Showing posts with label நாராயணாய. Show all posts
Showing posts with label நாராயணாய. Show all posts

Wednesday, September 09, 2009

ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் "ரகசியத்" தாலி!

இன்னிக்கி, ஓம் நமோ Dash தொடரின், Climax-க்கு வந்திருக்கோம்!
மாதவிப் பந்தலுக்கும், "ரகசியத் தாலி"க்கும் என்ன சம்பந்தம்? ஹிஹி! அதெல்லாம் பதிவு முடியும் போது தான் தெரியும்! :))


இந்தப் பதிவு, மாதவிப் பந்தலுக்கு மிக முக்கியமான பதிவு! இந்த ஓம் நமோ Dash தொடரால், பந்தல் தன்னுடைய ஆன்ம பயனைப் பெற்றது-ன்னு கூடச் சொல்லீறலாம்!

பல சமயங்களில்,
* என்னிடம் வருந்தினோர்க்கு எல்லாம் என் மன்னிப்புகளையும்...
* என்னிடம் அருந்தினோர்க்கு எல்லாம் என் அன்பினையும்...
அன்பரல்லாதார்/அன்பர் என்று.....அடியவர்கள் "அனைவருக்குமே" பல்லாண்டு பாடி,
உங்கள் KRS, உங்கள் "அனைவரையும்" இந்த நேரத்தில் வணங்கிக் கொள்கிறேன்!

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ...
சடகோபன் தண்"தமிழ் நூல்" வாழ...
அனைவரும் இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

இந்தப் பதிவில், இராமானுசர் உங்களுடன் பேசப் போகிறார்!
அவர் திருக் கையொப்பத்தையும் நீங்கள் காணப் போகிறீர்கள்!

இந்த Climax பதிவின் Climax என்ன? = கோபுரம் மேல நின்னு ஊருக்கே கூவியது-ன்னு சொல்வாய்ங்களே! அது! :)

* அ-உ-ம்-க்கு = 3 பதிவு!
* நமோ-க்கு = 2 பதிவு!
* நாராயணாய-க்கு = 5 பதிவு!
அத்தனையும் இவரு மூனே நிமிஷத்துல எப்படிப்பா லீக்-அவுட் பண்ணாரு? :))
வாங்க, இன்னிக்கி பார்த்து விடலாமா? சென்ற பதிவு இங்கே!



மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்த உடையவரைச் சென்ற பதிவில் பார்த்தோம் அல்லவா?
* ஒரு மணி நேரம், ஒருவருக்காக, வீதியில் காத்துக் கிடந்தாலே எரிச்சல் வருகிறது!
* ஒரு பிறவி முழுக்கவும் காத்துக் கிட-ன்னு, ஏழை எளிய மக்களிடம், எப்படி வாய் கூசாமல் சொல்வது?
ஐயகோ! இதுவா "நீர்"-மை? இதுவா "நீரா"யணம்? இதுவா "நாரா"யணம்???

குருவின் வார்த்தையை மீறினால் நரகம் தான்! ஆனால் வரப் போவது சொர்க்கமா? நரகமா? மோட்சமா? என்றெல்லாம் அவர் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கவில்லை!
** அவருக்கு இருந்த ஒரே குழப்பம் = குருவைப் பார்ப்பதா? அடியவர்களைப் பார்ப்பதா?
தர்ம சங்கடம்! முன்பு இராமன் வசிட்டரை மீறினான்! இன்று இராம-அனுசன் நம்பிகளை மீறப் போகிறாரா? ஆகா!

அதோ.....திருக்கோட்டியூர் கோபுரம் கண்ணுக்குத் தெரியுதே! அஷ்டாங்க விமானம்! அது ஒரு வித்தியாசமான அமைப்பு!
ஆனானப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், திருவரங்கம் கோயிலுக்கு கூட 4 பக்கம் - 4 கோணம் மட்டுமே! ஆனா, இந்தச் சின்ன ஊரில்....
ஒரே விமானத்தில்....மூன்று கருவறையும் உள்ளடங்கி இருக்கு!

மொத்தம் 8 கோணமாய் - 3 அடுக்குகள்! (Octagonal Trimetry)
(ஓம்) + (ந-மோ) + (நா-ரா-ய-ணா-ய) = 8 & 3

ஆகா! ஆகா!
* பொறி தட்டுகிறது இராமானுசருக்கு! எம்பெருமானே இப்படி ஊர் அறிய மந்திரத்தைக் காட்டிக் கொடுக்கிறானே? "வெட்ட வெளிச்சமாத்" தானே இந்தக் கோபுரம் இருக்கு?
* கண்டவனுக்கும் சொல்லீறக் கூடாது என்று "ரகஸ்யமாய்" தன்னை மறைந்து கொள்கிறதா என்ன? "கண்டவனுக்கு" எல்லாம், அது தன்னைக் காட்டி விடுகிறதே!


விறு விறு என்று கோபுரத்தின் மேல் ஏறுகிறார் உடையவர்! கண்களின் ஓரத்தில் லேசாக நீர்!

வந்த கண்ணீரை, கண்களின் நடு வழியில் வரும் போதே....
"படக்"கென்று தொண்டைக்குள் அடைத்துக் கொள்ளும் வித்தை!
அதைத் தெரிஞ்சி வைச்சிருக்கார் போல!

சின்னஞ் சிறு வயதிலேயே அத்தனை கொடுமையும் பார்த்து விட்டார் அல்லவா?
ஆசிரியர் தன்னை விரட்டி விடல், பின்பு, குருவே தன்னைக் கொல்ல முயற்சி,
பின்பு, திருமண முறிவு, பின்பு, உடன் பழகிய பலரின் வெறுப்பு, பின்பு சக அடியவர்கள் தன் மீது பொறாமை...
பின்பு, குருவைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் போதே குருவின் மரணம்!
- இப்படிப் புடம் போட்டு விட்டது போல! கண்ணீர் மட்டும் வெறுமனே வழிகிறது!

கோபுரத்தில் இருந்து, உரத்த குரலில் கூவிக் கூவி எல்லாரையும் அழைக்கிறார்!
உடன் வந்த சீடர்கள், "இவர் என்ன தான் பண்ணுறாரு?"-ன்னு தெரியாமல் விழிவிழி-ன்னு விழிக்கிறார்கள்!
வயல் வெளிகளில் இருந்தும், ஊர்ச் சந்தைக்கும் வந்த கூட்டம், கீழே அலை மோதுகிறது! கோபுரத்தின் கீழ் நிற்க இடமில்லை!

இந்தச் சின்னப் பையன், வாலிபத் துறவி, இனிக்க இனிக்கப் பேசுகிறான் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா அப்படி என்ன பெருசா சொல்லிடப் போறான்?
உடையவர் கீழே குனிந்து அத்தனை பேரையும் பார்க்கிறார்!
கன்னங் கரேல் என்று அன்றாடம் வெயிலில் வாடிடும் மக்கள்! இவர்களுக்கு என்னா-ன்னு சொல்லுறது? நம்பிகள் தம்மிடம் சொன்னது என்ன???

நர சமூகோ நாரா:
நாரா ஜாதானி தத்வானி
நாரா நிதி ததோ விது:
தான்யேவ சயனம் தஸ்ய - தேன
நாராயண ஸ்மிருதா:

செற்றமே வேண்டித் திரிதருவேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி,
நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்
நாரணா என்னும் நாமம்!


இப்படி எல்லாம் சொன்னா, இவிங்களுக்குப் புரியுமா? சரி, சரி, மிகவும் எளிதாக்கிச் சொல்லீற வேண்டியது தான்! வேறு வழியில்லை.....
இறைவனே பன்றியாய்க் கீழே இறங்கி வருகிறானே! நாம் இறங்கினால் ஒன்னும் குறைந்து விட மாட்டோம்!! என்னை மன்னித்து விடுங்கள் திருக்கோட்டியூர் நம்பிகளே!


ஓம் நமோ Dash.....
அந்த "ரகஸ்யம்",
இதோ.....ஊருக்கே போட்டு உடைக்கப்பட்டு விட்டது! உங்களுக்கு? :))

அனைவர் முகத்திலும் ஏதோ எளிமையாகப் புரிந்து கொண்ட திருப்தி!
எல்லாருக்கும் வாயெல்லாம் சிரிப்பு!
உடையவர் வாயால் திருமந்திர அர்த்தம் கேட்டதே போதும் என்ற மோட்சத் திருப்தி! அடியவர்களோடு கூடி இருந்து குளிந்தேலோ என்ற மோட்சத் திருப்தி!

அப்பாடா....இனி பிறவியே இல்லை என்ற சுயநலம் = வெறுமனே சம்சார துக்க நிவர்த்தி = அதுவா மோட்சம்?
இல்லை! இல்லவே இல்லை!
அந்தமில் பேரின்பத்து "அடியவர்களோடு" கூடி
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!


உடையவர் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறார்.....எதிரே சாட்சாத் திருக்கோட்டியூர் நம்பிகள்! அவர் முன்குடுமி கோபத்தால் ஆடுகிறது!

பழுத்த வைணவ நம்பிக்கு, கண்களோ சிவ சிவ! :)
கண்கள் சிவ சிவ! பற்கள் நற நற! அதரம் அர அர! :)

நம்பி: "இராமானுஜா! என் முகத்தில் விழிக்காதே! போய் விடு இங்கிருந்து! திருக்கோஷ்டியூர் பக்கம் இனி எட்டியும் பார்க்காதே!"

உடையவர்: "அடியேன் என்றைக்கும் உங்கள்-இராமானுசன் தான், குருவே!"

நம்பி: "இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! உதட்டில் பஞ்சு, உள்ளத்தில் நஞ்சா? குருத் துரோகி! போயும் போயும் உன்னையா ஆளவந்தார் நம்பினார்?"

உடையவர்: "ஐயோ...சுவாமீ...."

நம்பி: "ச்சீ....அப்படி அழைக்காதே! நான் உன்னைச் சபித்தால் என்ன ஆவாய் தெரியுமா?"

உடையவர்: "ஆச்சார்யர் திருவடிகளே தஞ்சம் என்று, அப்போதும் உங்கள் காலடியிலேயே வீழ்ந்து கிடப்பேன்!"

(நம்பிக்குக் கண் கலங்குகிறது...இவனை என்னவென்று சொல்வது?..எவ்வளவு திட்டினாலும், நம்மை அல்லவா ஏக்கமுடன் பார்க்கிறான்!
சாத்திரத்தை மீறியவன் போலவும் தெரிகிறான்! மீறாதவன் போலும் தெரிகிறானே.........?

நம்பியின் கோபத்தைப் பார்த்து, மொத்த ஊரே அரண்டு போய் நிற்கிறது!)
நம்பி: "குருவின் வார்த்தையை, அரை நாழிகைக்குள் மீறி விட்டாயே! உனக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?"

உடையவர்: "நரகம் தான் சுவாமி!"

நம்பி: "தெரிந்துமா இப்படிச் செய்தாய்?"

உடையவர்: "கேட்பவர் "எவராயினும்" அவருக்கு மோட்சம் "காட்ட" வல்லது என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?
இத்தனை பேர் இங்கு உழல்வதை விட, அடியேன் ஒருவன் தானே? நரகத்தில் தாராளமாக உழலலாம் அல்லவா? கேட்ட அத்தனை பேரும் மோட்சம் அடைவார்கள் இல்லையா?"

நம்பி: "ஆஆஆஆஆஆஆ...இராமானுஜா!"

உடையவர்: "நொண்டியோ, குருடோ, விகாரமோ, அழகோ.....அத்தனை குழந்தைகளும் தாயிடம் சேரட்டுமே!
அடியேன் ஒருவன் குருத் துரோகி ஆகி நரகத்தைச் சேர்கிறேன்! எனக்கு ஆசி கூறி, நரகத்துக்கு அனுப்பி வையுங்கள் சுவாமி!"

(நம்பியின் காலில் உடையவர் விழ......அதட்ட வந்த நம்பிகள் அரண்டு போகிறார்! இப்படி ஒரு பதிலைத் தன் வாழ்நாளில் அவர் கேட்டதே இல்லை!)

(இளைய இராமானுசனை வாரி எடுத்துக் கொள்கிறார்!)
நம்பி: "காரேய்க் கருணை இராமானுசா! ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி "வரம்பு அறுத்தாயோ"?

எம்பெருமான் தன்னிலை இறங்கி வருவான் தெரியும்! ஆனால் மனிதன் இறங்கி வர மாட்டானே? அவன் பிடிச்சதே பிடியாச்சே! இள ரத்தத்துக்கு இன்னும் அதிகமாச்சே? இந்தச் சின்ன வயதில் இவ்வளவு இரக்கமா உனக்கு? நீ மகாலக்ஷ்மித் தாயாரின் குணத்தை அல்லவா பெற்று இருக்கிறாய்?

அவன் எம்+பெருமான்! ஆனால் நீயோ எம்+பெரும்+ஆனார்! நீரே எம்பெருமானார்! நீரே எம்பெருமானார்!

குறிப்பு:
1. பதிவின் நிறைவு வேறு மாதிரி அமையணும் என்பதற்காக, கோபுரத்தின் மேலிருந்து அப்படி என்ன தான் சொன்னார்-ன்னு, இன்னும் அடியேன் உங்களுக்குச் சொல்லவில்லை! :))

2. "ஓம்" என்பது வேத மந்திரம்! அதில் பெண்கள், நான்காம் வருணத்தவர் உட்பட சில பேருக்கு அதிகாரம் இல்லை!
மேலும், கிழக்கு பார்த்து சொல்லணும் போன்ற நியம ஆச்சாரங்கள் உண்டு - என்றெல்லாம் ஒரு சிலர் கருதுவார்கள்!

அந்த ஒரு சிலர், "இராமானுசர், "ஓம்" என்பதை விட்டுவிட்டு, "நமோ நாராயணாய" என்பதற்கு மட்டுமே விளக்கஞ் சொன்னார்" என்று எடுத்துக்கிட்டு வருவார்கள்! அப்படி வந்தும் இருக்கிறார்கள் பல மின் குழுமங்களில்! :)

ஆனால் அவற்றில் கிஞ்சித்தும் ஆதாரம் இல்லை! "காரேய்க் கருணை" இல்லை! எதையோ கட்டிக் காப்பாத்த வேணும் என்ற எண்ணம் இருக்கே அன்றி "பகவதோஸ்ய தயைக சிந்தோ" இல்லை!

* நம சிவாய(5), சரவண பவ(6) என்று இறைவனின் மற்ற மகா மந்திரங்களைப் போல் அல்லாமல்.....
திரு-எட்டு-எழுத்தின் தன்மையே = ஓங்காரத்தை அதில் இருந்து பிரிக்கவே முடியாது என்பது தான்! ஒழிக்க ஒழியாது = DNA!

ஓம்-ஐ நீக்கி விட்டால், திரு-எட்டு-எழுத்து என்பது ஏழு எழுத்தாகி விடும்! அஷ்டாட்சரம்=சப்தாட்சரம் ஆகி விடும்! :) அதை உடையவர் ஒரு நாளுஞ் செய்யார்!

ஆச்சாரம் பார்ப்பவர்களின் மன நிம்மதிக்கு வேணுமானால்:
வேதம் தான் எல்லாரும் சொல்லக் கூடாது! "வேதம்" என்ற சொல்லையாச்சும் அனைவரும் சொல்லலாம் அல்லவா?
அது போல "ஓம் என்ற சொல்லைச்" சொன்னதாக எடுத்துக்கிட்டு, "அப்பாடா இராமானுஜர் ஆச்சாரத்தை மீறலை"-ன்னு வேணும்-ன்னா அவரவர் திருப்தி பட்டுக் கொள்ளுங்கள்! :))
"சாங்கேத்யம் பாரிகாஸ்யம் ச" என்று பரிகாசமாகக் கூட இதைச் சொல்லலாமாம்! அதையும் வேதமே தான் சொல்லுது! உண்மை அப்படி இருக்க......இவர்கள் மட்டும்....ஹைய்யோ ஹைய்யோ! :))


சரி.....உடையவர் கோபுரத்தில் இருந்து சொன்னது தான் என்ன? அவர் வாயாலேயே நாம் கேட்க வேண்டாமா?
.
.
.
எங்கே, உங்கள் காதுகளையும், கண்களையும், உள்ளத்தையும்.....இனி உடையவரிடம் கொடுங்கள்!
.
.
.
இதோ...உங்கள் உள்ளத்திலே...இராமானுசர் கையொப்பமிட்டு...பேசத் துவங்குகிறார்!

"அன்பர்களே, ஆசை உடையோர் எல்லாரும் ஓடி வாருங்கள்!
உழன்றும் உழவே தலை என்று தலையாய இருக்கும் நீங்களா இன்னும் உழன்று கொண்டிருப்பது? இதோ, கேளுங்கள்....
* உங்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள, மந்திரப் பொருள் இதுவே!
* நம் அனைவருக்கும் பொதுச் சொத்தான மந்திரப் பொருள் இதுவே!


நீங்கள் இதைத் தனியாக எங்கு போய்ப் படிப்பீர்கள்? படிக்க, பக்கம் நின்று கேட்டாலே போதும்! பரிந்து உள் உணர்ந்தாலே போதும்!
அதனால் "தெரிந்து/அறிந்து" வைத்துக் கொள்வதை விட, "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!
கவனமாகக் கேட்டு, ஆராத ஆசையுடன், "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்! "உணர்ந்து" வைத்துக் கொள்ளுங்கள்!

----------------------------------------------------------------------------------------------------


* ஓம் என்றால் அ-உ-ம்! = அவன்-உறவு-நாம்!

* அ = அனைத்துக்கும் முதல் = அகர முதல = இறைவன்!
* ம் = நாம்!
* உ = உறவு!

அவன் எங்கோ இருக்கிறான், தவம் செய்தால் மட்டுமே அடைய முடியும் என்று நினைத்து விடாதீர்கள்! பெற்றவளைக் காணத் தவம் செய்ய வேணும் என்றில்லை!
அவனுக்கும்-நமக்குமான உறவு "என்றும்" இருக்கிறது! அதை அவனே நினைத்தாலும் ஒழிக்க முடியாது!


அவனுக்காகவே நாம்! நமக்காகவே அவன்!
# அதனால் "பய பக்தியில்" பயத்தை விட்டு விடுங்கள்! பத்தியைக் கைக் கொள்ளுங்கள்! ப்ரபத்தியைக் கைக்கொள்ளுங்கள்!
# "நம் வீட்டிலே அவனும் ஒருவன்" என்று அனுதினமும் அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்! = அது தான் ஓம்!

----------------------------------------------------------------------------------------------------


* நமோ என்றால் ந-ம = எனதில்லை! எனது இல்லவே இல்லை!

# எல்லாம் எனக்குக் "கொடுக்கப்பட்டது"! எல்லாமே வாடகைப் பொருள்!
அதற்காக எல்லாத்தையும் விட்டுறச் சொல்லலை! அவற்றுக்கு நிரந்தர மதிப்பைக் கொடுக்காமல், தற்காலிக மதிப்பைக் கொடுங்கள், போதும்!
உலகம் மாயை அல்ல!
உலகம் உண்மை! நீங்களும் உண்மை!


# ஆசையை விட்டு விட எல்லோராலும் முடியாது! ஆசையை ஒழிக்க முயலாதீர்கள்! ஆசையை வையுங்கள்! :)
ஆனால் எங்கே? = அவன் திருமேனி மீது "அதிக" ஆசை வைத்து விடுங்கள்!

அங்கு அதிகம் வைத்து விட்டால், மற்ற "ஆசை"களால் உங்களை "அசை"க்க முடியாது!
ந-மோ = நான் எனக்குச் சொந்தம் இல்லை! நான் அவனுக்கு மட்டு"மே" சொந்தம்!

----------------------------------------------------------------------------------------------------


* நாராயணாய என்றால் நமக்கு அவ"னே" தஞ்சம்! அவனுக்கு நாம், நமக்கு அவன்!
வேறு உபாயங்கள் நடுவில் உள்ளனவா? = இல்லை! இல்லவே இல்லை! அவ"னே" தஞ்சம்!

நாரம் என்றால் நீர்!
அணம் என்றால் அருகில்!
நாரணம் = அந்த "நீர்" நம் எல்லாருக்கும்!


# அவன் நீரைப் போல! = நீர் இன்றி அமையாது உலகு!
# அவன் நீரைப் போல! = எதில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைக் கொள்வான்!
# அவன் நீரைப் போல! = கீழ் நோக்கியே இறங்கி வருவான்!
நீரே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவையும் அதுவே விளைவிக்கும்!
அது போல் காரணமும் அவனே! காரியமும் அவனே!


அவன் தொலைவில் இருக்கிறவன் என்று பூஜைகளோடு மட்டும் ஒதுக்கி வைத்து விடாதீர்கள்!
அவன் நம்மில் ஒருவன் என்று அனுதினமும்...
அவனோடு உறவு கொள்ளுங்கள்! உறவு கொள்ளுங்கள்!
அந்த உறவு தான் பலம்! இன்பம்! நிம்மதி! எல்லாம்!



பொதுவாகத் தாலிச் சரட்டில், 8 இழைகள் 2 சரடாய் இருக்கும்! 8x2=16
ஆனால் இந்த "ஓம்-நமோ-நாராயணாய", உலகத் தாலியை விட உறுதி மிக்கது! 8 எழுத்து x 3 பதம் = 8 இழை x 3 சரடுகளாய், 8x3=24...
இன்னும் இறுக்குகின்றது! உங்களை அவனோடு இன்னும் இறுக்குகின்றது!

1. ஓம் (1)
2. ந-மோ (2)
3. நா-ரா-ய-ணா-ய (5)

* இந்தப் பெரிய திருமந்திரமே = "உங்கள்-அவன்" உறவுக்கான தாலிச் சரடு! திருமாங்கல்யம்!
* நம்மை அவனுக்கு மட்டு"மே" கட்டி வைத்துள்ள திருமாங்கல்யம்!
* அவனையும் பிடித்து, நம்மிடத்தில் உறவு ஏற்படுத்தி விட்ட திருமாங்கல்யம்!

பிறவிகள் தோறும் உலகத் தாலி மாறி விடும்!
ஆனால் இந்தத் தாலி மட்டும் என்றும் மாறவே மாறாது!
என்றும் கூடவே வரும்! எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து!


எங்கே.......
திருக்கோட்டியூர் நம்பிகளின் சீடன்,
அடியேன் இராமானுசனுடன் எல்லாரும் சேர்ந்து...

இந்தப் பெரிய திருமந்திரத்தை,
நாடும் நகரமும் நன்கறிய...
சொல்லும் போது...வெறுமனே வாய் அளவில் சொல்லாமல்...


* தாலிச் சரட்டை மனசாரத் தொட்டுக் கொள்ளுங்கள்!
* உறவு, உறவு, உறவு என்று நினைத்துக் கொண்டு,
எல்லாரும் மூன்று முறை சொல்லுங்கள்!


ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!
ஓம் நமோ நாராயணாய! = ஓம் நான் உன்னுடையவ"னே"!


(நிறைவு)




இத்துடன்....மாதவிப் பந்தலில்,

* ஓம் (அ-உ-ம்) என்பதற்கான விளங்கங்களும் - 1, 2, 3
* நமோ என்பதற்கான விளக்கங்களும் - 1, 2
* நாராயணாய என்பதற்கான விளக்கங்களும் - 1, 2, 3, 4, 5

நிறைந்தே நிறைவானது! மாதவிப் பந்தலும் நிறைவானது! "நிறைந்தேலோ" ரெம்பாவாய்!


புகுந்த வீட்டில் புகுந்தாலும், சில அதீத அன்புள்ள பெண்கள், பிறந்த கிராமத்தையே மனத்தளவில் சுவாசித்துக் கொண்டு இருப்பார்கள்!
அது போலத் தான், பந்தலின் சுவாசத்தில், துளசீ மணமே அதிகம் கமழ்ந்து கொண்டு இருந்தது!

ஆனாலும், எங்கள் குல தெய்வம், தமிழ்க் கடவுள், அடியேன் இள வயதில் புகுந்த பிரான்,
என் முருகப் பெருமானிடத்திலே.....

இது வரை வந்த பந்தல் பதிவுகளையும், அடியார் கைங்கர்யத்தையும், இனி-தே ஒப்புக் கொடுத்து விடுகிறேன்!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி, நாடி நான் கண்டு கொண்டேன் நாரணா என்னும் நாமம்!

காதல் என் பெருமானே,
"உன் தனக்கு-நான்"
என்று "எழுதப்பட்ட" அந்நாள்!


உனக்கே நான் ஆட்செய்வேன்! உனக்கே நான் ஆட்செய்வேன்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
காதலால்...
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!
உன் தன்னோடு-உறவேல்-எனக்கு!



- உன் இதய வாசல்படி, மாதவிப் பந்தல்!

Read more »

Sunday, August 30, 2009

ஓம் நமோ Dash!-மனிதன் இல்லைன்னா கடவுளே இல்லை!-4

கடவுள் இல்லை-ன்னு சொல்றாங்களே! அதானே பகுத்தறிவு? = ஆமா! உண்மை தான்!
கடவுள் இல்லை தான்! = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை!

* ஆகா! கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்?
* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே?
ஏன் கேஆரெஸ் எப்பமே இப்பிடி டகால்ட்டி பண்ணுற? கெட்ட பேரு வாங்கிக்குற? சாஸ்திர விரோதி பட்டமெல்லாம் ஒனக்குத் தேவையா? :)))

அட, "நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை"-ன்னு சொல்லுறது நான் இல்லீங்க! ஆழ்வார் தான் அப்படிச் சொல்றாரு! :) மேலப் படிங்க.....


சென்ற பதிவில் "நாரணம்" என்பது சங்கத் தமிழ்ச் சொல்லே-ன்னு பார்த்தோம் அல்லவா?

அதை மேலும் சான்றளித்துச் செவ்வியாக்கும் வண்ணம், நம் இராம.கி ஐயா, அருமையான ஆய்வுப் பதிவு ஒன்றை இட்டிருக்கார்! இதோ! தட்டாது வாசித்துப் பாருங்கள்! Very Analytical & Unbiased!

தொல்காப்பியர் காலம் தொட்டே...
* சேயோனாகிய முருகனும்
* மாயானோகிய திருமாலும்

தமிழ்க் கடவுள் என்னும் சிறப்பு பெறுகின்றனர்
என்று சில, பல, பலப் பல பதிவுகளில், அவ்வப்போது பார்த்து வந்துள்ளோம்! மெல்லிய எதிர்ப்புகளுக்கு இடையிலும்! :)

தமிழகத்தில், வேறு சில அவைகளில்,
டாக்டர் மு.வ, இராசமாணிக்கனார், அரங்கண்ணல், மு.மு. இஸ்மாயில் போன்றவர்களால், மாலவனும் தமிழ்க் கடவுளே என்று இதே கருத்து எழும்பிய போது,
சில ஏக போக போங்காளர்களும், "பகுத்தறிவாளர்களும்" கூட அதற்கு எதிர்ப்பு காட்டியுள்ளனர்!
இந்த எதிர்ப்புகள் பகுத்தறிவின் பாற்பட்டதா? = இல்லை! "பகூத்" அறிவின் பாற்பட்டது! :)
"பகூத் அறிவு" என்றால் இந்தியில் "நிறைய அறிவு"-ன்னு பொருளாம் :)))

தமிழ் இலக்கியங்களையும், தமிழர் நாகரிகத்தையும், சங்க கால இறை இயலையும்,
"உள்ளது உள்ளபடி" வாசித்தால், இந்த "பகூத்" அறிவு கொறைஞ்சி, பகுத்தறிவு வளரும்! :)

தொல்காப்பியர், இன்னும் இரண்டு நிலத்துத் தெய்வங்களான வேந்தனையும், வருணனையும், கூடவே காட்டினாலும், அவர்களை வெறுமனே நிலத்தின் அடையாளமாகத் தான் காட்டுகிறார்! மக்கள் அடையாளமாகக் காட்டவில்லை!
அவர்கள் இருவரும் அடையாளமாகவே நின்று விடுகின்றனர்! மக்களோடு கலக்கவில்லை! ஆனால் மாயோனும் சேயோனும் அப்படி அல்ல!

வீங்குநீர் அருவி வேங்கடமும், சீர்கெழு செந்திலும்


திருவேங்கடம், திருவரங்கம், திருவேரகம் (சுவாமிமலை), செந்தில் (திருச்செந்தூர்) என்று மாயோன்/சேயோன் ஆலயங்கள் சங்கத் தமிழில் காட்டப்படுகின்றன!
அவை இன்றளவும் உள்ளன! மாயோனுக்கும் சேயோனுக்கும் பண்டைத் தமிழ் மக்கள் எழுப்பிய இந்த ஆலயங்களைப் போல், வேந்தனுக்கும் வருணனுக்கும் எங்குமே இல்லை!

வேந்தனும் வருணனும் வெறும் நில அடையாளமாகவே நின்று விடுகின்றனர்! மக்கள் தெய்வமாக இல்லை!
பூவை நிலை, குரவைக் கூத்து, வேலன் வெறியாடல் என்று மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து, இயைந்து விட்ட இரு பெரும் தமிழ்க் கடவுளரைப் போல், மற்ற இருவரும் கலக்கவில்லை!

அதனால் தான், மக்களோடு ஒன்றிய
* சேயோன்=முருகனும்,
* மாயோன்=திருமாலும்,
"தமிழ்க் கடவுள்" என்று போற்றப்படுகின்றனர்!
அன்றில் இருந்து இன்றளவும், தமிழ் இறை இயல் நெறிக்குப் பான்மையாய், ஆதாரமாய் விளங்குகின்றனர்!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மாமலை உச்சி மீமீசை
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்திய
செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமாய் -

நம்ம சிலப்பதிகாரமே வேங்கடவனைச் சங்கு சக்கரங்களுடன் தான் காட்டுகிறது! உண்மையான தமிழ் ஆர்வலர்களுக்கு அது தெரியும்! ஏக போக போங்காளர்கள் கண்ணை வசதியாக மூடிக் கொள்வர்! பூனை கண்ணை மூடிக் கொண்டால், பூலோகம்...??? :))

மாயோனின் திருவேங்கடம்/ திருவரங்கமும்,
சேயோனின் திருவேரகம்/ சீர்கெழு செந்திலும்
அன்றும் இருந்தது! இன்றும் இருக்கு! என்றும் இருக்கும்!


* "நாரணம்" தமிழ்ச் சொல்!
* "நாராயணம்" வடமொழிச் சொல்!
இரண்டுமே நீர்-மையைக் குறிக்க வந்தவை-ன்னு பார்த்தோம் அல்லவா?

நாரணம் = நாரம் + அணம் = நீர் + அருகாமை
"நீர்மைக்கு வழி"-ன்னு தெரிஞ்சிக் கிட்டோம்! அது என்ன "நீர்"-மை?
கடவுள் மேட்டர்-ல, எதுக்குய்யா "தண்ணி" கூட ஒப்பிடறாங்க? நல்லா, கிக்-ஏறும்-ன்னா? ஹா ஹா ஹா!

சரி...அதெல்லாம் போகட்டும்!
* நீரின் முக்கிய குணம் என்ன? = "கீழ்" நோக்கியே ஓடுவது!

நீரைப் பிடிச்சி அடைச்சி வைக்கலாம்! குளம், ஏரி-ன்னு ஓடாமல் அடைச்சி வைக்கலாம்! ஆனால் அதில் உடைப்பு எடுத்துக்கிட்டா, அதுவும் கீழ் நோக்கித் தான் ஓடத் துவங்கும்!

* அதே போல் இறைவனின் முக்கிய "குணம்" = "கீழ்மை"யில் இருக்கும் நம்மை நோக்கியே ஓடி வருவது!
அவனைப் பிடிச்சி சாஸ்திரம், மதம்-ன்னு அடைச்சி வைக்கலாம்! ஆனால் அவன் இயல்பே கீழ் நோக்கி ஓடி வருவது தான்!

நாம் அவனைக் கண்டுக்கிடலை-ன்னா கூட, அவன் மேலே உட்கார்ந்து கொண்டு ரூல்ஸ் பேச மாட்டான்! கீழ் நோக்கியே ஓடி வருவான்!
மீன்-ஆமை-கேழலாய், ஆளரியாய், குள்ளனாய், கள்ளனாய், தனக்கும் கூட பிறவிகள் ஏற்படுத்திக் கொள்வான்! "அவதாரங்கள்" = "இறங்கி வருதல்" என்பது இவனுக்கு மட்டுமே!

* இனி பிறவியே வேணாம்-ன்னு அவனவன் கேட்கும் போது, இவன் என்ன லூசா?
* எதுக்கு வலிய வந்து பிறவி எடுக்கணும்? உழன்று கஷ்டப் படணும்?
* பிறந்து, நமக்கு நல்லதும் பண்ணிக் காட்டணும், கெட்டதும் பண்ணிக் காட்டணும்?
* பண்ணின கெட்டதுக்கு, பலனை, இன்முகமா ஏத்துக்கறது எப்படி?-ன்னு வாழ்ந்து காட்டணும்?

மறைந்திருந்து இராமன்- வாலியின் வதம்! மறைந்திருந்து ஜரா செய்த கண்ணனின் வதம்! Every action has, an equal, but opposite reaction!


நாளைக்கு Cheap-ஆப் போயிருமே? இவன் "பிறந்தனன்", அவன் "உதித்தனன்"-ன்னு எல்லாம் கேலி பேசுவாங்களே?
அவன் வாழ்வை, அக்கு வேறா ஆணி வேறா அலசி, தோய்ச்சி தொங்கப் போடுவாய்ங்களே?

போடட்டும்! போடட்டும்! அதுக்குத் தானே "இறங்கி வருதல்"! :)
நமக்கென்று, நமக்காக, நம்மிடம் இறங்கி வருதல் = மேட்டில் இருந்து பள்ளத்துக்குப் பாய்தல்! = அதான் "நீர்"-மை! அதற்கு காரணம் = இயல்பு! காரேய்க் கருணை!


இறைவா, நீ எதுக்குய்யா ராசா என் கிட்ட கருணை காட்டுறே? அன்பா இருக்கே? நான் என்ன உனக்கு மாமனா? மச்சானா? உனக்கும் எனக்கும் என்னா உறவு?
= உன்தன்னோடு (அ) + உறவேல் (உ) + நமக்கு (ம்)
= அ+உ+ம்
= அதான் உறவு! அது ஒழிக்க ஒழியாது! DNA!

அப்போ கடவுள் இல்லை-ன்னு சொல்றாங்களே! அதானே பகுத்தறிவு?
ஆமா! ஆமா! உண்மை தான்!
கடவுள் இல்லை தான்! = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை!

* ஆகா! கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்?
* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே?

ஹிஹி! அடியேன் சொல்லவில்லை! ஆழ்வார் சொல்கிறார்! நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லையாம்! எப்படி இருக்கு கதை? ஹா ஹா ஹா!

இன்றாக, நாளையே ஆக, இனிச் சிறிதும்
நின்றாக, நின் அருள் என்பால்! அதே - நன்றாக,
நான் உன்னை அன்றி இலேன்! கண்டாய், நாரணனே!
நீ என்னை அன்றி இலை!

* மனிதன் இல்லையேல் மாதவன் இல்லையாம்!
* சமூகம் இல்லையேல் சரவணன் இல்லையாம்!
* அடியார்கள் இல்லையேல் அவனே இல்லையாம்!

அவனை "நீ இல்லாமல் போ"-ன்னு சொல்ல நமக்கு மனசு வருமா?
"இல்லை" என்ற சொல்லிலும் அவன் உளன் அல்லவா!

உறவை மறந்து வாழும் மனிதர்களை, அவனிடம் மீண்டும் ஆட்படுத்துவது யார்? = அடியவர்கள் தானே?
* கண்ணன், தன்னைப் பற்றித் தானே சொன்னால்? = தம்பட்டம்! :)
* கண்ணனைப் பற்றி, தோழி கோதையும் அவள் பட்டாளமும் சொன்னால்? = தமிழ்ப் பட்டம்!

இப்படி அவன் குணங்களை அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லி,
பிரிந்த குழந்தைகளை மீண்டும் தாயிடம் சேர்ப்பிப்பது போல்,
மனிதரை அவனிடம் சேர்பிக்கும் அடியார்கள் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பாசம்!
அதான் பகவத் கைங்கர்யத்தை விட பாகவத கைங்கர்யத்துக்கு இன்னும் அதிக ஏற்றம்! மானுட சேவையே மாதவ சேவை!

* நான் உன்னை அன்றி இல்லேன்! கண்டாய் நாரணனே!
* நீ என்னை அன்றி இல்லை!
எனக்கு நீ! உனக்கு நான்! = Made For Each Other :))


இடம்: திருக்கோட்டியூர் (சிவகங்கையில் இருந்து இருபது மைல்...)

பதினெட்டு முறை கால் தேய நடந்தாச்சி! ஓம் நமோ Dash-ன்னா என்ன-ன்னு, இன்னைக்காச்சும் இவரு சொல்லுவாரா மாட்டாரா?

என்ன அதிசயம்...இன்னிக்கி சொல்லிட்டாரே! இப்பிடி மொத்தமாப் பிரவாகமாச் சொல்லிட்டாரே! ஆகா! ஆகா! இதுவா பொருள்?
ஹைய்யோ! என் ஜென்மம் இன்னிக்கு-ன்னு பார்த்து இப்படி இனிக்கிறதே! இதுவா பொருள்? இதுவா பொருள்?

* இவ்வளவு எளிமையான பொருளா? இவ்வளவு எளிமையா வழியா?
* இம்புட்டு நாள் தெரியாமப் போச்சே! ஹைய்யோ!
* எல்லாரும் ரொம்ப கஷ்டம், ரொம்ப கஷ்டம்-ன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்களே! இது மட்டும் அவிங்க எல்லாருக்கும் தெரிஞ்சா...??

நம்பி: "இராமானுஜா! இது பரம ரகஸ்யம்!"

உடையவர்: (தயக்கத்துடன்) "சுவாமி! அப்படி என்றால்.........?"

நம்பி: "இந்த மந்திரப் பொருள் சூட்சுமமானது! அற்பர்களுக்கும், நான்காம் வருணத்தார்க்கும், பெண்களுக்கும் இதை மறந்தும் உபதேசித்து விடாதே!
மற்றவர்களுக்கும், அவரவர் தகுதி அறிந்து, நன்கு பரிசோதித்த பின்னரே உபதேசிக்க வேண்டும்! இது என் ஆக்ஞை!"

உடையவர்: (சுவாமி, நம்மாழ்வார் நான்காம் வருணமாச்சே! அவருக்கு எப்படி மந்திரம், ரகசியம்.....? வாய் வரை வந்த கேள்வியை, உடையவர் விழுங்கிக் கொள்கிறார்)
"சுவாமிகள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது! பாவம், ஏன் இவர்களுக்கெல்லாம் மந்திரத்தில் அதிகாரம் இல்லை?"

நம்பி: "அப்படித் தான் சாஸ்திரம் விதித்துள்ளது! இனி இப்படிக் கேட்காதே!
இந்த மந்திரப் பொருள் சகல தடைகளையும் நீக்கி, கேட்பவர் "எவராயினும்", அவர்கட்கு மோட்சம் "காட்ட" வல்லது!
* இந்தப் பிறவியை மட்டும் கடைத்தேற்றுவது அல்ல!
* பிறவியே இல்லாமல் பண்ணக் கூடியது! = பெரிய திருமந்திரம் என்று இதற்குப் பெயர்!

இது கண்டவர் கைக்கு போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேணும்!"

உடையவர்: "உம்ம்ம்ம்...சுவாமி, இன்னொரு கேள்வி! அப்போ தியானம், யோகம், தவம் எல்லாம் செய்கிறார்களே! அதெல்லாம் எதற்கு?
மிகவும் எளிதான இந்தப் பொருளை "உணர்ந்து", அதன்படி நடக்கலாமே? ஏன் அவ்வளவு கடினமான மற்ற வழிமுறைகள்?"

நம்பி: "நல்ல கேள்வி! இதுக்காகத் தான் மலைகளிலும் குகைகளிலும் தேடிப் போய் உட்கார்ந்து...அவரவருக்குப் பிடித்தமான முறையில்...அவரவர் அறிந்து...வழி தேடப் பார்க்கிறார்கள்!
ஆனால் வழியை "வழி"யாகத் தேடாமல், அவரவருக்குப் "பிடித்தமான முறை"யாகத் தேடுவதால் தான் இத்தனை குழப்பம்! ஊருக்குப் போகும் வழியை, வழியாகத் தானே பார்க்கணும்? தங்களுக்குப் பிடித்த மாதிரி வழி இருக்கணும்-ன்னு பார்த்தால் முடியுமா?

ஆனால் இந்தப் பெரிய திருமந்திரம் அப்படி அல்ல!
= இது "வழி/முறை" அல்ல!
= இது "உபாயம்" அல்ல!
= இது "உறவு"! இது உறவைக் காட்டிக் கொடுப்பது!"

உடையவர்: "குருவே! தங்களுக்கு மிக்க நன்றியுடையவன் ஆனேன்! இன்னொன்றும் தங்களிடம் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!
இது நம்முடைய உறவைக் காட்டுவது என்று சொல்கிறீர்கள்! உறவு தானே? உறவைச் சொல்வதில் என்ன ரகஸ்யம் வேண்டி இருக்கு? ஏன் இப்படி?"

நம்பி: "போதும் கேள்விகள்! ரகஸ்யம் என்றால் ரகஸ்யம் தான்! சாஸ்திர விதி! பாத்திரம் அறிந்தே பிச்சை இடணும்!
ஆளவந்தார் நியமித்து அனுப்பிய உனக்கே, பதினெட்டு முறை நடக்க விட்டு, இன்று தான் உபதேசம் செய்தேன்!

உன்னைத் தண்டும் பவித்திரமும் ஏந்தித் தனியாகத் தானே வரச் சொன்னேன்? நீயோ உன் சீடர்கள் இருவரைக் கூட்டிக் கொண்டு வந்து,
அவர்கள் தான் தண்டு, பவித்திரம் என்று புது வியாக்யானம் வேறு செய்தாய்! ஆனால் அவர்களுக்கு நான் உபதேசம் செய்தேனா?

இளைஞனாக இருக்கிறாய்! இளையாழ்வார் என்று வேறு உனக்கு சிறு வயதுப் பெயர்!
புரிந்து கொள் இராமானுஜா! இது பரம ரகஸ்யம்! இது முது சொத்து!
இந்தச் சொத்தைப் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்வது, இனி உன் பொறுப்பு!"

உடையவர்: "ஆகட்டும் குருவே! அடியேன், ஆளவந்தாரைப் பார்த்து உபதேசம் பெறலாம்-ன்னு நான் வந்து கொண்டிருக்கும் போதே, அவர் விண்ணுலகம் ஏகி விட்டார்!
அந்த இயலாமையும் மன உளைச்சலும் தீருமாறு இன்று என் வயிற்றில் பால் வார்த்தீர்கள்! உங்களுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கேன்!"

நம்பி: "சரி, இன்று ஊர்த் திருவிழா! மடத்தில் சாப்பிட்டு விட்டு, அப்புறம் திருவரங்கம் செல்! சொன்னது நினைவிருக்கட்டும்! மந்திரம் பரம ரகஸ்யம்! ஜாக்கிரதை!"

உடையவர்: "அடியேன்!"


உம்ம்ம்.....உறவைக் காட்டுவது! உறவைக் காட்டுவது!
பெற்ற தாயினும் ஆயின செய்யும்...நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்-ன்னு பாடி இருக்காரு-ல்ல?

உறவைக் காட்டுவது தானே? உறவைச் சொல்ல என்ன "ரகஸ்யம்" வேண்டி இருக்கு?
ஏன் அப்படி நம்ம குரு சொன்னாரு? ஒரு வேளை, எல்லாராலும் இந்த உறவைப் புரிந்து கொள்ள முடியாதோ?
உறவைத் தப்பா புரிஞ்சிக்கிட்டா, விபரீதமாப் போய் விடுமோ? அதான் தயங்குறாங்களோ?

இது போன்ற சந்தர்ப்பங்களில், "ரகஸ்யம்" என்றால் நுட்பம் என்று தானே பொருள்? வெற்றியின் "ரகசியம்"-ன்னா, வெற்றியின் நுட்பம் என்ன-ன்னு தானே கேட்கிறார்கள்?
அதான் மாறிப் போய், ரகஸ்யம் = யாருக்கும் சொல்லீறக் கூடாது என்று திரிந்து விட்டதோ?

சரி, எது எப்படியோ போகட்டும்.....பதினெட்டு முறை காவிரிக் கரையோரம் நடந்து வந்ததில், ஒன்றை மட்டும் நன்றாகப் பார்த்து விட்டேன்!
எத்தனை எத்தனை எளிமையான மக்கள்! எத்தனை அன்பு இவர்கள் உள்ளங்களில்?
என்னை யாரென்றே தெரியாமல், தங்கள் வீட்டுச் சிறுவனைப் போல் அல்லவா, அதே சமயம், எட்ட இருந்தே, பார்த்துக் கொண்டார்கள்?

நான் வெய்யிலால் மயங்கிச் சுருண்ட போது, பனையோலைகளைக் கூடாரம் போல் கட்டிக் கொண்டு, கூடவே பிடித்துக் கொண்டு வந்தார்களே!
சூழ்ந்து சூழ்ந்து கண்ணனைப் பற்றிக் கேட்டார்களே! நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வது ஏன்? என்று இவர்கள் கேட்க, அது இறைவன் திருவடி என்று நான் சொல்ல.......
அப்போ "கண்ணன் நெற்றியில் நாமம் இருக்கே! அவன் பாதங்களை அவனே ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்?" - என்று என்னமாக் கேட்டாள் அந்தக் கோனார் வீட்டுச் சுட்டிப் பெண்?

இவர்கள் எல்லாரும் மந்திரப் பொருளை எங்கு போய் அறிந்து கொள்ளப் போகிறார்கள்?
உழன்றும் உழவே தலை-ன்னு குறள் பாடியிருக்காரே! இவர்கள் எல்லாம் கடைசி வரை உழன்று கொண்டே இருக்க வேண்டியது தானா?

* இவர்களுக்கு குரு என்றோ, ஆசார்யன் என்றோ யாரும் இல்லையே! யாரிடம் போய்க் கேட்பார்கள்?
* இல்லை, விவசாயத்தை விட்டுவிட்டு, மலை குகைகளுக்குச் சென்று, தியானம்/தவம்-ன்னு செய்வார்களா?

* இவர்களுக்கு சாஸ்திரமோ வேதமோ தெரியாதே! எப்போது படித்து, எப்போது அறிந்து கொள்வார்கள்? வேதமெல்லாம் இவர்களைப் படிக்கத் தான் மற்றவர்கள் விடுவார்களா?
* இவர்களுக்கு-ன்னு தான் தமிழ் வேதம் செய்தார் அந்த வேளாளர் குல முதல்வர், நம்மாழ்வார்! ஆனால் அந்தத் தமிழைத் தேடிப் போய் படிக்க இவர்களுக்குத் தெரியணுமே?

ஹைய்யோ! இவ்வளவு எளிமையான பொருளைச் சொல்லாமல், "மறைத்துப்" போக எனக்கு மனசு வரலையே! இவர்களைப் பார்க்கும் போது...
"பரவாயில்லை! இந்தப் பிறவியில் கொஞ்சம் கஷ்டப் படட்டும்! பிராப்தம்-ன்னு ஒன்னு இருந்தா, அடுத்த பிறவியில் தெரிஞ்சிக் கிடட்டும்" என்றா சொல்லுவது?

மந்திரத்தை "அறிந்து" விட்டால் மட்டும் போதாது! "உணர" வேணும்! - என்று வேறு சொன்னாரே! மந்திரப் பொருளில் நர சமூகோ நார: நாரா ஜாதானி தத்வானி என்று வருகிறதே! "அனைத்தும் அவனில் தஞ்சம்! அவனும் இவர்களில் தஞ்சம்" என்றல்லவா வருகிறது?

அவனே இவர்களை அடையும் போது, மந்திரம் இவர்களை அடையக் கூடாதா?
அதை "உணர்ந்ததால்" தானே இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? ஏன் நம் குரு மட்டும் "உணர" மறுக்கிறார்?

ஹூம்ம்ம்....
# குருவின் ஆணையும் ஒரு தர்மம்!
# இவர்களை எம்பெருமானுக்கு ஆட்படுத்துவதும் ஒரு தர்மம்!
= இப்படி இரண்டு முரண்பாடான தர்மங்களுக்கு இடையே, தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டேனே!

(உடையவர் மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்க.......)
* ஒரு மணி நேரம் ஒருவருக்காக வீதியில் காத்துக் கிடந்தாலே எரிச்சல் வருகிறது!
* ஒரு பிறவி முழுக்கவும் காத்துக் கிட-ன்னு, இவர்களிடம் வாய் கூசாமல் எப்படிச் சொல்லமுடியும்?

ஐயகோ! இதுவா "நீர்"-மை? இதுவா "நீரா"யணம்? இதுவா "நாரா"யணம்?

(தொடரும்.....அடுத்த பகுதியில் நிறையும்)
Read more »

Sunday, August 16, 2009

ஓம் நமோ Dash! "நாரணம்" என்பது தமிழ்ச் சொல்லா?-3

இன்னிக்கி டாபிக் கொஞ்சம் வெவகாரமானது! வித்தியாசமானது! ஆனா ரொம்ப உண்மையானது! :)
* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம்
(வடமொழியில்)
-ன்னு சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்! இன்னிக்கி அதைக் கொஞ்சம் விரிவாப் பார்க்கலாம்! அவரவர் சார்பு நிலைகளைக் கழற்றி வச்சிட்டு, "மெய்ப் பொருள்" காண்பதாகவும் பார்க்கலாம்! என்ன வாரீங்களா? :))

அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு!
பதிவின் நோக்கம்: எல்லாம் கடந்த இறைவனை, வெறுமனே மொழிக் குறுகலுக்குள் அடைப்பது இல்லை!
ஆனால் ஆன்மீகம் எப்படி முக்கியமோ, அதே போல் மொழியும், அதைச் சார்ந்த இனமும், அங்கு இறையியல் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதும் முக்கியம்!
நம் தமிழில், நம் இறையியல் என்ன? என்பதான வேர்களைத் தேடும் முயற்சியே இது! இனி மேலப் படிங்க! :)



"நாரணம்" என்ற பெயரே கொஞ்சம் சிக்கலானது தான்!
பல உண்மைகளை உள்ளடக்கியது! ஒரு நல்ல அழகான தொன்மையான தமிழ்ச் சொல்லைப் பார்த்து, "இது தமிழ்ச் சொல் தானா?" என்று கூட கேட்க வைப்பது! ஹா ஹா ஹா :))

என் முருகப் பெருமானுக்கு இந்தக் கஷ்டமே இல்லை! முருகன்=அழகன்-ன்னு ஈசியா சொல்லிட்டுப் போயீரலாம்! அம்புட்டு எளிமையானவன்! செல்லமானவன்! :)
ஆனா இவரு "ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்" ஆச்சே! அதான் பதிலுக்கு இவரையும் ஆராயும் படி வச்சிட்டாங்க போல! நல்லா வேணும்-ப்பா ராசா உனக்கு! :)


தமிழ்-வட பண்பாட்டுக் கலப்பின் போது, இரண்டு பக்கமும் பரிமாற்றங்கள் நடந்து கொண்டன! மாயோனும் சேயோனும் தமிழ்க் கடவுளர்கள்! இதோ அதற்கான விவரணப் பதிவு!
மாயோன்-சேயோன் = நாட்டு வழக்காக பெருமாள்-முருகன்!
மாயோன்-சேயோன் = விஷ்ணு-ஸ்கந்தன் என்று ஆகி வடக்கே சென்றனர்!

* ஆனால் போன இடத்தில், மாயோன் என்ற விஷ்ணுவைக் கொண்டாடிய அளவுக்கு, ஏனோ சேயோன் என்னும் ஸ்கந்தனை அதிகம் கொண்டாடவில்லை!
* முல்லை நில முதல்வனை, மும்மூர்த்திக்குள் ஒருவராய் வைக்க முடிந்த அளவுக்கு, குறிஞ்சி நில முதல்வனை ஏனோ வைக்கவில்லை!


இத்தனைக்கும் முல்லையின் கண்ணன் கருப்பு! குறிஞ்சியின் முருகன் தான் வெள்ளை! :)

ஒரு வேளை, கண்ணனை ஒத்திருந்த கதைகள் அங்கு ஏற்கனவே இருந்ததோ என்னவோ, இயல்புக்கும் இணைப்புக்கும் ஈசியாய் இருந்தது போலும்!
ஆனால் ஸ்கந்தனுக்கு "முதன்மை" காட்டவில்லையே தவிர, ஸ்கந்த புராணம், தேவர் படைத் தலைவன், பிரணவம் சொன்னவன் என்று அவர்களும் ஏற்றுக் கொண்டு போற்றத் தான் போற்றினர்!

இங்கிருந்த போது, இயற்கை முறைப்படி இருவருக்குமே இயல்பான மனித உருவம் தான்!
அங்கு சென்றவுடன், நான்கு கரம்/பன்னிரு கரம், ஒரு முகம்/ஆறு முகம் என்று வேறு விதமான பரிணாம வளர்ச்சி! :)

இங்கிருந்து சென்ற இரு குழந்தைகள்! அங்கு ஒரு குழந்தை மாநிலத்துக்கே முதல்வராகி விட்டது! இன்னொரு குழந்தை மாநகரத்துக்கு மட்டும் கமிஷனர் ஆகி விட்டது! :)
* அவர்கள் ரொம்பவும் ஏற்றுக் கொள்ளாத குழந்தை "மட்டுமே", இனிமேல் என் குழந்தை!
* அவர்கள் அதிகம் ஏற்றுக் கொண்ட குழந்தை, இனிமேல் என் குழந்தை அல்ல! - என்று தமிழ்த் தாய் சொல்வாளா?


அப்படி ஒரு தாய் சொல்லுவா-ன்னு சொல்றவங்க கையைத் தூக்குங்க ப்ளீஸ்! :))))))
நினைவில் வையுங்கள்: எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும், மாயோனும் சேயோனும் என்றென்றும் தமிழ்க் கடவுளரே!


* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் (வடமொழியில்)

சரிப்பா, இலக்கியத்தில் மாயோன் = இன்றளவும் திருமால் = நாட்டு வழக்காய் பெருமாள்! தமிழ்க் கடவுள் தான்! ஒப்புத்துக்கறோம்!
ஆனால் "நாரணம்" எப்படி தமிழ்ச் சொல் ஆகும்? அதைப் "பார்த்தாலே" வடமொழி மாதிரி-ல்ல இருக்கு? :)))))
அதுக்கு பதில் சொல்லு கேஆரெஸ்! அதை விட்டுட்டு, நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற? :)

நாரணம் என்பது தமிழ்ச் சொல்லே! வட சொல் அல்ல!
அது மாயோனின் பெயர் என்பதை விட, அவன் தத்துவத்தைக் குறிக்க வந்த சொல் என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும்!

அவன் பெயர்களான "மாயோன்", "திருமால்" என்ற சொற்களே தொல்காப்பியம் மற்றும் இலக்கியங்களில் எல்லாம் மிக அதிகமாகப் புழங்குமே தவிர,
தத்துவமான "நாரணம்" என்னும் சொல் அதிகம் புழங்காது! இருப்பினும் அதுவும் சங்க இலக்கியத்தில் ஆங்காங்கே குறிக்கப்பட்டுத் தான் உள்ளது!

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
"நாராயணா" என்னாத நா என்ன நாவே?
- என்பது சிலப்பதிகார வரிகள்!

காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் "நாரணன் காப்பு" என்று உரைத்தனன்
- என்பது மணிமேகலை வரிகள்!

இப்படி தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் "நாரணம்" என்பதற்குப் பொருள் தான் என்ன?



குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ


முதலில், தமிழ்-ல அணம்-ன்னா என்ன? = வழி/அருகில் சேர்த்தல் என்று பொருள்!
* இலக்கணம் = இலக்கு + அணம் = மொழியின் இலக்குக்கு "வழி" சொல்வது = Grammar
* காரணம் = கார் + அணம் = கருவுக்கு(Core) "அருகில்" செல்வது = Reason
* ஏரணம் (Logic) = ஏர்(ஏல்) + அணம் = ஏற்றுக் கொள்ளலுக்கு "வழி" சொல்வது = Logic
* நாரணம் = நார் + அணம் = நாரம்(நீர்மை)-க்கு "வழி" சொல்வது!

அணம் = அண்மை என்பதின் வேர்ச்சொல்! அண்மை = அருகில்!
சில சமயம் தொழிற்பெயர் விகுதியாகவும் இது வரும்!
கட்டணம், பொக்கணம், தக்கணம் (தக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்-ன்னு வருது இல்லையா? அதைப் போல-ன்னு வச்சிக்குங்களேன்)

அணம் என்றால் வழி (அ) அருகில் இட்டுச் செல்வது-ன்னு பார்த்தோம்! அப்போ, நாரம் என்றால் என்ன?


* நாரம் = நீரம் = நீர்மை = நீர்
* ஆனால் நாரம் = நாளம் = கருமை என்று கொள்வாரும் உண்டு!

நாளம் என்பதே நாரம் ஆனது என்று சில தமிழ் அறிஞர்கள் கருதுவர்!
காளி=காரி ஆவது போல் நாளம்=நாரம் ஆகிறது! நாள் = இரவு = கருமை!

சங்கத் தமிழில் நாள்-ன்னா இரவு! நாள்->நள்! நள்ளிரவு-ன்னு சொல்றோம்-ல்ல?
இன்னிக்குப் பேச்சு வழக்கில் வேணும்-ன்னா, நாள் என்பது பகலும் இரவும் சேர்ந்த ஒன்று-ன்னு இருக்கலாம்!
ஆனால் பண்டைத் தமிழில், நாள் = இரவு! அந்த இரவால் "பகு"க்கப்படுவது பகல்!

* கருமையான தமிழ்க் கடவுள் மாயோன் = நாள்!
* அவன் அண்மையில் செல்வது = அணம்!
* நாரம் + அணம் = நாரணம்!
ஆனால் நாரம் என்பதற்கு "நீர்மை" என்ற பொருள் தான் தமிழில் மிகவும் பொருந்தி வருகிறது!

= "நாரம்" உண்டு எழுந்தன மேகங்காள்
= நதியின் பெருவலி "நார்" வலி தானே
= நளிர் கடல் "நாரம்" நா உற வேட்கையின் பருகிய மேகம்
= நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன "நாரம்"
= கடிகொண்ட "நாரம்" அனையன் கொணர்ந்து கரம் உய்ப்ப நுங்கி யெழுவான்
(கந்த புராணம்)
என்று இலக்கியங்களில் எல்லாம் "நாரம்" வருகிறது! நாரம் = நீரம் என்பதே நீர் தொடர்புடைய ஒன்று தான்!

* "நாரத்தை" செடி தெரியும் தானே? மிகுந்த சாறு(நீர்மை) உள்ள பழம் இந்த நாரத்தை!
* "நாரை" என்பதும் நீர் வாழ் பறவை தான்!
* "நார்"ச் சத்து-ன்னு சொல்வாங்களே! அதாச்சும் Dietary Fibre! செடிகளில் நீரை உறிஞ்சிச் சேர்க்கப்படும் சத்துக்கு நார்ச்சத்து என்றே பெயர்! பழமும் ஈரமா, நார் நாரா இருக்கும்! Fibre சத்து "கரைக்க" வல்லது! ஜீரணம் (அ) உணவுக் கரைசலுக்கு உகந்தது!


இப்போது புரிகிறது அல்லவா?
* நாரம் = நீர்மை (அ) நீர்த் தன்மை!
* அணம் = அருகில் செல்லல் (அ) அப்படிச் செல்லும் வழி!

ஏன் இந்த நீர்மை? = பரிணாமக் கொள்கையின் படி, முதல் உயிரினம், நீரில் தான் தோன்றியது! பின்பு தான் ஒவ்வொன்றாகப் பரிணாம வளர்ச்சி!
எவ்வளவு பரிணமித்தாலும், எல்லா உயிர்களுக்கும் நீர் கட்டாயம் தேவை! இன்றும் மனித உயிர்கள் கர்ப்பத்து "நீரில்" மிதந்து விட்டுத் தான் பிறக்கின்றன!

நீர் இன்றி அமையாது உலகு என்பது குறள்!
அது போல் அவன் இன்றி அமையாது உலகு என்பதால் நீரணன்! நாரணன்!

ஊழி என்பது இயற்கைச் சுழற்சிப் பரிணாமம்! அதைப் பரிபாடல் காட்டுகிறது!
1. ஆகாய ஊழி = Big Bang
2. காற்று ஊழி = ஆகாயத்தில் இருந்து காற்று
3. நெருப்பு ஊழி = காற்றில் இருந்து நெருப்பு
4. நீர் ஊழி = நெருப்பில் இருந்து நீர்
5. மண் ஊழி = "நீரில்" இருந்து உயிர்கள்!

...பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
ஊள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்

...
ஊழி யாவரும் உணரா
"ஆழி முதல்வ" நிற் பேணுதும் தொழுதும்

என்று ஊழி முதல்வனாய், ஆழி முதல்வனைக் காட்டுகிறது பரிபாடல் செய்யுள்!

தானோர் உருவே தனிவித்தாய்த்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் "பெருநீர்" தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா"மாயோன்"


இப்போது புரிகிறது அல்லவா?
* நாரம் = நீர்மை! அணம் = அருகில் செல்லும் வழி!
* நீர்-மையுள்ள மாயோனுக்கு அருகில் செல்வது = நாரணம்!


மேலே உள்ள "நீர்"-மைக் கருத்துக்கள் பற்றித் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் பின்னூட்டத்தில் உரையாடுங்கள்! இதற்கு செம்மை சேர்க்க உதவுங்கள்!

இப்போ வடமொழியில் "நாராயணம்" பற்றியும் கொஞ்சம் லேசுமாசா பாத்துருவோம்!

அட, அப்படிப் பார்க்கலீன்னா என் கதி அதோ கதி தாங்க! பந்தல் சாஸ்திர விரோதமானது-ன்னு சில ஆன்மீக அன்பர்கள் என்னைய ஒதுக்கியே வச்சிருவாங்க! :))
இராமானுசன் என்று தான் நாலாயிரப் பாட்டில் கூட வருது!
ஆனா, ஏதோ நான் தான் வேணும்-ன்னே, இராமானு"ஜ"ன் என்று எழுதாம, இராமானு"ச"ன்-ன்னு எழுதறேன்-ன்னு ஏற்கனவே கோப தாபங்கள் வேற இருக்கு! :)

அது என்னமோ தெரியலை, மத்தவங்க என்ன வேணும்-ன்னாலும் சொல்லலாம்! ஆனா கேஆரெஸ்-ன்னா மட்டும் எல்லாருக்கும் நல்ல பிள்ளையா நடந்துக்கணும்-ன்னு ஒரு "எதிர்பார்ப்பு"! அப்படி நடந்துக்கலீன்னா "மனக்கசப்பு"! என்ன கசப்போ போங்க! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே! :))
எது-ன்னாலும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், "மெய்ப்" பொருளை
1. அறிய விழைவதும்,
2. அறியத் தருவதும்,
3. அறியக் கேள்வி கேட்டு, ஐயம் நீங்க உரையாடுவதும் கூட "பகவத் கைங்கர்யமே"!



நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் = நீரை இடமாகக் கொண்டவன் (வடமொழியில்)
-> நாரம் = அனைத்துக்கும் மூலமான நீர்! பிரளய ஜலம் முதற்கொண்டு அனைத்து நீர் ஆதாரங்களுக்குமான ஆதாரம்! ஆபோ "நாரா" இதி ப்ரோக்தா...பூர்வம் தேன "நாராயண" ஸ்மிருதா:
-> அயணம் = இடம் (இடத்துக்கு வருதல்)! இராமாயணம், உத்தராயணம், தக்ஷிணாயணம்-ன்னு எல்லாம் சொல்றாங்க-ல்ல?

கிட்டத்தட்ட, தமிழில் பார்த்த "நாரணம்" என்பதற்கு என்ன பொருளோ, அதே பொருள் தான் "நாராயணம்" என்று வடமொழியிலும் இருக்கு!

இது போல் தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்ட வடமொழிச் சொற்களை இராம.கி ஐயா பல பதிவுகளில் சொல்லி இருக்கார்! ஆதி, பகவன் போன்ற பல தமிழ்ச் சொற்களைப் போலவே நாரணம் என்பதும் ஒன்று!


வடமொழியில் இன்னொரு பொருளும் "நாராயணம்" என்பதற்குச் சொல்லப்படுவது உண்டு! இதை மகான் ஆதி சங்கரரும் தனது சங்கர பாஷ்யம் என்னும் உரை நூலில் உறுதிப் படுத்துகிறார்!

* நரம் = மனிதன்/உயிர் "தான்" என்னும் செருக்கு/உணர்வு உள்ள உயிர்!
* நாரம் = உயிர்கள்! ஒட்டு மொத்த நரமும் சேர்ந்தால் நாரம்!
* அயணம் = இடம் புகல்-இடம்/தஞ்சம்

மொத்த நரத்துக்கும் புகல்-"இடமாய்" இருப்பது எதுவோ, அதுவே நாராயணம்! அதுவே பரம்!
நாராயண பரோ ஜோதிர், ஆத்மா நாராயண பரோ!
நாராயண பரப் பிரும்ம, விஸ்வ ஆத்மனம் பராயணம்!
- என்பது வேதம்!

சைவக் குடும்பத்தில் வந்துதித்த ஆதி சங்கரரும், வேதங்களுக்கு உரை நூலான தன்னுடைய பாஷ்யத்தில், "நாராயண" பரம் என்று சொல்லியே ஆரம்பிக்கிறார்!
நாராயண பரோ வக்யாத், அண்டம் அவ்யக்த சம்பவம்! என்று தான் சங்கர பாஷ்யமே தொடக்கம்!


இப்படி, நம் செந்தமிழிலும், வடமொழியிலும் "நாரணம்" என்பது நீர்-மையை ஒட்டியே பேசப்படுகிறது! ஏன்?

Water is colorless, odourless, tasteless, formless!
Yet will take color, odour, taste, form!
* நீர், கொள்ளும் கலத்துக்கு ஏற்ற வடிவம் பெறுவது போல்,
* நாராயணன், நாம் எப்படிக் கொள்கிறோமோ, அப்படி வடிவம் கொள்கிறான்!

ஆவியான மேகத்தின் நீர்,
கடலில் இருந்து வந்த உப்பு நீரா? ஆற்றில் இருந்து வந்த நல்ல நீரா?
குட்டை நீரா? கூவம் நீரா? என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாதபடி இருப்பது போல்...

இறைவனின் நீர்-மையில் சேரும் உயிர்களை,
நல்லவர்-தீயவர், தேவர்-அசுரர், ஆண்-பெண், சாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவே முடியாது!
அனைவரும் அடியார்களே! பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே!

அதான் ஆலயங்களிலும் தீர்த்தமாக, அவனையே பருகத் தருகிறார்கள்! = நீர்-மையான அவனை, நம்முள், உள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்! விளக்கப் பதிவு இங்கே!

இப்படி நீர் இன்றி அமையாது உலகு என்னும் படிக்கு,
நீராகப் பரவி நிற்கும்...நீர்-மையான்...
"நீராயணன்-நாராயணன்" திருவடிகளே சரணம்!


கோபுரத்தின் மேல் இருந்து, குருவையும் மீறி, ஊருக்கே அப்படி என்ன தான் சொன்னாரு? ஓம் நமோ Dash கேட்டு ஊரே திருந்திருச்சா? :).....அடுத்த பதிவில்...(தொடரும்)
Read more »

Wednesday, August 12, 2009

ஓம் நமோ "Dash"! துன்பத்தில் கடவுளைக் கூப்பிடாதே!-2

துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு மட்டும் கூப்புட்டுறவே கூப்புட்டுறாதீங்க! அவரு ஆராய்ஞ்சி தான் அருளுவாரு! உங்க வேலை ஒன்னுமே நடக்காது! ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-ன்னு அவரைப் பற்றிப் பதிவுகளில் சொல்லிச் சிலாகிச்சவங்க கிட்டயே அவரோட வேலையக் காட்டீருவாரு! :))

துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு என்று கூப்பிடாதவனே உண்மையான பக்தன்!-ன்னு சென்ற பதிவில் முடிச்சி இருந்தேன்!
அதை நான் டகால்ட்டி பண்ணுவதற்காகச் சொல்லலை, ஆழ்வாரே சொல்றாரு-ன்னும் சொல்லி இருந்தேன்! துன்பம் வரும் போது இறைவனைக் கூப்பிடக் கூடாதா? வித்தியாசமா-ல்ல இருக்கு? ஏன்-னு பார்க்கலாமா?


துஞ்சும் போது அழைமின், துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்!

* தூங்கும் போது கூப்பிடுங்கள்! = இது எப்படி-ப்பா? குறட்டையிலா கூப்பிட முடியும்? :)
* துயர் வந்தால் வாய் விட்டுக் கூப்பிடாதீர்கள்! நினைச்சாப் போதும்! = ஹா ஹா ஹா!
* துயரமே இல்லாதவங்க = இவிங்க வாய் விட்டுத் தாராளமாக் கூப்பிட்டுக்கலாம்! நன்றாம்!
* நாம சேர்த்து வச்சிருக்கும் வினைகளுக்கு விஷம் போல கசக்கும்! நமக்கோ இனிக்கும்! = நாராயணா என்னும் நாமம்!

இப்படிப் பாடுவது ராபின்ஹூட் ஆழ்வார் என்னும் என்னோட இலக்கிய ஹீரோவான திருமங்கை மன்னன்! :)
* துஞ்சும் போது = "நினைமின்"! துயர் வரில் = "அழைமின்"!-ன்னு சொன்னா ஓக்கே!
* துஞ்சும் போது = "அழைமின்"! துயர் வரில் = "நினைமின்"!-ன்னு மாத்திச் சொல்றாரே? ஏன்?


வெளிநாட்டில் இருக்கும் புள்ளைக்கு ஒரு சின்ன விபத்து! ரயில் வண்டில ஏறும் போது இடுக்குல காலைக் கொடுத்துட்டான்! மருத்துவமனை, கால்கட்டு, அது, இது-ன்னு ஏக களேபரம்! ஆனா வூட்டுல அம்மா அப்பா கிட்ட இது பற்றி மூச்சே விடலை! ஏன்?

இது நிறைய பசங்க பண்றது தான்! அம்மா அப்பா பக்கத்துல-யும் இல்லை! எங்கேயோ இருக்காங்க! எதுக்கு அவிங்களுக்கு வீண் டென்சன்?-ன்னு சொல்லிக்க மாட்டானுங்க! கமுக்கமா இருந்துருவானுங்க! ஆனா உள்ளுக்குள்ள மட்டும் ஓரமா ஒன்னு ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!

* ஜூரம் வந்து வாயெல்லாம் கசப்பா இருக்கு! இந்நேரம் அம்மா இருந்திருந்தா, சூடா இடியாப்பம் பண்ணிக் கொடுத்து இருப்பாங்க! பாத்து பாத்து கவனிச்சி இருப்பாங்க-ல்ல?
* முன்ன ஒரு நாள், கால் வலியில் துடிச்ச போது, அப்பா எனக்குக் கால் அமுக்கி விட்டாரே? எங்கே தடுக்கப் போறேனோ-ன்னு, நான் தூங்கிட்டாப் பிறகு, மெல்ல எழுந்து வந்தாரு! எவ்ளோ நேரம் பிடிச்சி விட்டாரோ? பாத்ரூம் போக எழும் போது தான் தெரியவே தெரிஞ்சிச்சி!

இப்படியெல்லாம் உள்ளுக்குள் ஒளிஞ்சி இருந்தாலும், பசங்க வெளீல சொல்றதில்லையே! ஏன்?
* துயர் வரில், அம்மா-அப்பாவைப் பசங்க அழைக்கறதில்லையே? - ஒன்லி நினைமின் தான்! ஏன்?
* துஞ்சும் போது மட்டும் "அம்மா"-ன்னு அனத்தறாங்களே! அழைமின்! ஏன்? :)


அதே தான் ஆழ்வாரும் சொல்றாரு! = துஞ்சும் போது "அழைமின்"! துயர் வரில் "நினைமின்"! புரியுதா மக்கா?
எம்பெருமான் நமக்கு சாஸ்வதமான அம்மா அப்பா ஆச்சே!
ஆனா நாமளோ வாலிப மிடுக்குல, சுய சம்பாத்தியத்துல, சுய கெளரவம் எல்லாம் இப்போ நமக்கு வந்தாச்சி! எனக்கு முளைச்சி மூனே மூக்கா இலை விட்டாச்சி! :)

* குழந்தையா இருந்த போது = துஞ்சும் போது நினைச்சோம்! துயர் வரில் அழைச்சோம்!
* ஆனா இப்போ அப்படி இல்ல! உல்ட்டாவா பண்ணுறோம்! = துயர் வரில் நினைக்கிறோம்! துஞ்சும் போது அழைக்கிறோம்! :)

அதே தான் இறைவனிடத்திலும்! மூனு இலை விட்டாச்சி!
நமக்கு-ன்னு பதிவு போடும் அளவுக்கு "அறிவு", "ஞானம்"-ன்னு பலதும் வந்துரிச்சி-ல்ல?
எத்தனை பின்னூட்டம் பார்க்கறோம்? எத்தனை மனுசங்களைப் பாக்குறோம்? எத்தனை சண்டை போடறோம்? எக்ஸ்பீரியன்ஸ் மாமே எக்ஸ்பீரியன்ஸ்! :)


* ஞான யோகம் = நிறைய படிச்சி வச்சிருக்கேன்! பல விஷயம் "அறிந்தேன்"! ஆனால் "உணர்ந்தேனா"?
* கர்ம யோகம் = நிறைய கர்மா பண்ணுவேன்! சடங்கு தெரியும்! நானே கை போட்டு பல வேலை பண்ணுவேன்! "செய்தேன்" ஆனால் ஒழுங்கா "நெய்தேனா"?



இப்படி நாமளே முயன்று, நாமளே சுயமா அறிவைத் தேடி, ஞான/கர்ம வளர்ச்சி அடைஞ்சிட்டதனால, அம்மா அப்பாவான எம்பெருமானை வாய் விட்டுக் கூப்பிட ஏதோ ஒன்னு லேசாத் தடுக்குது! :)
- முருகாஆஆஆ-ன்னு சத்தமா எப்படிக் கூப்புடுறதாம்? சேச்சே! ஷேம்! ஷேம்! :)
- கோவிந்தாஆஆஆ-ன்னு வாய் விட்டு எப்படி அழைக்கறதாம்? அதெல்லாம் பஜனை கோஷ்டிக் காரங்க வேணும்-ன்னா பண்ணுவாங்க! :)

* நாமளோ ஞான/கர்ம யோகத்துல-ல்ல இருக்கோம்? தீர்வை "நாமளே" தேடிப்போம்! ஏதாச்சும் பரிகாரம், பிலாஸபி, பிரம்ம சத்யம் ஜகன் மித்யா-ன்னு இருக்கும்! அதைச் செய்வோம்!
* நேதி நேதி, அஹம் பிரம்மாஸ்மி-ன்னு, தத்துவக் கடல்-ல விழுந்து குளிப்போம்! சூப்பராப் பதிவுல கூடிக் கூடிப் பேசுவோம்!
* ஆனால் "கோவிந்தா"-ன்னு கூச்சம் இல்லாம பப்ளிக்கா அழைக்கிறது தான் கொஞ்சம் கஷ்டம்! நாலு பேரு ஒரு மாதிரி நினைச்சிப்பாங்க!
* அவன் உள்ள உகப்புக்கு எல்லாம் நடந்துக்க முடியாது! மெஜாரிட்டி ஆளுங்களோட ஒத்துப் போகணும்-ல்ல? ஒதுக்கி வச்சீருவாங்களே! கோயில்-ல மாலை மரியாதை பரிவட்டம் எல்லாம் கெடைக்க வேணாமா? :)

அதுக்காகப் பிள்ளைகளுக்குப் பாசமில்லாம எல்லாம் இல்ல! ஜஸ்ட் மூனே முக்கா இலை படுத்தும் பாடு! அதான் ஆழ்வார் சொல்கிறார்......
பரவாயில்லை! துயர் வரில் கூப்பிடக் கூச்சமா இருக்கா? சரி, கூப்பிட வேணாம்! "நினைத்துக் கொள்ளுங்கள்"! துஞ்சும் போது "அழைத்துக் கொள்ளுங்கள்"!
- ஆனால் தயவு பண்ணி, அது அழைத்தோ இல்லை நினைத்தோ, அவனைக் "கொள்ளுங்கள்"! அவனைக் "கொள்ளுங்கள்"!

உலகம் அளந்தானை "அளக்க" முடியாது! "கொள்ளத்" தான் முடியும்! அதனால்
* உளமாறக் கொள்ளுங்கள்!
* உளம் ஆறக் கொள்ளுங்கள்!
* உளம் மாறக் கொள்ளுங்கள்!

அவன் எங்கோ இருக்கும் பரமாத்மா = இறைவன் என்று சாஸ்திர பூஜையோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுக்கும் அவனுக்கும் உறவு என்று அவனுடன் கொள்ளுங்கள்! "உறவு கொள்ளுங்கள்"!

* அவன் = அ
* நீங்கள் = ம்
* "உ"றவு கொண்டால் வருவது உ!
=> அவன்-உறவு-நீங்கள்! => அ-உ-ம்! => ஓம்!

உன் தன்னோடு-உறவேல்-நமக்கு.....இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்!


துயர் இலீர், சொல்லிலும் நன்றாம் = துயரம் இல்லாதவர்கள், "நாம தான் ஜாலியா இருக்கோமே? இப்ப எதுக்கு இறைவனைப் போய் நினைக்கணும்? எல்லாம் வயசான காலத்தில் பாத்துக்கலாம்! இப்போ ஜஸ்ட் என்ஜாய் மாடி"-ன்னு **மட்டும்** இல்லாம, அவன் பேரைச் சொல்லிப் பழகுங்கள்! துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!

துயர் வரில் "நினைமின்" = துயரம் வந்துருச்சே! அய்யோ அய்யோ-ன்னு குதிக்காம, நாம என்ன தப்பு பண்ணோம்-ன்னும் கொஞ்சம் "நினைமின்"! கூடவே அவனையும் "நினைமின்"!

* அன்பன் ஆஞ்சநேயன்! வாலில் நெருப்பு வைத்த போது, "அய்யோ நெருப்பு, நெருப்பு! உன் வேலையாத் தானே வந்தேன்? துயர் வந்துருச்சே"-ன்னு குதிக்கலை! துயர் வரில் நினைமின்! நினைத்தான்!
* ஆசைப் பிரகலாதன்! மலையில் உருட்டித் தள்ளிய போது, "அய்யோ அய்யோ, உன் பேரைத் தானே சொன்னேன்? துயர் வந்துருச்சே"-ன்னு குதிக்கலை! துயர் வரில் நினைமின்! நினைத்தான்!

இப்படி "நினைத்தால்"....அவன் "நினைப்பாக" இருந்தால்....

துஞ்சும் போது "அழைமின்" = தூங்கும் போதும் உங்களை அறியாமல் அவனை அழைப்பீர்கள்! :)
பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))

துயர் வரில் "நினைமின்"! துஞ்சும் போது "அழைமின்"! நாராயணா என்னும் நாமம்!


"நாராயணாய" என்றால் என்ன? - இன்னிக்கி பார்க்கத் துவங்கி விடலாமா?

இதோ துவங்கி விடுகிறேன்! அதற்கு முன்.......
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!
கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன்
***நற்றாள்*** தொழாஅர் எனின்!
------------------------------------------------------------------------------------

* நாரணம் (தமிழில்)
= நாரம் + அணம்
= நீர் + அருகில் = நீர்மைக்கு அருகில்


* நாராயணம் (வடமொழியில்)
= நாரம் + அயணம்
= உயிர்கள் + இடம் = உயிர்கள் தஞ்சமாகும் இடம்

------------------------------------------------------------------------------------

1.
நீர் இன்றி அமையாது உலகு! = நாரணம்!
அதே போல் நீர்வண்ணன்-இறைவன் இன்றி அமையாது உலகு!!
------------------------------------------------------------------------------------
2.
நீர், தானே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவுகளையும் அது தான் விளைவிக்கிறது!
துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்பது குறள்!

* தானே உணவாகி = துப்பு ஆய
* மற்ற உணவுக்கும் காரணமாகி = துப்பு ஆக்கி

அதைப் போலவே இறைவன்-எம்பெருமான், தானே உலகுக்குக்
* காரணமாகவும் இருக்கிறான்!
* காரியமாகவும் இருக்கிறான்!
தானே வழியும் சீவனுமாய் இருக்கிறான்! = நாரணம்!
------------------------------------------------------------------------------------
3.
நீருக்கு ஒரு முக்கியமான குணம் இருக்கு!
* அதுக்கு வடிவம் என்று எதைச் சொல்வது? = எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
* அதே போல் நீர் வண்ணனாகிய நாரணனும் = எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தைப் பெற்று விடுவான்!

அது மீனா, ஆமையா, பன்றியா, மிருகமா, குள்ளனா, கண்ணனா-காதலனா? எதில் ஊற்றுகிறீர்களோ அது!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! = நாரணம்!
------------------------------------------------------------------------------------
4.
நீர் எதிலும் அடங்கி விடும்! நீருக்குள்ளும் எதுவும் அடங்கி விடும்!
Water is an Universal Solvent!
Proteins, DNA, Polysaccharides என்று அணுக் கூறுகள் கூட கரைந்து விடும்!

அதே போல் புண்யாத்மா/பாபாத்மா என்று பேதமும் இல்லாமல்...
சாதி, மத, ஆண், பெண், என்று எந்தப் பேதமும் இல்லாமல்...
அனைவரும் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வணங்கியவன்/வணங்காதவன் என்ற தடையே இல்லை! அவனை அண்டினார்க்கு மோட்சம்! அவனை ஸ்வீகரிக்காதவர்கள் எல்லாருக்கும் வெறும் நரகமே போன்ற பேச்சுக்களே இல்லை! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

இப்படி அனைத்தும் எம்பெருமானின் அநுபூதிக்குள் கரைய வல்லவை = நாரணம்!
Coz, Narayanan is an universal solvent!
------------------------------------------------------------------------------------
5.
நீர் = திடப்பொருளாகவும்(Solid), நீர்மைப் பொருளாகவும்(Liquid), வளிப் பொருளாகவும்(Gas), நம் கண் முன்னாலேயே பார்க்கலாம்!
Water exists in all states! Narayanan exists in all states!

மற்ற வேதிப் பொருட்கள் State Change ஆக, அதிக வெப்பம்/குறைந்த அழுத்தம் என்று பலதும் தேவைப்படும்! ஆனால் நீர் மட்டும் எளிதில் ஆவியாகும், கட்டியாகும்! மீண்டும் நீராகவும் ஆகும்!
அது போல் எம்பெருமானும் அடியவர்கள் வெப்பத்துக்கு/நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதாக மாற்றிக் கொள்வான்! அப்படி மாறினாலும், அவன் அவனாகவும் இருப்பான்!

நீரைப் போலவே எல்லா நிலைகளிலும் இருப்பதால் = நாரணம்!


நாரம் என்பது அனைத்துக்கும் மூலமான நீர்!
அண்ட நீர் (பிரளய ஜலம்) முதற்கொண்டு அண்டத்தின் அனைத்து நீர் ஆதாரங்களும் ஆதாரம் என்பதே நாரம்!

H2O என்று இன்று சொல்கிறோம்!
இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்சிஜன் அணு என்று கூறு பிரித்துக் காட்டுகிறோம்! ஆனால் வேதங்கள் அன்றே இப்படிக் கூறு பிரித்துக் காட்டுகின்றன!
பிராணம் (O) ஏவம், அன்யத் (H2) த்வயம் என்று வேதமும் சொல்கிறது!
பிராணம் (O) ஏவம் = உயிர் வளி ஒன்று!
அன்யத் (H2) த்வயம் = மறு வளி இரண்டு!
"ஆபோ நாரா" என்று நாரம்-நீர் பற்றிய வேத சூக்தமும் உண்டு = நாராயண சூக்தம்!

* அவன் பேரும் நீர்! வண்ணமும் நீர்! உறைவதும் பாற்கடல் நீர்!
அவனுடன் "அலை" மகளும் அலை(நீர்)!
* ஏன் அவனை நீரான், நீர்மையான், "நாரா"-யணன், நீர்-வண்ணப் பெருமாள்-ன்னு, எல்லாம் நீராகவே காட்ட வேண்டும்?
* எதற்குப் பிரசாதமாக தீர்த்தம் என்னும் "நீர்" கொடுக்க வேணும்?
* ஏன் பெருமாளுக்கு எல்லாமே நீராகவே அமைந்துள்ளது?

* தமிழில் நாரம் என்பதன் விளக்கம் என்ன?
சங்கத் தமிழில் "நாராயணா என்னாத நா என்ன நாவே?" - என்று இளங்கோ அடிகள் கேட்கிறாரே! வேறு எங்கெல்லாம் "நாரணம்" என்ற சங்கத் தமிழ்ச் சொல் வருகிறது? (தொடரும்......)
Read more »

Thursday, August 06, 2009

ரகசியம்: ஓம் நமோ "Dash" என்றால் என்ன?-1

மக்களே கொஞ்ச நாளைக்கு முன் "ஓம்" என்றால் என்ன?-ன்னும், "நமோ" என்றால் என்ன?-ன்னும் பார்த்தோம் அல்லவா?
அதன் தொடர்ச்சியாக "Dash" என்றால் என்ன?-ன்னு இப்போது பார்க்கலாமா?

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் ஸ்ரீ சக்ர புரி தொடர் துவங்கியுள்ளது! தொடர், விறுவிறு-ன்னு சிவ தாண்டவம் போல், ஆனந்த மயமாகப் போக வாழ்த்து சொல்லிட்டு,
எப்படி திருவண்ணாமலையே ஸ்ரீ சக்ர மயமாகக் காட்சி அளிக்குதோ,
அதே போல், ஸ்ரீ சக்ர மயமாய் அமைந்துள்ள ஒரு மந்திர அடுக்கைப் பார்க்கலாம்! வாங்க!

ஓம் நமோ "Dash" என்றால் என்ன?

"என்னாது? 'Dash'ஆ? என்னா வெளையாடுறீயா கேஆரெஸ் நீயி?
* நாடினேன்! நாடி நான் கண்டு கொண்டேன்! 'நாராயணா' என்னும் நாமம்-ன்னு ஆன்றோர்களும் ஆழ்வார்களும் சொன்னதை,
* மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
* முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை,
'Dash'-ன்னு சொல்ல, உனக்கு எம்புட்டுத் திமிரு இருக்கும்?"

"அட...இதுல என்னாங்க திமிரு இருக்கு? நானே ஒரு அப்பாவிப் பய புள்ள! என் முகத்தைப் பாருங்க! பாவமா இல்ல? :)
நானே, பெருமாள் இப்பல்லாம் என் கிட்ட ஈவு இரக்கமே இல்லாம நடந்துக்கறாரு! என் முருகனுக்கு என் மேல் இருக்கும் கருணை-ல, அவருக்குக் கால் பங்கு கூட இல்லையே-ன்னு நொந்துகிட்டு இருக்கேன்! நீங்க என்னடா-ன்னா திமிரு-ன்னு சொல்றீங்க!" :(

"ஓ...அதான் அவர் மேல் இருக்கும் கோவத்துல Dash போட்டீயா? அவரு பேரை வாயால் கூடச் சொல்ல மாட்டீங்களோ? இதெல்லாம் டூ மச்!"

"ஹைய்யோ...அப்படியெல்லாம் இல்லீங்க!
தலைப்பில் "ரகசியம்"-ன்னு போட்டிருக்கேனே! பாக்கலீங்களா?அதான் 'Dash'ன்னு சொன்னேன்! மந்த்ர ரகஸ்யம்! ரகசியம்-ன்னா வேற யாருக்கும் சொல்லீறக் கூடாது-ல்ல? அதான்!"

"இறைவனோட மந்திரம் ரகசியமா? என்னப்பா சொல்லுற நீயி?"


* ரகசியம்-ன்னா யாருக்கும் சொல்லக் கூடாது!
* வேதம்/மறை-ன்னா எல்லார் கிட்ட இருந்தும் மறைச்சி வைக்கணும்!

இது தான் பொருளா? இறைவனை "மறை"த்து வைக்க முடியும்-ன்னு நீங்க நினைக்கறீங்களா? பூமியிடம் இருந்து சூரியனைக் கூட மறைக்கலாம்! அண்டவெளியை மறைக்க முடியும்-ன்னு நினைக்கறீங்களா? :)

தாய்ப்பாலைக் குழந்தை கிட்ட இருந்து மறைக்க முடியுமா? குழந்தையை நினைத்தால் அவளுக்குத் தானே சுரக்காதா?
அதே போல், அவன் குழந்தைகளான நமக்கு, அவனால் தாய்ப்பாலை மறைச்சி வைக்கத் தான் முடியுமா?

நான்மறைகளை மறைத்து வைக்கணும் என்பது காலத்தால் ஏற்பட்ட ஒரு வழக்கம்!
அதாச்சும் தராதரம் இல்லாமல் "கண்டவனுக்கும்" சொல்லீறக் கூடாது என்று பின்னாளில் ஏற்பட்ட ஒரு வழக்கம்! "தகுதி" அறிந்து தான் சொல்லிக் கொடுக்கணும் என்பது சாஸ்திர விதி!

இதைக் காரணமாகக் காட்டி, ஒரு சிலருக்கு மட்டுமே வேதங்களில் அதிகாரம் இருந்து வந்தன! அவர்கள் சொன்னதே வேத வாக்கு!
வேதங்களில் அனைத்து மக்களுக்கும் உள்ள நன்மை பலரையும் சென்றடைய முடியாமல், ஒரு அதிகார வட்டத்திற்குள்ளேயே முடங்கிப் போனது!

அப்போது தான் தமிழ் வேதமான திருவாய்மொழி உதயமாயிற்று! வேதம் தமிழ் செய்து தந்தவர், வேளாள குல முதல்வரான மாறன் என்னும் நம்மாழ்வார்!

வேதத்துக்கு இன்னார் தான் சொல்லலாம் என்ற வரைமுறைகள் உண்டு!
இப்படி, இந்த நேரத்தில், இவர்கள், இந்தத் திசை பார்த்து = இப்படியெல்லாம் தான் சொல்லணும், பெண்கள் சொல்லக் கூடாது போன்ற சில நியமங்கள் உண்டு!
ஆனால் "நமாமி திராவிட வேத சாகரம்"-ன்னு போற்றப்படும் தமிழ் வேதத்தைச் சொல்ல சாதி, ஆண்/பெண், கால/தேச வர்த்தமானங்களோ வரைமுறைகளோ எதுவும் இல்லை!


வேதங்களை மட்டுமல்லாது, திருமந்திரங்களையும் "ரகஸ்யம்" என்றும் சிலர் போற்றிப் பாதுகாத்தனர்!
அதில் "ஓம்" என்ற பிரணவம் மகா "ரகஸ்யம்" என்றும் சொல்லி வைத்தனர்!
அதன் பொருள் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் தவிர உலகில் வேற ஒருத்தருக்குமே தெரியாது என்றும் கதை சேர்த்தனர்!
ஆனால் உண்மை அப்படியல்ல! என் முருகனுக்கு நற்பொருளை மறைக்கத் தெரியாது என்பதை "ஓம்" பதிவில் பார்த்தோம்!

அதே போல் "திருமந்திரம்" என்ற பெயரால் போற்றப்படும் ஒரே மந்திரம் - அஷ்டாட்சரம் - திரு-எட்டு-எழுத்து = "ஓம் நமோ நாராயணாய"!
இதுவும் "ரகஸ்யம்" என்றே வைக்கப்பட்டு வந்தது! அதன் பொருள் அவ்வளவு சுலபமாகப் பாமரர்க்குக் கிட்டி விடாது!

ஏன் இப்படி? ஏன் இதை "ரகஸ்யம்"-ன்னு சொல்லணும்?
ரகசியம் = யாரிடமும் சொல்லக் கூடாது என்பது தான் பொருளா?

ரகசியம் = நுட்பம்!
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன-ன்னு கேட்கிறோமே! அப்படின்னா என்ன அர்த்தம்?
வெற்றியின் "நுட்பம்", வெற்றிக்கு "வழி"-ன்னு தானே பொருள்? வெற்றியைச் சொல்லக் கூடாது-ன்னா பொருள்? :)
தகராலய ரகசியம், வேதியியல் ரகசியம், காதல் ரகசியம்-ன்னு எத்தனையோ ரகசியங்கள் இருக்கு! அதுக்கெல்லாம் "நுட்பம்"-ன்னு தானே பொருள்!

இதைத் தான் "ரகஸ்யம்"-ன்னு சொல்லி வச்சாங்க வேத காலத்து ரிஷிகள்!
ஆனா நம்மாளுங்க அதுக்கு மீனிங்கை லோக்கலா எடுத்துக்கிட்டு, மந்திரங்களைப் பொத்திப் பொத்தி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க! :)

ஆன்மீகத்தை லோக்கலா எழுதினா மட்டும் கோவம் வருது!
ஆனா "ரகஸ்யம்" என்பதற்கு லோக்கலாப் பொருள் எடுத்துக்கறோமே-ன்னு தங்கள் மேலேயே அவிங்களுக்கு கோவம் வருமா? :)
ஹா ஹா ஹா! நியாயம் என்பது இது தானோ? - நெஞ்சுக்கு நீதி! :))

* "ரகசியம்" = நுட்பம் என்பதைத் தன் குருவுக்கே புரிய வைத்து,
* "ரகஸ்யத்தை", ஒரு உள்ளம், ஊருக்கே போட்டு உடைத்தது அல்லவா?
* "தான்" என்று பார்க்காது,
* "தான் ஒருவன் நரகம் புகினும்", அடியார்கள் அத்தனை பேரும் வீடு புகுவார்கள் என்று ஒரு உள்ளம் எண்ணியது அல்லவா?

"தான்" என்று பார்க்காது...
அந்த "நான்" "மறை"வது தானே "மறை"?
அதுவல்லவோ ரகஸ்யம் = நுட்பம்?
* நான்-மறையைக் கற்றவனா ஞானி?
* "நான்" மறையக் கற்றவனே ஞானி!


காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!


* "ரகசியத்தை", கோபுரத்தின் மேல் இருந்து, ஊருக்கே "கூவிய" அந்த உள்ளம்!
* அந்த உள்ளம் "கூவியதையே",
* இனி வரும் தொடர் பதிவுகளில் அடியேனும் "கூவப்" போகிறேன்!

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!


ஓம் நமோ நாராயணாய என்றால் என்ன?

அதில்
1. ஓம் என்றால் என்ன?
2. நமோ என்றால் என்ன?
என்று முன்னரே பார்த்து விட்டோம்!
3. அப்போ "நாராயணாய" என்றால் என்ன?

* "நாராயண" என்று சொன்னால் போதாதா? எதுக்கு "ஆய"-ன்னு சேர்த்து, "நாராய+ணாய"-ன்னு சொல்லணும்?
* நாரணன் என்பது தமிழ்ச் சொல்லா? வடமொழிச் சொல்லா?
* நம சிவாய என்பதற்கும் திரு-எட்டு-எழுத்துக்கும் என்ன சம்பந்தம்?
* ஸ்ரீமன் நாராயணாய-ன்னு சேர்த்துச் சொல்லலாம் அல்லவா? ஏன் வெறுமனே நமோ நாராயணாய-ன்னு சொல்லணும்? பெண்மைக்கு மதிப்பில்லையா? :)
இந்தத் தலையாய மந்திரத்தில் மகாலட்சுமி இருப்பது போல் தெரியலையே! ஆணாதிக்க அவரு மட்டும் தானா? அவருக்குக் கால் பிடிச்சி விடத் தான் அன்னையா? :)
.....
.....
இப்படிப் பலவும் பார்ப்பதற்கு முன்னாடி....
முக்கியமா ஒன்னு தெரிஞ்சிக்கோங்க!
துன்பம் வரும் போது, "நாராயணா" என்று கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! :)

ஹா ஹா ஹா! அட, இது அடியேன் டகால்ட்டி இல்லீங்க! :)
ஆழ்வார் வாக்கு!

ஆகா! கஷ்டம் வரும் போதாச்சும் கடவுளை நினைப்பாங்க! நீ அது கூட வேணாங்கிறியா கேஆரெஸ்?
துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! எப்படி?
(....தொடரும்!)

மறைந்த காஞ்சி முனிவருக்கு, "ராமானுசம்" என்னும் திருமலைச் சடாரி அருளப்பாடு சார்த்தப்படுகிறது!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP