***ஆன்மீகப் பதிவுகளால் தமிழுக்கு நன்மையா? - ரவிசங்கர் அலசுகிறார்!
இணையத் தமிழ் முயற்சிகளில் நாம் நன்கறிந்த நண்பர், நம்ம ரவிசங்கர்!
என்னோட namesake! அன்புள்ள ரவி-ன்னு அவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது, என்னை நானே அன்பாக் கூப்பிட்டுகுற மாதிரி இருக்கும்!
நான் எங்க போனாலும் எனக்குன்னே போட்டியா அங்கேயும் யாரோ ஒரு ரவிசங்கர் வந்துடறாங்கப்பா! தமிழுலகில் ரவிசங்கர், ஆன்மீக உலகில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இசை உலகில் சிதார் ரவிசங்கர் - வேறு யாராச்சும் ரவிசங்கர் பதிவுலகில் இருக்கீங்களா சாமீ? :-)
நம்ம ரவி கையொப்பம் கூட தமிழில் தான் இடுவாரு! தமிழ் விக்கிபீடியாவுல அவர் ஆர்வமும் முயற்சிகளும் அளவில்லாதது! காலத்துக்கும் பயன்படுறா மாதிரி சில பங்களிப்புகள் அமைந்து விடும்! அதுல ஒன்னு தமிழ் விக்கிபீடியா!
தமிழுக்கும், வருங்காலத் தமிழ் இணைய முயற்சிகளுக்கும் காலத்துக்கும் பயன்படுறா மாதிரி இன்றைய ஆன்மீகம் ஏதாச்சும் செய்ய முடியுமா?
இப்படி எல்லாம் யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது தான், நம்ம ரவியை நேர்காணலாம்-ன்னு தோணிச்சி!
நாம் எழுதும் ஆன்மீகப் பதிவுகளால் யாருக்கென்ன லாபம்? எங்கோ படிச்சதை எல்லாம் எழுதிக் குவிக்கிறோம், அவ்வளவு தானா? நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லி, பின்னூட்டத்தில் நமக்குத் தெரியாததை நண்பர்கள் சொல்லி...
இப்படின்னு ஒரு நட்பு வட்டத்துக்குள் மட்டும் முடிஞ்சி போறது தானா ஆன்மீகப் பதிவுகள்?
சங்க இலக்கியத்தில் இருந்து, மெல்ல மெல்ல பக்தி இலக்கியம் வளர்ந்த காலகட்டத்தில், தமிழ் மொழிக்குத் தான் எத்தனை எத்தனை பங்களிப்புகள்! அந்தாதி, உலா, விருத்தம் என்று புதுப்புது கவிதை வகைகள்! பிள்ளைத் தமிழ் என்று ஒன்று வருவதற்கு பெரியாழ்வார் அல்லவா முன்னோடி! சந்தக் கவிக்கு அருணகிரி செய்த பங்களிப்பு எத்துணை பெரிது!
அன்றைய ஆன்மீகப் பதிவுகள் இல்லைன்னா இன்று ஆலயங்களில் தமிழ் ஏது? - இப்படிப் பல பரிமாணங்களை வளர்த்தவை தான் அன்றைய ஆன்மீகப் பதிவுகள்!
இது போன்றதொரு பரிணாம வளர்ச்சி இப்போதும் வேண்டும் தானே! எத்தனை காலம் தான் முன்னோர் நட்ட மரங்களில் இருந்து பழம் பறித்துத் தின்போம்? நாம் நல்ல முன்னோர்களாய் ஆக முடியாதா? - இன்றைய ஆன்மீகப் பதிவாளர்களும், பின்னூட்டாளர்களும் இது குறித்தும் அவ்வப்போது யோசிக்க வேண்டும் என்பதே என் அவா! பல சமயங்களில் இது பற்றி நண்பர்களுடன் விவாதித்தும் இருக்கிறேன்!
இந்த நட்சத்திர வாரத்தில், நண்பர் ரவியின் முன் வைத்த சில கேள்விகளை, உங்கள் முன்னும் வைக்கிறேன்.
ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்ன? - தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
1. ஆன்மீகம் என்பது தனி மனிதன், தானாய் மனதில் உணர்ந்து கொள்வது! அப்படி இருக்க, ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?
ரவி: ஆன்மீகம் தனி மனிதன் உணர்வது தான் என்றால் அப்புறம் ஏன் ஆன்மீகச் சொற்பொழிவுகள், நூல்கள் எல்லாம்? அப்போ இவற்றை எடுத்துரைக்க ஏதோ ஒரு தேவை இருக்கிறது தானே? அதே போல் பதிவுகளையும் இவற்றை எடுத்துரைக்கத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
பதிவுகள், பதிவுலகம் என்று ஏதோ கட்டம் கட்டி பார்க்கத் தேவை இல்லை. வாழ்க்கைத் தேவைகளுக்கு எல்லா ஊடகங்கள், கருவிகளையும் பயன்படுத்துவது போல் பதிவுகளையும் பயன்படுத்தலாம்.
2. நீங்கள் ஆன்மீகம்/இலக்கியம் கலந்த பதிவுகள் படிப்பீர்களா? இல்லை போரடிக்கும் என்று ஓடிவிடுவீர்களா? எதைப் படிப்பீங்க? எதை விடுப்பீங்க?
ரவி: ஆன்மீகப் பதிவுகள் அறவே படிப்பது இல்லை எனலாம். ஆன்மீகப் பாடல்களுக்கான சொற் பொருள் விளக்கம் தந்து தமிழின் இனிமையை உணரச் செய்வது போல் எழுதும் பதிவுகளை அவ்வப்போது எட்டிப் பார்ப்பது உண்டு. இலக்கியப் பதிவுகள் வாசிப்பதும் குறைவு தான்.
நண்பர்கள் எழுதும் சிறுகதைகள் என்றால் மட்டும் ஒன்றிரண்டு வாசிப்பதுண்டு. நன்றாக கவிதைகள் எழுதும் 4,5 பதிவர்களை நினைவு வைத்துப் படிப்பதுண்டு. அவ்வளவு தான். bore அடிக்கிறதா என்பதை விட முக்கியமான காரணம், கணினியில் நீளமாக எழுதப்படும் கதைகள், தொடர் கதைகள் படிப்பது சிரமமாக உணர்கிறேன்.
தவிர, கணினி வாசிப்புப் பழக்கத்தில் பெரும்பாலும் பக்கங்களை வேகமாக உருட்டி வாசித்து வேண்டிய தகவல்களைப் பெறப் பழகி இருக்கிறோம் என்பதால் வரிக்கு வரி வாசித்து அனுபவிக்க வேண்டிய இலக்கியப் படைப்புகளைப் படிப்பதற்குத் தோன்றுவதில்லை.
3. ஆன்மீகப் பதிவுகளால் தமிழ் மொழிக்கும், தமிழ் இணையத்துக்கும் ஏதாச்சும் நன்மை இருக்கா?
ரவி: நிச்சயமாக நிறைய நன்மைகள் உண்டு. அரசியல், திரைப்படம் முதலிய துறைகளைப் போன்றே ஆன்மீகமும் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் பெற்றிருக்கு.
இது தொடர்பான உள்ளடக்கங்களை இணையத்தில் உருவாக்குவது மூலம் கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்களை ஈர்த்து கணினியில் தமிழ் படிக்க, எழுத வைக்க இயலும்.
ஆன்மீகத்தின் மூலம் உள்ளே வருபவர்கள் அதைத் தொடர்ந்து பிற துறைகளிலும் ஈடுபாட்ட காட்டித் தொடர முடியும். வேறு துறைகளுக்கு நகராமல் ஆன்மீகத்திலேயே தங்கினாலும் சரி தான்.
தமிழ் மொழிக்கான நன்மை என்று நான் கருதுவது:
அ) சிந்திக்கும் போது நம் சிந்தனையில் உள்ள வேற்று மொழிக் கலப்பை உணர்வதில்லை. ஆனால் எழுதும் போது அவை உறுத்தி நல்ல தமிழில் எழுத முற்படுவோம். இன்னும் இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த சமயமானாலும் அதில் வேற்று மொழித் தாக்கம் பெரிதளவு இருக்கிறது.
சமயம் குறித்த வரலாறு, சிந்தனைகள், மெய்யியல் கூறுகளை எழுதும் போது அவை குறித்த தமிழ்ச் சொற்களை உருவாக்கவும் இலக்கியங்களில் ஏற்கனவே இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும் சொற்களை ஆளவும் முயல்வோம்.
ஒரு வழியில் இது பழமையான துறை ஒன்றில் தமிழ் வழிச் சிந்தனையை ஊக்கப்படுத்தும்.
ஆ) எந்தத் துறை குறித்தும் தமிழில் அறியும் நிலை வர வேண்டும். அந்த வகையில் சமயம் குறித்தும் இணையத்தில் தேவையான உள்ளடக்கத்தை உருவாக்க இது உதவும்.
4. சமூக அவலங்கள், மொழி வெறுப்பு, தாக்குதல்கள் - இவை மிகும் போதெல்லாம் இது போன்ற பதிவுகளின் பங்கு என்ன? (எடுத்துக்காட்டு; தில்லைப் பிரச்சனை)
ரவி: ஒரு பெரிய பிரச்சினை தீப்பற்றி எரியும் போது இது போன்ற பதிவுகளின் பங்கு என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிகழ் உலகில் தாக்கத்தை ஏற்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு நாளும் அந்தந்த சமயங்கள் குறித்த தவறான புரிதல்களைத் தவிர்க்க இப்பதிவுகள் உதவலாம்.
மிகவும் உணர்ச்சிப்பூர்வமான இந்த விசயங்களில் நிகழுலகில் நேரடியாகப் பார்த்து உடனுக்குடன் கேட்டு அறிவது சிரமம். அந்த இடைவெளியை இந்தப் பதிவுகள் போக்கும். நிறைய கிறித்தவ, இசுலாமியப் பதிவுகளைப் பார்த்து இருக்கிறேன். அவற்றின் மூலம் சில விசயங்களில் அவற்றைப் பற்றிய மேம்பட்ட புரிதல் பெற்று இருக்கிறேன்.
வைணவக் கோயில்களில் தமிழ்ப் பாசுரங்கள் பாடுவார்கள் என்பதே நீங்களும் குமரனும் சொல்லித் தான் எனக்குத் தெரியும். இது போல சின்னச் சின்ன விசயங்கள். எப்போதாவது எட்டிப் பார்க்கும் எனக்கே இப்படி என்றால் தொடர்ந்து ஆன்மீகப் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு இன்னும் கூடுதல் புரிதல் வரலாம்.
5. ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்னவா இருக்கும்/இருக்கணும்-னு நினைக்கறீங்க?
ரவி: ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்றெல்லாம் எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஆன்மீகப் பதிவர்கள் நிரப்ப வேண்டிய இடைவெளி ஒன்று உண்டு. பல ஆன்மீகப் பதிவுகளைப் படித்தால் துணுக்குத் தோரணங்களாகப் பல சுவாரசியமான விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறதே தவிர, அந்தந்த சமயங்கள் குறித்து தெளிவான, ஆவணப்படுத்தப்பட்ட வரலாறோ விவரங்களோ கிடைப்பதில்லை.
எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் பௌத்த சமயம் பற்றிய கட்டுரைகளைப் பார்க்கலாம். பௌத்த சமயம் குறித்த ஆர்வமுடைய 19 வயதே உடைய இளைஞர் ஒருவர் அங்கு அச்சமயம் குறித்து விரிவாக எழுதி வருகிறார்.
ஆனால், பௌத்தர்களை விட கூடுதல் எண்ணிக்கையில் இந்து, இசுலாமியர், கிறித்தவர் குறித்த இது போன்ற கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது இல்லை. விக்கிப்பீடியாவின் தாக்கம் குறித்து உங்களுக்கு நான் எடுத்துரைக்கத் தேவை இல்லை. தகவல் தேடுவோரின் முதன்மை ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த வேளையில், சமயம் குறித்த தகவல்களைத் தேடுவோர் ஒவ்வோர் ஆன்மீகப் பதிவரின் தளத்துக்கும் வருவதை விட இது போன்ற தளங்களைத் தேட கூடுதல் வாய்ப்புகள் உண்டு. எனவே, ஆன்மீகப் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மட்டும் இயங்காமல் விக்கிப்பீடியா போன்ற முயற்சிகளிலும் பங்கு கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவில் இயங்குவது சிரமமாக இருந்தால் குறைந்தது அந்தந்த சமயங்கள் குறித்த கூட்டுப் பதிவுகள் தொடங்கி தங்கள் பாணியில் ஆனால் அதே வேளை விரிவாகவும் தெளிவாகவும் வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தி எழுத வேண்டும்.
நன்றி. உங்கள் நட்சத்திர வாரத்துக்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரவி
.....
நன்றி ரவி,

ரவிகளுக்கு பாராட்டுக்கள், உரையாடல் மிக நன்றி !
ReplyDeleteகேள்வியும், அதற்கான பதிலும் அருமை !
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteரவிகளுக்கு பாராட்டுக்கள், உரையாடல் மிக நன்றி !//
ஆன்மீகச் செடிக்கு முதலில் வந்து தண்ணி ஊத்திய கோவி அண்ணாவுக்கு என் நன்றி! :-)
ரவி சொல்லுறதை எல்லாம் எப்படி நடைமுறைப் படுத்தலாம்-ன்னு நண்பர்கள் விவாதிக்க வேண்டும்-ன்னு கேட்டுக்கறேன்!
சரிங்க! ரெண்டு நாள்ல ஆரம்பிச்சுடுறேன். கொஞ்சம் பக்கங்களை எழுதிகிட்டு செய்யலாமேன்னு பாத்தேன். உங்க பரிந்துரைகளை கொடுங்க!
ReplyDeletehttp://anmikam4dumbme.blogspot.com/
திவா
உரையாடல் சரி, இன்னும் சில நுணுக்கமான கேள்விகள் வைத்து இருக்கலாம். பிரபலங்களிடம் பதில் வாங்குவதுதான் திறமை.
ReplyDelete//ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்னவா இருக்கும்/இருக்கணும்-னு நினைக்கறீங்க?//
ReplyDeleteஅடுத்த கட்டம் என்று தீர்மானித்து நகரும் அளவுக்கு திட்டமிட முடியுமா தெரியவில்லை. ஆனால் ஆன்மிகமோ நாத்திகமோ சித்தாந்தங்களை தெளிவாக எடுத்துரைத்தல் மிகவும் அரியதாகவே இருக்கின்றன.
நான் கேட்ட, படித்த பல உரைகளில் சொற்சுவை இருந்த அளவிற்க்கு பொருட்சுவை அவ்வளவாக அறியவில்லை. சமீபத்தில் கேட்ட விசாகா ஹரியின் தியாகராய சரிதம். கேட்க கேட்க இன்பம். ஆனால்...
உங்களின் பதிவுகள் அந்த இடைவெளியை இட்டு நிரப்புகின்றன. தமிழுக்கும் நன்மை. தமிழற்ந்த நன்னெஞ்சங்களுக்கும் நன்மை.
தொடர்ந்து பதியுங்கள். அதை தொடர்ந்து தொகுத்து புத்தக வடிவில் வெளியிட முயற்சி செய்யுங்கள். யார் கண்டார்கள்... அடுத்த ஜே.கே. ரௌலிங் நீங்களாக கூட இருக்கலாம் :-)) (இல்லை 'தங்க மரம்' ஆசிரியராக கூட இருக்கலாம்).
ILA(a)இளா said...
ReplyDelete//இன்னும் சில நுணுக்கமான கேள்விகள் வைத்து இருக்கலாம்.//
ஹ்ம்ம்ம்...like?
//பிரபலங்களிடம் பதில் வாங்குவதுதான் திறமை//
athu ennamo cheri thaan! :-)
adutha kelvi ungala kekkaren!
//திவா said...
ReplyDeleteசரிங்க! ரெண்டு நாள்ல ஆரம்பிச்சுடுறேன். கொஞ்சம் பக்கங்களை எழுதிகிட்டு//
சூப்பர்! கலக்குங்க திவா!
ஆன்மீகம் ஃபார் டம்மீஸ் - எனக்கு ரொம்பவே தேவைப்படும்.
நீங்க சொன்ன ஒன்-பேஜ்-பதிவு நல்ல ஐடியா!
//Sridhar Narayanan said...
ReplyDeleteசித்தாந்தங்களை தெளிவாக எடுத்துரைத்தல் மிகவும் அரியதாகவே இருக்கின்றன//
எங்கு எதைத் தேடுகிறோம்-னு பொருத்தது ஸ்ரீதர்!
பதிவுகளில் சித்தாந்தம்-னா அடுத்த கட்டம் தான்! மக்களை ரொம்ப பயமுறுத்தக் கூடாது! வேணூம்னா சித்தாந்தப் பேச்சுக்கு-ன்னு தனியா ஒரு குழுப் பதிவு தொடங்கிறலாம்! நல்ல உரையாடல்கள் இருக்கும்! திரட்டிக்கு அனுப்பணும் கூட அவசியம் இல்லை! ஒத்த தேடல் உள்ளவர்கள் கூடல் செய்யும் இடமா இருக்கும்!
//சமீபத்தில் கேட்ட விசாகா ஹரியின் தியாகராய சரிதம். கேட்க கேட்க இன்பம்.//
விசாகா ஹரி ஒரு பிரவாகம்! எளிமைப் பிரவாகம்! யூட்யூபில் நானும் கேட்டேன்! வெகு அருமை!
//உங்களின் பதிவுகள் அந்த இடைவெளியை இட்டு நிரப்புகின்றன. தமிழுக்கும் நன்மை. தமிழற்ந்த நன்னெஞ்சங்களுக்கும் நன்மை.
தொடர்ந்து பதியுங்கள்.//
நன்றி ஸ்ரீதர்!
ஆன்மீகத்துல பலருக்கும் பல தேடல், பல சுவை இருக்கும்!
நான் பதிவது பெரும்பாலும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்கே! அதனால் தான் லோக்கல் கன்டென்ட் போலத் தெரியும்! ஆண்டாளும் கண்ணாலம் போன்ற லோக்கல் சொற்களைத் தான் பயன்படுத்துவாள்!
ஆனால் அடியேன் என்னை நானே தெளிந்து கொள்ள, நான் செல்லும் பதிவுகள்! கண்ணன் ஐயா-குமரன்-ஜீவா!
//அதை தொடர்ந்து தொகுத்து புத்தக வடிவில் வெளியிட முயற்சி செய்யுங்கள். யார் கண்டார்கள்... அடுத்த ஜே.கே. ரௌலிங் நீங்களாக கூட இருக்கலாம் :-))//
புத்தகமா? மொத்தகமா?
என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே!
//(இல்லை 'தங்க மரம்' ஆசிரியராக கூட இருக்கலாம்).//
எங்க அண்ணாத்த ஜிரா மேலயுமா ஒங்களுக்கு கொல வெறி? :-))
கருத்துக்களைப் பகிர வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
ReplyDelete//ரவிசங்கர் said...
ReplyDeleteகருத்துக்களைப் பகிர வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
//
இடுகையின் நாயகரே வருக! வருக!
கேஆரெஸ்.
ReplyDeleteஆனிமீகம் பத்தி நெறைய கருத்து இருந்தாலும் பதிவில வந்த இந்த கருத்து ரொம்பவே முரண்நகையா இருக்குதுங்கோ,
//சமயம் குறித்த வரலாறு, சிந்தனைகள், மெய்யியல் கூறுகளை எழுதும் போது அவை குறித்த தமிழ்ச் சொற்களை உருவாக்கவும் இலக்கியங்களில் ஏற்கனவே இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும் சொற்களை ஆளவும் முயல்வோம்.
ஒரு வழியில் இது பழமையான துறை ஒன்றில் தமிழ் வழிச் சிந்தனையை ஊக்கப்படுத்தும். //
தமிழ் இலக்கியங்களில் மணிப்பிரவாள நடை, அல்லது வட மொழி அதிகம் கலக்க காரணமாக இருந்ததே இந்த சமய இலக்கியங்கள் தலை எடுத்த பின்னரே, அதுவும் சமய இலக்கியங்களில் வடமொழி சொற்கள் அதிகம் இருக்கும், ஆனால் பழமையான சமய இலக்கியமாக இருப்பதால் பார்ப்பவர்களுக்கு அது தமிழ் போல தோற்றம் அளித்து தமிழ் எது என்று புரியாமல் குழப்பியதே இவை தான்.
இப்போ சம்பந்தர் எழுதியப்பாட்டில் இருக்கும் வட மொழிக்கு இணையான சொல்லை எழுத்து போட்டு அந்த பாடலை திருத்த முடியுமா? அப்படி இருக்கும் போது எப்படி தமிழ் குறித்தான சிந்தனையை அந்த பாடல்கள் உருவாக்கும். விளக்கம் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் அதில் இருக்கும் வடமொழி சொல் இருந்துக்கொண்டே தானே இருக்கும்.
பின்னர் பதிவுகளில் ஆன்மீகம் குறித்து எழுதுபவர்களும் ஆன்மீக எழுத்துக்கான ஒரு வகை பாணி இதான் என வடமொழி கலந்தே எழுதுவார்கள். கேட்டால் மூல இலக்கியத்திலே இருக்கு அவர்களுக்க்கு தெரியாததா என்பார்கள்.
உதாரணத்துக்கு வேறு எங்கும் போக வேண்டாம் , ஏதாவது வெகு ஜனப்பத்திரிக்கைகளில் வரும் ஆன்மீக கட்டுரையைப்படித்துப்பாருங்கள் எத்தனை வட மொழி சொற்களுடன் இருக்கிறது என்று தெரியும்.பதிவுகளிலும் அதே பாணி தான் தலைத்தூக்கும். எல்லாரையும் போய் கேட்டுக்கொண்டு இருக்க முடியுமா?
எனவே எப்படி தமிழ் வழி சிந்தனையை தூண்டி விடும்னு புரியல்ல! தமிழ் வழி சிந்தனையின் குரல்வளையை அக்காலத்தில் நெரித்தது ஆன்மீக இலக்கியம், இப்போ ஆன்மீக பதிவாக இருக்கும்!
ஆன்மீகம் வளர்ந்தால் எல்லாம் ஒன்றே என்ற சிந்தனைக்கூட வராது.ஆனால் ஆன்மீக இலக்கியத்தில் எல்லாம் ஒன்றேனு தான் இருக்கும் அதையே ஏற்றுக்கொள்ள மாட்டாங்க.
ஒருத்தர் ஒரு முருகன் அருள் பின் நிற்கும் என்று முருகனுக்கு மட்டும் காவடித்தூக்குவார், இன்னொருத்தர் பெருமாளுக்கு மட்டும் குடை பிடிப்பார், அப்படியே பெருமாள் கோஷ்டி என்றும் முருகன் கோஷ்டி என்றும் ஒன்னு பதிவுகளிலும் உருவாவதை தவிர பெரிய பலன் இல்லை :-))
இவங்க எல்லாம் ஆன்மீகம் இல்லாத பதிவர்களிடம் இருந்தும் தனித்தும், அவர்களுக்குள்ளும் பிரிந்தும் என்று ஒரு ஒட்டாதக்கலவையாகவே இருப்பார்கள்.இணைய உலகம் என்பது ஒரே தளமாக மக்களை ஒன்றிணைக்க என்பதாக தோன்றி பின்னர் வெளியில் எப்படி இருந்தோமே அதையே இங்கும் கொண்டு வந்தாகிவிட்டது, இதில் வேலும், சூலமும் வந்தது அடுத்தக்கட்ட வளர்ச்சி :-))
சின்னக்குழுவாக செயல்படும் மனோபாவம் பெருகும் என்பதற்கு அத்தாட்சியாக எங்கும் போகவேண்டாம் கேஆரேஸ் இப்பதிவில் பின்னூட்டத்தில் சொன்னதே இருக்கு,சைக்கிள் கேப்பில ஆன்மீகம் என்பதை சித்தாந்தம் என்றும் ஆக்கிட்டார்( சைவ சித்தாந்தம் என்று சொல்வதால் அப்படி எடுத்துக்கலாமோ, அப்படினா தெளிவாக தெரியாவிட்டால் வேதாந்தம் என்றது?)
//சித்தாந்தப் பேச்சுக்கு-ன்னு தனியா ஒரு குழுப் பதிவு தொடங்கிறலாம்! நல்ல உரையாடல்கள் இருக்கும்! திரட்டிக்கு அனுப்பணும் கூட அவசியம் இல்லை! ஒத்த தேடல் உள்ளவர்கள் கூடல் செய்யும் இடமா இருக்கும்!//
ரவிசங்கர்,
தீவிரமான விக்கி பக்தர் போல எங்கே போனாலும் ஒரு துண்டு போட்டு வைத்துவிடுகிறார் :-))
ரவியின் கேள்விகளும் அதற்கு ரவியின் பதில்களும் அருமை.
ReplyDelete//1. ஆன்மீகம் என்பது தனி மனிதன், தானாய் மனதில் உணர்ந்து கொள்வது! அப்படி இருக்க, ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?//
இந்தக் கேள்விக்கு மட்டும் என்னுடைய கருத்துக்களை இங்கு பதிய விரும்புகிறேன்.
ஆன்மிகம் சம்பந்தமாக அதிகம் படித்தாலும் நான் எழுதுவதில்லை. ஏனெனில் நான் எனக்காக படிக்கிறேன். எனக்கான தேடல்களுக்காக.
அதே அளவுக்கு நாத்திக கருத்துக்களையும் படிக்கிறேன்.
ஆத்திகமோ நாத்திகமோ இரண்டுமே ஒரு வித தேடல்தான்.
இந்த தேடல் வாழ்வில் அனைவருக்கும் இருக்கும்.
இந்த இருவித தேடல்களின் மூலம் மனிதன் அடைய விரும்புவது எது.
ஆன்மிக வழிநின்று கடவுளை தொழுவதால் அடையப்பெறுவது என்ன. முக்தியா. பக்தியா. நித்ய பக்தி பஜனை என்பது மகிழ்ச்சிக்குரியதா.
அல்லது நாத்திக வழி நின்று, கடவுளை மறுப்பதால் அடையப்பெறுவது என்ன. நம்பாத கடவுளை ஏற்றால் என்ன. மறுத்தால் என்ன. கடவுளை மறுப்பதும் ஒரு வகை வழிபாடுதானோ. இருக்கும் பொருளைத்தானே மறுக்க முடியும்.
இந்த இருவகைத் தேடல்களும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும்.
கடவுள் இருக்கிறார் என்று தேடுபவனாகட்டும், கடவுள் இல்லை என்று தேடுபவனாகட்டும் அந்த தேடலே மகிழ்வுக்குரிய ஒன்று.
ஏனெனில் ஆன்மீகமோ நாத்திகமோ இவற்றிற்கு இலக்குகள் இல்லை. இவை இரண்டும் இணையான பாதைகள் மட்டுமே.
------------------
ஒரு தருணத்தில் ஆத்திகனாய் இருக்கும் நான் மறுகணத்தில் நாத்திகனாய் இருக்கிறேன். பாதைகளை மாற்றிக்கொண்டே இருக்கிறேன். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மனித மனம்.
பிறப்பு, மரணம், மூப்பு, பிணி போன்று மனிதனால் கட்டுப்படுத்த முடியாத காரணிகளே அவனை கடவுளை நோக்கி செலுத்துகிறது.
அதே தருணத்தில் இறைவழிபாடு என்பது தற்காலிக ஆறுதலை கொடுப்பதாக மனநிம்மதியை கொடுப்பதாக இருந்தாலும், அதுவே தீர்வாகாத நிலையில் விதி என்று சொல்லி கடவுளும் விதியை வெல்ல முடியாது என்னும் தருணங்களின் போது நம்பிய இறைவன் மீதான அவநம்பிக்கைத் தீர்மானத்தை மனம் இயற்றுகிறது.
உண்மையில் நூறு சதவீத ஆத்திகன் என்றோ, நூறு சதவீத நாத்திகன் என்றோ யாரும் கிடையவே கிடையாது.
மனதின் நம்பிக்கையின் சதவீதங்களே ஒருவன் ஆத்திகனா அல்லது நாத்திகனாக தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன்.
ஆனால் தேடல் வெறும் அகக்காரணிகளைக் கொண்டு மட்டும் நிகழமுடியாது. அத்தேடல் புத்தகங்கள், சொற்பொழிவுகள், தான் சார்ந்த சமூகம் என்று விரிகிறது.
இந்த சமூகத்தின் நீட்சியாக, இந்த சமூக நிகழ்வுகளின் பதிவுகளாக வலைப்பதிவுகள் எழுதப்படும்போது ஒரு பதிவர் தமது ஆன்மிகத் தேடலை ஆன்மிகம் குறித்த கருத்துக்களை பிறரது மனமோ நம்பிக்கைகளோ புண்படாத வண்ணம் எடுத்து வைப்பதும் தேவையாகிறது. அது அவருக்கே அவரது தேடலை பதிவதற்காகவும் ஒத்த தேடல் உடையவர்களை அடைவதற்கும் உதவும் ஒரு கருவியாகிறது.
ஆன்மிக எண்ணங்கள் ஒரு இளைப்பாறலை தருகின்றன.
மாறுபட்ட இறைவழிபாடு நம்பிக்கைகள் பகிரப்படும் போது வேறுபட்ட நம்பிக்கைகளுக்கிடையிலான புரிதல் ஏற்பட்டு அது சமயசகிப்புத்தன்மைக்கும் சமூக வளர்ச்சிக்கும் உதவியாகவே இருக்கமுடியும்.
"அன்பை" பரப்புவது மட்டுமே ஆன்மிகம் என்ற கருத்தோடு பதியப்பெறும் பதிவுகள் பதிவுலகத்திற்கு மிகவும் தேவை. மாறுபட்ட கருத்துக்கள் மீதான அவதூறுகளை பதிவதில்லை.
"அன்பை" பதியுங்கள். இறைவன் என்று தாங்கள் யாரை கொள்கிறீர்களோ அவன் மீதான உங்கள் "அன்பை" பதியுங்கள். அதுவே ஆன்மீகம்.
ஆன்மிக பதிவுகள் பதிவுலகத்திற்கு அவசியம் தேவையே.
அந்த வகையில் கே.ஆர்.எஸ்., குமரன் போன்றவர்களின் பதிவுகளுக்கு நான் என்றும் ரசிகனே.
நன்றி கே.ஆர்.எஸ்.
வவ்வால்...
ReplyDelete//தமிழ் இலக்கியங்களில் மணிப்பிரவாள நடை, அல்லது வட மொழி அதிகம் கலக்க காரணமாக இருந்ததே இந்த சமய இலக்கியங்கள் தலை எடுத்த பின்னரே, அதுவும் சமய இலக்கியங்களில் வடமொழி சொற்கள் அதிகம் இருக்கும், ஆனால் பழமையான சமய இலக்கியமாக இருப்பதால் பார்ப்பவர்களுக்கு அது தமிழ் போல தோற்றம் அளித்து தமிழ் எது என்று புரியாமல் குழப்பியதே இவை தான்.//
வவ்வால்...
பக்தி இலக்கியங்களில் மணிப்பிரவாள நடை என்பது ஆய்வுக்குரியது.
பக்தி இலக்கியங்களால் மணிப்பிரவாள நடை வந்ததா, இல்லை சமூகத்தில நிலவிய மொழி வழக்கு இலக்கியத்தில் எதிரொலித்ததா. என்னைக் கேட்டால் இலக்கியங்களை படித்துவிட்டுப் பின் மக்கள் பேசத் துவங்குவதில்லை. ஆன்மிக பதிவுகளுக்கும் அது பொருந்தும். ஆன்மிக பதிவுகள் கருத்தை மட்டும்தான் சொல்ல முடியும். பதிவெழுதி உலகையெல்லாம் மாற்றியமைக்க முடியாது. :)
தமிழின் முதல் புதினமான "பிரதாப முதலியார் சரிதம்" படித்திருப்பீர்கள். அதன் மணிப்பிரவாள நடையுடன் ஒப்பிடும்போது பக்தி இலக்கியங்களில் பிறமொழிக் கலப்பு குறைவே என்பேன்.
தேவார, திருவாசகங்களான பன்னிரு திருமுறைகளும் தீந்தமிழ்ப்பாக்களாகவே இருக்கின்றன. படித்திருப்பீர்கள்.
தாங்கள் சொல்வது போல் அதிக அளவு பிறமொழி கலந்து ஆன்மிக பதிவு எழுதும் பதிவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். நாம் இருவருமாய் சென்று தமிழ் பதிவு கேட்டு போராட்டம் நடத்தலாம்.
:)
என்னப்பா ரவீஸ்,
ReplyDelete//கணினியில் நீளமாக எழுதப்படும் கதைகள், தொடர் கதைகள் படிப்பது சிரமமாக உணர்கிறேன்.//
திருவள்ளுவராட்டம் இருக்க முடியலைப்பா..... என்ன செய்யலாம்?
நேர்காணல் பதிவு நல்லா இருக்குன்னாலும், நம்ம 'அரைபிளேடு'வின் பின்னூட்டம் பதிவைத் தூக்கிச் சாப்புட்டுட்டு ஏப்பம் விட்டுருச்சுப்பா.
சூப்பர் அரைப்ளேடு. வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.
வவ்வால்
ReplyDelete//ஒருத்தர் ஒரு முருகன் அருள் பின் நிற்கும் என்று முருகனுக்கு மட்டும் காவடித்தூக்குவார், இன்னொருத்தர் பெருமாளுக்கு மட்டும் குடை பிடிப்பார், அப்படியே பெருமாள் கோஷ்டி என்றும் முருகன் கோஷ்டி என்றும் ஒன்னு பதிவுகளிலும் உருவாவதை தவிர பெரிய பலன் இல்லை :-))
//
வவ்வால்...
விவாதிக்கப்படும் போது மாறி மாறி இரு கடவுளர்களின் பெருமையும்தான் பறிமாறிக் கொள்ளப்படுகிறது.
"அரியும் அரனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு" என்பதை அறியாதவர்களா ஆன்மீகப் பதிவர்கள்.
இருந்தாலும் உயர்த்தி சொல்வதில் ஒரு மகிழ்ச்சி. மாறி மாறி பெருமைகள்தானே பரிமாறப்படுகின்றன.
அப்படியே வைதாலும் வைதாரையும் வாழவைக்கும் தெய்வங்கள்தான் நம் தெய்வங்கள்.
:)
தெய்வம் பற்றி தூற்றினும், தூற்றியதைத் தள்ளி பற்றியமைக்காக அருளும் தன்மையே கடவுள். அந்த தன்மையே கடவுள்தன்மையாக போற்றப்படுகிறது. அந்தத் தன்மையே மனிதர்களுக்கும் தேவையான ஒன்று. அந்தத் தன்மையை மனிதர்களுக்குள் கொண்டு வரும் ஒன்றே உண்மையான ஆன்மீகம்.
:)
--------------------------
//நேர்காணல் பதிவு நல்லா இருக்குன்னாலும், நம்ம 'அரைபிளேடு'வின் பின்னூட்டம் பதிவைத் தூக்கிச் சாப்புட்டுட்டு ஏப்பம் விட்டுருச்சுப்பா.
சூப்பர் அரைப்ளேடு. வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.
//
நன்றி. துளசி கோபால் அவர்களே.
:)
சிறப்பாக இருந்தது ஆக்கம். வாழ்த்துகள்.
ReplyDeleteஆன்மீகம் இல்லாவிட்டால் தமிழே ஒரு காலகட்டத்தில் வளர்ந்திருக்காது என்பதை மற்றவரை விட ஆன்மீகப் பதிவர்கள் எனத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் புரிந்து கொண்டால், இதில் நேரம் அதிகம் செலவழியாது!
ReplyDeleteபின்னூட்டக் கணக்குக்கும், பரபரப்புக்கும், விளம்பரத்தும் துணை கொள்வதல்ல ஆன்மீகம்!
உள்ளிருந்து வரும் உந்துதல்.
புரிபவர்க்குப் புரியும்!
//ஆன்மீகச் செடிக்கு முதலில் வந்து தண்ணி ஊத்திய கோவி அண்ணாவுக்கு என் நன்றி! :-)//
ReplyDeleteரவி,
தண்ணீர் ஊற்றுவது உங்கள் வேலை,
எனக்கு களையெடுப்பதுதான் தெரியும்.
:)
This comment has been removed by the author.
ReplyDelete//பின்னூட்டக் கணக்குக்கும், பரபரப்புக்கும், விளம்பரத்தும் துணை கொள்வதல்ல ஆன்மீகம்!//
ReplyDeleteவீஎஸ்கே ஐயா,
எது ஆன்மீகம் அல்ல என்பதற்கு சிறிய குறிப்பு மிக நன்று, அதே போல் எது ஆன்மீகம் என்பது பற்றி மேலும் பலவற்றை தொட்டு தனிப்பதிவாக இடும்படி தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
சிறு எழுத்துப்பிழை ஆகவே மேலே போட்ட பின்னூட்டத்தை அழித்துவிட்டேன்.
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteவீஎஸ்கே ஐயா,
எது அல்ல என்பதற்கு சிறிய குறிப்பு மிக நன்று, அதே போல் எது ஆன்மீகம் என்பது பற்றி மேலும் பலவற்றை தொட்டு தனிப்பதிவாக இடும்படி தாழ்மையுடன் வேண்டி விரும்பு கேட்டுக் கொள்கிறேன்//
My special thanks to Govi Anna for this reply!
Just exactly what I felt that I wud have replied!
//விவாதிக்கப்படும் போது மாறி மாறி இரு கடவுளர்களின் பெருமையும்தான் பறிமாறிக் கொள்ளப்படுகிறது.
ReplyDelete"அரியும் அரனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு" என்பதை அறியாதவர்களா ஆன்மீகப் பதிவர்கள்//
இந்த மூச்சு முட்டும் வாரத்தில், முத்தும் சத்துமாய் பதில் சொல்லி, எனக்குச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள, வாய்ப்பு நல்கும் நண்பா- அரை பிளேடு!
காலத்தினாற் செய்த நன்றி!
மறவேன்! மறவேன்!!
நாம் எழுதும் ஆன்மீகப் பதிவுகளால் யாருக்கென்ன லாபம்? எங்கோ படிச்சதை எல்லாம் எழுதிக் குவிக்கிறோம், அவ்வளவு தானா? நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லி, பின்னூட்டத்தில் நமக்குத் தெரியாததை நண்பர்கள் சொல்லி
ReplyDeleteசிந்திக்கத் தூண்டும் வரிகள். உண்மை சுடும் ஆனால். அடுத்தபதிவு போடும் போது நினைவில் வைத்துக்கொள்கிறேன்.அருமையான பதிவு ரவி.சென்னை வரும் தேதியை முன் கூட்டியே சொல்லுங்கள் முடிந்தால்
//நேர்காணல் பதிவு நல்லா இருக்குன்னாலும், நம்ம 'அரைபிளேடு'வின் பின்னூட்டம் பதிவைத் தூக்கிச் சாப்புட்டுட்டு ஏப்பம் விட்டுருச்சுப்பா.
ReplyDeleteசூப்பர் அரைப்ளேடு. வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.//
ரீப்பீட்டேஏஏஏஏஏஏஎ
//ஒருத்தர் ஒரு முருகன் அருள் பின் நிற்கும் என்று முருகனுக்கு மட்டும் காவடித்தூக்குவார், இன்னொருத்தர் பெருமாளுக்கு மட்டும் குடை பிடிப்பார்//
ReplyDeleteஹஹா! என்னால சிரிப்பை அடக்க முடியலை. குடை மட்டுமா? சிலர் தீர்த்தம் எல்லாம் குடுக்கறாங்க. :)))
நல்ல பதிவு ;)
ReplyDeleteThis is what my SK ayya feels:
ReplyDelete//ஆன்மீகம் இல்லாவிட்டால் தமிழே ஒரு காலகட்டத்தில் வளர்ந்திருக்காது என்பதை மற்றவரை விட ஆன்மீகப் பதிவர்கள் எனத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் புரிந்து கொண்டால், இதில் நேரம் அதிகம் செலவழியாது!//
This is what I have said in the
post:
//சங்க இலக்கியத்தில் இருந்து, மெல்ல மெல்ல பக்தி இலக்கியம் வளர்ந்த காலகட்டத்தில், தமிழ் மொழிக்குத் தான் எத்தனை எத்தனை பங்களிப்புகள்!
பிள்ளைத் தமிழ் என்று ஒன்று வருவதற்கு பெரியாழ்வார் அல்லவா முன்னோடி! சந்தக் கவிக்கு அருணகிரி செய்த பங்களிப்பு எத்துணை பெரிது!
அன்றைய ஆன்மீகப் பதிவுகள் இல்லைன்னா இன்று ஆலயங்களில் தமிழ் ஏது?
//புரிபவர்க்குப் புரியும்!//
புரமெரி பரமன் அடியேனுக்குப் புரிய வைக்கட்டும் :-))))
அரை பிளேடுக்கு என் முழு வணக்கம்!
ReplyDelete//உண்மையில் நூறு சதவீத ஆத்திகன் என்றோ, நூறு சதவீத நாத்திகன் என்றோ யாரும் கிடையவே கிடையாது.//
ReplyDeleteநாத்திகர்களின் பக்கா ஜல்லியான இந்தக் கூற்றை ஏன் கையில் எடுத்தீர்கள் என்று புரியவில்லை.
அரை நாத்திகன் அரை ஆத்திகன் ஆகிறான். அரை ஆத்திகன் ஓர் ஆத்திகனே. இதன்படி உங்கள் கூற்றைப் பார்த்தால் உலகில் எல்லோரும் ஆத்திகர்களே.
ஆத்திகர்களிடம் அவர்களது அறியாமை புரியாமையினால் கொஞ்சம் நாத்திகம் இருக்குமோ என ஐயுற்றாலும் கொஞ்சூண்டு ஆத்திகம் இருந்தாலும் அவர்கள் நாத்திகர் ஆவார்களா?
//தமிழ் இலக்கியங்களில் மணிப்பிரவாள நடை, அல்லது வட மொழி அதிகம் கலக்க காரணமாக இருந்ததே இந்த சமய இலக்கியங்கள் தலை எடுத்த பின்னரே, அதுவும் சமய இலக்கியங்களில் வடமொழி சொற்கள் அதிகம் இருக்கும், ஆனால் பழமையான சமய இலக்கியமாக இருப்பதால் பார்ப்பவர்களுக்கு அது தமிழ் போல தோற்றம் அளித்து தமிழ் எது என்று புரியாமல் குழப்பியதே இவை தான்.//
ReplyDeleteவவ்வாலின் கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. சங்க காலத்தில் கூட வட மொழிச் சொற்கள் என கருதக்கூடிய பல சொற்கள் தமிழில் புழங்கி வந்திருக்கின்றன. சங்கம் என்ற சொல்லைக்கூட எடுத்துக் காட்டாகச் சொல்ல முடியும். பிற மொழியினரான களப்பிரர் காலத்தில் தமிழில் பிற சொற்கள் கலந்து அவை பக்தி இலக்கிய காலகட்டத்தில் வெளிப்பட்டிருந்தாலும் தமிழில் பிற மொழிச் சொற்கள் அதிகமாகக் கலந்தது 13 14ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட முற்றிலும் தமிழரல்லாதவர்களின் ஆட்சியின் போதுதான். கிருத்துவ சமய இலக்கியங்களில் கானப்படும் வடமொழிச் சொற்களையும் 19 20ம் நூற்றாண்டுகளின் உரைநடை எழுத்துகளையும் கவிதைகளையும் எண்ணிப் பாருங்கள்.
//ஹஹா! என்னால சிரிப்பை அடக்க முடியலை. குடை மட்டுமா? சிலர் தீர்த்தம் எல்லாம் குடுக்கறாங்க. :)))//
ReplyDeleteஹா ஹா ... தீர்த்தம் அதுவும் raw ஆஹ் கொடுக்கிறாங்களா :-))
இங்கு வரும் மற்ற பின்னூட்டங்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை ஏன் எனில் அவர்கள் முன்னரே டீச்சர் இவன் என் தலைல கொட்டிட்டான்னு/என்னை கிள்ளிட்டான் ரேஞ்சில் சொல்றவங்க நான் எதாவது சொல்லப்போக ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுடுவாங்க அதுவும் குறிப்பாக ஓகை ஒப்பாரிக்கு அளவே இருக்காது :-))(இவங்க எல்லாம் எங்கே தனக்கு ஆதரவு குரல் ஒலிக்குமோ அங்கே மட்டும் தான் வந்து பின்னூட்டம் போடுவாங்க நான் அப்படி இல்லை எங்கேயும் என் கருத்தை சொல்வேன் "வவ்வால்- பயமறியான்!")
கேஆரெஸ் எதாவது நேரடியாக சொன்னால் நானும் பதில் அளிக்க தயார்!
//இவங்க எல்லாம் எங்கே தனக்கு ஆதரவு குரல் ஒலிக்குமோ அங்கே மட்டும் தான் வந்து பின்னூட்டம் போடுவாங்க//
ReplyDeleteவவ்வால் அவர்களே! இதை உண்மை என்று ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை.
//வவ்வால் அவர்களே! இதை உண்மை என்று ஒப்புக் கொள்வதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை. //
ReplyDeleteஓகை, பாராட்டுக்கள்! உங்களுக்கு பிரச்சினையே இராது. மகிழ்ச்சியா இருக்கத்தானே வலைக்கு வரோம்? கோபப்படவோ, ஆத்திரப்படவோ சண்டை போடவோ வரோமா?
ஐயா, ஒரு சந்தேகம். ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும், சடங்குகளையும் பற்றி எழுதுவது எப்படி ஆன்மீகமாகும்?
ReplyDeleteஆன்மீகம் (spiritual) இவைகளைக் கடந்த அடுத்த நிலை இல்லையா?
@உஷா
ReplyDelete//ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும், சடங்குகளையும் பற்றி எழுதுவது எப்படி ஆன்மீகமாகும்?
ஆன்மீகம் (spiritual) இவைகளைக் கடந்த அடுத்த நிலை இல்லையா? //
அடுத்தது என்று இல்லை. ஆன்மீக தேடலில் பக்தியும் சமயமும் ஒரு வழி.
திவா,அப்படி பார்த்தால் "ஜெ மீண்டும் முதல்வராக தலைகீழாய் கிரிவலம் வந்த வாலிபரும் சிறந்த ஆன்மீகவாதியா? ஹூ ஹூம் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது :-)
ReplyDelete@ உஷா
ReplyDelete//திவா,அப்படி பார்த்தால் "ஜெ மீண்டும் முதல்வராக தலைகீழாய் கிரிவலம் வந்த வாலிபரும் சிறந்த ஆன்மீகவாதியா? ஹூ ஹூம் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது :-)//
:-))))))))))
பலரும் போல ஒரு விஷயத்துக்கு ஆசை பட்டு கிரிவலம் போய் இருக்கிறார். இறைவனை மலை வடிவில் நினைத்த அளவில் ஆன்மீகவாதிதான். சிறந்த? நிச்சயமாக இல்லை. படிக்கட்டில் இருந்தாலும் கீழ் படிக்கட்டுகளில் இருக்கிறார்.
எந்த வழியானாலும் முன்னேற்றம் இருக்க வேண்டும். பலரும் கீழ் படிக்கட்டுகளில்தான் இருப்பார்கள். அதிலிருந்து மேலேறி எப்போது ஆசையால் உந்தப்படாமல் இறைவனை நினைக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போது அவர்கள் குணங்கள் மாற ஆரம்பித்து முன்னேறுவார்கள். அப்புறமும் வெகு தூரம் போக வேண்டி இருக்கிறது.