Wednesday, September 02, 2009

நிர்வாண சிவோஹம் - ஓணம் ஸ்பெஷல்!

மக்கா, எல்லாவர்க்கும் என்டே ஹ்ருதயம் நெறைஞ்ச ஓண ஷம்சகள்! :)
நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு!
நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு!
ஹிஹி! இனிய ஓணம் வாழ்த்துக்கள், அனைவர்க்கும்! :)

* ஓ"ண"த்துக்கு - மூனு சுழி "ண" போடனும் மக்கா! தப்பித் தவறீ ரெண்டு சுழி "ன" போட்டுறப் போறீக! பொருளே மாறீரும்! ஓ"ன"ம் = விஷச் செடி :)
பார்த்தாலே பரவசம் படத்துல, விவேக் மலையாளம் சம்சாரிச்சி, அடி வாங்குன கதையா முடிஞ்சீறப் போவுது! :)* ஓணம் = திருவோணம் = ஷ்ரவணம் = Shravanam, எல்லாமே திருவோண நட்சத்திரத்தைக் குறிக்கும்! Aquarii Star!
* திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம்! ஓணம் அம்புட்டு பெருமையான நட்சத்திரம்! பெருமாளின் திருநட்சத்திரம்!

ஆனா பாருங்க.....இன்னிக்கி (Sep-2-2009), ஓணத்தோடு, பிரதோஷமும் சேர்ந்தே வருகிறது!
பெருமாளும், சிவனாரும் ஒன்னா வந்தா...
ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து ஒய்யாரமா வந்தா எப்படி இருக்கும்? சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க! :)

அட, அவிங்க எப்பமே சேர்ந்து தான் வாராங்க!
மனுசங்களுக்குத் தான் அவிங்க தனித்தனியா வரதுல ஒரு லூசுத்தனமான களிப்பு! :)
ஈசனும் பெருமாளும் தில்லையில் ஒன்னா வந்த அழகுக் காட்சி, தாருகா வனத்தின் கர்ம ரிஷிகளையே, செயலற்றுப் போக வைத்ததாம்! பொறுக்க மாட்டாம, சிவன் மேலயே மந்திரம் ஏவி விட்டாங்க, ரிஷிகள்! :)

பெருமாளும், ஈசனும் ஒன்னா வருவது.....
திருவோணம், திரயோதசி (பிரதோஷம்) ஒன்னா வருவது.....
இந்த இனிய நாளில் ஒரு இனிய பாட்டைப் பார்க்கலாமா?
பெருமாள் கேட்ட கேள்விக்கு, சிவனார் பாடும், பதில் பாட்டு! எச பாட்டு! :)

இந்த பாட்டு சந்தப் பாட்டு மட்டுமல்ல! சதா அலைபாயும் மனசுக்கு, அமைதியை, நிமிடத்தில் அளிக்கவல்ல பாட்டு!
இருள் மனத்தில், மின்னல் போல், வெளிச்சம் பாயும் பாட்டு!

நண்பர் ஸ்ரீவத்ஸ், ரொம்ப நாளா, இதை எழுதச் சொல்லி, என்னைய கேட்டுக்கிட்டு இருக்காரு!
பொருள் அறிஞ்சு, மனசுக்குள் ஒரு மெல்லிய காட்சியை ஓட்டும் போது,
அதுல கிடைக்கும் ஆனந்த அனுபவமே தனி! அதனால் ஸ்ரீவத்ஸ்-க்காக இன்றைய பதிவு! :)

பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!
Part 2
Part 1
Very mesmerizing chant! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்கோள்! :)திருவோணப் பிரதோஷப் பதிவு!

சிவோஹம் சிவோஹம் -ன்னு சொல்லுறாங்களே! அப்படீன்னா என்ன?
சிவோஹம் = சிவ + அஹம்!
சிவம் நான்! நானே சிவம்-ன்னும் கூடச் சிலர் சொல்லிக்கிடுவாய்ங்க! :)

என்னாது.....நான் தான் சிவமா?
* அப்ப நான் தான் சகல சக்தி படைச்ச சிவனா? என்னால எதுவும் பண்ணீற முடியுமா?
* பத்து வேலை பண்ண நினைச்சா, அதுல எட்டு வேலை நடக்க மாட்டேங்குது! ரெண்டு தான் நடக்குது!
* அதுலயும், எது நடக்காது-ன்னு நினைச்சோமோ, அது நடக்குது! எது நடக்கணும்-ன்னு நினைச்சோமோ, அது நடக்க மாட்டேங்குது!
* இந்த லட்சணத்துல நான் எப்படிச் சிவம் ஆக முடியும்? சிவோஹம்-ன்னு சொல்ல முடியும்? :)

அட, நம்ம இரண்யகசிபு கூட அப்படித் தானே சொன்னான்?
நானே கடவுள்! அஹம் பிரம்மாஸ்மி! சிவோஹம்!
அப்போ, இரண்யகசிபு தான் உத்தம புருஷன் இல்லையா? :)
நாம கூட இரண்யகசிபு போல ஆயிறணும்! அப்படித் தானே? அதானே சிவோஹம்! சிவோஹம்! :))

ஹிஹி! சிவோஹம் = நானே சிவம்! இது சரியா? தவறா? :)
இது கிட்டத்தட்ட "அஹம் பிரம்மாஸ்மி" - "நான் கடவுள்" கான்செப்ட் தான்! நாம இன்னிக்கி அதைப் பார்க்க வேணாம்! இன்னொரு நாள் பார்ப்போம்!
மொதல்ல பசி எடுக்கட்டும்! அப்பறமா பந்திக்கு முந்துவோம்! இன்னிக்கி வெறும் Starters & Appetizers! :))

சிவோஹம் = சிவோ + அஹம்
= சிவம் என் அகத்துள் = அந்தர்யாமி!


* "சிவோஹம்" என்று சொல்வது...ஏதோ...."நான் தான் சிவம்" என்பது பொருள் அல்ல!
* சிவம் என் அகத்துள் வந்து பொங்குவதால், நான் சிவ மகிழ்ச்சியில், சிவ சொரூபத்தில் மிளிர்கிறேன் - அதான் உண்மையான பொருள்!


சிவோஹம் = நானே சிவம்-ன்னு கொள்ளக் கூடாது! அப்படிக் கொண்டால், நாமளும் இரண்யகசிபு ஆயிருவோம்! :))
ரெண்டே வாரம் தியான யோகம் பழகிட்டு, அஹம் பிரம்மாஸ்மி, நான் கடவுள், நானே சிவம்-ன்னு சொல்லிக்கிடறவங்க சில பேரு! அவிங்களை நிக்க வச்சி,
"ஐயா, நீங்க தானே சிவம்? உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன்?"-ன்னு சொல்லிப் பாருங்க! :)))))

"நான்" என்பது எங்கே அழிகிறதோ, அங்கே தானே "சிவம்" வரும்?
அப்பறம் "நானே" சிவம், "நானே" சிவம்-ன்னு, "நான்"-ஐ புடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி? :)
நான் மறையைக் கற்றவனா ஞானி?
"நான்" மறையக் கற்றவனே ஞானி!


சிவோஹம் = சிவோ + அஹம்
* இங்கே "அஹம்" என்பது = "ஆத்மாவைக்" குறிப்பது!
* இங்கே "சிவம்" என்பது = "ஆத்மாவின் ஆத்மாவைக்" குறிப்பது! = அந்தராத்மா = பரமாத்மா!
என் ஆத்மா, அந்தராத்மா என்னும் சிவத்தில் நிறைந்து தளும்புகிறது! சிவோஹம்!

சிவோ அஹம் = என் "ஆத்மாவில் வந்து நிறைந்த" சிவம்! வந்து நெஞ்சு நிறையப் புகுந்தான்!
திருமாலிருஞ் சோலைமலை என்றேன்! என்ன திருமால் "வந்து என் நெஞ்சு நிறையப்" புகுந்தான்! சிவோஹம்! சிவோஹம்!

எப்படிப் பொருந்தி வருது பார்த்தீங்களா பாசுரமும் சிவோஹமும்? திருவோணமும், பிரதோஷமும்?
* தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம் = சிவோஹம்! சிவோஹம்!
* நெஞ்சு நிறையப் புகுந்தான்! = சிவோஹம்! சிவோஹம்!
* அந்தர்யாமியாய் அகத்துளே நின்றான்! = சிவோஹம்! சிவோஹம்!

அந்தர்யாமியாய் நெஞ்சு நிறைதல் = இது தான் "சிவோ அஹம்" என்பதற்கு உண்மையான பொருள்!இப்போ பாட்டைப் பார்க்கலாமா? ஆதி சங்கரர், சின்ன பொடிப் பையனா இருக்கும் போது எழுதியது! :)
தன் கேள்விகளுக்கான பதிலைத் தேடி, குருவைத் தேடி அலைந்த போது எழுதியது! மொத்தம் ஆறே பாட்டு தான்!

* இந்தப் பாட்டு, மொத்தம் ஐந்து கேள்விகளுக்கான விடை!
* ஆறு பாட்டாகப் பாடினார்!
அட, அஞ்சு கேள்விக்கு எப்படிப்பா ஆறு பதில் கொடுக்க முடியும்? ஹா ஹா ஹா!
அட, கேள்வி கேக்குறவங்க வாயை அடைக்கிறாப் போல, கூடவே ஒரு எக்ஸ்ட்ரா பதிலைக் கொடுக்குறா மாதிரியா இது? :)))

* ஐந்து கேள்விகளைக் கேட்டது திருவோணம் - பெருமாள்!
* ஆறு பதில்களைத் தந்தது பிரதோஷம் - சிவ பெருமான்!
எம்பெருமானின் ஜகன் மோஹனா காரத்தில் லயித்து, ஐந்து ஆறானது! ஆறு முகமான "பொருள்" நீ அருள வேண்டும்!

1. ஜீவன் எது?
2. பரம் எது?
3. ஜீவன் எதை அடைய வேணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?

ஐந்தே ஐந்து கேள்விகள்! ஆறே ஆறு பாடல்கள்! வாய் விட்டுப் படிங்க, சந்தம் தானா வந்துரும்!
பொருள் அறிஞ்சு, மனத்துக்குள் ஒரு மெல்லிய காட்சியை ஓட்ட...அதே மெட்டில் தமிழ் மொழி பெயர்ப்பும் செய்துள்ளேன்...பொருளும் இசையும் சேர்ந்து வருதா-ன்னு நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்!விடுதல் ஆற்றுப்படை - நிர்வாண ஷட்கம்

பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!
பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!

1. ------------------------------------------------------------------------
மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்,
ந-ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,
ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


மனம் புத்தி, ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு, கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி, வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


2. ------------------------------------------------------------------------
ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:
ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோச:
ந-வா பாணி பாதம், ந- சோப ஸ்தபாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

உயிர் மூச்சு மில்லை! ஐங் காற்றும் இல்லை!
எழு தாதும் இல்லை! ஐம் போர்வை இல்லை!
கை கால்கள் இல்லை! சினை வினையும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


3. ------------------------------------------------------------------------
ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹௌ,
மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


விரு வெறுப்பில்லை! மையல் பற்றும் இல்லை!
கரு கருவம் இல்லை! அழுக் காறும் இல்லை!
அறம் பொருள் நல்லின்ப, வீடும் நானில்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


4. ------------------------------------------------------------------------
ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!
ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை!
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை!
துப்பில்லை, துப்பாக்கித் துப்பாரும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


5. ------------------------------------------------------------------------
ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா
ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

மரணங்கள் கரணங்கள், சாதிகள் இல்லை!
தாய் தந்தை இல்லை! தரும் பிறப்பில்லை!
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

6. ------------------------------------------------------------------------
அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்
ந-ச சங்கடம் நைவ, முக்திர் ந-மே யா
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


மாற்றங்கள் இல்லை! பல தோற்றங்கள் இல்லை!
எங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே!
தளையில்லை! தடையில்லை! தரும் முக்தி இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


* மந்திர ஒலி வடிவில் - வேகமாக!
* இசை வடிவில் - மென்மையாக!தியானம், Meditation, யோகா, கீதா, நிர்விகல்ப சமாதி என்று...இன்னிக்கி பல இடங்களில் விதம் விதமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்! நல்லது தான்!
யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம்! இன்னும் அஹம் பிரம்மாஸ்மி, அகோரி என்றெல்லாம் கூட சினிமா வரை யோசித்தாகி விட்டது!

ஆனால் அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது! இதைப் பழகாமல், எது பழகியும், ஒன்றுமில்லை!

வேணும்னா ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்! :))
நமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!
வட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா?
தானா தூக்கம் வந்துரும்! உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு மாஸ்டர் சொல்லீருவாரு! படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :))))

எனவே தியானமோ, யோகமோ, எதைச் செய்யத் துவங்கும் முன்னும்....
அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது!
இதை இயல்பாகப் பாவித்து, பழகிக் கொள்ளுங்கள்!

* சிவோஹம் என்றால் "நானே சிவன்" என்பது அல்ல!
* சிவோஹம் என்றால் "சிவ-என்-அஹம்"!

வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்! அதனால் சிவ சொரூபமாக, மகிழ்ச்சியில் பொங்குகிறேன்!

இனி...
* அடுத்த முறை சிவோஹம் என்று சொல்லும் போதும்.....
* தியானத்தில் அமரும் போதும்.....
* உங்கள் அகத்தில்.....
* சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது போல எண்ணிக் கொள்ளுங்கள்! நெஞ்சை ஈரப்படுத்திக் கொள்ளுங்கள்!

அப்படி ஈரப்படுத்திக் கொண்டு, அப்புறம் தியானம் செய்தால்.....
நிற்கும் போதும், நடக்கும் போதும்,
அலுவலகத்திலும், வீட்டிலும்,
நண்பர்களோடு பேசும் போதும்,
கோபத்தில் சண்டை போடும் போதும் கூட.....தியான மயமாகவே இயல்பாக இருக்கும்!
அனைத்தும் சிக்கலின்றி சீரான ஓடையில் இருக்கும்!
நெஞ்சு நிறையப் புகுந்த சிவன், அங்கேயே உங்களுடன் தங்கியும் விடுவான்!

உங்கள் அகத்தில்.....
"சிவம்" வந்து "நெஞ்சு நிறையப்" புகட்டும்! = சிவோ அஹம்!
சிவ சொரூபமாக, மகிழ்ச்சியில் பொங்குங்கள்! மகிழ்ச்சியில் பொங்குங்கள்!

சிவோஹம்! சிவோஹம்!
சிவோஹம்! சிவோஹம்!
ஸ்ரீ ஹரீ: ஓம்!

Photo Courtesy: Simply CVR :)

49 comments:

 1. நான் சிவனேன்னு இருக்கேன் என்பார்களே அதற்கான அர்த்தம் இப்போது முழுமையாய்ப்புரிந்தது ரவி. உன்னதமான பதிவு.மேலும் எழுத பிறகுவருகிறேன்

  ReplyDelete
 2. \\இனிய உளவாக, "இன்னாத" கூறல் - அதான் உங்களுக்கே தெரியுமே! கலக்குங்க\\ பின்னூட்ட பெட்டிக்கு மேல் இதை படித்த பின்னரும் இக் கருத்து தெரிவித்தமைக்கு பொருத்தருள்க

  சிவ நிலையை சிவமே விளக்குவதாக ஆறு பாடல்களும் அமைந்திருப்பதாக என் மனம் பார்க்கிறது.
  அப்படி பார்த்தால்
  \\ஆனால் அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது! இதைப் பழகாமல், எது பழகியும், ஒன்றுமில்லை\\

  சிவம் வந்து புகுந்துவிட்டால் அதன்பின் பழக எதுவுமே இல்லை,

  சிவம் வந்து புகத்தான் தியானம், Meditation, யோகா, கீதா, நிர்விகல்ப சமாதி என்று...இன்னிக்கி பல இடங்களில் விதம் விதமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்! யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம்!
  வேணும்னா ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்! :))
  நமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!
  வட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா? தானா தூக்கம் வந்துரும்! உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு மாஸ்டர் சொல்லீருவாரு! படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :) ----இப்படி எதேதோ முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நண்பரே

  இதை சற்று கிண்டல் கலந்த தொனியுடன் தாங்கள் பார்ப்பது போல் நான் நினைக்கிறேன். ஒன்றை புரிந்து கொள்ள முடியாவிட்டால் பொறுமையாக புரிந்து கொள்ள முயலவேண்டுமே, தவிர கிண்டல் செய்வது அழகல்ல ))

  \\எனவே தியானமோ, யோகமோ, எதைச் செய்யத் துவங்கும் முன்னும்....
  அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது! அதை இயல்பாகப் பழகிக் கொள்ளுங்கள்!\\

  இதை நீங்களே ஒருமுறை படித்துபாருங்கள், பாடலுக்கும் இந்த கருத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா, அதெப்படி சிவமே உள்ளே வந்தபின் எனக்கு எதுக்கு தியானம், யோகம் எல்லாம் )

  பெருமாள் தங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், ஆனால் சிவனுக்கும் தங்களுக்கும் வெகுதூரம் என்பதை இன்று நிரூபித்து விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. ஐயா,
   ‘அஹம்’ என்னும் வடமொழிச்சொல்லுக்கு ‘நான்’ என்பது மட்டுமே பொருள். நீங்கள் ‘உள்ளே’ என்று கொண்டுள்ள பொருளின் சொந்தக்காரர் ‘அகம்’ எனும் தமிழ்ச்சொல்.
   பொருள் பிழையால் கேட்ட அழகான தத்துவ விளக்கம்!
   சுரேஷ்

   Delete
 3. //நிகழ்காலத்தில்... said...
  பின்னூட்ட பெட்டிக்கு மேல் இதை படித்த பின்னரும் இக் கருத்து தெரிவித்தமைக்கு பொருத்தருள்க//

  வாங்க நிகழ்காலத்தில்..
  வணக்கம்!
  பந்தலில் எந்த ஒரு கருத்தையும், ஆத்திகமோ-நாத்திகமோ, கருத்தாகத் தயக்கமின்றி கூறலாம் என்பதைப் பலரும் அறிவரே! :)

  உங்க பின்னூட்டம் படிச்சேன்! அதற்கான விளக்கத்தைக் கொடுக்கும் முன்னால், உங்களுக்கு மன வருத்தம் ஏதாச்சும் ஏற்பட்டு இருந்தால், அதற்கு மொதல்ல என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டு பின்னர் விளக்குகிறேன்! வாழ்க சீர் அடியாரெல்லாம்!

  ReplyDelete
 4. //ஷைலஜா said...
  நான் சிவனேன்னு இருக்கேன் என்பார்களே அதற்கான அர்த்தம் இப்போது முழுமையாய்ப் புரிந்தது ரவி. //

  ஹிஹி! வாங்க-க்கா! கரெக்ட்டான பாயிண்ட்டை எடுத்துக் கொடுத்து இருக்கீங்க! நன்றி!

  சிவனே-ன்னு இருக்கேன் என்றால் நான் சிவனாகவே இருக்கேன், நான் சிவனாகவே ஆகி விட்டேன் என்று பொருள் ஆகாது அல்லவா? அதையே பதிவிலும் சொல்லி உள்ளேன்!

  ReplyDelete
 5. ஹை, அந்த I am that புத்தகம் ரங்கமணி அடிக்கடி படிக்கும் புத்தகம். நான் கூட கிண்டல் செய்வதுண்டு. 'நான் Who am I என்றால் நீங்க I am that' அப்படீன்னு

  ReplyDelete
 6. இப்போ நிகழ்காலத்தில்...அவர்களின் குறிப்புகளுக்கு வருவோம்...

  //சிவ நிலையை சிவமே விளக்குவதாக ஆறு பாடல்களும் அமைந்திருப்பதாக என் மனம் பார்க்கிறது.//

  ஆமாங்க! நீங்கள் சொல்வது சரி!
  ஆறு பாடல்களும் சிவ நிலையைத் தான் விளக்குகினறன! ஆனால்...ஆனால்....

  * தர்மங்கள் இல்லை! மோட்சம் இல்லை = ந-தர்மோ ந-மோக்ஷ:
  * குருவும் இல்லை! சீடனும் இல்லை! = குருர் நைவ சிஷ்யா!
  என்றும் சொல்கிறாரே! பார்த்தீங்களா?

  சிவபெருமானே குருவாக இருந்து உபதேசிக்கின்றவர்! அப்பறம் எதுக்கு குரு இல்லை-ன்னு சொல்லணும்? இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது-ன்னு அவர் கிட்ட போயிக் கேட்பீங்களா? :))

  //இதை சற்று கிண்டல் கலந்த தொனியுடன் தாங்கள் பார்ப்பது போல் நான் நினைக்கிறேன். ஒன்றை புரிந்து கொள்ள முடியாவிட்டால் பொறுமையாக புரிந்து கொள்ள முயலவேண்டுமே, தவிர கிண்டல் செய்வது அழகல்ல ))//

  ஹா ஹா ஹா!
  கிண்டல் செய்வது தான் தங்களைப் பாதித்ததா? அதுக்காகத் தான் இப்படி ஒரு பின்னூட்டமா? :)
  யாரையும் தப்பாக விமர்சிக்க வில்லையே! கிண்டல் கூடத் தொனிக்கக் கூடாதுன்னா எப்படி?
  சித்தாந்தச் சாமி கதை, புதிய கோணங்கி, மிளகாய்ச் சாமி, வாழைப்பழச் சாமி-ன்னு எல்லாம் பாரதியார் எழுதுவார்! உடனே கிண்டல் செய்வது அழகல்ல-ன்னு பாரதியார் கிட்ட சொல்வோமா? :))

  சொல்லப் போனால் நான் கிண்டல் கூடச் செய்யவில்லை!
  **இன்னிக்கி பல இடங்களில் விதம் விதமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்! நல்லது தான்** என்றும் சொல்லி இருக்கேன்!

  அப்படிக் கற்றுத் தரும் போது, வெறுமனே மெக்கானிகலாக இல்லாமல், மனத்தில் சிவானந்தம், அன்பே சிவம்-ன்னு நெஞ்சு நிறையப் புகுத்திக் கொண்டு செய்யணும் என்றும் சொல்லியுள்ளேன்!

  //அதெப்படி சிவமே உள்ளே வந்தபின், எனக்கு எதுக்கு தியானம், யோகம் எல்லாம் )//

  ஒன்னு சொன்னாக் கோச்சிக்க மாட்டீங்களே? உங்க புரிதல் நன்மைக்குத் தான் இதைச் சொல்றேங்க!
  சிவமே உள்ள வந்த பின, எதுக்கு தியானமெல்லாம் செய்யணும்?-ன்னு கேக்கறீங்களே!
  அந்தச் சிவமே எதற்கு தியானத்தில், யோகத்தில் அமர்ந்து இருக்காரு? யோசிச்சிப் பாருங்க!


  சிவமே உள்ளே வந்த பிறகு என்னவா? அந்தச் சிவமே, அவரே தியானத்தில் தான் இருக்காரு! நாமளும் சிவமே உள்ளே வந்த பிறகும் கூடத், தியானத்தில் தான் இருப்போம்!

  //பெருமாள் தங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், ஆனால் சிவனுக்கும் தங்களுக்கும் வெகுதூரம் என்பதை இன்று நிரூபித்து விட்டீர்கள்//

  ஹிஹி! வெகு தூரமாஆஆஆ? மிகவும் நன்றி! இந்தக் கிண்டலுக்காக எல்லாம் நான் கோச்சிக்க மாட்டேன்! ஏன்-னா பதிவில் சொன்னபடி...
  ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹௌ,
  கருத்தென்றும் இல்லை! கிண்டலும் இல்லை!
  சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

  பெருமாளுக்குப் பரிச்சயமாக இருந்தால், சிவனிடம் நெருக்கம் இன்னும் இன்னும் அதிகம் தான் ஆகும் என்பது ஈசனே திருவாரூர் அஜபா நடனத்தில் காட்டிக் கொடுப்பது! சரி தானுங்களே நிகழ்காலத்தில்?...:)

  தாங்கள் புரிந்து கொள்ள வேணுமாய்,
  அன்புடன்,
  சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

  ReplyDelete
 7. //சின்ன அம்மிணி said...
  ஹை, அந்த I am that புத்தகம் ரங்கமணி அடிக்கடி படிக்கும் புத்தகம்//

  வாங்க சின்ன அம்மிணி-க்கா! நீங்க தான் அவருக்கு வாங்கிக் கொடுத்தீயளா? :)

  //நான் கூட கிண்டல் செய்வதுண்டு. 'நான் Who am I என்றால் நீங்க I am that' அப்படீன்னு//

  ஹா ஹா ஹா!
  Who am I?-ன்னு கேட்டா
  You are my wife! You are my beloved! - அப்படித் தானே சொல்லணும்? :))
  You are that, I am that-ன்னு சொன்னா எப்படி? :))

  ஹா ஹா ஹா, பாவம்-க்கா அவரு! :)

  ReplyDelete
 8. \\சிவபெருமானே குருவாக இருந்து உபதேசிக்கின்றவர்! அப்பறம் எதுக்கு குரு இல்லை-ன்னு சொல்லணும்? இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது-ன்னு அவர் கிட்ட போயிக் கேட்பீங்களா?\\

  சிவத்தை, மனிதனாக பார்ப்பதால் வந்த விளைவு,சிவன் கிண்டல் பண்ணுவதாக நினைக்கிறீர்கள் :))

  மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கும் சிவத்துக்கும் வெகுதூரரரம் :)

  மனிதனை சிவமாக பாருங்கள், புரியும்


  \\கிண்டல் கூடத் தொனிக்கக் கூடாதுன்னா எப்படி?\\

  பிறர் நம்பிக்கையை கிண்டல் செய்யக்கூடாது. அவசியமானால் அதன் உள்ளர்த்தத்தை முடிந்தவரை விளக்கலாம்.

  நாத்திகர்கள் கிண்டல் செய்யும்போது நாம் எப்படி எதிர்வினை ஆற்றமுடியும்.?

  பாரதி போலிகளைச் சாடியிருப்பார், கிண்டல் செய்யவில்லை என நினைக்கிறேன். இது குறித்து நான் வாய்ப்பு அமையும்போது சொல்கிறேன்

  \\அப்படிக் கற்றுத் தரும் போது, வெறுமனே மெக்கானிகலாக இல்லாமல், மனத்தில் சிவானந்தம், அன்பே சிவம்-ன்னு நெஞ்சு நிறையப் புகுத்திக் கொண்டு செய்யணும் என்றும் சொல்லியுள்ளேன்!\\

  கருத்து சரிதான்.
  பணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தவுடன் எதிலும் சிவம் இருப்பதில்லை, கற்றுக்கொள்பவர் தானாக முயன்றால்தான் உண்டு

  \\ஒன்னு சொன்னாக் கோச்சிக்க மாட்டீங்களே? உங்க புரிதல் நன்மைக்குத் தான் இதைச் சொல்றேங்க!
  சிவமே உள்ள வந்த பின, எதுக்கு தியானமெல்லாம் செய்யணும்?-ன்னு கேக்கறீங்களே!
  அந்தச் சிவமே எதற்கு தியானத்தில், யோகத்தில் அமர்ந்து இருக்காரு? யோசிச்சிப் பாருங்க!\\

  பணம் ஏதும் வாங்காமல் சொல்கிறேன், கோபிக்காம சொல்கிறேன். சத்தியமா ’என்னை’ப்போன்றவர்களின் நன்மைக்காக சொல்கிறேன்

  சிவத்தை மனிதனாக பார்க்காதீர்கள்,
  மனிதனை சிவமாக பாருங்கள்,’மனினுக்கு’தான் யோகத்தில் உட்கார வேண்டிய அவசியம், சிவத்துக்கு அல்ல

  திரும்ப திரும்ப சொல்கிறேன்
  உங்களுக்கும் சிவத்துக்கும் வெகுதூரரரம் :)

  பாவம் சிவத்தை விட்டுருங்க :))))

  வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 9. இதெல்லாம் இன்னும் 20 - 30 வருசம் கழிச்சித்தான் புரியும் போலே... :)

  ReplyDelete
 10. @நிகழ்காலத்தில்
  //பாவம் சிவத்தை விட்டுருங்க :))))//

  சிவபெருமானை அடியேனால் விட முடியாது! என்ன செய்வீர்கள்?

  இதோ தங்கள் வாசகம்!
  //மனிதனை சிவமாக பாருங்கள்//
  //திரும்ப திரும்ப சொல்கிறேன்
  உங்களுக்கும் சிவத்துக்கும் வெகுதூரரரம் :)//

  மனிதனைச் சிவமாகப் பார் என்று "வாயால்" மட்டுமே சொல்லும் தங்களால்...
  என் போன்ற மனிதனை, சிவத்தில் இருந்து "தூர" வைத்துப் பார்க்க முடிகிறதே! எப்படி? சொல் ஒன்று, செயல் ஒன்றா? :)

  எந்த ஒரு ஜீவனையும் சிவத்தில் இருந்து பிரிப்பதும், சிவத்தில் இருந்து தூர விலக்குவதும், சிவத் தொண்டு ஆகாது! அடியேனைச் சிவத்தில் இருந்து "தூர" வைப்பதாக நினைத்துக் கொண்டு, அதைத் தான் தாங்கள் செய்கிறீர்கள்! :)

  பரவாயில்லை! அடியேனைச் சிவத்தில் இருந்து "தூர" தாங்கள் வைக்கலாம்! ஆனால் சிவன் வைக்க மாட்டான்!
  ஏன்-ன்னா...நீங்காதான் தாள் வாழ்க! நீக்காதான் தாள் வாழ்க! அதுவே சிவம்!

  அடியேனுக்கும் சிவத்துக்கும் "தூரம்" ஆக இருந்தாலும்...
  தாங்கள் சிவ அருகாமையில் சிவோஹமாய் மிளிர, அடியேன் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்!

  ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹௌ,
  சிவோஹம்! சிவோஹம்! சிவோஹம்! சிவோஹம்!

  ReplyDelete
 11. //ராம்/Raam said...
  இதெல்லாம் இன்னும் 20 - 30 வருசம் கழிச்சித்தான் புரியும் போலே... :)//

  ஹா ஹா ஹா!
  புரியணும்-ன்னு எல்லாம் ஒன்னுமே இல்ல ராமேய்! பாட்டைக் கேளு! என்சாய் மாடி! அது போதும்! :)

  பெருமானைப் புரிந்து கொள்ளும் சக்தி மனிதனுக்கு இருந்தா, மனிதனே பெருமான் ஆயீற மாட்டானா என்ன? :)
  * நாம் அவனைப் புரிந்து கொள்ள வேணாம்! அவனே நம்மைப் புரிந்து கொள்வான்!
  * அவன் புரிந்து கொள்வான் என்று நாம் புரிந்து கொண்டால் போதும்! :))

  நிகழ்காலத்தில்...அவர்களுக்குப் பதில் சொன்ன எஃபெக்ட் கொஞ்சம் அப்படியே உங்க பதிலில் வந்துரிச்சி! என்சாய் மாடி ராமேய்! :)

  ReplyDelete
 12. //நிகழ்காலத்தில்... said...
  சிவத்தை, மனிதனாக பார்ப்பதால் வந்த விளைவு,சிவன் கிண்டல் பண்ணுவதாக நினைக்கிறீர்கள் :))//

  சிவபெருமான் செய்யாத கிண்டல்கள் இல்லை! திருவிளையாடற் புராணம் மொத்தமும் அது தான்! :)

  நகைச்சுவையான "கிண்டல்" என்பதை ஏதோ தீண்டத் தகாத ஒன்று போல் பார்ப்பதால் வந்த விளைவு! சொல்லப் போனால் "கிண்டல்" என்ற சொல்லிலும் சிவம் உள்ளது! இதை முடிஞ்சா மறுத்துப் பேசுங்களேன் பார்ப்போம்! :)

  //பிறர் நம்பிக்கையை கிண்டல் செய்யக்கூடாது//

  இங்கே யாரும் பிறர் "நம்பிக்கையைக்" கிண்டல் செய்யவில்லை! அனைத்துக் கடந்த சிவத்தை, மனிதனின் தியானத்தில் எல்லாம் கொண்டாற முடியுமா? என்று கேட்டால், அப்போ அது தப்பு!

  ஆனால் இங்கு காட்டியது "நடைமுறையைத்" தான்! நீங்களே வேற ஒத்துக்கறீங்க, பணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தவுடன் அது போன்ற நடைமுறைகளில் சிவம் இல்லை-ன்னு! அப்புறம் என்ன???

  //பாரதி போலிகளைச் சாடியிருப்பார், கிண்டல் செய்யவில்லை என நினைக்கிறேன். இது குறித்து நான் வாய்ப்பு அமையும்போது சொல்கிறேன்//

  மிக்க நன்றி! நீங்கள் விளக்கிச் சொன்ன பிறகு, அடியேன் ஒவ்வொரு பாரதி பாட்டாக் கொடுக்கறேன்! நகைச்சுவை, நையாண்டி ததும்ப அவர் கிண்டல்களை! :)

  அப்பர் சுவாமிகள் பாடுற பாட்டு ஒன்னு இருக்கு! இப்போதைக்கு அதை மட்டும் ஒரு பார்வை பாருங்க!

  பொக்கம் மி்க்கவர் பூவும் நீரும் கண்டு
  நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே!

  கோயிலுக்கு, ஒப்புக்கு பூ-அபிஷேகம்-ன்னு எடுத்துட்டு வரவங்களைப் பாத்து, ஈசன் வெட்கப்பட்டு சிரிக்கிறானாம்! கிண்டலாப் பாடுறாரு தேவாரத்தில்!
  உடனே "அபிஷேகம் என்பது நம்பிக்கை! அதைக் கிண்டல் பண்றாப் போல அப்பர் சுவாமிகள் பாடிட்டாரு! அப்பருக்கும் சிவத்துக்கும் ரொம்ப தூரரரரம்!"-ன்னு ஆரம்பியுங்கள் பார்ப்போம்! :))

  //கருத்து சரிதான்.
  பணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தவுடன் எதிலும் சிவம் இருப்பதில்லை, கற்றுக்கொள்பவர் தானாக முயன்றால்தான் உண்டு//

  ஓ...பணம் சம்பாதிக்கும் நோக்கம் வந்தால் "எதிலும்" சிவம் இருப்பதில்லையா?
  நீங்க தான் எதில் இருப்பார், எதில் இருக்க மாட்டார்? யாருக்கு கிட்டக்க, யாருக்கு தூரம் என்று கணக்கு போட்டுச் சொல்பவரா? அடேங்கப்பா! :))

  இன்னொன்னு சொல்லட்டுமா? அந்தப் பணம் சம்பாதிக்கும் இடத்திலும் சிவம் இருக்கிறது! அந்தப் பொய்யான சம்பாதிக்கும் நோக்கத்தை எண்ணிச் சிவம் சிரிக்குமே அன்றி, எதையும் சிவம் நீங்குவதில்லை!

  //’மனினுக்கு’தான் யோகத்தில் உட்கார வேண்டிய அவசியம், சிவத்துக்கு அல்ல//

  ஓ! அப்போ, சிவபெருமான் அமர்ந்திருக்கிறாரே உயர்ந்த யோகத்தில்! தவக் கோலத்தில்! அது என்னவாம்? :)
  அதுக்குப் பதிலைக் காணோமே?

  ஈசனுக்கு தனியாக எதுவுமே அவசியமில்லை! ஆனாலும் அவர் யோகத்திலும் தவத்திலும் இருப்பார்! அதற்கான உயர்ந்த காரணங்கள் உண்டு! மனிதன் எப்படித் தன்னுள் சிவத்தைக் காண விழைகிறானோ, அதே போல் ஈசனும் தம்முள் மனிதம் காண விழைகிறார்! மனித நலம், யோகம் காண விழைகிறார்!

  யாரையும் அவர் "தூர" வைப்பதில்லை! வல்-அரக்கர், அமரர், அடியேன், தாங்கள் உட்பட! :)
  சிவோ அஹம்! சிவே அஹம்!
  சிவோஹம்! சிவோஹம்!

  ReplyDelete
 13. அண்ணா.. ஓணம் பற்றிய பதிவு மறுநாள் தான் படிக்க முடியுது.. நேத்தே எல்லா சேட்டன் , சேச்சிகளுக்கு வாழ்த்து சொல்லியாச்சு..

  //பெருமாள் தங்களுக்கு நன்கு பரிச்சயமானவர், ஆனால் சிவனுக்கும் தங்களுக்கும் வெகுதூரம் என்பதை இன்று நிரூபித்து விட்டீர்கள்//

  அண்ணா, மன்னிச்சுருங்க.. பதிவு மொத்தத்தையும் இந்த கமெண்ட் தூக்கி சாப்புட்டுறுச்சு.. இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன் :)) ஹா ஹா ஹா.. முடியல சாமி முடியல

  ReplyDelete
 14. //* திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம்! //

  பாசுரத்தையும் சொல்லுங்களேன்!! வேதாந்த தேசிகரும் புரட்டாசித் திருவோணத்தில் தானே அவதரித்தார்.

  ReplyDelete
 15. சிவோஹம் விளக்கம் அருமை.. முன்பு சிவம் நான் சிவன் நான் என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்.. அதற்கு நான் கமெண்ட் போட்டு ஒருவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன் :) அது எப்படி நீ சிவன் நான் என்று சொல்லலாம்னு :)

  ReplyDelete
 16. //"ஐயா, நீங்க தானே சிவம்? உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன்?"-ன்னு சொல்லிப் பாருங்க! :)))))//

  அதான் சுருட்டு பிடிக்கிறாங்களே.. புகையிலை எனும் விஷம் தானே சுருட்டு, பீடியில் உள்ளது :)

  ReplyDelete
 17. //1. ஜீவன் எது?
  2. பரம் எது?
  3. ஜீவன் எதை அடைய வேணும்?
  4. அடையும் வழிகள் என்ன?
  5. அடையும் வழியில் தடைகள் என்ன//

  பெருமாள் சிவனிடம் கேட்ட கேள்விகள்னு சொல்லிருக்கீங்க.. ஏன் பெருமாளுக்கு விடை தெரியாதா?? பெருமாளுக்கே விடை தெரியாதா கேள்விகளா இவை?

  ReplyDelete
 18. பாடல்கள் கேட்கப் பிரமாதம்.. கேட்டுக் கொண்டே உங்காள் பதிவைப் படிக்க இனிமையாக இருந்தது.. உங்களுக்கும் சிவனுக்கும் ரொம்ப தூரம்னு படிச்சவுடனே பொங்கி வந்த சிரிப்பில் மற்ற அனைத்தும் அடங்கி விட்டது :) அதனால் திரும்பவும் பதிவை மட்டும் படிச்சேன்

  ReplyDelete
 19. // படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :)//

  அப்போ நின்னுகிட்டே தூங்கினா ?

  ReplyDelete
 20. //Raghav said...
  அண்ணா, மன்னிச்சுருங்க.. பதிவு மொத்தத்தையும் இந்த கமெண்ட் தூக்கி சாப்புட்டுறுச்சு..//

  ஹிஹி! பின்னே? தூக்கிச் சாப்பிடத் தானே இப்படியெல்லாம் கமெண்ட்டுவாங்க பந்தல்-ல? :) எனக்கும் இந்தக் கமெண்ட் ரொம்ப பிடிச்சி இருந்துச்சி! சிரிச்சுகிட்டே இருக்கேன் :)

  அப்படியே என் கிட்ட இருந்து எத்தனை மில்லி மீட்டர் தூரத்துல ஈசன் இருக்காரு-ன்னு,
  நான் இந்த சைட்-ல இருந்து அளக்க, ஈசன் அந்த சைட்-ல இருந்து அளந்துக்கிட்டு இருக்காரு! நாங்க ரெண்டு பேரும் இப்போ பிசி-ப்பா! Dont Disturb :)

  ReplyDelete
 21. //பொய்யான சம்பாதிக்கும் நோக்கத்தை எண்ணிச் சிவம் சிரிக்குமே அன்றி, எதையும் சிவம் நீங்குவதில்லை! //

  ஆஹா..

  ReplyDelete
 22. //Raghav said...
  அண்ணா, மன்னிச்சுருங்க.. பதிவு மொத்தத்தையும் இந்த கமெண்ட் தூக்கி சாப்புட்டுறுச்சு..//

  ஹிஹி! பின்னே? தூக்கிச் சாப்பிடத் தானே இப்படியெல்லாம் கமெண்ட்டுவாங்க பந்தல்-ல? :) எனக்கும் இந்தக் கமெண்ட் ரொம்ப பிடிச்சி இருந்துச்சி! சிரிச்சுகிட்டே இருக்கேன் :)

  அப்படியே என் கிட்ட இருந்து எத்தனை மில்லி மீட்டர் தூரத்துல ஈசன் இருக்காரு-ன்னு,
  நான் இந்த சைட்-ல இருந்து அளக்க, ஈசன் அந்த சைட்-ல இருந்து அளந்துக்கிட்டு இருக்காரு! நாங்க ரெண்டு பேரும் இப்போ பிசி-ப்பா! Dont Disturb :)//


  என்ன ’அளந்து’ முடிச்சிட்டீங்களா :))))

  எனக்கு என்னமோ ரொம்ப தூரமாத்தான் தெரியுது, சொல்லுங்க திருத்திக் கொள்வோம் :)))

  ReplyDelete
 23. KRS thanks a load for writing about this song. I have had blissful meditations with tears in my eyes listening to these songs.I have profound respect for your views and thats why I have asked you to write . I am glad to know the full meaning of the song today. Shivohum meaning clarification is brilliant!

  I feel all are one. Be it shiva or rama god is one. god comes to us in different forms only according to our wish. On this shravanam he has come to you in shiva's form for you have called him heart and soul with love.

  I bless you with loads of shivan energy! Engum neraindha eesan ungal edhayathilum nirayttum!
  Have a beautiful life!

  ReplyDelete
 24. \\மனிதனைச் சிவமாகப் பார் என்று "வாயால்" மட்டுமே சொல்லும் தங்களால்...
  என் போன்ற மனிதனை, சிவத்தில் இருந்து "தூர" வைத்துப் பார்க்க முடிகிறதே! எப்படி? சொல் ஒன்று, செயல் ஒன்றா? :)\\

  சரியாக சொன்னீர்கள், வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்,

  சொல் ஒன்று, இப்போது என்னால் அதுதான் முடிகிறது

  செயல் செய்யும் அந்தக்காலம் எப்போது என்பது சிவத்தின் கையில் இருக்கிறது.

  மற்றபடி தங்களின் சிவம் குறித்தான கருத்தும், என் கருத்தும் இணையும் புள்ளி சற்று தள்ளி இருக்கும் போல இருக்கிறது

  அளக்க வேண்டாம் விடுங்க தானாக ஒருநாள் இணைந்துதானே ஆகணும் :))

  வாழ்த்துக்கள் நண்பரே !!

  ReplyDelete
 25. //நிகழ்காலத்தில்... said...
  என்ன ’அளந்து’ முடிச்சிட்டீங்களா :))))//

  ஈசன் அளந்து முடிச்சிட்டார்! படி அளந்து முடிச்சிட்டார்! நான் அளக்கவில்லை! அவர் அளந்ததையே அளந்து, "கொண்டேன்"! :)

  //எனக்கு என்னமோ ரொம்ப தூரமாத்தான் தெரியுது//

  ஹிஹி! நோ பிராப்ளம்! நீங்க சொல்வது கரெக்ட் தான்!
  அப்பர் சுவாமிகளுக்கே சிவம் தூரரரரம்-ன்னும் போது, அடியேனுக்கு தூரரம் இல்லாமல் இருக்குமா? :))

  //சொல்லுங்க திருத்திக் கொள்வோம் :)))//

  ஹிஹி! அதெல்லாம் வேணாங்க! இருக்கிறபடி இருக்கட்டும்! :)

  ReplyDelete
 26. //Raghav said...
  //* திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம்! //

  பாசுரத்தையும் சொல்லுங்களேன்!!//

  அட, அதான் ஆழ்வார் மொழி வலைப்பூவுல தமிழ் சொல்லிக்கிட்டு வராரு-ல்ல? :)
  சரி இந்தாங்க...

  பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
  காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
  ஆண் ஒப்பார் இவன் நேரில்லை காண்
  திருவோணத்தான் உலகாளும் என்பார்களே
  - பெரியாழ்வார் திருமொழி

  //வேதாந்த தேசிகரும் புரட்டாசித் திருவோணத்தில் தானே அவதரித்தார்//

  ஆமாம்-ப்பா ஆமாம் :)
  அன்னிக்கி மறக்காம ஒரு பதிவு போட்டுருங்க! சொல்லிட்டேன்!

  ReplyDelete
 27. //Raghav said...
  சிவோஹம் விளக்கம் அருமை.. முன்பு சிவம் நான் சிவன் நான் என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தீர்கள்..//

  அதுல சிவோ அஹம்-ன்னு ரொம்ப விளக்கவில்லை!
  இன்னிக்கி ஸ்ரீவத்ஸ் போட்ட உத்தரவு! சொல்லிட்டேன்! :)

  //அதற்கு நான் கமெண்ட் போட்டு ஒருவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன் :) அது எப்படி நீ சிவன் நான் என்று சொல்லலாம்னு :)//

  ஹிஹி! அதானே! அது எப்படி உன் வாயால "சிவம் நான்"-ன்னு சொல்லலாம்? ஆழ்வார் கூட "முக்கண்ணப்பா"-ன்னு, "அப்பா"-ன்னு எப்படிச் சொல்லலாம்? :))

  சரி...ஒரு சாக்த உபாசகர் கூட இருந்துகிட்டு, சிவம்-ன்னு சொல்லக்கூடாது-ன்னு சொன்னா எப்படி? :)
  உபாசகர் கிட்ட சொன்னீங்கன்னா அவரே பக்குவமா எடுத்துச் சொல்லிப் புரிய வச்சிருவாரு!

  ReplyDelete
 28. Raghav said...
  //"ஐயா, நீங்க தானே சிவம்? உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன்?"-ன்னு சொல்லிப் பாருங்க! :)))))//

  அதான் சுருட்டு பிடிக்கிறாங்களே.. புகையிலை எனும் விஷம் தானே சுருட்டு, பீடியில் உள்ளது :)//

  ஓ...நீ அகோரி சாதுக்கள், அஹம் பிரம்மாஸ்மி சாதுக்களைச் சொல்கிறாயா? ஹிஹி! சுருட்டு பிடிக்கிறாங்க தான்! ஆனா அது ஒலக நன்மைக்குப் பிடிக்கறாங்களா-ன்னு தெரியாது! :))

  ReplyDelete
 29. //Raghav said...
  பெருமாள் சிவனிடம் கேட்ட கேள்விகள்னு சொல்லிருக்கீங்க.. ஏன் பெருமாளுக்கு விடை தெரியாதா?? பெருமாளுக்கே விடை தெரியாதா கேள்விகளா இவை?//

  ஹிஹி! சில பேரு ஹரி வினாக்களா, அறி வினாக்களாக் கூடக் கேட்பாங்களாம்! அது போல இது-ன்னு வச்சிக்கோயேன்! :)

  நர-நாராயணனாய்த் தோன்றி பெருமாள் கேட்ட கேள்விகள் இவை!
  இதையே தான் சங்கரர் மனத்திலும் தோன்றி, பத்ரீநாத் பெருமாள் கேட்டார்!
  பின்னர் கோவிந்தபாதர் என்னும் குருவினைச் சங்கரர் அடைந்த போது, தான் யார்-ன்னு தெரியவில்லை என்று பாட்டாகப் பாடி, கேள்விக்கான விடைகளை அவரே சொல்லீட்டாரு!

  தெரியவில்லை-ன்னு சங்கரர் சொன்னதே, தெரிவிச்ச பதில்களாய் ஆயிருச்சி! அதான் சிறப்பு!

  ReplyDelete
 30. //Raghav said...
  பாடல்கள் கேட்கப் பிரமாதம்.. கேட்டுக் கொண்டே உங்காள் பதிவைப் படிக்க இனிமையாக இருந்தது..//

  நான் அருணகிரி ஸ்டைலில், "படிங்கோள்"-ன்னு சொன்னா, நீ "உங்காள்"-ன்னு எசப்பாட்டு பாடுறீயா? :)

  //அதனால் திரும்பவும் பதிவை மட்டும் படிச்சேன்//

  ஹிஹி! நீ ஷட்கத்தை மீள் வாசித்த புண்ணியம் நிகழ்காலத்தில் அவர்களையே சேரட்டும்! சிவோஹம், சிவோஹம்!

  ReplyDelete
 31. Raghav said...
  // படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :)//

  அப்போ நின்னுகிட்டே தூங்கினா ?//

  என் பதிவு! :)))

  ReplyDelete
 32. //Srivats said...
  KRS thanks a load for writing about this song//
  he he! Any time for you, Srivats! :)

  //I have had blissful meditations with tears in my eyes listening to these songs.//
  Yes...songs are too good! More than the songs, I like the chant of Bombay Jayashree!
  Blissful meditations always start with filling shivam in eyes and heart! :)

  //I have profound respect for your views and thats why I have asked you to write//
  Thodaa...respect-aa? adinga! athellam onniyum venaam! :)

  //I am glad to know the full meaning of the song today. Shivohum meaning clarification is brilliant!//
  Sivo-Aham = Sivoham! As simple as that :)

  //I feel all are one. Be it shiva or rama god is one. god comes to us in different forms only according to our wish//
  Of course yes! bedhaa bedham is human not divine! :)
  If our wish is vedam, we get vedam!
  If our wish is bedham, we get bedham! :)
  எம்பெருமான் நிலைக் கண்ணாடி போல! அசுரத்தனமாய் பார்த்தால் அசுரனாத் தெரிவான்! வாத்சல்யமாய்ப் பார்த்தால் தாயாத் தெரிவான்! என்னைப் போல காதலாய்ப் பார்த்தால்?...ஹிஹி! :))

  //On this shravanam he has come to you in shiva's form for you have called him heart and soul with love//
  :)
  சிவ அன்பு என்பது என்றுமே இனிப்பது! சிவானந்தம்-ன்னே பேரு! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?-ன்னு, பெருமாள், ஈசன் மேல் வைத்துள்ள அன்பை, மாணிக்கவாசகர் சொல்லுவாரு! :)

  //I bless you with loads of shivan energy! Engum neraindha eesan ungal edhayathilum nirayttum!
  Have a beautiful life!//
  Wow! I am blessed!
  Thank you Guru Maharaj! :)
  Dankees Sri! :))
  I am glad, I did this post, on your pretext!

  ReplyDelete
 33. //நிகழ்காலத்தில்... said...
  சரியாக சொன்னீர்கள், வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்,
  சொல் ஒன்று, இப்போது என்னால் அதுதான் முடிகிறது//

  ஹிஹி! செயல் எல்லாம் பெருசா ஒன்னும் இல்லீங்க! சொல்வதின் படி நின்றாலே போதும்!
  செயல் செய்ய வேண்டும் என்ற தங்களின் விழைவை ஈசன் அருள அடியேன் வேண்டல்கள்!

  //மற்றபடி தங்களின் சிவம் குறித்தான கருத்தும், என் கருத்தும் இணையும் புள்ளி சற்று தள்ளி இருக்கும் போல இருக்கிறது//

  :)
  இணையனும் என்ற அவசியமே இல்லை!
  பிரிவில்லை! இணைவில்லை! சிவோஹம்! சிவோஹம்!

  நன்றி நிகழ்காலத்தில்...
  தாங்களுடன் உரையாடியதின் வாயிலாக, மேலும் பல சிவ முத்துக்கள் வெளிப்பட்டன!
  எங்கும், யாரையும் "நீங்காதான்" தாள் வாழ்க!
  நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

  ReplyDelete
 34. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...

  Raghav said...
  // படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :)//

  அப்போ நின்னுகிட்டே தூங்கினா ?//

  என் பதிவு! :)))//

  படிச்சுக்கிட்டே தூங்கினா என் பதிவு :))

  ReplyDelete
 35. //நிகழ்காலத்தில்... said...
  படிச்சுக்கிட்டே தூங்கினா என் பதிவு :))//

  ஹிஹி! நடைமுறைகளை மட்டுமல்ல, என்னைய நானேவும் கிண்டல் பண்ணிப்பேன்! :)
  அதுவும் சிவோஹம் சிவோஹமே!

  "தூங்காமல் தூங்கிச்" சுகம் பெறுவது எக்காலம் என்பதே தாத்பர்யம்! :)

  ReplyDelete
 36. உங்க புரிதல் எப்படியோ, எனக்கு எந்த வகை விளக்கம் புரிந்திருக்கிறதோ அந்த வகையில் நிர்வாண ஷட்கத்தை விளக்கியிருக்கிறீர்கள் இரவி. இராமகிருஷ்ணரும் தொடக்கத்தில் 'தாஸோஹம்' என்று தியானிக்கத் தொடங்கி நாளாவட்டத்தில் அது தானாக 'ஸோஹம்' என்று ஆகும் என்று சொன்னதாக நினைவு. பந்தியைப் பற்றி சொன்னதில் அது நினைவுக்கு வந்தது.

  மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
  தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
  ஊழ் வினையும் வாழ்வினையும்.....

  என்று ஏதொ ஒரு பாட்டில் இந்த ஐந்து கேள்விகளும் வருகிறதே. இதற்கு 'அர்த்த பஞ்சகம்'ன்னு கூட பெயர் சொல்லுவாங்க இல்லை? :-)

  நிகழ்காலத்தில் ஐயாவோட முதல் பின்னூட்டத்துல எல்லா கேள்விகளையும் நல்லா கேட்டுக்கிட்டே வந்தார். ஆனால் கடைசியிலே 'பெருமாள்', 'சிவன்', 'தூரம்' என்று ஒரு வார்த்தையைப் போட்டு பெரும் குழப்பத்தை என் மனசுல ஏற்படுத்திட்டார். அதெப்படி பெருமாளுக்கு பரிச்சயமாக இருக்கும் அதே நேரத்தில் சிவனுக்குத் தூரமாக இருக்க முடியும் என்று புரியவில்லை. இராகவுக்கு அந்த வரியைப் படிச்சவுடனே சிரிப்பு வந்ததுன்னா எனக்கு சிரிப்போட குழப்பமும் வந்திருக்கு. :-)

  ReplyDelete
 37. //குமரன் (Kumaran) said...
  நிகழ்காலத்தில் ஐயாவோட முதல் பின்னூட்டத்துல எல்லா கேள்விகளையும் நல்லா கேட்டுக்கிட்டே வந்தார். ஆனால் கடைசியிலே 'பெருமாள்', 'சிவன்', 'தூரம்' என்று ஒரு வார்த்தையைப் போட்டு பெரும் குழப்பத்தை என் மனசுல ஏற்படுத்திட்டார். அதெப்படி பெருமாளுக்கு பரிச்சயமாக இருக்கும் அதே நேரத்தில் சிவனுக்குத் தூரமாக இருக்க முடியும் என்று புரியவில்லை. இராகவுக்கு அந்த வரியைப் படிச்சவுடனே சிரிப்பு வந்ததுன்னா எனக்கு சிரிப்போட குழப்பமும் வந்திருக்கு. :-)//

  ஹிஹி!
  வேணாம் குமரன்! இத்தோட விட்டுருவோம்! நிகழ்காலத்தில் ஐயா ஒரு உணர்ச்சியில் அப்படிச் சொல்லிட்டாரு-ன்னு எடுத்துக்கிட்டு, இதுக்கு மேல இதைப் பத்தி நாம யாரும் பேச வேணாம்!

  ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
  பெருமாளும் ஈசனும் ஒன்னாச் சேர்ந்து வரும் அழகுக் காட்சியைப் பதிவிலும் சொல்லியுள்ளேன்! அதைத் தியானிப்போம்! :)

  ReplyDelete
 38. //குமரன் (Kumaran) said...
  உங்க புரிதல் எப்படியோ, எனக்கு எந்த வகை விளக்கம் புரிந்திருக்கிறதோ அந்த வகையில் நிர்வாண ஷட்கத்தை விளக்கியிருக்கிறீர்கள் இரவி//

  தங்கள் எண்ணம் அடியேன் எழுத்து!
  கூடல் குமர நியமனாதிகாரம்! :)

  //இராமகிருஷ்ணரும் தொடக்கத்தில் 'தாஸோஹம்' என்று தியானிக்கத் தொடங்கி நாளாவட்டத்தில் அது தானாக 'ஸோஹம்' என்று ஆகும் என்று சொன்னதாக நினைவு//

  ஆமாம்!
  இராம கிருஷ்ணரும், இரமணரும் ரொம்ப அழகா சரணாகதி பத்திச் சொல்லி இருக்காங்க! அப்பறமா பதிவிடணும்!

  //மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
  தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
  ஊழ் வினையும் வாழ்வினையும்.....//

  புதசெவி ப்ளீஸ்! :)

  //என்று ஏதொ ஒரு பாட்டில் இந்த ஐந்து கேள்விகளும் வருகிறதே. இதற்கு 'அர்த்த பஞ்சகம்'ன்னு கூட பெயர் சொல்லுவாங்க இல்லை? :-)//

  அர்த்த பஞ்சகமா? அப்படீன்னா? :)
  அடியேன் சிறிய சிறிய ஞானத்தன்!

  அந்த ஐந்து கேள்விகளும் நரன் நாரணனைக் கேட்டவை! பத்ரீ தலத்தில் அதற்கான முதல் நிலை விடைகள் சொல்லப்பட்டன!
  அதைத் தான் சங்கரரிடம் பத்ரீநாதன் கேட்க, சங்கரர் தம் குருவிடம் கேட்க, குருவோ சங்கரர் யார் என்று விசாரிக்க, இந்த ஆத்ம ஷட்கம் எழுந்தது!

  ReplyDelete
 39. //உங்க புரிதல் எப்படியோ, எனக்கு எந்த வகை விளக்கம் புரிந்திருக்கிறதோ அந்த வகையில் நிர்வாண ஷட்கத்தை விளக்கியிருக்கிறீர்கள் இரவி//

  Forgot to continue this comment. Here is the continuation.

  ஆனால் உண்மையிலேயே இது தான் ஆதிசங்கரரின் பாடலுக்கான பொருளா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. நமது புரிதல் விதப்பொருமைப் புரிதல்; ஆனால் ஆதிசங்கரரின் தத்துவமோ அல்லிருமைத் தத்துவம். அதனால் தான் அவரது பாடலுக்கு விதப்பொருமைப் புரிதலைச் சொல்லுதல் சரிதானா என்று ஐயம். :-)

  ReplyDelete
 40. //ஆனால் உண்மையிலேயே இது தான் ஆதிசங்கரரின் பாடலுக்கான பொருளா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. நமது புரிதல் விதப்பொருமைப் புரிதல்;//

  நமது-ன்னு என்னை உள்ளாற இழுத்தா எப்படி குமரன்? :)

  //ஆனால் ஆதிசங்கரரின் தத்துவமோ அல்லிருமைத் தத்துவம். அதனால் தான் அவரது பாடலுக்கு விதப்பொருமைப் புரிதலைச் சொல்லுதல் சரிதானா என்று ஐயம். :-)//

  ஹிஹி! அது
  * அத்வைதமோ (அல்லிருமை)
  * விசிஷ்ட அத்வைதமோ (விதப்பொருமை)

  பாடலின் மொழியாக்கத்தில் நான் கை வைக்கவில்லையே! பார்த்தீர்களா? சங்கரர் கருத்துக்கு ஒட்டினாற் போலத் தான் ஆக்கி உள்ளேன்! அப்படியெல்லாம் மாற்றத் துணிய மாட்டேன் குமரன்! :)

  சிவோஹம் = சிவ+அஹம் என்பதற்கான விளக்கத்தை மட்டுமே, அடியேன் புரிந்து கொண்ட வண்ணம் முன் வைத்தேன்!

  ReplyDelete
 41. @குமரன்
  உடையவரும் இதே போல் ஸ்ரீ பாஷ்யத்தில் செய்வார்!
  முதலில் அத்வைதக் கருத்துக்களையும் எல்லாம் ஒன்றாக விளக்கிச் சொல்லி விடுவார்! படிக்கறவங்களுக்கு, அட, இவ்வளவு சூப்பர் விளக்கமா-ன்னு கூடத் தோனும்! :)

  அப்புறம் தான் ஒவ்வொன்றா, அந்த விளக்கத்தில் உள்ள குறை நிறைகளை எடுத்துச் சொல்லி, நிலை நாட்டுவார்!

  அதற்காக அத்வைத விளக்கத்தில் கை வைக்க மாட்டார்!
  தன்னோட விளக்கத்தில் தான் கை வைப்பார்!
  என்னமோ தெரியலை! அவரோட அந்த "நேர்மை" எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!

  ReplyDelete
 42. அப்ப உங்க புரிதல் விதப்பொருமைப் புரிதல் இல்லையா? அப்படித் தானே உங்க சிவோஹம் விளக்கம் சொல்லுது. அதனால தான் உங்களையும் கூட சேர்த்துக்கிட்டேன். :-)

  உண்மை தான். பாடலின் பொருளில் விதப்பொருமை விளக்கம் தரவில்லை தான். ஆனால் மக்கள் சிவோஹம் விளக்கம் மட்டுமே கொண்டு அந்த வேறுபாட்டை அறியாமல் செல்வதற்கும் வாய்ப்புண்டு. அதனால் தான் சில அன்பர்கள் உங்களுக்கும் சிவத்திற்கும் தூரம் என்றும் சொல்கிறார்களோ என்று எண்ணுகிறேன். :-)

  ReplyDelete
 43. கிண்டலைப் பற்றி ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கிண்டல் இன்றி யாரும் எழுதியது கிடையாது; அவரவர் நிலையைப் பொறுத்து சில கிண்டல்கள் மன வருத்தம் ஏற்படுத்துகின்றன; சில மனவருத்தம் ஏற்படுத்தாதவை போல் தோன்றுகின்றன; மற்றவர்களுக்கு அவை மன வருத்தம் ஏற்படுத்தலாம்.

  தெய்வத்தின் குரல் தொகுதி நூல்களைப் படிக்கும் போது ஆசாரிய தேவர் எத்தனை இடங்களில் கிண்டல் தொனியுடன் பேசியிருக்கிறார் என்று கவனிக்கலாம்; வைணவர்களையும் சைவ சிந்தாந்திகளையும் வட பகுதி சமயங்களைச் சார்ந்தவர்களையும் கிண்டல் செய்வார். அவர் பேசும் அல்லிருமைத் தத்துவத்தை விளக்க அந்தக் கிண்டல்களை ஒரு வழியாகக் கொள்கிறார் என்று படித்தால் புரியும்; ஆனால் அப்படி எடுத்துக் கொள்வது அல்லிருமைத் தத்துவக்காரர்களுக்கும் ஆசாரியரை மதிப்பவருக்கும் வேண்டுமானால் எளிதாக இருக்குமே ஒழிய கிண்டல் செய்யப்படுபவர்க்கு அது எளிதாக இருக்காது; அவர்கள் மனம் வருந்தவே செய்யும். ஆனால் பரமாசாரியர் நூல் முழுக்க மீண்டும் மீண்டும் அந்த வழியைப் பின்பற்றுவதைக் காணலாம்; அப்போது அவருக்கு அத்வைத கருத்தை முன் வைப்பதே முதன்மை நோக்கமாகத் தெரிகிறது மற்றவர் மனம் புண்பட்டாலும் சரியே.

  இராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவரின் சிறுகதைகளிலும் இப்படிப்பட்ட கிண்டல்கள் பலவற்றைக் காணமுடியும். எடுத்துக்காட்டுக்கு நாராயண நாமத்தைக் கேட்க விரும்பாத வீரசைவர் ஒருவர் காதில் மணியைக் கட்டிக் கொண்டு எப்போதெல்லாம் கோவிந்த நாமம் சொல்லப்படுகிறதோ அப்போதெல்லாம் தலையையாட்டி மணிகளை ஒலித்துக் கொள்வதைச் சொல்வார்.

  இதே வகையில் இன்றைக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன் சுட்டி இதோ: http://jeyamohan.in/?p=3741

  ReplyDelete
 44. //குமரன் (Kumaran) said...
  அப்ப உங்க புரிதல் விதப்பொருமைப் புரிதல் இல்லையா? அப்படித் தானே உங்க சிவோஹம் விளக்கம் சொல்லுது//

  ஓ...அப்படியா? நான் ஏதோ சும்மா சொன்னேன்! அது தான் விதப்பொருமை குறிக்கும் மையப் பொருளா குமரன்? ஆகா! :)

  //உண்மை தான். பாடலின் பொருளில் விதப்பொருமை விளக்கம் தரவில்லை தான். ஆனால் மக்கள் சிவோஹம் விளக்கம் மட்டுமே கொண்டு அந்த வேறுபாட்டை அறியாமல் செல்வதற்கும் வாய்ப்புண்டு//

  இப்படியெல்லாம் ஒவ்வொன்னும் பாத்துக்கிட்டு இருந்தா பதிவே எழுத முடியாது! விடிஞ்சிரும்! :)
  அதுக்குத் தான் பின்னூட்டம் இருக்கே குமரன்! அப்படி யாரேனும் நினைத்து விடுவார்களோ என்று எண்ணினால், கடமை உணர்வுடன் , அல்லிருமை மக்கள், இதைத் தாராளமாகப் பின்னூட்டத்தில் எழுப்பி விளக்கம் பெறலாமே! அடியேன் பதிவில் தான் கருத்துக்கும் கேள்விக்கும் தடையே இல்லையே!

  //அதனால் தான் சில அன்பர்கள் உங்களுக்கும் சிவத்திற்கும் தூரம் என்றும் சொல்கிறார்களோ என்று எண்ணுகிறேன். :-)//

  ஹிஹி! அதெல்லாம் ஒன்னுமில்லை!

  இவ்வளவு விஷயம் தெரிஞ்சி, புரிதல் இருக்குறவங்க...
  "உனக்கும் பெருமாளுக்கும் கிட்ட, உனக்கும் சிவத்துக்கும் தூரம்"-ன்னு எல்லாம் முதற்கண் பேசவே மாட்டாங்க! :)
  கருத்தைக் கருத்து அளவில் மட்டுமே உரையாடுவார்கள்! தனிப்பட்ட மனிதர்களை இழுத்துக் கொண்டு வரமாட்டார்கள்! சிவோஹம்!

  ReplyDelete
 45. //குமரன் (Kumaran) said...
  கிண்டலைப் பற்றி ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கிண்டல் இன்றி யாரும் எழுதியது கிடையாது;//

  ஹிஹி!
  நான் தான் பெருமாளையும், என்னையும் கூட நானே கிண்டல் பண்ணிக்கறேனே, குமரன்! :)
  இங்கிட்டு, சில மக்களுக்கு, யாரு பண்ணாலும், நான் பண்ணக் கூடாது-ன்னு அதீத அதிகாரம், உரிமை எடுத்துக் கொள்ளல்! :)

  ஒன்னும் மட்டும் சொல்லிக்கறேன்!
  கிண்டல் என்பதை ஒருவரின் பெயர் குறிப்பிட்டு, தனிப்பட்ட முறையில் பண்ணா, அப்போ சொல்லுங்க! தப்பு!

  ஒரு கருத்தையோ, வழக்கத்தில் உள்ள நடைமுறையோ, அதன் போலித்தனத்தையோ, கொஞ்சமே கிண்டல் தொனிக்க எழுதும் போது, அதை எல்லாம் எடுத்துக்கிட்டு வந்தா, ஒன்னும் பண்ண முடியாது! I am Sorry!


  //தெய்வத்தின் குரல் தொகுதி நூல்களைப் படிக்கும் போது ஆசாரிய தேவர் எத்தனை இடங்களில் கிண்டல் தொனியுடன் பேசியிருக்கிறார் என்று கவனிக்கலாம்; வைணவர்களையும் சைவ சிந்தாந்திகளையும் வட பகுதி சமயங்களைச் சார்ந்தவர்களையும் கிண்டல் செய்வார்//

  ஹிஹி!
  காஞ்சி மாமுனிவர்! மகான்! பர்சனல் வாழ்விலும் ஒழுக்கம் கடைப் பிடித்தவர்!
  அன்னாரின் கிண்டல் ஸ்டைலுக்கு இங்கிட்டு எவனையாச்சும் வாய் தொறக்கச் சொல்லுங்க பார்ப்போம்! பேச மாட்டார்கள்! :)

  * தமக்கு ஒரு நீதி!
  * தமர்க்கு ஒரு நீதி!
  * மத்தவனுக்கு எல்லாம் இன்னொரு நீதி! :)

  சரணாகதி என்ன MTR இன்ஸ்டன்ட் மசாலா மிக்ஸா?-னு கேட்கும் போது, கோச்சிக்கிட்டேனா என்ன? நானும் உடன் சேர்ந்து தானே சிரித்தேன்? :)

  ஆனா, இராமகிருஷ்ணர் சொன்ன ஜலஸ்தம்பம் செய்ய முடியுமா? கதையை அடியேன் சொன்ன போது மட்டும் பொத்துக்கிட்டு வருது! :)

  ஸ்ரீரங்கம் கோயில் சாவியை இராமானுசர் சாதுர்யமா வாங்கித் தமிழும் சீர்திருத்தமும் உள்ளே கொண்டு வந்ததைப் பற்றிச் சொல்லும் போது...
  அதை, கர்மானுஷ்டானம் பண்ணியதால் தான் சாவியே கிடைச்சுது-ன்னு எழுதும் போது...

  பதிவில் அப்படிச் சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு!
  பின்னூட்டத்தில் கருத்தைத் கருத்தாகத் தெளிவுபடுத்த வாசகர்களுக்கும் உரிமை இருக்கு-ன்னு சொன்னதுக்கு, எம்புட்டு நாடகம் நடந்திச்சி! யப்பா!

  இதுக்கெல்லாம் மனசாட்சி வேணும் குமரன்! விடுங்க!

  எம்பெருமான் உள்ள உகப்புக்கு இல்லாமல்...
  ஆயிரம் ஆத்திகம் பேசி என்ன? நாத்திகம் பேசி என்ன?

  சும்மா பாட்டு, ஸ்லோகம், அலங்காரம், பூஜா புனஸ்காரம், சடங்கு-ன்னு மட்டும் எழுதிட்டு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தான்!
  எம்பெருமான் உள்ள உகப்புக்கு தம்மை அமைச்சிப்போம்! வரும் தலைமுறைக்கும் எளிமையாகக் கொண்டு கொடுப்போம்! தமர் உகந்த உருவம் எல்லாம் அவன் உருவம் தானே-ன்னு லோக்கலா உகந்து எழுதி, எதுக்கு பொல்லாப்பு? :)

  காஞ்சி மகா ஸ்வாமிகள் எழுதினா - அப்போ "மூச்"! :)
  அடியோங்கள் அவரைப் பின்பற்றி எழுதினா = "மனக்கசப்பு" :)

  இதுக்கெல்லாம் மனசாட்சி வேணும்! இதுக்கு மேல நான் ஒன்னும் பேசலை குமரன்! :)
  சும்மா இரு சொல்லற என்றலுமே
  அம் மா பொருள் ஒன்றும் அறிந்திலனே! ஸ்ரீ ஹரீ:ஓம்!

  ReplyDelete
 46. I was searching for articles about Manavala ma munigal and ended up in your blog! I ve been reading about Azhwarkal in Mrs Sambasivam's blog. Ji!! What a treasure hunt (2007 to 2009 ) you have!!.Amazing.Thank you
  Re: this post
  Hamsa soham Soham hamsaha
  Saha- IT athu
  Aham - Naan
  To understand this one has to practice a lot
  First step is mindfullness. Next is to get immersed into it. Last Yath bhavam that bhavathi. Ethu bhavathilo adhuvai maruvathu. Athu thaane varum:)) I thought of writing in Tamil font which I downloaded today. Naan ithai naalai thiruppaliezhchi padaravaraikkum thattindu iruppen pola irukku. Asirvathammappa.

  ReplyDelete
 47. //சிவோ அஹம்! சிவே அஹம்!//

  சிவோஹம் என்பது சிவோ அஹம் என்று பிரியாது.
  சிவ: + அஹம் - சிவோஹம்

  சிவம் -மங்களம்

  “சிவ: சிவோபூத்” - மஹாபாரதம்
  மேலும் விரித்துச் சொல்ல ஆசை;
  அன்பர்கள் பிணங்க இடமுள்ளது.

  விளக்கத்தை ரசித்துப் படித்தேன்.

  தேவ்

  ReplyDelete
 48. ஆமாம்!
  இராம கிருஷ்ணரும், இரமணரும் ரொம்ப அழகா சரணாகதி பத்திச் சொல்லி இருக்காங்க! அப்பறமா பதிவிடணும்!

  eppothu intha pathivu,
  atharkaga kathirukkiren
  Anbudan
  rasigan

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP