Monday, June 29, 2009

தமிழில் பக்த ராமதாசு! - பலுகே பங்கார மாயனா!

மிகவும் தகர்ந்து போய், நம் கண் முன்னாடியே பொடிப்பொடியாகும் போழ்து, பேச்சே வராமல் நீரே வரும்! ஸ்தம்பித்து நிற்றல்-ன்னும் சிலர் சொல்லுவார்கள்!

அப்போது, "இன்னுமா கருணையில்லை? பேசினால் பொன்னும் சிந்திடுமா?" என்று என் கையைப் பிடித்து தடவிக் கொடுக்கும் ஆறுதலான பாட்டு ஒன்று உண்டு!

நேற்றைய கொடூரமான இரவில், தொலை தூரம் வண்டி ஓட்டிக் கொண்டே, நூறு முறையாவது இதைக் கேட்டிருப்பேன்!
இந்தப் பாட்டு ஓடிக் கொண்டிருக்க, ஓடிக் கொண்டிருக்க, நானும் பல மைல்கள் எங்கே என்றே தெரியாமல், எங்கோ ஓடிக் கொண்டே இருந்தேன்!

இந்தப் பாடல் பக்த ராமதாசு என்ற தெலுங்குப் படத்தின் வாயிலாகப் பிரபலமான பாடல்! பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
அதை சினேகா பாடும் போது, இராமதாசராக நடித்த நாகார்ஜூனா கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்!

இதில் ஒரு விசித்திரமான சோகம் என்னவென்றால்,
இந்தப் பாடலை மகிழ்ச்சியாய் இருக்கும் போதும் பாடலாம்! துக்கத்தில் துவளும் போதும் பாடலாம்!
இரண்டுக்குமே ஒத்து வரும் அற்புதம் எப்படி இந்தப் பாட்டில் அமைந்தது? = "மெல்லிய மனசு"!

இந்தப் பாடல் "மெல்லிய மனசு" என்ற ஜீவனைக் கட்டிச் சிறையில் எழுதப்பட்ட பாடல்!
அந்த மென்மை தான், ஒரு வெள்ளை இறகு போல, காற்றில்லாத போதும் பறக்கும்! காற்று அடிக்கும் போதும் பறக்கும்!

சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா? = அன்பாக வந்தவர்களை அரவணைத்துக் கொள்பவன் என்று "விருது" மட்டும் வாங்கி வச்சிருக்கியே?
* இதை மகிழ்ச்சியாய் இருக்கும் போது சொன்னால் = கலாய்த்தல்!
* இதையே கண்ணீரில் சொன்னால் = கையறு நிலை!

கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ! = கருணையோடு இந்த பத்ராசல ராமதாசனை ஒரு முறையாச்சும் பார்த்து விடு! உன் பார்வை ஒன்றே என்னைப் போஷித்து விடும்! பார்ப்பாயா? பார்ப்பாயா? பார்ப்பாயா?

கேளுங்கள்:
* பக்த ராமதாசு படத்திலிருந்து - சித்ரா - துன்பத்தில்!
* பாலமுரளி கிருஷ்ணா - மிக்க இன்பத்தில்!


இதை மெட்டு மாறாமல் தமிழாக்கி, என் வாய் பல முறை முணுமுணுக்கும்!
அப்படி முணுமுணுத்ததை இப்போது பந்தலில் உங்கள் முன் வைக்கிறேன்!
இதோ! அதே மெட்டில், ஆனால் தமிழில்.......

கேட்டுக் கொண்டே படியுங்கள்! சங்கராபரணம் படத்தில்-வாணி ஜெயராம் பாடுவது...

பலுகே பங்கார மாயனா? கோதண்ட பாணி
பேசினால் பொன்னும் சிந்திடுமா? கோதண்ட பாணி!

பலுகே பங்கார மாயே, பிலிசின பலுக வேமி
கலலோ நீ நாம ஸ்மரண, மறவே சக்கனி சாமீ
வினவினால் வாயைத் திறந்தொரு வார்த்தை சொன்னால் தப்பா?
கனவிலும் நாமம் தன்னை, மறவேன் உன் செல்லம் அப்பா!
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)


எந்த வேடின கானி, சுந்தைன தய ராதோ?
பந்தமு சேய நீ, நெந்-ததி வாடனு தந்த்ரி
எத்தனை வேண்டி னாலும், உள்ளம் இரங்கி டாயோ?
அத்தனை அழுத்த்த் தமா? அகலேன் உன் செல்லம் அப்பா!
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)

சரணா கத த்ராண பிருதாங்-கிடு தாவு-காதா?
கருணிஞ்சு பத்ராசல வர ராம தாச போஷ!
(பலுகே பங்கார மாயனா?)

சரணா கத விருதை, முரணாக வாங்கி னோயோ?
கருணை கொண்டே பத்ரா....சல..ராம தாசன் என்னொடு...
(பேசினால் பொன்னும் சிந்திடுமா?)


இதை அன்பர்கள் யாரேனும் தமிழில் பாடிக் கொடுக்க முடியுமா? மிகவும் மகிழ்வேன்!

வரிகள்: பத்ராசலம் ராமதாசர்
ராகம்: ஆனந்த பைரவி்
தாளம்: ஆதி


படத்தில், சினேகா பாட, இராமதாசராக நடித்த நாகார்ஜூனா கொடுமைப் படுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்! பின்னே, அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் கட்டினால் சும்மா விடுவார்களா?
ஆலயத்தின் பணத்தை எடுத்து, அரசாங்கத்துக்குப் பயன்படுத்தினால் அது நியாயம்! ஆனால் அரசாங்கப் பணத்தை எடுத்து (அதுவும் கடனாகத் தான்) ஆலயம் கட்டினால், அது நியாயம் இல்லை! :)

உலகம், "நியாயம்" என்பதற்கு விதித்திருக்கும் விதியே தனி! ஆனால் மென்மையான மனத்துக்கு இந்த உலக விதிகளா கண்ணுக்குத் தெரிகிறது???
மனத்தைப் பறி கொடுத்தால், எல்லாமும் பறி கொடுக்க வேண்டியது தான்! அப்படிப் பறி கொடுத்தவர்களில் ஒருவர் பத்ராசலம் இராமதாசர்!

கோதாவரிக் கரையில், சீதையின் கடத்தல் நடந்த இடம் என்று கருதப்படும் பஞ்சவடி தான் இந்த பத்ராச்சலக் காடுகள்!
* கடத்தலுக்கு முன்பு இன்பமாகக் கழித்த காலமும் இங்கு தான்!
* கடத்தலுக்குப் பின் துன்பமாகக் கழித்த காலமும் இங்கு தான்!

* நினைந்தவாறு இருக்கும் பிராட்டியும்,
* புன்சிரிப்பில் இராகவப் பெருமாளும்,
* அன்பே உருவான இளைய பெருமாளும்...என்று திருவுருவ அழகே அழகு!

அதற்கு ஆலயம் எடுப்பித்த போது, சொந்தப் பணம் போதவில்லை! நன்கொடையாய் வந்த பொதுப் பணமும் போதவில்லை! கோல்கொண்டா அரசாங்க தாசில்தாரான இராமதாசர், வரிப் பணத்தில் சற்று கடன் வாங்குகிறார்! கருவூலத்தில் வட்டியுடன் திருப்பிச் சேர்ப்பதாக முறி எழுதிக் கொடுத்துத் தான் பணம் எடுத்துக் கொள்கிறார்!

மன்னன் தானி ஷா, வெகுண்டு எழுகிறான்!
இத்தனை காலம் ஆலயங்களின் வருவாய்களைக் கருவூலத்துக்குத் திருப்பினோமே என்று நினைக்க கூட அந்த "நீதிபதிக்கு" நேரம் போதவில்லை!
பொதுப்பணத்தில் கை வைத்த குற்றத்துக்காக இராமதாசர் சிறைப் பிடிக்கப்படுகிறார்! அது வரை சரியே! ஆனால் சிறைக் கொடுமைகள் அதிகம் கொடுத்து, அவரை அக்கு வேறு ஆணி வேறாகத் துன்புறுத்துகிறார்கள்!

கடனாகப் பெற்றதைத் திரும்ப அடைக்காத வரை, அடைக்காதவரை ஆளனுப்பித் துன்புறுத்தும் கிரெடிட் கார்டு காலம் தான் போலும், அந்தக் காலமும்!
சிறைக் கொடுமைகளுக்கு நடுவே தான் இந்தத் துன்ப/இன்ப மயமான பாட்டு!
சிறையில் இருந்தது கூடத் துன்பமாகத் தெரியவில்லை!
அவன் பாராமுகம் = துன்பம்! அவனைப் பார்க்கும் முகம் = இன்பம்!

இளவல்கள் இரண்டு பேர், தானி ஷாவின் அரண்மனைக்கு வந்து, தங்கக் காசுகள் செலுத்தி, விடுதலைப் பத்திரம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள்!
அன்று அன்னையைச் சிறை மீட்டவன், இன்று என்னையும் சிறை மீட்டுவானோ?
அவர்கள் செலுத்திய பதினாறாம் நூற்றாண்டு தங்கக் காசுகள் இன்றும் உள்ளன! ஒரு பக்கம் பட்டாபிஷேகம், மறுபக்கம் அஞ்சனை மைந்தன் அனுமன் என்று அந்தக் காசுகளை இன்றளவும் காணலாம்!

இசைக்கடல் தியாகராஜருக்கும் முன்னோடியானவர் பத்ராசலம் இராமதாசர்! தியாகராஜரே அவர் பெயரைப் பல இடங்களில் பாடுகிறார்! தெலுங்கு மொழியில் திருமங்கை ஆழ்வாரின் பாடல்களை எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படியே இந்தப் பத்ராசலம் இராமதாசர்!


ராமதாசு - படத்திலிருந்து: (Must See)



பத்ராசலம் ஆலயத்தில் திருக்கல்யாணத்தின் போது: (Nice to See. Pl. watch the jewels hand picked by Ramadasar.)



தீபிகா - சிட்னியில்:



FUSION: (Must Hear)



உன்னி கிருஷ்ணன்:



ஸ்வாதித் திருநாள் ராம வர்மா:



* Srivats கேட்டுக் கொண்டபடிக்கு, From Rock to Ragas!


கருணிஞ்சு பத்ராசல = கருணையோடு உன் பத்ராசல ராமதாசனை ஒரு முறையாச்சும் பார்த்து விடு!
வர ராம தாச போஷ = உன் ஆதுரமான பார்வை ஒன்றே என்னைப் போஷித்து விடும்! பார்ப்பாயா? பார்ப்பாயா? பார்ப்பாயா?

பலுகே பங்கார மாயனா!
எந்நாளும் உன்னோடு "பிரிவின்றி",
பரிவுடன் ஆயிரம் பல்லாண்டு!

35 comments:

  1. Andha ramarin arul ungalukku endrum vundu , God bless!

    ReplyDelete
  2. and you should also try listening to the same song , from rock to ragaas album - I am sure u would love it

    ReplyDelete
  3. பலுகே பங்காரமாயனா,
    வாணியின் குரலில் சோகம் இழை ஓடும், பாலுவோ கொஞ்சுவது போல் பாடியிருப்பார்.

    பக்த ராமதாஸ் படம் பார்த்திருக்கிறேன். அருமையாக இருக்கும்(அன்னமய்யா மாதிரி இல்லன்னு பலர் சொல்லியிருக்காங்க, ஆனாலும்)

    ReplyDelete
  4. பத்ராசலம் கட்டாயம் பார்க்க வேண்டிய புண்ணியஸ்தலம். ராமாயணத்தில் மிக முக்கியமான சீதாவை கவர்தல் இங்கேதான் நடைபெற்று இருக்கிறது.

    பாடல்களுகு நன்றி

    ReplyDelete
  5. ராமதாஸ் தெய்வங்களுக்கு செய்த நகைகள் அங்கே அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்கள்.

    சீதம்மாவுக்கு செய்த சிந்தாகுபதகம்(புளிய இலை வடிவத்தில் நெக்லஸ்), தாலி பொட்டு இவை இப்போதும் ராமநவமியின் போது அன்னைக்கு சாற்றப்படுகிறது

    ReplyDelete
  6. //சீதம்மாவுக்கு செய்த சிந்தாகுபதகம்(புளிய இலை வடிவத்தில் நெக்லஸ்), தாலி பொட்டு இவை இப்போதும் ராமநவமியின் போது அன்னைக்கு சாற்றப்படுகிறது//

    ஆமாம்-க்கா!
    திருக்கல்யாணம்-ன்னு மார்க் பண்ணியுள்ள Youtube வீடியோவில் பாருங்க! அந்த நகைகளைப் பட்டர் க்ளோசப்பில் காட்டுவார்!

    ReplyDelete
  7. Hey brother thanks a load, for appreciating my suggestion and adding it to the post :) I am soo happy!

    ReplyDelete
  8. எவ்வளவு அருமையான பாடல். கல்லையும் கரைத்திடும் பாடல்...

    அதே போல "எந்தோ ருச்சிடா" பாடலும்...

    ReplyDelete
  9. ம்ம்... புரியுதுண்ணா.. புரியுது, கடந்த ரெண்டு பதிவிலயும் கேள்வி மேல கேள்வி கேட்டு.. பதிவு ஹைஜாக்லாம் பண்ணி, பாசுர விளையாட்டெல்லாம் நடத்தி.. ரொம்ப கொடுமைப்படுத்தினவங்களைப் பாத்து தானே.. இன்னுமா கருணை வரவில்லைன்னு கேக்குறீங்க :)).. ம்ஹும் வரவே வராது :)

    ReplyDelete
  10. எல்லா வீடியோவையும் பாத்தேன்.. அருமை..

    ReplyDelete
  11. //
    ம்ம்... புரியுதுண்ணா.. புரியுது, கடந்த ரெண்டு பதிவிலயும் கேள்வி மேல கேள்வி கேட்டு.. பதிவு ஹைஜாக்லாம் பண்ணி, பாசுர விளையாட்டெல்லாம் நடத்தி.. ரொம்ப கொடுமைப்படுத்தினவங்களைப் பாத்து தானே.. இன்னுமா கருணை வரவில்லைன்னு கேக்குறீங்க :)).. ம்ஹும் வரவே வராது :)
    //
    அடப் பாவிகளா !!
    "இப்போது தான் சரணாகதிக்கு பூரணமாய் ஜ்வலிப்பதாய்" சொல்லி என் கிரிதாரியை புண்படுத்தி, "பீஷ்மருக்கு மனம் திருந்தி புத்தி வந்தது" என்றெல்லாம் பேசி என் கிரிதாரியை மேலும் புண்படுத்தி இன்று அவன் கருணை செய்யவில்லை என்று நாடகம் ஆடுகிறீர்களா? :-)
    ஆண்டாள் ரவியோட தோழி என்று அவள் முகத்திற்காக எமக்கு சமஸ்க்ரிதம் எல்லாம் ஒன்றும் தெரியாது என்று சாதித்து என் கிரிதாரி என்னை பந்தலில் இருந்து வெளியே அழைத்து சென்றான். மன வருத்தம் தீர பாசுரங்கள் சிலவற்றை உரைப்போம் என்றே மறுபடி பந்தல் வந்து ரவியுடன் தோழமை பூண்டோம் !! நமக்கு இது தேவை தான் ! :-((

    ReplyDelete
  12. //Radha said...
    அடப் பாவிகளா !!
    "இப்போது தான் சரணாகதிக்கு பூரணமாய் ஜ்வலிப்பதாய்" சொல்லி என் கிரிதாரியை புண்படுத்தி, "பீஷ்மருக்கு மனம் திருந்தி புத்தி வந்தது" என்றெல்லாம் பேசி என் கிரிதாரியை மேலும் புண்படுத்தி இன்று அவன் கருணை செய்யவில்லை என்று நாடகம் ஆடுகிறீர்களா? :-)//

    :)
    அட, நீங்க வேற! ராகவ்=வம்பு ரெண்டுக்குமே மூன்றெழுத்து தான்!
    இதையெல்லாம் கண்டுக்காதீங்க ராதா!

    //ஆண்டாள் ரவியோட தோழி என்று அவள் முகத்திற்காக எமக்கு சமஸ்க்ரிதம் எல்லாம் ஒன்றும் தெரியாது என்று சாதித்து என் கிரிதாரி என்னை பந்தலில் இருந்து வெளியே அழைத்து சென்றான்//

    பந்தலுக்கே சமஸ்கிருதம் தெரியாது! கோதைத் தமிழ் தான் தெரியும்!
    அரங்கனும் அவ்வாறே குடதிசை முடியை வைத்து, வடதிசை பின்பு காட்டி, வடமொழிக்கு முதுகு காட்டினான்! தமிழ்மொழிக்கு முகம் காட்டினான்! :)

    //மறுபடி பந்தல் வந்து ரவியுடன் தோழமை பூண்டோம் !! நமக்கு இது தேவை தான் ! :-((//

    :)
    என்றும் வேண்டும் இன்ப அன்பு!

    ReplyDelete
  13. //Raghav said...
    ம்ம்... புரியுதுண்ணா.. புரியுது, கடந்த ரெண்டு பதிவிலயும் கேள்வி மேல கேள்வி கேட்டு.. பதிவு ஹைஜாக்லாம் பண்ணி, பாசுர விளையாட்டெல்லாம் நடத்தி..//

    இதெல்லாம் கொடுமையா? கொடுப்பினையா? :)

    //ரொம்ப கொடுமைப் படுத்தினவங்களைப் பாத்து தானே.. இன்னுமா கருணை வரவில்லைன்னு கேக்குறீங்க :)).. ம்ஹும் வரவே வராது :)//

    பிறரிடம் கருணையை எதிர்பார்ப்பதை விட நாம் கருணையோடு இருப்பது ரொம்ப ஈசி-ன்னு தோழி சொல்லிக் கொடுத்திருக்கா! :)

    ReplyDelete
  14. //Srivats said...
    Hey brother thanks a load, for appreciating my suggestion and adding it to the post :)//

    Anytime Srivats!

    //I am soo happy!//

    I am glad you are happy! and so be it - always! :)

    ReplyDelete
  15. //Srivats said...
    Andha ramarin arul ungalukku endrum vundu , God bless!//

    பெரியவங்க ஆசீர்வாதம் பண்றீங்க! தட்டாம வாங்கிக்குறேன்! :)

    ReplyDelete
  16. //புதுகைத் தென்றல் said...
    பலுகே பங்காரமாயனா,
    வாணியின் குரலில் சோகம் இழை ஓடும், பாலுவோ கொஞ்சுவது போல் பாடியிருப்பார்.//

    ஆமாம்-க்கா!
    அப்பவே சோகம் + மகிழ்ச்சி -ன்னு ரெண்டுமே காட்டியிருக்காங்க!
    ராகம் = "ஆனந்த" பைரவி! :)

    //பக்த ராமதாஸ் படம் பார்த்திருக்கிறேன். அருமையாக இருக்கும்//

    ஆமா! எளிமையாச் சொல்லி இருப்பாய்ங்க!
    ரொம்ப புனிதப்படுத்தி இருக்க மாட்டாங்க!

    //(அன்னமய்யா மாதிரி இல்லன்னு பலர் சொல்லியிருக்காங்க, ஆனாலும்)//

    விமர்சனம் வரத் தான் செய்யும்!
    நாகார்ஜூனா இதிலும் நல்லாத் தான் செஞ்சிருந்தார்! ஆனால் அன்னமய்யாவில் அவரை அப்படி பண்ணுவாரு-ன்னு யாருமே எதிர்பார்க்கலை! அதனால் ஆஹா ஓஹோ-ன்னு பேசினாங்க!

    இதில் எதிர்பார்ப்பு வந்துருச்சி! விமர்சனமும் கூடவே வந்துருச்சி! :)

    ReplyDelete
  17. //புதுகைத் தென்றல் said...
    பத்ராசலம் கட்டாயம் பார்க்க வேண்டிய புண்ணியஸ்தலம்//

    புண்ணியம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்!
    கோதாவரி பாயும் அழகும், இராகவப் பெருமாள், இளைய பெருமாள் சிரிப்புமே போதும்!

    //ராமாயணத்தில் மிக முக்கியமான சீதாவை கவர்தல் இங்கேதான் நடைபெற்று இருக்கிறது.//

    அப்படியும் சொல்றாங்க!
    ஆனால் பஞ்சவடி என்பது மகாராஷ்ட்ரா-நாசிக் என்று சொல்வாரும் உண்டு! இரண்டுமே கோதாவரிக் கரைகள் தான்!

    ReplyDelete
  18. //வெட்டிப்பயல் said...
    எவ்வளவு அருமையான பாடல். கல்லையும் கரைத்திடும் பாடல்...//

    :)
    வாங்க பாலாஜி! உங்களுக்குப் புடிச்ச பாட்டு-ன்னு தெரியும்!
    எளிமையா இருக்குல்லவா? அதான் கரைக்குது போல!

    //அதே போல "எந்தோ ருச்சிடா" பாடலும்...//

    ஓ ராமா நீ நாமா எந்த ருசிரா
    ஸ்ரீ ராமா நீ நாமா ஏமி ருசிரா
    என்ற இராமதாசர் கீர்த்தனையும் அதே எளிமை தான்!

    அவரைப் பின்பற்றியே, தியாகராஜரும், பல சங்கீத நுணக்கங்கள் அறிந்தவராய் இருந்தாலும், எளிமையாகப் பேச்சுத் தெலுங்கிலேயே பாடல்கள் செய்தார்! தியாகராஜர் செய்த வரிகளில் ஒன்னுமே இல்லை! அவரை விட நானே நல்லா தெலுங்க வரி எழுதுவேன் என்று சிலர் சொல்லலாம்! :) ஆனால் அந்த எளிமையும், ராக நுணுக்கமும் வருமா என்பது கேள்விக்குறியே!

    எளிமையே சங்கீத மும்மூர்த்திகளுள் முதல் மூர்த்தி என்று ஹிட்டும் ஆகியது!
    ஆனால் இந்த ஹிட்டு பற்றி எல்லாம் அவர் அக்கறை காட்டாமல், எளிமை மட்டுமே பிரவாகமாக வந்து கொண்டே இருந்தது!

    ReplyDelete
  19. //அட, நீங்க வேற! ராகவ்=வம்பு ரெண்டுக்குமே மூன்றெழுத்து தான்!
    இதையெல்லாம் கண்டுக்காதீங்க ராதா!//

    ராகவனுக்கு அம்பு (அன்பு எனும் அம்பு) விடத்தான் தெரியும்.. வம்பு விடத் தெரியாது :)

    ReplyDelete
  20. //
    ராகவனுக்கு அம்பு (அன்பு எனும் அம்பு) விடத்தான் தெரியும்.. வம்பு விடத் தெரியாது :)
    //
    :-))
    ராகவனுக்கு அம்பு விடவும் தெரியும்னு ஒங்க அண்ணன் இப்போ ஒரு பாசுரம் சொல்ல போறார், உஷார் ! :-)
    இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நான் ஒரு பதிவை தான் ஹைஜாக் செய்தேன் ராகவ் ! :-)

    ReplyDelete
  21. ********
    //மறுபடி பந்தல் வந்து ரவியுடன் தோழமை பூண்டோம் !! நமக்கு இது தேவை தான் ! :-((//

    :)
    என்றும் வேண்டும் இன்ப அன்பு!
    ********
    திருவாரன்விளையில் கிடைக்கிறது ! :-)

    ReplyDelete
  22. //Raghav said...
    ராகவனுக்கு அம்பு (அன்பு எனும் அம்பு) விடத்தான் தெரியும்.. வம்பு விடத் தெரியாது :)//

    ஆமாம்! நீங்க ராகவ்!
    என் தோழன் ராகவன் தானே ராகவன்! நீங்க அவனை நல்லபடியாச் சொன்னதற்கு மிகவும் நன்றி ராகவ்! :)

    ReplyDelete
  23. //Radha said...
    ராகவனுக்கு அம்பு விடவும் தெரியும்னு ஒங்க அண்ணன் இப்போ ஒரு பாசுரம் சொல்ல போறார், உஷார் ! :-)//

    :)
    குலசேகரன் பாசுரம் வேணும்-ன்னு நீங்க டைரக்டாவே கேட்கலாம் ராதா! :)

    ஏவரி "வெஞ் சிலை வலவா" இராகவனே தாலேலோ!
    இளையவர்கட்(கு) அருளுடையாய் இராகவனே தாலேலோ!
    எங்கள்குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ!
    என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!!!

    //இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நான் ஒரு பதிவை தான் ஹைஜாக் செய்தேன் ராகவ் ! :-)//

    இந்த ஹைஜாக்குகள் உண்மையிலேயே ஹை-ஜாக்குகள்! உயர் விண்ணகருக்கு ஹை-ஜாக்குகள்! அதனால் வரவேற்கத் தக்கவையே! :)

    ReplyDelete
  24. //Radha said...
    என்றும் வேண்டும் இன்ப அன்பு!
    ********
    திருவாரன்விளையில் கிடைக்கிறது ! :-)//

    ஹிஹி! நீங்க பெரிய ஆளு தான்! ஒத்தை வரி சொல்லிச் சொல்லி, ஓராயிரத்துள் இப்பத்தை வாங்குறீங்க ராதா!

    அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில் சூழ் திரு வாறன்விளை
    அன்புற்று அமர்ந்து வலம் செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ

    முதல் ரெண்டு வரி மறந்து போச்சு! ஆனா இன்பம்-ன்னு தொடங்கும்-ன்னு நினைக்கிறேன்!
    இன்ப அன்பு வந்தாச்சா கிரிதாரி? :)

    ReplyDelete
  25. மீரு தெலுகு பாட்டலு தமிளு அர்தமு சால பாக உந்தி !
    :)

    ReplyDelete
  26. //கோவி.கண்ணன் said...
    மீரு தெலுகு பாட்டலு தமிளு அர்தமு சால பாக உந்தி !//

    கோவி அண்ணகாரு, காலம்-லு பதிவுலோ, தெலுகு கீர்த்தனமுலு நூவு இச்சாரு காதா? அக்கட வின்னானே இக்கட பந்தல்ல இச்சேனு!

    விண்ணப்பாலு வினவலே விந்த விந்தலு
    பன்னகபு தொம்ம தெர பையட்ட வேலய்யா!

    நீங்க தான் தமிழாக்கம் நல்லா இருக்கு-ன்னு முதல்ல சொன்னது! சால சந்தோஷம்! :)

    ReplyDelete
  27. //ஹிஹி! நீங்க பெரிய ஆளு தான்! ஒத்தை வரி சொல்லிச் சொல்லி, ஓராயிரத்துள் இப்பத்தை வாங்குறீங்க ராதா!//
    ஹி ஹி ஹி ! :)
    அத்தனை ஆழ்வார்களும் நம் தோழர்களே ! விட்டுசித்தன் பயந்த விளக்கு எமது தாயும் மகளும் தோழியும் ஆவாள். :-) இதத்தாய் ராமானுஜன் நம் சென்னி திடர் மேல் தம் பாத இலச்சினையை பதித்தார் ! கிரிதாரி என் சகலமும் ஆவான். :) ஆகையால் எது தெரிந்தாலும் தெரியாவிடுனும் யாம் பெரியோமே என்ற நினைப்புல, ஒரு மிதப்புல திரிஞ்சிட்டு இருக்கேன் !! :-)


    //அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில் சூழ் திரு வாறன்விளை
    அன்புற்று அமர்ந்து வலம் செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ

    முதல் ரெண்டு வரி மறந்து போச்சு! ஆனா இன்பம்-ன்னு தொடங்கும்-ன்னு நினைக்கிறேன்!//

    "இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை
    இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்"

    //இன்ப அன்பு வந்தாச்சா கிரிதாரி? :)//

    இன்பமும் வந்தது. :)

    ReplyDelete
  28. //
    ஏவரி "வெஞ் சிலை வலவா" இராகவனே தாலேலோ!
    இளையவர்கட்(கு) அருளுடையாய் இராகவனே தாலேலோ!
    எங்கள்குலத்து இன்னமுதே இராகவனே தாலேலோ!
    என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!!!
    //
    மிக்க நன்றி ! :)

    ReplyDelete
  29. //Radha said...
    கிரிதாரி என் சகலமும் ஆவான். :) ஆகையால் எது தெரிந்தாலும் தெரியாவிடுனும் யாம் பெரியோமே என்ற நினைப்புல, ஒரு மிதப்புல திரிஞ்சிட்டு இருக்கேன் !! :-)//

    ஹா ஹா ஹா
    பெரியோமே-ன்னு திரிஞ்சிக்கிட்டு இருக்கறவரை வணங்கிக்குறேன்!

    //"இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை
    இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்"//

    வாவ்!
    பாசுரப் புலி ராதா வாழ்க வாழ்க!
    பிரபந்த பிரபன்னர் ராதா வாழ்க வாழ்க!

    ReplyDelete
  30. ஹ ஹா ஹா !
    ரவி, நான் கூகிலாரை கேட்டு சொல்றதை எல்லாம் உங்களால இன்னுமா கண்டு பிடிக்க முடியல !
    உங்கள் வெள்ளை உள்ளம் வாழ்க ! :-)

    சரி, உருப்படிய இந்த பதிவுக்கு சம்பந்தமா ஒரு வரி சொல்லிட்டு போறேன்.
    பத்ராசலம் ராமதாசர் வாழ்க ! :-)

    ReplyDelete
  31. நல்ல பாட்டு.

    இதோ எனக்குத் தெரிஞ்ச தமிழாக்கம். தப்பு இருந்தா திருத்தீருங்க. இதுல எளிமை இருக்கா இல்லையான்னு தெரியலை. தியாகராஜரை விட நல்லாத்தான் எழுதீருக்கேன்னு நினைக்கிறேன்... அதாவது தமிழ்ல்ல... :-) இசையும் நுணுக்கமும் நானறியேன். அதுனால அங்கங்க ஏதாச்சும் தட்டலாம்.

    பேசப் பொன்மாரி சிந்திடுமோ வில்லேந்திடும் நீ
    பேசப் பொன்மாரி சிந்திடுமோ

    கேட்டால் பொன்மாரி பெய்ய வாய்கூவிச் சொன்னால் என்ன?
    கனவில் உன் பேரைச் சொல்லி மறவேனே சர்க்கரைக்கட்டி (பேசப் ...

    என்ன வேண்டிக் கொண்டாலும் உள்ளம் உருகிடாதோ
    உறவை நீ தந்தால் என்றும் அகலேனே.... அப்பனே நானே (பேசப் ....

    ReplyDelete
  32. //G.Ragavan said...
    இதோ எனக்குத் தெரிஞ்ச தமிழாக்கம். தப்பு இருந்தா திருத்தீருங்க.//

    :)
    தப்பு எல்லாம் எதுவுமில்லீங்க ஜிரா! அன்பாச் சொல்லும் சொல்லுல என்ன தப்பு இருக்கப் போவுது? உங்க பாடல் அழகாத் தான் வந்திருக்கு! இலக்கியமா, உங்களைப் போலவே!

    //தியாகராஜரை விட நல்லாத்தான் எழுதீருக்கேன்னு நினைக்கிறேன்... அதாவது தமிழ்ல்ல... :-)//

    :))

    //இசையும் நுணுக்கமும் நானறியேன். அதுனால அங்கங்க ஏதாச்சும் தட்டலாம்//

    உங்களைப் போலவே தானே நானும்? ராகம் எல்லாம் தெரியாது. முடிஞ்ச வரைக்கு அதே மெட்டில்! அவ்ளோ தான்!

    //கனவில் உன் பேரைச் சொல்லி மறவேனே சர்க்கரைக்கட்டி//

    :))
    ரொம்ப பிடிச்சிருக்கு! :)

    சரணாகத என்ற மூன்றாம் பத்திக்கு மொழியாக்கலையா? முடிஞ்சா அதையும் ஆக்கித் தாங்க! பாடி (கத்தி) அனுப்பறேன்!

    ReplyDelete
  33. கடைசியாக பதிவினை படித்து விட்டேன். :)
    நன்றாக உள்ளது ! பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி !

    //தியாகராஜரே அவர் பெயரைப் பல இடங்களில் பாடுகிறார்!//
    தியாகராஜர் ஒரு நாளைக்கு 1,25,000 தபா ராம நாமம் சொல்றவரு. அவரே ராமதாசரை பத்தி சொல்லி இருக்காருன்னா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.ஒரு மகாத்மாவை இன்னொரு மகாத்மாவே நன்கு அறிவார் போல. வள்ளலார் திருவாசக ஏடு ஒன்றினை எப்பவும் வெச்சிட்டு இருப்பார். மாணிக்கவாசகர் "கண்ணப்பர் ஒப்பிலோர் அன்பு இலாமயினாலே என்னப்பன் என்னையும் ஆண்டு..." அப்படின்னு கண்ணப்ப நாயனாரை புகழ்ந்து பாடறாரு.

    //
    தெலுங்கு மொழியில் திருமங்கை ஆழ்வாரின் பாடல்களை எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படியே இந்தப் பத்ராசலம் இராமதாசர்!
    //
    ராமதாசரும் ஊர் ஊராக(கோயில் கோயிலாக) சென்று பாடி உள்ளாரா ?

    ReplyDelete
  34. //Radha said...
    கடைசியாக பதிவினை படித்து விட்டேன். :)//

    நல்லா இருக்கு கிரிதாரி! இம்புட்டு நேரம் பதிவைப் படிக்காமத் தான் வெள்ளாண்டிக்கிட்டு இருந்தீயளா? :)

    //தியாகராஜர் ஒரு நாளைக்கு 1,25,000 தபா ராம நாமம் சொல்றவரு. அவரே ராமதாசரை பத்தி சொல்லி இருக்காருன்னா...//

    ஆமாம் ராதா!
    கலியுக முன வர பத்ராசலமுன வெலசின ஸ்ரீ ராமதாசு வினுதிந்து மாடி!
    -ன்னு பாடுவார்!

    //ஒரு மகாத்மாவை இன்னொரு மகாத்மாவே நன்கு அறிவார் போல//

    எக்ஜாக்ட்லி!
    எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!

    //"கண்ணப்பர் ஒப்பிலோர் அன்பு இலாமயினாலே என்னப்பன் என்னையும் ஆண்டு..."//

    அருமை!

    //ராமதாசரும் ஊர் ஊராக(கோயில் கோயிலாக) சென்று பாடி உள்ளாரா ?//

    இல்லை! பத்ராசலம் பற்றித் தான் அதிகப் பாடல்கள்!
    ஆனால் திருமலை மற்றும் இதர தலங்களையும் ஆங்காங்கே சொல்லுவார்!
    திருமங்கை ஆழ்வாரின் நாயகி பாவமும் பொய்க் கோபமும் ராமதாசரிடம் இழையோடும்! சொற்களும் சிரமம் இல்லாமல் வந்து விழும்!

    ReplyDelete
  35. :)
    nice one bro..really enjoyed the song

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP