Wednesday, August 12, 2009

ஓம் நமோ "Dash"! துன்பத்தில் கடவுளைக் கூப்பிடாதே!-2

துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு மட்டும் கூப்புட்டுறவே கூப்புட்டுறாதீங்க! அவரு ஆராய்ஞ்சி தான் அருளுவாரு! உங்க வேலை ஒன்னுமே நடக்காது! ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-ன்னு அவரைப் பற்றிப் பதிவுகளில் சொல்லிச் சிலாகிச்சவங்க கிட்டயே அவரோட வேலையக் காட்டீருவாரு! :))

துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு என்று கூப்பிடாதவனே உண்மையான பக்தன்!-ன்னு சென்ற பதிவில் முடிச்சி இருந்தேன்!
அதை நான் டகால்ட்டி பண்ணுவதற்காகச் சொல்லலை, ஆழ்வாரே சொல்றாரு-ன்னும் சொல்லி இருந்தேன்! துன்பம் வரும் போது இறைவனைக் கூப்பிடக் கூடாதா? வித்தியாசமா-ல்ல இருக்கு? ஏன்-னு பார்க்கலாமா?


துஞ்சும் போது அழைமின், துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்!

* தூங்கும் போது கூப்பிடுங்கள்! = இது எப்படி-ப்பா? குறட்டையிலா கூப்பிட முடியும்? :)
* துயர் வந்தால் வாய் விட்டுக் கூப்பிடாதீர்கள்! நினைச்சாப் போதும்! = ஹா ஹா ஹா!
* துயரமே இல்லாதவங்க = இவிங்க வாய் விட்டுத் தாராளமாக் கூப்பிட்டுக்கலாம்! நன்றாம்!
* நாம சேர்த்து வச்சிருக்கும் வினைகளுக்கு விஷம் போல கசக்கும்! நமக்கோ இனிக்கும்! = நாராயணா என்னும் நாமம்!

இப்படிப் பாடுவது ராபின்ஹூட் ஆழ்வார் என்னும் என்னோட இலக்கிய ஹீரோவான திருமங்கை மன்னன்! :)
* துஞ்சும் போது = "நினைமின்"! துயர் வரில் = "அழைமின்"!-ன்னு சொன்னா ஓக்கே!
* துஞ்சும் போது = "அழைமின்"! துயர் வரில் = "நினைமின்"!-ன்னு மாத்திச் சொல்றாரே? ஏன்?


வெளிநாட்டில் இருக்கும் புள்ளைக்கு ஒரு சின்ன விபத்து! ரயில் வண்டில ஏறும் போது இடுக்குல காலைக் கொடுத்துட்டான்! மருத்துவமனை, கால்கட்டு, அது, இது-ன்னு ஏக களேபரம்! ஆனா வூட்டுல அம்மா அப்பா கிட்ட இது பற்றி மூச்சே விடலை! ஏன்?

இது நிறைய பசங்க பண்றது தான்! அம்மா அப்பா பக்கத்துல-யும் இல்லை! எங்கேயோ இருக்காங்க! எதுக்கு அவிங்களுக்கு வீண் டென்சன்?-ன்னு சொல்லிக்க மாட்டானுங்க! கமுக்கமா இருந்துருவானுங்க! ஆனா உள்ளுக்குள்ள மட்டும் ஓரமா ஒன்னு ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!

* ஜூரம் வந்து வாயெல்லாம் கசப்பா இருக்கு! இந்நேரம் அம்மா இருந்திருந்தா, சூடா இடியாப்பம் பண்ணிக் கொடுத்து இருப்பாங்க! பாத்து பாத்து கவனிச்சி இருப்பாங்க-ல்ல?
* முன்ன ஒரு நாள், கால் வலியில் துடிச்ச போது, அப்பா எனக்குக் கால் அமுக்கி விட்டாரே? எங்கே தடுக்கப் போறேனோ-ன்னு, நான் தூங்கிட்டாப் பிறகு, மெல்ல எழுந்து வந்தாரு! எவ்ளோ நேரம் பிடிச்சி விட்டாரோ? பாத்ரூம் போக எழும் போது தான் தெரியவே தெரிஞ்சிச்சி!

இப்படியெல்லாம் உள்ளுக்குள் ஒளிஞ்சி இருந்தாலும், பசங்க வெளீல சொல்றதில்லையே! ஏன்?
* துயர் வரில், அம்மா-அப்பாவைப் பசங்க அழைக்கறதில்லையே? - ஒன்லி நினைமின் தான்! ஏன்?
* துஞ்சும் போது மட்டும் "அம்மா"-ன்னு அனத்தறாங்களே! அழைமின்! ஏன்? :)


அதே தான் ஆழ்வாரும் சொல்றாரு! = துஞ்சும் போது "அழைமின்"! துயர் வரில் "நினைமின்"! புரியுதா மக்கா?
எம்பெருமான் நமக்கு சாஸ்வதமான அம்மா அப்பா ஆச்சே!
ஆனா நாமளோ வாலிப மிடுக்குல, சுய சம்பாத்தியத்துல, சுய கெளரவம் எல்லாம் இப்போ நமக்கு வந்தாச்சி! எனக்கு முளைச்சி மூனே மூக்கா இலை விட்டாச்சி! :)

* குழந்தையா இருந்த போது = துஞ்சும் போது நினைச்சோம்! துயர் வரில் அழைச்சோம்!
* ஆனா இப்போ அப்படி இல்ல! உல்ட்டாவா பண்ணுறோம்! = துயர் வரில் நினைக்கிறோம்! துஞ்சும் போது அழைக்கிறோம்! :)

அதே தான் இறைவனிடத்திலும்! மூனு இலை விட்டாச்சி!
நமக்கு-ன்னு பதிவு போடும் அளவுக்கு "அறிவு", "ஞானம்"-ன்னு பலதும் வந்துரிச்சி-ல்ல?
எத்தனை பின்னூட்டம் பார்க்கறோம்? எத்தனை மனுசங்களைப் பாக்குறோம்? எத்தனை சண்டை போடறோம்? எக்ஸ்பீரியன்ஸ் மாமே எக்ஸ்பீரியன்ஸ்! :)


* ஞான யோகம் = நிறைய படிச்சி வச்சிருக்கேன்! பல விஷயம் "அறிந்தேன்"! ஆனால் "உணர்ந்தேனா"?
* கர்ம யோகம் = நிறைய கர்மா பண்ணுவேன்! சடங்கு தெரியும்! நானே கை போட்டு பல வேலை பண்ணுவேன்! "செய்தேன்" ஆனால் ஒழுங்கா "நெய்தேனா"?



இப்படி நாமளே முயன்று, நாமளே சுயமா அறிவைத் தேடி, ஞான/கர்ம வளர்ச்சி அடைஞ்சிட்டதனால, அம்மா அப்பாவான எம்பெருமானை வாய் விட்டுக் கூப்பிட ஏதோ ஒன்னு லேசாத் தடுக்குது! :)
- முருகாஆஆஆ-ன்னு சத்தமா எப்படிக் கூப்புடுறதாம்? சேச்சே! ஷேம்! ஷேம்! :)
- கோவிந்தாஆஆஆ-ன்னு வாய் விட்டு எப்படி அழைக்கறதாம்? அதெல்லாம் பஜனை கோஷ்டிக் காரங்க வேணும்-ன்னா பண்ணுவாங்க! :)

* நாமளோ ஞான/கர்ம யோகத்துல-ல்ல இருக்கோம்? தீர்வை "நாமளே" தேடிப்போம்! ஏதாச்சும் பரிகாரம், பிலாஸபி, பிரம்ம சத்யம் ஜகன் மித்யா-ன்னு இருக்கும்! அதைச் செய்வோம்!
* நேதி நேதி, அஹம் பிரம்மாஸ்மி-ன்னு, தத்துவக் கடல்-ல விழுந்து குளிப்போம்! சூப்பராப் பதிவுல கூடிக் கூடிப் பேசுவோம்!
* ஆனால் "கோவிந்தா"-ன்னு கூச்சம் இல்லாம பப்ளிக்கா அழைக்கிறது தான் கொஞ்சம் கஷ்டம்! நாலு பேரு ஒரு மாதிரி நினைச்சிப்பாங்க!
* அவன் உள்ள உகப்புக்கு எல்லாம் நடந்துக்க முடியாது! மெஜாரிட்டி ஆளுங்களோட ஒத்துப் போகணும்-ல்ல? ஒதுக்கி வச்சீருவாங்களே! கோயில்-ல மாலை மரியாதை பரிவட்டம் எல்லாம் கெடைக்க வேணாமா? :)

அதுக்காகப் பிள்ளைகளுக்குப் பாசமில்லாம எல்லாம் இல்ல! ஜஸ்ட் மூனே முக்கா இலை படுத்தும் பாடு! அதான் ஆழ்வார் சொல்கிறார்......
பரவாயில்லை! துயர் வரில் கூப்பிடக் கூச்சமா இருக்கா? சரி, கூப்பிட வேணாம்! "நினைத்துக் கொள்ளுங்கள்"! துஞ்சும் போது "அழைத்துக் கொள்ளுங்கள்"!
- ஆனால் தயவு பண்ணி, அது அழைத்தோ இல்லை நினைத்தோ, அவனைக் "கொள்ளுங்கள்"! அவனைக் "கொள்ளுங்கள்"!

உலகம் அளந்தானை "அளக்க" முடியாது! "கொள்ளத்" தான் முடியும்! அதனால்
* உளமாறக் கொள்ளுங்கள்!
* உளம் ஆறக் கொள்ளுங்கள்!
* உளம் மாறக் கொள்ளுங்கள்!

அவன் எங்கோ இருக்கும் பரமாத்மா = இறைவன் என்று சாஸ்திர பூஜையோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுக்கும் அவனுக்கும் உறவு என்று அவனுடன் கொள்ளுங்கள்! "உறவு கொள்ளுங்கள்"!

* அவன் = அ
* நீங்கள் = ம்
* "உ"றவு கொண்டால் வருவது உ!
=> அவன்-உறவு-நீங்கள்! => அ-உ-ம்! => ஓம்!

உன் தன்னோடு-உறவேல்-நமக்கு.....இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்!


துயர் இலீர், சொல்லிலும் நன்றாம் = துயரம் இல்லாதவர்கள், "நாம தான் ஜாலியா இருக்கோமே? இப்ப எதுக்கு இறைவனைப் போய் நினைக்கணும்? எல்லாம் வயசான காலத்தில் பாத்துக்கலாம்! இப்போ ஜஸ்ட் என்ஜாய் மாடி"-ன்னு **மட்டும்** இல்லாம, அவன் பேரைச் சொல்லிப் பழகுங்கள்! துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!

துயர் வரில் "நினைமின்" = துயரம் வந்துருச்சே! அய்யோ அய்யோ-ன்னு குதிக்காம, நாம என்ன தப்பு பண்ணோம்-ன்னும் கொஞ்சம் "நினைமின்"! கூடவே அவனையும் "நினைமின்"!

* அன்பன் ஆஞ்சநேயன்! வாலில் நெருப்பு வைத்த போது, "அய்யோ நெருப்பு, நெருப்பு! உன் வேலையாத் தானே வந்தேன்? துயர் வந்துருச்சே"-ன்னு குதிக்கலை! துயர் வரில் நினைமின்! நினைத்தான்!
* ஆசைப் பிரகலாதன்! மலையில் உருட்டித் தள்ளிய போது, "அய்யோ அய்யோ, உன் பேரைத் தானே சொன்னேன்? துயர் வந்துருச்சே"-ன்னு குதிக்கலை! துயர் வரில் நினைமின்! நினைத்தான்!

இப்படி "நினைத்தால்"....அவன் "நினைப்பாக" இருந்தால்....

துஞ்சும் போது "அழைமின்" = தூங்கும் போதும் உங்களை அறியாமல் அவனை அழைப்பீர்கள்! :)
பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))

துயர் வரில் "நினைமின்"! துஞ்சும் போது "அழைமின்"! நாராயணா என்னும் நாமம்!


"நாராயணாய" என்றால் என்ன? - இன்னிக்கி பார்க்கத் துவங்கி விடலாமா?

இதோ துவங்கி விடுகிறேன்! அதற்கு முன்.......
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!
கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன்
***நற்றாள்*** தொழாஅர் எனின்!
------------------------------------------------------------------------------------

* நாரணம் (தமிழில்)
= நாரம் + அணம்
= நீர் + அருகில் = நீர்மைக்கு அருகில்


* நாராயணம் (வடமொழியில்)
= நாரம் + அயணம்
= உயிர்கள் + இடம் = உயிர்கள் தஞ்சமாகும் இடம்

------------------------------------------------------------------------------------

1.
நீர் இன்றி அமையாது உலகு! = நாரணம்!
அதே போல் நீர்வண்ணன்-இறைவன் இன்றி அமையாது உலகு!!
------------------------------------------------------------------------------------
2.
நீர், தானே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவுகளையும் அது தான் விளைவிக்கிறது!
துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்பது குறள்!

* தானே உணவாகி = துப்பு ஆய
* மற்ற உணவுக்கும் காரணமாகி = துப்பு ஆக்கி

அதைப் போலவே இறைவன்-எம்பெருமான், தானே உலகுக்குக்
* காரணமாகவும் இருக்கிறான்!
* காரியமாகவும் இருக்கிறான்!
தானே வழியும் சீவனுமாய் இருக்கிறான்! = நாரணம்!
------------------------------------------------------------------------------------
3.
நீருக்கு ஒரு முக்கியமான குணம் இருக்கு!
* அதுக்கு வடிவம் என்று எதைச் சொல்வது? = எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
* அதே போல் நீர் வண்ணனாகிய நாரணனும் = எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தைப் பெற்று விடுவான்!

அது மீனா, ஆமையா, பன்றியா, மிருகமா, குள்ளனா, கண்ணனா-காதலனா? எதில் ஊற்றுகிறீர்களோ அது!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! = நாரணம்!
------------------------------------------------------------------------------------
4.
நீர் எதிலும் அடங்கி விடும்! நீருக்குள்ளும் எதுவும் அடங்கி விடும்!
Water is an Universal Solvent!
Proteins, DNA, Polysaccharides என்று அணுக் கூறுகள் கூட கரைந்து விடும்!

அதே போல் புண்யாத்மா/பாபாத்மா என்று பேதமும் இல்லாமல்...
சாதி, மத, ஆண், பெண், என்று எந்தப் பேதமும் இல்லாமல்...
அனைவரும் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வணங்கியவன்/வணங்காதவன் என்ற தடையே இல்லை! அவனை அண்டினார்க்கு மோட்சம்! அவனை ஸ்வீகரிக்காதவர்கள் எல்லாருக்கும் வெறும் நரகமே போன்ற பேச்சுக்களே இல்லை! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

இப்படி அனைத்தும் எம்பெருமானின் அநுபூதிக்குள் கரைய வல்லவை = நாரணம்!
Coz, Narayanan is an universal solvent!
------------------------------------------------------------------------------------
5.
நீர் = திடப்பொருளாகவும்(Solid), நீர்மைப் பொருளாகவும்(Liquid), வளிப் பொருளாகவும்(Gas), நம் கண் முன்னாலேயே பார்க்கலாம்!
Water exists in all states! Narayanan exists in all states!

மற்ற வேதிப் பொருட்கள் State Change ஆக, அதிக வெப்பம்/குறைந்த அழுத்தம் என்று பலதும் தேவைப்படும்! ஆனால் நீர் மட்டும் எளிதில் ஆவியாகும், கட்டியாகும்! மீண்டும் நீராகவும் ஆகும்!
அது போல் எம்பெருமானும் அடியவர்கள் வெப்பத்துக்கு/நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதாக மாற்றிக் கொள்வான்! அப்படி மாறினாலும், அவன் அவனாகவும் இருப்பான்!

நீரைப் போலவே எல்லா நிலைகளிலும் இருப்பதால் = நாரணம்!


நாரம் என்பது அனைத்துக்கும் மூலமான நீர்!
அண்ட நீர் (பிரளய ஜலம்) முதற்கொண்டு அண்டத்தின் அனைத்து நீர் ஆதாரங்களும் ஆதாரம் என்பதே நாரம்!

H2O என்று இன்று சொல்கிறோம்!
இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்சிஜன் அணு என்று கூறு பிரித்துக் காட்டுகிறோம்! ஆனால் வேதங்கள் அன்றே இப்படிக் கூறு பிரித்துக் காட்டுகின்றன!
பிராணம் (O) ஏவம், அன்யத் (H2) த்வயம் என்று வேதமும் சொல்கிறது!
பிராணம் (O) ஏவம் = உயிர் வளி ஒன்று!
அன்யத் (H2) த்வயம் = மறு வளி இரண்டு!
"ஆபோ நாரா" என்று நாரம்-நீர் பற்றிய வேத சூக்தமும் உண்டு = நாராயண சூக்தம்!

* அவன் பேரும் நீர்! வண்ணமும் நீர்! உறைவதும் பாற்கடல் நீர்!
அவனுடன் "அலை" மகளும் அலை(நீர்)!
* ஏன் அவனை நீரான், நீர்மையான், "நாரா"-யணன், நீர்-வண்ணப் பெருமாள்-ன்னு, எல்லாம் நீராகவே காட்ட வேண்டும்?
* எதற்குப் பிரசாதமாக தீர்த்தம் என்னும் "நீர்" கொடுக்க வேணும்?
* ஏன் பெருமாளுக்கு எல்லாமே நீராகவே அமைந்துள்ளது?

* தமிழில் நாரம் என்பதன் விளக்கம் என்ன?
சங்கத் தமிழில் "நாராயணா என்னாத நா என்ன நாவே?" - என்று இளங்கோ அடிகள் கேட்கிறாரே! வேறு எங்கெல்லாம் "நாரணம்" என்ற சங்கத் தமிழ்ச் சொல் வருகிறது? (தொடரும்......)

81 comments:

  1. அண்ணா, பாசுர விளக்கம் அருமையோ அருமை.. முதல்முறை படித்தவுடனே புரிந்தது இம்முறை தான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. //துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!//

    எங்கே.. ஏதாவதொரு வேண்டுதலை முன்னிட்டு அழைப்பவர்கள் தானே அதிகம். ஆனால் அப்படியாவது அவனை நினைத்தால் சரி.

    ReplyDelete
  3. //வெளிநாட்டில் இருக்கும் புள்ளைக்கு ஒரு சின்ன விபத்து! ரயில் வண்டில ஏறும் போது இடுக்குல காலைக் கொடுத்துட்டான்!//

    விராலிமலை முருகன் கோவிலுக்கு சென்றதைப் பற்றிய பதிவின் போது சொன்னீங்கன்னு நினைவு. அப்போது தான் உங்க பதிவுகளை படிக்க ஆரம்பித்திருந்தேன். நான் உங்களைப் பார்க்க வந்திருந்தப்போ இரயில் நிலையத்தில் இதே ஞாபகம் வந்தது.

    ReplyDelete
  4. //கோவிந்தாஆஆஆ-ன்னு வாய் விட்டு எப்படி அழைக்கறதாம்? அதெல்லாம் பஜனை கோஷ்டிக் காரங்க வேணும்-ன்னா பண்ணுவாங்க! :)//

    எனக்கு எங்கஊர்ப் பழக்கம் தான்.. ஏதாவதொரு கனமான பொருளை நகர்த்தும்போது, கோவிந்தா என்று சொன்னால் தான் முடியும்.. :).. எம்பெருமானுக்கு ஆரத்தி காட்டும்போதும், அடிவயிற்றில் இருந்து கோவிந்தா என்று குரல் குடுத்தால் தான் திருப்தி கிடைக்கிறது.

    ReplyDelete
  5. //பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))//

    ஆமா பெரிய ரகசியம்.. நீங்க யார் பேரைச் சொல்லிருப்பீங்கன்னு ஊருக்கே தெரியுமே :)

    ReplyDelete
  6. நாராயண விளக்கம் எளிமையா இருக்குண்ணா.. நல்லாப் புரியுது.

    //அவன் உறைவதும் பாற்கடல் நீர்! //

    அப்போ பாற்கடல்னா பால் நிரம்பிய கடல் இல்லையா :)

    ReplyDelete
  7. வெளிநாட்டில் இருக்கும் புள்ளைக்கு ஒரு சின்ன விபத்து! ரயில் வண்டில ஏறும் போது இடுக்குல காலைக் கொடுத்துட்டான்! மருத்துவமனை, கால்கட்டு, அது, இது-ன்னு ஏக களேபரம்! ஆனா வூட்டுல அம்மா அப்பா கிட்ட இது பற்றி மூச்சே விடலை! ஏன்?//

    அந்த மேட்டர், all we know sir!!

    unfortunately, உங்கள அப்ப அவ்வளவா தெரியாது.;((

    இல்லாட்டி மேல்மாடி வரைக்கும் வந்துட்டு, கீழ இருந்த எங்க வீட்டுக்குக் கூப்புடாம இருந்துருப்போமா?? ;-((

    பதிவப் படிச்சுட்டு வாரேன்... ;-))

    ReplyDelete
  8. //Raghav said...
    அண்ணா, பாசுர விளக்கம் அருமையோ அருமை..//

    :)
    நான் எதையும் விளக்கவே இல்லையே ராகவ்? கதை தானே சொன்னேன்? :)

    //முதல்முறை படித்தவுடனே புரிந்தது இம்முறை தான் என்று நினைக்கிறேன்//

    ஹா ஹா ஹா. இம்புட்டு நாளா புரியாத மாதிரி எழுதிக்கிட்டு இருந்த. இன்னிக்காச்சும் திருந்தினியே-ன்னு சொல்றீங்களா? :))

    ReplyDelete
  9. //Raghav said...
    விராலிமலை முருகன் கோவிலுக்கு சென்றதைப் பற்றிய பதிவின் போது சொன்னீங்கன்னு நினைவு. அப்போது தான் உங்க பதிவுகளை படிக்க ஆரம்பித்திருந்தேன். நான் உங்களைப் பார்க்க வந்திருந்தப்போ இரயில் நிலையத்தில் இதே ஞாபகம் வந்தது//

    ஹிஹி! இதெல்லாமா ஞாபகத்தில் வச்சிக்குவாங்க? இங்கே சொன்னது பசங்க அம்மா அப்பா கிட்ட எப்படியெல்லாம் மறைக்கறானுங்க-ன்னு காட்டத் தான்! சொந்த அனுபவம்-ன்னா இன்னும் ஸ்ட்ராங் இல்லையா? அதான்! :)

    ReplyDelete
  10. //Raghav said...
    //பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))//

    ஆமா பெரிய ரகசியம்.. நீங்க யார் பேரைச் சொல்லிருப்பீங்கன்னு ஊருக்கே தெரியுமே :)//

    ஹிஹி! நான் பாவனா-ன்னு எல்லாம் சொல்லலை! :)

    இல்லை! அது ஊருக்கே தெரியாது! அன்று தூக்கத்தில் உளறியதைக் கேட்டு விட்டதால், அவனுக்கு மட்டும் தான் தெரியும் போல! :)

    இனி நான் உஷாரா இருப்பேன்! :))

    ReplyDelete
  11. //Raghav said...
    எனக்கு எங்கஊர்ப் பழக்கம் தான்.. ஏதாவதொரு கனமான பொருளை நகர்த்தும்போது, கோவிந்தா என்று சொன்னால் தான் முடியும்.. :)//

    ஆகா! அவரு மற்ற கனத்தையெல்லாம் விட மகா "கனம்" பொருந்தியவரா? :)

    //எம்பெருமானுக்கு ஆரத்தி காட்டும்போதும், அடிவயிற்றில் இருந்து கோவிந்தா என்று குரல் குடுத்தால் தான் திருப்தி கிடைக்கிறது//

    :)
    அதுக்காக எல்லாருமே கட்டாயமா அப்படிக் கூக்குரல் இடணும்-ன்னு சொல்ல வரலை! அப்படி இடுவதைத் தாழ்ச்சியா நினைக்கக் கூடாது என்பது மட்டுமே சொல்ல வந்தேன்! :)

    திருமலைக் குளத்தில் ஒரு கிராமப்புற பக்தர், கோவிந்தா என்ற பேரைக் கூடச் சொல்லத் தெரியாம, "கோஹிந்தா" என்று கூவிக் கொண்டிருந்தாராம்! அவரைத் திருத்த நினைத்து, முக்கூரார் கிட்டக்க போனாராம்!

    அப்போ அந்த விவசாயி தனக்குள் பேசிக் கிட்டு இருந்தாரு போல! "எம்பெருமானே, வருசா வருசம், அறுவடை முடிச்சி வந்து உன்னைய பாக்குறேன்! எனக்குத் தெரிஞ்ச ஒரே பேர் கோஹிந்தா தான். அதுபடியே உன்னையக் கூப்புடறேன்! போன வருசம் எப்படி என்னையும் என் மனையும் மாடுகளையும் எந்தக் கொறையும் இல்லாம வச்சிருந்தியோ, அதே போல நல்லபடியா வச்சிருப்பா! அடுத்த வருசமும் வந்து உன்னைக் கோஹிந்தா-ன்னு கூப்பிடறேன்"-ன்னு சொன்னாராம்!

    அதைக் கேட்ட மாத்திரத்தில் முக்கூரார் விவாசாயியைத் திருத்தும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டாராம்! கோஹிந்தா-ன்னு கூப்பிட்டதே ஒரு வருசம் இவரை நல்லா வச்சிருக்கு-ன்னா? வடமொழி இலக்கணம் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! தமர் உகந்தது எப்பேர் மற்று அப்பேர்!

    மேலும் கோஹிந்தா என்ற பதத்தின் பொருள் வரும் சஹஸ்ரநாம விளக்கம் அப்பறம் தான் புரிஞ்சிச்சாம்! பாமரத்தில் வந்த படிப்பு! எப்ப வரும் எப்படி வரும்-ன்னே சொல்ல முடியாது :)

    ஓம் நமோ Dash! :)

    ReplyDelete
  12. //Raghav said...
    நாராயண விளக்கம் எளிமையா இருக்குண்ணா.. நல்லாப் புரியுது//

    நன்றி!
    ஒரு பொதுப்படையாகச் சொல்லிப் போந்தேன்! உடனே இராமானுசர் H2O பத்தியெல்லாம் கூட கோபுரத்தில் இருந்து சொன்னாரா-ன்னு எல்லாம் கேட்கப்பிடாது! :)

    தொடர் பதிவின் இறுதியில் இராமானுசர் சொன்ன சாரத்தை அப்படியே முன் வைக்கிறேன்! இப்போது சொல்வதெல்லாம் படிப்படி புரிதல் விளக்கங்களே!

    //அப்போ பாற்கடல்னா பால் நிரம்பிய கடல் இல்லையா :)//

    ஹா ஹா ஹா
    சின்ன வயசுல பாற்கடலை யாருக்கோ பால் குத்தகை விட்டு ஏமாத்தி இருக்கீங்க-ல்ல? :)

    ReplyDelete
  13. //Raghav said...
    எங்கே.. ஏதாவதொரு வேண்டுதலை முன்னிட்டு அழைப்பவர்கள் தானே அதிகம். ஆனால் அப்படியாவது அவனை நினைத்தால் சரி//

    மொதல்ல ஓரப்பார்வை!
    அப்பறம் சைட்டு!
    அப்பறம் கடலை!
    அப்பறம் கொடுக்கல் வாங்கல்! ஊர் சுற்றல்!
    அப்பறம் தான் காதல்!
    ஒவ்வொன்னா வரும் ராகவ் வரும்! :))
    எடுத்தவுடனேயே எம்பெருமானைக் காதலித்து விட முடியுமா என்ன? :))

    ReplyDelete
  14. //தமிழ் said...
    அந்த மேட்டர், all we know sir!!//

    :)
    சும்மா ஒரு கம்பேரிசனுக்குச் சொன்னேன் முகில்! :)

    //unfortunately, உங்கள அப்ப அவ்வளவா தெரியாது.;((//

    ஹா ஹா ஹா! fortunately-ன்னு சொல்லுங்க! தம்பி பாலாஜி அப்படித் தான் சொல்லுவான்! :)

    //இல்லாட்டி மேல்மாடி வரைக்கும் வந்துட்டு, கீழ இருந்த எங்க வீட்டுக்குக் கூப்புடாம இருந்துருப்போமா?? ;-((//

    ஆகா! அடுத்த தபா ஊருக்கு வரும் போது வரேன்! அதுக்கு எதுக்கு இம்புட்டு ஃபீலிங்க்ஸ்? :)

    //பதிவப் படிச்சுட்டு வாரேன்..;-))//

    வாங்க! வாங்க! கேள்வியின் நாயகியாச்சே நீங்க! :)

    ReplyDelete
  15. ஒரு தடவையாவது இந்த பெங்களூர் நாயகன் ராகவ்வை முந்தி ஃப்ஸ்ட் வரணும்னு பார்த்தா முடியவதே இல்லைப்பா:):)

    ReplyDelete
  16. //ஹீரோவான திருமங்கை மன்னன்! :)
    * துஞ்சும் போது = "நினைமின்"! துயர் வரில் = "அழைமின்"!-ன்னு சொன்னா ஓக்கே!
    * துஞ்சும் போது = "அழைமின்"! துயர் வரில் = "நினைமின்"!-ன்னு மாத்திச் சொல்றாரே? ஏன்?
    //

    ஏன்னு நானும் ரொம்ப யோசிச்சேன்... தனித்திருவிழித்திருபசித்திரு தத்துவமா இருக்குமோன்னும் தோன்றியது

    ReplyDelete
  17. //வெளிநாட்டில் இருக்கும் புள்ளைக்கு ஒரு சின்ன விபத்து! ரயில் வண்டில ஏறும் போது இடுக்குல காலைக் கொடுத்துட்டான்! மருத்துவமனை, கால்கட்டு, அது, இது-ன்னு ஏக களேபரம்! ஆனா வூட்டுல அம்மா அப்பா கிட்ட இது பற்றி மூச்சே விடலை///

    >>>>>>>>

    தெரியும் தெரியும் யார்கிட்டதான் முதல்ல சொன்னீங்க?:)

    ReplyDelete
  18. //துஞ்சும் போது "அழைமின்" = தூங்கும் போதும் உங்களை அறியாமல் அவனை அழைப்பீர்கள்! :)//

    நான் நினைச்சதுதான் இது!சூபிக் கவிஞர் ஷாலத்தீப் அற்புதமாய் இப்படிப்பாடி இருக்கிறாரே

    ’ஒருவனே நம்முள் பாட்டாக இருக்கிறான்
    தூங்குவதையும் பிரார்த்தனையாகக்கொண்டவர்கள்
    தூங்கினாலும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்’

    ஆழ்வார்பாடலோடு இது ஒத்துப்போவதாக தோன்றுகிறது.


    ///
    பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))///

    இப்போ இங்க ரொம்ப அவசியம்)ஆமா யார் அது? :))))

    //துயர் வரில் "நினைமின்"! துஞ்சும் போது "அழைமின்"! நாராயணா என்னும் நாமம்! //

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே! நினைவிற்கு வலிமை அதிகம்தான்!

    ReplyDelete
  19. //
    உன் தன்னோடு-உறவேல்-நமக்கு.....இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்!

    ////


    தோழி ஆண்டாள்எப்போதும் உதவறாங்கபோல இருக்கு!

    ReplyDelete
  20. //
    * நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
    * நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் (வடமொழியில்///நாரைப்பறவைக்கும் நீருக்கும் உள்ளதொடர்பினால்தான் அதுக்கு அந்தப்பேரோ? நீர்பாட்டுக்கு ஏதாவது எழுதிடறீர் ரவி பாருங்க கல்பட்ட குளத்து நீர்மாதிரி நானும் மூளையை லேசா சுழட்டறேனே!:)

    ReplyDelete
  21. //
    பிராணம் (O) ஏவம் = உயிர் வளி ஒன்று!
    அன்யத் (H2) த்வயம் = மறு வளி இரண்டு!
    "ஆபோ நாரா" என்று நாரம்-நீர் பற்றிய ஒரு சூக்தமும் உண்டு! நாராயண சூக்தம்!>>>>


    அருமையான விளக்கம்

    //* அவன் பேரும் நீர்! வண்ணமும் நீர்! உறைவதும் பாற்கடல் நீர்! அவனுடன் "அலை" மகளும் அலை(நீர்)!///

    >>>>

    நீரஜா?

    ReplyDelete
  22. //
    * எதற்குப் பிரசாதமாக தீர்த்தம் என்னும் "நீர்" கொடுக்க வேணும்?
    * ஏன் பெருமாளுக்கு எல்லாமே நீராகவே அமைந்துள்ளது?
    //

    என்ன சஸ்பென்ஸ் இங்கயே சொல்லவேண்டியதுதானே? வரவர பெரிய நாவலாசிரியர்போல தொடரும் போட்டு பரபரப்பு உண்டாக்கறீங்க:)

    ReplyDelete
  23. //* அவன் பேரும் நீர்! வண்ணமும் நீர்! உறைவதும் பாற்கடல் நீர்! அவனுடன் "அலை" மகளும் அலை(நீர்)!///\

    >>>>நீரஜா?//

    அது நீரஜா இல்லை!
    அது ஷைலஜா! :)))))

    ReplyDelete
  24. தமிழில் நாரம் என்பதன் விளக்கம் என்ன?
    சங்கத் தமிழில் "நாராயணா என்னாத நா என்ன நாவே?" - என்று இளங்கோ அடிகள் கேட்கிறாரே! வேறு எங்கெல்லாம் "நாரணம்" என்ற சங்கத் தமிழ்ச் சொல் வருகிறது>>>>>>>>>>>>>>>>>>


    இப்படி கேள்வியா கேட்டுடுங்க யோசிக்கவேணாமா? டைம் கொடுங்க:)

    ReplyDelete
  25. //Raghav said...
    //பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))//

    ஆமா பெரிய ரகசியம்.. நீங்க யார் பேரைச் சொல்லிருப்பீங்கன்னு ஊருக்கே தெரியுமே :)

    5:37 AM
    /////


    ராகவ் அப்பாவியா இருக்கேம்மா நீ! வேற நான் என்ன சொல்றது?:)

    ReplyDelete
  26. //Raghav said...
    நாராயண விளக்கம் எளிமையா இருக்குண்ணா.. நல்லாப் புரியுது.

    //அவன் உறைவதும் பாற்கடல் நீர்! //

    அப்போ பாற்கடல்னா பால் நிரம்பிய கடல் இல்லையா :)

    5:43 AM, August
    ///


    ராகவ்! சரியான கேள்வி இது! திருப்பாற்கடல்னா சரியான அர்த்தம் என்னன்னு இன்னும் தெரியவே இல்லை

    ReplyDelete
  27. //ஷைலஜா said...
    ஒரு தடவையாவது இந்த பெங்களூர் நாயகன் ராகவ்வை முந்தி ஃப்ஸ்ட் வரணும்னு பார்த்தா முடியவதே இல்லைப்பா:):)//

    ஹிஹி! எதுல எல்லாம் போட்டி போடறாங்க-ப்பா? :)

    என்னாது பெங்களூர் நாயகனா?
    அவன் பெங்களூரா? மதுரையா? ராம்னாடா? எமனேஸ்வரமா? ஸ்ரீவில்லிபுத்தூரா? எதுக்கா எது? :)

    //
    //துஞ்சும் போது = "அழைமின்"! துயர் வரில் = "நினைமின்"!-ன்னு மாத்திச் சொல்றாரே? ஏன்?
    //
    ஏன்னு நானும் ரொம்ப யோசிச்சேன்... தனித்திருவிழித்திருபசித்திரு தத்துவமா இருக்குமோன்னும் தோன்றியது//

    ஹிஹி! தனித்திரு, பசித்திரு, விழித்திரு இல்ல-க்கா! அதெல்லாம் ஞானிகளுக்கு! யோகிகளுக்கு! நமக்கு (எனக்கு) இல்ல! :))

    தனியாவும் இருக்க வேணாம்! - ஜாலியா சுத்தலாம்!
    பசியாவும் இருக்க வேணாம்! - நல்லாச் சாப்பிடலாம்!
    விழிச்சும் இருக்க வேணாம்! - போத்திக்கிட்டு தூங்கலாம்!

    ஆனா இது எல்லாத்துலயும் ஒன்னே ஒன்னு கூடவே செய்யணும்! அவனையும் கூடச் சேத்துக்கணும்! அவன் கூட உறவு பாராட்டிக்கிட்டே இருக்கணும்!

    கட்டின புருசன் மாதிரி, அவனை அவ்ளோ சீக்கிரம் ஃப்ரீயா, நிம்மதியா விட்டுறக் கூடாது! ஏங்க, ஏங்க-ன்னு ஏங்கணும்! அப்பாலிக்கா ஓங்கணும்! As simple as that! :))

    ReplyDelete
  28. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //* அவன் பேரும் நீர்! வண்ணமும் நீர்! உறைவதும் பாற்கடல் நீர்! அவனுடன் "அலை" மகளும் அலை(நீர்)!///\

    >>>>நீரஜா?//

    அது நீரஜா இல்லை!
    அது ஷைலஜா! :)))))

    3:41 PM, August
    ///


    >>>..ஆன்மீகச்செம்மலே தமிழை நன்கு வளர்க்கும் இணையத்தின் சடையப்ப வள்ளலே! ஷைலஜா என்றால் மலைமகள்! நீரஜா என்றால் நீரில் இருப்பவள் திருமகள்! என்றும் தெளிவான நீர் குழம்பிவிட்டீரோ?:):)

    ReplyDelete
  29. //ஷைலஜா said...
    ஆன்மீகச்செம்மலே தமிழை நன்கு வளர்க்கும் இணையத்தின் சடையப்ப வள்ளலே!//

    செம திட்டு திட்டறீங்க-க்கா! :))

    //ஷைலஜா என்றால் மலைமகள்! நீரஜா என்றால் நீரில் இருப்பவள் திருமகள்! என்றும் தெளிவான நீர் குழம்பிவிட்டீரோ?:):)//

    நீரஜா-ன்னு நீங்க நீட்டி முழக்கியவுடன், அடுத்து உங்க பேரைச் சொல்லப் போறீங்களோ-ன்னு தான் நானே ஷைலஜா-ன்னு சொல்லிட்டேன்! :)

    * சைலஜா = சைலம் (மலை) + அஜா = மலைமகள்
    * நீரஜா = நீரம் + அஜா = அலைமகள்
    * பத்மஜா = பத்மம் (தாமரை) + அஜா = அலைமகள்/கலைமகள் ரெண்டு பேருமே!

    ஆனா அலைமகளையும் ஷைலஜா-ன்னு சொல்லலாம்! தப்பில்லை!
    அலைமகள் ரொம்பவே Shy & லஜ்ஜா! :)
    அவ புருசனைக் கண்ணால பாக்கக் கூட கூச்சப்படுவா! அவன் மார்பில் அமைதியாப் போயி உக்காந்துகிடுவா!

    So, அலைமகள் = Shyலஜ்ஜா! :)

    ReplyDelete
  30. //ஷைலஜா said...
    //ஆனா வூட்டுல அம்மா அப்பா கிட்ட இது பற்றி மூச்சே விடலை///

    >>>>>>>>தெரியும் தெரியும் யார்கிட்டதான் முதல்ல சொன்னீங்க?:)//

    என் தம்பி இங்க ஒருத்தன் இருந்தான் அப்போ! அவன் கிட்ட! :)
    இன்னொரு தம்பி கண்ணாலம் கட்டிக்க ஊருக்குப் போயிருந்தான் அப்போ! :)

    //சூபிக் கவிஞர் ஷாலத்தீப் அற்புதமாய் இப்படிப் பாடி இருக்கிறாரே
    தூங்குவதையும் பிரார்த்தனையாகக்கொண்டவர்கள்
    தூங்கினாலும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்//

    வாவ்! சூப்பரு!
    தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?

    //ஆழ்வார்பாடலோடு இது ஒத்துப்போவதாக தோன்றுகிறது//

    ஆமாம்-க்கா! நல்லாப் பொருந்துது!

    ReplyDelete
  31. //
    //பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))//

    இப்போ இங்க ரொம்ப அவசியம்//

    ஹிஹி! துஞ்சும் போது அழைமின்-ன்னு சொல்லி இருக்காரு-ல்ல? :)

    //ஆமா யார் அது? :))))//

    இப்போ இங்க ரொம்ப அவசியமாக்கா? :))

    ReplyDelete
  32. ஷைலஜா said...
    //
    * நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
    * நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் (வடமொழியில்///

    ஹிஹி! இதப் பத்தி எனக்குப் ப்ரியமான இடத்தில் இருந்தும் கேள்வி வந்திருக்கு! :)

    //நாரைப் பறவைக்கும் நீருக்கும் உள்ள தொடர்பினால்தான் அதுக்கு அந்தப்பேரோ? நீர்பாட்டுக்கு ஏதாவது எழுதிடறீர் ரவி பாருங்க கல்பட்ட குளத்து நீர்மாதிரி நானும் மூளையை லேசா சுழட்டறேனே!:)//

    சுழட்டுங்க! சுழட்டுங்க!
    குமரனையும் கேட்டிருக்கேன்!
    இராம.கி. ஐயா இது பற்றி முன்னமே லேசாச் சொல்லி இருக்காரு!
    நீர்+அணம், நார்+அணம், நாரம்+அணம்!

    ReplyDelete
  33. //ஷைலஜா said...
    ராகவ்! சரியான கேள்வி இது! திருப்பாற்கடல்னா சரியான அர்த்தம் என்னன்னு இன்னும் தெரியவே இல்லை//

    மொத்தம் ஏழு கடல்களைப் புராணங்கள் சொல்லும்!
    1. லவண சாகரம் = உப்புக் கடல்
    2. இக்ஷூ சாகரம் = கருப்பஞ் சாற்றுக் கடல்
    3. சுர சாகரம் = மதுக் கடல்
    4. ஆஜ்ய சாகரம் = நெய்க் கடல்
    5. ததி சாகரம் = தயிர்க் கடல்
    6. க்ஷீர சாகரம் = பாற் கடல்
    7. ஜல சாகரம் = நன்னீர்க் கடல்

    அனைத்திலும் நீர் தான் ஆதாரம்! லவண சாகரம்-ன்னா கடல் ஃபுல்லா உப்பு கொட்டி இருக்கு-ன்னு அர்த்தம் இல்லை! அந்த நீரில் உப்புத் தன்மை இருக்குன்னு அர்த்தம்! அவ்ளோ தான்!

    அதே போல் தான் பாற்கடலும்! அதுக்காக கடல் ஃபுல்லா பால் இருக்கும்! அடுத்த தபா பரந்தாமனைப் பாக்கப் போகும் போது, நரசுஸ் காபி பொடி கையோட எடுத்துக்கிட்டு போனா, அங்கிட்டு கடல்-ல்ல இருந்து பால் மிக்ஸ் பண்ணி காபி போட்டுக் குடிக்கலாம்-ன்னு எல்லாம் கணக்கு பண்ணக் கூடாது! :))

    ReplyDelete
  34. @ராகவ், ஷைல்ஸ் அக்கா
    //திருப்பாற்கடல்னா சரியான அர்த்தம் என்னன்னு இன்னும் தெரியவே இல்லை//

    எழு கடல்களில் பாற்கடல்-க்கு மட்டும் தான் "திரு"ப்பாற்கடல்-ன்னு திரு போடுவாய்ங்க! திரு "தோன்றிய" கடல் அல்லவா?
    அமுதம் கடைந்த கடலும் கூட! ஈசன் ஆலமுண்ட கடலும் கூட!

    எம்பெருமானின் வியூக ரூபம் உள்ள தலம்! அதாச்சும் அவன் உருவம் அருவம் கடந்த பரம் பொருளாய் இல்லாமல்...
    தேவரும் மூவரும் ஏவரும் வந்து சேவிக்கும் வண்ணம், தன்னைக் கொஞ்சம் இறக்கிக் கொண்டு, பாம்பணையில் தோற்றம் கொள்வது திருப்பாற்கடல்! 107ஆம் திவ்ய தேசம்! இது பரமபதம் என்னும் வைகுந்தம் அல்ல! விண்ணுலக மக்களுக்கான ஒரே ஒரு தலம்!

    என்ன தான் தேவரோ, மூவரோ ஆனாலும்...அவர்களில் ஒருவராக எல்லாம் எம்பெருமான் அவதரிக்கவே மாட்டான்! அவர்களுக்கு ஒரே தலம் = திருப்பாற்கடல்! அவ்ளோ தான்!

    எம்பெருமான் ஆசை, பாசம் எல்லாம் நம் மீது தான்! மண்ணுலகின் மீது தான்! விண்ணுலகினருக்கு
    வியூகம் = பாற்கடல் = ஒன்னே ஒன்னு தான்!

    நமக்குத் தான்
    * பரம் = வைகுந்தம்
    * விபவம் = 10 அவதாரங்கள்
    * அர்ச்சை = 106 திருத்தலங்கள்
    * அந்தர்யாமி = அனைவர் மனத்திலும்
    என்று இத்தனை ரூபம் காட்டி ஆட்கொள்வான்! மோட்சமும் கொடுப்பான்! வைகுந்தம் புகுவது "மண்ணவர்" விதியே!

    தேவர்கள் வைகுந்தம் புகணும், மோட்சம் அடையணும்-ன்னா, அவிங்களும் மண்ணுலகில் வந்து பிறந்து தான் போக முடியும்!

    ReplyDelete
  35. ./// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //
    என்னாது பெங்களூர் நாயகனா?
    அவன் பெங்களூரா? மதுரையா? ராம்னாடா? எமனேஸ்வரமா? ஸ்ரீவில்லிபுத்தூரா? எதுக்கா எது? :)

    //>>>>>>


    இப்போ பெங்களூர்ல இருப்பதால்அந்த ஊர் நாயகன்! நாயகிவந்தா நிலமை மாறலாம்:)



    ///ஹிஹி! தனித்திரு, பசித்திரு, விழித்திரு இல்ல-க்கா! அதெல்லாம் ஞானிகளுக்கு! யோகிகளுக்கு! நமக்கு (எனக்கு) இல்ல! :))///

    எனக்கு சுத்தமா இல்லை:):)

    //தனியாவும் இருக்க வேணாம்! - ஜாலியா சுத்தலாம்!
    பசியாவும் இருக்க வேணாம்! - நல்லாச் சாப்பிடலாம்!
    விழிச்சும் இருக்க வேணாம்! - போத்திக்கிட்டு தூங்கலாம்!

    ஆனா இது எல்லாத்துலயும் ஒன்னே ஒன்னு கூடவே செய்யணும்! அவனையும் கூடச் சேத்துக்கணும்! அவன் கூட உறவு பாராட்டிக்கிட்டே இருக்கணும்! ///

    ‘>>>
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    எளிமையான பயிற்சிதான்.பூவில்தேன்போல நூலில் இழைபோல இறைவன் நம்மோடு இருப்பதை உணர இதுதேவைதான்

    ReplyDelete
  36. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ////

    மொத்தம் ஏழு கடல்களைப் புராணங்கள் சொல்லும்!
    1. லவண சாகரம் = உப்புக் கடல்
    2. இக்ஷூ சாகரம் = கருப்பஞ் சாற்றுக் கடல்
    3. சுர சாகரம் = மதுக் கடல்
    4. ஆஜ்ய சாகரம் = நெய்க் கடல்
    5. ததி சாகரம் = தயிர்க் கடல்
    6. க்ஷீர சாகரம் = பாற் கடல்
    7. ஜல சாகரம் = நன்னீர்க் கடல்////
    >>>>>>>>

    புரிகிறது!


    //அதே போல் தான் பாற்கடலும்! அதுக்காக கடல் ஃபுல்லா பால் இருக்கும்! அடுத்த தபா பரந்தாமனைப் பாக்கப் போகும் போது, நரசுஸ் காபி பொடி கையோட எடுத்துக்கிட்டு போனா, அங்கிட்டு கடல்-ல்ல இருந்து பால் மிக்ஸ் பண்ணி காபி போட்டுக் குடிக்கலாம்-ன்னு எல்லாம் கணக்கு பண்ணக் கூடாது! ////

    >>>>>>>>>>>>>>>>>>

    மணக்க மணக்க காபி போட்டால் மாதவனின் அரிதுயிலும் கலைந்துவிடும்:):)

    ReplyDelete
  37. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //
    //பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))//

    இப்போ இங்க ரொம்ப அவசியம்//

    ஹிஹி! துஞ்சும் போது அழைமின்-ன்னு சொல்லி இருக்காரு-ல்ல? :)

    //ஆமா யார் அது? :))))//

    இப்போ இங்க ரொம்ப அவசியமாக்கா? :))

    4:26 PM, August 12, 2009
    >>>>>>>>>>>>>>>>
    ராகவ்கிட்ட கேட்டுக்கறேன் (அவசியம் என்பதால்:)))

    ReplyDelete
  38. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    @ராகவ், ஷைல்ஸ் அக்கா
    //திருப்பாற்கடல்னா சரியான அர்த்தம் என்னன்னு இன்னும் தெரியவே இல்லை//

    எழு கடல்களில் பாற்கடல்-க்கு மட்டும் தான் "திரு"ப்பாற்கடல்-ன்னு திரு போடுவாய்ங்க! திரு "தோன்றிய" கடல் அல்லவா?
    அமுதம் கடைந்த கடலும் கூட! ஈசன் ஆலமுண்ட கடலும் கூட!

    எம்பெருமானின் வியூக ரூபம் உள்ள தலம்! அதாச்சும் அவன் உருவம் அருவம் கடந்த பரம் பொருளாய் இல்லாமல்...
    தேவரும் மூவரும் ஏவரும் வந்து சேவிக்கும் வண்ணம், தன்னைக் கொஞ்சம் இறக்கிக் கொண்டு, பாம்பணையில் தோற்றம் கொள்வது திருப்பாற்கடல்! 107ஆம் திவ்ய தேசம்! இது பரமபதம் என்னும் வைகுந்தம் அல்ல! விண்ணுலக மக்களுக்கான ஒரே ஒரு தலம்!

    என்ன தான் தேவரோ, மூவரோ ஆனாலும்...அவர்களில் ஒருவராக எல்லாம் எம்பெருமான் அவதரிக்கவே மாட்டான்! அவர்களுக்கு ஒரே தலம் = திருப்பாற்கடல்! அவ்ளோ தான்!

    எம்பெருமான் ஆசை, பாசம் எல்லாம் நம் மீது தான்! மண்ணுலகின் மீது தான்! விண்ணுலகினருக்கு
    வியூகம் = பாற்கடல் = ஒன்னே ஒன்னு தான்!

    நமக்குத் தான்
    * பரம் = வைகுந்தம்
    * விபவம் = 10 அவதாரங்கள்
    * அர்ச்சை = 106 திருத்தலங்கள்
    * அந்தர்யாமி = அனைவர் மனத்திலும்
    என்று இத்தனை ரூபம் காட்டி ஆட்கொள்வான்! மோட்சமும் கொடுப்பான்! வைகுந்தம் புகுவது "மண்ணவர்" விதியே!

    தேவர்கள் வைகுந்தம் புகணும், மோட்சம் அடையணும்-ன்னா, அவிங்களும் மண்ணுலகில் வந்து பிறந்து தான் போக முடியும்!

    5:18 PM,.....>>>>>>>>>>>>>>>>


    நன்றி விரிவாக சொல்லியதற்கு ஆனால் எனக்கு இதை முழுக்க உள்வாங்கிக்க முடியவில்லை சில சந்தேகங்கள் எழுகின்றன. கொஞ்சம் அவகாசம் தேவை வரேன் பிறகு கேள்விகளுடன்!

    ReplyDelete
  39. அடப்பாவி ! டகால்ட்டி ரவி, :-)
    ஆழ்வார் துயர் வரும்போது அழைக்காதீர்னு சொல்லவே இல்லையே.
    நினைச்சுகோங்க அப்படின்னு சொன்னா கூப்பிடக் கூடாதுன்னு அர்த்தமா? :-)
    just kidding..... :-)
    இங்கே இன்னொரு பாசுரம் பாருங்க. ஒங்க தோழி பாசுரம். ஒங்களுக்கு பிடிக்கும்னு நெனைக்கறேன். கோதை ஒரு கிளி வளர்க்கிறாள். அதற்கு "கோவிந்தா ! கோவிந்தா ! " அப்படின்னு கத்தறதுக்கு சொல்லி கொடுக்கிறாள். பின்னர் ஒரு நாள் அவள் கண்ணனின் பிரிவில் மிகுந்த துயரமும், கண்ணனுடன் சேர்ந்து இருக்கும் ஆசை நிறைவேறாததால் கோபமும் கொள்கிறாள். அப்போ பார்த்து அந்த கிளி "கோவிந்தா ! கோவிந்தா ! " அப்படின்னு கத்துது. கொஞ்ச நேரம் அவன் பேரை சொல்லாம இருன்னா கேட்க மாட்டேன்து. செம டென்ஷன் ஆகி கிளியை பட்டினி போடுகிறாள். பட்டினி கிடந்த கிளி வார்த்தையை மாத்தி "உலகளந்தானே" அப்படின்னு கூவுதாம்.

    "கூட்டில் இருந்து கிளி எப்போதும் 'கோவிந்தா! கோவிந்தா!' என்றைழைக்கும்
    ஊட்டக் கொடாது செறுப்பனாகில் 'உலகள ந்தான் !' என்று உயரக் கூவும்
    நாட்டில் தலைப் பழி எய்தியுங்கள் நன்மை இழந்து தலை இடாதே
    சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவரா பதிக்கு என்னை உய்த்திடுமின்."

    இது தான் கடைசி பாசுரம். இனிமே பின்னூட்டத்தில் பாசுரம் இட்டு தொல்லை செய்ய மாட்டேன். :-)
    ~
    ராதா

    ReplyDelete
  40. //மேலும் கோஹிந்தா என்ற பதத்தின் பொருள் வரும் சஹஸ்ரநாம விளக்கம் அப்பறம் தான் புரிஞ்சிச்சாம்! பாமரத்தில் வந்த படிப்பு!//

    கோஹிந்தாவின் விளக்கத்தையும் சொன்னீங்கன்னா தெரிஞ்சிப்போம்.

    ReplyDelete
  41. //தொடர் பதிவின் இறுதியில் இராமானுசர் சொன்ன சாரத்தை அப்படியே முன் வைக்கிறேன்! இப்போது சொல்வதெல்லாம் படிப்படி புரிதல் விளக்கங்களே!
    //

    அந்த திவ்யமான விளக்கத்தைக் கேட்பதற்காக திருக்கோஷ்டியூர் கோவில் கோபுர வாசலில் இன்றிருந்தே காத்திருக்கிறேன் !

    ReplyDelete
  42. //எடுத்தவுடனேயே எம்பெருமானைக் காதலித்து விட முடியுமா என்ன? :)//

    அப்படிக் காதலித்தவர்கள் இருக்கிறார்களா?

    ReplyDelete
  43. //ஷைலஜா said...
    ஒரு தடவையாவது இந்த பெங்களூர் நாயகன் ராகவ்வை முந்தி ஃப்ஸ்ட் வரணும்னு பார்த்தா முடியவதே இல்லைப்பா:):)
    //

    :)
    அக்கா, அது ரொம்ப சிம்பிள்.. ஆனா கொஞ்சம் செலவாகுமே பரவாயில்லையா :)

    ReplyDelete
  44. //அவன் பெங்களூரா? மதுரையா? ராம்னாடா? எமனேஸ்வரமா? ஸ்ரீவில்லிபுத்தூரா? எதுக்கா எது? :)//

    ஹி ஹி... பெங்களூர், ராம்னாட், எமனை, ஸ்ரீவில்லிபுத்தூர் எல்லாம் சரி.. சம்பந்தமே இல்லாம மதுரை எதுக்கு லிஸ்ட்ல வருது :)

    ReplyDelete
  45. //அடுத்த தபா பரந்தாமனைப் பாக்கப் போகும் போது, நரசுஸ் காபி பொடி கையோட எடுத்துக்கிட்டு போனா, அங்கிட்டு கடல்-ல்ல இருந்து பால் மிக்ஸ் பண்ணி காபி போட்டுக் குடிக்கலாம்//

    ஹா ஹா... ஒரு உபன்யாசத்தில் கேட்டது.. ராமன் காட்டிற்கு சென்ற போது, ரிஷி பத்தினிகள் ராமன், சீதை, இலக்குவன் மூவரையும் ஒரு குறையும் வராமல் கவனித்துக் கொண்டனர்.. ஆனால் என்ன ஒரே ஒரு குறை கானகத்தில் காஃபி மட்டும் கிடைக்கவில்லையாம். :)

    ReplyDelete
  46. //Radha said...
    அடப்பாவி ! டகால்ட்டி ரவி, :-)
    ஆழ்வார் துயர் வரும்போது அழைக்காதீர்னு சொல்லவே இல்லையே.
    நினைச்சுகோங்க அப்படின்னு சொன்னா கூப்பிடக் கூடாதுன்னு அர்த்தமா? :-)//

    ஹய்யா.. நான் ராமன் கோஷ்டியும் அல்ல, ராமானுஜன் கோஷ்டியும் அல்ல, கே.ஆர்.எஸ் கோஷ்டியும் அல்ல.. இனி நான் ராதா கோஷ்டி. :)

    ReplyDelete
  47. //unfortunately, உங்கள அப்ப அவ்வளவா தெரியாது.;((//

    ஹா ஹா ஹா! fortunately-ன்னு சொல்லுங்க! தம்பி பாலாஜி அப்படித் தான் சொல்லுவான்! :)//

    என்னது fortunately aaa???

    அவ்வ்வ்.... அப்ப, நான் ஒரு கார்பென்ட்டர் ன்ற உண்மை உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா....?? ;-)) (இரம்பம்... ஹி ஹி ஹி)

    ReplyDelete
  48. //பதிவப் படிச்சுட்டு வாரேன்..;-))//

    வாங்க! வாங்க! கேள்வியின் நாயகியாச்சே நீங்க! :)//

    பயங்கரமா நகைச்சுவை உணர்வுங்க உங்களுக்கு... ;-))

    அண்ணாத்த, வரிசையா புதிர் போடறது நீரு... நான், கேள்வியின் நாயகியா...??? இந்த கொடுமைய நான் எங்குட்டு போய் சொல்ல... ;-))

    உங்கப் பதிவல்லாம் படிச்சா என்ன பின்னூட்டம் போடறதுன்னே தெரியாம, அமைதியா நடையைக் கட்டுற ஆளு நானு... ;-))

    அப்படியே, வழக்கம் போல இன்னிக்கும் உங்க பதிவுல வந்துருந்த சமஸ்கிருதமோ, என்னவோ.. அதையெல்லாம் தவிர மற்றவையெல்லாம் நல்லாவே புரிஞ்சது...

    ReplyDelete
  49. வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே ன்னு சொல்றீங்க...

    வைகுந்தம் புகுணுன்னு ஆசை இருக்கறவங்களுக்கு இது ஒத்துவரலாம்.

    வைகுந்தத்தைப் பத்தியேத் தெரியாதவங்களுக்கு, சரி போனா போகுது ன்னு என்ட்ரி குடுத்தடலாம்...

    வைகுந்தத்தைப் பத்தி தெரிஞ்சும், அங்கனப் போக வேணாம், மரணத்திற்குப் பின்னும் நான் வாழ்ந்த வீடு, பிள்ளைகள், அவர்கள் உலகம் இவற்றையே சுத்தி வரணும்... அவங்களப் பாத்துக்கிட்டே இருக்கணும்... அது நிலையில்லாட்டின்னாலும் பர்வா நஹி ன்னு யார்னாச்சும் நினைச்சா அவங்களுக்கு என்ன நடக்கும்??

    இதுக்கு பதில் வேணுமே... தயவுசெய்து... இது ordinary இல்ல... URGENT!!

    அந்த ஆத்மா, தான் அந்த குழந்தையோடத்தான் இருக்கோம்... தன் வீட்டாரோடுதான் இருக்கோம் ங்கறத... அந்த ஆத்மா வால உணரமுடியுமா???

    தயவுசெய்து சொல்லுங்களேன்...

    ReplyDelete
  50. இந்த மாதீரி எல்லாம் தேவையில்லாம பேசுவேன்னுதான் நான் பின்னூட்டமே போடறது இல்ல... ஹி..ஹி... ஹி...

    ReplyDelete
  51. நீர் ன்னு ஏன் இறைவனுக்குப் பேர் வெச்சாங்கன்னா... இது என்னோட கணிப்புத்தான், சொல்லலாமா...???

    எங்கும் எதிலும் இருப்பவன் இறைவன். அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் அப்படின்னு எல்லாரும் நம்புறாங்க...

    அந்த மாதிரி எல்லாத்துலயும் இருக்குற ஒன்னு நீர்!!

    உலர்ந்து போன மணல் ல்ல கூட, நீரானது, அந்த மணல் மேல ஒரு layer ஆ இருக்கும்... அதாவது, பாலைவனத்துல நீரே இல்லாத ஒரு மணல் துகள் ல்ல எடுத்துப் பார்த்த அதுல, ஒரு போர்வை போல இந்த நீர் இருக்கும். அதாலத்தான், அந்த மண் துகள் பளபளப்பா, வழவழப்பாக் கூட இருக்கும்...

    எதுனாச்சும் தப்பா???

    ReplyDelete
  52. நாராயண விளக்கம் எளிமையா இருக்குண்ணா.. நல்லாப் புரியுது.

    //அவன் உறைவதும் பாற்கடல் நீர்! //

    அப்போ பாற்கடல்னா பால் நிரம்பிய கடல் இல்லையா :)//

    இராகவ் அண்ணாத்த, நீங்க இதுவரைக்கும் எங்கனாச்சும், பால் நிறத்துல இருக்குற கடல் மேல பெருமாளப் பார்த்திருக்கின்றீரா???

    இல்லீங்ண்ணா, ஒரு ச்ச்ச்ச்சின்ன, குட்டீஈஈஈஈஈயோண்ண்ண்ண்டு ச ச ச ச ச சந்தேகம் தான்....

    ReplyDelete
  53. //இராகவ் அண்ணாத்த, நீங்க இதுவரைக்கும் எங்கனாச்சும், பால் நிறத்துல இருக்குற கடல் மேல பெருமாளப் பார்த்திருக்கின்றீரா??? //

    பால் நிறத்துல கடல் பார்த்ததில்லை..ஆனால் பெருமாளைப் பார்த்திருக்கிறேன்.. பார்த்து ஆனந்தப்பட்டிருக்கிறேன்..

    ஆனாலும் திருப்பாற்கடல் பத்தி யோசிச்சுப் பார்த்தேன்..(நம்புங்கப்பா :)

    இப்போ பூமியில் கடல் ஏன் நீல நிறமா தெரியுதுன்னு தெரியும்.. அதுபோல் திருமகளின் பொன்நிறமும், பெருமாளின் கரியநிறமும் சேர்ந்து பிரதிபலிக்கையில் ஒருவிதமான பாலின் நிறம் போன்று தெரியலாம் அல்லவா :)

    ReplyDelete
  54. நல்ல விளக்கம் தான்....

    ReplyDelete
  55. //Raghav said...
    பால் நிறத்துல கடல் பார்த்ததில்லை..ஆனால் பெருமாளைப் பார்த்திருக்கிறேன்..//

    இப்படி எல்லாம் பொடி வச்சி சஸ்பென்ஸ் வச்சிப் பேசக்கூடாது! எங்கே பாத்தீங்க-ன்னும் சொல்லணும்! :)

    //ஆனாலும் திருப்பாற்கடல் பத்தி யோசிச்சுப் பார்த்தேன்..(நம்புங்கப்பா :)//

    நம்பிட்டோம்! :)

    //இப்போ பூமியில் கடல் ஏன் நீல நிறமா தெரியுதுன்னு தெரியும்.. அதுபோல் திருமகளின் பொன்நிறமும், பெருமாளின் கரியநிறமும் சேர்ந்து//

    பேசாம பந்தலை ராகவ் + முகிலரசி தமிழ்-க்கு எழுதி வச்சிட்டு, நான் செட்டல் ஆயிடலாமா-ன்னு ஒரு யோசனையில் இருக்கேன்! :)

    ReplyDelete
  56. //குமரன் (Kumaran) said...
    நல்ல விளக்கம் தான்....//

    புரியலையே குமரன்! பதிவை விட இந்தப் பின்னூட்டம் ரொம்ப குழப்பமா இருக்கே! :))

    ReplyDelete
  57. //தமிழ் said...
    நீர் ன்னு ஏன் இறைவனுக்குப் பேர் வெச்சாங்கன்னா... இது என்னோட கணிப்புத்தான், சொல்லலாமா...???//

    தாராளமா! தட்டேதும் இல்லை!
    இது மாதவிப் பந்தல்!
    மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!

    //அந்த மாதிரி எல்லாத்துலயும் இருக்குற ஒன்னு நீர்!!//

    சரியே!

    //உலர்ந்து போன மணல் ல்ல கூட, நீரானது, அந்த மணல் மேல ஒரு layer ஆ இருக்கும்... அதாவது, பாலைவனத்துல நீரே இல்லாத ஒரு மணல் துகள் ல்ல எடுத்துப் பார்த்த அதுல, ஒரு போர்வை போல இந்த நீர் இருக்கும். அதாலத்தான், அந்த மண் துகள் பளபளப்பா, வழவழப்பாக் கூட இருக்கும்...

    எதுனாச்சும் தப்பா???//

    ஹிஹி!
    ஒரு தப்பும் இல்லை! அறிவியல் கூற்றுப் படி, உலகின் எல்லாப் பொருட்களிலும் Moisture உள்ளது! அதாச்சும் The level of humidity can be measured at any given place, object and time.

    நீர் என்பதை ஒரு கிளாஸ் தண்ணி-ன்னு பார்க்கக் கூடாது!
    நீர்மை - Humidityன்னு பார்த்தால் நாரா+அயணம் தத்துவம் பிடிபட்டுரும்!

    ReplyDelete
  58. //தமிழ் said...
    இந்த மாதீரி எல்லாம் தேவையில்லாம பேசுவேன்னுதான் நான் பின்னூட்டமே போடறது இல்ல... ஹி..ஹி... ஹி...//

    அந்த மாதிரி தப்பை மட்டும் பண்ணீறாதீங்க! வெட்டி பாலாஜி பயப்படறது ஒன்னே ஒன்னுத்துக்குத் தான்! = உங்க பின்னூட்டம்! :)

    ReplyDelete
  59. @ஷைல்ஸ் அக்கா
    //மணக்க மணக்க காபி போட்டால் மாதவனின் அரிதுயிலும் கலைந்துவிடும்:):)//

    அரியின் அறிதுயில் கலையும் தான்! ஆனா பெங்களூர் பி.டி.எம் லேஅவுட் காபிக்கு மட்டுமே! :)
    அன்னிக்கே உங்க கிட்ட இன்னொரு கப் கேட்கணும் போல இருந்துச்சி! ஆனால் ஃப்ளைட் லேட் ஆயிரும் கேஆரெஸ்-ன்னு மெளலி அண்ணா என்னைய இழுத்துக்கிட்டுப் போயிட்டாரு! :))

    ReplyDelete
  60. //>>>>>>>>>>>>>>>>
    ராகவ்கிட்ட கேட்டுக்கறேன் (அவசியம் என்பதால்:)))//

    ஹிஹி!
    ராகவ் கிட்ட கேட்டா ஒன்னும் தெரியாது!
    ராகவன் கிட்ட கேட்டா பலதும் தெரியும்! :)))

    ReplyDelete
  61. //Radha said...
    அடப்பாவி ! டகால்ட்டி ரவி, :-)//

    என்னாது இது? ஆளாளுக்கு என்னைய திட்டறீங்க? இருங்க என் தோழியோட வரேன்! அங்கே காட்டுங்க ஒங்க வீரத்தை! :))

    //நினைச்சுகோங்க அப்படின்னு சொன்னா கூப்பிடக் கூடாதுன்னு அர்த்தமா? :-)//

    ஆமா! அப்படித் தான் அர்த்தம்! :)
    துஞ்சும் போது அழைமின்-ன்னு எப்படிச் சொல்லலாம்? சொல்லி இருக்காரு-ல்ல? அதுனால துயர் வரில் நினைமின் தான்! :)
    - ஆனா இது எல்லாருக்கும் இல்ல! மூனே முக்கா இலை விட்டவங்களுக்கு மட்டுமே! :))

    //அப்போ பார்த்து அந்த கிளி "கோவிந்தா ! கோவிந்தா ! " அப்படின்னு கத்துது. கொஞ்ச நேரம் அவன் பேரை சொல்லாம இருன்னா கேட்க மாட்டேன்து. செம டென்ஷன் ஆகி கிளியை பட்டினி போடுகிறாள்//

    ஹா ஹா ஹா!
    ஏன்டி கோதை! ச்சே பாவம்-டீ! அந்த வாயுள்ள-வாயில்லா ஜீவன் உன்னைய என்ன பண்ணுச்சி? அதை விட்டுரு! நாம விட்டுணு-வை விட வேணாம்! அவனைக் கவனிச்சிக்கலாம்! ஒரு காட்டு காட்டலாம்! :)

    //பட்டினி கிடந்த கிளி வார்த்தையை மாத்தி "உலகளந்தானே" அப்படின்னு கூவுதாம்//

    ஏன் இந்தப் பேரைச் சொல்லிச்சி கிளி? அதையும் சொல்லுங்க ராதா, சொல்லுங்க?


    //"கூட்டில் இருந்து கிளி எப்போதும் 'கோவிந்தா! கோவிந்தா!' என்றைழைக்கும்
    ஊட்டக் கொடாது செறுப்பனாகில் 'உலகள ந்தான் !' என்று உயரக் கூவும்//

    உலகளந்தா! உலகளந்தா! உலகளந்தா! :)

    //இது தான் கடைசி பாசுரம். இனிமே பின்னூட்டத்தில் பாசுரம் இட்டு தொல்லை செய்ய மாட்டேன். :-)//

    வாட்? பாசுரம், தொல்லையா? அடிங்க! ஒழுங்காப் பாசுரம் பெய்யாக் காட்டி, கிளியைப் பட்டினி போட்டாப் போல உம்மையும் பட்டினி போடுவேன் என்று உம்மை எக்கச்சக்கமா எச்சரிக்கிறேன்! :)

    ReplyDelete
  62. @ராகவ்
    //கோஹிந்தாவின் விளக்கத்தையும் சொன்னீங்கன்னா தெரிஞ்சிப்போம்//

    சுந்தர் அண்ணாவைக் கேட்டு வந்து இங்கே எல்லாரும் அரியை அறிய, அறியத் தருங்கள்! :)

    //Raghav said...
    //எடுத்தவுடனேயே எம்பெருமானைக் காதலித்து விட முடியுமா என்ன? :)//

    அப்படிக் காதலித்தவர்கள் இருக்கிறார்களா?//

    இருக்கிறாங்க! ஆனா அதுல நான் இல்லை! :))

    ReplyDelete
  63. //Raghav said...
    //
    நினைச்சுகோங்க அப்படின்னு சொன்னா கூப்பிடக் கூடாதுன்னு அர்த்தமா? :-)//

    ஹய்யா.. நான் ராமன் கோஷ்டியும் அல்ல, ராமானுஜன் கோஷ்டியும் அல்ல, கே.ஆர்.எஸ் கோஷ்டியும் அல்ல.. இனி நான் ராதா கோஷ்டி. :)//

    அப்பாடா! இப்ப தான் போன மூச்சு திரும்பி வந்துச்சி!
    ராதா - ஆல் தி பெஸ்ட்! :))

    பை தி வே..
    நினைச்சுகோங்க அப்படின்னு சொன்னா, கூப்பிடக் கூடாது-ன்னு அர்த்தமா-ன்னு கேக்கறீங்களே?
    அதுக்கு முன்னாடி, துஞ்சும் போது எப்படி அழைக்கிறது-ங்கிறத்துக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டீங்கறீங்களே? ஏன்? :)

    துஞ்சும் போது அழைமின்!
    துயர் வரின் நினைமின்!
    துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!

    * மொதல்ல அழைமின்-ன்னு சொல்றாரு!
    * கடைசீல சொல்லிலும்-ன்னு சொல்லச் சொல்றாரு!
    * ஆனா நடுவுல மட்டும் விளிமின்/சொன்மின்-ன்னு சொல்லலாமே! "நினைமின்" ஏன்? - அதை நீங்க இப்போ நினைமின் :))

    ReplyDelete
  64. //தமிழ் said...
    என்னது fortunately aaa???
    அவ்வ்வ்.... அப்ப, நான் ஒரு கார்பென்ட்டர் ன்ற உண்மை உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா....?? ;-)) (இரம்பம்... ஹி ஹி ஹி)//

    ஹைய்யோ! பாலாஜி உங்கள அப்படிச் சொல்லலை!
    கேஆரெஸ் பத்தி இம்புட்டு நாள் தெரியாம நிம்மதியா இருந்தீங்க! எதுக்கு இப்ப போயி வீணாத் தெரிஞ்சிக்கிட்டு அவனை வீட்டுக்கெல்லாம் கூப்புடுறீக?-ன்னு சொல்லுவான்! அதைச் சொன்னேன்! :))

    ReplyDelete
  65. //தமிழ் said...
    அப்படியே, வழக்கம் போல இன்னிக்கும் உங்க பதிவுல வந்துருந்த சமஸ்கிருதமோ, என்னவோ..//

    இன்னாது! என் பதிவில் சமஸ்கிருதமா? ஹிஹி! அதெல்லாம் வராதே! வந்தா அதுக்குன்னே இங்கே சந்தோசப் படற சில அன்பான மக்கள் இருக்காங்களே! :))

    //அதையெல்லாம் தவிர மற்றவையெல்லாம் நல்லாவே புரிஞ்சது...//

    ஒப்புமை காட்ட மட்டுமே லைட்டா வடமொழி சுலோகங்களைக் காட்டுவேன்!
    மத்தபடி தென்தமிழுக்கு முகம் காட்டி, வடக்குக்கு முதுகு காட்டும் அரங்கன் ஆளு நானு! :))

    ReplyDelete
  66. //தமிழ் said...
    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே ன்னு சொல்றீங்க...

    வைகுந்தம் புகுணுன்னு ஆசை இருக்கறவங்களுக்கு இது ஒத்துவரலாம்.

    வைகுந்தத்தைப் பத்தியேத் தெரியாதவங்களுக்கு, சரி போனா போகுது ன்னு என்ட்ரி குடுத்தடலாம்...//

    ஹிஹி!
    சரி, குடுத்தறலாம்! காசா? பணமா? :)

    //வைகுந்தத்தைப் பத்தி தெரிஞ்சும், அங்கனப் போக வேணாம், மரணத்திற்குப் பின்னும் நான் வாழ்ந்த வீடு, பிள்ளைகள், அவர்கள் உலகம் இவற்றையே சுத்தி வரணும்... அவங்களப் பாத்துக்கிட்டே இருக்கணும்... //

    //இதுக்கு பதில் வேணுமே... தயவுசெய்து... இது ordinary இல்ல... URGENT!!//

    ஹா ஹா ஹா!

    இந்தக் கேள்வி ரொம்பவும் பிடிச்சி இருந்தது! என்னை மிகவும் பாதித்த கேள்வி! இதற்குப் பதில் பல முறை மனதில் ஓடியது! முருகா முருகா-ன்னு கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டேன்!

    என் மனதில் உள்ளதை இங்கே வெளிக் கொணர்வித்த தமிழரசனின் முகிலரசியே - நீவிர் வாழ்க!
    சடகோபன் தண் "தமிழோடு" இன்னும் பல நூற்றாண்டு இரும்!

    ReplyDelete
  67. @ முகிலரசி தமிழரசன்
    //வைகுந்தத்தைப் பத்தி தெரிஞ்சும், அங்கனப் போக வேணாம், மரணத்திற்குப் பின்னும் நான் வாழ்ந்த வீடு, பிள்ளைகள், அவர்கள் உலகம் இவற்றையே சுத்தி வரணும்... அவங்களப் பாத்துக்கிட்டே இருக்கணும்... //

    வைகுந்தம் என்றால் என்ன?
    அது ஒரு இடம்-ன்னு நீங்க நினைச்சதாலத் தான் இந்தக் கேள்வி உங்க மனத்தில் தோன்றியது போல!

    முன்பே இதைப் பற்றி லேசாச் சொல்லி இருக்கேனே? - இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? என்னும் பதிவில்!

    வைகுந்தம் என்றால் போஸ்டல் கோட் உள்ள இடமோ, கூகுள் மேப் சுட்டும் இடமோ அல்ல!
    வைகுந்தம் என்பது தனியான ஆயிரம் ஏக்கர் "இடம்" கிடையாது!

    * வைகுந்தம் = எம்பெருமானுடைய திருவடிகள்!
    * வைகுந்தம் = பற்றுக பற்றற்றான் பற்றினை!

    * வைகுந்தம் = எம்பெருமானுடன் ஒன்றி இருக்கும் நிலை!
    தாய்மையாய், தந்தைமையாய், மகன்மையாய், நண்பன்மையாய்,

    * அனைத்துக்கும் மேலாய், காதலாய், ஒன்றி இருக்கும் நிலை!

    தனி ஒரு ஜீவன் மட்டுமே, ஏகாந்தமாய், ஜீவன் முக்தி போன்ற சுயநலத்தில் ஒன்றி இருக்கும் நிலை வைகுந்தம் அல்ல!

    வைகுந்தம் = அந்தமில் பேரின்பத்து அடியவர்களோடு.....பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து, இருந்து, ஏத்துவர் பல்லாண்டே!

    //இவற்றையே சுத்தி வரணும்... அவங்களப் பாத்துக்கிட்டே இருக்கணும்//

    எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்!என்று "வைகுந்தம் என்றால் என்ன?" என்பதைக் காட்டிக் கொடுக்கிறாள் என் அற்புதத் தோழி!

    மோட்சம் என்றால் பிறவித் துன்பங்களே இல்லாமல் ஜாலியா இருக்கும் நிலை-ன்னு கணக்கு போட்டு, இனி பிறவேன் பிறவேன் என்று சொல்லும் சமயங்களும் தத்துவமும் உண்டு!

    ஆனால் பெருமாளிடத்தில் அப்படி இல்லை! எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும், பிறவி வேண்டுகிறாள் கோதை! உன் தன்னோடு உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம் = அதுவே வைகுந்தம்!

    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

    ReplyDelete
  68. @முகில்
    //இவற்றையே சுத்தி வரணும்... அவங்களப் பாத்துக்கிட்டே இருக்கணும்... //

    சொல்லப் போனால்...
    பல காதல் உள்ளங்கள், இன்னும் "ஸோ கால்ட்" மோட்சத்துக்கு போகவே இல்லை!

    சிறிய திருவடிகளான அன்பன் ஆஞ்சநேயன் இன்னும் "மோட்சம்" போகவில்லை! - இங்கு தான் இருக்கான்! :)

    பிரகலாதக் குழந்தை இன்னும் "மோட்சம்" போகவில்லை! - இங்கு தான் இருக்கு! :)

    அடியார்கள் பலரும், பாகவத கைங்கர்ய பாராள் பலரும், இன்னும் "மோட்சம்" போகவில்லை! - இங்கு தான் இருக்காங்க! :)

    வைகுந்தம் "புகுவது" மண்ணவர் விதியே!
    புகலொன்றில்லா அடியேன் உன் ***அடிக்கீழ்*** அமர்ந்து "புகுந்தேனே"!

    இப்போது புரிகிறது அல்லவா? வைகுந்தம் எது? புகுவது எப்படி-ன்னு?

    ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே!
    ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

    * உன்தன்னோடு(அ)-உறவேல்(உ)-நமக்கு(ம்) இங்கு ஒழிக்க ஒழியாது! ஓம்!

    * * நாராயண"னே" நமக்"கே" - எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்! உன் தன்னோடு உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!

    ஹரி ஓம்!

    ReplyDelete
  69. இதற்கு மேல் அடியேன் இந்த இழையில் பேச முடியாது தவிப்பதால், பெரியோர்கள் இந்தச் சத்சங்கத்தை நடாத்திச் செல்லுங்கள்!

    உன்தன்னோடு-உறவேல்-நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உன் இதய-வாசல் படியாய்க் கிடப்பேன், கிடப்பேன், கிடப்பேன்!
    - அடியேன் இரவிசங்கரன் படி

    ReplyDelete
  70. //Raghav said...
    இனி நான் ராதா கோஷ்டி. :)//
    Ravi said...
    //அப்பாடா! இப்ப தான் போன மூச்சு திரும்பி வந்துச்சி!
    ராதா - ஆல் தி பெஸ்ட்! :)) //
    (மௌலி சார் பதிவில்) "பிரமனின் சத்யலோகத்தை ஏன் யாரும் விரும்புவதில்லை?" போன்ற அருமையான கேள்விகளை கேட்ட பொழுதே நினைத்தேன். இந்த பையன் நம்ம கோஷ்டி மாதிரி தெரியுதேன்னு. :-) கேள்வி கேக்கறது சக்கரை பொங்கல் சாப்புடற மாதிரி. சக்கரை பொங்கல் சாப்பிட கம்பெனி கிடைத்தது சந்தோஷமே. :-)

    ReplyDelete
  71. "நீரின் குணம் பள்ளம் நோக்கி விரைந்து ஓடி வருவது. இறைவனின் குணம் அகந்தை இன்றி தாழ்ந்து இருப்பவரை நோக்கி விரைந்து ஓடி வருவதே."
    இது ஒரு உபன்யாசத்தில் கேட்டது. கிருபானந்த வாரியார் என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகம் இல்லை.

    ReplyDelete
  72. //
    துயர் வரில் நினைமின் தான்! :)
    - ஆனா இது எல்லாருக்கும் இல்ல! மூனே முக்கா இலை விட்டவங்களுக்கு மட்டுமே! :))
    //
    புரிந்தது. :-)

    ReplyDelete
  73. பால் நிறத்துல கடல் பார்த்ததில்லை..ஆனால் பெருமாளைப் பார்த்திருக்கிறேன்.. பார்த்து ஆனந்தப்பட்டிருக்கிறேன்..//

    பால் நிறத்துலயா??? பெருமாளா??? எங்க பாத்தீங்க, எப்பப் பாத்தீங்க, எப்புடி பாத்தீங்க... தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்களேன்... நானும் தெரிஞ்சுக்கறேன்....

    கற்பனை செஞ்சுப் பார்க்கவே அழகா இருக்குல்ல.. அதுவும் பால்வண்ணத்துல, குழந்தை உருவத்துல இருந்தா ரொம்ப நல்லாருக்கும்ல்ல...

    ReplyDelete
  74. வைகுந்தம் என்றால் என்ன?
    அது ஒரு இடம்-ன்னு நீங்க நினைச்சதாலத் தான் இந்தக் கேள்வி உங்க மனத்தில் தோன்றியது போல!//

    வைகுந்தம் என்பது ஒரு இடம் இல்லை, அது ஒரு நிலைன்னு போன ஆண்டே சொன்னீங்க!!

    நான் நேத்து கொஞ்சம் பதட்டத்தோடு பின்னுட்டினதால பாஆதி பாதி விழுங்கிட்டேன் ;))

    பிழைகளுக்கு மிக்க வருந்துகிறேன்!!

    ReplyDelete
  75. //Radha said...
    அருமையான கேள்விகளை கேட்ட பொழுதே நினைத்தேன். இந்த பையன் நம்ம கோஷ்டி மாதிரி தெரியுதேன்னு. :-) கேள்வி கேக்கறது சக்கரை பொங்கல் சாப்புடற மாதிரி. சக்கரை பொங்கல் சாப்பிட கம்பெனி கிடைத்தது சந்தோஷமே. :-)//

    ரொம்ப நன்னி ராதா.. உங்க கம்பேனில என்னை சேத்துகிட்டதுக்கு.

    நீங்க கேக்குற கேள்விகள் தான் சர்க்கரைப் பொங்கல்.. நான் கேக்குறது எல்லாம் சர்க்கரை பார்த்த பொங்கல் :)

    ReplyDelete
  76. //பட்டினி கிடந்த கிளி வார்த்தையை மாத்தி "உலகளந்தானே" அப்படின்னு கூவுதாம்
    ஏன் இந்தப் பேரைச் சொல்லிச்சி கிளி? அதையும் சொல்லுங்க ராதா, சொல்லுங்க//

    இதற்கு முந்தைய பாசுரத்தில்,
    உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே ! உலகளந்தான் வரக் கூவுவாய்.
    என்று சொன்னாள் அல்லவா.. அதனால் உலகளந்தான் என்று கூவினால் தோழமை கொண்டு பசியைப் போக்குவாள் என்று கிளி நினைத்திருக்கும்.

    ReplyDelete
  77. ராகவ்,
    wonderful explanation !
    அசத்தி போட்டீங்க போங்க !! :-)
    ~
    ராதா

    ReplyDelete
  78. ராதா,நான் உளறியது இருக்கட்டும்... உண்மையான விளக்கத்தை நீங்கதான் சொல்லணும்.

    ReplyDelete
  79. Vanakkam sir,
    Thunjumpothayaymin, this word gives the same meaning of Aksharabramhayogam chaapter 8 in geethai,OM ITHYEKAHSHRAM BRAMHA sloga 13,that is meelathuyil.your words are matching where Valluvar also says, Uranguvdhupolum saakadu.
    Ienjoyed and the comments also ,good.Vanakkam,Shailaja amma when you are going to ARANGAM,pls take coffeepowder with you,because he is sheera sagara sayanan,even you can see that one dwarapalagar holding chakra in lefthand,while entering Gayathrimandapam you might have noticed.Arangam divyadesam 1,Thirupparkadal 107, total 1+107=108 Vaigundam.so Arangam BHOOLOKAVAIGUNDAM.
    ARANGAN ARULVANAGA.
    anbudan,
    srinivasan.

    ReplyDelete
  80. //Anonymous said...
    Vanakkam sir,
    Thunjumpothayaymin, this word gives the same meaning of Aksharabramhayogam chaapter 8 in geethai,OM ITHYEKAHSHRAM BRAMHA sloga 13,that is meelathuyil.

    your words are matching where Valluvar also says, Uranguvdhupolum saakadu.//

    வாங்க ஸ்ரீநிவாசன் சார்!
    பந்தலின் குளிர்ச்சியே அதன் வாசகர்கள் தான்!
    உறங்குவது போலும் சாக்காடு-ன்னு நான் சொல்ல வந்து, நீண்டு விடுமே-ன்னு கருத்தை மட்டும் சொன்னேன்! கரெக்டா பிடிச்சீங்க பாயிண்ட்டை! :)

    //you can see that one dwarapalagar holding chakra in lefthand,while entering Gayathrimandapam you might have noticed//

    ஆமாம்! பொதுவா வலக்கரத்தில் தான் இருக்கும்!

    //Arangam divyadesam 1,Thirupparkadal 107, total 1+107=108 Vaigundam.so Arangam BHOOLOKAVAIGUNDAM//

    இது புரியலையே!
    பரமபதம் என்பது 108ஆம் திருப்பதி! அது என்ன 1+107?

    திருவரங்கம் பூலோக வைகுண்டம் என்றும்
    திருப்பாற்கடல் தேவலோக வைகுண்டம் என்றும் சொல்லுவார்கள்!

    ஆயினும் வைகுண்டம் என்பது = பரமபதமே!

    ReplyDelete
  81. ஸார், நீங்கள்ளாம் யாரு? இப்படியெல்லாம் ஒரு கருத்துக் பரிமாற்றமா!
    எதேச்சையாய் வந்தேன். உம்தம்மோடு உற்றோமேயாவேன்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP