Monday, August 17, 2009

செந்தில் நாதன்!!! இன்னும் வேகமான உதவி ப்ளீஸ்!

இந்தப் பதிவு, இன்னும் சேர வேண்டிய தொகைக்கான ஒரு முனைப்புப் பதிவு!

நிர்ணயத் தொகை = SGD 100,000 (இந்திய ரூபாய் 33 இலட்சம்)

இது வரை சேர்ந்துள்ளது = பார்க்க!
Total: Rs 207,201 + SGD 3600+ USD 2,790 + SR 4,200 + Singapore Bloggers Contribution + அமீரகப்பதிவர்கள்
= (approx) இந்திய ரூபாய் 514,521.00 மட்டுமே!

இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!
இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!


சிங்கையில், சக பதிவர்/வாசகர் திரு. செந்தில் நாதன் அவர்களின் நிலை பலருக்கும் தெரிந்திருக்கும்!
அதிகம் திரட்டி பக்கம் வாராமல், ரீடரில் படிக்கும் மற்ற ஆன்மீகப் பதிவர்களுக்கும், இந்த வேண்டுதல் போய்ச் சேரவே இப்பதிவு!


சக பதிவரும், சிங்கப்பூரில் வசிக்கும் நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று பலரும் அறிந்த ஒன்று!

ஆனால் அதிகம் அறியாத இன்னொன்று:
* நான்கு மாதங்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், தொடர்பில் இல்லாமலும், எதிர்ப்புச் சக்தியை முழுதும் இழந்து போராடும் செந்தில்நாதன்!
* ஐந்து வயதுக் குழந்தையுடன், கணவருக்காக, வேற்று மண்ணில் போராடிக் கொண்டிருக்கும் சாந்தி செந்தில் நாதன்!

ஒரு பெண் வேற்றூரில் எதை வேண்டுமானாலும் தனியாகச் சமாளிக்கலாம்!
ஆனால் துணைக்கும், ஆறுதலுக்கும் நெருங்கிய உறவுகள் ஏதுமின்றி...
* தன்னந் தனியாக,
* குழந்தையை வைத்துக் கொண்டு,
* அன்றாட குடும்ப அலுவல்களுக்கும்,
* கணவரின் மருத்துவத்துக்கும், செலவுகளுக்கும்,
* அவர் மீண்டு வர வேண்டுதல்களுக்கும்,
* கணவர் இருக்கும் மருத்துவமனையே கதி என்று இருக்கவும்.....

அசாத்திய மன உறுதி வேண்டும்!
அசாத்திய மன உறுதி வேண்டும்!

KVR-இன் உதவி அறிவிப்பு இங்கே!


மகிழ்ச்சியான செந்தில்நாதன், ஒரு சந்திப்பில் - படம்: கோவி.கண்ணன்


பதிவர்கள் குடும்பமாக பல முறை பதிவர் சந்திப்புகளில் சேர்ந்துள்ளார்கள்!
ஆனால் குடும்பத்தில் ஒன்று என்றாலும் ஓடி வரும் பொறுப்புள்ள குடும்பம் = பதிவர் குடும்பம், என்பது இன்னிக்கி இன்னும் மெய்யாகி உள்ளது!

நீங்களும் ஓடி வாருங்கள்!

திருச்செந்தூரில் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
- என்பார்கள்!

இந்தச் செந்தில் நாதனுக்குத் தருவது
அந்தச் செந்தில் நாதனுக்கே தருவது
என்று நீங்களும் ஓடி வாருங்கள்!

இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!
இன்னும் ஆறு மடங்கு உதவி தேவை!


Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால்
குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள்
மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம்.
அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன்.
நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அமெரிக்கா:
இளா: (இளா, எனக்குத் தனிப்பட்ட முறையிலும், இதர ஆன்மீகப் பதிவர்களுக்கும் நன்கு அறிமுகமான நண்பர் தான்)
+1 609.977.7767
ilamurugu@gmail.com

சிங்கப்பூர்:
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775 (joseph.paulraj@gmail.com)
கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721

Europe:
S.குமார்
Mobile number : 0049-17622864334.
E-mail : friends.sk@gmail.com

இந்தியா:
நர்சிம் - +91 9841888663

அமீரகம்:
ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா:
ராஜா - +966 508296293

நேரடியான வங்கிக் கணக்குத் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்!


சிங்கையிலோ, சென்னையிலோ,
நகரத்தார் தர்ம சங்கம், தமிழர் அறக் கட்டளை, ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளை அறிந்தவர்கள், இதனை இன்னும் முன்னே கொண்ட செல்ல உதவுமாறு வேண்டுகிறேன்!
Professional Help would be more speedy & needy!
சத்ய சாயி நிறுவன உதவிகள் பற்றி யாரேனும் அறிவீர்களா?

சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks
Regards,
Santhi Senthil Nathan.


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும் முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!


பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!


செந்தில்நாதன் அன்பு அரசாங்கத்தில் = அவர் குடும்பத்தில்

கொஞ்சமே நம்பிக்கையும் புன்னகையும் பூக்க

எம்பெருமான் திருவேங்கடமுடையான் திருவடிகளில் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்!


ஹரி ஓம்!

9 comments:

  1. இடுகைக்கு நன்றி..

    ReplyDelete
  2. அன்பின் கேயாரெஸ்

    சிறு சிறு துளிகளாக வருவது எப்பொழுது பெரு வெள்ளமாக மாறுவது ?

    சுணக்கங்களும் தடைகளும் நீங்க வேண்டும்

    இறைவா - வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்து - அதுவும் வெகு விரைவினில்

    ReplyDelete
  3. நன்றி !
    இது வரை சேர்ந்துள்ள தொகை
    31,550 SGD..

    ReplyDelete
  4. இடுகைக்கு நன்றி கேயாரெஸ்.

    ஒரு சிறு விண்ணப்பம். சாந்தியின் தொடர்பு எண்களை எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும். நாம் நல்ல நோக்கத்தில் தொடர்புக் கொண்டாலும் அவர் இப்போது இருக்கும் நிலையில் இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  5. //ஒரு சிறு விண்ணப்பம். சாந்தியின் தொடர்பு எண்களை எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும். நாம் நல்ல நோக்கத்தில் தொடர்புக் கொண்டாலும் அவர் இப்போது இருக்கும் நிலையில் இன்னும் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். புரிதலுக்கு நன்றி!//

    எடுத்தாச்சு-க்கா!

    ReplyDelete
  6. //ஜெகதீசன் said...
    நன்றி !
    இது வரை சேர்ந்துள்ள தொகை
    31,550 SGD..
    //

    நன்றி ஜெகா!
    இன்னும் மூனு மடங்கு தேவைப்படுதே!
    மனிதர்களைத் திரட்டியது போக
    நிறுவனங்களைத் திரட்ட வேண்டுமோ இப்போது?

    ReplyDelete
  7. நான் ராத்திரிதான் படிச்சேன். இப்போதான் ஆபீஸ் வந்தேன். என்னாலும், என் நண்பர்களாலும் முடிந்த உதவிகளை அளிக்கின்றோம்.

    செந்தில்நாதன் நல்ல சுகம் பெற ஆண்டவனை வேண்டுகின்றோம்.

    ReplyDelete
  8. ஐயா,
    வணக்கம் உங்கள் பதிவில் தவறான தொகையை தந்துள்ளீர்கள். தயவு செய்து எனது பதிவை பார்க்கவும்.

    http://www.maraneri.com/2009/08/collection-updates-20082009.html

    உலகெங்குமிருந்தும் தொடர்ந்து வரும் நல்லாதரவுடன் 50 சதவீதத்தை அடைந்துவிட்டோம். இன்னும் 50% மீதமுள்ளது. தொடர்ந்து உழைப்போம்.
    வரும் 26 ஆகஸ்ட், புதன் கிழமை VAD device fixing அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. உங்கள் அனைவரின் ப்ரார்தனைகளையும் வேண்டுகிறோம்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP