ஓம் என்றால் என்ன? - 1
வணக்கம் மக்களே! நலமா? இப்பல்லாம் அலுவலகத்திலேயே இரவு உணவை முடிச்சிக்கிட்டு, அங்கிருந்தபடியே மிட்நைட் மசாலா கணக்கா, மிட்நைட் பதிவு போடும் நிலைமையாகி விட்டது! சரி, பேசாம, பதிவுலகத்துக்கு டாட்டா சொல்லீருவோம்-ன்னு நினைச்சாலும், நம்ம நா.கணேசன் ஐயா பதிவில், "இவனை விடக் கூடாதுடா" என்று மக்கள் வலிந்து பின்னூட்டம் போட்டு இழுக்குறாங்க! :)
அதாச்சும் "ஓம்" என்பதை ஒரே எழுத்தாக எழுதுவது பண்டைத் தமிழ் வழக்கம்! ஓ-காரத்திலேயே ம-காரமும் சுழி மேல் உட்கார்ந்து, பார்க்கவே மிக அழகா இருக்கும்!
தமிழ்க் கடவுள்களான பெருமாள்/முருகன் ஆலயங்களில், இந்த ஒற்றை எழுத்து "ஓம்"-ஐ, ஒளி விளக்காக, கோபுரத்தில் காணலாம்!
திருவரங்கத்து ஆலயக் கருவறை விமானமே ஓம் வடிவில் தான் இருக்கு! பிரணவாகார (ஓங்கார) விமானம் என்றே பெயர்!
ஆனால் இப்பல்லாம், வடமொழி/இந்தியில் எழுதப்படும்
T-Shirts, விளம்பரங்கள், யோகா வகுப்புகள், தியான மையங்கள் என்று பலவும் இதற்கு ஒரு காரணமாய் அமைந்து விட்டன! இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் "ஓம்" என்பதையே தேடிப் பிடிக்க வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம்! :(
இதைக் கருத்தில் கொண்டு தான், நா. கணேசன் ஐயா, மிக நல்லதொரு பணியைச் செய்திருக்கார்!
தமிழ் "ஓம்" எழுத்துருவை (Font), இனி வரும் விண்டோஸ் 7.0-இல் இருந்து, ஒற்றையெழுத்து தமிழ் யூனிகோடாக வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் முன்வைத்துள்ளார்!
அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது என்பது இன்னொரு மகிழ்ச்சியான சேதி! இது போன்ற ஆக்கப்பூர்வமான தமிழ்/ஆன்மீகப் பணிகள் தான் மனசுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு! நன்றி கணேசன் ஐயா!
இப்போ மேட்டருக்கு வருவோம்!
"அட, ஓம் என்பதே வடமொழி தானே! அதை எதில் எழுதினா என்ன? என்னே தமிழறிவு?"-ன்னு மகிழ்நர் என்னும் பதிவர் ஒருத்தரு, கணேசன் ஐயாவை எள்ளலாக் கேட்டிருந்தார்!
வந்ததே கோபம் கேஆரெஸ்-க்கு! இப்பல்லாம் அவனுக்கு ரொம்பவே கோவம் வருதுல்ல? :)
அட! பின்னே என்னாங்க! இதெல்லாம் ஆன்மீகப் பதிவர்கள் கையில் எடுத்துச் செய்ய வேண்டிய வேலை! தனி மனிதரா முயற்சி எடுக்கும் கணேசன் ஐயாவைப் பாராட்டக் கூட வேணாம்! இப்படியெல்லாம் எள்ளாம இருக்கலாம்-ல?
கரிகாலன்-II என்று எழுதும் போது, II என்ன தமிழா?-ன்னு கேட்க முடியுமா? விட்டா கரிகாலன் என்ன தமிழா?-ன்னு கூட கேட்டாலும் கேட்டுருவோம்!
"II என்ன தமிழா?"-ன்னு கேட்பது போல் இருக்கு, "ஓம் என்ன தமிழா"?
ஓம் என்பது தத்துவம்! குறியீடு!
அது வெறும் வடமொழி மந்திரம் மட்டுமே அல்ல!
அதை எம்மொழியிலும் எழுதலாம்! நம் செம்மொழியிலும் எழுதலாம்!
சொல்லப் போனால் "ஓம்" என்ற ஒலியும் சொல்லும், தமிழில் இருந்தே தோன்றியமைக்கு பல ஆய்வுகள் உள்ளன! ஈழத் தமிழர்கள் "ஆம்" என்ற சொல்லை, "ஓம்" என்று தான் இன்றும் பலுக்குகின்றனர்! கிரேக்க மொழியிலும் "Omega" - Ω உண்டு!
ஓம் என்றால் என்ன-ன்னு தானே அன்று முருகனும் நான்முகனைக் கேட்டான்?
ஓம் என்றால் என்ன-ன்னு தானே அன்று சிவபெருமானுக்கு இரு காதில் ஓதினான்?
ஓம் என்றால் என்ன-ன்னு அன்று முருகப் பெருமான் சொன்னது தான் என்ன???
ஓம் என்றால் என்ன? தொடர் பதிவுகள் துவக்கம்! :)
ஓம் என்பதன் மிக சுருக்கமான/நுட்பமான பொருள் = "உயிர்களுக்கும் இறைவனுக்கும் உறவு!"
அது என்னாங்க உறவு? = பிரிக்கவே முடியாத உறவு!
* ஆண்டவன், "ச்சே, இனி இந்த உயிர்களே வேணாம்"-ன்னு நினைத்தாலும் பிரிக்க முடியாத உறவு!
* உயிர்கள், "கடவுளே இல்லை"-ன்னு முழங்கினாலும் பிரிக்க முடியாத உறவு!
* அந்த உறவை உறுதிப்படுத்துவதே இந்த "ஓம்"!
"உந்தன்னோடு + உறவேல் + நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது" என்று தெய்வத் தமிழ் ஆண்டாள், இந்த ஓம்-ஐக் கொண்டு இறைவனையே மிரட்டிப் பார்க்கிறாள்! :)
உந்தன்னோடு + உறவேல் + நமக்கு = அ + உ + ம் = ஓம்!
அ, உ, ம் என்று மூன்றெழுத்துக்கள் கொண்டது போல் இருப்பினும், ஓம் என்பது ஓரெழுத்து தான் (ஏகாட்சரம்)! பிரணவம் என்று வடமொழியில் சொல்வார்கள்! தமிழில் ஓங்காரம்!
* அ = இறைவன் ("அ"கர முதல எழுத்தெல்லாம்! அவனைக் குறிப்பதெல்லாம் "அ"-காரமாய்த் தான் இருக்கும்)
* ம = நாம் (எம், உம், நம், நாம் என்று நம்மைக் குறிப்பதெல்லாம் "ம"-காரமாய்த் தான் தொக்கி நிற்கும்)
இப்போ, அந்த "அ"-வையும், இந்த "ம"-வையும் எப்படிச் சேர்ப்பது? - "உ" கொண்டு சேர்க்கணும்! "உ"றவைக் கொண்டு சேர்க்கணும்!
* உ = உறவு! "அ"கார-"ம"காரத்தை இணைக்கும் உறவு! இப்போ ஒவ்வொன்னாக் கூட்டிப் பாருங்க!
உந்தன்னோடு = அ
உறவேல் = உ
நமக்கு = ம்
அ + உ + ம் = ஓம்!
அதான் ஆண்டாள், இதை மட்டும் அப்படி அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறாள்!
உந்தன்னோடு+உறவேல்+நமக்கு என்பது ஓங்காரம்/பிரணவம் ஆச்சே! அந்தப் பிரணவத்தை இறைவனால் கூட ஒழிக்க ஒழியாதே!
குறையொன்றுமில்லாத கோவிந்தா, உந்தன்னோடு+உறவேல்+நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
இறைவா நீ தாராய், பறையேலோ ரெம்பாவாய்!
அட, மண்ணுல வந்து பொறந்தாச்சு!
* இனிமேல் "நான் உனக்கு அம்மா" இல்லைன்னு சொன்னாலும் அம்மா, அம்மா தான்!
* இனிமேல் "நான் உனக்குப் புள்ளை" இல்லைன்னு சொன்னாலும் புள்ளை, புள்ளை தான்!
DNA மகத்துவம் அப்படி! ஒன்னும் பண்ண முடியாது! ஓம் என்பதும் ஒரு DNA தான்!
* அ = பரமாத்மா
* உ = உறவு
* ம் = ஜீவாத்மா
இது தான் நம்ம எல்லாருடைய DNA Code! ஓங்காரம்! பிரணவம்!
"உ" என்றால் உறவு-ன்னு சொல்றீங்களே! அது என்ன உறவு? எப்படிப்பட்ட உறவு? அதை DNA-ல கண்டுபுடிச்சிறலாமா?
ஓம் தோன்றியது எப்படி? அதை ஏன் எல்லாத்தோடும் சேர்த்துச் சேர்த்துச் சொல்றாங்க?...இன்னும் பலப்பல கேள்விகள்.....
(...முருகப் பெருமான் பிறந்த நாளான, நாளை வைகாசி விசாகத்தில்...தொடரும்...)
அதாச்சும் "ஓம்" என்பதை ஒரே எழுத்தாக எழுதுவது பண்டைத் தமிழ் வழக்கம்! ஓ-காரத்திலேயே ம-காரமும் சுழி மேல் உட்கார்ந்து, பார்க்கவே மிக அழகா இருக்கும்!
தமிழ்க் கடவுள்களான பெருமாள்/முருகன் ஆலயங்களில், இந்த ஒற்றை எழுத்து "ஓம்"-ஐ, ஒளி விளக்காக, கோபுரத்தில் காணலாம்!
திருவரங்கத்து ஆலயக் கருவறை விமானமே ஓம் வடிவில் தான் இருக்கு! பிரணவாகார (ஓங்கார) விமானம் என்றே பெயர்!
ॐ
என்பதே, பல இடங்களில் பரவலாகத் தென்படுகிறது!T-Shirts, விளம்பரங்கள், யோகா வகுப்புகள், தியான மையங்கள் என்று பலவும் இதற்கு ஒரு காரணமாய் அமைந்து விட்டன! இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் "ஓம்" என்பதையே தேடிப் பிடிக்க வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம்! :(
இதைக் கருத்தில் கொண்டு தான், நா. கணேசன் ஐயா, மிக நல்லதொரு பணியைச் செய்திருக்கார்!
தமிழ் "ஓம்" எழுத்துருவை (Font), இனி வரும் விண்டோஸ் 7.0-இல் இருந்து, ஒற்றையெழுத்து தமிழ் யூனிகோடாக வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் முன்வைத்துள்ளார்!
அது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது என்பது இன்னொரு மகிழ்ச்சியான சேதி! இது போன்ற ஆக்கப்பூர்வமான தமிழ்/ஆன்மீகப் பணிகள் தான் மனசுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு! நன்றி கணேசன் ஐயா!
இப்போ மேட்டருக்கு வருவோம்!
"அட, ஓம் என்பதே வடமொழி தானே! அதை எதில் எழுதினா என்ன? என்னே தமிழறிவு?"-ன்னு மகிழ்நர் என்னும் பதிவர் ஒருத்தரு, கணேசன் ஐயாவை எள்ளலாக் கேட்டிருந்தார்!
வந்ததே கோபம் கேஆரெஸ்-க்கு! இப்பல்லாம் அவனுக்கு ரொம்பவே கோவம் வருதுல்ல? :)
அட! பின்னே என்னாங்க! இதெல்லாம் ஆன்மீகப் பதிவர்கள் கையில் எடுத்துச் செய்ய வேண்டிய வேலை! தனி மனிதரா முயற்சி எடுக்கும் கணேசன் ஐயாவைப் பாராட்டக் கூட வேணாம்! இப்படியெல்லாம் எள்ளாம இருக்கலாம்-ல?
கரிகாலன்-II என்று எழுதும் போது, II என்ன தமிழா?-ன்னு கேட்க முடியுமா? விட்டா கரிகாலன் என்ன தமிழா?-ன்னு கூட கேட்டாலும் கேட்டுருவோம்!
"II என்ன தமிழா?"-ன்னு கேட்பது போல் இருக்கு, "ஓம் என்ன தமிழா"?
ஓம் என்பது தத்துவம்! குறியீடு!
அது வெறும் வடமொழி மந்திரம் மட்டுமே அல்ல!
அதை எம்மொழியிலும் எழுதலாம்! நம் செம்மொழியிலும் எழுதலாம்!
சொல்லப் போனால் "ஓம்" என்ற ஒலியும் சொல்லும், தமிழில் இருந்தே தோன்றியமைக்கு பல ஆய்வுகள் உள்ளன! ஈழத் தமிழர்கள் "ஆம்" என்ற சொல்லை, "ஓம்" என்று தான் இன்றும் பலுக்குகின்றனர்! கிரேக்க மொழியிலும் "Omega" - Ω உண்டு!
ஓம் என்றால் என்ன-ன்னு தானே அன்று முருகனும் நான்முகனைக் கேட்டான்?
ஓம் என்றால் என்ன-ன்னு தானே அன்று சிவபெருமானுக்கு இரு காதில் ஓதினான்?
ஓம் என்றால் என்ன-ன்னு அன்று முருகப் பெருமான் சொன்னது தான் என்ன???
ஓம் என்றால் என்ன? தொடர் பதிவுகள் துவக்கம்! :)
ஓம் என்பதன் மிக சுருக்கமான/நுட்பமான பொருள் = "உயிர்களுக்கும் இறைவனுக்கும் உறவு!"
அது என்னாங்க உறவு? = பிரிக்கவே முடியாத உறவு!
* ஆண்டவன், "ச்சே, இனி இந்த உயிர்களே வேணாம்"-ன்னு நினைத்தாலும் பிரிக்க முடியாத உறவு!
* உயிர்கள், "கடவுளே இல்லை"-ன்னு முழங்கினாலும் பிரிக்க முடியாத உறவு!
* அந்த உறவை உறுதிப்படுத்துவதே இந்த "ஓம்"!
"உந்தன்னோடு + உறவேல் + நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது" என்று தெய்வத் தமிழ் ஆண்டாள், இந்த ஓம்-ஐக் கொண்டு இறைவனையே மிரட்டிப் பார்க்கிறாள்! :)
உந்தன்னோடு + உறவேல் + நமக்கு = அ + உ + ம் = ஓம்!
* அ = இறைவன் ("அ"கர முதல எழுத்தெல்லாம்! அவனைக் குறிப்பதெல்லாம் "அ"-காரமாய்த் தான் இருக்கும்)
* ம = நாம் (எம், உம், நம், நாம் என்று நம்மைக் குறிப்பதெல்லாம் "ம"-காரமாய்த் தான் தொக்கி நிற்கும்)
இப்போ, அந்த "அ"-வையும், இந்த "ம"-வையும் எப்படிச் சேர்ப்பது? - "உ" கொண்டு சேர்க்கணும்! "உ"றவைக் கொண்டு சேர்க்கணும்!
* உ = உறவு! "அ"கார-"ம"காரத்தை இணைக்கும் உறவு! இப்போ ஒவ்வொன்னாக் கூட்டிப் பாருங்க!
உந்தன்னோடு = அ
உறவேல் = உ
நமக்கு = ம்
அ + உ + ம் = ஓம்!
அதான் ஆண்டாள், இதை மட்டும் அப்படி அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறாள்!
உந்தன்னோடு+உறவேல்+நமக்கு என்பது ஓங்காரம்/பிரணவம் ஆச்சே! அந்தப் பிரணவத்தை இறைவனால் கூட ஒழிக்க ஒழியாதே!
குறையொன்றுமில்லாத கோவிந்தா, உந்தன்னோடு+உறவேல்+நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
இறைவா நீ தாராய், பறையேலோ ரெம்பாவாய்!
அட, மண்ணுல வந்து பொறந்தாச்சு!
* இனிமேல் "நான் உனக்கு அம்மா" இல்லைன்னு சொன்னாலும் அம்மா, அம்மா தான்!
* இனிமேல் "நான் உனக்குப் புள்ளை" இல்லைன்னு சொன்னாலும் புள்ளை, புள்ளை தான்!
DNA மகத்துவம் அப்படி! ஒன்னும் பண்ண முடியாது! ஓம் என்பதும் ஒரு DNA தான்!
* அ = பரமாத்மா
* உ = உறவு
* ம் = ஜீவாத்மா
இது தான் நம்ம எல்லாருடைய DNA Code! ஓங்காரம்! பிரணவம்!
"உ" என்றால் உறவு-ன்னு சொல்றீங்களே! அது என்ன உறவு? எப்படிப்பட்ட உறவு? அதை DNA-ல கண்டுபுடிச்சிறலாமா?
ஓம் தோன்றியது எப்படி? அதை ஏன் எல்லாத்தோடும் சேர்த்துச் சேர்த்துச் சொல்றாங்க?...இன்னும் பலப்பல கேள்விகள்.....
(...முருகப் பெருமான் பிறந்த நாளான, நாளை வைகாசி விசாகத்தில்...தொடரும்...)
ஓம் சைவமா ? வைணவமா ?
ReplyDeleteப்ரணவம் என்று சொல்வதைத் தவிர்க்கவும் !
:)
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteப்ரணவம் என்று சொல்வதைத் தவிர்க்கவும் !
:)//
ஏன்? எதற்குத் தவிர்க்கணும்?
ஓம், ஓங்காரம், ஒமேகா, ப்ரணவம் என்று எல்லாமுமாகத் தானே சொல்கிறேன்? எதற்குத் தவிர்க்கணும்-ன்னு சொல்லுங்க?
//ஓம் சைவமா ? வைணவமா ?//
ReplyDeleteமுருகன், பெருமாள்-ன்னு ரெண்டுமே வரும் கலித்தொகை என்னும் நூல் சைவமா? வைணவமா? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க! :)
நல்ல விளக்கம்... அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்... :)
ReplyDeleteஅருமையான விளக்கம் ரவிண்ணா..
ReplyDeleteஅடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...
ReplyDelete’ஓம்’ - நாதம்,பிந்து,கலை மூன்றும்
ReplyDeleteசேர்ந்த ஆதி ஒலி.மொழி,காலம்,மத மரபு இவற்றைக் கடந்து நிற்பது.
ப்ரணவம் - ப்ர + நவம்
(புத்தம் புதியது)
காலத்தால் ஸ்பரிசிக்கப் படாததது.
தேவ்
நல்ல விஷயம்...ஆவலுடன் இருக்கிறேன் தல ;)
ReplyDelete//ஒற்றையெழுத்து தமிழ் யூனிகோடாக வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் முன்வைத்துள்ளார்!
ReplyDeleteஅது ஏற்றுக் கொள்ளப்பட்டும் விட்டது என்பது இன்னொரு மகிழ்ச்சியான சேதி!//
சூப்பர்! நல்ல சேதிக்கு நன்றி :)
//ஓம் என்றால் என்ன? தொடர் பதிவுகள் துவக்கம்! :)//
ஹை! ஜாலி ஜாலி! :)
// இனிமேல் "நான் உனக்கு அம்மா" இல்லைன்னு சொன்னாலும் அம்மா, அம்மா தான்!
* இனிமேல் "நான் உனக்குப் புள்ளை" இல்லைன்னு சொன்னாலும் புள்ளை, புள்ளை தான்! //
அழகா சொன்னீங்க! நன்றி கண்ணா.
ஓம் சைவமாகவோ வைணவமாகவோ தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் ஏதோ புரிதல் பிழை இருக்கிறது என்று தான் பொருள். ஓங்காரம் இந்திய சமயங்கள் அனைத்திலுமே இருக்கிறது. அனைத்து இந்திய சமயங்களும் ஓங்காரத்தை தத்துவ வடிவில் அணுகுகிறது. முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று நம்ப வைக்கப்பட்டவர்கள் முருகனுக்கு மட்டுமே பிரணவ மந்திரம் உரியது என்று நம்புகிறார்கள். அதனால் தான் ஓம் சைவமா வைணவமா என்ற கேள்வி வருகிறது போலும்.
ReplyDeleteஓம்காரம் தமிழ்ச்சொல்லா வடசொல்லா இரவி? இரண்டிலுமே இருப்பது போல் தான் தோன்றுகிறது. அகரம், உகரம், மகரம் என்றும் ஆகாரம், ஏகாரம், ஓகாரம் என்றும் குறிலுக்கு அடுத்து கரமும் நெடிலுக்கு அடுத்து காரமும் பின்னொட்டாக வருவதைத் தமிழில் பார்க்கிறேன். அதே போல் ஓம்காரம் என்று சொல்வது சரி தான். ஆனால் வடமொழியிலும் அகார், உகார், மகார், ஓம்கார் என்றெல்லாம் படித்திருக்கிறேனே.
ReplyDeleteகலித்தொகை சைவ நூல் தான். அது தெரியாதா உங்களுக்கு? பழந்தமிழ் நூல்கள் எல்லாம் தமிழ்க்கடவுளர்களான சிவபெருமானையும் முருகப்பெருமானையும் மட்டுமே போற்ற எழுந்த நூல்கள். ஆங்காங்கே மாயோன் சொல்லப்பட்டாலும் அது சிறுபான்மை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் மாயோனைப் போற்றுவதும் ஏறக்குறைய அதே அளவிற்கு என்று காட்டினாலும் நாங்கள் அவை சிறுபான்மை என்றே சொல்வோம்; பழந்தமிழ் நூல்கள் அனைத்துமே சைவ நூல்கள் தான் என்று அறுதியிட்டுச் சொல்வோம். ஏனெனில் தமிழும் சைவமும் ஒரு பொருள் தரும் இரு சொற்கள் - ஒரு பொருட் பன்மொழி. :-)
ReplyDeleteஅதே மாதிரி ஓம் சைவம் தான். முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள். :-)
Anna, I thought of quit visiting thamizmanam, b'caus i have't see your blog for long time. I am very happy now, thank you.
ReplyDelete//Anonymous said...
ReplyDeleteAnna, I thought of quit visiting thamizmanam//
ஹா ஹா ஹா
//b'caus i have't see your blog for long time. I am very happy now, thank you.//
யப்பா! என்னமா ஒரு உ.குத்து! :)
என் "அனானி" தங்கச்சி தங்கச்சி தான்!
நல்ல துவக்கம். ப்ரணவத்தை பற்றி மேலும் எழுதுங்கள்.
ReplyDeleteகடவுளையும், இறைசக்தியையும் ஒரு நாட்டுக்கோ, மொழிக்கோ அல்லது ஜாதிக்கோ உடையதாக மாற்றுவது முட்டாள் தனத்தின் உச்சம்.
முருகனாக இருந்தால் தமிழ் கடவுள், ஸுப்ரமணியராக இருந்தால் வடமொழிகடவுள் என கூறுவது நமது அறியாமைதானே?
ஒரு விமானம் மேலே செல்லுகிறது என வைத்துக்கொண்டால்.. அதை ஒவ்வொரு மொழிக்காரர்களிடமும் கேட்டால் என்ன பதில் சொல்லுவார்கள் என யோசித்துபாருங்கள்.. வடமொழிக்காரர் “ஷ்...சே” என்பார். நம்மாளு “சொயிங்னு” போச்சு என்பார். உண்மையான விமான சப்தத்தை நாம்நான் கேட்டு முடிவு பண்ண வேண்டும்.
தமிழ் கடவுள் என பிரிப்பது.. யானையை பிடித்து கோவிலில் கட்டி அதற்கு பட்டையும், நாமமும் போடுவதற்கு சமம். யானைக்கு எப்படி தான் சைவமா வைணவமா என தெரியாதோ அதுபோல கடவுளுக்கும் ஜாதி மொழி தெரியாது :)
//முருகன், பெருமாள்-ன்னு ரெண்டுமே வரும் கலித்தொகை என்னும் நூல் சைவமா? வைணவமா? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க! :)//
ReplyDeleteமுருகப் பெருமாள் - சைவம் !
:)
//வடமொழியிலும் அகார், உகார், மகார், ஓம்கார் என்றெல்லாம் படித்திருக்கிறேனே.//
ReplyDeleteஓம்கார் - பெயருக்கு விளக்கம் கிடைத்துவிட்டது !
:)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஓம் சைவமாகவோ வைணவமாகவோ தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் ஏதோ புரிதல் பிழை இருக்கிறது என்று தான் பொருள். ஓங்காரம் இந்திய சமயங்கள் அனைத்திலுமே இருக்கிறது. அனைத்து இந்திய சமயங்களும் ஓங்காரத்தை தத்துவ வடிவில் அணுகுகிறது. முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று நம்ப வைக்கப்பட்டவர்கள் முருகனுக்கு மட்டுமே பிரணவ மந்திரம் உரியது என்று நம்புகிறார்கள். அதனால் தான் ஓம் சைவமா வைணவமா என்ற கேள்வி வருகிறது போலும்.
//
ஓம் - என்பதை உருவ வழிபாட்டுக்குள் கொண்டுவரும் போது தான் சிக்கல். எனக்குத் தெரிந்து சைவ கோவில் யானைக்கு ஓம் பெரிதாகப் போட்டு இருப்பாங்க, பெருமாள் யானைக்கு இருக்க்காது. நாமம் தான் இருக்கும். ஹரிஓம், அரிஓம் என்று வைணவத்தில் சொன்னாலும் ஓமின் முதன்மைத்துவம் குறைவு தான் என்று கருதுகிறேன்.
//அதே மாதிரி ஓம் சைவம் தான். முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள். :-)
ReplyDelete9:41 PM, June 04, 2009
//
நான் அப்படிக் கருதுவதில்லை. சைவம் வைணவம் எல்லாம் வெறும் கட்டுமானங்களே என்பது நன்றாகத் தெரியும். சமூக அரசியல் பற்றிப் பேசும் போது அதை ஒட்டிய கருத்துக்களைச் சொல்வதுண்டு, அதனால் ஒன்றை வெறுக்கிறேன், மற்றதைப் போற்றுகிறேன் என்று பொருள் அல்ல.
***
மற்றபடி பரம்பொருள் எது, பரப்பிரம்மம் உண்மையா ? இரண்டும் ஒன்றா ? என்பதில் எனக்கென்று கருத்து இருக்கிறது, அதை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவதில்லை.
//ஹரிஓம், அரிஓம் என்று வைணவத்தில் சொன்னாலும் ஓமின் முதன்மைத்துவம் குறைவு தான் என்று கருதுகிறேன். //
ReplyDeleteகோவி.கண்ணன்,
அரைகுறையாய் ஒன்றைத் தெரிந்து கொண்டு அதனை அறுதியான கருத்தாகக் கொள்பவர் நீங்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
ஐந்தெழுத்து (பஞ்சாக்ஷர) மந்திரம் = நமசிவாய
ஆறெழுத்து (ஷடாக்ஷர) மந்திரம் = சரவணபவ
எங்கே ஓம்காரம்?
எட்டெழுத்து (அஷ்டாக்ஷர) மந்திரம் = ஓம் நமோ நாராயணாய
பன்னிரண்டெழுத்து (துவாதசாக்ஷர) மந்திரம் = ஓம் நமோ பகவதே வாசுதேவாய
(ஓம் = ஓரெழுத்து)
இவற்றில் ஓம்காரம் இல்லாமல் மந்திரம் இல்லை. தொடங்குவது ஓம்காரத்தில் தான். மற்ற மந்திரங்களில் ஓம்காரம் ஐந்தெழுத்துகளுக்கும் ஆறெழுத்துகளுக்கும் வெளியே இருந்து தனி மந்திரமாக ஒலிக்கும் போது இவ்விரண்டில் தானே அவை மந்திரத்தின் பகுதியாகவே இருக்கின்றன. அதுவும் தொடக்கமாக - மற்றவற்றில் முதன்மை மந்திரத்தில் ஓம்காரமே இல்லை. இப்போது சொல்லுங்கள் ஓம்காரத்தின் முதன்மைத்துவம் வைணவத்தில் எந்த வகையில் குறைவு என்று?
சைவத்தில் ஓம்காரத்திற்கு இருக்கும் பெருமை நன்கு பரக்கப்பேசிப் பரப்பப்பட்டிருப்பதால் உங்களைப் போன்ற நுனிப்புல்லர்களுக்கும் தெரிகிறது. வைணவத்தில் ஓம்காரத்திற்கு இருக்கும் முதன்மையை அறியாமல் இருப்பதற்குக் காரணம் அறியாமையே.
பிரணவம் என்ற சொல்லைத் தவிர்க்கச் சொல்லி ஒரு வேண்டுகோள் வந்திருக்கிறது. ஓம்காரத்தைப் பற்றியே பேசும் போது அதற்கு வேறு மொழிகளில் இருக்கும் பெயர்களையும் மற்ற மொழிகளில் இருக்கும் ஒப்பான கருத்துகளையும்/சொற்களையும் சொல்லாமல் விளக்க இயலாது. அந்த இடங்களில் பிரணவம் என்ற வடசொல்லைச் சொல்லுவது கட்டுரையின் மையக்கருத்திற்கான முதன்மைத் தேவை.
ReplyDeleteபொதுவான ஒன்றைப் பேசும் போது ஏற்கனவே தமிழ்ச்சொற்கள் பலவும் இருக்க அவற்றைப் புழங்காமல் வேற்றுச் சொற்களைப் புழங்கினால் அப்போது தமிழ்ச்சொற்களைப் புழங்க வேண்டுகோள் விடுக்கலாம். பெரும்பாலானோர் பழக்கத்தாலும் அறியாமையாலும் தான் அந்த இடங்களில் வேற்றுச் சொற்களைப் புழங்குகிறார்களே ஒழிய வலிந்து வேற்று மொழிச் சொற்களைப் புழங்கித் தமிழைக் குறைக்கும் எண்ணம் இல்லை. தமிழார்வலர்கள் இந்த வேறுபாட்டினையும் உணரவேண்டும்.
//வைணவத்தில் ஓம்காரத்திற்கு இருக்கும் முதன்மையை அறியாமல் இருப்பதற்குக் காரணம் அறியாமையே.//
ReplyDeleteஆம்; உண்மைதான் குமரன். பொதுவாக நாலாயிரம் பற்றிய
அறிவு பரவலாகக் காணப்படவில்லை.
உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.
எனும் திருவாய் மொழிப்பாசுரத்தின் முதல் மூன்று வரிகள்
‘உ’,’ம’,’அ’ எனும் ப்ரணவத்தின் வ்யாஹ்ருதிகள் பொருந்த
அமைந்துள்ளன.
‘மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி’ என்பார் பட்டர் பிரான்.
கீதையின் ஏழாம் அத்யாயத்தில் ‘ப்ரணவ: ஸர்வ வேதேஷு’
(எல்லா வேதங்களிலும் ப்ரணவம் நான்) என்கிறான் கண்ணபிரான்.

//இராம்/Raam said...
ReplyDeleteநல்ல விளக்கம்... அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்... :)//
ராம் கேட்டு இல்லை-ன்னு சொல்லீற முடியுமா? விசாகப் பதிவு இட்டாகி விட்டது! திங்கள் அன்று இரண்டாம் பாகம் ராமேய்! :)
//Raghav said...
ReplyDeleteஅருமையான விளக்கம் ரவிண்ணா..//
நன்றி ராகவ்! ஏதோ கேள்வியெல்லாம் கேக்கப் போறியோ-ன்னு பயந்துகிட்டே இருந்தேன்! :)
// dubukudisciple said...
ReplyDeleteஅடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...//
வெயிட்டிங்க்ஸ் ஆஃப் டிடி-க்கா! :)
// கோபிநாத் said...
ReplyDeleteநல்ல விஷயம்...ஆவலுடன் இருக்கிறேன் தல ;)//
என்னப்பா இது, எல்லாரும் ஆவல் ஆவல்-ன்னு சொல்றீங்க. கோவி மட்டும் வேற ரூட்-ல சொல்றாரு? :)
//R.DEVARAJAN said...
ReplyDelete’ஓம்’ - நாதம்,பிந்து,கலை மூன்றும்
சேர்ந்த ஆதி ஒலி.மொழி,காலம்,மத மரபு இவற்றைக் கடந்து நிற்பது.//
சரியாச் சொன்னீங்க தேவ் சார்! மத மொழி மரபு கடந்து நிற்பது!
நாத விந்து கலாதீ நமோ நம!
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!
ஆதியிலே தேவன் வார்த்தையாய் (ஒலியாய்) இருந்தார்!
//ப்ரணவம் - ப்ர + நவம்
(புத்தம் புதியது)//
புதுமை + புதுமை! அடுக்குத் தொடரா பிரணவம்? :)
//கவிநயா said...
ReplyDeleteசூப்பர்! நல்ல சேதிக்கு நன்றி :)//
கணேசன் ஐயாவுக்குத் தான் இந்த நன்றி-க்கா!
//ஹை! ஜாலி ஜாலி! :)//
என்னக்கா, இப்படித் துள்ளி விளையாடறீங்க! எல்லாம் இந்தியப் பயணத்தில் அம்மா கொடுத்த டானிக்கா? :)
குமரன் நெத்தியடி அடிச்சி ஆடியிருக்காரு-ன்னு மட்டும் இப்போத்திக்குச் சொல்லி, இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சி வாரேன்! :)
ReplyDeleteகலக்கல்ஸ் ஆஃப் குமரன்! :)
//ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteநல்ல துவக்கம். ப்ரணவத்தை பற்றி மேலும் எழுதுங்கள்//
நன்றி ஸ்வாமி ஓம்கார்!
ஓங்காரம் பற்றிய பதிவுக்கு ஓம்கார் ஆகிய சுவாமிகள் வந்ததும் பொருத்தம் தான்! :)
//கடவுளையும், இறைசக்தியையும் ஒரு நாட்டுக்கோ, மொழிக்கோ அல்லது ஜாதிக்கோ உடையதாக மாற்றுவது முட்டாள் தனத்தின் உச்சம்//
உண்மை! கடந்து உள்ளவன் தானே கடவுள்!
//வடமொழிக்காரர் “ஷ்...சே” என்பார். நம்மாளு “சொயிங்னு” போச்சு என்பார்.//
ஆனால் குழந்தை தான் விமான சத்தத்தைக் கரெக்டாச் சொல்லும்! :)
//யானைக்கு எப்படி தான் சைவமா வைணவமா என தெரியாதோ அதுபோல கடவுளுக்கும் ஜாதி மொழி தெரியாது :)//
ஹிஹி! சூப்பரு!
வணங்கும் துறைகள் பலப்பலவாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்!
//முருகனாக இருந்தால் தமிழ் கடவுள், ஸுப்ரமணியராக இருந்தால் வடமொழிகடவுள் என கூறுவது நமது அறியாமைதானே?//
இங்கே மட்டும் மாறுபட்டு ஒரு சிறிய கருத்தை முன் வைக்கிறேன் சுவாமிகளே!
தமிழ்க் கடவுள்-ன்னு சொல்வது எல்லாம் கடந்தவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவதற்காக இல்லை!
நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிந்து கொள்ள மட்டுமே!
இறைவனுக்கு நாம் தரும் பட்டங்கள் -தமிழ்க் கடவுள், தெலுங்கு தேவுடு, English Lord - இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல!
இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே!
ஒரு சமூகத்துக்கு அதன் பண்பாடும் முக்கியம்! இறையியலும் முக்கியம்!
* தமிழ்க் கடவுள் பற்றிய "நேர்மையான" ஆய்வுகள் தமிழுக்கு அவசியம் தேவை!
* அதே சமயம் தமிழ்க் கடவுள் என்று பேசிக் கொண்டு, மற்ற பண்பாட்டு இறையியல் மேல் ஆதிக்கம் செலுத்தும் மேம்போக்கு எண்ணம் தான் மடத்தனம்!
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteஓம் - என்பதை உருவ வழிபாட்டுக்குள் கொண்டுவரும் போது தான் சிக்கல்//
யாரு எங்கே கொண்டு வந்தாங்க? சொல்லுங்கண்ணா!
//எனக்குத் தெரிந்து சைவ கோவில் யானைக்கு ஓம் பெரிதாகப் போட்டு இருப்பாங்க, பெருமாள் யானைக்கு இருக்க்காது//
யானையை வைச்சா இதையெல்லாம் முடிவு கட்டுவீங்க?
ஹா ஹா ஹா! சிரிப்பு சிரிப்பா வருது!
எங்கேயோ கண்ட காட்சியை மட்டுமே வைத்து முடிவு கட்டுவதால் தான், இத்தனை புரிதற் பிழைகள்!
ஆனந்த பவன், சரவண பவன்-ன்னு தமிழ்நாட்டில் ஒரே பவனா இருக்கு! அதனால் தமிழர் எல்லாரும் வடக்கத்தி ரொட்டியைத் தான் சாப்பிடுவாங்க போல-ன்னு சொல்லுறது போல இருக்கு, யானை மேல ஓம் போடறாங்க-ன்னு சொல்லுறது! ஹா ஹா ஹா :))))
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteமுருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று நம்ப வைக்கப்பட்டவர்கள் முருகனுக்கு மட்டுமே பிரணவ மந்திரம் உரியது என்று நம்புகிறார்கள். அதனால் தான் ஓம் சைவமா வைணவமா என்ற கேள்வி வருகிறது போலும்//
ஹா ஹா ஹா!
கோவி அண்ணா யானை நெத்தியில் ஓம் பாத்தாரு! முடிவு கட்டிட்டாரு!
இன்னொருத்தர் மயில் தோகை விரிஞ்சி ஓம்-போல இருந்துச்சாம்! அதுனால ஓம் எங்க சொத்து மட்டுமே-ன்னு சொல்றாரு!
நான் கூட கங்காரு உருவத்தில் வளைந்து நீண்டு ஓம் பார்த்தேன்! ஓம்-இன் சுழி தான், கங்காரு குட்டி இருக்கும் பை!
ஸோ, ஓம், கங்காரு மதத்தில் தான் முதன்மையா இருக்கு! :))
KRS கலக்குங்க...
ReplyDelete//முருகப் பெருமான் பிறந்த நாளான, நாளை வைகாசி விசாகத்தில்//
மறந்துட்டேனே! ...
முருகனை வைத்து யாருப்பா இங்க பிரச்சனை பண்ணுறது..கோவி கண்ணனா! பிச்சு போடுவேன் பிச்சு :-)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஓம்காரம் தமிழ்ச்சொல்லா வடசொல்லா இரவி?//
அதான் பதிலை நீங்களே சொல்லிட்டீங்களே குமரன்!
அகர முதல் எழுத்தெல்லாம் என்பதில் அகரம்-ன்னு வருதே! அந்த அகரம் தமிழ்ச் சொல்லு-ன்னா ஓங்காரமும் தமிழ்ச் சொல்லே!
வடமொழியிலும் ஓங்கார், ஓங்காரம்-ன்னு அதே சொல்லு இருக்கலாம்!
தெய்வம்->தேவம் ன்னு தமிழிலும் உண்டு!
வசுதேவ சுதம் "தேவம்"-ன்னு வடமொழியிலும் உண்டு!
அது போலத் தான் ஓங்காரமும்! இரு மொழிகளிலும் ஒரே மாதிரி பலுக்கப்படுகிறது போலும்! இருங்க இராம.கி ஐயாவுக்கும் மின்னஞ்சல் செய்கிறேன்.
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteகலித்தொகை சைவ நூல் தான். அது தெரியாதா உங்களுக்கு?//
அப்படியா? நண்பன் ஜிரா கூட அப்படிச் சொன்னது இல்லையே! :)
கலித்தொகை இனி எனக்கு கிலித்தொகை ஆயிரும் போல இருக்கே! :))
//ஆங்காங்கே மாயோன் சொல்லப்பட்டாலும் அது சிறுபான்மை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்//
ஓ! மைனாரிட்டி! அதான் இந்த மேலாதிக்க மனப்பான்மையா?
எனக்குப் பிடிச்சா மாதிரி எழுது்! அதில் இருக்கும் நல்லதை ரொம்ப வெளிச்சம் போட்டுக் காட்டாதே! எங்களுக்குப் பிடிச்சா மாதிரி கொஞ்சமாக் காட்டினாப் போதும்...இதெல்லாம் இந்தச் சிறுபான்மை எண்ணத்தில் தானா? சூப்பரோ சூப்பர்! :))
//நீங்கள் மாயோனைப் போற்றுவதும் ஏறக்குறைய அதே அளவிற்கு என்று காட்டினாலும் நாங்கள் அவை சிறுபான்மை என்றே சொல்வோம்;//
ReplyDelete//தமிழும் சைவமும் ஒரு பொருள் தரும் இரு சொற்கள் - ஒரு பொருட் பன்மொழி. :-)//
//அதே மாதிரி ஓம் சைவம் தான்.//
//முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள். :-)//
அத்தனையும் வாழ்க்கையில முதல் முறையா ஒத்துக்கறேன்!
ஆறு வார்த்தைகள் மாதிரி நாலு வார்த்தைகள் சொல்லி என்னை ஆளாக்கிய குமரனுக்கு நன்றியோ நன்றி! :)))
@கோவி அண்ணா
ReplyDelete//ஓம் - என்பதை உருவ வழிபாட்டுக்குள் கொண்டுவரும் போது தான் சிக்கல்//
ஓம்-க்கு உருவமே கிடையாது! ஆனா அதுக்கு உருவம் கொடுத்ததே இவிங்க தான்! மயிலைச் சுற்றியும், முருகனைச் சுற்றியும் ஓம் ஓம்-ன்னு காலண்டர்-ல வரைஞ்சா மாதிரி வேற எங்கேயும் வரையலை!
அதனால், காலண்டரில் மட்டும் பாத்துட்டு, காலண்டர் தரவோடு, நீங்க ஓம்-னா சைவ முதன்மை-ன்னு நினைச்சிட்டீங்க போல! இப்ப தான் தெரிஞ்சி போச்சுல்ல! கருத்தைத் திருத்தம் பண்ணிக்கோங்க! :)
கோவி.கண்ணன் said...
ReplyDelete//மற்றபடி பரம்பொருள் எது, பரப்பிரம்மம் உண்மையா ? இரண்டும் ஒன்றா ? என்பதில் எனக்கென்று கருத்து இருக்கிறது//
அது என்னா-ன்னு அறிய எனக்கும் ஆவலா இருக்கு! உபதேசம் பண்ணி வைக்குமாறு கோவியானந்தாவைக் கேட்டுக்கறேன்! :)
//அதை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவதில்லை//
கருத்தை மாற்றிக் கொள்ளவே கூடாது-ன்னு ஒரு கருத்தைப் பிடிச்சிக்கக் கூடாது!
கருத்தை மாற்றிக் கொள்வதில் தப்பே இல்லை!
கருத்தின் நேர்மையை மாற்றிக் கொள்வது தான் தவறு!
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteசைவம் வைணவம் எல்லாம் வெறும் கட்டுமானங்களே என்பது நன்றாகத் தெரியும்.//
உலகில் எது தான் கட்டுமானம் இல்லை-ண்ணா?
சமணம், பெளத்தம் கூட கட்டுமானம் தான்! அதையும் சேர்த்தே சொல்லுங்களேன்!
//சமூக அரசியல் பற்றிப் பேசும் போது அதை ஒட்டிய கருத்துக்களைச் சொல்வதுண்டு, அதனால் ஒன்றை வெறுக்கிறேன், மற்றதைப் போற்றுகிறேன் என்று பொருள் அல்ல//
இதை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்!
கோவி அண்ணா சைவ-வைணவம் எல்லாம் கடந்தவர் தான்! (என்னைப் போலவே)
@குமரன்
ReplyDelete//ஐந்தெழுத்து (பஞ்சாக்ஷர) மந்திரம் = நமசிவாய
ஆறெழுத்து (ஷடாக்ஷர) மந்திரம் = சரவணபவ
எங்கே ஓம்காரம்?//
அலோ, குமரன்,
என் அடுத்த பதிவை எல்லாம் இப்படி பின்னூட்டத்திலேயே போட்டா எப்படி? :))
//சைவத்தில் ஓம்காரத்திற்கு இருக்கும் பெருமை நன்கு பரக்கப்பேசிப் பரப்பப்பட்டிருப்பதால் உங்களைப் போன்ற நுனிப்புல்லர்களுக்கும் தெரிகிறது.
வைணவத்தில் ஓம்காரத்திற்கு இருக்கும் முதன்மையை அறியாமல் இருப்பதற்குக் காரணம் அறியாமையே.//
உம்ம்ம்ம்! சைவத்தில் ஓங்காரத் தத்துவம் திருமூலரால் மிக அழகாகப் பேசப்பட்டிருக்கு! அதுவும் வைணவ ஸ்டைலில்! பரமாத்மா-உறவு-ஜீவாத்மா-ன்னு!
ஆனா அதையெல்லாம் படிச்சித் தான் சைவத்தில் ஓங்கார முதன்மை-ன்னு இவர்கள் சொல்லவில்லை! திருமூலர் பரப்பவும் படவில்லை!
பரப்பப்பட்டது என்னான்னா, ஓம் போட்ட மயில் காலண்டர் தான்! :)
சங்கு சக்கரத்தில், சங்கு கூட வளைஞ்சி ஓம் போலத் தான் இருக்கு! இருங்க, நானும் காலண்டர் போடச் சொல்லுறேன்! :)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteபிரணவம் என்ற சொல்லைத் தவிர்க்கச் சொல்லி ஒரு வேண்டுகோள் வந்திருக்கிறது//
ப்ரணவம்-ன்னு எழுதாதீங்க! பிரணவம்-ன்னு எழுதுங்க-ன்னு சொல்ல வந்தாரா கோவி?
//ஓம்காரத்தைப் பற்றியே பேசும் போது அதற்கு வேறு மொழிகளில் இருக்கும் பெயர்களையும் மற்ற மொழிகளில் இருக்கும் ஒப்பான கருத்துகளையும்/சொற்களையும் சொல்லாமல் விளக்க இயலாது//
Yessu!
//தமிழார்வலர்கள் இந்த வேறுபாட்டினையும் உணரவேண்டும்//
ஆம்! குமரன் சொல்வது சரியே!
ஒன்றை விளக்க வரும் போது, மற்ற சொற்களையும் எடுத்துக் காட்டத் தான் வேண்டியிருக்கும்!
அதை புழங்குவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது!
பிரணவம் என்ற வடசொல்லே கண்ணுக்குத் தெரியக் கூடாது என்பது Untouchability!
& Untouchability is a sin! :)
//R.DEVARAJAN said...
ReplyDeleteஆம்; உண்மைதான் குமரன். பொதுவாக நாலாயிரம் பற்றிய
அறிவு பரவலாகக் காணப்படவில்லை//
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்!
ஆழ்வார் அருளிச் செயல்களை நாமெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்தாலே, மக்கள் செவிக்குச் சென்றடையும் தேவ் ஐயா!
//திருவாய் மொழிப்பாசுரத்தின் முதல் மூன்று வரிகள்
‘உ’,’ம’,’அ’ எனும் ப்ரணவத்தின்//
அருமையான பார்வை!
//(எல்லா வேதங்களிலும் ப்ரணவம் நான்) என்கிறான் கண்ணபிரான்//
இப்படிச் சொன்னது ஒரிஜினல் கண்ணபிரான்! கேஆரெஸ் அல்ல! :)))
தேவ் ஐயா தான் நீங்க இனிமே நீட்ட்ட்ட்ட்டி முழக்கப் போறதெல்லாம் சுருக்கமா அருமையா சொல்லிட்டார்ன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். நானும் சொல்லிட்டேனா? :-)
ReplyDelete//ஐந்தெழுத்து (பஞ்சாக்ஷர) மந்திரம் = நமசிவாய
ReplyDeleteஆறெழுத்து (ஷடாக்ஷர) மந்திரம் = சரவணபவ
எங்கே ஓம்காரம்?
//
இனிசியல் இல்லாமல் பெயரா ?
அவ்வ்வ்வ்வ்வ்
ஓம் நமசிவாய !
ஓம் சரவணபவ !
:)
//பிரணவம் என்ற சொல்லைத் தவிர்க்கச் சொல்லி ஒரு வேண்டுகோள் வந்திருக்கிறது. //
ReplyDeleteஐயோ, கேஆர்எஸும் தவறான புரிந்து கொண்டார். ஓம் என்பது ப்ரணவம் என்பதால் அதையே மீண்டும் விளக்கவேண்டாம் என்பதற்காகக் குறிப்பிட்டு இருந்தேன்.
ஏற்கனவே கைத்தூக்கினவர்கள் மீண்டும் கைத்தூக்க வேண்டாம் என்பது போல் !
ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்.
ReplyDeleteகமலக்கண்ணன், பெங்களூர்.
//புதுமை + புதுமை! அடுக்குத் தொடரா பிரணவம்? :)//
ReplyDeleteப்ரணவம் - புத்தம் புதியது
தேவ்
தமிழ்க் கடவுள்களான பெருமாள்/முருகன் ஆலயங்களில், இந்த ஒற்றை எழுத்து "ஓம்"-ஐ, ஒளி விளக்காக, கோபுரத்தில் காணலாம்!
ReplyDeleteதிருவரங்கத்து ஆலயக் கருவறை விமானமே ஓம் வடிவில் தான் இருக்கு! பிரணவாகார (ஓங்கார) விமானம் என்றே பெயர்!//
<<<<<<<<<<<<<<(திரு)அரங்கம் பதிவில் ஓர் அங்கமாகிவிட்டதில் மகிழ்ச்சி! ப்ரணவ விமானம் என்றுதான் அதற்குப்பெயர். தங்க ஓம் ஜொலிப்பாகத்தெரியும்.
\\கணேசன் ஐயாவை எள்ளலாக் கேட்டிருந்தார்!
ReplyDeleteவந்ததே கோபம் கேஆரெஸ்-க்கு! இப்பல்லாம் அவனுக்கு ரொம்பவே கோவம் வருதுல்ல? :)
//
>>> ஆமாமாம்.....எல்லாத்துக்கும் எ .மாடு மேல மழை பெஞ்சமாதிர்யும் இருக்கக்கூடாதே?
அதான் ஆண்டாள், இதை மட்டும் அப்படி அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறாள்!
ReplyDeleteஉந்தன்னோடு+உறவேல்+நமக்கு என்பது ஓங்காரம்/பிரணவம் ஆச்சே! அந்தப் பிரணவத்தை இறைவனால் கூட ஒழிக்க ஒழியாதே>>>>>>>>>>>>>>>>>>
உங்க தோழியும் வந்துட்டாங்களா?! ஆனா அவங்க சொன்ன உறவேல்
எனும் சொல்லை அழகாப்பிரிச்சி பொருள் சொன்ன உங்களுக்கு பாராட்டு
\\ அ = பரமாத்மா
ReplyDelete* உ = உறவு
* ம் = ஜீவாத்மா
இது தான் நம்ம எல்லாருடைய DNA Code! ஓங்காரம்! பிரணவம்!//
>>>>>>>>>>>>>>
அருமை தொடரவும்!