***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்! - 1
ட்யூலிப்புகள் பூத்துக் குலுங்க வேண்டிய இடத்தில், டூ லிப்புகள் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றன.
பதிவுலக மாய மோகனன், பரந்தாமன் ஜி.ராகவன் மிகவும் விலை உயர்ந்த LAMBHORGHINI காரை ஓட்டிக் கொண்டு வருகிறார்! காரின் மேல் மயில் கொடி பறக்கிறது. நடு மைதானத்தில் காரை நிறுத்துகிறார்...உர் உர் என்று உறுமுகிறார். அவர் கையில் ஒரு மவுத் ஆர்கன்! முகத்திலோ மாதவப் புன்னகை!
அதே காரில் சன் ரூஃபில் எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கிறார் பதிவுலகச் செல்லப் பிள்ளையான கேஆரெஸ்! அவர் குறுகுறு மீசை துடிதுடி எனத் துடிக்கிறது! அந்தக் அர்ஜூன கேஆரெஸ் தன் பதிவெழுதும் சாக்பீசைக் கீழே போட்டு விட்டு, கண் கலங்கி நிற்கிறார்!
சுற்றிலும் பதிவுலகப் பெரும் படை திரண்டு நிற்கிறது.
தருமபுத்திரர் கப்பி, பாஞ்சாலி பாவனா கலக்கிய காப்பியை ஃபிளாஸ்க்கில் ஊற்றிக் குடித்துக் கொண்டிருக்கிறார்.
பீம்பாய் ராயல் ராமனும், நக்கல் நகுலன் நாமக்கல் சிபியும், சாத்வீக சகாதேவன் சீவிஆரும் அவரவர் ரதங்களில் ஏறித் தயாராக இருக்கின்றனர்.
பாண்டவர்களின் யானைப் படைக்குத் துளசி டீச்சர் தலைமை தாங்குகிறார்கள்! கெளரவர்களின் யானைப்படைக்கு பொன்ஸ் அக்கா தலைமை தாங்குகிறார்கள்! சிங்கப் படையில் வ.வா.சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம் சூழ்ந்து நிக்குறாங்க!
அந்தச் சமயத்திலும் படைகளுக்கெல்லாம் விவசாயி இளா, இளநி வித்துக்கிட்டு இருக்காரு! முதல் பதினேழு இளநி வாங்குறவங்களுக்கு விருது கொடுக்கப்படும்-ன்னு குருக்ஷேத்திரத்தில் கூவி கூவி விக்குறாரு!
பிதாமகர் குமரன், ஆச்சாரியார் VSK, குலகுரு சுப்பையா வாத்தியார், விதுர நீதிபதி ஜீவா, தளபதி கோவி கர்ணன் எல்லாரும் எதிர் அணியில் திரண்டு நிக்குறாங்க! துரியோதனச் சக்கரவர்த்தி வெட்டிப்பயலின் ஆணைக்கு அனைவரும் காத்திருக்காங்க!
ஓசைப்படை செல்லா (அதாங்க, Cheer Leading) அவ்வப்போது கண்டசாலா குரலில் போர்க் கீதங்கள் பாடிப் பலரையும் கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்.
கேஆரெஸ்: "ஜிரா...பதிவுலகப் பரந்தாமா...நான் இனிமே பதிவே எழுதப் போறதில்ல! எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு! நான் எப்படி என் நண்பர்களுக்கு எதிராப் பதிவு போடுவேன்?
கண்ணன் பாட்டு பாடி என்னைத் தூங்க வைத்த பிதாமகர் குமரன் இன்னிக்கி அவங்க பக்கம் இருக்காரு!
காலத்தின் கோலம் கோவி கர்ணனும், ஆச்சாரியர் VSK-வும் அவர்கள் அணிக்குச் சென்று விட்டார்கள்!
பாடம் எடுத்த சுப்பையா வாத்தியார் இன்று சூடம் கொளுத்த வந்திருக்காரு!
என்னால் முடியாது ஜிரா, என்னால் முடியாது! என்னை விட்டு விடுங்கள்!"
ஜிரா: "கேஆரெஸ்ஸா இப்படிக் கண் கலங்குவது? ஆனானப்பட்ட தில்லைத் தீட்சிதர்களையே பதிவடித்து விரட்டிய உன் வீரம் எங்கே போனது என் ஆருயிர் நண்பா? மேலே பார்! என்ன தெரிகிறது? - மயில் கொடி! வேலுண்டு வெட்டியில்லை! மயிலுண்டு மன்னாரில்லை என்று துணிந்து நில்!
எடு சாக்பீசை! சுடு ரவாதோசை!"
கேஆரெஸ்: "ஏன் ஜிரா? துரியோதன வெட்டியின் கொட்டத்தை மட்டும் அடக்கினால் போதாதா? நாம் ஏன் அனைவரையும் வம்புக்கு இழுக்க வேண்டும்?
இதனால் பதிவுலகில் பல பிரச்சனைகள் தோன்றிப் பல பதிவுகள் சூடாகுமே! தமிழ்மணமும், தேன்கூடும், ஏன் பிளாக்கரே கூட டவுன் ஆகுமே! தக்கயாகப் பரணி பாடிய தமிழன், மொக்கையாகப் பரணி பாட நாம் துணை போகலாமா? பரந்தாமா வேண்டாம் இந்த விபரீதம்!"
ஜிரா: "ச்சீ! சுடுசொல்லே பேசாத உன் பதிவெல்லாம் எப்படிடாச் சூடாகுது? உண்டியலில் காசு போடாதே-ன்னு தானே பதிவு போட்ட! பதிவிலே சண்டை போடாதே-ன்னு எதுனாச்சும் போட்டியா இன்னா?
அப்புறம் ஏன் இந்தத் தயக்கம்? ஆகாதடா உனக்கு மயக்கம்! தமிழ்ப் பதிவனுக்கா கலக்கம்? கலங்கினால், உன்னைச் செய்திடுவேன் ஜிடாக்கில் விலக்கம்!"
அப்போது அங்கே அவசரம் அவசரமாக ஓடி வருகிறார் முக்காடு போட்ட மாரியாத்தா! மல் ஏசிய பல் ஏசி! மகா மாதா குந்தி தேவி..ஐ மீன் துர்கா தேவி!
துர்கா: "என்னருமை மகன்களே, உங்களைச் சண்டை போட வேண்டாம்-ன்னு நான் தடுக்கல! அதெல்லாம் தாராளமாகப் போடுங்க! அப்ப தான் எனக்கும் கும்மி அடிச்சிப் பொழுது போகும்! ஆனா எனக்கு ஒரே ஒரு வரம் மட்டும் கொடுங்க! எதிரணியில் இருக்கும் கோவி.கர்ணனை மட்டும் ஒன்றும் செய்யக் கூடாது. எனக்கு அவரிடம் இருந்து வரவேண்டிய IPod இன்னும் வரவில்லை! அது வரை அவரை விட்டு வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்"
ஜிரா: "அத்தை துர்கா தேவி! உன் மகன் கேஆரெஸ் ஒரு கோழை! அவனை நானே கஷ்டப்பட்டுத் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்! அவனை விட்டுடு, இவனை விட்டுடுன்னு வந்து காரியத்தைக் கெடுக்கறியே! இதே பொழைப்பாப் போச்சு உனக்கு! போய் உன் மருமகள் பாவனாவிடம் சண்டை போடு! ஐ-பாடு! களத்தை விட்டு நீ ஓடு!"
கேஆரெஸ்: "பரந்தாமா, தம்பிமார்களைக் கடைசியாக ஒரு வார்த்தை கேட்டு விடுவோமே! அதுக்கப்புறம் நீ சொன்னபடி எல்லாம் செய்கிறேன்!"
ஜிரா: "சரி...யாரங்கே அந்த வெண்ணைப் பசங்களைக் கண்ணன் அழைத்தான் என்று இங்கு அழைத்து வா!
(மனசுக்குள்: ச்சே...இந்நேரம் கோகுலத்தில் (இஷா) கோபிகரோட ஜாலியா இருந்திருப்பேன். துவாரகையில் தபுவோட தப்பாட்டம் போட்டிருப்பேன். இவன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்! தோள் மேல் கை போட்டுப் பேசும் நண்பனுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு! பெருமாளே நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்!)"
இடைப்பட்ட நேரத்தில் ஆயுத பேர டீலர் அரை பிளேடு, வீரர்களுக்குக் கள்ளச் சந்தையில் அரை பிளேடுகளை விற்றுக் கொண்டிருக்கிறார். எல்லாம் கும்மி அடித்து ஷேவ் பண்ணிப் பாக்குறாங்களே தவிர யாரும் பிளேடைக் காசு குடுத்து வாங்குவதாகவும் தெரியவில்லை!...சகோதரர்கள் எல்லாரும் வந்து கண்ணன் இருக்கும் இடம் வந்து சேர்கிறார்கள்...
ஜிரா: "வாரீர் தருமபுத்திரா கப்பி...போர் துவங்கும் நிலையில் உன் தம்பிக்கு என்ன வந்தது திடீரென்று? நீயே கேள்!"
கப்பி: "ஜிரா, நீங்களே பாண்டவர்களின் செகு-வேரா!
உலகத் தரம் வாய்ந்த படம் 10000 BC! அதற்கு விமர்சனம் எழுதும் கடமையில் தத்தளித்துக்கிட்டு இருக்கும் என்னை வீணாகச் சோதிக்க வேண்டாம்! வேண்டுமானால் நீங்கள் மாடு மேய்க்கப் போகும் போது, இலவசமாகப் பார்த்து மகிழ சாம் ஆண்டர்சன் பிட்டு ஒன்றைத் தருகிறேன்!
இப்போதைக்கு என்னை அதிகம் குழப்பாது விட்டு விடுங்கள்! நீங்கள் என்ன செய்தாலும் சரி! ஆனால் எதிரில் இருக்கும் வெட்டியும் எனக்கு ஒரு தம்பி தான்! இதோ இருக்கும் கேஆரெஸ்ஸும் ஒரு தம்பி தான்! நான் என்னவென்று சொல்வது?"
ஜிரா: "வெண்ணைய், உன்னைப் போய்க் கேட்டேன் பாரு!
மாசா மாசம் மாசத்தின் பெயரை வைத்துப் பதிவு போடும் நீசா, செல் அந்தப் பக்கம்! அப்பனே ராயல் ராமா, மதுரையின் பீமா! தாஜ் ஹோட்டல் தாமா! உன் கருத்து என்னப்பா?"
ராம்: "கால் தடங்களை அழித்துச் செல்லும் கடல் அலையென, தன் மனதில் பதிந்த தடங்களை எல்லாம் அழித்துச் செல்லதொருவல்ல பெரும் ஆழிப் பேரலையை எதிர்நோக்கி அக்கணமே இந்த குப்பையுடலில் உயிர் என்று ஒன்று இருந்தால் அது தெறித்து விட்டொழிய வேண்டுமென மனதோடு உறுதி பூண்ட...எங்கள் ஜிரா பரந்தாமா....
(மூச்சு வாங்க, கையோடு கொண்ட வந்த ஜிகிர் தண்டாவை ஒரு சிப்பு சிப்பிக் கொள்கிறான் ராமன் அலியாஸ் பீமன்)
எப்படி ஆகிலும் அந்த வெட்டி வீழ வேண்டும்! "நான் ராமை லவ்வுறேன்"- என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, அவன் கதைகளில் என் நாயகிகளை எல்லாம் கொன்ற மகாபாவி அந்த வெட்டி! அது போதாதென்று பின்னூட்டத்தில் ஆணவப் பேச்சு! முன்னூட்டத்தில் கோவணப் பேச்சு! அவனை வீழ்த்துங்கள்! அவனை வீழ்த்துங்கள்!
அடேய் தம்பி கேஆரெஸ்! தம்பீ என்ற பாசம் உன் கண்ணை மறைக்குதா? எனக்குக் கூடத் தான்...அம்மூருக்காரவுக ததா குமரன் அங்கன இருக்காகுவ! நான் எதிர்க்கலை?"
சிபி: "நக்கல் நகுலன் நாமக்கல் சிபி நான் சொல்லுறேன் கேஆரெஸ்! அந்த வெட்டியை வீழ்த்து!
அவனுக்கு அரசுரிமை கேட்டுப் பதிவு போடும் துணிச்சலை யார் கொடுத்தது? அவன் 2006-இன் சிறந்த பதிவராய் வேண்டுமானால் இருக்கலாம்! ஆனால் 2020 வரை மொக்கை கிங் பதிவர் நான் தான் என்பதை மறந்து விட்டு மாட்லாடும் தெலுங்கினத் துரோகி அவன்!
அதெயெல்லாம் கூட விட்டு விடு! வீட்டில் அவிழ்த்துப் போட்ட கூந்தலை ஹேர் ட்ரையிங் செய்யாமல் இருக்கும் பாவனாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்? யோசிச்சிப் பார்த்தியா?"
சீவீஆர்: க்ளிக்...க்ளிக்...க்ளிக்-க்ளிக்-க்ளீக்...
கேஆரெஸ்: தம்பீ சகாதேவா...அங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? நானும் பரந்தாமனும் இங்கிட்டூ என்ன அல்வா-வா கிண்டிக் கொண்டிருக்கிறோம்? கையில் அது என்ன கருப்பாக? தெய்வீக அஸ்திரமா?"
சீவீஆர்: "கண்ணா என்று நான் அழைக்கும் கேஆரெஸ் அண்ணா! ஆமா இது ஒரு அஸ்திரம் தான். பகல், இரவு என்று எல்லா நேரத்திலும் இதைப் பயன்படுத்த முடியும். அதனால் இதுக்கு அஹோ-ராத்ர அஸ்திரம்-ன்னு பேரு.
White Balance, ISO, F-Stop, RGB, Histogram என்று பல செட்டிங்குகளில் இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தலாம்! இதில் இருந்து பாயும் ஒவ்வொரு கணைக்கும் ஒரு Exif உண்டு!
இதை வைத்துப் போர்க்களத்தில் நடப்பவற்றை எல்லாம் Motion Capture செய்தோம்னு வைங்க! நாளை அதர்மமாகப் போரிட்டார்கள் பாண்டவர்கள் என்று எவனும் திரிச்சி சொல்லிற முடியாது! அதான்! Gotcha?"
ஜிரா: "அடப் பாவி...போரில் நான் ஏகப்பட்ட டகால்ட்டிகளைச் செய்ய வேண்டி இருக்குமே! அதுவும் சேர்ந்து தானே படமாகும்! இப்படி நம்ம அணியில் நாமளே ஒரு ப்ளாக் ஷீப்பை வைத்துக் கொண்டு எப்படி ஜெயிக்கப் போறோம்-ன்னே தெரியலையே!
ஏண்டா கேஆரெஸ், எங்கிருந்துடா இப்படி ஒரு பாசக்காரத் தம்பிய புடிச்ச? உனக்கு இவன் தான் பெரிய ஆப்பா வைக்கப் போறான் பாரு!"
கேஆரெஸ்: "அப்படிச் சொல்லோதே பரந்தாமா! ஐவரில் அவனே கடைக்குட்டி! குணத்தில் சாத்வீகன்! சில சமயங்களில் ஒரேயடியாகச் சாத்தும் வீகனும் கூட! சகோதரா சகாதேவா, பரந்தாமன் கவலை நியாயமானது-பா! அதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்?"
சீவீஆர்: "பரந்தாமன் அண்ணாச்சி...கவலைப்படாதீங்க! நீங்க என்ன டகால்ட்டி வேண்டுமானாலும் தாராளமாச் செஞ்சிக்கோங்க! எதுக்கு இருக்குது பிக்காசா? எதுக்கு இருக்குது போஸ்ட் ப்ரொடக்சன்? எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்க கிம்பளம் ஒன்னு கூட அம்பலத்தில் ஏறாது! நான் கியாரெண்டி! என்சாய் மாடி!"
ஜிரா: "என்னத்தையோ சொல்லுறான்! சரி...கேஆரெஸ்...சகோதர்கள் அனைவரும் சொல்லி விட்டார்கள்! இனியும் தயக்கம் தேவை இல்லை!
வீழட்டும் வெட்டிப்பயல்! சூழட்டும் குட்டி பிகர்! தாழட்டும் வாழையிலை! அதில் பாயட்டும் பிரியாணி!
எடு சாக்பீசை! சுடு ரவாதோசை! மவுத் ஆர்கன் முழங்கட்டுமா?"
கேஆரெஸ்: "பரந்தாமா, கதைப்படி எனக்குக் கீதை சொல்லிய பின்னர் தானே போர் ஆரம்பிக்கும்! இன்னும் நீங்க கீதை சொல்லவே இல்லியே?"
ஜிரா: "ஓ..அது வேற இருக்கா! இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் இந்தக் கேஆரெஸ்ஸை ஏமாத்தவே முடியாது போலிருக்கே! சரி....சொல்கிறேன்...
இதோ கேட்டுக் கொள்ளூங்கள்! - பதிவர் ராகவன் திருவாய் மலர்ந்து அருளும் "பெகாவத் கீதை"!....
(தொடரும்...)
////அவரிடம் இருந்து வரவேண்டிய IPod இன்னும் வரவில்லை! அது வரை அவரை விட்டு வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்"///
ReplyDeleteபடித்தவரையில் சூப்பரான வரி!
மீண்டும் வருவேன்
இன்னும் யாராவது பாக்கி இருக்காங்களா? கலாய்கறத்துக்கு???
ReplyDeleteஇன்னும் துர்கா தேவியை காணுமே...??
பரந்தாமன் - ஜி.ராகவன்
ReplyDeleteபிதாமகர் - குமரன்
ஆச்சாரியார் - VSK
அர்ஜூனன் - கேஆரெஸ்
தருமபுத்திரர் - கப்பி,
பாஞ்சாலி - பாவனா
பீம்பாய்- ராயல் ராமன் நகுலன் - நாமக்கல் சிபியும்,
சகாதேவன் - சீவிஆர்
பாண்டவர்களின் யானைப் படைத்
தலைவி - துளசி டீச்சர்
----------------------------------
துரியோதனன் - வெட்டிப்பயல்
ஆகா! யுத்தம் கலக்கலாக இருக்கிறதே!
க்ளைமாக்ஸ் மட்டும் புதிதாக இருக்கட்டும்.
பஞ்சபாண்டவர்கள் தோற்பதாகவும்.
துரியோதனன் & கோ வெற்றிபெறுவதாகவும் இருக்கட்டும்.
நிச்சயம் பிதாமகர் இதை வரவேற்பார்.
ம்ம்ம். படா ஜோரா கீதுபா பாரதப் போரு. எத்தை சொல்ல எத்தை வுட. பேயாம குந்திகினுகீறேன்.
ReplyDeleteபிதாமகர் மட்டுமா வாத்தியார் ஐயா. குலகுரு கிருபாச்சாரிய வாத்தியாரும் தானே. :-)
ReplyDeleteஹ்ம்ம்
ReplyDeleteஇந்தப் பாரதப் போரில எனக்கொரு சேனாதிபதி பதவி கூட கொடுக்கலை. வண்மையாகக் கண்டிக்கிறேன்.
மீண்டும் வருவேன்.:)
நண்பர். கண்ணபிரான். இரவிசங்கர் அவர்களுக்கு,(16/03/08)
ReplyDeleteசிதம்பரம் மொழிப்போர் சம்பந்தமாக பதிவெழுதி வெளியிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்கள்.
அதில் சில கருத்துக்களில் நான் உடன் பட்டாலும் பல கருத்துக்களில் நான் கடுமையாக மாறுபடுகிறேன். இந்த பதிவு குறித்த பிண்ணூட்டங்கள் ஏற்கெனவே 100ஐத் தாண்டிவிட்டதால் இன்னும் நீட்டிக்க விரும்பாமல் நீங்களே குறைத்துக்கொள்ள எண்ணுவது உங்களது பிற பதில்களிலேயே தெரிகிறது.
எனவே உங்களை என்னுடைய தளத்தில்(yekalaivan.blogspot.com) வந்து விவாதிக்க அழைக்கிறேன். மேலும் உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகள் அரசியல்/சமூகம் சார்ந்து இருக்குமானால் அதில் என்னுடைய பிண்ணூட்டம் நிச்சயமாக இடம் பெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
ஏகலைவன்.
இந்தப் பரந்தாமன் பகவத் கீதைக்குப் பதிலா பெகாவத் கீதை பாடுற மாதிரி எல்லாம் பிதாமகர் மாத்திப் பாடமாட்டார். விஷ்ணு சஹஸ்ரநாமம் தான் சொல்லுவார்ன்னு அப்போதைக்கு இப்போதே சொல்லிவைக்கிறேன். கருணன் இப்பவே களத்துக்கு வந்ததைப் பார்த்தா பிதாமகர் ஏற்கனவே அம்பு படுக்கைக்குப் போயிட்டது போல இருக்கே.
ReplyDelete///மேலே பார்! என்ன தெரிகிறது? - மயில் கொடி! வேலுண்டு வெட்டியில்லை! மயிலுண்டு மன்னாரில்லை என்று துணிந்து நில்!///
ReplyDeleteஆகா.....!
கொடியுண்டு, குரு இல்லை!
கோஷமுண்டு, லவுட் ஸ்பீக்கரில்லை!
வேஷமுண்டு, வீரமில்லை -
வெட்டியிடம்
தெலுங்கு பாஷையுண்டு
பேசினால்
தெரிந்துகொள்ள யாருமில்லை!
//அப்போது அங்கே அவசரம் அவசரமாக ஓடி வருகிறார் முக்காடு போட்ட மாரியாத்தா! மல் ஏசிய பல் ஏசி! மகா மாதா குந்தி தேவி..ஐ மீன் துர்கா தேவி//
ReplyDeleteஇதை கண்ணாபின்னாவெனே வரவேற்க்கிறேன்:))))
//செல்லப் பிள்ளையான கேஆரெஸ்! அவர் குறுகுறு மீசை துடிதுடி எனத் துடிக்கிறது!//
ReplyDeleteஏன் மீசைய சரியா ஒட்டவில்லையா? காற்றில் பட படவென ஆடுவதை துடுக்கிறதுன்னு பில்டப்பா...என்ன கொடுமை இது.
//ஆருயிர் நண்பா? மேலே பார்! என்ன தெரிகிறது? - ///
ReplyDeleteஎதிர் வீட்டு பிகர் பால்கனியில் நின்னு டாட்டா காட்டுவது தெரிகிறது:)))
///குமரன் சொல்லியது: கருணன் இப்பவே களத்துக்கு வந்ததைப் பார்த்தா பிதாமகர் ஏற்கனவே அம்பு படுக்கைக்குப் போயிட்டது போல இருக்கே.///
ReplyDeleteபிதாமகர் ஒருவாரம் வலைச்சரம் தொகுத்த கலைப்பில் இருக்கிறார்
அவர் இப்போது யுத்தகளத்திற்கு வரமாட்டார். அவர் இருந்திருந்திருந்தால் யுத்தமே ஆரம்பித்திருக்காது.
அது தெரிந்துதான் அந்தச் சதிகாரன்
மாயக்கண்ணன் இந்த நேரம் பார்த்து யுத்ததத்தைத் துவங்கச் செய்திருக்கிறான்
வெற்றி என்னவோ வெட்டிக்குத்தான்
தர்மம் எங்காவது தோற்குமா?
பிதாமகர் எழுந்து வருவதற்குள் யுத்தம் முடிந்துவிடும்.
ஒருவேளை ipod துர்கா தேவியின் கையில் சிக்கினாலும் யுத்தம் முடிந்துவிட வாய்ப்பு இருக்கிறது
அருமை :-)
ReplyDeleteஅன்புடன், நா. கணேசன்
ஹாய் கேஆரெஸ்,
ReplyDeleteஆஹா ஆஹா, ஆரம்பமே படு அசத்தல். சும்மா என்னமா ஒரு ஒருத்தருக்கும் கேக்காமலே இவ்ளோ கச்சிதம்மா பதவியும் குடுத்து, என்னமா நக்கலா போட்டிருக்கீங்க...
ம்ம்ம்.. அருமை வாத்தியார் சொன்னமாதிரி போரோட கடைசி நாள் மட்டும் பிரமாதமா இருக்கட்டும்.
சூப்பர் பதிவு. காத்துட்டு இருக்கோம்.
//வெற்றி என்னவோ வெட்டிக்குத்தான்
ReplyDeleteதர்மம் எங்காவது தோற்குமா?//
ஐயகோ! வாத்தியாரே இப்படி அதர்மத்துக்குத் தொணை போகலாமா? இதைக் கேட்பார் யாருமே இல்லையா? :-))
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteபிதாமகர் மட்டுமா வாத்தியார் ஐயா. குலகுரு கிருபாச்சாரிய வாத்தியாரும் தானே. :-)//
துரோணாச்சாரியார் (vsk) = வடமொழி வாத்தியார்
கிருபாச்சாரியார் (சுப்பையா சார்) = தென்மொழி வாத்தியார்
:-)))
//ம்ம்ம். படா ஜோரா கீதுபா பாரதப் போரு. எத்தை சொல்ல எத்தை வுட. பேயாம குந்திகினுகீறேன்//
பீஷ்மர் எப்பமே அதானே செய்வார் குமரன்! :-)
பேயாம குந்திக் கொள்வதைச் சொன்னேன்! :-))
ஆவென்று எழுந்தது ஆம்ஸ்டர்டாம் ஆர்ப்பாட்டப் போர்... அந்தப் போரிலே பிறகு என்றென்றும் பாரிலே (Bar) பின்பற்ற வேண்டிய கருத்துகளை நான் சொன்னேன். அதை உலகோர் உணர்ந்து சிறந்தோங்க பதிவாக இட்டமை சிறப்பு.
ReplyDelete// கேஆரெஸ்: "ஜிரா...பதிவுலகப் பரந்தாமா...நான் இனிமே பதிவே எழுதப் போறதில்ல! எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமா இருக்கு! நான் எப்படி என் நண்பர்களுக்கு எதிராப் பதிவு போடுவேன்?
கண்ணன் பாட்டு பாடி என்னைத் தூங்க வைத்த பிதாமகர் குமரன் இன்னிக்கி அவங்க பக்கம் இருக்காரு!
காலத்தின் கோலம் கோவி கர்ணனும், ஆச்சாரியர் VSK-வும் அவர்கள் அணிக்குச் சென்று விட்டார்கள்!
பாடம் எடுத்த சுப்பையா வாத்தியார் இன்று சூடம் கொளுத்த வந்திருக்காரு!
என்னால் முடியாது ஜிரா, என்னால் முடியாது! என்னை விட்டு விடுங்கள்!" //
இப்பிடியெல்லாம் சத்தமாச் சொல்லக் கூடாது... எல்லாரும் நல்ல வேளைன்னு நெனைப்பாங்க. அப்புறம் எப்படிக் குட்டையக் கொழப்புறது.
///ஐயகோ! வாத்தியாரே இப்படி அதர்மத்துக்குத் தொணை போகலாமா? இதைக் கேட்பார் யாருமே இல்லையா? :-))///
ReplyDeleteI pod, Unicode,Terra byte யுகம் இது!
இப்போது அதர்மம்தான் தர்மம். தர்மம்தான் அதர்மம். அதுதெரிந்துதான் ஒரு நூறு கட்சிகள். அரை நூறு கூட்டணி மாற்றங்கள்
காலத்தோடு ஒத்துப் போவதுதானே - மக்கள் தர்மம். மக்களோடு ஒத்துப்போவதுதானே - ஆசிரியரின் தர்மம்
என்ன சரிதானே?
// கப்பி: "ஜிரா, நீங்களே பாண்டவர்களின் செகு-வேரா!
ReplyDeleteஉலகத் தரம் வாய்ந்த படம் 10000 BC! அதற்கு விமர்சனம் எழுதும் கடமையில் தத்தளித்துக்கிட்டு இருக்கும் என்னை வீணாகச் சோதிக்க வேண்டாம்! வேண்டுமானால் நீங்கள் மாடு மேய்க்கப் போகும் போது, இலவசமாகப் பார்த்து மகிழ சாம் ஆண்டர்சன் பிட்டு ஒன்றைத் தருகிறேன்! //
கப்பி.... அன்னைக்கு துரியோதனன் அவைல பாஞ்சாலிக்கு மட்டும் சேலை குடுத்தேன். வெட்டி துரியோதனன் உன்னோட ஜீன்ஸ் டீஷர்ட் பிடுங்குனப்போ நான் வரலைங்குறதுக்காக சாம் ஆண்டர்சன் பிட்டு தர்ரேன்னு சொல்றியே... இதெல்லாம் ஞாயமா? பிட்டுக்கு மண் சுமந்தாரு இறைவன். உனக்கென்ன பிட்டு குடுக்காம இருக்க என்ன வேணும்னு சொல்லு. கர்ணன் இருக்காரு. அவர் கிட்ட சொல்லிக் குடுக்கச் சொல்றேன்.
pataya kilapiteenganna...
ReplyDeletesuper ponga...
சும்மா அதிருதுங்கோ...
ReplyDeleteயோவ்...போர்க்களத்தில் என்ன 'வெட்டி'ப்பேச்சு?
ReplyDeleteசீக்கிரம் சண்டையை ஆரம்பிங்கைய்யா.... யானைகளை எம்மாந்நேரம் அடக்கி வைக்கறது?
துளசிதளத்தில் போ(பே)ய் ஆட்டம் போடப் போறேங்குதுகள்.:-))))
;-)))
ReplyDelete;-)))
ReplyDelete;-)))
ReplyDelete//
ReplyDeleteஓசைப்படை செல்லா (அதாங்க, Cheer Leading) அவ்வப்போது கண்டசாலா குரலில் போர்க் கீதங்கள் பாடிப் பலரையும் கடுப்பேத்திக் கொண்டிருக்கிறார்.
//
இந்த கண்ணனுக்கு அறிவே இல்லை... பட்டுனு இவரை மட்டும் வச்சு பாரதப்போரை முடிக்கிறத விட்டுட்டு, அர்ஜுனன் (KRS) கிட்ட போய் கெஞ்சிக்கிட்டு!! M.R Radha குரலில் "I don't like it"!!
/////Thulasi Teacher Said: யோவ்...போர்க்களத்தில் என்ன 'வெட்டி'ப்பேச்சு?
ReplyDeleteசீக்கிரம் சண்டையை ஆரம்பிங்கைய்யா.... யானைகளை எம்மாந்நேரம் அடக்கி வைக்கறது?
துளசிதளத்தில் போ(பே)ய் ஆட்டம் போடப் போறேங்குதுகள்.:-)))) ////
துளசி தளத்தில் அவ்வளவு பலகாரங்களை செஞ்சுவச்சிருக்கீங்களே! அது தெரிஞ்சா, பரந்தாமனே
முதல்ல அர்ஜுனனைக்கூட்டிக்கிட்டு யுத்தகளத்தை விட்டு அங்கே போயிடுவார்.
முதல்ல அதெயெல்லாம் எடுத்து மறைச்சு வச்சிட்டு வாங்க!
அப்புறம் நானே விசில் ஊதி சண்டையை ஆரம்பிச்சு வச்சிர்றேன்!
வல்லியம்மாவிற்கு என்ன ரோல் கே.ஆர்.எஸ்?
ReplyDeleteவருத்தப்படுறாங்களே?
காந்தாரி ரோல் காலியா இருந்தா அவங்களுக்குக் கொடுத்திருங்க!
வெற்றிவாகை சூடி வெட்டி அபார்மெண்ட்டிற்கு திருபும்போது, அவரை வல்லியம்மா வரவேற்பதுபோல ஒரு ஸீன் போட்டிடலாம்
என்ன சொல்றீங்க?
நான் என்ன சொல்வேன், எல்லாம் கண்ணனின் லீலை! மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போகும் போல - பதிவுலகில், அதிகமான இடுகைகள் கொண்ட தொடர் இதுவரை எதுவோ - அந்த ரெக்கார்டை ப்ரேக் பண்ணுமா?
ReplyDeleteஅது எப்படிங்க காந்தாரி ரோல் நம்ம வல்லிக்கு வாத்தியார் ஐயா?
ReplyDeleteகண்ணைக் கட்டணுமே.
எதாவது கால்(விரல்)கட்டு ரோல் இருக்கா பாரதத்துலேன்னு பாருங்க.:-)))
அதுதான் தற்சமயம் பொருத்தமா இருக்கும்.
//இடுகைகள் கொண்ட தொடர் இதுவரை எதுவோ - அந்த ரெக்கார்டை ப்ரேக் பண்ணுமா?
ReplyDelete//
என்ன என் மா.அ.ம தொடரை விடப் பெரிசா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒரு போஸ்ட் போட்டுக் கொடுங்கப்பான்னா காந்தாரியா????/
ReplyDeleteவேணாம் சாமி,.
காலுகட்டுப் போட்டு இருப்பதென்னவோ உண்மைதான் துளசி,
அதற்கென்ன:)
ஆம்ஸ்டர்டாம் போர்தானே நான் காரிலே இருந்துகொண்டே படைகளை வழி நடுத்துகிறேன்.
ஆனா சிங்கக் கொடி வேணும்பா சொல்லிட்டேன்.:)
புல்லட் ப்ரூஃப் கார் அதுவும் லிமோசின்.ஆமாம்.
////Blogger துளசி கோபால் said...
ReplyDeleteஅது எப்படிங்க காந்தாரி ரோல் நம்ம வல்லிக்கு வாத்தியார் ஐயா?
கண்ணைக் கட்டணுமே.
எதாவது கால்(விரல்)கட்டு ரோல் இருக்கா பாரதத்துலேன்னு பாருங்க.:-)))
அதுதான் தற்சமயம் பொருத்தமா இருக்கும்./////
வேற ரோல் கொடுக்கலாம் டீச்சர்; ஆனா அதெல்லாம் பாரத யுத்தத்துக்கு முன்னாடியில்ல வருது!
யுததம் முடிஞ்சு, வெட்டி - வெற்றி வாகையோட திரும்பறச்சே கொடுக்கனும்னா - 200% அதுதான் பெஸ்ட் ரோல் டீச்சர்.
காந்தாரி பூரிப்புடன் மகனை வரவேற்கும் காட்சியை நினைத்துப் பாருங்கள் - அசத்தலாக இருக்கும்.
வேண்டுமென்றால் பஞ்சபாண்டவர்கள் மீது துரியோதனன் & கோ அடைந்த வெற்றிக்குப் பரிசாகக் கண் கட்டைப் பெர்மனண்ட்டா கழற்றியிடலாம்.
மாயக்கண்ணன் ஜீ.ராவும் காந்தாரியின் சாபத்திலிருந்து தப்பித்து விடுபவார்!
பதிவுலகமும் ஒரு நல்ல பதிவரை இழக்காமல் தப்பிக்கும்!
என்ன சரிதானே!
அருமையான பாரதப் போர்!
ReplyDeleteநல்ல கற்பனை!
(துர்கா எனக்கு அம்மாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
//ஒரு போஸ்ட் போட்டுக் கொடுங்கப்பான்னா காந்தாரியா????/
ReplyDeleteவேணாம் சாமி,.
//
நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு!
//இன்னும் துர்கா தேவியை காணுமே...??//
ReplyDeleteஅவங்க கோவி.கர்ண்ணனை கொன்னவுடன் ஓடி வருவாங்க பாருங்க!
//பஞ்சபாண்டவர்கள் தோற்பதாகவும்.
ReplyDeleteதுரியோதனன் & கோ வெற்றிபெறுவதாகவும் இருக்கட்டும்//
வாத்தியாரே!
இது என்ன குழப்பம்!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்!
இறுதியில் தர்மமே வெல்லும்!
சம்பவாமி யுகே! யுகே!
எங்க மேல ஏனிந்த கொலை வெறி?
//பஞ்சபாண்டவர்கள் தோற்பதாகவும்.
ReplyDeleteதுரியோதனன் & கோ வெற்றிபெறுவதாகவும் இருக்கட்டும்//
புரிஞ்சி போச்சு!
வாத்தியார் அவர்களின் கேரக்டர் என்னவென்று நல்லாவே புரிஞ்சி போச்சு!
அர்ஜுனா! ஏமாந்துடாதே!
//பாஞ்சாலி - பாவனா //
ReplyDeleteநல்ல வேளை!
நயன் தாராவை போடலை!
கண்ணா(கிருஷ்ணா) என்னைக் காப்பாத்திடேடா!
அது சரி!
ReplyDeleteஇகலப்பையோட நிக்கும் பலராமன் கேரக்டர் யாருக்கு?
//குமரன்,VSK,கேஆரெஸ்,கப்பி,நாமக்கல் சிபியும், சீவிஆர், துளசி டீச்சர்,வெட்டிப்பயல்//
ReplyDeleteஇதுல யாருமே பாரதத்துல இல்லே. ஜிரா கூட பத்துநாள்தான் பாரத்துல இருப்பாரு. ஒரு தளமே இல்லாத மொக்கைப் பதிவு
// G.Ragavan said... //
ReplyDeleteஆன் சைட்டுல இருக்கிறவரைக்கும்,. ஊருக்கு போனா பிஸியா இருப்பேன்னு கதை விட வேண்டியது, ஊருக்கு வந்தப்புறமும் அதையே பண்ண வேண்டியது.
சே, இதுக்கு .................
ஆகா....ஆகா..தலைவா முதல் படத்தை பார்த்தவுடனே வார்த்தையே வரல தல....நா தழுதழுக்குது ;))
ReplyDelete\\அப்போது அங்கே அவசரம் அவசரமாக ஓடி வருகிறார் முக்காடு போட்ட மாரியாத்தா! மல் ஏசிய பல் ஏசி! மகா மாதா குந்தி தேவி..ஐ மீன் துர்கா தேவி\\
ReplyDeleteஅய்யோ..அய்யோ...தல சிரிப்பு அடக்க முடியல...கலக்கல் போங்க ;;))
ஆகா..ஆகா...அருமை தல ;))
ReplyDeleteஜிராவுக்கு மிக மிக பொருத்தமான வேடம் ;)
நல்ல சிரிப்பு உறுதியான வாரம்.
தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர் கூட்டம்..
ReplyDeleteபதிவர்களின் கூட்டம்
ஜிரா நடுவினிலே..ஓ ஓ ஓ ஓ
ஜிரா நடுவினிலே..ஆ ஆ ஆ
சிபி சிபி, மகனே காப்பாற்றிவிட்டாயே
ReplyDeleteகாந்தாரி வேடத்திலிருந்து
என்னென்று சொல்லுவேன்:)
ஆமாம் நீங்க பாண்டவரா கௌரவரா:)
சுப்பையா சார் வேற பாத்திரம் கொடுங்க. அக்ஷய பாத்திரமாயிருந்தாலும் சரி:)
//நாமக்கல் சிபி said...
ReplyDelete//இன்னும் துர்கா தேவியை காணுமே...??//
அவங்க கோவி.கர்ண்ணனை கொன்னவுடன் ஓடி வருவாங்க பாருங்க!
//
அடப்பாவி, உனக்கு ஏன் இந்த கொலவெறி ?
//காலத்தின் கோலம் கோவி கர்ணனும், ஆச்சாரியர் VSK-வும் அவர்கள் அணிக்குச் சென்று விட்டார்கள்!//
ReplyDeleteஆச்சாரியாருக்கு எப்போதும் என்னிடம் ஆப்புவாங்குவதில் தான் இன்பமே,
வருவார் 'திசைமாறிவிட்டதாக' வாலை சாரி வாளை சுழட்டுவார்.
திரவுபதி பாத்திரம் யாருக்கும் இல்லையா ? ஐ மீன் அட்சய பாத்திரத்தைச் சொன்னேன்.
ReplyDelete//நாமக்கல் சிபி said...
ReplyDeleteஅருமையான பாரதப் போர்!நல்ல கற்பனை!//
நன்றிங்க நக்கல் நகுலா! :-))
(துர்கா எனக்கு அம்மாவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)//
அண்ணாச்சி...
இந்த நேரம் பார்த்து துக்கா இங்க இல்ல! துக்கா இங்க இல்ல! :-((((
//நாமக்கல் சிபி said...
ReplyDelete//பாஞ்சாலி - பாவனா //
நல்ல வேளை!
நயன் தாராவை போடலை!
கண்ணா(கிருஷ்ணா) என்னைக் காப்பாத்திடேடா!
//
நயந்தாராவைப் போட்டால் துச்சாதனன் ஏமாந்துடுவான், சாரி அந்தம்மா சாரி கட்டமாட்டாங்க.
//வடுவூர் குமார் said...
ReplyDeleteஇன்னும் யாராவது பாக்கி இருக்காங்களா? கலாய்கறத்துக்கு???//
என்னங்க குமாரண்ணா, இப்பிடிச் சொல்லிட்டீக! எத்தினி பேரு இருக்கோம் இன்னும்?
அடுத்த பாகத்துக்கு வெயிட்டீஸ்! ஆல் பெருந்தலைஸ் கொய்ட்டீஸ்! :-))
//இன்னும் துர்கா தேவியை காணுமே...??//
தங்கச்சீஈஈஈஈஈஈஈஈஈ
எங்க இருந்தாலும் மேடைக்கு ஓடியாஆஆஆஅ!
ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீயளே :)))
ReplyDeleteகே ஆர் எஸ், பட்டையை கெளப்புறீங்களே! இந்தப் போர் கட்டாயம் போரடிக்கப் போவதில்லை, இது நான்கு முறை தீர்ப்பு! குமரன்லேருன்ந்து எல்லாரும் காலையிலே எத்தனை மணியிலிருந்து இந்த ஆட்டம் ஆடுறீங்க!!!
ReplyDeleteஇதோ நான் போடுறேன், சஞ்சயனின் போஸ்டுக்கு அப்ளிகேஷன்; கையில பைனாகுலர்ஸ், லாப்டாப்பில் யூட்யூபில் அரங்கேற்ற எல்லா வீடியோ காமிரா, ஸாஃப்டுவேரு, வெட்டி வேரோடு ரெடி.
இப்படிக்கு சஞ்ஜயிகா;-)
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஆகா! யுத்தம் கலக்கலாக இருக்கிறதே!//
நன்றி ஆசானே!
//பிதாமகர் - குமரன்
ஆச்சாரியார் - VSK//
ஒங்கள மட்டும் நைசா வுட்டுட்டீங்க!
கிருபாச்சாரியார் = SP.VR. SUBBIAH
//பஞ்சபாண்டவர்கள் தோற்பதாகவும்.
துரியோதனன் & கோ வெற்றிபெறுவதாகவும் இருக்கட்டும்.
நிச்சயம் பிதாமகர் இதை வரவேற்பார்//
ஏன் சொல்ல மாட்டீங்க?
நீங்க ரெண்டு பேரும் அவங்க கட்சில-ல இருக்கீங்க!
எங்க அண்ணாத்த நக்கல் நாமக்கல் சிபி சொல்லி இருக்காரு! நான் ஏமாற மாட்டேன்! வேணும்னா எங்க கட்சிக்கு வாங்க! வட்டச் செயலாளர்...சாரி வட்ட ஆச்சாரியர் பதவி கொடுக்கறோம்! :-))
//கோபிநாத் said...
ReplyDeleteதமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர் கூட்டம்..
பதிவர்களின் கூட்டம்
ஜிரா நடுவினிலே..ஓ ஓ ஓ ஓ
ஜிரா நடுவினிலே..ஆ ஆ ஆ//
தல கோபி
எங்க ஜிரா அண்ணாச்சி மேல கோபமா என்ன?
கன்னிப் பெண்கள் கூட்டம்
ஜிரா நடுவினிலே..ஓ ஓ ஓ ஓ
- அப்பிடின்னு தானே வரணும்!
அவ்வ்வ்வ்வ் :-((
//வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஹ்ம்ம்
இந்தப் பாரதப் போரில எனக்கொரு சேனாதிபதி பதவி கூட கொடுக்கலை//
நீங்க எதுக்கு வல்லீம்மா கஷ்டப்பட்டுச் சண்டை போட்டுக்கினு? உங்களுக்கு என்சாய் பண்ணுற ரோல் தான் கொடுக்கணும்!
என்ன தரலாம்?
ஆங்....
யசோதை ரோல் தான் பெஷ்ட்டு...ஓக்கேவா? :-))
//வண்மையாகக் கண்டிக்கிறேன்//
வண்மை=வள்ளல் தன்மை
ஆயிரம் டாலர் தள்ளுங்க இப்படி :-)
வன்மை=கடுமை...
ஹிஹி...பாத்தீங்களா என்னைக் கண்டிக்கக் கூட உங்களுக்கு மனசு வராது! :-))
//////Blogger வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteசிபி சிபி, மகனே காப்பாற்றிவிட்டாயே
காந்தாரி வேடத்திலிருந்து என்னென்று சொல்லுவேன்:)
ஆமாம் நீங்க பாண்டவரா கௌரவரா:)//////
வல்லியம்மா, நீங்க சிபியோட கூட்டு சேராதீங்க!
அவர் க்ளைமாக்ஸ்ல அடிவாங்கப் போற கோஷ்டியோட இருக்காரு!
வெற்றி எப்படியும் வெட்டி' க்குத்தான். காந்தாரி வேடம்னா என்ன?
வெற்றி பெற்று அரசமைக்கும் கோஷ்டியோட இருந்தோமேன்னு ஒரு திருப்தியாவது இருக்குமே!
நல்லா யோசிச்சுப் பாருங்க!
கடைசியிலே அந்த மாயக்கண்ணனே உங்களைத் தேடிவர்ற மாதிரி ஸ்கிரீன்பிளேயை மாத்திருவோம்!
போனஸா துளசியம்மாவோட யானைப் படையை விட்டு உங்களுக்கு 1001 மாலை போடற மாதிரிக்
கடைசிக் காட்சியை அமைச்சு, ‘வணக்கம்' போட்டுப் படத்தை சூப்பரா முடிச்சிடுவோம்
என்ன சொல்றீங்க?
//ஏகலைவன் said...
ReplyDeleteசிதம்பரம் மொழிப்போர் சம்பந்தமாக பதிவெழுதி வெளியிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்கள்//
நன்றி ஏகலைவன் ஐயா! அங்க ஆட்டம் க்ளோஸ்-ன்னு இங்க பின்னூட்டமா? ஜூப்பர்! :-))
//அதில் சில கருத்துக்களில் நான் உடன் பட்டாலும் பல கருத்துக்களில் நான் கடுமையாக மாறுபடுகிறேன்//
:-)
மாறுபடுவதும் வேறுபடுவதும் சிந்தனைச் செழுமையின் அறிகுறிகள்!
//இந்த பதிவு குறித்த பிண்ணூட்டங்கள் ஏற்கெனவே 100ஐத் தாண்டிவிட்டதால் இன்னும் நீட்டிக்க விரும்பாமல் நீங்களே குறைத்துக்கொள்ள எண்ணுவது உங்களது பிற பதில்களிலேயே தெரிகிறது//
அப்பிடி எல்லாம் இல்லீங்க! கொஞ்சம் பணிச்சுமை! நட்சத்திர வாரம்! இந்தியப் பயணம்-னு வரிசை கட்டி நிக்குது! அதான்!
//எனவே உங்களை என்னுடைய தளத்தில்(yekalaivan.blogspot.com) வந்து விவாதிக்க அழைக்கிறேன்//
இதோ வந்து படிக்கிறேன்! விவாதஞ் செய்ய இப்போ நேரம் இருக்குமான்னு தெரியலை! ஆனா நம்மிடையே உள்ள நல்ல ஆன்மீகப் பதிவு நண்பர்கள் விவாதித்து இன்னும் தெளிவு பெறலாம்!
//மேலும் உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகள் அரசியல்/சமூகம் சார்ந்து இருக்குமானால் அதில் என்னுடைய பிண்ணூட்டம் நிச்சயமாக இடம் பெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்//
வாவ்! நன்றி!
நான் ரொம்ப அரசியல் சார்ந்து எழுதறதில்லைங்க! ஆன்மீகம் கூட ஆக்கப்பூர்வமான ஆன்மீகம் மட்டுமே எழுதுகிறேன்!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇந்தப் பரந்தாமன் பகவத் கீதைக்குப் பதிலா பெகாவத் கீதை பாடுற மாதிரி எல்லாம் பிதாமகர் மாத்திப் பாடமாட்டார்.//
ஏன்னா அவரு நல்லவரு! புனித பிம்பம்! :-)
//விஷ்ணு சஹஸ்ரநாமம் தான் சொல்லுவார்ன்னு அப்போதைக்கு இப்போதே சொல்லிவைக்கிறேன்//
ஓ...இது வேறயா குமரன்! சரி உங்களுக்காக அமலா சகஸ்ரநாமம் போட்டுற வேண்டியது தான்! :-)
//கருணன் இப்பவே களத்துக்கு வந்ததைப் பார்த்தா பிதாமகர் ஏற்கனவே அம்பு படுக்கைக்குப் போயிட்டது போல இருக்கே//
அம்பும் இல்ல! படுக்கையும் இல்ல!
இங்க கர்ணனும் பீஷ்மரும் பங்காளிங்க! :-))
//உங்களுக்காக அமலா சகஸ்ரநாமம் போட்டுற வேண்டியது தான்!//
ReplyDeleteபரந்தாமனுக்கும் அவன் பக்தனான பிதாமகருக்கும் சண்டை மூட்டி விடப் பார்க்கும் பார்த்தனே. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. அமலா சஹஸ்ரநாமம் எல்லாம் பதிவுலக பரந்தாமனே பாடிக் கொள்வார். நான் என் 'புனித பிம்ப' பிம்பத்திற்கு ஏற்றாற் போல் என் பங்காளியோடு சேர்ந்து ஆப்பு சஹஸ்ரநாமத்தைப் பாடுகிறேன். :-)
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteவேஷமுண்டு, வீரமில்லை -
வெட்டியிடம்
தெலுங்கு பாஷையுண்டு
பேசினால்
தெரிந்துகொள்ள யாருமில்லை!//
ஹிஹி!
வசனம் சூப்பரோ சூப்பர்!
வெட்டி...வாத்தியார் ஒன்னை வெட்டிப்புட்டாரே! இதுக்குத் தான் ஒழுங்கா தியாகராஜர் தெலுங்கு படிக்கணும்ங்கிறது! :-))
//குசும்பன் said...
ReplyDelete//மல் ஏசிய பல் ஏசி! மகா மாதா குந்தி தேவி..ஐ மீன் துர்கா தேவி//
இதை கண்ணாபின்னாவெனே வரவேற்க்கிறேன்:))))//
தெரியும்ம்ம்ம்மே! :-)
//ஏன் மீசைய சரியா ஒட்டவில்லையா? காற்றில் பட படவென ஆடுவதை துடுக்கிறதுன்னு பில்டப்பா...என்ன கொடுமை இது//
என் மீசை வச்ச போட்டோவைப் போட்டு இதுக்காகவே குசும்பன் அண்ணாச்சியைப் பயமுறுத்தப் போறேன்! :-)
துடிக்கிறது மீசை! அதை ஷேவ் பண்ணி அடக்கு அடக்கு-ன்னு அடக்கிறது ஆசை! :-)
//எதிர் வீட்டு பிகர் பால்கனியில் நின்னு டாட்டா காட்டுவது தெரிகிறது:)))//
அடப் பாவி!
எங்க ஜிரா புள்ளய கெடுக்கறத்துக்குன்னே ஒரு கூட்டம் அலையுதுப்பா!
@கணேசன் ஐயா - நன்றி!
ReplyDelete@பாச மலர் - அடுத்த பாகமும் தவறாது படிங்க! நன்றி பாசமலர்
@டிடி அக்கா - வாங்கக்கோவ்! டாங்கீஸ்! கீதை சொல்லும் போது ஒங்க ஹோம் தியேட்டர் கொஞ்சம் கொடுத்து ஒதவி பண்ணறது? :-)
//துளசி கோபால் said...
ReplyDeleteயோவ்...போர்க்களத்தில் என்ன 'வெட்டி'ப்பேச்சு?//
:-))
சரி...இனி வெட்டாத பேச்சு தான் டீச்சர்!
//சீக்கிரம் சண்டையை ஆரம்பிங்கைய்யா.... யானைகளை எம்மாந்நேரம் அடக்கி வைக்கறது?//
தீர்த்தம் ஊத்திக் குடுங்க! தானா அடங்கும்! :-)
//துளசிதளத்தில் போ(பே)ய் ஆட்டம் போடப் போறேங்குதுகள்.:-))))//
வெங்கலக் கடையில் யானை புகுப் போகுதா? ஜூப்பரோ ஜூப்பர்!
//துளசி கோபால் said...
ReplyDeleteயோவ்...போர்க்களத்தில் என்ன 'வெட்டி'ப்பேச்சு?//
:-))
சரி...இனி வெட்டாத பேச்சு தான் டீச்சர்!
//சீக்கிரம் சண்டையை ஆரம்பிங்கைய்யா.... யானைகளை எம்மாந்நேரம் அடக்கி வைக்கறது?//
தீர்த்தம் ஊத்திக் குடுங்க! தானா அடங்கும்! :-)
//துளசிதளத்தில் போ(பே)ய் ஆட்டம் போடப் போறேங்குதுகள்.:-))))//
வெங்கலக் கடையில் யானை புகுப் போகுதா? ஜூப்பரோ ஜூப்பர்!
//Sumathi. said...
ReplyDeleteஹாய் கேஆரெஸ்,
ஆஹா ஆஹா, ஆரம்பமே படு அசத்தல். சும்மா என்னமா ஒரு ஒருத்தருக்கும் கேக்காமலே இவ்ளோ கச்சிதம்மா பதவியும் குடுத்து, என்னமா நக்கலா போட்டிருக்கீங்க...//
ஹிஹி
நன்றி சுமதி...ஒங்களுக்கும் ஒரு ரோல் வேணும்னா கேட்டூ வாங்க்கிக்குங்க! :-)
//G.Ragavan said...
ReplyDeleteஆவென்று எழுந்தது ஆம்ஸ்டர்டாம் ஆர்ப்பாட்டப் போர்... அந்தப் போரிலே பிறகு என்றென்றும் பாரிலே (Bar) பின்பற்ற வேண்டிய கருத்துகளை நான் சொன்னேன்//
ஆமா ஆமா
பாரி-லே பின் பற்றது மட்டுமா சொன்னீங்க? பெண் பற்றதும் தானே ஜொன்னீங்க! :-)
//இப்பிடியெல்லாம் சத்தமாச் சொல்லக் கூடாது... எல்லாரும் நல்ல வேளைன்னு நெனைப்பாங்க. அப்புறம் எப்படிக் குட்டையக் கொழப்புறது//
இப்பவும் சொல்லுறேன் ஜிரா
நீங்க உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க! பதிவு எழுதும் சாக் பீசைத் தூக்கி வீசிடறேன்!
தலிவர் வழியில,
நான் நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன் ஜிரா! :-))
//காலத்தோடு ஒத்துப் போவது தானே - மக்கள் தர்மம். மக்களோடு ஒத்துப்போவதுதானே - ஆசிரியரின் தர்மம் என்ன சரிதானே?//
ReplyDeleteஎன்னமோ போங்க!
நான் கட்சி மாறினா, ஒங்க கிட்டத் தான் மொதல்ல வருவேன்...எனக்காக வெட்டி கிட்ட தூது போகச் சொல்லி! :-)
போனஸா துளசியம்மாவோட யானைப் படையை விட்டு உங்களுக்கு 1001 மாலை போடற மாதிரிக்
ReplyDeleteகடைசிக் காட்சியை அமைச்சு, ‘வணக்கம்' போட்டுப் படத்தை சூப்பரா முடிச்சிடுவோம்//
Just super.:)))))))
சிரிச்சு முடியவில்லை.
ஹா ஹா.
கற்பனை செய்து பாருங்கள் ஆயிரம் யானை. அதன் மேல் துளசி. அத்தனை யானை கையிலும் மாலைகள்.
அப்போ போர்க்களத்தில் எல்லாருக்குமெ மாலை போட்டுவிடலாமே.
வன்மைனு போட மனசு வரலை ரவி. அதனால வண்மைனு போட்டேன்.
அதிலயும் நல்லதாக் கண்டு பிடிச்சுட்டீங்க.இந்த வாரம் பூரா பின்னூட்டங்களிலேயே சந்தொஷமாகப் போகப் போகிறது. நன்றி நன்றி.நன்றி.
//G.Ragavan said...
ReplyDeleteகப்பி.... அன்னைக்கு துரியோதனன் அவைல பாஞ்சாலிக்கு மட்டும் சேலை குடுத்தேன்//
அடப் பாவி!
மாக்சி, மினி, ஸ்விம் வேர், பிக்கினி எல்லாம் கொடுக்கலையா? என்ன கொடுமை ராகவா?
//வெட்டி துரியோதனன் உன்னோட ஜீன்ஸ் டீஷர்ட் பிடுங்குனப்போ//
ஓ..இது வேறயா! வெட்டி கிட்ட எப்படி நூத்துக்கும் மேல ஜீன்ஸ் இருக்குன்னு இப்பத் தான் தெரியுது!
//பிட்டுக்கு மண் சுமந்தாரு இறைவன். உனக்கென்ன பிட்டு குடுக்காம இருக்க என்ன வேணும்னு சொல்லு//
தல
அது புட்டு, கப்பி போடுறது தான் பிட்டு! :-)
@ கானா அண்ணாச்சி
ReplyDeleteஊருக்கு வந்தாச்சா தல?
எதுக்கு முச்சிரிப்பு சிரிச்சீங்க? :-)
@கேஆர்ஸ் ஆனாலும் ரொம்ப மோசம். நமக்கு ஏதாவது ஒரு சான்ஸ் கொடுக்கலாம் இல்லே. சல்லியன் போஸ்டு காலியாதானே இருக்கு.
ReplyDelete//கருப்பன்/Karuppan said...
ReplyDeleteஇந்த கண்ணனுக்கு அறிவே இல்லை... பட்டுனு இவரை மட்டும் வச்சு பாரதப்போரை முடிக்கிறத விட்டுட்டு, அர்ஜுனன் (KRS) கிட்ட போய் கெஞ்சிக்கிட்டு!!//
அதானே! :-)
//M.R Radha குரலில் "I don't like it"!!//
கவுண்டமணி குரலில்...பட்டு ஐ லைக்கி இட்டு! :-)
//SP.VR. SUBBIAH said...
ReplyDeleteவல்லியம்மாவிற்கு என்ன ரோல் கே.ஆர்.எஸ்?
வருத்தப்படுறாங்களே?//
யசோதை ரோல் தான் வாத்தியார் ஐயா! அம்மா தான் ஜூப்பரா பாடுவாங்களே!
//காந்தாரி ரோல் காலியா இருந்தா அவங்களுக்குக் கொடுத்திருங்க!//
சேச்சே! நோ நோ!
//வெற்றிவாகை சூடி வெட்டி அபார்மெண்ட்டிற்கு திருபும்போது//
வெற்றி வாகையா? வெட்டி வாகையா?
//ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteநான் என்ன சொல்வேன், எல்லாம் கண்ணனின் லீலை!//
அதே அதே! வாங்க ஜீவா!
//மெகா சீரியல் ரேஞ்சுக்குப் போகும் போல - பதிவுலகில், //
ஜூனூன் மாதிரி இழுத்தறலாமா? :-)
ஹாஹா.... அட்டகாசம்..... படிச்சிட்டு ரொம்ப நேரமா சிரிச்சிட்டே இருந்தேன்.... கலக்குங்க... :)
ReplyDelete//துளசி கோபால் said...
ReplyDeleteஎதாவது கால்(விரல்)கட்டு ரோல் இருக்கா பாரதத்துலேன்னு பாருங்க.:-)))//
டீச்சர்! எங்க வல்லியம்மா காலைக் கட்டு பண்ண திட்டம் போடறீங்களா? நடக்காது! வல்லியம்மா டெலிபோன் காலைக் கூட நீங்க கட் பண்ண முடியாதாக்கும்! :-)
//நாமக்கல் சிபி said...
ReplyDeleteஎன்ன என் மா.அ.ம தொடரை விடப் பெரிசா?//
அண்ணாச்சி வாங்க!
மா அ ம தொடர் எல்லாம் எம்மாம் பெரிசு? நாங்கல்லாம் அது கிட்ட நெருங்க முடியுமா?
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
பாருங்க அவ்வே இம்புட்டு பெருசா நீளூது! :-)
//வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteகாலுகட்டுப் போட்டு இருப்பதென்னவோ உண்மைதான் துளசி//
வல்லீம்மா! டேக் ஃபுல் ரெஸ்ட்!
சிங்கக் கொடி ஒங்க கிட்டயே இருக்கு!லிமோசின் கிராண்டட்! - 15 சீட்டர்
//நாமக்கல் சிபி said...
ReplyDeleteஅவங்க கோவி.கர்ண்ணனை கொன்னவுடன் ஓடி வருவாங்க பாருங்க!//
தல! பெனாங்கு போயி வந்ததுல இருந்தே சரியில்ல! டாக்சிகாரன் கிட்டல்லாம் சண்டை புடிக்கறீங்க! இப்ப கோவி அண்ணன் மீதே கொல வெறியா?
//தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்!
இறுதியில் தர்மமே வெல்லும்!//
இது கீதையா சிபி அண்ணா?
நம்ம ஜெ சொல்றதுன்னுல நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்! :-)
//அர்ஜுனா! ஏமாந்துடாதே!//
உங்க தம்பி தங்கக் கம்பி! ஏமாற மாட்டான் வாத்தியாரை நம்பி! :-)
//நல்ல வேளை!
நயன் தாராவை போடலை!
கண்ணா(கிருஷ்ணா) என்னைக் காப்பாத்திடேடா!//
ஐய! ஆசையப் பாரு!
நயன்தாரா=சுபத்திரா :-)
//இகலப்பையோட நிக்கும் பலராமன் கேரக்டர் யாருக்கு?//
ஆகா, இத எப்படி மறந்தேன்! யாரைப் போடலாம்?
கைப்பு???
//ILA(a)இளா said...
ReplyDelete//குமரன்,VSK,கேஆரெஸ்,கப்பி,நாமக்கல் சிபியும், சீவிஆர், துளசி டீச்சர்,வெட்டிப்பயல்//
இதுல யாருமே பாரதத்துல இல்லே//
ஆனா அவிங்க மனசெல்லாம் "பாரதத்தில்" தான் இருக்கு!:-)
//ஜிரா கூட பத்துநாள்தான் பாரத்துல இருப்பாரு//
சாரி, இருவத்தியோரு நாள்!
//ஒரு தளமே இல்லாத மொக்கைப் பதிவு//
யோவ் இளநி விக்குறவரே...குருசேத்தரத்துல இளநி காண்ட்ராக்ட் மாத்திருவோம்...சாக்கரதையாப் பேசுவே! :-)
//கோபிநாத் said...
ReplyDeleteஆகா....ஆகா..தலைவா முதல் படத்தை பார்த்தவுடனே வார்த்தையே வரல தல....நா தழுதழுக்குது ;))//
ஹிஹி! தல கோபி,
இன்னும் மார்ப் பண்ணி, நான் ஜிரா அண்ணன் கால் அடியில் கெடக்கறா மாதிரி பண்ணியிருக்கணும்! ஆனா டைம் இல்ல!
//மல் ஏசிய பல் ஏசி! மகா மாதா குந்தி தேவி..ஐ மீன் துர்கா தேவி\\
அய்யோ..அய்யோ...தல சிரிப்பு அடக்க முடியல...கலக்கல் போங்க ;;))//
தங்கச்சி தண்ணியில்லா...ச்சே கணிணி இல்லாக் காட்டுக்குப் போயிருச்சா? ஆளே காணோம்! :-)
//ஆகா..ஆகா...அருமை தல ;))
ஜிராவுக்கு மிக மிக பொருத்தமான வேடம் ;)//
எனி உ.கு?
ஜிரா-கோபியர்(கோபிகர்-இஷா) காம்பினேசன் வொர்க் அவுட் ஆகுமா தல?
//நல்ல சிரிப்பு உறுதியான வாரம்//
டாங்கீஸ் கோபி!
ஆஹா,பட்டையக் கிளப்புறீங்க கண்ணா.
ReplyDeleteநம்ம ஜிரா(மாதவப்பயல்) ஜூப்பரு.நீங்களும் தான்.
ஹா ஹா ஹா அப்புறம் சி.வி.ஆர் அண்ணாச்சி...கேமராவோட...ஹா ஹா ஹா..
கற்பனை பண்ணிப் பார்த்தேன்.சிரிப்பை அடக்க முடியல.. :D
கண்ணா நீங்க வேனா பார்த்துட்டே இருங்க..இன்னிக்கு தூக்கத்துலயும் சிரிக்கப் போறேன் :D
நட்சத்திர வாழ்த்துக்கள்.
ReplyDeleteபட்டைய கெளப்பிருக்கீங்க. ரொம்ப சூப்பர்.
'அத்தை துர்கா தேவி'
அவ்வ்வ்வ்
சூப்பரோ சூப்பர்.
//வெண்ணைப்//
ReplyDeleteஎண்ணெய் என்றொரு தனி இடுகையே இட்ட வெண்ணெயரா இப்படி சொன்னது? ஐயகோ இது சொன்னவன் குற்றமா? எழுதியவன் குற்றமா? பார்த்தனும் பகவானும் ஆனாலுமே குற்றம் குற்றமே.
//வெண்ணைய்//
அதே வெண்ணெயர் இங்கே சரியாகச் சொல்ல வந்திருக்கிறார். ஆனால் சொல்லவில்லை. இங்கேயும் சொன்னவன் குற்றமா? எழுதியவன் குற்றமா? பார்த்தனும் பகவானும் ஆனாலுமே குற்றம் குற்றமே.
:-))
:))
ReplyDeleteவேற என்னாத்த சொல்ல!!
கொஞ்சம் விறுவிறுப்பு குறைகிறது. வெட்டியார் வராததனாலோ?
ReplyDeleteமற்றபடி ஜோர்.
கலக்கலுங்க!!!!
ReplyDelete:))
ReplyDeleteகலக்கல்...
நட்சத்திர வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்..
அது என்னய்யா, ஆர்ம்ஸ்ர்டடாம், நெதர்லாந்துலதான் நடதுவீங்களோ ! ஆலங்கொட்டாரம்ன்னு இருக்கட்டும்
ReplyDeleteமகாபாரத யுத்த களத்தில் பதிவர்கள்.
ReplyDeleteஆயுதங்கள் விற்பதற்கு அருமையான சான்ஸ்.. :)
வாங்க.. வாங்க வந்து ஆயுதங்களை அள்ளுங்க..
பிரம்மாஸ்திரம் பத்து பர்சண்ட் தள்ளுபடி.
மோகன அஸ்திரம் முப்பது பர்சண்ட் தள்ளுபடி.
கோவி. கர்ணன் அர்ஜூனனுக்காக வச்சிருந்த சக்தி ஆயுதம், நாகாஸ்திரம் இரண்டையும் கடத்தியாச்சு. கே.ஆர்.எஸ். அர்ஜூனா வந்து வாங்கிக்கோ. இது மட்டும் டபுள் விலை. பின்ன ரிஸ்க் இல்லை எடுத்து கடத்தியிருக்கோமில்லை. கோவி. கர்ணன் கிட்ட இருந்து ஐபாட் ஒண்ணையும் கடத்தியாச்சு. பாதிவிலைதான். யாருக்கு வேணும்.
வாங்க சார்.. வாங்க சார்..
இது பெருமாளோட நாராயண அஸ்திரம் சார்.
இரு சிவனோட பாசுபதாஸ்திரம். சும்மா பாரு சார். பளபளக்குது. பாதி விலை சார்.
வாங்க வாங்க வெட்டி துரியோதன மகராசாவே... உங்களுக்கு எல்லாமே 50 பர்செண்ட் தள்ளுபடி... எம்புட்டு பெரிய ராசா நீங்க.
வாங்க.. வாங்க ஆயுதங்களை அள்ளுங்க..
இன்னிக்கு வியாபாரம் மந்தமா இருக்கு. தொடரும்னு போட்டிருக்கு. அப்ப நாளைக்கு வந்து வியாபாரத்த கன்டின்யு செய்யறேன்.
ஏம்பா கிருஷ்ணா சட்டுபுட்டுன்னு இன்னாது அது... ”பொகையிலை கீதா” வா. சொல்லி முடி... வர்ட்டா..
கொஞ்சம்கூட போர்(bore) அடிக்காம எப்படித்தான் இப்படில்லாம் சிந்திச்சி எழுதமுடியுதோ ரவி? சூப்பர் போங்க...(ரொம்ப லேட்டோ நான்? 19ஆம்தேதிக்கு பிசி அதான்:))
ReplyDelete:))))
ReplyDeleteபதிவுலக பார்த்தனே!
ரொம்ப நல்லா இருக்கு!
ஏதோ பெரிய திட்டத்தோட இறங்கியுள்ளீர்கள்! அடுத்த பதிவுல புதுஸ்ஸா(ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா) ஒரு கீதையா? ஜமாய்ங்க!
//எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteஆஹா,பட்டையக் கிளப்புறீங்க கண்ணா.கற்பனை பண்ணிப் பார்த்தேன்.சிரிப்பை அடக்க முடியல.. :D//
நானே கொஞ்ச நேரம் சிரிச்சிக்கிட்டு தான் இருந்தேன் ரிஷான்! நம்ம ஜிராவையும், சீவீயாரையும், சிபியு, ராமும்....முக்கியமா அத்தை துர்காவும்....:-)))
//கண்ணா நீங்க வேனா பார்த்துட்டே இருங்க..இன்னிக்கு தூக்கத்துலயும் சிரிக்கப் போறேன் ://
ஹை! தூக்கத்துல சிரிக்கறத போட்டோ புடிச்சி அனுப்பு நண்பா!
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteஅச்சாரியாருக்கு எப்போதும் என்னிடம் ஆப்பு வாங்குவதில் தான் இன்பமே,
வருவார் 'திசைமாறிவிட்டதாக' வாலை சாரி வாளை சுழட்டுவார்//
துரோணாச்சாரியாரைப் பற்றி இப்படிச் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா?
எதுக்கும் அடுத்த தபா கையில் க்ளுவுஸ் போட்டுக்கிட்டு வாங்க! :-)
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteதிரவுபதி பாத்திரம் யாருக்கும் இல்லையா ? ஐ மீன் அட்சய பாத்திரத்தைச் சொன்னேன்.//
திரெளபதி=பாவனா
பதிவுலகில் நிறைய பதிவர்கள் பாவனாவின் அதீத விசிறிகள்! அதான்
//கப்பி பய said...
ReplyDeleteரவுண்டு கட்டி அடிச்சிருக்கீயளே :)))
//
Kappi Boy! Dankees! :-))
//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteகே ஆர் எஸ், பட்டையை கெளப்புறீங்களே! இந்தப் போர் கட்டாயம் போரடிக்கப் போவதில்லை, இது நான்கு முறை தீர்ப்பு! //
ஹிஹி!
பட்டை, லவங்கம் எல்லாத்தையும் அடுத்த பாகத்துலயும் கெளப்பிருவோம்!
//சஞ்சயனின் போஸ்டுக்கு அப்ளிகேஷன்; கையில பைனாகுலர்ஸ், லாப்டாப்பில் யூட்யூபில் அரங்கேற்ற எல்லா வீடியோ காமிரா, ஸாஃப்டுவேரு//
ஹிஹி
வெவரம் தான்!
போர்க்களத்துக்கே போகாம, போர் சினிமா பாக்க ஆசைப்படுறீங்க!
Sanjayika: Application Granted! :-)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅமலா சஹஸ்ரநாமம் எல்லாம் பதிவுலக பரந்தாமனே பாடிக் கொள்வார்//
Paranthaman Hates Nagarjuna! :-)
//நான் என் 'புனித பிம்ப' பிம்பத்திற்கு ஏற்றாற் போல் என் பங்காளியோடு சேர்ந்து ஆப்பு சஹஸ்ரநாமத்தைப் பாடுகிறேன். :-)//
அதுக்கு பாஷ்யம் அடியேன் எழுதுகிறேன்! :-))
//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDelete@கேஆர்ஸ் ஆனாலும் ரொம்ப மோசம். நமக்கு ஏதாவது ஒரு சான்ஸ் கொடுக்கலாம் இல்லே. சல்லியன் போஸ்டு காலியாதானே இருக்கு//
ஆகா! இது வேறயா?
இப்ப தெரியுது பாரதத்துல மட்டும் எப்படி அத்தனை கேரக்டர்ஸ்-னு! :-))
திராச, சல்லியன் ஒங்களுக்குச் சரிப்பட்டு வராது! நீங்க நல்லவரு! வேணும்னா ஆசார்ய ஹிருதயம் வியாசர் ஆயிருங்க!
அம்பிக்கு என்ன ரோலு? மாவாட்டற ரோலாச் சொல்லுங்க! :-)
//இராம்/Raam said...
ReplyDeleteஹாஹா.... அட்டகாசம்..... படிச்சிட்டு ரொம்ப நேரமா சிரிச்சிட்டே இருந்தேன்.... கலக்குங்க... :)//
ராயல் ராமா - பீமா! நீ தானேப்பா ஜிகிர்தண்டா சாண்டில்ய வசனம் பேசி கலக்குனது! :-)
//மங்களூர் சிவா said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்.
பட்டைய கெளப்பிருக்கீங்க. ரொம்ப சூப்பர்//
நன்றி சிவா!
//'அத்தை துர்கா தேவி'
அவ்வ்வ்வ் சூப்பரோ சூப்பர்.//
இதுக்கு இன்னும் பெரிய நன்றி சிவா! :-)
அத்தை இன்னும் வரலை! :-(((
குமரன் (Kumaran) said...
ReplyDelete//வெண்ணைப்//
ஐயகோ இது சொன்னவன் குற்றமா? எழுதியவன் குற்றமா?//
எழுதியவன் எழுதிய கதையில் சொன்னவன் சொன்னது குற்றம்! :-))
//பார்த்தனும் பகவானும் ஆனாலுமே குற்றம் குற்றமே//
மருத கணக்காயர் மகனாருன்னு சும்மாவா? :-)
@ கொத்ஸ்-நன்றி
ReplyDelete@ மெளலி அண்ணா-ஒங்க ரோல் என்னா?
@ மஞ்சூரார் -விறுவிறுப்புக்கும் வெட்டிக்கும் என்ன சம்பந்தம் தலைவரே? :-)
எங்க உண்மையான தலைவர் ஜிரா இன்னும் கீதை சொல்லல! அதான்! :-)
@ சென்ஷி = நன்றி தலைவரே!
ReplyDelete@ Anonymous said...
//அது என்னய்யா, ஆர்ம்ஸ்ர்டடாம், நெதர்லாந்துலதான் நடதுவீங்களோ !//
ஆமா பெண்ய பூமிங்க அது! :-)
//அரை பிளேடு said...
ReplyDeleteபிரம்மாஸ்திரம் பத்து பர்சண்ட் தள்ளுபடி//
அடப்பாவி...பிரம்மாஸ்திரத்துக்கே டிஸ்கவுண்ட்டா!
சூப்பர் தல! :-)
ஒங்க கிட்ட அடுத்த பார்ட்டுக்கு ஐடியா கேக்குறேன் இருங்க!
//மோகன அஸ்திரம் முப்பது பர்சண்ட் தள்ளுபடி//
-இதுக்கு 70% கொடுத்தா கொறைஞ்சாப் பூடுவீங்க!
//கோவி. கர்ணன் அர்ஜூனனுக்காக வச்சிருந்த சக்தி ஆயுதம், நாகாஸ்திரம் இரண்டையும் கடத்தியாச்சு. கே.ஆர்.எஸ். அர்ஜூனா வந்து வாங்கிக்கோ. இது மட்டும் டபுள் விலை.//
அதானே பார்த்தேன்! என்னடா வரலயேன்னு நினைச்சேன்! கள்ளத் தோணியில கடத்துனீங்களோ?
//இது பெருமாளோட நாராயண அஸ்திரம் சார்.
இரு சிவனோட பாசுபதாஸ்திரம். சும்மா பாரு சார். பளபளக்குது. பாதி விலை சார்//
முருகன் வேலை மட்டும் விக்க மாட்டீங்களோ? :-)))
//ஷைலஜா said...
ReplyDeleteகொஞ்சம்கூட போர்(bore) அடிக்காம எப்படித்தான் இப்படில்லாம் சிந்திச்சி எழுதமுடியுதோ ரவி?//
ஹிஹி! அதுக்கெல்லாம் தமிழ்-ல சிந்திக்கணூம்! அண்ணாத்தைய கேளுங்க! சொல்லிக் கொடுப்பாரு!
//(ரொம்ப லேட்டோ நான்? 19ஆம்தேதிக்கு பிசி அதான்:))//
ஹேப்பி பர்த்டே யக்கா for 19th :-)
//சிவமுருகன் said...
ReplyDeleteபதிவுலக பார்த்தனே!
ரொம்ப நல்லா இருக்கு!//
he he! dankees siva! unakku ethachum role venumaa? :-)
//ஏதோ பெரிய திட்டத்தோட இறங்கியுள்ளீர்கள்! அடுத்த பதிவுல புதுஸ்ஸா(ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா) ஒரு கீதையா? ஜமாய்ங்க!//
begavath geethai sonna piragu, daily parayanam pannanum. ok-vaa? :-)
ஆயுத பேரமா?
ReplyDeleteஅம்புகள் (சொல்லம்புகள்) செஞ்சுதர்றதுக்கு ஒரு குழு இருக்காம். அவுங்ககிட்டே மொத்தமா வாங்கிறலாமா?:-)
//அடப்பாவி...பிரம்மாஸ்திரத்துக்கே டிஸ்கவுண்ட்டா!
ReplyDeleteசூப்பர் தல! :-)
//
எல்லாம் நீங்க கொடுத்த வேலைதான். ஆயுத வியாபாரின்னா வியாபாரத்தை ஒழுங்கா செய்ய வேண்டாமா. :)
//
ஒங்க கிட்ட அடுத்த பார்ட்டுக்கு ஐடியா கேக்குறேன் இருங்க!
//
தங்கள் சித்தம் என் பாக்கியம்.
//முருகன் வேலை மட்டும் விக்க மாட்டீங்களோ? :-))) //
வேல் ஏந்தும் கைகள் என்றும் அவனுடையதே.
சாதாரண மானிடர் அதை ஏந்தத்தான் முடியுமா. :)
முருகனின் வேல் யாண்டும் பக்திக்கு மட்டுமே உரியது.
என்னை இந்த ஆட்டையில சேத்துக்காத தால உங்க பேச்சு கா... பேச மாட்டேன்.
ReplyDeleteகேயாரெஸ் - அருமையான கலாய்ப்புக் கலக்கலான பதிவு - தலைப்பைப் படிச்சிட்டு ஓடோடி வந்தேன் - என்னமோ ஏதோன்னு - பரவா இல்ல - மனசு நிம்மதிஆச்சு - தூள் கெளப்புறீங்கப்பா
ReplyDelete114 மறு மொழிகளும் பதில் கலாய்ப்புகளும் கிண்டல்களும் தான். சூப்பர்
வல்லிக்குப் பதவி - சுப்பையா பரிந்துரைப்பு - ம்ம்ம்ம்ம்ம்
துளசியோட யானைப் படை மதம் பிடிச்சி அலயுதுங்க -
போற்றப்பட வேண்டிய பதிவு - பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டிய பதிவு( வழக்கமான பதிவிற்குப் போடுற மறுமொழியப் போட்டுட்டேனா )
நல் வாழ்த்துகள்
ஆமா எனக்கும் ஒரு சின்ன ரோல் கொடுக்கக்கூடாதா ?
எல்லோருக்கும் பசிக்கும்,கொஞ்சம் இட்லி வடை சாப்பிட்டுக் கோங்கோ.
ReplyDeleteஊசினதுதான் வேறே இல்லே!
அடுத்த பகுதி எப்போது இரவிசங்கர்? எல்லாத்தையும் தொடரும் போட்டு எழுதிக்கிட்டு வர்றீங்க. அடுத்த பாகமெல்லாம் ஊருக்குப் போயிட்டு வந்த பின்னாடி தானா?
ReplyDeleteROFL! vera onnum sollarathuku illai..
ReplyDeletepadam thaan konjam miss ayiduchu :( enna seyya!