரா? புனிதமா?? - பாகம் 3
----------------------------------------------------------------------------------------------விடைகள் பதிப்பிக்கப்பட்டன! சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்! முடிவுகள் இதோ! (தாமதத்திற்கு மன்னிக்கவும்; பணி மிகுதியால், மாலையில் இப்பக்கம் வரவே முடியவில்லை.)ஜெயஸ்ரீ, கொத்ஸ்குமரன், SK, இராமநாதன்ஜிரா ஆகியோர் சிறப்பான விடைகளைச் சொல்லி இருக்காங்க!இம்முறை 2&10 கேள்விகள் சற்று subjectiveஆக உள்ளதால், வரிசைப்படுத்தவில்லை. ஜிராவின் விளக்கங்களையும் பதிவின் இறுதியில் காணவும்!பங்கேற்றோர்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: புதிரா? புனிதமா??, புதிர் போட்டிகள்
Saturday, December 02, 2006
ராபின்ஹுட் ஆழ்வார்! Happy Birthday!!

ஆழ்வார்களிலேயே படு வேகமானவர்!முதலில் நீலன்; பின்னர் திருமங்கையின் மன்னர்; அதற்குப் பின் கள்வர்; பெருமாளிடமே வழிப்பறி செய்த ராபின்ஹூட்! அவரின் Birthday இன்று! ஆமாம், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் அன்று தான் திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள்! (Dec 03, 2006) கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் ஆழ்வார் அவதாரம். (எட்டாம் நூற்றாண்டு); திருக்குறையலூர் என்னும் ஊரில் (சீர்காழிக்கு அருகில்) பிறந்தார்;உலக...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: ஆழ்வார், திருமங்கையாழ்வார்
கூகுள் படத்தில் கார்த்திகை தீபம் மின்னுதே!
"மலைக் கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" என்பது தலைவர் படத்தில் வர்ற பாட்டு இல்லையா? என்ன படம் பேரு? மறந்து போச்சு! சரி அத விடுங்க! இன்று கார்த்திகை தீபம்! (Dec 03)திருவண்ணாமலை தீபம்! எல்லாரும் அறிந்த கதை தான்!பேசாம நாம எல்லாரும் அண்ணாமலைக்கே போய், தீப தரிசனம் கண்டு வரலாம் வாங்க! கீழே தீபத்தின் கூகுள் ஒலி-ஒளிக் காட்சி; கண்டு மகிழுங்கள்! (please allow time for video buffering; Runtime 7 mins)தீப மங்கள ஜோதீ நமோ நம!அருட்பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை!!அண்ணாமலைக்கு அரோகரா!!! தசாவதாரம் என்ற ஒரு...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Thursday, November 30, 2006
கைசிகம் - புராணமா? புரட்சியா??

கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)இன்று கைசிக ஏகாதசி (Dec-01, 2006). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: Community, அந்தணர் அல்லாதார், சமூகம்
Thursday, November 23, 2006
பதிவுலகமே - நன்றி! நன்றி! நன்றி!

முகம் தெரியாத ஒருவருக்கு எப்போதாவது நன்றி சொல்லி இருக்கீங்களா?இன்னிக்கு நாம சொல்லலாமா?எங்கும் நன்றி! எதிலும் நன்றி!! எல்லோருக்கும் நன்றி!!செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: Thanksgiving, பதிவர் வட்டம்
Saturday, November 18, 2006
ஒத்த ரூவா தாரேன்!

"ஒத்த ரூவா தாரேன்" என்ற குஷ்புவின் கரகாட்டப் பாட்டு எவ்வளவு பிரபலம்?ஆனா இந்த "ஒத்த ரூபாயைப்" பாத்து எவ்வளவு நாள் ஆகி விட்டது, தெரியுமா?இதோ கீழே பாருங்க!இதுகளை எல்லாம் எங்காச்சும் எப்பவாச்சும் பாத்த ஞாபகம் இருக்குங்களா?பார்த்த ஞாபகம் இல்லையோ? இதை நிச்சயமா அடிக்கடி பாத்திருப்பீங்க! அப்படிப் பாக்காதவங்க, இப்பவே நல்லா பாத்துக்குங்க!அப்புறம் இதுவும் நாணயமாப் போச்சேன்னு ரொம்ப நாணயமாப் புலம்பக்கூடாது, சொல்லிட்டேன்!...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Thursday, November 09, 2006
புதிரா? புனிதமா?? - பாகம் 2
----------------------------------------------------------------------------------------------விடைகள் பதிப்பிக்கப்பட்டன! (அப்பாடா, நியுயார்க் போக்குவரத்து நெரிசலில் தப்பித்து, இதோ வீடு வந்து சேர்ந்து, நேரே தமிழ்மணம்!)சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்!முடிவுகள் இதோ!10/10 குமரன், ஜெயஸ்ரீ9/10வெட்டிபையல் (பாலாஜி)7/10இராமநாதன், சிவமுருகன், கீதாம்மாவெற்றிக் கனி பெற்றவர்க்குப் பரிசை இரவு, மின்-மடல் வழியாக அனுப்பி வைக்கிறேன்.......பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!வென்றவர்க்குச்...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: புதிரா? புனிதமா??, புதிர் போட்டிகள்
Saturday, November 04, 2006
"தண்ணி" காட்டிய இறைவன்

தொண்டர்கள் தொடர் இது!அப்படித் தான் ஒரு முறை, "தண்ணி உள்ள காட்டிலேயே", நமக்குத் "தண்ணி" காட்டினான் இறைவன்!!சென்ற பதிவில் திருமலை அனந்தாழ்வான், திருமலை எம்பெருமானுக்குப் புரிந்த தொண்டுகள் பற்றிக் கண்டோம்!இன்று காணப் போவது திருமலை நம்பிகள், பற்றி.ஒருவர் நல்ல வசதியுடன் "ஜம்" என்று இருக்கும் போது, அவரைப் போய் பார்த்து, அவருக்குக் பணிவிடைகள் செய்து விட்டு வருவது என்பது வேறு!ஆனால் அவரே எளிய ஆளாய் இருந்த...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: Tirumala, திருமலைக் கதைகள்
Tuesday, October 31, 2006
அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம்

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.
சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.
"முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு"
விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.
பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு,...
வருகைக்கு நனி நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
Labels: Christianity, அமெரிக்கா