Monday, December 31, 2007

2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-1)

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன? :-)திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது...
Read more »

Monday, December 24, 2007

கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்! எத்தனை மகிழ்ச்சி!சிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;அன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்!வீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண...
Read more »

தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை?

அன்று தில்லை நடராசன் சன்னிதியில் ஒரே கூச்சல், குழப்பம்! "அச்சச்சோ, நடராஜப் பெருமானுக்குத் தீட்டாயிடுத்தே! எந்தச் சண்டாளன் களியைத் தின்னுட்டு, இப்படி மீதியை, ஸ்வாமி மேல் வீசினானோ தெல்லியே! ஏங்காணும்...நோக்கு ஏதாச்சும் தெரியுமா?" "ஓய், என்னைக் கேட்கறீரா? நேத்து ராக்கால பூஜை முடிச்சி, நடையைச் சாத்தினது நீர் தானேய்யா! இன்னிக்கு காலம்பற வந்து நடையைத் தொறக்கறேன்! அச்சோ! ஸ்வாமி மேல் என்னது இது திட்டு திட்டா...
Read more »

Wednesday, December 19, 2007

பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!!

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?திருவரங்கம். திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து,அப்படியே...
Read more »

Monday, December 17, 2007

குறுக்குப் புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன்!

குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, வெற்றி பெற்றவர்கள் இதோ!அறிவன்அரைபிளேடுமோகன்தாஸ்தங்கம்லஷ்மிபொன்ஸ்ஜெயஸ்ரீ அனைவருக்கும் வாழ்த்துக்கள் மக்களே!புதிரா புனிதமாவில், முதல் முறை நிறைய பேர் 100/100 அடித்துள்ளார்கள்! மகிழ்ச்சியாய் இருக்கு!ஆர்வமுடன் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும், வாழ்த்துக்கள்!பரிசு எப்படியும் உங்களுக்கும் சேர்த்து தானே! :-)இதோ பரிசேலோ ரெம்பாவாய்.... ஆசிரியர் கல்கியுடன், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின்...
Read more »

Tuesday, December 11, 2007

கணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி!

Dec 11, பாரதி பிறந்த நாள்;முன்னொரு முறை, திருமதி செல்லம்மாள் பாரதி, தில்லி வானொலியில் ஆற்றிய உரையின் பகுதிகள் கீழே.எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.சில...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP