Friday, March 21, 2008

***கண்ணன் பாட்டு: கந்தன் திரு நீறணிந்தால்! கண்டபிணி ஓடிவிடும்!

இஸ்டார் வீக்குல முடிஞ்ச மட்டும் வெளம்பரம் தேடிக்கணுமாம், நம்ம கண்ணன் பாட்டு வித்தகர் வெட்டிப்பயல் ஐடியா கொடுக்கறாரு! ஞாபகம் இருக்குல்ல? தில்லாலங்கடி தாங்கு-ன்னு எம்பெருமான் முதலடி எடுத்துக் கொடுக்க, நம்ம வெட்டி ஈற்றடி எடுத்து, கண்ணன் பாட்டையே வித்த "வித்த"கர் அவரு! :-)

மேட்டர் இன்னான்னா, பல பதிவுகள் வைத்திருந்தாலும், நட்சத்திர வாரத்தில் ஒரே பதிவில் இருந்து பதிவது தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்!
அச்சச்சோ, அப்போ என் மத்தக் குழந்தைகள் - கண்ணன் பாட்டு, இசை இன்பம், முருகன் அருள், சுப்ரபாதம், பிள்ளைத் தமிழ் - இதெல்லாம்?

எலே வெண்ணை! இப்போதைக்கு அதை எல்லாம் மாதவிப் பந்தலில் போடு; அந்த வலைப்பூவுக்கு இலவசமா நட்சத்திர வெளம்பரம் பண்ணு!
அப்பாலிக்கா இஸ்டார் வீக்கு முடிஞ்ச பிறகு, அதை எல்லாம் அந்தந்த வலைப்பூவுக்குள் கூடு விட்டு கூடு பாஞ்சிக்கணும்! என்னாப் புரியுதா? :-)

இது சூப்பர் ஐடியாவா இருக்கே! இப்படியே பண்ணீறலாம்!

கண்ணன் பாட்டு குழுப்பதிவு பத்திப் பலருக்கும் தெரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்! சினிமாப் பாடல்கள், ஆல்பம், மேடைக் கச்சேரிகள், தனிப் பாடல்கள், நீங்களே எழுதிப் பாடிய பாடல்கள்-ன்னு,
கண்ணனும் கண்ணன் நிமித்தமும் இருக்கிற பல பாடல்களின் களஞ்சியம் தான் அந்த வலைப்பூ! It's an one stop shop for Kannan Songs! இன்னும் கொஞ்ச நாளில் சதம் அடித்து விடும்!

மலைநாடான் ஐயா, குமரன், ஷைலஜா, திராச, மடல்காரன் பாலு, டிடி அக்கா, வெட்டிப்பயல், அடியேன்-னு ஒரு கூட்டமே கும்மாளம் போட்டிக்கிட்டு இருக்கு அங்கே!
ஜிரா, கோவி.கண்ணன், மதுரையம்பதி, வல்லியம்மா, நா.கண்ணன் என்று வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகளும் இருக்காய்ங்க!
வெளியுலகில் அச்சில் வராத பாடல்களும் அதில் இருக்கு! அதை மெளலி அண்ணா போன்றவர்கள் தேடிப் பிடித்துக் கொடுக்க, நம்ம அன்பு வல்லியம்மா போன்ற பதிவர்கள் சொந்தக் குரலில் பாடியும் கொடுத்திருக்காங்க!

பல அருமையான பாடல்களின் வரிகள், இசை, ஒலி, ஒளி, படங்கள்-னு...உங்களுக்கு மிகவும் பிடிச்சிப் போயிடும்! எட்டிப் பாருங்க!
வாங்க இன்னிக்கு ஒரு சூப்பர் கண்ணன் பாட்டைப் பார்க்கலாம்!


(அழகு கொஞ்சும் முருகப் பெருமான் - வள்ளி சற்றே எட்டிப் பார்க்க - எந்த ஆலயம்-னு தெரிகிறதா?)

"மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா" என்பதை TMS அழுத்திப் பாடும் போது, நம் மனதில் திருநீறும் சேர்ந்தே அழுந்தி விடும்!
அப்படி என்ன பெருசா மகிமை இருக்குதுங்க திருநீறில்? பின்னூட்டதில் சொல்லுங்களேன் பார்ப்போம்! (க்ளூ வேணும்னாக் கொடுக்கறேன்! சம்பந்தப் பெருமான் திருவாலவாயன் மீது பாடிய பாட்டின் வரிகளை எடுத்துக்கிட்டா, மகிமை-1, மகிமை-2...அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே கிடைத்து விடும்!)

* திருநீறுக்கு ஐஸ்வர்யம் என்ற இன்னொரு பேரு இருக்கு தெரியுமா?
வாரியார் சுவாமிகளிடம் ஒரு ஊரில் பழங்குடி மக்கள் ஐஸ்வர்யம் கேட்டனர். வாரியாருடன் போன பழுத்த சைவர்கள் சிலர், சரி ஜனங்க ஏதோ துட்டு கேக்குதுங்க-ன்னு நினைச்சிக்க, வாரியார் அவர்களைத் திருத்தினார். ஐஸ்வர்யம்=திருநீறு என்பது நமக்கே இப்பல்லாம் தெரியாது! மறந்து போச்சி! எங்கேயோ பாட்டில் வரும்! அது எப்படி இந்த ஆதிவாசி ஜனங்களுக்குத் தெரிந்தது?-ன்னு மிகவும் வியந்தாராம்!

* திருக்கண்ணமங்கை பெருமாளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை திருநீறு பூசி வழிபடுகிறார்கள் தெரியுமா? அப்போது அர்ச்சகர்கள், பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் கூடவே தாங்களும் திருநாமத்தின் மீதே திருநீறு பூசிக் கொள்வதை யாராச்சும் பார்த்திருக்கீங்களா?

* விபூதி என்றும் வழங்கப்படும் திருநீறு, பகவத் கீதையில் எங்கே வருதுன்னு தெரியுமா? (அடியேன் பெகாவத் கீதையைச் சொல்லவில்லை! அங்கு தேடினால் ஒன்னும் கிடைக்காது!:-)


சிறிய, மனப்பாடம் செய்ய எளிதான பூசைப் பாடல்! படித்து மகிழவும்!
பாடலை இங்கே கேட்கவும்!
குரல்: TMS வரிகள்: MP Sivam

கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்

(கந்தன்)

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்துச் சொந்தம் கொண்டாடிடுவாள்

(கந்தன்)

மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா
(கந்தன்)

13 comments:

  1. கேயாரெஸ்,

    தெரிந்த பாடல் என்றாலும், மனனம் செய்ய எளிதானதென்று சொல்லி மனனம் செய்யத் தூண்டியதர்கு நன்றி. செய்வோம்.நகைச்சுவை, கேள்விகள், கருடத்துகள் அனைத்தும் உள்ளடக்கிய அருமையான பதிவு. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Monitor de LCD, I hope you enjoy. The address is http://monitor-de-lcd.blogspot.com. A hug.

    ReplyDelete
  3. ////எலே வெண்ணை! இப்போதைக்கு அதை எல்லாம் மாதவிப் பந்தலில் போடு; அந்த வலைப்பூவுக்கு இலவசமா நட்சத்திர வெளம்பரம் பண்ணு!
    அப்பாலிக்கா இஸ்டார் வீக்கு முடிஞ்ச பிறகு, அதை எல்லாம் அந்தந்த வலைப்பூவுக்குள் கூடு விட்டு கூடு பாஞ்சிக்கணும்! என்னாப் புரியுதா? :-)///

    அந்தப் பதிவிற்கு எதுக்கு சுவாமி விளம்பரம்?

    அது வாசம் மிகுந்த பூக்கடை!

    பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்?

    வாசத்தை வைத்து வாசகன் வர்மாட்டானா?

    ReplyDelete
  4. //வாசத்தை வைத்து வாசகன் வர்மாட்டானா?//
    வலை வழியா வாசம் வரதில்லையே! இருக்கு ன்னு யாராவது சொன்னாதானே தெரியுது! (வலை வழியா அப்பப்ப நாத்தம் மட்டும் வருது! :-))

    ReplyDelete
  5. படத்துல இருக்குற முருகன் யாருன்னு மட்டும் இன்னும் யாருமே சொல்லலையே!

    ReplyDelete
  6. \\kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    படத்துல இருக்குற முருகன் யாருன்னு மட்டும் இன்னும் யாருமே சொல்லலையே\\

    தல

    நீங்களே சொல்லிடுங்க ;;)

    ReplyDelete
  7. நான் மிகவும் விரும்பி கேட்கும் TMS பாடல். கோவிலில் தீருநீறு அணியும் போது வாய் தானாகவே இப்பாடலைத்தான் முணுமுணுக்கும். வரிகளுக்கு நன்றி.

    //படத்துல இருக்குற முருகன் யாருன்னு மட்டும் இன்னும் யாருமே சொல்லலையே!
    //

    படத்துல இருக்கிறது முருகன்னு நீங்களே சொல்லிட்டீங்க. அப்புறம் யாருன்னு கேட்கறீங்க :)

    ஆலயத்தை நீங்களே சொல்லிடுங்க. உங்களுக்கு தெரியுதான்னு பார்ப்போம் :)

    ReplyDelete
  8. Am I the only one finding that a religious blog is not fit to be named as star of the week?

    Religious believes and professionalism cannot co-exist. I would say this week was pretty boring to an average tamil blog reader.

    (I am not commenting about this blogger's ability to write or on his belief. It's his own blog, he has the freedom to write anything. But when it comes to publicizing his blog over a week at a widely visited place like thamizhmanam-which I believe is secular, care should be taken that these kind of religious-affiliated blogs not be given importance.)

    What about the friends from other religions? Do you think whatever you wrote is going to make any sense to them?

    ReplyDelete
  9. //படத்துல இருக்குற முருகன் யாருன்னு மட்டும் இன்னும் யாருமே சொல்லலையே!
    //

    வள்ளி உடன் இருக்கும்போதே தெரியாதா?

    வழித்துணை வரும் திருத்தணி முருகன்!

    ReplyDelete
  10. இந்த ஆலயம் கேரள வழக்கத்து ஆலயம்! தமிழரைக் காட்டிலும் மலையாளிகளும், தமிழரில் நாஞ்சில் நாட்டூ மக்களும் அதிகம் வந்து செல்வது!

    ReplyDelete
  11. //திருநீறுக்கு ஐஸ்வர்யம்// இது வரை தெரியாது; நன்றி.

    கீதையில் விபூதி: இது சரியா? Chapter 10

    முருகன் - எங்கே என்று தெரியலையே....? :-(

    //பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்? வாசத்தை வைத்து வாசகன் வர்மாட்டானா?// எல்லா நாடுகளிலுமிருந்தும் அந்த பூக்கடைக்கு வழி தெரிய நட்சத்திரம் தானே வழி காட்ட வேண்டும்;) நான் நெடுநாள் வாடிக்கையாளர்.

    Dear abn,
    //Religious believes and professionalism cannot co-exist.// I constantly work with Christians wearing Ash on Ash Wednesdays & Muslims taking breaks to pray. How/Why are you so sure?

    //I would say this week was pretty boring to an average tamil blog reader.// I too am an average tamil blog reader. Pray define an average tamil blog reader.

    ஒவ்வொரு நாளும் பல மதத்தினரும் தமிழ்மணத்தில் "ஆன்மிகம்" லேபிலில் பதிகிறார்கள்...

    ReplyDelete
  12. //I would say this week was pretty boring to an average tamil blog reader.//

    I strongly disagree! This was as usual an excellent
    week to read Ravi's blogs!!! I consider myself
    an average tamil blog reader.

    ReplyDelete
  13. The Murugan picture would be of Vellimalai murugan temple in Kanyakumari district or Haripad murugan temple.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP