தமிழில் பக்த ராமதாசு! - பலுகே பங்கார மாயனா!
மிகவும் தகர்ந்து போய், நம் கண் முன்னாடியே பொடிப்பொடியாகும் போழ்து, பேச்சே வராமல் நீரே வரும்! ஸ்தம்பித்து நிற்றல்-ன்னும் சிலர் சொல்லுவார்கள்!
அப்போது, "இன்னுமா கருணையில்லை? பேசினால் பொன்னும் சிந்திடுமா?" என்று என் கையைப் பிடித்து தடவிக் கொடுக்கும் ஆறுதலான பாட்டு ஒன்று உண்டு!
நேற்றைய கொடூரமான இரவில், தொலை தூரம் வண்டி ஓட்டிக் கொண்டே, நூறு முறையாவது இதைக் கேட்டிருப்பேன்!
இந்தப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க, ஓடிக் கொண்டிருக்க, நானும் பல மைல்கள் எங்கே என்றே தெரியாமல், எங்கோ ஓடிக் கொண்டே இருந்தேன்!
இந்தப் பாடல் பக்த ராமதாசு என்ற தெலுங்குப் படத்தின் வாயிலாகப் பிரபலமான பாடல்! பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
அதை சினேகா பாடும் போது, இராமதாசராக நடித்த நாகார்ஜூனா கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்!
இதில் ஒரு விசித்திரமான சோகம் என்னவென்றால்,
இந்தப் பாடலை மகிழ்ச்சியாய் இருக்கும் போதும் பாடலாம்! துக்கத்தில் துவளும் போதும் பாடலாம்!
இரண்டுக்குமே ஒத்து வரும் அற்புதம் எப்படி இந்தப் பாட்டில் அமைந்தது? = "மெல்லிய மனசு"!
இந்தப் பாடல் "மெல்லிய மனசு" என்ற ஜீவனைக் கட்டிச் சிறையில் எழுதப்பட்ட பாடல்!
அந்த மென்மை தான், ஒரு வெள்ளை இறகு போல, காற்றில்லாத போதும் பறக்கும்! காற்று அடிக்கும் போதும் பறக்கும்!
சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா? = அன்பாக வந்தவர்களை அரவணைத்துக் கொள்பவன் என்று "விருது" மட்டும் வாங்கி வச்சிருக்கியே?
* இதை மகிழ்ச்சியாய் இருக்கும் போது சொன்னால் = கலாய்த்தல்!
* இதையே கண்ணீரில் சொன்னால் = கையறு நிலை!
கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ! = கருணையோடு இந்த பத்ராசல ராமதாசனை ஒரு முறையாச்சும் பார்த்து விடு! உன் பார்வை ஒன்றே என்னைப் போஷித்து விடும்! பார்ப்பாயா? பார்ப்பாயா? பார்ப்பாயா?
கேளுங்கள்:
* பக்த ராமதாசு படத்திலிருந்து - சித்ரா - துன்பத்தில்!
* பாலமுரளி கிருஷ்ணா - மிக்க இன்பத்தில்!
இதை மெட்டு மாறாமல் தமிழாக்கி, என் வாய் பல முறை முணுமுணுக்கும்!
அப்படி முணுமுணுத்ததை இப்போது பந்தலில் உங்கள் முன் வைக்கிறேன்!
இதோ! அதே மெட்டில், ஆனால் தமிழில்.......
கேட்டுக் கொண்டே படியுங்கள்! சங்கராபரணம் படத்தில்-வாணி ஜெயராம் பாடுவது...
பலுகே பங்கார மாயனா? கோதண்ட பாணி
பேசினால் பொன்னும் சிந்திடுமா? கோதண்ட பாணி!
பலுகே பங்கார மாயே, பிலிசின பலுக வேமி
கலலோ நீ நாம ஸ்மரண, மறவே சக்கனி சாமீ
வினவினால் வாயைத் திறந்தொரு வார்த்தை சொன்னால் தப்பா?
கனவிலும் நாமம் தன்னை, மறவேன் உன் செல்லம் அப்பா!
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)
எந்த வேடின கானி, சுந்தைன தய ராதோ?
பந்தமு சேய நீ, நெந்-ததி வாடனு தந்த்ரி
எத்தனை வேண்டி னாலும், உள்ளம் இரங்கி டாயோ?
அத்தனை அழுத்த்த் தமா? அகலேன் உன் செல்லம் அப்பா!
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)
சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா?
கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ!
(பலுகே பங்கார மாயனா?)
சரணா கத விருதை, முரணாக வாங்கி னோயோ?
கருணை கொண்டே பத்ரா....சல..ராம தாசன் என்னொடு...
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)
இதை அன்பர்கள் யாரேனும் தமிழில் பாடிக் கொடுக்க முடியுமா? மிகவும் மகிழ்வேன்!
வரிகள்: பத்ராசலம் ராமதாசர்
ராகம்: ஆனந்த பைரவி்
தாளம்: ஆதி
படத்தில், சினேகா பாட, இராமதாசராக நடித்த நாகார்ஜூனா கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்! பின்னே, அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் கட்டினால் சும்மா விடுவார்களா?
ஆலயத்தின் பணத்தை எடுத்து, அரசாங்கத்துக்குப் பயன்படுத்தினால் அது நியாயம்! ஆனால் அரசாங்கப் பணத்தை எடுத்து (அதுவும் கடனாகத் தான்) ஆலயம் கட்டினால், அது நியாயம் இல்லை! :)
உலகம், "நியாயம்" என்பதற்கு விதித்திருக்கும் விதியே தனி! ஆனால் மென்மையான மனத்துக்கு இந்த உலக விதிகளா கண்ணுக்குத் தெரிகிறது???
மனத்தைப் பறி கொடுத்தால், எல்லாமும் பறி கொடுக்க வேண்டியது தான்! அப்படிப் பறி கொடுத்தவர்களில் ஒருவர் பத்ராசலம் இராமதாசர்!
கோதாவரிக் கரையில், சீதையின் கடத்தல் நடந்த இடம் என்று கருதப்படும் பஞ்சவடி தான் இந்த பத்ராச்சலக் காடுகள்!
* கடத்தலுக்கு முன்பு இன்பமாகக் கழித்த காலமும் இங்கு தான்!
* கடத்தலுக்குப் பின் துன்பமாகக் கழித்த காலமும் இங்கு தான்!
* நினைந்தவாறு இருக்கும் பிராட்டியும்,
* புன்சிரிப்பில் இராகவப் பெருமாளும்,
* அன்பே உருவான இளைய பெருமாளும்...என்று திருவுருவ அழகே அழகு!
அதற்கு ஆலயம் எடுப்பித்த போது, சொந்தப் பணம் போதவில்லை! நன்கொடையாய் வந்த பொதுப் பணமும் போதவில்லை! கோல்கொண்டா அரசாங்க தாசில்தாரான இராமதாசர், வரிப் பணத்தில் சற்று கடன் வாங்குகிறார்! கருவூலத்தில் வட்டியுடன் திருப்பிச் சேர்ப்பதாக முறி எழுதிக் கொடுத்துத் தான் பணம் எடுத்துக் கொள்கிறார்!
மன்னன் தானி ஷா, வெகுண்டு எழுகிறான்!
இத்தனை காலம் ஆலயங்களின் வருவாய்களைக் கருவூலத்துக்குத் திருப்பினோமே என்று நினைக்க கூட அந்த "நீதிபதிக்கு" நேரம் போதவில்லை!
பொதுப்பணத்தில் கை வைத்த குற்றத்துக்காக இராமதாசர் சிறைப் பிடிக்கப்படுகிறார்! அது வரை சரியே! ஆனால் சிறைக் கொடுமைகள் அதிகம் கொடுத்து, அவரை அக்கு வேறு ஆணி வேறாகத் துன்புறுத்துகிறார்கள்!
கடனாகப் பெற்றதைத் திரும்ப அடைக்காத வரை, அடைக்காதவரை ஆளனுப்பித் துன்புறுத்தும் கிரெடிட் கார்டு காலம் தான் போலும், அந்தக் காலமும்!
சிறைக் கொடுமைகளுக்கு நடுவே தான் இந்தத் துன்ப/இன்ப மயமான பாட்டு!
சிறையில் இருந்தது கூடத் துன்பமாகத் தெரியவில்லை!
அவன் பாராமுகம் = துன்பம்! அவனைப் பார்க்கும் முகம் = இன்பம்!
இளவல்கள் இரண்டு பேர், தானி ஷாவின் அரண்மனைக்கு வந்து, தங்கக் காசுகள் செலுத்தி, விடுதலைப் பத்திரம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள்!
அன்று அன்னையைச் சிறை மீட்டவன், இன்று என்னையும் சிறை மீட்டுவானோ?
அவர்கள் செலுத்திய பதினாறாம் நூற்றாண்டு தங்கக் காசுகள் இன்றும் உள்ளன! ஒரு பக்கம் பட்டாபிஷேகம், மறுபக்கம் அஞ்சனை மைந்தன் அனுமன் என்று அந்தக் காசுகளை இன்றளவும் காணலாம்!
இசைக்கடல் தியாகராஜருக்கும் முன்னோடியானவர் பத்ராசலம் இராமதாசர்! தியாகராஜரே அவர் பெயரைப் பல இடங்களில் பாடுகிறார்! தெலுங்கு மொழியில் திருமங்கை ஆழ்வாரின் பாடல்களை எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படியே இந்தப் பத்ராசலம் இராமதாசர்!
ராமதாசு - படத்திலிருந்து: (Must See)
பத்ராசலம் ஆலயத்தில் திருக்கல்யாணத்தின் போது: (Nice to See. Pl. watch the jewels hand picked by Ramadasar.)
தீபிகா - சிட்னியில்:
FUSION: (Must Hear)
உன்னி கிருஷ்ணன்:
ஸ்வாதித் திருநாள் ராம வர்மா:
* Srivats கேட்டுக் கொண்டபடிக்கு, From Rock to Ragas!
கருணிஞ்சு பத்ராசல = கருணையோடு உன் பத்ராசல ராமதாசனை ஒரு முறையாச்சும் பார்த்து விடு!
வர ராம தாச போஷ = உன் ஆதுரமான பார்வை ஒன்றே என்னைப் போஷித்து விடும்! பார்ப்பாயா? பார்ப்பாயா? பார்ப்பாயா?
பலுகே பங்கார மாயனா!
எந்நாளும் உன்னோடு "பிரிவின்றி",
பரிவுடன் ஆயிரம் பல்லாண்டு!
Read more »