***காபி வித் அனு, தீர்த்தம் வித் KRS!
வணக்கம்! என் இனிய தோழர்களே, தோழிகளே!
சென்ற வார நட்சத்திரம், முழுமுதற் பதிவர், அண்ணன் டுபுக்குவுக்கு மொதல் தேங்காய் ஒடைச்சிட்டுக் கச்சேரியை ஆரம்பிக்கறேன்!
* காபி வித் அனு,
* பிரேக்பாஸ்ட் வித் பிரத்விராஜ்,
* லஞ்ச் வித் சீயான்,
* டின்னர் வித் பாவனா-ன்னு...ஓசிச் சாப்பாடு சாப்ட்டு சாப்ட்டே பழகிப் போயிட்டோமா?...
சரி உங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கொடுக்கலாம்-னு தமிழ்மணத்தில் ரொம்பவே யோசிச்சாங்க போல! அதான் இந்தப் புதிய நிகழ்ச்சி - தீர்த்தம் வித் KRS! (என்ன மாதிரி தீர்த்தம்-ன்னு உங்களுக்கே தெரியும்! :-)
நட்சத்திரம் = தத்தம் துறையில் முத்திரை பதித்த பல பதிவர்கள் அடித்து விளையாடிய மைதானம் இது!
இதில் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை-ன்னு பள்ளிக்கு ஒதுங்கிய ஒரு பச்சிளம் பாலகனைக் கூப்பிட்டாக்கா எப்படி இருக்கும்? கொஞ்சம் கூச்சமாகத் தாங்க இருக்கு!
இந்த மேடையில் தோன்றிய பலருக்கும் கைதட்டி மகிழ்ந்துள்ளேன்! ஆனா இன்னிக்கி திடீர்-னு நம்மளையே மேடையில் புடிச்சித் தள்ளி விட்டுட்டாய்ங்க!
வேடிக்கை பார்க்கப் போனவன், வேங்கையை அடக்கி ஹீரோ ஆவுறதெல்லாம் சினிமாவில் மட்டும் தானா? பதிவுலகிலும் நடந்துருச்சி பாருங்க! - தமிழ்மணத்துக்கு என் நன்றி!
தமிழ்மணம் மட்டுமே தானா? இன்னும் பல பேருக்கு நன்றி சொல்லியாகணும்...
யூனிக்கோடில் (ஒருங்குறியில்) தமிழ் எழுத முடியும்-ன்னு எனக்கு முதலில் தெரிந்ததே யாழ்ப்பாணம் சுரதாவிடம் இருந்து தான்!
அப்படியே இ-கலப்பை/பராகா, தமிழ்நேஷன்.ஓர்க்-இன் இலக்கியப் பக்கம்(இது இல்லாம வண்டி ஓடாது), தேன்கூடு முதலான திரட்டிகள், மதுரைத் திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், பதிவுலக நண்பர்கள்/நண்பிகள்-னு நன்றிப் பட்டியல் ரொம்பவே நீ....ளம்!
நட்சத்திர வாரம்-னா, நம்மள பத்தியும் ஏதாச்சும் சொல்லணுமாமே!
எதுக்குங்க சுயபுராணம், சுறாப்புட்டு எல்லாம்? தீஸ்கோண்டீ! போன வருசம், பதிவர்கள் ஆடுன எட்டு ஆட்டம்! அதுல என்னைய பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்!
அது எல்லாம் கிடக்கட்டும்!
இந்த நட்சத்திர வாரத்தில் "வரலாறு காணாத புதுமை" ஒன்னு நடக்கப் போகுது! - என்னான்னு கேக்கறீங்களா?
நியூயார்க் நகரத்தில் இருந்தும் நட்சத்திரம் ஒளி கொடுக்கப் போவுது!
இந்திய மண்ணில், தருமமிகு சென்னையில் இருந்தும் ஒளி கொடுக்கப் போவுது! - பயணிச்சிக்கிட்டே, பதிவும் பின்னூட்டமும் பப்ளீஷ் செய்யப்படும்! :-)
இந்தாங்க - யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!
இந்த வாரத்தில் ஆன்மீகத்தி"லும்" பதிவுகள் பதியப்படும்! - கொஞ்சம் சூடா, சுவையா, கீரைப் பக்கோடா மாதிரி! ஆனா வெறும் ஆன்மீகம் மட்டுமே இருக்காது!
* புராண டகால்ட்டி நகைச்சுவை
* சமூகப் பார்வைகள் சில
* கண்ணழகு பெண்ணழகு - சிறுகதை
* நட்சத்திரப் புதிரா? புனிதமா??
* தமிழ் இலக்கிய விருந்து
* உலக சினிமாப் பார்வை
* கிச்சன் காபினட்
* பிரபலங்களுடன் நேர்காணல்
* ஒரே ஒரு மீள்பதிவு (அனுமதி உண்டு தானே?)
* இசை இன்பம்/* கண்ணன் பாட்டு/* பிள்ளைத் தமிழ்-ன்னு அப்படியே ஒரு ரவுண்டு வந்துறலாமா?
கடவுள் வாழ்த்து இல்லாம, ஆன்மீக இஸ்டார் வீக்கா? இந்தாங்க!
ஐயன் வள்ளுவரும் திருவடி சம்பந்ததில் இருந்து தான் நூலையே துவங்குகிறார்!
கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்!
(What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?)
அடுத்த ஒரு வாரத்துக்கு... உங்களுடன் முன் பக்கத்தில் இருந்தே ஜாலியா மொக்கை போட ஒரு வழி கெடைச்சிருச்சே! மொக்கை போடு போடப் போகுதா, சக்கை போடு போடப் போகுதா-ன்னு நீங்க தான் சொல்லணும்!
அது வரை....வர்ட்டா இஷ்டைலில் வர்ட்டா? :-)
பி.கு:
அடுத்து (இல்லை அதற்கடுத்து) வர இருக்கும் ஒரு "மிக மிக்கியமான பதிவை", என் இனிய நண்பர் ஜிராவுக்கும், கோவி அண்ணாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்! :-)
சென்ற வார நட்சத்திரம், முழுமுதற் பதிவர், அண்ணன் டுபுக்குவுக்கு மொதல் தேங்காய் ஒடைச்சிட்டுக் கச்சேரியை ஆரம்பிக்கறேன்!
* காபி வித் அனு,
* பிரேக்பாஸ்ட் வித் பிரத்விராஜ்,
* லஞ்ச் வித் சீயான்,
* டின்னர் வித் பாவனா-ன்னு...ஓசிச் சாப்பாடு சாப்ட்டு சாப்ட்டே பழகிப் போயிட்டோமா?...
சரி உங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கொடுக்கலாம்-னு தமிழ்மணத்தில் ரொம்பவே யோசிச்சாங்க போல! அதான் இந்தப் புதிய நிகழ்ச்சி - தீர்த்தம் வித் KRS! (என்ன மாதிரி தீர்த்தம்-ன்னு உங்களுக்கே தெரியும்! :-)
நட்சத்திரம் = தத்தம் துறையில் முத்திரை பதித்த பல பதிவர்கள் அடித்து விளையாடிய மைதானம் இது!
இதில் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை-ன்னு பள்ளிக்கு ஒதுங்கிய ஒரு பச்சிளம் பாலகனைக் கூப்பிட்டாக்கா எப்படி இருக்கும்? கொஞ்சம் கூச்சமாகத் தாங்க இருக்கு!
இந்த மேடையில் தோன்றிய பலருக்கும் கைதட்டி மகிழ்ந்துள்ளேன்! ஆனா இன்னிக்கி திடீர்-னு நம்மளையே மேடையில் புடிச்சித் தள்ளி விட்டுட்டாய்ங்க!
வேடிக்கை பார்க்கப் போனவன், வேங்கையை அடக்கி ஹீரோ ஆவுறதெல்லாம் சினிமாவில் மட்டும் தானா? பதிவுலகிலும் நடந்துருச்சி பாருங்க! - தமிழ்மணத்துக்கு என் நன்றி!
தமிழ்மணம் மட்டுமே தானா? இன்னும் பல பேருக்கு நன்றி சொல்லியாகணும்...
யூனிக்கோடில் (ஒருங்குறியில்) தமிழ் எழுத முடியும்-ன்னு எனக்கு முதலில் தெரிந்ததே யாழ்ப்பாணம் சுரதாவிடம் இருந்து தான்!
அப்படியே இ-கலப்பை/பராகா, தமிழ்நேஷன்.ஓர்க்-இன் இலக்கியப் பக்கம்(இது இல்லாம வண்டி ஓடாது), தேன்கூடு முதலான திரட்டிகள், மதுரைத் திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், பதிவுலக நண்பர்கள்/நண்பிகள்-னு நன்றிப் பட்டியல் ரொம்பவே நீ....ளம்!
நட்சத்திர வாரம்-னா, நம்மள பத்தியும் ஏதாச்சும் சொல்லணுமாமே!
எதுக்குங்க சுயபுராணம், சுறாப்புட்டு எல்லாம்? தீஸ்கோண்டீ! போன வருசம், பதிவர்கள் ஆடுன எட்டு ஆட்டம்! அதுல என்னைய பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்!
அது எல்லாம் கிடக்கட்டும்!
இந்த நட்சத்திர வாரத்தில் "வரலாறு காணாத புதுமை" ஒன்னு நடக்கப் போகுது! - என்னான்னு கேக்கறீங்களா?
நியூயார்க் நகரத்தில் இருந்தும் நட்சத்திரம் ஒளி கொடுக்கப் போவுது!
இந்திய மண்ணில், தருமமிகு சென்னையில் இருந்தும் ஒளி கொடுக்கப் போவுது! - பயணிச்சிக்கிட்டே, பதிவும் பின்னூட்டமும் பப்ளீஷ் செய்யப்படும்! :-)
இந்தாங்க - யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே!
இந்த வாரத்தில் ஆன்மீகத்தி"லும்" பதிவுகள் பதியப்படும்! - கொஞ்சம் சூடா, சுவையா, கீரைப் பக்கோடா மாதிரி! ஆனா வெறும் ஆன்மீகம் மட்டுமே இருக்காது!
* புராண டகால்ட்டி நகைச்சுவை
* சமூகப் பார்வைகள் சில
* கண்ணழகு பெண்ணழகு - சிறுகதை
* நட்சத்திரப் புதிரா? புனிதமா??
* தமிழ் இலக்கிய விருந்து
* உலக சினிமாப் பார்வை
* கிச்சன் காபினட்
* பிரபலங்களுடன் நேர்காணல்
* ஒரே ஒரு மீள்பதிவு (அனுமதி உண்டு தானே?)
* இசை இன்பம்/* கண்ணன் பாட்டு/* பிள்ளைத் தமிழ்-ன்னு அப்படியே ஒரு ரவுண்டு வந்துறலாமா?
கடவுள் வாழ்த்து இல்லாம, ஆன்மீக இஸ்டார் வீக்கா? இந்தாங்க!
ஐயன் வள்ளுவரும் திருவடி சம்பந்ததில் இருந்து தான் நூலையே துவங்குகிறார்!
கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்!
(What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?)
அடுத்த ஒரு வாரத்துக்கு... உங்களுடன் முன் பக்கத்தில் இருந்தே ஜாலியா மொக்கை போட ஒரு வழி கெடைச்சிருச்சே! மொக்கை போடு போடப் போகுதா, சக்கை போடு போடப் போகுதா-ன்னு நீங்க தான் சொல்லணும்!
அது வரை....வர்ட்டா இஷ்டைலில் வர்ட்டா? :-)
பி.கு:
அடுத்து (இல்லை அதற்கடுத்து) வர இருக்கும் ஒரு "மிக மிக்கியமான பதிவை", என் இனிய நண்பர் ஜிராவுக்கும், கோவி அண்ணாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்! :-)
நட்சத்திர வாழ்த்துகள்...
ReplyDeleteஇந்த வாரம்... ஆன்மீக வாரம்...
தீர்த்தம் நல்லா இருக்கு... ஆனா பிரசாதங்கறதால ரொம்ப குறைவா இருக்கு போல...
ReplyDeleteஅடுத்த பதிவு எப்போ?
நட்சத்திர வாழ்த்துகள்......
ReplyDelete50 வருஷத்துக்கு முன்னாடி போட்டோ எடுக்கற வசதியெல்லாம் உங்க ஊர்ல இருந்துச்சா?
ReplyDeleteஆகா...
ReplyDeleteயூ தி பர்ஷ்ட்டா? :-))
தூங்கப் போங்க மாப்ஸ்!
தீர்த்தம் = கோயிலாகட்டும், இல்ல வேறேதும் ஆகட்டும்! குறைவாத் தான் சாப்பிடணும்!
அடுத்த முகூர்த்தம் காலை 05:00 மணி அளவில்! :-)
ஆன்மிக WALL நடத்திரமாக தமிழ்மணவானில் ஒளிவீசப் போகும் நண்பர் ரவிக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteபதிவை படிச்சிட்டும் போடுவேன்.
ReplyDelete:)
//இதில் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை-ன்னு பள்ளிக்கு ஒதுங்கிய ஒரு பச்சிளம் பாலகனைக் கூப்பிட்டாக்கா எப்படி இருக்கும்? கொஞ்சம் கூச்சமாகத் தாங்க இருக்கு!//
ReplyDeleteம-திரட்டில எப்பவுமே முதல் ஐந்துக்குள்ள பேர் இருக்கும். வாசகர் பரிந்துரைல மூணு, நாலு பதிவு இருக்கும். இப்பவெல்லாம் சூடான பதிவுல வேற வருது... நீங்க ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கு ஒதுங்குற ஆளா???
@ஜெகா - நன்றி நண்பா!
ReplyDelete@வெட்டி - படம் 1978
@கோவி அண்ணா - Wall நட்சத்திரமா? வாலு நட்சத்திரமா? :-)
நன்றிங்கண்ணோவ்!
//
ReplyDeleteவெட்டிப்பயல் said...
நட்சத்திர வாழ்த்துகள்...
இந்த வாரம்... ஆன்மீக வாரம்...
//
இந்தவாரம் ஆன்மீக வரம்...
//வேடிக்கை பார்க்கப் போனவன், வேங்கையை அடக்கி ஹீரோ ஆவுறதெல்லாம் சினிமாவில் மட்டும் தானா? பதிவுலகிலும் நடந்துருச்சி பாருங்க! - தமிழ்மணத்துக்கு என் நன்றி!//
ReplyDeleteஅப்ப ஹீரோயின் யாரு???
வில்லனா ராகவனை மட்டும் சொல்லிடாதீங்க.
(நான் வில்லு வெச்சிருக்குற ராகவனை சொன்னேன் ;))
நட்சத்திர வாழ்த்துகள்......
ReplyDelete//Wall நட்சத்திரமா? வாலு நட்சத்திரமா? :-)
ReplyDeleteநன்றிங்கண்ணோவ்!//
அ(று)ந்த வால் இல்லை, தமிழ்மணம் முகப்பு - சுவர் (Wall) அதைத்தான் சொன்னேன்
:)
// கோவி.கண்ணன் said...
ReplyDelete//
வெட்டிப்பயல் said...
நட்சத்திர வாழ்த்துகள்...
இந்த வாரம்... ஆன்மீக வாரம்...
//
இந்தவாரம் ஆன்மீக வரம்...//
KRS,
இதுக்கு எவ்வளவு செலவு பண்ணீங்கனு தெரிஞ்சிக்கலாமா?
பாலாஜி போடும் பின்னூட்டத்தில் 40 தாண்டி விடும் போல இருக்கு. மற்றவர்களுக்கும் வாய்ப்பு வேண்டாமா ?
ReplyDeleteபாலா'ஜி' மறுபரிசீலனை செய்யுங்கள் !
:-))
ReplyDeleteசாரி போன பின்னூட்டத்துல ஒரு ஸ்மைலி விட்டு போச்சு
//KRS,
ReplyDeleteஇதுக்கு எவ்வளவு செலவு பண்ணீங்கனு தெரிஞ்சிக்கலாமா?//
KFC சிக்கன் வாங்க பணம் அனுப்பி வைத்தார்
:)
//இப்பவெல்லாம் சூடான பதிவுல வேற வருது...//
ReplyDeleteஅது தான் பயமா இருக்கு தல! :-)
//நீங்க ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கு ஒதுங்குற ஆளா???//
அட - Green Baby - பச்சப் புள்ள-ன்னு சொல்ல வுடமாட்டாங்களே!
//அப்ப ஹீரோயின் யாரு???//
ஹிஹி! இருங்க பாவ்னா கிட்ட ஜிடாக்கிட்டு வாரேன்! :-)
//வில்லனா ராகவனை மட்டும் சொல்லிடாதீங்க//
அடப் பாவிங்களா!
வில்லோடத் தான் கெளம்பி இருக்காங்கப்பா!
புதிரா புனிதமா இருக்கா? :)
ReplyDelete//வெட்டிப்பயல் said...
ReplyDelete:-))
சாரி போன பின்னூட்டத்துல ஒரு ஸ்மைலி விட்டு போச்சு
//
ரிப்பீட்டேய்....எனக்கும் தான் விட்டுபோய்விட்டது !
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteபாலாஜி போடும் பின்னூட்டத்தில் 40 தாண்டி விடும் போல இருக்கு. மற்றவர்களுக்கும் வாய்ப்பு வேண்டாமா ?
பாலா'ஜி' மறுபரிசீலனை செய்யுங்கள் !//
கோவி... நட்சத்திரத்திற்கு 40 எல்லாம் எல்லை இல்லை (வானமே எல்லை)... நாள் முழுதும் முதல் பக்கத்தில் தான் தெரியும்...
அப்ப இந்த வாரம் முழுசும் கேள்வி கேட்கலாமா..
ReplyDeleteஅப்ப இந்த வாரம் முழுசும் கேள்வி கேட்கலாமா..
ReplyDelete//அட - Green Baby - பச்சப் புள்ள-ன்னு சொல்ல வுடமாட்டாங்களே! //
ReplyDeleteஅதுக்கு தான் பச்ச புள்ளுக்கிட்ட படுத்து போட்டோ பிடிச்சி போட்டிருக்கீங்களா???
நீங்க நல்லவரா ...? ரொம்ப நல்லவரா..?
ReplyDeleteவாருங்கள் கே.ஆர்.எஸ்.!
ReplyDeleteஉங்கள் வருகை தமிழ்மனத்திற்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கட்டும்!
தினமும் எங்களை உங்கள் பதிவுகளில் முக்கி எடுங்கள்.
முக்கியெழும்போது முத்துக்களோடு எழ விடுங்கள்!
சுனாமி வரப்போகிறது என்றார் நண்பர் குமரன்.
இந்தச் சுனாமி நன்மை பயக்கும் சுனாமி என்பதால் கரையிலே நிற்கிறேன்; நிற்பேன் (ஒரு வாரத்திற்கு)
என்கூட அந்தக் குமரனும் (யாரைச் சொல்கிறென் தெரிகிறதா?) நிற்பார்.
ஜமாயுங்கள்; வாழ்த்துக்கள்!
அட நீங்கதான் விண்மீனா? அப்பப் பிடிச்சி அறுத்து மெளகாப் பொடி போட்டுப் பிசிறி எண்ணெய்ல பொறிச்சிற வேண்டியதுதான். :)
ReplyDeleteஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
அது சரி.... எல்லாரும் அவங்கவங்க வீட்டுக் குழந்தைங்க படத்தப் போடுறாங்கன்னு... நீங்களும் ஒங்க பேரனோட பழைய படத்த எடுத்துப் போட்டுட்டீங்களே.... ;)
என்னது... அடுத்த போஸ்ட்டு எனக்கா? எனக்கு வர்ரது போஸ்ட்டோ வேஸ்ட்டோ எல்லாமே முருகனுக்குத்தான்.
//குழம்பியவன் said...
ReplyDeleteநீங்க நல்லவரா ...? ரொம்ப நல்லவரா..?//
ரொம்ப ரொம்ப நல்லவரு :-))
(KFC சிக்கன் பார்சல்ல்ல்ல்ல்....)
// வெட்டிப்பயல் said...
ReplyDelete//வேடிக்கை பார்க்கப் போனவன், வேங்கையை அடக்கி ஹீரோ ஆவுறதெல்லாம் சினிமாவில் மட்டும் தானா? பதிவுலகிலும் நடந்துருச்சி பாருங்க! - தமிழ்மணத்துக்கு என் நன்றி!//
அப்ப ஹீரோயின் யாரு???
வில்லனா ராகவனை மட்டும் சொல்லிடாதீங்க.
(நான் வில்லு வெச்சிருக்குற ராகவனை சொன்னேன் ;)) //
அட என்ன வெட்டி.... அவருடைய எண்ணமே அதுதானே... ராகவனை வில்லனாக்குறதுன்னே முடிவோட இருக்காரு. நான் வில்லு வெச்சிருக்காத ராகவனைச் சொல்லலை. ;)
//ஓசிச் சாப்பாடு சாப்ட்டு சாப்ட்டே பழகிப் போயிட்டோமா?...
ReplyDeleteசரி உங்களுக்கு எல்லாம் என்ன தண்டனை கொடுக்கலாம்-னு தமிழ்மணத்தில் ரொம்பவே யோசிச்சாங்க போல! அதான் இந்தப் புதிய நிகழ்ச்சி - தீர்த்தம் வித் KRS!//
இதுல எதுவும் உள்குத்து இல்லையே??? ;)
வாழ்த்துக்கள் ரவி அண்ணை (இது தான் இப்போதைய பானியாம்..)
ReplyDeleteஒரு ஓரமா குந்திக்கின்னு வேடிக்கைப் பார்க்கிறேன்..கும்மியயை.. :)
ஆரம்பமே அதிரடியாத்தான் இருக்கு!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ரவி!
அப்புறம் சூப்பர் வாரமா இருக்கப் போகுதுன்னு சொல்லுங்க. மீள்பதிவு எல்லாம் போடணும். அதான் மரபு. கவலை இல்லாம ஆடுங்க.
////அப்ப ஹீரோயின் யாரு???//
ReplyDeleteஹிஹி! இருங்க பாவ்னா கிட்ட ஜிடாக்கிட்டு வாரேன்! :-)//
உங்க வயசுக்கெல்லாம் நீங்க சாவித்ரி, சரோஜா தேவியை தாண்டி யோசிக்க கூடாது... ஆமா சொல்லிட்டேன்...
நட்சத்திரம்னா என்ன பேசினாலும் ஒத்துக்குவோமா??? ;)
பாவனா உங்க பேத்தி மாதிரி...
வழக்கம் போல் தூள் கிளப்புங்க.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அப்படியே இந்தப் பக்கம் ஒன்னு...
ReplyDelete//(KFC சிக்கன் பார்சல்ல்ல்ல்ல்....)//
அட!
ReplyDelete'எங்கடை வீட்டுப் பிள்ளை' ரவிசங்கரோ இந்தக் கிழமை நட்சத்திரம்?!!
அதி மனோகரம்!! மிக்க மகிழ்ச்சி!!
வாங்கோ! வாங்கோ!
ரவி, நடசத்திரக் கிழமை வாழ்த்துக்கள். இந்தக் கிழமை முழுக்க நல்ல தமிழ் படிக்கக் கூடிய பாக்கியத்தைப் பெற்றோம் யாம்.
தாயகப்[தமிழகப்] பயணமும் இனிதே அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!!!
//தருமமிகு சென்னையில்//
ReplyDeleteபதிவு காமெடி பதிவா??? சொல்லவேயில்லை ;)
ஆஹா.............. நட்சத்திரமே!!!
ReplyDeleteவருக வருக.
வாழ்த்து(க்)கள்.
அது யாருய்யா அந்தப் பச்சப்புள்ளே?
கிருஷ்ணர் வேசங்கட்டி இருக்கு!!!!
:-))))
//பி.கு:
ReplyDeleteஅடுத்து (இல்லை அதற்கடுத்து) வர இருக்கும் ஒரு "மிக மிக்கியமான பதிவை", என் இனிய நண்பர் ஜிராவுக்கும், கோவி அண்ணாவுக்கும் சமர்ப்பிக்கிறேன்! :-) //
இப்பவே வயிற்றில் புளி கரைக்குது !
:)
கோவி."கண்ணன்" பேச்சை தட்டக்கூடாது என்பதற்காக 39ல் என் பின்னூட்டத்தை நிறுத்தி கொள்(ல்)கிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாத்த!! கலக்குங்க :)
ReplyDeleteவாழ்த்துக்கள் !!!!!!!! :)
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்!!!!
ReplyDeleteரவிசங்கர்!!!!!!
ரவி,
ReplyDeleteவாங்க,வாங்க,கலக்குங்க..
நட்சத்திர வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி - சொ. சங்கரபாண்டி
நட்சத்திர வாழ்த்துக்கள்.
ReplyDelete//இந்தவாரம் ஆன்மீக வரம்...//
வழிமொழிகிறேன்.
//நட்சத்திரத்திற்கு 40 எல்லாம் எல்லை இல்லை (வானமே எல்லை)... .//
அதுதானே. அடிச்சி ஆடலாம். 1000, 2000 ம்னு கின்னஸ் சாதனை செய்தா என்ன :)
//* புராண டகால்ட்டி நகைச்சுவை
ReplyDelete* சமூகப் பார்வைகள் சில
* கண்ணழகு பெண்ணழகு - சிறுகதை
* நட்சத்திரப் புதிரா? புனிதமா??
* தமிழ் இலக்கிய விருந்து
* உலக சினிமாப் பார்வை
* கிச்சன் காபினட்
* பிரபலங்களுடன் நேர்காணல்
* ஒரே ஒரு மீள்பதிவு (அனுமதி உண்டு தானே?)
* இசை இன்பம்/* கண்ணன் பாட்டு/* பிள்ளைத் தமிழ்-ன்னு அப்படியே ஒரு ரவுண்டு வந்துறலாமா?//
வாவ். மெனு நல்லாவே இருக்கு. :)
அப்படியே இந்த நட்சத்திர வாரத்தில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஒரு நட்சத்திரப் பதிவு.
நேயர் விருப்பம். :)
வணக்கம் மூத்த பதிவரே! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடிச்சு கலக்கிடனும்.
தங்கச்சி துர்கா சார்பாக
ReplyDelete.............அண்ணா வாழ்த்துக்கள் என்று சொல்லிக்கிறேன்.
(அவுங்க என்னா சொல்லி கூப்பிடுவாங்க என்று உங்களுக்கு தெரியும்தானே இல்லை சொல்லவா:))))
துளசி கோபால் said...
ReplyDeleteஅது யாருய்யா அந்தப் பச்சப்புள்ளே?
கிருஷ்ணர் வேசங்கட்டி இருக்கு!!!!
:-))))//
கிருஷ்ணர் வேசங்கட்டவில்லை அவரே வந்து இருக்கிறார். வெண்ணை திருட..நாலு சாத்து சாத்திடலாமா:))))
நீங்க சின்ன பிள்ளையாகவே இருந்து இருக்கலாம் ஏன்னா சின்ன பிள்ளையா இருக்கச்ச ரொம்ப அழகா இருக்கீங்க...:)))
ReplyDelete@தமிழ் பிரியன் - நன்றி! புதிரா புனிதமா நிச்சயம் இருக்குங்க!
ReplyDelete//இந்தவாரம் ஆன்மீக வரம்...//
KRS,இதுக்கு எவ்வளவு செலவு பண்ணீங்கனு தெரிஞ்சிக்கலாமா?//
:-), சிரிப்பு வரவா, செலவா பாலாஜி?
//அப்ப இந்த வாரம் முழுசும் கேள்வி கேட்கலாமா..//
கேள்வியே வேள்வி! நல்லாவே புகை போடப் போறீங்கன்னு மட்டும் தெரியுது! :-)
//நீங்க நல்லவரா ...? ரொம்ப நல்லவரா..?//
தாங்கலடா சாமீ...:-))
வாழ்த்துக்கள் Dude!
ReplyDeleteவாழ்த்துக்கள்,
ReplyDeleteஎது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாய்..ன்னு ஆரம்பம் அசத்தலா இருக்கு!
போனவாரமே குமரன் பதிவில் ஒரு சின்ன சந்தேகம்! நீங்களா! இராகவன் அவர்களான்னு! இப்ப 'தீர்த்ததோட' தீர்ந்துடுச்சி(சந்தேகம் தான்).
இந்த வாரம் ஆன்மீகத்திற்க்கு ஒரு பெரிய வாரம்! (21 - மார்ச்), மும்மதமும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பெரிய்ய்ய்ய நாளில் தான் நீங்கள் விண்மீனாக ஜொலிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது, அதையும் ஒரு விளாசு விளாச வேண்டியதுதான். அதோட அன்னிக்கு தான் நம்ம தமிழ்மண ஆன்மீக அதி(சூப்பர்) விண்மீனோட பொறந்த நாள் கூட.
//உங்க வயசுக்கெல்லாம் நீங்க சாவித்ரி, சரோஜா தேவியை தாண்டி யோசிக்க கூடாது... ஆமா சொல்லிட்டேன்...
ReplyDeleteநட்சத்திரம்னா என்ன பேசினாலும் ஒத்துக்குவோமா??? ;)
பாவனா உங்க பேத்தி மாதிரி...//
என்றென்னும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேயரை இவ்வாறு சொல்லும் வெட்டிக்கு கண்டனங்கள்.
ப்ரோபைல் போட்டோவில் துள்ளும் இளமையை பார்த்தபின்னும் இப்படி சொல்ல எப்படி மனசு வந்தது வெட்டி... எப்படி மனசு வந்தது.
//குசும்பன் said...
ReplyDeleteகிருஷ்ணர் வேசங்கட்டவில்லை அவரே வந்து இருக்கிறார். வெண்ணை திருட..//
இல்ல இல்ல! அதுக்கு வரல!
வேர் இஸ் மை ராதா? :-))
//நீங்க சின்ன பிள்ளையாகவே இருந்து இருக்கலாம் ஏன்னா சின்ன பிள்ளையா இருக்கச்ச ரொம்ப அழகா இருக்கீங்க...:)))//
இப்பவும் சின்ன பிள்ளை தானாக்கும்!
//வணக்கம் மூத்த பதிவரே! வாழ்த்துக்கள்.
அடிச்சு கலக்கிடனும்.//
நன்றிங்க குசும்பன் அண்ணாச்சி!
"மூ"த்த பதிவரா? - ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு? குறிலுக்குப் பதில் நெடில் போட்டுட்டீங்க? :-)
//தங்கச்சி துர்கா சார்பாக
.............அண்ணா வாழ்த்துக்கள் என்று சொல்லிக்கிறேன்//
அ(டி)ப்பாவி தங்கச்சி! பிராக்சி வேற செட் பண்ணி ஆப்படிக்கிறியா? இரு இரு! அடுத்த போஸ்ட்ல இருக்கு ஒனக்குத் தேங்கா!
// வெட்டிப்பயல் said...
ReplyDeleteகோவி."கண்ணன்" பேச்சை தட்டக்கூடாது என்பதற்காக 39ல் என் பின்னூட்டத்தை நிறுத்தி கொள்(ல்)கிறேன்
//
வெட்டி பின்னுாட்ட கடமையை தொடர்ந்து செய்யவும்.
கடமையை செய். பலனை எதிர்பாராதே என்பதும் கண்ணன் சொன்னதே.
:)
//நன்றிங்க குசும்பன் அண்ணாச்சி!
ReplyDelete"மூ"த்த பதிவரா? - ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு? குறிலுக்குப் பதில் நெடில் போட்டுட்டீங்க? :-)
//
இந்த பதிலுக்காக தாங்கள் பதிவுலக கமலஹாசன் என்று அழைக்கப்பட கடவீராக.
@வாத்தியார் ஐயா - நன்றி ஐயா!
ReplyDeleteமுத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை - அவன் அருளால் முத்தாடுவோம்!
உங்க கூட நிற்கும் குமரன் யாருன்னு குமரனுக்கு மட்டுமா தெரியும்? குவலயத்துகே தெரியுமே! :-)
@ஜிரா
//அப்பப் பிடிச்சி அறுத்து மெளகாப் பொடி போட்டுப் பிசிறி எண்ணெய்ல பொறிச்சிற வேண்டியதுதான். :)//
வாசனை தூக்குது! நான் மூக்குல அசைவம்! தெரியும் தானே? :-)
//என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்//
நன்றி நண்பா!
//நீங்களும் ஒங்க பேரனோட பழைய படத்த எடுத்துப் போட்டுட்டீங்களே.... ;)//
ஹிஹி! நெசந் தான்!
பெயரன்-என் பெயரன்-என் பெயர் கொண்டவன்-நானே தான்! :-)
//அடுத்த போஸ்ட்டு எனக்கா? எனக்கு வர்ரது போஸ்ட்டோ வேஸ்ட்டோ எல்லாமே முருகனுக்குத்தான்//
போஸ்ட்டும் இல்ல! வேஸ்ட்டும் இல்ல! அது பூஸ்ட்டு! :-)
சரி, நீங்க வேற முருகன் வேறயா என்ன? :-)))
நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்பொழுதுதான் பார்த்தேன்.
ReplyDeleteமிக மகிழ்வாக உணர்கிறேன்.
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா... :)
@அரைபிளேடு
ReplyDeleteநன்றி தலைவரே!
//1000, 2000 ம்னு கின்னஸ் சாதனை செய்தா என்ன :)//
ஆகா! இப்படி எல்லாம் கூட கின்னஸ்-ல துண்டு போட்டு எடம் புடிக்கலாமா என்ன?
//அப்படியே இந்த நட்சத்திர வாரத்தில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஒரு நட்சத்திரப் பதிவு.//
அவனே கார்த்திகை நட்சத்திரத்தின் ஈடில்லா நட்சத்திரம்!
கண்டிப்பா இருக்கு தல!
தமிழ்க் கடவுள்(கள்)-க்கு ஒரு ஸ்பெசல் பதிவு!
//நேயர் விருப்பம். :)//
அந்தப் பதிவுக்கு அப்புறமும் நேயரா இருக்கணும்-னு இப்பவே ஒரு டிஸ்கி போட்டுக்கறேன் நம்ம அரைபிளேடு அண்ணாத்த கிட்ட! :-)
பிளாக் ஸ்டாரா ஆகி இப்போ தமிழ்மணம் ஸ்டார் ஆகி இருக்கீங்க.இனிமே ப்ளாக் உலக சூப்பர் ஸ்டார் என்று சொல்லல்லாமா?
ReplyDelete//அட என்ன வெட்டி.... அவருடைய எண்ணமே அதுதானே... ராகவனை வில்லனாக்குறதுன்னே முடிவோட இருக்காரு//
ReplyDeleteஜிரா...பயப்படாதீங்க!
காதல் குளிர்-ல என்னை வில்லன் ஆக்கினீங்கல்ல? இருக்கு! இருக்கு! குருநாதரே!
//நான் வில்லு வெச்சிருக்காத ராகவனைச் சொல்லலை. ;)//
வில் பவர் ஜிரா கிட்ட இல்லாத வில்லா?
வாழ்த்துக்கள் அப்போ இந்த வாரம் கேஆர்ஸ் வாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆரம்மா(தீர்த்தம்)
ReplyDelete//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteபிளாக் ஸ்டாரா ஆகி இப்போ தமிழ்மணம் ஸ்டார் ஆகி இருக்கீங்க.இனிமே ப்ளாக் உலக சூப்பர் ஸ்டார் என்று சொல்லல்லாமா?//
நன்றி திராச!
நினைவிருக்கா, நீங்க தான் அடியேனுக்கு முதல் பின்னூட்டம் இட்டது! ஒளவையார்-பிள்ளையார் பதிவுல!
இன்றும் வந்து ஆசி கூறியமைக்கு அடியேன் நன்றிகள் பல!
சூப்பர் ஸ்டார் என்றுமே கார்த்திகையானும் திருவோணத்தானும் தான், திராச!
"திருவோணத்தான் உலகாளும் என்பார்களே!"
//TBCD said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரவி அண்ணை (இது தான் இப்போதைய பானியாம்..)//
மிகவும் நன்றி அண்ணை! :-)
அதே பாணியாம்!
//ஒரு ஓரமா குந்திக்கின்னு வேடிக்கைப் பார்க்கிறேன்..கும்மியயை.. :)//
ஓரமா இருக்கேன்-னு சொல்றீங்க பாருங்க அண்ணை! அதான் பயமா இருக்கு! :-))
நட்சத்திர வாழ்த்துகள் :))
ReplyDeleteHearty நட்சத்திர வாழ்த்துக்கள், Kannabiran !
ReplyDelete// மோகன்தாஸ் said...
வாழ்த்துக்கள் Dude!
//
Dude = A man who is much concerned with his dress and appearance
???????
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ரவி!//
நன்றி கொத்ஸ்!
//மீள்பதிவு எல்லாம் போடணும். அதான் மரபு. கவலை இல்லாம ஆடுங்க.//
ஜூப்பரு! கொத்ஸ்ண்ணாவே சொல்லியாச்சி! இனி மரபை மீறக் கூடாது! மீன் பதிவு...ச்சே மீள் பதிவு போட்டுறலாம்! :-)
)வருக வருக ஆன்மீக நகைச்சுவை வள்ளலே:)
ReplyDeleteகமா போட வேண்டிய இடத்தில போட்டுக்கங்க:)
வாழ்த்துகள் ரவி.
என்ன பொருத்தம் இந்த வேடப் பொருத்தம்.
பிரமாதம்.
அழகாவே முழிக்கிறீங்க.:))
ரொம்ப சந்தோஷம்மா.
வாழ்த்துகள் கே.ஆர்.எஸ்
ReplyDelete@ குமார் அண்ணா - நன்றிங்கண்ணோவ்!
ReplyDelete//TBCD said...
அப்படியே இந்தப் பக்கம் ஒன்னு...
//(KFC சிக்கன் பார்சல்ல்ல்ல்ல்....)//
KFC வேஸ்ட்டு தல! உப்பு உறைப்பு இல்லாம! எப்பவாச்சும் ஓக்கே!
இங்கிட்டு வாங்க செசுவான் கார்டன்-னு ஒரு உணவகம் இருக்கு! நம்ம இஷ்டைல்-ல போன்லெஸ், ஸ்ட்ரிப்பு, நக்கெட் எல்லாம் காரமாக் கெடைக்கும்! வான்கோழிக் கால் சூப் வேற ஃபேமஸ்! :-)
சிவகாசி பட்டாசு போல் வெடிக்க வாழ்த்துகள்.
ReplyDelete// வெற்றி said...
ReplyDeleteஅட!
'எங்கடை வீட்டுப் பிள்ளை' ரவிசங்கரோ இந்தக் கிழமை நட்சத்திரம்?!!//
வெற்றியிடம் இத்தமிழ் கேட்கவே அத்தனை ஆசை!
யான் என்றுமே உங்கடை வீட்டுப் பிள்ளேயே, அண்ணை!
//அதி மனோகரம்!! மிக்க மகிழ்ச்சி!!
வாங்கோ! வாங்கோ!//
நன்றிங்கண்ணோவ்!
//தாயகப்[தமிழகப்] பயணமும் இனிதே அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!!!//
நன்றி அண்ணா!
கொஞ்சம் மெனக்கெட்டு ஈழம் செல்ல முயற்சி செஞ்சிருக்கலாம்! ஆனா முடியலை! இத்தனைக்கும் ராமேஸ்வரம்/திருப்புல்லணை/சேதுக்கரை வரைக்கும் செல்கிறேன்!
என்னிக்கி நல்லூரானைப் பார்க்க கொடுத்து வச்சிருக்கோ?
@டீச்சர் - நன்றி டீச்சர்!
ReplyDeleteறீச்சர்-னு சொல்லச் சொல்லி இந்தக் கொத்ஸ் வேற பிச்சி எடுக்குறாரு!
//அது யாருய்யா அந்தப் பச்சப்புள்ளே?
கிருஷ்ணர் வேசங்கட்டி இருக்கு!!!!
:-))))//
நானே! நானே! நானே தான் டீச்சர்!
நல்லா இருக்கேனா? :-))
//Dude = A man who is much concerned with his dress and appearance
ReplyDelete???????//
Slang. fellow; chap.
சாரி ஃபார் சொந்த ஜல்லி! :)
@கப்பி = நன்றிங்க தம்பிப் பய!
ReplyDelete:-)
@பொன்வண்டு - நன்றி!
@எழில்பாரதி - நன்றிங்க!
@அறிவன் - நன்றிங்க தலைவரே!
ReplyDeleteவந்துருவோம், வந்துருவோம், கலக்கிருவோம்! :-)
@சங்கரபாண்டி அண்ணே!
வாழ்த்துக்கு நன்றிங்கண்ணே!
நட்சத்திர வாழ்த்துக்கள் KRS !!
ReplyDelete@மோகன்தாஸ் = நன்றிங்கண்ணோவ்!
ReplyDelete//சிவமுருகன் said...
எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாய்..ன்னு ஆரம்பம் அசத்தலா இருக்கு!//
நன்றி சிவா! புச்சு புச்சா பண்ணத் தான் புடிச்சிருக்கு! என்ன செய்ய! :-)
//போனவாரமே குமரன் பதிவில் ஒரு சின்ன சந்தேகம்! நீங்களா! இராகவன் அவர்களான்னு! இப்ப 'தீர்த்ததோட' தீர்ந்துடுச்சி(சந்தேகம் தான்)//
ஹிஹி!
எங்க அண்ணாத்த ஜிரா தீர்த்தம் சாப்ட மாட்டாருன்னு யாரு சொன்னது? :-)
//இந்த வாரம் ஆன்மீகத்திற்க்கு ஒரு பெரிய வாரம்! (21 - மார்ச்), மும்மதமும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பெரிய்ய்ய்ய நாளில் தான் நீங்கள் விண்மீனாக ஜொலிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது//
ஆகா...
பங்குனி உத்திரம், ஹோலி, ஈஸ்டர், மீலாடி நபி - அடியேன் கொடுப்பினை! :-)
//அதோட அன்னிக்கு தான் நம்ம தமிழ்மண ஆன்மீக அதி(சூப்பர்) விண்மீனோட பொறந்த நாள் கூட//
ஆமா ஆமா
கேக்கை ஒரு வெட்டு வெட்டிறலாம்! :-)
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்
ReplyDeleteஆன்மீக சூரியனை (ரவி)நட்சத்திரமாக்கிவிட்டார்களா?
ReplyDeleteஒருவாரம்தானே நல்லா மினுக்குங்க
கண்குளிரப்பாக்கறோம்.வாழ்த்துகள் ரவி!
உங்கள் எள்ளல்நடையும் தமிழ் உரையும் இந்த வாரத்தில் நட்சத்திரவாரம் கலக்கலாக இருக்கப் போவதை அறிவிக்கின்றன. வாழ்த்துகள் !
ReplyDeleteசக்கைப்போடு போடு ராஜா;
ReplyDeleteஉன் காட்டில மழை பெய்யுது.......
வாழ்த்துகள், கண்ணன், ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்னு உங்களுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. இனிமையான பகிர்வுகளை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்...
ReplyDeleteஅண்ணே! அப்படியே பெங்க்ளூர் பக்கம் வரது..?
நட்சத்திர வாழ்த்துக்கள் தல ;))
ReplyDeleteகலக்குங்க ;))
நட்சத்திர வாழ்த்துகள்...
ReplyDelete//படம் 1978//
அப்பல்லாம் போஸ்ட் ப்ரொடக்ஷன் இல்லாததனால உத்தேசமா போட்டோ எடுத்துட்டு, சப்ஜெக்ட ஒக்காத்தி வச்சு தோராயமா வரைஞ்சுருவாங்களாமே? :))))
தமிழ்ப் பதிவுகள் எழுதுற எல்லாரும் இந்த வாரம் காவி கட்டிக்கிட்டு அலையப் போறானுங்க.. * வாழ்த்துக்கள்.
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் ரவி.
ReplyDeleteஆன்மிகப் பேரலையே வருக வருக. அனைவரும் விரும்புவதைத் தருக தருக.
ReplyDeleteதமிழ்மணக் கணியனார் குறித்துக் கொடுத்த நேரத்திற்கு பேரலையை எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கரையோரம் காத்திருந்தேன். பேரலையைக் காணாமல் கனாக் காணச் செல்ல வேண்டியதாயிற்று. நற்கனவுகளுடன் உறக்கத்தை முடித்துவிட்டு கரைக்கு வரப் பார்த்தால் ஆன்மிகப் பேரலை கரையை காணாமல் அடித்துவிட்டிருக்கிறது. வந்தவரை வரவு என்று கரையிலிருந்து பத்து கல் தொலைவில் இருக்கும் பத்து மாடி கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்து இந்தப் புனிதப் பேரலையில் முங்கி எழுகிறேன்.
இந்தக் கிழமையின் நாட்காட்டியாக நீர் இருக்கும் வரை தினந்தோறும் இந்த மகிழ்ச்சி வெள்ளம் எம்மைத் திக்குமுக்காடச் செய்யும் என்பதை அறிந்தே பேரலையே உம்மை வணங்கி வாழ்த்தி வரவேற்கிறேன்.
தமிழ்கடவுளர்களின் அருள் பெருகட்டும்!!!
//இன்னிக்கி திடீர்-னு நம்மளையே மேடையில் புடிச்சித் தள்ளி விட்டுட்டாய்ங்க!
ReplyDelete//
சிங்கம் களமிறங்கிடுச்சுடோய்!
//அடுத்த ஒரு வாரத்துக்கு... உங்களுடன் முன் பக்கத்தில் இருந்தே ஜாலியா மொக்கை போட ஒரு வழி கெடைச்சிருச்சே! //
ReplyDeleteஎங்களுக்கும்தான்! கும்மி அடிக்க வழி கிடைச்சிருக்கே!
//அரை பிளேடு said...
ReplyDelete//பாவனா உங்க பேத்தி மாதிரி...//
என்றென்னும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேயரை இவ்வாறு சொல்லும் வெட்டிக்கு கண்டனங்கள்//
டாங்கீஸ் தலைவா!
நண்பன் உடையான் வெட்டிக்கு அஞ்சான்! :-))
//ப்ரோபைல் போட்டோவில் துள்ளும் இளமையை பார்த்தபின்னும் இப்படி சொல்ல எப்படி மனசு வந்தது வெட்டி... எப்படி மனசு வந்தது//
அதானே! வெட்டி, நல்லவங்க சொன்னா கேட்டுக்கோ! :-)
//அரை பிளேடு said...
ReplyDeleteஇந்த பதிலுக்காக தாங்கள் பதிவுலக கமலஹாசன் என்று அழைக்கப்பட கடவீராக//
அச்சோ! இப்படிக் குளீப்பாட்டறீங்களே!
வேர் இஸ் மை ஸ்ரீதேவி?
& கெளதமி
& சிம்ரன்
& ...
:-))
//எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteஇப்பொழுதுதான் பார்த்தேன்.
மிக மகிழ்வாக உணர்கிறேன்.
நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா... :)//
நன்றி ரிஷான்!
உங்கள் மகிழ்ச்சி உங்க சொற்களில் தெரியுது!:-)
ஒங்களுக்குப் பதிவர்கள் போரில் என்ன வேசங் கட்டலாம்-னு ஒரே யோசிச்சிங்! :-)
@கயல்விழி அக்கா - Dankees!
ReplyDelete@G3 யக்கா - என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தேன்! Dankees Yakkov! :-)
//enRenRum-anbudan.BALA said...
ReplyDeleteHearty நட்சத்திர வாழ்த்துக்கள், Kannabiran !//
சீனியர்...நன்றி!
//Dude = A man who is much concerned with his dress and appearance//
சீனியர்...இப்படி சீன் போடறீங்களே! :-)
நட்சத்திர வாழ்த்துகள்
ReplyDeleteகலக்குங்க ரவிசங்கர் கண்ணபிரான்
//மதுமிதா said...
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்
கலக்குங்க ரவிசங்கர் கண்ணபிரான்
//
மது அக்கா வந்து 100/100 போடணும்னு இருக்கு! டாங்கீஸ் அக்கா! :-)
வாழ்த்துக்கள் ரவி ஆரம்பமே கன ஜோர்...!!!
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்..... :)
ReplyDeleteவாழ்த்துக்கள் ரவி. ஆக மொத்தம் என்னை போலியா ஒத்துக்கல்ல போல...ஹும் :-)
ReplyDeleteநட்சத்திர வார வாழ்த்துக்கள்! :-)
ReplyDelete//வாழ்த்துக்கள் ரவி. ஆக மொத்தம் என்னை போலியா ஒத்துக்கல்ல போல...ஹும் :-)
ReplyDelete//
இதை நிறைய பேர்கிட்ட இரவிச்ங்கர் கேட்டிருக்காரு போல. ஆனா கடைசியா ஒரு குழந்தைஜியை அதுக்கு தேர்ந்தெடுத்துட்டாரு. :-)
நட்சத்திர
ReplyDeleteவாழ்த்துக்கள்....திரு.ரவி
Startinge kalakal! latea vandhalum latesta vandhadha vachukonga anna!
ReplyDeleteStar weekuku en valthukkal!