Thursday, November 23, 2006

பதிவுலகமே - நன்றி! நன்றி! நன்றி!

முகம் தெரியாத ஒருவருக்கு எப்போதாவது நன்றி சொல்லி இருக்கீங்களா?
இன்னிக்கு நாம சொல்லலாமா?
எங்கும் நன்றி! எதிலும் நன்றி!! எல்லோருக்கும் நன்றி!!

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


என்னடா இது, தலைப்பைப் பாத்தா, ஏதோ உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிச்சு வந்ததற்கு நன்றி சொல்வது போல் இருக்கு!
போதாக்குறைக்கு "செய்நன்றி அறிதல்" குறள் வேறு கூடவே வருது!
என்ன விடயம் என்று யோசிக்கிறீர்களா?
சரி மேலே படித்து விட்டு, மீண்டும் யோசியுங்கள்!

இந்த நாளில், "நன்றி", என்று பல பேருக்குக் குறிப்பிட்டுச் சொல்லணுமாம்!
யோசிச்சுப் பாத்து, ஒருவர் விடாமல் அனைவருக்கும் சொல்லணுமாம்!!
நேற்று அலுவலகத்தில் என் மேலாளர் என்னைக் கூப்பிட்டு, "Thanks for everything", என்று சொன்னார்!
நானும் என் துறையில் இருக்கும் அனைவரும் கூட்ட அறையில் (conference room) குழுமி, கலகலப்பாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, நன்றி நவின்றோம்!
அப்படி என்ன நாள் இன்று?

நம்ம சக தமிழ் வலைப்பதிவு நண்பர்களுக்குத் தான் முதல் நன்றி!
அதுவும் வாசகன் என்ற முறையில் நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்!
கால நேரம் பார்க்காது, கருத்து எதுவாக இருந்தாலும்,
உலகின் எந்த கண்டத்தில் இருந்தாலும், கைம்மாறு கருதாமல்,
அழகுத் தமிழில் எழுதிக் குவிப்பவர் இல்லாவிட்டால் வலைப்பூவில் மணம் ஏது?
நன்றி நண்பர்களே!!

அடுத்து, பதிவுகளைப் படிக்கும் கோடானு கோடி வாசகர்களே, (அட நம்ம எல்லார் பதிவையும் சேத்து தான்பா சொன்னேன் "கோடானு கோடி" என்று:-)
உங்களுக்கும் நன்றி!!

தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், முத்தமிழ் மன்றம், இன்ன பிற வலைத்திரட்டிகள், தொழில்நுட்பத் தளங்கள், Blogger, Wordpress, Blogger beta(?) ஆகிய அனைவருக்கும் நன்றி!

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் Googleஐ மறந்தால் நமக்கு நல்ல கதி கிடைக்குமா?
கூகுள் தேடு பொறி, ஆடியோ, வீடியோ, யூ ட்யூப், இ-கலப்பை, பராஹா - உங்கள் எல்லாருக்கும் நன்றி!

தமிழால் நாம் காலம் தள்ளுகிறோம்! தமிழுக்காகக் காலம் தள்ளியவர் எத்தனை பேர்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்,
ஐயன் வள்ளுவர், ஆழ்வார்கள், அருணகிரி என்று இப்படி எத்தனை பேரின் கவிதைகளை "இலவசமாய்" எடுத்தாளுகிறோம்! அவர்களுக்கு எல்லாம் நன்றி!

படித்துச் செல்பவர்கள், படித்துச் சொல்பவர்கள்,
பின்னூட்டம் இடுபவர்கள், பின்னூட்டப் புயல்கள்,
அனானிகள் ஆகியவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!!

பதிவுலகில் நாம் காலாற உலவி வர,
"உறுதுணை"யாய் நிற்கும் வாழ்க்கைத் துணை நலம் எத்தனை பேர்! அவர்களுக்கு "நன்றி" என்று ஒற்றை வார்த்தை தான் போதுமோ? இருந்தாலும் வாயார சொல்லுவோம்! நன்றி என் துணையே!

சரி,
இது வரை வெறும் பதிவுலகம் தொடர்புடையவரை மட்டும் தான் பார்த்தோம்!
ஆனால் குடும்பம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், மாநிலம், தேசம், இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை பேர் நம் ஆளுமையை ஆளாக்குகிறார்கள்!
இத்தனை பேருக்கும் "நன்றி" என்று வாயால், சொல்லத் தான் முடியுமா?
கொஞ்சம் தனியா உட்கார்ந்து யோசித்தால் தெரியும்!
நாம வாங்கி வாங்கிச் சிறுத்துப் போய்விடுவோம்;
நம்மைச் சுற்றி உள்ளவர்கள் கொடுத்துக் கொடுத்து உசந்து போய் விடுவார்கள்!
மனசால யோசிச்சுப் பாத்து, வாயால விட்டுப் போனவர்கள், யாரேனும் இருந்தால், அவர்களுக்கும் நன்றிகள் பல!

"இலவசமாய்" இன்ப துன்பங்களை வாரி, வழங்கி, பகிர்ந்து கொண்ட நமக்கு
"இலவசமாய்" நாமே நன்றி சொல்லிக் கொள்ளும் திருநாள்!!

அட, இன்று...... நன்றி நவிலும் நாள்!
Thanksgiving Day!! (Nov 23 - Last Thursday of November)!

அதாங்க! வாய் விட்டுச் சொல்லலாம் வாங்க!
நன்றி! நன்றி!! நன்றி!!!


39 comments:

  1. உங்களுக்கும் நன்றிகள்!!!
    happåy thanksgiving 4 u 2..

    ReplyDelete
  2. 'முகமே தெரியாத ஒருவருக்கு' அனுதினமும் முக்கியமாக் காலையில்
    கண்ணைத் திறக்கறப்பயும், ராத்திரி தூங்கப்போகும் முன்பும் நன்றி
    சொல்லிக்கிட்டுத்தான்
    இருக்கோம்:-))))

    'நன்றி நவிலல்' தின வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. நன்றிக்கு நன்றி:-)

    வலையுலகில் நல்ல ஆரோக்கியமான பதிவுகளைப் போடும் உங்களுக்கும் வாசகர் சார்பில் என் நன்றிகள்.

    நன்றி மீண்டும் வருக

    ReplyDelete
  4. எல்லோருக்கும் நீங்களே நன்றி சொல்லிவிட்டால் நாங்க யாருக்கு சொல்வது?
    :-))
    பரவாயில்லை.உங்களோடு சேர்ந்து நானும் சொல்லிக்கொள்கிறேன்.
    வேனும் என்றதை வாங்கிக்கொண்டு வெறும் 3 எழுத்தில் நன்றி என்று சொல்கிறோமே என்று கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. நன்றி நவில்தல் நாள் நல்வாழ்த்துக்கள்!!! :-)

    ReplyDelete
  6. தாங்ஸ்பா...
    ஆக கொள்ளோ எனக்கும் சேத்தே தேங்ஸ் சொல்லிக்கீறேன்னு எட்துக்குனு பதிலுக்கு தாங்ஸ் சொல்லிக்கிறேன்...

    அப்பிடியே இந்த தாங்ஸ் கிவிங் டேக்கு நாம போட்டுக்கற பேஜையும் கண்டுக்கப்பா...

    ReplyDelete
  7. KRS நன்றி ! மற்றும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  8. KRS,
    கலக்கிட்டீங்க!
    கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் என்னுடைய அண்ணன் இந்நாளை பற்றி எனக்கு சொன்னார். இப்போ விளக்கமாக புரிந்தது.

    ReplyDelete
  9. //துளசி கோபால் said...
    'முகமே தெரியாத ஒருவருக்கு' அனுதினமும் முக்கியமாக் காலையில்
    கண்ணைத் திறக்கறப்பயும், ராத்திரி தூங்கப்போகும் முன்பும் நன்றி
    சொல்லிக்கிட்டுத்தான்
    இருக்கோம்:-))))//

    டீச்சர், வாங்க!
    முற்றிலும் உண்மை! காலைல ஒரு தபா, ராவுல ஒரு தபா...பெரிய்யயயயயயயய அவருக்கு நன்றி சொல்லாம எப்படி?

    Happy Thanksgiving!

    ReplyDelete
  10. தமிழுக்கு நன்றி, தமிழ் மணத்திற்க்கு நன்றி, சென்னைபட்டணத்திற்க்கு நன்றி.....அனானிகளை மதித்த உங்களுக்கும் நன்றி, எல்லோருக்கும் நன்றி, நன்றி, நன்றி....

    ReplyDelete
  11. வாங்க நோநோ!
    முதல் வருகை - நல்வரவு!
    Happy Thanksgiving!

    ReplyDelete
  12. //கானா பிரபா said...
    நன்றிக்கு நன்றி:-)
    வலையுலகில் நல்ல ஆரோக்கியமான பதிவுகளைப் போடும் உங்களுக்கும் வாசகர் சார்பில் என் நன்றிகள்.
    நன்றி மீண்டும் வருக//

    இனிக்கும் மாம்பழப் பதிவுகள் தரும் பிரபா, Happy Thanksgiving!
    "நன்றிக்கு நன்றி:-)"க்கு நன்றி!
    இது எப்படி இருக்கு?:-))

    ReplyDelete
  13. //csrk said...
    Thankspa//

    வாங்க csrk! happy thanksgiving!

    ReplyDelete
  14. // வடுவூர் குமார் said...
    எல்லோருக்கும் நீங்களே நன்றி சொல்லிவிட்டால் நாங்க யாருக்கு சொல்வது?//

    சரியாப் போச்சு போங்க!
    எனக்குச் சொல்லிடுங்க சார்:-))

    //வெறும் 3 எழுத்தில் நன்றி என்று சொல்கிறோமே என்று கஷ்டமாக இருக்கிறது.//

    வெறும் 3 எழுத்தைக் கூட சொல்லமால் போய் விடுகிறார்களே என்று சிலர் கஷ்டப்படுறாங்க குமார் சார்! அதுக்காகவாச்சும் வெறும் 3 எழுத்தைச் சொல்லிடறதும் ஒரு வகையில் நல்லது தானே!:-)

    நீங்க சொல்றதும் உண்மை தான்! சில சமயம் நமக்கே ஒரு மாதிரி இருக்கும், மற்றவர்கள் நமக்கு அவ்வளவு செய்ய நாமோ வெறும் மூன்று எழுத்து சொல்கிறோமே என்று!

    ReplyDelete
  15. //வெட்டிப்பயல் said...
    நன்றி நவில்தல் நாள் நல்வாழ்த்துக்கள்!!! :-)//

    பாலாஜி
    அட "ந,ந,நா,ந" சொல்லிட்டீங்க!
    கவிதை! கவுஜ போங்க!!:-))

    ReplyDelete
  16. //அரை பிளேடு said...
    தாங்ஸ்பா...
    ஆக கொள்ளோ எனக்கும் சேத்தே தேங்ஸ் சொல்லிக்கீறேன்னு எட்துக்குனு பதிலுக்கு தாங்ஸ் சொல்லிக்கிறேன்...
    அப்பிடியே இந்த தாங்ஸ் கிவிங் டேக்கு நாம போட்டுக்கற பேஜையும் கண்டுக்கப்பா... //

    நியுயார்க் நகர வீதிகளில் கலக்கிய அரை பிளேடு சார்! உங்க பேஜை கண்டுக்கினு, கும்முனு ஒரு + குத்திட்டு, கைநாட்டு போட்டுக்குனு வந்தேன்ப்பா? பாத்தியா?? :-))

    ReplyDelete
  17. //ஞானவெட்டியான் said:
    அன்பு இரவி,
    நன்றி//

    happy thanksgiving ஞானம் ஐயா!

    //கோவி.கண்ணன் [GK] said...
    KRS நன்றி ! மற்றும் வாழ்த்துக்கள் !//

    நன்றிக்கு நன்றி GK ஐயா:-))

    ReplyDelete
  18. உங்களுக்கு என் நன்றிகள்!

    நேத்திக்கு வெட்டிபயல் கூட Thanks giving day ன்னு சொன்னாரு என்னாத்துக்கு திடீர்னு சொல்றாரேன்னு முழுச்சிக்கிட்டே வழக்கமா நம்மை யார் வாழ்த்தினாலும் திட்டினாலும் சொல்ற ஒரே வார்த்தையான Same to You ன்னு சொல்லி முடிட்டிட்டேன்.

    இந்த பதிவை படிச்சப்புறம்தான் தெரிஞ்சது நன்றி சொல்றதுக்குன்னே ஒரு நாள் இருக்குன்றது.

    இன்னிக்கு மட்டுமில்லங்க K.R.S தினந்தினம் எல்லாருக்கும் நன்றி சொல்லணும்.

    ReplyDelete
  19. என் வழி எளிதான வழி. நீங்கள் யார் யாருக்கு நன்றி சொன்னீர்களோ அவர்கள் எல்லோருக்கும் நானும் என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன். நன்றிகள் இரவிசங்கர்.

    ReplyDelete
  20. ரவி சங்கர்!
    சிக்கலில்லாப் பதிவுகளுக்காக உங்களுக்கு நன்றி!!
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  21. வலையுலகில் நல்ல ஆரோக்கியமான பதிவுகளைப் போடும் உங்களுக்கும் வாசகர் சார்பில் என் நன்றிகள்.
    Thanks alot. :)

    ReplyDelete
  22. உங்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  23. //சிவமுருகன் said...
    கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் என்னுடைய அண்ணன் இந்நாளை பற்றி எனக்கு சொன்னார். இப்போ விளக்கமாக புரிந்தது//

    சிவமுருகன், happy thanksgiving!

    ReplyDelete
  24. // தம்பி said...
    உங்களுக்கு என் நன்றிகள்!
    வழக்கமா நம்மை யார் வாழ்த்தினாலும் திட்டினாலும் சொல்ற ஒரே வார்த்தையான Same to You ன்னு சொல்லி முடிட்டிட்டேன்//
    :-))))

    //இன்னிக்கு மட்டுமில்லங்க K.R.S தினந்தினம் எல்லாருக்கும் நன்றி சொல்லணும்//

    உண்மை தாங்க தம்பி! Thanks & Sorry - இரண்டுமே மிகவும் தேவையான வார்த்தைகள்!

    ReplyDelete
  25. // குமரன் (Kumaran) said...
    என் வழி எளிதான வழி. நீங்கள் யார் யாருக்கு நன்றி சொன்னீர்களோ அவர்கள் எல்லோருக்கும் நானும் என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன். நன்றிகள் இரவிசங்கர்.//

    சூப்பர்ஸ்டார் ஸ்டைலில்,
    குமரன் வழி தனி வழி என்று தான் நினைத்திருந்தேன்! அட எளிதான வழியுமா??:-)
    நானும் அந்த வழியில் செல்ல ஒரு டிக்கட் எடுத்துட வேண்டியது தான்!:-)

    ReplyDelete
  26. //johan -paris said...
    ரவி சங்கர்!
    சிக்கலில்லாப் பதிவுகளுக்காக உங்களுக்கு நன்றி!!
    யோகன் பாரிஸ்//

    நன்றி யோகன் அண்ணா!

    அம்பி, ஜெயஸ்ரீ
    நன்றி, மீண்டும் வருக :-)

    ReplyDelete
  27. நா.கண்ணன் சார், இந்த நன்றி நவிலல் பற்றி, அதுவும் நம் இந்திய மனப்பான்மை பற்றி ஒரு அழகான பதிவு இட்டுள்ளார்;
    இதோ:
    நாம் ஏன் 'நன்றி' சொல்வதில்லை?

    ReplyDelete
  28. இது எல்லாத்தையும் நினைவு படுத்தி நன்றி சொல்ல வைத்த உங்களுக்குக் கோடானுகோடி நன்றிகள்.

    ReplyDelete
  29. மத்தியகிழக்குல தேங்க்ஸ் கிவிங் எல்லாம் எங்களுக்குத்தெரியாது அதனால் தேங்க்லெஸ்ஸா இருக்கமுடியுமா?

    கொஞ்சம் தாமதம் என்றாலும் to express gracefulness எல்லாப் பொழுதும் உகந்ததே!

    I am very thankful to one and all those who are being thankful and trying to become thankful for everything HE has created for our utility!

    ReplyDelete
  30. நன்றி கே.ஆர்.ஸ் . அது சரி நம்மை இந்த உலகத்தில் படைத்து பதிவு போடும் அளவுக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுத்த ஆண்டவனை விட்டு விடலாம?

    ReplyDelete
  31. ரவி சங்கர்
    நீங்கள் கூறும் இந்த நன்றி வெறும் மூன்றெழுத்து வார்த்தைகளாக அன்றி அடிமனதிலிருந்து ஆழ்ந்த அன்போடும் அக்கறையோடும் வெளிவருவதாகவே எனக்குப்படுகிறது. உங்கள் பரந்த மனப்பான்மைக்கு நான் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்

    மேலும் சுரதா டொட் கொம், க்கும் உங்கள் சார்பாக நன்றி.

    ReplyDelete
  32. //கீதா சாம்பசிவம் said...
    இது எல்லாத்தையும் நினைவு படுத்தி நன்றி சொல்ல வைத்த உங்களுக்குக் கோடானுகோடி நன்றிகள்.//

    நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  33. //Hariharan # 26491540 said...
    மத்தியகிழக்குல தேங்க்ஸ் கிவிங் எல்லாம் எங்களுக்குத்தெரியாது அதனால் தேங்க்லெஸ்ஸா இருக்கமுடியுமா?//

    வாங்க ஹரிஹரன் சார்! அதானே! :-)

    //கொஞ்சம் தாமதம் என்றாலும் to express gracefulness எல்லாப் பொழுதும் உகந்ததே!//

    முற்றிலும் உண்மை

    //I am very thankful to one and all those who are being thankful and trying to become thankful for everything HE has created for our utility! //

    "அவனை" நினைவு கூர்ந்து நன்றி பாராட்டிய உங்களுக்கு அடியேனின் நன்றிகள்!

    ReplyDelete
  34. //sivagnanamji(#16342789) said...
    நன்றி! நன்றி!!//

    வாங்க சிஜி ஐயா! நல்வரவு! நன்றிகள்!

    ReplyDelete
  35. //தி. ரா. ச.(T.R.C.) said...
    நன்றி கே.ஆர்.ஸ் . அது சரி நம்மை இந்த உலகத்தில் படைத்து பதிவு போடும் அளவுக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுத்த ஆண்டவனை விட்டு விடலாம?//

    வாங்க திராச ஐயா! உண்மை தான் ஐயா!
    நான் மனதால் சொல்லி, வாயாமல் சொல்லாமல் விட்ட அவனுக்கு
    டீச்சர், ஹரிஹரன் சார், நீங்க எல்லாரும் சேர்ந்து நன்றி சொல்லிட்டீங்க பாத்தீங்களா? :-)

    இறைவா, நினக்கே அனைத்து நன்றிகளும் சேர்வதாக! உள்ளன்போடு நன்றி!

    ReplyDelete
  36. //சுந்தரி said...
    ரவி சங்கர்
    நீங்கள் கூறும் இந்த நன்றி வெறும் மூன்றெழுத்து வார்த்தைகளாக அன்றி அடிமனதிலிருந்து ஆழ்ந்த அன்போடும் அக்கறையோடும் வெளிவருவதாகவே எனக்குப்படுகிறது.//

    தங்கள் பரந்த மனதுக்கும் அன்புக்கும் நன்றி சுந்தரிம்மா!

    //மேலும் சுரதா டொட் கொம், க்கும் உங்கள் சார்பாக நன்றி.//

    சுரதா - நன்றி
    நான் மறந்ததை நீங்க எடுத்துக் கொடுத்திட்டீங்க! நன்றி!!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP