Thursday, June 25, 2009

"ஓம் நமோ" என்றால் இதுவே! - 5

விமானத்தில் எழுதிக் கொண்டே வரும் பதிவு என்பதால், நடுநடுவே ஏர் ஹோஸ்டஸ் கிட்ட கடலை போடுவதை, நீங்களே டீஜென்ட்டா, ஒட்டுக் கேட்காமப் படிக்கணும்-ன்னு கேட்டுக் கொள்கிறேன்! :)

"நமோ" என்றால் என்ன?-ன்னு லேசாப் பார்த்தோம்! சென்ற பதிவு இங்கே!
ஆனா பின்னூட்டங்களைக் கொஞ்சமாத் திசை திருப்பி, பிறந்த நாள் பையன் இராகவ், பதிவை ஹைஜாக் செய்து விட்டான்! :) அதனால் சுருக்கமா ஒரு தொகுப்புரையைப் பார்த்துட்டு, இன்னிக்கி மேட்டருக்குப் போவோம்!

* நம என்றால் ந+ம = இல்லை + எனது!
* எதுவும் எனதில்லை என்பது தான் நம!
நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களில் எல்லாம் ஓங்காரத்துவம் இல்லை என்றும் சென்ற பதிவில் பார்த்தோம்!

நம சிவாய என்பதில் எல்லாம் "நம"-ன்னு தானே இருக்கு! அப்புறம் எதுக்கு "நமோ"?
* எனது இல்லை = "நம" என்று சொன்னா போதாதா?
* எதுக்கு "நமோ"-ன்னு, "ஓ" போடணும்? எதுக்கு நமோ! நமோ!-ன்னு சுமோ காரில் ஒரேயடியா பறக்கணும்? :)


பல பிறவிகள், பிறவிச் சுழல்-ன்னு எல்லாம் சில பேரு தத்துவமா பேசுவாங்க!
"புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்....பிறந்து இறந்து இளைத்தேன்" என்பார் மாணிக்கவாசகர்!

அனாதி காலமாய் இந்தப் பந்தங்களில் மாட்டிக்கிட்டு இருக்கோம் அல்லவா?
இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறோம்! :)
ஆனா எதுனால மாட்டிக்கறோம்?-ன்னு மட்டும் கொஞ்சம் தெரிஞ்சிப்போம்!
தெரிஞ்சிக்கிட்டோம்-ன்னா அது நம்மள விட்டுரும்!
மாட்டிக்கிட்டாலும், ரொம்ப டார்ச்சர் கொடுக்காம விட்டுரும்! :)

எதுனால மாட்டிக்கறோம்-ன்னா....மம, மம, மம, மம, மம என்பதால் மாட்டிக்கறோம்! = எனது, எனது, எனது, எனது, எனது....
இந்தப் பதிவு எனது, பின்னூட்டம் எனது, பிளாக்கரே எனது, என் பதிவைப் படிக்கறவங்க எல்லாம் என் ஆளுங்க, இதைப் படிச்சிக்கிட்டு என் கிட்ட கோச்சிக்கறவங்க எல்லாம் என் விரோதிங்க! :)

சின்ன வயசுல பென்சில் எனது, பருவ வயசுல நயன்தரா காமிக்ஸ் எனது,
கல்லூரியில் அவ எனது, அவ கிட்ட போட்ட கடலை எனது! அவ கிட்ட கடலை போடற மத்தவங்க எல்லாரும் கூட எனது (என் எனிமி),
வேலைக்குச் சேர்ந்தாப் பொறவு போனஸ் எனது, கல்யாணம் ஆனப் பொறவு என் போனஸ் அவளுது, ஆனா அவ அப்பா சொத்து எப்படியும் ஒரு நாள் எனது..... :)

இப்படி இந்த மம-மம = எனது-எனது, என்ற லிஸ்ட்டு ரொம்பவே நீளம்! இதுல ஒருத்தன் கூட விதி விலக்கு அல்ல! சன்னியாசி உட்பட! :)

மூனு நாளைக்கு முன்னாடி பொண்டாட்டி கிட்ட கோச்சிக்கிட்டு போனாரு ஒரு சன்னியாசி! போன மூனாம் நாளே திரும்பி வந்தாரு! ஏன் போனீங்க, ஏன் வந்தீங்க-ன்னு அந்தம்மா கேட்டாக! வராண்டாவில் போன வார விகடன் இருக்கு பாரு! பக்கத்து வீட்டு பாண்டுரங்கன் ஓசி கேப்பான்! கொடுத்துறாத! அத சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்-ன்னு சொன்னாரு அந்தத் "துறவி"! :)

இப்படி மம, மம-ன்னு மாரடிச்சிகறதாலேயே மாட்டிக் கொள்கிறோம்! அப்போ இந்த டார்ச்சர்-ல இருந்து தப்பிக்க என்ன வழி?
* ந மம = நம! நம! நம!
இல்லை எனது! இல்லை எனது! இல்லை எனது!-ன்னு சொல்லிட்டா நம்மள விட்டுரும்! = அதான் நமஹ! அதான் நம!


அட போங்கய்யா! ஒங்க சம்பளத்தை ஒங்களது இல்லை-ன்னு சொல்லிருவீங்களா? பெருசா பேச வந்துட்டாங்க "நமஹ"-வைப் பத்தி!
யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்! :)

இப்படி நம, நம, நம-ன்னு மனதறிய சொல்லுறது ரொம்ப கஷ்டம்! ஆனா வாயால சொல்லலாம்-ல? சொல்லிக்கிட்டே இருக்கலாம்-ல? சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொஞ்சமா ஓவர் அட்டாச்மென்ட் கொறையும்-ல? அதான் "ஓம் நமோ"! :)

பிறக்கும் போது உடம்பு மட்டும் தானே பொறந்துச்சு?
அக்காஃபீனா தண்ணி பாட்டில், செரிலாக் பால் பாட்டில், ஷேம் ஷேம்-மை மறைக்க லூயி பிலிப்ஃஸ்-ன்னு பலதும் ரெடிமேடா பேக் பண்ணி கொண்டு வந்தோமா என்ன? :)
அப்பறம் அம்மா பாலூட்டினாங்க! அப்பா துணி வாங்கிக் கொடுத்தாரு!

நாக்குல தேன் தடவினாங்க! சொக்கா போட்டாங்க! கொலுசு போட்டாங்க! பள்ளிக் கூடம் அனுப்பி வச்சாங்க! கல்யாணம் பண்ணி வச்சாங்க! (அ) பண்ணி வைக்கச் சொன்னோம்! :)
அப்பறம் எல்லாம் அப்படியே ஒவ்வொன்னா நடந்துச்சி! குழந்தை வந்துச்சி! :)
அப்பாலிக்கா Skoda காரு வந்துச்சி, 3 BHK வீடு வந்துச்சி, நடு வயதில், பாஸ் கிட்ட இருந்து ப்ரமோஷன் வந்துச்சி, கூடவே பெத்த புள்ளை கிட்ட இருந்து ஆப்பு வந்துச்சி! :)

அனுபவிச்சி, அனுபவிச்சி, கடைசீசீசீல.....புதுத் துணி போர்த்தி அனுப்பி வச்சிட்டாங்க! ஆனா அதையும் அங்கே சுடறவன் எடுத்துக்கிட்டான்!

உம்....பொறந்த போது எப்படி வந்தோமோ, அப்படித் தான் பொசுங்கற போதும் போறோம்!
ஆனா நடுவுல மட்டும், இத்தனையும் சேர்ந்துக்கிட்டு, சை-சை-ன்னு ஆடுது!

இதுக்கு, படாத பாடுபட்டு, இது என்னுடையது, இது என்னுடையது-ன்னு அபிமானப்பட்டு...
அப்படி உணர்ந்து விட்டோமானால், அது தான் நமஹ! நம = எனதில்லை!

* ஓம் ந"" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! எல்லாம் நாராயணனுடையது!

அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக உனக்கு எம்பெருமான் கொடுத்தது
!


தோடா! இதெல்லாம் பதிவுல பேசத் தான் நல்லா இருக்கும்! உபன்னியாசத்தில் வேணும்-ன்னா கை தட்டுவாய்ங்க! பேசி முடிச்சப்பறம் அவருக்குப் போட்ட பொன்னாடை/சால்வையைத் தூக்கிட்டு ஓடறேன்-ன்னு வையி! "சேச்சே! எனதில்லை! நாராயணனுடையது"-ன்னு சும்மா வுட்டுருவாங்களா? :)))

இம்புட்டு பேசறியே கேஆரெஸ்! இந்த மாதவிப் பந்தல் உனதில்லை-ன்னு சொல்லேன் பார்ப்போம்! விட்டுருவியா?
"நமோ! எனதில்லை மாதவிப் பந்தல்"-ன்னு பந்தலை, மதுரையம்பதி-மெளலி அண்ணா பேருக்கு எழுதி வையேன் பார்ப்போம்? :)

என்னாது? மெளலி அண்ணாவுக்கா? போங்கய்யா! குமரன், ஜீவா, ஜிரா-ன்னு எல்லாம் சொல்லலாம்-ல? கோவி கண்ணனுக்கு எழுதி வச்சாலும் வைப்பேன்! இல்லாங்காட்டி பதிவர் அம்பி-க்கு எழுதி வைச்சாலும் வைப்பேன்!
ஆனா மெளலி அண்ணாவுக்கு மட்டும் எழுதியே வைக்க மாட்டேன்! = ஓம் எனதில்லை மதுரையம்பதியுடையது! :)))

ஹிஹி! அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் எல்லாம், நம, நம-ன்னு சேர்த்துச் சேர்த்துச் சொல்லணும்? சும்மா கொஞ்ச நேரம் யோசிச்சிப் பார்த்தேன்! அட, விமானத்தில் விளக்கு அணைச்சிட்டாங்க! அதான்! :)

பொதுவா, எனக்குப் புரிபடாத எதையுமே பந்தலில் எழுத மாட்டேன்! சும்மா எங்கேயோ படிச்சிட்டு, யாரையோ திருப்திப்படுத்த, "அதை மட்டுமே ஏன் எழுதற, இதையும் தான் எழுதேன்?" - என்பதெல்லாம் நமக்கு ஒத்தே வராது! உணர்ந்து எழுதினா மட்டுமே பிடிக்கும்! அவ்ளோ தான்!

அதுனால, இந்த "ஓம் எனதில்லை"-ன்னு எழுத ரொம்ப சங்கடமா இருந்துச்சி!
பைசா பெறாத பந்தல் பதிவையே எனதில்லை-ன்னு சொல்ல கேஆரெஸ்-க்கு வக்கில்லை! இதுல என்ன பெருசா "ஓம் எனதில்லை"-க்கு நான் வந்து விளக்கம் கொடுக்கறது? :)
அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் நம, நம-ன்னு சொல்லணும்? - கொஞ்சம் போல யோசிக்க ஆரம்பிச்சேன்!



அலுவல் விஷயமா இந்த பிரேசில் பயணத்துக்குப் போனேன்-ல்ல? ரியோ டி ஜெனீரோ - Atlantic Copacabana ஹோட்டல்-ல மூனு நாள் தங்கி இருப்பேனா? ஒத்தை ஆளுக்கு அறையாகக் கொடுக்காமல், பெரிய Suite-ஆக கொடுத்திருந்தாய்ங்க! உம்...ஆனால் நெருக்கமான ஒரு மின்னஞ்சல் பார்த்துவிட்டு...எப்படா திரும்ப ஊருக்கு வருவோம்-ன்னு இருந்துச்சி!

அந்த மூனு நாளும் அந்த மாளிகை என்னுது தான்! அதுல மின்னுற மீன் தொட்டி, அலங்கார விளக்கு, வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர்-ன்னு எல்லாமே என்னுது தான்! வேற எவனும் கை வைக்க முடியாது! ஆனா...?

* அந்த அலங்கார விளக்குக்கு ஏதோ ஒன்னு ஆயிரிச்சி, சரியா எரியாம அரையும் கொறையுமா எரியுது! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா?
* ஹோம் தியேட்டர்-ல கீறல் விழுந்துரிச்சி! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா? இதே நம்ம வீட்டுப் பொட்டிக்கு ஆகியிருந்தா???

வாடகைக்கு கொஞ்ச நாள் இருக்கப் போறோம்-ன்னு நல்லாத் தெரிஞ்சதால, அந்த அறையின் செல்வங்களை அனுபவித்தாலும், அதில் பாசம் பொத்துக்கிட்டு கொட்டலை!
அதுக்காக அறையில் அனுபவிக்காமலும் இருக்க முடியாது! :)
அதே சமயம், அறையில் ஓவர் ஒட்டுதலும் இல்லை!
இதோ இனி அந்த மீன் தொட்டியைக் கொஞ்சப் போவதில்லை! அதே போலத் தான் இந்த நமோ=எனதில்லை! :)

இப்போ சொல்லுங்க! நாம எல்லாருமே இங்கிட்டு வாடகை-க்கு இருக்கும் போது, ஓம்-நமோ-நாராயணாய = ஓம்-எனதில்லை-நாராயணனுடையது என்பது டுபாக்கூரா? :))


* ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! நாராயணனுடையது!

அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!

பொறந்த போது எப்படி வந்தாயோ, அப்படித் தான் பொசுங்கும் போது போகப் போகிறோம் என்றாலும் கூட...தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
எனவே தாற்காலிகத்தை ஓவராக் கட்டிக் கொண்டு அழாமல்,
அவ்வப்போது, நம-நம-நம-ன்னு வாயால் ஆச்சும் சொல்லிக்கிட்டு இருந்தா...
அது ரொம்ப டார்ச்சர் கொடுக்காம நம்மள விட்டுரும்! :)


* உடல் (தேகம்) = பிரகிருதி (Matter)க்குச் சொந்தமானது!
* உயிர் (ஆத்மா) = பரமாத்மாவுக்குச் சொந்தமானது!
* அப்போ எனக்கு என்ன சொந்தம்? = "நான்" என்கிற "வெற்று" உணர்வு மட்டுமே சொந்தம்! :)))

பிருதா அகங்கரணம் பரம்! "நான்" என்ற அகங்காரம் மட்டும் தான் மீதி இருக்கு!!
அந்த "நான்" எம்பெருமானுக்கு உரியவன்!
நான் சேஷன்! எம்பெருமான் சேஷி
!

* "நான்" என்பது உடல் அல்ல! உடலும் அவருடையது! = அசித்து!
* "நான்" என்பது ஆத்மா/உயிர்! உயிரும் அவருடையது! = சித்து!
* இப்படி எதுவுமே என்னுடையது இல்லை! அவருடையது! = ஈச்வரன்!
இப்படி எல்லாமே அவருடையதாக இருக்க, "நான்" அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!

* நான் = "நானே" இல்லை!
* நான் = "அடியேன்"!


இராமானுசரின் சீடரான முதலியாண்டான் கொஞ்சம் சாதி அபிமானம் மிக்கவராக இருந்தாரு! கர்மப் பிடிப்பும் ஐயாவுக்கு ஜாஸ்தி! அவரைத் திருத்த எண்ணிய இராமானுசர், அவருக்குத் தாம் உபதேசிக்காமல், தன் ஸ்டிரிக்ட்டான குரு திருக்கோட்டியூர் நம்பியிடமே அனுப்பி வைத்தார்! அவரிடம் போன முதலியாண்டான்,
"*நான்* முதலியாண்டான் வந்திருக்கேன்" என்று சொல்ல...
நம்பியோ, "நான் செத்த பிறகு வாரும்" என்று சொல்லி விட்டார்!

உபதேசம்-ன்னு ஒரு பெரியவர் கிட்ட போனா இப்படியா? அவர் செத்த பிறகு எப்படி அவர் கிட்ட உபதேசம் பண்ணிக்கறது? "*நான்* செத்த பிறகு வாரும்"-ன்னு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம சொல்றாரே என்று குழம்ப...
"நான்" என்ற சொல் செத்த பிறகு வாரும் - என்பது கொஞ்சம் லேட்டாகப் புரிந்தது! அடுத்த முறை, "அடியேன்" என்று சொல்ல, கதவு திறந்தது! :)

நான் = "நானே" இல்லை!
நான் = "அடியேன்"!

"இற்றைப் பறை" கொள்வாம் அன்று! காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், "உன்" தன்னோடு...


1. "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம்
அவனுக்கு உறவாக நான் இருக்கேன்! எனக்கு உறவாக அவன் இருக்கான்!

2. "நமோ" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
நமோ = எனதில்லை! நான் உட்பட எல்லாமே அவனுடையது!
எல்லாமே அவனுடையதாக இருக்க, இங்கே "நான்"-ன்னு அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!

3. அப்போ, "நாராயணாய" என்றால் என்ன? (தொடரும்...)

65 comments:

  1. கடகடன்னு படிச்சுருக்கேன்.. நல்லாருந்ததுண்ணா.. அப்பாலிக்கா திரும்ப வர்றேன் :)

    ReplyDelete
  2. நல்ல பதிவு நண்பரே !
    //உயிர் (ஆத்மா) = பரமாத்மாவுக்குச் சொந்தமானது!//
    இதை படிக்கும் பொழுது எனது நண்பர் ஒருவர் முன்பு எழுப்பிய ஒரு கேள்வி நினைவிற்கு வந்தது. பாசுரங்கள் புலியாக திகழும் அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்-இடம் கேட்டால் உடனே பதில் கெடைக்கும் என்று உடனே கேள்வியை இங்கு வைத்து விட்டேன். :)

    'ஆத்மா' என்ற வார்த்தை ஆழ்வார்கள் பாசுரங்களில் நேரடியாக பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா ?

    (எனக்கு பரமாத்மா என்ற பிரயோகம் உள்ள ஒரு பாசுரம் மட்டும் நினைவில் வந்தது.)
    ~
    ராதா
    p.s: context-உடன் கேள்வியை இங்கு எழுப்பினால் பின்னூட்டம் பதிவினை திசை திருப்பிவிடும் என்று வெறும் கேள்வியை மட்டும் வைக்கிறேன்.

    ReplyDelete
  3. //Radha said...
    பாசுரங்கள் புலியாக திகழும் அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார்-இடம் கேட்டால் உடனே பதில் கெடைக்கும் என்று உடனே கேள்வியை இங்கு வைத்து விட்டேன். :)//

    ஹிஹி! வாங்க ராதா!
    அடியேன் புலியா? நேத்து நடு ராத்திரி தான் பூனை போல ஊருக்கு வந்து சேர்ந்தேன்! :)
    இன்னிக்கு ஆபிசில் தூக்கம்! என்னையப் பாத்து புலி-ன்னு கிலி பண்ணலாமா? நான் பாவம்-ல்ல? :))

    உங்க கிரிதாரி தான் மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம்! :)

    //context-உடன் கேள்வியை இங்கு எழுப்பினால் பின்னூட்டம் பதிவினை திசை திருப்பிவிடும் என்று வெறும் கேள்வியை மட்டும் வைக்கிறேன்//

    திசையாவது? திரும்பறதாவது? அதெல்லாம் சும்மாஆஆஆ...குணானுபவம் தான் முக்கியம்! நீங்க கேளுங்க!

    //'ஆத்மா' என்ற வார்த்தை ஆழ்வார்கள் பாசுரங்களில் நேரடியாக பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா ?//

    :))

    //(எனக்கு பரமாத்மா என்ற பிரயோகம் உள்ள ஒரு பாசுரம் மட்டும் நினைவில் வந்தது.)//

    அது என்ன பாசுரம்? - அப்படின்னு கிரிதாரி கேட்கச் சொன்னான்! :)
    அதைக் கொடுத்தால் இதைத் தருவேன்! :)

    ReplyDelete
  4. //Raghav said...
    கடகடன்னு படிச்சுருக்கேன்..//

    :)

    //நல்லாருந்ததுண்ணா//

    :)

    //.. அப்பாலிக்கா திரும்ப வர்றேன் :)//

    எங்கேயோ போயி, யார் கிட்டயோ பேசிட்டு வரப் போற-ன்னு மட்டும் நல்லாத் தெரியுது! :))

    ReplyDelete
  5. //உங்க கிரிதாரி தான் மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம்! :)//
    :))

    பேசறதே பாசுர வரிகளை கொண்டு பேசறீங்களே ! அதனால் தான் "பாசுர புலி" என்று அழைத்தேன். :)

    *******
    //(எனக்கு பரமாத்மா என்ற பிரயோகம் உள்ள ஒரு பாசுரம் மட்டும் நினைவில் வந்தது.)//

    //அது என்ன பாசுரம்? - அப்படின்னு கிரிதாரி கேட்கச் சொன்னான்! :)
    அதைக் கொடுத்தால் இதைத் தருவேன்! :)//
    *******
    என்ன ரவி தெரியாத மாதிரி கேக்கறீங்க? :)
    i can give you a clue.

    கிரிதாரியின் பிருந்தாவன லீலைகளை எல்லாம் யசோதை பாவத்தில் கொண்டாடிய ஆழ்வார் பாசுரம்.

    your turn to give me a clue. :)

    ReplyDelete
  6. //பின்னூட்டங்களைக் கொஞ்சமாத் திசை திருப்பி, பிறந்த நாள் பையன் இராகவ், பதிவை ஹைஜாக் செய்து விட்டான்! :)//

    ஹி ஹி... பதிவரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... அதுலயும் நீங்க பாக்காதா ஹைஜாக்கா :))

    ReplyDelete
  7. //இல்லை எனது! இல்லை எனது! இல்லை எனது!-ன்னு சொல்லிட்டா நம்மள விட்டுரும்! = அதான் நமஹ! அதான் நம!//

    நல்ல விளக்கம்..

    ReplyDelete
  8. //ஆனா வாயால சொல்லலாம்-ல? சொல்லிக்கிட்டே இருக்கலாம்-ல? சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொஞ்சமா ஓவர் அட்டாச்மென்ட் கொறையும்-ல? //

    ம்..அப்படியா?

    போன பதிவுல தான் ”நாராயண இதி சமர்ப்பயாமி, பரமேஸ்வரப் ப்ரீதயர்த்தம்-ன்னு "வாயால" சொல்லிட்டாப் போச்சா? ” அப்புடின்னு சொன்னீங்க.. இப்போ வாயால சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொறையும்லன்னு சொல்றது ஒத்து வரலையே.

    (யப்பாடி இன்னைக்கு பதிவையும் கடத்திற வேண்டியது தான் :))))

    ReplyDelete
  9. //அப்படி உணர்ந்து விட்டோமானால் அது தான் நமஹ!//

    எப்போ அந்த உணர்வு வரும்கிறது தானே தெரியல.. தினமும் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன்.. ஆனாலும் பெருமாளையே என்னோட பெருமாள்னு தான் சொல்றேன்.. :)

    ReplyDelete
  10. @ ராகவ்
    //ம்..அப்படியா?

    போன பதிவுல தான் ”நாராயண இதி சமர்ப்பயாமி, பரமேஸ்வரப் ப்ரீதயர்த்தம்-ன்னு "வாயால" சொல்லிட்டாப் போச்சா? ” அப்புடின்னு சொன்னீங்க.. இப்போ வாயால சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொறையும்லன்னு சொல்றது ஒத்து வரலையே.//

    ஹா ஹா ஹா
    நீயா வந்து மாட்டுற! நாராயண, நாராயண! :)

    நான் இங்கே சொல்லச் சொன்னது நம, நம, நம! அதுக்கு கூடவே எந்தக் கர்மாவையும் பண்ணச் சொல்லலை! அதுனால எதுவும் இதோடு ஒட்டிக்க கூடிய ஆபத்து இல்லை!

    நீங்க சொல்லச் சொன்னது வெறுமனே பரமேஸ்வரப் ப்ரீதயர்த்தம் இல்லை! கர்மாவும் கூட பண்ணிக்கிட்டே இதையும் சொல்லணும்-ன்னு சொன்னீங்க!

    பண்றதே காம்யார்த்த கர்மா! இதுல பரமேஸ்வரப் ப்ரீதயர்த்தம்-ன்னு எப்படி ஒட்டும்? கர்மாவே வந்து ஒட்டிக் கொள்ளக் கூடிய ஆபத்து தான் இருக்கு! இன்னிக்கி ஜனங்க பண்றங்க பரிகாரம் போல :)

    என்னாங்க ராகவ் ஐயா? என்ன சொல்றீங்க ஐயா? :)
    (டிஸ்கி: நித்ய கர்மாக்கள் அவசியம்; அதைப் பற்றி அடியேன் இங்கு பேசவில்லை! ஒன்லி காம்யார்த்த கர்மா...)

    ReplyDelete
  11. //எங்கேயோ போயி, யார் கிட்டயோ பேசிட்டு வரப் போற-ன்னு மட்டும் நல்லாத் தெரியுது! :))
    //

    சே.. எப்புடித்தான் கண்டுபிடிக்கிறீகளோ... :))

    ReplyDelete
  12. நடுநடுவே ஏர் ஹோஸ்டஸ் கிட்ட கடலை போடுவதை, நீங்களே டீஜென்ட்டா, ஒட்டுக் கேட்காமப் படிக்கணும்-ன்னு கேட்டுக் கொள்கிறேன்! :)
    >>>>>>>>>>>>>>>..
    ஏர்ஹோஸ்டஸ், கடலை:) இதுல ஒண்ணூம் குறைச்சல் இல்ல:)
    பதிவைப்படிச்சிட்டு இருக்கேன் சூடா (அதாவது உடனே :)) பின்னூட்டமிடலேன்னா அப்றோம் டைம் கிடைக்கிறதில்ல

    ReplyDelete
  13. பின்னூட்டங்களைக் கொஞ்சமாத் திசை திருப்பி, பிறந்த நாள் பையன் இராகவ், பதிவை ஹைஜாக் செய்து விட்டான்! :) அதனால் >>>>>>


    உங்க பிறந்தநாள் பையன் நேத்து மாலை எங்கவீட்டுக்கு வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க வரேன்னாரு சரின்னு நானும் மசால்வடையும் மைசூர்பாக்கும் செய்து காத்திருந்தேன், ஆளு போனையும் எடுக்கல எஸ்கேப்! இன்னிக்காவது வருவார்னு பார்த்து ஏமாந்து மைபா எல்லாத்தியும் நாங்களே வீட்ல காலிபண்ணிட்டோம்:)

    ReplyDelete
  14. நமோ"-ன்னு, "ஓ" போடணும்? எதுக்கு நமோ! நமோ!-ன்னு சுமோ காரில் ஒரேயடியா பறக்கணும்? :)
    >>>சரி சரி எதுகை மோனை வெண்பா பெண்பா எல்லாம் தாங்கள் அறிவீர்கள் என அனைவரும் அறிவோம்:)

    ReplyDelete
  15. எதுனால மாட்டிக்கறோம்-ன்னா....மம, மம, மம, மம, மம என்பதால் மாட்டிக்கறோம்! = எனது, எனது, எனது, எனது, எனது....
    இந்தப் பதிவு எனது, பின்னூட்டம் எனது, பிளாக்கரே >>>>>>>>

    இந்தப்பின்னூட்டம் எனது!

    ReplyDelete
  16. //Raghav said...
    எப்போ அந்த உணர்வு வரும்கிறது தானே தெரியல..//

    பெருமாளுக்கே ஆபத்து-ன்னு வரும் போது, அப்போ அந்த உணர்வு வெளிப்படலாம்! உங்க தாத்தாவைப் போல்!

    அது வரைக்கும் உள்ளேயே இருந்தாக் கூடப் போதும்! வெளிப்படணும்-ன்னு அவசியம் இல்லை!

    பெருமாளுக்கே ஆபத்து-ன்னு வரும் போது, அந்த "நான்" போகுதா? ஸ்வயம் போகுதா? என்பதை அவனே விளையாடி அறிந்து கொள்வான்! அவனுக்கு அதனால் அடி பட்டாலும் கூட அவன் பின் வாங்க மாட்டான்! :)
    அலகிலா விளையாட்டுடை யாரவர்
    தலைவர் அன்னவர்க்கே "சரண்" நாங்களே!

    //ஆனாலும் பெருமாளையே என்னோட பெருமாள்னு தான் சொல்றேன்.. :)//

    அதில் தவறில்லை!
    அவனுக்கு நாம்! நமக்கு அவன்! ஓம்! :)

    ReplyDelete
  17. // வராண்டாவில் போன வார விகடன் இருக்கு பாரு! பக்கத்து வீட்டு பாண்டுரங்கன் ஓசி கேப்பான்! கொடுத்துறாத! அத சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்-ன்னு சொன்னாரு அந்தத் "துறவி"! :)//
    >>>>>>>>>>>>>>>
    ஹஹா! பந்தபாசம் அதான் வழுக்கி இருக்கு துறவிக்கு!

    ReplyDelete
  18. //யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்! :)

    /////


    அடேயபபா! எப்படில்லாம் சிந்திக்கறீங்கப்பா:)

    ReplyDelete
  19. * ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
    * ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! எல்லாம் நாராயணனுடையது!
    >>>>>>>>>>>>>>>>>>>

    நமோ வுக்கு இவ்ளோ அர்த்தமா?
    அதன் நமோஓஓஓ என இழுத்து சொல்கிறார்கள் போல இருக்கு.

    ReplyDelete
  20. ஆனால் நெருக்கமான ஒரு மின்னஞ்சல் பார்த்துவிட்டு...எப்படா திரும்ப ஊருக்கு வருவோம்-ன்னு இருந்துச்சி!
    >>>>>

    க்கும் சரி சரி!:)

    ReplyDelete
  21. திருக்கோட்டியூர் நம்பியிடமே அனுப்பி வைத்தார்! அவரிடம் போன முதலியாண்டான்,
    "*நான்* முதலியாண்டான் வந்திருக்கேன்" என்று சொல்ல...
    நம்பியோ, "நான் செத்த பிறகு வாரும்" என்று சொல்லி விட்டார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    நெத்தியடியான பதில்!

    ReplyDelete
  22. "இற்றைப் பறை" கொள்வாம் அன்று! காண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், "உன்" தன்னோடு>>>>>>>>>>>>>>>>>

    இவளோ நாழி தோழியக்காணமேன்னி நினச்சேன்:)

    ReplyDelete
  23. "இற்றைப் பறை" கொள்வாம் அன்று! காண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், "உன்" தன்னோடு>>>>>>>>>>>>>>>>>

    இவளோ நாழி தோழியக்காணமேன்னி நினச்சேன்:)

    ReplyDelete
  24. //Radha said...
    என்ன ரவி தெரியாத மாதிரி கேக்கறீங்க? :)
    i can give you a clue//

    அச்சோ! எனக்கு இப்பவும் தெரியலையே! :)
    பரமாத்மா-ன்னு எல்லாம் வடமொழிச் சொல்லை அப்படியே பயன்படுத்த மாட்டாரே, எங்க மறத் தமிழர், வேயர், வில்லிபுத்தூர் கோன் :)

    //your turn to give me a clue. :)//

    உம்....
    க்ளூ வேணுமா கிரி-தாரா, கிரி-ராதா! :)

    ஆன்மா, ஆத்மா, ஜீவன் என்ற சொற்கள் பொதுவா பாசுரத்தில் புழங்காது!
    ஆனால் உயிர் என்ற சொல் புழங்கும்!

    Clue:
    இராமானுசர், யக்ஞ மூர்த்தியுடனான வாதப் போட்டியில் வெற்றி பெற, அரங்கனே எடுத்துக் கொடுத்த மாறன் பாசுரம்! :)

    ReplyDelete
  25. //"நான்" என்பது உடல் அல்ல! உடலும் அவருடையது! = அசித்து!
    * "நான்" என்பது ஆத்மா/உயிர்! உயிரும் அவருடையது! = சித்து!
    * இப்படி எதுவுமே என்னுடையது இல்லை! அவருடையது! = ஈச்வரன்!
    இப்படி எல்லாமே அவருடையதாக இருக்க, "நான்" அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!

    * நான் = "நானே" இல்லை!
    * நான் = "அடியேன்"!

    //


    <<<<<<< எல்லாம் சரி
    ஆனால் ஒருவனது மனத்தில் அஞ்ஞானம் உள்ள வரையில் அவன் ஓயாமல் தன் உண்மை இயல்பை உணரப் போராட வேண்டி இருக்கிறதே.

    நம் விருப்பத்தையே (எனது) ஒழித்து அதையும் ஆண்டவனுடையதாக சமர்ப்பிக்க வேண்டும் என்கிறீர்கள். முடிவில் அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிற ஆழ்வார் வரிகள் தான் பதிவின் சாரம்சமாகவும் இருக்கின்றன.

    ReplyDelete
  26. //
    இராமானுசர், யக்ஞ மூர்த்தியுடனான வாதப் போட்டியில் வெற்றி பெற, அரங்கனே எடுத்துக் கொடுத்த மாறன் பாசுரம்! :)//


    அரங்கனா, பேரருளாளனா ரவி?

    ReplyDelete
  27. மறந்துட்டேனே போட்டோக்கள் பற்றி சொல்வதற்கு! ரியோடில உங்க ஹோட்டல் அறை ரொம்ப அழகு!
    அந்தக்கரங்கள் ஏர்ஹோஸ்டஸினுடையதுதானே?:)

    ReplyDelete
  28. @ஷைலஜா-க்கா
    //இராமானுசர், யக்ஞ மூர்த்தியுடனான வாதப் போட்டியில் வெற்றி பெற, அரங்கனே எடுத்துக் கொடுத்த மாறன் பாசுரம்! :)//

    அரங்கனா, பேரருளாளனா ரவி?//

    Ooops! Sorry-kka! slip of tongue!
    பேரருளாளன் தான்! அதனால் தான் யக்ஞ மூர்த்திக்கும் "அருளாளப் பெருமாள்" எம்பெருமானார்-ன்னு பெயர்!

    அரங்கன் என்னிக்கு எடுத்துக் கொடுத்திருக்கான்? அவனுக்குக் கொடுக்கத் தெரியாது! மத்த ஊர் பெருமாள் கிட்ட இருந்து வாங்கிக்கத் தான் தெரியும்! :))

    எப்படிக்கா இருக்கீக? இதோ வரேன் விட்டுப் போன பதிவுக்கு! 32 ஆடியாச்சோ? :)

    ReplyDelete
  29. //ஷைலஜா said...
    எல்லாம் சரி
    ஆனால் ஒருவனது மனத்தில் அஞ்ஞானம் உள்ள வரையில் அவன் ஓயாமல் தன் உண்மை இயல்பை உணரப் போராட வேண்டி இருக்கிறதே//

    உம்...ஓரளவு சரி தான்-க்கா!
    ஆனா அது அஞ்ஞானம் இல்லை! ஆசை!

    ஞானம் வந்தாக் கூட, பற்று மட்டும் அம்புட்டு சீக்கிரம் போகாது!
    ஞான யோகப் பற்று, கர்ம யோகப் பற்று-ன்னு பற்றிக்கும்! :)

    //அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிற ஆழ்வார் வரிகள் தான் பதிவின் சாரம்சமாகவும் இருக்கின்றன//

    அற்றது அறியாமை எனில் உற்றது வீடு-ன்னா சொல்றாரு?
    அற்றது பற்றெனில் உற்றது வீடு-ன்னு தானே சொல்றாரு!

    //நம் விருப்பத்தையே (எனது) ஒழித்து அதையும் ஆண்டவனுடையதாக சமர்ப்பிக்க வேண்டும் என்கிறீர்கள்//

    வைணவத்தில் கருத்து என்னான்னா...
    பற்றை அம்புட்டு சீக்கிரம் ஒழிக்கவே முடியாது! தியான யோகம், ஞான யோகம், கர்ம யோகம்-ன்னு ஆயிரம் பேசலாம்! ஆனால் ரொம்ப கஷ்டம்! அதனாலெல்லாம் பற்று அம்புட்டு சீக்கிரம் போவாது! :)

    பற்றை ஒழிக்க ஒரே வழி, பற்று வைப்பது தான்!
    பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு!


    எம்பெருமானின் திருமேனியில் பற்றை வைத்து விட்டால், புலன் அடக்கம் என்பதெல்லாம் பண்ணத் தேவையில்லாத படிக்கு, தானே சித்திக்கும் என்பதே சரணாகதி சித்தாந்தம்!

    அதுக்குத் தான் இத்தனை அர்ச்சாவதாரத் திருமேனி! இத்தனை அழகு! இத்தனை திவ்ய மங்கள விக்ரகம் எல்லாம்!
    இந்த திருமேனிக்கு குடம் குடமா பாலை ஊற்றச் சொல்லவில்லை அரங்கன்!
    நம் கண்ணையே அவன் மேல் ஊற்றச் சொல்கிறான்! :))

    ReplyDelete
  30. மேலும் @ ஷை-அக்கா!
    //நம் விருப்பத்தையே (எனது) ஒழித்து அதையும்//

    இதெல்லாம் லேசில் நடக்கக் கூடிய விஷயம் இல்லை!
    ஸோ, சரணாகதி வழியில்...

    நமது விருப்பத்தை ஒழிப்பதற்கு பதிலா, அவனையே நம் விருப்பம் ஆக்கிக்கணும்! அம்புட்டு தான்! :)

    //ஆண்டவனுடையதாக சமர்ப்பிக்க வேண்டும் என்கிறீர்கள்//

    அதெல்லாம் ஒன்னுமே அவனுக்கு சமர்பிக்க வேணாம்!
    அவனையே நம் விருப்பம் ஆக்கிக்கிட்டாப் போதும்! நமக்கு அவன் வந்து சமர்பிக்கட்டுமே! :)

    எனக்கு அவன்! அவனுக்கு நான்! = ஓம்!

    ReplyDelete
  31. //அச்சோ! எனக்கு இப்பவும் தெரியலையே! :)
    பரமாத்மா-ன்னு எல்லாம் வடமொழிச் சொல்லை அப்படியே பயன்படுத்த மாட்டாரே, எங்க மறத் தமிழர், வேயர், வில்லிபுத்தூர் கோன் :)//

    ஆம் ! வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன், தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனை, கொழுங்குளிர் முகில் வண்ணனை, ஆயர் ஏற்றை, அமரர் கோவை, அந்தணர் தன் அமுதத்தினை கண்டு உகந்து பாடிய பாசுரம். :) இதற்கு மேல் clue தேவை இல்லை.

    //உம்....
    க்ளூ வேணுமா கிரி-தாரா, கிரி-ராதா! :)//
    :)

    //ஆன்மா, ஆத்மா, ஜீவன் என்ற சொற்கள் பொதுவா பாசுரத்தில் புழங்காது!
    ஆனால் உயிர் என்ற சொல் புழங்கும்!

    Clue:
    இராமானுசர், யக்ஞ மூர்த்தியுடனான வாதப் போட்டியில் வெற்றி பெற, அரங்கனே எடுத்துக் கொடுத்த மாறன் பாசுரம்! :)//

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

    'உயிர்' சப்தம் வரும் பாசுரங்கள் நிறைய உள்ளன. 'ஆத்ம' சப்தம் வரும் பாசுரம் பத்தி மட்டுமே பேச்சு.

    இங்கே உங்கள் தோழி ஷைலஜா கேட்கும் அதே கேள்வி. உடையவருக்கு யக்ஞ மூர்த்தியுடனான வாதப் போட்டியில் வரதர் தானே உதவி செய்தார் ?

    ReplyDelete
  32. @ராதா
    //அமரர் கோவை, அந்தணர் தன் அமுதத்தினை கண்டு உகந்து பாடிய பாசுரம். :) இதற்கு மேல் clue தேவை இல்லை//

    ஹா ஹா ஹா
    சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே!-வா?

    சாயை-ன்னா ஆத்மாவா என்ன?
    சாயை = நிழல், தோற்றம்!
    சாரூப நிலையைச் சாயை-ன்னும் சொல்வாய்ங்க! ஆனா சாயை என்றால் ஆத்மா என்பது ஐயம் தான்!

    பெரியாழ்வார் சாயை-ன்னு திருமாலிருஞ் சோலைப் பாசுரத்திலும் சொல்லுவார்!
    உனக்குப் பணிசெய்து இருக்கும் தவமுடையேன், இனிப் போய் ஒருவன்
    தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் "சாயை" அழிவு கண்டாய்!

    இங்கே சாயை=ஆத்மா என்று கொள்ள முடியாதே! ஆத்மா அழிவில்லாதது! சாயை அழிவு கண்டாய்-ன்னு பாடறாரே! சாயை = உருவ ஒற்றுமை/எண்ண ஒற்றுமை அல்லவா?

    தேவ் சாரைக் கேட்போம்!

    ReplyDelete
  33. //ஷைலஜா said...
    மறந்துட்டேனே போட்டோக்கள் பற்றி சொல்வதற்கு! அந்தக்கரங்கள் ஏர்ஹோஸ்டஸினுடையதுதானே?:)//

    யக்கா,
    அந்தக் கையைப் பாத்தா பொண்ணு கை போலவா தெரியது? அவ்வ்வ்வ்வ்! சரியாப் பாருங்க! ஏர்ஹோஸ்டஸ் எல்லாம் அங்கிட்டு எப்படிக்கா வருவாய்ங்க? :)

    ReplyDelete
  34. டேய் அண்ணா,
    போஸ்ட் மட்டும் எங்கே இருந்தாலும் விடுறது இல்ல போல இருக்கே :)
    நல்லா இருந்தது.

    ReplyDelete
  35. வேத மந்திரங்களில் இந்த ந மம முழுசாகவே வரும். மீண்டும் மீண்டும் வரும்.
    அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
    இந்த்ராய ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம
    ஸூர்யாய ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம
    ....

    என்று வரிசையாக வரும்.

    ReplyDelete
  36. பைசா பெறாத பந்தலா? ஏதோ ஒரு பக்கத்துக்குப் போயி நம்ம பதிவோட மதிப்பைப் பாக்கலாமுல்ல?! அங்கே எல்லாம் போயி பாத்ததில்லையா?

    ReplyDelete
  37. பின்னூட்ட விளையாட்டுகள் நல்லா இருக்கு.

    ReplyDelete
  38. ஷைலஜா அவர்கள் பேரருளாளனை
    உடனே சுட்டிக்காட்டி விட்டாரே!
    பயந்து கொண்டேதான் இனிமேல்
    பந்தலுக்குள் நுழைய வேண்டும்.
    சாயை ஆத்மாவைக் குறிக்கும் சொல் போன்று தெரியவில்லை.
    ‘உயிர்’,‘ஆவி’ என்பன ஆத்மாவைக் குறிக்கும் சொற்கள்.

    பாகவதேப்யோ நமோ நம:

    தேவ்

    ReplyDelete
  39. Veedumin Murravum pasuram talks about "uyir"
    The last thiruvoimozhi path talks about uyir as close as to Athma term

    ReplyDelete
  40. \\ந மம = நம! நம! நம!
    இல்லை எனது! இல்லை எனது! இல்லை எனது!-ன்னு சொல்லிட்டா நம்மள விட்டுரும்! = அதான் நமஹ! அதான் நம!
    \\

    ரைட்டு தல ;)

    ReplyDelete
  41. *********
    //அமரர் கோவை, அந்தணர் தன் அமுதத்தினை கண்டு உகந்து பாடிய பாசுரம். :) இதற்கு மேல் clue தேவை இல்லை//

    ஹா ஹா ஹா
    சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே!-வா?

    சாயை-ன்னா ஆத்மாவா என்ன?
    சாயை = நிழல், தோற்றம்! //
    *********
    சொல்லாதை எல்லாம் கற்பனை பண்றீங்களே? எப்படி ? :-)
    'கண்டு உகந்த' என்பது தான் clue. :)
    if you are interested in knowing the answer immediately please scroll down.....:-)
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    பெரியாழ்வார் பகவானை கண்டு உகந்த பொழுது பாடிய பாசுரங்கள்.
    "பரமாத்மனை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே" :-))

    your turn now. :)

    ReplyDelete
  42. //Veedumin Murravum pasuram talks about "uyir"
    The last thiruvoimozhi path talks about uyir as close as to Athma term//

    Thanks Mugundhan ! :)

    ReplyDelete
  43. Dev said...
    //ஷைலஜா அவர்கள் பேரருளாளனை
    உடனே சுட்டிக்காட்டி விட்டாரே!
    பயந்து கொண்டேதான் இனிமேல்
    பந்தலுக்குள் நுழைய வேண்டும்.
    சாயை ஆத்மாவைக் குறிக்கும் சொல் போன்று தெரியவில்லை.
    ‘உயிர்’,‘ஆவி’ என்பன ஆத்மாவைக் குறிக்கும் சொற்கள்.//

    நன்றி தேவ் ஐயா !! நானும் உயிரை கொள்ளை கொள்ளும் புன்னகை உடையானை சுட்டிகாட்டினேன் என்று தெரிவித்து கொள்ள ஆசை. :-)

    ReplyDelete
  44. kumaran said...
    //பின்னூட்ட விளையாட்டுகள் நல்லா இருக்கு//
    பாசுரங்கள், பதிகங்கள் என்றால் கூடிடு கூடலே என்று உமது பந்தலிலும் வந்து கேள்விகள் வைப்போம். :)

    ReplyDelete
  45. http://godhaitamil.blogspot.com/2005/12/83.html

    'கூடிடு கூடலே'ன்னு கூடல் பதிவுக்கு வராதீங்க இராதா. கோதை தமிழ் பதிவுக்குப் போங்க. பாசுரப் பொருள் உரைக்கும் பதிவுக இல்லை என்ற உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள். :-)

    ReplyDelete
  46. @ராதா
    //பரமாத்மனை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே" :-))//

    வாவ்!
    பாத்தீங்களா? யாரு புலி?
    கிரி-தாரா சிங்கம்,
    கிரி-ராதா புலி,
    மீ ஒன் இஸ்மால் எலி! :)))

    ReplyDelete
  47. kumaran said...
    //'கூடிடு கூடலே'ன்னு கூடல் பதிவுக்கு வராதீங்க இராதா. கோதை தமிழ் பதிவுக்குப் போங்க. பாசுரப் பொருள் உரைக்கும் பதிவுக இல்லை என்ற உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள். :-)//

    என்றோ மாற்றிக் கொண்டோம் !
    உங்கள் ஆதங்கம் நன்றாக புரிகிறது குமரன். :-)

    ReplyDelete
  48. ********
    @ராதா
    //பரமாத்மனை சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே" :-))//

    வாவ்!
    பாத்தீங்களா? யாரு புலி?
    கிரி-தாரா சிங்கம்,
    கிரி-ராதா புலி,
    மீ ஒன் இஸ்மால் எலி! :)))
    ********
    பல்லாண்டு பாசுரங்கள் தெரிந்தவர் எல்லாம் புலி சிங்கம் என்றால் கலி முற்றி போயாச்சுன்னு அர்த்தம். அதுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது நண்பரே ! :-)

    எனக்கென்னவோ நீர் தெரிந்தே சொல்லாமல் இருந்தீர் என்று தோன்றுகிறது.

    புலி எலி என்று எல்லாம் டயலாக் அடிக்காம ஒழுங்கு மரியாதையாய் எனக்கான பாசுரத்தை கொடுக்கவும். :-)

    ReplyDelete
  49. //Radha said...
    பல்லாண்டு பாசுரங்கள் தெரிந்தவர் எல்லாம் புலி சிங்கம் என்றால் கலி முற்றி போயாச்சுன்னு அர்த்தம். அதுக்கு இன்னும் நிறைய காலம் உள்ளது நண்பரே ! :-)//

    ஹிஹி!
    கலி முத்தாதுங்க ராதா! கலியும் கெடும் கண்டு கொண்மின்! :)

    அடியவர்களைக் குணானுபவத்தில் கொண்டாட கொண்டாட,
    தங்களைப் போல அடியார்கள் எல்லாரும் பேசப் பேச, அவர்கள் நாவேறு பட்டு, கலியும் கெடும் கண்டு கொண்மின்!

    //எனக்கென்னவோ நீர் தெரிந்தே சொல்லாமல் இருந்தீர் என்று தோன்றுகிறது//

    போச்சுறா! குமரன் என்னமோ சொல்லி உங்க மனசைக் கெடுத்து வச்சிருக்காரு-ன்னு மட்டும் நல்லாத் தெரியுது! :)

    //புலி எலி என்று எல்லாம் டயலாக் அடிக்காம ஒழுங்கு மரியாதையாய் எனக்கான பாசுரத்தை கொடுக்கவும். :-)//

    தங்கள் நியமனம்!

    திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசைப்
    படர் பொருள் முழுவதும் ஆய், அவை அவை தொறும்
    "உடல்மிசை உயிர்" எனக் கரந்து எங்கும் பரந்துளன்
    சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே!

    அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று சொல்லியதும் ஆத்மாவையே!

    நம்மாழ்வார் தன் ஆத்மாவுக்குத் தானே உபதேசம் பண்ணும் அற்புதத் திருக்கோலம், காஞ்சிபுரம் வரதன் சன்னிதியில் மட்டுமே உண்டு!

    மற்ற இடங்களில் எல்லாம் அபய, அஞ்சலி ஹஸ்தமாக இருக்கும் நம்மாழ்வார், இங்கு மட்டும் தன் ஆத்மாவுக்கு தானே உபதேசம் பண்ணும் "ஆத்மோபதேசக்" காட்சியில் இருப்பார்! - "தொழுது எழு என் மனனே!" இதோ!

    ReplyDelete
  50. மேற்சொன்ன "ஆத்மா" பாசுரத்தின் நேரடி வேத வரிகள் - பிருஹ தாரண்யக உபநிடதம்.

    யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானா தந்தர:
    யம் விஞ்ஞானம் ந வேத யஸ்ய விஞ்ஞானம் சரீரம் யோ
    விஞ்ஞான மந்தரோ யமயதி ஏஷ "ஆத்மா அந்தர்யாம் யம்ருத"

    பாசுரத்தின் விளக்கத்தை நண்பர் வேங்கடேஷ், மின்தமிழ் குழுமத்தில் உரைக்கிறார்! இதோ சுட்டி!

    ReplyDelete
  51. மேலும் @ ராதா

    ஆழ்வார்கள் "ஆத்மா" என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்களா? என்று கேட்டீர்கள்!

    மொத்த நாலாயிரத்திலும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் "ஆத்ம" சப்தம் வரும்!
    அதுவும் அது பரம"ஆத்ம" சப்தம்!

    நீங்கள் சொல்லியபடி, "பரமாத்மனை" சூழ்ந்து, இருந்து, ஏத்துவர் பல்லாண்டே - என்ற பெரியாழ்வார் திருமொழி தான் அது!

    மற்றபடி "உயிர்", "மனன்" என்ற தமிழ்ச் சொல்லையே ஆத்மாவுக்குப் பதிலாக பெரும்பாலும் ஆழ்வார்கள் ஆள்வார்கள்!

    திருவாய்மொழியில், தமது வைகுந்தப் பயணத்தை விவரித்துச் சொல்லும் மாறன் கூட, ஆத்மா என்ற சொல்லைப் புழங்கி இருக்க மாட்டர்! இது ஏன் என்றால்...

    ஆழ்வார்களுக்குத் தாங்கள் வெறுமனே உடல் அல்ல என்பது நன்றாகத் தெரியும்!
    அதே சமயம் தங்களுடைய ஆத்மா என்று சொன்னாலோ, ஆத்மா என்பது ஒரு வஸ்து, அது தங்களுக்குச் சொந்தமானது என்று பொருள் வந்து விடும்!

    அதனால் தான் "தங்கள் ஆத்மா" என்று சொல்லாது,
    "தாங்களே ஆத்மா" என்று சொல்லிக் கொண்டார்கள்!


    அந்த ஆத்மா அவனுக்குச் சொந்தமானது! அது தங்க"ளுடைய" ஆத்மா அல்ல! "தாங்களே ஆத்மா!" = அது அவன் சொத்து!

    அதனால் தான் நம்மாழ்வார், சூழ்விசும்பு அணிமுகில் போன்ற மோட்சப் பிரயாணப் பாசுரங்களில், தன் ஆத்மா சென்றது, தன் உயிர் சென்றது என்று பாடாமல், "தான்" செல்வதாகப் பாடுகிறார்.

    இது அடியேன் துணிபு மட்டுமே! ஆச்சார்ய விளக்கத்துக்கு எங்கேனும் மாறுபட்டு அமைந்திருந்தால் அடியேனைப் பெரியோர்கள் மன்னிக்கவும்!

    ReplyDelete
  52. மேலும்....
    ஆத்மா என்பதற்கு ஆழ்வார் ஒரு நேரடிச் சொல்லும் சொல்லி இருக்கார் என்று அடியேன் எண்ணம்!

    ஆத்மா = சம்பத்து
    அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
    அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே!

    இதற்கு ஆச்சாரிய விளக்கங்களும், ஈடு நூல்களும் மேலும் சில விளக்கங்களைப் பிரசாதிக்கும்!
    ஆயினும் இந்த சம்பத்து என்பதை அடியேன் ஆத்மா என்றே துணிகிறேன்!

    செல்வம் அழியும், தேயும்!
    சம்பத்து அழியாது, தேயாது!

    அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு = அடங்கெழில் சம்பத்தான ஆத்மா அடங்க அடங்க (உணர உணர)...

    ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே! = அந்தச் சம்பத்து ஈசனின் அடங்கெழில் சம்பத்து என்று அவனுள் அடங்கி விடும்!

    அதனால் தான்
    * ஆத்மாவை = சம்பத்து என்று சொல்லி, அவன் ஸ்வாமியத்வத்தைச் சொன்னார்!
    * அடங்கு என்று சொல்லி நம் சேஷத்வத்தைச் சொன்னார்!

    ReplyDelete
  53. நன்றி நண்பரே ! :)சுட்டிகளுக்கு நன்றி. உம்முடன் விளையாடியது போதும் என்று என் கிரிதாரி சொல்கிறான். :)
    மேலும் அவன் என்னிடம் உயிர் ஆவி பற்றி எல்லாம் நிறைய சொல்கிறான். அவற்றை இங்கே தருகிறேன். இவற்றில் உள்ள குறை நிறைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல. என் கிரிதாரியை கேட்கவும். :)
    ******
    உயிர், ஆவி என்னும் பதங்கள் சில சமயங்களில் சிறியதையும் சில சமயங்களில் பெரியதையும் குறிக்கும்.

    "ஊர் எல்லாம் துஞ்சி..... ஆவி காப்பார் ஆர் இனியே ? " => இங்கு ஆவி என்பது சிறியதை குறிக்கும்.

    "பத்தர் ஆவியை நித்தில தொத்தினை...", "ஆவியே ! ஆரமுதே! என்னை ஆளுடை தூவியம்புள்ளுடையாய் ..." => இது போன்ற இடங்களில் ஆவி என்பது பெரியதை குறிக்கும்.

    "ஊனில் வாழ் உயிரே! நல்லைப் போ!....", "நினைதொறும் சொல்லுந்தோரும் நெஞ்சு இடிந்து உகும்.....வேம் எனதாருயிர்" => இது போன்ற இடங்களில் உயிர் என்பது சிறியதை குறிக்கும்.

    "உருகுமால் நெஞ்சம் உயிரின்..." எனத் தொடங்கும் காட்கரை பத்தினை வாசித்து அனுபவிக்க.
    ******

    பின்னூட்டங்களில் "பேரருளாளன்" பற்றி நிறைய பேர் பேசி விட்டதால் அவருக்கென்று ஒரு கலியன் பாசுரம். :)

    "கருமணி பூண்டு வெண் நாகு அணைந்து,
    கார் இமில் ஏற்று அணார் தாழ்ந்து உலாவும்
    ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள,
    ஓர் இரவும் உறங்காதிருப்பேன்
    பெரு மணி வானவர் உச்சி வைத்த
    பேர் அருளாளன் பெருமை பேசி
    குரு மணி நீர் கொழிக்கும் புறவின்
    குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்."

    ReplyDelete
  54. //Radha said...
    நன்றி நண்பரே ! :)சுட்டிகளுக்கு நன்றி. உம்முடன் விளையாடியது போதும் என்று என் கிரிதாரி சொல்கிறான். :)//

    கரி-கிரி-ஹரி சொன்னாச் சரியாத் தான் இருக்கும்! :)

    //மேலும் அவன் என்னிடம் உயிர் ஆவி பற்றி எல்லாம் நிறைய சொல்கிறான். அவற்றை இங்கே தருகிறேன். இவற்றில் உள்ள குறை நிறைகளுக்கு நான் பொறுப்பாளியல்ல. என் கிரிதாரியை கேட்கவும். :)//

    கிரிதாரியைப் பப்ளிக்கா திட்ட எனக்கு மனசு வராது (தனியா கன்னா பின்னா-ன்னு திட்டுவேன்)
    அதனால் நீங்க தான் பொறுப்பாளி! உங்க கிட்ட தான் வம்புக்கு வருவேன்! :)

    //"ஊர் எல்லாம் துஞ்சி..... ஆவி காப்பார் ஆர் இனியே ? " => இங்கு ஆவி என்பது சிறியதை குறிக்கும்.//

    ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
    நீரெல்லாம் தேறி ஓர் நீள் இரவாய் நீண்டதால்
    பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
    ஆரெல்லே? வல்வினையேன் ஆவி காப்பார் இனியே?

    அதான் அவன் பத்தர்-ஆவிப்-பெருமாள்!

    //"பத்தர் ஆவியை நித்தில தொத்தினை...", "ஆவியே ! ஆரமுதே! என்னை ஆளுடை தூவியம்புள்ளுடையாய் ..." => இது போன்ற இடங்களில் ஆவி என்பது பெரியதை குறிக்கும்.//

    பத்தர் ஆவியைப் பான்மதி யை, அணித்
    தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுது போய்
    முத்தினை மணியை மணி மாணிக்க
    வித்தினை, சென்று விண்ணகர்க் காண்டுமே!

    //"உருகுமால் நெஞ்சம் உயிரின்..." எனத் தொடங்கும் காட்கரை பத்தினை வாசித்து அனுபவிக்க.
    ******//

    நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
    ஈர்மைசெய்து ***"என்னுயிராய் என்னுயிர் உண்டான்"***,
    சீர்மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன்,
    கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்!

    //ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள,
    ஓர் இரவும் உறங்காதிருப்பேன்

    பேர் அருளாளன் பெருமை பேசி//

    நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  55. கரி-கிரி-ஹரியைப் பற்றி மேலும்
    பாசுர அநுபவம் வருகிறதா என்று பலதடவை பந்தலுக்குள் நுழைந்து பார்த்தேன்; ’தாப-த்ரய-உந்மூலநம்’
    என்பது வெறும் அலங்கார வார்த்தையா?
    ச்ரமஹரமான அநுபவம் அல்லவா?
    பாகவதர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்
    என்னும் கோரிக்கையுடன்

    தேவ்

    ReplyDelete
  56. "பெரும் புறக் கடலை, அடல் ஏற்றினை,
    பெண்ணை, ஆணை, எண் இல் முனிவர்க்கு அருள்
    தரும் தவத்தை, முத்தின் திரள் கோவையை,
    பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை,
    அரும்பினை அலரை, அடியேன் மனத்து
    ஆசையை, அமுதம் பொதி இன் சுவையை
    கரும்பினை, கனியை சென்று நாடி
    கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே."

    வாழி பரகாலன் ! வாழி கலிகன்றி !
    திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம் !

    ReplyDelete
  57. //கிரிதாரியைப் பப்ளிக்கா திட்ட எனக்கு மனசு வராது (தனியா கன்னா பின்னா-ன்னு திட்டுவேன்)
    அதனால் நீங்க தான் பொறுப்பாளி! உங்க கிட்ட தான் வம்புக்கு வருவேன்! :)
    //
    நல்லது ! நீங்க பப்ளிகா வேணும்னாலும் திட்டிக்கோங்க. அந்தரங்கமா வேணும்னாலும் திட்டிக்கோங்க ! ஆனா நீங்க எப்பவும் அவனை தான் திட்ட போறீங்க. :) ஒரு காலும் என்னை அல்ல. :)
    ஆனா ஒங்க அளவுக்கு எல்லாம் நான் சாத்வீகம் இல்ல. நான் என் கிரிதாரியை இடம் காலம் நேரம் பார்க்காமல் திட்டுவேன். :)

    ReplyDelete
  58. ****
    //ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள,
    ஓர் இரவும் உறங்காதிருப்பேன்

    பேர் அருளாளன் பெருமை பேசி//

    நன்றி! நன்றி! நன்றி!
    ****
    No mention. :)
    திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம் !

    ReplyDelete
  59. ரவி, ஒரு சீரியஸ் கேள்வி. நாலாயிரமும் மனப்பாடமா தெரியுமா ?

    ReplyDelete
  60. //நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
    ஈர்மைசெய்து ***"என்னுயிராய் என்னுயிர் உண்டான்"***,
    சீர்மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன்,
    கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்!
    //
    :)
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம் !

    ReplyDelete
  61. These posts are beyond my level of comphrension and ofcourse I wont have anything to comment on it :)

    Except that , God has given you the gift of at writing these spiritual stuff into readable easy ones. Keep writing :)

    ReplyDelete
  62. உயரத்தில் இருக்கும் பரம்பொருள்
    அனைவரின் பிடிக்குள்ளும் வர வேண்டும் என்பதற்காகத்தான்
    விபவ அவதாரங்களும், அர்ச்சைகளும்.
    அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே நாலாயிரமும்.
    KRS அவர்கள் பேச்சுத் தமிழில் இன்னும் எளிமையாக்குகிறார்.
    புரிதலை மேம்படுத்தும் நோக்கத்தில்
    இடையே கேள்விகளும் கேட்கிறோம்.
    அன்பர் ஸ்ரீவத்ஸ் கொஞ்சம் முயற்சி செய்து தமிழ் கற்றுக்கொண்டால்
    புரிதல் எளிதாகி விடும்.

    தேவ்

    ReplyDelete
  63. //Radha said...
    ரவி, ஒரு சீரியஸ் கேள்வி. நாலாயிரமும் மனப்பாடமா தெரியுமா ?
    //

    அச்சோ அப்படி எல்லாம் இல்லீங்க ராதா!
    ஆனா எங்கேயாச்சும் பார்த்தாலோ, படிச்சாலோ, அப்படியே வாசிப்பேன்! சுவாசிப்பேன்!
    அது நின்னுடும்! அம்புட்டு தான்!

    ReplyDelete
  64. //Srivats said...
    These posts are beyond my level of comphrension and ofcourse I wont have anything to comment on it :)//

    ha ha ha! even on air hostess and kadalai puttufying? :)

    //Except that , God has given you the gift of at writing these spiritual stuff into readable easy ones. Keep writing :)//

    யாமோதிய கல்வியும் எம்மறிவும்
    தாமே பெற வேலவர் தந்ததினால்!

    ReplyDelete
  65. //R.DEVARAJAN said...
    உயரத்தில் இருக்கும் பரம்பொருள்
    அனைவரின் பிடிக்குள்ளும் வர வேண்டும் என்பதற்காகத்தான்
    விபவ அவதாரங்களும்,//

    உண்மை தான் தேவ் சார்!
    மனத்தைக் கடந்து நிற்பவன் மனம் உள்ளவர்கள் கிட்டவும் பழக வேண்டி இருக்கே! :)

    //புரிதலை மேம்படுத்தும் நோக்கத்தில்
    இடையே கேள்விகளும் கேட்கிறோம்//

    அவ்வண்ணமே தொடர அரிவண்ணன் அருள வேண்டும்!

    //அன்பர் ஸ்ரீவத்ஸ் கொஞ்சம் முயற்சி செய்து தமிழ் கற்றுக்கொண்டால்
    புரிதல் எளிதாகி விடும்//

    ஹிஹி! ஸ்ரீவத்ஸ் முன்பு சுப்ரபாதப் பதிவுகளை அவங்க அம்மாவுக்கு எல்லாம் எடுத்து அனுப்பி வச்சிருந்தாரு! முப்பத்தி இரண்டு கேள்விக்கு, தமிழில் பதிவு எல்லாம் கூட போட்டிருக்காரு!
    He likes it! Enna, the flow comes to him easily in English! Avlo thaan! I am gonna convert Tirumangai to Robinhood Azhwar and he will enjoy it for sure! :))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP