SatelliteCity=தமிழ்ப் "படுத்தல்கள்" & வேப்பிலை!
இந்தச் சுருக்கமான பதிவு, இரண்டு கோள்களின் பாற்பட்டது!
1. தமிழாக்க முயற்சிகள்
2. பிழையான ஆக்கத்தை எதிர்க்கிறேன்-ங்கிற போர்வையில்...தமிழ் முயற்சிகளை எப்பமே கும்மியடித்து நகையாடும் பழக்கம்:(
அண்மையில்.....தமிழக அரசின், திருமழிசைத் திட்டம்!
சென்னைக்கு வெளியே ஒரு Satellite City = துணைக்கோள் நகர்!
இன்று ட்விட்டரில்...
அது என்ன "துணைக்கோள்" நகர்? இன்னுமா இந்தப் "படுத்தல்"?

"உப நகரம்"-ன்னு சொன்னா என்ன? ஊசியாப் போகும் நகரம்?
.......என்று துவங்கிற்று!
கூடவே...தமிழ் ஆர்வலர்கள்-ன்னாலே, "படுத்தல்-ப்பா; தமிழாக்கியே நம்மள படுத்தறா", "கொள்ளை", "இவிங்கள ஜெயில்ல போடணும்" என்ற "ஆசீர்வாதம்":)
=================================
முடிப்பாக...
@elavasam: ஒரு தடவை ரெண்டு தடவை தப்பா மொழிமாற்றம் பண்ணினா நிதானமாப் பேசலாம். "தமிழார்வம் தலைவிரிச்சாடி" எப்பவுமே படுத்தினா என்ன பண்ண? -ன்னு கேட்க...
@losangelesram: பலே! இப்படி ஓவராத் தமிழ் தலைவிரித்து ஆடுவதால் தான் அவ்வப்போது வேப்பிலையைக் கையில் எடுக்க வேண்டி இருக்கு! - என்று முடித்தார்!
=================================
வேப்பிலை தேவையா?
இந்த மொழியாக்கம் பிழையானதா?
....இல்லை.."பிழை" போல் காட்டி, தமிழ் முயற்சிகளுக்கு அடிக்கப்படும் கும்மியா?
செல்வி ஜெயலலிதா அவர்களை முதல்வராகக் கொண்ட...
மு.கு 1: Twitter-இல் #tag/filter போட்டேன்! ஆனால் பதிவில் அவ்வசதி இல்லை! எனவே நீங்க படிச்சித் தான் ஆகணும்! :)
பேசுபொருளுக்கு வருவோம்!
* Satellite City = உப நகரம்-ன்னு சொல்ல வேணாம்! அது வடமொழி!
விஞ்ஞான யுகத்துக்கு முன்னாடி, Shakespeare/Keats போன்றவர்கள், Satellite-ன்னு எழுதினாங்களா என்ன?
இல்லை....சிற்றரசர்களை = (A place under the domination) Satellite Kings-ன்னு சொன்னாங்களா?
இது ஒரு நல்ல வாய்ப்பு, தமிழில்=காரணப் பெயர்களின் சுவை அறிய.....எனவே மேற்கொண்டு படியுங்கள்!
கோள் = வெறுமனே planetary "சமாச்சாரம்"-ன்னு நினைச்சிடாதீங்க!
"கொள்" என்பதில் இருந்து => "கோள்"!
1. வேண்டு-கோள்
2. கால்-கோள்
3. பொருள்-கோள்
* பறப்பதால் = பறவை,
* செல்வதால் = செல்வம்...
* அதே போல் "கொள்வதால்" = கோள்!
காரணப் பெயர்களின் தமிழ் அழகு இப்போ தெரிகிறது அல்லவா?
அதற்காகவே இந்த இடுகை! தமிழ் = இனிமை!
Satellite City = துணைக்கோள் நகர்
.....என்று தமிழக அரசு ஆக்கியது, நயமான மொழியாக்கமே!
Fly Over = "மேலே பற"-ன்னு ஆக்கலை! "மேம்பாலம்" என்று தான் ஆக்கம்!
சில சமயங்களில், எங்கோ ஓரிருவர், பிழையாக ஆக்கி இருக்கலாம்! "Literal"-ஆக ஆக்கி இருக்கலாம்!
"நகரேஷூ காசி"-ன்னுட்டா...."திவ்யமா" இருக்கும்!
"நகரேஷூ"கிட்ட இருந்து, தமிழ், தானம் வாங்கிக்குச்சி-ன்னு சொல்ல எனக்கும் ஆசை தான்! ஆனா....ஆனா......

தமிழக அரசின் மொழியாக்கம் = பிழையான ஆக்கமா-ன்னு பார்ப்போமா?
மு.கு 1: Twitter-இல் #tag/filter போட்டேன்! ஆனால் பதிவில் அவ்வசதி இல்லை! எனவே நீங்க படிச்சித் தான் ஆகணும்! :)
மு.கு 2: தமிழ் இலக்கணம் 'ஷொல்லிக்' குடுக்குறேன் என்ற பேரில், தமிழ் மொழியையே எள்ளல் செய்யும் பதிவர்= @elavasam! இந்தக் கும்மியில், அவரும் 'ஜம்'மென்று கலந்து கொண்டார்! :)
பேசுபொருளுக்கு வருவோம்!
* Satellite City = உப நகரம்-ன்னு சொல்ல வேணாம்! அது வடமொழி!
* துணை நகர், புற நகர், சேய் நகர், குறு நகர் ன்னு விதம்விதமாச் சொல்லலாம் தான்!
* துணைக்கோள் நகர் = அதுவும் பிழையே இல்லை! herez = wiki defn!
Satellite City = English-இல் நெருடாதது,
துணைக்கோள் நகர் = தமிழில் மட்டும் ஏனோ நெருடுது!
'உப நகரம்'-ன்னு ஆக்கினால், அப்போ நெருடலையாம்! :)
வெறுமனே 'ஜல்லி' அடிக்காமல், @elavasam, நல்ல ஒரு வாதத்தை முன் வைத்தார்! அதாச்சும், ஆங்கிலத்தில்...
*Satellite = Outer Space Object-ஐ மட்டும் குறிக்காதாம்!
*Satellite = A place under the domination/influence of another-உம் குறிக்குமாம்!
அதனால் Satellite City = ஆங்கிலத்தில் சரி! ஆனா, தமிழில் தவறாம்!
நல்ல வாதம்! இதோ ஆங்கில அகராதி, பார்த்துக்கோங்க! "Satellite" is relatively a new term, used in English!
* துணைக்கோள் நகர் = அதுவும் பிழையே இல்லை! herez = wiki defn!
Satellite City = English-இல் நெருடாதது,
துணைக்கோள் நகர் = தமிழில் மட்டும் ஏனோ நெருடுது!
'உப நகரம்'-ன்னு ஆக்கினால், அப்போ நெருடலையாம்! :)
வெறுமனே 'ஜல்லி' அடிக்காமல், @elavasam, நல்ல ஒரு வாதத்தை முன் வைத்தார்! அதாச்சும், ஆங்கிலத்தில்...
*Satellite = Outer Space Object-ஐ மட்டும் குறிக்காதாம்!
*Satellite = A place under the domination/influence of another-உம் குறிக்குமாம்!
அதனால் Satellite City = ஆங்கிலத்தில் சரி! ஆனா, தமிழில் தவறாம்!
நல்ல வாதம்! இதோ ஆங்கில அகராதி, பார்த்துக்கோங்க! "Satellite" is relatively a new term, used in English!
விஞ்ஞான யுகத்துக்கு முன்னாடி, Shakespeare/Keats போன்றவர்கள், Satellite-ன்னு எழுதினாங்களா என்ன?
இல்லை....சிற்றரசர்களை = (A place under the domination) Satellite Kings-ன்னு சொன்னாங்களா?
"சார்ந்து இருக்கும்" தன்மையால், Satellite என்ற விஞ்ஞானப் பதம்,
விஞ்ஞானம் கடந்து, மற்றதையும் குறிக்கத் தொடங்கி விட்டது ஆங்கிலத்தில்! ஆனா தமிழில் மட்டும்??
துணைக்கோள்-ன்னு நாம தான் "விஞ்ஞானத்தனமா" ஆக்கிட்டோமாம்!
= தமிழாக்குறேன் பேர்வழி-ன்னு கேணத்தனமான ஆக்கம்!
= இந்தத் தமிழ் ஆர்வலர்கள் எப்பமே இப்படித் தான்!:)
"யோவ், நீ லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்கிறயா?"-ன்னு என் மேல ஒரு "அஸ்திரத்தை" ஏவுனாரு இலவச அண்ணன்! :))
விஞ்ஞானம் கடந்து, மற்றதையும் குறிக்கத் தொடங்கி விட்டது ஆங்கிலத்தில்! ஆனா தமிழில் மட்டும்??
துணைக்கோள்-ன்னு நாம தான் "விஞ்ஞானத்தனமா" ஆக்கிட்டோமாம்!
= தமிழாக்குறேன் பேர்வழி-ன்னு கேணத்தனமான ஆக்கம்!
= இந்தத் தமிழ் ஆர்வலர்கள் எப்பமே இப்படித் தான்!:)
"யோவ், நீ லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்கிறயா?"-ன்னு என் மேல ஒரு "அஸ்திரத்தை" ஏவுனாரு இலவச அண்ணன்! :))
இது ஒரு நல்ல வாய்ப்பு, தமிழில்=காரணப் பெயர்களின் சுவை அறிய.....எனவே மேற்கொண்டு படியுங்கள்!
கோள் = வெறுமனே planetary "சமாச்சாரம்"-ன்னு நினைச்சிடாதீங்க!
"கொள்" என்பதில் இருந்து => "கோள்"!
1. வேண்டு-கோள்
2. கால்-கோள்
3. பொருள்-கோள்
4. கருது-கோள்
-ன்னு பல "கோள்கள்" தமிழில் உண்டு! = அதே போல "துணைக் கோள்"!
* "பொருள் கோள்"ன்னு தமிழில் இருக்கு!
= அதாச்சும்... இடத்துக்கு ஏத்தாப் போல, கொண்டு+கூட்டி, பொருள் கொள்வது
= அப்படிப் பொருள் "கொள்வதால்" => பொருள்-கோள்!
அதே போல...
ஒரு பெரும்-அமைப்பை, துணையாகக் "கொள்ளும்" சிறு-அமைப்பு = துணைக் கோள்! => துணை "கொள்ளுதல்" => காரணப் பெயர்!

பெரியாரைத் துணைக்கோடல்-ன்னு திருக்குறளே இருக்கு = பெரியோர்களைத் துணைக் "கொள்வது"
தமிழில் இடுகுறிப் பெயர்களே கொஞ்சம் தான்! பலவும் காரணப் பெயர்களாகவே இருக்கும்!
* உண்பதால் = உண+வு (ஆனா ஆங்கிலத்திலோ eat=verb; food=noun)
* உண்பதால் = உண+வு (ஆனா ஆங்கிலத்திலோ eat=verb; food=noun)
* அவிப்பதால் = அவியல்
* வடுப்பதால் = வடை
* தோய்ப்பதால் = தோசை
* பறப்பதால் = பறவை,
* செல்வதால் = செல்வம்...
* அதே போல் "கொள்வதால்" = கோள்!
காரணப் பெயர்களின் தமிழ் அழகு இப்போ தெரிகிறது அல்லவா?
அதற்காகவே இந்த இடுகை! தமிழ் = இனிமை!
Satellite City = துணைக்கோள் நகர்
.....என்று தமிழக அரசு ஆக்கியது, நயமான மொழியாக்கமே!
Fly Over = "மேலே பற"-ன்னு ஆக்கலை! "மேம்பாலம்" என்று தான் ஆக்கம்!
சில சமயங்களில், எங்கோ ஓரிருவர், பிழையாக ஆக்கி இருக்கலாம்! "Literal"-ஆக ஆக்கி இருக்கலாம்!
ஆனால், இல்லாத ஒன்றை.....ஊதி ஊதிக் கும்மியடித்தே.....
தமிழ் ஆர்வலர்களே இப்படித் தான்...
கேணத்தனமான மொழியாக்கம்...
தமிழாக்கியே நம்மள படுத்தறா...
இவிங்கள ஜெயில்ல போட முடியாதா...
இப்படியெல்லாம் பேசிப்பேசி...
பெயர்ச்சொல் ஆக்கங்கள் = தமிழாக்கங்கள் ஆகாது-ன்னு சொன்ன பிறகும், இவங்கெல்லாம் 'இசுடாலின்' கேஸ்-ப்பா என்று கும்மியடித்து...

மக்களின் மனங்களில், ஒரு வித..."தமிழ் ஒவ்வாமையை உருவாக்குவதில்"
= இந்தக் கும்மிக்குப் பெரும்ம்ம்ம்ம் பங்கு உண்டு!
அதை...அனைவரும் உணர்ந்து கொள்ள வேணும்-ன்னு தான் இங்கே பதிவாக்கி வைக்கிறேன்!
= கும்மியில் மயங்கி விடாதீர்கள்! தமிழுக்கு ஆக்கம் = இனிமைக்கு ஆக்கம் = நமக்கு ஆக்கம்!

இப்படிக் கும்மியடித்தவர்கள்....கடேசீல....
Satellite City! நகரம் = தமிழா? -ன்னும் ஒரு "மாயை"-யை உருவாக்கிட்டாங்க! :)
Satellite City! நகரம் = தமிழா? -ன்னும் ஒரு "மாயை"-யை உருவாக்கிட்டாங்க! :)
"நகரேஷூ காசி"-ன்னுட்டா...."திவ்யமா" இருக்கும்!
"நகரேஷூ"கிட்ட இருந்து, தமிழ், தானம் வாங்கிக்குச்சி-ன்னு சொல்ல எனக்கும் ஆசை தான்! ஆனா....ஆனா......
எட்டுத் தொகை, சிலப்பதிகாரம்... இதுல எல்லாம்..."நன்னகர், கடிநகர், கூடல்நகர்"-ன்னு.........நகர்=தமிழாவே இருக்கு! நான் என்ன செய்ய? :))
ஓவராத் தமிழ் தலைவிரித்து ஆடுது; வேப்பிலையைக் கையில் எடுப்போம் என்பவர்கள்...
சரிப்பா, இனி ஓவரா ஆடாம,"இவிங்களுக்கு" உட்பட்டு மட்டும் தமிழை அடக்கி வாசிப்போம்!
= அப்போது "சர்வாபீஷ்ட ஸித்திரஸ்து! :))
ஓவராத் தமிழ் தலைவிரித்து ஆடுது; வேப்பிலையைக் கையில் எடுப்போம் என்பவர்கள்...
சரிப்பா, இனி ஓவரா ஆடாம,"இவிங்களுக்கு" உட்பட்டு மட்டும் தமிழை அடக்கி வாசிப்போம்!
= அப்போது "சர்வாபீஷ்ட ஸித்திரஸ்து! :))
எனக்குப் புரிஞ்சுதா?? இல்ல புரியலையா?? புரிஞ்ச மாதிரி புரியலையா?? புரியாத மாதிரி புரிஞ்சுதா?? ஒன்னுமே தெரில.... ஆனா, முக்கால் தூக்கத்துல இருந்த என் தூக்கம் மட்டும் போயிடுச்சு.... தெளிவானப்புறம், மீண்டும் வாரேன்.... நன்றி! ;-)
ReplyDelete:))
ReplyDeleteதுணைக்கொள் நகர் என்பதை நேரடி தமிழாக்கமாக தான் நினைத்திருந்தேன்.தெளிவாக்கியமைக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான விளக்கம்.
ReplyDelete[அதுசரி, உங்களைப் பற்றி யாராவது “கோள்” மூட்டினார்களா?!!!]
ஒரு காலத்தில் அவர்கள்தான் எழுத்தைக் கையில் வைத்துக் கொண்டு தமிழன் கலாச்சாரத்தை மாற்றினார்கள். இது நமது காலம்... இனி நாம் கையில் வேப்பிலை எடுத்து அந்தப் பேய்களை ஓட்டுவோம்.
ReplyDelete//எட்டுத் தொகை, சிலப்பதிகாரம்...இதுல எல்லாம்..."நன்னகர், கடிநகர், கூடல்நகர்"-ன்னு.........நகர்=தமிழாவே இருக்கு! நான் என்ன செய்ய?//
ReplyDeleteஅப்போது தமிழும் சமஸ்கிருதமும் வெறுப்புணர்வு இன்றி இரண்டறக் கலந்திருந்தது. தமிழை சர்ஃப் போட்டு துவைத்துப் படுத்தும் தாலிபான்கள் அப்போதில்லை..!
அதுசரி. இப்போது "தமிழ்" எங்கே ஒலிக்கிறது? எல்லாமே "தமில்" தான்! "ழ்" தான் எப்போதோ காணாமல் போய்விட்டதென்றால் தற்போது "ள்"-ளையும் காணோம். "அவர்கல், வருகிறார்கல்" - இப்படித்தான் தமில்கூறும் நல்லுலகமுலுதும் கேட்க முடிகிறது!
திருவாளர் எஸ்.கே
ReplyDelete//அப்போது தமிழும் சமஸ்கிருதமும் வெறுப்புணர்வு இன்றி இரண்டறக் கலந்திருந்தது//
ஓ, அப்படியா! பக்கத்துல இருந்து நீங்க தான் இரண்டறக் கலந்துகிட்டே இருந்தீங்களா?
வெறுப்புணர்வு இல்லாமல் "இரண்டறக் கலந்து" இருந்ததனால் தானா...
* கண்ணகி புதுசா வந்த இந்த சாஸ்திர
சடங்கு எல்லாம் செய்ய மாட்டேன்-ன்னு அடம் பிடிக்குறா? சிலப்பதிகாரம் தெரியுமா? புகார்க் காண்டம் - கனாத் திறம் உரைத்த கதை!
வெறுப்புணர்வு இல்லாமல் "இரண்டறக் கலந்து" இருந்ததனால் தானா...
பின்னாளில், தமிழை "நீச பாஷை"-ன்னு ஆலயங்களிலும், இன்ன பிற மேடைகளிலும் ஒதுக்கி வைத்(தீ)தார்கள்? இன்னிக்கும் தில்லையில் ததிகணத்தோம் போட வேண்டி இருக்கே!
//தமிழை சர்ஃப் போட்டு துவைத்துப் படுத்தும் தாலிபான்கள் அப்போதில்லை..!//
அடேங்கப்பா! என்னவொரு கண்டுபிடிப்பு!
சமஸ்கிருதத்தை, நுழைத்து நுழைத்தே ஒட்ட வைக்கும் தறுதலை தலிபான்களும் அப்போது இருந்ததில்லை!
தலிபான்கள் வன்முறை ஆட்கள்! தங்கள் இட்டத்தை மற்றவர் மேல் ஏற்றுபவர்கள்!
சமஸ்கிருதத்தையும் தமிழ் மேல் ஏற்றுபவர்கள்!
தமிழ் உணர்வாளர்கள் இப்படி எதையும் செய்வது இல்லை!
தமிழை மாற்றார் மேல் ஏற்றுவதும் இல்லை! தமிழைத் தமிழாக இருக்க விடுங்கள் என்று தான் வேண்டுகிறார்கள்!
தமிழ்த் தாலிபானாம்! வந்துட்டாங்க, ஆசியுரை வழங்க!
நீங்கள் ஒரு முறையாவது தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களுக்கு கால பூஜையின்போது சென்றிருந்தீர்களானால் அங்கு தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிபந்தம் போன்றவை தவறாமல் இசைக்கப்படுவதையும் (சிதம்பரம் உட்பட), அதற்காகவே ஓதுவார்களுக்கு பண்டைய காலத்திலிருந்து மானியங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் கண்டிருக்கலாம். ஆனால் பிறமொழி வெறுப்பு என்பதையே மூச்சாகக் கொண்டிருப்பவர்கள் விதண்டாவாதம்தான் பேசுவார்கள்.
ReplyDeleteஆனால் இன்றைய தொலைக் காட்சி "சேனல்"களும், மற்றும் நம் தமிழ் மக்களின் மனத்தை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் திரப்படங்களிலும் தமிழ்(ல்) மிகச் சிறப்பாகத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறது! ஆனால் உங்களைப் போன்றவர்கள்தான் கிரந்த எழுத்தைத் தேடித்தேடி வெள்ளாவி போட்டு வெளுக்கும் சிறப்பான சேவை புரிந்து கொண்டிருக்கிறீர்களே, பாமர மக்கள் அளவில் தமிழ்(ல்) எப்படிப் போனால் என்ன உங்களுக்கு!
தமிழும் சமஸ்கிருதமும் தமிழ் கூறும் நல்லுலகில் இரண்டறக் கலந்திருந்ததற்கான ஆதாரத்தை என் வலைப் பதிவில் 3 ஆண்டுகளுக்கு முன்னமையே காட்டியிருந்தேன். அதன் சுட்டி இதோ: அபிதான கோசம் .
ReplyDeleteஎன் கருத்துக்களுக்கு இடமளித்தமைக்கு நன்றி
எஸ்.கே
//நீங்கள் ஒரு முறையாவது தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களுக்கு கால பூஜையின்போது சென்றிருந்தீர்களானால் அங்கு தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிபந்தம் போன்றவை தவறாமல் இசைக்கப்படுவதையும் (சிதம்பரம் உட்பட)//
ReplyDeleteதேவரீர் தங்களை விட அதிகம் சென்றுள்ளேன்! திருவரங்கத்தில் சாற்று மறையிலும் இடம் பெற்றுள்ளேன்!:)
ஆழ்வார்கள் அருளிச் செயலைக் கருவறையிலேயே ஓத வைத்து, உற்சவங்களில் தமிழ் வேதத்தை இறைவனுக்கும் முன்னால் ஓதி வரச் செய்யும் ஏற்பாடுகளைச் செய்தவர் இராமானுசர்!
தில்லையில் எப்படி ஓதுறாங்க-ன்னு ஊருக்கே தெரியும்! ஆறுமுகச்சாமி ஓதுவார் பட்ட பாடு அறியாததா என்ன?
தில்லைக் கருவறையிலோ, பொன்னம்பலத்திலோ தேவாரங்கள் இல்லை! கீழே ஒரு ஓரமாக, நந்திக்கும் பின்னால், பாவமாக ஓதுவார் ஓதுவார்! \
எங்க கால பூஜா விதானம்-ல்லாம் முடிஞ்சிட்டது! கவர்ன்மென்ட் சொல்லுறா, அதுனால, அப்படி ஓரமா இருந்து ஓதிக்கோங்கோ - என்ற மனோபாவம் தான்!
யாரிடம் பேசுகிறீர்கள்?
ஒவ்வொரு ஆலயத்திலும், தமிழ் நிலைமை என்ன? தமிழ் அர்ச்சனை என்ன?-ன்னு புட்டு புட்டு வைக்க முடியும்! எச்சரிக்கை!
அபிதான கோசமா? நீங்க மூனு வருசத்துக்கு முன்னாடி போட்ட பதிவா?
அபிதான கோசமே 19th CE நூல்! வடமொழி - தமிழ் ரெண்டுத்துக்குமான கலைக் களஞ்சியம்! இரண்டு மொழி இலக்கியங்கள் என்னன்னா-ன்னு தொகுத்துத் தரும் ஒரு நூல்! இன்னிக்கி மலையாள மனோரமா போல! அவ்வளவே!
அதை வச்சிக்கிட்டு, அதான் ஒங்க அசைக்க முடியாத ஆதாரமா?
19ஆம் நூற்றாண்டில் தமிழ் + வடமொழி-க்கு சேர்த்து ஒரு கலைக் களஞ்சியம் எழுதிட்டா..பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் கூட "சம்ஸ்கிருதம்" பேஷா கலந்து தான் இருந்துச்சி-ன்னு அர்த்தம் ஆயிந்தாவண்டி?
சும்மா ஒரு புக்-கை மேற்கோள் காட்டினா எல்லாம் பயந்துருவாங்க-ன்னு நினைச்சிறாதீங்க!
உங்க கும்மிக்கு, தமிழ்த் தாலிபான் என்றும் பேசித் திரியாதீர்கள்!
// தமிழ் மக்களின் மனத்தை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் திரப்படங்களிலும் தமிழ்(ல்) மிகச் சிறப்பாகத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறது!//
ReplyDeleteஓ!
ஆங்கிலம் கலந்து தமிழ் பேசினாலும், அது ஆங்கிலம்-ன்னு மக்களுக்குத் தெரிஞ்சே தான் இருக்கு! ஆங்கிலமும் தமிழை எங்கும் நீச பாஷை-ன்னு அடக்கி வைக்கவில்லை!
கிரந்தமும், சமஸ்கிருதமும் செய்தது என்ன?
எதற்கு தமிழ் எழுத்தில் வந்து ஏறிக் கொள்ள வேணும்? ஆங்கிலம் அப்படித் தான் ஏறுகிறதா?
ஆங்கில மோகமும், கலந்து பேசுவதும் வெறும் பேச்சளவில் தான்!
மக்களிடம் படிப்படியாக எடுத்துச் சொன்னால் மாற்றிக் கொள்வார்கள்!
ஆனால்...இந்த விஷச்செடிகளான சம்ஸ்கிருதக் கலப்பு, கூட இருந்தே, உள்ளேயும் ஏறி, தொன்மத்தையே சிதைத்து விடும்! சங்கத் தமிழிலேயே சம்ஸ்கிருதம் ஒன்னாக் கலந்து இருந்துச்சி-ன்னு பேசறீங்களே! அது போல பேச வைத்து விடும்!
தக்க தரவுகளை முன்வைத்து உரையாடுங்கள் பார்ப்போம்!
//ஆனால்...இந்த விஷச்செடிகளான சம்ஸ்கிருதக் கலப்பு, கூட இருந்தே, உள்ளேயும் ஏறி, தொன்மத்தையே சிதைத்து விடும்! சங்கத் தமிழிலேயே சம்ஸ்கிருதம் ஒன்னாக் கலந்து இருந்துச்சி-ன்னு பேசறீங்களே! அது போல பேச வைத்து விடும்!//
ReplyDeleteஅஹா......ஓஹோ......பேஷ் பேஷ்
இப்படிச் சொன்னால் வடமொழி கலப்பாகிடும், அதனால்
அருமை...மிக நன்று...கலக்கிட்டிங்க.
எஸ்கே சார் அவரோட அந்த கதாப் பதிவில் ஆரியன் திராவிடனெல்லாம் ஆங்கிலேயேன் ஆக்கியவை என்கிறார், அப்படி என்றால் 'ஆர்ய பவனுக்கும், ஆர்ய சமாஜிற்கும்' பெயர் காப்புரிமை வெள்ளைக்காரன் தான் வைத்திருக்கிறானா ? #ஐயம்
//அதுசரி. இப்போது "தமிழ்" எங்கே ஒலிக்கிறது? எல்லாமே "தமில்" தான்! "ழ்" தான் எப்போதோ காணாமல் போய்விட்டதென்றால் தற்போது "ள்"-ளையும் காணோம். //
ReplyDeleteமத்தவா கலக்குறதெல்லாம் ஆங்கில மோகம், நாகரீகப் பேச்சு என்று எடுத்துக் கொண்டாலும்
'ழ்' வராத
இந்தக் கவலையெலலம் அவா 'ஷொன்னாள்', இவா 'ஷொன்னாள், நன்னா 'பேஷினேள்' என்று 'ச'வே இல்லாமல் உரையாடும் கூட்டத்திற்கு சொல்லி திருத்தி இருக்கலாமே எஸ்கே ஐயா.
நயமான பதிவு, நயவன் நான். புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.
ReplyDeleteகோவி.கண்ணன் அவர்களே,
ReplyDelete//அவா 'ஷொன்னாள்', இவா 'ஷொன்னாள், நன்னா 'பேஷினேள்' என்று 'ச'வே இல்லாமல் உரையாடும் கூட்டத்திற்கு சொல்லி திருத்தி இருக்கலாமே எஸ்கே ஐயா.//
உங்களைச் சுற்றியிருக்கும் உங்கள் வயதையொத்த பிராமண நண்பர்களிடம் பேசிப் பாருங்கள். அவர்கள் இப்படித்தான் பேசுகிறார்களா? ஏன் புதைக்கப்பட்ட பிணங்களைக் கட்டியழுகிறீர்கள்? நிகழ் காலத்தில் வாழுங்கள். அத்துணை மொழிகளுமே கலப்புத்தான். இது தவிர்க்க இயலாதது.
வரும் சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாக வழுங்கள். உங்கள் எழுத்தைப் போற்றும் நபர்கள் மனத்தில் வெறுப்பை விதைக்காதீர்கள்.
அன்புடன்
எஸ்.கே
//உங்களைச் சுற்றியிருக்கும் உங்கள் வயதையொத்த பிராமண நண்பர்களிடம் பேசிப் பாருங்கள். அவர்கள் இப்படித்தான் பேசுகிறார்களா? ஏன் புதைக்கப்பட்ட பிணங்களைக் கட்டியழுகிறீர்கள்?//
ReplyDeleteஐயா பெரியவரே, புதைக்கப்பட்ட பிணங்களா ? வாழும் பிணங்களா கீழ்கண்ட வீடியோ இணைப்பை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், விஜய் தொலைகாட்சியில் பக்தி உரை நிகழ்த்தும் 'ஸ்திரி' இந்தக்காலத்தவா, ஸ்பஷ்டமா 'ச' வே இல்லாமல் பிரசங்கம் பண்ணுகிறார் என்னன்னு பார்த்துட்டு செத்தப் பிணம் பற்றிய உங்கள் கருத்தை பிறகு சொல்லுங்கள் http://www.youtube.com/watch?v=YJXtQ2X20-0&feature=related
தமிழுக்கு ஆக்கம் = இனிமைக்கு ஆக்கம் = நமக்கு ஆக்கம்!
ReplyDeleteஅருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்.
நல்ல ஆராய்ச்சி
ReplyDelete//துணைக்கொள் நகர் என்பதை நேரடி தமிழாக்கமாக தான் நினைத்திருந்தேன்.தெளிவாக்கியமைக்கு நன்றி//
ReplyDeleteditto...
துணையாகக் கொள்வதால் துணைக்கோள் நகர் என்பது வாதத்துக்கும் இலக்கணப்படியும் சரியாகவே தோன்றுகிறது. ஆனால், சில கேள்விகளும் எழுகின்றன. தில்லியைச் சுற்றிலும் குர்காவ், பரிதாபாத், காஜியாபாத், நோய்டா ஆகிய பகுதிகள் சாடிலைட் சிடீஸ் என வருணிக்கப்படுகின்றன. இவற்றில் நோய்டா தவிர அனைத்தும் பழைய ஊர்களே. தில்லி விரிவாக இடம் போதாமையால் ஹரியாணாவிலும் உத்திரப் பிரதேசத்திலும் இருக்கும் இந்தப் பகுதிகள் தில்லியை விட பிரமாண்டமாக வளர்ந்துள்ளன. மிக விரைவாக இன்னும் விரிந்து கொண்டே வருகின்றன. தில்லி எங்கே முடிகிறது - துணைக்கோள் நகர் எங்கே ஆரம்பிக்கிறது என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒட்டி இருக்கின்ற இப்பகுதிகள், அரசியல், நிர்வாகம், மாநிலம், ஏன், ஓரளவுக்குப் பண்பாட்டு அளவிலும்கூட வேறுபட்டவை. இவற்றை தில்லியின் துணைக்கோள் நகர் என்று எப்படிக்கூறுவது... ஒருகாலத்தில் தில்லியை ஒட்டி இருப்பதாலேயே இவை முக்கியத்துவம் பெற்றன என்றாலும் இன்று தில்லியை விட பெரிதும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு பார்முலா 1 பந்தயம் நடைபெற்ற கிரேட்டர் நோய்டா. இதை எப்படி தில்லிக்கு துணைக்கோள் நகர் என்பது... மேற்கு நாடுகள் தம்மை முதன்மைப் படுத்தி வளைகுடா நாடுகளை மிடில்ஈஸ்ட் என்பதற்கு ஒப்பானதல்லவா இது... துணைக்கோள் நகர் என்பதற்கு சென்னைக்கு அருகே அமைகிற நகரை மட்டும் வைத்து தமிழ்ப்படுத்தாமல், மேற்கண்ட காரணியையும் கணக்கில் கொண்டு இன்னும் பொருத்தமான பெயர் தேடலாம் என்று தோன்றுகிறது. இதே விஷயத்தை நானும் பல நாட்கள் யோசித்துப் பார்த்தும் சரியான சொல் கிடைக்கவில்லை. துணை நகரை விட இணைநகர் இன்னும் பொருத்தமாக இருக்குமோ...
ReplyDeleteநீங்களும் விடாது மல்லுக் கட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள். செய்யத் தான் வேண்டும்.
ReplyDeleteகேலி செய்பவர்கள் இத்தோடு நிற்காது, கேலியைக் கூட்டிக் கொண்டே போய், தமிழ் ஒழிகிறவரை விடமாட்டார்கள். இவர்களை நிறுத்துவதற்கு ஒரே வழி இடைவிடாத மாற்று இயக்கம் தான்.
கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க.
வாழ்த்துக்கள்.
இராம.கி.
பேச்சு மொழி அந்த ஊருக்கு தகுந்த மாதிரி இருந்து விடட்டும். அழகு. எழுத்து வடிவம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். டொராண்டோவை ற்றோண்டோ ஆக்குவதால் பயன் என்ன? டீச்சரை ர்றீச்சர் ஆக்குவதால், என் ஆசிரியை அடிக்க வருவார். (ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறை கூறவில்லை.) நிறை பெற விளைகிறேன்.
ReplyDeleteஇதில் கொடுமை என்னவென்றால், ப்ரேசென்டேசன் என்று சொல்லாமல் பரதீட்டு என்று தீட்டிக்கொண்டு உள்ளார்கள் சிலர். தமிழ் மீது உள்ள காதல் நகர்ந்து போகிறது.
ஏற்கனவே, சினிமா செய்திகளால் ஜனரஞ்சக ஊடகங்கள் கேட்டு கிடக்கின்றன, இலக்கியம் இல்லை. தரம் குறைவு.
நல்ல வேலை ஜோதிடம், பக்தி போன்ற புத்தகங்களில் இந்த நயவஞ்சகம் இல்லை.
Planet என்பதன் தமிழாக்கம் "கோள்"தானே? இலலையெனில் சரியான சொல்லைத் தாருங்கள் போதும். மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
ReplyDeleteஅந்த கோள் எனும் சொல் எப்படி வந்திருக்கும்? விளக்குங்களேன்…..
அக்கோளை துணையாகக் கொண்டிருப்பது என்று satelliteஐ வரையருப்பது சரியா? ஈர்ப்பினால் satelliteஐ தன்னோடு வைத்திருப்பது கோள்தானே? கோளுக்கு துணையாய் இருப்பதால் துணைக்கோள் எனலாம் என்று சொல்வதுதானே சரி