Thursday, August 06, 2009

ரகசியம்: ஓம் நமோ "Dash" என்றால் என்ன?-1

மக்களே கொஞ்ச நாளைக்கு முன் "ஓம்" என்றால் என்ன?-ன்னும், "நமோ" என்றால் என்ன?-ன்னும் பார்த்தோம் அல்லவா?
அதன் தொடர்ச்சியாக "Dash" என்றால் என்ன?-ன்னு இப்போது பார்க்கலாமா?

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் ஸ்ரீ சக்ர புரி தொடர் துவங்கியுள்ளது! தொடர், விறுவிறு-ன்னு சிவ தாண்டவம் போல், ஆனந்த மயமாகப் போக வாழ்த்து சொல்லிட்டு,
எப்படி திருவண்ணாமலையே ஸ்ரீ சக்ர மயமாகக் காட்சி அளிக்குதோ,
அதே போல், ஸ்ரீ சக்ர மயமாய் அமைந்துள்ள ஒரு மந்திர அடுக்கைப் பார்க்கலாம்! வாங்க!

ஓம் நமோ "Dash" என்றால் என்ன?

"என்னாது? 'Dash'ஆ? என்னா வெளையாடுறீயா கேஆரெஸ் நீயி?
* நாடினேன்! நாடி நான் கண்டு கொண்டேன்! 'நாராயணா' என்னும் நாமம்-ன்னு ஆன்றோர்களும் ஆழ்வார்களும் சொன்னதை,
* மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
* முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை,
'Dash'-ன்னு சொல்ல, உனக்கு எம்புட்டுத் திமிரு இருக்கும்?"

"அட...இதுல என்னாங்க திமிரு இருக்கு? நானே ஒரு அப்பாவிப் பய புள்ள! என் முகத்தைப் பாருங்க! பாவமா இல்ல? :)
நானே, பெருமாள் இப்பல்லாம் என் கிட்ட ஈவு இரக்கமே இல்லாம நடந்துக்கறாரு! என் முருகனுக்கு என் மேல் இருக்கும் கருணை-ல, அவருக்குக் கால் பங்கு கூட இல்லையே-ன்னு நொந்துகிட்டு இருக்கேன்! நீங்க என்னடா-ன்னா திமிரு-ன்னு சொல்றீங்க!" :(

"ஓ...அதான் அவர் மேல் இருக்கும் கோவத்துல Dash போட்டீயா? அவரு பேரை வாயால் கூடச் சொல்ல மாட்டீங்களோ? இதெல்லாம் டூ மச்!"

"ஹைய்யோ...அப்படியெல்லாம் இல்லீங்க!
தலைப்பில் "ரகசியம்"-ன்னு போட்டிருக்கேனே! பாக்கலீங்களா?அதான் 'Dash'ன்னு சொன்னேன்! மந்த்ர ரகஸ்யம்! ரகசியம்-ன்னா வேற யாருக்கும் சொல்லீறக் கூடாது-ல்ல? அதான்!"

"இறைவனோட மந்திரம் ரகசியமா? என்னப்பா சொல்லுற நீயி?"


* ரகசியம்-ன்னா யாருக்கும் சொல்லக் கூடாது!
* வேதம்/மறை-ன்னா எல்லார் கிட்ட இருந்தும் மறைச்சி வைக்கணும்!

இது தான் பொருளா? இறைவனை "மறை"த்து வைக்க முடியும்-ன்னு நீங்க நினைக்கறீங்களா? பூமியிடம் இருந்து சூரியனைக் கூட மறைக்கலாம்! அண்டவெளியை மறைக்க முடியும்-ன்னு நினைக்கறீங்களா? :)

தாய்ப்பாலைக் குழந்தை கிட்ட இருந்து மறைக்க முடியுமா? குழந்தையை நினைத்தால் அவளுக்குத் தானே சுரக்காதா?
அதே போல், அவன் குழந்தைகளான நமக்கு, அவனால் தாய்ப்பாலை மறைச்சி வைக்கத் தான் முடியுமா?

நான்மறைகளை மறைத்து வைக்கணும் என்பது காலத்தால் ஏற்பட்ட ஒரு வழக்கம்!
அதாச்சும் தராதரம் இல்லாமல் "கண்டவனுக்கும்" சொல்லீறக் கூடாது என்று பின்னாளில் ஏற்பட்ட ஒரு வழக்கம்! "தகுதி" அறிந்து தான் சொல்லிக் கொடுக்கணும் என்பது சாஸ்திர விதி!

இதைக் காரணமாகக் காட்டி, ஒரு சிலருக்கு மட்டுமே வேதங்களில் அதிகாரம் இருந்து வந்தன! அவர்கள் சொன்னதே வேத வாக்கு!
வேதங்களில் அனைத்து மக்களுக்கும் உள்ள நன்மை பலரையும் சென்றடைய முடியாமல், ஒரு அதிகார வட்டத்திற்குள்ளேயே முடங்கிப் போனது!

அப்போது தான் தமிழ் வேதமான திருவாய்மொழி உதயமாயிற்று! வேதம் தமிழ் செய்து தந்தவர், வேளாள குல முதல்வரான மாறன் என்னும் நம்மாழ்வார்!

வேதத்துக்கு இன்னார் தான் சொல்லலாம் என்ற வரைமுறைகள் உண்டு!
இப்படி, இந்த நேரத்தில், இவர்கள், இந்தத் திசை பார்த்து = இப்படியெல்லாம் தான் சொல்லணும், பெண்கள் சொல்லக் கூடாது போன்ற சில நியமங்கள் உண்டு!
ஆனால் "நமாமி திராவிட வேத சாகரம்"-ன்னு போற்றப்படும் தமிழ் வேதத்தைச் சொல்ல சாதி, ஆண்/பெண், கால/தேச வர்த்தமானங்களோ வரைமுறைகளோ எதுவும் இல்லை!


வேதங்களை மட்டுமல்லாது, திருமந்திரங்களையும் "ரகஸ்யம்" என்றும் சிலர் போற்றிப் பாதுகாத்தனர்!
அதில் "ஓம்" என்ற பிரணவம் மகா "ரகஸ்யம்" என்றும் சொல்லி வைத்தனர்!
அதன் பொருள் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் தவிர உலகில் வேற ஒருத்தருக்குமே தெரியாது என்றும் கதை சேர்த்தனர்!
ஆனால் உண்மை அப்படியல்ல! என் முருகனுக்கு நற்பொருளை மறைக்கத் தெரியாது என்பதை "ஓம்" பதிவில் பார்த்தோம்!

அதே போல் "திருமந்திரம்" என்ற பெயரால் போற்றப்படும் ஒரே மந்திரம் - அஷ்டாட்சரம் - திரு-எட்டு-எழுத்து = "ஓம் நமோ நாராயணாய"!
இதுவும் "ரகஸ்யம்" என்றே வைக்கப்பட்டு வந்தது! அதன் பொருள் அவ்வளவு சுலபமாகப் பாமரர்க்குக் கிட்டி விடாது!

ஏன் இப்படி? ஏன் இதை "ரகஸ்யம்"-ன்னு சொல்லணும்?
ரகசியம் = யாரிடமும் சொல்லக் கூடாது என்பது தான் பொருளா?

ரகசியம் = நுட்பம்!
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன-ன்னு கேட்கிறோமே! அப்படின்னா என்ன அர்த்தம்?
வெற்றியின் "நுட்பம்", வெற்றிக்கு "வழி"-ன்னு தானே பொருள்? வெற்றியைச் சொல்லக் கூடாது-ன்னா பொருள்? :)
தகராலய ரகசியம், வேதியியல் ரகசியம், காதல் ரகசியம்-ன்னு எத்தனையோ ரகசியங்கள் இருக்கு! அதுக்கெல்லாம் "நுட்பம்"-ன்னு தானே பொருள்!

இதைத் தான் "ரகஸ்யம்"-ன்னு சொல்லி வச்சாங்க வேத காலத்து ரிஷிகள்!
ஆனா நம்மாளுங்க அதுக்கு மீனிங்கை லோக்கலா எடுத்துக்கிட்டு, மந்திரங்களைப் பொத்திப் பொத்தி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க! :)

ஆன்மீகத்தை லோக்கலா எழுதினா மட்டும் கோவம் வருது!
ஆனா "ரகஸ்யம்" என்பதற்கு லோக்கலாப் பொருள் எடுத்துக்கறோமே-ன்னு தங்கள் மேலேயே அவிங்களுக்கு கோவம் வருமா? :)
ஹா ஹா ஹா! நியாயம் என்பது இது தானோ? - நெஞ்சுக்கு நீதி! :))

* "ரகசியம்" = நுட்பம் என்பதைத் தன் குருவுக்கே புரிய வைத்து,
* "ரகஸ்யத்தை", ஒரு உள்ளம், ஊருக்கே போட்டு உடைத்தது அல்லவா?
* "தான்" என்று பார்க்காது,
* "தான் ஒருவன் நரகம் புகினும்", அடியார்கள் அத்தனை பேரும் வீடு புகுவார்கள் என்று ஒரு உள்ளம் எண்ணியது அல்லவா?

"தான்" என்று பார்க்காது...
அந்த "நான்" "மறை"வது தானே "மறை"?
அதுவல்லவோ ரகஸ்யம் = நுட்பம்?
* நான்-மறையைக் கற்றவனா ஞானி?
* "நான்" மறையக் கற்றவனே ஞானி!


காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!


* "ரகசியத்தை", கோபுரத்தின் மேல் இருந்து, ஊருக்கே "கூவிய" அந்த உள்ளம்!
* அந்த உள்ளம் "கூவியதையே",
* இனி வரும் தொடர் பதிவுகளில் அடியேனும் "கூவப்" போகிறேன்!

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!


ஓம் நமோ நாராயணாய என்றால் என்ன?

அதில்
1. ஓம் என்றால் என்ன?
2. நமோ என்றால் என்ன?
என்று முன்னரே பார்த்து விட்டோம்!
3. அப்போ "நாராயணாய" என்றால் என்ன?

* "நாராயண" என்று சொன்னால் போதாதா? எதுக்கு "ஆய"-ன்னு சேர்த்து, "நாராய+ணாய"-ன்னு சொல்லணும்?
* நாரணன் என்பது தமிழ்ச் சொல்லா? வடமொழிச் சொல்லா?
* நம சிவாய என்பதற்கும் திரு-எட்டு-எழுத்துக்கும் என்ன சம்பந்தம்?
* ஸ்ரீமன் நாராயணாய-ன்னு சேர்த்துச் சொல்லலாம் அல்லவா? ஏன் வெறுமனே நமோ நாராயணாய-ன்னு சொல்லணும்? பெண்மைக்கு மதிப்பில்லையா? :)
இந்தத் தலையாய மந்திரத்தில் மகாலட்சுமி இருப்பது போல் தெரியலையே! ஆணாதிக்க அவரு மட்டும் தானா? அவருக்குக் கால் பிடிச்சி விடத் தான் அன்னையா? :)
.....
.....
இப்படிப் பலவும் பார்ப்பதற்கு முன்னாடி....
முக்கியமா ஒன்னு தெரிஞ்சிக்கோங்க!
துன்பம் வரும் போது, "நாராயணா" என்று கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! :)

ஹா ஹா ஹா! அட, இது அடியேன் டகால்ட்டி இல்லீங்க! :)
ஆழ்வார் வாக்கு!

ஆகா! கஷ்டம் வரும் போதாச்சும் கடவுளை நினைப்பாங்க! நீ அது கூட வேணாங்கிறியா கேஆரெஸ்?
துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! எப்படி?
(....தொடரும்!)

மறைந்த காஞ்சி முனிவருக்கு, "ராமானுசம்" என்னும் திருமலைச் சடாரி அருளப்பாடு சார்த்தப்படுகிறது!

83 comments:

 1. அய்யா உங்கள் ஆன்மீக பணிக்கு எனது வாழ்த்துகள் , உங்கள் பணி தொடர ஆண்டவனை வேண்டி கொள்கின்ரேன்

  ReplyDelete
 2. Nammazhvar thiruvadi nilai mattum thaaney 'Ramanujam'? Perumal thiruvadi nilai engum 'Satari' thaaney?

  ReplyDelete
 3. //Anonymous said...
  Nammazhvar thiruvadi nilai mattum thaaney 'Ramanujam'?//

  திருக்குருகூரில் மட்டும் நம்மாழ்வார் திருவடி நிலை இராமானுசன்!
  மாறன் அடி பணிந்து உய்தனன், தாம் மன்ன வந்த இராமானுசன்!
  பிற இடங்களில் மாறன் திருவடி நிலை மதுரகவிகள்!

  //Perumal thiruvadi nilai engum 'Satari' thaaney?//

  எப்போதும் பெருமாள் திருவடி நிலைகள் சடகோபன் நம்மாழ்வார் தான்!
  ஆயினும், சிற்சில இடங்களில், அடியவர்கள்/ஆச்சார்யர்கள் பெயரோடும், பெருமாள் திருவடி நிலைகள் வழங்கப் பெறுகின்றன!

  திருமலையில் ஆஸ்தானத்தில் மட்டும் சார்த்தப்படுவது இராமானுசன்!
  அதே போல் திருமலையில் இராமானுசரின் திருவடி நிலைகள் அனந்தாழ்வான்! (பிற இடங்களில் முதலியாண்டான்)

  ReplyDelete
 4. "ஓம் என்றால் என்ன?" என்ற பதிவினை பார்க்க நேர்ந்தது.
  உச்சரிப்பு வகையில் பார்த்தால் "அ + உ = ஔ" என்று தானே வரவேண்டும்?
  எப்படி "ஓ" என்று வந்தது ? :-)

  நிற்க,அமலனாதிபிரானில் நீங்கள் கேட்ட தரவுகளுக்காக பூர்வாசார்யர்கள் உரை எல்லாம் படிக்க நேர்ந்த பொழுது ஒரு "trivia" கிடைத்தது. (உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.) முதல் மூன்று பாசுரங்கள் "ஓம்" என்ற பிரணவ பொருளின் விரிவாம். "அமலனாதிபிரான்", "உவந்த", "மந்தி" என்று அடிவரவுகளின் முதல் அக்ஷரங்களை எடுத்துக் கொண்டால் "அ", "உ", "ம" என்று "ஓம்" என்பதன் விரிவு கிடைக்கிறது என்பதால்.

  ReplyDelete
 5. "ஓம் என்றால் என்ன?" என்ற பதிவினை பார்க்க நேர்ந்தது.
  உச்சரிப்பு வகையில் பார்த்தால் "அ + உ = ஔ" என்று தானே வரவேண்டும்?
  எப்படி "ஓ" என்று வந்தது ? :-)

  நிற்க,அமலனாதிபிரானில் நீங்கள் கேட்ட தரவுகளுக்காக பூர்வாசார்யர்கள் உரை எல்லாம் படிக்க நேர்ந்த பொழுது ஒரு "trivia" கிடைத்தது. (உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.) முதல் மூன்று பாசுரங்கள் "ஓம்" என்ற பிரணவ பொருளின் விரிவாம். "அமலனாதிபிரான்", "உவந்த", "மந்தி" என்று அடிவரவுகளின் முதல் அக்ஷரங்களை எடுத்துக் கொண்டால் "அ", "உ", "ம" என்று "ஓம்" என்பதன் விரிவு கிடைக்கிறது என்பதால்.

  ReplyDelete
 6. //இதைத் தான் "ரகஸ்யம்"-ன்னு சொல்லி வச்சாங்க வேத காலத்து ரிஷிகள்! ஆனா நம்மாளுங்க அதுக்கு மீனிங்கை லோக்கலா எடுத்துக்கிட்டு, மந்திரங்களைப் பொத்திப் பொத்தி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க! :)//

  என்னோட ஆசை என்னான்னா, இதை தமிழ்நாட்டினர் மட்டுமன்றி, இந்தியாவில் அனைவரும் படித்து பொருளுணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே!

  வாழ்க நின் தொண்டு! வளர்க நின் புகழ், மேலும்!

  ReplyDelete
 7. வந்துவிட்டேன் வாசித்து பின்னூட்டசுனாமி வரும் என சொல்லிக்கொள்கிறேன்!

  ReplyDelete
 8. இராமானுஜதாசர்கள் என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும். ரகஸ்யம் எங்கும் பரவட்டும். `பொலிக, பொலிக, பொலிக..கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து உழிதரட்டும்` வாழ்க!!

  ReplyDelete
 9. //எழிலரசன் said...
  அய்யா உங்கள் ஆன்மீக பணிக்கு எனது வாழ்த்துகள் , உங்கள் பணி தொடர ஆண்டவனை வேண்டி கொள்கின்ரேன்//

  :)
  எழுதுவது எல்லாம் ஒரு பணியா எழிலரசன்?
  அடியார்களின் கைங்கர்யபாராள் எத்தனையோ பேரு! எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!
  தங்கள் ஆசிக்கு நன்றி!

  ReplyDelete
 10. //Radha said...
  "ஓம் என்றால் என்ன?" என்ற பதிவினை பார்க்க நேர்ந்தது.
  உச்சரிப்பு வகையில் பார்த்தால் "அ + உ = ஔ" என்று தானே வரவேண்டும்?
  எப்படி "ஓ" என்று வந்தது ? :-)//

  அதானே! எப்படி ராதா? :)
  ஹிஹி!

  ஒளகாரக் குறுக்கம்-ன்னு ஒன்னு இருக்கு! தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பது! Back to Tamizh Teacher! :)

  //நிற்க,அமலனாதிபிரானில் நீங்கள் கேட்ட தரவுகளுக்காக பூர்வாசார்யர்கள் உரை எல்லாம் படிக்க நேர்ந்த பொழுது ஒரு "trivia" கிடைத்தது.//

  உங்க தரவுகள் மின்னஞ்சலுக்கு இன்னும் பதில் சொல்லலை! மன்னியுங்கள்! வாயடைச்சு போயி நிக்குறேன்! அதான்! :)

  //(உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்.)//

  நீங்க சொன்னா நான் கேட்டுக்கிருவேன்!
  அடியேன் அறிந்தது அறிய அறிய அறியாமை மட்டுமே!

  //முதல் மூன்று பாசுரங்கள் "ஓம்" என்ற பிரணவ பொருளின் விரிவாம்.
  "அமலனாதிபிரான்",
  "உவந்த",
  "மந்தி"//

  அருமை! சூப்பரு!
  அமலனாதி (அ) = பரமாத்மா!
  மந்தி (ம்) = ஜீவாத்மா தான்! குரங்கு! :)
  இவர்கள் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும் உறவு (உ) = உவந்த உறவு!

  அழகாப் பொருந்தி வருது ராதா! ஆகா!

  ReplyDelete
 11. //தமிழ் said...
  என்னோட ஆசை என்னான்னா, இதை தமிழ்நாட்டினர் மட்டுமன்றி, இந்தியாவில் அனைவரும் படித்து பொருளுணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே!//

  ஹா ஹா ஹா!
  சரி, ராகவன் கிட்ட சொல்லுறேன்! எனக்காகத் தெலுங்கில் மொழி பெயர்த்துத் தருவான்! பக்கத்து வீட்டில் இருந்து ஆரம்பிப்போம்! :)

  வெட்டி பாலாஜி கிட்ட கூட கேக்கலாம் தான்! ஆனா தம்பிக்கு தெலுங்கு அவ்வளவாத் தெரியாது! :)

  //வாழ்க நின் தொண்டு! வளர்க நின் புகழ், மேலும்!//

  :)
  ஆசிக்கு நன்றி முகில்/தமிழ்!

  எம்பெருமான், "உன் தனக்கு நான்", என்று எழுதப்பட்ட அந்நாள்...
  அவனுக்கு என்னை விதி என்ற இம்மாற்றம், நான் கடவா வண்ணமே நல்கு!

  ReplyDelete
 12. //ஷைலஜா said...
  வந்துவிட்டேன் வாசித்து பின்னூட்டசுனாமி வரும் என சொல்லிக்கொள்கிறேன்!//

  ஹா ஹா ஹா...
  அக்காவின் சுனாமியில் ஆழ்ந்தால் செல்வம் போகாது! கிடைக்கும்! :)

  ReplyDelete
 13. //நா.கண்ணன் said...
  இராமானுஜ தாசர்கள் என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்//

  :)
  எங்கள் கதியே! இராமானுச முனியே!
  சங்கைக் கெடுத்தாண்ட தவராசா - பொங்குபுகழ்
  மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
  தங்குமனம் நீ எனக்குத் தா!

  //ரகஸ்யம் எங்கும் பரவட்டும். `பொலிக, பொலிக, பொலிக..கடல்வண்ணன் பூதங்கள் மலியப் புகுந்து உழிதரட்டும்` வாழ்க!!//

  நன்றி கண்ணன் சார்!
  இந்தத் தொடருக்குத் தங்கள் மேற்பார்வை அவசியம் தேவை! ஒவ்வொரு பதிவையும் எங்களுக்காகச் சரி பார்த்துக் கொடுங்கள்!
  ஏன்-ன்னா அடியேன் மனத்தளவில் எழுவதை அப்படியே எழுதீருவேன்! அது ஆச்சார்ய விளக்கங்களுக்கு மாறாம இருக்கணும்! அதான்!

  ReplyDelete
 14. //உங்க தரவுகள் மின்னஞ்சலுக்கு இன்னும் பதில் சொல்லலை! மன்னியுங்கள்! வாயடைச்சு போயி நிக்குறேன்! அதான்! :) //
  மன்னிப்பா? நானா? அதெல்லாம் என்னிடம் ஒன்றும் நடக்காது.
  செய்த குற்றத்திற்கு இப்பொழுதே நூற்றி எட்டு தோப்புக்கரணம் போட வேண்டும். :-)

  நிற்க, மின்னஞ்சல் செய்தது "cc"-இல் இருந்தவர் மீண்டு வருகிறார் என்பதற்கு ஏதேனும் அறிகுறிகள் சமிக்ஞைகள் கிடைக்குமா என்ற ஆவலில் தான். ஒன்றும் தெரியவில்லை என்பது ஓர் ஏமாற்றமே.
  ஒரு வேளை நாம ரெண்டு பேரும் தரவுகள் என்று எதையாவது உளறி கொட்டி இருந்தால் ஏதானும் தெரிந்து இருக்கலாம்.

  ReplyDelete
 15. //ஒளகாரக் குறுக்கம்-ன்னு ஒன்னு இருக்கு! தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பது! Back to Tamizh Teacher! :) //
  :-)
  "அகர உகரம் ஒளகார மாகும்" என்று தொல்காப்பியர் சூத்திரம். "ஒளகாரக் குறுக்கம்" என்று ஒன்று உள்ளதா? ஆம், இல்லை என்று தமிழ் மொழி ஆய்வாளர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். அதை விட்டு விடுவோம்.

  "ஒளகாரக் குறுக்கம்" என்று ஒன்று உள்ளது என்று கூறும் நூல்கள், 'ஔ' குறுகும்பொழுது, ஒன்று அல்லது ஒன்றரை மாத்திரை அளவு பெறுகிறது என்று சொல்கிறார்கள்.

  "ஓம்" என்பதில் "ஓ" என்பது நெடிலாக வருகிறதா? அப்படியெனில் அதற்கு 2 மாத்திரைகள். உங்கள் விளக்கம் எங்கோ இடிக்கிறதே. "ஓகாரக் குறுக்கம்" என்று ஒன்றும் இல்லை என நினைக்கிறேன். :-)

  தமிழில் "இலக்கண ரீதியாக" சரியாக இன்னும் எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை.

  ஆனால் வடமொழியில் இலக்கண ரீதியாக விளக்கம் கிடைத்தது. (இதனால் நான் "ஓம்" என்பது வடமொழி சொல் என்றோ வட மொழி உயர்ந்தது என்றோ சொல்வதாக தப்பர்த்தம் செய்து கொள்ள வேண்டாம். :-))

  வடமொழியில் "அ" + "உ" = "ஔ" என்று விதி இல்லை.
  "அ" + "உ" = "ஓ" என்றே வடமொழி சந்தி விதி.

  இன்றைய தேதியில் புழங்கும் வடமொழிப் பதங்கள் சிலவற்றை பார்த்தால் எளிதில் புரிந்து விடும்.
  ப்ரஹ்ம + உற்சவம் = ப்ரஹ்மோற்சவம்

  வடமொழியில் "ஆ" + "உ" சேர்ந்தாலும் "ஓ" என்று தான் சந்தி விதி.
  மஹா + உத்ஸாஹம் = மஹோத்ஸாஹம்
  பொன்னியின் செல்வனில் கல்கி இது போன்ற வடமொழிப் பதங்களை அருமையாக கையாண்டு இருப்பார்.

  ReplyDelete
 16. // நீங்க சொன்னா நான் கேட்டுக்கிருவேன்! //
  தோ டா !! நம்பிட்டேன் ! :-)
  பந்தலில் "கர்ம யோகம்" பற்றி ஏற்பட்ட அனுபவம் மாறாமல் நினைவில் இருக்கிறது. :-) "advice பண்றதுக்கு ஆள் கிடைச்சாண்டா ! வசமா மாட்டான்டா" என்ற ரீதியில் அன்னைக்கு என்னை போட்டு தாக்கியது பச்சைப் பசுமையான நினைவு. :)

  ReplyDelete
 17. //
  அருமை! சூப்பரு!
  அமலனாதி (அ) = பரமாத்மா!
  மந்தி (ம்) = ஜீவாத்மா தான்! குரங்கு! :)
  இவர்கள் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும் உறவு (உ) = உவந்த உறவு!
  அழகாப் பொருந்தி வருது ராதா! ஆகா!
  //
  :-) மொத்த அமலனாதிபிரானும் "ஓம் நமோ நாராயணாய" என்பதன் விரிவாம். மேலே படிச்சி பார்த்து தான் எப்படின்னு தெரிஞ்சுக்கணும்.

  சமீபத்தில் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் குறுந்தகடு ஒன்றினை கேட்க நேர்ந்தது.
  இவர் இந்த மூன்று அடிவரவுகளையும் எடுத்துக் கொண்டு, "'அமலனாதிபிரான் உவந்த மந்தி' என்று அனுமன் புகழினை பாணர் பாடி உள்ளார்" என்று நயம் காண்கிறார். :-)

  ReplyDelete
 18. @ராதா
  //மொத்த அமலனாதிபிரானும் "ஓம் நமோ நாராயணாய" என்பதன் விரிவாம். மேலே படிச்சி பார்த்து தான் எப்படின்னு தெரிஞ்சுக்கணும்.//

  ஆகா! சீக்கிரம் படிச்சிப் பார்த்து பதிவு போடுங்க! நாங்களும் சாப்பிடணும்-ல்ல? :)
  - இப்படிக்கு
  அ.அ.உ.ம
  (அடியேன், அமலனாதிப்பிரான் உவந்த மந்தி)

  ReplyDelete
 19. //Radha said...
  // நீங்க சொன்னா நான் கேட்டுக்கிருவேன்! //

  தோ டா !! நம்பிட்டேன் ! :-)
  பந்தலில் "கர்ம யோகம்" பற்றி ஏற்பட்ட அனுபவம் மாறாமல் நினைவில் இருக்கிறது. :-) "advice பண்றதுக்கு ஆள் கிடைச்சாண்டா ! வசமா மாட்டான்டா" என்ற ரீதியில் அன்னைக்கு என்னை போட்டு தாக்கியது பச்சைப் பசுமையான நினைவு. :)//

  ஹா ஹா ஹா
  அந்தப் பதிவில் நீங்க என் கூடவாப் பேசினீங்க ராதா? தேசிகர் கூடத் தானே பேசிக்கிட்டு இருந்தீங்க? :)

  அவர் தான் உங்களை அன்னைக்கு (ஸ்ரீ) போட்டு, தாக்கு இன் ஆர்! :)

  அன்னையின் திருவருளுக்குப் புடத்தில் போட்டு, பொன்னைத் தாக்கி, இன்-ஆர் ஆபரணம் ஆக்கினாரு! :)

  ReplyDelete
 20. //Radha said...
  மன்னிப்பா? நானா? அதெல்லாம் என்னிடம் ஒன்றும் நடக்காது.
  செய்த குற்றத்திற்கு இப்பொழுதே நூற்றி எட்டு தோப்புக்கரணம் போட வேண்டும். :-)//

  நூற்றி எட்டில், எட்டு இப்பவே போட்டுட்டேன். பாத்தீங்களா? மீதியைக் கணக்கு வச்சிக்குங்க! :)

  //நிற்க, மின்னஞ்சல் செய்தது "cc"-இல் இருந்தவர் மீண்டு வருகிறார் என்பதற்கு ஏதேனும் அறிகுறிகள் சமிக்ஞைகள் கிடைக்குமா என்ற ஆவலில் தான்//

  உம், அவர் தந்தையார் மறைவுக்கு அப்புறம் பல வேலைகள் ஊரில்! அதான் பணிச்சுமையில் அவர் தொடர்பில் இல்லை! இன்னும் ஓரு வாரத்தில் வந்துருவாரு!

  //ஒரு வேளை நாம ரெண்டு பேரும் தரவுகள் என்று எதையாவது உளறி கொட்டி இருந்தால் ஏதானும் தெரிந்து இருக்கலாம்//

  என்ன ஆணவம்? உளறிக் கொட்டி-யா? அதெல்லாம் நான் மட்டும் தான் பண்ணுவேன்! நாம ரெண்டு பேரும்-ன்னு எல்லாம் சொல்லப்பிடாது! தப்பு! :)

  ReplyDelete
 21. //Radha said...
  "ஒளகாரக் குறுக்கம்" என்று ஒன்று உள்ளதா? ஆம், இல்லை என்று தமிழ் மொழி ஆய்வாளர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.//

  ஆமாம்! :)
  தொல்காப்பியர் இப்படியெல்லாம் செஞ்சி வச்சிட்டுப் போயிட்டாரு! அது ஒளகாரக் குறுக்கமே இல்ல-ன்னு சில பேரு சொல்லிக்கிட்டு திரியறாங்க! :)

  இப்படித் தான் மாயோன் மேய-ன்னு முல்லையை முதலில் சொல்லி, அப்பறம் சேயோன் மேய-ன்னு குறிஞ்சியைச் சொல்லிட்டுப் போயிட்டாரு! இன்னிக்கி இன்னும் குழப்பம்! :)

  //"ஓம்" என்பதில் "ஓ" என்பது நெடிலாக வருகிறதா? அப்படியெனில் அதற்கு 2 மாத்திரைகள்//

  ரெண்டு மாத்திரையா? யூ மீன்
  அனாசின், ஃப்ரூபென்? :)

  ReplyDelete
 22. திரு கே ஆர் எஸ்,

  ஸ்ரீ சக்ர புரிக்கு வழிகாட்டியதற்கு நன்றி.

  தெய்வ அருளை தொடர்ந்து பெரும் / தரும் அருமையான DISH-ஐ DASH என சொல்லிகிறீர்கள் :)

  “I" இணைத்தவுடன் பொருள் மாறிவிட்டது.

  //
  ரெண்டு மாத்திரையா? யூ மீன்
  அனாசின், ஃப்ரூபென்? :)//

  உங்கள் நகைச்சுவையை (ர)ருசித்தேன்.

  ReplyDelete
 23. @ராதா
  //உங்கள் விளக்கம் எங்கோ இடிக்கிறதே. "ஓகாரக் குறுக்கம்" என்று ஒன்றும் இல்லை என நினைக்கிறேன். :-)//

  ஒள என்பது குறுகி ஒலிக்கும்!
  அ+உ <> ஒள!
  உச்சரிப்பில் அப்படித் தோனலாம்! ஆனால் தமிழில் உயிர் மேல் உயிர் ஏறாது! மெய் மேல் தான் உயிர் ஏறும்! அதனால் ஒலி அடிப்படையில் மட்டும் பேசினால் இது ஒளகாரக் குறுக்கம் போல் "கொள்ளலாம்!"

  ஒள என்பது அவ்-ன்னு ஒலிக்கும் போது ஒளகாரக் குறுக்கம்!
  அ+உ+ம்-ன்னு தியானத்தில் திருப்பித் திருப்பிச் சொல்லும் போது, இந்த அ-வ்-ம் சத்தம் வரும்! அதான் நீங்கள் சொல்லவே அப்படிக் குறிப்பிட்டேன்!

  //ஆனால் வடமொழியில் இலக்கண ரீதியாக விளக்கம் கிடைத்தது//

  ஓக்கே! கும்மி ஸ்டார்ட்! :)

  //(இதனால் நான் "ஓம்" என்பது வடமொழி சொல் என்றோ வட மொழி உயர்ந்தது என்றோ சொல்வதாக தப்பர்த்தம் செய்து கொள்ள வேண்டாம். :-))//

  அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது! நாங்களா செஞ்சிப்போம்! என்ன ஆணவம் உங்களுக்கு? நாங்க அர்த்தம் பண்ணிக்கிட்டா அது தப்பு அர்த்தமா? :))
  அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்! :)

  //"அ" + "உ" = "ஓ" என்றே வடமொழி சந்தி விதி.
  ப்ரஹ்ம + உற்சவம் = ப்ரஹ்மோற்சவம் //

  உண்மையே!
  ராதா + உத்ஸவம் = ராதோத்ஸவம்! :)

  ReplyDelete
 24. என்ன டேஷோ கீஷோ போங்க....நாராயணனே நமக்கே பறைதருவான்னு முதப்பாடல்லயே உங்க தோழி சிக்ஸர் அடிச்சிருக்கா..ஏன் ஆயிரம் நாமத்துல அவ அதை முதலில் தேர்ந்தெடுத்தாளாம்..புரிகிறதா?:)

  ReplyDelete
 25. ///அட...இதுல என்னாங்க திமிரு இருக்கு? நானே ஒரு அப்பாவிப் பய புள்ள! என் முகத்தைப் பாருங்க! பாவமா இல்ல? :)///

  இல்லையே:):)  ///நானே, இப்பல்லாம், பெருமாள் என் கிட்ட ஈவு இரக்கமே இல்லாம நடந்துக்கறாரு!//

  கருணைக்கடலில் பள்ளிகொண்டிருப்பவரா இப்படி நட்ந்துக்கிறார் இருக்காதே!


  // என் முருகனுக்கு என் மேல் இருக்கும் கருணை-ல, அவருக்குக் கால் பங்கு கூட இல்லையே-ன்னு நொந்துகிட்டு இருக்கேன்! நீங்க என்னடா-ன்னா திமிரு-ன்னு ////

  முருகன் அவர் மருகன் தானே யார் கவனிச்சா என்ன? ரொம்ப ஒண்ணும் நொந்து நூடுல்ஸ் ஆகவேண்டாம்.:)

  ReplyDelete
 26. //
  வேதத்துக்கு இன்னார் தான் சொல்லலாம் என்ற வரைமுறைகள் உண்டு!
  இப்படி, இந்த நேரத்தில், இவர்கள், இந்தத் திசை பார்த்து தான் சொல்லணும், பெண்கள் சொல்லக் கூடாது போன்ற சில நியமங்கள் உண்டு!
  ஆனால் "நமாமி திராவிட வேத சாகரம்"-ன்னு போற்றப்படும் தமிழ் வேதத்தைச் சொல்ல சாதி, ஆண்/பெண், கால/தேச வர்த்தமானங்களோ வரைமுறைகளோ எதுவும் இல்லை!
  //////


  உண்மை அதனால்தான் ஆண்டவன் புறப்பாடுகளில் உலாக்களில் தமிழ்வேதம் முன்னே செல்கிறது.

  ReplyDelete
 27. //
  "தான்" என்று பார்க்காது,
  அந்த "நான்" மறைவது தானே "மறை"?
  அதுவல்லவோ ரகஸ்யம் = நுட்பம்?
  * நான் மறையைக் கற்றவனா ஞானி?
  * "நான்" மறையக் கற்றவனே ஞானி!
  ...///


  மரத்தை மறைத்தது மாமத யானை
  மரத்தில் மறைந்தது மாமத யானை!

  ReplyDelete
 28. //
  ரகசியம் = நுட்பம்!
  உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன-ன்னு கேட்கிறோமே! அப்படின்னா என்ன அர்த்தம்?
  வெற்றியின் "நுட்பம்", வெற்றிக்கு "வழி"-ன்னு தானே பொருள்!
  தகராலய ரகசியம், வேதியியல் ரகசியம், காதல் ரகசியம்-ன்னு எத்தனையோ ரகசியங்கள் இருக்கு! அதுக்கெல்லாம் "நுட்பம்"-ன்னு தானே பொருள்//////

  ரகசியமானதுரகசியம்! நுட்பம் , நல்ல சொல் இங்கு!

  ReplyDelete
 29. //
  நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்பு
  சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
  //////////////

  பாகாய் தேனாய் தித்திக்கின்றதே!

  ரகசியம் இருட்டல்ல ஒளி பேரொளி என்று உலகிற்குக்காட்டி வெளிச்சத்திற்கு அனைவரையும் இழுத்துவந்த பெருமை எதிராஜருக்கே சேரும்! அனைத்துப்பெருமைகளுக்கும் சிறப்புக்களுக்கும் உடையவரான அவரை ஒரே சொல்லில் ’உடையவர்’ என்று அரங்கன் அணைக்கக்காரணமும் இதனால்தானோ?

  ReplyDelete
 30. //
  ஆகா! கஷ்டம் வரும் போதாச்சும் கடவுளை நினைப்பாங்க! நீ அது கூட வேணாங்கிறியா கேஆரெஸ்?
  துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! எப்படி?
  ///

  ஆமாம் எதுக்குக்கூப்பிடணும்? கூவி அழைத்தால்தான் வருவானா என்ன
  உளன்கண்டாய் நன்னெஞ்சே என்று அவனை உள்ளத்தில் இருத்தி இருக்கிறபோது? நான் இப்படி நினைக்கிறேன் என் சிற்றறிவு இதுக்குமேல வேலை செய்யல உங்க’எப்படி’க்கு விளக்கமும் விரைவில் எதிர்பார்க்கிறேன்..ஆக முன்னுரை மட்டும் இந்தப்பதிலில்போல?: தொடருங்க நாராயணரை அங்கேயாவது கண்குளிரப்பார்க்கிறோம்! நன்றி.

  ReplyDelete
 31. //ஷைலஜா said...
  உங்க ’எப்படி’க்கு விளக்கமும் விரைவில் எதிர்பார்க்கிறேன்..//

  துன்பம் வரும் போது, "நாராயணா" என்று கூப்பிடாதே என்று சொல்லும் ஆழ்வார் யாரு? :) அதைக் கண்டுபிடிச்சா விடை தெரிஞ்சீருமே-க்கா! நம்ம பாசுர வித்தகர் ராதா கிட்ட கேளுங்க! சொல்லப் போறாரு!

  //ஆக முன்னுரை மட்டும் இந்தப்பதிலில்போல?: தொடருங்க நாராயணரை அங்கேயாவது கண்குளிரப்பார்க்கிறோம்!//

  அத்தனையும் ஒரே மூச்சுல எழுதி வச்சிட்டேன்! இன்னிக்கி இரவே போட்டுறட்டுமா? :)

  ReplyDelete
 32. //ஸ்வாமி ஓம்கார் said...
  திரு கே ஆர் எஸ்,
  ஸ்ரீ சக்ர புரிக்கு வழிகாட்டியதற்கு நன்றி//

  ஆவலாக இருக்கோம் ஸ்வாமிகளே! அடுத்த பாகம் போடுங்க! :)

  //தெய்வ அருளை தொடர்ந்து பெரும் / தரும் அருமையான DISH-ஐ DASH என சொல்லிகிறீர்கள் :)
  “I" இணைத்தவுடன் பொருள் மாறிவிட்டது.//

  சூப்பரு!
  இறைவன் DISH தான்! ஆரா அமுது! ஆராவமுதன்-ன்னு தானே பேரே இருக்கு! உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்னும் DISHயே! :)

  //
  ரெண்டு மாத்திரையா? யூ மீன்
  அனாசின், ஃப்ரூபென்? :)//
  உங்கள் நகைச்சுவையை (ர)ருசித்தேன்//

  ஹிஹி! ராதாவைப் போட்டு அடிச்சோம்-ன்னு சொன்னாரு-ல்ல? அதான் வலி நிவாரணி மாத்திரைகள்! ரெண்டு மாத்திரை ஒன்னரையா கொறைஞ்சி ஒலிக்கட்டும்! :)))

  ReplyDelete
 33. //ஷைலஜா said...
  என்ன டேஷோ கீஷோ போங்க....//

  ஹிஹி! வாங்க Dash ப்ரியா! :)
  திருவரங்கம்-ன்னு என் வாயால சொல்ல மாட்டேன்! :))

  //நாராயணனே நமக்கே பறைதருவான்னு முதப்பாடல்லயே உங்க தோழி சிக்ஸர் அடிச்சிருக்கா..ஏன் ஆயிரம் நாமத்துல அவ அதை முதலில் தேர்ந்தெடுத்தாளாம்..புரிகிறதா?:)//

  தோழி மொதல்ல சொல்றது
  * நேரிழையீர்/செல்வச் சிறுமீர் = அழகான பொண்ணுங்க :)
  அப்பாலிக்கா....
  * முருகன் = கூர்வேல்
  * நந்தகோபன் குமரன்
  * யசோதை இளஞ்சிங்கம்
  * சிங்கம்-ன்னு நரசிம்மப் பெருமாள் வந்துட்டாரு பாத்தீங்களா?
  * அப்பறம் தான் "நாராயணனே"! :))

  ReplyDelete
 34. //ஷைலஜா said...
  என் முகத்தைப் பாருங்க! பாவமா இல்ல? :)///

  இல்லையே:):)//

  ஐயகோ! அக்காவே இப்படிச் சொல்லலாமா? இதுக்கும் அந்த Dash தான் காரணம்! அவனுக்கு கருணையே இல்ல! :(

  //
  //நானே, இப்பல்லாம், பெருமாள் என் கிட்ட ஈவு இரக்கமே இல்லாம நடந்துக்கறாரு!//

  கருணைக்கடலில் பள்ளிகொண்டிருப்பவரா இப்படி நட்ந்துக்கிறார் இருக்காதே!//

  அவரா கருணை? புறம் போல் உள்ளும் கரியான்! :((

  //முருகன் அவர் மருகன் தானே யார் கவனிச்சா என்ன?//
  அதெல்லாம் இல்ல! முருகனை நைசா மிக்ஸ் பண்ணப் பாக்கறீங்களா? நடக்காது! நடக்காது! :)

  //ரொம்ப ஒண்ணும் நொந்து நூடுல்ஸ் ஆகவேண்டாம்.:)//

  :) நோ கமென்ட்ஸ்!

  ReplyDelete
 35. //ஷைலஜா said...
  உண்மை அதனால்தான் ஆண்டவன் புறப்பாடுகளில் உலாக்களில் தமிழ்வேதம் முன்னே செல்கிறது//

  தமிழ் இறைவனுக்கும் முன்னால்-ன்னு குமரன் பதிவை வாசிங்க!

  ReplyDelete
 36. //ஷைலஜா said...
  பாகாய் தேனாய் தித்திக்கின்றதே!
  வெளிச்சத்திற்கு அனைவரையும் இழுத்துவந்த பெருமை எதிராஜருக்கே சேரும்!//

  :)
  யதிராஜோ ஜகத்குரு!
  யதிராஜோ ஜகத்குரு!

  //அனைத்துப்பெருமைகளுக்கும் சிறப்புக்களுக்கும் உடையவரான அவரை ஒரே சொல்லில் ’உடையவர்’ என்று அரங்கன் அணைக்கக்காரணமும் இதனால்தானோ?//

  உடையவர....
  * நம்மை உடையவர்! = ம்
  * அவனை உடையவர்! = அ
  * நம்மை அவனுக்கு உடைமையாக்கும் உடையவர்! = உ

  ReplyDelete
 37. கேஆரெஸ்! இவ்வள்வு நாள் படிச்சு ஒரு நாளும் உங்க பதிவில பின்னுட்டம் மட்டும் இல்லை பூஸ்ட் ஆர்லிஸ்க்ஸ் எதுவுமே கொடுக்காதது ரொம்ப குறுகுறுப்பா இருக்கு.. ரொம்ப நல்லா எழுதறீங்க... நான் படிக்கும் சில பிளாக்குகளில் உங்களுடையதும் ஒன்று. தொடர்ந்து உங்களது ஆன்மீக பணி தெடரட்டும்

  வாழ்த்துக்கள்
  இலக்குமி

  ReplyDelete
 38. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  ////

  ஹிஹி! வாங்க Dash ப்ரியா! :)
  திருவரங்கம்-ன்னு என் வாயால சொல்ல மாட்டேன்! :))
  ?:)//>>>>>>////

  வாயால சொல்லலேன்னா விரலால தட்டச்சினது யாரு?:) அந்தரங்கத்துல
  ‘அவன்’ இல்லேன்னா இதெலலாம் வருமா?!
  //தோழி மொதல்ல சொல்றது
  * நேரிழையீர்/செல்வச் சிறுமீர் = அழகான பொண்ணுங்க :)
  அப்பாலிக்கா....
  * முருகன் = கூர்வேல்
  * நந்தகோபன் குமரன்
  * யசோதை இளஞ்சிங்கம்
  * சிங்கம்-ன்னு நரசிம்மப் பெருமாள் வந்துட்டாரு பாத்தீங்களா?
  * அப்பறம் தான் "நாராயணனே"! //


  ஹலோ! உவமைகள் வேறு பெயர்கள் வேறு. டைரக்டா நாராயணான்னு சொன்னா.....படால்னு இந்தப்பேர் ஏன் வரணும்? !கேசவன் மாதவன் இங்க ஏன் வரல? ரகசியததை உடைச்சா! யாரோட தங்கை ஹ?:)

  6:28 PM, August 06, 2009

  ReplyDelete
 39. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //ஷைலஜா said...
  உங்க ’எப்படி’க்கு விளக்கமும் விரைவில் எதிர்பார்க்கிறேன்..//

  துன்பம் வரும் போது, "நாராயணா" என்று கூப்பிடாதே என்று சொல்லும் ஆழ்வார் யாரு? :) அதைக் கண்டுபிடிச்சா விடை தெரிஞ்சீருமே-க்கா! நம்ம பாசுர வித்தகர் ராதா கிட்ட கேளுங்க! சொல்லப் போறாரு!
  ///


  யாரு? நாங்களே கண்டுபிடிக்கிறோம் அதுவரை... உஷ்..ரகசியமாவே வைங்க!

  ReplyDelete
 40. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //ஷைலஜா said...
  உண்மை அதனால்தான் ஆண்டவன் புறப்பாடுகளில் உலாக்களில் தமிழ்வேதம் முன்னே செல்கிறது//

  தமிழ் இறைவனுக்கும் முன்னால்-ன்னு குமரன் பதிவை வாசிங்க!

  6:33 PM, August 06, 2009
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  அவசியம் வாசிக்கறேன்! முன்னாடி(யே) வாசிக்கவேண்டியதை பின்னாடியாவது வாசிக்கறேன்.

  ReplyDelete
 41. //மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
  மங்கையார்வாள்ff கலிகன்றி,
  செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்fமாலை
  இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
  துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
  துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
  நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
  நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.10
  ///கண்டேன் பாடலை! இதுதானே அது? குலம்தரும் நல்லன எல்லாம் தரும் என்று சொல்லி புகழ்ந்திருக்கிறார் இதற்கு முந்தைய பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார்! ஆனால் இதில் துயர்வரில் நினைமின் என்கிறார்.துயரத்தில் வரும் சொல் நஞ்சாம் எனப்பொருளா>? அதனால் அப்படிச்சொல்கிறாரா? விளக்கவும்.

  ReplyDelete
 42. வழக்கம்போல் அருமை !

  சொல்லிச்சொல்லியே வாய் வலிக்குதப்பா:-)))

  ரகஸியமுன்னு யார்கிட்டேயாவது ரகஸியமாச் சொல்லிப் பாருங்க ஒரு ரகஸியத்தை. எண்ணி ரெண்டாம்நாளே அது ஒரு பத்துப்பேருக்கு 'ரகசியமா வச்சுக்கோ'ன்ற முன்குறிப்போடுப் போய்ச்சேர்ந்து பின்னே அங்கேயிருந்து பரவி பரவி.....

  அதுக்குத்தான் எல்லாருக்கும் ஒரு விஷயம் போய்ச் சேரணுமுன்னா ரகசியம்னு ரகசியமாச் சொன்னால் போதும்:-)

  ரகசியம் காப்பாத்தும் மக்களும் இருக்காங்க. ஆனா.... வீதம் ரொம்பக் கம்மி.

  ஆனானப்பட்ட ராமானுஜரே...ரகஸியத்தைக் காப்பாத்தலை பாருங்க:-)))))))))))))))))))))

  ReplyDelete
 43. @ Dashப்ரியா

  //துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
  துயரிலீர் சொல்லிலும் நன்றாம்//

  சூப்பரு! கண்டு புடிச்சிட்டீங்களே, ஜப்பான் ட்யூப் வண்டி கணக்கா இம்புட்டு ஃபாஸ்ட்டா? :)

  //ஆனால் இதில் துயர்வரில் நினைமின் என்கிறார்.துயரத்தில் வரும் சொல் நஞ்சாம் எனப்பொருளா>? அதனால் அப்படிச்சொல்கிறாரா? விளக்கவும்//

  ஹிஹி! அதெல்லாம் அடுத்த பதிவில்! :)
  துஞ்சும் போது எப்படி அழைக்க முடியும்? :)
  யோசிங்க! யோசிங்க! :)

  ReplyDelete
 44. வேதம்/மறை-ன்னா எல்லார் கிட்ட இருந்தும் மறைச்சி வைக்கணும்!

  ரொம்பவே குறும்புதான்..

  பணி தொடர்க!!

  திவாகர்

  ReplyDelete
 45. //ரெண்டு மாத்திரையா? யூ மீன்
  அனாசின், ஃப்ரூபென்? :) //
  இது ரொம்ப ரொம்ப பழைய ஜோக். :-)

  மொழிகளின் இலக்கண விதிகளை சற்றே ஒதுக்கிவிட்டு, உச்சரிப்பு முறையில் மட்டும் பார்த்தால் "அ உ ம்" எப்படி "ஓம்" என்று ஆனது.....என்பது புரிய (எல்லாவற்றிற்கும் போல) கிரிதாரியின் அருள் தேவையாக உள்ளது. :-)

  //புறம் போல் உள்ளும் கரியான்!//
  இது போல வகை வகையா திட்டறதுக்கு வழி வகுத்து தந்த சுடர்கொடி வாழ்க ! :-)

  ReplyDelete
 46. ஊரறிந்த ரகசியத்தை தங்கள் மூலமாகவும் அறியக் காத்திருக்கிறேன் ரவி அண்ணா..

  ReplyDelete
 47. //"ரகசியத்தை", கோபுரத்தின் மேல் இருந்து, ஊருக்கே "கூவிய" அந்த உள்ளம்!//

  திருமந்திர ரகசியத்தை, ஊருக்கே ”குருவாக” இருந்து ”உரக்க” உபதேசித்த உடையவர் அல்லவா :)

  ReplyDelete
 48. //காரேய்க் கருணை இராமானுசா//

  கால இயந்திரம் உண்மையிலேயே தயாரித்தால் நம் உடையவர் காலத்துக்கு சென்று அவர் திருவடி தொழும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே என் பேராசை.

  ReplyDelete
 49. திருமலையில் ஆஸ்தானத்தில் மட்டும் சார்த்தப்படுவது இராமானுசன்!
  அதே போல் திருமலையில் இராமானுசரின் திருவடி நிலைகள் அனந்தாழ்வான்! (பிற இடங்களில் முதலியாண்டான்)//

  இத்தனை நுட்பமான விஷயங்களை
  எப்படி அறிந்து வைத்துள்ளீர்கள் ?

  தேவ்

  ReplyDelete
 50. //R.DEVARAJAN said...
  திருமலையில் ஆஸ்தானத்தில் மட்டும் சார்த்தப்படுவது இராமானுசன்!
  அதே போல் திருமலையில் இராமானுசரின் திருவடி நிலைகள் அனந்தாழ்வான்! (பிற இடங்களில் முதலியாண்டான்)//

  இத்தனை நுட்பமான விஷயங்களை
  எப்படி அறிந்து வைத்துள்ளீர்கள் ?//

  ஹா ஹா ஹா
  வித்தகரான தேவ் சாரா, அடியேன் சிறிய சிறிய ஞானத்தனை இப்படிக் கேட்பது?

  அன்பு ஈனும் ஆர்வம் உடைமை-ங்கிற குறள் தான் இதுக்குப் பதில் தேவ் சார்!
  காதல் வந்தால், ஆர்வம் வரும்! :)

  காதலன் எப்போ சொன்ன ஒவ்வொரு சொல்லைக் கூட காதலி ஞாபகம் வைத்துக் கொள்வதில்லையா?
  முருகன் சொன்ன ஒவ்வொன்றும் என் நினைவில் தானாப் பதிஞ்சிரும்!

  அம்மா அப்பா செஞ்சு தந்த/தராத சின்ன விஷயங்கள் கூட ஞாபகம் வச்சிக்கறோம்-ல்ல? :)
  எம்பெருமான் செஞ்ச/செய்யாத ஒவ்வொன்னும் அடியேன் நினைவில் தானாப் பதிஞ்சிரும்! :))

  ReplyDelete
 51. //இலா said...
  கேஆரெஸ்! இவ்வள்வு நாள் படிச்சு ஒரு நாளும் உங்க பதிவில பின்னுட்டம் மட்டும் இல்லை பூஸ்ட் ஆர்லிஸ்க்ஸ் எதுவுமே கொடுக்காதது ரொம்ப குறுகுறுப்பா இருக்கு..//

  ஹா ஹா ஹா
  அதான் இப்ப சேத்து வச்சி போர்ன்வீட்டா கொடுத்துட்டீங்களே இலக்குமி! :)

  //ரொம்ப நல்லா எழுதறீங்க... நான் படிக்கும் சில பிளாக்குகளில் உங்களுடையதும் ஒன்று. தொடர்ந்து உங்களது ஆன்மீக பணி தெடரட்டும்//

  நன்றி, உங்க நற்சொல்லுக்கு!
  அடியார்க்கு என்னை ஆட்படுத்த
  அமலன் ஆதிப் பிரான்! :)

  ReplyDelete
 52. ’கசக்ரஹ விசக்ஷண:’ என்று ஸ்வாமி தேசிகன் ஓரிடத்தில் உடையவரைப் போற்றுவார்.
  நாஸ்திக - குத்ருஷ்டி மதங்கள் என்னும் ஜலப்ரவாஹத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரம புருஷனின்
  கேசத்தைப் பற்றி இழுத்துக் கரை சேர்த்தாராம் உடையவர்.

  திருமலையில் பகையணங்கு ஆழியையும்,பால் வெண்சங்கத்தையும் அளித்துச் செங்கண் நெடியோனை நிலை நிறுத்தி ‘வட மாலவன் குன்றம்’ என்பதை விளக்கமுள்ளதாக்கினார் இளையாழ்வார்; மெய்வருந்தப் புஷ்ப கைங்கர்யம் செய்து ‘புஷ்ப மண்டபம்’ என்னும் சொல்லைப் பொருள் படைத்ததாக்கினார் அநந்தாழ்வார்.

  எம்பெருமானின் திறத்தில் அதற்கான அங்கீகாரமே அவர்கள் பெயரிலான திருவடி நிலைகள் என்று தோன்றுகிறது.

  தேவ்

  ReplyDelete
 53. //ஷைலஜா said...
  ஹலோ! உவமைகள் வேறு பெயர்கள் வேறு.//

  :)

  //டைரக்டா நாராயணான்னு சொன்னா.....படால்னு இந்தப்பேர் ஏன் வரணும்?//

  நாராயணா! நாராயணா! :)

  //கேசவன் மாதவன் இங்க ஏன் வரல?//

  இந்தப் பேரெல்லாம் கடைசீப் பாசுரத்தில் தான் வரும்! :)
  வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை...

  //ரகசியததை உடைச்சா! யாரோட தங்கை ஹ?:)//

  ஹிஹி!
  உடையவர்-ன்னு உடைப்பவர், ரகஸ்யம் உடைப்பவர்-ன்னு ஆயிரிச்ச்சோ? :)
  அவரோட தங்கச்சியான கோதையும், முன்னேரு போன வழித் தானே பின்னேரும் போகும்! :)

  ReplyDelete
 54. //துளசி கோபால் said...
  வழக்கம்போல் அருமை !
  சொல்லிச்சொல்லியே வாய் வலிக்குதப்பா:-)))//

  ஹிஹி! பரவால்ல டீச்சர்! அப்பப்ப சொல்லுங்க! அப்ப தான் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்! :)

  //ரகஸியமுன்னு யார்கிட்டேயாவது ரகஸியமாச் சொல்லிப் பாருங்க ஒரு ரகஸியத்தை. எண்ணி ரெண்டாம்நாளே அது ஒரு பத்துப்பேருக்கு 'ரகசியமா வச்சுக்கோ'ன்ற முன்குறிப்போடு//

  என்னை நம்புங்க டீச்சர்! நான் ரகசியமா வச்சிப்பேன்! பெருமாளுக்கு கூடச் சொல்ல மாட்டேன்!
  ஆனாத் தோழிக்கும் முருகனுக்கும் மட்டும் லைட்டாச் சொல்லுவேன்! :)

  //அதுக்குத்தான் எல்லாருக்கும் ஒரு விஷயம் போய்ச் சேரணுமுன்னா ரகசியம்னு ரகசியமாச் சொன்னால் போதும்:-)//

  ஓ...இப்படி வேற ஒரு டெக்னீக் இருக்கா? :)

  //ஆனானப்பட்ட ராமானுஜரே...ரகஸியத்தைக் காப்பாத்தலை பாருங்க:-)))))))))))))))))))))//

  ரகசியம் தவறிய ராமானுஜரே
  இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

  ReplyDelete
 55. //DHIVAKAR said...
  ரொம்பவே குறும்புதான்..
  பணி தொடர்க!!//

  வாங்க திவாகர் சார்! மிளகு ரசம் இருக்கோ இல்லீயோ, நமக்கு லொள்ளு ரசம் வேணும்! பெங்களூரில் கொள்ளு ரசம் கொடுப்பாங்க! சூப்பரா இருக்கும்! :)

  ReplyDelete
 56. Radha said...
  //ரெண்டு மாத்திரையா? யூ மீன்
  அனாசின், ஃப்ரூபென்? :) //
  இது ரொம்ப ரொம்ப பழைய ஜோக். :-)//

  ஓல்ட் இஸ் கோல்ட்! :)
  நீங்க தானே உங்களைப் போட்டுத் தாக்கினோம்-ன்னு சொன்னீக, அதான் ஒடம்பு வலிக்கு, கொடுத்தேன் ராதா :)

  //"அ உ ம்" எப்படி "ஓம்" என்று ஆனது.....என்பது புரிய (எல்லாவற்றிற்கும் போல) கிரிதாரியின் அருள் தேவையாக உள்ளது. :-)//

  எலே கரி-கிரி-அரி...ராதாக்கு ஹெல்ப் பண்ணு! :)

  //
  //புறம் போல் உள்ளும் கரியான்!//
  இது போல வகை வகையா திட்டறதுக்கு வழி வகுத்து தந்த சுடர்கொடி வாழ்க ! :-)//

  தோழீ...என் கூடவே இரு! பாரு அவரைத் திட்ட எல்லாரும் உன்னையவே யூஸ் பண்ணிக்கறாங்க! :)

  ReplyDelete
 57. //Raghav said...
  ஊரறிந்த ரகசியத்தை தங்கள் மூலமாகவும் அறியக் காத்திருக்கிறேன் ரவி அண்ணா..//

  அதான் ஊரே அறிஞ்சி போச்சே! அதை நான் வேற சொல்லணுமா என்ன ராகவ்? :)

  ReplyDelete
 58. //Raghav said...
  //"ரகசியத்தை", கோபுரத்தின் மேல் இருந்து, ஊருக்கே "கூவிய" அந்த உள்ளம்!//

  திருமந்திர ரகசியத்தை, ஊருக்கே ”குருவாக” இருந்து ”உரக்க” உபதேசித்த உடையவர் அல்லவா :)//

  இல்லை! இல்லை!
  "கூவினார்" என்பதே சரியான சொல்! :)
  அதுக்கு "சூப்பர், சூப்பர்" ன்னு போய்ப் பாராட்டிய அண்ணலே அண்ணல்! :))

  ReplyDelete
 59. //Raghav said...
  கால இயந்திரம் உண்மையிலேயே தயாரித்தால் நம் உடையவர் காலத்துக்கு சென்று அவர் திருவடி தொழும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதே என் பேராசை//

  ஹிஹி!
  அதான் அரங்கத்தில் இன்னும்
  ஜீவனுள்ள ஜீயராக...
  தான் ஆன திருமேனியாக
  இருக்காரே! கால் விரல் நகங்கள் கூட இருக்கே! போய்த் தொழுங்க! :)

  அஸ்மத் குருர் பகவதோஸ்ய "தயைக" சிந்தோ
  ராமானுஜஸ்ய சரணளெ சரணம் ப்ரபத்யே!

  சரணம் யதிராஜா! சரணம் லக்ஷ்மண முனீம்!
  சரணம் ஸ்ரீ, பாஷ்யக்கார சிம்மாசனாதி பதீம்!
  சரணம் சடகோப திவ்ய பாதுகா சேவக ஸ்ரீம்
  சரணம் சரணம் ராமானுஜ சரணமஹம் ப்ரபத்யே!

  பற்பம் எனத்திகழ் பைங்கழல் உன்றன் பல்லவமே விரலும்
  பாவனம் ஆகிய பைந் துவராடை பதிந்த மருங்கு அழகும்

  முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன் அழகும்
  முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்

  கற்பகமே வழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும்
  காரி சுதன் கழல் சூடிய முடியும் கனக நற்சிகை முடியும்

  எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்து உளதால்
  இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், இல்லை
  எனக்கெதிரே!

  ReplyDelete
 60. //பற்பம் எனத்திகழ் பைங்கழல் உன்றன் பல்லவமே விரலும்
  பாவனம் ஆகிய பைந் துவராடை பதிந்த மருங்கு அழகும்

  முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன் அழகும்
  முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும்

  கற்பகமே வழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும்
  காரி சுதன் கழல் சூடிய முடியும் கனக நற்சிகை முடியும்

  எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்து உளதால்
  இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், இல்லை
  எனக்கெதிரே//  >>>>>>>>>>>>>>>>>>..அற்புதமா இருக்கே யாருது ரவி?

  ReplyDelete
 61. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //DHIVAKAR said...
  ரொம்பவே குறும்புதான்..
  பணி தொடர்க!!//

  வாங்க திவாகர் சார்! மிளகு ரசம் இருக்கோ இல்லீயோ, நமக்கு லொள்ளு ரசம் வேணும்! பெங்களூரில் கொள்ளு ரசம் கொடுப்பாங்க! சூப்பரா இருக்கும்! :)

  12:06 PM, August 07, 2009
  //


  >>>>>>>>>>>>>>>>> வாட்>? பெங்களூர்ல கொள்ளூ ரசமா? யார் கொடுத்தா எப்போ கொடுத்தா?:) அதானா பதிவு எழுதுவதில் குதிரை ஸ்பீடூ?:):)

  ReplyDelete
 62. அடடா ! நான் பாட்டுக்கு சந்தி விதி எல்லாம் பேசிட்டு இருந்து இருக்கேன்.
  தேவ் ஐயா,
  முன்பு ஒரு பொய் சொன்னதற்காக மன்னிக்கவும். :-)
  //எம்பெருமான் செஞ்ச/செய்யாத ஒவ்வொன்னும் அடியேன் நினைவில் தானாப் பதிஞ்சிரும்! :)) //

  எம்பெருமானோட PA range-க்கு அளப்பற விடறீங்களே ! :-)
  அளப்பற விடறதுல 2nd grade தான் போங்க !! :-)

  //
  ஆகா! கஷ்டம் வரும் போதாச்சும் கடவுளை நினைப்பாங்க! நீ அது கூட வேணாங்கிறியா கேஆரெஸ்?
  துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! எப்படி?
  ///
  உங்கள் ஷைலஜா அக்காவிற்காக....பதில் சொல்ல try பண்றேன். யார் நம்ம மனசை நோக அடிக்கறானோ அவன் பேரையே யாராவது திரும்பி திரும்பி கிளி மாதிரி சொல்லிட்டு இருந்தா....
  துன்பம் முதல்லே யாராலே வருதுன்னு பார்க்கணும். :-)
  ~
  Radha

  ReplyDelete
 63. //ஷைலஜா said...
  //எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்து உளதால்
  இல்லை எனக்கெதிர், இல்லை எனக்கெதிர், இல்லை
  எனக்கெதிரே//

  >>>>>>>>>>>>>>>>>>..அற்புதமா இருக்கே யாருது ரவி?//

  வைணவத்தில் இருந்து சைவத்துக்கு மாறி,
  பின்னர் மீண்டும் வைணவத்துக்கே திரும்பிய...

  சிறு வயதில், உடையவரின் உயிரைக் குருவான யாதவப் பிரகாசரிடம் இருந்து காப்பாற்றிய...

  உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்னும் கோவிந்தர் என்னும் எம்பார் எழுதிய கவிதை!

  ReplyDelete
 64. //ஷைலஜா said...
  >>>>>>>>>>>>>>>>> வாட்>? பெங்களூர்ல கொள்ளூ ரசமா? யார் கொடுத்தா எப்போ கொடுத்தா?:)
  அதானா பதிவு எழுதுவதில் குதிரை ஸ்பீடூ?:):)//

  ஹிஹி!
  என்னக்கா இது! கொள்ளு ரசம் ஒங்களுக்கு வைக்கத் தெரியுமா தெரியாதா?
  பெங்களூருவில் மெளலி அண்ணா வீட்டுல இந்த ரசத்தைச் சாப்பிடலை! வேற ஒரு இடத்தில் சாப்பிட்டேன் :)

  MTRல சாப்பிட்ட ஹூருளி சாறு (கொள்ளு ரசம்), ஹெசருகாலு சாறு (பச்சைப் பருப்பு ரசம்) எல்லாம் மறக்க முடியுமா? :)

  ReplyDelete
 65. //R.DEVARAJAN said...
  ’கசக்ரஹ விசக்ஷண:’ என்று ஸ்வாமி தேசிகன் ஓரிடத்தில் உடையவரைப் போற்றுவார்.
  நாஸ்திக - குத்ருஷ்டி மதங்கள் என்னும் ஜலப்ரவாஹத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரம புருஷனின்
  கேசத்தைப் பற்றி இழுத்துக் கரை சேர்த்தாராம் உடையவர்//

  ஹா ஹா ஹா
  கேசவனின் கேசத்தையே புடிச்சி இழுத்து காப்பாற்றிய, எங்கள் உடையவர் வாழ்க வாழ்கவே! :)

  //எம்பெருமானின் திறத்தில் அதற்கான அங்கீகாரமே அவர்கள் பெயரிலான திருவடி நிலைகள் என்று தோன்றுகிறது//

  ஆமாங்க தேவ் சார்!
  திருமலையில் அப்பனுக்குச் சங்காழி மீட்டளித்த அண்ணல் என்பதாலும்
  அனந்தாழ்வான் தொண்டில் கிடைத்த மோவாய்க்கட்டை தயாசிந்து பரிசாலும் தான் இப்படி சிறப்பு விதிமுறைகள் போல!

  ReplyDelete
 66. //Radha said...
  அடடா ! நான் பாட்டுக்கு சந்தி விதி எல்லாம் பேசிட்டு இருந்து இருக்கேன்.
  தேவ் ஐயா,
  முன்பு ஒரு பொய் சொன்னதற்காக மன்னிக்கவும். :-)//

  பொய் சொன்னாயோ கிரிதாரி? நீயா? :)

  //எம்பெருமானோட PA range-க்கு அளப்பற விடறீங்களே ! :-)
  அளப்பற விடறதுல 2nd grade தான் போங்க !! :-)//

  PA இல்லீங்கண்ணா...கொழந்தை!
  அதான் அம்மா அப்பா வாங்கிக் குடுத்தது/குடுக்காதது எல்லாம் நினைவிருக்கும்-ன்னு சொன்னேனே! :)

  PA எல்லாம் எனக்கு மட்டும் தான் வச்சிப்பேன்! நான் யாருக்கும் PA வா இருக்க மாட்டேன்! :)

  //உங்கள் ஷைலஜா அக்காவிற்காக....பதில் சொல்ல try பண்றேன். யார் நம்ம மனசை நோக அடிக்கறானோ அவன் பேரையே யாராவது திரும்பி திரும்பி கிளி மாதிரி சொல்லிட்டு இருந்தா....
  துன்பம் முதல்லே யாராலே வருதுன்னு பார்க்கணும். :-)//

  ஹிஹி!
  இப்ப என்னான்றீங்க ராதா? நான் அவன் பேரைக் கிளி மாதிரி சொல்லலாமா? வேணாமா? :)

  சரீரீரீரீ...
  * துஞ்சும் போது அழைமின்,
  * துயர் வரில் நினைமின்-ன்னு
  உல்ட்டாவா சொல்றாரே?
  துஞ்சும் போது எப்படிக் கூப்புடுறதாம்? குறட்டை விட்டா? :)
  என்னப்பா இந்த ஆழ்வாரு இப்படி இருக்காரு? :)

  ReplyDelete
 67. வாழ்க நின் தொண்டு! வளர்க நின் புகழ், மேலும்! மேன்மேலும்! :-)

  ReplyDelete
 68. //குமரன் (Kumaran) said...
  வாழ்க நின் தொண்டு! வளர்க நின் புகழ், மேலும்! மேன்மேலும்! :-)//

  என்ன குமரன்...நீங்களுமா? :)

  வாழ்க அடியார்கள்!
  வாழ்க அரங்கநகர்!
  வளர்க சடகோபன் தண் தமிழ் நூல்!
  மேலும்! மேன்மேலும்!

  ReplyDelete
 69. // வேதங்களை மட்டுமல்லாது, திருமந்திரங்களையும் "ரகஸ்யம்" என்றும் சிலர் போற்றிப் பாதுகாத்தனர்!
  அதில் "ஓம்" என்ற பிரணவம் மகா "ரகஸ்யம்" என்றும் சொல்லி வைத்தனர்! //

  ஓம் எனும் ஓங்காரம் ஒலி வடிவம். இந்த ஒலி, உலகு ( அண்டம் எனக் கொள்க ) தோன்றுவதற்கே காரணபூதமாயும், மூலாதாராமாகவும் அமைந்தது. ஒலிகளுக்கு எழுத்து வடிவம் தோன்றுவதற்கும் முற்பட்ட காலத்தை எண்ணிப்பார்க்கின், .எழுத்து வடிவம் தோன்றியபின்னே இந்த ஓங்காரத்திற்கு பிரணவம் எனப் பெயர் இடப்பட்டிருப்பது சாத்தியம். ப்ர எனும் சொல்லுக்கு மிகவும் விசேஷமான அல்லது எப்பொழுதும் என்பது பொருள். நவம் என்றால் புதியது. புதியதாயும் துல்லியமாயும் எப்பொழுதும் நிலைத்து நிற்பதாயும் உள்ள இந்த த்வனியான ஓங்காரமே ப்ரணவம் எனச் சொல்லப்பட்டது. ப்ர + நவம் , 'ர' ' ந' உடன் சேர்கையில் 'ண" ஆகி, ப்ரணவம் என்றாகிறது. எது ஸத்யமோ, அதை மற்றொரு சொல்லால் சொல்லக்கூடுமோ ? அதனை வார்த்தைகளின் வடிவிலே அடக்க இயலுமோ ! இருப்பினும் அதனைப்புரிய வேண்டி இருப்பதால், பிரணவம் எனச் சொல்லப்பட்டது. ஸ ஏகஹ. தஸ்ய வாசகஹ ப்ரணவஹ எனும் ப்ரஹ்ம ஸூத்ர வாக்யத்தைக் கவனிக்க.

  ஆகவே, ஓங்காரத்தை முதற்கண் ஒலியாக உணர்வதே சரியெனத் தோன்றுகிறது. ஓம் என்பதை விளக்கும் ப்ரணவ மந்திரம் , அ, உ, ம் ஆகவோ அல்லது ஆ ( இரண்டு மாத்திரைகள்) , உ, ம் ஆனவை கலந்தோ சொல்லப்பட்டன.

  கந்தர் அனுபூதியைப் பார்ப்போம்.

  ஆடும் பரி வேல் அணி சேவலெனப்
  பாடும் பணியே பணியா அருள்வாய்....

  முதல் வாக்கியத்தில் முருகனின் மூல மந்திரத்தை, குறிகளால் சொல்கிறார் அருணகிரி நாதர். இது சூக்குமமாகச்
  சொல்லப்படுகிறது.

  ஆடும் என்ற சொல் கூர்ந்து பார்க்கின், அது ஆ + உ + ம் = ஓம்

  அப்படி சொன்னது ரஹஸ்யம். நுட்பம். சூக்குமம்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 70. ரஹஸ்யத்தை நுட்பம் என்று மொழி மாற்றம் செய்வது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை. ஸூக்ஷ்மம் எனும் சொல்லே நுட்பம் எனும் பொருளைத் தருகிறது.
  ‘ரஹஸ்’ எனும் வேர் கொண்டமைந்த ரஹஸ்யம் தனிமை, ஏகாந்தம் , மறைபொருள் என்பவற்றைச் சுற்றி அமைகிறது.

  அ,உ,ம என்பவற்றை த்வநி, வ்யாஹ்ருதி என வகைப்படுத்துவதே
  முறையானது. ‘ஓம்’ நெடுங்கணக்கோடு சேராதது.
  மாத்திரைக் கணக்குப் பொருத்தமாகத்
  தெரியவில்லை.

  கருத்தில் தவறிருப்பின் மன்னிக்க.


  தேவ்

  ReplyDelete
 71. சூரி சார்,
  தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
  அழகாக புரியும்படி சொன்னதற்கு மீண்டும் நன்றி.

  தேவ் ஐயா,
  //‘ஓம்’ நெடுங்கணக்கோடு சேராதது.
  மாத்திரைக் கணக்குப் பொருத்தமாகத்
  தெரியவில்லை. //
  மாத்திரை கணக்கை இங்கே கொண்டு வந்த தவறு என்னுடையது.
  மன்னிக்கவும். :-)
  ~
  ராதா

  ReplyDelete
 72. //R.DEVARAJAN said...
  கருத்தில் தவறிருப்பின் மன்னிக்க//

  முருகா! என்ன பேச்சு பேசறீங்க தேவ் சார்? மன்னிப்பா? ஒங்களையா? கருத்து-ன்னு இருந்தா எல்லாம் தான் இருக்கும்! இதுக்கெல்லாம் மன்னிப்பு-ன்னா, நான் ஃபுல்ஸ்டாப் கணக்கா மன்னிப்பு கேட்டுக்கிட்டே இருக்கணும்! :)

  ஆயிரம் கருத்து இருந்தாலும், ஒரே கருத்து தான் = எம்பெருமான் நம் கருத்தில் இருப்பது!
  இதைப் புரிஞ்சிக்கிட்டதால அடியேன் வாதங்கள் வைத்தாலும் கோபங்கள் வைப்பதில்லை! :)

  //ரஹஸ்யத்தை நுட்பம் என்று மொழி மாற்றம் செய்வது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை. ஸூக்ஷ்மம் எனும் சொல்லே நுட்பம் எனும் பொருளைத் தருகிறது.
  ‘ரஹஸ்’ எனும் வேர் கொண்டமைந்த ரஹஸ்யம் தனிமை, ஏகாந்தம் , மறைபொருள் என்பவற்றைச் சுற்றி அமைகிறது//

  மொழி இலக்கணப்படி ரஹஸ் என்பது ஏகாந்தம்/தனிமை தான்!
  நுட்பம்/சூட்சுமம் என்பதில் கூட ஏகாந்தம் இருக்கே! பல பொருட்களிலும் எண்ணம் சிதறாது, ஏகாந்தமாக "ஒரே" பொருளில் நோக்கி நோக்கி ஆய்வது தானே நுட்பம்? அதனால் அப்படிப் பொருள் கொண்டேன்!

  ரகஸ்ய க்ரந்தம்-ன்னு சொல்லுறோம்! ரகசியமாக இருக்கும் பட்சத்தில் அதை எழுதி வேறு வைப்பார்களா? நுட்பம் (Specialization) என்பதால் அதைத் தகுந்த ஆசார்யன் மூலம் சரியான முறையில் பெறணும் என்பதால் தான் ரஹஸ்யம்-ன்னு சொல்லிப் போந்தார்கள் என்பது உள்ளுறை!

  //அ,உ,ம என்பவற்றை த்வநி, வ்யாஹ்ருதி என வகைப்படுத்துவதே
  முறையானது. ‘ஓம்’ நெடுங்கணக்கோடு சேராதது.
  மாத்திரைக் கணக்குப் பொருத்தமாகத்
  தெரியவில்லை//

  உண்மை தான்! ராதாவுக்கு வந்தது ஒலி அளவிலான ஐயம் மட்டுமே!
  பெரியவாச்சான் பிள்ளை, அவருடைய வியாக்யானத்தில்...

  மூன்று தாழியிலே தயிரை நிறைத்துக் கடைந்து ஒரே வெண்ணையாய்த் திரட்டினாற் போலே, மூன்று வேதத்திலும் மூன்று அட்சரங்களைச் சாரமாக எடுத்து, திரட்டிக் கலந்தது என்று சாதிப்பார்!

  பூ = ரிக் வேதாத ஜாயத
  புவ = இதி யஜூர் வேதயாத்
  சுவ = இதி சாம வேதாத்
  த்ரயோ வர்ணா அஜாயந்த
  அகார உகார மகார இதி என்பது வியாக்ருதி! இதில் மாத்திரைக் கணக்குகள் வாரா!

  ReplyDelete
 73. //sury said...
  ஒலிகளுக்கு எழுத்து வடிவம் தோன்றுவதற்கும் முற்பட்ட காலத்தை எண்ணிப்பார்க்கின், .எழுத்து வடிவம் தோன்றியபின்னே இந்த ஓங்காரத்திற்கு பிரணவம் எனப் பெயர் இடப்பட்டிருப்பது சாத்தியம்.//

  அற்புதமான விளக்கம் சூரி சார்! மிக்க நன்றி!

  //ப்ர எனும் சொல்லுக்கு மிகவும் விசேஷமான அல்லது எப்பொழுதும் என்பது பொருள்.//

  சாதம் = வீட்டில் செய்வது!
  ப்ர+சாதம் = கோயில்ல கொடுப்பது!
  :)

  //ஆகவே, ஓங்காரத்தை முதற்கண் ஒலியாக உணர்வதே சரியெனத் தோன்றுகிறது. ஓம் என்பதை விளக்கும் ப்ரணவ மந்திரம் , அ, உ, ம் ஆகவோ அல்லது ஆ ( இரண்டு மாத்திரைகள்) , உ, ம் ஆனவை கலந்தோ சொல்லப்பட்டன//

  "ஆ"+உ+ம-வா?
  அ குறில் தான்! ஆ-நெடில் இல்லையே!
  இதற்கு ஏதேனும் பிரமாணங்கள் உண்டா? அகர முதல எழுத்தெல்லாம் என்று "அ" கரமே பிரணவத்தில் இருப்பது! "ஆ"காரம் இல்லை!

  //ஆடும் என்ற சொல் கூர்ந்து பார்க்கின், அது ஆ + உ + ம் = ஓம்//

  இப்படியும் வியாக்யானம் செய்யலாம்! :)
  ஆனால் அது "ஆ"காரம்! அகாரம் இல்லை! :)

  அருணகிரி ரஹஸ்யம் என்று நினைத்திருந்தால் ஓம்-ன்னு சொல்லாது, "அ-டு-ம்" பரிவேல் அணி சேவல்-ன்னு சொல்லி இருக்கலாமே? :)

  ஆடும் பரி = மயில் இடம் நிற்க
  வேல் = நடுவில் நிற்க
  அணி சேவல் = வலம் நிற்க

  முருகனைப் பாடாது, முருகனின் கல்யாண குணங்களையும், அவன் அடியார்களையும், மயில்-வேல்-சேவலைப் (இச்சா-ஞான-க்ரியா சக்திகளை) பாடுவதையே பணியாய் அருள்வாய் என்று வேண்டுகிறார்!

  ReplyDelete
 74. *மாத்திரை *

  ” மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி” என்பதற்கு ’முழுமையான ப்ரணவ த்யானத்தோடு மூன்று மாத்திரைக் கால அளவு பூரகம் செய்து...’ என்று பொருள் கொள்கிறேன்.
  விரிவுரையைப் பார்க்கவில்லை.

  *ரஹஸ்யம்*

  மறை பொருள் ஸம்ப்ரதாயத்தில் நிறையவே உண்டு.ஆசார்ய புருஷர்கள் பலரை வெளியே இருத்தித் தகுதி வாய்ந்தவருக்கு உபதேசித்த நிகழ்வும் குரு பரம்பரையில் காணப்படுகிறது.

  சைதன்ய மஹாப்ரபு ராகாநுக பக்தியின் அந்தரங்கப் பகுதிகளைத் தனிமையில் உரையாடுவார். ஏனெனில் தகுதி வாய்க்கப் பெறாதவர் சில ப்ரதிதந்த்ரங்களை முரணாகப் புரிந்து கொள்ள நேரிடும். வைணவ அறிஞர்க்கிடையில் விவாதம் நேரும்போது ‘அருமையான அர்த்த விசேஷங்களை அம்பலத்தில் அவல் பொதிபோல் ஆக்க வேண்டாம்’ என்று எச்சரித்துக் கொள்வர்.

  ஸ்ரீ ராமாநுஜ தர்சநத்திற்கு அந்த:புர ஸித்தாந்தம் என்னும் பெயரும் உள்ளது.கண்ணபிரான் அவர்களுக்குத் தெரியாததல்ல.

  தேவ்

  ReplyDelete
 75. This comment has been removed by the author.

  ReplyDelete
 76. //R.DEVARAJAN said...
  ”மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி” என்பதற்கு ’முழுமையான ப்ரணவ த்யானத்தோடு மூன்று மாத்திரைக் கால அளவு பூரகம் செய்து...’ என்று பொருள் கொள்கிறேன்.
  விரிவுரையைப் பார்க்கவில்லை.//

  ஆமாங்க தேவ் சார்!

  ஓங்காரம் ஒரு மொழி தான்!
  மாத்திரை என்பது அதை ஒலிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவைச் சொல்ல வந்தது மட்டுமே! அதான் பெரியாழ்வாரும்... மூலமாகிய "ஒற்றை" எழுத்தை மூன்று மாத்திரை "உள்-எழ" வாங்கி என்கிறார்! உள் வாங்குதல் மூன்று மாத்திரை! வெளி விடல் இதில் இல்லை!

  ஓம் எனும் ஓங்காரத் துள்ளே "ஒரு மொழி"
  ஓம் எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
  ஓம் எனும் ஓங்காரத் துள்ளே பல பேதம்
  ஓம் எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
  என்று ஒரு மொழியைத் திருமூலரும் பெரியாழ்வார் போலவே தான் பேசுகிறார்!

  ReplyDelete
 77. @தேவ் சார்
  //மறை பொருள் ஸம்ப்ரதாயத்தில் நிறையவே உண்டு.ஆசார்ய புருஷர்கள் பலரை வெளியே இருத்தித் தகுதி வாய்ந்தவருக்கு உபதேசித்த நிகழ்வும் குரு பரம்பரையில் காணப்படுகிறது//

  முதலியாண்டானுக்கு உபதேசம் செய்யாமல், "நான்" செத்த பிறகு வாரும் என்று சொன்னதே இதனால் தானே! அப்புறம் தானே முதலியாண்டான், நான் வந்திருக்கேன்-ன்னு சொல்லாமல், அடியேன் வந்திருக்கேன்-ன்னு சொல்ல, கதவு திறந்தது? :)

  //சைதன்ய மஹாப்ரபு ராகாநுக பக்தியின் அந்தரங்கப் பகுதிகளைத் தனிமையில் உரையாடுவார்//
  //ஸ்ரீ ராமாநுஜ தர்சநத்திற்கு அந்த:புர ஸித்தாந்தம் என்னும் பெயரும் உள்ளது.கண்ணபிரான் அவர்களுக்குத் தெரியாததல்ல//

  :)
  அது ஏன்னா, காதலி காதலனிடம் பெற்ற சுகத்தை வெளியிற் சொல்ல மாட்டாள்! :)
  காதலன் பெருமையை வெளியில் சொல்லலாம், தவறில்லை! ஆனால் காதலன் தந்த சுகம் ஏகாந்தத்துக்கே உரியது! :)

  //அருமையான அர்த்த விசேஷங்களை அம்பலத்தில் அவல் பொதிபோல் ஆக்க வேண்டாம்//

  :)
  உண்மை தான் தேவ் சார்!
  அதான் அடியேன், குரு முகமாக நுட்பங்களை/ரகஸ்யங்களை, அதற்குரிய நுட்பத்துடன் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி இருந்தேனே!

  * ஒரு ரகஸ்யம் = அறிந்து உரைக்க வல்ல நுட்பம்! நுட்பம் அறிந்தவர்களிடம் தகுதி காட்டிப் பயின்று கொள்ள வேண்டும்! = கிணறு வெட்டுதல் போல! கண்ட இடத்தில் வெட்ட முடியாது!

  ஒரு ரகஸ்யம் = ஊருக்கே உரைக்க வல்ல நுட்பம்! மழை போல! கண்ட இடத்திலும் பெய்ய வல்ல மழை! ஆசை உடையோர்க்கு எல்லாம், வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏல்-ஓர் எம்பாவாய்!

  திருவெட்டெழுத்து = மழை ரகஸ்யம்! கிணற்று ரகஸ்யம் அல்ல என்பதே உடையவர் துணிபு!
  அதான் போலும், ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி வரம்பறுத்தார் பின்!

  ReplyDelete
 78. ஓம் நமோ நாராயணா என்பது வடமொழி மந்திரம். இதற்கு எப்படித் தமிழ் இலக்கண விளக்கம்?

  ஆழ்வார்கள் ஒரு சிலரைத் தவிர, மற்றாருக்கு வடமொழியும் தெரியாது. வேதங்களும் தெரியா. இப்படியிருக்க அவர்கள் வேதத்தை சொன்னார்கள் என்பதும், கல்விகற்ற மாந்தர் உலகத்துக்கு அப்பால் வாழ்ந்த பாணர் என்னும் ஆழ்வார், இந்த வேதபொருளை சொன்னார், அமலனாதிப்ப்ரான் என்னும் பத்துப்பாக்களுக்கு வேதமந்திரப்பொருளாம்.

  எல்லாமே கற்பனை.

  ஆழ்வார்கள் தமிழர்கள். அவர்கள் பார்ப்பனர் அல்லாத பாமரமக்களுக்கு தமிழில் எழுதிப்போந்தனர். பாமரமக்களுள் வடமொழியறியா பார்ப்பனரும் சேர்க்கப்படுவர்.

  அதன் பின்னர் ஒருகூட்டம் அதை எடுத்துக்கொண்டு, இல்லாத கற்பனையெல்லாம் அதன்மீது சுமத்தி, ஆழ்வார்களை ‘மறைபொருளாக்கி’ சுகம் காண்கின்றனர்.

  எப்படி வட்மொழியை அழித்தார்களோ அப்படி ஆழ்வார்களை அழிப்பது இவர்கள் செயல்.

  ஒருகாலத்தில் பாமரர்களிடையே பரவலாகப்பேசப்பட்டும், பாடப்பட்டும் இருந்த இவர்கள், இன்று, ஒரு சிலரால் ஓதப்படுகின்றனராம்.

  ‘ஓதப்படுதல்’ என்றாலே, ‘ஓட்டப்படுதல்’

  சாதாரணமான ஓட்டலாயிருந்தால் எல்லாரும் கூச்சமில்லாமல் அவர்களுக்கு இய்ன்றதை வாங்கிச் சாப்பிட்டு விட்டுபோவர். அந்த ஓட்டலையே ***** ஆக்கிவிட்டால், வருபவர் மேட்டுக்குடிகள்தான்.

  ஆழ்வார்கள் இன்று ***** ஓட்டல்கள்தான். ப்ரிதாபம். அவர்கள் நினத்தது என்ன? நடப்பது என்ன?

  இன்னும் என்னன்னு பண்ணப்போகிறார்களே, அந்த நாராயணனுக்குத்தான் தெரியும்.

  இவண்
  நம்பியாண்டான்

  ReplyDelete
 79. //Anonymous said...
  ஓம் நமோ நாராயணா என்பது வடமொழி மந்திரம். இதற்கு எப்படித் தமிழ் இலக்கண விளக்கம்?//

  வாருங்கள் நம்பியாண்டான் அனானியே! :)

  யாரு சொன்னா தமிழ் இலக்கண விளக்கம்-ன்னு? இன்னொரு கா படிச்சிப் பாருங்க! நாரணன் என்பது தமிழ்ச் சொல்லா வடசொல்லா-ன்னு பார்க்கலாம்-ன்னு தான் சொல்லி இருக்கேன்! இன்னும் விளக்கத்தைத் துவங்கக் கூட இல்லை! அதுக்குள்ள ஏன் இந்த அவசரம் மிஸ்டர் "நம்பி" ஆண்டானே? :)

  * ஓம் = வடமொழி அல்ல! அது ஒலிக் குறிப்பு மட்டுமே!
  * நமோ = வடமொழி தான்!
  * நாராயணா = வடமொழியா? தென்மொழியா-ன்னு அப்பறம் பாக்கலாம். சொல்ப வெயிட் மாடி! :)

  ReplyDelete
 80. //ஆழ்வார்கள் ஒரு சிலரைத் தவிர, மற்றாருக்கு வடமொழியும் தெரியாது. வேதங்களும் தெரியா. இப்படியிருக்க அவர்கள் வேதத்தை சொன்னார்கள் என்பதும்//

  அவர்கள் யாரும் வேதத்தை மனப்பாடம் பண்ணிச் சொன்னாங்க-ன்னு சொல்லலையே! :)
  மாறன் மட்டுமே வேதத்தைத் தமிழ் செய்தார் என்று சொல்லப்பட்டது!

  ஆழ்வார்கள் இறைவனால் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள்! செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ என்று ஈயப்பட்ட ஈர உள்ளங்கள்! அதனால் அவர்கட்கு வேத விளக்கப் புஸ்தகம் நாலாம் பக்கத்தைப் படிச்சிட்டுத் தான், அந்தக் கருத்தை ஆக்கணும்-ன்னு விதி இல்லை! :)

  //கல்விகற்ற மாந்தர் உலகத்துக்கு அப்பால் வாழ்ந்த பாணர் என்னும் ஆழ்வார், இந்த வேதபொருளை சொன்னார், அமலனாதிப்ப்ரான் என்னும் பத்துப்பாக்களுக்கு வேதமந்திரப்பொருளாம்//

  ஹிஹி!
  அவர் பாசுரத்தில் ஒவ்வொரு முதல் வரியும் அ, உ, ம என்று தொடங்குகிறது-ன்னு தான் இங்கே பேசினார்கள்! பாணர் சாம வேதம் ஓதினாரு! அதைப் பாசுரத்துக்குள்ள கலந்து அடிச்சாரு-ன்னு எல்லாம் இங்கே யாரும் சொல்லலையே!

  //எல்லாமே கற்பனை//

  எக்ஜாக்ட்லி! எல்லாமே உங்க கற்பனை! :)))

  ReplyDelete
 81. //ஆழ்வார்கள் தமிழர்கள். அவர்கள் பார்ப்பனர் அல்லாத பாமரமக்களுக்கு தமிழில் எழுதிப்போந்தனர். பாமரமக்களுள் வடமொழியறியா பார்ப்பனரும் சேர்க்கப்படுவர்//

  ஹிஹி!
  இங்கு பார்ப்பனர்/அல்லாதார்-ன்னே பேச்சே இல்லையே!

  இறைவனை "உணராத" எந்த மனுசுமே பாமரம் தான்!
  அந்தப் பாமரத்துக்கு பா-மரம் நட்டு வைத்தார்கள் ஆழ்வார்கள்!
  பா-மரத்தில் பூத்த பழங்களே பா-சுரம்!

  அவை அனைவரின் பசியையும் ஆற்ற வல்ல ஆரா அமுது!

  //பாமரமக்களுள் வடமொழியறியா பார்ப்பனரும் சேர்க்கப்படுவர்//

  ஓ...அப்ப வடமொழி அறிஞ்சா பண்டிதன்! இல்லீன்னா பாமரனா? அடங்கொய்யால! இது எந்த ஊரு நியாயம்? :)

  சொல்லப் போனா...
  வடமொழி நல்லா அறிஞ்ச பார்ப்பனரே கூட வேதம் எல்லாம் படிச்சிட்டு நல்லா "அறிஞ்சாராம்"! ஆனா "உணர" முடியலையாம்!

  அறிதல் வேறு!
  உணர்தல் வேறு!

  அதுக்கப்பால, ஆழ்வார்கள் அருளிச் செயல் படிச்சாப் பொறவு தான், ஆகா, இது தான் விளக்கமா-ன்னு உணர்ந்து தெளிவே வந்துச்சாம்! அதை அப்படியே எழுதி வச்சிட்டு வேற போயிட்டாரு!

  செய்ய "தமிழ் மாலைகள்" யாம் தெளிய ஓதி,
  தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!

  //அதன் பின்னர் ஒருகூட்டம் அதை எடுத்துக்கொண்டு, இல்லாத கற்பனையெல்லாம் அதன்மீது சுமத்தி, ஆழ்வார்களை ‘மறைபொருளாக்கி’ சுகம் காண்கின்றனர்//

  ஹிஹி! யாருங்க அந்தக் கூட்டம்? நீங்க சொன்னாத் தெரிஞ்சிக்கிருவோம்! உஷாரா இருப்போம்-ல்ல? :))

  ஆழ்வார்களை "மறை"பொருள் ஆக்கவே முடியாது!
  மறைச்சி வச்சாத் தானே! அதான் ஓப்பன் புக்கா இருக்கே! எழுதாக் கிளவி, வாய்மொழியாவே சொல்லித் தரணும்-ன்னு எல்லாம் ஒன்னுமே இல்லையே!

  சொல்லப் போனா ஆழ்வார்களை படு லோக்கலா சொல்லி விளக்கும் பதிவர்கள்-ல்லாம் இருக்காங்களே! :)

  //‘ஓதப்படுதல்’ என்றாலே, ‘ஓட்டப்படுதல்’//

  யாம் "ஓதிய" கல்வியும், எம்மறிவும், தாமே பெற வேலவர் தந்ததினால் - வேலவர் ஓதப்படுதலா? ஓட்டப்படுதலா? :))

  காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
  "ஓதுவார்" தமை நன்னெறிக்கு உய்ப்பது, நாதன் நாமம் நமசிவாயவே! - ஓதப்படுதலா? ஓட்டப்படுதலா? :))

  ReplyDelete
 82. //ஆழ்வார்கள் இன்று ***** ஓட்டல்கள்தான். ப்ரிதாபம். அவர்கள் நினத்தது என்ன? நடப்பது என்ன?//

  உங்கள் பரி-தாபத்துக்கும் வாஞ்சைக்கும் மிக மிக நன்றி!

  ஆழ்வார்களுக்குத் தாங்கள் ஓட்டல்களாக இருப்பதில் எந்த ஒரு கவுரவப் பிரச்சனையும் இல்லை! ஆனால் அந்த ஓட்டல்களில் உண்பது மேட்டுக் குடிகள் அல்ல! நாட்டுக் குடிகள்!

  சட்டங்களே இல்லாமல் கருவறைக்குள் நுழைந்து திருத்தொண்டு செய்த/செய்யும் நாட்டுக் குடிகள் இன்றும் உண்டு!

  ஆழ்வார்களின் மஞ்சக்குளி விழாவுக்குத் தஞ்சைத் தரணி சென்று பார்த்தீர்களானால் தெரியும்! வரீங்களா என் கூட? திருக்கோவிலூர் ஜீயரோட போய் வருவோம்? :)

  நாட்டுக்குடி மக்கள் திருமங்கை ஆழ்வாருக்கும், பெருமாளுக்கும் பூசனைகள் செய்ய, தமிழ்ப் பாசுரம் ஓத, அதை மேட்டுக் குடி மக்கள் கீழே உட்கார்ந்து ரீப்பீட் செய்யும் காட்சியைப் பார்த்து விட்டு வாருங்கள்! வெறுமனே படிச்சிட்டு, "அறிந்து" விட்டு வராதீர்கள்! "உணர்ந்து" விட்டு வாருங்கள்!

  வாழி நம்பி-ஆண்டான்! வாழி அவர் வாஞ்சை! :)

  ReplyDelete
 83. //* "ரகசியத்தை", கோபுரத்தின் மேல் இருந்து, ஊருக்கே "கூவிய" அந்த உள்ளம்!

  * அந்த உள்ளம் "கூவியதையே",
  * இனி வரும் தொடர் பதிவுகளில் அடியேனும் "கூவப்" போகிறேன்!//

  நன்றாக கூவுங்கள், கேட்க பல பேர் காத்துக் கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP