Sunday, June 14, 2009

12-B யா? 32-B யா?

மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட சிங்காரச் சென்னையில ஒரு பஸ் ரூட் இருக்கு! 32-ஆம் நம்பர் பஸ்! வள்ளலார் நகர்(Mint) to விவேகானந்தர் இல்லம்! மாநகரப் பேருந்தில் ஏறி உட்கார்ந்தா, ஊரெல்லாம் சுத்தி, ஜிலுஜிலு-ன்னு நம்மள மெரீனா பீச்சுக்கு கொண்டு போய் சேத்துரும்!
அது போல இருக்கு இந்த 32-கேள்வி ஆட்டம்! ஜிலுஜிலு-ன்னு எங்கு கொண்டு போய் சேர்க்கப் போகுதோ? :)

என்னைய பத்தி என்னென்னமோ பொய் சொல்லி, இந்த ஆட்டைக்கு அழைத்த மவராசன் மகரந்தனுக்கு இனிய நன்றி! :)


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

நமக்குப் பேர் ராசி கொஞ்சம் ஓவராவே இருக்கு! ஆயிரம் பேருள்ள "அவரைப்" போலவே! :)
* KRS = நண்பர்கள் வட்டம் இதத் தான் ரொம்ப உச்சரிக்கும்!
கல்லூரியில் பேராசிரியர் KR Seshadri! அவருக்குப் போட்டியா பசங்க எனக்கு வச்ச பேரு....அப்படியே இன்னி வரை ஒட்டிக்கிச்சி! :)
* கண்ணபிரான் = தந்தையின் பெயரும், என் கண்ணனின் பெயரும், என்னுடனேயே ஒட்டிக் கொண்டது!
* இரவிசங்கர் = பள்ளிச் சான்றிதழ்-ல இதான் இருக்கு! அப்போ சான்றிதழ்-ல மார்க்கு இல்லையா-ன்னு எல்லாம் கேக்கப்பிடாது! :)

* இரவி = இது கொஞ்சம் போல நெருங்கியவங்க கூப்டுவாங்க!
* சங்கர் = இது சங்கர் அண்ணா-ன்னு சொந்தக்கார பசங்க வாய் நிறையக் கூப்புடறது!
* கண்ணா = இது பல அக்காக்களும், ஆபிசில் சில பெண்களும் கூப்பிடறது! :)

* சங்கரா = இது மிக மிக நெருங்கியவங்க மட்டுமே, டேய் போட்டுக் கூப்பிடுவது!
இதைக் கொஞ்சமா மாத்தியும் கூப்பிட்டு அப்பப்போ இம்சை பண்ணுவாங்க! ஆனா அதைச் சபையில சொல்ல முடியாது! :)

என்னை யார் யார் எப்படிக் கூப்புடுறாங்களோ, அவிங்களுக்கெல்லாம் அப்படி அப்படித் தெரிவேன்! :))
எல்லாப் பேரும் பிடிக்கும்! ஆனாக் கடைசியா சங்கரா-ன்னு டேய் போட்டுக் கூப்பிடறது ரொம்பவும் பிடிக்கும்! :)


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

இந்தப் பதிவு போடும் முன்னர் அழுதேன்! ஒரு வாரமா ஒரு நட்புரிமைச் சண்டை! :)

அழுகை என்பது யாருக்குமே கண்களில் இல்லீங்க! எல்லாருக்குமே இதயத்தில் தான்! ஆனால் பாவம்....இதயம் செய்த குற்றத்துக்கு, கண்ணு தண்டனை அனுபவிக்குது! :(
இதய அணைக்கட்டு உடையும் போது,
ரோஜாக் கண்ணில் பனித் துளிகள்!
உம்...
பூவே, நீ பூத்து தான் ஆக வேண்டும்? பூத்து விடு!


என் கண்கள் கொஞ்சம் வீக்! சரியான ஸ்விட்சைத் தட்டினால் குளமாகி விடும்! :)
ஒரு முறை நண்பன்/தம்பி ஏதோ சொல்லிட்டான்! என்னைய கேவலமாச் சொல்லி இருந்தாக் கூட பரவாயில்லை! ஆனால் அந்த அன்பையே அவதூறாச் சொல்ல, சத்தமே இல்லாமல் கண்ணில் கொட்டிக் கொண்டே இருந்த நயகாராவைப் பாத்து அவன் பயந்தே போயிட்டான்!

குழந்தைகள் கதியின்றி வாடுவதைப் பார்த்தாலே கண்கள் தளும்பும்! ஈழத்திலும்!
ஆனால் நான் கதியின்றி வாடிய போது தான், ஒரு தற்கொலை இரவில், தலையணையை அதிகம் நனைத்தேன்! :((((((((


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையெழுத்தில் வளைவுகள் அதிகம்! Its all about Curves-ன்னு பசங்க ஓட்டுவாங்க!
* என் கையெழுத்து = நோட் புக்கில் பிடிக்கும்!
* உங்க கையெழுத்து = செக் புக்கில் பிடிக்கும்! :))

4. பிடித்த மதிய உணவு என்ன?

* மோர்க்குழம்பு + வெண்டைக்காய்ப் பொரியல்!
* சுண்டைக்காய்க் குழம்பு + அவரைக்காய் பொரிச்ச கூட்டு!
ரெண்டுமே அரைச்சி விட்ட ஐட்டம்! மணக்க மணக்க! :)

ஹிஹி! இதெல்லாம் இங்கிட்டு கெடைச்சா நான் ஏன் பதிவு எழுதிக்கிட்டு இருக்கப் போறேன்?
நம்ம பேரில் இருக்கும் ரவிஒளி (Ravioli) என்னும் இத்தாலிய உணவு ரொம்ப பிடிக்கும்! :)


5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இன்முகம் வேறு! நட்பு வேறு! இன்முகம் எப்பவும் கிடைக்கும்! :)

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அட, கடலில் குளிக்க முடியாதுங்க! முங்கத் தான் முடியும்!
முங்கறதும், குளிக்கறதும் ஒன்னா? அருவியில் குளிப்பது தான் எத்தனை சுகம்!
கோவைக் குற்றாலம், நெல்லை பாண தீர்த்தம் ரொம்ப பிடிக்கும்! ஆனாச் சட்டைய கழட்ட மாட்டேன்! முருகனே வந்து சொன்னாலும், மேல் துண்டு உண்டு! :)


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்! கண்கள்!

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது: என்னை எதுக்கு உங்களுக்குப் பிடிச்சிருக்கு-ன்னு, நீங்க சொல்லி, அதை நான் கேக்குறது! :) ஹிஹி! என் மனசுக்குப் பிடிச்சமான சின்ன சின்ன ஆசையை, நண்பர்கள் திடீர்-ன்னு பண்ணும் போது மிகவும் பிடிக்கும்!

ஆனால் என் கிட்ட பிடிச்சமான குணம்: எந்த ஊரில் இருந்தாலும், அதை ரசிப்பது!
பிடிக்காதது: நிறைய, நிறைய, நிறைய!
* இப்போதுன்னா = அண்மைக் காலமாக, சரியாவே சாப்பிடறது இல்ல! ஆனா தொலைபேசும் போது அம்மா கிட்ட பொய் சொல்றேன்!
* அப்போதுன்னா = கல்லூரியில், கருத்து உறுதியில், ஒரு நட்பு தொலைந்தது! Can I go back to 1999 & again say "hi"?


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என் சரி பாதி = நானே! என் கிட்ட எனக்குப் பிடிக்காதது? அட! ஏற்கனவே சொல்லிட்டேனே!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

நாம உயிரா நினைக்கறவங்க பக்கத்தில் இருந்தா, நோயில் இருந்தாக் கூட உயிருக்கு ஒரு மிடுக்கு வந்துடும்!
நான் உயிரா நினைக்கறவங்க பக்கத்தில், நான் இல்லாம இருக்கிறேனே-ன்னு அப்பப்போ வருத்தப்படுவேன்! யார் அந்த உயிரா நினைக்கிறவங்க?
1. என் அறுபது வயதுக் குழந்தைகள்! 2. மூன்று நண்பர்கள்!

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இளம் நீல டீ-சட்டை! I drink Heineken Beer-ன்னு வரிகள் உடம்பெங்கும் ஓடும் ஒரு கருப்பு பைஜாமா! (நல்ல வேளை ஞாபகப் படுத்தினீங்க! நாளைக்குத் துணி துவைக்கணும் :)

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்த்து: காபி அண்ணாச்சியின் வீடியோஸ்பதி!

கேட்டு: பாட்டு இல்லாம நான் இல்லை! இந்த வரியைத் தட்டச்சும் போது....
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல் இருக்க
ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு
பட்டினியா கிடப்பாளே அது போலே! - நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!
நல்ல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சோபிக்காததற்கு காரணம் சோம்பலா? உம்...முயற்சியில் எல்லாரும் ஒரு ரஹ்மான் ஆயிற முடியுமா என்ன?


13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருநீலம்! சைடாப் பார்த்தால், வயலெட், கரும் பச்சை-ன்னு பல வண்ணம் காட்டும் இந்தக் கலரு! மயில் தோகையின் உள்ளுக்குள் ஆழமா இருக்கும் கலரு!
இந்தச் சின்ன வயசு சொக்கா என் கிட்ட இன்னமும் இருக்கு! ரொம்ப ஆசையா இருந்தா இப்ப கூட அதைப் போட்டுப்பது போல் போட்டுக்குவேன்....யாரும் இல்லாத போது :)

14. பிடித்த மணம்?

இந்தப் பதிவு தமிழ்"மணத்தில்" வருமா என்ன? :) நோ!
பிடித்த மணம் = தாழம்பூ வாசனை! எங்கூரு புதரில் நெறையப் பூக்கும்! மின்னல் பட்டு தான் தாழம்பூ பூக்கும்-ன்னு கிராமத்தில் கதை விடுவாங்க! :)
குறிப்பு: தாழம்பூ Perfume - தேடியும் எனக்கு இதுவரை கிடைக்கலை!


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

V.திவாகர் - திருமலைத் திருடன், வம்சதாரா போன்ற வரலாற்றுப் புதினங்கள் படைத்த, சிறப்பான நாவலாசிரியர்! இவர் அண்மையில் படைத்த "S M S எம்டன் 22-09-1914" என்ற நாவல் சென்னை வரலாற்றைக் கிளறிப் பார்க்கிறது!

கபீரன்பன் - அழகான ஆன்மீகப் பதிவுகளை, அடர்த்தி குறைத்து, இக்காலத்துக்கு ஏற்றாற் போல், மக்கள் சிந்தனைக்கு ஊட்டுபவர்கள் நல்-அடியவர்கள்! எனக்கு மிகவும் பிடித்த பக்த கபீர்தாசரின் வலைப்பூவில்...கபீரன்பன்!

கோவி கண்ணன் - தத்துவப் புரிதலில், இவர் கேள்விகள் எல்லாம், நாத்திகத்தை விட, ஆத்திகம் வளர்க்கவே பெரிதும் உதவுகின்றன! :)
அந்த வகையில் குமரனுக்கு அடுத்து சிறந்த ஆன்மீகப் பதிவர் எங்க ஜிரா கூட இல்லை! ஒன் & ஒன்லி கோவி. கண்ணனே! :)

ஷைலஜா - ஷைலஜாக்கா-வின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்! எழுத்து, குரல், சமையல் என்று பெண்ணின் பல வண்ணங்களிலும் வலம் வருபவர்! சமையல் என்பதைக் கொஞ்சம் அழுத்திச் சொல்கிறேன்! :)

மதுமிதா - மதுமிதா-க்கா பற்றி நான் என்ன சொல்ல! கமலே இவங்க நாவலைத் தான் படிக்கிறார்! நடைபாதையில் நடக்கும் போதே இவிங்க கண்ணு சமூக ஆர்வத்தில் அலை பாயும்! அந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிக்கும்! திரைப்பட-இலக்கிய வித்தகி!

Srivats - ஆங்கிலக் கவிதைகள் அட்டகாசம்! சமூகப் பணியில் ஆர்வமுள்ள புதிய நண்பர்! பீட்டர் மட்டுமே விடுபவர்! இப்போ தமிழில் எழுதப் போறார்! மாட்டினியா டா? :))

இளா தி ஃபார்மர் a.k.a. விவசாயி a.k.a விவாஜி - இவரு வருசத்துக்கு 32 போகம் விளைச்சல் பாக்குறவரு! அதான் 32-ல டேக் போட்டேன்! மத்தபடி இவரைக் கண்டாலே எனக்குப் பயம்! எந்த பதிவை எப்போ பத்த வைப்பாரு-ன்னே தெரியாது! :)

Last but not the least...இறுதியாக, ஆனால் உறுதியாக.....
நண்பன் ராகவனைப் போலவே ரொம்ப நாள் பதிவே போடாமல் இருக்கும், தொடர்கதை இளவரசி, மலேசிய மோனாலிசா, என் தங்கை துர்கா! :)))


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

மஞ்சனத்தி - நான் சோகமாக இருந்தால் அடிக்கடி படிக்கும் கதை!
சூடாத நாடாத தொழாத பாடாத! - "நான் எதுக்கும் லாயக்கில்லை-ன்னு அவனுக்கும் நல்லாவே தெரியும்! இருந்தாலும் என் ஆசையை விரும்புகிறான்" என்று ஜிரா எழுதிய வைணவச் சரணாகதிப் பதிவு! :)


17. பிடித்த விளையாட்டு?

Blogs :) அப்பாலிக்கா Carrom!

18. கண்ணாடி அணிபவரா?

அணிந்தவர்! இப்போ பவர் கொறைஞ்சு கழட்டியாச்சு! ஆனா இரவு நேரத்தில் கார் ஓட்டும் போது, தொலை தூர Sign Board கூசுது! கான்டாக்ட்ஸ் போடலாமா?

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

Angels & Demons - Tom Hanks is the best!
திருவிளையாடல் - இப்போ பார்த்தாலும் லைட் ஆயிறலாம்!
The Piano - இந்தப் பதிவைப் போட்டுட்டு, இன்னிக்கு இரவு மீண்டும் பார்க்கப் போறேன்! :)
அபூர்வ ராகங்கள் - செம கிக்-ஆன படம்! :)
பசங்க - Just love it
Love in the time of Cholera - All time fave
Da Vinci Code - Again, Tom Hanks :)
ஜோதா அக்பர் - இந்தியில், தேவ்தாஸ்-க்கு அப்புறம் ரசிச்சி பாத்த படம்!

20. கடைசியாகப் பார்த்த படம்?

நண்பர்களுடன்: தோஸ்தானா
தனியாக: Drag me to Hell


21. பிடித்த பருவ காலம் எது?

முகத்தில் பரு வரும் பரு-வ காலம்! :)
எத்தனை முறை கண்ணாடித் தனிமையில் முகம் பார்த்து, உலகம் மாறத் தொடங்கிய காலம் அது? :)

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தமிழ்மணத்தின் இரு பரிசுகளுக்கும், ரெண்டு புத்தகம் வாங்கிக்க சீட்டு அனுப்பி வச்சிருந்தாங்க! இன்னும் வாங்கிக்கலை! இப்போது படித்துக் கொண்டிருப்பது:
* காலைப் பேருந்துப் பயணத்தில் = குறையொன்றுமில்லை! - முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்!
* மாலைப் பேருந்துப் பயணத்தில் = Northern Lights, Nora Roberts

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அரை மணிக்கு ஒரு முறை தானாச் சுழலும்! Webshots Desktop!
* பெரும்பாலும் = நண்பர்களுடனான புகைப்படங்கள்!
* சிறும்பாலும் = பாவனா/தமன்னா, ஏஞ்சலீனா ஜோலி!
ஜானி டெப், சூர்யா-ஜோ! ஜெஸிகா ஆல்பா மட்டும் பல முறை சுழல்வாங்க! :)

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் = காதலர்கள் "குசுகுசு" வென்று கண்களாலும், கொஞ்சமே உதட்டசைவாலும் பொது இடங்களில் பேசிக் கொள்வது! :)
பிடிக்காதது = வீல் வீல் என்று நிறுத்தாது அழும் குழந்தைகளின் அழுகை! அதுவும் பொது இடங்களில் கேட்கும் போது... :((((


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

இப்போதைக்கு அதிக பட்ச தொலைவே வீடு தான்! :)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனியா இருக்கேன்! திறமை இருக்கா-ன்னு நீங்க தான் சொல்லணும்! தனியாத் திறமையா இருந்தா தனித் திறமையா? :))

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மேலாதிக்க மனப்பான்மை!
எளியவன் தானே-ன்னு வார்த்தையால் வதைப்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்! அலுவலகத்தில் வாய் பேசத் தெரியாமல் இருப்பவர்களிடம் பழியைத் தள்ள நினைக்கும் ஒரு சிலரின் போக்குக்கு நான் தான் முதல் முட்டுக்கட்டை! :)

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

"நான்" தான்! :)
சிலரின் வீண் கோலாகலங்கள் கண்டால் வெறுப்பு வரும்! சினம் வரும்! ஒதுங்கிப் போயிருவோம்-ன்னும் தோனாது! அதனால் உழப்பிக் கொள்வது தான் மிச்சம்!


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

நண்பர்களோடு-ன்னா, நரகத்துக்கு கூட சுற்றுலா போகப் பிடிக்கும்! வரீங்களா? :)

அடிக்கடி போக ஆசைப்படுவது =
1. திருச்செந்தூர் - கோயிலுக்குள் அல்ல! கடலோரப் பயணம் மட்டுமே!
2. Florida Keys - சமையல் அறையே அளவிலான சிறு சிறு தீவு முடிச்சுகள்!
இன்னும் போக கொடுத்து வைக்காதது = இலங்கை மேற்புற யாழ்ப்பாணத் தீவுகள்!

சிற்றுலா, பேருலா, பக்தி உலா-ன்னு Definition எதுவும் வச்சிக்காம,
போகப் பிடிக்கும் ஒரு இடம் = குலசேகரன் படி!
எத்தனை தள்ளு முள்ளுன்னாலும், ஆல்பஸ் அழகு முதற்கொண்டு, காவிரி வாய்க்கால் அமைதி வரை, அந்த "ஒரே" சிரிப்பில் காணலாம்! :)
வாசல் படியாய்க் கிடந்துன் பவள வாய் காண்பேனே!
எம்பெருமான் பொன்மலை மேல், ஏதேனும் ஆவேனே!


30. எப்படி இருக்கணும்னு ஆசை?

முகமும் அகமும் சிரிச்சி இருக்கணும்-ன்னு ஆசை!

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நாட் அப்ளிகப்பிள்! :)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்!
கொஞ்சம் விரிச்சிச் சொல்லணும்னா: வாழ ஆசைப்பட்டு, வாழ்!

57 comments:

 1. //Last but not the least...இறுதியாக, ஆனால் உறுதியாக.....
  நண்பன் ராகவனைப் போலவே ரொம்ப நாள் பதிவே போடாமல் இருக்கும், தொடர்கதை இளவரசி, மலேசிய மோனாலிசா, என் தங்கை துர்கா! :)))//

  பாசக் கயிறு ! :)

  ReplyDelete
 2. //என்னை யார் யார் எப்படிக் கூப்புடுறாங்களோ, அவிங்களுக்கெல்லாம் அப்படி அப்படித் தெரிவேன்! :))
  எல்லாப் பேரும் பிடிக்கும்! ஆனாக் கடைசியா டேய் போட்டுக் கூப்பிடறது ரொம்பவும் பிடிக்கும்! :)//

  ஆன்மிக சூப்பர் ஸ்டார் பட்டத்தை புறக்கணிச்சாச்சா ? ஏன் அது பற்றி இம்மியும் தும்மியும் எழுதவில்லை ?
  :)

  ReplyDelete
 3. //* என் கையெழுத்து = நோட் புக்கில் பிடிக்கும்!
  * உங்க கையெழுத்து = செக் புக்கில் பிடிக்கும்! :))//

  காசோலையில் போடுவது கையெழுத்து அல்ல கையொப்பம் !

  ReplyDelete
 4. //கோவி கண்ணன் - தத்துவப் புரிதலில், இவர் கேள்விகள் எல்லாம், நாத்திகத்தை விட, ஆத்திகம் வளர்க்க பெரிதும் உதவுகின்றன! :)
  அந்த வகையில் குமரனுக்கு அடுத்து சிறந்த ஆன்மீகப் பதிவர் எங்க ஜிரா கூட இல்லை! ஒன் & ஒன்லி கோவி. கண்ணனே! :)//

  இப்படியெலலம் போட்டுக் கொடுக்கக் கூடாது, நான் நாத்திகன் என்று நினைப்பவர்களும் உண்டு !

  ஆன்மிகம் நம்பிக்கையா ? உணர்வா ? நம்பிக்கையாளர்களுக்கு நான் நாத்திகன். உணர்வாளர்களுக்கு ஆத்திகன். இப்போதைக்கு இது போதும்.

  ***
  ஏற்கனவே எழுதியாச்சே. இப்ப என்ன பண்றது ? இன்னொருதடவை எழுதினால் பதிவர் அமைப்பில் இருந்து விலக்கி வைக்கப் போவதாக மிரட்டல் வருகிறது. :)

  ReplyDelete
 5. //நாட் அப்ளிகப்பிள்! :)//

  does that mean "never applicable"
  also?
  naan: punyam panninavar.
  en saha dharmini:
  "paavam. janmam eduthathukku oru
  laabam nashtam vendaamo !!

  seekkiram srirangathu thayaar paarvai arul padavendum. "

  subbu rathinam
  http://Sury-healthiswealth.blogspot.com

  ReplyDelete
 6. 32 கேள்விகளுக்கும் சுவாரஸ்யமா (குறிப்பா அந்தக்கவிதை)பதில் சொன்ன டேய் ரவி!!! (அதான் டேய் பிடிக்கும்னு சொன்னீங்களே அதான் இப்போ மட்டும்:)) என்னையும் மாட்டிவிட்டாச்சா இந்த வெள்யாட்டுல?:)

  சரி களத்துல குதிச்சிடறேன் வேற வழி?:)

  ReplyDelete
 7. 31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

  >>>>>>>>

  என்ன ஒரு ஆணாதிக்கப்பார்வை:):) நாங்க இதுக்கு என்ன பதில் தர்ரதாம்?:)

  ReplyDelete
 8. 33. (பஸ் ரூட் இல்லை.. கேள்விதான்)
  கே.ஆர்.எஸ்ஸிடம் பிடித்ததில் ரொம்ப பிடித்தது என்ன?

  என் பதில்: அவர் ஆண்டாளுக்கும் நம்மாழ்வாருக்கும் பரம சிஷ்யர் என்பதால் அவர்கள் பாடல்களை எளியவருக்கும் புரியும் வகையில் எடுத்துச் செல்லும் பாணி.. மிக மிக முக்கியமான பகவத சேவை.

  திவாகர்.

  ReplyDelete
 9. என்னங்க‌ இப்டி மாட்டி விட்டுடீங்க?..
  ...
  என்னால‌ த‌‌மிழ் காணாம‌ போகாம‌ல் இருந்தா ச‌ரி

  ReplyDelete
 10. DHIVAKAR said...
  33. (பஸ் ரூட் இல்லை.. கேள்விதான்)
  கே.ஆர்.எஸ்ஸிடம் பிடித்ததில் ரொம்ப பிடித்தது என்ன?

  என் பதில்: அவர் ஆண்டாளுக்கும் நம்மாழ்வாருக்கும் பரம சிஷ்யர் என்பதால் அவர்கள் பாடல்களை எளியவருக்கும் புரியும் வகையில் எடுத்துச் செல்லும் பாணி.. மிக மிக முக்கியமான பகவத சேவை.

  திவாகர்.
  >>>>>>>>>>>>>>>>

  ஆண்டாள் கேஆர் எஸ்ஸுக்கு தோழியாச்சே....!

  ஆமாம் எளியவருக்கும் புரியறமாதிரி சொல்றதுல செல்லத்தம்பி எல்லார் மனசையும் கொள்ளை கொள்றதுல சந்தேகமே இல்ல!

  ReplyDelete
 11. //31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

  நாட் அப்ளிகப்பிள்! :)//

  சீக்கிரமே அப்ளிகபிள் ஆகறமாதிரி வாழ்க்கைல மனைவி வர வாழ்த்துக்கள்.:)

  ReplyDelete
 12. //இப்போதுன்னா = அண்மைக் காலமாக, சரியாவே சாப்பிடறது இல்ல! ஆனா தொலைபேசும் போது அம்மா கிட்ட பொய் சொல்றேன்!//

  நான் சொன்னது பலிக்கப்போகுதோ :)

  ReplyDelete
 13. http://stavirs007.blogspot.com/2009/06/tagged-to-write-in-tamil.html

  there u go :)

  ReplyDelete
 14. //
  Last but not the least...இறுதியாக, ஆனால் உறுதியாக.....
  நண்பன் ராகவனைப் போலவே ரொம்ப நாள் பதிவே போடாமல் இருக்கும், தொடர்கதை இளவரசி, மலேசிய மோனாலிசா, என் தங்கை துர்கா! :)))//


  ஆண்டவா :(((

  ReplyDelete
 15. டேய் இரவி,நான் சும்மா இருந்தாலும் என்னை சும்மா இருக்க விடாம செய்யுறது ரொம்ப தப்பு..நான் எழுத மாட்டேன்..நான் ரொம்ப பிசி :P

  ReplyDelete
 16. drag me to hell :D அந்த படம் பார்த்துட்டு இருக்குறப்போ உங்க ஞாபகம் தான் ரவி அண்ணா :P ஹிஹி..உடனே அந்த ஹீரோதான் நான் என்று சவுண்ட் வேண்டாம்.அந்த ஹீரோ நல்லவே இல்லை..

  ReplyDelete
 17. //υnĸnown вlogger™ said...
  டேய் இரவி,நான் சும்மா இருந்தாலும் என்னை சும்மா இருக்க விடாம செய்யுறது ரொம்ப தப்பு..//

  என்னாது...டேய்-ஆஆஆ?
  அலோ! ஜிஸ்டர்! நோ காலிங் லைக் திஸ்! அதெல்லாம் கூப்புடறது ரொம்ப "" மட்டுமே! :))

  //நான் எழுத மாட்டேன்..நான் ரொம்ப பிசி :P//

  பிசி வித் பசி?
  போய்ச் சாப்பிட்டு வந்து எழுதும்மா!

  ReplyDelete
 18. //υnĸnown вlogger™ said...
  drag me to hell :D அந்த படம் பார்த்துட்டு இருக்குறப்போ உங்க ஞாபகம் தான் ரவி அண்ணா :P//

  ஏன் ஜிஸ்டர்?
  ennai hell-kku drag panra maathiri feelings-aa?:)

  //ஹிஹி..உடனே அந்த ஹீரோதான் நான் என்று சவுண்ட் வேண்டாம்.அந்த ஹீரோ நல்லவே இல்லை..//

  அப்படின்னா அது நான் தான்! :)
  btw, I am not that loan officer!
  யாரும் என் கிட்ட லோன் கேக்காதீங்க! கவர்-குள்ளாற பட்டன் வச்சி கொடுத்தா கதைப்படி பேய் ஒட்டிக்கும்! :)

  ReplyDelete
 19. //υnĸnown вlogger™ said...
  தொடர்கதை இளவரசி, மலேசிய மோனாலிசா, என் தங்கை துர்கா! :)))

  ஆண்டவா :(((//

  ஆண்டவா ஆம்ஸ்டர்டாமில் இருக்காரு! எப்ப கூப்பிட்டாலும் ஓடியே வருவாரு!

  ReplyDelete
 20. //Srivats said...
  http://stavirs007.blogspot.com/2009/06/tagged-to-write-in-tamil.html

  there u go :)//

  அலோ பீட்டர் பெர்ணான்டஸ்...தமிழ்-ல சொல்லுங்க! :)
  there u go = "அங்க நீ போ!"

  ReplyDelete
 21. //சின்ன அம்மிணி said...
  சீக்கிரமே அப்ளிகபிள் ஆகறமாதிரி வாழ்க்கைல மனைவி வர வாழ்த்துக்கள்.:)//

  :)
  இப்போதைக்கு சிரிப்பு தான்-க்கா! ஒ.சொ.இ!

  //நான் சொன்னது பலிக்கப்போகுதோ :)//

  "பலி"-க்கப் போகுதா? ஏன் சின்ன அம்மிணிக்கா இப்படி பயமுறுத்திங்? :)

  ReplyDelete
 22. //ஷைலஜா said...
  ஆண்டாள் கேஆர் எஸ்ஸுக்கு தோழியாச்சே....!//

  எக்ஜாக்ட்லி! இந்தப் பதிவைப் பத்தியும் அவ கிட்ட சொன்னேன்! என்னை எழுதச் சொல்லி ஏன்டா அழைக்கல?-ன்னு கோவிச்சிக்கிட்டு நிக்கறா? என்ன பண்றது-க்கா? ஐடியா கொடுங்க! :)

  //செல்லத்தம்பி எல்லார் மனசையும் கொள்ளை கொள்றதுல சந்தேகமே இல்ல!//

  vellam, vella thambi, jaggery thambi ethachum chollum munnar...me the escape-uuuu:))

  ReplyDelete
 23. //புதுகைத் தென்றல் said...
  :)))//

  இந்த புன்னகை என்ன விலை?
  புதுகை அக்கா சொன்ன விலை! :)

  ReplyDelete
 24. //Srivats said...
  என்னங்க‌ இப்டி மாட்டி விட்டுடீங்க?..//

  அதுக்குத் தானே நான் இருக்கேன் ஸ்ரீ!
  சம்பவாமி யுகே யுகே! :)

  //என்னால‌ த‌‌மிழ் காணாம‌ போகாம‌ல் இருந்தா ச‌ரி//

  அருமையாத் தான் எழுதத் துவங்கி இருக்கீய! அப்பப்போ தமிழ்-லயும் எங்க கிட்ட பேசுங்க! :)
  உங்களைச் சிங்கையில் கண்ட பெண் ஒருவர், நீங்க ஜாக்சன் துரை மாதிரி பேசினீங்க-ன்னு சொல்லி என் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணா! :)

  ReplyDelete
 25. //DHIVAKAR said...
  33. (பஸ் ரூட் இல்லை.. கேள்விதான்)//

  ஆகா! அதுக்குள்ள 33 ஆயிருச்சா? :)

  //எளியவருக்கும் புரியும் வகையில் எடுத்துச் செல்லும் பாணி.. மிக மிக முக்கியமான பகவத சேவை//

  ஹிஹி! சேவை எல்லாம் இல்லீங்க திவாகர் சார்!
  இது ரொம்ப பிடிச்சிருக்கு! அதையே செய்யறேன்!

  சில பேருக்கு பெருமாளைத் தரிசனம் பண்ணுறதல சுகம்!
  அப்போ, பெருமாளைத் தூக்கி வரும் கைங்கர்ய பாராளுக்கு என்ன கதி? அவங்க தூக்கிட்டு வரதால அவனைப் பாக்க முடியாதே?

  அன்பர்கள் எவ்வளவு ஆர்வமா, வச்ச கண்ணு வாங்காம தரிசனம் பண்ணுறாங்க பாரு-ன்னு, அடியார்களைத் தரிசனம் பண்ணிப்பாங்களாம் அவிங்க! அடியார்க்கு பிடிச்சா மாதிரி இன்னும் நடையழகு காட்டி கூட்டி வருவாங்க!

  அடியேன் இரண்டாவது கட்சி! :)

  ReplyDelete
 26. //ஷைலஜா said...
  31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

  >>>>>>>>

  என்ன ஒரு ஆணாதிக்கப்பார்வை:):) நாங்க இதுக்கு என்ன பதில் தர்ரதாம்?:)//

  ஓ...இதுல இந்தச் சட்டச் சிக்கல் வந்துருச்சா? :)
  மனைவி இல்லாம (கணவரை) செய்ய அனுமதிக்கும் ஒரே காரியம்-ன்னு பெண்கள் எல்லாரும் கேள்வியை மாத்தி எழுதிக்கோங்க! :))

  ReplyDelete
 27. //ஷைலஜா said...
  32 கேள்விகளுக்கும் சுவாரஸ்யமா (குறிப்பா அந்தக்கவிதை)//

  சும்மா கிறுக்கினேன்-க்கா!
  அது கவுஜ ஆயிருச்சா? :)

  //பதில் சொன்ன டேய் ரவி!!!//

  போச்சு! சொ.செ.சூ! :)
  ஆனா யாரைக் கூப்பிடச் சொல்றேனோ, அவங்க மட்டும் இன்னும் கூப்பிட மாட்டேங்குறாங்க! :(

  //சரி களத்துல குதிச்சிடறேன் வேற வழி?:)//

  ஷை அக்காவை எதிர்த்து, மொத்தம் 32 மை.பா எறியும் போராட்டம் துவங்கட்டும் தோழர்களே! :)

  ReplyDelete
 28. //sury said...
  does that mean "never applicable"
  also?

  ha ha ha! may be? :)

  //naan: punyam panninavar.
  en saha dharmini:
  "paavam. janmam eduthathukku oru
  laabam nashtam vendaamo !!//

  சூப்பராச் சொன்னாங்க அம்மா! லாபமும் நட்டமும் தானே சுவாரஸ்யம் கூட்டும் ஆனந்த விளையாட்டு! :)

  //seekkiram srirangathu thayaar paarvai arul padavendum//

  நன்றி சூரி சார்! :)
  அரங்க நாயகி தான் பாத்துக்கிட்டே இருக்காளே! இன்னும் நல்லாப் பாக்கட்டும்! :)

  ReplyDelete
 29. கோவி.கண்ணன் said...
  //கோவி கண்ணன் - தத்துவப் இப்படியெலலம் போட்டுக் கொடுக்கக் கூடாது, நான் நாத்திகன் என்று நினைப்பவர்களும் உண்டு !//

  பாவம்! அப்பாவிகள்! :)
  சிங்கையில் கோவி சைவத் திருமடம் அட்ரெஸ் தெரியாது போல!
  ஆனா ராகவன் என்கிட்ட சொல்லிட்டான் :)

  //நம்பிக்கையாளர்களுக்கு நான் நாத்திகன். உணர்வாளர்களுக்கு ஆத்திகன். இப்போதைக்கு இது போதும்//

  அப்போ நான் நம்பிக்கையாளன் இல்லை-ன்னு சொல்லாம சொல்றீங்க! டூ மச் கோவி அண்ணா!

  //ஏற்கனவே எழுதியாச்சே. இப்ப என்ன பண்றது ? இன்னொருதடவை எழுதினால் பதிவர் அமைப்பில் இருந்து விலக்கி வைக்கப் போவதாக மிரட்டல் வருகிறது. :)//

  அதனால் என்ன? அப்போ நம்பிக்கையாளருக்கு எழுதினீங்க!
  இப்போ உணர்வாளர்களுக்கு எழுதுங்க! :)

  ReplyDelete
 30. // கோவி.கண்ணன் said...
  ஆன்மிக சூப்பர் ஸ்டார் பட்டத்தை புறக்கணிச்சாச்சா ? ஏன் அது பற்றி இம்மியும் தும்மியும் எழுதவில்லை ?
  :)//

  ஹிஹி
  பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் குமரனும் ஜிராவும் நடத்த வந்தோம்!
  அடியேன் பொடியேன்! :)

  ReplyDelete
 31. //கோவி.கண்ணன் said...
  //* என் கையெழுத்து = நோட் புக்கில் பிடிக்கும்!
  * உங்க கையெழுத்து = செக் புக்கில் பிடிக்கும்! :))//

  காசோலையில் போடுவது கையெழுத்து அல்ல கையொப்பம் !//

  நோ! நோ! நோ!
  இப்பிடி எல்லாம் சொல்லி நீங்க எஸ்-ஆவ முடியாது!
  ஒப்பமோ, எழுத்தோ, ஒரு மில்லி(யனுக்கு) நீங்க போட்டே ஆகணும்! :))

  ReplyDelete
 32. // கோவி.கண்ணன் said...
  பாசக் கயிறு ! :)//

  துர்கா...சுத்தி போடும்மா! கண்ணு படுது! :)

  ReplyDelete
 33. ரவி கொஞ்சம் அவகாசம் தேவை. வந்து எழுதுகிறேன். சரியா


  ரொம்ம்ம்ம்ம்ம்ப பிஸின்னு எழுத கூச்சமா இருக்குதேப்பா:)

  ReplyDelete
 34. //32-B யா//

  வெவரமான் ஆள்தான்யா... உங்களயும் இந்த உலகம் நம்புதே..

  ReplyDelete
 35. dei ravi dei ravi and dei ravi :D hehehe

  ReplyDelete
 36. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //சும்மா கிறுக்கினேன்-க்கா!
  அது கவுஜ ஆயிருச்சா? :)>>>

  yappaa!
  கிறுக்கலெல்லாம் கவிதையானால்
  கவிதை காவியமாகுமோ?

  ////////பதில் சொன்ன டேய் ரவி!!!//

  போச்சு! சொ.செ.சூ! :)
  ஆனா யாரைக் கூப்பிடச் சொல்றேனோ, அவங்க மட்டும் இன்னும் கூப்பிட மாட்டேங்குறாங்க! :(//////


  யாரோ அவள் யாரோ என்ன பேரோ அறியேனே:):)

  ReplyDelete
 37. >>>"கைங்கர்ய பாராளுக்கு என்ன கதி? அவங்க தூக்கிட்டு வரதால அவனைப் பாக்க முடியாதே?"<<<

  அதுவும் அவன் இன்னருளே கேஆரெஸ்!

  இது இன்னும் மேல்நிலை கூட.. அதாவது அவன் புகழ்பாடும் அடியார்களைவிட மேல்நிலை என்று பொருள் கொள்ளவேண்டும்.

  'அவனை'ப் பார்க்கமுடியாமல் போனால் என்ன.. பல்லக்கை இப்படி்யும் அழகாக எடுத்துச் செல்லவேண்டும் என்பது கூட 'அவன்' கட்டளையாக இருக்கலாம்

  வாழ்க.. வளர்க!!
  திவாகர்

  ReplyDelete
 38. நான் சொல்ல வேண்டுமுன்னு நினைச்ச ஒரு பதிலை நீங்களும் சொல்லிட்டிங்க தல...;))

  ReplyDelete
 39. :)))

  'ரவிஒளி'யும் கவிதையும் சூப்பர் :)

  சீக்கிரமே மனம் போல மனைவி அமையட்டும்!

  ReplyDelete
 40. ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. அதை மட்டும் சொல்லிக்கிறேன். :-)

  ReplyDelete
 41. //குமரன் (Kumaran) said...
  ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.//

  மூச்சு முட்ட முப்பத்தி ரெண்டு சொல்லி இருக்கேன்!
  ஒன்னும் சொல்லலை-ன்னு சொல்றீங்க! Too bad Kumaran :))

  ReplyDelete
 42. ரசிச்சு படிச்சேன்.

  பல ஹெவி வெயிட்களுக்கு இடையில் என் பேரையும் நுழைச்சுட்டீங்க :(

  அண்ணன் சொல்லி தம்பி தட்டக்கூடாது.தங்கள் விருப்பத்தை நிறைவேற்றியாச்சு. கபீர் வலைப்பூவில தேடாதீங்க...கற்கை நன்றே பக்கமா வாங்க.

  நன்றி

  ReplyDelete
 43. //கவிநயா said...
  'ரவிஒளி'யும் கவிதையும் சூப்பர் :)//

  பசங்க ரவி-ஒழி-ன்னு வம்பு பண்ணுவானுங்க! :)

  //சீக்கிரமே மனம் போல மனைவி அமையட்டும்!//

  OSI
  ஒன்னும் சொல்லிக்கறத்துக்கு இல்ல-க்கா! :)

  ReplyDelete
 44. // கோபிநாத் said...
  நான் சொல்ல வேண்டுமுன்னு நினைச்ச ஒரு பதிலை நீங்களும் சொல்லிட்டிங்க தல...;))//

  அது என்ன கேள்வி - என்ன பதிலு கோபி? :)
  என்னால Guess பண்ண முடியலையே! :)

  ReplyDelete
 45. //ILA said...
  //32-B யா//

  வெவரமான் ஆள்தான்யா... உங்களயும் இந்த உலகம் நம்புதே..//

  விவாஜி
  உலகம் என்னைய நம்புறதுல உமக்கு என்னய்யா வருத்தம்?
  32 B-ன்னு பஸ் ரூட்டைத் தானேய்யா சொன்னேன்? அவ்! :)

  ReplyDelete
 46. //மதுமிதா said...
  ரவி கொஞ்சம் அவகாசம் தேவை. வந்து எழுதுகிறேன். சரியா//

  சரி-க்கா! வாங்க, ஆனால் சீக்கிரம் வாங்க! :)

  //ரொம்ம்ம்ம்ம்ம்ப பிஸின்னு எழுத கூச்சமா இருக்குதேப்பா:)//

  ஹா ஹா ஹா!
  இதுக்கெல்லாம் போய் கூச்சப்படலாமா-க்கா? பிசியே இல்லாத ராகவன் பிசி, பசி-ன்னு எல்லாம் சொல்லலையா? அவனைப் பாத்து கத்துக்குங்க! :))

  ReplyDelete
 47. //υnĸnown вlogger™ said...
  dei ravi dei ravi and dei ravi :D hehehe//

  ஹைய்யோ! மானத்தை மூனு முறை ஏலம் விடுறாளே இந்தப் பொண்ணு! :)

  ReplyDelete
 48. // KABEER ANBAN said...
  பல ஹெவி வெயிட்களுக்கு இடையில் என் பேரையும் நுழைச்சுட்டீங்க :(//

  ஹா ஹா ஹா!
  கோவி கண்ணன் ஒன்னும் அவ்வளவு குண்டானவர் கிடையாதே! :)

  //அண்ணன் சொல்லி தம்பி தட்டக்கூடாது.//

  eki! osu!
  kannabiran ravi, kabirannan ravi ஆன கதையா? :)

  //தங்கள் விருப்பத்தை நிறைவேற்றியாச்சு. கபீர் வலைப்பூவில தேடாதீங்க...கற்கை நன்றே பக்கமா வாங்க//

  கபீரில் தான் தேடிக்கிட்டு இருந்தேன்-ண்ணே! நல்ல வேளை சொன்னீங்க! :)

  ReplyDelete
 49. //DHIVAKAR said...
  >>>"கைங்கர்ய பாராளுக்கு என்ன கதி? அவங்க தூக்கிட்டு வரதால அவனைப் பாக்க முடியாதே?"<<<

  அதுவும் அவன் இன்னருளே கேஆரெஸ்!
  'அவனை'ப் பார்க்கமுடியாமல் போனால் என்ன.. பல்லக்கை இப்படி்யும் அழகாக எடுத்துச் செல்லவேண்டும் என்பது கூட 'அவன்' கட்டளையாக இருக்கலாம்//

  ஆமாங்க திவாகர் சார்! அழகாச் சொன்னீங்க!
  கைங்கர்யபாராள் அவன் நடையழகு காட்ட
  அதை நாம் பார்த்து சிலிர்க்க
  அவர்கள் நாம் சிலிர்ப்பதைப் பார்த்து சிலிர்க்கிறார்கள் அல்லவா?

  நமக்கு பகவத் அனுபவம்!
  அவர்களுக்கு பாகவத அனுபவம்!

  ReplyDelete
 50. 32 B யில் எங்களை எல்லாம் ஏத்தி.. உங்களை நல்லா சுத்தி காமிச்சுட்டீங்க

  ReplyDelete
 51. //போகப் பிடிக்கும் ஒரு இடம் = குலசேகரன் படி!//

  ஒரு இடமா ஒரே இடமா :)

  ReplyDelete
 52. http://madhumithaa.blogspot.com/2009/06/32.html

  கமலே இவங்க நாவலைத்தான் படிக்கிறாங்கன்னு எழுதியது ரொம்ம்ம்ம்ப ஓவரு.

  இந்த மண்டை காய்கிற வெயிலிலும் குளிர் ஜூரமாயிடுச்சு:)

  ஆனாலும் இதோ கண்ணு கலங்க சமாளிச்சுக்கறேன் தம்பியுடையாள் எதற்கும் அஞ்சாள்னு.

  ReplyDelete
 53. //மதுமிதா said...
  http://madhumithaa.blogspot.com/2009/06/32.html//

  அக்கா
  விடிகாலை மணி 03:00
  தூங்காம பதிவு எழுதிக்கிட்டு இருக்கீங்களா? உங்க பேரு மதுமிதா தானே! மூனு மணிக்கே துயில் கலைய வேங்கடமிதா இல்லையே? :)

  //கமலே இவங்க நாவலைத்தான் படிக்கிறாங்கன்னு எழுதியது ரொம்ம்ம்ம்ப ஓவரு//

  ஏன்-க்கா? கமல்-ன்னு சொன்னது தப்பா? டாம் ஹாங்க்ஸ்-ன்னு சொல்லி இருக்கனுமோ? :)

  //இந்த மண்டை காய்கிற வெயிலிலும் குளிர் ஜூரமாயிடுச்சு:)//

  ஓ...Take care ka!

  //ஆனாலும் இதோ கண்ணு கலங்க சமாளிச்சுக்கறேன் தம்பியுடையாள் எதற்கும் அஞ்சாள்னு//

  ஹா ஹா ஹா! கவலையை விடுங்க! அடிக்கற கும்மிய நாங்க அடிச்சிக்கிறோம்! நீங்க போய் தூங்குங்க! :)

  ReplyDelete
 54. இல்லை இரவி இப்போ மணி 4.22

  தூங்குனாதானே ராசா துயில் கலைந்து முழிச்சுக்கிறதுக்கு:( :)))))

  ReplyDelete
 55. நாவலைப் படிக்கிறாங்கன்னு சொன்னது இரவி.

  ஒன்லைனரா எழுதின நாவல் மூணு வருஷமா தூங்கிக்கிட்டிருக்கு. உலகத்துல யாருமே எந்த மொழியிலயும் நாவலை இவ்வளவு சுருக்கமா எழுதி இருக்கமாட்டாங்க:)

  ReplyDelete
 56. பதிவை எழுத அழைத்த நான் பின்னூட்டம் இடுவதற்கு முன்னமே இத்தனை பின்னூட்டங்கள். அருமை அருமை.

  பதிவு போட்டதுக்கு நன்றி.

  // என்னைய பத்தி என்னென்னமோ பொய் சொல்லி, இந்த ஆட்டைக்கு அழைத்த மவராசன் மகரந்தனுக்கு இனிய நன்றி! :) //

  மெய்யென்று மேனியை யார் சொன்னதுன்னு கவியரசர் கண்ணதாசன் கேப்பாரு. அந்த மாதிரி கேக்குறீங்க.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP