Saturday, August 01, 2009

அஞ்சு முகமா? ஆறு முகமா? - "முருகா" என்று ஓதுவார் முன்!

அதாச்சும்-ங்க, ரொம்பவும் பயந்து போகும் போது, மனசு படக் படக்-ன்னு அடிச்சிக்கும்! நம்மவங்களே நம்மள இப்படி பேசிட்டாங்களே-ன்னு மனசு கிடந்து அடிச்சிக்கும் போது, என்ன பண்றோம்-ன்னே தெரியாது!

ஏதோ அழுது கொண்டே செய்யப் போக,
அந்தப் புரியாத நிலையிலும், திடீர்-ன்னு "ஏதோ ஒன்னு" மட்டும் புரியும்!
கரெக்டா எங்கே போய் நிக்கணுமோ அங்கே தானாகவே போய் நிற்போம்! அப்படி நின்ற இடம்?

அப்படி நின்ற இடம்? = பெருமாள் கோயிலா? இல்லை! இல்லவே இல்லை! அது என் முருகன் சன்னிதி!


அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் = சின்ன வயசில் இருந்தே இந்தப் பாட்டு என்னுடன் ஒட்டிக் கொண்ட பாட்டு! எப்போ பயம் வந்தாலும், உதடு தானாக முணுமுணுக்கும் பாட்டு!

திருவண்ணாமலையில், முருகன் சன்னிதி காட்டிக் காட்டித் தான் அம்மா எனக்குச் சோறு ஊட்டுவாங்களாம்! ஒவ்வொரு வாய்க்கும் ஒவ்வொரு சிற்பம் காட்டணும்! அப்போ தான் சாப்பிடுவேனாம்!
"அஞ்சுமுகம்-ஆறுமுகம்!" இந்தக் கோயில்ல தான் இந்தப் பாட்டை மொதல்ல கேட்ட ஞாபகம்-ன்னு நினைக்கிறேன்!

உங்களில் பல பேருக்கும் தெரிஞ்ச பாட்டு தான்!
நக்கீரர் எழுதிய பாட்டு-ன்னு சிலர் சொல்லுவாய்ங்க! ஆனா சங்க காலப் பாடல் போலவே இருக்காது! ரொம்ப சிம்பிளாத் தான் இருக்கும்!
இதோ: அப்-பயம் நீக்கி, அபயம் தர வல்ல பாட்டு:

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!


இந்த எளிமையான பாட்டுக்கு பொருள்? கொஞ்சமாப் பார்க்கலாமா?
எளிமையான பாட்டுக்கு ஏகாந்தமான அர்த்தம் இருக்கு!
அதைத் தெரிஞ்சிக்கிட்டீங்க-ன்னா இந்தப் பாடல் அப்படியே உங்க கூடவும் ஒட்டிக் கொள்ளும்! என் ஆசை முருகன் என்னுடன் ஒட்டிக் கொண்டதைப் போலவே!

* அஞ்சி பயப்படும் போது அஞ்சும் முகம் தோன்றினால், ஆறுமுகம் தோன்றும்!
* கடுமையான (மனப்) போராட்டத்தில், "அஞ்சேல்" (பயப்படாதே) என்று வேல் தோன்றும்!
* நெஞ்சில் ஒரு கால் நினைத்தால், இரு காலும் தோன்றும்!
* தோன்றுமா? என்ன தோன்றும்? = விடிவு தோன்றும்! விடி-வடி வேலன் தோன்றும்!
* யார் முன்னே தோன்றும்? = முருகாஆஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!

இதான் பாட்டுக்கு மேலோட்டமான பொருள்!
ஆனா...இவ்வளவு தானா?
இதுவா பயத்தைப் போக்கவல்ல பாட்டு? மேலே வாசியுங்கள்!



இந்தப் பாடல் திருமுருகாற்றுப்படை வெண்பாக்களுள் ஒன்று! திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரர் தான் இதையும் எழுதினாரா-ன்னு சரியாகத் தெரியலை! பின்னாளில் சேர்ந்தும் இருக்கலாம்!
முருகாற்றுப்படை முழுவதும் சங்கத் தமிழ்ச் சொற்கள் சரளமாகப் புழங்கும்! அகராதி வச்சித் தான் ஆற்றுப்படையைப் படிக்கணும்! ஆனால் இந்தப் பாட்டுக்கு மட்டும் அப்படி அல்ல! பார்க்கலாமா பாட்டை?

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் = அஞ்சி நடுங்கும் என்னுடைய முகம் தோன்றும் போது, ஆறு முகமும் தோன்றும்!

மனுசனுக்குப் பயம் வந்தா முகம் வெளிறும்! பார்த்து இருக்கீங்களா?

கண்ணாடி முன்னாடிப் போய் நில்லுங்க!
நீங்க ரொம்பவும் பயந்து போன ஒரு நிகழ்ச்சியை மனசில் ஓட்டினீங்க-ன்னா அந்த "அஞ்சு முகம்" வந்து போகும்! அப்போ கண்ணாடியில் பாருங்க! :)

* நியூயார்க் நகரத்து ஒதுக்குப்புற இரவில், மூனு பேரு துப்பாக்கி எல்லாம் காட்டி, வெறுமனே இருவது டாலரும், கைக்கடிகாரமும் பறித்த கதையா இருக்கலாம்!
* இல்லை, ஏதோ ஒரு பதிவர் உங்களுக்கு விடுத்த பயங்கர மிரட்டலா இருக்கலாம்! :)
* இல்லை, மலைச்சறுக்கில் அதல பாதாளத்தில் விழுந்த கதையா இருக்கலாம்!
* இல்லை, மனத்துக்குப் பிடித்தவர்கள் உங்கள் கண் முன்னே பட்ட அவஸ்தையா இருக்கலாம்!

நிஜ உலகில், எத்தனை எத்தனை பயங்கள்? உங்களில் பயப்படாதவர்-ன்னு யாராச்சும் இருக்கீங்களா?
அச்சம் என்பது மடமையடா-ன்னு பாடும் அரசன் கூட, தனிமையில் ஓநாய்களிடம் சிக்கினால்?
வீரம் என்பது என்ன? = பயப்படாதது போல் காட்டிக் கொள்வது! - என்பார் பெர்னாட் ஷா! :)

ஏன் பயம் வருகிறது? துன்பம் வரும் போதா பயம் வருது? இல்லை!
= இழக்கப் போகிறோம் என்று நன்றாகத் "தெரிய வரும்" போது தான் பயம் வருகிறது!

எப்படிப் பயம் போகும்?
= இழப்போமோ? மாட்டோமோ?-ன்னு தெரியாவிட்டாலும், நமக்கு-ன்னு ஆதரவான ஒரு முகம் நம் கண்ணுக்குத் தெரியும் போது, பயம் போகும்!

* பயந்து ஓலமிடும் குழந்தை, தாய் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் பயம் நீங்கும்!
* எதுக்கோ பயப்படும் பெற்றோர், புள்ள வந்த மாத்திரத்தில் சற்று பயம் நீங்குவர்!
* சிக்கித் தவிக்கும் காதலி, காதலன் முகம் தெரிந்த மாத்திரத்தில் பயம் நீங்குவாள்!

அதே போல், அஞ்சு முகம் தோன்றும் போதே, ஆறு முகமும் தோன்றும்!
அறு-முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே பயம் அறும்!
அது என்ன ஆறு முகக் கணக்கு? எதுக்கு ஆறு முகம்? ஒரு முகம் போதாதா? - நீங்க சொல்றீங்களா? நான் சொல்லட்டுமா? - இன்னொரு பதிவில்! :)


அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! = இதுக்கு இன்னொரு நுட்பமான பொருளும் இருக்கு!
சிவ பெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் இருப்பான்! சைவ சித்தாந்தப்படி, சிவன் வேறு, முருகன் வேறு அல்ல!

* அஞ்சு முகம் = சிவ பெருமான்!
ஈசானம், தத்புருடம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் என்ற ஐந்து முகங்கள்!
* ஆறு முகம் = முருகப் பெருமான்!
ஈசானம், தத்புருடம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் என்ற ஐந்து முகங்கள் கூடவே அதோமுகம் என்ற மறைந்த ஆறாவது முகம்!

இப்படி ஈசன் காட்டாத ஒரு முகம்! அந்த முகத்தையும் காட்ட வைத்தது முருக முகம்!
அதோ முகம் என்று காட்ட வைத்த அதோமுகம்!
அதனால் தான் அஞ்சு-முகம் (சிவன்) தோன்றில் ஆறு-முகம் (முருகன்) தோன்றும் என்றும் கொள்ள வேணும்!


வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்!

வெஞ்+சமர் = கடுமையான போர்!
உலகத்திலேயே கடுமையான போர்க்களம் எதுங்க? = மனசு தான்! :)
மனக் களம் வென்றவர்கள் போர்க் களமும் வெல்வார்கள்!
மனப் போராட்டத்தை வென்றுவிட்டால் வேறு போராட்டமே இல்லை! :)))

அப்படி மனப் போராட்டத்தில்-வெஞ்சமரில்.....
அஞ்சேல்-பயப்படாதே-ன்னு வேல் தோன்றும்!

* அஞ்சு முகம் தோன்றிய போது, ஆறு முகம் தோன்றி விட்டது! பயம் போய் விட்டது!
* ஆனால் ஆறு முகம் காப்பாற்றுமா? காப்பாற்றும் சக்தி அதுக்கு இருக்கா? அதான் அடுத்த வரியில் வேலைக் காட்டுகிறார்!
வெற்றி வேல் என்பதால், மனப் போராட்டத்தில் வெற்றி! அஞ்சேல் என வெற்றி வேல் தோன்றும்!


நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்!

அது என்ன "ஒரு கால்"? அப்படின்னா என்ன?
* மழை வருமா? = ஒருகா வரலாம்! வராமலயும் போவலாம்!
* அவன் மீண்டும் என்னோடு பேசுவானா? = ஒருகால் பேசலாம்! பேசாமலயும் போகலாம்!

ஆக, ஒரு கால்-ன்னா = "ஒரு வேளை"!
இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்!
உறுதியற்ற நிலைமை வரும் போது நாம "ஒரு கால்" போடறோம்! ஆங்கிலத்தில் May Be!

ஒரு கால் நினைக்கில் = நாம "May be"-ன்னு அவனை ஒப்புக்கு நினைச்சாக் கூட
இரு காலும் தோன்றும் = இரு காலும் தோன்றும்!

அது என்ன "இரு கால்"? அப்படின்னா என்ன?
* இரண்டு காலங்களிலும் தோன்றுவான்! = நிகழ் காலத்திலும் தோன்றுவான்! எதிர் காலத்திலும் தோன்றுவான்!
= இகத்திலும் தோன்றுவான், பரத்திலும் தோன்றுவான்!
= இப்போதும் தோன்றுவான், எப்போதும் தோன்றுவான்!
= இப்போ தோன்றிக் கண்ணீர் துடைப்பான்! எப்பவும் தோன்றி இன்பம் அளிப்பான்!

* ஒரு கால் நினைக்கில், "இரு காலும்" தோன்றும்
= அவனை "ஒரு கால்" நினைக்கில், அவன் "இரு காலும்" (இரண்டு திருவடிகளும்) எனக்கு முன்னே வந்து தோன்றும்!

Will You Be With Me?
= "May" Be! என்று நாம் இவ்வளவு நாள் பழகிய உற்றவர்களே கூடச் சொல்லீருவாங்க!
Will You Be With Me?
= "Will" Be! என்று என் முருகன் மட்டும் சொல்லுவான்!

* His Will, Will Be With Me!
* Whoever be with me or not, He Will-Will be with Me!



முருகா என்று ஓதுவார் முன்! = அன்று முருகாஆஆஆஆஆ என்று நான் வட அமெரிக்க மலை ஒன்றில் கேவிய போது...
* அவன் முகம் தோன்றும்!
* அவன் வேல் தோன்றும்!
* அவன் கால் தோன்றும்!

தோன்றி.....
* இங்கு சொன்னதை அங்குச் சேர்த்து விடு என்றேன்! சேர்த்து விட்டான்! சொன்ன வண்ணம் செய்த பெருமான்!
* ஆராய்ந்து அருளேலோ-ன்னு "அவரைப்" போல இல்லாமல், ஆ...வா என்று அருளி விட்டான்!

அஞ்சு முகம் தோன்றில் = "ஆறு முகம்" தோன்றும்!
வெஞ் சமரில் அஞ்சேல் என = "வேல்" தோன்றும்!
நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் = "இரு காலும்" தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்
!

என் செந்தூர் முருகாஆஆஆஆஆ! என்னைச் சேர்த்துக் கொள்!

22 comments:

  1. /அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
    வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
    ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
    முருகா என்று ஓதுவார் முன்!/

    வெல்லமாய் இனிக்கிறது.தங்களின்
    விளக்கம்

    ReplyDelete
  2. //என் ஆசை முருகன் என்னுடன் ஒட்டிக் கொண்டதைப் போலவே//

    :-)

    //வீரம் என்பது என்ன? = பயப்படாதது போல் காட்டிக் கொள்வது! - என்பார் பெர்னாட் ஷா! :)//

    நான் கூட குருதிப்புனல் கமல் சொன்னாருன்னு நினைத்துட்டேன் ;-)

    ReplyDelete
  3. Anna.... wt abt KANTHAR ALANKARAM???

    ReplyDelete
  4. //கரெக்டா எங்கே போய் நிக்கணுமோ அங்கே தானாகவே போய் நிற்போம்! அப்படி நின்ற இடம்?//

    ஒவ்வொருவருக்கு ஒரு இடம், எனக்கு என் அப்பன் வரதன்.

    ReplyDelete
  5. //அப்படி நின்ற இடம்? = பெருமாள் கோயிலா? இல்லை! இல்லவே இல்லை! அது என் முருகன் சன்னிதி!//

    ம்.. நான் நம்பிட்டேன்னு மட்டும் சொல்லிக்கிறேன் :) (ராகவா, போதும் கும்மிய ஆரம்பிக்காத)

    ReplyDelete
  6. //அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! = இதுக்கு இன்னொரு நுட்பமான பொருளும் இருக்கு!
    சிவ பெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் இருப்பான்!//

    ஒரு சந்தேகம். சிவபெருமானுக்கு ஐந்து முகம் பஞ்சாட்சரம்.
    முருகனுக்கு, சடாட்சரம் - ஆறுமுகம்...

    அப்போ பெருமாளுக்கு அஷ்டாட்சரம்.. எட்டு முகம்தானே இருக்கணும்.. ஆனா ஏன் அப்படி இல்லை ? அஷ்டபுயகரத்தான் தானே இருக்கார்.

    ReplyDelete
  7. அப்புறம் பாதத்தைப் பாத்தா முருகன் பாதம் மாதிரி தெரியலயே.. பார்த்தசாரதி மாதிரி தெரியுதே :)

    ReplyDelete
  8. ஹ்ம்... ஒவ்வொரு முறையும் உங்க விளக்கத்தைப் படித்து வியக்கத்தான் முடிகிறது! கண்ணா, நீ நீடுழி வாழ்க!

    //என் செந்தூர் முருகாஆஆஆஆஆ! என்னைச் சேர்த்துக் கொள்!//

    என்னையும்!

    ReplyDelete
  9. //திகழ்மிளிர் said...
    வெல்லமாய் இனிக்கிறது.தங்களின்
    விளக்கம்//

    வாங்க திகழ்மிளிர்!
    இனிப்பு என் விளக்கத்தில் இல்லை! என் முருகனில் இருக்கு! :)
    அதான் செல்ல முருகன்! வெல்ல முருகன்! :)

    ReplyDelete
  10. //கிரி said...
    //என் ஆசை முருகன் என்னுடன் ஒட்டிக் கொண்டதைப் போலவே//

    :-)//

    என்ன கிரி? எதுக்கு இந்த ஒத்தைச் சிரிப்பு? :)

    //
    //வீரம் என்பது என்ன? = பயப்படாதது போல் காட்டிக் கொள்வது! - என்பார் பெர்னாட் ஷா! :)//

    நான் கூட குருதிப்புனல் கமல் சொன்னாருன்னு நினைத்துட்டேன் ;-)//

    கமல் சொன்னாரு-ன்னா கண்டிப்பா பெர்னாட் ஷா, கமலைப் படிச்சி இருப்பாரு! அதான்! :)

    ReplyDelete
  11. //Lalitha said...
    Anna.... wt abt KANTHAR ALANKARAM???//

    ஹூம்! சாரி-ம்மா!
    அலங்காரத்தை நிறுத்தித் தான் வச்சிருக்கேன்! சீக்கிரம் தொடரணும்! முருகன் தான் கைக்கூட்டணும்!

    கந்தர் அலங்காரப் பதிவுகளுக்கு ஒரு நம்பகமான இடத்தில் உதவி கேட்டேன்! கிடைக்கலை! அதான் நடுவில் சற்று நின்று போனது! மன்னிக்க!

    ReplyDelete
  12. //Raghav said...
    //கரெக்டா எங்கே போய் நிக்கணுமோ அங்கே தானாகவே போய் நிற்போம்! அப்படி நின்ற இடம்?//

    ஒவ்வொருவருக்கு ஒரு இடம், எனக்கு என் அப்பன் வரதன்//

    :)
    எனக்கு வரதன் வராதான்? :(((

    நான் என்ன சொல்வேன் ராகவ்? ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள்-ன்னு வாழைப்பந்தல் கிராமத்தில் சொல்லுவோம்! அதாச்சும் கஜேந்திர வரதராஜன்!

    அர்ச்சனைத் தட்டில் பெருமாளுக்கு டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி வச்சிக் கொடுத்த குழந்தையைத் தெரியும்-ன்னு நினைக்கிறேன்!
    அந்த வரத ராஜன் தான் வராத ராஜன் ஆகிப் போனான்! பரவாயில்லை! அவன் நல்லா இருக்கட்டும்! :(

    ReplyDelete
  13. //Raghav said...
    //அப்படி நின்ற இடம்? = பெருமாள் கோயிலா? இல்லை! இல்லவே இல்லை! அது என் முருகன் சன்னிதி!//

    ம்.. நான் நம்பிட்டேன்னு மட்டும் சொல்லிக்கிறேன் :) (ராகவா, போதும் கும்மிய ஆரம்பிக்காத)//

    :)
    ராகவா, கும்மிய ஆரம்பிக்காத-வா? பாவம், அவனே எங்கேயோ ஆம்ஸடர்டாம் நகருளானே-ன்னு இருக்கான்! அவனை எதுக்கு வம்புக்கு இழுக்கறீக?

    ReplyDelete
  14. //Raghav said...
    ஒரு சந்தேகம்//

    அது ஏங்க உங்களுக்குப் பந்தல் கீழாக்க வந்து நின்னா மட்டும் சந்தேகம் வருது? :)

    //சிவபெருமானுக்கு ஐந்து முகம் பஞ்சாட்சரம்.
    முருகனுக்கு, சடாட்சரம் - ஆறுமுகம்...//

    சரி தான்!

    //அப்போ பெருமாளுக்கு அஷ்டாட்சரம்.. எட்டு முகம்தானே இருக்கணும்..//

    அதான் எட்டு இலட்சுமி இருக்காங்க-ல்ல அதுக்குப் பதிலா?
    தன் கிட்ட வச்சிக்கறத்துக்குப் பதிலா, அவங்க கிட்ட கொடுத்துட்டாரு! :)

    இதற்கான விளக்கத்தை அஷ்டாட்சர விளக்கம் - ஓம் நமோ நாராயணாய - பதிவு ஒருத்தன் போடுவான்! அந்த மாங்காப் பய கிட்ட போயி கேளுங்க! :)

    ReplyDelete
  15. //Raghav said...
    அப்புறம் பாதத்தைப் பாத்தா முருகன் பாதம் மாதிரி தெரியலயே.. பார்த்தசாரதி மாதிரி தெரியுதே :)//

    அவரவர் இறையவர் என "அடி" அடைவர்கள்!
    இந்தத் திருவடிகள் படம் தான் கிடைத்தது! அதான் இட்டேன்!

    BTW, அது பார்த்த சாரதி இல்ல!

    ReplyDelete
  16. //கவிநயா said...
    ஹ்ம்... ஒவ்வொரு முறையும் உங்க விளக்கத்தைப் படித்து வியக்கத்தான் முடிகிறது!//

    :)
    எப்படித் தான் இப்படியெல்லாம் உளறுகிறான்-ன்னு தானே-க்கா? :)

    //கண்ணா, நீ நீடுழி வாழ்க!//

    உம்! அட, நீங்க வேறக்கா!
    நானே செந்தூர் முருகா சேர்த்துக் கொள்-ன்னு சொல்றேன்!

    ReplyDelete
  17. makka chachuputiyae ayya...

    ReplyDelete
  18. Great explanation! Appreciate the efforts!

    ReplyDelete
  19. அருமையான, தெளிவான விளக்கம்

    திருமுருகாற்றுப்படை படிக்க ஆசையை தூண்டுயது உங்கள் விளக்கம்

    முருகா சரணம்

    வேலூம் மயிலூம் தூணை

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP