Thursday, May 10, 2007

108 - பதிவுலகம் - காலக் கண்ணாடி!

எட்டு எட்டா, மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ!
நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ!!
- இப்படி நம்ம சூப்பர் ஸ்டார், ஒரு பாட்டு பாடியிருக்கார் அல்லவா?
அதான் இன்னிக்கி 108! இந்தப் பதிவும் 108ஆம் பதிவு!

நம் பதிவுலக நண்பர்கள் எல்லாரும் 200, 500, 1000 என்று பல பிறைகளைக் கண்டு, வெற்றி முரசு கொட்டியுள்ளனர்.
அது நிச்சயம் போற்றத்தகு சாதனை தான்! ஆனா நாம அப்படி இல்லீங்க!
ஏதோ திருமலைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல...
பதிவு தொடங்கி, ஆடி அசைஞ்சி 100 படி எட்டிய போது....
இதுக்கெல்லாம் போயி பதிவு போட்டுக்குணுமா, என்று எதுவுமே சொல்லாம அப்படியே விட்டுட்டேன்.

ஆனா 108 ஆம் படி வந்த போது,
சரி நம்ம எல்லார் நலனுக்காகவும், ஒரு 108 தேங்காய் உடைக்கலாம்னு தோணிச்சு!
அப்படியே நம் பதிவுலக நண்பர்கள் எல்லாருக்கும், ஒரு வாய் நன்றியாச்சும் சொன்னாப் போல இருக்கும்-ல! அதான் துணிஞ்சு இந்தப் பதிவு போட்டுட்டேன்!

புரட்டாசி மாதம் புரட்டத் துவங்கினேன்.
ஆறு மாசத்திலே வெறும் நூறு தானா? - அட போப்பா!
(நடுவுல 2 மாசம் காணாமப் போயிட்டேன்; நம்ம பாலாஜி தான் கஷ்டப்பட்டு, காணாமல் போனவர் பற்றி அறிவிச்சாரு; வழி தவறிப் போன வெள்ளாட்டை மந்தையில் கொண்டாந்து சேத்தாரு :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி!
மொதல் தேங்காய் உங்களுக்கு ஒடைச்சிடறோம் :-)


மொத மொதல்ல, எழுதலாம்னு உக்காந்த போது, தமிழ் மணம் ரொம்பவே சூடா இருந்த காலம்! (இப்ப மட்டும் என்னவாம்-ங்கிறீங்களா? :-)
கொஞ்சம் தயக்கமாத் தான் இருந்துச்சு.
கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமோ என்று தோன்றியது!
சரி இனிப்பைச் சுடும் போது கூடச் சூடாகத் தானே இருக்கு;
அதுக்காக அதிரசம், மைசூர்பாகு எல்லாம் வேணாம்னு சொல்லிடறமா என்ன? - அப்பிடின்னு துவங்கி விட்டேன்! சரி துவங்கியாச்சு;
என்னாத்த எழுதலாம் அண்ணாத்த?


நாம இப்ப இருக்கிற ஊரில், குழந்தைகளுக்கு வார இறுதிக் கதை சொல்லணும்னா, பெரும்பாலும் ஒரு பொடியனைத் தான் சுத்து வட்டாரத்தில் கூப்பிடுவாங்க.
அதுவும் நமது பண்பாடு, வரலாறு பத்திய கதைன்னா உடனே ஓலை வந்துடும் அந்தப் பொடியனுக்கு. அந்தப் பொடியன் தான் அடியேன்!
இந்தக் குட்டிப் பசங்களும்...என்ன தான் அழுது கலாட்டா பண்ணாலும் கூட,
நம்ம கிட்ட வந்தா மட்டும் பச்சக்குனு ஒட்டிக்குங்க!
(பின்ன Lord of the Rings-இல் ராமரையும், Spiderman-இல் அனுமனையும் கலந்தடிச்சுக் கதை சொன்னா...!)

அப்ப தான் ஒரு அம்மா-அப்பா, (பெயர் குறிப்பிடக் கூடாது-ன்னு கட்டளை)
இது போல, ஏன் நீங்க பதிவுல எல்லாம் எழுதக் கூடாது-ன்னு கேட்டு, நமக்கும் Blogger-ன்னு பேரை மாத்தி வைச்சாங்க!
ரொம்பவும் அடர்த்தியா உள்ள பலாப் பழ விஷயங்களைக், கொஞ்சம் சுளை உரிச்சு கொடுத்தா, அதுவும் கதைகளா கொடுத்தா...
சொந்த வீடு விட்டு அயல் வீட்டில் வாழும் மக்களுக்குச் சொல்லிக்கிறா மாதிரி இருக்குமே-ன்னு சொன்னாங்க!
சரி, நமக்குத் தான் இது போல விட்டலாச்சாரியா விஷயம் எல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு துவங்கியாச்சுப்பா!


சும்மானாங் காட்டியும் Hello Worldன்னு ஒரு கணக்கை ஓப்பன் செய்து கொண்டு வெறுமனே வேடிக்கை பாத்துக் கொண்டு இருந்தேன்.
சில பதிவுலக ஜாம்பவான்கள் அப்பல்லாம் அனானி ஆப்ஷனை வைக்கலை;
பெயர், நட்சத்திரம், கோத்திரம்ன்னு சொன்னா தான் அர்ச்சனை பண்ண முடியும் போல!

சரின்னு அதுக்காகவே ஒரு அக்கவுண்டு ஒபன் பண்ணா, நண்பர்கள் எல்லாம் ஒரே திட்டு!
டேய் அவனவன் ஆர்குட்-ல அக்கவுண்டு ஒபன் செய்து, என் கடன் ஸ்கிராப் வாங்கிக் கிடப்பதே-ன்னு இருக்காங்க! நீ என்னடான்னா இப்படி இருக்கியேன்னு ஒரு எகத்தாளம் வேறு! :-)

அடியேன் முதல் நன்றி நம்ம செல்வனுக்கும், திராச ஐயாவுக்கும்.
யாராச்சும் பதிவு போடறதுக்கு முன்னாடியே பின்னூட்டம் போட முடியுமா?
இவங்க ரெண்டு பேரும் அப்படித் தான் செஞ்சாங்க!
இதுல கண்ணகி சிலை - மாதவிப் பந்தல்ன்னு சும்மா கேலி வேறு :-)
அதுக்கப்புறம் பல வலைப்பூக்களைப் பூத்தாலும், திராச ஐயா தான் எப்பவுமே முதல் போணி பண்ணுவாரு!

நம்ம குமரன் வந்து முதல் பதிவைப் பிரதி பாத்துக் கொடுத்தாரு. டீச்சர் வந்து அன்பாக விசாரிச்சாங்க...SK ஐயா அன்பாகப் பேசினாரு. நம்ம ஜிரா செந்தமிழில், இனிக்க இனிக்க ஜீரா ஊத்திக் கொடுத்தாரு. சுப்பையா சார் தலைப்பை மாத்திப் போடுன்னு சொன்ன காலகட்டம்.

ஒளவைப்பாட்டியை, பெரியார் தமிழில் அவ்வைப்பாட்டி என்று நான் எழுதப்போய்,
அதை அவ் வைப்பாட்டி-ன்னு படிச்சா நான் என்னத்த சொல்ல! :-)
அதுவும் இந்த மாதிரி சொல்-கில்லி ஆடறதுல பல பேர் நல்லவங்க வல்லவங்கன்னு சொன்னாங்க.
என்னடா இதுன்னு...முதல் பதிவுலயே ஒரு பயம் வந்திடுச்சு.
ஆதியே, அந்தமேன்னு பதிவு எழுதப் போய்,
நமக்கு முதல் பதிவே ஆதியும் அந்தமுமாய் போயிடுமோ? :-)


ஆனாப் பாருங்க, எப்பவும் வந்து உதவுற ஆளே இப்பவும் கை கொடுத்தாரு!
சரி உனக்காக ஒரு பத்து நாள் பிரம்மோற்சவம் கொண்டாடிக்கறேன்....
நீ அதைப் பத்தி எழுதிக்கோன்னு வேலை போட்டுக் கொடுத்தாருப்பா அந்தப் புண்ணியவான்!
அன்று துவங்கி...இன்று வரை....நீங்க தான் சொல்லோணும்!
மொக்கையா, இல்லை இன்னும் மொக்கையா எழுதணுமா என்று! :-)

சரி, முக்கியமா எல்லாப் பதிவர் சந்திப்புகளிலும் கேட்கப்படும் கேள்வியை, இங்கும் முன் வைக்கிறேன்.

1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா?

2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா?

எது எப்படியோ,
வாசித்துச் செல்லும் அன்பருக்கும்
வாசித்துச் சொல்லும் அன்பருக்கும்
வாசியா நின்ற அன்பருக்கும்
இந்நேரத்தில், இந்த வலைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு,
அடியேனின் நன்றிகள் பல!

எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு என்பார்கள். அனைவருக்கும், பேர் சொல்லி நன்றி சொல்ல எனக்கும் ஆசை தான், சுப்பையா சார் போல! பின்னூட்டில் முயல்கிறேன்!
இப்போது, "அந்தரிகி வந்தனமுலு!"கருத்துக் களம் எதுவாயினும், கட்சிகள் எதுவாயினும்
பிரிவுகள் பலவாயினும், உறவுகள் பலவாயினும்
நம் பதிவர்களிடையே...ஒன்று மட்டும் தான் ஒற்றுமை, இணைப்பு எல்லாம்! - என்ன அது?

இலக்கியங்களைக் காலத்தின் கண்ணாடி என்பது போல,
பதிவுகளைச் சமுதாய வாழ்க்கையின் கண்ணாடி என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு கண்ணாடியில் எல்லாமும் தெரிய வேண்டும்.
சிலதை மட்டும் காட்டி, சிலவற்றை மறைத்தால்
- அது கண்ணாடி அன்று! தொலைக்காட்சி ஆகி விடும்! :-)

பத்திரிகைகளுக்கும் பதிவுலகிற்கும் என்ன பெரிய வேறுபாடு என்றால்
பத்திரிகை கூட உண்மையான கண்ணாடி ஆகி விட முடியாது. விளம்பரத்துக்காகவேனும் ஏதோ சில மறைமுகக் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் பதிவுலகம் தான்,
தமிழ்ச் சமுதாயக் கண்ணாடியாகவும், கல்வெட்டாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடிகிறது!
இப்படி உண்மையான பத்திரிகைச் சுதந்திரம், பதிவுலகில் தான் இருக்கிறது!


இந்தப் பண்பாட்டுக் கண்ணாடியில் தான்,
நாளும், காட்சிகள் படைக்கின்றோம்!
நாளை, மாட்சிகள் படைத்திடுவோம்!

அதை மட்டுமே வேண்டுதலாக வைத்து...
நம் எல்லாப் பதிவர்களுக்கும்
நலமும் இன்பமும் நல்குமாறு
நீங்காத தமிழ்ச் செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!தலைப்பை 108-ன்னு வச்சிட்டு, 108 பற்றி ஒண்ணுமே சொல்லலைன்னா எப்பிடி?
நம்ம பண்பாட்டில், பல சமயங்களில்,

108 ஆகத் தான் சில பல நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம்!

108 வைணவத் திருப்பதிகள் - திவ்ய தேசங்கள்
108 நடன முத்திரைகள் - ஈசனின் நடனக் குறிப்பு, தஞ்சைப் பெரிய கோவிலில் காணலாம்!

108 சக்தி பீடங்கள்
108 போற்றிகள் - வழக்கமாகச் செய்யும் அர்ச்சனை எப்பவும் எந்தக் கடவுளுக்கும் 108 தான்

108 நட்சத்திர பாதங்கள் (27 நட்சத்திரம் x 4 பாதம்)
108 அம்சங்கள் (12 ராசிகள் x 9 அம்சங்கள்)
108 மணிகள் கொண்ட ஜபமாலை, 108 இதழ்கள் கொண்ட தாமரை
108 கூறுகள் சீன மருத்துவத்தில்

மற்றும் ஜென், சமணம், பெளத்தம், ஜோதிடம் இப்படி எல்லாவற்றிலும்!
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சூரியனின் விட்டம்
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சந்திரனின் விட்டம்
- ஏன் இப்படி எல்லாமே மேஜிக் நம்பர் 108?

சுருக்கமாப் பார்ப்போம்.
(1) x (2x2) x (3x3x3) = 1x4x27 = 108

(3x3x3) =
ஆணவம், கன்மம், மாயை என்னும் 3 மலங்களை ஒழித்து,
சத்வ, ரஜோ, தமோ என்னும் 3 குணங்களையும் கடந்து,
நேற்று, இன்று, நாளை என்னும் 3 காலங்களிலும்

(2x2) =
அறம்,பொருள் என்னும் 2 கடமையும் --x-- இன்பம், வீடு என்று 2 பயனையும்

(1) = 1 ரே மனத்துடன்,
ஒருமுகமாக
எம்பெருமானுக்'கே' அர்ப்பணிக்கிறேன் என்பது தான் 108-இன் சாராம்சம்!

46 comments:

 1. இது பின்னூட்டக் கயமைத்தனம் அல்ல! :-)

  பேர் சொல்லி அனைவருக்கும் நன்றி!
  இன்னும் முழுக்கத் திரட்ட முடியவில்லை!
  பதிக்க நேரமாகி விட்டதால், முதலில் பதிவு போட்டு விடலாம் என்று வந்து விட்டேன்.
  மீண்டும் திரட்டி விட்டு வருகிறேன்!
  வாழ்க வளமுடன்!

  (வரிசை, அறிமுகமான கால வரிசை மட்டுமே!)

  1 அகர முதல எழுத்து எல்லாம் அனானிமஸ் முதற்றே பதிவு
  2 செல்வன்
  3 திராச
  4 குமரன்
  5 வெட்டிப்பயல்
  6 வல்லி சிம்ஹன்
  7 SK
  8 துளசி டீச்சர்
  9 கோவி கண்ணன் ஐயா
  10 ஜிரா
  11 ஜெயஸ்ரீ
  12 ஞானவெட்டியான் ஐயா
  13 நாமக்கல் சிபி
  14 மோகன் சந்திரன் - நூலகர், மிச்சிகன் பல்கலை
  15 ராஜுதியாகராஜன்
  16 சேதுக்கரசி
  17 SPVR சுப்பையா சார்
  18 இலவசக்கொத்தனார்
  19 லியோ மோகன்
  20 எ.அ. பாலா

  ReplyDelete
 2. 21 மணியன்
  22 வெளிகண்ட நாதர்
  23 லதா
  24 பாஸ்டன் பாலா
  25 வடுவூர் குமார்
  26 நா.கண்ணன் சார்
  27 சிவமுருகன்
  28 ச.சங்கர்
  29 Krishnaswamy
  30 கானா பிரபா
  31 பத்மா அர்விந்த்
  32 அரை பிளேடு
  33 Tholkaapiam
  34 சாத்வீகன்
  35 யோகன் அண்ணா
  36 ஜீவா
  37 சதயம்
  38 கால்கரி சிவா
  39 கீதா சாம்பசிவம்
  40 இராமநாதன்
  41 இவன்
  42 தம்பி
  43 இராம வயிரவன்
  44 சிறில் அலெக்ஸ்
  45 பழூர் கார்த்தி
  46 Syam
  47 ஓகை ஐயா
  48 மலைநாடான் ஐயா
  49 சிவபாலன்
  50 பூங்குழலி
  51 தங்கவேல்
  52 padippavan
  53 ஹரிஹரன்
  54 அனாமிகா
  55 அம்பி
  56 மயிலு
  57 செந்தழல் ரவி
  58 ஷைலஜா (திருவரங்கப்ரியா)
  59 Srinivasan
  60 மதுரையம்பதி (மெளலி சார்)
  61 மா.சிவகுமார்
  62 Akil S Poonkundran
  63 சுதர்சன். கோபால்
  64 ஜடாயு சார்
  65 ஜயராமன்
  66 sivagnanamji
  67 நாகை சிவா
  68 G.Muthukumar
  69 NONO
  70 சுந்தரி
  71 அரவிந்தன் நீலகண்டன்
  72 CVR
  73 Sundaram, Mumbai
  74 ச.திருமலை
  75 குலவுசனப்பிரியன்
  76 Sridhar Venkat
  77 ENNAR
  78 வெற்றி
  79 நம்பி.பா.
  80 Gopalan Ramasubbu
  81 வெங்கட்ராமன்
  82 கைப்புள்ள
  83 இணைய நாடோடி
  84 Lak
  85 Dubukku Disciple
  86 நாகு
  87 Kattabomman
  88 பொன்ஸ்
  89 மு.கார்த்திகேயன்
  90 Hari Anna
  91 Ravi
  92 ரவிசங்கர்
  93 vakesir
  94 எழில்
  95 Blogswara Mux
  96 Jeeva Venkataraman
  97 செல்லி
  98 தலைவர் Dubukku
  99 தென்றல்
  100 Radha Sriram
  101 Dondu
  102 Rahini
  103 Swaminathan.S
  104 ராஜநாகம்
  105 Murali
  106 பா.முரளி தரன்.
  107 பினாத்தல் சுரேஷ்
  108 அன்புத்தோழி
  109 யாழினி அத்தன்
  110 காட்டாறு

  ReplyDelete
 3. உங்க 108 யில் எவ்வளவு படித்தேன் என்ற கணக்கு இல்லை,இருந்தாலும் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
  இப்போது ஊருக்கு போனபோது உங்கள் பிரம்மோஸ்தவ மென் புத்தகத்தை என் தந்தையிடம் காண்பித்தபோது அவர் கொண்ட சந்தோஷத்துக்கு "நீங்கள் தான் காரணம்".

  ReplyDelete
 4. நீங்க போட்ட பின்னூட்டம் செல்லாது. அதனால நான் தான் முதல் ஆள் :-)

  வழக்கம் போல் அருமை...

  அதுவும் 108க்கு விளக்கம் சான்சே இல்லை... அவ்வளவு சூப்பர்...

  ReplyDelete
 5. அண்ணா!!!
  வாயில வார்த்தை வரவில்லை !!
  வாழ்த்த வயதில்லை எனினும் வந்ததற்கு என் வணக்கங்களை வரைந்துவிட்டு போகிறேன்!!!

  வளரட்டும் உங்கள் தமிழ்/இறை தொண்டு!!! :-)))

  உலகத்தின் உள்ள அனைத்து தமிழ் பதிவர்கள் பெயரையும் போட்டு விட்டீர்கள் போல!! :-)

  ReplyDelete
 6. KRS,
  வாழ்த்துக்கள். ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க.

  //நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ!!//

  இது எந்த படம்? யாருங்க எழுதுனது? 'கவி KRS'?

  ReplyDelete
 7. ரவி,
  முதலில் வாழ்த்துக்கள்!!!!

  உங்களின் பல பதிவுகளை வாசித்துச் சுவைத்திருக்கிறேன். நீங்கள் பண்பாகவும், பொறுமையாகவும் ஒவ்வொருவர்க்கும் பின்னூட்டம் மூலம் பதில் சொல்வதே உங்களின் தனிச் சிறப்பு.

  நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் பல பதிவுகள் எழுதி எங்கள் வாசிப்புப் பசிக்குத் தீனி போட எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக.

  இந்த நேரத்தில் உங்கள் முன் ஒரு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைக்கிறேன். தனிய ஆன்மீகப்பதிவுகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் நிற்காது, தமிழ் இலக்கியம் சார்ந்த பதிவுகளையும் நீங்கள் தர வேணும் என்று அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்.

  ReplyDelete
 9. 111 தேசிகன்
  112 keekkepikkuni
  113 வேதா
  114 Vishytheking
  115 எடிசன் ரங்கா
  116 தருமி
  117 இராம்
  118 ஜி
  119 நண்பன்
  120 Bharathiya Modern Prince
  121 நந்தியா
  122 மனிதன்
  123 உண்மைத் தமிழன்
  124 Thamizhan
  125 இராம.கி. ஐயா
  126 nayanan (நாக இளங்கோவன்)
  127 ப்ரசன்னா
  128 சென்ஷி
  129 Hemapriya
  130 செல்வநாயகி
  131 Simulation
  132 Dr.Bala Ramaswamy
  133 பெத்த ராயுடு
  134 Muthu,SFO
  135 ப்ரதிக்
  136 Brihath Siromani - Sri Meenakshi Temple - Houston TX
  137 ஆ.உமாசங்கர்
  138 சந்தோஷ் aka Santhosh
  139 Ponniyinselvan
  140 Seemachu
  141 மதுமிதா அக்கா,
  142 பிரேம்குமார் சண்முகமணி,
  143 பாலராஜன் கீதா
  144 ஞானதேவன்
  145 மெளல்ஸ்

  கண்ணன் பாட்டில் மட்டும் பெயர்களைத் திரட்டவில்லை. மன்னிக்கவும்.
  யாரையாச்சும் சொல்லாமல் விட்டிருப்பேன் ஆனால்...மன்னித்து இங்குப் பின்னூட்டம் இட்டுத் தலையில் குட்டுவீர்களாக! :-)

  பின்னூட்டி்யும், கருத்துக்கள்/யோசனைகள் சொல்லியும், தவறுகள் திருத்தியும் - இப்படி நண்பர்கள் தந்த ஊக்கம் எல்லாம் கட்டாயாம் நினைத்துப் பார்க்கும் வேளை இது!
  நன்றிகள் பல!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் KRS.

  ஆன்மீகப் பதிவுகள் கண்டிப்பாகத் தேவை என்பதே என் கருத்து. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிச்சயம் மக்கள் படிக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்

  ReplyDelete
 11. அன்பின் கேஆரெஸ், ஆன்மிகப் பதிவுகள் எழுதி சதம் கண்ட சாதனையாளராக நிற்கும் உங்களைப் பாராட்டி வணங்குகிறேன் (பெயரில் பெரிய ஆயுள் வைத்திருந்தாலும் வயதில் நான் சிறியவன் :))

  மகாபாரதத்தில் தன் அத்தை குந்தியைக் காண வந்த கிருஷ்ணன் ஒவ்வொரு உறவினரையும் பெயர் சொல்லி அழைத்து குசலம் விசாரிக்கும் கட்டம் உங்கள் பட்டியலைப் பார்க்கையில் நினைவு வருகிறது. மிக்க நன்றி.

  // 1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா?

  2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா? //

  தேவை மட்டுமல்ல, ஆன்மிக வலைப்பூக்கள் நம் கலாசார சூழலில் இன்றியமையாதவை என்றே சொல்லலாம். நெஞ்சில் எழும் ஆன்மிக எண்ணங்களை வலையுலகில் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பக்தியின் ஒரு முக்கியமான அங்கம் தான் இல்லையா?

  "என்னிடத்தில் சித்தம் வைத்தவர்கள், என்னில் உயிரானவர்கள் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் போதித்துக் கொள்கின்றனர். நித்தம் என்னைப் பற்றியே கதைத்து, குதூகலித்து அதில் ஆனந்திக்கின்றர்" என்று பகவான் கீதையில் கூறுகிறார்.

  "அமுதத்தின் புதல்வர்களே! எல்லாரும் கேளுங்கள்" என்று வேத ரிஷி அழைக்கிறார்.

  "மனிதர்காள் இங்கே வம் ஒன்று கொல்லுகேன்" என்று அப்பரும்
  "சேர வாரும் ஜெகத்தீரே" என்று தாயுமானவரும் அறைகூவுகின்றனர்.

  கோபுர உச்சியில் நின்று எம்பெருமானார் திருநாமத்தை உலகெங்கும் கேட்க உரைத்தார்.

  இந்து ஆன்மிகம் காலந்தோறும் நவநவமாகித் தன் புத்தொளி குன்றாது ஜாஜ்வல்யமாக சுடர்வீசிக் கொண்டிருக்கிறது.

  இணையத்தில் ஆன்மிக மணம் கமழச் செய்யும் உங்கள் பதிவுகள் வளர்க!

  ReplyDelete
 12. 108 என்ற எண்ணுக்கே ஒரு பெருமை இருக்கேப்பா.

  அதனாலே 108 பதிவுக்கு வாழ்த்து(க்)கள்.

  அதெல்லாம் (???) அமோகமா வளரணும்.
  எதுவா ? பதிவுகள்தான்.

  வம்பு எதுக்குன்னு பெயர் லிஸ்ட் போட்டது........ ஐடியா த்தோ புரா நஹி(ன்)


  ம்ம்ம்.............கேள்விகளுக்கு பதில் சொல்லணுமில்லே?

  1. தேவை.

  2. யாருக்குப் படிக்கணுமுன்னு விதிச்சிருக்கோ....... அவுங்க கட்டாயம் படிப்பாங்க.

  ReplyDelete
 13. வாழ்த்துகள் ரவி. வென்றோம் என நம்பினால்தான் வெற்றி. சென்றோம் என நம்பினால்தான் பயணம். நீங்கள் நம்புகிறீர்கள் இந்தப் பயணம் வெற்றி என. வாழ்த்துகள்.

  ஆன்மீகப் பதிவுகள் தேவையா? தேவைதான். தான் பெற்றதை உற்றதை மற்றவர்க்குச் சொல்வதுதானே. இதில் தவறேதும் இருப்பதாக இல்லை. தமிழர்க்கு ஆன்மீகம் என்பது மொழி சார்ந்ததாகவும் இருக்கிறது. அப்படி இருக்கையில் மொழிவளத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக அது இருக்கிறது. ஆகையால் ஆன்மீகப் பதிவுகள் தேவைதான். அதே நேரத்தில் அவை பாகுபாடுகளை ஒழிக்கவும் பயன்பட வேண்டும்.

  ReplyDelete
 14. கண்ணபிரான்,

  ஞாபகம் வைத்துக் கொண்டு, எல்லா நண்பர்களின் பெயர்களையும் பட்டியல் இட்டது பாங்கு ! 108-க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், தொடருங்கள் தங்கள் ஆன்மிகச் சேவையை !!!

  என்றென்றும் அன்புடன்
  பாலா

  ReplyDelete
 15. வாழ்த்துகள் :)

  ReplyDelete
 16. //1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா?

  2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா?//

  அருள்நிறைந்த பல ஆன்மீகப் பதிவுகளை அருமையாகப் பதிந்த உங்கள் உள்ளத்திலே இப்படியான கேள்விகள் எழுவதே நியாயமாகுமா?
  கொதிக்கும் வலையுலகிலே குளிர்ச்சிப் பொய்கையை தூர்ந்து போக விட்டுவிடாதீர்கள்.
  ஆன்மீகப் பொய்கை என்றும் நிரம்பியே இருக்கட்டும்.

  நல் வாழ்த்துகள்!
  வாழ்க! வளர்க!!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் ரவி.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் ரவி....

  பதிவுலகத்துல ஆன்மீகத்த பத்தி எழுதரவங்க கம்மிதான்....அதுல 108 எட்டினதுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  தொடருங்கள்....கேள்விகளே அவசியமில்லை என்று நினைக்கிரேன்.

  ReplyDelete
 19. வாழ்த்துகள் கே.ஆர்.எஸ்...

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள்

  வாழ்க வளர்க!

  டீச்சர் சொன்னது அப்படியே ரீப்பிட்டு.....

  ReplyDelete
 21. அரங்கன,அழகன் ,அனந்தசயனன் ,அல்லிக்கேணி அலங்காரப்ரியன்,அன்பில் உறைபவன்,அத்தியூர்க்கண்ணன்,
  அரவிந்தன் அஞ்சன வண்ணன் ,ஆரா அமுதன் , இனிய திருச்சேறைநாயகன், ஈடில்லா நைமிசாரண்யநாதன்,உளன்கண்டார் நெஞ்சிலுறையும் நீர்மலைவண்ணன், ஊழ்வினை அறுக்கும்திருவாலிமாயன், எந்நாளும் போற்றிடும்தென்நாகைக்கண்ணன், ஏற்றமிகு திருநறையூர்பெருமான்,
  ஐயமின்றி வந்தாரைவாழவைக்கும் ஸ்ரீவைகுண்டநாதன்,ஒப்பில்லாத அப்பன்,
  ஓங்கிஉலகளந்த உத்தமன்,ஔஷதமான
  அயோத்திபுயல் இராமன் என 108ல் சிலதெய்வங்களை மட்டும் இங்கழைத்து கண்ணபிரான் ரவிசங்கருக்குப் பல்லாண்டு பல்லாண்டு பலநூற்றாண்டுவாழ்ந்து ஆன்மீகப் பணியை இனிதே செய்ய அருளும் நலமும் தர வேண்டுகிறேன்.

  ReplyDelete
 22. 108-க்கு மேல் உள்ள அனைத்து இன்பங்களும் பெற்று நலமுடனும், சிறப்புடனும் வாழவும், உங்கள் எழுத்து மேன்மேலும் சிற்ப்புப் பெறவும் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள் ;-)

  ReplyDelete
 25. ரவி, ஆயிரத்தெட்டு,லக்ஷத்தெட்டு என்று
  பதிவுகளும்,
  ஆன்மீக எழுத்துக்களும்

  வளர வேண்டும்.
  மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. //வெட்டிப்பயல் said...
  நீங்க போட்ட பின்னூட்டம் செல்லாது. அதனால நான் தான் முதல் ஆள் :-)//

  பாலாஜி...
  நிறைய முதல், உண்டியலில் வைத்திருக்கும் ஆள், நீங்க தானே!
  அதனால, எப்பவுமே "முதல்" ஆள் நீங்க தானுங்கோ.

  ReplyDelete
 27. // வடுவூர் குமார் said...
  பிரம்மோஸ்தவ மென் புத்தகத்தை என் தந்தையிடம் காண்பித்தபோது அவர் கொண்ட சந்தோஷத்துக்கு
  "நீங்கள் தான் காரணம்".//

  ஆகா...
  தங்கள் தந்தைக்குப் பிடித்திருந்ததா குமார் சார்?

  நான் வினயமாய் எழுதுவதை விட விளையாட்டுத்தனமாய் தான் பெருமாளை பற்றி எழுதி இருப்பேன்.
  அதுனால பெரியவங்க கிட்ட காட்ட கொஞ்சம் பயம் தான்! :-)

  ReplyDelete
 28. //CVR said...
  உலகத்தின் உள்ள அனைத்து தமிழ் பதிவர்கள் பெயரையும் போட்டு விட்டீர்கள் போல!! :-) //

  அச்சச்சோ,
  CVR, இவங்க எல்லாம், ஆன்மிகப் பதிவுகளுக்கு வருகை புரிந்தவர்கள்!

  இது இல்லாமல், நம் தமிழ்ப் பதிவுகளில் பல துறைகளில் கோலோச்சும் இன்னும் பல பேர் இருக்கிறார்களே!
  மொத்தம் ஆயிரம் பதிவராச்சும் இருப்பாங்கப்பா!

  ReplyDelete
 29. //சிவமுருகன் said...
  //நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ!!//
  இது எந்த படம்? யாருங்க எழுதுனது? 'கவி KRS'?

  நன்றி சிவா!
  அட என்னங்க தலைவர் பேரைச் சொல்லி, சைடுல நம்ம கவிதையை இடைச் செருகலாம்னு பாத்தா...:-)

  ReplyDelete
 30. //வெற்றி said...
  நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் பல பதிவுகள் எழுதி எங்கள் வாசிப்புப் பசிக்குத் தீனி போட எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக.//

  இறைவன் அருளால்
  இனிய நண்பர்கள் கருத்து வரும்.
  அதனால் "வெற்றி" வரும்!
  அதான் நீங்க வந்தீங்க நண்பரே! :-)
  நன்றி வெற்றி!

  //தனிய ஆன்மீகப்பதிவுகள் என்ற வட்டத்திற்குள் மட்டும் நிற்காது, தமிழ் இலக்கியம் சார்ந்த பதிவுகளையும் நீங்கள் தர வேணும்//

  செய்கிறேன் வெற்றி.
  ஆன்மீகம், தமிழ் இரண்டும் இயல்பாய் வந்து விடுகிறது.
  அதான் இவை இரண்டும் முன் நிற்கின்றன!

  அறிவியல், நகைச்சுவை - இதில் ஆர்வம் உள்ளது!
  ஆற்றல் உள்ளதா என்று தெரியவில்லை!

  இசை இன்பம், ஒரு புதிய முயற்சி.

  ReplyDelete
 31. //நாமக்கல் சிபி said...
  வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்//

  நன்றி சிபி.

  //எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிச்சயம் மக்கள் படிக்கிறார்கள்//

  நன்றி ப்ரசன்னா!

  ReplyDelete
 32. //துளசி கோபால் said...
  அதெல்லாம் (???) அமோகமா வளரணும்.எதுவா? பதிவுகள்தான்.//

  நன்றி டீச்சர்!
  தேசி பண்டிட் உங்க மூலமாத் தானே ஆசீர்வாதம் செஞ்சார்:-)

  //வம்பு எதுக்குன்னு பெயர் லிஸ்ட் போட்டது........ ஐடியா த்தோ புரா நஹி(ன்//

  என்னை ஏதோ திட்டறீங்க-ன்னு நினைச்சேன் :-)
  அப்பறம் யோசிச்சிப் பாத்து, டீச்சர் தப்பே பண்ணாலும், திட்ட மாட்டாங்களே!
  சரி புரா நஹின்னா - விழாவில் புறாவைப் பறக்க விடறாங்க போலன்னு நினைச்சுகிட்டேன்.

  சுப்பையா சார் ஒரு முறை இப்படி போட்ட போதே, நானும் நினைத்து விட்டேன் டீச்சர்!
  நமக்காக நேரம் ஒதுக்கிப் பின்னூட்டறாங்க.

  நாம அவங்களை, இன்னிக்கி,
  ஒவ்வொரு பழைய பதிவா தேடிப் பிடிச்சி, போடணும்னு ஒரு (ஓவர் சென்டி) ஆசை தான்!
  வேறொண்ணுமில்ல.

  ReplyDelete
 33. // ஜடாயு said...

  ஜடாயு சார்.
  இந்தப் பதிவுக்கு இவ்வளவு அழகான பின்னூட்டமா?
  அதுவும் கண்ணனின் செளலப்யம் (நீர்மையை) எடுத்துக் காட்டி!
  மிக்க நன்றி சார்!

  //பெயரில் பெரிய ஆயுள் வைத்திருந்தாலும் வயதில் நான் சிறியவன்//

  ஹைய்யா..
  நைசா, உங்க வயசைக் குறைச்சு
  நம்ம வயச ஏத்தறீங்களா? :-)
  உங்க தமிழ் இளமை, நீங்க அதனினும் இளமைன்னா..
  அடியேன்...இப்ப தான் குட்டிப்பாப்பா..
  நான் வளர்கிறேனே மம்மி!

  மொதல்ல profile pictureஐ மாத்தணும்ப்பா...+2 போட்டாவைப் போடலாமா? அது ரொம்ப அமுல் பேபியா இருக்குமேன்னு பார்க்கிறேன்!

  ReplyDelete
 34. //நெஞ்சில் எழும் ஆன்மிக எண்ணங்களை வலையுலகில் மற்ற பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதும் பக்தியின் ஒரு முக்கியமான அங்கம் தான் இல்லையா?//

  உண்மை தான் ஜடாயு சார்.
  பகவான் அழகு என்றால்
  பகவானைப் பற்றி பேசுவது இன்னும் பேரழகு!
  பரம ஆனந்தம்!!

  //நித்தம் என்னைப் பற்றியே கதைத்து, குதூகலித்து அதில் ஆனந்திக்கின்றர்" என்று பகவான் கீதையில் கூறுகிறார்.//

  பரம பாவனுலு
  கனுலு சாச்வதுலு
  கமல பவ சுகமு
  சதா அனுபவுலு காக
  -தியாகராஜரின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன!

  ReplyDelete
 35. // enRenRum-anbudan.BALA said...
  108-க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், தொடருங்கள் தங்கள் ஆன்மிகச் சேவையை !!!//

  //Boston Bala said...
  வாழ்த்துகள் :)//

  இரண்டு பாலாவுக்கும் நன்றி.
  முதலாமவர் பாலா.
  இரண்டாமவர் பாபா! :-)

  ReplyDelete
 36. ரவி
  வாழ்த்துக்கள். ஆன்மீகம் என்பது அவரவர் நியமிப்பது. சிலருக்கு அவரவர் தொழிலே தரும் அந்த அமைதியை. எனவே ஆன்மீகம் என்பதும், மத நம்பிக்கையும், அதில் தீவிரவாத நம்பிக்கை இவை எல்லாம் வேறு என்று நினைக்கிறேன். மற்றபடி உங்கள் பதிவுகள், கன்னன்,குமரனின் அந்தாதி பதிவுகள் நான் படிப்பது நல்ல பாடல்களும், அவை முன்பு படித்தை நினைவுறுத்த வழ்ழி செய்தலும், வேரு மாறான பொருளை சிந்தனையை அறியத்தருவதாலும். நாம் சில சமயம் மூளையை வேலை செய்து ஒரு நிகழ்வை நினைவுக்கு கொண்டுவர முயற்சிப்பது மூளைக்காக பயிற்சி உடற்பயிற்சி போல. இதனாலேயே உங்களின் புதிரா புனிதமா பதிவுகளை விரும்பிப்படிப்பேன். சில நல்ல பாசுரங்கள், விளக்கங்கள் எனக்கு வியப்பூட்டுகின்றன. நீங்களும் நன்றாக எழுதுகிறீர்கள்.இவற்றை நான் படிப்பதும் விரும்புவதும் அதனால்தான். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 37. ரவி!
  வாழ்த்துக்கள்.

  மற்றும்படி, மேலே பத்மா சொன்ன கருத்துக்களே என்னதும்.

  நன்றி.

  ReplyDelete
 38. ARANGAN ARULVANAGA,
  VAZHGA,VALARGA,
  ANBUDAN
  K.SRINIVASAN.

  ReplyDelete
 39. கண்ண்பிரான்

  மனமார்ந்த வாழ்த்துக்கள். 10 நாள் வெளியூர் சென்று இன்றுதான் திரும்பினேன். சிறப்பான ஆன்மிக பதிவுகளை அள்ளி தரும் உங்களுக்கு நாங்கள் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.

  ஆன்மிக பதிவுகள் தேவையா என்று கேட்டிருந்தீர்கள். ஆன்மிகம் தேவை என்றால் ஆன்மிக பதிவுகளும் தேவை.லவ்கீக உலகில் மனிதத்தை தொலைக்கும் மனிதன் அதை ஆன்மிகம் மூலம் தான் அடைகிறான்.

  ஆன்மிகம் எழுதினால் படிப்பார்களா என்று கேட்டால் நிச்சயம் படிப்பார்கள்.இத்தனை ஆயிரம் சீரியல்கள் வந்தும் இன்னமும் மக்கள் மனதில் தங்கியிருப்பது ராமாயனமும், பாரதமும்தான். சொல்வதை சுவாரசியமாக சொன்னால் மக்கள் நிச்சயம் படிப்பார்கள்.அதை நீங்கள் அருமையாக செய்து வருகிறீர்கள்.

  தொடருங்கள்.வெல்லுங்கள்.

  ReplyDelete
 40. 108ஆவது பின்னூட்டமாகத்தான் போடணமுன்னு நினைச்சேன். பொறுமை இல்லை.

  ஆறு மாசத்தில் நூறுதான் அப்படின்னு தன்னடக்க ஸ்டேட்மெண்டா? நாங்க எல்லாம் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகியும் இன்னும் 100 தொடலையே. அதுக்கு என்ன சொல்லறீங்க.

  இவ்வளவுக்கு நீங்க அதிகம் உப்புமா பதிவு கூட போடறது இல்லை.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 41. ரவி,

  ஆன்மிக பதிவர்களில் அடுத்தவர் மனம் கோணாமல் எழுதுவது உங்கள் தனிச் சிறப்பு.

  சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்,
  சொல்லிய வண்ணம் செயல்

  என்ற வள்ளுவன் குறள் சொல்லி பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன்.

  ஆன்மிகத்தின் சிறப்பை காட்ட புராண இதிகாச பக்திப்பாடல் இவற்றைவிட அவற்றை கடைபிடிப்பவர் அதனை செயலில் காட்டுதலே மிக சரியான ஒன்றாக இருக்க முடியும்.

  அவ்வகையில் எவர் என்ன சொன்னாலும் சற்றும் உணர்ச்சி வசப்படதவாறு அனைவரின் கருத்துக்களை மதித்து பதில் சொல்லும் தங்களின் ஆன்மிக பனி மற்றும் பாணி என்னை வியக்க வைக்கிறது.

  பாராட்டுக்கள்.

  நல்லார் ஒருவர் உளர் பொருட்டே எல்லோர்க்கும் பெய்யும் மழை !

  எத்தனையோ போலி சாமியார்கள், பித்தலாட்டாங்கள், சூதுவாதுகள் எல்லாம் தெரிந்தும் மக்கள் ஆன்மிகப் பற்று உடையவர்களாக என்றும் இருக்கிறார்கள் என்றால் உங்களைப் போல் சிலர் இருப்பாதால் தான்.

  நீங்கள் இதே போன்று எப்போதும் இருக்க வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  கோவி.கண்ணன்

  ReplyDelete
 42. அன்பு கே.ஆர்.எஸ்,

  இன்றுதான் இந்த பதிவினைப் பார்க்க முடிந்தது.

  108க்கு வாழ்த்துக்கள், உங்கள் எழுத்தில் ஆன்மிகம் மிக அழகாக வருகிறது...இறைவன் தங்களுக்கு எல்லா வளங்களையும் அருளட்டும்....

  என்னைப்போன்ற பதிவிடாத பிளாக்கரைக்கூட நினைவிலிருத்தியிருப்பதற்கு நன்றி.

  ReplyDelete
 43. Many more happy returns...வாழ்த்துக்கள்!

  innum niraya irukku... 1008, 10008... :)

  ReplyDelete
 44. vanakkan krs
  ungaludaya blog migavum soooooper
  aanal tamil padikka migavum kashtamaiirukku.onru english use pannunga alladhu tamil letters nalla varumbadi seiynga.mathapadi vishyangal padu super.ennudaya vazhthukkal.nandrigal pala.
  anban
  kooram varadaraja Bhattar
  en blog; SRIVATSANGAM.BLOGSPOT.COM
  EN MAIL ID; KOORAMVARADARAJAN@gmail.com
  enakku orkut irukku
  paarunga pesunga
  bye

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP