***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு!
நட்சத்திர வாரத்தில் மாயா பஜார் ரேஞ்சுக்கு விருந்து கொடுக்காவிட்டாலும், கூப்பாடு போடாத அளவுக்காச்சும் சாப்பாடு போடணும்-ல!
இன்னிக்கி கிச்சன் காபினெட் பக்கம் ஒதுங்கலாம்-னு ஐடியா!
மாதவிப் பந்தலில் செவிக்கு உணவு ரொம்பவே கொடுத்தாச்சு இஸ்டார் வீக்குல! அதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்-னு...
யாருப்பா அது ஈயப்படும்-னு சொல்லுறத்துக்கு முன்னாடியே பெண் ஈயம், ஆண் பித்தளை-ன்னு கெளப்பறது? ஓ...கொத்தனாரா?
வாய்யா! வா! கொத்தனார் கிட்டத் தான் இந்த மாதிரி அறிவியல் பூர்வமான கேள்வி எல்லாம் கேக்கோனும்! விக்கியும் நீயே, பக்கியும் நீயே! அறிவியல் கொக்கியும் நீயே! ஆன்மீக மிக்கியும் நீயே!
கொத்ஸ் அண்ணே: அவரைக்காய் என்றால் என்ன? கொத்ஸ்வரங்காய் என்றால் என்ன? அதை அமேரிக்காவில் இங்க்லிபீஷ்-ல என்னன்னு சொல்லி வாங்கணும்ணே?
இதைத் தீர்த்து வைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இபிகோ செக்சன் 356 படி, உங்க மேலச் சுமத்தப்பட்டுள்ளது.
நாம சாப்பாட்டு மேட்டருக்கு வருவோம்! இந்த அவரக்கா தெரியுங்களா ஒங்களுக்கு, அவரக்கா?
என்னாது? அவர் அக்கா, இவர் அக்கா-ன்னு எல்லாம் கேக்கறீங்களா?
போச்சுடா! பதிவுலகில் எனக்கு நிறையவே அக்காங்க!
கெ.பி.அக்கா மொதக் கொண்டு, ஜி3 அக்கா இடைக்கொண்டு, துர்கா அக்கா கடைக்கொண்டு, சர்வம் அக்கா மயம்!
இதுல நான் எவர் அக்காவைச் சொல்வது? நான் சொல்லுறது அவரைக்காய்-ங்க! பச்சையா இருக்கும்-ல!
இதுக்குத் தான் சென்னை போகும் போதெல்லாம் அம்மா கூட மார்க்கெட்டுக்கு ஒரு நடை போயி வரணும்ங்கிறது! இங்கிட்டு பார்க்காத காய்கறி எல்லாம் அங்கிட்டு பார்த்துக்கலாம்!
அம்மாவின் ஸ்பெசாலிட்டிகளில் இந்த அவரைக்காயும் ஒன்னு! அவரைக்காய் புளிக்குழம்பு-ன்னு ஒன்னு வைப்பாங்க பாருங்க! யம்மாடியோவ்!
அந்த உறைப்புக்கும் காரத்துக்கும் சாப்பாடு கூட வேணாம்! சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப் பய தான் நானு! அதுக்குக் கூடவே தொட்டுக்க அவரைக்காய் பொரிச்ச கூட்டு! - இப்பவே எனக்கு நாக்கு ஊறுதே!
இன்னும் கொஞ்ச நாளு தானே! இதோ சென்னைக்குப் போனவுடன், நான் கேட்காமலேயே இந்த ஐயிட்டம் எனக்காகச் செய்து வைக்கப்பட்டிருக்கும்! வூட்டாண்ட வாங்க, 50-50 போட்டுக்கலாம்! :-)
அவரைக்காய் பொரிச்ச கூட்டு எப்படிச் செய்யறது?
(அந்தப் அவரைப் புளிக் கொழம்பு அம்மா கிட்ட இது நாள் வரை கேட்டுக்கலைங்க! சாரி, கூட்டு மட்டும் இன்னிக்கி பார்க்கலாம்)
1. மொதல்ல கிச்சன் எங்க இருக்குன்னு கண்டுபுடிச்சிக்குங்க! வழி தெரியலையா? இந்தாங்க!
2. தேவையான பொருட்கள்:
அவரைக்காய் = 1/4 கிலோ (அரிஞ்சி வைச்சா, 3 கப் வரும்)
கடலைப் பருப்பு = ?
(கடலை போடும் போதே இதெல்லாம் தெரிஞ்சி இருக்கணும்! சரி போனாப் போவட்டும்! சொல்லிடறேன்! 1/4 கப்)
புளி பேஸ்ட் = 1 தேக், பெருங்காயம் = 1/2 தேக்
உப்பு, எண்ணெய், கடுகு, கறிவேப்பலை, உ.பருப்பு, காய்ஞ்ச மிளகாய்(3) = இதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்கே தெரியும்! ஒங்களுக்குத் தெரியாதா என்னா? தேங்காத் துருவல்= ஒரு கைப்பிடி போட்டா இன்னும் மஜாவா இருக்கும்!
3. அவரைக்காயைக் மொதல்ல அந்த இழை உரிக்கணும்! இல்லீன்னா சாப்பிடும் போது நூடுல்ஸ் மாதிரி வந்து உயிரை வாங்கும்.
அப்பறம் அவரைக்காயைத் துண்டு துண்டா அரிஞ்சி வைச்சிக்குங்க! நீளவாட்டில் பொடிசா அரிஞ்சா இன்னும் நல்லா இருக்கும்! French Fries மாதிரி ஒரு மொரமொரப்பு கெடைக்கும்!
4. கடலைப் பருப்பைத் தனியாக் குக்கரில் வேக வச்சிக்குங்க! அட, அரிசி வைக்கும் போது, கூடவே இதையும் வச்சிக்குங்க அப்பு! :)
5. இனி மேல் தாண்டி வேலை!
வாணலியில்(கடாய்) எண்ணெய் விட்டு, காய்ஞ்ச மிளகாய், உ.பருப்பு எல்லாம் கொட்டி பொன்னிறமா வறுத்துக்குங்க! இது கூடத் தேங்காய்த் துருவல் சேர்த்து, மிக்சியில் நல்லா விழுதா, ஒரு அரை அரைச்சிக்கிடணும்!
ஏற்கனவே கட் பண்ணி வச்ச அவரைக்காயை வாணலியில் கொட்டி, கீப் ஆன் வதக்கிங்!
வேக வைத்த கடலைப் பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும்! உப்பும், மஞ்சள் தூளும் தேவையான அளவு முன்னாடியே சேர்த்துக்கிடணும்!
நெருப்பைக் குறைச்சி, தட்டு போட்டு மூடிருங்க! கொஞ்ச நேரம் ஆவியில் வேகட்டும்!
திரும்பவும் வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு/கறிவேப்பிலை/பெருங்காயம் போன்ற தாளிப்பு சமாச்சாரங்களை எல்லாம் கவனிச்சுக்குங்க! கடுகு கொஞ்சம் நல்லாவே வெடிச்சா வாசனையும் தூக்கலா இருக்கும்!
பத்து நிமிசம் கழிச்சி, மூடி வைச்ச தட்டைத் தொறந்து,
உப்பு, புளி பேஸ்ட், ஏற்கனவே அரைச்சி வைச்ச தேங்காய்ப் பேஸ்ட், இப்ப தாளித்த ஐட்டம்-இது எல்லாத்தையும் ஒன்னாக் கொட்டிக் கிளறி, ஒரு ரெண்டு நிமிடம் வதக்கினாக்கா...பொரியலா, மொரமொர-ன்னு வரும்!
மணக்க மணக்க....பொரிச்ச அவரைக்காய்க் கூட்டு!
சுடச்சுட ஆவி பறக்கும் மல்லிப்பூ சாதத்துடன் தொட்டுக்கிட்டுச் சாப்பிடலாம்! ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப தான் கிக்கே கெடைக்கும் என்பது கெக்கே பிக்குணி அக்காவின் ஆணை! :-)
ஜவ்வரிசி வத்தல், தனியாத் துவையல், புதினாத் துவையல் கூட, இந்த அவரைக்காய்க் கூட்டை வச்சி சாப்பிட்டாக்கா...சொர்க்கம் நிச்சயம்! :-))

அவரைக்காய் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! நீரிழிவு/அலசர் நோயாளிகளுக்கு இப்போது அறிவுறுத்தப்படும் ஓர் உணவு! நார்ச் சத்து (Fiber) அதிகம் உள்ளது! உள்குத்து...ச்சே உள்காயங்களுக்கு நல்ல மருந்தும் கூட!
தெலுங்கு=சிக்குடு காய், கன்னடம்=அவேரக்காயி, மலையாளம்=அவரா, இந்தி=செம்; இங்கிலிபீஷ்-ல என்னான்னு தெரிஞ்சா ஓடிப் போயி, பாத்மார்க் கடையில் வாங்கியாந்துறலாம்! கொத்ஸ், என்ன ரெடியா? மக்களே, நீங்க அதுக்குள்ள ஒரு கை அள்ளி வாயில் போட்டுக்குங்க! இன்னா, எப்படி இருக்கு அவர் அக்கா, இவர் அக்கா, எவர் அக்கா பொரிச்ச கூட்டு? :-)
அவரைக்காய் பொரியலின் படம் எங்கே.
ReplyDeleteஅழகாக ஒரு தட்டில் வைத்து படம் பிடித்து வெளியிட வேண்டாமா.
அவரைக்காயை இப்படியா வெட்டுவாங்க நீளவாட்டில். நாமெல்லாம் பக்கவாட்டில்தான் வெட்டுவோம்.
கடலையை ஏன் தனியா குக்கரில் வேகவைக்க வேண்டும் வாணலியில் வறுத்துக் கொண்டால் போதாதா.
சரி எவ்ரிபடி ஹாவ் தேர் ஓன் வே ஆஃப் குக்கிங்.
சரி பரவாயில்லை. அவரைக்காய் பொரியல் பார்சல் ப்ளீஸ்.
//விக்கியும் நீயே, பக்கியும் நீயே!//
ReplyDeleteவிக்கி சரி. யாரு அந்த பக்கி?
ஒரு புளோல (flow) சொல்லிட்டிங்களா? இல்ல இன்னொரு 'அதிரடிமச்சான்' கிளம்பிட்டாரா?
பாருங்க மண்டையே வெடிச்சிரும்போல இருக்கு :-))
ஒரே பந்தியில 20 கோர்ஸ்னு சாப்பாடு போட்டுருக்கீங்க. நம்மையும் பேரு சொன்னதற்கு நன்றி.
ReplyDelete1. அந்த மாப் ல எங்க கிச்சன் வழி இன்னும் தெரியவில்லை. பக்கத்து வீட்டு கிச்சன் வழியும் தெரியவில்லை.
2. தேக் என்றால் teak ஆ?
3. //நெருப்பைக் குறைச்சி, // அய்யா, அடுப்பை எப்போ ஏற்றியிருக்க வேண்டும்? அதையே சொல்லல. இது எந்த நெருப்பு? இந்த பொரிச்ச கூட்டு படத்தைப் பாத்தவுடனே, பகபகனு பசிக்குதே, அதுவா?
Broad-beansநு சில சமயம் பார்த்திருக்கேன். இந்த பதிவுல (Hyacinth beans) வேறு பெயர்களும் பயன்களும் சொல்லுகிறார்கள். எங்களூரில் கிடைக்கும் அவரை தமிழ்நாட்டு அவரை டேஸ்ட் இல்லை:-(
Sridhar Narayanan எப்பவும் பத்தி பத்தியா பிரிச்சு கேள்வி கேட்பார், இன்றைக்கு விட்டுட்டாரே, ஏன்?
யோவ் ரவி,
ReplyDeleteநல்லா,சும்மா செவனேன்னு இருந்த பயல வாயூர வச்சிட்டீங்க.
மரியாதையா நீங்க செஞ்சதுல ஒரு பிளேட் அனுப்பிடுங்க.
இல்லைன்னா கன்ஸ்யூமர் கோர்ட்டு வரை போவேன்.
(ஏதாவது டீவில வேலை பார்க்குறீங்களா? இவ்ளோ அழகா சமைச்சிருக்கீங்க.எனக்கெல்லாம் சமையல் சுட்டுப்போட்டாலும் வராது :(.உங்க அவுங்க குடுத்து வச்சவுங்க )
இதுக்கு ஃபெயில் மார்க்தான்!
ReplyDeleteபொரிச்ச கூட்டுக்குப் புளி எதுக்கு?
சிக்குடு? யார் இவன்? ரெட்டைவால் ரங்குடு மாதிரியா?
சிக்கடிக்காய
அதென்ன அவரா இவர்ர்ன்னு மலையாளத்தில்?
அவரென்னு பறஞ்சாக் கொள்ளாம்.
பொல்லாத கால் கப் கடலைப்பருப்புக்கு வேலை மெனெக்கெட்டுக் குக்கர் வைக்கணுமா?
சரி சரி.சீக்கிரம் பார்ஸல் அனுப்பும். தின்னுபார்த்துட்டு ருசியா இருந்தால் க்ரேஸ் மார்க் தர்றேன்:-)
அவரா இவாரான்னு படிக்கVஉம்
ReplyDeleteoops....
படிக்கவும்:-)
எவன்யா, இந்தப் பதிவை அறிவியல்/நுட்பம்-ன்னு போட்டது?
ReplyDeleteஹூ இஸ் தட் பிரவுன் ஷீப்? :-)))
//பொல்லாத கால் கப் கடலைப்பருப்புக்கு வேலை மெனெக்கெட்டுக் குக்கர் வைக்கணுமா?//
ReplyDeleteஇதையேதான் நானும் கேட்கிறேன். :)
//இதுக்குத் தான் சென்னை போகும் போதெல்லாம் அம்மா கூட மார்க்கெட்டுக்கு ஒரு நடை போயி வரணும்ங்கிறது! இங்கிட்டு பார்க்காத காய்கறி எல்லாம் அங்கிட்டு பார்த்துக்கலாம்!//
ReplyDeleteகாய்கறி பார்க்க மட்டுந்தானா?
கே.ஆர்.எஸ் அண்ணா,
ReplyDeleteஎன்ன இன்னும் பிளைட் ஏற நேரம் ஆகல்லையா?, அதோ அநோன்ஸ்மண்ட் பண்ணறாங்க உங்களை போர்ட் பண்ணச் சொல்லி.
என்னது இந்த ஸ்டார் வாரம் மிக பெரிய சக்ஸஸ்ன்னு சார்டர் பிளைட் தராங்களா தமிழ்மணத்துல? அதுசரி..:-)
பொரிச்ச கூட்டுன்னா எங்க வீட்டில மிளகாய் சேர்க்க மாட்டாங்க, மிளகு சேர்த்துத்தான் செய்வாங்க.
அவரக்காய் புளிக்குழம்பைப் பற்றிச் சொல்ல விட்டுப்போச்சே?.
//ஹூ இஸ் தட் பிரவுன் ஷீப்? :-)))//
ReplyDeleteபாபா பிரவுன் ஷீப்....
வேற யாரு நம்ம KRS தான்.
ஜோக்கை யாரும் பாக்கலை ங்கிற தவிப்போ?
//நட்சத்திர வாரத்தில் மாயா பஜார் ரேஞ்சுக்கு விருந்து கொடுக்காவிட்டாலும், கூப்பாடு போடாத அளவுக்காச்சும் சாப்பாடு போடணும்-ல!//
ReplyDeleteசாப்பாடு போடறது எல்லாம் நம்ம ரீச்சர் கிட்டக் கேட்டுக்குங்க. அவங்கதான் இதில எக்ஸ்பெர்ட்.
//இன்னிக்கி கிச்சன் காபினெட் பக்கம் ஒதுங்கலாம்-னு ஐடியா!//
ReplyDeleteஎப்பவுமே நீர் அந்தப் பக்கம்தானே. இப்போ என்ன புதுசா ஐடியா? புதிராப் புனிதமாவில் கூட அவங்களைத்தானே வரலயா வரலையான்னு கேட்டு கேட்டு பந்தி பரிமாறினீரு...
//மாதவிப் பந்தலில் செவிக்கு உணவு ரொம்பவே கொடுத்தாச்சு இஸ்டார் வீக்குல! அதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்-னு...//
ReplyDeleteசெவிக்கு கொஞ்சம் திகட்டலாவே போச்சு. இப்போ என்ன செய்யப் போறீங்க? நாம எல்லாம் செஞ்சா 'ஈயப்படும்' இல்லைப்பா!!
//யாருப்பா அது ஈயப்படும்-னு சொல்லுறத்துக்கு முன்னாடியே பெண் ஈயம், ஆண் பித்தளை-ன்னு கெளப்பறது? ஓ...கொத்தனாரா?//
ReplyDeleteநானே. அதான் இதை நமக்கு பிராண்டிங்காவே குத்தியாச்சே. அப்புறம் என்ன....
//வாய்யா! வா! கொத்தனார் கிட்டத் தான் இந்த மாதிரி அறிவியல் பூர்வமான கேள்வி எல்லாம் கேக்கோனும்! விக்கியும் நீயே, பக்கியும் நீயே! அறிவியல் கொக்கியும் நீயே! ஆன்மீக மிக்கியும் நீயே!//
ReplyDeleteகொத்தனார் கிட்ட பொதுவாக் கேட்டா எதாவது எடக்கு மொடக்காத்தான் பதில் வரும். அதையே விக்கிப் பசங்க கிட்ட கேட்டா.....
விக்கி சரி அது என்ன பக்கி? நான் எதுக்கு ஆலாப் பறந்து பார்த்தீரு? அறிவியல் கொக்கியா? அது என்ன எல்லாரும் கோட் மாட்ட வசதியாகவா? ஆன்மீக மிக்கி சரிதான். அதுல நாம எல்லாம் மிக்கி மௌஸ்தானே....
"விக்கி பசங்க" உசிரோட இருக்கா? அதில் கேள்வி கேட்டு பதிலே காணோமே! இத்தனைக்கும் இடக்கு மடக்கா எல்லாம் கேக்கலை.
ReplyDelete//கொத்ஸ் அண்ணே: அவரைக்காய் என்றால் என்ன? கொத்ஸ்வரங்காய் என்றால் என்ன?//
ReplyDeleteஅவரைக்காய் அப்படின்னா ஒரு வகைக் கறிகாய். அவரைக் காய் அப்படின்னு சொன்னா இப்போ ரவி நம்மளைச் செய்யறது. அவரைக் காய விடு எனப் பணித்தல். :)
ஆங்கிலத்தில் அவரைக்காய்க்கு Broad Beans அப்படின்னு சொல்லுவாங்க. இது பத்தின விக்கி சுட்டி இது.
அடுத்ததா கேட்டு இருக்கறது கொத்ஸ்வரங்காய். இப்படின்னா என்னன்னா, கொத்ஸ் ஆகிய நான் பாடத் தெரியாமல் ஸ்வரங்களைக் காயப்படுத்துதல் எனப் பொருள்!
இதே கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஷ்டேக்கா மாறி கொத்தவரங்காய் என வந்திருந்தால் அது வேற ஒரு காய். சீனி அவரைக்காய் எனவும் இதைச் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதற்கு Cluster Bean அல்லது Guar Bean எனச் சொல்வார்கள்.
//அதை அமேரிக்காவில் இங்க்லிபீஷ்-ல என்னன்னு சொல்லி வாங்கணும்ணே? //
பெயர் தெரியலையா கவலையை விடுங்க. கடையில் அதைக் கை காமிச்சு Can I please have a pound of this please? அப்படின்னு கேளுங்க. (கையை சரியக் காமியுங்க. அதைச் செய்யாம அடி வாங்கினா நான் பொறுப்பில்லை!)
//இதைத் தீர்த்து வைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இபிகோ செக்சன் 356 படி, உங்க மேலச் சுமத்தப்பட்டுள்ளது.//
ReplyDeleteயூ மீன் இ.கொ.பி? :)
//கெ.பி.அக்கா மொதக் கொண்டு, ஜி3 அக்கா இடைக்கொண்டு, துர்கா அக்கா கடைக்கொண்டு, சர்வம் அக்கா மயம்!//
ReplyDeleteஅதான் தெரியுமே. இதையும் சொல்லிட்டு கிச்சன் கேபினட் பக்கம் ஒதுங்குறதை புது ஐடியான்னு சொல்லறதத்தான் ஒத்துக்க முடியலை
//(கையை சரியக் காமியுங்க. அதைச் செய்யாம அடி வாங்கினா நான் பொறுப்பில்லை!) //
ReplyDelete:-)))))))))))))))
யூ மீன் இ.கொ.பி? :)
பி என்னது?
என்னய்யா கொத்ஸ், இப்படி ப்ராட் பீனுக்கும் அவரைக்காயுக்கும் முடிச்சுப் போட்டுட்டீர்?
ReplyDeleteரொம்பத்தான் 'ப்ராட் மைண்ட்'!
அதுவேற இது வேற.ஆமாம்.
//இதுல நான் எவர் அக்காவைச் சொல்வது? நான் சொல்லுறது அவரைக்காய்-ங்க! பச்சையா இருக்கும்-ல!//
ReplyDeleteபச்சையாத்தான் இருக்கு!!
இதுக்கு மேல பதிவு ரொம்ப சீரியஸா போயிட்டது. அதனால நான் எஸ்கேப்ப்ப்ப்ப்!
ReplyDeleteஅவரைக்காய் நாட்டு சரக்குங்கோ!
ReplyDeleteஅதுக்கு எப்படி ஆங்கில பேர் இருக்கும். அதுக்கு சமீபமா ஒரு பேர்தான் சொல்லனும்.
//"விக்கி பசங்க" உசிரோட இருக்கா? அதில் கேள்வி கேட்டு பதிலே காணோமே! இத்தனைக்கும் இடக்கு மடக்கா எல்லாம் கேக்கலை.//
ReplyDeleteநீங்க எடக்கு மடக்கா கேட்கலைனாலும் அது ரொம்ப ஜெனிரிக்கா இருக்காம். பதில் சொல்லப் பயப்படறாங்க. நான் ரீச்சரைக் கேட்கறேன் இருங்க.
//யூ மீன் இ.கொ.பி? :)
ReplyDeleteபி என்னது?//
திவா இப்படிப் பச்ச புள்ளையா இருந்தா எப்படி?
இ.கொ. அப்படின்னு சொன்னா நினைவுக்கு வரது பின்னூட்டம்தானாம்மே! அப்படித்தான் நிறையா பேரு சொல்லறாங்க. இப்போ புரியுதா? :))
இகொ
ReplyDeleteநன்னி!
snowpeas? இதை வச்சுதான் ஒப்பேத்தறது இங்கே...
ReplyDelete//இ.கொ. அப்படின்னு சொன்னா நினைவுக்கு வரது பின்னூட்டம்தானாம்மே! அப்படித்தான் நிறையா பேரு சொல்லறாங்க. இப்போ புரியுதா? :)) //
ReplyDeleteஓ, இப்ப பிரிது. நான் ப்ளாக் கிட்ட வந்து 3 மாசம்தான் ஆகுது. இப்படி சொல்லிக்குடுத்தாத்தானே தெரியும்!
:-)))
//என்னய்யா கொத்ஸ், இப்படி ப்ராட் பீனுக்கும் அவரைக்காயுக்கும் முடிச்சுப் போட்டுட்டீர்?
ReplyDeleteரொம்பத்தான் 'ப்ராட் மைண்ட்'!
அதுவேற இது வேற.ஆமாம்.//
ரொம்பத் தேடிப் பார்த்தேன். பிராட் பீன்ஸ்தான் இதுக்கு ஒத்து வந்தது. அதுக்கு அப்புறமா வந்தது Sword Bean அப்படின்னு ஒரு வகை. இதெல்லாம் இல்லைன்னா வேற என்ன? நீங்களே சொல்லுங்க.
இங்க அப்படித்தான் சொல்லறாங்க.
இங்க கூட இப்படித்தான் சொல்லி இருக்காங்க.
அவரைக்காய் கூட்டுக்காய் இத்திக்காய் வந்தேனே...ஏலக்காய் மணம்போலே
ReplyDeleteமாதவிப்பந்தலே மணக்குதே!
கொத்ஸ்,
ReplyDeleteகே ஆர் எஸ் லேண்ட் ஆகும்வரை கிரவுண்டில் நின்னு ஒவ்வொரு ரன்னா எடுக்கச் சொல்லிட்டுப் போயிருக்காரா?:-)
//snowpeas? இதை வச்சுதான் ஒப்பேத்தறது இங்கே...//
ReplyDeleteசேதுக்கா, அது வேற. ஆனா இங்க நம்ம ஊர் காய்கறிக் கடைகளில் அவரைக்காய், கொத்தவரங்காய் எல்லாமே கிடைக்குது. அடுத்த முறை அங்க போய் அதுக்கு ஹிந்திப் பேர் என்னான்னு பார்த்து அப்புறம் அதுக்கு ஆங்கிலத்தில் எதாவது இருக்கான்னு பார்க்கறேன்.
//கொத்ஸ்,
ReplyDeleteகே ஆர் எஸ் லேண்ட் ஆகும்வரை கிரவுண்டில் நின்னு ஒவ்வொரு ரன்னா எடுக்கச் சொல்லிட்டுப் போயிருக்காரா?:-)//
ரீச்சர், அவர் சொன்னாத்தான் செய்வேன் அப்படின்னு சொல்லி என்னை இன்ஸல்ட் பண்ணறீங்களே!!
அப்புறம் ரீச்சர் இல்லாத கிளாஸிலும் பதிவர் இல்லாத பிளாக்கிலும்தானே இப்படி ஆட முடியும். அதான்.... ஹிஹி
கொத்ஸ்,
ReplyDeleteஇது என்னாய்யா பேஜார்! இங்கே பாரு அங்கே பாருன்னு சுட்டிகல்.
அவுங்கதான் இதுக்கு அத்தாரிட்டியா?
இப்ப நான் சொல்றேன் கேட்டுக்குங்க.
அது வேறு இது வேறு.
//விக்கியும் நீயே, பக்கியும் நீயே! அறிவியல் கொக்கியும் நீயே! ஆன்மீக மிக்கியும் நீயே!//
ReplyDelete//சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப் பய தான் நானு! //
இப்படி எல்லாம் பேசி தானே கொத்தனார் என ஒரு பிம்பம் உருவாக்கிக் கொள்ளும் இந்த வார நட்சத்திரத்தை என்ன செய்யலாம்.
//ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப தான் கிக்கே கெடைக்கும் என்பது கெக்கே பிக்குணி அக்காவின் ஆணை! :-)//
ReplyDeleteஏன் கெபியக்கா, ரங்கமணி மேல என்ன கடுப்பு அவரைக் குழம்பா வெச்சு சாப்பிடப் போறீங்களா? வேண்டாம்க்கா, பாவம் அவரு.
//கொத்ஸ்,
ReplyDeleteஇது என்னாய்யா பேஜார்! இங்கே பாரு அங்கே பாருன்னு சுட்டிகல்.
அவுங்கதான் இதுக்கு அத்தாரிட்டியா?//
ஏங்க இப்படித் தலைகீழாத் தொங்கறீங்க!! நான் சொல்வதை இன்னும் பலரும் சொல்லறாங்க பாருங்க அப்படின்னுதானே சொல்லறேன்!! :))
//இப்ப நான் சொல்றேன் கேட்டுக்குங்க.
அது வேறு இது வேறு.//
அப்போ இதுக்கு இங்கிலிபீசில் என்ன, அதுக்குத் தமிழில் என்ன? சரியாச் சொல்லிடுங்க.
குதிரைக்கு குர்ரம்ன்னா ஆனைக்கு அர்ரமா?
ReplyDelete//விக்கி சரி. யாரு அந்த பக்கி?
ReplyDeleteஒரு புளோல (flow) சொல்லிட்டிங்களா? இல்ல இன்னொரு 'அதிரடிமச்சான்' கிளம்பிட்டாரா?//
ஸ்ரீதர், இன்னொரு-வா? அப்ப முன்னமே இருக்கும் அதிரடி மச்சான்ஸ் லிஸ்ட் கொஞ்சம் தரீங்களா? :))
///Thulasi Teacher said:இதுக்கு ஃபெயில் மார்க்தான்!///
ReplyDeleteரவி, ந்ல்ல வேளை தப்பிசீங்க!
டீச்சர் பெயில் பண்ணதோடு விட்டாங்க!
ரெண்டு அடிபோட்டிருந்தாங்கன்னா என்ன ஆவுறது?
ஆமாம் சுவாமி கூட்டிற்குப் புளி எதற்கு?
Sorry for the English. Keyman problem here :-(
ReplyDelete//அதிரடி மச்சான்ஸ் லிஸ்ட் கொஞ்சம் தரீங்களா? :))
//
Check out in Google Thala! You may get more that what you want :-))
//Sridhar Narayanan எப்பவும் பத்தி பத்தியா பிரிச்சு கேள்வி கேட்பார், இன்றைக்கு விட்டுட்டாரே, ஏன்?//
KP Yakka,
The speed with which KRS is publishing his posts it may take 2 weeks for me to 'pirichu padikka'. ithila 'pathi pathiya pirichu comment poda' engakka time irukku? :-((((
\\சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப் பய தான் நானு!\\
ReplyDeleteதல
நக்கி சாப்பிட்டிங்க சரி..ஆனா எதுக்கூடா இதை நக்கி சாப்பிட்டிங்க என்பதை சொல்லவேல்ல பார்த்திங்களா!! ;))))
வெறும் அவரைக்காய்க் கூட்டு மட்டுமா படையல்:)
ReplyDeleteஎன்னப்பா ரவி:))
இது பொரிச்ச கூட்டு இல்ல போலிருக்கே. மார்கழிப் பொங்கலுக்குத் தொட்டுக்க சூப்பரா ஒரு கூட்டு. நன்றியெல்லாம் உங்க அம்மாவுக்குத்தான்.
ஒரு கூட்டு வைக்க இவ்ளோ வேலை பண்ணனுமாஆஆஆ?
ReplyDelete:)
நல்லா எழுதியிருந்தீங்க.
//
ReplyDeleteபெயர் தெரியலையா கவலையை விடுங்க. கடையில் அதைக் கை காமிச்சு Can I please have a pound of this please? அப்படின்னு கேளுங்க. (கையை சரியக் காமியுங்க. அதைச் செய்யாம அடி வாங்கினா நான் பொறுப்பில்லை!)
//
ROTFL
:))))))))))))
//இதுக்கு ஃபெயில் மார்க்தான்!
ReplyDeleteபொரிச்ச கூட்டுக்குப் புளி எதுக்கு?//
இதே! இதே! ஊருக்குப் போற அவசரத்திலே புளி எல்லாமா சேர்க்கிறது? :)))))))
//இதே! இதே! ஊருக்குப் போற அவசரத்திலே புளி எல்லாமா சேர்க்கிறது? :)))))))//
ReplyDeleteஅப்போ ஊருக்குப் போகாம நிதானமா இருக்கும் போது புளி சேர்த்தால் பரவாயில்லையா? :))
சரி 50 அடிச்சாச்சு, அடுத்த பதிவுக்குப் போகலாமா? :))
ReplyDelete//சரி 50 அடிச்சாச்சு, அடுத்த பதிவுக்குப் போகலாமா? :))//
ReplyDeleteஅதுசரி , 50ல நீங்க போட்டதே 40 பின்னூட்டத்துக்கு குறையாதுன்னு நினைக்கிறேன். :-)
இ.கொ., முன்முடிபுகளோடு படித்தலில் நீங்கள் பட்டம் வாங்கியிருக்கிறீர்களா?
ReplyDelete// இலவசக்கொத்தனார் said...
//ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப தான் கிக்கே கெடைக்கும் என்பது கெக்கே பிக்குணி அக்காவின் ஆணை! :-)//
ஏன் கெபியக்கா, ரங்கமணி மேல என்ன கடுப்பு அவரைக் குழம்பா வெச்சு சாப்பிடப் போறீங்களா? வேண்டாம்க்கா, பாவம் அவரு.//
அவரை, புளிக்குழம்போடு சாப்பிடணும். அவரையே குழம்பா வெச்சா, அப்புறம் எப்படி? இது தெரியாதா... கடுப்பு இருந்தா குழம்பு சாப்பிடணும்... சரி, இதோட நிறுத்திக்கறேன்.
ஸ்ரீதர், நம்ம கேஆரெஸ் க்கு சப்போர்டு கொடுக்கணும்ல? அவர் இவ்வளவு வேகமா வேற பதிவு போடறாரு! நான் எல்லாம், அங்கங்கே ஓரொரு பத்தி படிச்சு கட்/பேஸ்டு பண்ணி, பத்தி பிரிச்சு பந்தாவா பின்னூட்டம் போட்டுடறது. யார் கிட்டயும் சொல்லிடாதீங்க.
ReplyDeleteஇன்னிக்குக் கடைக்குப் போய் இருந்தேன். ஒரு விதமான அவரைக்காய் இருந்தது. அதுக்கு valor beans அப்படின்னு போட்டு இருந்தாங்க.
ReplyDelete//அப்புறம் ரீச்சர் இல்லாத கிளாஸிலும் பதிவர் இல்லாத பிளாக்கிலும்தானே இப்படி ஆட முடியும். அதான்.... ஹிஹி//
ReplyDeleteஅதானே பார்த்தேன் இங்க என்னாடா நடக்குதுன்னு.. பாவம் அவர் பதிவப் போட்டுட்டு ஊருக்குக் கெளம்பினதும் நீங்க அன்னிக்கே 40 ஆடிச்சு முகப்பை விட்டே தூக்கீட்டீங்களே!
அப்புறம்.. எங்கூர்ல கொத்ஸுவரங்காய் கூட ஃப்ரெஷ்ஷா கிடைக்குது :-) ஆனா அவரைக்காய் ஃப்ரோசன் தான் கிடைக்குது..
//பாவம் அவர் பதிவப் போட்டுட்டு ஊருக்குக் கெளம்பினதும் நீங்க அன்னிக்கே 40 ஆடிச்சு முகப்பை விட்டே தூக்கீட்டீங்களே!//
ReplyDeleteசேதுக்கா, அந்த மாதிரி பாதிப்படையச் செய்வோமா? அவருதான் இஷ்டார் ஆச்சே! அதனால முகப்பில் இருந்துக்கிட்டே இருப்பாரே. அந்த தெகிரியம்தான். :))
ரவி,
ReplyDeleteகொஞ்ச நாளாவே உங்க பதிவுகளை பாத்துகிட்டதான் இருக்கேன். பின்னூட்டம் குடுத்துற வேண்டியதுதான்னு உள்ளே பூந்துட்டேன்.
ஆண்டவன்லேர்ந்து
அவரக்காய் வரைக்கும்
விடாமப் புடிச்சுத் தொங்குறீங்க.
விட்டா எதுவரைக்கும் போவீங்க
என்னன்ன எழுதுவீங்க !
என்ன சரக்கு பாக்கியிருக்கு!
அண்ணா, இன்னிக்கு அவரைக்காய் செஞ்சு சாப்பிட்டாச்சு. ரொம்ப நல்லாவே இருந்தது. நன்னி.
ReplyDelete