Thursday, August 27, 2009

செந்தில்நாதன் - அர்ச்சனை - அறுவை சிகிச்சை!

அன்பு நண்பர்களே,
VAD என்னும் Ventricular Assist Device - இதயக் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை,
27.08.2009 வியாழன் அன்று காலை,
சிங்கப்பூர் நேரம் 8:00 மணிக்கு
செந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி,
10:00 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும்.
இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

மகிழ்ச்சியான செந்தில்நாதன், ஒரு சந்திப்பில் - படம்: கோவி.கண்ணன்


எங்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்கை நாதன் அண்ணன் கேட்பது கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது தான்.
இனம், மொழி, மதம் என எந்த வித்தியாசமுமின்றி 10 நாட்களுக்குள் 75 சதவீத தொகையை அடைய உதவிய நல்ல உள்ளங்கள் அத்தனைக்கும் நன்றிகளை தெரிவிக்கும் அதே வேளையில்...

* மீண்டும் உங்களிடம் ஒரு உதவியை வேண்டுகிறோம்.
* இந்த பெரிய அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து,
* செந்தில் அண்ணா நல்லமுறையில் தேறி வர உங்கள் பிரார்தனைகளைத் தாருங்கள்.

* வியாழன் அன்று செந்தில் நாதன் அவர்களுக்காக சிறப்பாக வேண்டிக் கொள்ளுங்கள்.
* முடிந்தவர்கள் உங்க மத முறைகளில் வழிபாடுகள் ஏற்பாடு செய்யுங்கள்.
* இத்தனை நல்ல உள்ளங்களும் ஒருங்கிணைந்து வேண்டும் போது அது நிச்சயம் நடக்கும்.

அண்ணண் சிங்கை நாதனுக்காக, இன்று 27.08.2009 அர்ச்சனை செய்ய வசதியாக, பலர் அவரது பெயர் மற்றும் நட்சத்திர விவரங்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
* முழுப் பெயர் : செந்தில் நாதன்
* நட்சத்திரம் : பூராடம்
* இராசி : தனுசு

இதுவரை சேர்ந்துள்ள தொகை விவரங்கள்.
இந்திய ரூபாய்

4,63,753.68

13,345 SGD

அமெரிக்க டாலர்

5204.65

7,440 SGD

சவுதி ரியால்

6301.00

2,396 SGD

கருணாநிதி SG Acc-

9,970 SGD

சிங்கைப் பதிவர்கள்/நண்பர்கள்-

26,526 SGD

அமீரகப் பதிவர்கள்/நண்பர்கள்-

2,000 SGD

அமெரிக்க நண்பர்கள்

9546.22

13512 SGD

மொத்த தொகை-

75,189 SGD


உதவிக் கொண்டுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள். தொடர்ந்து சிறப்பாக உங்கள் பிரார்த்தனைகளையும், உதவிகளையும் வேண்டுகிறோம்.

நட்புக்குழுவினர் சார்பாக
- ஜோசப் பால்ராஜ்

மேலும் விபரங்களுக்கு http://www.helpsenthil.comபந்தல் வாசகர்கள் பலர், பதிவு கண்டு, அதிலும் ஒருவர் நிறைந்த தொகை அளித்து உதவியதாக நண்பர் இளா சொன்னார்!
அடியேன் அவர்களின் பெயரையோ, தொகையையோ கேட்டுக் கொள்ளவில்லை!
ஆனால் அவ் அனைவருக்கும் - தலை அல்லால் கைம் மாறு இலனே! வாழி! வாழி!

இதோ, பிரார்த்தனைகள் துவங்கட்டும்! பந்தல் வாசகர்கள் முதலான அனைவரும் சங்கல்பித்துக் கொள்ளுங்கள்!

* ஸ்ரீமான் கோத்ரஸ்ய
* தனுர் ராசீனாம்
* பூர்வ ஆஷாட நக்ஷத்ரே
* செந்தில் நாதன் நாம்யாஹா

* சக குடும்ப க்ஷேமானாம்
* அஸ்ய யஜமானஸ்ய

* தைர்ய, ஸ்தைர்ய, வீர்ய, விஜய
* ஆயுள் ஆரோக்ய
* ஐஸ்வர்யாதி அபிவிருத்தி யர்த்தம்
* இஷ்ட காம்யார்த்த சித்தயர்த்தம்
* பாகவத ஜனானாம் ப்ரீத யர்த்தம்
* சமஸ்த லோக சாந்த யர்த்தம்
(*** செந்தில் நாதன் தேகாரோக்ய அபிவிருத்தியர்த்தம் *** )

* ஸ்ரீ ரங்க நாயிகா சமேத ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி,
* திவ்ய சரணார விந்தயோஹோ
* துளசீ தள,
* குங்குமார்ச்சன,
* அஷ்டோத்திர சத நாம பூஜாம் கரிஷ்யே!
ஹரி ஓம்!


பலருக்கும் புரியும் வண்ணம், அவ்வண்ணமே, தமிழில்..........(இந்தப் பதிவைப் படிக்கும் போது, கூடவே வாய் விட்டுச் சொல்லுங்கள்)


* ஸ்ரீயப் பதி கோத்திரம்
* தனுசு ராசி
*
பூராட நட்சத்திரத்தில் வந்துதித்த
* செந்தில் நாதன் என்னும் திருப்பெயர் கொண்ட

* இன்னாரின் நலம் வேண்டி, உடன் குடும்ப நலம் வேண்டி...................

* துணிவும் நல்லுறுதியும் வேண்டி
* உயிர்ப்பும் வெற்றியும் வேண்டி
* உடல் நலமும் நீண்ட ஆயுளும் வேண்டி
* நீங்காத செல்வம் நிறைய வேண்டி
* எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டி...............

* அடியார்கள் மனங் குளிர வேண்டி
* உலகம் அமைதியில் மகிழ வேண்டி
(*** செந்தில் நாதன் உடல்நலம் தேற வேண்டி ***)

* அரங்க நாச்சியார் என்னும் பெரிய பிராட்டியார் உடனுறை
* அரங்க நாதன் என்னும் பெரிய பெருமாள்
* திவ்ய மங்களத் திருவடிகளில் சரணம் புகுந்தே...................

* துளசி தள
* குங்குமார்ச்சனை
* நூற்றெட்டு போற்றிகள்
* அடியோங்கள் செய்கின்றோமே!
ஹரி ஓம்!

(அர்ச்சனை)

அன்று இவ் வுலகம் அளந்தாய் - அடி போற்றி!
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் - திறல் போற்றி!

பொன்றச் சகடம் உதைத்தாய் - புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் - கழல் போற்றி!

குன்று குடையாய் எடுத்தாய் - குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் - வேல் போற்றி!

என்றென்றும் உன் சேவகமே ஏந்திப் பறை கொள்வாம்
இன்று யாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்!

இன்று யாம் செந்தில் நாதனுக்காக வந்தோம்...இரங்கேலோ ரெம்பாவாய்!

ஹரி ஓம்!

7 comments:

 1. My shirdi babas wishes and all siddhas higest energy is with him. Everything is going to be fine.

  ReplyDelete
 2. செந்தில்நாதன் நலம்பெற பிரார்த்தனைகள்

  ReplyDelete
 3. senthil nalam pera ellaam valla iraivanai vendukiren.

  ReplyDelete
 4. அருமையான ப்ரார்த்தனைக்கு வழிவகுத்த கேஆரெஸ் அவர்களே, நன்றி உமக்கு.
  நாதன் அருளால், நாதனுக்கு நல்லபடியாய் அமையும் எல்லாம்.

  -விஜய்
  ஹவானா

  ReplyDelete
 5. My Prayers to Lord Dhanwantri (the deity in our village temple) to give Senthilnathan the best health & a long life.
  Shobha

  ReplyDelete
 6. Update from Joseph Paul Raj Annachi
  http://www.maraneri.com/2009/08/blog-post_27.html

  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை 3.30 மணிக்கு முடிந்து தற்போது செந்தில் நாதன் அண்ணண் அவர்கள் Post Operative Care Unit க்கு மாற்றப்பட்டுள்ளார்.

  அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், எல்லாம் நல்லமுறையில் நடந்துள்ளதாகவும், செந்தில் அண்ணண் நன்றாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

  உலகெங்கிருந்தும் அண்ணணுக்காக பிரார்தனைகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  உங்கள் அனைவரின் அன்பாலும், வாழ்த்துக்களாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று. தொடர்ந்து உங்கள அன்பையும், வேண்டுதல்களையும் வேண்டுகிறோம்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP