Friday, June 19, 2009

"ஓம் நமோ" என்றால் என்ன? - Part 4

வரிக்கு வரி "நமோ, நமோ"-ன்னு சொல்றாங்களே! ஏன்? ஒரே "நம நம"-ன்னு கை அரிக்கும் சில பேருக்கு! அந்த "நம நம" தான் "நமோ நமோ"-வா? :)
சென்ற தொடர் பதிவுகளில் "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்தோம்-ல? இன்னிக்கு "நமோ" என்றால் என்னான்னு பார்க்கலாம், வாரீயளா? சென்ற பதிவு இங்கே!

நாத விந்து கலாதி நமோ நம!
வேத மந்த்ர சொருபா நமோ நம!
ஞான பண்டித சாமீ நமோ நம!
-ன்னு ஒரு முழு அர்ச்சனையே செய்து முடிப்பார் அருணகிரியார்! பாட்டு முழுக்க "நமோ நம" தான்! எதுக்கு இத்தனை "நமோ நம"?

நம-ன்னா நமஸ்காரம் (அ) வணக்கம்-ன்னு சொல்லுவாய்ங்களே! எதுக்கு வரிக்கு வரி வணக்கம்? முருகன் என்ன அரசியல்வாதியா? அத்தனை முறை விழுந்து கும்பிடணுமா என்ன? அப்போ தான் என் பொடிப் பையன் அருள்வானா என்ன? :)"நம" என்பதன் மேலோட்டமான பொருள் "வணக்கம்" என்பது தான்! நம = போற்றி!

ஓம் விநாயகாய நம!
ஓம் விக்னராஜாய நம!
ஓம் கெளரி புத்ராய நம!
ஓம் ஸ்கந்தா க்ரஜாய நம!
-ன்னு பிள்ளையார் கோயிலில் அர்ச்சனை நடக்கும்! சுண்டல் சாப்பிடும் போதாச்சும் கேட்டு இருப்பீங்க தானே? :)

ஆனால் "நம" என்றால் வெறுமனே "போற்றி" என்று மட்டும் பொருள் அல்ல!
ஒரு குறிப்பிட்ட தன்னலமான காரியத்துக்கு, நம்ம பேரைச் சொல்லி, அர்ச்சனை செய்யறோம்-ல? அப்போது சொல்லப்படும் "நம" என்பது வேண்டுமானால் "போற்றி"-ன்னு இருக்கலாம்! என் தோழி ஆண்டாளும் இந்த அர்ச்சனையைத் தமிழில் செய்து வைக்கிறாள்!

பூபாலக திரிவிக்ரமாய நம = அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நம = சென்றங்கு தென்னிலங்கை செற்றாய், திறல் போற்றி
என்று தமிழ் அர்ச்சனைக்கு வித்திட்டுச் செல்கிறாள்!

ஆனால் அரும்பெரும் மந்திரங்களை ஓதும் போது சொல்லும் "நம" என்பதற்கு, வெறுமனே "போற்றி" என்று பொருள் அல்ல!
நம = ந + ம = இல்லை + எனது!
* இங்கு எதுவுமே எனதில்லை என்பது தான் = ந+ம!
* எல்லாமே உனது என்பது தான் = ந+ம!


அட! என்னாங்க இது அநியாயமா இருக்கே? ஓம் நமோ நாராயணாய-ன்னு சொல்லச் சொன்னாய்ங்க! "எனக்கு" நல்லது நடக்கும்-ன்னு தானே அப்படிச் சொல்லச் சொன்னாய்ங்க?
இப்போ திடீர்-ன்னு வந்து, "எனதில்லை! எனதில்லை"-ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விளையாட்டா? இந்த இருவது ரூவா அர்ச்சனைத் தட்டு கூட "எனது" தானே! "என்" காசில் தானே வாங்கினேன்? அப்பறம் "எனதில்லை"-ன்னா எப்படி? போங்கய்யா, நல்ல போங்கா இருக்கே! :))


அதுக்கும் முன்னாடி, இன்னொன்னும் பார்த்திடுவோம்!
சென்ற பதிவில், எல்லா மந்திரத்துக்கும் முன்னாடி, "ஓம் ஓம்"-ன்னு சேர்த்துச் சேர்த்து சொல்றாங்களே? அது ஏன்?-ன்னு கேட்டோம்-ல? எதுக்கு "ஓம்" என்கிற முன்னொட்டு (Prefix)?

பிரணவம் (எ) ஓங்காரம் சேரும் போது தான், மந்திரம் முழுமை அடைகிறது! இல்லீன்னா முழுமை அடையாது!
ஓம் + நம சிவாய! ஓம் + சரவண பவ!
இப்படி எல்லாத்தோடவும் "ஓம்" சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! பூரணத்துவம் பெறும்!

ஓங்காரம் சேர்க்கும் போது மட்டுமே, நமக்கும்-இறைவனுக்குமான உறவு, அந்த மந்திரத்தில் ஏறுகிறது!
நம சிவாய என்று சொல்லும் போது, அவன் பேரை மட்டுமே சொல்கிறோம்! அது நாம சங்கீர்த்தனம்! திருப்பெயர்த் துதி!
ஆனால் பேரைப் பாடும் அதே நேரத்தில், அவனுக்கும் நமக்குமான உறவை கெட்டிப் படுத்திக் கொள்ள வேணாமா?

* ஓம் = அ + உ + ம் = அவன்->உறவு->நாம் -ன்னு சென்ற பதிவுகளில் பார்த்தோம்!
* ஓம் = எனக்கு நீ, உனக்கு நான் என்கிற உறவு!
* இந்த உறவை, அவன் பேரோடு சேர்த்துச் சொல்லும் போதே, நாமும்-அவனும் இன்னும் இறுகுகிறோம்!

எங்கம்மாவை ஜோதீஸ்வரி-ன்னு எல்லாரும் கூப்பிடுவாங்க! நான் கூட செல்லமா ஜோதீ-ன்னு தான் கூப்பிடுவேன்! :)
ஆனா உறவு? = அம்மா-ன்னு கூப்பிடும் போது தானே?
ஜோதி-ன்னு கூப்பிட்டாலும், "அம்மா"-ன்னு கூப்பிடும் போது எப்படி உறவு குழைந்து கெட்டிப் படுகிறதோ, அதே போல்,
சங்கரா, சிவா, நமசிவாய-ன்னு கூப்பிட்டாலும், "ஓம்" என்று சேர்க்கும் போதே உறவு கெட்டிப் படுகிறது! புரிகிறதா? :)


* திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
அப்பாவை விட புள்ளைக்கு ஒரு எழுத்து கூட! ஒரு படி பெருமையும் கூட! :)

இந்த மந்திரங்களோடே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! ஆனால் ஒரே ஒரு மந்திரத்துக்கு மட்டுமே, இப்படி "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை!
அந்த மந்திரத்துக்குள்ளேயே பிரிக்க முடியாதபடி, ஒன்னா ஒட்டிக்கிட்டு இருக்கு! அது என்னா மந்திரம்-ங்க?

ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
திரு எட்டெழுத்து, அஷ்டாட்சரம் என்று சொல்லப்படும் இந்த மந்திரத்துக்கு மட்டும் தான் இப்படி பிரிக்க முடியாத உறவு!

ஓம் + ந மோ + நா ரா ய ணா ய

(1)----(2)--(3)----(4)--(5)--(6)--(7)--(8)
என்பதில் ஓம்-ஐ தனியாக் கழட்டி விட்டு எண்ணிப் பாருங்க! Count & See?
எட்டெழுத்து என்பது போய், ஏழு எழுத்து-ன்னு ஆயிரும்! :)
அஷ்டாட்சரம் என்பது தானே மந்திரம்? சப்தாட்சரம்-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? :)

ஆக, ஓங்காரத்தை, அஷ்டாட்சரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! பொருளே போயிரும்!
ஓங்காரம் உள்ளேயே இருப்பதால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி! Or else meaningless!

ஆனா மற்ற மந்திரங்களுக்கு இப்படி இல்லை!
* ச ர வ ண ப வ = 6! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவாறெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!
* ந ம சி வா ய = 5! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவைந்தெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!

ஆனால் திரு எட்டெழுத்தில் மட்டுமே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கத் தேவையில்லாத படிக்கு, மந்திரத்தோடே ஒட்டி உறவாடுகிறது! இயற்கையாகவே ஓங்காரம் என்னும் DNA அமைந்து விட்டது!
அதான், "உன்றன்னோடு-உறவேல்-நமக்கு" என்று DNA மகத்துவம் காட்டுகிறாள் கோதை! அந்த DNA-வை "ஒழிக்க ஒழியாது" என்றும் பாடுகிறாள்!

முப்பத்து மூவர் அமரர்க்கு, முன் சென்று, கப்பம் தவிர்க்கும் கலியே என்று இதன் தாத்பர்யம்!
அதாச்சும் நமக்கு ஒரு ஆபத்து-ன்னா யார் "முன்னாடி" ஓடி வருவாய்ங்க? = அம்மா தானே? "உறவு" தானே?

ஏதோ யாகம், ஹோமம்-ன்னு பண்ணின புண்ணியத்துக்கு அந்தந்த அதி தேவதைகள், அக்னி, இந்திரன்-ன்னு வந்து யக்ஞ பலன் கொடுக்கலாம்!
ஆனா முப்பத்து மூவரும் வருவதுக்கு முன்னாடியே, "முன் சென்று", கப்பம் தவிர்ப்பது எது? = கலி (ஒலி)! = ஓம் + ந மோ + நா ரா ய ணா ய!


குறிப்பு:
இதனால் "நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களுக்கு எல்லாம் ஓங்கார உள்ளுறை இல்லை! அதனால் ஒரு படி கம்மி!" என்று ஒரு சிலர் வழக்கம் போல தப்பர்த்தம் எடுத்துக்க கூடாது! எப்பமே கணக்கு போட்டு, ஆன்மீகம் பண்ணும் மனப் போக்கு உள்ளவர்கள் தான் இப்படி எடுத்துக்கிடுவாங்க! :))
அந்தந்த மந்திரத்துக்கு அந்தந்த பெருமையும் மகிமையும் கட்டாயம் உண்டு!
"ஓங்காரம் என்னும் பிரிக்க முடியாத உறவைக் காட்ட வந்த மந்திரம் = திரு எட்டெழுத்து" என்று மட்டுமே கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!

* "ஓம்" என்று சொல்லி, அவன்-நாம் உறவை இறுக்கிக் கொண்டாகி விட்டது!
* "நமோ" என்று சொன்னால், "எனது இல்லை" என்று வருகிறதே! = அப்படின்னா எது எனதில்லை? எது என்னுடையது?

வாட்? எது உனதா? ஆசை-தோசை! :)
உடலோ பிரகருதிக்கு (matter) சொந்தமானது! பஞ்ச பூதமாகி விடும்!
ஜீவனோ இறைவனுக்குச் சொந்தமானது!
உடம்பும், உயிருமாத் தானே இருக்கே? உடம்பு பிரகருதிக்குச் சொந்தமான பொருள்! ஜீவன் பரமாத்மாவுக்குச் சொந்தமான பொருள்! அப்போ எனக்கு???

உடம்பும், உயிரும் தவிர்த்து மீதி என்ன இருக்கோ, அதான் உனக்குச் சொந்தம்!

மீதி என்ன இருக்கு? = பிருதா அகங்கரணம் பரம்!
தான் என்ற நினைப்பு = அகங்காரம் தான் மீதி இருக்கு! அது மட்டும் தான் உனக்குச் சொந்தம்! :)

எல்லாம் அற என்னை "இழந்த" நலம், சொல்லாய் முருகா! சுர பூபதியே!
உடம்பும் உன்னுது கிடையாது! உயிரும் உன்னுது கிடையாது! மீதி இருக்குற "தான் என்கிற உணர்வு மட்டுமே உனக்குச் சொந்தம்! So,"ந + மோ" என்றால் என்ன?.....(தொடரும்)

152 comments:

 1. அருமையான விளக்கம் ரவிண்ணா..

  நம என்றால் போற்றி என்று மட்டுமே நினைத்தேன்.. எனது இல்லை என்பது இன்று தான் தெரிந்து கொண்டேன்.. மேலும் சொல்லுங்க... ஆவலோட இருக்கேன்.

  ReplyDelete
 2. அண்ணா, சிவபெருமானுக்கும், ஸ்ரீமன்நாராயணனுக்கும் உள்ளது போன்று பிரம்மதேவருக்குரிய மந்திரம் இதுபோன்று உண்டா ?

  ReplyDelete
 3. //அகங்காரம் தான் இருக்கு! அதான் உனக்குச் சொந்தம்! :)//

  கர்ம பலன்களும் இதனுள் அடக்கமோ ?

  ReplyDelete
 4. //யாகம், ஹோமம்-ன்னு பண்ணின புண்ணியத்துக்கு அந்தந்த அதி தேவதைகள், அக்னி, இந்திரன்-ன்னு வந்து யக்ஞ பலன் கொடுக்கலாம்//

  அந்த பலனையும் இறுதியில் பகவான் கண்ணனுக்கு தானே சமர்ப்பிக்கிறோம்.. பிறகு நமக்கு புண்ணியம் ஏது பாவம் தான் ஏது ?

  கர்மாக்களை நாம் செய்தாலும் அதனால் வரக்கூடிய பலன்கள் நம்மைச் சேர்கின்றனவா ?

  பகவானுக்கு க்ரமமாகச் செய்யக்கூடிய நித்ய ஆராதனமும், அப்படி இல்லாமல் தினமும் கடை திறக்கும் நேரத்திலோ, வீட்டிலோ பெருமாள் படத்துக்கு ஒரு விளக்கு ஏற்றி ஊதுபத்தி காட்டி வழிபடுவதும் ஒரே கர்மா தான் என்று நினைக்கிறேன்.. சற்று விளக்குங்களேன்

  ReplyDelete
 5. //Raghav said
  பெருமாள் படத்துக்கு ஒரு விளக்கு ஏற்றி ஊதுபத்தி காட்டி வழிபடுவதும் ஒரே கர்மா தான் என்று நினைக்கிறேன்.. சற்று விளக்குங்களேன்//

  இதை ஒரு சுப கர்மமாகச் சேர்க்கலாம்.ஆனால் எம்பெருமானுக்குச் செய்யும் அனைத்தும் அழிவற்ற விதையாக
  முடிவற்ற பலன்களைத் தருவன என்பது ஆன்றோர் வாக்கு.
  சிறு கைங்கர்யமும் அமோகமான பலனைத் தருகிறது.

  ‘எப்பாலைக்கும் சேமத்ததே’

  தேவ்

  ReplyDelete
 6. //இதை ஒரு சுப கர்மமாகச் சேர்க்கலாம்.ஆனால் எம்பெருமானுக்குச் செய்யும் அனைத்தும் அழிவற்ற விதையாக
  முடிவற்ற பலன்களைத் தருவன என்பது ஆன்றோர் வாக்கு.//

  நன்றி தேவ் ஐயா. எனக்கு மேலும் சில கேள்விகள் தோன்றுகிறது. எவையெல்லாம் கர்மம் ?
  பக்தி மேலீட்டினால் கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்கள், பொங்கல் வைத்தல், பலியிடுதல்.. மற்றும் பல வேண்டுதல்கள் எல்லாம் எதைக் குறிக்கின்றன?? இவை பக்தியோகமா இல்லை கர்மயோகமா.. அல்லது வேறு என்னதான் இவை அனைத்தும்..

  கோவிலில் விழுந்து சேவித்தல் பற்றி சொல்லியுள்ளனர். அங்க ப்ரதக்ஷ்ணம் பற்றி உள்ளதா ?

  கர்மம் என்றால் நாம் செய்யும் செயல்கள் அனைத்துமா அல்லது ”விதிக்கப்பட்டுள்ள” என்று பொதுவாக சொல்லும் சில செயல்கள் மட்டுமா ?

  பெருமாளுக்கு ரொம்பவும் ப்ரீதியாய் உள்ளது பக்தன் தன்மேல் காட்டும் பக்தி ஒன்றே அந்த பக்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் காட்டுகிறார்கள். சிலர் வேதங்களில் சொன்னது போல் நித்ய ஆராதனங்கள் மூலமும், சிலர் கோவில்களுக்கு சென்று பகவானைத் தொழுதும், சிலர் மனத்தளவிலே வேண்டிக் கொண்டும் இன்னும் எத்தனையோ வகைகள்.. எனக்கு உள்ள குழப்பம்.. எவையெல்லாம் கர்மாக்கள்? எவையெல்லாம் பக்தியின் வெளிப்பாடு.. இரண்டுக்கும் உள்ள வித்யாசம் தான் என்ன?? செய்யும் கர்மாவுக்கு பலன் உண்டு என்றால்.. பக்தி வெளிப்பாட்டிற்குண்டான பலனும் நம்மைத் தானே சேரும். இதில் எதனால் பக்தியோகமே சிறந்தது என்று பகவான் கண்ணனே சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 7. //Raghav said...
  //யாகம், ஹோமம்-ன்னு பண்ணின புண்ணியத்துக்கு அந்தந்த அதி தேவதைகள், அக்னி, இந்திரன்-ன்னு வந்து யக்ஞ பலன் கொடுக்கலாம்//

  அந்த பலனையும் இறுதியில் பகவான் கண்ணனுக்கு தானே சமர்ப்பிக்கிறோம்.. பிறகு நமக்கு புண்ணியம் ஏது பாவம் தான் ஏது ?//

  நான் பாவ-புண்ணியம் பற்றிப் பேசவில்லையே ராகவ்!

  யாகம், ஹோமம்-ன்னு பண்ணின "புண்ணியத்துக்கு"-என்பது colloquial! உனக்கு "புண்ணியமா" போவும்-னு சொல்றது இல்லையா? அது போல!

  யாகம் பண்ணினதால் அந்த கர்மாவுக்கு கட்டுப்பட்ட அதி தேவதைகள், யாக பலனை அளிக்கின்றன என்று தான் சொல்ல வந்தேன்!

  ஆனால் இப்படி பிரதிபலனாக எல்லாம் இல்லாமல், எம்பெருமான் திருநாமமோ, எல்லாத்துக்கும் முன்னாடி வந்து நிற்கும்! நின்று காப்பாற்றும்! = முப்பத்து மூவர் அமரர்க்கும், முன் சென்று, கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்!

  கேஆரெஸ் பதிவு-ன்னாலே dont read too much between the lines :))
  ஹோமம்/யாகம்/கர்மா எல்லாம் தேவையற்றவை-ன்னு சொல்ல வராரோ-ன்னு எல்லாம் கற்பனைக் குதிரையைக் கண்டபடிக்கு ஓட்டக் கூடாது! :)
  எல்லாவற்றுக்கும் முன் சென்று கப்பம் தவிர்க்கும் என்பது மட்டுமே Focus!

  ReplyDelete
 8. நீங்கள் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் அருமை

  ReplyDelete
 9. சரி, இப்போ நீங்க கெளப்பி விட்டதால் சொல்கிறேன்! :)

  //அந்த பலனையும் இறுதியில் பகவான் கண்ணனுக்கு தானே சமர்ப்பிக்கிறோம்.. பிறகு நமக்கு புண்ணியம் ஏது பாவம் தான் ஏது ?//

  உம்....அப்புறம்? :)
  நாராயண இதி சமர்ப்பயாமி, பரமேஸ்வரப் ப்ரீதயர்த்தம்-ன்னு "வாயால" சொல்லிட்டாப் போச்சா? சமர்ப்பணமா?

  சொத்தே அவனுடையதா இருக்கும் போது, சமர்ப்பிக்க நாம யாரு? :)
  சமர்ப்பணம் பண்ணாட்டா, அவனுடையது கிடையாது-ன்னு ஆயிருமா?

  "நான்" அவனுக்கு "சமர்ப்பணம்" பண்ணிட்டேன்-ப்பா!
  புண்ணியம் ஏது பாவம் தான் ஏது?-ன்னு சொன்னால், அப்புறம் இத்தனை சங்கல்பம் ஏன்?

  குலம், கோத்திரம்-ன்னு சொல்லி அத்தனை சங்கல்பம் ஏன்? ஆயுர் ஆரோக்கிய, ஐஸ்வர்யாதி அபிவிருத்தயர்த்தம், இஷ்ட காம்யார்த்த சித்தயர்த்தம் - இதெல்லாம் ஏன்? எம்பெருமானுக்கு தானே சமர்ப்பணம் பண்ணுறோம்? அப்பறம் எதுக்கு இதெல்லாம்?

  இனி இதெல்லாம் கிடையாது! இஷ்ட காம்யார்த்தம்-ன்னு எல்லாம் சொல்ல மாட்டோம்! Straight-ஆ எல்லாம் எம்பெருமானுக்கே உரியவை-ன்னு சொல்லிப் பாருங்க! அப்பறம் எத்தனை பேரு வந்து ஹோமம் பண்றாங்கன்னு பார்த்துடலாம்! :))

  இஷ்டி, அது இது-ன்னு பேசிக்கிட்டு, கடைசீல ஒப்புக்குச் சப்பாவாட்டும், "நாராயண இதி சமர்ப்பயாமி, பரமேஸ்வரப் ப்ரீதயர்த்தம்"-ன்னு வெறும் "வாயால" சொல்றதெல்லாம் சமர்ப்பணம் ஆகாது! சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்! அம்புட்டு தான்!

  இந்த "சமர்ப்பயாமி" எல்லாம் அரசியல்வாதிகள், உடன் பிறவா சகோதரிகள் கூட பண்றவங்க தான்! அவங்க பண்ணாத யாகமா? சொல்லாத பரமேஸ்வரப் ப்ரீதயர்த்தமா? அவிங்களுக்கு புண்ணியம் தான் ஏது? பாவம் தான் ஏது? ஹா ஹா ஹா! :)

  ReplyDelete
 10. //கர்மாக்களை நாம் செய்தாலும் அதனால் வரக்கூடிய பலன்கள் நம்மைச் சேர்கின்றனவா ?//

  கர்மாக்களை "நாம்" செய்கிறோம் என்றால்.....
  அதனால் வரக்கூடிய பலன்கள் "நம்மை" தான் சேரும்! :)

  கர்மாக்களை "நாம்" செய்தாலும்-ன்னு தானே கேட்கறீங்க?
  கர்மாக்களை செய்தாலும்-ன்னு கேட்க முடிந்ததா?

  இப்போது புரிந்ததா ராகவ், ஒட்டுதல் எப்படி, கர்ம பலன் எப்படி-ன்னு? :))))

  ReplyDelete
 11. //கேஆரெஸ் பதிவு-ன்னாலே dont read too much between the lines :))
  ஹோமம்/யாகம்/கர்மா எல்லாம் தேவையற்றவை-ன்னு சொல்ல வராரோ-ன்னு எல்லாம் கற்பனைக் குதிரையைக் கண்டபடிக்கு ஓட்டக் கூடாது! :)//

  ஹா ஹா.. இந்தக் கேள்விகளெல்லாம் திடீர்னு இன்னைக்கு படிக்கும்போது தோணிச்சு.. கேட்டுபுட்டேன் அம்புட்டு தான்.. மற்றபடி நீங்க வேறவிதமா சொல்ல வர்றீங்களோன்னு எல்லாம் எனக்குத் தோணலை.. :)

  உங்க பதிவில இருந்து அதிகமகத் தெரிந்து கொள்ள முடிகிறது.. மற்றும் கேள்விகளை எந்த தயக்கமும் இல்லாம கேக்கவும் முடியுது அம்புட்டு தான்.

  ReplyDelete
 12. //Raghav said...
  மற்றபடி நீங்க வேறவிதமா சொல்ல வர்றீங்களோன்னு எல்லாம் எனக்குத் தோணலை.. :)//

  ஹிஹி! சரியானபடி புரிஞ்சிகிட்டா சந்தோசம் தான்பா ராகவ்! :)

  //மற்றும் கேள்விகளை எந்த தயக்கமும் இல்லாம கேக்கவும் முடியுது அம்புட்டு தான்//

  தோடா! நான் தான் கிடைச்சேனாப்பா உங்களுக்கு?
  என்னைய மட்டும் கேள்வி கேட்டு கேள்வி கேட்டு நல்லா மத்தளம் வாசிக்கறாங்கப்பா! பாவம் மத்தளம்! ரெண்டு பக்கமும் அடி! :))

  ReplyDelete
 13. //Raghav said...
  நம என்றால் போற்றி என்று மட்டுமே நினைத்தேன்.. எனது இல்லை என்பது இன்று தான் தெரிந்து கொண்டேன்.. //

  ஆமாம் ராகவ்!
  ஓம் நமோ நாராயணாய = ஓம் எனதில்லை நாராயணனுடையது!
  :)

  ReplyDelete
 14. //Raghav said...
  அண்ணா, சிவபெருமானுக்கும், ஸ்ரீமன்நாராயணனுக்கும்//

  அது என்ன ஒருத்தருக்கு மட்டும் ஸ்ரீமன்-னு மரியாதை?
  சிவபெருமானுக்கு ஸ்ரீ-ன்னு மரியாதை குடுக்க மாட்டீங்களா? :)
  இரு இரு, பெங்களூரான் அம்பி தலைமையில் உள்ள கும்மி கேங் கிட்ட சொல்றேன்! :)

  //உள்ளது போன்று பிரம்மதேவருக்குரிய மந்திரம் இதுபோன்று உண்டா ?//

  பிரம்மனுக்கு காயத்ரி எல்லாம் உண்டு! துதிகள் உண்டு!
  ஆனால் பஞ்சாட்சரம், அஷ்டாட்சரம் போல் மூலாதார மந்திரங்கள் இல்லை!

  முருகனுக்குரிய சடாட்சரம் என்பதும் பஞ்சாட்சரத்தின் உள்ளுறையே!

  வேறு எந்த தெய்வத்துக்கும் இப்படி மூலாதார மந்திரங்கள் கிடையாது! அம்பாள், தாயார் உட்பட!
  ஈசனுக்கும் பெருமாளுக்கும் மட்டுமே உண்டான கருப்பொருள் இது!

  அதனால், அச்சோ தாயாரைச் சொல்லவில்லையே என்று உடனே கற்பனை பண்ணிக்கக் கூடாது!
  அஷ்டாட்சரத்திலேயே தாயார் உள்ளுறையாக இருக்கிறாள். த்வய மந்திரத்தில் வெளிப்படையாக இருக்கிறாள்!

  ஒவ்வொன்னாச் சொல்லுறேன்!

  ReplyDelete
 15. //Raghav said...
  //அகங்காரம் தான் இருக்கு! அதான் உனக்குச் சொந்தம்! :)//

  கர்ம பலன்களும் இதனுள் அடக்கமோ ?//

  உடல் = பிரகிருதிக்குப் போய் விடும்!
  ஜீவன் = பரமாத்மாவுக்குப் போய் விடும்!
  அப்போ மீதி என்ன இருக்கு?

  ஸ்வயம் என்ற உணர்வு! தான்-தான்-தான்! அதையே அகங்காரம்-ன்னு குறிப்பிட்டேன்!

  வேதமும் அப்படியே தான் சொல்கிறது! இந்த விஷயத்தில் கேஆரெஸ் விளக்கம் ஆச்சார்ய விளக்கத்தில் இருந்து மாறுபட்டு இருக்கு-னு அடியேன் மேல் எவரும் பாய முடியாது! :))

  //கர்ம பலன்களும் இதனுள் அடக்கமோ//

  அடங்கும்!
  கர்மச் செருக்கு! கர்மாகங்காரம்! ஆத்மாபிமானம்! - இது தேகாபிமானத்தை விடக் கொடியது!-ன்னு நான் சொல்லலை! வேதம் சொல்லுது!

  உடம்பே சாஸ்வதம், நிலையானது-ன்னு நினைக்கறவன் கூட ஓக்கே!
  ஆனா ஆத்மாவே எல்லாம்-ன்னு நினைக்கிறவன் நிலைமை ரொம்ப மோசம்! :)

  வேதங்கள் மற்றும் கீதையின் படியும், திராவிட சாகரமான தமிழ் வேதத்தின் படியும்...

  ஞான யோகமோ, கர்ம யோகமோ மோட்சம் கொடுக்க வல்லவை அல்ல!
  கடினமான பக்தி யோகமும், எளிமையான சரணாகதியுமே மோட்சம் தர வல்லவை! - இதை நான் சொல்லலை! வேதம் சொல்லுது! :)

  ReplyDelete
 16. //பகவானுக்கு க்ரமமாகச் செய்யக்கூடிய நித்ய ஆராதனமும், அப்படி இல்லாமல் தினமும் கடை திறக்கும் நேரத்திலோ, வீட்டிலோ பெருமாள் படத்துக்கு ஒரு விளக்கு ஏற்றி ஊதுபத்தி காட்டி வழிபடுவதும் ஒரே கர்மா தான் என்று நினைக்கிறேன்.. சற்று விளக்குங்களேன்//

  இல்லை! ஒரே கர்மா இல்லை!
  ஒன்று, இன்னொன்றை விட உயர்வானது! சான்றாண்மை மிக்கது!

  நித்ய ஆராதனம் செய்த குருவாயூர் கோயில் நம்பூதிரிகள் ஒன்றும் அடையவில்லை!
  குருவாயூர் அப்பனுக்குச் சார்த்த முடியாத பூவை, வெளியில் மரத்துக்குச் சார்த்தி விட்டுப் போன பெண்ணுக்கே அருள் கிடைத்தது!

  ஏன்?

  ஆராதனத்தை ஸ்வகர்மாவாகச் செய்தார்கள்! அங்கே கர்மா முதலிடம், பகவான் பின்னிடம்!

  பூச்சாற்றலை ஸ்வகர்மாவாகச் செய்யவில்லை! இங்கே பகவான் முன்னிடம்! கர்மா பின்னிடம்!

  பாவனை அதனைக் கூடில்
  அவனையும் கூட லாமே! - மாறன்!

  ReplyDelete
 17. //என்னைய மட்டும் கேள்வி கேட்டு கேள்வி கேட்டு நல்லா மத்தளம் வாசிக்கறாங்கப்பா! பாவம் மத்தளம்! ரெண்டு பக்கமும் அடி! :))//

  அறியாமல் கேள்விகள் கேட்கும் போது அறிந்ததை மறைக்காமல் சொல்லத் தான் வேண்டும் - மத்தள நிலைமை வந்தாலும். அதனால் நானும் கேள்வி கேட்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அறிவினாக்களாக கேட்கக் கூடாது. அதற்குப் பதில் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டால் இன்னும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமே. கேட்டால் 'கூடியிருந்து குளிர்வதற்காக' என்பீர்கள். தேவ் ஐயாவைப் போல் தெரிந்ததைச் சொல்லிச் செல்வதும் மிகப்பெரிய சேவை தானே ஐயா. :-)

  ReplyDelete
 18. //குமரன் (Kumaran) said...
  அறியாமல் கேள்விகள் கேட்கும் போது அறிந்ததை மறைக்காமல் சொல்லத் தான் வேண்டும் - மத்தள நிலைமை வந்தாலும்//

  தங்கள் உத்தரவு குமரன்! :)

  //அதனால் நானும் கேள்வி கேட்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அறிவினாக்களாக கேட்கக் கூடாது//

  :)
  தங்கள் உத்தரவு குமரன்! :)

  //அதற்குப் பதில் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டால் இன்னும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமே//

  யூ மீன்
  அதற்கு, பதில் சொல்ல வந்ததை, சொல்லிவிட்டால்? :)

  //கேட்டால் 'கூடியிருந்து குளிர்வதற்காக' என்பீர்கள்//

  எக்ஜாக்ட்லி!

  //தேவ் ஐயாவைப் போல் தெரிந்ததைச் சொல்லிச் செல்வதும் மிகப்பெரிய சேவை தானே ஐயா. :-)//

  OMG! என்னாது? அடியேன் பொடியேன் ஐயாவா?

  தேவ் ஐயா, ஒளி விளக்கு! வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்!
  அடியேன் டார்ச் லைட்டு கூட இல்லையே குமரன் ஐயா! :)

  ReplyDelete
 19. //கிரி said...
  நீங்கள் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் அருமை//

  என்ன கிரி, படம் மட்டும் தானா?

  பதிவைப் பத்திப் பேசுங்கப்பா! குமரன் ஐயா கூட, சங்கர மத்தளம் வாசிச்சிக்கிட்டே இருக்காரு! :)
  எல்லாம் ராகவ் ஐயாவால வந்தது!

  இனி பந்தலில், புகை பிடிக்காதீர்கள் மாதிரி கேள்விகள் கேட்காதீர்கள்-ன்னு ஒரு போர்டு வைக்கணும் போல இருக்கே ராகவ் ஐயா! :)

  ReplyDelete
 20. //Raghav said...
  நன்றி தேவ் ஐயா. எனக்கு மேலும் சில கேள்விகள் தோன்றுகிறது//

  போச்சுறா! எலே ராகவ் ஐயா! என்ன ஆச்சு ஐயா இன்னிக்கு உமக்கு? இந்தக் கேள்வியெல்லாம் இங்க மட்டும் தான் கேட்பீங்களோ? :))

  //எவையெல்லாம் கர்மம் ?
  பக்தி மேலீட்டினால் கடவுளுக்கு செய்யும் அபிஷேகங்கள், பொங்கல் வைத்தல், பலியிடுதல்.. மற்றும் பல வேண்டுதல்கள் எல்லாம் எதைக் குறிக்கின்றன??//

  நல்லா பொங்கல் வைக்கறான்-ப்பா இந்த ராகவ்! அடுத்து என்ன? பலியா? :)

  //இவை பக்தியோகமா இல்லை கர்மயோகமா.. அல்லது வேறு என்னதான் இவை அனைத்தும்....//

  ராகவ்...
  இன்னிக்கி இறைவன் மேல் உள்ள ஒரு மேலோட்டமான ஈடுபாட்டைப் "பக்தி"-ன்னு பொதுவாச் சொன்னாலும் கூட,
  அது "பக்தி யோகம்" இல்லை!
  "பக்தி" மட்டுமே!

  பக்தி யோகம்-ன்னா சகாம்ய, நிஷ்காம்ய, அபர, பர-ன்னு பல படிகள் இருக்கு!
  சரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சைக்யம், ஆத்ம நிவேதனம்-ன்னு பல நிலைகள் வேறு!

  பக்தியுடன் + யோகம் சேரும் போதே பக்தி யோகம் உண்டாகிறது!

  பக்தி யோகம் தான் இருக்குறதலேயே ரொம்ப கடினம்! ஞான யோகம், கர்ம யோகம் கூட ஓரளவு ஈசி தான்! :))

  ஆனா, என்ன ஒரு பிரச்சனை-ன்னா
  ஞான யோகத்தாலோ, கர்ம யோகத்தாலோ, இறைவனை அடைய முடியாது என்பது வேத வாக்கு! கீதை வாக்கு!

  பக்தி யோகத்தால் அடைய முடியும்! ஆனால் பல பிறவிகள் கடந்து! :)

  இப்போதே அடையணும்-ன்னா அதுக்கு ஒரே வழி = சரணம்!
  சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
  மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்!


  சாதகமே "சரண நெறி" என்று உனக்கு - வேறு
  சாதகங்கள் இந்நிலைக்கோர் இடையில் நில்லா! - என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் வேதாந்த தேசிகன்! :)

  ReplyDelete
 21. மேலும் @ ராகவ்:

  ஞான யோகம், கர்ம யோகம் எல்லாம் ஆத்ம சாக்ஷாத்காரம் மட்டுமே! தன்னை அறிவதோடு அவை நின்று விடும்!
  அடுத்து பரமாத்ம சாக்ஷாத்காரம் வேணாமா? தன்னை அறிந்த ஆத்மா, அடுத்து பரமாத்மாவை அறிய வேணாமா?

  பழனி மலைக்கு அடிவாரம் வரை தான் மாவட்டப் பேருந்தில் போக முடியும்! அத்தோட முடிஞ்சி போச்சா? மலை ஏறி எங்க சுப்பன் பழனியாண்டியைப் பாக்கணும்-ல?

  * ஞான யோகம்/கர்ம யோகம் = மாவட்டப் பேருந்து!
  * பக்தி யோகம் = மலை வண்டி! (விஞ்ச் வண்டியின் நேரத்துக்கு நாம காத்திருக்கணும்)
  * சரணாகதி = மலைப்படிகள்!

  ஆனா சிலர் கர்மா கர்மா-ன்னு அடிவாரத்தில் நின்று விடுவதிலேயே சுகம் கண்டு விடுகிறார்கள்! ஆத்மானுபாவம், கைவல்யம் என்பதெல்லாம் இந்த வகை தான்! இதுக்கு நரகமே எவ்ளோ தேவலை-ன்னு நானாச் சொல்லலை! ஆச்சார்யர்கள் சொல்லி வச்சிருக்காங்க! :)))

  //கோவிலில் விழுந்து சேவித்தல் பற்றி சொல்லியுள்ளனர். அங்க ப்ரதக்ஷ்ணம் பற்றி உள்ளதா ?//

  உள்ளது!

  ஆனால் எதுக்கெடுத்தாலும், அதில் உள்ளதா, இதில் உள்ளதா, சாஸ்திரத்தில் சொல்லி இருக்கா-ன்னு பாத்துக்கிட்டு இருந்தா??? :)

  அப்பர் சுவாமிகளும், காரைக்கால் அம்மையாரும் அங்கப் பிரதட்சிணம் செஞ்சாங்களே! இராமானுசர் மலை மேல் கால் வைக்காமல், முட்டி போட்டு சென்றாரே? இது பற்றி எல்லாம் சொல்லி உள்ளதா? :)))

  //கர்மம் என்றால் நாம் செய்யும் செயல்கள் அனைத்துமா அல்லது ”விதிக்கப்பட்டுள்ள” என்று பொதுவாக சொல்லும் சில செயல்கள் மட்டுமா ?//

  இதற்கான நுட்பமான விளக்கத்தை மதுரையம்பதியில் மெளலி அண்ணா கிட்ட பெற்றுக் கொள்ளவும்!

  ஆனால் பொதுவாக,ஆச்சார்யர்கள் கருத்து என்னன்னா:
  கர்மாக்கள் = ஆத்ம சாட்சாத்காரத்துக்கு மட்டுமே!
  பரமாத்ம சாட்சாத்காரத்துக்கு கிடையாது!

  கர்மாக்கள் = நமக்கு தான்! ஆத்ம சாட்சாத்காரம்!
  கர்மாக்கள் = நமக்கும்-இறைவனுக்குமான உறவில் இல்லை! பரமாத்ம சாட்சாத்காரம்!

  நீங்கள் கேட்ட அங்கப் பிரதட்சிணம், பொங்கல் வைத்தல் எல்லாம் கர்மா லிஸ்ட்டில் சேரலை-ன்னா அவற்றுக்குப் பெருமையே தவிர, குறைபாடு ஆகாது!

  ReplyDelete
 22. இராகவ் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லிவருவதற்கு நன்றி இரவிசங்கர் ஐயா.

  இடுகையைப் பத்தி மட்டும் பேசணுமா? அப்படின்னா டெம்ப்ளேட் பின்னூட்டம் தான் போடணும். :-)

  ReplyDelete
 23. //பெருமாளுக்கு ரொம்பவும் ப்ரீதியாய் உள்ளது பக்தன் தன்மேல் காட்டும் பக்தி ஒன்றே அந்த பக்தியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் காட்டுகிறார்கள்//

  உண்மை!
  ஆனால் இன்னொருவர் காட்டும் பக்தியை, அந்த பக்தி விதத்தைத் தாழ்த்தி வைக்காமல் இருக்கணும்!

  விதிக்கப்பட்டதைச் செய்வதே சிறப்பு, மற்றதெல்லாம் லோக்கல் என்ற பார்வை, பகவானின் உள்ள உகப்புக்கு மாறானது! இதனால் பகவான் மனசு வாடும்!

  சினிமாத்தனமாக ஆன்மீகம் எழுதாதே, பாசுர சாஸ்திரம்-ன்னு யாராச்சும் சொல்வாங்களா, தமிழ் மந்திரங்களுக்கு அதிர்வு இல்லை - இப்படியெல்லாம் பேசுவதாலும், இல்லை மனத்தளவில் சிந்திப்பதாலும் தான், பக்தி நெறியில் வழுவி, கர்மாவில் தங்களைத் தாங்களே மெக்கானிக்கலாக இறுக்கிக் கொள்கிறார்கள்!

  //சிலர் வேதங்களில் சொன்னது போல் நித்ய ஆராதனங்கள் மூலமும், சிலர் கோவில்களுக்கு சென்று பகவானைத் தொழுதும், சிலர் மனத்தளவிலே வேண்டிக் கொண்டும் இன்னும் எத்தனையோ வகைகள்..//

  ஆமாம்!
  ஆனால் வேதங்களில் சொன்ன ஆராதனங்களை மட்டுமே தான் பகவானுக்குப் பண்ணுவோம்! மற்றவரெல்லாம் நாங்க பண்ணுறதைத் தள்ளி இருந்தபடியே சேவிச்சிகோங்க என்ற மேலாதிக்கம் தூக்கும் போது, கர்மா முந்தி விடுகிறது! எந்த வேதத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறார்களோ, அந்த வேதமே பிந்தி விடுகிறது!

  துலக்கப் பெண்ணின் பக்தியை மெச்சி, அரங்கனுக்கு கைலி கட்டி சேவை நிகழ்த்தினால், அது வேதத்துக்கு எதிரானது என்று பேசும் போது தான் கர்மா முந்தி, பகவத் விஷயம் பிந்தி விடுகிறது!

  மற்றபடி சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களும், நைமித்தக கர்மாக்களும் சிறந்தவை தான்! அவை கட்டாயம் கடைப்பிடிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை!

  காம்யார்த்த கர்மாக்களான இஷ்டி, அந்த ஹோமம், ஆயுஷ் ஹோமம், குபேர ஹோமம்-ன்னு இன்னும் என்னென்னவோ - இதெல்லாம் சரணாகதன் செய்யக் கூடாது என்பது தேசிகர் அருளிச் செயலும் கூட!

  நித்ய - நைமித்தக கர்மாக்கள் அவசியம்!
  காம்யார்த்த கர்மாக்கள் - சரணாகதன் ஒதுக்க வேண்டும் என்பதே ஆச்சார்யர்கள் அருளிச் செயல்!

  ReplyDelete
 24. //எனக்கு உள்ள குழப்பம்.. எவையெல்லாம் கர்மாக்கள்? எவையெல்லாம் பக்தியின் வெளிப்பாடு.. இரண்டுக்கும் உள்ள வித்யாசம் தான் என்ன??//

  மேலே சொன்னதில் இருந்தே புரிஞ்சி இருக்கும்-னு நினைக்கிறேன்!

  எவையெல்லாம் நமக்கு மட்டுமே = அவை கர்மாக்கள்! ஆத்ம சாக்ஷாத்காரம்!
  எவையெல்லாம் நாம்-அவன் உறவுக்கோ = அது பக்தி! = பரமாத்ம சாஷாத்காரம்


  //செய்யும் கர்மாவுக்கு பலன் உண்டு என்றால்.....
  பக்தி வெளிப்பாட்டிற்குண்டான பலனும் நம்மைத் தானே சேரும்//

  செய்யும் கர்மாவில் "கர்த்தா" உண்டு! அஸ்ய எஜமானஸ்ய! = அதனால் கர்ம பலன் நம்மையே சேரும்!

  பகவத் பக்தியில், சரணாகதியில் = "கர்த்தா" இல்லை!
  அதனால் பக்தி வெளிப்பாட்டிற்கு உண்டான "பலன்" சேருவது இல்லை! "உறவு" மட்டுமே சேர்கிறது!

  //எதனால் பக்தியோகமே சிறந்தது என்று பகவான் கண்ணனே சொல்ல வேண்டும்//

  அடிவாரம் வரை மட்டுமே செல்வேன் என்பது சிறந்ததா?
  மலையேறி, குழந்தையை, கண்ணே மணியே என்று ஆனந்த பாஷ்பம் ஆட்டுவது சிறந்ததா?

  ஞானாதி கர்ம யோகங்களில் = "நான்" உண்டு!
  பக்தி யோகத்தில் = "அடியேன்" உண்டு!
  சரணாகதியில் = "உறவு" மட்டுமே உண்டு!

  உன் தன்னோடு உற்றோமே ஆவோம்!
  உனக்கே நாம் ஆட் செய்வோம்!
  மற்றை நம் காமங்கள் எல்லாம் மாற்று!

  எதனால் பக்தி யோகமே சிறந்தது என்று பகவான் கண்ணனே சொல்ல வேண்டும்??? =
  மேற்சொன்ன அனைத்தில் இருந்தும் இந்தக் கேள்விக்கு இப்போது விடை கிடைத்து விட்டதா?

  அறிவோம்! ஹரி ஓம்!

  ReplyDelete
 25. இரவு ரியோ டி ஜெனிரோ கிளம்பணும்! இன்னும் பொட்டி கூட கட்டலை! ஸோ, இத்தோட மீ தி எஸ்கேப் ஃப்ரம் ஆபீஸ்! :)

  மேல் விளக்கங்களையும் சத் சங்கத்தையும்
  குமரன், ஜிரா, ஜீவா, தேவ் சார், கபீரன்பன் ஐயா, கோவி கண்ணன்... போன்றோர் நடத்தித் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்!

  ReplyDelete
 26. Have a nice trip and enjoy your weekend there. We will wait until you come back. :-)

  ReplyDelete
 27. //கேஆரெஸ் பதிவு-ன்னாலே dont read too much between the lines :))
  //
  உங்க பதிவுக்கு வந்து கேள்வி கேக்குறாங்கங்கறதாலேயே You also don't read too much between the lines. :-)

  // எல்லாவற்றுக்கும் முன் சென்று கப்பம் தவிர்க்கும் என்பது மட்டுமே Focus!//

  நீங்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகளால் பல நேரங்களில் எங்கே focus என்பது எனக்கும் புரிவதில்லை. கேட்டால் பதிவை பதிவிலிருந்து படிங்கள்; மனசிலிருந்து படிக்காதீர்கள் என்று சொல்வீர்கள். ஆனால் தெரிந்ததை வைத்துத் தான் தெரியாததைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் நமக்குப் புரிந்ததை வைத்துத் தான் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடியும். இது எல்லோருடைய பதிவிலும் எல்லோருக்கும் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 28. உண்மை தான். செய்யும் யாக ஹோமாதிகளுக்கு பயன் கிடைத்தால் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம்; ஏனெனில் எல்லாம் பகவானுக்கு அர்ப்பணமாகச் செய்கிறோம் - என்று சொல்லிவிட்டால் யாருமே செய்ய மாட்டார்கள். (யாருமே என்றது 99.99999% மக்களை. வாசுதேவனே இங்கு எல்லாம் என்றிருக்கும் பெருமாதன் - மகாத்மா - இங்கு கிடைத்தற்கு அரியது என்று கண்ணன் சொன்னவர்களை இல்லை). பேச்சுக்கு 'அர்ப்பயாமி' என்று சொல்பவர்களே நம்மில் பெரும்பாலானோர். ஆனால் பயன் கிடைக்காது என்று தெரிந்தால் கோவிலுக்குக் கூட போக மாட்டோம்.

  ReplyDelete
 29. //உங்க பதிவில இருந்து அதிகமகத் தெரிந்து கொள்ள முடிகிறது.. மற்றும் கேள்விகளை எந்த தயக்கமும் இல்லாம கேக்கவும் முடியுது அம்புட்டு தான்.//

  போரடிக்கிற வகுப்புல யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. சொல்லித் தர்றது நல்லா புரியுதுன்னவுடனே சிந்திக்கத் தோணும்; உடனே கேள்விகளும் வரும்; கேட்டா பதில் வரும்ன்னு நம்பிக்கையோட கேள்விகளும் கேட்கப்படும். அந்த வகுப்பு மாதிரி இந்த இடுகை.

  சில நேரம் 'ரொம்ப தெளிவா நாம பாடம் நடத்துறதால தான் யாருக்குமே கேள்வியே வரலை. எல்லாம் அவங்களுக்குப் புரிஞ்சிருச்சு'ன்னு சொல்லித் தர்றவங்க நெனைச்சிர்றாங்க. அது பெரும் தப்பு. அந்த வகுப்பு போரடிக்கிற வகுப்புன்னு பொருள்.

  கண்ணன் பதிவும் (எந்த கண்ணன்னு சொல்ல மாட்டேன். எனக்கு ஈகோ உண்டு. :-) ) கண்ணபிரான் பதிவும் போரடிக்காத வகுப்பு. அதனால நெறைய கேள்விகள் வருது. அப்ப போரடிக்கிற வகுப்பு எது? அஸ்கு புஸ்கு. சொல்லமாட்டேனே! :-)

  ReplyDelete
 30. ஸ்ரீமன்-னு சொன்னது மரியாதையா? யாரு சொன்னது? அது மரியாதைன்னா சிவபெருமானுக்கு ஏன் சொல்லலைன்னு கேக்கலாம். பொருத்தமான கேள்வி: பெருமாளுக்குச் சொன்ன மாதிரி சிவபெருமானுக்கும் பார்வதி பரமேஸ்வரன்னு சொல்லியிருக்கலாமேங்கறது தான். :-)

  புரியாம பேசுனா கும்மி கேங்குல நீங்களும் இருக்கீங்கன்னு தான் சொல்லணும். :-)

  ReplyDelete
 31. ஸ்வகர்மாவையும் ஈஸ்வர ஆக்ஞை (பகவத் ஆக்ஞயா) என்பதால் செய்தால் அதுவும் பரமேஸ்வரனுக்கு மகிழ்வானதே. அதில் தாரத்ம்யம் இல்லை. ஸ்வகர்மா என்பதில் ஈஸ்வர ஆக்ஞை என்பதை விட தான் என்பது மிகும் போது அங்கே அதற்கு மரியாதையே இல்லை - இறைவனிடம்; மக்களிடம் நிறைய மரியாதை கிடைக்கும்.

  ReplyDelete
 32. // சரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சைக்யம், ஆத்ம நிவேதனம்-ன்னு பல நிலைகள் வேறு!
  //
  இவை நிலைகள் இல்லை; வகைகள். ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வு இல்லை.

  ReplyDelete
 33. //ஆத்மானுபாவம், கைவல்யம் என்பதெல்லாம் இந்த வகை தான்! இதுக்கு நரகமே எவ்ளோ தேவலை//

  ஏன்னா நரகத்தில இருந்தாவது பாவங்கள் தீர்ந்த பின்னாடி விடுதலை உண்டு. கைவல்யத்திலிருந்து மீட்சியே கிடைப்பதில்லை; ஏனெனில் அது அவ்வளவு சுகமானது; பரந்தது; முழுக்க முழுக்க சத் சித் ஆனந்த மயமானது. கைவல்யத்திலிருந்து மீள முடியாததால் பகவத் அனுபவம் கிடைக்கவே கிடைக்காது. ஆனால் நரகத்திலிருந்து மீண்டு பகவதனுக்கிரகம் பெற்று பகவத் அனுபவம் பெறலாம்.

  ReplyDelete
 34. Kumaran said
  //ஏன்னா நரகத்தில இருந்தாவது பாவங்கள் தீர்ந்த பின்னாடி விடுதலை உண்டு. கைவல்யத்திலிருந்து மீட்சியே கிடைப்பதில்லை;//

  ”ஏடு நிலத்திடுவதன் முன்னம்....”
  விரி்வுரை தந்து விட்டீர்கள்.

  அறியக் கற்றுவல்ல தாங்களும்,கண்ணபிரானும் இருக்கையில் அடியேனுக்கு என்ன பணி இருக்கப்போகிறது ?
  ‘ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கும்’
  என்னும் கணக்கில் ஏதோ எழுதுகிறேன்.நவீனர்களுக்குப் புரியும் விதத்தில் எழுதும் முயற்சியே இன்றைய தேவை.
  முனைவர் கண்ணன் போன்றோர் இதைச் செய்து வருவது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.

  இது தடைப்படாமல் நடக்கத் தாமரையாள் கேள்வன் தயை செய்ய வேண்டும்.

  தேவ்

  ReplyDelete
 35. //கர்மாக்களை "நாம்" செய்தாலும்-ன்னு தானே கேட்கறீங்க?
  கர்மாக்களை செய்தாலும்-ன்னு கேட்க முடிந்ததா?

  இப்போது புரிந்ததா ராகவ், ஒட்டுதல் எப்படி, கர்ம பலன் எப்படி-ன்னு? :)))//

  கொஞ்சம் கொஞ்சம் புரியுது..

  ReplyDelete
 36. //கடினமான பக்தி யோகமும், எளிமையான சரணாகதியுமே மோட்சம் தர வல்லவை! - இதை நான் சொல்லலை! வேதம் சொல்லுது! :)
  //

  கடினமான பக்தியோகம்னா என்ன?? தன்னை மறந்த பக்தி நிலையை சொல்றீங்களா ?

  அதேபோல் ஞான/கர்ம/பக்தி யோகங்கள் தனித்தனியாகத் தான் சொல்லப்பட்டுள்ளதா? ஞானத்துடன் கூடிய பக்தி.. பக்தியுடன் எம்பெருமான் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும், பக்தியுடன் கூடிய கர்மயோகம் சாத்தியமில்லையா ?

  ReplyDelete
 37. Raghav said....
  எனக்கு மேலும் சில கேள்விகள் தோன்றுகிறது. எவையெல்லாம் கர்மம்?//

  உங்களுக்குத் தோன்றும் ஐயப்பாடுகள்
  நியாயமானவைதான்.
  ஸ்வாமி ராமஸுகதாஸ் அவர்கள்
  வெகு விரிவாக எழுதியுள்ளார் - ”ஸாதக ஸஞ்ஜீவநி”

  பல இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.கீதா ப்ரெஸ் வெளியீடு.

  தேவ்

  ReplyDelete
 38. //ஆராதனத்தை ஸ்வகர்மாவாகச் செய்தார்கள்! அங்கே கர்மா முதலிடம், பகவான் பின்னிடம்!

  பூச்சாற்றலை ஸ்வகர்மாவாகச் செய்யவில்லை! இங்கே பகவான் முன்னிடம்! கர்மா பின்னிடம்!//

  இப்படிச் சொல்வதற்கு பதில் ஸ்வகர்மாவாக செய்யும் பட்சத்தில் அதற்கு உயர்வில்லை என்று பொதுவில் சொல்லலாமே.. நித்ய ஆராதனத்தை எம்பெருமான் ப்ரீதியாக செய்பவர்களும் உண்டு.. பூச்சாற்றுதலை ஒரு கடைமையாக செய்பவர்களும் உண்டு தானே

  ReplyDelete
 39. //அதற்குப் பதில் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டால் இன்னும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்குமே. கேட்டால் 'கூடியிருந்து குளிர்வதற்காக' என்பீர்கள். //

  ஹா ஹா.. குமரன் இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.. :)))

  ReplyDelete
 40. //குமரன் (Kumaran) said...
  இராகவ் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லிவருவதற்கு நன்றி இரவிசங்கர் ஐயா. //

  கூடவே இருந்து மேல் விளக்கம் அருளும் உங்களுக்கும், தேவ் ஐயாவிற்கும் நன்றி குமரன் ஐயா !

  ReplyDelete
 41. // கேள்விகள் கேட்காதீர்கள்-ன்னு ஒரு போர்டு வைக்கணும் போல இருக்கே ராகவ் ஐயா! :)//

  ராகவ் ஐயா கிடையாது ஓய்.. ராகவ் பையா :)) மாத்திக்குங்க...

  ReplyDelete
 42. //ஞான யோகத்தாலோ, கர்ம யோகத்தாலோ, இறைவனை அடைய முடியாது என்பது வேத வாக்கு! கீதை வாக்கு!

  பக்தி யோகத்தால் அடைய முடியும்! ஆனால் பல பிறவிகள் கடந்து! :)

  இப்போதே அடையணும்-ன்னா அதுக்கு ஒரே வழி = சரணம்! //

  சரணாகதியே சிறந்த வழி புரிகிறது.. ஆனாலும் பரிபூர்ண சரணாகதி இந்தக் காலத்தில் சாத்தியமான ஒன்றா ?

  ஞான/கர்ம/பக்தி யோகத்தில் ஈடுபட்டு ஒரு காலம் (எப்போது ?) வரும்போது..எம்பெருமான் திருவடியில் சரணாகதி செய்வது சரிதானே..

  ReplyDelete
 43. ஒரு தேவதையை உத்தேசித்துப் பலனில் நோக்குடன் ஒரு கர்மம் செய்கிறோம்;பலனும் கிடைத்து விடுகிறது. இது கடைக்காரரிடம் பணம் கொடுத்துப் பொருள் பெறுவது போன்றது. சிறார்கள் கடைக்குச் சென்று பணம் கொடுத்தால் பிளேட், சிகரெட்,நச்சு மருந்து போன்றவற்றைப் பெற முடியும்; ஆனால் இவற்றைத் தாய் தந்தையரிடமிருந்து எவ்வளவு அடம் பிடித்தாலும் பெற முடியுமா ?
  ஊறு செய்யும் தன்மை கொண்டவைகளைப் பெற்றோர் ஒருகாலும் தர மாட்டார்கள்.
  ஹரி பக்தி இவ்வகையைச் சேர்ந்தது
  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

  திவ்ய தம்பதிகள் ஜீவகோடிகளுக்கு்
  நிருபாதிகமான தாய் தந்தையர்.ஜீவர்களைக் கர்மச் சுழலிலிருந்து மீட்டு உய்வளிக்கும்
  பொறுப்பைச் சுமப்பவர்கள்.

  தேவ்

  ReplyDelete
 44. //ஆனால் எதுக்கெடுத்தாலும், அதில் உள்ளதா, இதில் உள்ளதா, சாஸ்திரத்தில் சொல்லி இருக்கா-ன்னு பாத்துக்கிட்டு இருந்தா??? :) //

  மிகவும் சரிண்ணா... அவரவர் அறிந்த முறையில் வழிபடும் முறை அவரவருக்கு சிறந்ததே.. இருப்பினும் ஒவ்வொருவரும் ஒரு முறையில் செய்து வருகையில் அதனை முறைப்படுத்துதல் தானே சாஸ்திரம் ..

  ReplyDelete
 45. //விதிக்கப்பட்டதைச் செய்வதே சிறப்பு, மற்றதெல்லாம் லோக்கல் என்ற பார்வை, பகவானின் உள்ள உகப்புக்கு மாறானது! இதனால் பகவான் மனசு வாடும்! //

  சரியாகச் சொன்னீர்கள் ரவிஅண்ணா.. நீங்க அடிக்கடி சொல்வது போல்.. பகவான் உள்ளம் குளிரும்படி செய்யும் எதுவும் சிறப்பே..

  ReplyDelete
 46. //ஆனால் வேதங்களில் சொன்ன ஆராதனங்களை மட்டுமே தான் பகவானுக்குப் பண்ணுவோம்! மற்றவரெல்லாம் நாங்க பண்ணுறதைத் தள்ளி இருந்தபடியே சேவிச்சிகோங்க என்ற மேலாதிக்கம் //

  இது எப்படி மேலாதிக்கம் ஆகும்.. ஒவ்வொருவரும் தன் வீட்டில் செய்யும்படிதான் கோவிலிலும் செய்யவேண்டும் என்று எப்படி நினைக்க முடியும்.. கோவில் என்று வரும்போது.. அது பொது இடம், முறைப்படுத்தப்பட்ட வழிபாடு தானே சாஸ்திரம், அது எப்படி மேலாதிக்க முறையாகும். எனக்கென்று நானாக செய்யும் ஒரு வழிபாட்டினை எனது வீட்டில் வேண்டுமானால் செய்யலாம்.. இன்னொருவர் எனது வீட்டிற்கு வந்து தான் செய்யும் முறைப்படி செய் என்று சொன்னால் நான் கண்டிப்பாக மறுக்கத் தான் செய்வேன்.. அதுபோல் நம் முன்னோர்கள் கோவில்களில் சில வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர்.. அங்கே போய், நான் என் விருப்பப்படி செய்கிறேன் என்றால் அது சரியாகுமா.. ஒவ்வொரு ஸ்தலத்துக்கும் என்று சில முறைகளில் ஆராதனம் நடக்கிறது என்றால் அம்முறைப்படி நடக்கும் போது.. வேறு ஒரு கோவிலில் இப்படி நடக்கிறதே அதே போன்று இங்கேயும் செய்யுங்கள் என்று சொன்னால் அது சரியல்ல தானே ? சாஸ்திரம் சம்ப்ரதாயம் என்பது எதற்காக உருவானது ? ஒரு முறைப்படுத்துதலுக்காகத் தானே?? ஆனால் அதனைச் சொல்லி ஒருவரின் வழிபாட்டு முறையை ஏறிச் சொல்வதோ.. குறைத்துச் சொல்வதோ தவறு.

  (குமரன், ரவிஅண்ணா, தேவ் ஐயா, நான் ரொம்பப் பேசுறேனோ :)

  ReplyDelete
 47. //மற்றபடி சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களும், நைமித்தக கர்மாக்களும் சிறந்தவை தான்! அவை கட்டாயம் கடைப்பிடிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை!//

  கண்டிப்பாக..

  ReplyDelete
 48. //நீங்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகளால் பல நேரங்களில் எங்கே focus என்பது எனக்கும் புரிவதில்லை.//

  எனக்கும் சில வேளைகளில் இந்தக் குழப்பம் வரும் குமரன்... :)

  ReplyDelete
 49. //குமரன் (Kumaran) said...
  உண்மை தான். செய்யும் யாக ஹோமாதிகளுக்கு பயன் கிடைத்தால் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம்; ஏனெனில் எல்லாம் பகவானுக்கு அர்ப்பணமாகச் செய்கிறோம் - என்று சொல்லிவிட்டால் யாருமே செய்ய மாட்டார்கள்//

  குமரன், எதனை பகவானுக்கு அர்ப்பணிக்கிறோம்?? யாகத்தின் பலனையா அல்லது அந்தக் கர்மாவினால் ஒருவனுக்கு சேரும் கர்மவினையினையா ?

  ReplyDelete
 50. //R.DEVARAJAN said...
  உங்களுக்குத் தோன்றும் ஐயப்பாடுகள்
  நியாயமானவைதான்.
  ஸ்வாமி ராமஸுகதாஸ் அவர்கள்
  வெகு விரிவாக எழுதியுள்ளார் - ”ஸாதக ஸஞ்ஜீவநி”//

  நன்றி தேவ் ஐயா..

  ReplyDelete
 51. //யாகத்தின் பலனையா அல்லது அந்தக் கர்மாவினால் ஒருவனுக்கு சேரும் கர்மவினையினையா ?//

  ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ
  கரிஷ்யதி - தனதுகப்புக்காகத் தானே செய்துகொள்கிறான்(அடியேன் ஒரு கருவி) என்று ஸங்கல்பம்
  அமைந்து விட்டால் கர்மமோ,கர்ம பலனோ,கர்ம ஸம்ஸ்காரமோ எதுவும் ஒட்டாது.
  இம்மனப்பான்மையோடு செய்யப்படும்
  எல்லாக் கர்மமும் பகவதாரதநமாகிவிடும்;குழப்பமே இல்லை. ஸ்வாமி தேசிகன் காட்டும் மார்கம் இது.

  தேவ்

  ReplyDelete
 52. //யாகத்தின் பலனையா அல்லது அந்தக் கர்மாவினால் ஒருவனுக்கு சேரும் கர்மவினையினையா ?//

  ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ
  கரிஷ்யதி - தனதுகப்புக்காகத் தானே செய்துகொள்கிறான்(அடியேன் ஒரு கருவி) என்று ஸங்கல்பம்
  அமைந்து விட்டால் கர்மமோ,கர்ம பலனோ,கர்ம ஸம்ஸ்காரமோ எதுவும் ஒட்டாது.
  இம்மனப்பான்மையோடு செய்யப்படும்
  எல்லாக் கர்மமும் பகவதாரதநமாகிவிடும்;குழப்பமே இல்லை. ஸ்வாமி தேசிகன் காட்டும் மார்கம் இது.

  தேவ்

  ReplyDelete
 53. //Raghav said...
  //ஆராதனத்தை ஸ்வகர்மாவாகச் செய்தார்கள்! அங்கே கர்மா முதலிடம், பகவான் பின்னிடம்!

  பூச்சாற்றலை ஸ்வகர்மாவாகச் செய்யவில்லை! இங்கே பகவான் முன்னிடம்! கர்மா பின்னிடம்!//

  இப்படிச் சொல்வதற்கு பதில் ஸ்வகர்மாவாக செய்யும் பட்சத்தில் அதற்கு உயர்வில்லை என்று பொதுவில் சொல்லலாமே.. நித்ய ஆராதனத்தை எம்பெருமான் ப்ரீதியாக செய்பவர்களும் உண்டு.. பூச்சாற்றுதலை ஒரு கடைமையாக செய்பவர்களும் உண்டு தானே//

  ராகவ்
  யாரைத் திருப்திப்படுத்த இப்படிச் சொல்ல வேண்டும்?

  இங்கே சொல்ல வந்தது நம்பூதிரிகள்-பெண்ணின் கதை! அதை அப்படியே தான் சொல்ல முடியும்! பொதுவாகச் சொல்கிறேன் என்று பூசி மெழுக முடியாது!

  //நித்ய ஆராதனத்தை எம்பெருமான் ப்ரீதியாக செய்பவர்களும் உண்டு.. பூச்சாற்றுதலை ஒரு கடைமையாக செய்பவர்களும் உண்டு தானே//

  இல்லை!
  பூச்சாற்றலை, மரத்துக்குச் சாற்றி விட்டுப் போனாள் அவள்! இது போன்ற பூச்சாற்றல்கள்களில் எந்த அளவு பாவனை இருந்தால், அவள் மரத்துக்குச் சாற்றி இருக்க முடியும்? அதனால் பூச்சாற்றலை வெறுமனே கடமையாகச் செய்பவர்கள் என்பது மிக மிகக் குறைவு!

  நித்ய ஆராதனம் செய்கிறேன் பேர்வழி என்பவர்களின் மொத்த பட்டியலை எடுத்து முன் வையுங்கள்.
  அதில் எத்தனை தேறுகிறது என்று கண் முன்னே பாருங்கள்! Hardly 1%

  ஆச்சார்ய பீடத்தில் இருந்த மகான்கள் தவிர்த்து எத்தனை மகான்கள் நித்யாராதன கர்மாக்களைச் செய்தார்கள்? நம்மாழ்வார், பக்த கபீர், சைதன்யர் முதற்கொண்டு எளிமையான பாகவத சிரோன்மணிகள் அத்தனை பேரின் லிஸ்ட்டையும் முன் வையுங்கள்! எத்தனை பேர் நித்யாராதன கர்மாக்களைப் பிடித்துக் கொண்டு இருந்தார்கள்?

  இத்தனை பாகவத சிரோன்மணிகளின் கதைகளிலும், அவர்கள் மேல் கல்லெறிந்த லோகசாரங்கர் போன்றவர்கள் யார்? நித்யாராதன கர்மாக்களைச் செய்தவர்கள் தான்!

  Just place the numbers & statistics before yourself & see!

  ஆக, பெரும்பான்மையாக என்ன நிகழ்கிறதோ, அதை வைத்துத் தான் பேச முடியும்!
  பெரும்பான்மையாக நித்யாராதன கர்மாக்களில் "ஸ்வகர்மா" தான் தலை தூக்குகிறது! ஏன்-ன்னா அதன் கட்டமைப்பே அப்படி!

  அத்தனை 4000 பாசுரங்களிலும் பூச்சாற்றலைக் கிண்டல் செய்திருக்கலாமே? எதுக்கு நித்யகர்மாக்களை மட்டும் கிண்டல் செய்து நம் மனசாட்சியை ஆழ்வார்கள் கிளறி விட்டிருக்க வேண்டும்?

  சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும்
  சதுர்மறையால் வேள்வியால் தக்கோரேனும்....

  சந்த்யா வந்தனாதிகளால் பயன் என்ன விளையும்? என்ற பேயாழ்வார் பாசுரம்....

  இன்னும் நிறைய நிறைய!
  ஏன்? ஏன்? ஏன்?
  ஆழ்வார்கள் கருத்தைப் பொதுவில் சொல்லலாமே? ஏன் சொல்லவில்லை?
  நித்ய ஆராதனத்தை எம்பெருமான் ப்ரீதியாக செய்பவர்களும் உண்டு தானே? அப்புறம் ஏன் இப்படிப் பாட வேண்டும்? பூச்சாற்றலை ஏன் இப்படிப் பாடவில்லை?

  யோசித்துப் பாருங்கள்! விடை கிடைத்து விடும்!

  ஏன்னா பெரும்பான்மை எப்படியோ, அதை வைத்துத் தான் பேச முடியும்!

  அவர் கோச்சிப்பாரோ, இவருக்குப் பிடிச்சாப் போல பேசணுமே என்றெல்லாம் பூசி மெழுகி திருப்திபடுத்திக் கொண்டு இருக்க முடியாது! அது ஆழ்வார்களின் வழியும் அல்ல! அடியேனின் வழியும் அல்ல!

  ReplyDelete
 54. @Kumaran, Raghav
  //You also don't read too much between the lines. :-//

  //நீங்கள் பயன்படுத்தும் சில வார்த்தைகளால் பல நேரங்களில் எங்கே focus என்பது எனக்கும் புரிவதில்லை//

  //கேட்டால் பதிவை பதிவிலிருந்து படிங்கள்; மனசிலிருந்து படிக்காதீர்கள் என்று சொல்வீர்கள். ஆனால் தெரிந்ததை வைத்துத் தான் தெரியாததைப் புரிந்து கொள்ள முடியும்//

  Agreed! Very True!
  "தெரிந்ததை" வைத்துத் தான் தெரியாததைப் புரிந்து கொள்ள முடியும்!
  ஆனால் தயவு செய்து "தெரிந்தவர்களை" வைத்து தெரியாததைப் புரிந்து கொள்ள வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்!

  எங்கே "Focus" என்று மட்டும் பாருங்கள்! யாரிடம் "Focus" என்று பார்க்காதீர்கள்!

  அவரைக் தான் "நைசாக" குறிப்பிடறானோ, இவரைத் தான் "சூசகமாக" பதிவில் சொல்றானோ, இந்தக் கதையில் இன்னொரு கதை இழையோடுகிறதே...என்றெல்லாம் ஆட்களைப் பொருத்திப் பார்க்காமல், கருத்துக்களை மட்டுமே பொருத்திப் பார்க்கணும் என்பதே அடியேன் வேண்டுகோள்!

  Lemme make it very clear here...

  வெறுமனே ஒருவர், இருவருக்கு மட்டும் அடியேன் என்றுமே பதிவுகள் எழுதுவதில்லை! இன்னும் கண்ணுக்குத் தெரியாத வாசகர்கள் எத்தனையோ பேர்! சொல்வதோ ஆழ்வாரின் சரண நெறியில் பொதுவான கருத்து!

  அதனால் தெரிந்த வட்டத்துக்குப் பிடிச்சாப் போலே எழுதணும், பூசி மெழுகிடணும் என்பதெல்லாம் முடியாது! இதனால் அவர் கோச்சிப்பாரோ என்றெல்லாம் பார்த்துக்கிட்டு எழுதிக் கொண்டிருக்க முடியாது!

  குணானுபவமாக எழுத உட்காரும் போது, நீங்கள் யாரும் அடியேன் நினைவுக்கு வருவதில்லை!
  அது நண்பன் ராகவனே ஆகட்டும், இல்லை கோபித்துக் கொண்ட மெளலி அண்ணாவே ஆகட்டும்....No one comes to my mind!
  One & Only மாறன் மொழி!

  சங்கரர் நஹி நஹி ரட்சதி டுக்ருண் கரணே-ன்னு யாரை Focus செய்கிறாரோ...
  ஆழ்வார், சதுர்மறையால் வேள்வியால் தக்கோரேனும் புலையர் தாமே-ன்னு யாரை Focus செய்கிறாரோ...
  அவர்களையே அடியேனும் Focus செய்கிறேன்!

  No more explanations! Period!

  ReplyDelete
 55. //இவை நிலைகள் இல்லை; வகைகள். ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வு இல்லை//

  சுட்டிக் காட்டியமைக்கு நன்றி குமரன்!

  நிலைகள் என்று சொன்னது - இன்று சைக்ய (தோழமை) நிலைமையில் இருக்கலாம், ஆனால் நாளை ஆத்ம நிவேதன (காதல்) நிலைக்குப் போய் விட முடியும் என்பதைத் தான்!
  அதான் வகை-ன்னு சொல்லாம, நிலை-ன்னு சொன்னேன்!

  ReplyDelete
 56. // குமரன் (Kumaran) said...
  ஸ்ரீமன்-னு சொன்னது மரியாதையா? யாரு சொன்னது?//

  ஹா ஹா ஹா! ஸ்ரீமன் என்றால் ஸ்ரீயுடன் கூடிய ஸ்ரீயப்பதி!
  ஆனால் கும்மியில் இப்படி எல்லாமா "உண்மையா" யோசிச்சிக்கிட்டு இருப்பாங்க? கும்மியின் நோக்கமே போய் விடுமே! :))

  //கும்மி கேங்குல நீங்களும் இருக்கீங்கன்னு தான் சொல்லணும். :-)//

  ஹா ஹா ஹா!
  கும்மியைப் பெற்றார் திரும்பக் கொடுத்தாரே!
  நன்றிக் கடன் போல கும்மிக் கடன்! :)

  ReplyDelete
 57. //Raghav said...
  சரணாகதியே சிறந்த வழி புரிகிறது.. ஆனாலும் பரிபூர்ண சரணாகதி இந்தக் காலத்தில் சாத்தியமான ஒன்றா ?//

  மிக மிகச் சாத்தியமான ஒன்று!


  பல தவறான புரிதல்களாலும், கர்மப் பிடிப்புகளாலும்....
  சரணாகதி = Utopian Dream என்று நினைத்துக் கொள்கிறார்கள்! அதை எளிமையாக எடுத்துச் சொல்லவும் ஆட்கள் இல்லை!

  எப்படி தாயின் முலைக்கு அருகே, குழந்தையைக் கொண்டு சென்றால், தானாக உண்ணத் தொடங்குகிறதோ, யாரும் "உண்ணுதல்" என்பது பற்றிச் சொல்லிக் கொடுக்காமலேயே வருகிறதோ...

  அப்படியே சரணாகதி!


  சரணாகதி-ன்னா பெருசா ஒன்னுமே இல்லை! பாவித்தலே சரணாகதி!
  பாவனை அதனைக் கூடில்...அவனையும் கூடலாமே!

  பாவிக்கறதா அம்புட்டு கஷ்டம்?

  தமன்னா, பூமிகா, பாவ்னா-ன்னு இவிங்கள எல்லாம் பழகாமலேயே பாவிக்கறேனே...
  அவனையும் பாவிக்க முடியாதா என்ன? :)))

  பாவிக்க முடியாத படிக்கு, உசரமான பீடத்தில் ஏத்தி ஏத்தி, கர்மா கர்மா-ன்னு சொல்லிச் சொல்லி, டைப் டைப்பா பூஜா புனஸ்காரம்-ன்னு சடங்கு காட்டி....ரொம்ப தள்ளி வச்சிட்டோம்! அதான் போல, பாவிக்க கஷ்டமா இருக்கு!

  //ஞான/கர்ம/பக்தி யோகத்தில் ஈடுபட்டு ஒரு காலம் (எப்போது ?) வரும்போது.. சரணாகதி செய்வது சரிதானே..//

  இல்லை! இல்லை! இல்லை!
  ஒரு காலம் வரும் போதா? காலமே உன் கையில் இல்லை! அப்பறம் எப்படிக் காலம் வரும் போது?

  காலம் வரும் போது முலைப்பால் குடிச்சிக்கறேன்-ன்னு குழந்தை சொல்லுமா? :)))

  There is nothing called "stage by stage" in Saranagathi!
  Stage by stage is only applicable to Bhakthi, Not Saranagathi!

  அதனால் தான் கீதையில், "பக்தி மார்க்கத்தில் பல பிறவிகள் கடந்து என்னை வந்து அடைகிறான்" என்று சொன்னான்!
  "சரணத்திலோ, இப்பிறவியிலேயே வந்து என்னை அடைகிறான்" என்றும் சொன்னான்!

  //கடினமான பக்தியோகம்னா என்ன??....எதை வச்சிக் கடினம் சொல்றீங்க?//

  இப்படிப் பல பிறவிகள் கடந்து வருவதையே கடினம்-ன்னு சொன்னேன்!
  இன்றே வருவதை எளிமை-ன்னு சொன்னேன்!

  இந்தக் கடின வழி, எளிய வழியைத் தவிர, வேறொரு வழியும் இல்லை என்றும் சொன்னேன்! - வேதத்திலிருந்து!

  //அதேபோல் ஞான/கர்ம/பக்தி யோகங்கள் தனித்தனியாகத் தான் சொல்லப்பட்டுள்ளதா? ஞானத்துடன் கூடிய பக்தி..பக்தியுடன் கூடிய கர்மயோகம் சாத்தியமில்லையா ?//

  ஹா ஹா ஹா!
  பாத்தீங்களா? இதான் கர்மாக்களின் பிடிப்பு! இப்படித் தான் பிடிச்சிக்கும்! இதையும் விட்டுறக் கூடாது, அதுவும் வேணும்! ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்! :)))

  இன்னிக்கி ஒரு சிலர், இதையே வேற மாதிரி பிளேட்டைத் திருப்ப ஆரம்பிச்சிட்டாங்க!
  பகவானை அறிவதே ஞானம் தானே? சரணாகதி-ன்னு செய்வதே கர்மம் தானே? ஸோ, ஞான-கர்ம யோகம் எல்லாம் ஒன்னோட ஒன்னு Inter Linked-ன்னு பேசுவார்கள்! :)

  ஆனால் அப்படி அல்ல!
  இங்கே நாம் பேசுவது "ஞான/கர்மம்" பற்றி அல்ல! "ஞான யோகம்/கர்ம யோகம்" பத்தித் தான் பேசுகிறோம்! ரெண்டும் வேற வேற!

  * வெறுமனே ஞானம்/கர்மம் = நல்லறிவு/செயல்-ன்னு தான் பொருள்!
  * ஞான யோகம்/கர்ம யோகம் = ஞானம், கர்மா-ன்னு வழிமுறைகள், ரூல்புக், ஆத்மானுபாவம், கைவல்யம் இதெல்லாம்!

  சரணாகதியிலோ/பக்தியிலோ ஞான யோகம்/கர்ம யோகம் என்பது இல்லவே இல்லை!
  மாறாக இறைவனே உபாயம் என்ற ஞானமும், இறைவனே எல்லாம் என்ற செயலுமே உள்ளது.
  வேறு எந்த ஞான உபாயமும், கர்ம உபாயமும் இல்லை!

  ஆக ஞான யோகம், கர்ம யோகம் தனித் தனியாகத் தான் சொல்லப்பட்டுள்ளது!
  ஞான யோகம்/கர்ம யோகத்தால் இறைவனை அடைய முடியாது என்பது இவர்கள் கொண்டாடும் வேதமே சொல்வது தான்! கீதையும் சொன்னது தான்! வசதிக்கு ஏற்றாற் போலே மறந்து விட்டார்கள்! :)

  ReplyDelete
 58. //Raghav said...
  //ஆனால் வேதங்களில் சொன்ன ஆராதனங்களை மட்டுமே தான் பகவானுக்குப் பண்ணுவோம்! மற்றவரெல்லாம் நாங்க பண்ணுறதைத் தள்ளி இருந்தபடியே சேவிச்சிகோங்க என்ற மேலாதிக்கம் //

  இது எப்படி மேலாதிக்கம் ஆகும்.. ஒவ்வொருவரும் தன் வீட்டில் செய்யும்படிதான் கோவிலிலும் செய்யவேண்டும் என்று எப்படி நினைக்க முடியும்..//

  வீட்டில் நான் கண்ணனுக்கு முத்தம் கொடுக்குறாப் போலே, ஸ்ரீரங்கம் கருவறைக்குள்ள போயி கொடுக்க முடியாது! :)
  அது எனக்கும் தெரியும்! நான் அதைச் சொல்லலையே!

  ஆகமம், ஆச்சார்ய விளக்கம்-ன்னா என்னன்னு இவர்களுக்கே முழுமையாகத் தெரியாத போது, ஏதோ தமிழ் அர்ச்சனை பண்ணா ஆகமம் கெட்டுரும்! அனைத்து சாதி அர்ச்சகர்கள் வந்தா ஆகமம் கெட்டுரும், பெருமாளுக்கு லுங்கி வஸ்திரம் அணிவித்தால் அனாச்சாரம், மாற்று சமயம் பற்றிப் பேசினாலே துராச்சாரம்-ன்னு புரியாமல் ஆடுவதை மட்டுமே குறிப்பிட்டேன்!

  ஆனால் இது போன்றவர்களை எல்லாம் மீறி, இன்றும் ஸ்ரீமுஷ்ணம் வராகப் பெருமாள், உற்சவ புறப்பாட்டில், திருக்-குர்-ஆன் கேட்டுக்கிட்டு தான் இருக்கார்! பதிவை வேணும்ன்னா மூடலாம் ஆனால் அவர் காதுகளை மூட முடியுமா? :))

  அதுக்காக எல்லாக் கருவறையிலும் குர்-ஆன் ஓதச் சொல்லவில்லை! ஆனால் தமிழ் ஓதினால் என்ன? எதற்கு தமிழ் அர்ச்சனைக்கு இத்தனை முட்டுக் கட்டை?

  மனசாட்சி மீது கை வைத்து பேசினால், இது போன்ற ஆட்சேபங்களை எழுப்புபவர்கள், பெரும்பாலும் கர்மவாதிகள் என்னும் கர்மப் பிடிப்பு உள்ளவர்களே என்பது அனைவருக்குமே தெரியும்! ஆனால் அடியார்களுக்கு வெளியில் பேச அச்சம் (அ) அடக்கம்! ஏன்னா முத்திரை குத்தப்பட்டு விடும்!

  //கோவில் என்று வரும்போது.. அது பொது இடம், முறைப்படுத்தப்பட்ட வழிபாடு தானே சாஸ்திரம், அது எப்படி மேலாதிக்க முறையாகும்//

  கோயில் என்று வரும் போது "பொது இடம்" அல்லவா? "பொது" இடத்தில், "பொது" மக்களுக்கான வழிபாடு தானே முக்கியம்? "பொது" மொழியில், "பொது"வானவர்கள் செய்விக்க வேண்டும் என்பது தானே பாஞ்சராத்ர ஆகமம் - சத்வ சம்ஹிதை, பெளஷ்கர சம்ஹிதை?

  அதை மீறி, தங்களுக்குப் பிடித்தமான கர்ம காண்டத்தை மட்டுமே வைத்து வழிபாடு நடத்தினால், அது தான் "பொது"-வா? இது மேலாதிக்கம் இல்லாமல், பின்னே வேறு என்ன? Give me a direct answer to this, before any other question!

  ReplyDelete
 59. //ஒவ்வொரு ஸ்தலத்துக்கும் என்று சில முறைகளில் ஆராதனம் நடக்கிறது என்றால் அம்முறைப்படி நடக்கும் போது.. வேறு ஒரு கோவிலில் இப்படி நடக்கிறதே அதே போன்று இங்கேயும் செய்யுங்கள் என்று சொன்னால் அது சரியல்ல தானே ?//

  ஏன் சரியில்லை? எப்படிச் சரியில்லை? யார் சொன்னது?

  இராமானுசர் ஒட்டு மொத்த திருவரங்க ஆலயத்தையும் பாஞ்சராத்ர ஆகமத்துக்கு மாற்றி வைத்தாரே! "தில்" இருந்தா, அவரிடம் போய், "ஒவ்வொரு ஸ்தலத்துக்கும் என்று சில முறைகளில் ஆராதனம் நடக்கிறது. அங்கு போன்று இங்கேயும் செய்யுங்கள் என்பது சரியல்ல"-ன்னு சொல்லிப் பாருங்களேன் பார்ப்போம்!

  //சாஸ்திரம் சம்ப்ரதாயம் என்பது எதற்காக உருவானது ? ஒரு முறைப்படுத்துதலுக்காகத் தானே??//

  சாஸ்திரம் = முறைப்படுத்தலுக்கு உருவானவது தான்!
  சம்பிரதாயம் = தானாத் தங்கள் வசதிக்கு உருவாக்கிக் கொள்வது! அதை பொது வசதிக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டுமே ஒழிய, தங்கள் கர்ம வசதிகளுக்கு அல்ல!

  //அதுபோல் நம் முன்னோர்கள் கோவில்களில் சில வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளனர்//

  "நம்" முன்னோர்களா? எந்த முன்னோர்கள்? யாருடைய முன்னோர்கள்? தரவு தாருங்கள் பார்ப்போம்! ஆகமம், பெளஷ்கர சம்ஹிதை-ன்னு தெரியாதவங்க கிட்ட வேணும்னா, இந்த "முன்னோர்" டெக்னிக் செல்லுபடியாகும்! Not with All!
  *******************************
  இன்னொரு உண்மையும் சொல்கிறேன் ராகவ்!
  இன்னிக்கி நீங்க கேட்கறீங்களே, சரணாகதி எல்லாம் இந்தக் காலத்தில் வொர்க் அவுட் ஆகுமா-ன்னு? அது போன்ற மாயையை உருவாக்கி வைத்ததே இந்தக் கர்ம வாதிகள் தான்! இதை அடியேன் சொல்லவில்லை! ஜகத்குரு சொல்கிறார்! :)

  இராமானுசர் சொன்ன "அதே வார்த்தைகளை" குரு பரம்பரா பிரபாவத்தில் இருந்து எடுத்து, பதிவில் இட்டேன்-ன்னு வைங்க! நான் அதோகதி தான்! :)
  உடனே அங்கே போகாதீங்க, ஏத்தி விடாதீங்க, நம்மவருக்கு விரோதி-ன்னு எல்லாம் பின் மறைவிலிருந்து கட்சி கட்டுவார்கள்! கர்மம் ஆற்றுவார்கள்! இது தானா "கர்ம" யோக அழகு? ஹைய்யோ! ஹைய்யோ! :((
  *******************************
  ராகவ்,
  வேதங்கள் மிக உயர்வானவை! பொதுவானவை!
  ஆனால் அந்த வேதங்களையே தங்களையும் அறியாமல் இழிவு படுத்தி, தனிமைப்படுத்தி வைத்ததால் தான், தமிழ் வேதமான திருவாய்மொழி உதயமாயிற்று!

  கர்மா-வாதிகளுக்கு, வேதத்தின் கர்ம காண்டம் மட்டுமே பிடிப்பு! ஞான காண்டத்தை வசதியாக மறைத்து "மறை"-ன்னு ஆக்கி விடுவார்கள்! இது வேதத்துக்கே செய்யும் துரோகம்!

  இன்னிக்கி நீங்க கேட்கறீங்களே, சரணாகதி எல்லாம் இந்தக் காலத்தில் வொர்க் அவுட் ஆகுமா-ன்னு?
  அது போன்ற மாயையை அவ்வளவு அழகாக உருவாக்கி வைத்ததே இந்தக் கர்ம வாதிகள் தான்!

  ஞான காண்டத்தைக் காட்டாமல், கர்ம காண்டத்தையே Focus செய்து செய்து இத்தனை கர்மாக்கள்! இத்தனை சடங்குகள்! இத்தனை ஹோமாதி யக்ஞங்கள்!

  மக்களையும் இதற்கே பழக்கி விட்டார்கள்! என்ன வேணும்-ன்னா செஞ்சிக்கிடலாம்! அப்பறம் பரிகாரம், தோஷ நிவர்த்தி, ஹோமங்கள்-ன்னு Mentality வளர்ந்ததே, இது போன்ற கர்மப் பிடிப்பால் தான்!

  மக்களும் பகவானைப் பாவிப்பது போய், சுய நலக் கர்மாக்களில் ஈடுபடுவதே பக்தி, ஆன்மீகம்-ன்னு தோற்றம் உருவாகி விட்டது!
  பணம் இல்லீயா? = தனாகர்ஷண குபேர சம்பத்து ஹோமம்
  வசியம் பண்ணனுமா? = சர்வ தேவதா வஸ்யம்
  அஸ்வமேதம், இஷ்டி, பிரம்மஹத்தி நிவர்த்தி, நவகிரக ஹோமம்-ன்னு லிஸ்ட்டு ரொம்பவே நீளம்! இப்போ அண்மைக் காலமாக "உலக நன்மை"-க்காக லோக க்ஷேம ஹோமம்! :)))

  கர்ம போதை மிகவும் அபாயகரமானது! அதுவும் ஆன்மீகப் போர்வை தான் போர்த்திக் கொண்டிருக்கும்! ஆனால் பகவானைப் பாவிக்கவே விடாது!
  கர்மா பண்ணுறது ரொம்ப ஈசி! பாவிப்பது தான் கஷ்டம்-ன்னு நம்மளையே பேச வைக்கும்! :)

  அதனால் தான் ஆழ்வார் ஆச்சார்யர்கள், கர்மப் பிடிப்பை நரகத்தை விடக் கொடிது-ன்னு சொன்னார்கள்!
  அதை எங்கே வைக்கணுமோ, அங்கேயே வைத்தார்கள்!

  மேற்சொன்னதில் எதுவும், அடியேன் ஆச்சார்ய விளக்கங்களைப் பிறழ்த்தியோ, தாழ்த்தியோ சொல்லவில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொண்டு பகவானின் பாதாரவிந்தங்களில், யதார்த்த சத்ய சமர்ப்பணம் செய்கின்றேன்!
  சத்யஸ்ய சத்யம், ஹ்ருத சத்ய நேத்ரம்
  சத்யாத்மகம், த்வாம் சரணம் பிரபந்ந:

  ReplyDelete
 60. @ராகவ்
  //(குமரன், ரவிஅண்ணா, தேவ் ஐயா, நான் ரொம்பப் பேசுறேனோ :)//

  ஹா ஹா ஹா!
  நீங்க ரொம்ப பேசவில்லை! பேச வைப்பீர்கள்! :))

  சனிக்கிழமை அதுவுமா, வேற்று நாட்டில், ஆபீசுக்கு வரச் சொன்ன இந்த Latino-க்களை நல்லாவே பழி வாங்கியாச்சி! ரொம்ப நன்றி ராகவ்! :))
  I am telling them what this blog is, what is this round round jaangiri language and who you are in those sunglasses? :)

  ReplyDelete
 61. @தேவ் சார்
  //ஒரு தேவதையை உத்தேசித்துப் பலனில் நோக்குடன் ஒரு கர்மம் செய்கிறோம்;பலனும் கிடைத்து விடுகிறது. இது கடைக்காரரிடம் பணம் கொடுத்துப் பொருள் பெறுவது போன்றது. சிறார்கள் கடைக்குச் சென்று பணம் கொடுத்தால் பிளேட், சிகரெட்,நச்சு மருந்து போன்றவற்றைப் பெற முடியும்;//

  சூப்பரோ சூப்பர்!

  //ஆனால் இவற்றைத் தாய் தந்தையரிடமிருந்து எவ்வளவு அடம் பிடித்தாலும் பெற முடியுமா ?//

  //ஹரி பக்தி இவ்வகையைச் சேர்ந்தது
  என்று புரிந்து கொள்ள வேண்டும்.//

  //திவ்ய தம்பதிகள் ஜீவகோடிகளுக்கு்
  நிருபாதிகமான தாய் தந்தையர்//

  மேற்கண்ட சுத்த பிராகசிகமான ஞான தீபிகா வாசகங்களுக்கு,
  தேவ் சாரை, அடிக் கீழ் வீழ்ந்து சேவிக்கிறேன்!

  அடியேன்,
  தாசன்!

  ReplyDelete
 62. கர்மங்களிலுள்ள குறைபாடுகளை
  கீதையும்,பாகவதமும் சுட்டிக் காட்டுகின்றன.சற்று ஆழ்ந்து கற்றால்
  பொருள் விளங்கும்.காரசாரமான விவாதங்களை அன்பர்கள் தவிர்ப்பது நன்று.எல்லாமே புரிதல் குறைபாடுதான்.கர்ம யோகம் என்பதும்
  உயர்ந்ததுதான்.’யுஜ்’ - இணைப்பு.
  அதில் இனிமை காண இயலுமா என்பது ஐயத்திற்கு இடமளிப்பது.

  மாதவிப் பந்தல் எப்போதும் தண்ணென்று ஸம்ஸார தாபத்தை நீக்குமிடமாகத் திகழவேண்டும் என்பதே அடியேனது பேரவா.

  தேவ்

  ReplyDelete
 63. // R.DEVARAJAN said...
  மாதவிப் பந்தல் எப்போதும் தண்ணென்று ஸம்ஸார தாபத்தை நீக்குமிடமாகத் திகழவேண்டும் என்பதே அடியேனது பேரவா//

  அப்படியே ஆகட்டும் தேவ் சார்! தங்கள் ஆக்ஞை!

  இன்னருளால் "இனி எனக்கோர் பாரம் ஏற்றாமல்"
  எம்பெருமான் அடைக்கலம் கொள் என்னை நீயே!

  ReplyDelete
 64. தம்பி ராகவ் கேட்ட மொத்த கேள்விகளுக்கும் சாரமான விடையை,
  அடியேன் சொல்வதைக் காட்டிலும்,
  சாஸ்திர மகா ஞான பண்டித சிம்மமான, ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் சொல்கிறார்! அவர் வாயால் கேளுங்கள்!

  சாதனமும் நற்பயனும் "நானே" ஆவன்!
  சாதகமும் என்வயமாய் "என்னைப்" பற்றும்

  "சாதகமே = சரண நெறி" என்று உனக்கு...வேறு
  சாதகங்கள் இந்நிலைக்கோர் இடையில் நில்லா!

  "வேதனை சேர் வேறு அங்கம் எதுவும் வேண்டாம்"!

  வேறல்லா நிற்கு நிலை "நானே" நிற்பன்!

  தூதனுமாம் நாதனுமாம் "என்னை"ப் பற்றி
  "சோகம் தீர்" (மா சுசஹ) என உரைத்தான், சூழ்கின்றானே!

  இதுவே கேள்விக்கான அனைத்து விடைகளின் சாராம்சம்!
  வேதாந்த ஆசார்ய வர்யோ மே சந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி!

  ReplyDelete
 65. கர்ம மார்கம் ஓட்டைப் படகு என்று
  சாஸ்த்ரமே பகரும்;தரவுகளைச் சுட்டி
  ஒன்றைத் தாழ்த்துவது நோக்கமன்று.
  ’நெல் செய்யப் புல் தேயும்’ என்பதுபோல் எளிய,இனிய,தற்போதைய சூழ்நிலைக்கேற்ற மார்கத்தை வலியுறுத்துவோம்.
  ஏற்போர் ஏற்கட்டும்; அவர்கள் பேறு செய்தவர்கள்.

  திரு அரங்கத்தில் வீணையும் கையுமாய்த் திருப்பாணாழ்வார் அந்தரங்கர்; திருக்கச்சியில் விசிறியும் கையுமாய்த் திருக்கச்சி நம்பிகள் அந்தரங்கர்.இவர்கள் அந்தணர்கள் அல்லர்.
  தமக்கு அந்தரங்க கைங்கர்யம் செய்வோரை எம்பெருமானே உரிய காலத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்வான்.

  மாலியம் மாலவன் ஒருவனையே மையப்படுத்தும் நெறி.நாம் கரைதல்
  வேண்டா.

  தேவ்

  ReplyDelete
 66. //R.DEVARAJAN said...
  கர்ம மார்கம் ஓட்டைப் படகு என்று
  சாஸ்த்ரமே பகரும்;//

  :)

  இதை நான் சொல்லியிருந்தா இந்நேரம் விஷயமே வேற! யார் சொன்னாலும் நீ சொல்லக் கூடாது-ன்னு என் முன்னாள்/இந்நாள் அண்ணா கோவப்படுவார்! :)

  //தரவுகளைச் சுட்டி
  ஒன்றைத் தாழ்த்துவது நோக்கமன்று//

  தெளிவித்து உரைத்தமைக்கு மிகவும் நன்றி தேவ் சார்!

  மிகவும் உண்மை! தத்துவங்களை எப்போதும் "கருத்தளவில்" மட்டுமே பேசுகிறோம்! ஆனால் விரல் விட்டு எண்ணும் அளவுள்ள சில அன்பர்கள் மட்டும், அதைத் தனிப்பட்ட அளவில் எடுத்துக் கொள்வது தான் வருத்தம்!

  ஒரு சிலர் அவர்கள் சார்ந்துள்ள சமூக அளவிலும் எடுத்துக் கொள்கிறார்கள்! கர்மாதிகள் ஒரு சமூகத்துக்கு மட்டும் உரியவை அல்லவே! சமூகம் பற்றிய பேச்சே எழாமல், வெறும் கர்மாதிகள் பற்றி மட்டும் தானே பேச்சு? அப்பைய தீட்சிதர் முதலான மகான்கள் பற்றியும் எழுதியுள்ளேனே!

  தத்துவத்தை ஆழ்வார்களைப் போல் அப்படியே பளிச்சென்று பேசாமல்,
  "பொதுவாக" பூசினாற் பேசிப் போதல் தான் பிடிக்கும் போல!:)

  இது போன்ற சமயங்களில் எல்லாம், வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ-வுக்காக, பேச்சை மாற்றி, பாசுரம் பக்கம் திரும்பி விடுவேன்!

  இதோ:
  திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
  திருவடி சேர்வது கருதி செழும் குருகூர் சடகோபன்

  திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
  திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து "ஒன்றுமினே"!

  திருவடிகளை அடைவிப்பது எது?
  திருவடிகளே! :)
  நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! :)

  ReplyDelete
 67. எல்லா மார்கங்களையும் அமைத்தருளியது அவன்தான்.
  அவற்றின் உள்நோக்கம் அஹங்கார நீக்கம்;ஆனால் சிரம ஸாத்யமான அவை அஹங்காரத்தை நீக்குவதற்குப் பதிலாக அஹங்காரத்தை மேலும் வலுப்படுத்தி விடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.அதைத்தான்
  KRS அவர்கள் தெளிவுபடுத்த விழைகிறார்.

  ”திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே! ”
  இது எத்தனை எளிதாக இருக்கிறது!

  தேவ்

  ReplyDelete
 68. அடியேனும் வைதிக கர்மங்களுக்கு
  முதன்மை தரும் குலத்தில் பிறந்தவன்தான்.
  தொடக்கத்தில் ஸங்கல்பத்தின்போது
  ‘ஸ்ரீராமஸ்மரணேநைவ வ்யபோஹதி
  ந ஸம்சய:’ என்றுகூறிவிட்டு ஸ்ரீ ராம நாமத்தை உச்சரிப்பது வழக்கம்.
  ‘ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ‘என்று
  அகத்தூய்மையும்,புறத்தூய்மையும் பெறக் கண்ணனைத் தவறாமல்
  த்யானிக்கச் செய்யும் மரபை அமைத்தவர்களும் கர்மடர்களான பெரியவர்கள்தான்.
  அந்தி தொழுதலின் முடிவே அச்சுத சரணாகதிதான்.
  ‘சங்கசக்ர கதாபாணே த்வாரகா நிலயாச்சுத!
  கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம்
  சரணாகதம் !!’
  இந்த ச்லோகங்கள் இல்லாமல் வைதிக க்ரியை உண்டா சொல்லுங்கள் ?

  தேவ்

  ReplyDelete
 69. லேட்டா வந்துட்டேன்..
  இப்போ சொல்லிக்கிறேன்
  டேய் ரவி போஸ்ட் நல்லா இருந்தது :D

  ReplyDelete
 70. தேவ் ஐயா,
  தங்களுடைய கருத்துக்கள்/கேள்விகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றன. பலரும் தவறாக நினைக்க கூடிய விஷயங்களை நேர் செய்கிறீர்.

  ரவிசங்கர் ஐயா,
  இன்று எதேச்சையாக இங்கு தங்களுடைய பின்னூட்டங்களை படிக்க நேர்ந்தது. ஞான கர்ம யோகங்களின் வாயிலாக இறைவனை அடைய முடியாது என்று தாங்கள் குறிப்படுவது போல நான் புரிந்து கொண்டேன். அவ்வாறு இல்லை எனில் தவறான புரிதலுக்கு வருத்தம் தெரிவித்து மேற்கொண்டு இந்த பின்னூட்டத்தை படிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
  நான் அறிந்த வரையில் எந்த ஒரு யோகம் கைகூடினாலும் இறை உணர்வை பெறலாம் என்பதே. ஒவ்வொருவருடைய இயல்பிற்கு ஏற்றவாறு அவர் அவர்க்கு ஒரு யோகம் எளிதாய் கை கூடும்.
  சிலருக்கு நிறைய செயல்கள் புரிவதில் ஆர்வம் இருக்கும். இவர்களுக்கு கர்மயோகம் எளிதாய் கைகூடும் என்று சொல்வர். கர்ம யோகம் என்பதை பற்றி நான் கேட்ட/அறிந்த வரையில் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், it has two parts:
  1. Performing the action with 100% involvement.
  2. Submitting the fruits of the action to the Lord.

  சிறந்த உதாரணம் வேண்டுமெனில் மகாபாரதத்தில் பீஷ்மர் தன் போர் திறமை, அதன் பலன் ஆகிய அனைத்தையும் பார்த்தசாரதிக்கு அர்ப்பணம் செய்ததை பல பெரியோர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அவர் தன்னுடைய அம்புகளால் கண்ணனுக்கு செய்த அர்ச்சனை பற்றி இன்றளவும் திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பெருமாள் முகத்தில் உள்ள தழும்புகள் கூறும். பிதாமகர் பீஷ்மர் ஞானி என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. கண்ணனே அவரை போன்ற ஞானி காண கிடைக்க அரிது என்று யுதிஷ்ட்ரருக்கு சொல்கிறான். மேலும் கண்ணனே அவரை கொண்டு தன் நாமாவளியை கேட்டு மகிழ்கிறான். பக்தி, ஞானம், கர்மம் முதலிய மூன்று யோகங்களும் ஒரு சிலருக்கு கை கூடும் போல. ஆனால் அத்தகையோர் எவ்வளவு அரிதான மக்களாய் இருப்பார்கள் என்று சொல்லத் தேவை இல்லை.

  ராமாயணத்தில் சபரி மோக்ஷம் அடைந்ததை பற்றி பெரியோர் பேசுகையில் அவள் மதங்க முனிவரின் ஆசிரமத்தில் முனிவர்களுக்கு பணிவிடை செய்தே இறைவனை அடைந்தாள் என்று சொல்வர். சபரி பணிவிடை செய்யும் காலத்தே எந்த விதமான பலனையும் உத்தேசித்து செய்யவில்லை என்பதாகவும் சொல்வர். ஆக முறையாக தொழில் செய்வதினாலும் இறை உணர்வை பெறலாம் அல்லவா?

  சரணாகதியை பற்றி பேசுகையில் பூரண சரணாகதி சாத்தியமா என்று ஒரு கேள்வி எழுந்ததையும் படித்தேன். இந்த கேள்வி ஒருவருக்கு எழுவதற்கு தாங்கள், யாரோ செய்துவிட்ட மாயையினால் தான் இவ்வாறான கேள்வியே எழுகிறது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். 'சரணாகதி என்றால் என்ன?' என்பது தெரிந்தால் பெரும்பாலானோர்க்கு ஏற்படும் இயல்பான கேள்வியே இது என்று தோன்றுகிறது. இது பற்றி ரமண மஹரிஷியிடம் ஒரு சாதகர் கேள்வி எழுப்புங்கால், "பேஷாக !! காலக்ரமத்தில் பூரண சரணாகதி சாத்தியமாகும்." என்று அவர் பதில் உரைக்கிறார்.

  ~
  ராதா

  ReplyDelete
 71. //சரணாகதியிலோ/பக்தியிலோ ஞான யோகம்/கர்ம யோகம் என்பது இல்லவே இல்லை!//
  தாங்கள் light-ஆக சொன்ன ஒரு statement-ஆக எடுத்துக் கொள்கிறேன்.

  வைதிக கர்மங்கள் பற்றி ஆழ்வார்கள் தாழ்த்தி கூறி உள்ளார்கள் என்பது பற்றி எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. இதையும் நீங்கள் light-ஆக சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.
  வைதிக கர்மங்கள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறி உள்ளதை இங்கு கண்டால் நமக்கு சற்றே தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.
  "When, hearing the name of Hari or Rāma once, you shed tears and your hair stands on end, then you may know for certain that you do not have to perform such devotions as the sandhya any more. Then only will you have a right to renounce rituals; or rather, rituals will drop away of themselves. Then it will be enough if you repeat only the name of Rāma or Hari, or even simply Om." Continuing, he said, "The sandhya merges in the Gayatri, and the Gayatri merges in Om."

  ஆழ்வார்கள் எல்லாம் பிரேம பக்தி கை கூடியவர்கள்.
  "செல்வ நாராணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி..." என்று நம்மாழ்வார் பாசுரம்.அவர்களுக்கு நாராயண என்ற சொல்லை கேட்டாலே கண் பனிக்கும். நம்மில் எத்தனை பேர் ஆழ்வார்கள் என்பது நமக்கே தெரியும். :-) ஆதலால் நமக்கு வைதிக கர்மங்கள் தேவைப் படுகின்றன. உரிய காலம் வரும்பொழுது காரணமில்லா கருணை புரியும் இறை அருள் நம்மையும் நோக்கி வெள்ளமென பாய்ந்து ஓடி வரும். அப்பொழுது பரமஹம்ஸர் சொல்வது போல "rituals will drop away of themselves".

  "As many are the creatures in the world, so many are the ways to reach the Lord !" என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் எது எளிதான இயல்பான வழி என்பதை 'intuitive-ஆக' அவர்களுக்கு உணர்த்தி இறைவனே அந்த நெறியில் அவர்களை ஸ்திரம் கொள்ள செய்து வழி நடத்துகிறான் என்பது நான் படித்த/கேட்ட விஷயம். (இவ்வாறு ஒரு யோகத்தில் ஒருவரை ஸ்திரப் படுத்துவது பற்றி கண்ணன் கீதையில் சொல்கிறான் என்று நினைக்கிறேன்.)

  சரணாகதி பற்றி தாங்கள் உயர்த்தி சொல்வதில் அதிசயம் இல்லை. எனக்கும் எளிய வழி அது தான். :-)
  ஆனால் மற்ற யோகங்கள் பயன் தரா என்று சொல்வதை விட, அவை விரைவில் பயன் தராமல் போகக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  ~
  ராதா

  ReplyDelete
 72. ஆகா...இந்த வகுப்புக்கு ரொம் லேட்டாக வந்துட்டேன்..;)

  பின்னூட்டம் எல்லாம் கலக்கலாக இருக்கும் போல!!..படிச்சிட்டு வரேன் ;)

  ReplyDelete
 73. தேவ் ஐயா. தங்களுடைய பணிவு என்னும் பெருங்குணத்தால் அடியேனை அறியக் கற்று வல்லவன் என்றீர்கள். அடியேன் சிறிய ஞானத்தன் என்று நம்மாழ்வாரே சொல்லும் போது அடியேன் என்ன சொல்வது? அபராத சக்ரவர்த்திகளில் மிகச் சிறந்தவன் அல்லவோ அடியேன்.

  'ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கும்' என்ற சொற்றொடருக்குப் பொருள் என்ன?

  ReplyDelete
 74. எல்லா யோகங்களும் தனித்தனியாக இல்லை இராகவ். ஒன்றிலொன்று இயைந்தே உள்ளன. 'அங்கி', 'அங்கம்' என்று பெரியோர்கள் சொல்வார்கள். எது முதன்மையாக இருக்கிறதோ அது 'அங்கி' என்றும் அதன் பெயரில் 'யோகம்' என்றும் சொல்வார்கள். மற்றவை அங்கங்களாகும். ஞான யோகத்தில் அங்கி ஞானவழி; பக்தியும் கர்மமும் மற்றவையும் அங்கங்கள். பக்தி யோகத்தில் அங்கி பக்தி; மற்றவை அங்கங்கள். அங்கங்கள் சாத்தியம் மட்டுமில்லை; அவையில்லாமல் அங்கி இல்லை. ஞானயோகத்தில் வெறும் ஞானம் என்பது சாத்தியமில்லை; பக்தியும் கருமமும் இணைந்தே இருக்க வேண்டும்.

  ReplyDelete
 75. பரிபூரண சரணாகதி சாத்தியமா? அது சாத்தியமாகும் வரை கர்ம/ஞான/பக்தி யோகங்களில் இழிந்தால் என்ன என்று கேட்கிறீர்கள். இன்னும் சம்ப்ரதாய நூல்களைப் படித்தால் இந்த கேள்வி எழாது இராகவ். சுவாமி தேசிகனும் மாமுனிகளும் மற்ற ஆசாரியர்களும் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் மிகவும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். சுந்தர் அண்ணாவைக் கேட்டாலே சொல்வாரே.

  ReplyDelete
 76. அருமையாகச் சொன்னீர்கள் தேவ் ஐயா. கருமங்களுக்குப் பலன்களைத் தருவதில் மற்ற தெய்வங்கள் விரைவாகச் செயல்பட திருமகள் கேள்வன் மிக மெதுவாகத் தான் அருள்வான் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை நன்கு சொன்னீர்கள். திவ்ய தம்பதிகளான தாயாரும் எம்பெருமானும் உயிர்களுக்கு இயற்கையான விலக்க இயலா உறவினைக் கொண்டவர்கள்; தாய் தந்தையர். உயிர்களை உய்விக்கும் பொறுப்பை சுமப்பவர்கள். அதனால் உயிர்களுக்கு எது உண்மையிலேயே உய்வளிக்குமோ அதனை மட்டுமே அருளுபவர்கள்.

  ReplyDelete
 77. ஒவ்வொருவருக்கும் பிடித்த வழியில் வழிபடுவதை முறைப்படுத்துவது தானே சாத்திரம் - நல்ல கேள்வி இராகவ். திருமணம் முக்கியமா காதல் முக்கியமா என்ற கேள்வியைப் போன்றது இது. ஆணும் பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் காதலை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்திக் கொள்ளலாம்; எப்படியும் வாழலாம்; காதலே அன்பான வாழ்க்கைக்கு முதன்மையானது - என்பது ஒரு தரப்பு. காதல் இருக்கிறதோ இல்லையோ திருமணமே முறையான வாழ்க்கைக்கு சமுதாயம் ஏற்படுத்திய வழிமுறை; அது மட்டுமே முதன்மையானது - என்பது ஒரு தரப்பு. காதலுடன் இயைந்த திருமண வாழ்க்கை இவை இரண்டிலும் சிறப்பானது என்பது சொல்லாமலேயே தெரியும். சரி தானே?

  ReplyDelete
 78. //குமரன், எதனை பகவானுக்கு அர்ப்பணிக்கிறோம்?? யாகத்தின் பலனையா அல்லது அந்தக் கர்மாவினால் ஒருவனுக்கு சேரும் கர்மவினையினையா ? //

  யாகத்தின் பயன் என்பதற்கும் கருமவினை என்பதற்கும் என்ன வேறுபாடு?

  ReplyDelete
 79. இரவி,

  நன்றாக கரும யோகம், ஞான யோகம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறீர்கள். சரணாகதியில் எப்படி ஞானம் உண்டு ஞானயோகம் இல்லை; பக்தி உண்டு பக்தியோகம் இல்லை; கருமம் உண்டு கருமயோகம் இல்லை என்று விளக்கியிருக்கிறீர்கள். என்ன சொன்னவற்றில் கொஞ்சம் வேகம் தெரிகிறது; பாய்ச்சல் தெரிகிறது; மிரட்டுகிறது. அதனால் இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டு இன்னும் நிறைய எடுத்துக்காட்டுகளுடன் ஒரு தொடராக எழுதுங்கள்; ஏற்கனவே தொடங்கிய தொடரிலேயே இவையும் வரும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் புதியதாகத் தொடங்கி எழுத வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 80. ரவிஅண்ணா, தேவ் ஐயா, குமரன், ராதா.. நீண்ட விளக்கங்களுக்கு முதலில் நன்றி. என் கேள்விகள் அனைத்தும் என்னைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியே..

  ரவி அண்ணா, “பொதுவில்” அல்லது பூசி மெழுகி சொல்லுங்கன்னு உங்களை நான் சொல்லலை.. ஏன் அப்படி சொல்லப்படவில்லைன்னு தான் கேட்டேன் :).. அதனால என் மேல வருத்தப்படலைனு நினைக்கிறேன் :)

  ReplyDelete
 81. //ஏன்னா பெரும்பான்மை எப்படியோ, அதை வைத்துத் தான் பேச முடியும்!//

  ஞான/கர்ம/பக்தி மார்க்கங்களை ஏன் கண்ணன் காட்டிச் செல்ல வேண்டும்? சரணாகதியை மட்டும் சொல்ல வேண்டியது தானே? கர்மாக்கள் என்பன ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமேயானது என எப்படி நிர்ணயிக்கப்பட்டது? யாரால் ?

  சத்ரிய குலத் தோன்றல் ராமன், வானர குலத்தில் பிறந்த வாலி, அனைத்து வகை யோகங்களையும் எடுத்துச் சொன்ன பகவான் கண்ணன் இவர்கள் எதற்காக நித்ய கர்மாக்களை அனுஷ்டித்தார்கள் ?

  ReplyDelete
 82. kumaran said..
  //ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கும்' என்ற சொற்றொடருக்குப் பொருள் என்ன?//

  மேய்ச்சல் முடிந்து கொட்டிலுக்குத் திரும்பும் பசுக்கள் கனைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்; அவற்றுள் ஒரு குருட்டுப் பசுவும் காரணம் யாதென்று தெரியாமல் கூடவே கனைக்கும்.
  ஆங்கில அறிவற்றவன் ஒரு பெருமைக்காக ஆங்கிலப்படம் பார்க்கச் சென்றானாம்; பிறர் நகைச்சுவைக் காட்சியில் சிரிக்கும்போது தானும் சிரித்து வைத்தானாம்.
  நெடுங்காலம் இணையத்தில் ஆன்மிகம்
  பதித்துவரும் உங்களோடு அடியேனும் சேர்ந்து கொள்வது இவ்வுதாரணங்களை நினைவு கூரச் செய்கிறது.

  தேவ்

  ReplyDelete
 83. //தமன்னா, பூமிகா, பாவ்னா-ன்னு இவிங்கள எல்லாம் பழகாமலேயே பாவிக்கறேனே...
  அவனையும் பாவிக்க முடியாதா என்ன? :)))//

  இது பக்தியா இல்லை சரணாகதியா?

  எம்பெருமான் மீது பக்தி இருந்திராவிட்டால்.. தினமும் வீட்டிலும், வேலை பார்க்கும் இடத்திலும் பூ சாற்றி வழிபடும் சில பக்தர்கள் தான் எங்கள் எமனேஸ்வரம் வரதனை கல்லால் அடிக்கும் போது எனது தாத்தாவின் அப்பா( அப்போது வயது 65) வாகனத்தின் மீதேறி, தன் வேட்டியை அவிழ்த்து எம்பெருமான் மீது போர்த்தி அவர் மிது கல் படமால் அவரை கட்டி அணைத்து தன் மீது தாங்கிக் கொண்டாரே.. அவர் கர்மாவின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் தான். மருத்துவமனையில் எனது பெரியப்பா அறுவை சிகிச்சைக்காக சேர்த்திருந்த போது அமாவசை தர்ப்பணத்தை தன் சார்பாக தர்ப்பையஐ தன் கையால் கொடுத்து எனது சித்தப்பாவை செய்யச் சொல்லி.. அந்த அளவு கர்மாவின் மேல் ஒரு பிடிப்பு கொண்டிருந்தவர் தான், எனது இன்னொரு பெரியப்பாவின் பெண் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை கல்யாணம் செது கொண்டபோது தான் முன்னின்று நடத்தி வைத்ததோடு அல்லாமல், அவர்களுடன் நவதிருப்பதிக்கு சென்று எம்பெருமான் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

  இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் கண்டிப்பாக கர்மப் பிடிப்பு உள்ளவர்கள் எம்பெருமான் மீது காதலாகி கசிந்து உள்ளம் உருகவே செய்வர். பேருக்கு செய்கிறேன் பேர்வழி என்பவன் கண்டிப்பாக பக்தனாக இருக்கவே முடியாது.

  ReplyDelete
 84. //Radha said...
  ரவிசங்கர் ஐயா//

  ராதா
  மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? அடியேன் "பையா"! "ஐயா" இல்லை! :)

  //ஞான கர்ம யோகங்களின் வாயிலாக இறைவனை அடைய முடியாது என்று தாங்கள் குறிப்படுவது போல நான் புரிந்து கொண்டேன். அவ்வாறு இல்லை எனில் தவறான புரிதலுக்கு வருத்தம் தெரிவித்து//

  வருத்தம் எல்லாம் எதுக்கு தெரிவிக்கிறீங்க! நோ நோ! கருத்து விவாதம் தானே! நீங்கள் புரிந்து கொண்டது சரியே! :)

  அடியேன் தொகுத்துச் சொன்னது இவையே:
  ஞான கர்ம யோகங்களின் வாயிலாக இறைவனை அடைய முடியாது!
  ஆத்ம சாக்ஷாதாரம் மட்டுமே அவை தரவல்லவை!
  பரமாத்ம சாக்ஷாத்காரம் அவை தாரா!

  இது உறுதி!
  வேதப் பிரமாணம்!
  உபநிஷதப் பிரமாணம்!
  கீதைப் பிரமாணம்!
  ஆச்சார்யர்கள் அருள்வாக்கு!
  தேசிகர் அருள்வாக்கு!

  இது வெறுமனே என் வாக்கியம் அல்ல!

  நமக்கு ஞான/கர்ம யோகங்களின் மேல் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கலாம்! அதுக்காக பலதும் பேசலாம்!

  நானும் ஞான/கர்ம யோகங்கள் தண்டம், அவற்றைக் குப்பையில் வீசுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை!
  நான் சொல்வது எல்லாம் இந்த ஒன்னே ஒன்னு தான்!
  அவை ஆத்ம அறிவுக்கு மட்டுமே! பரமாத்ம பிரபத்திக்கு அல்ல!

  ஆத்ம அறிவு அவசியம் தான்! ஆனால் அது பரமாத்ம வழி அல்ல!
  இது ஆச்சார்யர்களின் முடிந்த முடிபு!

  ஓட்டைப் படகை ஓட்டைப் படகு-ன்னு தான் சொல்வேன்!

  சிலருக்குப் பிடிச்சிருக்கு! ஸோ, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்! படகின் ஓட்டையைப் பூசி மெழுகலாம்! தண்ணி உள்ளே வராதபடி தினமும் அடைச்சிக்கிட்டே இருக்கலாம் - என்பதெல்லாம் அடியேனால் முடியாது! ஆழ்வார் ஆச்சார்யர்கள் தந்த பிரமாணங்கள் நேர்மையானவை! As simple as that!

  முடிந்தால் கீழ்க்கண்ட தேசிகர் பாசுரத்தை, யாரேனும் தக்க பிரமாணங்களுடன் இங்கு மறுத்துப் பேசுங்கள்!
  1. வேதனை சேர் வேறு அங்கம் ஏதும் வேண்டாம்!
  2. சாதகமே = சரண நெறி என்று உனக்கு
  3. வேறு சாதகங்கள் இந்நிலைக்கோர் இடையில் நில்லா!
  4. சாதனமும் நற்பயனும் "நானே" ஆவன்!

  உபாயமும் = அவ"னே"
  உபேயமும் = அவ"னே"
  நோ ஞான/கர்ம யோகம்!
  Damn Sure!

  ReplyDelete
 85. //ஆகமம், ஆச்சார்ய விளக்கம்-ன்னா என்னன்னு இவர்களுக்கே முழுமையாகத் தெரியாத போது, ஏதோ தமிழ் அர்ச்சனை பண்ணா ஆகமம் கெட்டுரும்! //

  முதலில் தமிழ் அர்ச்சனை செய்வதற்கு என் ஆதரவைத் தெரிவிச்சுகிட்டு இப்போ கேள்விகளுக்கு போறேன்..

  ReplyDelete
 86. //தங்களுக்குப் பிடித்தமான கர்ம காண்டத்தை மட்டுமே வைத்து வழிபாடு நடத்தினால், அது தான் "பொது"-வா? இது மேலாதிக்கம் இல்லாமல், பின்னே வேறு என்ன? Give me a direct answer to this, before any other question!//

  நான் அதுதான் பொது என்று சொல்லவேஇல்லையே?? நான் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கத்தை பேச வரவில்லை... நான் கேட்பதெல்லாம் கோவில்களுக்கு என்று பூஜை முறைகள், அர்ச்சனை முறைகள், கோவில் கட்டும் விதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய ஆகமங்களைப் பற்றி தான் கேட்கிறேன்.. கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று சொன்னால் கீழே உள்ளதைப் படியுங்கள்.. ஸ்வாமி இராமனுசர் தில்லானவர் தானே.. கோவில் ஒழுகு உண்டாக்கியவர் ஏன் கோவில் சம்பந்தப்பட்ட ஆகமங்களில் மாற்றம் கொண்டு வரவில்லை.. தமிழ் பிரபந்தங்களை பாடச் செய்தவர் ஏன் தமிழில் அர்ச்சனையை ஏற்படுத்தவில்லை? இல்லை ஏற்படுத்தியும் பிற்காலத்தில் மறைந்து விட்டதா ?

  ReplyDelete
 87. Raaghav said...
  //சத்ரிய குலத் தோன்றல் ராமன், வானர குலத்தில் பிறந்த வாலி, அனைத்து வகை யோகங்களையும் எடுத்துச் சொன்ன பகவான் கண்ணன் இவர்கள் எதற்காக நித்ய கர்மாக்களை அனுஷ்டித்தார்கள் ?//

  இவர்கள் காலத்தில் நித்யகர்மாநுஷ்டாநம்
  மட்டு்மா இருந்தது ? நான்கு வேதங்களையும் உள்ளபடி அறியும் ஆற்றல் பெற்றோர் இருந்தனர்.
  பஞ்சாக்நி வித்யை, வைச்வாநர வித்யை, மது வித்யை, ப்ரதர்தந வித்யை, தஹர வித்யை, பூம வித்யை, அக்ஷி புருஷ வித்யை போன்ற 32 ப்ரம்ம வித்யைகளில் ஒன்றையாவது எளிதாக அநுஷ்டிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தது.
  நம்மால் அரைமணி நேரம் பத்மாஸனமிட்டுத் தைலதாரைபோல்
  நிலைத்த மனத்துடன் த்யாநத்தில்
  இருக்க இயலுமா சொல்லுங்கள்.

  ஸம்ஸ்கார பேதம்,அதிகாரி பேதம்
  இவையே வேறு வேறு நெறிகளுக்கான
  காரணம்.

  தேவ்

  ReplyDelete
 88. //Raghav said...
  ரவி அண்ணா, “பொதுவில்” அல்லது பூசி மெழுகி சொல்லுங்கன்னு உங்களை நான் சொல்லலை.. ஏன் அப்படி சொல்லப்படவில்லைன்னு தான் கேட்டேன் :).. //

  ஹா ஹா ஹா!
  அப்படியே என்னைச் சொன்னாலும் தப்பே இல்லை ராகவ்!
  கருத்து விவாதம் தானே! இங்கிட்டு மழை வேற! நல்லா கார சாரமா மிளகா பஜ்ஜி போடலாம்! :)

  //அதனால என் மேல வருத்தப்படலைனு நினைக்கிறேன் :)//

  இதுக்கெல்லாம் நான் கோச்சிக்க மாட்டேன்-ன்னு உனக்கே தெரியும்! நான் கர்மவாதி இல்லை! அதுனால எனக்கு கோபம் வராது! :)))

  சுக துக்கா சமே க்ருத்வா
  லாப அலாப ஜயா அஜெயள -ன்னு நல்லாப் "பேசறவங்க" தான் கோச்சிப்பாங்க! :)
  எம்பெருமானார் திருவடிகளே சரணம்-ன்னு இருக்குற என்னைப் போல அஞ்ஞானிகளுக்கு எல்லாம் இதெல்லாம் ஒரு ஜாலி! :)

  ReplyDelete
 89. //கர்ம போதை மிகவும் அபாயகரமானது! அதுவும் ஆன்மீகப் போர்வை தான் போர்த்திக் கொண்டிருக்கும்! ஆனால் பகவானைப் பாவிக்கவே விடாது! //

  அப்படிப்பட்டவர்களும் உள்ளார்கள்... திருக்கோளுர் ஒருமுறை சென்றிருந்த போது ஒரு சிறு வயதுப் பையன் தான் ஆராதனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பெருமாளை தரிசிக்க வந்திருந்த ஒருவர், அந்த சிறுவனை.. பெருமாளுக்கு சரியாக ஆராதனம் செய்ய மாட்டேங்கிறாய், இப்படி செய் அப்படி செய் என்று விரட்ட ஆரம்பித்தார்.. என் பெரியப்பாவிற்கு வந்ததே கோபம்.. அவரை கேள்வி கேட்டு காய்ச்சி எடுத்து விட்டார்.. :) அதே போல் நான் எனது ஊர் பெருமாளுக்கு புதிதாக ஆராதனம் செய்வதை பார்த்து எப்படி செய்வாய் எனக் கேட்டார்.. பெருமாள் காயத்ரியை சொல்லி நிவேதனம் செய்தேன் என்றேன்.. சரி செய் என்று சொல்லிவிட்டு.. பிறகு ஆராதன கிரமங்களை சொல்லிக் கொடுத்து விட்டு சென்றார்... ஆன்மீகப் போர்வை போற்றியுள்ளவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்..

  ReplyDelete
 90. //திவ்ய தம்பதிகள் ஜீவகோடிகளுக்கு்
  நிருபாதிகமான தாய் தந்தையர்//

  மேற்கண்ட சுத்த பிராகசிகமான ஞான தீபிகா வாசகங்களுக்கு,
  தேவ் சாரை, அடிக் கீழ் வீழ்ந்து சேவிக்கிறேன்!//

  அடியேனும் தேவ் ஐயாவை சேவிக்கிறேன் அண்ணா..

  ReplyDelete
 91. //காரசாரமான விவாதங்களை அன்பர்கள் தவிர்ப்பது நன்று//

  கண்டிப்பாக தேவ் ஐயா.. , எனது கேள்வி வேண்டுமானால் காரசாரமாக இருக்கலாம்..ஆனால் குமரனும், ரவி அண்ணாவும் என் கேள்விகள் மூலம் வேள்விகளைத் தான் செய்வர் :)

  ReplyDelete
 92. //சாதனமும் நற்பயனும் "நானே" ஆவன்!
  சாதகமும் என்வயமாய் "என்னைப்" பற்றும்

  "சாதகமே = சரண நெறி" என்று உனக்கு...வேறு
  சாதகங்கள் இந்நிலைக்கோர் இடையில் நில்லா!

  "வேதனை சேர் வேறு அங்கம் எதுவும் வேண்டாம்"!
  வேறல்லா நிற்கு நிலை "நானே" நிற்பன்!

  தூதனுமாம் நாதனுமாம் "என்னை"ப் பற்றி
  "சோகம் தீர்" (மா சுசஹ) என உரைத்தான், சூழ்கின்றானே!
  //

  சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்..

  ReplyDelete
 93. //குமரன் (Kumaran) said...
  இரவி,
  நன்றாக கரும யோகம், ஞான யோகம் பற்றியெல்லாம் விளக்கியிருக்கிறீர்கள். சரணாகதியில் எப்படி ஞானம் உண்டு ஞானயோகம் இல்லை; பக்தி உண்டு பக்தியோகம் இல்லை; கருமம் உண்டு கருமயோகம் இல்லை என்று விளக்கியிருக்கிறீர்கள்//

  :)
  Dankees!

  //என்ன சொன்னவற்றில் கொஞ்சம் வேகம் தெரிகிறது; பாய்ச்சல் தெரிகிறது; மிரட்டுகிறது//

  ஹா ஹா ஹா! பாய்ச்சலா?
  திருமங்கை ஆழ்வாரைத் தானே சொல்றீங்க குமரன்?
  ஆமாம் அவரு ரொம்பவே பாய்ச்சல் காட்டறவரு தான்! :)

  நான் சொன்னதில் எல்லாம் என் பாய்ச்சல் ஒன்னுமில்லைப்பா! ஆழ்வார்கள் பாய்ச்சல் இருக்கு-ன்னு வேணும்-ன்னா சொல்லுங்க! அந்தப் பாய்ச்சல் பாசுரங்களையும் ஆங்காங்கே கொடுத்துள்ளேன்! :)

  //அதனால் இந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டு இன்னும் நிறைய எடுத்துக்காட்டுகளுடன் ஒரு தொடராக எழுதுங்கள்;//

  நிறைய எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்வேன்! :)
  அதுக்கு நீங்களே எனக்கு ஐடியா கொடுக்கலாமா? நான் சின்னப் பையன்! அப்பாவிப் பையன்! உங்க தம்பி! பாவம் இல்லையா? :)))

  ReplyDelete
 94. //ஒரு சிலர் அவர்கள் சார்ந்துள்ள சமூக அளவிலும் எடுத்துக் கொள்கிறார்கள்! கர்மாதிகள் ஒரு சமூகத்துக்கு மட்டும் உரியவை அல்லவே! சமூகம் பற்றிய பேச்சே எழாமல், வெறும் கர்மாதிகள் பற்றி மட்டும் தானே பேச்சு?//

  மிகவும் சரிதான் அண்ணா.. அடியேன் உங்களையும் சேவிச்சுக்குறேன்..

  (அடிக்கடி கால்ல விழறதால அதிமுக காரன்னு நினைச்சுறாதிங்க :))

  ReplyDelete
 95. //எல்லா மார்கங்களையும் அமைத்தருளியது அவன்தான்.
  அவற்றின் உள்நோக்கம் அஹங்கார நீக்கம்;ஆனால் சிரம ஸாத்யமான அவை அஹங்காரத்தை நீக்குவதற்குப் பதிலாக அஹங்காரத்தை மேலும் வலுப்படுத்தி விடுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்.அதைத்தான்
  KRS அவர்கள் தெளிவுபடுத்த விழைகிறார்//

  நல்லாப் புரியுது தேவ் ஐயா..

  ReplyDelete
 96. //ஞானயோகத்தில் வெறும் ஞானம் என்பது சாத்தியமில்லை; பக்தியும் கருமமும் இணைந்தே இருக்க வேண்டும்.//

  மிகத் தெளிவான விளக்கம் குமரன்.. இப்படி இணைந்திருத்தலைத் தான் நான் எதிர்பார்த்தேன் குமரன்.. இல்லாவிடில் எதற்கு ஞான/கர்ம யோகம்.. பக்தி யோகத்தைப் பற்றி மட்டும் கண்ணன் அருளியிருக்கலாமே.

  ReplyDelete
 97. //Raghav said...
  (அடிக்கடி கால்ல விழறதால அதிமுக காரன்னு நினைச்சுறாதிங்க :))//

  ஓ, அப்ப நீ அதிமுக இல்லையா?
  இம்புட்டு நாள் நீ "அண்ணா" திமுக-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்! :))

  ReplyDelete
 98. //காதலுடன் இயைந்த திருமண வாழ்க்கை இவை இரண்டிலும் சிறப்பானது என்பது சொல்லாமலேயே தெரியும். சரி தானே//

  நீங்க சொன்னா தப்பாவா இருக்கும் :))
  நல்லதொரு விளக்கம் குமரன்..

  ReplyDelete
 99. //ஓ, அப்ப நீ அதிமுக இல்லையா?
  இம்புட்டு நாள் நீ "அண்ணா" திமுக-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்! :))//

  ஹா ஹா.. நான் இப்பவும் “அண்ணா” திமுக தான்.. அதிலும் இப்போ பலமான எதிர்க்கட்சி (உங்க கட்சிக்குத் தான் :))))

  ReplyDelete
 100. //Raghav said...
  மிகத் தெளிவான விளக்கம் குமரன்.. இப்படி இணைந்திருத்தலைத் தான் நான் எதிர்பார்த்தேன் குமரன்..//

  This is bad!
  நீங்க எதிர்பார்க்கறது எல்லாம் தான் ஆச்சார்யர்கள் சொல்லணும்-ன்னு நினைச்சிக்காதீங்க!
  No soft corners & jumbling of words here! (கோச்சிக்காத ராகவ் :))

  குமரன் மிக தெளிவாகச் சொல்லியும் why beating around the bush?
  Read Kumaran's words again...
  //
  சரணாகதியில் எப்படி ஞானம் உண்டு ஞானயோகம் இல்லை;
  கருமம் உண்டு கருமயோகம் இல்லை என்று விளக்கியிருக்கிறீர்கள்//

  * ஞானம்/கர்மம் வேறு!
  * ஞானயோக/கர்ம யோகம் வேறு!
  -ன்னு தெளிவாச் சொல்லியும், எதுக்கு வேணும்-ன்னே மிக்ஸ் பண்றீங்க???????

  சரணாகதியில் உள்ள ஒரே ஞானம் = அவ"னே" உபாயம்!
  சரணாகதியில் உள்ள ஒரே கர்மம் = அவ"னே" உபேயம்!

  இதுக்க மேல ஒரு ஞான-கர்ம யோகமும் சரணாகதியில் இல்லை! இல்லை! இல்லை!

  ReplyDelete
 101. //This is bad!
  நீங்க எதிர்பார்க்கறது எல்லாம் தான் ஆச்சார்யர்கள் சொல்லணும்-ன்னு நினைச்சிக்காதீங்க!
  No soft corners & jumbling of words here! (கோச்சிக்காத ராகவ் :))//

  இல்லை நான் கண்டிப்பா கோச்சுப்பேன் :)...

  அந்தப் பின்னூட்டம் போட்டவுடனே நினைச்சேன்.. தப்பா போட்டுட்டோமேன்னு.. அப்புறம் நீங்க பதில் சொன்னப்புறம் சொல்லிக்கலாம்னு இருந்தேன்..

  நான் சொல்ல வந்தது.. என் எதிர்பார்ப்பு அல்ல.. ஞான/கர்ம யோகங்கள் பக்தியோகத்துடன் இணைந்து இருக்க முடியாதா எனும் எதிர்பார்ப்பு தான் :)

  ReplyDelete
 102. //* ஞானம்/கர்மம் வேறு!
  * ஞானயோக/கர்ம யோகம் வேறு!
  -ன்னு தெளிவாச் சொல்லியும், எதுக்கு வேணும்-ன்னே மிக்ஸ் பண்றீங்க???????//

  அதைப் புரிந்து கொள்ளும் யோகம் இன்னும் எனக்கு வரவில்லைன்னு நினைக்கிறேன்..

  ஒருவேளை என்னோட தங்கியிருக்குறவரோட சகவாச தோஷமோ :)))

  ReplyDelete
 103. //இதுக்க மேல ஒரு ஞான-கர்ம யோகமும் சரணாகதியில் இல்லை! இல்லை! இல்லை//

  என்னோட நிறைய குழப்பங்களுக்கு உங்க பதில்கள், விளக்கங்கள் சிந்திக்க வைக்குது ரவிண்ணா.. இப்போதக்கு நிறைய குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது.. சிந்திக்க முயற்சிக்கிறேன்.. கேள்விகள் கட்டாயம் தோணும்.. மறுபடி உங்கள் அனைவரிடம் தான் வருவேன்.. :)

  ReplyDelete
 104. //இல்லாவிடில் எதற்கு ஞான/கர்ம யோகம்.. பக்தி யோகத்தைப் பற்றி மட்டும் கண்ணன் அருளி இருக்கலாமே//

  இதுக்கும் சொல்லி இருக்கேன்-ல? திருப்பியும் வேணும்ன்னே கேக்கறீங்களா? இல்லை விளையாடறீங்களா? :)

  ஆத்ம சாஷாத்காரம் என்றால் என்ன என்பதற்காகவே ஞான/கர்ம யோகத்தை முதலில் காட்டினான்! அம்புட்டு தான்!

  ஒரு ஓட்டைப் படகில் புத்தியில்லாமல் உட்கார்ந்து கொண்டு வர மறுப்பவனிடம் (அர்ச்சுனன்), எதை முதலில் காட்டுவீர்கள்? அந்தப் படகின் ஓட்டைகளையா? இல்லை திவய்மான தெப்பத்தையா? - சொல்லுங்கள் ராகவ் ஐயா!

  ஸ்ரீபாஷ்யத்தில் அத்வைதம்-ன்னா என்ன-ன்னு விளக்கிட்டு, அப்புறமா தான் அதில் இருக்கும் ஓட்டைகளை ஒவ்வொன்னாக் காட்டறாரு!
  அதுக்காக, அத்வைதக் கருத்துக்கள் எல்லாம் இராமானுசரே சொல்லிட்டாருப்பா! பிரபத்தி மட்டுமே சொல்லியிருக்கலாமே? அதையும் எதுக்கு சொல்லணும்-ன்னு? கேட்கறாப் போல இருக்கு, நீங்க கேக்கறது! :)))

  டேய் மடையா அர்ஜூனா!
  மொதல்ல நீ யாரு-ன்னு தெரிஞ்சிக்கோ! = ஆத்ம சாஷாத்காரம்!
  அப்ப தான் உன் இயலாமை என்னா-ன்னு உனக்கே தெரியும்! உன் கைம்முதல் இல்லாமை அப்போ புரிஞ்சிரும்!

  இப்போ பாரு! பரமாத்ம சாஷாத்காரம்!
  இதுவே பிரபத்தி!

  உங்கள் அறிவினால் மட்டுமே, அரியவனை, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
  வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

  நாமே முயன்று நம் ஞானத்தால், கர்மத்தால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், உங்கள் ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் ஞான கர்ம யோகங்கள் உதவலாம்!
  ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!

  எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!

  திக்கெட்டும் ஞான கர்ம யோக தத்துவங்கள் ஆயிரம் பேசலாம்!
  அவை எல்லாம் பளிச்செனத் தோன்றி மறையும் மின்னல் தான்!

  திருவடி சரணங்கள் என்பதே நிலைத்த தீபம்!
  நிலைத்த தீபிகை=அதுவே சரணாகதி தீபிகை!

  ஹரி ஓம்!

  ReplyDelete
 105. மேலும் @ ராகவ்

  உங்களுக்குப் பிடிச்சிருக்கு-ன்னா தாராளமா ஞான யோகத்தைக் கர்ம யோகத்தில் ஊத்தியோ, இல்லை விதம் விதமா மிக்ஸ் பண்ணியோ, காக்டெயில் ஊத்திக் குடிச்சிக்கலாம்!

  அதைத் தவறு சொல்ல வரவில்லை! அவை பரிபூர்ணமாக அவரவர் விருப்பம்.

  ஆனால் சரணாகதியில் ஞானயோகம், கர்மயோகம்-ன்னு எல்லாம் மிக்ஸ் ஆயிருக்கு! இப்படி "இணைந்து இருத்தலைத்" தான் எதிர்பார்த்தேன்-ன்னு இல்லாததை எல்லாம் கலந்தடிக்க நினைச்சீங்க-ன்னா, அடியேன் தேசிகர் என்னும் கவிதார்க்கிக சிங்கத்தோடு வருவேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்!

  வேணும்ன்னா எல்லாத்தையும் உங்க எதிர்பார்த்தலுக்கு ஏற்றாற் போல் மிக்ஸ் பண்ணி, "பூரணாகதி" அப்படின்னு தனித் தத்துவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்! சரணாகதியில் உங்கள் பூசு வேலையைக் காட்ட வேண்டாம்!

  பிரபத்தியில் ஞான யோகம்/கர்ம யோகம் "இணைஞ்சி இருக்கு"-ன்னு பேசறவங்க அத்தனை பேரும்,
  தேசிகர் பாசுரத்தை, தக்க பிரமாணங்களுடன் இங்கு மறுத்துப் பேசுங்கள்! No Generic & Mushy-Mushy Talks!

  ReplyDelete
 106. // குமரன் (Kumaran) said...
  எல்லா யோகங்களும் தனித்தனியாக இல்லை. ஒன்றிலொன்று இயைந்தே உள்ளன. 'அங்கி', 'அங்கம்' என்று பெரியோர்கள் சொல்வார்கள்//

  ஒன்றிலொன்று இயைந்தா? - இவை மற்ற யோகங்களுக்குத் தானே?

  சரணாகதியில்
  1. அங்கி எது?
  2. அங்கம் எது?
  அறியத் தாருங்கள் குமரன்!

  பிரபத்தி = அங்கி!
  ஞான யோகம்/கர்ம யோகம் = அங்கம்-ன்னு கூறப்பட்டிருக்கா? அறியத் தாருங்கள் குமரன்!
  *********************************

  ஆத்ம சமர்ப்பணம் = அங்கி!
  அங்கம் = ஐந்து!
  1. ஆனுகூலய்ஸ்ய சங்கல்பம் (உகந்தவை கொண்டு)
  2. பிரதிகூலஸ்ய வர்ஜணம் (உகவாவை கண்டு மருண்டு)
  3. கார்ப்பண்யம் (தகுந்தவை தனக்கு தாழ்ச்சியே)
  4. மகா விஸ்வாசம் (மிகுந்த மன உறுதியில்)
  5. கோப்த்ருத்வ வர்ணம் (மாதவனையே காவல் வேண்டி)

  ReplyDelete
 107. மாற்றிச் சொல்கிறீர்கள் தேவ் ஐயா. பூவோடு சேர்ந்து மணக்கும் நார் நான் தான்.

  ReplyDelete
 108. //Raghav said...
  சத்ரிய குலத் தோன்றல் ராமன், வானர குலத்தில் பிறந்த வாலி, அனைத்து வகை யோகங்களையும் எடுத்துச் சொன்ன பகவான் கண்ணன் இவர்கள் எதற்காக நித்ய கர்மாக்களை அனுஷ்டித்தார்கள் ?//

  இதற்கு முன்பே பதில் சொல்லி விட்டேன்! இதோ!
  //மற்றபடி சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களும், நைமித்தக கர்மாக்களும் சிறந்தவை தான்! அவை கட்டாயம் கடைப்பிடிக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை!

  நித்ய - நைமித்தக கர்மாக்கள் அவசியம்!
  காம்யார்த்த கர்மாக்கள் - சரணாகதன் ஒதுக்க வேண்டும் என்பதே ஆச்சார்யர்கள் அருளிச் செயல்!//

  இப்போது மறுபடியும் அதையே நீங்கள் கேட்பதால்...இதற்குப் பதில் சொல்லுங்கள் ராகவ்!

  சத்ரிய குலத் தோன்றல் ராமன்,
  பகவான் கண்ணன்
  - இவர்கள் என்னென்ன காம்யார்த்த கர்மாக்களை அனுஷ்டித்தார்கள்? என்னென்ன நித்ய கர்மாக்களை அனுஷ்டித்தார்கள்?

  நீங்கள் மேற்சொன்னவர்கள் பாகவதர்கள் இல்லை!
  பகவான் அனுஷ்டிப்பதைப் பற்றிய பேச்சு இல்லை! மக்கள்/பக்தர்கள்/அடியார்கள் அனுஷ்டிப்பது பற்றியே பேச்சு!

  - ஆஞ்சனேய ஸ்வாமி, தினப்படி என்னென்ன கர்மாக்களை அனுஷ்டிக்கிறார்?
  - பரம பாகவதர்களான குகப் பெருமாள் என்னென்ன கர்மாக்களை அனுஷ்டித்தார்?
  - இவர்களில் எத்தனை பேர் காம்யார்த்த கர்மாக்களை அனுஷ்டித்தார்கள்? அவை யாவை?

  ReplyDelete
 109. //Raghav said...
  எமனேஸ்வரம் வரதனை கல்லால் அடிக்கும் போது எனது தாத்தாவின் அப்பா( அப்போது வயது 65) வாகனத்தின் மீதேறி, தன் வேட்டியை அவிழ்த்து எம்பெருமான் மீது போர்த்தி அவர் மிது கல் படமால் அவரை கட்டி அணைத்து தன் மீது தாங்கிக் கொண்டாரே.. அவர் கர்மாவின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் தான்.//

  அவருக்கு அடியேன் தெண்டனிட்டு சேவித்துக் கொள்கிறேன்!
  கர்மப் பற்றுள்ள அவர், தான் கட்டிய வேட்டியைப் பெருமாள் மீது போர்த்துவது, தோஷம்-ன்னு எல்லாம் பார்க்காமல், பாவனை மட்டுமே பார்த்தது அவர் பெருங்கருணையை அல்லவோ காட்டுகிறது!

  //இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் கண்டிப்பாக கர்மப் பிடிப்பு உள்ளவர்கள் எம்பெருமான் மீது காதலாகி கசிந்து உள்ளம் உருகவே செய்வர்//

  இது உங்கள் அளவிலான ஒரு நிகழ்வு! இதை ஊருக்குப் பொதுப்படை ஆக்க முடியாது!

  மேலும் கர்மப் பிடிப்புள்ளவர்கள் பகவானுக்கு எதிரிகள்-ன்னு நான் எங்கும் சொல்லவில்லையே!
  கர்ம போதை பாவிக்க விடாமல் தடுக்கும் என்று மட்டும் தானே சொன்னேன்?

  மேலும் நீங்கள் சொல்லியவர் அத்தனை பேரும் ஸ்ரீவைஷ்ணவர்கள்! இவர்கள் கர்ம நிஷ்டர்கள்! ஆனால் கர்ம போதை கொண்டவர்கள் அல்லர்! பகவானைப் பாவிப்பது என்றும், தமிழோடு கூடிய உபய வேதாந்தம் என்று வைணவம் சொல்லிக் கொடுத்தே வளர்த்திருக்கு! அதனால் தங்கள் தாத்தாவின் பாவனை மிக இயல்பாக அவருக்கு வந்திருக்கு!

  இப்போ நான் சொல்லட்டுமா?
  தில்லையில், அம்பலவாணர் சன்னிதியில், கருவறை/சன்னிதானம் என்றும் பார்க்காமல், எண்ணெயை ஓட ஓட கொட்டி, வழுக்கி விட்ட தீட்சதர்கள் - அதி பயங்கர கர்மப் பிடிப்புள்ளவர்கள் - இதுக்கு என்ன சொல்லப் போறீங்க? பாவனை இருந்துச்சா? Give me straight answer to this! No dodging!

  இன்னும் ஒவ்வொன்னாச் சொல்லட்டுமா? = கர்மா vs பாவனை!

  இன்னிக்குத் தேதியில் சிதம்பரம்...கர்மப் பிடிப்பு போதை! ஆனா இது இன்னிக்கு-ன்னு இல்லை! காலம் காலமா நடக்கிறது...

  சிதம்பர தீட்சிதர்கள் இன்று கருவறையில் எண்ணெய் கொட்டி வழுக்கியது, ஸ்ரீதர அய்யவாள் அவர்களை கர்ம நிஷ்டர்கள் இழிவு படுத்தியது, உமாபதி சிவத்தை ஓட ஓட விரட்டியது, கருவூர் சித்தரைத் தீர்த்துக் கட்ட எண்ணியது....இன்னும் லிஸ்ட்டு நீண்டு நீண்டு....

  கடைசியில் ஆனானப்பட்ட சிவபெருமானையே தீர்த்துக் கட்ட ஏவி விட்டவர்கள் தான் இந்தக் கர்ம நிஷ்டர்கள்! கர்ம மீமாம்சை ரிஷிகள் - இல்லை-ன்னு சொல்லுங்களேன் பார்ப்போம்!

  பாகவதாபச்சாரம்-ன்னு சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட எமனேஸ்வரம் என்னும் சிற்றூரில் ஸ்ரீவைஷ்ணவப் பெரியவர் is an exception. Where is the society at large?

  //கர்மப் பிடிப்பு உள்ளவர்கள் எம்பெருமான் மீது காதலாகி கசிந்து உள்ளம் உருகவே செய்வர்//

  ஹிஹி! சூப்பர் ஜோக்!
  அரசியல்வாதிகள் ஈழ மக்களுக்கு காதலாகி கசிந்து "உருகின" கதை தான்!
  அரசியல்ல்ல்ல இதெல்லாம் சகஜம்-ண்ணே! :))

  யாரைத் திருப்திப்படுத்த நினைச்சீயளோ, திருப்திப்படுத்தியாச்சா? :))

  ReplyDelete
 110. //Raghav said...
  நான் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கத்தை பேச வரவில்லை...
  நான் கேட்பதெல்லாம் கோவில்களுக்கு என்று பூஜை முறைகள், அர்ச்சனை முறைகள், கோவில் கட்டும் விதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய ஆகமங்களைப் பற்றி தான் கேட்கிறேன்..//

  அதை உருவாக்கியது யார்?
  அதை இப்போது நடைமுறைப்படுத்துவது யார்?
  அந்த விதிகள் நன்முறையில் தான் நடக்கின்றன என்பதற்கு என்ன Audit?

  நீங்க வாளைத் தூக்கினால், நான் சுதர்சனத்தையே தூக்குவேன்! ஓக்கே?
  :))

  //ஸ்வாமி இராமனுசர் தில்லானவர் தானே.. கோவில் ஒழுகு உண்டாக்கியவர் ஏன் கோவில் சம்பந்தப்பட்ட ஆகமங்களில் மாற்றம் கொண்டு வரவில்லை..//

  பதில்களை எல்லாம் படிச்சிட்டுத் தான் வாதம் வைக்கறீங்களா?
  இல்லை சும்மா அடிச்சி விடறீங்களா?

  இராமானுசர் திருவரங்க ஆலய ஆகமத்தையே பாஞ்சராத்ரத்துக்கு மாத்தி வச்சாரு-ன்னு சொன்னேனே! பாக்கலையா?

  கோயில் சம்பந்தப்பட்ட ஆகமங்களில் கண்ட கர்மாக்களையும் நீக்கி, ஈரவாடைத் தீர்த்தம் முதலான புதியனவற்றைக் கொண்டு வந்து, பத்து கொத்து உண்டாக்கி, நம்பெருமாளை ஏளப் பண்ணும் அதிகாரத்தை மாற்றி, ஆகமப்படியான வஸ்திர அலங்கரணத்தில் லுங்கியைச் சேர்த்து...

  இன்னும் என்னென்ன சொல்ல...?
  போதுமா? இல்லை தரவோடு மணிப்பிரவாளத்தில் எடுத்து வைக்கட்டுமா?

  ReplyDelete
 111. ராகவ்

  தேவ் ஐயா சொல்லியதை அப்படியே அசை போட்டுப் பாருங்கள்! அவரை விட நேர்மையா இங்கு யாரும் சொல்லிற முடியாது! இதோ:
  //இவர்கள் காலத்தில் நித்யகர்மாநுஷ்டாநம்
  மட்டு்மா இருந்தது ? நான்கு வேதங்களையும் உள்ளபடி அறியும் ஆற்றல் பெற்றோர் இருந்தனர்//

  //நம்மால் அரைமணி நேரம் பத்மாஸனமிட்டுத் தைலதாரைபோல்
  நிலைத்த மனத்துடன் த்யாநத்தில்
  இருக்க இயலுமா சொல்லுங்கள்//

  //ஸம்ஸ்கார பேதம்,அதிகாரி பேதம்
  இவையே வேறு வேறு நெறிகளுக்கான
  காரணம்//

  ReplyDelete
 112. ராகவ்

  நீங்க ஹமாம் சோப் போடறவரா இருந்தா, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்! :)))
  இன்னும் பதில் சொல்லாம, வேற எதுக்கோ எல்லாம் நைசா எஸ்கேப் ஆயிட்டீங்க :)


  ஆழ்வார்கள் எதுக்கு பூச்சாற்றலில் உள்ள சிறுங் குறைகளைப் பத்திப் பேசாமல்...
  கர்மங்களின் குறைகளை மட்டுமே பேசி நம்மை அறிவுறுத்தினார்கள்?

  உங்க ஸ்டைல்-ல, கர்மா-வை பகவானுடைய ப்ரீதிக்குப் பண்ணனும்-ன்னு "பொதுவா" சொல்லிட்டுப் போயிருக்கலாம்-ல? ஏன் போகலை?

  வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
  கூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர்..

  "வரம்பு ஒழி" வந்து ஒல்லை கூடுமினோ

  சதுர்மறையால் வேள்வியால் தக்கோரேனும் புலையர் தாமே...

  அமரவோ ரங்க மாறும்
  வேதமோர் நான்கு மோதி,
  தமர்களில் தலைவ ராய...

  எதுக்குப் பொதுவாச் சொல்லாம, இப்படிப் பாடணும்? சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லுங்க! :)

  ReplyDelete
 113. இரவி,

  இராகவன் கேட்டது: ஞான/கர்ம/பக்தி யோகங்கள் தனித்தனியாகத் தான் சொல்லப்பட்டுள்ளதா? ஞானத்துடன் கூடிய பக்தி.. பக்தியுடன் எம்பெருமான் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும், பக்தியுடன் கூடிய கர்மயோகம் சாத்தியமில்லையா ?

  அதற்கு நான் சொன்ன பதில்: எல்லா யோகங்களும் தனித்தனியாக இல்லை இராகவ். ஒன்றிலொன்று இயைந்தே உள்ளன. 'அங்கி', 'அங்கம்' என்று பெரியோர்கள் சொல்வார்கள். எது முதன்மையாக இருக்கிறதோ அது 'அங்கி' என்றும் அதன் பெயரில் 'யோகம்' என்றும் சொல்வார்கள். மற்றவை அங்கங்களாகும். ஞான யோகத்தில் அங்கி ஞானவழி; பக்தியும் கர்மமும் மற்றவையும் அங்கங்கள். பக்தி யோகத்தில் அங்கி பக்தி; மற்றவை அங்கங்கள். அங்கங்கள் சாத்தியம் மட்டுமில்லை; அவையில்லாமல் அங்கி இல்லை. ஞானயோகத்தில் வெறும் ஞானம் என்பது சாத்தியமில்லை; பக்தியும் கருமமும் இணைந்தே இருக்க வேண்டும்.

  கேள்வியிலும் சரணாகதியைப் பற்றி இல்லை. பதிலிலும் இல்லை. சரணாகதியில் நீங்கள் சொன்ன ஐந்து அங்கங்களைத் தான் ஆசாரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 114. ஓக்கே! ராகவ்-வை முடிச்சாச்சி! இப்போ நம்ம ராதா ஐயா கிட்ட வருவோம்! சும்மா அடியேன் பொடிப் பையன் ஆடும் விவாத விளையாட்டு தாங்க! என்ஜாய் பண்ணனும் என்ன? சொல்லிட்டேன்! ஆமா! :))))

  //Radha said...
  ஒவ்வொருவருடைய இயல்பிற்கு ஏற்றவாறு அவர் அவர்க்கு ஒரு யோகம் எளிதாய் கை கூடும்.
  சிலருக்கு நிறைய செயல்கள் புரிவதில் ஆர்வம் இருக்கும். இவர்களுக்கு கர்மயோகம் எளிதாய் கைகூடும் என்று சொல்வர்//

  கர்ம யோகம் கைகூடும் தான்!
  ஆனா இறைவன் கை கூடுவானா? மோட்சம் கை கூடுமா? :)

  அப்படிக் கூடுச்சினா எனக்கும் சந்தோசம் தான்! பதிவு போட்டு "கர்ம" யோகம் பண்ணேன்-ன்னு மகா பாவியான நானே மோட்சம் வாங்கிப்பேனே! :)

  ஞான யோகத்தாலும், கர்ம யோகத்தாலும் ஆத்மாவை மட்டுமே அறிய முடியும்! பரமாத்ம சாஷாத்காரம் கிடைக்காது என்பது பகவத் கீதை!

  ந வேத! யக்ஞ தியாய-னைர், ந தனைர், ந ச க்ரியா-பிர்!
  ந தபோ-பிர் உக்ரை! ஏவம் ரூப சாக்ய அகம்! 11:48

  வேதப் படிப்பாலேயோ, யாக ஹோமங்களாலேயோ,
  தனம் மற்றும் கிரியைகளாலோ, தன்னலமான தான தவங்களாலோ,
  என்னைக் காண முடியாது! அடைய முடியாது!
  (ஏக பக்திர் விசிஷ்யதே என்னும் "ஏக பக்தி" கொண்ட உன்னால்(பக்தனால்) மட்டுமே காண முடியும்!)

  கீதையில் கண்ணன் சொல்வது பொய்யா, ராதா சார்? :)
  ***********************************

  யாம் இமாம், புஷ்பிதாம் வாசம், ப்ரவதந்தி அவிபாஸ்சித:
  வேத வேத ரதா: பார்த்தா, நான்யத் அஸ்திதி வாதினா 2:42

  வேதம் விதிச்சபடி நடக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், அலங்கார புஷ்பம் போல வெறும் கோஷம் தான் இடுவார்கள்! தங்களுக்குப் பிடித்தமான வேத வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சுயநலமாகக் கையாளுவார்கள்! :))

  காமாத்மனா, சொர்க்க பரா, ஜன்ம-கர்மா-பலப்ரதாம்
  க்ரியா விசேஷ பகுலாம், போக ஐஸ்வர்ய, கதிம் ப்ரதி! 2:43

  சொர்க்கம், கர்மா, இஷ்டி, ஹோமம்-ன்னு, உலகாயுதமாக, விதம் விதமான சடங்குகளையும் கர்மாக்களையும் செய்து கொண்டு, வீணே காலம் கழிப்பார்கள்! :))

  அடப் பாவி கிருஷ்ணா! ஆப்பாவி ராகவ் பையனின் யோசனையைக் கேட்டு நட! :)
  என்னையே நினைச்சி "எது" பண்ணாலும் மோட்சம் கொடுக்கறேன்-ன்னு "பொதுவாச்" சொல்ல வேண்டியது தானே? எதுக்கு இப்படியெல்லாம் குறிப்பிட்டுச் சொல்றே? :)
  ********************************

  மாம் ஏகம் "சரணம்" வ்ரஜ
  மோக்ஷ இஸ்யாமி மாசுச:
  - அப்படின்னு ஞான யோகம், கர்ம யோகத்தில் வருதா? காட்டுங்க பார்ப்போம்? :))

  ReplyDelete
 115. இராகவ்,

  இணையத்துல பூர்வாசார்யர்களுடைய நூல்கள் நிறைய கிடைக்கின்றன. எடுத்துப் படித்துப் பாருங்கள். சிந்தித்தே இக்கேள்விகளுக்கு எல்லாம் விடைகள் கிடைக்காது.

  ReplyDelete
 116. //1. Performing the action with 100% involvement.
  2. Submitting the fruits of the action to the Lord//

  இதெல்லாம் நடக்கற காரியமா? இது மட்டும் அம்புட்டு ஈசியா பண்ணிற முடியுமா? :)

  இதெல்லாம் மகா ஞானியான பீஷ்மருக்கே கை கூடலை!
  ஐயோ நன்றிக் கடன் பட்டிருக்கோமே-ன்னு சுயநல தர்மத்தைக் காப்பாத்திக்கிட்டு, பெரும் தர்மத்தைக் கை விட்டாரு! :)

  பகவானுக்கே அர்ப்பணம் கர்மா பண்றவரா இருந்தா, நன்றிக் கடன், பிரதிக்ஞை எல்லாம் தன்னை ஒன்னும் பண்ணாது! பகவத் அர்ப்பணம்-ன்னு இருக்க வேண்டியது தானே? :)

  கடைசியா பகவான் சக்கரத்தை தூக்கிய போது தான் புத்தியே வந்தது! இன்றளவும் திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பெருமாள் முகத்தில் உள்ள தழும்புகள் கூறும்! :)

  //முனிவரின் ஆசிரமத்தில் முனிவர்களுக்கு பணிவிடை செய்தே இறைவனை அடைந்தாள் என்று சொல்வர். சபரி பணிவிடை செய்யும் காலத்தே எந்த விதமான பலனையும் உத்தேசித்து செய்யவில்லை//

  நீங்க சொல்றதே தான் ராதா ஐயா! நீங்கலே எனக்கு பாயின்ட் எடுத்து கொடுக்கறீங்களே! :)

  சபரி எந்தக் கர்மா-வையும், சந்தியையும், ஹோமத்தையும் பண்ணவில்லை!
  * அவள் செய்தது பாகவத உபசாரம்!
  * அதற்கு அப்பறம் தான் பகவத் உபசாரம்!
  * அதுனால மோட்சம்!
  இதுல ஞான யோகமும் இல்லை! கர்ம யோகமும் இல்லை! :)

  //முறையாக தொழில் செய்வதினாலும் இறை உணர்வை பெறலாம் அல்லவா?//

  தொழில் உணர்வைப் பெறலாம்! :)

  கடமை உணர்வைப் பெறலாம்! "தன்" உணர்வைப் பெறலாம்! Thatz it! It stops there!

  //இது பற்றி ரமண மஹரிஷியிடம் ஒரு சாதகர் கேள்வி எழுப்புங்கால், "பேஷாக !! காலக்ரமத்தில் பூரண சரணாகதி சாத்தியமாகும்." என்று அவர் பதில் உரைக்கிறார்//

  ஆசை உடையோர்க்கெல்லாம்
  பேசி வரம்பு அறுத்தார் பின்! :)

  ReplyDelete
 117. //Radha said...
  வைதிக கர்மங்கள் பற்றி ஆழ்வார்கள் தாழ்த்தி கூறி உள்ளார்கள் என்பது பற்றி எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. இதையும் நீங்கள் light-ஆக சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்//

  ஹிஹி! உங்களுக்கு உடன்பாடா இல்லையா என்பது இங்கு கேள்வி இல்லை! ஆழ்வார்கள் சொல்லி உள்ளார்களா என்பது தான் கேள்வி! கொடுத்திருக்கும் பாசுரங்களைப் பாருங்கள்! ஸ்ரீபாதம் தாங்கியான அன்பர் வேங்கடேஷ், சந்தியா வந்தனம் பற்றிய பேயாழ்வார் பாசுரம் எல்லாம், பந்தலில் முன்பே கொடுத்துள்ளார்! :)

  ஒரு கருத்தை ஏற்கனவே மனசில் வச்சிக்கிட்டு, அதற்கு வலு சேர்க்கணுமே-ன்னு நினைச்சியே வாசிச்சா, ஆழ்வார்களிடம் ஏமாற்றம் தான் மிஞ்சும்! :)

  //வைதிக கர்மங்கள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறி உள்ளதை இங்கு கண்டால் நமக்கு சற்றே தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்//

  ராமகிருஷ்ணர் எந்த வைதீக கர்மங்களைச் செய்து கொண்டிருந்தார்? அவரை அடிக்காத குறையாக விரட்டிய மற்ற பூசாரிகள் கதையெல்லாம் நிறையவே உண்டு! :)

  //"The sandhya merges in the Gayatri, and the Gayatri merges in Om."//

  Very True! I fully and humbly accept this!

  //Then only will you have a right to renounce rituals; //

  Nopes!
  ப்ரபத்திக்கு தகுதியாவது மற்ற யோகங்களில் தகுதி அற்ற
  நிலைமை
  :)))))

  இனி தேசிகர் வசனத்தில் சொல்கிறேன்!
  சரணம், சரணம், பிரபத்"யே"
  = இந்த "யே" அனுஷ்டிப்பவனின் தகுதியை காட்டுவதாக கொள்ள வேண்டும்.

  ப்ரபத்தி என்னும் செயலைச் செய்யும் சேதனனுக்கு தகுதி இருந்தால்தானே
  அதைச் செய்ய முடியும்? அந்த தகுதி என்ன என்றால் மற்றைய கர்ம, ஞான,பக்தி யோகங்கள் போல் இல்லை.

  * ஆகிஞ்சன்யம் (வேறு ஒரு உபாயத்திற்கும்
  அருகதை அற்றவன் - இயலாமை)
  * அநந்ய கதித்வம் (வேறு ஒரு தெய்வமோ
  அல்லது பலனையோ நினைக்காமை).

  அவ"னே" உபாயம்!
  அவ"னே" உபேயம்!

  ஆக, இந்த யே என்பது எதை குறிக்கும் என்றால் சேதனனின்
  தகுதி - ப்ரபத்திக்கு தகுதியாவது மற்ற யோகங்களில் தகுதி அற்ற
  நிலைமை :))

  ReplyDelete
 118. மேலும் @ ராதா சார்
  //ஆழ்வார்கள் எல்லாம் பிரேம பக்தி கை கூடியவர்கள்.
  நம்மில் எத்தனை பேர் ஆழ்வார்கள் என்பது நமக்கே தெரியும். :-) ஆதலால் நமக்கு வைதிக கர்மங்கள் தேவைப் படுகின்றன//

  ஓ....
  அப்போ ஆழ்வார்கள், நமக்காக பாடலை! அவங்களுக்காகவே பாடிக்கிட்டாங்க-ன்னு சொல்ல வரீங்க! அப்படித் தானே? :)))

  தன் பூர்ண அவதாரத்தாலேயே ஜீவன்களை உஜ்ஜீவிக்க முடியலை-ன்னு தான் பகவான்,ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் அவதரிப்பித்தான்!!

  நீங்க சொல்றதைப் பார்த்தா, ஏதோ ஆழ்வார்கள் பாடியது எல்லாம் அவங்க நிலைமைக்கு வேணும்னா சரியா வரும்! நமக்கு வருமா?-ன்னு கேட்பது போல் அல்லவா இருக்கு? :))

  //சரணாகதி பற்றி தாங்கள் உயர்த்தி சொல்வதில் அதிசயம் இல்லை.//

  நான் உயர்த்தியே சொல்லலையே! :)
  பிரபத்தியை உயர்த்தும் அளவுக்கெல்லாம் அடியேனுக்குத் தகுதி இல்லை!

  சொல்லப் போனா, கர்ம யோகத்தால் முக்தி-ன்னா, நான் தான் முதல் ஆளா கர்மா, தக்காளி குர்மா எல்லாம் பண்ணுவேன்! :)
  ஏன்னா எனக்கு வேலை பண்ணிக்கிட்டே இருக்கத் தான் பிடிக்கும்! பாருங்க, ஊரு விட்டு ஊரு வந்து, இன்னும் பதிவுல பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்! :))

  ReplyDelete
 119. ஓக்கே...மீ தி எஸ்கேப்பு! :)

  இன்னும் ரெண்டே நாள்-ல $2 Million ப்ரோபசலை முடிச்சிக் கொடுத்துட்டு, ஊரைப் பார்க்க நியூயார்க வரணும்!
  டாட்டா, குட் நைட்! :)
  ******************************

  பயனுள்ள விவாதங்களுக்கு தேவ் ஐயா முதற்கொண்டு, அனைத்து அடியார்களுக்கும், கைங்கர்ய பாராளுக்கும் நன்றி!

  குணானுபவ விருந்தில் கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

  மீதி கலந்துரையாடலை நான் "அண்ணா" என்று கூப்பிடாவிட்டாலும், என் அண்ணனான குமரன் நடாத்தித் தருவார்! சுருக்காக

  * ஞான யோகம்/கர்ம யோகம் = ஆத்மாவை மட்டுமே காட்டும்!
  பரமாத்மாவைக் காட்டாது!

  * பக்தியோகம் = பரமாத்மாவைப் பல பிறவிகள் கழித்துக் காட்டும்!

  * பிரபத்தி = இதில் வேறொரு உபாயம் இல்லாதபடிக்கு, அவனே உபாய/உபயேம் என்பதால், அவனே அவனைக் காட்டித் தருவான்!
  *********************************

  ராகவ்
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)
  Advance Wishes for a Happy Birthday (Jun-24) :))

  ReplyDelete
 120. பிறந்த நாள் வாழ்த்துகள் இராகவ்.

  இராதா & இராகவ்,

  முடிந்தால் 'கூடல்' பதிவில் இருக்கும் 'புல்லாகி பூண்டாகி' தொடர்கதையைப் படித்துப் பாருங்கள். கதை தொடக்கத்தில் திருவண்ணாமலையைச் சுற்றும்; ஆனால் திடீரென்று சில கதைகள் சொல்லத் தொடங்கும்; அந்தக் கதைகளை எல்லாம் படித்து வந்தால் இரவி இங்கே சொன்ன (அதாவது ஆசாரியர்கள் ஏற்கனவே சொன்ன) 'கரும ஞான யோகங்கள் ஆத்ம சாக்ஷாத்காரம் தரும்; பக்தியோகம் பல பிறவிகள் சென்று பரமாத்ம சாக்ஷாத்காரம் தரும்; பிரபத்தி இந்தப் பிறவியின் முடிவில் பரமாத்ம சாக்ஷாத்காரம் தரும்' என்ற கருத்தினை ஒட்டிச் செல்வதைக் காணலாம்.

  ReplyDelete
 121. KRS Said....
  //கடைசியில் ஆனானப்பட்ட சிவபெருமானையே தீர்த்துக் கட்ட ஏவி விட்டவர்கள் தான் இந்தக் கர்ம நிஷ்டர்கள்!//

  கர்மம் மட்டுமே பலன் தருகிறது என்னும் செருக்கு நிரீசுவர வாதத்தில் முடிவதை அழகாகச் சொன்னீர்கள்.
  ஆனால் எல்லா முனிவர்களையும் தாருக வனத்து ரிஷிகளைப்போல்
  எடைபோட முடியாது.

  தண்டக வனத்து ரிஷிகள் தம்மைக் கருக்குழவிகளாகப் பெருமாளிடம் விண்ணப்பித்துக் கொண்டனர்.
  அவர்களைப் பொருத்தமட்டில் தவத்தை ஒரு ஸாதனமாகக் கருதவில்லை என்று தெரிகிறது;அந்த
  யுகதர்மம் சார்ந்த அதிகாரி விசேஷணமாகவே கருதினர்.
  ’கர்பபூதா: தபோதநா:’ என்றார் வால்மீகி பகவான்.

  நைமிச வனத்து ரிஷிகள் பகவத்குணாநுபவம் செய்தனர்.

  தேவ்

  ReplyDelete
 122. //கர்ம யோகம் கைகூடும் தான்!
  ஆனா இறைவன் கை கூடுவானா? மோட்சம் கை கூடுமா? :)//
  கர்ம யோகம் பற்றிய என்னுடைய புரிதலை தயவு செய்து மீண்டும் படிக்கவும். (எல்லா கர்மங்களையும் முழு ஈடுபாட்டுடன் செய்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்து கொண்டே இருத்தல்.)யோகம் கை கூடினால் எதிர்பார்ப்பு இல்லை. மோக்ஷம் பெற்றால் தான் என்ன? பெறாவிட்டால் தான் என்ன? மோக்ஷம் தர வேண்டுமா வேண்டாமா என்பதை அவர் நிர்ணயிக்கட்டுமே.

  ReplyDelete
 123. //
  இதெல்லாம் மகா ஞானியான பீஷ்மருக்கே கை கூடலை!
  ஐயோ நன்றிக் கடன் பட்டிருக்கோமே-ன்னு சுயநல தர்மத்தைக் காப்பாத்திக்கிட்டு, பெரும் தர்மத்தைக் கை விட்டாரு! :)

  பகவானுக்கே அர்ப்பணம் கர்மா பண்றவரா இருந்தா, நன்றிக் கடன், பிரதிக்ஞை எல்லாம் தன்னை ஒன்னும் பண்ணாது! பகவத் அர்ப்பணம்-ன்னு இருக்க வேண்டியது தானே? :)//
  பீஷ்மர் போன்ற ஞானிகளின் செயல்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு நான் பெரிய ஆள் எல்லாம் ஐயா.
  அவர் பகவத் அர்ப்பனமாகவே செய்தார் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். பூபாரம் குறைய பாண்டவர் பக்கம் உள்ள சேனைகளும் அழிய தன்னை கண்ணபிரானின் கருவியாக்கி கொண்டார் என்று பெரியோர் சொல்ல கேட்டு இருக்கிறேன். i am nobody to judge another person let alone mahatmas like Bhishmar. 'பீஷ்ம ஸ்துதி' என்று ஸ்ரீ பாகவதத்தில் வரும் அழகான ஸ்லோகங்களை ஜீயர்கள் முதற்கொண்டு 'குறை ஒன்றுமில்லை' புகழ் முக்கூர் வரை அனைவரும் கொண்டாடி களிப்பர். அவருடைய விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை தான் இன்றளவும் பல வீடுகளிலும் சேவித்து மகிழ்கிறார்கள்.

  ReplyDelete
 124. //கர்ம யோகம் கைகூடும் தான்!
  ஆனா இறைவன் கை கூடுவானா?//
  நிச்சயமாக. கீதையை ஆழ்ந்து படித்தால் எவ்வாறு என்று விளங்கும்.

  ReplyDelete
 125. *********
  //சபரி எந்தக் கர்மா-வையும், சந்தியையும், ஹோமத்தையும் பண்ணவில்லை!
  * அவள் செய்தது பாகவத உபசாரம்!
  * அதற்கு அப்பறம் தான் பகவத் உபசாரம்!
  * அதுனால மோட்சம்!
  இதுல ஞான யோகமும் இல்லை! கர்ம யோகமும் இல்லை! :)
  //
  *********
  உபசாரமும் செயல் தான் அல்லவா? நான் கர்மம் என்றால் செயல் என்று புரிந்து வைத்து உள்ளேன். உங்கள் புரிதல் வேறு மாதிரி உள்ளது என்று நினைக்கிறேன். தியாக உணர்வோடு செயல் புரிவதன் மூலமும் நம் அகந்தை கரைய பெற்று இறைவனை அடையலாம் என்பதற்கு சபரி கதையை பல பெரியோரும் சொல்ல கேட்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 126. ***********
  //Radha said...
  வைதிக கர்மங்கள் பற்றி ஆழ்வார்கள் தாழ்த்தி கூறி உள்ளார்கள் என்பது பற்றி எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. இதையும் நீங்கள் light-ஆக சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்//

  ஹிஹி! உங்களுக்கு உடன்பாடா இல்லையா என்பது இங்கு கேள்வி இல்லை! ஆழ்வார்கள் சொல்லி உள்ளார்களா என்பது தான் கேள்வி! கொடுத்திருக்கும் பாசுரங்களைப் பாருங்கள்! ஸ்ரீபாதம் தாங்கியான அன்பர் வேங்கடேஷ், சந்தியா வந்தனம் பற்றிய பேயாழ்வார் பாசுரம் எல்லாம், பந்தலில் முன்பே கொடுத்துள்ளார்! :)

  ஒரு கருத்தை ஏற்கனவே மனசில் வச்சிக்கிட்டு, அதற்கு வலு சேர்க்கணுமே-ன்னு நினைச்சியே வாசிச்சா, ஆழ்வார்களிடம் ஏமாற்றம் தான் மிஞ்சும்! :)
  *************
  என்னுடைய கருத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆழ்வார்கள் தாங்கள் இருக்கும் உயர்ந்த நிலையில் பொதுவாக பெரும்பான்மையோர் உள்ள நிலயை நன்றாக புரிந்து இருப்பர்.
  'இன்னமும் கஷ்ட படுகிறாயே' என்று இரக்க மனத்தோடு கூறி இருப்பர் தவிர நம்மை கண்டு ஏளனம் செய்பவர் அல்லர்.

  ReplyDelete
 127. **********
  //வைதிக கர்மங்கள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறி உள்ளதை இங்கு கண்டால் நமக்கு சற்றே தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்//

  ராமகிருஷ்ணர் எந்த வைதீக கர்மங்களைச் செய்து கொண்டிருந்தார்? அவரை அடிக்காத குறையாக விரட்டிய மற்ற பூசாரிகள் கதையெல்லாம் நிறையவே உண்டு! :)
  **********
  I think you didn't get the import of the message. Let me try to explain my understanding. Those who do not shed tears merely on the utterance of the Lord's name are yet to get rid of their ego. The complete erosion of ego is possible only through His grace. Till one receives the Lord's grace in this regard one has to keep making efforts. Make all your efforts and wait for that unparalleled grace to reveal itself. Keep trying. Try with the methods that you know or have been taught. One has to keep trying until one realises his incapabality. Then comes the real surrendering to the Lord. True surrender erases the ego completely. After the effacement of ego one attains pure love for God and in such a state they start shedding tears even on hearing the name of the Lord. The Azhwaars were in such a state.

  ReplyDelete
 128. ******
  //Then only will you have a right to renounce rituals; //

  Nopes!
  ப்ரபத்திக்கு தகுதியாவது மற்ற யோகங்களில் தகுதி அற்ற
  நிலைமை :)))))
  ******
  'ப்ரபத்திக்கு தகுதி' என்று ஒன்று இருப்பதாக நான் கேள்வி பட்டது இல்லை.எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரணாகதி செய்யலாம் என்றே கேள்வி பட்டு உள்ளேன்.

  ReplyDelete
 129. தேவ் ஐயா,
  தங்களது விளக்கங்கள் அனைத்தும் மிகவும் தெளிவாக உள்ளது. படித்து மகிழ்ந்தேன். :)
  ~
  ராதா

  ReplyDelete
 130. ******
  //Radha said...
  ரவிசங்கர் ஐயா//

  ராதா
  மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? அடியேன் "பையா"! "ஐயா" இல்லை! :)
  ******
  என்னங்க இப்படி கேட்டுடீங்க? குமரன் என்னிடம் உங்களை பற்றி "அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்" என்றெல்லாம் சொல்லி உள்ளார். :) மேலும் பின்னூட்டங்களில் குமரனே உங்களை ஐயா என்று விளித்து உள்ளார். ஒரு சுப்ரீம் ஸ்டார் உங்களை ஐயா என்று அழைக்க, அப்புறம் நான் மட்டும் மரியாதை குறைவாக ரவி என்றோ இல்லை வேறு எவ்வாறோ எப்படி அழைக்க முடியும். :)

  ReplyDelete
 131. ஒரு தற்செயலான நிகழ்வு.. இன்று http://www.youtube.com/watch?v=Ym4LfjfQrLc&feature=related

  இந்த வீடியோவை எதேச்சையாக பார்க்க நேரிட்டது.. முதல் பகுதியில் திருப்பாவை சேவித்து விட்டு, இந்த இரண்டாவது பகுதியில் ஸ்வாமி தேசிகன் புறப்பாட்டினை தரிசிக்கையில் வீடியோவின் இறுதியில் உபன்யாசகர் சொல்லும் வாசகம்...

  “ஸ்வாமி தேசிகனே, நாங்கள் கர்மயோகம் செய்ய மாட்டோம், ஞான யோகம் என்னவென்றே தெரியாது.. பக்தியோகம் என்ன விலை என்று கேட்போம்.. நாங்கள் உய்யும் வழியைக் காட்டி அருள் என்று விண்ணப்பிக்கிறார்.. மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.. :)

  ReplyDelete
 132. //Raghav said...
  “ஸ்வாமி தேசிகனே, நாங்கள் கர்மயோகம் செய்ய மாட்டோம், ஞான யோகம் என்னவென்றே தெரியாது.. பக்தியோகம் என்ன விலை என்று கேட்போம்..//

  ஹா ஹா ஹா!
  இப்பவாச்சும் புரிஞ்சுதா பதிவில் இவ்ளோ நேரம் வாதாடிய கவிதார்க்கிக சிம்மம் யாருன்னு? :))

  //நாங்கள் உய்யும் வழியைக் காட்டி அருள் என்று விண்ணப்பிக்கிறார்..//

  உய்யும் ஆறு என்றெண்ணி உகந்தேலோ! = பிரபத்தி

  //மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.. :)//

  பதிவிலும் சிரிக்கலாம் பிறந்தநாள் பையரே! :)

  ReplyDelete
 133. @ராதா
  //மோக்ஷம் பெற்றால் தான் என்ன? பெறாவிட்டால் தான் என்ன?//
  அருமை! இப்போது தான் நீங்க பிரபத்திக்கு பூர்ணமாய் ஜொலிக்க ஆரம்பிச்சிட்டீங்க! :)

  //கர்ம யோகம் பற்றிய என்னுடைய புரிதலை தயவு செய்து மீண்டும் படிக்கவும். (எல்லா கர்மங்களையும் முழு ஈடுபாட்டுடன் செய்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்து கொண்டே இருத்தல்.)//
  * எல்லா கர்மங்களையும் முழு ஈடுபாட்டுடன் செய்து = ....இது வரைக்கும் சரி
  * இறைவனுக்கு அர்ப்பணம் செய்து கொண்டே இருத்தல் = இதைக் கர்ம யோகம், அவ்ளோ லேசில் செய்ய விடாது என்பதே கீதையின் வாக்கு! அடியேன் கொடுத்த கீதையின் சுலோகங்களை நீங்களே வாசித்துப் பார்க்கவும்!

  //அவர் பகவத் அர்ப்பனமாகவே செய்தார் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்//
  இப்படி "கேள்விப்பட்டு இருக்கேன்", "என்னோட புரிதல்", "நான் அறிந்த வரை"-ன்னு தான் அடிக்கடி சொல்றீங்க ராதா! :)
  அதான் கண்ணனின் கீதையில் இருந்தே நேரடியாகவே எடுத்துக் காட்டினேன் (அடியேன் மூலமாக தேசிகன் எடுத்துக் காட்டினார் என்பதே பொருத்தம் :)

  //அவருடைய விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை தான் இன்றளவும் பல வீடுகளிலும் சேவித்து மகிழ்கிறார்கள்//
  இதெல்லாம் யாரும் இல்லை-ன்னு சொல்லலை! கண்டபடி நீங்களா மிக்ஸ் பண்ணிக்கறீங்க! :)
  இப்படிக் கொண்டாடுவதே பீஷ்மர் கர்ம யோகத்தை விட்டொழித்து, மனம் திருந்தி, பகவானிடம் தேர்த்தட்டில் சரண் அடைந்த பிறகு தான்!

  //நிச்சயமாக. கீதையை ஆழ்ந்து படித்தால் எவ்வாறு என்று விளங்கும்//

  முதலில் கர்ம யோகம் பலன் தராது-ன்னு அடியேன் கீதையில் இருந்தே காட்டிய சுலோகங்களுக்கு நேரடியா பதில் சொல்லணும்-ன்னு பிரார்த்திச்சுக்கறேன்! :) No Generic Beating around the Bush! :)


  //உபசாரமும் செயல் தான் அல்லவா? நான் கர்மம் என்றால் செயல் என்று புரிந்து வைத்து உள்ளேன்//
  ராதா!
  அதான் சொல்லி உள்ளேனே!
  * கர்மம் (செயல்) வேறு!
  * கர்ம யோகம் வேறு-ன்னு!
  * உபசாரம் என்ற செயல் is not equal to கர்ம யோகம்!

  நீங்களாச் சிலதை அர்த்தம் பண்ணி வைத்துக் கொண்டு உள்ளீர்கள்! :)
  இன்னும் பலருக்கும் பல்வேறு யோகங்கள் மேல் ஒரு soft corner இருப்பதால், இப்படி திடீர்-ன்னு கர்மயோகத்தால் இறைவனை அடைய முடியாது-ன்னு சொல்லும் போது ஷாக் ஆகிறார்கள்! அதனால் அடியேன் சொல்வது பாய்ச்சல் போல தெரிகிறது!

  சரணாகதி-ன்னா என்ன? ஒவ்வொரு யோகம்-ன்னா என்ன?-ன்னு ரொம்ப சிம்பிளா அப்பறம் ஒரு பதிவு இடுகிறேன்!
  அதுல கர்மா-வை ரொம்ப திட்டாம, கர்மாக்கள் எல்லாம் வெரி குட்-ன்னு கொஞ்சப் போறேன்! :)
  அப்பறமா ராகவ், ராதா எல்லாருக்கும் நான் சொல்வது ரொம்ப பிடிச்சிப் போகும்! :)))

  ReplyDelete
 134. மேலும் @ ராதா
  //'இன்னமும் கஷ்ட படுகிறாயே' என்று இரக்க மனத்தோடு கூறி இருப்பர் தவிர நம்மை கண்டு ஏளனம் செய்பவர் அல்லர்//
  ஆழ்வார்கள் ஏளனம் செய்யவில்லை! அதே சமயம் பூசியும் மெழுகவில்லை! உள்ளதை உள்ளபடி சொல்லிப் போந்தனர்! அதைத் தான் அடியேனும் கொடுத்து இருந்தேன்!

  இங்கே - பக்தி For Dummies ஒரு எட்டு போய் பாத்தீங்க-ன்னா, என் மேல் கோவம் வரக் கூடிய வாய்ப்புகள் நிறைய நிறைய இருக்கு! வாங்க கோச்சிக்கலாம்! :))

  //'ப்ரபத்திக்கு தகுதி' என்று ஒன்று இருப்பதாக நான் கேள்வி பட்டது இல்லை.எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரணாகதி செய்யலாம் என்றே கேள்வி பட்டு உள்ளேன்//
  இங்கே "தகுதி"-ன்னு சுவாமி தேசிகன் சொன்னது = மற்ற யோகங்களின் மேல் மனசின் ஓரத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் பிடிப்பை விட்டுட்டு வரணும் என்பதே!
  Dont take it in a literal sense meaning eligibility! Read Desikar's statement very carefully.

  ப்ரபத்திக்கு தகுதியாவது = மற்ற யோகங்களில் "தகுதி அற்ற"
  நிலைமை!
  அதாச்சும் தகுதியே இல்லாமல் இருப்பது தான் "தகுதி"! :)

  /அப்புறம் நான் மட்டும் மரியாதை குறைவாக ரவி என்றோ இல்லை வேறு எவ்வாறோ எப்படி அழைக்க முடியும். :)//

  வேறு எவ்வாறா?
  சரி, அப்படின்னா "டேய்"-ன்னு அழைக்கலாம்! :)

  குமரன் இப்படி கண்டபடிக்கு என்னைய பத்த பொய் சொல்லி வச்சிருக்காரா? இதெல்லாம் எப்போ எங்கே சொன்னாரு? அதெல்லாம் எதையும் நம்பாதீங்க!

  ஒன்னே ஒன்னு தான் உண்மை!
  நான் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை! :)
  பதிவிலே பதிவருக்கு ஓயாத தொல்லை! :))
  *******************************

  சரி போதும்! ரொம்ப பேசிட்டோம்! ரெஸ்ட்டு எடுத்துக்கிட்டு இன்னொரு பதிவில் பேசுவோம்!
  அதுக்குள்ளாற நானும் கர்மாவைக் காதலிச்சி அடுத்த பதிவைப் போடணும்! அதைப் படிச்சிட்டு எல்லாரும் ஷாக் ஆகணும்! :))

  ரியோ லாட்டினோ மக்கள் மதிய விருந்து ஏற்பாடு பண்ணி இருக்காங்க! போயிட்டு வாரேன்! Grilled Chicken வாசனை மூக்கைத் துளைக்குது! ராகவ் பிறந்தநாள் ஸ்பெஷல் போல! :)))

  ReplyDelete
 135. //ராதா!
  அதான் சொல்லி உள்ளேனே!
  * கர்மம் (செயல்) வேறு!
  * கர்ம யோகம் வேறு-ன்னு!
  * உபசாரம் என்ற செயல் is not equal to கர்ம யோகம்!

  நீங்களாச் சிலதை அர்த்தம் பண்ணி வைத்துக் கொண்டு உள்ளீர்கள்! :)//


  ரவி,
  நான் உபச்சாரம் = கர்ம யோகம் என்று சொல்லாததை நீங்கள் தான் கற்பனை செய்து கொண்டு உள்ளீர்கள்.
  உபச்சாரம் = செயல் = கர்மம்
  'எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத' உபச்சாரம் = கர்ம யோகம்.

  கண்ணன் பலன் எதிர்பார்த்து செய்யும் செயல்களால் தன்னை அடைய முடியாது என்று தான் சொல்லி உள்ளான். நான் முதலில் இட்ட பின்னூட்டத்தை பற்றி மீண்டும் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.
  மற்ற யோகங்கள் பயன் தரா என்று சொல்வதை விட, அவை விரைவில் பயன் தராமல் போகக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று சொல்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  Inscrutable are the ways of the Lord. We can't say for sure that this is the only way or that is the only way to reach Him. Just to prove that we are wrong He will create some being and make that creature realise Him through a different path.

  கர்ம, ஞான, பக்தி, சரணாகதி முதலிய எந்த வகையிலும் அல்லாமல் ராமனுடன் அயோத்தியில் வாழ்ந்து வந்த புல் பூண்டு செடி கொடிகளும் கூட மோக்ஷம் பெற்றன என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 136. *********
  @ராதா
  //மோக்ஷம் பெற்றால் தான் என்ன? பெறாவிட்டால் தான் என்ன?//
  அருமை! இப்போது தான் நீங்க பிரபத்திக்கு பூர்ணமாய் ஜொலிக்க ஆரம்பிச்சிட்டீங்க! :)
  *********
  சரணாகதி செய்து பல ஆண்டுகள் கழித்து என் கிரிதாரி இன்று தான் தங்கள் மூலமாக என்னை அங்கீகரிக்கிறான் போல.
  ~
  ராதா

  ReplyDelete
 137. ***********
  //அவருடைய விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை தான் இன்றளவும் பல வீடுகளிலும் சேவித்து மகிழ்கிறார்கள்//
  இப்படிக் கொண்டாடுவதே பீஷ்மர் கர்ம யோகத்தை விட்டொழித்து, மனம் திருந்தி, பகவானிடம் தேர்த்தட்டில் சரண் அடைந்த பிறகு தான்!
  ***********
  இதை படித்து என் கிரிதாரி வாய் விட்டு சிரிக்கிறான்.நானும் கூட சேர்ந்து. :))
  ரவி, தாங்கள் பிதாமகர் பீஷ்மரை பற்றி ஒரு பதிவு இட வேண்டுகிறேன்.

  ReplyDelete
 138. வாழ்த்துகளுக்கு நன்றி குமரன், ரவி ஐயா (பழிக்குப் பழி :))

  சிக்கன் சிக்கனமா சாப்புடுங்க :))

  ReplyDelete
 139. *************
  //'ப்ரபத்திக்கு தகுதி' என்று ஒன்று இருப்பதாக நான் கேள்வி பட்டது இல்லை.எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரணாகதி செய்யலாம் என்றே கேள்வி பட்டு உள்ளேன்//
  இங்கே "தகுதி"-ன்னு சுவாமி தேசிகன் சொன்னது = மற்ற யோகங்களின் மேல் மனசின் ஓரத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் பிடிப்பை விட்டுட்டு வரணும் என்பதே!
  Dont take it in a literal sense meaning eligibility! Read Desikar's statement very carefully.
  *************
  இதை நீங்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக தான் அப்படி எழுதி இருந்தேன். இந்த statement-யை நீங்கள் எப்படி careful-ஆக எடுத்து கொண்டீர்களோ அப்படியே தான் நானும் எடுத்து கொண்டேன். என்ன வேறுபாடு என்றால் நான் "மற்ற வழிகள்" பற்றிய பூர்வாச்சார்யர்கள் மொழிகளையும் careful-ஆக எடுத்து கொண்டேன். மற்ற வழிகளை இன்றைய காலத்திற்கு எளிதான வழி முறைகளாக அவர்கள் கருதவில்லை என்பது என் எண்ணம்.அதில் சென்றால் அபாயம் அதிகம் என்று சொல்வதை விட அப்படி வழி ஏதும் கிடையாது என்று சொன்னால் நிச்சயமாக சரணாகதி வழியை தேர்வு செய்வர் என்று சொல்லி போந்தார்கள்.

  ReplyDelete
 140. ராகவ், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! :)

  ReplyDelete
 141. //கடைசியா பகவான் சக்கரத்தை தூக்கிய போது தான் புத்தியே வந்தது!//

  மன்னிக்க வேண்டும்; இது முற்றிலும்
  தவறான புரிதல்.பீஷ்ம பிதாமஹரின்
  யோக நிஷ்டை முற்றிலும் பக்தி மயமானது். சரதல்பத்தில் கோபீ பாவத்தை த்யாநிக்கும் உந்நத பக்தராகவே அறிஞர்கள் அவரைக் காட்டுவர்.கண்ணபிரானும் அவரை
  அதிகாலைப் பொழுதில் த்யாநித்ததாகச் சரித்ரம்.கூட பக்திக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.அந்திம ஸ்ம்ருதியுடன் உயிர் துறந்த உத்தமர்.

  ஆசார்ய பக்தியும், மஹா விச்வாஸமும் ஒரே வடிவுகொண்டு
  சபரியாக வந்தன.’சபரிக்கு நீ முக்தி
  கொடுத்தாயா ? அவளே அன்றோ
  அதை எடுத்துக்கொண்டாள்’ என்னும் பொருள் தொனிக்க ‘சபரீ மோக்ஷ ஸாக்ஷிபூத’ என்பார் ஸ்வாமி தேசிகன்.

  தேவ்

  ReplyDelete
 142. //Radha said...
  ராகவ், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! ://

  மிகவும் நன்றி ராதா..

  ReplyDelete
 143. Ippo thaan me talked to birthday boy Ragav! 12:03 his time!
  Yaaro oru ponnu kooda pesi kittu irunthaan! Phone-ai edukkave illa! :)

  Happy Birthday Ragav!:)

  Dhairya Sthairiya
  Veerya Vijaya
  Aayur Arokkiya
  Aiswaryaathi abivrithhi yartham
  "Ishta Kaamya"rtha Seekrameva siddayartham :)
  Bhaagavatha janaanam preethayartham

  Sri Perunthevi Thaayar sametha
  Perarulaala Perumaal divya charanaara vindayoho,
  thulasi dhala, kumkumaarchana, ashtothira satha naama poojam karishye! hari om!

  ReplyDelete
 144. Dev Sir, Radha Sir
  Parama yogeeswarar aana Beeshmacharyar pathi, appram oru naaL thani pathivaa idaren!

  Bheesma Sarangathi
  Vibeeshana Saranagathi
  Sugreeva Saranagathi
  Raama Saranagathi
  Hanumath Sarangathi
  - 5 different aspects!

  Ippo romba pesa mudiyala. Naalikku velai mudichittu kilambanum. Talk to u all later! Bfn!

  ReplyDelete
 145. தேவ் ஐயா,
  என் கிரிதாரி தங்களுக்கு தன்னுடைய நமஸ்காரத்தை தெரிவிக்க சொல்கிறான். அவனுடன் சேர்ந்து நானும் தங்களை நமஸ்கரிக்கிறேன். எனக்கு என் கிரிதாரியிடம் உண்மையான அன்பு இருக்க வேண்டும் என்று வாழ்த்த வேண்டுகிறேன்.
  ~
  ராதா
  -----------------------------------------
  Glory to the Supreme !
  Glory to the devotees of the Lord !
  -----------------------------------------

  ReplyDelete
 146. ராதா சார்,
  அவன் நம்மைப்பற்றி நினைப்பதால்தான் நாம் அவனைப்பற்றிப் பேச முடிகிறது.
  பார்த்தீர்களா, முதலிலேயே தன்முனைப்பு இல்லாமல் போய்விடுவதை. இதுதான் வைணவத்தின் அழகு.
  நம் ஆகிஞ்சந்யம் அவனது பொறுப்பை அதிகமாக்கி விடுகிறது.
  ‘தத் க்ருபா ஸ்மரணம் பக்தி’ என்பார் பரனூர்ப் பெரியவர்.
  நான் அதிகம் பேசுகிறேனோ?

  தேவ்

  ReplyDelete
 147. தேவ் ஐயா,
  எனக்கு தாங்கள் பிரயோகம் செய்யும் கடின ஸமஸ்க்ரித பதங்கள் பற்றி எல்லாம் அறிவு இல்லை. நான் பெரும்பாலும் கோயில் உபந்யாசகர்கள் மற்றும் பெரியோர் சொல்லியதை கேட்டு கிரிதாரியிடம் வந்தடைந்தேன். தங்கள் எழுத்தை புரிந்து கொள்ள என் கிரிதாரி துணை செய்கிறான்.
  தாங்கள் என் கிரிதாரியின் பெருங்கருணையை பற்றி குறிப்பிடுகிறீர் என்பது புரிகிறது.
  ஆம் ! அருளே செய்து நம்மை ஆளும் தெய்வம் அவன் ! என்றானும் ஒரு நாள் எனக்கும் அவனிடம் உண்மையான அன்பு உதயமானால் இந்த பிறவி எடுத்த பயனை அடைவேன். சாதுக்கள் சங்கம் இதனை சாதிக்கும் வல்லமை உடைத்து என்று கேள்வியுற்று சாதுக்களை தேடி அலையும் எனது பயணத்தில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. :)

  ReplyDelete
 148. Radha,

  Please join 'MinTamil' Google Group. You will be able to read a lot from Dev Sir and others there.

  ReplyDelete
 149. அழைப்பிற்கு நன்றி குமரன் ! ஆனால் நான் நிச்சயமாக சேர மாட்டேன். :)
  எனக்கு இங்கு உள்ளோர் பேசுவதே தலைக்கு மேலே செல்கிறது. அங்கே எல்லாம் வந்து தலையை பிய்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்கவா?
  நான் மிகவும் simple-ஆக கீதையை புரிந்து வைத்து உள்ளேன்.

  கர்ம யோகம் => செயல்களில் கவனமும் பலன்களை த்யாகம் செய்வதும்;இறைவனின் கருவியாக தன்னை பாவித்தல்.

  ஞான யோகம் => எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல்; ஏனெனில் அனைத்து உயிர்களிலும் இறைவனே உள்ளான்.

  பக்தி யோகம் => இறைவனை நம் உறவுகளில் ஒருவனாக பாவனை செய்வது; உறவு தோழனில் இருந்து எஜமானன் வரை நாம் அன்றாட வாழ்வில் காணும் எந்த உறவாகவும் இருக்கலாம்.

  சரணாகதி => மேலே சொல்லப்பட்ட எதையும் கடை பிடிக்க இயலாமை.

  என் சிற்றறிவிற்கு இவ்வளவு விளங்குவதே மேல் என்று என் கிரிதாரி சொல்கிறான். இதற்கு மேல் என் மண்டைக்குள் எதுவும் ஏறுமா என்பது சந்தேகமே. :)

  But I know one thing for sure.
  The Lord recognizes His incapable kids as well as His obedient children. :)

  மற்றொரு பதிவில் சந்திக்கும் வரை அனைவரிடமும் இருந்து விடை பெறுகிறேன்.
  ~
  ராதா

  ReplyDelete
 150. //Radha said...
  அழைப்பிற்கு நன்றி குமரன் ! ஆனால் நான் நிச்சயமாக சேர மாட்டேன். :)
  //

  ஹா ஹா ஹா!

  ராதா, ஒங்க கிரிதாரிக்கு- ஒரு ஃப்ளையிங் கிஸ் அனுப்பி இருந்தேன்! வந்துச்சா-ன்னு அவனை கொஞ்சம் சொல்லச் சொல்லுங்க! ராதா கூட மட்டும் பேசத் தான் அவனுக்கு டைம் இருக்காமா? என் கிட்ட வந்து என்ன-ன்னு கேட்கச் சொல்லுங்க! ஒன்னும் கொறைஞ்சிற மாட்டான்! :)

  //But I know one thing for sure.
  The Lord recognizes His incapable kids as well as His obedient children. :)//

  Of course!
  All of his kids are incapable - in one way or the other :)

  //நான் மிகவும் simple-ஆக கீதையை புரிந்து வைத்து உள்ளேன்//

  NO problems!
  புரியப் புரியப் புரியாமை புரியும்!
  தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்! :)

  //எனக்கு இங்கு உள்ளோர் பேசுவதே தலைக்கு மேலே செல்கிறது//

  ஆகா! இன்னும் லோக்கலைஸ் பண்ணனுமா நானு? :))

  //அங்கே எல்லாம் வந்து தலையை பிய்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்கவா?//

  வேடிக்கை பார்த்தலும் ஒரு வேள்வி தான் ராதா!
  நின்னருளே புரிந்து இருந்தேன். இனி என்ன திருக்குறிப்பே?
  They also serve, who only stand and wait! :)

  ReplyDelete
 151. Radha,

  You can still join 'MinTamil'. Ravi is there but he is mostly silent there. Only elders like Dev aiyaa speak there. Kids like Ravi and me sometimes blabber. :-)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP