Tuesday, August 25, 2009

Copy Cat KRS! பொறந்த குழந்தை குளிப்பாட்டுவது எப்படி?

என்ன மக்கா, யாராச்சும் பச்சைக் குழந்தையை, பெரியவங்க பக்கத்தில் இல்லாம, மொத மொதலா, தானாத் தூக்கி இருக்கீங்களா? :)
வீராதி வீரனுக்கும் பயம்-ல்ல? பிஞ்சுப் பூவை பார்க்கப் பிடிக்கும்! ஆனா தூக்க?

குழந்தைகள் உலகில் பிறக்கும் போது, தங்களுக்கு-ன்னு ப்ளான் போட்டு எதுவும் கையோடு கொண்டு வருவதில்லை! ஏதோ ஒரு தைரியத்தில், நம்மள பாத்துப்பாங்க-ன்னு வெளீல வருது-ல்ல? :))

* புதுசா வரப் போகும் நோக்கியா லேப் டாப்புக்கு பயனர் குறிப்பு (User Manual) கொடுப்பாய்ங்க!
* புதுசா பொறக்கும் குழந்தைக்கு என்ன Manual கொடுத்து அனுப்புவாரு கடவுள்? :)

நோக்கியாவில் பாட மாட்டேங்குதே-ன்னு எத்தை எத்தையோ அழுத்த,
திடீர்-ன்னு மொத்த ஆபீசுக்கும் கேக்குறாப் போல....
"ஹே...எலந்தப் பயம், எலந்தப் பயம்"-ன்னு எதிர்பாராம நோக்கியா கூவினா எப்படி இருக்கும்? :)

அதே போல் பிச்சிப்பூ=பிஞ்சுப்பூ! அதை இயக்கத் தெரியாமல் இயக்கும் போது,
* திடீர்-ன்னு நம்மள பாத்து,
* பொக்கை வாய் திறந்து,
* ஹா ஹா-ன்னு சிரிக்கும் முதல் சிரிப்பூபூபூ! அன்று முதல், குழந்தையை இயக்கத் தெரிந்து விடும்! :))


சரீ...
பச்சைக் கொழந்தையைக் கூட Spa-வுக்கு கூட்டிப் போயிக் குளிப்பாட்டும் காலம் இது! :))
நம்ம ஊரு இஷ்டைல்-ல, ஃபிரஷ்ஷா குழந்தையைக் குளிப்பாட்டுவது எப்படி? பார்க்கலாமா?

"அட, ஆம்பிளைப் பசங்க இப்படியெல்லாம் பதிவு போட்டாச் செல்லுமா? அதுக்கெல்லாம் நக்கலா, நறுவிசா, பொம்பளைங்க தான் பதிவு போடணும் கேஆரெஸ்! :)"

"அட, இந்தப் பதிவை நான் போடலீங்க!
பெரியாழ்வார் என்னும் பொம்மனாட்டி தான் இந்தப் பதிவு போடறாரு!" :)

"அடப் பாவி! டகால்ட்டி ரவி! அங்க கை வச்சி, இங்க கை வச்சி, இப்ப ஆழ்வார் மேலயே கை வச்சிட்டியா நீயி?" :)

"ஹிஹி! அட, சத்தியமாச் சொல்லுறேன்! பொறந்த குழந்தையைக் குளிப்பாட்டுறது எப்படி?-ன்னு பெரியாழ்வார் தாங்க சொல்லிக் குடுக்கறாரு!" :))"

* பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே-ன்னு, பெண்ணை மட்டுமா "பெற்று, எடுத்தாரு"?
* பெரியாழ்வார் என்றிட்ட பெண் மணியும் வாழியே-என்னும் படிக்கு, ஒரு பெண்ணை விடவும் அக்கறையாச் சொல்லிக் குடுக்கறாரு, குழந்தை வளர்ப்பை!

சேச்சே! என்ன இருந்தாலும் பொண்ணுங்க பாத்துக்குறா மாதிரி வருமா? ஆம்பிளைக்கு எப்படிங்க இதெல்லாம் தெரியும்?


உலக நடைமுறைக்கு ஆண்-பெண் வேறுபாடுகள் உண்டு! உலகத்துக்காக அந்த வேறுபாடுகளை மீற முடியாது! உண்மை தான்!

* ஆனால் உங்கள் ஆன்மா = ஆணா? பெண்ணா?

ஆன்மாவின் உணர்ச்சிகளை ஆண் என்பதா? பெண் என்பதா? ஆணாகட்டும், பெண்ணாகட்டும், அனைவரும் விழைவது = "நிறைவு"!
ஆணுக்கொரு நிறைவு, பெண்ணுக்கொரு நிறைவு என்ற பேதமில்லை! அனைவர்க்கும் "நிறைவு" வேணும்! நீங்காத செல்வம் "நிறைந்து"...!

* எம்பெருமான் குழந்தையாய் முன்னே வந்தால் = ஆன்மா "தாய்" ஆகிறது!
* எம்பெருமான் காதலனாய் முன்னே வந்தால் = ஆன்மா "காதலி" ஆகிறது!

தோடா, போங்கா இருக்கே? ஏம்ப்பா ஒங்க கடவுள் காதலியாய் எல்லாம் வர மாட்டாரா(ளா)? எப்பமே அவரு ஆண் தானா? ........ஹிஹி! வருவான்(ள்)!

*** எம்பெருமான் காதலியாய் முன்னே வந்தால் = ஆன்மா காதலன் ஆகிறது!
கோதை அப்பப்போ இப்படிக் காதலனாக மாறுவாள்!
ஆணைப் போல் அடாவடி செய்வாள்! அவனோ அப்பாவிக் காதலியாக மாறுவான்! :)

அதெல்லாம் இந்தப் பதிவில் சொன்னால், என் தலை உருளும்! "நாயகி பாவம்" கொஞ்சம் டேஞ்சரான டாபிக்! :)
ஆனா ஆழமான டாபிக்! உண்மையான டாபிக்! இது பற்றி இன்னொரு நாள் விரிவாச் சொல்லுறேன்! :)

இன்னிக்கு முக்கியமா கவனிக்க வேண்டியது...பெரியாழ்வார் தாய் ஆனார்(ள்)! இதோ, பச்சைக் குழந்தையைக் குளிப்பாட்டும் டிப்ஸ்! :)


மாதவிப் பந்தலில் முதன் முறையாக, இன்னொரு வலைப்பூவில் இருந்து, காப்பி அடிக்கப்பட்ட வரிகள்....இனி.......

குழந்தைப் பிறந்தவுடனேயே, கருவிற்குள் மடங்கிய நிலையிலேயே இருப்பதால், அதனைக் குளிப்பாட்டும் பொழுது,
* உடலை நன்றாக உருவிவிட்டு,
* கைகளை முன்னும் பின்னும் மடக்கி,
* கால்கள் வளைந்துவிடாது இருப்பதற்காக,
* அதை நன்கு விரைப்பாக நீட்டிப் பிடித்து வெந்நீரை ஊற்றுவர்.

* குழந்தையின் உடலுக்கு உறுதி தரும் வண்ணம்
* குளிப்பாட்டும் பொழுது இயன்ற வகைகளில் கை காலை மடக்கி,
* சில உடற்பயிற்சிகளைச் செய்வர்
* இதனால், குழந்தையின் உடலும் நல்ல வடிவம் பெறும்.

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர்
பைய வாட்டிப் பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே!


கையும் காலும் நிமிர்த்துக் - குழந்தையின் கை, கால்களை நன்கு உருவி விட்டு, கால்கள் வளைந்து விடாது இருப்பதற்கு, அதனை நிமிர்த்தி விடுவதற்காக,

கடார நீர் - அகன்ற, பெரிய கொப்பரையில் நீரூற்றி

பைய வாட்டிப் - அதை தள புளா ன்னு ல்லாம் கொதிக்க விடாம, நல்ல வெதுவெதுப்பாக சுடவைத்து, மிதமான வெண்ணீராக்கி, பைய - மெதுவாக, மெல்ல; வாட்டி - சூடு செய்து;

பசுஞ் சிறு மஞ்சளால் - பசுமையான பிஞ்சு மஞ்சளை, மைய அரைத்து

ஐய நா வழித்தாளுக்கு, அங்காந்திட - தலைவனின் நாவினை வழிப்பதற்காக, குழந்தையின் வாயைத் திறந்திட்ட போது, (ஐய - தலைவன்; அங்காத்தல் - வாய்திறத்தல்)

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே - ஏழு உலகத்தையும் குழந்தை கண்ணனின் வாயினுள் யசோதை கண்டாளே.

காப்பி அடிப் படலம் முடிந்தது! :))



அருமையா விளக்கம் கொடுத்திருக்காங்க-ல்ல? யாரோட வலைப்பூ-ங்க இது?
இவங்க ஆம்பிளைப் பதிவரா? பொம்பளைப் பதிவரா? Keep Guessing! :)

அந்தப் பதிவுக்கு, என்னோட பின்னூட்டம்...
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட =
ஹைய்யோ....அந்தச் சின்னக் கண்ணனின் தேனமுத வழிசல் அடிசனை,
அமிழ்தினை... எனக்கே தர வேணுமாய்
இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன் கண்ணா! மணிவண்ணா! என்றன் மனச்சுடரே! :))

என்ன அழகான தமிழ்ச் சொல்லாட்சி பாருங்க!
* பைய வாட்டி = மெல்லிசா....வெது வெதுப்பா....தண்ணி விளாவி
* அங்காந்திட = ங்ங்ங்..ஆந்திட-ன்னு சொல்லும் போதே "ங்ஆஆ"-ன்னு வாய் தொறந்து காட்டுறது தெரியுதுல்ல? அடடா! எழுத்துல ஒரு ஓவியமா?

கண்ணன் வளர்ந்த பின், மண்ணை உண்ணும் போது தான் யசோதைக்கு உலகம் காட்டுவான்-ன்னு சொல்வாங்க!
ஆனால் இங்கு ஆழ்வாருக்கு அது வரை வெயிட் பண்ண பொறுமை இல்லை போல! :) பொறந்த கொழந்தை நாக்கு வழிக்கும் போதே, வாய்க்குள் உலகம் பாத்துடறாரு! நமக்கும் காட்டிடறாரு! :)



And here we go...Baby Bathing For Dummies...Tips by krs baby :))

1. குழந்தையைக் குளிப்பாட்ட, தொப்புள் கொடி காய்ந்து உதிர வேண்டும்-ன்னு பொதுவாச் சொல்லுவாய்ங்க! ஆனா இப்பல்லாம் அதுக்கு முன்னயே குளிப்பாட்டுறாங்க!

2. தண்ணி இளஞ் சூட்டுல இருக்கணும்! கையை விட்டு விளாவுங்க! Mug-ல விளவாதீங்க! உங்க கைக்குச் சூடு தெரியணும்!

3. ரெண்டு/மூனு குடம் தண்ணியை முன்னாடியே எடுத்து பக்கத்துல வச்சிக்குங்க! அப்பாலிக்கா எடுத்துக்கலாம்-ங்கிற போக்கு வேலைக்காவாது!
புதுசா குளிப்பாட்டறவங்களுக்கு, இன்னொரு ஆளு, பக்கத் துணைக்கு இருந்தா, இன்னும் வசதி!

4. சின்ன டப்பில் வைத்தும் குளிப்பாட்டலாம். ஆனா கால்-ல கவிழ்த்து போட்டுக் குளிப்பாட்டுற மாதிரி வராது! ஒன்னும் பயமே இல்லை! ஈசி தான்!

காலை நல்லா நீட்டி, ரெண்டு காலுக்கும் கேப் கொடுக்காம, குழந்தையின் தலையை, கால் இடுக்கில் தங்குறாப் போல வச்சிக்கிடணும்! அம்புட்டு தான்!
(குறிப்பு: ஆனா, அதுக்கப்பறம் எக்காரணம் கொண்டும், அந்தக் கால் Position-ஐ மாத்தக் கூடாது! உங்க காலை விரிக்கப்படாது! குழந்தை மேலயே ஒரு கண்ணு இருக்கணும்)

5. குளியலுக்குப் பயந்து குழந்தை அழுதா பேச்சு குடுங்க! பாடுங்க! அது கண்ணைப் பாத்துச் சிரிங்க! பேச்சு குடுத்துக்கிட்டே குளிப்பாட்டுங்க! அழுகை ஓரளவு நிக்கும்! :)



6. பேபி சோப்பு போடலாம் தான்! ஆனா துளசி கலந்த பச்சைப் பருப்பு மாவு! அதை பால்/வெண்ணையில் கலந்து, தேய்ச்சிக் குளிப்பாட்டினா, இன்னும் ப்ரெஷ்!
பள பள! மொழு மொழு! :) ஆனா மூஞ்சில, கண்ணு கிட்ட ரொம்ப தேய்க்காதீக!

7. மொதல்ல உடம்பில் தண்ணி ஊத்தி, அப்புறமா தலையில் தண்ணி ஊத்தணும்! அப்போ தான் ஏலும்! ஓக்கேவா?
நல்லா வேகம் வேகமா ஊத்தணும்! விட்டு விட்டு ஊத்தினா குளிரும்! கோயில்ல தீர்த்தம் கொடுக்குறாப்பல, பவ்யமா, பம்மி பம்மி எல்லாம் ஊத்தக் கூடாது! நல்லா சரக் சரக்-ன்னு ஊத்தணும்! :)

8. கை-காலை உருவி விடுங்க! கை-கால்களை முன்னும் பின்னும் லேசா மடக்கி, உடற் பயிற்சி மாதிரி உருவி விட்டுக்கிட்டே தண்ணி ஊத்துங்க!

9. அப்படியே குழந்தையைக் காலில் கவுத்துப் போடுங்க! முதுகில் வேகமாத் தண்ணி ஊத்தி, பிட்டத்தில் வேகாமத் தண்ணி ஊத்தி சுத்தப்படுத்திறணும்! கொழந்தய உடனே நிமித்திருங்க! ரொம்ப நேரம் கவுந்தடிக்கக் கூடாது! அவ்ளோ தான் குளியல்!

10. நல்லாத் தெரிஞ்சவங்க, குளிப்பாட்டும் போதே, சுண்டு விரலையோ, காய்ஞ்ச மஞ்சள் துண்டையோ வச்சி, நாக்கை வழிக்கலாம்! பயமா இருந்தா பண்ண வேணாம்! :)



11. பாத்திரம்/Mug-இல் உள்ள கடைசித் தண்ணியை, மூனு சுத்து சுத்தி, குழந்தைக்குத் திருஷ்டி கழிச்சி, காலுக்கு கீழே ஊத்துங்க! திருவந்திக் காப்பு-ன்னு இதுக்குப் பேரு!

12. தரையில் உள்ள மெத்தையிலோ (அ) கட்டிலிலோ கிடத்தி, மென்மையாப் பூ துவாலையால் நல்லாத் துவட்டுங்க - தலை, ஒடம்பு, எல்லாத்தையும்!
கண்ணுல ஊளை இருந்தா லைட்டா எடுத்து விடுங்க! பிறப்பு உறுப்புகளையும் சுத்தமாத் தொடைச்சி விடணும்!

13. அப்பறம் உடம்பு முழுக்க பவுடர் பூசி, முடிஞ்சா கண்ணில் மை பூசி, கன்னத்தில் ஒரு மைப் பொட்டு வைங்க! மாறி மாறி வைக்கணும்! ஒரு முறை வலக்கன்னம்! அடுத்த தபா இடக் கன்னம்! அப்படியே இச்-ன்னு ஒரு உம்மா கொடுங்க! :)
ஒங்க கண்ணே படப் போவுது! விரல்களால் தலையைச் சுத்தி நெட்டி முறிங்க! :)

14. உடனே சட்டை, ஜட்டி, டயாப்பர்-ன்னு மாட்டி விட வேணாம்! கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டுமே!
நீங்களும் கீழ் அழகைப் பாத்து ரசிக்கலாம்-ல்ல? இப்பவே பாத்துக்கிட்டா தான் ஆச்சி! அப்பறமெல்லாம் முடியவே முடியாது! :)))

15. கூடைக்குக் கீழ் சாம்பிராணிப் புகை போட்டு, குழந்தையைக் கூடை இடுக்கில் காட்டிப் புடிச்சா, நாளெல்லாம் வாசம் தான்!
ஆனா இப்பல்லாம் யாராச்சும் சாம்பிராணிப் புகை போடறாங்களா என்ன? சரியான மட சாம்பிராணிங்க! இத போயி மிஸ் பண்ணலாமா?......சொர்க்கம்! :)



சரி, சரி.....என்னாது? கேஆரெஸ் காப்பியடிச்ச அந்தப் பெரியாழ்வார் பாசுர வலைப்பூ எது-ன்னு கேக்கறீயளா? :)

ஹிஹி! பந்தலில் தினுசு தினுசா கேள்வி கேட்டுப் பின்னூட்டம் இடும் தம்பதிகள்!
- முகிலரசி & தமிழரசன் - அவிங்க குட்டிப் பையன் இளமாறன்! இவர்களுடன், முகவை மைந்தன் மற்றும் நம்ம சத்தியா...இவிங்க எல்லாரும் சேர்ந்து,

* ஆழ்வார் அருளிச் செயல்கள் மொத்த நாலாயிரத்துக்கும்,
* கொஞ்சம் கொஞ்சமா விளக்கம் சொல்லத் துவங்கி இருக்காய்ங்க!
* அதில் ஒன்று தான், இந்த "ங்ங்ங்..ஆந்திட, நா வழித்தாள்"!
* அனைவரும் அவசியம், வாசித்துப் பாருங்கள்!

இதோ http://aazhvarmozhi.blogspot.com
நான்காயிரம் அமுதத் திரட்டு!
மதம் சார்ந்ததல்ல... தமிழ் சார்ந்தது...


** பந்தலில், உங்க எல்லாருக்கும், இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்துவதில் - அரிமுகப் படுத்துவதில், அடியேன் சாலவும் மகிழ்கிறேன்!
** மாதவிப் பந்தல் மேல்...பல் கால் குயில் இனங்கள்...கூவின காண்!

சரி சரி, பேசுனது போதும்!
சேயோன் என்னும் மீசை வழிச்ச ஒரு பெரீய்ய்ய புள்ளையாண்டானைக் குளிப்பாட்டணும்!
ஸோ, வர்ட்டா ஸ்டைலில் வர்ட்டா?
டேய் முருகா, வெக்கம் இல்லாதவனே! ஒழுங்கா பாத் டப்புல போயி நில்லுடா! தோ வாரேன்! :)))

33 comments:

  1. * தம்பி சீவீஆர் திருமண உறுதி விழா இனிதே நடைந்தேறியது!
    * நவம்பர்-ல கல்யாணம்!
    * அதுக்கு இந்தக் குழந்தை வளர்ப்புப் பதிவை அட்வான்ஸ் பரிசாகத் தருகிறேன்! :))

    ReplyDelete
  2. சரி, நல்ல பதிவு, ஒரு கண்ணன் படத்தையோ, முருகன் படத்தையோ இடைச்செருகல் பண்ணுவீங்கன்னு பாத்தா... சந்துல சிந்து பாடி இருக்கீங்க... ஒங்க படத்தை போட்டு!

    அப்படியே, எங்க பதிவை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

    அன்புடன்,
    தமிழ்

    ReplyDelete
  3. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  4. :-)

    nice narration

    but saambraani is not good. Dr's said not me

    ReplyDelete
  5. அருமையான பதிவு..

    சிவிஆர் அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன். :)

    /* அதுக்கு இந்தக் குழந்தை வளர்ப்புப் பதிவை அட்வான்ஸ் பரிசாகத் தருகிறேன்! :))//

    அடடே.. அடடடடே.. கலக்கிட்டீங்களே கேஆர்எஸ் :)))

    ReplyDelete
  6. அவசியமான பதிவு.. அருமையாவும் இருக்கு :)

    அங்கேயும் படிக்கிறேன்.

    ReplyDelete
  7. //பெரியவங்க பக்கத்தில் இல்லாம, மொத மொதலா, தானாத் தூக்கி இருக்கீங்களா? :)//

    ம்ஹூம்.. குழந்தைக்கு தலை நிக்குற வரைக்கும் தூக்கி வைச்சுக்கவே மாட்டேன்.. யாராவது குழந்தையை என் மடியில படுக்க வைச்சாதான் உண்டு. :)

    ReplyDelete
  8. //பெரியாழ்வார் தாய் ஆனார்(ள்)!//

    இந்தப் பொங்கும் பரிவினாலே தானே பெரியாழ்வார் எனப்பட்டார்.

    ரவி அண்ணா, ஆழ்வார் பாசுரங்களில் தந்தை, நண்பன் நிலையே கிடையாதா?

    திருப்பதிகங்களில் சுந்தரர் தோழனாக பாடியுள்ளார் அல்லவா?

    ReplyDelete
  9. // ஆனா கால்-ல கவிழ்த்து போட்டுக் குளிப்பாட்டுற மாதிரி வராது! ஒன்னும் பயமில்லை!//

    ஆமாம்.. குழந்தையும் ஜம்முனு குளிக்க வசதியா இருக்கும்.

    ReplyDelete
  10. haha kozhandhaya kulipaatra tips super! :P I have grown up in a house full of kids, so i can easily relate to this, so nostalgic now - all ur fault! :)

    Kozhandhai pathina postnnu pottutu , ungay photo ellam erukkey ... hmm , nadakattum nadakattum

    ReplyDelete
  11. சமீபத்தில் பிறந்து கொஞ்ச நாளே ஆன குழந்தைய கையில வாங்கிய போது...
    Share Warne ஸ்பின் கூட எதிர்கொள்ளலாம் ஆனால் குழதையை ஹேண்டில் பண்ணுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்தது.

    ReplyDelete
  12. பதிவைப் பார்த்து ஒரு குழந்தையைக் குளிப்பட்டணும்னு ஆசை வந்திட்டதே. எல்லாப் பேரன் பேத்திகளும் வளர்ந்தாச்சே.
    ம்ம்.இன்னும் ஒரு குழந்தை வராமயாப் போயிடும்.

    ReplyDelete
  13. ரவி..... என்னய்யா... என்ன ஆச்சு. அச‌த்திட்டீங்க‌

    குழந்தையைக் குளிப்பாட்டறதில் இருக்கிற அழகே தனி தெரியுமா

    அதிலும் குழ‌ந்தைக்கு தண்ணீரில் இருக்கும் அந்த‌ இத‌மான‌ சூடு பிடித்திருந்தால் நீரை மொண்டு விட‌ச்சொல்லி காத்திருக்கும் அழ‌கைப் பார்க்க‌ணுமே...

    ReplyDelete
  14. /// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    * தம்பி சீவீஆர் திருமண உறுதி விழா இனிதே நடைந்தேறியது!
    * நவம்பர்-ல கல்யாணம்!
    * அதுக்கு இந்தக் குழந்தை வளர்ப்புப் பதிவை அட்வான்ஸ் பரிசாகத் தருகிறேன்! :))///


    வாழ்த்துகள் சிவிஆர்

    ReplyDelete
  15. குழந்தையைக்குளிப்பாட்டறப்போ தாய் கண்ணே பட்டுடும் ! என் குழந்தைங்க நல்லா மொழுமொழுன்னு வேற இருக்குமா நானே கண்ணு போட்டு நானே த்ருஷ்டியும் சுத்திப்போடுவேன்! காப்பிப்பதிவுதானாலும் ரவியின் கைவண்னத்துல வழக்கம்போல கலக்கல்ஸ்!

    ReplyDelete
  16. //ஷைலஜா said...
    குழந்தையைக்குளிப்பாட்டறப்போ தாய் கண்ணே பட்டுடும் ! என் குழந்தைங்க நல்லா மொழுமொழுன்னு வேற இருக்குமா நானே கண்ணு போட்டு நானே த்ருஷ்டியும் சுத்திப்போடுவேன்!//

    கண்ணு வச்சவங்களே திருஷ்டி கழிப்பது இன்னும் பவர்ஃபுல்! :)

    //காப்பிப்பதிவுதானாலும் ரவியின் கைவண்னத்துல வழக்கம்போல கலக்கல்ஸ்!//

    யக்கா! அந்தப் பாசுர வெளக்கம் மட்டும் தான் காப்பி! முன்னுரை, குளிப்பாட்டும் டிப்ஸ் எல்லாம் என்னுது! ஒட்டு மொத்தமா காப்பி-ன்னு சொல்றீங்களே? நியாயமா? :))

    ReplyDelete
  17. //மதுமிதா said...
    ரவி..... என்னய்யா... என்ன ஆச்சு. அச‌த்திட்டீங்க‌.//

    ஹிஹி! வாங்கக்கா! எப்படி இருக்கீக? ராகவன் சார்பாவும் ஒரு வணக்கம் சொல்லிக்கறேன்! :)

    //குழந்தையைக் குளிப்பாட்டறதில் இருக்கிற அழகே தனி தெரியுமா//

    அதுக்குத் தான இந்தப் பதிவே! :)

    //அதிலும் குழ‌ந்தைக்கு தண்ணீரில் இருக்கும் அந்த‌ இத‌மான‌ சூடு பிடித்திருந்தால் நீரை மொண்டு விட‌ச்சொல்லி காத்திருக்கும் அழ‌கைப் பார்க்க‌ணுமே...//

    சூப்பராப் புடிச்சீங்க பாயின்ட்டை!
    சில குழந்தைங்க பயத்துல அழும், ஊத்தத் தெரியாம ஊத்தும் போது!
    ஆனா சரியா ஊத்தினா, குழந்தைங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப் போகும் இந்த கதகத-ன்னு நீர் விளையாட்டு! :)

    ReplyDelete
  18. //வல்லிசிம்ஹன் said...
    பதிவைப் பார்த்து ஒரு குழந்தையைக் குளிப்பட்டணும்னு ஆசை வந்திட்டதே//

    ஹிஹி! வாங்க வல்லீம்மா!

    //எல்லாப் பேரன் பேத்திகளும் வளர்ந்தாச்சே.
    ம்ம்.இன்னும் ஒரு குழந்தை வராமயாப் போயிடும்//

    ஆனாலும் வல்லீம்மாவுக்கு ரொம்பவே பேராசை! :)

    ReplyDelete
  19. //வடுவூர் குமார் said...
    சமீபத்தில் பிறந்து கொஞ்ச நாளே ஆன குழந்தைய கையில வாங்கிய போது...
    Share Warne ஸ்பின் கூட எதிர்கொள்ளலாம் ஆனால் குழதையை ஹேண்டில் பண்ணுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்தது//

    வாங்க குமாரண்ணே!
    ஷேன் வார்ண் ஸ்பின் எல்லாம் predict பண்ணலாம்! கொழந்தை ஸ்பின் ரொம்ப நேச்சுரலா வரும்! :)

    ReplyDelete
  20. //Srivats said...
    haha kozhandhaya kulipaatra tips super! :P//

    :)
    நானே ஒரு குழந்தை தான் ஸ்ரீவத்ஸ்! :)

    //I have grown up in a house full of kids, so i can easily relate to this, so nostalgic now - all ur fault! :)//

    Yeah Yeah, All my fault :)
    Take me to your nostalgic palace now! :)

    //Kozhandhai pathina postnnu pottutu , ungay photo ellam erukkey ... hmm , nadakattum nadakattum//

    மறுபடியும் சொல்றேன்! நானே ஒரு குழந்தை தானே ஸ்ரீ :)

    ReplyDelete
  21. //Raghav said...
    // ஆனா கால்-ல கவிழ்த்து போட்டுக் குளிப்பாட்டுற மாதிரி வராது! ஒன்னும் பயமில்லை!//

    ஆமாம்.. குழந்தையும் ஜம்முனு குளிக்க வசதியா இருக்கும்//

    ஆனா, நம்ம மக்கள் ஏன் தான் இதுக்கு பயப்படறாங்களோ தெரியலை? எங்கம்மாவே பயப்பட்டு பாட்டியைக் கூட்டியாரச் சொல்லுவாங்க! :)
    அடச்சே, தள்ளுங்கம்மா, தங்கச்சி கொழந்தைக்கு நானே ஊத்துறேன் :)

    ReplyDelete
  22. //Raghav said...
    //பெரியாழ்வார் தாய் ஆனார்(ள்)!//
    இந்தப் பொங்கும் பரிவினாலே தானே பெரியாழ்வார் எனப்பட்டார்//

    :)
    பெரியாழ்வார் ரொம்ப பாத்து பாத்து பண்ணுவார்! ரொம்ப சென்ட்டி!
    மென்டலா வேணாலும் இருப்பேன், சென்டி"மென்டலா" இருக்க மாட்டேன்-ன்னு சொல்றவங்களுக்கு பெரியாழ்வார் வித்தியாசமாத் தான் தெரிவார்! :))

    கண்ணன் பிறந்த நட்சத்திரத்தைக் கூட நேரடியாச் சொல்ல மாட்டாரு! எங்கே எப்பவோ மாண்டு போன கம்சன் கண்டு பிடிச்சிருவானோ-ன்னு பயம்! :)
    "அட்டத்தின் பத்தாம் நாள் வந்து தோன்றிய அச்சுதன்"-ன்னு பாடுவார்!

    ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாம் நாள் எது? - முன்னிருந்து கணக்கு போட்டா ரோகிணி - பின்னாடி இருந்து கணக்கு போட்டா திருவோணம்! இப்படியெல்லாம் கம்சனைக் கொழப்புவாரு!

    அவரைப் போலவே இன்னொருவர் நடாதூர் அம்மாள்!
    பெருமாள் கைங்கர்யம் செய்தவர்! பேரைப் பாத்து பொம்பளை-ன்னு முடிவு கட்டிறாதீக! அவரு ஆம்பிளை தான்! வரதாச்சாரியார்-ன்னு பேரு! ஆனா காஞ்சி வரதன் அவரை அம்மாள் ஆக்கி விட்டான்! :)

    ReplyDelete
  23. //ரவி அண்ணா, ஆழ்வார் பாசுரங்களில் தந்தை, நண்பன் நிலையே கிடையாதா?//

    இருக்கே!
    * எந்த ஆழ்வார் தந்தையாப் பாடினார்? கொஞ்சம் யோசிக்கணும் :)
    * எந்த ஆழ்வார் நண்பானாப் பாடினார்? - இது கொஞ்சம் ஈசி! இவர் நண்பனாவும் பாடினார்! நாயகியாவும் பாடினார்! :))))

    //திருப்பதிகங்களில் சுந்தரர் தோழனாக பாடியுள்ளார் அல்லவா?//

    தம்பிரான் தோழர் என்றே சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பேரு! "பித்தா"-ன்னு திட்டித் தான் திருமுறையே தொடங்கும்! நல்ல வேளை...அபச்சாரம், பித்து, லொள்ளு-ன்னு சினிமாத்தனமா எழுதிட்டயே சுந்தரா-ன்னு யாரும் சொல்லுறதில்லை! :)

    ReplyDelete
  24. //Raghav said...
    அவசியமான பதிவு..//

    யாருக்குப்பா அவசியம்? :)

    //அருமையாவும் இருக்கு :)
    அங்கேயும் படிக்கிறேன்//

    படிங்க, படிங்க! தமிழ்-முகில் நல்லா தொடர்புகள் கோர்த்து எழுதி இருக்காங்க!
    http://aazhvarmozhi.blogspot.com/2009/08/1-1-6.html

    //ம்ஹூம்.. குழந்தைக்கு தலை நிக்குற வரைக்கும் தூக்கி வைச்சுக்கவே மாட்டேன்.. யாராவது குழந்தையை என் மடியில படுக்க வைச்சாதான் உண்டு. :)//

    Baby's head on left hand!
    Hold the butt on right hand! :)
    Avlo thaan formula :))

    ReplyDelete
  25. //சென்ஷி said...
    அருமையான பதிவு..
    சிவிஆர் அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன். :)//

    ஹிஹி! பகிர்ந்துக்குங்க! பகிர்ந்துக்குங்க! :)

    /* அதுக்கு இந்தக் குழந்தை வளர்ப்புப் பதிவை அட்வான்ஸ் பரிசாகத் தருகிறேன்! :))//
    அடடே.. அடடடடே.. கலக்கிட்டீங்களே கேஆர்எஸ் :)))//

    அட சென்ஷி, நீங்க வேற! கல்யாணத்துக்கே இன்னும் மூனு மாசம் இருக்கு! இதுல டயாப்பர் வாங்குறத பத்தி இப்பவே பேசிக்கிட்டு! :)))

    ReplyDelete
  26. //யாசவி said...
    :-)
    nice narration//

    நன்றி யாசவி!

    //but saambraani is not good. Dr's said not me//

    Hmmm. Not sure abt doctor's recommendation. May be bcoz of safety in practice.
    My sister is a doctor herself. She does this. It is just a warmth and soothing feeling :)

    ReplyDelete
  27. ////ஷைலஜா said...
    /////யக்கா! அந்தப் பாசுர வெளக்கம் மட்டும் தான் காப்பி! முன்னுரை, குளிப்பாட்டும் டிப்ஸ் எல்லாம் என்னுது! ஒட்டு மொத்தமா காப்பி-ன்னு சொல்றீங்களே? நியாயமா? :))////

    ?>>>>>>>>>>>>>>>>>

    hhahaahaa!! chumma kidding! உடம்பு எப்டி இருக்குன்னுபாக்கத்தான்:)


    12:33 PM, August 25, 2009

    ReplyDelete
  28. Ravi,
    Thanks for the link !! That blog is looking fantastic !!! I have now lost interest in koodal, pandhal, etc :-)
    அப்புறம், "ராமனை பிரிந்த தசரதனின் புலம்பல்"-ஆக பாடியவர்...
    ~
    Radha

    ReplyDelete
  29. //Radha said...
    Ravi,
    Thanks for the link !! That blog is looking fantastic !!! I have now lost interest in koodal, pandhal, etc :-)//

    அப்பாடா! தப்பிச்சோம்!
    ராதா, ஆட்டோ வ-ராதா?-ன்னு நேத்து தான் பயந்துக்கிட்டு இருந்தோம் நானும் குமரனும்! :)

    //அப்புறம், "ராமனை பிரிந்த தசரதனின் புலம்பல்"-ஆக பாடியவர்...//

    ராகவ்! உங்க கோஷ்டி பூர்ணர் க்ளூ கொடுத்திட்டாரு பாருங்க! :)
    இப்போ நீங்களே பதில் சொல்லுங்க பார்ப்போம்! :)

    ReplyDelete
  30. ஆகா..தல கலக்கல் பதிவு...நம்ம வுட்டுல குட்டி மச்சான் வந்திருக்கார். அவருக்கு ரொம்ப ரொம்ப யூஸ் ஆகும் ;))

    சீவிஆர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  31. வாழ்த்துகள் சிவிஆர்!!

    கேயாரெஸ், ஒரு சந்தேகம்...

    நாரதர் கையில புல்லாங்குழல்லா வெச்சிருப்பாரு???

    ReplyDelete
  32. //கோபிநாத் said...
    ஆகா..தல கலக்கல் பதிவு...நம்ம வுட்டுல குட்டி மச்சான் வந்திருக்கார். அவருக்கு ரொம்ப ரொம்ப யூஸ் ஆகும் ;))//

    மாப்பி கோப்பி, மனமார்ந்த வாழ்த்துக்கள் உனக்கும் உன் மச்சானுக்கும்! :)
    குளிப்பாட்டுங்க! குளிப்பாட்டுங்க! :)

    ReplyDelete
  33. //தமிழ் said...
    கேயாரெஸ், ஒரு சந்தேகம்...
    நாரதர் கையில புல்லாங்குழல்லா வெச்சிருப்பாரு???//

    இந்த லொள்ளுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல, அண்ணாச்சி! :)
    நாரதர் வாயில் தான் புல்லாங்குழல் இருக்கும்!
    கையில் மஹதி என்கிற வீணை தான் இருக்கும்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP