Thursday, March 06, 2008

சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள ஆறுமுகச்சாமி ஐயா!
சிவராத்திரித் திருநாள் அதுவுமாய், வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!

இந்தத் தள்ளாத வயதிலும், தனி ஒரு ஆளாகத் துவங்கி, பின்னர் சில மெய்யான இயக்கங்களின் உதவியுடனும் போராடி வென்று உள்ளீர்கள்! மிகவும் பாராட்டுதல்கள்!
பல ஆன்மீக அமைப்புகளும் திருமடங்களும் தீர்த்து வைக்காத பிரச்சனையைத், தனி ஒரு மனிதராக/சிறு இயக்கமாகக் கைக்கொண்டு போராடி இருக்கீங்க! ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கீங்க!

இந்த வெற்றி என்றும் நிலைத்திருக்க வேண்டும்!
ஒவ்வொரு முறையும் நீங்கள் வந்து பாடினால் தான், தமிழ் கருவறைக்குள் நுழைய முடியும் என்று ஆகி விடக் கூடாது!
உங்களுக்குப் பிறகு யார்?
அடியேன் சில பார்வைகளை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விழைகின்றேன்!
உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையில், இவற்றைக் கருணை கூர்ந்து கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!


1. இந்நேரம் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கலாம்! சிறையில் இருந்த போது, தமிழ் ஆர்வலர்கள் சிலர் சிற்றம்பலத்தில் ஏறிப் பதிகங்கள் பாடியுள்ளதையும்,
முன்பு எதிர்த்த தீட்சிதர்கள் இப்போது பிரச்சனை எதுவும் செய்யாமல், பாடியவர்களுக்கு மாலை மரியாதைகள் செய்துள்ளதையும் பத்திரிகைகளில் பார்த்தோம்! நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்!

2. தாங்கள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவுடன், உங்கள் மனமெல்லாம் ஆடல்வல்லானைக் காண வேண்டும் என்றே இருக்கும்! பதிகம் பாடிச் சேவிக்க உங்கள் மனம் துடியாய்த் துடிக்கும்! அறிவேன்!

ஆனால்...அத்தி பூத்தாற் போல் அமைதி பூத்துள்ளது!

எனவே...போராட்ட கோஷங்கள் ஏதுமின்றி, ஆரவாரங்களைக் குறைத்துக் கொண்டு, அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, தில்லை அம்பலத்துக்கு வாருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

முன் கூட்டியே தங்கள் வருகையை அறிவித்து விடுங்கள்! காவல்துறைக்கு உதவியாய் இருக்கும்!
தீட்சிதர்களும் பழைய கசப்புடன் உங்களை எதிர் நோக்காது, குறைந்த பட்சம் தங்களை மனத்தளவில் தயார் செய்து கொள்வார்கள்!

3. இந்த முறை தங்கள் ஆலய வழிபாடு அமைதியாக நடக்க வேண்டும் என்பதே என் அவா! அதுவும் சிவராத்திரி அதுவுமாய் அமைதி தேவை!
முன்பு நடந்தது போல், மோதலில், தரிசனத் தடை ஏதும் நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளது!

பொன்னம்பல மேடையில் நீங்கள் பதிகம் ஓதித் தொழுதவுடன், (முடிந்தால்) மலர் மாலைகளைக் கொணர்வித்து, 
வழிபாட்டுப் பொறுப்பில் உள்ள தீட்சிதர்களிடம் உங்கள் கைகளால் கொடுக்கவும்! - குறைந்த பட்ச நல்லெண்ண முயற்சியாக இது அமையும்!
பாக்களால் நீங்கள் அலங்கரியுங்கள்!
பூக்களால் அவர்கள் அலங்கரிக்கட்டும்!

4. இத்துடன் இரு தரப்பும் வீம்புக்குச் செய்யும் சில செயல்களை நிறுத்திக் கொள்ளுதல் நலம்! உங்களை ஆதரித்த இயக்கங்கள், குறிப்பாக அரசியல் கட்சிகளுக்கு நன்றி கூறி விடையளித்து விடுங்கள்!
குறிப்பாக முதல்வர் கலைஞருக்கும், காவல்துறைக்கும், அறநிலையத் துறைக்கும் நன்றி அறிவிப்பு செய்யுங்கள்! போராட்டம் ஓய்ந்தது என்றும் அறிவித்து விடுங்கள்!
இனி அரசியல் சாராத சமூக இயக்கங்கள் உங்கள் பக்கத்துணை இருந்தாலே போதும்!


5. இனி நீங்கள் தினமும் பொன்னம்பல மேடையேறிப் பதிகம் பாடிக் கொண்டிருக்கத் தேவையில்லை! அதை விட பெரிய பொறுப்பு உங்களுக்குக் காத்துக் கொண்டுள்ளது! என்னவென்று அடுத்த பத்தியில் சொல்கிறேன்!

தற்சமயத்துக்கு உங்கள் சீடர்கள் எவரிடமாச்சும் இந்தப் பாடும் பொறுப்பைக் கொடுத்து விடுங்கள்! முதல் கொஞ்ச நாட்களுக்கு உங்கள் சீடர்களின் கால அட்டவணையை அனைவரும் அறியக் கொடுத்து விடுதல் இன்னும் நலம்!

இன்னின்ன வேளைகளில் பொன்னம்பலம் மேல் நின்று அவர்கள் பதிகம் பாடுவார்கள் என்பதை முன்னரே அறிவித்து விடுங்கள்!அதன் பிறகு சிறிது சிறிதாக மைய நீரோட்டத்தில் இந்த வழக்கம் கலந்து விடும்!

எவ்வளவு நாள் தான் நீங்கள் ஒருவரே இதை எல்லாம் செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள்? உங்களுக்குப் பிறகு தொடர்ந்து யார் செய்யப் போகிறார்கள்?
அரசியல் கட்சிகள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் கழண்டிக் கொள்ளும்! பிரச்சனைகள் இல்லாத இடத்தில் அவர்களுக்கு வேலை இருக்காதே?

மனதில் வையுங்கள்:
தமிழில் ஆன்மீகத்தை வளர்க்கணும், பக்தி இயக்கத்தைச் செழிக்கச் செய்யணும் என்பது அவர்களின் குறிக்கோள் அல்ல!
சமயப் புரட்சி, சமயத்தின் உள்ளேயே இருந்து வந்தால் தான்... காலமெல்லாம் நிலைத்து நிற்கும்!
6. இனி உங்களுக்குப் பெரிய பொறுப்பு-ன்னு சொன்னேன் அல்லவா? இது தான்! 
= சிவாலயங்களில் தமிழ் வழிபாடு!

இதை நீங்கள் மணி கட்டினால் இன்னும் நலமாக இருக்கும்!
ஏன் என்றால் இப்போது நீங்கள் ஒரு வெற்றியாளர்! உங்கள் வாக்குக்கு இனி மதிப்பு அதிகம்!

முடிந்தால் அனைத்து சைவ மடத் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்று எழுதுங்கள்! சிவாலயங்களில் தமிழ் வழிபாடு எந்தெந்த வகையில் அமையலாம் என்பதைக் கூடிப் பேசி, ஒரு பொதுக் கருத்துக்கு வரவேண்டும்; இதற்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு அவர்களை வேண்டவும்!

அக்கூட்டத்தில் காய்தல், உவத்தல் இன்றி அனைத்துச் சாதியனரையும், அவர்கள் சார்ந்த திருமடங்களையும் அழைத்துப் பேசவும்!
நீங்கள் ஆகம முறைகளில் வல்லவர் இல்லை என்றாலும் பரவாயில்லை! அந்தந்தத் திருமடத் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! நீங்கள் ஒரு இணைக்கும் பாலமாக செயல்பட்டாலே ஒரு பெரிய ஊட்டமாக இருக்கும்!

ஒவ்வொரு பூசைக்கும் உண்டான தெய்வத் தமிழ் மறைகளை வரையறுத்து, அவற்றைக் கூட்டுப் பரிந்துரையாகச் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், ஆலய நிர்வாகத்தின் முன்னர் வையுங்கள்!
அதிகாலைப் பள்ளியெழுச்சி முதற்கொண்டு, உச்சிகாலம், அர்த்தசாமம் முதலான ஒவ்வொரு வழிபாட்டுக்கும் பொது வரையறைகள் வகுக்கப்பட வேண்டும்! பாடல்களும் பதிகங்களும் ஏற்கனவே கொட்டிக் கிடக்கின்றன! தொகுப்பு தான் தேவை!

பூசை வேளைகளில், வடமொழி வேதங்களை சிவாச்சாரியர்கள் முழங்குவது போல், இப்படி வகுக்கப்பட்ட தமிழ் மறைகளை ஓதும் நடைமுறை....கொஞ்சம் கொஞ்சமாக வழக்கத்தில் கொண்டு வந்துவிட வேண்டும்!
இராமானுசரால், வைணவ ஆலயங்களில் உள்ளது போல், it will completely integrate with the system!
மன்னிக்கவும்...வேகத்தில் ஆங்கிலம் வந்திருச்சி! இந்த நடைமுறைகள் அனைத்தும், சிவாலய நீரோட்டத்திலும் இணைந்து, இயைந்து விடணும்!

7. மேற்சொன்ன ஆக்கங்கள் எல்லாம் படிக்கவும் பார்க்கவும் எளிதே தவிர, ஒரே நாளில் மாற்றம் வந்துவிடாது என்பது அடியேனுக்கும் தெரியும்!
ஆனால் அதற்கான முயற்சிகளுக்கு மணி கட்டும் தருணமிது!
நல்ல சமயமடா! - இதை நீ நழுவ விடுவாயோ என்கிற பாடல் தான் நினைவுக்கு வருது! இதற்கான ஆரம்ப வேலைகளை நீங்கள் துவக்கி வைத்தால்...அடியோங்கள் உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்போம்!

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டர் தொகையில் வருவது போல...
திருவாரூர் பிறந்தவர் தம் அடியார்க்கும் அடியேன்என்ற வரிசையில்.....
ஆறுமுகச் சாமியின் அருள்முயற்சிக்கு அடியேன்
ஆன்றதமிழ் ஓதுவார் தம் அடியார்க்கும் அடியேன்

என்று சேர்த்துப் பாடி மகிழ்வோம்!

வெறுப்பு சிவம் ஆகாது! மொழி வெறுப்பும் சிவம் ஆகாது!
அன்பே சிவம்! அருளே சிவம்!
உங்கள் இந்த வெற்றி்க்கும், இனி வரப் போகும் வெற்றிக்கும், வைணவ முறையில் சொல்லுவதைப் போல் வாழ்த்து சொல்லி முடிக்கிறேன்!
அடியார்கள் வாழ, (அரங்க) தில்லை நகர் வாழ,
(சடகோபன்) 
அப்பர் தண்டமிழ் நூல் வாழ - கடல் சூழந்த
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


தில்லையம்பல தீட்சிதப் பெருமக்களே,
சிவராத்திரித் திருநாள் அதுவுமாய், வணக்கம்! வாழிய நலம்! அனேக நமஸ்காரங்கள்! :-)

தெரிந்தோ, தெரியாமலோ பல சம்பவங்கள் நடந்து விட்டன! அவப் பெயர்கள் பரவி விட்டன!
Good Judgement comes from experience!
and experience comes from Bad Judgement!

உங்கள் நலமும், சமய நலனும் மேம்பட ஒரு பொன்னான வாய்ப்பாக இந்தச் சம்பவங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!

வரலாற்றில் நுழைந்து, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், நீங்கள் தில்லை வாழ் அந்தணர்கள் தானா? என்றெல்லாம் இப்போது நான் பேசப் போவதில்லை!
You can never go into the past and apply today's corrections for yesterday!

ஆனால் "தமிழ் விரோதி" என்று முத்திரை தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மேல் குத்தப்பட்டு விட்டது!
அதைத் துடைத்து எறிவது தான், தற்போது உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்! கீழே சொல்லியுள்ள சில கருத்துக்களைப் படித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

1. இப்போதெல்லாம், உங்கள் வாயால் தமிழ்ப் பதிகங்களைப் பாடுகிறீர்கள்! - ஆனால் எங்கே?....
கருவறைக்கு வெளியில்! = ஒவ்வொரு இரவும் பெருமானின் திருவடி, பள்ளியறைக்கு எழுந்தருளும் போது பாடப்படும் பதிகங்கள் தமிழ்ப் பதிகங்களே!
பின்னர் எப்படி இந்த அவப்பெயர் உங்களுக்கு வந்தது என்று யோசித்துப் பார்த்தீர்களா? உங்கள் முரட்டுப் பேச்சுகளும் செய்கைகளும் தான் பாதிப் பிரச்சனைக்குக் காரணம்!

பொதுப் பிரச்சனைகளில் உங்கள் நிலைப்பாட்டை அன்புடனும் பொறுப்புடனும் விளக்க வேணும்! தமிழில் அன்பே சிவம் என்பது உங்களுக்கும் தெரியும்! உங்க பாஷையில் சொல்லணும்னா..
மாதாச பார்வதீ தேவி
பிதா தேவோ மகேஸ்வரஹ
பாந்தவா சிவ பக்தாய = என் பந்துக்கள், உற்றார் உறவினர் எல்லாம் சிவனடியார்கள் என்று தான் உங்கள் ஸ்லோகமும் சொல்கிறது!
பின்னர் ஏன் இத்துணை காழ்ப்பு?

2. பொன்னம்பல மேடை கருவறைக்குச் சமானம்! அதனால் தான் மற்றவர்கள் அங்கு ஏறிப் பாடக் கூடாது என்பது உங்கள் வாதம்.
ஆனால் தட்சிணை/கட்டணம் பெற்றுக் கொண்டு பக்தர்களை அந்த மேடையில் ஏற்றுகிறீர்கள் அல்லவா? அப்புறம் எப்படி அது கருவறை ஆகும்?

சிற்றம்பலம்-சிதம்பர ரகசியம்-அம்பலவாணர்-சிவகாமி
அதே மேடையில் பெரிய புராண அரங்கேற்றம் எல்லாம் நிகழ்ந்துள்ளதே!

பீடத்தில் உள்ள நடராஜப் பெருமான் இருக்கும் குறுகலான சிற்றம்பலம் மட்டுமே கருவறை! பொன்னம்பலம் அல்ல!
சிற்றம்பலம் நுழைவேன் என்று ஆறுமுகச் சாமியோ வேறு எவருமோ கோரவில்லை! - இதை நினைவில் வையுங்கள்!

3. சரி, தள்ளு முள்ளு சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரி விட்டீர்கள்! நீங்கள் பொன்னாடை போர்த்தி தமிழ் ஆர்வலர்களுக்கு மதிப்புச் செய்த காட்சியைப் பத்திரிகைகளில் பார்த்தோம்! மிக்க மகிழ்ச்சி! இங்கிருந்தே உங்கள் course correctionஐத் துவக்கினால் நலம்!

4. அடுத்த முறை ஆறுமுகச்சாமி வரும் போது, கோயிலில் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்பு செய்யுங்கள்! = இது ஒரு குறைந்தபட்ச நல்லெண்ண முயற்சியாக அமையும்!
அடியார்கள் பிரச்சனைக்காக இறைவனே தூது நடந்த கதை உண்டு! அதனால் இவருக்குப் பூர்ண கும்பம் அளிப்பதை மரியாதைக் குறைச்சலாக நினைக்க வேண்டாம்!

அவர் மேடையில் பாடி முடித்து விட்டுப் போகட்டும்!
என் பேராசை: அவர் பாடும் போது, அவருடன் சேர்ந்து நீங்களும் பாடினால், அடியேன் மிக மிக மகிழ்வேன்!

5. இதற்குப் பிறகு, நீங்கள் பெரிதும் மதிக்கும் வைதீக மடத் தலைவர் + தமிழ்ச் சமயத் தலைவர் = இருவரின் முன்னிலையில்-இரு தரப்பும் சந்தித்துப் பேசுங்கள்!
பிரச்சனைகள் என்னென்ன, அவற்றின் குறைந்த பட்சத் தீர்வு (common minimum program) என்ன என்பதை அடையாளம் கண்டு பட்டியல் போடுங்கள்!
எது ஐதீகக் குறைச்சல் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதைத் தெளிவாக முன்வையுங்கள்!
இதன் முடிவுகளை தமிழக முதல்வருக்கு இரு தரப்பும் நேரில் சென்று விளக்குங்கள்!

6. இதைச் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்! முடிந்தால் ஆலயப் பொறுப்பை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்!
அதற்கு ஈடாக உங்கள் தேவைகளை அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்! நீங்களாகக் கொடுக்கும் போது உங்கள் மதிப்பு கூடத் தான் செய்யும்!

இதே போல், பல சண்டைகளுக்குப் பிறகு, திருவரங்கத்துக் கோயில் சாவியை அதன் தலைமை அர்ச்சகர் என்ன செய்தார் தெரியுமா? இராமானுசரிடம் கொடுத்துவிட்டுப் பொறுப்பை ஒப்படைத்த கதை தெரியும் அல்லவா?
அதைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள்! காலமெல்லாம் போற்றப்படுவீர்கள்!

உங்கள் அடுத்த தலைமுறையில் எத்தனை பேர் பூசை செய்ய வரப் போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? விருப்பம் இல்லையென்றால் அவர்கள் மேல் பூசைப் பொறுப்பைத் திணிக்காதீர்கள்!

7. Men may come and Men may go! But Nataraja Peruman should go on forever!

எக்காரணம் கொண்டும் இனியொரு முறை தில்லைச் சன்னிதியில் போலீஸ் தடியடி, நீங்களும் எண்ணெய் எறிந்து வீசுவது - இது எல்லாம் நடக்கவே கூடாது!
பொன்னம்பலம் "நடன" அம்பலம்! "ஆட்டம் போடும் அம்பலம்" அல்ல!

போலீஸ் இவ்வளவு களேபரத்திலும், சட்டையைக் கழட்டி விட்டுத் தான் உள்ளே செல்கிறார்கள்! அவர்களுக்கே அவ்வளவு அக்கறை என்றால், தில்லைக் கோயிலை நிர்வாகம் செய்யும் உங்களுக்கு பத்து மடங்கு பொறுப்பு அதிகம்!

நீங்கள் சீர் குன்றினாலும், நடராஜப் பெருமானின் ஆலயம் சீர் குன்றக் கூடாது!
உங்கள் பெயர் பங்கப் பட்டாலும், நடராஜப் பெருமானின் திருப்பெயருக்குப் பங்கம் வரக்கூடாது!
இப்படி நீங்கள் நினைப்பது உண்மையானால், அதற்காகச் சில தியாகங்களைச் செய்ய உங்கள் மனத்தைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்!
அதுவே ஈஸ்வர கடாட்சமாக உங்களைக் காக்கட்டும்! சிவோஹம்!

104 comments:

 1. நல்ல நோக்கில் எழுதி இருக்கிறீர்கள்.
  ஒரே ஒரு தகவல்,எனது தொடர்புகளின் படி,திருமுறைகள் சிதம்பரத்தில் மறு அரங்கேற்றம் பெற மடங்களிம் ஆதீன கர்த்தர்களும் பின்னனியில் உதவியதாகவே அறிகிறேன்.
  குறைந்தபட்சம் ஆவடுதுறை,குன்றக்குடி மடங்களைச் சேர்ந்தவர்கள்.
  தீர்க்கமான நடவடிக்கைக்குக் காரணமான முதல்வர் மு.க. பாராட்டுக்குரியவர்.

  ReplyDelete
 2. நல்ல அருமையான யோசனைகள் ! அவர்கள் பின்பற்றினால் நலம்.

  ReplyDelete
 3. இதை அவர்களுக்கு எழுதி அனுப்பியிருக்கீங்களா..?

  கருவறையில் நுழைந்தால் என்ன தவறு..விளக்க முடியும்மா..?

  எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால், கருவறையில் வேற்று சாதியினர் நுழையத் தானே செய்வார்கள்..அப்போது பாதகமில்லையா..

  பு.த.செ.வி

  ReplyDelete
 4. தேவையான இடத்தில் ”Bold” ஆக சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 5. nalla analyse pannee muthaipai azhagaga eluthi irukireerkal

  paarpom...
  manithan thannudaiya pidivatha kunathai vittu vittu,AVAN ORUVAN NINAIVILAE saeyal pada kattukondal yethu vambu.. yethu seithalum avanukkaka entu ninaiyungal...naam yaar....
  ellam avanidam vittuvidungal..

  ReplyDelete
 6. //TBCD said...
  இதை அவர்களுக்கு எழுதி அனுப்பியிருக்கீங்களா..?//

  டிபிசிடி அண்ணா
  ரெண்டு நாளைக்கு முன்னாடியே, ஆறுமுகச் சாமி ஐயாவுக்கு மட்டும் இங்கிருந்து தபாலில் அனுப்பி வைத்தேன்! அது போய் சேர ஒரு வாரம் பிடிக்கும்!

  அப்போ அதைப் பதிவாப் போடணும்-னு எண்ணம் வரல! பதிவுலகில் பேசிக் கிழிப்பதை விட ஆக்கப்பூர்வமாய் ஏதாச்சும் செய்யணும்னு தான் அப்போ தோனியது!

  ஆனா இன்று காலை வந்த செய்திக்குப் பிறகு தான் அவருக்கு எழுதியதில் சிறு மாற்றம் செய்து பதிவாப் போட்டேன்!
  தீட்சிதர்களுக்கு அப்போ எழுதவில்லை! இப்ப தான் சிவராத்திரி அதுவுமா கண் முழிச்சி எழுதினேன் :-)

  ReplyDelete
 7. //எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால், கருவறையில் வேற்று சாதியினர் நுழையத் தானே செய்வார்கள்..அப்போது பாதகமில்லையா..//

  பாதகமே இல்லை!
  முறையாகச் சிவ தீட்சையோ இல்லை வேறு சமய தீட்சையோ பெற்ற பின் எந்தச் சாதி அர்ச்சகர் வேண்டுமானாலும் அந்தந்தக் கருவறைக்குள் நுழையலாம்!
  இதுல சாதி எங்கிருந்து வந்துச்சி?
  Just Qualify before you Enter! அம்புட்டுத் தான்!

  கருவறைக்குள் சாதி மதப் பாகுபாடு, ஏன், ஆண்-பெண் பாகுபாடு என்பது கூட ஆகமத்தில் இல்லை! பாஞ்சராத்ர ஆகமம்-ன்னு ஒன்னு இருக்கு! அது Free for All! :-)
  நமக்கு அதெல்லாம் தெரியாததால் கொஞ்ச நாள் ஏமாத்திக்கிட்டு இருந்தாய்ங்க! :-)

  இன்னொரு பதிவு உங்களுக்கும் கோவி அண்ணாவுக்கும் ஸ்பெசலான முறையில் தயாராகிக்கிட்டு இருக்கு! :-) அதில் எண்ணெய் வணிகச் செட்டியார் ஒருவர் கருவறைக்குள் இருப்பாரு! அந்தணர் குலத்தில் பிறந்த இன்னொருத்தர் தகுதி பெறாததால், வெளியே நின்னுக்கிட்டு செட்டியாரிடம் ரிக்வெஸ்ட் போடுவாரு! சுமார் அறுநூறு ஆண்டுக்கு முன்பே இப்படி ஒரு புரட்சி! :-)

  ReplyDelete
 8. ச்//6. இதைச் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்! முடிந்தால் ஆலயப் பொறுப்பை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்! //
  நாராயணா!
  ஏன் ஐயா மத்த இடங்கள்ல அடிக்கற கொள்ளை போதாதா? இதுவுமா?

  ReplyDelete
 9. //அதைத் துடைத்து எறிவது தான், தற்போது உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!//

  When you say this...

  They did this:


  மறுபடியம் பரிகார பூஜை - தீட்சிதர்கள் மீண்டும் விஷமம்!
  வியாழக்கிழமை, மார்ச் 6, 2008
  இலவச நியூஸ் லெட்டர் பெற  சிதம்பரம்: ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாடிச் சென்ற பின்னர், கோவிலைக் கழுவி பரிகார பூஜை செய்துள்ளனர் நடராஜர் கோவில் தீட்சிதர்கள். இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  கடந்த சில நாட்களாக சிதம்பரமே பெரும் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. தமிழா, தீட்சிதர்களா என்ற பெரும் கேள்விக்கு விடை காண முடியாமல் சிதம்பரம் மக்கள் பெரும் டென்ஷனில் உள்ளனர்.

  சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பலத்தில் (கோவில் கருவறை) தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை பாட கோரி சிவனடியார்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

  இப்படிப் பாட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்காத கோவில் தீட்சிதர்கள், தேவாரம் பாட ஓதுவார்களை அடித்து விரட்டினர். தடுக்க வந்த போலீஸாரையும் தாக்கினர்.

  இதுதொடர்பாக 11 தீட்சிதர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தேவாரம் உள்ளிட்டவற்றை பாடுவது யார் தடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்தது.

  இந்த நிலையில் நேற்று விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 25 பேர் தாங்கள் தேவாரம், திருவாசகம் பாடவிருப்பதாக முறைப்படி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கால்துறையிடம் தெரிவித்தனர்.

  இதையடுத்து அவர்களில் ஐந்து பேர் மட்டும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென்று பாடலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே சென்ற 25 பேரும் திருச்சிற்றம்பலத்திற்குள் செல்ல முயன்றனர்.

  ஆனால் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின், எழுமலை, ரவி, முருகன், சண்முகம் ஆகியோர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஐந்து பேரும் சட்டைகளை கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.

  அவர்களுடன் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார், டி.எஸ்.பி. செந்தில்வேலன் உள்ளிட்டோரும் சட்டைகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.

  மரியாதை செய்த தீட்சிதர்கள்:

  உள்ளே சென்ற 5 பேரும், தேவாரத்திலிருந்து ஒரு பாடலையும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலையும் மொத்தம் 20 நிமிடங்கள் பாடினர். அதன் பின்னர் அவர்களுக்கு தீபாரதானை காட்டி, மாலை அணிவித்து, பட்டாடை அணிவித்து தீட்சிதர்கள் மரியாதை செய்தனர்.

  தீ்ட்டு கழிப்பு:

  ஆனால் அதன் பிறகுதான் குழப்பம் நடந்துள்ளது. மாலை, மரியாதையுடன் வரவேற்று ஓதுவார்களை அனுப்பி வைத்த தீட்சிதர்கள், அதன் பிறகு திருச்சிற்றம்பலத்தை கழுவி, பரிகார பூஜை நடத்தி தீட்டுக் கழித்துள்ளனராம்.

  இது சிதம்பரத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களையும், சிவனடியார்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், ஓதுவார்களும் சிவனடியார்களும் தேவாரம் பாடி விட்டு போன பின்னர் திருச்சிற்றம்பலத்தை நன்றாக குழு, தீட்டுக் கழித்து, பரிகார பூஜை செய்துள்ளனர் தீட்சிதர்கள்.

  இது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெரும் இழுக்கு விளைவிக்கும் செயலாகும். இந்த செயலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  தீட்சிதர்கள் பரிகார பூஜை செய்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் விடுதலை:

  இதற்கிடையே, கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 46 பேரும் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர். முதல்வர் கருணாநிதியின் உத்தரவைத் தொடர்ந்து இவர்கள் கடலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

  இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவின் நகல், சிதம்பரம் 2வது குற்றவியல் நீதிபதி வசந்தியிடம் வழங்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

  இந்த உத்தரவு கடலூர் சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. அதன் பேரில் ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 33 பேரும், தீட்சிதர்கள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

  அதேபோல கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 2 சிறுவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

  சிறையிலிருந்து வெளிவந்த ஆறுமுகச்சாமியை அவரது ஆதரவாளர்கள் திரளாக கூடி வரவேற்று அழைத்துச் சென்றனர். ஆறுமுகச்சாமி கூறுகையில், நாளை (இன்று) நான் மீண்டும் நடராஜர் கோவிலுக்குச் சென்று தேவாரம் பாடவுள்ளேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். அனைவரும் இன வேறுபாடின்றி தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாட வேண்டும். தமிழ் மொழி வளர வேண்டும் என்றார்.

  அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கு போராட்டக் குழுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜு நன்றி தெரிவித்தார்.

  இன்று நாட்டியாஞ்சலி:

  இத்தனைக் குழப்பத்திற்கு மத்தியில் வருடா வருடம் நடக்கும் நாட்டியாஞ்சலி விழா இன்று சிதம்பரத்தில் தொடங்குகிறது.

  5 நாட்களுக்கு நடைபெறும் இந்த நாட்டிய விழாவில், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

  சிவனடியார்கள், தீட்சிதர்கள் மோதல் தொடர்பாக பதட்டம் நிலவுவதால் நாட்டியக் கலைஞர்களுக்கும், நாட்டியாஞ்சலி விழாவுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 10. //அதைத் துடைத்து எறிவது தான், தற்போது உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!//

  When you say this...

  They did this:

  மறுபடியம் பரிகார பூஜை - தீட்சிதர்கள் மீண்டும் விஷமம்!
  வியாழக்கிழமை, மார்ச் 6, 2008
  இலவச நியூஸ் லெட்டர் பெற  சிதம்பரம்: ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாடிச் சென்ற பின்னர், கோவிலைக் கழுவி பரிகார பூஜை செய்துள்ளனர் நடராஜர் கோவில் தீட்சிதர்கள். இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  கடந்த சில நாட்களாக சிதம்பரமே பெரும் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. தமிழா, தீட்சிதர்களா என்ற பெரும் கேள்விக்கு விடை காண முடியாமல் சிதம்பரம் மக்கள் பெரும் டென்ஷனில் உள்ளனர்.

  சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பலத்தில் (கோவில் கருவறை) தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை பாட கோரி சிவனடியார்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

  இப்படிப் பாட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்காத கோவில் தீட்சிதர்கள், தேவாரம் பாட ஓதுவார்களை அடித்து விரட்டினர். தடுக்க வந்த போலீஸாரையும் தாக்கினர்.

  இதுதொடர்பாக 11 தீட்சிதர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தேவாரம் உள்ளிட்டவற்றை பாடுவது யார் தடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்தது.

  இந்த நிலையில் நேற்று விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 25 பேர் தாங்கள் தேவாரம், திருவாசகம் பாடவிருப்பதாக முறைப்படி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கால்துறையிடம் தெரிவித்தனர்.

  இதையடுத்து அவர்களில் ஐந்து பேர் மட்டும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென்று பாடலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே சென்ற 25 பேரும் திருச்சிற்றம்பலத்திற்குள் செல்ல முயன்றனர்.

  ஆனால் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின், எழுமலை, ரவி, முருகன், சண்முகம் ஆகியோர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஐந்து பேரும் சட்டைகளை கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.

  அவர்களுடன் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார், டி.எஸ்.பி. செந்தில்வேலன் உள்ளிட்டோரும் சட்டைகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.

  மரியாதை செய்த தீட்சிதர்கள்:

  உள்ளே சென்ற 5 பேரும், தேவாரத்திலிருந்து ஒரு பாடலையும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலையும் மொத்தம் 20 நிமிடங்கள் பாடினர். அதன் பின்னர் அவர்களுக்கு தீபாரதானை காட்டி, மாலை அணிவித்து, பட்டாடை அணிவித்து தீட்சிதர்கள் மரியாதை செய்தனர்.

  தீ்ட்டு கழிப்பு:

  ஆனால் அதன் பிறகுதான் குழப்பம் நடந்துள்ளது. மாலை, மரியாதையுடன் வரவேற்று ஓதுவார்களை அனுப்பி வைத்த தீட்சிதர்கள், அதன் பிறகு திருச்சிற்றம்பலத்தை கழுவி, பரிகார பூஜை நடத்தி தீட்டுக் கழித்துள்ளனராம்.

  இது சிதம்பரத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களையும், சிவனடியார்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், ஓதுவார்களும் சிவனடியார்களும் தேவாரம் பாடி விட்டு போன பின்னர் திருச்சிற்றம்பலத்தை நன்றாக குழு, தீட்டுக் கழித்து, பரிகார பூஜை செய்துள்ளனர் தீட்சிதர்கள்.

  இது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெரும் இழுக்கு விளைவிக்கும் செயலாகும். இந்த செயலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  தீட்சிதர்கள் பரிகார பூஜை செய்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் விடுதலை:

  இதற்கிடையே, கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 46 பேரும் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர். முதல்வர் கருணாநிதியின் உத்தரவைத் தொடர்ந்து இவர்கள் கடலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

  இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவின் நகல், சிதம்பரம் 2வது குற்றவியல் நீதிபதி வசந்தியிடம் வழங்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

  இந்த உத்தரவு கடலூர் சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. அதன் பேரில் ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 33 பேரும், தீட்சிதர்கள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

  அதேபோல கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 2 சிறுவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

  சிறையிலிருந்து வெளிவந்த ஆறுமுகச்சாமியை அவரது ஆதரவாளர்கள் திரளாக கூடி வரவேற்று அழைத்துச் சென்றனர். ஆறுமுகச்சாமி கூறுகையில், நாளை (இன்று) நான் மீண்டும் நடராஜர் கோவிலுக்குச் சென்று தேவாரம் பாடவுள்ளேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். அனைவரும் இன வேறுபாடின்றி தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாட வேண்டும். தமிழ் மொழி வளர வேண்டும் என்றார்.

  அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கு போராட்டக் குழுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜு நன்றி தெரிவித்தார்.

  இன்று நாட்டியாஞ்சலி:

  இத்தனைக் குழப்பத்திற்கு மத்தியில் வருடா வருடம் நடக்கும் நாட்டியாஞ்சலி விழா இன்று சிதம்பரத்தில் தொடங்குகிறது.

  5 நாட்களுக்கு நடைபெறும் இந்த நாட்டிய விழாவில், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

  சிவனடியார்கள், தீட்சிதர்கள் மோதல் தொடர்பாக பதட்டம் நிலவுவதால் நாட்டியக் கலைஞர்களுக்கும், நாட்டியாஞ்சலி விழாவுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 11. Hello Ravi shankar

  what are you writing a funny thing.

  you know the History of Chidambaramµ? then why you put your neg on it?? usless sentence you are used see under.

  1."பாடி முடித்து விட்டுப் போகட்டும்!"
  who are you say like this ?? This temple is our Tamilnadu peoples we have all rights it will be reach one bye one ok.we dont won't any one permision.

  2.
  "உங்களுடன் வந்த அரசியல் கட்சிகள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் கழண்டிக் கொள்ளும்! பிரச்சனைகள் இல்லாத இடத்தில் அவர்களுக்கு வேலை இருக்காதே"

  And second one Ravi every one have their own work and responsiblity
  you do not think they are confuse that event. they are one importance reason the govt put the rule because they are love Tamil peole they are not do work like you aboart to cheat our india. so you are not qualifed say lilke this.

  "பாஞ்சராத்ர ஆகமம்" ??? appdi na yanna Ravi ?? that akkaman we follow means our contry goes up within a week?? so you are prof yourself you are study fool.

  First you resign your USA job and come India we can join togeather make many Revolution work here.

  shiva
  Pondicherry.

  ReplyDelete
 12. //6. இதைச் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்! முடிந்தால் ஆலயப் பொறுப்பை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்! அதற்கு ஈடாக உங்கள் தேவைகளை அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்! நீங்களாகக் கொடுக்கும் போது உங்கள் மதிப்பு கூடத் தான் செய்யும்!//


  ஆறுமுகசாமியைப் போராளி ஆக்கியவர்களின் எண்ணமே கோயிலை எடுத்துக் கொள்ளும் எண்ணத்தில் தான். பின் இந்தக் கோயிலிலும், சிறப்புக் கட்டணங்கள், உண்டியல்கள், பிரசாத ஸ்டால்கள் போன்றன ஏற்பட்டு நடராஜரும் வியாபாரப் பொருள் ஆகலாம். அல்லது எங்க ஊர்ப் பெருமாள் போல்ப் பிச்சை எடுக்கவும் நேரிடலாம். ஏனெனில் நடராஜருக்கு என்று சொத்து எதுவும், கிடையாது, அனைவரும் நினைக்கிறாப் போல். கட்டளைகளின் உதவியினாலேயே அன்றாட வழிபாடுகள், உற்சவங்கள், மற்றக் கோயிலின் செலவுகள் அனைத்தும் நடைபெறுகிறது. பெரிய கட்டளைதாரர்கள், அதாவது ராஜா சர் செட்டியார் போன்றவர்களின் பெரிய பணக்காரக் குடும்பங்களும், பணமாய்க் கொடுப்பதாயும் தெரியவில்லை. பொருளாகத் தான் வருகின்றன. ஆகவே நிறையவே வருமானத்தை எதிர்பார்த்துக் கொண்டு அரசு எடுத்துக் கொண்டால் ஏமாற்றமே நேரிடும். உண்மை நிலவரம் தெரியாமல் ஏதோ அங்கே பணம் பொன் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவதாய் நினைப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 13. அப்புறம் கனகசபையில் கட்டளைதாரர்கள் மட்டுமே அவங்க கட்டளை வழிபாடு நடைபெறும் சமயம் மட்டுமே செல்லும்படியாக இருந்தது, காலப் போக்கில் சிலரின் தவறான வழிகாட்டுதலால், பணம் வாங்கிக் கொண்டு கோயில் ஊழியர்கள் அனுமதிக்கிறார்கள். :((((((

  ReplyDelete
 14. கருவறைக்குள் நுழைவது ரொம்பவே சுலபம் அரசு ஆணையினால் என்று நினைப்பவர்களுக்கு"
  அதே அரசு, ஆகமங்களை முறைப்படிக் கற்றவர்கள் நுழையலாம் என்று சொல்லி இருப்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகமங்களைக் கற்பது அப்படி ஒண்ணும் சுலபமான காரியமே இல்லை. சும்மா படிச்சுப் பரிட்சை எழுதிப் பாஸ் செய்வது போல் இல்லை, அதற்கென உள்ள வழிமுறைகளைக் கட்டாயமாய்ப் பின்பற்ற வேண்டும். சிலரால் முடியாமல் பாதியிலேயே திரும்பி வந்தவர்களும் உண்டு.

  ReplyDelete
 15. புதுச்சேரி சிவனாரே!
  ரொம்ப சந்தோசமுங்க!

  //1."பாடி முடித்து விட்டுப் போகட்டும்!"
  who are you say like this ?? This temple is our Tamilnadu peoples we have all rights it will be reach one bye one ok.we dont won't any one permision//

  அதாச்சும் என்னான்னா, கண்ணுல விளக்கெண்ணைய விட்டுகிட்டு, வரிக்கு வரி வலை வீசறவங்க தெரியுமுங்களா? சாரத்தை விட்டு ஓரத்தில் நிப்பாங்க!

  நீங்க எப்படிங்க இப்படிக் கரீட்டா மார்க் பண்ணிச் சொல்லி இருக்கீங்க?

  "பாடி முடித்து விட்டுப் போகட்டும்"-ன்னு நான் எழுதினதைத் தேடிப் பிடிச்சி, எங்க வெட்டணுமோ வெட்டி, தனியாச் சத்தம் போட்டுப் படிச்சிப் பாருங்க! :-)
  "போனாப் போவுதுடா, பாடி முடிச்சிட்டு போவட்டும்! அப்பறம் பாத்துக்கலாம்"-அப்படிங்கற தொனி தெரியுது-ல்ல? எம்புட்டு ஆணவம் எனக்கு? இந்த ஒத்தை வரியை மட்டும் எடுத்துக்கிட்டுப் போய் எங்க கொளுத்துணமோ அங்கே கொளுத்தினா இன்னும் நல்லாப் பத்திக்கும்! :-)

  ஐயா சாமீ...
  இப்ப தெரியுதுங்க சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எம்புட்டு கஷ்டம்-னு! உங்களை மாதிரி வரியாளர்களால் நெறியாளர்களுக்கு எம்புட்டுக் கஷ்டம்-னு நல்லாவே தெரியுது!

  என்ன சொன்னேன்னு இன்னொரு தபா படிங்க!
  //இவருக்குப் பூர்ண கும்பம் அளிப்பதை மரியாதைக் குறைச்சலாக நினைக்க வேண்டாம்!---அவர் மேடையில் பாடி முடித்து விட்டுப் போகட்டும்!---
  பேராசை: அவர் பாடும் போது, அவருடன் சேர்ந்து நீங்களும் பாடினால், அடியேன் மிக மிக மகிழ்வேன்!//

  //"பாஞ்சராத்ர ஆகமம்" ??? appdi na yanna Ravi ?? that akkaman we follow means our contry goes up within a week??
  First you resign your USA job and come India we can join togeather make many Revolution work here//

  நாடு அதுனால எல்லாம் ஒரே வாரத்துல உசரப் போயிடாது!
  உங்களை மாதிரி சிந்திச்சா மட்டும் தான் அப்படியெல்லாம் உயர்த்த முடியும்!
  இன்னும் ரெண்டு வாரத்துல அங்கிட்டு வரேன் பாருங்க! அப்போ இன்னும் இந்த study fool-kku உறைக்கிறாப் போலச் சொல்லுங்க! :-))

  Some people find several possible solutions for each problem!
  while some people find a problem with every possible solution!

  ReplyDelete
 16. தில்லைக்கூத்தனின் ஆடும் படம் அற்புதம்; உங்கள் பதிவும்தான்!

  ReplyDelete
 17. @கேஆர்ஸ் நன்று சொன்னீர்கள்.

  நல்லார்க்கும் வல்லார்க்கும் நடு நின்ற நடுவே.

  எல்லார்க்கும் பொதுவான வடுவே(வயதில் சிறியவரே)

  ReplyDelete
 18. கண்ணபிரான் ரவிசங்கர்,

  சிவபெருமான் மீதான உங்கள் பக்தியின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சகமனிதர்களது வழிபாட்டு உரிமையில் தலையிடும் தீட்சிதர்கள் பக்கம் நின்று இக்கடிதம் எழுதபடடிருக்கிறது்.

  அரசியல்வாதிகள் என்று நீங்கள் குற்றம்சாட்டியுள்ளவர்கள் சிதம்பரம் கோயிலில் போராட்டம் நடத்தவேண்டிய நிலை உருவாக்கியது யார்? கைலாயமலையிலிருந்து சிவன் வந்தபோது 3000 தன்னையும் சேர்த்து பேரோடு வந்ததாகவும், அவர்களில் 2999பேர் தீட்சிதர்களானதாகவும், சிவன் நடராஜராக நிலைகொண்டதாகவும் உருவகப்படுத்தி தங்களது கட்டுப்பாட்டில் பொதுசொத்தான கோயிலை, நிலத்தை, வழிபடும் உரிமையை வைத்திருப்பது வெறும் பக்தி அடிப்படையில் பார்க்கவேண்டிய பிரச்சனையல்ல.

  கோயிலகளில் அனைத்து 'சாதியினருக்கும்' வழிபடும் உரிமையை உருவாக்கியது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமைக்காக, தமிழ் மொழியில் வழிபாடு போன்ற உரிமைகளுக்காக போராடியது அரசியல் உணர்வுகொண்ட அமைப்புகள் தான். பக்திமான்கள் என்ற போர்வையில் பல கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள், உடமைகள், சிலைகள், ஆபரணங்கள் கொள்ளையிடப்படுகிறது.

  சிதம்பரம் கோயிலின் உள்ளே தீட்சிதர்கள் தமிழை அனுமதிக்காததால் நடத்திய போராட்டங்களுக்கு பின்னர், அரசு உத்தரவு வெளியிட்ட பின்னரும் தீட்சிதர்கள் தடுத்தனர். உரிமை மீறப்படும் இடம் கோயிலாக இருந்தாலும் சட்டத்தின் ஆளுகைக்கு உட்படும் நாட்டில் அதை செயல்படுத்த அரசிற்கும், முதல்வருக்கும் கடமையும், பொறுப்பும் உண்டு. உரிமைக்காக போராடும் உரிமை மக்களுக்கு உண்டு.

  பக்தி என்ற பரவத்தினுள் சிதம்பரம் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் தீட்சிதர்கள் நடத்தும் அட்டூழியங்களையும், கொடுமைகளையும் யாரும் வேடிக்கை பார்க்க வேண்டியதில்லை. அது தமிழ் வழிபாட்டு உரிமை மட்டுமல்ல. கோயிலுக்குள் தீட்சிதர்கள் மதுபானம் அருந்தி செய்கிற ரவுடித்தனங்களை ஒழிக்கவும், சிதம்பரம் கோயில் கணக்கிலிருந்து காணாமல் போகிற கோயில் நகைகள் மற்றும் கோயில் நிலங்கள் மீட்பு என்று இன்னும் விரிந்த தளத்தில் போராட்டத்தின் வடிவம் செல்லவேண்டிய தேவையுமிருக்கிறது.

  தீட்சிதர்களது சமூக வாழ்க்கையில் பாதிக்கப்படுகிற அவர்களது குடும்பத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் வாழ்க்கை மேம்பாடும் இதில் அடங்கும்.

  அதற்குள்ளாக அவசரப்பட்டு ஆறுமுகசாமி அவர்களுக்கு கடிதம் எழுதுவதில் பயனில்லை.

  தமிழகத்தின் கோயில்கள் பக்தி கூடங்களான வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றின் பகுதிகளை பதிவு செய்து வைத்துள்ள இடமும் கூட என்ற அடிப்படையில் அவை பகுத்தறிவாளர்களுக்கும் ஆய்வுகளுக்கான தரவுகள் உள்ள இடம். தீட்ச்சிதர்கள் உள்ளிட்ட தனிமனித/சாதி சமூகங்களிடமிருந்து அவற்றை விடுவித்து அரசின் கண்காணிப்பில் இயங்குவது அனைவருக்கும் நல்லது.

  ஆறுமுகச்சாமி அவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், அரசியல் அமைப்புகளும் தொடர்ந்து போராடும் தேவையுமிருக்கிறது.

  ReplyDelete
 19. கண்ணபிரான்,

  அதென்ன தமிழ்ச் சமயம், வைதிக சமயம்? இருப்பது ஒரே இந்து தர்மம், அதனுள் உள்ள சைவத்துறை தான். இது போன்ற பிளவுபடுத்தும் இந்து விரோதிகளின் சொல்லாடல்களை ஆன்மிகவாதி என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது.

  தமிழின் சைவத் திருமுறைகள் போன்றே பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் தொன்மையான வழிபாட்டு மரபுகள் உள்ளன. (பசவண்ணர் மற்றும் அவரது சீடர்களின் கன்னட வசன இலக்கியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு ஆயுள் வேண்டும் அதனைக் கற்றுத் தெளிவதற்கு) அதற்காக அதெல்லாம் ஒவ்வொரு சமயமாகி விடுமா? இதே போல கர்நாடக சமயம், கேரள சமயம், மராட்டி சமயம் என்றெல்லாம் யாரும் எங்கும் சொல்வதில்லை. இப்படி எழுதுவதற்கு முன் கொஞ்சமாவது யோசியுங்கள்.

  // இதைச் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்! முடிந்தால் ஆலயப் பொறுப்பை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்! அதற்கு ஈடாக உங்கள் தேவைகளை அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்! //

  போச்சு! இப்போது இந்த வேண்டாத பிரசினையை ஊதிப் பெரிதாக்கிய விஷமிகளின் பக்கமே நின்று பேசுகிறீர்கள். வெளிப்படையான இந்து விரோத, பிராமண துவேஷ அரசியலைக் கடைப்பிடிக்கும் கழக, கருநாநிதி அரசுகளின் கைகளில் சிக்கி ஏற்கனவே தமிழக ஆலயங்கள் சீரழிந்து கொண்டிருப்பது போதாதா? அவற்றை விடுவிக்கவே ஒரு பெரும் போராட்டம் தேவை. தில்லையையும் இதில் சேர்க்கணுமா?

  ரொம்ப நல்ல மனசு ஐயா உமக்கு.

  இது பற்றிய எனது பதிவையும் படிக்குமாறு வேண்டுகிறேன் -
  http://jataayu.blogspot.com/2008/03/blog-post.html

  ReplyDelete
 20. கருத்தாக்கங்களைச் சொல்லும் பலருக்கும் என் நன்றி!
  அனைவருக்கும் நான் முன் வைக்க விரும்பும் கருத்து இது தான்!

  அரசாணை சொல்வது தமிழில் "பாடலாம்" என்பது தான்!
  அடியேன் இங்கு சொல்ல வருவது தமிழில் "பாடணும்" என்பதற்கான யோசனைகள்.


  எவ்வளவு நாள் ஆறுமுகச்சாமி ஐயா மேடையேறிப் பாடிக் கொண்டு இருப்பார்? அவருக்குப் பிறகு யார்?
  தில்லையில் மட்டும் தானா இது எல்லாம்? தேவாரப் பாடல்களின் பொருள் கடினமாக இருந்தால் அடுத்த தலைமுறைக்கு அதைப் புரிய வைக்கப் போவது யார்? இல்லையென்றால் அதுவும் வடமொழி போலவே பின்னாளில் பொருள் புரியாமலேயே பாடப்பட்டு விடுமா?

  - இது போன்ற ஆன்மீக வளர்ச்சிக்கான சிந்தனைகளை நெறியாளர்கள் தான் கைக்கொள்ள வேண்டுமே தவிர அரசியலார் இதை கைக்கொள்ளப் போவதில்லை!

  நாக இளங்கோவன் ஐயா பதிவிலும் இதே கருத்தைத் தான் பின்னூட்டமாகச் சொன்னேன்! அவரும் புரிந்து கொண்டார்!

  பழைய கதைகளை கடைசி வரை பேசிக் கொண்டே இருக்கலாம்!
  அவன் கெட்டவன், இவன் அராஜகம் புடிச்சவன்னு சொல்லிக் கொண்டே இருப்பது முக்கியமான வேலையா

  இல்லை கிடைத்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி, தமிழ் வழிபாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது முக்கியமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

  கோயிலில் கொள்ளை, அரசியல் ஆதாயம் ஆக்குறது இது எல்லாத்தையும் சுத்தமா மறந்துவிட்டு ஒருத்தர் காலில் இன்னொருத்தரை விழச் சொல்லவில்லை!
  அந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் பின்னர் வந்து கொள்ளலாம்! தலையாய பிரச்சனைக்கு உண்டான தீர்வை மட்டும் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் காணுங்கள் என்று தான் சொல்கிறேன்!

  கோயிலுக்குள் அவங்க கொள்ளை அடிக்கறாங்க-ன்னு ஒரு சாரார் சொல்ல, கோயிலுக்கு வெளியே நிலத்தை ஆக்ரமிச்சவன் எல்லாம் யாருன்னு இந்தச் சாரார் கேட்க, மாறி மாறி மத்த விஷயம் தான் நடக்கப் போவுதே தவிர தமிழ்ப் பணி மட்டும் நடக்கப் போவதில்லை!

  ஆங்கிலத்தில் pareto principle-ன்னு சொல்லுவாங்க! அதாச்சும் vital few (முக்கியமான சில) / Trivial Many (மற்றவை பல)
  இப்போ "vital few"-இல் கவனம் தேவை என்பதைத் தான் சொல்லிக் கொள்கிறேன்!

  ReplyDelete
 21. //அசுரன் said...
  //அதைத் துடைத்து எறிவது தான், தற்போது உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!//

  When you say this...
  They did this:
  மறுபடியம் பரிகார பூஜை - தீட்சிதர்கள் மீண்டும் விஷமம்!//

  அசுரன் ஐயா! அது தட்ஸ் தமிழ்.காம் செய்தியா? விசாரணை முடியும் வரை சற்றுப் பொறுமை காக்கவும்!
  இது போன்ற தீட்டு கழிக்கும் மடத்தனங்கள் எல்லாம் நடக்காமல், ஆலய நடவடிக்கைகளிலேயே தமிழ் வழிபாடு ஒன்றி விட வேண்டும் என்பதற்காகக் தான் சில யோசனைகளைச் சொன்னேன்.

  அப்படி ஒன்றி விட்டால் தீட்டு கழித்தாலும் அதையும் தமிழில் தான் கழித்தாகணும்-னு ஆயிடும்! :-))
  அப்போ என்ன பண்ணுவாங்களாம்?

  இப்போது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகக் கச்சை கட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!
  கிடைத்திருக்கும் சின்ன ஒளியையும் போர் மேகங்கள் கொண்டு மறைக்கலாமா? என்பதையும் யோசித்துப் பார்க்க உங்களை வேண்டுகிறேன்.

  இது மாலை மலர் செய்தி:
  http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=254830
  இதற்கிடையே ஜெயிலில் இருந்து விடுதலையான சிவனடியார் ஆமுகசாமி தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் இன்று நடராஜர் கோவிலுக்கு சென்று திருச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடினார். சுமார் 15 நிமிடம் அவர் மனமுருக பாடினார். பாடி முடிந்ததும் சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு அவருக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

  பின்னர் தீட்சிதர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்த முயன்றனர். அதனை ஆறுமுகசாமி ஏற்கவில்லை. பாடி முடிந்த பின் வெளியே வந்த ஆறுமுகசாமி கூறும் போது, `எனது 7 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை' என்றார்.

  ஆறுமுகசாமி பாடும் போது போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் ஆகியோர் உடன் இருந்தனர்

  ReplyDelete
 22. //அறிவன் /#11802717200764379909/ said...
  நல்ல நோக்கில் எழுதி இருக்கிறீர்கள்//

  நன்றி அறிவன் ஐயா!

  //மடங்களிம் ஆதீன கர்த்தர்களும் பின்னனியில் உதவியதாகவே அறிகிறேன்.
  //

  பின்னணியில் இருந்து முன்னணிக்கு வரணும்!
  ஆறுமுகச்சாமி என்ற ஒருத்தர் வராமலேயே போயிருந்தால்?
  அப்போது இதைத் தீர்க்க யார் முன் வந்திருப்பார்கள்? :-(

  ReplyDelete
 23. //பொன்வண்டு said...
  நல்ல அருமையான யோசனைகள் ! அவர்கள் பின்பற்றினால் நலம்//

  நன்றி பொன்வண்டு!
  இதை நான் சொல்லி எந்த அளவுக்குப் பயன் இருக்கும்-னு தெரியாது!
  ஆனால் இதையே ஒரு மடத் தலைவர் எடுத்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் முயற்சிகளாவது இந்நேரம் தொடங்கப்பட்டு இருக்கும்!

  குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் இதை அனுப்பித் தொலைபேசலாமான்னும் தோணுது!

  ReplyDelete
 24. //வடுவூர் குமார் said...
  தேவையான இடத்தில் ”Bold” ஆக சொல்லியுள்ளீர்கள்//

  அட நீங்க வேற குமாரண்ணா! நான் அமெரிக்க அடிவருடி! தாய் மண்ணை மறந்துட்டு சுகவாசியா இருக்கேன்! சிதம்பரம் பத்தி எனக்கென்ன தெரியும்? இளையராஜாவின் திருவாசகப் பாட்டுக்குக் கூட பொருள் தெரியுமா எனக்கு? :-(

  "you are study fool. First you resign your USA job and come India"-ன்னு கீழே ஒரு நண்பர் கூப்பிடறாரு!

  ReplyDelete
 25. //Anonymous said...
  AVAN ORUVAN NINAIVILAE saeyal pada kattukondal yethu vambu.. yethu seithalum avanukkaka entu ninaiyungal...//

  நன்றி அனானி ஐயா!
  அதெல்லாம் சிவனாரே நேர வந்தாக் கூட, சண்டை சுவாரஸ்யத்தில் நாம மறந்துருவோம்!
  அவன் பாவி! அவன் முன்னாடி ஏன்யா வந்தீரு! தனியா வரது தானே-ன்னு கேட்டாக் கூட கேட்போம்! :-))

  ReplyDelete
 26. நீங்கள், குமரன் போன்ற பதிவர்கள் இது குறித்து நியாயமான கோணத்தில் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.

  ஜடாயு போன்றவர்கள் எழுதுவதெல்லாம் சட்டை செய்யாதீர்கள். இந்து மதத்தில் பிளவு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜடாயு போன்றவர்கள், தீட்டுக் கழிக்கும் தீட்சிதர்களின் கொழுப்பைக் குறைக்க வழி பார்க்கட்டும் முதலில். கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான் இந்த இந்துத்துவவாதிகளின் கதை. நாத்திகன் ஆளும் அரசாயினும், ஆத்திகனுக்கு அவனிஷ்டப்படி வழிபட வழி ஏற்படுத்திக் கொடுப்பதையும் தவறு என்கிறாரா இவர்? இந்துத்துவ ஓநாய்களின் போர்வையில், சிதம்பரத்தில் நடக்கும் உரிமை மறுப்பை பாரம்பரியம் என்று சப்பைக் கட்டு கட்டும் இவர்களால் சராசரி இந்துக்களுக்கு குந்துமணி அளவுகூட உபயோகம் இருக்குமா சொல்லுங்கள் பார்ப்போம். வைதீக சீர்கேடுகளை கேள்வி கேட்கவாவது முற்படும் உங்களைப்போன்ற ஆத்திக இந்துக்களைப் பார்த்தாலும் இவர்களுக்கு உள்ளூர எரியத்தான் செய்யும்.

  ReplyDelete
 27. உங்கள் நோக்கத்திற்கு என் பாராட்டு. (இந்த விஷயத்தில் நான் வந்து பாராட்டுவது எத்தனை பொருத்தமோ தெரியாது !?)

  ReplyDelete
 28. இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய இருக்குங்க. பார்ப்போம்..

  ReplyDelete
 29. பிரச்சனை நடந்த அன்று டிபிசிடி எழுதிய சிவன் எழுந்து ஓடவில்லை என்ற செய்தியில், பரிகார பூஜை நடக்கும் என்று சொல்லி இருந்தேன். அதைதான் செய்கிறார்களாம். பார்பனீய எண்ணங்கள், சித்தாந்தங்கள். எவ்வளவு கீழ்தரமாக இருக்கிறது. :(

  ஓதுவார் ஆறுமுகசாமி ஐயாவுக்கு நம்ம வீஎஸ்கே ஐயா சன்மானம் தரப்போறத சொன்னார்.
  :)))))))

  நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

  இந்த நிகழ்வை வெற்றி தோல்வி என்று விளம்பரப்படுத்தாமல், அனைவரும் பாராட்டி அதனை நிலைநிறுத்தவேண்டும் என்பதே எனது ஆசையும்.

  தென்னாடுடைய சிவன் தேவாரம் திருவாசகத்தை கொளுத்த விடுவில்லை.

  :)

  ReplyDelete
 30. //திவா said...
  நாராயணா!
  ஏன் ஐயா மத்த இடங்கள்ல அடிக்கற கொள்ளை போதாதா? இதுவுமா?//

  திவா
  என் கேள்வி இதான்!
  சந்தி சிரிக்கும் வண்ணம் கோயிலுக்குள் நடராசருக்கே களேபரம் நடக்கும் போது...
  அவன் கொள்ளை அடிக்கிறானே, இவன் கொள்ளை அடிக்கிறானே-ன்னு கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கலாமா?


  இதுக்குத் தான் முன்பொரு பதிவில் அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்ட தன்னாட்சி நிறுவனம் நிர்வாகம் செலுத்தினா நல்லா இருக்கும்னு சொல்லி இருந்தேன்!

  தீட்சிதர்கள் எல்லாம் ஒரு தொழிற்சாலைப் பணியாளர்கள் போல இருப்பார்கள்! இந்நேரம் தீட்டு கழிச்சாங்களா இல்லையான்னு ஆன் தி ஸ்பாட் விசாரணை நடந்திருக்கும், கம்பெனிகளில் நடப்பதைப் போல!
  ஒரு தொழிற்சாலையில் உதிரி பாகங்களைத் தூக்கி வீசும் தில் யாராக்காச்சும் வருமா? விசாரணையே இல்லாமல் வேலை போயிடும்! அதே சமயம் ஒரு க்ரெடிட் கார்டு கம்பெனி போல கொடுத்த கடனை எடுத்துதுவாங்க!

  ஆனா தன்னாட்சி நிறுவனம் எல்லாம் தூரத்துக் கனவு! எப்படி இருப்பினும் நிலங்கள் அரசுக்குத் தான் சொந்தம்! எந்த நேரமும் கையகப்படுத்தலாம் அல்லவா?

  ReplyDelete
 31. //பொதுப் பிரச்சனைகளில் உங்கள் நிலைப்பாட்டை அன்புடனும் பொறுப்புடனும் விளக்க வேண்டும்! தமிழில் அன்பே சிவம் என்பது உங்களுக்கும் தெரியும்! உங்க பாஷையில் சொல்லணும்னா
  மாதாச பார்வதீ தேவி
  பிதா தேவோ மகேஸ்வரஹ
  பாந்தவா சிவ பக்தாய = என் பந்துக்கள், உற்றார் உறவினர் எல்லாம் சிவனடியார்கள் என்று தான் உங்கள் ஸ்லோகமும் சொல்கிறது! பின்னர் ஏன் இத்தனை காழ்ப்பு?//

  வேறென்ன? ஜாப் செக்யூரிட்டிதான். 'ஸ்பெலஸைடு ஸ்கில்ஸ்' அங்கே ஏகபோக உரிமை ஆக இருக்க வேண்டுமென்ற ஆதங்கம்தான்.

  //கருவறைக்குள் நுழைவது ரொம்பவே சுலபம் அரசு ஆணையினால் என்று நினைப்பவர்களுக்கு"
  அதே அரசு, ஆகமங்களை முறைப்படிக் கற்றவர்கள் நுழையலாம் என்று சொல்லி இருப்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகமங்களைக் கற்பது அப்படி ஒண்ணும் சுலபமான காரியமே இல்லை. சும்மா படிச்சுப் பரிட்சை எழுதிப் பாஸ் செய்வது போல் இல்லை, அதற்கென உள்ள வழிமுறைகளைக் கட்டாயமாய்ப் பின்பற்ற வேண்டும். சிலரால் முடியாமல் பாதியிலேயே திரும்பி வந்தவர்களும் உண்டு.//

  பாஸ் பண்ண முடியுமா முடியாதான்னு படிக்கிறவங்க முடிவு செய்யட்டும். அதை நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம்? தங்களின் "அக்கறைக்கு" நன்றி.

  ReplyDelete
 32. //கீதா சாம்பசிவம் said...
  பின் இந்தக் கோயிலிலும், சிறப்புக் கட்டணங்கள், உண்டியல்கள், பிரசாத ஸ்டால்கள் போன்றன ஏற்பட்டு நடராஜரும் வியாபாரப் பொருள் ஆகலாம்//

  கீதாம்மா, இது பத்தி முன்பே தன்னாட்சி நிறுவனம் பத்திய பதிவில் பேசினோம் நினைவிருக்கா?
  ஆனா இங்கே நெலமை ரொம்பவே ரசாபாசமாப் போயிடிச்சி! நடராஜரின் அம்பலத்துக்குள்ளேயே ஒருத்தரை ஒருத்தர் வீசித் தாக்கிக்கிட்டு இருக்கும் போது, பிரசாத ஸ்டால் போட்டு ஏமாற்றுவதை எல்லாம் பேசிக் கொண்டிருக்க முடியுமா?

  //அங்கே பணம் பொன் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவதாய் நினைப்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்//

  கூரையே பொன்னுல வேய்ந்து இருக்காங்களே! :-)

  பணத்துக்காகத் தான் இம்புட்டு நாடகம்-னு நீங்க நினைச்சீங்கனா, அவங்களே ஒன்னும் கிடைக்காத போது விட்டுருவாங்க! அதனால் கவலை வேண்டாம்! ஆனால் இது பணத்துக்கு மட்டும் தான் நடக்குது-ன்னு நான் நினைக்கலை! ஆறுமுகச்சாமி ஏழு வருசமா போராடுறாரே!

  தீட்சிதர்களின் நடத்தையால் வெறுப்படைந்த பல பேரும் இப்ப ஒன்னாச் சேர்ந்துக்குறாங்கன்னு வேணும்னாச் சொல்லலாம்!

  ReplyDelete
 33. உள்ளேன் ஐயா.

  ReplyDelete
 34. //கீதா சாம்பசிவம் said...
  கருவறைக்குள் நுழைவது ரொம்பவே சுலபம் அரசு ஆணையினால் என்று நினைப்பவர்களுக்கு//

  எது எப்படியோ...
  ஆப்பரேசன் தியேட்டருக்குள் மருத்துவர் மட்டும் தான்!
  செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு அறைக்குள் விஞ்ஞானி மட்டும் தான்!
  ஆகமப் பூர்வமாக அமைக்கப்பட்ட கருவறைக்குள் ஆகமம் பயின்றவர் மட்டும் தான்! அவங்க பிள்ள குட்டி கூட கிடையாது!
  இது பக்தர்களுக்கு நல்லாவே தெரியும்! வீம்பு பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள்!

  பண்டரிபுரம் போன்ற விதிவிலக்குகள் உள்ளன! மரத்தடிப் பிள்ளையாரும் பேச்சியம்மனும் கூட விதிவிலக்குகள் தான்! அவை அட்ட பந்தனம்/கருவறை அமைப்பில் எழுந்தவை அல்ல!

  கருவறை (கர்ப்பகிருகம்) பற்றி உங்க ஏதோ ஒரு பதிவில் முன்னரே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன்! தாயின் கர்ப்பப்பை போன்ற அமைப்பு அது! ஆகமம் தேறிய எவரும் அதை மருத்துவர் போல் கையாள முடியும்!

  ReplyDelete
 35. //SP.VR. SUBBIAH said...
  தில்லைக்கூத்தனின் ஆடும் படம் அற்புதம்; உங்கள் பதிவும்தான்!//

  நன்றி வாத்தியார் ஐயா!
  நீங்களாவது புரிந்து கொண்டீர்களே! ஆசான் என்றுமே ஆசான் தான்!

  ReplyDelete
 36. // தி. ரா. ச.(T.R.C.) said...
  @கேஆர்ஸ் நன்று சொன்னீர்கள்.
  நல்லார்க்கும் வல்லார்க்கும் நடு நின்ற நடுவே//

  ஆமாங்க திராச ஐயா!
  நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவன் அவன்!
  கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு அவன்!

  //எல்லார்க்கும் பொதுவான வடுவே(வயதில் சிறியவரே)//

  பொதுவானவனா? எனக்குப் பொது மாத்து குடுக்காம இருந்தாச் சரி! :-)
  ஓ வடு-ன்னா சின்னப் பையன்ன்னு ஒரு பொருள் இருக்குல்ல!

  ReplyDelete
 37. //திரு said...
  கண்ணபிரான் ரவிசங்கர், சகமனிதர்களது வழிபாட்டு உரிமையில் தலையிடும் தீட்சிதர்கள் பக்கம் நின்று இக்கடிதம் எழுதபடடிருக்கிறது்//

  இல்லை என்று நடராஜப் பெருமான் திருவடி மேல் அறுதியிட்டு என்னால் சொல்ல முடியும் திரு அவர்களே!

  //கைலாயமலையிலிருந்து சிவன் வந்தபோது 3000 தன்னையும் சேர்த்து பேரோடு வந்ததாகவும், அவர்களில் 2999பேர் தீட்சிதர்களானதாகவும்//

  திருப்பியும் திருப்பியும் அங்க தான் வரீங்களே தவிர, தமிழ் வழிபாட்டை நிரந்தரமாக நிலைநிறுத்துவது பற்றி யோசிக்கவே மாட்டேன்ங்கறீங்க!
  அம்புட்டு வெறுப்பு குடியேறிப் போச்சு! :-(

  //கோயிலகளில் அனைத்து 'சாதியினருக்கும்' வழிபடும் உரிமையை உருவாக்கியது, ...வழிபாடு போன்ற உரிமைகளுக்காக போராடியது அரசியல் உணர்வு கொண்ட அமைப்புகள் தான்//

  கிழிஞ்சுது!
  அய்யா பெரியார் உருவாக்கியது அரசியல் அமைப்பு அல்ல! சமூக அமைப்பு! கடைசி வரை தேர்தலில் நிக்கவே இல்லையே! ஏதோ அரசியலார் தான் உரிமை வாங்கிக் கொடுத்தாங்க என்பதெல்லாம் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை தான்!

  பதவியில் இல்லாதப்பவே பெரியார் வைக்கம் போராட்டம் நடத்தி வென்று காட்டினார். பதவியில் உள்ள அரசியல்வாதிகள் இன்னும் கண்டதேவி பிரச்சனையை தீர்த்துக் கொண்டிருக்காங்க! இந்தக் கதையெல்லாம் இங்க விடாதீங்க! :-)

  பெரியார் தோன்றுவதற்கு அறுநூறு எழுநூறு வருசத்துக்கு முன்னரே இராமானுசர் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார்! சைதன்யர் கொள்ளைக்காரங்களை கோயிலுக்குள் கூட்டிச் சென்றார்!

  //அதற்குள்ளாக அவசரப்பட்டு ஆறுமுகசாமி அவர்களுக்கு கடிதம் எழுதுவதில் பயனில்லை//

  அதைச் சொல்லும் உரிமை உங்களுக்கும் இல்லை! நானும் அவசரப்பட்டு எதுவும் எழுதவும் இல்லை!
  ஆறுமுகச் சாமி ஐயாவைப் போராட்டத்தை விட்டு ஓடிவரச் சொல்லவும் இல்லை! அதன் தளத்தையும் பரிமாணத்தையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று தான் வேண்டுகோள் வைத்தேன்!

  ஐயாவும் அவர் விடுத்த அறிக்கையில் போராட்டம் ஒய்ந்ததாகச் சொல்லி உள்ளார்! ஆனால் ஓய்ந்து விடாது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கேனே! அதில் ஒரு வரி கூடவா உங்கள் கண்ணில் படவில்லை? :-(

  ReplyDelete
 38. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
  ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
  கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
  வானாகி
  நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.

  இரண்டு பக்கத்துக்கும் சொல்லியிருக்கீங்க. பாக்கலாம். எப்படி இதை எடுத்துச் செல்ல எந்நாட்டவர்க்கும் இறைவன் எண்ணியிருக்கிறான் என்று.

  தமிழ்மறைகள் ஓதியதன் பின்னர் நடந்தது சிவராத்திரிக்கான ஏற்பாடுகள் என்றும் அவை தீட்டு கழித்த சடங்குகள் இல்லை என்றும் படித்தேன். எத்தனை தூரம் உண்மையோ?

  ReplyDelete
 39. இந்திய அரசையும்,நீதிமன்றத்தையும் ஜனநாயக அமைப்பையும் அழிக்க துடிக்கும் ம க இ கவினர் அதே அரசு, நீதிமன்றம், ஜனநாயக அமைப்பின் மூலம் தான் இந்த வெற்றி சாத்தியமாயிருக்கிறது என்பதை கவனிக்க தவறிவிட்டனர். ஆயிரம் ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினை,இந்திய ஜனநாயக அமைப்பில் வெறும் ஏழே ஆண்டுகளில் தீர்க்கப்படுகிறது.

  தமிழ் பாடல்களான தேவாரமும் திருவாசகமும் மக்கள் மனதில் எத்தனை ஆழமாக பதிந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.இந்து மதத்தின் இரு சித்தாந்தங்களுக்கிடயே நடந்த இந்த சர்ச்சை ஜனநாயக முறையில் தீர்க்கப்பட்டது இந்துமதம் மக்களின் மதம் என்பதையும் பறைசாற்றுகிறது.

  இதில் உண்மையான வெற்றி இந்திய ஜனநாயகத்துக்குத்தான்.

  வாழிய பாரத மணித்திருநாடு.

  ReplyDelete
 40. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  திருப்பியும் திருப்பியும் அங்க தான் வரீங்களே தவிர, தமிழ் வழிபாட்டை நிரந்தரமாக நிலைநிறுத்துவது பற்றி யோசிக்கவே மாட்டேன்ங்கறீங்க!
  அம்புட்டு வெறுப்பு குடியேறிப் போச்சு! :-(//

  தீட்சிதர்கள் என்பவர்கள் யார் என்ற விளக்கம் என்னுடைய சொந்த கருத்தல்ல. தனிமனிதகள்/சகமனிதர்கள் மீது எனக்கு வெறுப்பு உள்ளது போன்ற தோற்றம் உருவாக்கும் குற்றச்சாட்டை படிக்க சிரிப்பு மட்டுமே :)))

  சகமனிதர்களை இன்னும் வெறுப்பதும், அதற்கு ஆகமங்கள், சாத்திரங்களை பயன்படுத்துவதும் யார்? ஆகமங்கள் யாரால் உருவாக்கப்பட்டன? இப்படிப்பட்ட கேள்விகளை யாராவது கேட்பார்களா என்ன? :)

  //கிழிஞ்சுது!
  அய்யா பெரியார் உருவாக்கியது அரசியல் அமைப்பு அல்ல! சமூக அமைப்பு! கடைசி வரை தேர்தலில் நிக்கவே இல்லையே! ஏதோ அரசியலார் தான் உரிமை வாங்கிக் கொடுத்தாங்க என்பதெல்லாம் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை தான்!

  பதவியில் இல்லாதப்பவே பெரியார் வைக்கம் போராட்டம் நடத்தி வென்று காட்டினார். பதவியில் உள்ள அரசியல்வாதிகள் இன்னும் கண்டதேவி பிரச்சனையை தீர்த்துக் கொண்டிருக்காங்க! இந்தக் கதையெல்லாம் இங்க விடாதீங்க! :-)//

  பெரியார் வெறும் சமூக இயக்கம் வைத்து சமூகசேவை மட்டும் செய்தது போன்ற பார்வை மெச்சத்தான் வேண்டும். அரசியல் பார்வையுடன் போராட்டங்களோடு கூடிய சமூக, அரசியல், பொருளாதார தளத்தில் பெரியார் போராடியது சிலகாலத்திற்குள் அவதார கதையாக மாற்றப்பட்டாலும் ஆச்சரியமுமில்லை. பதவியில் இருப்பவை அரசியல் இயக்கங்கள் என்பது புதிய விளக்கம் :)) ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ தோழர்களுக்கு இது தெரியல :)


  இராமானுசர் பற்றி இன்னொரு நேரம் உரையாடலாம்.

  "ஆகமங்களைக் கற்பது அப்படி ஒண்ணும் சுலபமான காரியமே இல்லை"யா? பள்ளியில் 'சும்மா பரிட்சைக்கு படிப்பது போன்ற' விசயமா என்ன? "சும்மா பரிட்சைக்கு படிக்கிற" பள்ளியில் கூட ஆசிரியருக்கு 'பயந்து' அடங்கி தான் இருக்கணும். ஆகமம் படிக்கிறது அவ்வளவு எளிதா என்ன? :)

  உங்கள் பண்பான பதில்களுக்கு நன்றி!

  ReplyDelete
 41. ரவி, உங்க பதிவை முழுசும் படிச்சேன். பின்னூட்டங்களையும் படிச்சேன்.

  மேன்மைகொள் சைவ நீதி ஓங்கு பெறல் வேண்டும். அருள்கொள் தீந்தமிழ் கோயிலில் தாங்கு பெறல் வேண்டும்.

  அதற்கு இது ஒரு தொடக்கம் என்று சொல்லலாம்.

  பிரச்சனை மொழியிலோ... வழிபாட்டு முறையிலோ இல்லை என்பது என் கருத்து. இது தன்னுடைய வேலையைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாகவே எனக்குத் தெரிகிறது. தேவாரம் பாடினாலே போதும்னா நெறைய பேரு போட்டிக்கு வந்திருவாங்களே.

  ஆனா...நீங்க சொன்னாப்புல இன்னும் செய்ய வேண்டியது நெறைய இருக்கு. செய்யப்படும்னு விரும்புறேன்.

  ReplyDelete
 42. //ஜடாயு said...
  அதென்ன தமிழ்ச் சமயம், வைதிக சமயம்? இருப்பது ஒரே இந்து தர்மம்...இது போன்ற பிளவுபடுத்தும் இந்து விரோதிகளின் சொல்லாடல்களை ஆன்மிகவாதி என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது//

  வாங்க ஜடாயு சார்!
  நான் ஆன்மீகவாதியே அல்ல! அப்படிச் சொல்லிக் கொண்டதும் இல்லை! :-)

  //நீங்கள் பெரிதும் மதிக்கும் வைதீக மடத் தலைவர்-தமிழ்ச் சமயத் தலைவர்-இவர்கள் இருவரின் முன்னிலையில்-இரு தரப்பும் சந்தித்துப் பேசுங்கள்!// என்று தான் சொல்லியுள்ளேன்!
  சிருங்கேரி மடம் வைதீக பீடம், குன்றக்குடியோ தமிழ்வழி ஆதீனம்! இல்லை என்கிறீர்களா? :-)
  இவர்கள் இருவரும் ஒரே சமயத்துக்குத் தான் தொண்டு புரிகிறார்கள்! இதை நான் எங்கும் மறுக்கவில்லையே!

  இப்படி ஆளாளுக்கு வார்த்தைகளை மட்டுமே பிடித்துக் கொண்டு, காரியம் ஆற்றாமல் இருப்பது தான் உண்மையில் வேதனை அளிக்கிறது!

  //பசவண்ணர் மற்றும் அவரது சீடர்களின் கன்னட வசன இலக்கியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//

  விஸ்வ குரு பசவண்ணாவின் லிங்காயத இயக்கம் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!

  //அதற்காக அதெல்லாம் ஒவ்வொரு சமயமாகி விடுமா? இதே போல கர்நாடக சமயம், கேரள சமயம், மராட்டி சமயம் என்றெல்லாம் யாரும் எங்கும் சொல்வதில்லை//

  ஹிஹி, பசவண்ணாவின் பாதையையே லிங்காயத தர்மம், பசவ சம்பிரதாயம்-ன்னும் சொல்லுவாய்ங்க! இங்கே இந்து தர்மத்துக்கும், சைவ நெறிக்கும் மாற்றா தமிழ்ச் சமயம்-ன்னு சொல்ல வரலீங்க! வைதீக மடம், தமிழ் மடம் இரண்டு தலைவர்கள் முன்னிலையிலும் பேசுங்க-ன்னு தானே சொன்னேன்! எதையும் ஒதுக்கவில்லையே! இப்படி வார்த்தைக்கு வார்த்தை பேதம் பாராட்டிக்கிட்டே இருந்தா எப்படி?

  //போச்சு! இப்போது இந்த வேண்டாத பிரசினையை ஊதிப் பெரிதாக்கிய விஷமிகளின் பக்கமே நின்று பேசுகிறீர்கள்//

  இதுல காமெடியைப் பார்த்தீங்களா? ஜடாயு என்னை அவங்க பக்கம் பேசுறேன்ன்னு சொல்றாரு! திருவோ இவங்க பக்கம் பேசறேன்ன்னு சொல்லறாரு! :-)
  நான் யார் பக்கமும் பேசலீங்க! இதுல என்ன பக்கம் வேண்டிக் கிடக்கு? இருப்பது ஒரே பக்கம் தான்! தெய்வத் தமிழ்! அவ்ளோ தான்!

  //ரொம்ப நல்ல மனசு ஐயா உமக்கு//
  அடக் கடவுளே! :-)

  ReplyDelete
 43. //தருமி said...
  உங்கள் நோக்கத்திற்கு என் பாராட்டு//

  நன்றி தருமி ஐயா!

  //(இந்த விஷயத்தில் நான் வந்து பாராட்டுவது எத்தனை பொருத்தமோ தெரியாது !?)//

  இதில் என்ன பொருத்தம் வேண்டி இருக்கு ஐயா? உங்கள் கருத்தைத் தடையின்றிச் சொல்லலாமே! மதிப்பு மிக்க கருத்துக்களை என்றும் மதிக்கத் தவறவே மாட்டேன் - அது மாற்றுக் கருத்தா இருந்தாக் கூட!

  ReplyDelete
 44. //ILA(a)இளா said...
  இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய இருக்குங்க. பார்ப்போம்..
  //

  என்ன சொல்றீங்க தல? ஒன்னும் புரியல! இன்னும் நிறைய என்ன இருக்கு? என் மூளைக்கும் புரியறாப் போல சொல்லறது? :-)

  ReplyDelete
 45. //Anonymous said...
  நீங்கள், குமரன் போன்ற பதிவர்கள் இது குறித்து நியாயமான கோணத்தில் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது//

  நன்றி! தனிப்பட்ட முறையில் எங்களை வரவேற்க எல்லாம் வேணாம்! :-)
  நல்ல தீர்வுகளை வரவேற்போம்!

  //இந்து மதத்தில் பிளவு குறித்து முதலைக்கண்ணீர் வடிக்கும் ஜடாயு போன்றவர்கள்//

  போச்சு! வெறுப்பு நிக்காது போலக் கீதே! :-)
  சரி அதையெல்லாம் டெம்பரரியா வுடுங்க! அப்பறம் பாத்துக்கலாம்!

  இப்ப என்ன தேவை-ன்னா தமிழ் வழிபாடு, சிற்றம்பலத்தில் இருந்து பொன்னம்பலத்துக்குள்ளும் பரவி ஓங்க வேண்டும்! அதை நல்லபடியா பண்ணுறத்துக்கு வழி தேடுவோம்! கட்சி கட்டுறது எல்லாம் பின்னால வச்சிப்போம்!

  ReplyDelete
 46. //கோவி.கண்ணன் said...
  பரிகார பூஜை நடக்கும் என்று சொல்லி இருந்தேன்//

  எனக்கு என்னமோ கோவி அண்ணா தான் பரிகார பூசைக்குப் புறா மூலமா பணம் அனுப்பி வச்சாரோ-ன்னு டவுட்டாக் கீது! இப்படி முன்னாடியே அருள்வாக்கு சொல்லுறாருன்னா சும்மாவா? :-)

  //அதைதான் செய்கிறார்களாம். பார்பனீய எண்ணங்கள், சித்தாந்தங்கள். எவ்வளவு கீழ்தரமாக இருக்கிறது. :(//

  பரிகார பூசை கன்ஃப்ர்ம்டா நடந்துச்சா-ன்னு விசாரணையில் தெரியும் வரை பொறுங்க அண்ணாச்சி!

  //ஓதுவார் ஆறுமுகசாமி ஐயாவுக்கு நம்ம வீஎஸ்கே ஐயா சன்மானம் தரப்போறத சொன்னார்.
  :)))))))//

  வுடமாட்டீங்க போலக் கீதே! அடுத்த கட்டத்துக்கு ரண்டி அண்ணகாரு! :-)

  //இந்த நிகழ்வை வெற்றி தோல்வி என்று விளம்பரப்படுத்தாமல், அனைவரும் பாராட்டி அதனை நிலைநிறுத்தவேண்டும் என்பதே எனது ஆசையும்//

  யப்பா! சூப்பர்! :-)

  //தென்னாடுடைய சிவன் தேவாரம் திருவாசகத்தை கொளுத்த விடுவில்லை//

  தேவாரத் திருவாசகத்தின் ஆத்மாவை எந்தக் கொம்பனும் கொளுத்த முடியாது! (Pardon me for my strong words...I rarely do this!)

  நெருப்பை நெருப்பில் போட்டுப் பொசுக்க முடியுமா என்ன?

  ReplyDelete
 47. //ஓகை said...
  உள்ளேன் ஐயா//

  ஓகை ஐயா! அடியேன் பதிவில் எதற்கு உள்ளேன் ஐயா? உங்க கருத்தைத் தாராளமாச் சொல்லுங்க!
  கருத்தை எதிர்கொள்வேனே தவிர தங்களை எதிர்கொள்ளவே மாட்டேன்! இந்தப் பதிவில் மற்றவரும் உங்களைப் பழித்துப் பேசாத வண்ணம் நகர்த்திக் கொள்வேன்! அன்புக்கு நன்றி!

  ReplyDelete
 48. அன்பே சிவமென எண்ண வேண்டும் என அறிவுரை சொல்லி இருக்கிறீர்கள். அவசியானதே. அன்பென்று என்று நினைத்திருந்தால் - ஒருவொருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பிரச்சனைகள் தலை தூக்காமல் இருந்திருக்கும்.
  ஆனால் இயற்கையாகவே நமக்கு இயந்துவிட்ட இந்த ஈகோ இருக்கிறதே - அது சும்மா இருக்கவிட்டால் தானே - நான், எங்கள் என்கிற எண்ணதை தூக்கி விட்டு, இரு தரப்பினரையும் பாடாய் படுத்துகிறது. அதற்கு ஒரே மருந்து - அன்பு. அன்பு செய்வார்களா, பார்ப்போம்.

  //மொழி வெறுப்பும் சிவம் ஆகாது!//
  இந்த வரிகளை ரசித்தேன். அது நாம் நம் அன்னிய மொழிகளை பாவிப்பதற்கும் பொருந்தும்.

  மற்றபடி, இந்தப் பிரச்சனையை நான் ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. தில்லை நடராஜன் சிவராத்ரியை முன்னிட்டு எல்லோரையும் தன்னை நினைக்கச் செய்த விளையாட்டாகவே கொள்கிறேன். இந்த மிதவையை பயன்படுத்திக் கொண்டு நீந்திக் கரை சேர்ந்திடுவாரும் இருப்பார்கள் என நம்புகிறேன்.

  ReplyDelete
 49. ரவிசங்கர்,

  உங்களுக்கு என் வீர வணக்கம்.

  நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நடுநிலையான பார்வை.

  பிரச்னை ஆகமம், மொழி, ஜாதி அடிப்படையிலேயே ஏற்பட்டுள்ளன.

  காலம் காலமாய் வடமொழியிலேயே பூஜை செய்து வந்த தீட்ஷிதர்கள் இன்றைக்கு தமிழில் செய்ய பூஜை வேண்டும், தமிழில் பாட வேண்டும் என்றதைக் கேட்டதும் துடித்துப் போகின்றனர். அதிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று திராவிட கருணாநிதி போட்ட உத்தரவு அவர்களுக்கு பாகற்காய்!

  கருணாநிதி ஆட்சி அமைத்தபோது, தட்டுடன் சென்று(அங்கேயும் தட்டை இவங்க விடலை) எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்றெல்லாம் பேசிப் பார்த்தார்கள். மஞ்சள் துண்டு போட்டிருந்தாலும் அவர் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.

  இந்த பிரச்னையை தீர்க்க ஒரே வழி இந்துக்களை இரண்டாக பிரித்து சமஸ்கிருத வழிபாடு முறைகளைக் கொண்ட (ப்ராமணர், சவுராஸ்டிரர், பிள்ளை, மற்ற சைவர்) அனைவரையும் சமஸ்கிருத இந்துக்கள் என்றும் தமிழ் வழிபாடு, தமிழ் மொழி மீது பற்று கொண்டவர்களை தமிழ் இந்து என்று இரண்டு மதமாக பிரித்து விடலாம்.

  அவ்வாறு பிரித்து விட்டால் இந்த மதக் கோவில்களுக்கு அவர்களும் அந்த மதக் கோவில்களுக்கு இவர்களும் செல்ல மாட்டார்கள். இஸ்லாம் இந்துக் கோவில்களுக்கு செல்ல மாட்டாதது போல பிரச்னை ஓய்ந்து விடும்.

  ஹிஹிஹி பின்ன என்ன சார்? பொறுமைக்கும் ஒரு அளவு இருக்குது இல்லியா?

  அல்லது நேரம் பிரிக்கலாம். தமிழில் பாடம் இந்த மணியில் இருந்து இந்த மணி வரை. சமஸ்கிருதத்தில் பாட இந்த மணியில் இருந்து இந்த மணி வரை. தீட்ஷிதர் பூஜை செய்ய இந்த மணி. தமிழக அரசின் அர்ச்சகர் பள்ளியில் படித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சனை செய்ய இந்த நேரம்னு பிரித்து கொடுக்கலாம். சண்டை போடாம அவங்கவங்க அவங்கவங்களுக்கு பிடித்த மொழியில் இறைவனை கும்பிடட்டும்.

  கருணாநிதி தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்காமல் நீதிமன்ற உத்தரவின் படி நடப்பது சற்று மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து சாதியைச் சேர்ந்த பெரிய மனிதர்கள், தருமபுரம், திருவாடுதுறை ஆதீனம், இன்னும் உள்ள ஆன்மீக பெருந்தலைகள், தீட்ஷிதர்கள், ஓதுவார்கள், இல.கணேசன் போன்ற பாஜகவினர், சென்னை பார்ப்பன சங்கத்தினர் என அனைவரையும் அழைத்து விவாதித்து பெரும்பான்மை யானவர்களின் முடிவுகளைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். அதுதான் நியாயமானதும் கூட. அவ்வப்போது பிரச்னை ஏற்படும் போது மட்டும் தலைக்காட்டாமல் நிரந்தர அமைதிக்கான தீர்வாக அது அமைய வேண்டும்.

  ஆறுமுகச்சாமி உள்ளிட்ட தமிழ்மேல் பக்தி கொண்ட ஆன்மீகர்கள் உண்மையிலேயே பக்தியுடன் இந்த பிரச்னையில் ஈடுபட்டால் அவர்களை பாராட்ட வேண்டும். அவர்களை மற்ற கோவில்களுக்கும் சென்று பாடுமாறு பரிந்துரை செய்ய வேண்டும்.

  கீதா சாம்பசிவம் சொல்வதைப் பார்த்தால் திராவிடர்களின் கைகளுக்கு கோவில்கள் வந்தால் அவர்கள் கொள்ளையடிப்பார்கள் என்பது போலவும், பார்ப்பனர்களின் கைகளில் கோயில் இருந்தால் கொள்ளை அடிக்க மாட்டார்கள் என்பது போலவும் இருக்கிறது. இது தவறான கருத்து. எந்த மதத்தில், எந்த ஜாதியில், எந்த மொழியில்தான் திருடன் இல்லை? சைக்கிள் திருடிய பிராமனரைப் பற்றி நான் ஏற்கெனவே பதிவு போட்டிருக்கிறேன்!

  அர்ச்சகர் பள்ளியில் முறைப்படி படித்தவர்கள் அனைவரும் அர்ச்சனை, பூஜை, பஜனை செய்ய வழிவகை செய்ய வேண்டும். பழையனவற்றை விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் தீவிரவாத ப்ராமனர்கள் எதிர்த்தால் அவர்களைத் தூக்கி சிறையில் போட வேண்டும்.

  கீதா சாம்பசிவம் சொல்லும் பெருமாள் கோவில் ஏழையாக இருக்கிறதென்றால் அதற்கான நிலங்கள், சொத்துக்களை எவனோ ஏப்பம் விட்டு விட்டான் என்று தெரிகிறது. ஊருக்கு ஒரு கோயில் பத்தாதா? மூலைக்கு மூலை கோயில் கட்டி வைத்துக் கொண்டு சரிவர பராமரிக்க முடியாமல் கிடப்பதற்கு ஒன்றே கட்டி அதையும் நன்றே பராமரித்தல் மிக நன்று.

  "இருப்பது ஒரே இந்து தர்மம், அதனுள் உள்ள சைவத்துறை தான்" என்றும் "நீங்கள் விஷமிகளின் பக்கம் நின்று பேசுவதாக"வும் ஜடாயு சொல்லி இருக்கின்றார். எனக்கு நீங்கள் பேசுவது நடுநிலையாக படும்போது அவருக்கு அது ஒரு பக்க சார்பாக படுவதுதான் வேடிக்கை.

  இந்த இந்து தர்மம், சைவம், அசைவம், வைணவம், ஆகமம், கருமாந்திரம் இவற்றைத்தான் நானும் கடுமையாக எதிர்க்கிறேன். மக்களிடம் விழிப்புணர்வு வரவும் பகுத்தறிவினை கொண்டு செல்லும் முகமாக இருக்கிறது எனது எழுத்துகள்.

  வாழ்த்துகள் ரவி.

  ReplyDelete
 50. //போச்சு! வெறுப்பு நிக்காது போலக் கீதே! :-)//

  திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை என்பதை வேறு துருத்தியாக்கி திருவாசகத்தைப் பாடவிடாமல் சராசரித் தமிழ் இந்து வாயில் சமஸ்கிருத லிங்கத்தைச் சொருகும் வைதீகக் கொழுப்புக்கு பாரம்பரியம் பாரத தேசம் முழுமைக்குமான இந்து தருமம் அது இதென்று வக்காலத்து வாங்கி சாத்தானோபன்னியாசம் செய்யும் ஜடாயு மாதிரி காரியக்கார இந்துத்துவ கும்பல்களுக்கு, அதனதன் தரத்துக்கேற்ற மாதிரித்தான் மரியாதை கொடுத்திருக்கிறது. வெறுப்பு நிக்காது போல கீதே என்று நீங்கள் சாஃப்ட் கார்னர் கொடுப்பதை பிறகு வைத்துக்கொண்டு, உள்ளதை உள்ளபடி சொல்லப் பாருங்கள். தீ என்றால் வாய் வெந்துவிடாது. உங்கள் வயசுக்கும் வளர்ப்புக்கும் திரு மாதிரி ஆட்கள் சொல்லுவதும் கூட ஏதோ வெறுப்பு அரசியலாகத் தெரிகிறது. அவாள் நடந்து வரும் பாதையில் எதிர்க்காற்று அடித்தால் எதிர்க்காற்று வீசும் திசையில் வரும் சூத்திரன், சந்துக்குள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்த கிராமங்களுக்கு போய் பார்த்திருக்கிறீர்களா? அதெல்லாம் எங்கே பார்த்திருக்கப் போகிறீர்கள்?

  //நன்றி! தனிப்பட்ட முறையில் எங்களை வரவேற்க எல்லாம் வேணாம்! :-)//

  உங்களை வரவேற்கவோ பீடத்தில் உட்கார்த்தவோ இல்லை. சரியென்று பட்டதைச் சொன்னது - அவ்வளவே. விலகி நின்று, நீங்கள் எவர் பக்கமும் இல்லை என்று காட்ட முனைவதற்கு நன்றி. உங்களை ஏன் சிரமப்படுத்தப்போகிறேன்? உங்களது நன்றிக்கு மிகப்பெரிய நம்ஷ்காரம்!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 51. இன்றைய தினமணி கட்டுரை

  ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால்
  - அர்ஜுன்சம்பத் - தலைவர் - இந்துமக்கள் கட்சி

  சைவத்தின் தலைநகரம் என்று போற்றப்படும் சிதம்பரத்தில் தமிழுக்கும், சைவத்துக்கும் ஒரு மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கும் சதித் திட்டம் திட்டமிட்ட ரீதியில் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் சிதம்பரம் கோயிலில் நடைபெற்ற தேவாரம் சர்ச்சையின் நோக்கம், ஆன்மிகமாக இல்லாமல் நாத்திகவாதிகளின் கீழ்த்தரமான சதியாக இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

  சிதம்பரம் திருக்கோயில் மனித உடலையொத்த வடிவமைப்பு உடையது. முதுகுத் தண்டு கொடி மரமாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும், சிற்சபை (நடராஜப் பெருமான் திருநடனம் ஆடுகின்ற பகுதி) இதயப் பகுதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடராஜர் தத்துவம் அணு தத்துவங்களோடு பொருந்திப் போகிறது. சிவதாண்டவம் என்னும் நடராஜரின் நடன அசைவு உலக இயக்கமாகக் கருதப்படுகிறது.

  இந்தத் தில்லை வனத்தில் யோக சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற பதஞ்சலி முனிவருக்கும், ஆன்மிகத்தில் பெரும் நிபுணத்துவம் பெற்ற வியாக்ரபாதருக்கும் (புலிக் கால் முனிவர்) இறைவன் தனது திருநடனக் காட்சியை அருளியிருக்கிறான் என்கிறது தலபுராணம்.

  சந்தானக் குரவர்கள் நால்வரும் சமய உண்மைகளையும், ஆன்மிக வழிமுறைகளையும் இங்கே வடிவமைத்து வைத்துள்ளனர். மூவர் பாடிய தேவாரம் இந்தத் திருக்கோயிலில் உள்ள ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. மாமன்னன் ராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பிகள் துணையோடு தில்லைவாழ் அந்தணர்களின் சம்மதத்தோடு தேவார பதிக ஓலைகளை மீட்டெடுத்து தமிழ்கூரும் நல்லுலகம் எங்கும் பரவச் செய்தான்.

  சைவ சமய குரவர்கள் நால்வருக்கும், தில்லைவாழ் அந்தணர்களுக்கும் எப்போதும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. தில்லைவாழ் அந்தணர்கள் சிவபெருமானின் அம்சமாகக் கருதப்படுபவர்கள். எனவேதான் சுந்தரமூர்த்தி நாயனார் "திருத் தொண்டர் தொகை' பாடுகிறபோது தொண்டர்தம் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இறைவனே "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என அடியெடுத்துக் கொடுக்கிறார்.

  தில்லைவாழ் அந்தணர்கள் சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டு புரிந்தவர்கள். ஆதிசைவ அந்தணர் மரபில் தோன்றிய இவர்கள் சுத்த தமிழர்கள் ஆவார்கள். சந்தானக் குரவர் நால்வரில் கொடிக் கவி பாடி சிதம்பரத்தில் கொடியேற்றிய உமாபதி சிவம் தில்லைவாழ் அந்தணர் குடும்பத்தைச் சார்ந்தவர்.

  பொதுவாக அந்தணர்கள் (பிராமணர்கள்) வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பது ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெளிப்பாடாகும். இந்தியத் திருநாட்டின் ஆன்மா சமயத்தில் உள்ளது. சமயத்தைப் பேணுபவர்கள் அந்தணர்கள். ஆகவே அந்தணர்களை சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்திவிட்டால் இந்தியாவை எளிதாக அடிமைப்படுத்தி விடலாம் என்கிற காரணத்தால் பிராமணர்களுக்கு எதிரான கருத்துகளை வரலாற்றில் புகுத்தியுள்ளனர் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள்.

  இப்போதும் மெக்காலேயின் வாரிசுகளும், திராவிட இயக்கத்தினரும், கம்யூனிச இயக்கவாதிகளும் மேற்கண்ட பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகி பிராமணர்கள் வேறு, தமிழர்கள் வேறு என பிரசாரம் செய்துவருகின்றனர்.

  கடவுள் இல்லை என்று சொல்கிற நாத்திகர்கள், சிதம்பரம் கோயில் வழிபாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்ய முயற்சிப்பது நமது சமய நம்பிக்கைகளை அழிக்கும் முயற்சியாகும்.

  சிதம்பரம் கோயிலில் சிற்சபை (சிற்றம்பலம்) என்பது இறைவனின் கருவறையாகும். சிற்சபைக்கு முன்பு பொற்சபை (பொன்னம்பலம்) உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மட்டும்தான் அனைவரும் சாதிபேதமின்றி கருவறை (சிற்சபை) வரை சென்று இறைவனை வழிபடலாம்.

  பாரம்பரியமாக தேவாரம் பாடுவதற்கு அங்கே இடமிருக்கிறது என்பது மட்டுமல்ல, தேவாரம் தினசரி பாடவும்படுகிறது. காசி திருப்பனந்தாள் திருமடத்திலிருந்து ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு திருமுறை பாராயணம் நடைபெறுகிறது என்பது அன்றாடம் நடைபெறும் உண்மையாகும்.

  ஆனால் தற்போது சிதம்பரம் திருக்கோயிலில் தேவாரம் பாடுவதற்குத் தடை இருப்பது போலவும், சிதம்பரம் தீட்சிதர்கள் தமிழுக்கு எதிரானவர்கள் போலவும் சித்திரிக்கப்படுகிறது. சிற்றம்பல மேடை என்கிற பெயர் சிற்சபைக்கு சமீப காலத்தில் திராவிட இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் ( மகஇக) சூட்டப்பட்ட பெயராகும்.

  நீண்ட காலமாகவே திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோயில்களை அவமதிக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள், "தில்லை நடராஜரையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளே தமிழகத்தின் பொன்னாள்' என்று சொல்லி இறை துவேஷத்தையும், பிராமண துவேஷத்தையும் வளர்த்து வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் கருவறை நுழையும் போராட்டம் என அறிவித்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து ரங்கநாதருக்கு செருப்பு மாலை போட்டு அசிங்கப்படுத்தி அருவெறுக்கத்தக்க செயலைச் செய்தவர்கள் இவர்கள்.

  இப்படிப்பட்ட மகஇகவினரும், திராவிட கழகத்தினரும் மீண்டும் கருவறைக்குள் நுழைந்து இறைவனை அவமதிக்கும் உள்நோக்கத்தோடுதான் ஆறுமுகசாமி என்கிற ஓர் ஆன்மிகவாதியை முன்னிறுத்தி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடவேண்டும் என்கிற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றக் கூடிய மரபுகளையும், சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் மீற வேண்டும் என்பது இவர்கள் நோக்கம். குறிப்பாக ஹிந்துக் கோயில்களை சர்ச்சைக்குரிய இடங்களாக மாற்றுவது இவர்களின் குறிக்கோள். அதற்கு ஆறுமுகசாமி உள்ளிட்ட சில ஆன்மிகவாதிகளும் பலியாகியுள்ளனர். ஊடகங்கள் போராட்டம் நடத்தும் மகஇகவினரையும், திராவிட இயக்கத்தவரையும் சிவனடியார்கள் எனக் குறிப்பிடுவதுதான் வேடிக்கை.
  இறைமறுப்புக் கொள்கை உடையவர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும் ஆன்மிக விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? தமிழுக்காக என்கிற கோஷம்தான் காரணம் என்றால், ஏனைய மதங்களிலும் தமிழில்தான் வழிபாடு என்று சொல்லித் தட்டிக் கேட்கும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா?

  சொல்லப்போனால், தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியிருப்பது இந்து மதம்தான். தில்லை நடராஜரை பீரங்கி வைத்துப் பிளக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பவர்கள், சிவபெருமான் புகழ்பாடும் தேவாரத்துக்கு வக்காலத்து வாங்குவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் கண்ணீர் விட்ட கதையை நினைவுபடுத்துகிறது.

  சிதம்பரம் திருக்கோயிலின் பூஜை உரிமைகள் தில்லைவாழ் அந்தணர்களுக்கு (தீட்சிதர்) பாரம்பரியமாக உரியதாகும். அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், அவர்களை மிரட்டி பணிய வைக்கும் முறையிலும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதுதான் உண்மை.

  தில்லைவாழ் அந்தணர்களின் பாரம்பரிய உரிமையான சிதம்பரம் நடராஜர் கோயிலை, அறநிலையத்துறையின் கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சி, திமுக ஆட்சிக்கு வந்ததுமுதலே தொடங்கியது. நகரத்தார்களின் நன்கொடைகளும், பக்தர்களின் காணிக்கையும்தான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் பராமரிப்புக்கு உதவுகின்றன. தில்லைவாழ் அந்தணர்களின் வாழ்வும் இந்த ஆலயத்துடன் பின்னிப் பிணைந்துதான் தொடர்கிறது. இவர்களிடமிருந்து ஆலய நிர்வாகம் அரசின் பொறுப்பில் வந்தால்தான் அரசியல்வாதிகளுக்குப் பிழைப்பு நடக்கும் என்பதால், அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்னையைப் பெரிதுபண்ணி தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன.
  சிதம்பரம் திருக்கோயிலும், தில்லைவாழ் அந்தணர்களும் தமிழர்களின் ஆன்மிக அடையாளங்கள். தீட்சிதர்களின் தாய் மொழி தமிழே. சோழ மன்னர்களுக்கு முடிசூட்டும் உரிமை தில்லைவாழ் அந்தணர்களுக்கே உரியது.

  ஒருமுறை போரில் சோழ மன்னர்கள் தோற்று நாட்டை இழந்தபோது, வென்ற அன்னிய மன்னனுக்கு முடிசூட்ட மறுத்து தமிழ் மண்ணுக்கு விசுவாசம் காட்டியவர்கள் இந்தத் தில்லைவாழ் அந்தணர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதைப்பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை?

  ஆட்சியாளர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ சமய விஷயங்களில் உத்தரவு போடுவதற்கு உரிமை கிடையாது. அப்படியே பூஜை முறைகளிலும், ஆலய நிர்வாகங்களிலும் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டும் எனில் சமயத் தலைவர்களும், குருமார்களும், மடாதிபதிகளும், ஆதீனங்களும் கூடி முடிவெடுக்கலாம். அதுதான் முறை. இறை நம்பிக்கையற்றவர்கள், இறை வழிபாடு பற்றிப் பேசும் அருகதையற்றவர்கள்.

  தமிழின் பெயரால், தேவாரத்தின் பெயரால் சிதம்பரம் கோயிலை சர்ச்சைக்குரியதாக மாற்றி வருகிறார்கள். இது இறை நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவாலே தவிர தில்லைவாழ் அந்தணர்களுக்கு எதிரானது என்று நினைத்தால் தவறு. இந்த விஷயத்தில் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டாக வேண்டும்.

  திருச்சிற்றம்பலம்

  ReplyDelete
 52. ரவி.. இந்து மதக் கோட்பாடுகள் என்பதே ஒரு முரண்பாடுகளின் மொத்த மூட்டையாக உள்ளது. ஒருவருக்கு சரி என்றால் மற்றொருவருக்குத் தவறாகப் படும் விதத்தில்தான் அமைந்துள்ளது.

  எந்த மொழியில் பாடினாலும் அது ஆண்டவன் காதுக்குப் போகும் என்று நாம் சொன்னாலும், அப்படியானால் என் தாய் மொழியில் நான் பாடக்கூடாதா என்ற கேள்வி எழுகிறது..?

  தாய் மொழியில் பாடினால்தான் இறைவன் கேட்பானா என்ற கேள்வி எழுந்தால் அது தெரிந்ததே அந்த மொழியில்தானே என்ற கேள்வியும் தொடர்ந்து எழுகிறது..

  பின்பு எப்படி காலம், காலமாக அந்தக் கோவிலில் தமிழ் வலம் வராமல் உள்ளது என்ற புதிரும் எழுகிறது..?

  காலத்திற்கேற்றாற்போல் அரசுகளும், மக்களும் மாறுகின்ற போது இதையெல்லாம் சாமி கோவிச்சுக்கும் என்ற ரீதியில் தீட்சிதர்கள் எதிர்ப்பது முட்டாள்தனம்.

  நேற்றுகூட சிலர் பாடி முடித்து வெளியேறியவுடன் தீட்டு பட்டு விட்டது என்று சொல்லி கோவிலைக் கழுவிவிட்டதாகத் தகவல்..

  இது கண்டிப்பாக தீண்டாமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த தீட்சிதர்கள் கையில் அர்ச்சனைத் தட்டைத் தூக்குவதற்குக்கூட தகுதியற்றவர்கள்.

  ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதை உணராத கோவில் ஊழியர்கள் நமக்குத் தேவையில்லை.

  தங்களுடைய கடிதமும், அது எழுதப்பட்ட நேரமும் மிகச் சரியானது.. உங்களுடைய உன்னத நோக்கத்திற்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 53. //குமரன் (Kumaran) said...
  யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
  வானாகி நின்றாயை//

  :-)))

  //இரண்டு பக்கத்துக்கும் சொல்லியிருக்கீங்க. பாக்கலாம். எப்படி இதை எடுத்துச் செல்ல எந்நாட்டவர்க்கும் இறைவன் எண்ணியிருக்கிறான் என்று//

  கிடைத்த வாய்ப்பை மக்களும் தமிழ் ஆர்வலரும் தவற விடக் கூடாது குமரன்! இன்னொரு ஆயிர வருடக் காத்திருப்பா? தாங்காது!! :-(

  //தமிழ்மறைகள் ஓதியதன் பின்னர் நடந்தது சிவராத்திரிக்கான ஏற்பாடுகள் என்றும் அவை தீட்டு கழித்த சடங்குகள் இல்லை//

  நிசமாலுமே சிவராத்திரிக்குத் தான் செய்திருப்பினும், முந்தைய நடத்தையில் விளைந்த நம்பிக்கை தான் எதிர் முகாமுக்குத் தெரியும்!
  Caesar's wife should be above suspicion என்பார்கள்! அது தவறியதால் பாருங்கள், இப்போ நெசமாலுமே செஞ்சாக் கூட நம்ப ஆளில்லை! - இதை தீட்சிதர்கள் பாடமாகக் கொள்ள வேண்டும்!

  ReplyDelete
 54. //விக்ரம் said...
  இந்திய அரசையும்,நீதிமன்றத்தையும் ஜனநாயக அமைப்பையும் அழிக்க துடிக்கும் ம க இ கவினர்//

  இங்கிட்டு வேணாங்க விக்ரம்! தலைப்பில் மட்டும் பேசுவோம்!

  //தமிழ் பாடல்களான தேவாரமும் திருவாசகமும் மக்கள் மனதில் எத்தனை ஆழமாக பதிந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது//

  பக்தி இயக்கத்தின் உயிர் நாடியே பாசுரங்களும் பதிகங்களும் தான்!

  //வாழிய பாரத மணித்திருநாடு//

  வாழிய வாழியவே!

  ReplyDelete
 55. //திரு said...
  சகமனிதர்களை இன்னும் வெறுப்பதும், அதற்கு ஆகமங்கள், சாத்திரங்களை பயன்படுத்துவதும் யார்? ஆகமங்கள் யாரால் உருவாக்கப்பட்டன? இப்படிப்பட்ட கேள்விகளை யாராவது கேட்பார்களா என்ன? :)//

  நானே கேட்பேன்! கேட்டிருக்கேன்! கேட்டதால் விரட்டப்பட்டும் இருக்கேன் :-)

  //பதவியில் இருப்பவை அரசியல் இயக்கங்கள் என்பது புதிய விளக்கம் :)) ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ தோழர்களுக்கு இது தெரியல :)//

  பதவியில் இருந்தும் கண்டதேவியைத் தீர்க்காத மற்ற அரசியல் இயக்கங்களை மட்டுமே சொன்னேன்!

  //இராமானுசர் பற்றி இன்னொரு நேரம் உரையாடலாம்.//

  சரிங்க, திரு!

  //"சும்மா பரிட்சைக்கு படிக்கிற" பள்ளியில் கூட ஆசிரியருக்கு 'பயந்து' அடங்கி தான் இருக்கணும். ஆகமம் படிக்கிறது அவ்வளவு எளிதா என்ன? :)//

  ஹிஹி! இதைச் சொன்ன கீதாம்மா தான் இதுக்கு விளக்கமும் சொல்லணும்!

  //உங்கள் பண்பான பதில்களுக்கு நன்றி!//

  கருத்தை மட்டுமே ஒட்டி, நீங்கள் முன்வைத்த பார்வைகளுக்கும் நன்றி திரு!

  ReplyDelete
 56. //G.Ragavan said...
  பிரச்சனை மொழியிலோ... வழிபாட்டு முறையிலோ இல்லை என்பது என் கருத்து்//

  ஆகா! அப்படியா!

  //தேவாரம் பாடினாலே போதும்னா நெறைய பேரு போட்டிக்கு வந்திருவாங்களே//

  பாசுரம் பாடினாலே போதும்-ன்னு எப்பவோ சொல்லிட்டாங்களே! ஆனா அங்கே அப்படி ஒன்னும் நெறைய பேரு போட்டிக்கு வரலியே!

  இது வேலையைக் காத்துக் கொள்ளும் முயற்சியா எனக்கென்னமோ படலை ஜிரா! பல நூற்றாண்டு காலமா இருந்து வரும் தமிழ் ஒவ்வாமையின் கடைசி கட்டமா வேணும்னா இருக்கலாம்!

  //ஆனா...நீங்க சொன்னாப்புல இன்னும் செய்ய வேண்டியது நெறைய இருக்கு. செய்யப்படும்னு விரும்புறேன்//

  விருப்பம் முயற்சி தரலான், முயற்சி
  உயிரினும் ஓம்பப் படும்! :-)

  ஆமா
  மடத்தலைவர்கள் இப்பவாச்சும் முன்னணிக்கு வரணும்!
  இல்லீன்னா சைவத்தில் தமிழ் வழிபாட்டுக்கு இன்னும் ஒரு ஆயிரம் வருசம் இதே போலக் காத்துக்கிட்டு இருங்கடா ராசா-ன்னு போயிற வேண்டியது தான்! :-(

  ReplyDelete
 57. //ஜீவா (Jeeva Venkataraman) said...
  இந்த ஈகோ இருக்கிறதே - அது சும்மா இருக்கவிட்டால் தானே - நான், எங்கள் என்கிற எண்ணதை தூக்கி விட்டு, இரு தரப்பினரையும் பாடாய் படுத்துகிறது. அதற்கு ஒரே மருந்து - அன்பு. அன்பு செய்வார்களா, பார்ப்போம்//

  நச்-னு சொன்னீங்க ஜீவா!
  அன்பே அருமருந்து! ஆனா மருந்து குடிக்க மாட்டேன்! மொதல்ல அவனைக் குடிக்கச் சொல்லு! அவன் நோய் சரியாவட்டும்! அப்பறம் எனதைச் சரி பண்ணிக்கிறேன்-னு இது ஒரு சுழலில் தான் போகிறது! :-)

  //மொழி வெறுப்பும் சிவம் ஆகாது!//
  இந்த வரிகளை ரசித்தேன். அது நாம் நம் அன்னிய மொழிகளை பாவிப்பதற்கும் பொருந்தும்//

  உண்மை!
  தமிழ் வெறுப்பும் சிவம் ஆகாது!
  வடமொழி வெறுப்பும் சிவம் ஆகாது!
  மொத்தத்தில் மொழியோ, சாதியோ, மதமோ...எதுவாயினும் "வெறுப்பு சிவம் ஆகவே ஆகாது!"

  //தில்லை நடராஜன் சிவராத்ரியை முன்னிட்டு எல்லோரையும் தன்னை நினைக்கச் செய்த விளையாட்டாகவே கொள்கிறேன்//

  இப்படி ஒரு பார்வையா? :-)

  ReplyDelete
 58. //விடாதுகருப்பு said...
  ரவிசங்கர்,
  உங்களுக்கு என் வீர வணக்கம்.//

  வாங்க விடாதுகருப்பு!
  அய்யோ சாமீ...வீரவணக்கம் எல்லாம் வேணாம்! அதுக்கு ஏகே47 தேவையாச்சே! நமக்கு அன்பு மொழி ஒன்றே போதும்! :-)

  //நடுநிலையான பார்வை//

  ரொம்ப நடுநிலை எல்லாம் இல்லீங்க! ஆயிரம் பிரச்சனையில் முக்கியமான பிரச்சனைக்கு உண்டான தீர்வைக் கோட்டை வுட்டுறக் கூடாதே-ன்னு "சுயநலம்" தான் எனக்கு!
  ஜிராவுக்கும் சொல்லி இருக்கேன் பாருங்க! வாய்ப்பை நழுவ விட்டு இன்னொரு ஆயிரம் வருசத்துக்கு காத்திருக்கணுமா?

  //காலம் காலமாய் வடமொழியிலேயே பூஜை செய்து வந்த தீட்ஷிதர்கள் இன்றைக்கு தமிழில் செய்ய பூஜை வேண்டும், தமிழில் பாட வேண்டும் என்றதைக் கேட்டதும் துடித்துப் போகின்றனர்//

  அது ஏன் தீட்சிதர்கள் மட்டும் துடித்துப் போகணும்? காலம் காலமாய் செய்து வரும் மற்ற அர்ச்சகர்கள் இந்த அளவுக்கு துடிக்கவில்லையே! தீட்சிதர்கள் தங்கள் சமூக வழக்கங்களைச் சரிபார்த்துக் கொண்டு பொறுப்புடன் நடக்க பழகிக் கொள்ள வேணும்!

  போலீஸ் சட்டையைக் கழட்டிட்டு கோயிலுக்கு உள்ளார வரணும்-னு அவசியம் இல்லை! இருந்தாலும் நம்ம காவல்துறை மரபுகளை குறைஞ்ச பட்சமாகவேனும் மதிக்கிறது! இதே அமெரிக்கா, ஐரோப்பாவில் போலீஸ் சட்டையைக் கழட்டிட்டு உள்ள வருமா?

  காவலருக்கு இருக்கும் மரபு மதிப்பு, கோயிலைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் அறங்"காவலருக்கு" இல்லாமப் போச்சே என்பது தான் என் வருத்தம்! நடன அம்பலம், தறி கெட்டு ஆடும் அம்பலமாக போகக் கூடாது என்பது தான் கவலை!


  //அவ்வாறு பிரித்து விட்டால் இந்த மதக் கோவில்களுக்கு அவர்களும் அந்த மதக் கோவில்களுக்கு இவர்களும் செல்ல மாட்டார்கள்//

  அய்யய்யோ...பார்த்து! பார்த்து! புதுசா வேற ஒரு சாதி உருவாயிடப் போவுது! :-))

  //சண்டை போடாம அவங்கவங்க அவங்கவங்களுக்கு பிடித்த மொழியில் இறைவனை கும்பிடட்டும்//

  தெய்வமே! சதீஷா இதைச் சொல்லுறது! சிவராத்திரி அதுவுமா "இறைவனை கும்பிடட்டும்" ன்னு உங்க வாயால் சொல்லணும்-னு எம்பெருமான் திருவிளையாடல் ஏதும் பண்ணிட்டாரா என்ன? :-)))
  ச்ச்ச்சும்மா விளையாட்டுக்குச் சொன்னேங்க!
  நியாயமான ஆதங்கம் தான்!

  //அல்லது நேரம் பிரிக்கலாம். தமிழில் பாடம் இந்த மணியில் இருந்து இந்த மணி வரை. சமஸ்கிருதத்தில் பாட இந்த மணியில் இருந்து இந்த மணி வரை//

  நல்ல யோசனை தான்!
  வைணவ ஆலயங்களில் இப்படி நேரம் எல்லாம் பிரிக்காம ஒன்னோட ஒன்னு இயைந்தே தான் சொல்லுறாங்க! பெரும்பாலும் தமிழில் துவங்கித் தான் வடமொழியில் முடிப்பாங்க!

  கருவறை வாசப்படிக்கு வெளியில் நின்னு சுப்ரபாதம் சொல்லுவாங்க!
  நடை திறந்து உள்ளே நின்னுக்கிட்டு திருப்பள்ளி எழுச்சி பாடுவாய்ங்க!

  குறிப்பா திருக்கோவிலூர், அன்பில், வானமாமலை இங்கெல்லாம் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் காலம் காலமா திருமஞ்சனம் செய்யறாங்க. பார்ப்பன அர்ச்சகர்கள் அப்போது கீழே உட்கார்ந்து கொண்டு பாசுரம் ஓதுவாங்க! கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்! :-)

  அது போல ஒத்துமையா செய்ய முடியலைன்னா நீங்க சொல்லும் நேரப் பிரிவு முதல் கொஞ்ச நாளைக்கு நலம் பயக்கும்.

  //அனைத்து சாதியைச் சேர்ந்த பெரிய மனிதர்கள், தருமபுரம், திருவாடுதுறை ஆதீனம், இன்னும் உள்ள ஆன்மீக பெருந்தலைகள், தீட்ஷிதர்கள், ஓதுவார்கள், இல.கணேசன் போன்ற பாஜகவினர், சென்னை பார்ப்பன சங்கத்தினர் என அனைவரையும் அழைத்து விவாதித்து//

  மொதல்ல அரசியல் சாராத ஆன்மீகத் தலைவர்கள் மட்டும் பேசினாப் போதும்ங்க! அனைத்து சாதிகளும் சார்ந்த திருமடத் தலைவர்கள், ஆதீனகர்த்தர்கள்-ன்னு முதலில் பேசட்டும். சட்ட நிபுணர்கள் முன்னிலையில்!

  அதுக்கப்புறம் வேணும்னா பாஜக, ம.க.இ.க-ன்னு அரசியலாரைக் கூப்பிடலாம்! பயனாளிகள் தான் முதலில்! பயனாளிகள் இப்படியான முடிவு எடுத்திருக்காங்க..நீங்க என்ன நினைக்கறீங்க-ன்னு வேணும்னா அரசியலாரைக் கேட்கலாம்!

  //ஆறுமுகச்சாமி உள்ளிட்ட தமிழ்மேல் பக்தி கொண்ட ஆன்மீகர்கள் உண்மையிலேயே பக்தியுடன் இந்த பிரச்னையில் ஈடுபட்டால்//

  பதிவின் நோக்கமே அதாங்க! ஏதோ சிற்றம்பலத்தில் பாடியாச்சு-ன்னு எல்லாரும் கலைஞ்சு போயாச்சுன்னா, there will be no long term solution! The same issue will arise in a different form next time and everyone will be just firefighting again and again!

  //எனக்கு நீங்கள் பேசுவது நடுநிலையாக படும்போது அவருக்கு அது ஒரு பக்க சார்பாக படுவதுதான் வேடிக்கை//

  ஜடாயு சார் சில சமயம் பாராட்டியும் உள்ளாரு! இங்கே அவர் கருத்தை ஆழமா முன் வைத்துப் போய் இருக்கார்!
  சரி விடுங்க! நாம மேட்டருக்கு மட்டும் வருவோம்!

  //வாழ்த்துகள் ரவி//

  இம்மாம் பெரிய விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி சதீஷ்!

  ReplyDelete
 59. anonymous said...
  //சந்துக்குள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற விதிமுறைகள் இருந்த கிராமங்களுக்கு போய் பார்த்திருக்கிறீர்களா? அதெல்லாம் எங்கே பார்த்திருக்கப் போகிறீர்கள்?//

  வணக்கம்-ங்க அனானி ஐயா! நானும் கிராமத்தான் தான்! எங்கூருல கடந்த காலக் கொடுமைகள் ரொம்ப இல்லீன்னாக் கூட...சிற்சில சம்பவங்கள் நடந்ததும் உண்டு! நான் வெகுண்டதும் உண்டு!

  கோயிலில் தீர்த்த வரிசையின் போது, அம்மா அப்பாவை எங்க சாதி காட்டி, வேறு வரிசையில் நிக்க வைத்த போது பொங்கியதும் உண்டு! அதுனால "அதெல்லாம் எங்கே பார்த்திருக்கப் போகிறீர்கள்?" ன்னு sweeping statement எல்லாம் வுடாதீங்க! :-)

  //விலகி நின்று, நீங்கள் எவர் பக்கமும் இல்லை என்று காட்ட முனைவதற்கு நன்றி//

  காட்ட முனைவது என் பழக்கத்தில் இல்லீங்க! நான் கொஞ்சம் வேற மாதிரி ஆளுங்க! விலகித் தான் நிப்பேன்! :-)
  எனக்கு அவங்க பக்கம், இவங்க பக்கம்-னு பக்கம் முக்கியமே இல்லைங்க! எது முக்கியமோ அது தான் முக்கியம்!
  அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
  புறத்த புகழும் இல!

  //உங்களை ஏன் சிரமப்படுத்தப்போகிறேன்? உங்களது நன்றிக்கு மிகப் பெரிய நம்ஷ்காரம்!!!!!!!!!!!!!!//

  நமஷ்-ல காரம் தூக்கலாக் கீதே! :-))

  ReplyDelete
 60. //Anonymous said...
  இன்றைய தினமணி கட்டுரை
  ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால்
  - அர்ஜுன்சம்பத்//

  முழுக்கட்டுரையும் பின்னூட்டத்தில் இடுவதற்குப் பதிலாக் கட்டுரையின் சுட்டி கொடுக்கலாமே!
  இருப்பினும் கட்டுரைக்கு நன்றி அனானி ஐயா!

  ReplyDelete
 61. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  இந்து மதக் கோட்பாடுகள் என்பதே ஒரு முரண்பாடுகளின் மொத்த மூட்டையாக உள்ளது.
  ஒருவருக்கு சரி என்றால் மற்றொருவருக்குத் தவறாகப் படும் விதத்தில்தான் அமைந்துள்ளது//

  வாங்க உண்மைத் தமிழன்.
  சமயத்தில் முரண்பாடுகள் இல்லீங்க! பார்வையில் தான் முரண்பாடு! நடைமுறைப்படுத்துவதில் அதை விட முரண்பாடு!

  ஐயன் வள்ளுவர் ஒரு குறளில் தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும் என்பார்! இன்னொரு இடத்தில் வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி தொகுத்தாலும் துய்த்தல் அரிது-ன்னு சொல்லுவார்! முரண்பாட்டு மூட்டை-ன்னு சொல்லுவோமா? இல்லையே! :-)

  சொல்லப்படும் இடமும் காலமும் சேர்த்து தான் பொருள் கொள்ள வேண்டூம்! முன்னர் சொன்னது ஆள்வினையுடைமை. Counselling Session! அங்கிட்டு நோக்கம் வேறு!
  பின்னது ஊழ் இயல்! பலதும் பார்த்து விட்டு மெய்ஞானம் தேடும் போது! அப்ப உண்மை வேற! அதை மொதல்லயே சொல்லி இருக்கலாமேன்னா சொல்ல முடியாது! தானாத் தான் தெளியணும்!

  //காலத்திற்கேற்றாற்போல் அரசுகளும், மக்களும் மாறுகின்ற போது இதையெல்லாம் சாமி கோவிச்சுக்கும் என்ற ரீதியில் தீட்சிதர்கள் எதிர்ப்பது முட்டாள்தனம்//

  கரெக்டா சொன்னீங்க!
  முட்டாள்தனம்-னு புரிஞ்சிகிட்டாலே போதும்! தானா மாறிடுவாங்க! அங்க தான பிரச்சனையே! :-)

  //நேற்றுகூட சிலர் பாடி முடித்து வெளியேறியவுடன் தீட்டு பட்டு விட்டது என்று சொல்லி கோவிலைக் கழுவிவிட்டதாகத் தகவல்..//

  சிவராத்திரி பூசைகளுக்கு முன் செய்யப்பட்ட சுத்தி-ன்னு சொல்லுறாங்களாம்! அதுனால இதில் அவசரப்படத் தேவை இல்லீங்க! ஆலயங்களில் சுத்தி செய்வது எப்பமே உண்டு. நண்பகல் வேளைகளில், வேள்விக்கு முன்னர், பிம்ப சுத்தி-ன்னு இப்படி நெறைய இருக்கு! ஒரு வேளை குறுக்குப் புத்தியோட கரெக்டா அந்த டையம் பாத்து வேணும்னே கூட செஞ்சிருக்கலாம்!

  ஆனா இதுல நான் பெரியாரைத் தான் ஃபாலோ பண்ணுவேன்!
  டெய்லி பாடப் போற! ஆறு காலமும் பாடப் போற! எத்தனை வாட்டி கழுவித் தள்ளுவான்? பெண்டு கழண்டிடும்! சாப்பாடக் கூட நேரம் இருக்காது! பக்கெட்டும் கையுமா நிக்கவே டயம் சரியா இருக்கும்! வெங்காயம்! உன் வேலை ஆச்சா! உனக்குப் பிரச்சனை பண்ணலையே! போயிக்கிட்டே இரு! :-)

  //தங்களுடைய கடிதமும், அது எழுதப்பட்ட நேரமும் மிகச் சரியானது.. உங்களுடைய உன்னத நோக்கத்திற்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்..//

  சரியாப் புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி உண்மைத் தமிழன்! ஆயிரம் மொக்கைப் பிரச்சனைக்கு நடுவுல, கருவறைக்குள்ளும் தமிழ் வழிபாடு என்கிற உண்மையான பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க இறைவன் அருள் செய்ய வேண்டும்!

  ReplyDelete
 62. வாழ்க உங்கள் நல்லுள்ளம்!
  வளர்க உங்கள் நற்பணி!

  பலரும் உங்களைப்போல்
  நடுநின்று, உண்மையுடன்
  கருத்து பகிர்ந்தால் எத்தனை
  நன்றாக இருக்கும்!

  வாராது வந்த நற்பதிவைக் கண்டு மகிழ்ந்தேன்.

  அன்புடன் செல்வா

  ReplyDelete
 63. பின்னூட்ட கணைகளுக்கு எல்லாம் விளக்கங்கள் அருமை! Hats-Off KRS!

  ReplyDelete
 64. தமிழ் வெல்லட்டும்.

  தமிழ் மறை இறை வெல்லட்டும்.

  அன்பே சிவம்.
  அன்பே மறை.
  அன்பே இறை.

  ReplyDelete
 65. // தமிழின் சைவத் திருமுறைகள் போன்றே பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் தொன்மையான வழிபாட்டு மரபுகள் உள்ளன. (பசவண்ணர் மற்றும் அவரது சீடர்களின் கன்னட வசன இலக்கியம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு ஆயுள் வேண்டும் அதனைக் கற்றுத் தெளிவதற்கு) அதற்காக அதெல்லாம் ஒவ்வொரு சமயமாகி விடுமா? //

  அப்படித்தான் இருக்கிறது கருநாடகத்தில். லிங்காயத் என்று அழைப்பார்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயில்கள் எதிலும் வடமொழிப் பயன்பாடு அறவே கிடையாது. வச்சனங்கள்தான். பசவண்ணரின் வச்சனங்கள்தான். அதே போல கோயில் பராமரிப்பிலும் பிராமணர்களின் பங்கு கிடையவே கிடையாது. கோயில்கள் அனைத்தும் லிங்காயத் மடங்களால் பராமரிக்கப்படுகின்றன. அப்படி நான் சென்று பார்த்த ஒரு கோயில் எடியூரில் உள்ளது.

  ReplyDelete
 66. வீர வேல் ! வெற்றி வேல் !

  வெறும் ஆத்திகனாக இருப்பது அறிவைத் தந்துவிடாது என்பதற்கு தங்கள் எழுத்துக்களே சான்று.

  இந்தப் பிரச்சினையில் ஓதுவார்கள் அனைவரும் ஒதுங்கி நிற்பதைக் கவனியுங்கள்.

  அவர்களுக்கு தீட்சிதர்களிடம் தீட்சிதர்களுக்கு அவர்களிடமும் மரியாதை இருக்கிறது.

  தேவாரம் அறியா தெருப்பொறுக்கிகளின் கலவரத்திற்கு வேறு சப்பைக்கட்டு இருந்தால் எழுதவும்.

  வந்தே மாதரம் !

  ReplyDelete
 67. //அப்படித்தான் இருக்கிறது கருநாடகத்தில். லிங்காயத் என்று அழைப்பார்கள். அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோயில்கள் எதிலும் வடமொழிப் பயன்பாடு அறவே கிடையாது. வச்சனங்கள்தான். பசவண்ணரின் வச்சனங்கள்தான். அதே போல கோயில் பராமரிப்பிலும் பிராமணர்களின் பங்கு கிடையவே கிடையாது. கோயில்கள் அனைத்தும் லிங்காயத் மடங்களால் பராமரிக்கப்படுகின்றன. அப்படி நான் சென்று பார்த்த ஒரு கோயில் எடியூரில் உள்ளது.
  //

  சிறு வயதில் பசவண்ணரின் சரிதமாகிய பசவ புராணத்தைப் படித்திருக்கிறேன் இராகவன். நந்திதேவரின் அம்சமாக லிங்காயத்துகளால் போற்றப்படும் பசவண்ணர் அந்தணராகப் பிறந்திருந்தும் வேதங்களை ஏற்க மறுத்து உபநயனத்தின் போது பூணூல் அணிய மறுப்பதை அந்த நூலில் படித்திருக்கிறேன். அந்த நேரம் தான் வேதங்களை ஏற்காத வீர சைவ சமயம் தோன்றியது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 68. //தேவாரம் அறியா தெருப்பொறுக்கிகளின் கலவரத்திற்கு வேறு சப்பைக்கட்டு இருந்தால் எழுதவும்.//
  Can't believe that someone would write this
  idiotic response! Why don't you come for a debate
  openly to the forum!

  ReplyDelete
 69. உள்ளேனய்யா மட்டும் போட்டுக்க்றேன். :-)

  ReplyDelete
 70. அருமையான பதிவிற்கும், விரிவான மறு மொழிகளுக்கும், விளக்கம் நிறைந்த விடைகளுக்கும், சூடு பறக்கும் விவாதங்களுக்கும் மிக்க நன்றி. அனைவரும் அவரவர் எண்னங்களில் - கருத்துகளில் உறுதியாக இருக்கிறார்கள். ஒரு நாளில் தீரக்கூடிய பிரச்னை இல்லை. காலம் கனியும். பொறுத்திருப்போம். நன்மையே விளையும். நம்பிக்கை கொள்வோம்.

  ReplyDelete
 71. 68 மறு மொழிகள் - வாழ்த்துகள்

  ReplyDelete
 72. வீரவேல் ! வெற்றி வேல் !

  கௌரவமான குலப்பெண்களை கைது செய்யும் காவல்துறை பற்றித் தெரியுமா?

  மேல் விவரங்களுக்கு: http://cuziyam.wordpress.com/2008/03/09/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/

  வந்தே மாதரம் !

  ReplyDelete
 73. //செல்வா said...
  வாழ்க உங்கள் நல்லுள்ளம்!
  வளர்க உங்கள் நற்பணி!//

  ஆசிக்கு நன்றி செல்வா!

  //பலரும் உங்களைப்போல்
  நடுநின்று, உண்மையுடன்
  கருத்து பகிர்ந்தால் எத்தனை
  நன்றாக இருக்கும்!//

  நடுநிலமையா இருக்கணுமேன்னு எல்லாம் இருக்கத் தேவையில்லை! கொஞ்சம் நெடுங்காலத் திட்டமாப் பார்த்தா போதும்! இல்லீன்னா அரைத்த மாவையே அரைத்து, அதே சுழலில் தான் சிக்கிப்போமே தவிர, பயன் மட்டும் விளையாது!

  இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அரசியல்வாதிகளிடம் நாம் பாடம் பயில வேண்டும்! நிரந்தர நட்பும் இல்லை! நிரந்தரப் பகையும் இல்லை! நல்லன மட்டும் ஆகிக்கொண்டே இருக்கணும்! :-)

  ReplyDelete
 74. // ஜீவா (Jeeva Venkataraman) said...
  பின்னூட்ட கணைகளுக்கு எல்லாம் விளக்கங்கள் அருமை! Hats-Off KRS!//

  ஹிஹி! தொப்பி எங்கே ஜீவா? எனக்கு இன்னும் வந்து சேரலை! :-)

  ReplyDelete
 75. //அரை பிளேடு said...
  தமிழ் வெல்லட்டும்.
  தமிழ் மறை இறை வெல்லட்டும்//

  அப்படியே ஆகட்டும்!
  ததாஸ்து!
  ஆமென்!

  //அன்பே சிவம்.
  அன்பே மறை.
  அன்பே இறை//

  அன்பே தமிழ்!
  அன்பே மொழி!
  அன்பே வழி! :-))

  ReplyDelete
 76. //G.Ragavan said...
  அப்படித்தான் இருக்கிறது கருநாடகத்தில். லிங்காயத் என்று அழைப்பார்கள்//

  தகவலுக்கு நன்றி ஜிரா!
  நானும் அதே தான் சொல்லி உள்ளேன் ஜடாயு சாருக்கு! லிங்காயத சம்பிரதாயம்ன்னே பேரு! ஆனா அதுக்கு மொழியின் பேரையோ மாநிலத்தின் பேரையோ வைக்கலை! அவ்ளோ தான்!

  //அதே போல கோயில் பராமரிப்பிலும் பிராமணர்களின் பங்கு கிடையவே கிடையாது. கோயில்கள் அனைத்தும் லிங்காயத் மடங்களால் பராமரிக்கப்படுகின்றன//

  ஜடாயு சாரும் பிராமண, பிராமணரல்லாதார் பற்றிச் சொல்ல வரலை-ன்னு நினைக்கிறேன்! அவர் தமிழ்ச் சமயம்/வைதீக சமயம்-ன்னு பிரிக்காதீங்கன்னு சொன்னாரு!
  ஆனா நடைமுறையில் வைதீக மடங்கள் தனியா இருக்கு! மாநில மடங்கள் தனியாத் தான் இருக்கு!

  //அப்படி நான் சென்று பார்த்த ஒரு கோயில் எடியூரில் உள்ளது//

  எடியூரப்பா-ன்னு ஒரு மந்திரி வேற இருந்தாருல்ல? :-)

  ReplyDelete
 77. // cuziyam said...
  வெறும் ஆத்திகனாக இருப்பது அறிவைத் தந்துவிடாது என்பதற்கு தங்கள் எழுத்துக்களே சான்று//

  நன்றி சுழியம்!
  நல்லறிவு இறைவன் தருவது! மதம் தருவதில்லை!

  //இந்தப் பிரச்சினையில் ஓதுவார்கள் அனைவரும் ஒதுங்கி நிற்பதைக் கவனியுங்கள்//

  ஓதுவார்கள் ஆலயத்திலும் பல நேரங்களில் ஒதுங்கித் தான் நிற்கிறார்கள்! பதிகம் பாடும் வேளை தவிர, மற்ற நேரங்களில் அவர்களின் ஆலயப் பங்கு என்ன?

  //தேவாரம் அறியா தெருப் பொறுக்கிகளின் கலவரத்திற்கு வேறு சப்பைக்கட்டு இருந்தால் எழுதவும்//

  தேவாரம் அறிந்தவர்கள் இது போல் "தெருப் பொறுக்கிகள்" என்று பேச மாட்டார்கள்!
  நாளும் இன்னிசையால் நற்றமிழோதிய ஞானசம்பந்தனின் நற்றமிழ் வார்த்தையா நீங்கள் சொன்னவை? :-)

  //வந்தே மாதரம் !//
  ஜெய வந்தே மாதரம்!

  ReplyDelete
 78. //மதுரையம்பதி said...
  உள்ளேனய்யா மட்டும் போட்டுக்க்றேன். :-)//

  நானும் அட்டெண்டென்ஸ் மட்டும் எடுத்துக்கறேன் மெளலி அண்ணா! :-)

  ReplyDelete
 79. //cheena (சீனா) said...
  அருமையான பதிவிற்கும், விரிவான மறு மொழிகளுக்கும், விளக்கம் நிறைந்த விடைகளுக்கும், சூடு பறக்கும் விவாதங்களுக்கும் மிக்க நன்றி.//

  :-)

  //அனைவரும் அவரவர் எண்னங்களில் - கருத்துகளில் உறுதியாக இருக்கிறார்கள்//

  உண்மையில் உறுதியா நின்னா பாதிப் பிரச்சனை தீர்ந்து விடும் சீனா சார்! :-)

  //ஒரு நாளில் தீரக்கூடிய பிரச்னை இல்லை. காலம் கனியும். பொறுத்திருப்போம். நன்மையே விளையும். நம்பிக்கை கொள்வோம்//

  ஆமாங்க சீனா சார்! ஒரு நாளில் தீராது! ஒரு நாள் தீரும்! அது தான் திருநாள்! நம்பிக்கை கொள்வோம்!

  //68 மறு மொழிகள் - வாழ்த்துகள்//

  ஆகா...இதுக்கெல்லாம் கூட வாழ்த்தா? :-)

  ReplyDelete
 80. //சுழியம் said...
  வீரவேல் ! வெற்றி வேல் !
  கௌரவமான குலப்பெண்களை கைது செய்யும் காவல்துறை பற்றித் தெரியுமா?//

  சுட்டியை விரைவில் பார்க்கிறேன் சுழியம்! நன்றி!
  வெற்றி வேல்! வீர வேல்!
  வேலும் மயிலும் துணை!

  ReplyDelete
 81. ரவி,

  திட்சிதர்கள் ஆகமத்தைப் பின் பற்றுவது இல்லையாமே..

  அப்ப அவங்க இவ்வளவு காலம் வேத நெறியயைப் பின்பற்றி பூசை செய்தப் போது அசம்பாவிதம் ஒன்றும் ஆகவில்லையே..

  பின் ஏன் இந்த ஆகமத்தைப் பிடித்துக் கொண்டியிருக்க வேண்டும்.

  கடவுளைத் தொழ, கடவுள் மேல் பக்தி ஒன்றுப் போதாதா..

  தகுதி என்று ஒன்றை இனைத்து, கடவுளுக்கு, பக்தனுக்கு தூரத்தை ஏன் உருவாக்க வேண்டும்.

  அது கடவுளை ஒரு சாராருக்கு மட்டுமே ஒதுக்கிவிடாதா.

  கடவுளை வழிபட பக்தன் என்றத் தகுதியயை விட வேற எந்த சிறப்புத் தகுதியும் தேவை இல்லை.  ///
  kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால், கருவறையில் வேற்று சாதியினர் நுழையத் தானே செய்வார்கள்..அப்போது பாதகமில்லையா..//

  பாதகமே இல்லை!
  முறையாகச் சிவ தீட்சையோ இல்லை வேறு சமய தீட்சையோ பெற்ற பின் எந்தச் சாதி அர்ச்சகர் வேண்டுமானாலும் அந்தந்தக் கருவறைக்குள் நுழையலாம்!
  இதுல சாதி எங்கிருந்து வந்துச்சி?
  Just Qualify before you Enter! அம்புட்டுத் தான்!

  கருவறைக்குள் சாதி மதப் பாகுபாடு, ஏன், ஆண்-பெண் பாகுபாடு என்பது கூட ஆகமத்தில் இல்லை! பாஞ்சராத்ர ஆகமம்-ன்னு ஒன்னு இருக்கு! அது Free for All! :-)
  நமக்கு அதெல்லாம் தெரியாததால் கொஞ்ச நாள் ஏமாத்திக்கிட்டு இருந்தாய்ங்க! :-)

  இன்னொரு பதிவு உங்களுக்கும் கோவி அண்ணாவுக்கும் ஸ்பெசலான முறையில் தயாராகிக்கிட்டு இருக்கு! :-) அதில் எண்ணெய் வணிகச் செட்டியார் ஒருவர் கருவறைக்குள் இருப்பாரு! அந்தணர் குலத்தில் பிறந்த இன்னொருத்தர் தகுதி பெறாததால், வெளியே நின்னுக்கிட்டு செட்டியாரிடம் ரிக்வெஸ்ட் போடுவாரு! சுமார் அறுநூறு ஆண்டுக்கு முன்பே இப்படி ஒரு புரட்சி! :-)
  ///

  ReplyDelete
 82. //TBCD said...
  ரவி,
  திட்சிதர்கள் ஆகமத்தைப் பின் பற்றுவது இல்லையாமே..//

  அண்ணாச்சி...ஆகம வகுப்பு மாதிரி போயிக்கிட்டு இருக்கே! :-)
  தீட்சிதர்கள் தமிழக ஆலயங்களில் பரவலாக உள்ள சிவாகமத்தைப் பின்பற்றுவது இல்லை! கொஞ்சம் கடினமான, ஸ்ட்ரிக்ட்டான வேதாகமத்தைப் பின்பற்றுகிறார்கள். பதஞ்சலி முனிவர் செய்து கொடுத்த வண்ணம் பூசை முறைகள் தில்லையில் மட்டும்!

  //அப்ப அவங்க இவ்வளவு காலம் வேத நெறியயைப் பின்பற்றி பூசை செய்தப் போது அசம்பாவிதம் ஒன்றும் ஆகவில்லையே..//

  ஹிஹி...என்ன ஆகும்-னு எதிர்பாக்கறீங்க? :-)
  முன்பே பதில் சொன்னது போல், அவங்க ஆகமத்தைப் பின்பற்றுகிறார்கள். ஆனா அது பரவலாக இல்லாத ஒரு சிறப்பு ஆகமம். அவ்ளோ தான்!

  //பின் ஏன் இந்த ஆகமத்தைப் பிடித்துக் கொண்டியிருக்க வேண்டும்.
  கடவுளைத் தொழ, கடவுள் மேல் பக்தி ஒன்றுப் போதாதா..//

  நல்ல கேள்வி! எதுக்கு ஆகமம்?
  கண்ணப்பர் எந்த ஆகமத்தை வைத்து சிவ பூசை செய்தார்?
  பிரகலாதன் எந்த ஆகமத்தை வைத்துத் தூணில் இருந்து இறைவனை வரவழைத்தான்?

  இதுக்கு யாராச்சும் ஆன்மீகப் பதிவர்கள் தான் வந்து பதில் சொல்லணும்! :-)

  //தகுதி என்று ஒன்றை இனைத்து, கடவுளுக்கு, பக்தனுக்கு தூரத்தை ஏன் உருவாக்க வேண்டும்.//
  //கடவுளை வழிபட பக்தன் என்றத் தகுதியயை விட வேற எந்த சிறப்புத் தகுதியும் தேவை இல்லை//

  ஹிஹி.
  அரவிந்தானந்தரே! உங்கள் அருளுரை அற்புதம்! :-))

  Jokes apart! கலக்குறீங்க தல! நல்ல சிந்தனை! கேலியாக் கேட்காம கேள்வியாக் கேட்கறீங்க பாருங்க! I like it!

  இங்க தான் கொஞ்சம் புரிதல் வேண்டும் அண்ணாச்சி. ஆகமம் பக்தனுக்கும் இறைவனுக்கும் தூரம் உருவாக்கவில்லை! பாலம் தான் உருவாக்கும்.

  அதே போல் கடவுளை வழிபட பக்தன் என்ற "தகுதி" போதும் தான்! ஆனால் உண்மையைச் சொல்லுங்க! நாம் எல்லாரும் பக்தர்களா? அங்கு தான் ஆகமம் உதவிக்கு வருது!

  ஏன் ஆகமம்-னு யாராச்சும் ஆன்மீகப் பதிவுலகப் பெருந்தகைகள் வந்து சொல்லுறாங்களான்னா பார்க்கலாம். இல்லீன்னா..அடியேன் சொல்கிறேன்!

  ReplyDelete
 83. Naanum attendance.
  Pressseeentt Sir! :)
  Shobha

  ReplyDelete
 84. ஏன் ஆகமம்? தத்துவப் பொருளை உரைப்பவை மறைகள்; அவற்றை நடைமுறையில், வழிபாட்டில் வரைமுறைப்படுத்துவது ஆகமம் என்று சொல்லலாமா?
  ஆகம விதிகள் காலத்துக்கு காலம் மாறுதல்களை அடைந்தவைதான். இனியும் மாறுதல் அடைவதும் இயல்புதான். ஆகமங்கள் என்ன, எதுவும் கற்காமலேயே ஆண்டவனை அடைந்தவர்கள் உண்டுதான் - அவர்கள் படிக்காத மேதை போன்றவர்கள். படிக்காத மேதைகள் இருக்கிறார்கள் என்பதற்காக, படிப்பு சொல்லித்தரும் கல்விக்கூடங்களை மூடிவிட இயலுமா என்ன?
  'ஆகமங்கள் கூறுகின்ற ஆத்மசுகம் நான் பெறவே

  இராக தாள சந்தி சேர்த்து தூய கானம் பாடிடவே...' என்றொரு பாடலில் வரிகள் வரும். சிலருக்கு அது ஊக்கமருந்து. சிலருக்கு ஊன்றுகோல். சிலருக்கு வாழ்க்கைநெறி. எல்லாமே எல்லாருக்குமே உதவும் என அறுதியிட்டுக் கூற இயலாது. ஒருவருக்கு அதிகாலையில் சுப்ரபாதம் பாடுவது சரிபட்டு வரும். இன்னொருவருக்கோ அதிகாலையில் தூங்கத்தான் பிடிக்கும். அவர் இரவெல்லாம் விழித்திருந்து இறைவனை வேண்டுவாரோ என்னவோ. அவரவர் தமக்குரிய வழியினை போற்றட்டும். தனக்குரிய வழிதான் எல்லோருக்கும் சரியான வழி என்றெல்லாம் எண்ணாதவரை எல்லாம் சரியே.

  ReplyDelete
 85. //அவரவர் தமக்குரிய வழியினை போற்றட்டும். தனக்குரிய வழிதான் எல்லோருக்கும் சரியான வழி என்றெல்லாம் எண்ணாதவரை எல்லாம் சரியே.//

  அருமை அருமை வைர வரிகள் நண்பர் ஜீவா

  ReplyDelete
 86. எது எப்படியோ, ஆறுமுகசாமி செய்ததுவும், அதற்கு தீக்ஷிதர்கள் நடந்து கொண்டதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.

  தமிழை வளர்க்க நினைக்கும் பக்தியாளர்கள், இறைவனை நிந்திக்கும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு, நான் தமிழை வளர்ப்பேன் என்பது முரண்பாடாகத் தெரியவில்லையா?.

  மனசாட்சியோடு பேசட்டும். இந்த தமிழ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களெல்லாம் தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மூழுக்க முழுக்க தமிழ் வழி கல்வி மட்டும் தான் படிக்க வைத்திருக்கிறார்களா?

  அல்லது ஆடல் வல்லானின் மீது மாறாத பக்தி கொண்டு போராடினார்களா. அப்படி பக்தி கொண்டவர்களாக இருந்திருந்தால் இப்படி ஆண்டவன் சன்னதியை கசாப்புக்கடைபோல் ஆக்கியிருக்க மாட்டார்கள்.

  இன்னுமொன்று..... இவர்கள் எல்லாம் தினமும் பக்தியோடு போய் தேவாரம் பாடப்போகிறவர்களா என்றால் நடராசர்மீது சத்தியமாய் கண்டிப்பாய் இவர்களில் 1% கூட நடராஜர் கோவிலை முழுக்க சுற்றியிருக்கமாட்டார்கள்.

  ஆறுமுகனாரின் நோக்கத்தில் தமிழுக்காக என்பதை விட தீக்ஷிதர்களை எதிர்க்க வேண்டும் என்பதே தெளிவாய் தெரிகிறது. தீக்ஷிதர்களின் தவறுகளையும் அலசலாம்.

  தமிழ்க்காதலன்

  ReplyDelete
 87. அப்ப மாற்றி செய்வதற்கும் செய்யாமல் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

  அறிவியல் பரிட்சையில், பூகோளம் எழுதுவதை விட , எழுதாமலே ஸ்கூட் விடுவது மேல் இல்லையா..

  ///
  kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  அண்ணாச்சி...ஆகம வகுப்பு மாதிரி போயிக்கிட்டு இருக்கே! :-)

  தீட்சிதர்கள் தமிழக ஆலயங்களில் பரவலாக உள்ள சிவாகமத்தைப் பின்பற்றுவது இல்லை! கொஞ்சம் கடினமான, ஸ்ட்ரிக்ட்டான வேதாகமத்தைப் பின்பற்றுகிறார்கள். பதஞ்சலி முனிவர் செய்து கொடுத்த வண்ணம் பூசை முறைகள் தில்லையில் மட்டும்!
  ///

  பின்பற்றனும் என்று ஏன் சொல்லுறீங்க..அப்ப பின் பற்றவில்லை என்றால் என்ன ஆகும் என்ற ஒரு கேள்வி வருமே.

  //
  ஹிஹி...என்ன ஆகும்-னு எதிர்பாக்கறீங்க? :-)
  //

  சாமியார் ஆக்காதீங்கண்ணே..:P

  ///ஹிஹி.
  அரவிந்தானந்தரே! உங்கள் அருளுரை அற்புதம்! :-))///

  உள்குத்து ஏதும் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன்.. :)

  ///
  Jokes apart! கலக்குறீங்க தல! நல்ல சிந்தனை! கேலியாக் கேட்காம கேள்வியாக் கேட்கறீங்க பாருங்க! I like it!
  ///

  பள்ளத் தாக்கு இருந்தால் தான் பாலம் தேவை..அதுவே இல்லை என்பது தான் கடவுளை நம்புபவர்களின் கேள்வி. பள்ளம் இருப்பதாகவே சொல்லப்பட்டு வந்திருப்பதால், இதையெல்லாம் செய்தால் தான் கடவுள் ஏற்பான் என்று நினைக்கிறார்கள்.


  ///
  இங்க தான் கொஞ்சம் புரிதல் வேண்டும் அண்ணாச்சி. ஆகமம் பக்தனுக்கும் இறைவனுக்கும் தூரம் உருவாக்கவில்லை! பாலம் தான் உருவாக்கும்.
  ///

  இது எப்படி உண்டியலில் காசு போட்டால் கடவுள் கண் திறப்பார் என்பது போல் சொல்லுறீங்க..உங்களிடம் இதை எதிர்ப்பார்க்கவில்லை.. :P பக்தன் என்பதற்கு தனியாக விளக்கம் வைச்சியிருக்கீங்களா..நான் இல்லை தெரியும்..நீங்களும் இல்லையா...

  என்ன கொடுமை ரவி அண்ணா இது..

  ///
  நாம் எல்லாரும் பக்தர்களா? அங்கு தான் ஆகமம் உதவிக்கு வருது!
  ///

  சொல்லுங்க..ஆவலாக காத்து இருக்கேன்..

  ///
  ஏன் ஆகமம்-னு யாராச்சும் ஆன்மீகப் பதிவுலகப் பெருந்தகைகள் வந்து சொல்லுறாங்களான்னா பார்க்கலாம். இல்லீன்னா..அடியேன் சொல்கிறேன்!
  ///

  ReplyDelete
 88. ஏன் ஆகமம்? - நல்லாவே சொல்லி இருக்கீங்க!
  I will mark the important lines.
  //ஆகம விதிகள் இனியும் மாறுதல் அடைவதும் இயல்புதான்//
  //படிக்காத மேதைகள் இருக்கிறார்கள் என்பதற்காக, படிப்பு சொல்லித்தரும் கல்விக்கூடங்களை மூடிவிட இயலுமா என்ன?//

  //தனக்குரிய வழிதான் எல்லோருக்கும் சரியான வழி என்றெல்லாம் எண்ணாதவரை எல்லாம் சரியே//
  -இதுக்கு டிபிசிடி அண்ணாச்சி என்ன கேக்கப் போறாரு-ன்னு இப்பவே சொல்லிடறேன் :-)
  தனக்குரிய வழி தான் எல்லாருக்கும் சரியான வழி-ன்னு அப்ப எதுக்கு ஆகமங்களை ஆலயத்தில் ஜெனரலைஸ் பண்றீங்க? :-)))

  ReplyDelete
 89. கேள்வி கேட்கக் கூடாது என்றுச் சொல்லவில்லை என்று நம்புகிறேன்..

  :))

  ///
  kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  இதுக்கு டிபிசிடி அண்ணாச்சி என்ன கேக்கப் போறாரு-ன்னு இப்பவே சொல்லிடறேன் :-)
  தனக்குரிய வழி தான் எல்லாருக்கும் சரியான வழி-ன்னு அப்ப எதுக்கு ஆகமங்களை ஆலயத்தில் ஜெனரலைஸ் பண்றீங்க? :-)))
  ///

  ReplyDelete
 90. //Shobha said...
  Naanum attendance.
  Pressseeentt Sir! :)
  //

  ஷோபா - நீங்களுமா? சரி இனி நானும் மாதவிப் பந்தலில் attendance தான்! :-))

  ReplyDelete
 91. //TBCD said...
  கேள்வி கேட்கக் கூடாது என்றுச் சொல்லவில்லை என்று நம்புகிறேன்..:))//

  சேச்சே!
  நான் தான் அப்பயே சொல்லிட்டேனே அண்ணாச்சி! நீங்க கேலியாக் கேக்கலை! கேள்வியாக் கேக்கறீங்க!
  கேளுங்க! கேளுங்க!
  கேள்வியே வேள்வி! :-)

  ReplyDelete
 92. //Anonymous said...
  தமிழை வளர்க்க நினைக்கும் பக்தியாளர்கள், இறைவனை நிந்திக்கும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு, நான் தமிழை வளர்ப்பேன் என்பது முரண்பாடாகத் தெரியவில்லையா?//

  ஐயா! தமிழ்க்காதலரே! வணக்கம்!
  நிந்திக்கும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு குலாவினாலோ, இறைவனை நிந்தித்தாலோ அப்ப நீங்க சொல்லுறது சரி!

  இப்ப என்ன முரண்பாடு இருக்கு? ஆறுமுகச்சாமியோ ம.க.இ.க கட்சியில் எல்லாம் எதுவும் சேரவில்லையே! அதான் பதிவிலும் சொல்லிட்டேனே! இனி அரசியல் கட்சிகள் தேவை இல்லை! போராட்டம் முடிஞ்சாச்சு! அடுத்த கட்டத்துக்கு ஆன்மீகத் தலைவர்கள் தான் தேவை! அங்கிட்டுப் போங்க-ன்னு சொல்லிட்டேனே!

  இறையாளர்களும் இறை மறுப்பார்களும் ஒரே மேடையில் தோன்றவே கூடாது-ன்னா குன்றக்குடி அடிகளார்-பெரியார், ஆதிசங்கரர்-மண்டன மிஸ்ரர் இவங்க எல்லாம் சந்தித்து இருக்கவே முடியாது!

  SK ஐயாவின் சித்தர் கதையைப் படிங்க தெரியும். ஒரு நிகழ்வுக்கு இரு வேறு பாத்திரங்கள் ஒன்று சேருவதும், வினை ஊக்குவதும், பின்னர் அதனதன் வழியில் செல்வதும் இயற்கை-ன்னு சொல்லி இருப்பாரு! :-)

  //தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மூழுக்க முழுக்க தமிழ் வழி கல்வி//
  //அல்லது ஆடல் வல்லானின் மீது மாறாத பக்தி//

  ரெண்டுமே அவிங்க பண்ணறதில்ல-ன்னு தான் நானும் நினைக்கிறேன்! :-)

  //ஆறுமுகனாரின் நோக்கத்தில் தமிழுக்காக என்பதை விட தீக்ஷிதர்களை எதிர்க்க வேண்டும் என்பதே தெளிவாய் தெரிகிறது//

  :-)
  உங்கள் நோக்கமும் தமிழுக்காக என்பதை விட தீக்ஷிதர்களை எதிர்ப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்பது தான்! - அப்படின்னு சொன்னா? இதுக்கு முடிவே இல்லைங்க தலைவரே! :-)

  //தீக்ஷிதர்களின் தவறுகளையும் அலசலாம்//

  ஆத்திகரும் சரி, நாத்திகரும் சரி, இங்க தான் தப்பு பண்ணறோம்!
  அவன் தப்பு, இவன் தப்பு-ன்னு பழைய தப்பை அலசி அலசி...

  தப்பை அலசும் நேரத்தில்
  சரியானதைச் செய்யத் தொடங்கினா?

  கொஞ்சமாச் செஞ்சிட்டு அப்பறம் வேணும்னா வந்து தப்பை அலசலாம்.
  எல்லாத் தப்பையும் அலசிட்டு தான் ஆரம்பிக்கணும்-னா...
  அலை என்னிக்கு ஓயறது?
  மக்கள் என்னிக்கு குளிக்கிறது?
  அதுவரை குளிக்காம நாறிக்கிட்டுத் தானா இருக்கணும்? சிவசிவா! :-)

  ReplyDelete
 93. //பக்தன் என்பதற்கு தனியாக விளக்கம் வைச்சியிருக்கீங்களா..நான் இல்லை தெரியும்..நீங்களும் இல்லையா...
  என்ன கொடுமை ரவி அண்ணா இது..//

  என்ன கொடுமை டிபிசிடி அண்ணா.
  போயும் போயும் என்னைப் போய் பக்தன்-ன்னு சொல்லிட்டீங்களே.
  மகா பாவம். கழுவித் தள்ளோணும். பரிகாரம் பண்ணோனும். ஒரு நூறு வெள்ளி தட்சிணை அனுப்புங்க! :-)

  பூரண விசுவாசம் இருப்பவன் பக்தன். அசுரன் பிரகலாதன் பக்தன். அடியேன் பக்தன் இல்லை!

  நாடகத்தால் உன் அடியார் போல் "நடித்து" நான் நடுவே
  வீடகத்தே புகுந்திடுவான் - என்பது தேவாரம்! அதாச்சும் சுந்தரரே நடிக்கறாராம்! இதுல நான் பக்தனா? கிழிஞ்சுது! :-)

  //பள்ளத் தாக்கு இருந்தால் தான் பாலம் தேவை..பள்ளம் இருப்பதாகவே சொல்லப்பட்டு வந்திருப்பதால்//

  பள்ளம் இருக்கு! ஆனா நாமா உருவாக்கிகற பள்ளம் தான்! அதுக்கு நாமத் தானே பாலம் தேடிக்கணும்? அம்பேத்கார் தந்த அரசியல் அமைப்புச் சட்டப்படி எல்லாரும் ஓர் நிறை! ஆனா நெசத்துல அது இல்லை! அதான் பள்ளம். அதுக்குத் தான் அப்பப்ப சம உரிமை மாநாடு, கலப்புத் திருமண முகாம்-ன்னு பாலம் கட்டிக்கறோம்-ல! அது போலத் தான்! :-)

  ReplyDelete
 94. அண்ணன் ஜீவா சொன்ன படிக்காத மேதை-பள்ளிக்கூட ஒப்புமை சூப்பரு!
  அவர் சொன்னதுக்கு மேல, கொஞ்சம் மேலதிக விளக்கம்.

  அவரவர் விரும்பும் வழியில் வழிபடத் தடையே இல்லை-அது அடுத்த மனிதரை ஒரேயடியா பாதிக்காத வரை! எனக்கு ராத்திர நேரப் பூசை பிடிக்கும்-னு வீட்டுக்குள்ள 12:00 மணிக்கு உறுமி மேளம் வாசிச்சா, நம்மள வாசிச்சித் தள்ளிற மாட்டாங்க!
  இல்ல கண்ணப்பர் கல்லெறிஞ்சு லிங்கத்தை வழிபட்டாரு-ன்னு அடுத்த தபா, கோயிலுக்கு ஒரு கைப்பிடி கல்லு எடுத்துக்கிட்டுப் போங்க! :-))

  கண்ணப்பர்-ஈசன் வழிபாடு அவங்க ரெண்டு பேருக்குள்ள மட்டும்! தனியா யாரும் வராத காட்டுக்குள்ள! கண்ணப்பரும் சமூகத்தைக் கடந்த அத்யந்த பக்தி! அதுனால அங்க ஆகமம் தேவையே இல்ல!

  ஆனா பலரும் கண்ணப்பர் போல கண்ணைப் புடுங்கி கொடுப்போமா? அப்படியே கொடுத்தாலும் suicide attemptன்னு புடிச்சிக்கிட்டுப் போனா என்ன பன்ணுவீங்க? :-)
  Theory-க்கும் Practical-க்கும் இருக்கும் பள்ளத்தை ஒருத்தருக்கு மட்டும் இல்லாமல், பலர் கூடும் போது சரி செய்ய வந்தவை ஆகமங்கள்.

  ஆகமத்துல ஒரு பெரிய கோவிலைப் பலரும் நிம்மதியாப் புழங்கும் வண்ணம் நடத்தறது எப்படின்னு ஒரு work instruction போலச் சொல்லி இருக்கும்! குறைந்த பட்ச செயல் திட்டம்! ஆனா இது மக்களின் வாழ்வு நிலைக்கு ஏற்ப காலா காலம் மாறும்! மாறலாம்! மாற வேண்டும்!

  இன்னும் சொல்லறேன்!

  ReplyDelete
 95. Variety is the spice of life! அதுனால தான் அவங்க அவங்க விரும்பும் தெய்வத்துக்கேற்ப, ஒரே ஆகமமா இல்லாம...ரெண்டு மூனு ஆகமம்! ஆனா ஆகமம் தெய்வத்துக்கேற்பத் தானே ஒழிய, சாதிக்கேற்ப எல்லாம் இல்லை!

  நடைமுறையில் சிலர்/பலர் பேராசையால் தப்பு பண்ணிட்டு, சப்பைக்கட்டு கட்ட, ஆகமத்திலும் லைட்டாச் சொல்லியிருக்கு-ன்னு எடுத்துவிட, என்னான்னே தெரியாமல் நாமளும் கொளூத்துறா ஆகமத்தை-ன்னு எறங்கிடறோம்!

  இதுக்குத் தான் வள்ளலார் ஆகமத்தைக் காலத்துக்கு ஏற்றா மாதிரி தூசு துடைக்கணும், அதைத் திருமடங்கள் செய்யணும்-ன்னு சொன்னாரு! நமக்குத் தான் தீபம் காட்டவே டயம் சரியா இருக்கே!

  திருமடங்கள் பண்ணாததால, வள்ளலார் தனி இயக்கம் கண்டாரு. ஆனா இப்ப அதுவே ஒரு ஆகமம் மாதிரி ஆகிப் போச்சு! தீபத்தை முதலில் கண்ணாடியில் பிரதிபலித்து அப்புறம் தான் திருக்கதவம் திறப்பிக்கணும் அப்படி இப்படி-ன்னு அங்கேயும் ஆகிப் போச்சு! :-)

  ஆகமம் மனுசனுக்கு நல்லது தான் பண்ணியிருக்கு! மனுசன் தான் கண்டதையும் சேர்த்து, ஆகமத்துக்குக் கெட்டது பண்ணுறான். பழனி தான் பெஸ்ட் உதாரணம்! இருங்க சொல்லுறேன்!

  ReplyDelete
 96. ஆகமத்துல, ஆலயம்-ன்னா சிலை அளவு இவ்ளோ தான் இருக்கணும்...
  அது நாளடைவில் தேய்ந்தோ, ஒடைஞ்சோ போச்சுன்னா மனம் கலங்குமே...அதுனால பராமரிப்புக்குத் தைலக்காப்பு பண்ணனும். அதை எப்படிச் செய்வது-ன்னு சொல்லித் தருவதும் ஆகமங்கள் தான்!

  இந்நேரம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
  Agamam is more of a maintenance plan!

  பழனியில், ஆறு கால வழிபாட்டு - ஆறாறு(6x6) குடம் முழுக்காட்டுன்னு ஆகமத்தில் இருக்கு. ஆனா எத்தினி குடம் ஊத்துறாங்க? :-))) பால் குட டிக்கெட் வித்தாப் போதும்!

  இப்படி ஆகமத்தை மீறுவதால் ஆகமத்துக்கோ முருகனுக்கோ நட்டமில்லை! அவன் திருமேனியைப் பார்த்தா தெரிஞ்சிடும் யாருக்கு நட்டம்-னு!

  சிம்பிளா - இது தாங்க ஆகமம்!
  இதுல ஒன்னும் பெருசா கம்ப சூத்திரம் எல்லாம் இல்ல!

  நான் எப்பமே லோக்கலா சொல்லியே பழகிப் போச்சு! இதுக்கு மேல தத்துவார்த்த விளக்கங்களை எல்லாம் ஆன்மீக சூப்பர் ஸ்டார், விஷயம் அறிந்த பதிவுலகப் பெரியவர்கள் தான் வந்து தான் சொல்லணும்!
  அப்பனே முருகா! லஞ்ச் டைம்! பசிக்குதுப்பா! :-)

  ReplyDelete
 97. நேற்று இட்ட பதிவுக்கு பதிலளித்தவர்களுக்கு நன்றி.
  தீக்ஷிதர்களைப் பற்றி அலசலாம்.

  சாதாரணமாய் முடிய வேண்டிய விஷயத்தை பெரிதூ படுத்தி மக்கள் மத்தியில் மதிப்பிழந்து விட்டார்கள். காரணம் இவர்கள் என்ன சொன்னாலும், கடைசியில் நீதிமன்றம் சொல்வது தான் ஜயிக்கும். தொடர்ந்து தினமும் எதிர்த்துக் க்கொண்டு இருக்கமுடியாது.

  விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதையாய் வரிந்து கட்டிக்கொண்டு சண்ட்டை போட்டதை நிச்சயம் யாரும் ரசிக்க மாட்டார்கள்.

  அப்படி தீக்ஷிதர்கள் செயதது சரி என்றால் மொத்த சிதம்பரமும் அவர்களுக்கு சாதகமாகா ஏன் எழுந்து நிற்கவில்லை.

  திக்ஷிதர்கள் என்ன வெளிநாட்டிலா இருக்கிறார்கள். சொந்த மண்ணிலேயே அவர்களுக்கு ஆதரவில்லை என்று புலப்படும் போது அவர்கள் செயல் பட்டும் விதம் அவர்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் நீர்த்து போய் விட்டது.

  தமிழ் வேண்டுமா வேண்டாம என முடிவெடுக்கும் அதிகாரம் தீக்ஷீதர்களுக்கு இல்லை என்பது புலனாக்கிவிட்டது.

  நல்ல வேளை திருப்பதியில் தினமும் தமிழில் ஆராதனை நடப்பது தெலுங்கர்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.....இல்லாட்டி அவங்களும் தெலுங்கு கோவிலில் தமிழில் பாசுரம் படிக்கக்கூடாதுன்னு ஆரம்பிச்சா எப்படி இருக்கும்......

  மனப்பூர்வமாய் சொல்லவேண்டுமானால், தமிழில் பாடுவதாலோ அல்லது வடமொழி மந்திரங்களாலோ இறைவன் ஈர்க்கப்படுவான் என நம்புவதை விட, அடுத்தவன்வாழ உதவி செய்து நம் வாழ்வை புனிதமாக்கிக்கொள்ளலாம்.
  தமிழ்க்காதலன்.

  ReplyDelete
 98. அன்பின் நண்பர் இரவிசங்கர்,

  மனங்கவர்ந்த பதிவு. மிக நாகரிகமான
  எண்ணங்கள். விளக்கங்களும் நேர்த்தி.
  பாராட்டுக்கள். நன்றி.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 99. //நல்ல வேளை திருப்பதியில் தினமும் தமிழில் ஆராதனை நடப்பது தெலுங்கர்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.....இல்லாட்டி அவங்களும் தெலுங்கு கோவிலில் தமிழில் பாசுரம் படிக்கக்கூடாதுன்னு ஆரம்பிச்சா எப்படி இருக்கும்......//

  சரியான கேள்வி.கடவுளுக்கென்ன தமிழும், வடமொழியும் மட்டுந்தான் தெரியுமா என்ன?. தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்தி,இந்தில எல்லாம் பாடல்கள் இல்லையா?...

  ReplyDelete
 100. //nayanan said...
  மனங்கவர்ந்த பதிவு. மிக நாகரிகமான
  எண்ணங்கள். விளக்கங்களும் நேர்த்தி.
  பாராட்டுக்கள்//

  நன்றி நாக.இளங்கோவன் ஐயா!
  உங்கள் மனம் கவர்ந்தது எண்ணி மகிழ்ச்சியே!

  ReplyDelete
 101. //Anonymous said...
  காரணம் இவர்கள் என்ன சொன்னாலும், கடைசியில் நீதிமன்றம் சொல்வது தான் ஜயிக்கும்//

  இதைப் புரிந்து கொண்டு நடந்தால் நல்லது அனானி ஐயா!
  பதிவில் இரண்டு தரப்புக்கு உள்ள கடிதங்களின் சாராம்சத்தைத் தான் உங்கள் இரண்டு பின்னூட்டங்களிலும் சொல்லி இருக்கீங்க! நன்றி!!

  //தமிழ் வேண்டுமா வேண்டாம என முடிவெடுக்கும் அதிகாரம் தீக்ஷீதர்களுக்கு இல்லை என்பது புலனாக்கிவிட்டது//

  :-)
  உண்மை!

  //நல்ல வேளை திருப்பதியில் தினமும் தமிழில் ஆராதனை நடப்பது தெலுங்கர்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.....//

  தெலுங்கருக்குத் தெரியும்! TTD நடைமுறைகளை அச்சடித்து வைத்துள்ளது. மேலும் பாசுர ஆராய்ச்சிக்கும் நிதி ஒதுக்குகிறது! அதை பட்ஜெட்டிலும் அரசிடம் சமர்ப்பிக்கிறது! :-)

  ஆனா தமிழ் மட்டுமே பாடுப்படுவதில்லை! அன்னமய்யாவின் தெலுங்குக் கீர்த்தனைகள், புரந்தரதாசரின் கன்னடப் பாடல்கள், பாவாஜி செய்தருளிய இந்திப் பாடல்கள் சிலவும் படிக்கப்படுகிறது.

  இராமானுசருக்குப் பின் வந்த ஆசாரியர்கள் மற்ற மொழிகளிலும் பரவும் பக்தி இயக்கத்தைக் கண்டு அவற்றுக்கும் திருமலையில் இடம் அளித்து மகிழ்ந்தார்கள்...அந்தத் தொலைநோக்கு இன்றும் உதவுகிறது!

  //மனப்பூர்வமாய் சொல்லவேண்டுமானால், தமிழில் பாடுவதாலோ அல்லது வடமொழி மந்திரங்களாலோ இறைவன் ஈர்க்கப்படுவான் என நம்புவதை விட, அடுத்தவன்வாழ உதவி செய்து//

  மிகவும் சத்தியமான வார்த்தை!
  அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் என்று தான் சிவனடியாரும் பாடுகின்றனர்.

  ஆனால் சில ஜீவாதார உரிமைகளையும் அதே சமயத்தில் காக்க வேண்டும் என்பதை மறுக்கவும் முடியாது! அதை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள் இன்றைய நுகர்வோர் உலகில்! அப்படிப்பட்ட உரிமைகளுள் ஒன்று தாய்மொழி வழிபாடு...அல்லது தாய் மொழி தள்ளி வையாமை!

  ReplyDelete
 102. //வெறுப்பு சிவம் ஆகாது! மொழி வெறுப்பும் சிவம் ஆகாது!
  அன்பே சிவம்! அருளே சிவம்!//

  வழிமொழிகிறேன். விளக்கங்களும் அருமை:)

  ReplyDelete
 103. நண்பர். கண்ணபிரான். இரவிசங்கர் அவர்களுக்கு,

  சிதம்பரம் மொழிப்போர் சம்பந்தமாக பதிவெழுதி வெளியிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்கள்.

  அதில் சில கருத்துக்களில் நான் உடன் பட்டாலும் பல கருத்துக்களில் நான் கடுமையாக மாறுபடுகிறேன். இந்த பதிவு குறித்த பிண்ணூட்டங்கள் ஏற்கெனவே 100ஐத் தாண்டிவிட்டதால் இன்னும் நீட்டிக்க விரும்பாமல் நீங்களே குறைத்துக்கொள்ள எண்ணுவது உங்களது பிற பதில்களிலேயே தெரிகிறது.

  எனவே உங்களை என்னுடைய தளத்தில்(yekalaivan.blogspot.com) வந்து விவாதிக்க அழைக்கிறேன். மேலும் உங்க‌ளுடைய‌ அடுத்த‌டுத்த‌ ப‌திவுக‌ள் அர‌சிய‌ல்/ச‌மூக‌ம் சார்ந்து இருக்குமானால் அதில் என்னுடைய‌ பிண்ணூட்ட‌ம் நிச்ச‌ய‌மாக‌ இட‌ம் பெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ந‌ன்றி!

  ஏக‌லைவ‌ன்.

  ReplyDelete
 104. மேலும் ஜடாயு, சுழியம், கீதாமாமி, திவா போன்ற தேசபக்தர்களையும்?! என்னுடைய வலைதளத்திற்கு விவாதிக்க அழைக்கிறேன்.

  வந்தேமாதரம்!, பாரத்மாதா கி ஜே!, போன்ற வசனங்களோடு 'பார்ப்பன தாதாக்களுக்கும் ஜே!' என்றும் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் 21ஆம் நூற்றாண்டிலும் இந்த நாட்டில் 'தீண்டாமையை' வாழவைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் சார்பாக இணையத்தில் வந்து சப்பைக்கட்டு கட்டினால் மட்டும் போதாது.

  தமிழர்களை வெறும் பக்தர்களாக மட்டும் வைத்துக்கொண்டு அவர்களுடைய பாக்கெட்டைத் தடவி காசு பார்த்து தொந்தி வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்குள் சாதி தீண்டாமையையும் உருவாக்கி, அவர்களுடைய மொழி உள்ளேவரத் தடைவிதிக்கும் பாப்பானுக்கு எதிராக யாராவது போராடினால் அவர்களை 'இந்து விரோதி' என்று அழைப்பது மேற்கண்ட அம்பிகளின் வழக்கமான முறை. இந்து மதம் என்பதே தீண்டாமையை வளர்த்து காப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தானே. இந்து மதம் என்பது மனிதகுலத்திற்கே விரோதமானது (ஆனால் பார்ப்பானுக்கு மட்டும் சாதகமானது) என்பது என்னைப் போல‌ தீண்டாமையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பல கோடி இந்துக்களுக்கு(!) தெரியும்.


  நாங்க‌ள் பிறப்பால் இந்துவாக இருந்தாலும் சாதியால் அந்நியப்பட்டுத் தான் இருக்கிறோம். முஸ்லீமாகவும், கிறித்தவனாகவும் ப‌ல‌ர் மாற்றப்பட்டதற்கு காரணமே இந்து மத தீண்டாமைக் கொடுமைதானே. அவர்களை அந்நியர்கள் என்பான், இந்த அந்நியக் கைக்கூலி தேசபக்தர்கள்(!).


  தங்களுடைய பார்பன மதத்தை தொடர்ந்து காப்பாற்ற வக்கற்றுபோனதால், அதற்காக வாதாடவும் மக்கள் போராட்டத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் இவர்களுக்கு அடியாட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காகத்தான் இந்து மதம் என்று பகல்வேடம் கட்டி ஆள்சேர்க்கும் வேலையை செய்கிறார்கள். நம்முடைய போராட்டம் சிதம்பரத்தில் தமிழ்பாடுவதற்காக மட்டும் இல்லை நண்பர்களே, இந்து பார்ப்பன பயங்கரவாதிகளின் ஆன்மீக முகமூடிகளை கிழிப்பதுவும் தான். சிதம்பரம் போராளிகள் அத‌னை உலகத்துக்கே அம்பலப்படுத்தியதனால் தான் அவர்கள் இங்குவந்து குமுறுகிறார்கள்.


  அனானியாகவந்து 'அர்ஜுன் சம்பத்' தினமணியில் வெளியிட்ட கட்டுரையை இங்கே நைசாக சொருகிவிட்டு சென்ற அம்பிக்கு, ந‌ம்மிட‌ம் முக‌ம்காட்ட‌ ம‌றுக்கும் அந்த‌க் கோழைக்கு என்னுடைய‌ ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்.

  தொட‌ர்ந்து ச‌ந்திப்போம்.


  ஏக‌லைவ‌ன்.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP