Monday, January 09, 2017

அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!

நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம்!
"அஹர" முதல எழுத்தெல்லாம் - "ஆதி பகவான்", முதற்றே "லோகம்"

தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskritஇல் தான் தொடங்குறது? பார்த்தேளா? பார்த்தேளா?
*அகர முதல சம்ஸ்கிருதம்!
*ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
அட, தமிழே= சம்ஸ்கிருதம் தான் ஓய்! "ஜமீஷ்" என்பதே "தமீழ்" எ. ஆகியது!:)))

*சம்ஸ்கிருதமே = தமிழில் உள்ள சொற்களுக்கு அடிப்படை!
*தமிழ் உட்பட..இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய்= சம்ஸ்கிருதமே!

*சம்ஸ்கிருதம், தெய்வீகம் நிரம்பிய மொழி; தமிழும் சுமார் தான்; ஆனா சில "மந்த்ர ஸப்தங்கள்" தமிழில் இல்லை! தெய்வாம்சம் இல்லை!

*சம்ஸ்கிருதத்தை, மொழியாய்ப் பார்க்காதீர்கள்; It's a great culture! அதை ஒரு "கலாச்சாரமாய்ப்" பாருங்கள்!
*தமிழை, பற்று கொள்ளாதீர்கள்; It;s just a communication tool; குறுகிய மனசை விரிவு படுத்துங்கள்!

*சம்ஸ்கிருதம், தமிழ்.. இரண்டுமே நம் கண்கள்!அதில், ஒரு கண் மட்டும் சற்றே உசத்தி; ஏனென்றால், அந்தச் சம்ஸ்கிருதக் கண்= பாரதீய தெய்வீகம்!

மேற்கண்டவை, என் சொற்கள் அல்ல!
*சில பிரபலங்கள்,
*பல ஆன்மீக/தெய்வீக ஆட்கள்,
*அக்ஷராதிபதிகள் (I mean.. எழுத்தாளர்கள்)
*பாரதீய தர்ம & ஞான மரபுக் காவலாளிகள்.. சொல்பவையே!

இப்படிச் சொல்வோரின் தனிப்பட்ட சாதிகளை, நாம் ஆராயத் தேவையில்லை!
"சம்ஸ்கிருத பாசம்" மிகுதியாகக் கொண்டவர்கள் யார்? = இது உங்களுக்கே தெரியும்:)

இப்படி, "சம்ஸ்கிருத பாசம்" கொண்டவர்கள் எத்தனை பேருக்கு,
சம்ஸ்கிருதம்= எழுதவும்/ படிக்கவும் தெரியும்? என்பது வேறு கதை!:)

"ஸ்லோகார்த்தம் ஏவ விவரண ஹஸ்தோபி" - இதன் முழுமையான பொருள் என்ன? என்று எனக்கு 5 ஆண்டுகளாய்ச் சொல்ல முடியாம.. இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்காங்க, பல Sanskrit அபிமானிகள்!:)

Sanskrit தெரியாவிட்டாலும், "அங்கே தான் தங்கள் வேர்!" என்று மனத்து ஆழமாக நம்புகிறவர்கள்!
அதனால், அங்கு அதீத பாசங்கள் இயற்கையே! நேரடியாகவும்/ மறைமுகமாகவும் வெளிப்படுத்துவார்கள்!

இருக்கட்டும்! ஆனால்..
*ஒரு மொழி மேல் பாசம் கொள்வது வேறு!
*அதை.. இன்னொரு மொழியில், கள்ளத்தனம் செய்து கலப்பது வேறு!
*கலந்த பின், மூல மொழியின் பெருமையெல்லாம், தங்களுடையதே! எ. தம்பட்டப் பொய்ம்மை வேறு வேறு!



சம்ஸ்கிருதம் = செம்மொழி தான்; மறுப்பே இல்லை!
பாளி/ பிராகிருத மொழியிலிருந்து பலவும் இழுத்துக் கொண்டாலும்,
இன்று, ஒரேயடியா வழக்கு  ஒழிந்து விட்டாலும்,
வெறுமனே பிராமணீய/ மதச் சடங்கு 'பாஷை'யாய் ஒடுங்கி விட்டாலும்,

சம்ஸ்கிருதமும் செம்மொழியே! இதை.. தமிழ் தயங்காது ஒப்புக் கொள்ளும்!

ஆனால், என் மனசு வலி என்னவென்றால்:
சம்ஸ்கிருதத்தை, பிற மொழிகளிலெல்லாம் ஏற்றி ஏற்றிக் கலப்பும் திணிப்பும் செய்கிறார்களே?
குறிப்பாகத் தமிழில்; இது ஏன்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?

ஓவ்வொரு மொழியும் உன்னதமே!
மொழிக்குள்  = "பல தலைமுறை மனிதம்" வாழ்கிறது!
அந்த “மனிதம்” மதிக்கணும்; திணிக்கக் கூடாது!

ஒரு பெரும் தொல்-மொழியின் மரபை, "சிறுமை" செய்து,
//பாத்தீங்களா? உங்க தமிழ் “இலக்கணம்” என்ற சொல்லே = எங்கள் சம்ஸ்கிருத “லக்ஷணம்” தான் டா!//
= ஏன் இந்த மனப்போக்கு???
= எதிர்ப்பது, இத் "திணிப்பை" மட்டுமே!
= எதிர்ப்பது, இத் திணிப்பு செய்வோரை மட்டுமே! எல்லாப் பிராமணர்களையும் அல்ல!

சம்ஸ்கிருதம் தானாய் வளராமல், இன்னொன்றில் ஏறி,
Parasite போல், மூல மொழிச் சொற்களை அழிப்பதால் மட்டுமே = எதிர்ப்பு!


இதைச் சம்ஸ்கிருதம் என்னும் மொழி செய்யவில்லை; அது நல்ல மொழி தான்!
இதை ஆட்களும்/அதிகார அமைப்புமே செய்கிறார்கள்; அதற்கு மட்டுமே எதிர்ப்பு!

(மற்றபடி, என் அன்புக்கினிய ஆசிரியர்/ திருநின்றவூர் கோயில் பட்டர் ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியார் மூலமாக,
நானே சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் அறிவேன்.. ஸாம வேத - சாந்தோக்ய உபநிஷதம் வரை!

அன்று, அன்னார் இட்ட வித்து! 
இன்றும் உதவுகிறது, தமிழைச் சிறுமை செய்யும் பிராமணீய அரைகுறைகளை, தடி கொண்டு நொறுக்க!:)
அமர துருஷ்ட ஸ்வ-விக்ரம! சமர ஜூஷ்ட பிரமிக்ரம)


சரி, நாம் முதல் திருக்குறளுக்கு வருவோம்!
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு
தமிழர்களின் தன்மானம்/பெருமிதம் = இக் குறள்! அதில் கை வைக்கலாமா?

1. அகரம்  2. ஆதி 3. பகவன்  & 4. உலகு
= இந் நான்கு சொற்களும் சம்ஸ்கிருதமா?
= சம்ஸ்கிருதம், தமிழுக்கு இட்ட பிக்ஷையா, முதற் குறள்?
= வள்ளுவர், "தமிழ் ஒரு கண்; சம்ஸ்கிருதம் ஒரு கண்" எ. வாழ்ந்த மஹரிஷியா?

இப்படியெல்லாம் (பொய்) சொல்வது யார்?
 = As usual, காஞ்சிப் (போன) பெரியவா:)

*அவரை முன்னிட்டு
*அவரின் அதீத எளிமை, பக்தி, ஞானம் என்ற போர்வையில்..
*அவரைப் போலவே Sanskrit பாசம் கொண்ட, ஆனால் அவர் போல் Sanskrit அறிவிலா அரைகுறைகள்,
*சமயம் கிடைக்கும் போதெல்லாம், 'விஷத்தைக்' கலந்து கொண்டே இருக்கிறார்கள்!


மேற்கண்டவாள்: தமிழ் + சம்ஸ்கிருதம், இரண்டுமே அறியா அற்ப அறிவிலிகள்!
கீழ்க்கண்டவாள்: சம்ஸ்கிருதம் அறியா விட்டாலும், தமிழ் மட்டுமே கொஞ்சூண்டு பழக்கப்பட்ட எழுத்-தாளர்கள்!
தமிழன்னையை, சரஸ்வதி மாதா ஆக்கும் Projectஇல் இருப்பவர்கள்!



இணையத்தில், இந்தச் சிவப்பு முக்கோண ஆசாமிகளிடம், விழிப்பாகவே இருங்கள்!
நட்பு போல் நடித்து, வேளை பார்த்து.. நச்சுப் பாம்பு போல் கொத்தி விடுவார்கள்!:(

இந்தச் சொக்கன், பாரா, பீயே. கிருஷ்ணன் எழுத்-தாளர்களை விட, 
அந்த அற்ப அறிவிலிகள், @amas32 & @n_shekar போன்றவர்கள் தான் 
= மிகு 'விஷம்'! மிக்க 'அபாயம்'!

ஏனென்றால்.. உங்க கூட நட்பு பாராட்டுவது போல பசப்பி, ஆன்மீகம் பேசுவது போல் நடித்து, "மென் முறையில் விஷம்" ஏற்றும் விற்பன்னர்கள்!
எழுத்தாளர் எ. பீடத்தில் உட்காராது, உங்க கூடவே பழகி, உறவாடிக் கெடுக்கும் Social Virus!

*பின்னவர்களை= அடையாளம் கண்டு கொள்ள முடியும்!
*முன்னவர்களை= நட்பு வளையம் எ. மாயப் போர்வை மறைக்கும்!

தமிழையே சிதைத்தாலும்.. உங்கள் நண்பர்கள் என்பதற்காக, நீங்கள் Adjust செய்து கொண்டு போகிறீர்களே?
ஆனா அவர்களோ, 'பகவத் கீதையில் ஜாதி' என்று ஒரு சொல் சொன்னாலே, நட்பு கூட பாராமல், பொங்கி வருகிறார்களே? ஏன்?

இதான் ஒங்க "நட்பா"?
தமிழையோ/ குறளையோ இப்படில்லாம் சிதைக்காதீங்க! -ன்னு,
உங்களால் அவிங்க கிட்ட சொல்ல முடியலையே? ஏன்?


"இது அவிங்க கருத்து! அவரவர் கருத்து அவர்களுக்கு!" எ. நீங்க Escape ஆக முடியாது!
*அழகில் சிறந்தவர் = ரஜினியா? கமலா? என்றால்..
அப்போ அவரவர் கருத்து! ஒவ்வொருவரின் அழகு அளவுகோல் மாறுபடும்!
*ஆனால் "தமிழ்ச் சிதைப்பு" = அவரவர் கருத்து அல்ல!
அறம் சார்ந்தது! அறத்தின் அளவுகோல் மாறாது!

"ராஜபட்சே கருத்து அவருக்கு! அவர் கருத்து அவர் வரையில் சரி!" என்று
ட்விட்டரில் இந்த Sanskrit கும்பலோடு ஈஷிக் கொள்ளும் ஈழத்து நண்பர்கள் கிட்ட சொல்லுங்களேன் பார்ப்போம்?
வலிக்கும்ல?:( அதே தானே தமிழ்ச் சிதைப்பும்?

என் அன்பு கெழுமிய ஈழம் & தமிழகத் தமிழர்களே,
உங்கள் Self Networking வேண்டி, தமிழை அடகு வைக்காதீர்கள்!

வெறுமனே.. தமிழ்ச் சினிமா இசை, தமிழ் இலக்கியக் கம்பன் என்றெல்லாம் உங்கள் 'சுயம்' பரவ வேண்டி,
அவர்கள் Media பலத்துக்குப் பல் இளித்து, ராஜபட்சே-கர்னல் விநாயகமூர்த்தி முரளிதரன் போல் மாறி விடாதீர்கள்! (கர்னல் கருணா எ. சொல்லை, அதே பேருள்ள நண்பர்கள் நலம் கருதித் தவிர்க்கிறேன்)

யாராயினும்.. தமிழ்ச் சிதைப்பை, பொதுவெளியில் தட்டிக் கேளுங்கள்!

இல்லாவிடின்..உங்களைத் தமிழ் அறம் சூழும்!
பெருஞ்சித்திரனார் அறம்! இட்ட சாபம் முட்டும்!




இனி, பேசுபொருளுக்கு வருவோம்..
அகர முதல = சம்ஸ்கிருதமா? ஆதி பகவன் = சம்ஸ்கிருதமா? 

1. அகரம்  2. ஆதி 3. பகவன்  & 4. உலகு
= தமிழ்ச் சொற்களே என்ற ஆதாரம்/ தரவு தருகிறேன்! இதோ!

அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
பொருள்:
எல்லா எழுத்துக்கும், அகரம் முதல் ஆதல் போல்
எல்லா உலகுக்கும், இறைவன் முதல் ஆகின்றான்

1. முதல் சொல் = அகரம்
அகரம் என்றாலே சம்ஸ்கிருதம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ம் -ன்னு முடிஞ்சா சம்ஸ்கிருதமா?
ழ-வை= ழகரம் என்போம்! அப்போ ழ= சம்ஸ்கிருதமா?:)
உங்களுக்கே தெரியும், ழ= தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து என்று!

அ என்னும் “ஓசை”
முதல் எழுத்தாய்= உலகின் பல மொழிகளிலும் உள்ளது!

அ in Tamizh,
A in English,
Alpha α in Greek,
ā in Latin,
诶 in Chinese,
అ in Telugu,
ಅ in kannada,
അ in Malayalam,
অ in Bengali

கிரேக்கம், இலத்தீன், சீன மொழியில் உள்ள "அ"கரம் கூட= சம்ஸ்கிருதமே என்று சொல்வீர்களா என்ன?:)

தாய்மொழி என்று ஒரு மொழியைப் பழகும் நேரம் வரும் போது,
"அ" என்ற ஒலியே..
உலகெங்கும் முன்னிறுத்தப்படுகிறது! இது எதனால்?

அகர ஓசை= பல பண்பாடுகளுக்கும் முதல் ஓசை!
மாந்தவியலின்.. பழங்குடித் தொல்லியல் ஓசை!
"அ" என்ற ஒலி = ஒலிக்காமலேயே ஒலிக்கவல்ல, உலகப் பொது ஒலி!

ஒரு குழந்தை.. நெட்டொலி தான் முதலில் எழுப்பும்!
தா, மா, பா என்ற 'நெடில்'ஒலிகள் தான், வீட்டுக் குழந்தைகள் முதலில் பழகுவதைக் காணலாம்!
'தாத்தா' வேகமாய் வரும்; ஆனா 'அப்பா' மெதுவாய்த் தான் வரும்:)

ஆனா, அந்த நெட்டொலியிலும், ஒளிந்துள்ள குற்றொலியை அறிவீர்களா?
"அ" ஒலி = உயிர் ஒலி
ஒரு குழந்தை வாயைத் திறக்கும் முன்பே, உடலில் தங்கி விடுகிறது உயிர்ப்பு!

இந்த வரியைப் படிக்கும் போதே, ஏதாச்சும் பேசத் துவங்குங்களேன்! உதடு திறக்க ஆரம்பிங்க, பார்ப்போம்?
நீங்கள் பேசாமலேயே, "அ" என்ற ஒலி முயற்சிக்கு, உங்கள் உதட்டு விரிவு அடங்குவதைக் காணலாம்!

இப்பவே, செஞ்சிப் பாருங்க!
இரண்டு உதடுகளை மட்டும் லேசாக விரிங்க!
விரிக்கும் போதே "அ" என்ற ஒலி அமைப்பு வந்துரும்!

பிறந்த குழந்தையின் முதல் அழுகையோ,
பின்னர் சிரிப்போ,
பின்னர் தத்தக்கா பேச்சோ,
பின்னர் முறையாகத் தாய்மொழி பயிலும் போதோ..
எதுவாயினும், ஒலிக்கும் முன் இதழ் விரிக்க வேண்டும்! அந்த விரிப்பிலேயே "அ" என்ற நுட்ப ஒலி அடங்கிவிடும்!

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து, 
.... பிறப்பொடு விடுவழி, உறழ்ச்சி வாரத்து, 
"அ"கத்து எழு வளி இசை, அரில்தப நாடி 
(தொல்காப்பியம் - எழுத்துப் பிறப்பியல்)

இதனால் தான், உலக மொழிகள் பலவும்.. "அ" எ. அகரம் முன்னிட்டே தொடங்குகின்றன!
மொழியே இல்லாத, ஆதி மனித இனத்தின் ஒலிப்பியல்! = அகரம்!

"அகர முதல", வள்ளுவர் மட்டுமே பாடவில்லை; அவருக்கும் முன்பே தொல்காப்பியர் பாடிச் சென்ற மரபு தான்!
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது' என்ப; எழுத்து எனப்படுப!

அதைத் தான்.. அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்குகிறார் ஐயன்!
*அகரம் = உலக ஒலிப் பொதுமை!
*அகரம் = சம்ஸ்கிருதம் அல்லவே அல்ல!
*அகரம் = தமிழ் உட்பட, பன்மொழிப்பொதுமை!

திருக்குறள்= "பொது"மறை என்ற நோக்கில் தான் எழுதப்பட்டது!
அதான், “தமிழ்” என்ற சொல் கூட அதில் இல்லை!
முல்லை/குறிஞ்சி, திணைக் கட்டுப்பாடு கூட இல்லாத அகத்திணைக் குறள்!

ஒரு “பொது மறையை”,
= முதல் குறளே சம்ஸ்கிருதம் தான் என்று சொல்லுதல்
= ஐயன் வள்ளுவனின் நோக்கத்துக்கே கேடு செய்யக் கூடியது!

உங்கள் இறைவன் அமரும் மனச்சாட்சியைக் கேட்க!
வேண்டாம், மட்டமான Sanskrit ஆதிக்கப் புத்தி! தவிர்த்து விடுங்கள்!


2.  அடுத்த சொல் = ஆதி

ஆதி = “ஆதல்”;
இறைவன் = உலகுக்கு முதல் “ஆகிறான்”; அதுவே “ஆதி”
Ready ஆதல் என்று பேச்சு வழக்கிலும்,
திருமணம் ஆதல், நேரம் ஆதல், வயசு ஆதல்.. இப்படி!

சேர மன்னன்= சேரல் + "ஆதன்"=சேரலாதன்
ஆதன்/ஆதி= தமிழில் மாண்பு உள்ள பெயர்ச்சொற்கள்! பண்பாடு "ஆகி" வரும், இவர்களிடமிருந்து!

மன்னர்கள்: வாழி ஆதன், ஆதன் ஓரி, ஆதன் எழினி
பெண்கள்: ஆட்டனத்தி ஆதிமந்தி
கவிஞர்கள்: மால் ஆதனார், குழல் ஆதனார்
ஆதன் எழினி= சம்ஸ்கிருத ராஜா என்பீர்களா என்ன?:)

சம்ஸ்கிருதத்திலும் "ஆதி" உண்டு என்பதை அறிவேன்!
ஆனால், அது வேறு ஆதி/ आधी
ஆதிலக்ஷ்மி என்று வடமொழியில் சொன்னால், அது “ஆகும்” லக்ஷ்மி அல்ல!:)
அது, ஆதியில், Original லக்ஷ்மி என்ற பொருளில்!

Sanskrit ஆதி/ आधी = Original, பொண்ணு, துன்பம், சாபம் என்ற பல பொருளில் வருமே?
ஆதி பகவன் = சாபம் குடுக்கும் பகவான் -ன்னு எடுத்துக்கோங்களேன் பார்ப்போம்?:)
சம்ஸ்கிருதம் தான் 'ஸப்த' நுட்பம் பயங்கரமா இருக்குற மொழியாச்சே?:)

ஆக.. தமிழ் ஆதிக்கும், சம்ஸ்கிருத ஆதிக்கும், வேறுபாடு உண்டு!
அதே போல் தான், கந்தன்-ஸ்கந்தன்! அமிழ்தம் - அம்ருதம்!
*அமிழ்தம் = தமிழ்; இனிமை எ. பொருள்!
*அம்ருதம் = சம்ஸ்கிருதம்; அ+மிருத்யு = சாகாமை எ. பொருள்; 
அதைக் குடிச்சா, தேவாள் சாக மாட்டாங்க! ஆனா Sanskrit Scoundrels நீங்க செத்துருவீக!

*கந்தன்= கந்து/ பற்றுக்கோடு (தூண், நடுகல் போன்ற அமைப்பு)
*ஸ்கந்தன்= ஒன்றாக்கப்பட்டவன் (6 முகமும் 1 முகமாய், பொய்ப் புராணம்)

மதப் பரவலால், இன்று.. இந்த இரண்டு சொற்களும், ஒரே கடவுளைக் குறிக்கத் துவங்கி விட்டாலும்..
முருகன்= “பழங்குடித்” தமிழ்க் கடவுள்!
ஸ்கந்தன் = Mixed up, Post Vedic, Brahministic Deity!
கந்தன் – ஸ்கந்தன் = இரு மொழிகளிலும் வெவ்வேறு வேர்ச்சொல்!

சொற்கள் ஒன்று போல் ஒலிப்பதாலேயே.. அங்க இருந்து தான், இங்க வந்துச்சி எ. "புத்தி" காட்டாதீர்கள்!
ஏன்??? இங்கிருந்து அங்கு போகாதா?
இங்கிருந்து தான் அங்க போச்சி! எ. உங்களைப் போலவே அடிச்சி விட எவ்ளோ நேரம் ஆகும்? ச்சீ..

வேர்ச் சொல் அறிந்து பேசுங்கள்; இரு மொழியும் அறிந்து பேசுங்கள்!

ஒரே மாதிரி ஒலிப்பதாலேயே, எல்லா மொழிச் சொல்லும் சம்ஸ்கிருதம் ஆகி விடாது!
Rum  எ. இலத்தீன்/ஆங்கிலச் சொல்லும், “ரம்”மியம் எ. சம்ஸ்கிருதச் சொல்லும் ஒன்றா?
குடிகாரர்களுக்கு Rum  ரம்மியமா இருக்கும் என்பது வேறு கதை:)

ராமன் = 'ரம்யம்' என்பது தானே சம்ஸ்கிருதச் சொல் இலக்கணம்?
ரமந்தே ராமஹ; ரமந்தே யோகினோநந்தே

ரம்மியமான ராமன் 'ரம்' குடிச்சான்னு 'ஷொல்லு'ங்கோ பார்ப்போம்?
அதை மட்டும் சொல்ல மாட்டேளே?:)
அதே போல் தான் தமிழ் ஆதியும், சம்ஸ்கிருத ஆதியும்!
ஒன்று போல் ஒலித்தாலும்,  இரண்டும் வேறு வேறு!

திருக்குறளின், ஆதி பகவன் = "ஆதி" தமிழ்ச் சொல்லே!
ஆவதால் ஆதி!



3. அடுத்த சொல் = பகவன்

பகவன்= பகவான் அல்ல:)
அது Pagavan எ. ஒலிப்பு! Bhagawan எ. ஒலிப்பு அல்ல!

தமிழ்ச் சொற்களில் வரும் "முதலெழுத்து வல்லினம்" அழுத்தியே ஒலிக்கும்!
*சொல்= Chol; Sol அல்ல
*கொலு= Kolu; Golu அல்ல
*தேவாரம்= Thevaaram; Devaram அல்ல!
*போலவே, பகவன்= Pagavan; Bhagawan அல்ல!

பகவன் = பகு + வ் + அன்
*பகு = பகுதி
*வ் = இடைநிலை
*அன் = விகுதி
பகவு + அன் என்றும் பிரிக்கலாம்; பகவுதல் = பகுத்தல்! தக/ தகவு, பக/ பகவு!

தமிழில், பகவன்= “பகு” (Divide & Distribute) என்ற பொருளில் வரும்!
*ஆதி= உலகத்துக்கு முதல் “ஆகி”றான்
*பகவன்= உலக உயிர்களை, பல விதங்களாய்ப் “பகு”க்கிறான்
Bacteria, செடி, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன் எ. பல்வேறு பகுத்தல்!

இதே வள்ளுவர், “பக” என்று மற்ற குறட்பாக்களிலும் சொல்கிறாரே?
“பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர்” 
கேளிர்= அதுவும் சம்ஸ்கிருதமா?:)

ஆதிபகவன் = இருபெயரொட்டுப் பண்புத் தொகை / உம்மைத் தொகை!
உயர்திணை உம்மை என்பதால் வலிமிகல் இல்லை!
இகரவீற்று உயர்திணைப் புணர்ச்சி! ஆதியும் பகவனுமான இறைவன்!

முக்கோல் “பகவர்கள்” என்று தமிழில் உண்டு; முக்கோலைக் கையில் ஏந்திய சான்றோர்கள், சமூக அறங்களைப் “பகுத்து” வழங்குபவர்கள்;
அந்தப் பகவர்களை (வெறும் மானிடர்களை) Bhagawan என்பதா? இது ஒங்க பகவானுக்கே அடுக்குமோ?:)

சம்ஸ்கிருத Bhagawan = “பஜ்” என்ற சொல்லில் பிறக்கும்;
பஜ் = (இறைவனுக்கு) வழிபாடு
பக்தி என்பதும்= “பஜ்” என்ற மூலமே!
பஜி= வழிபடு; அதிலிருந்து தான் பஜனையும்!

இப்போ சொல்லுங்க: தமிழ் Pagavan  & சம்ஸ்கிருத Bhagawan  ஒன்றா?:)
Sanskrit அறியாமலேயே, ஏன் உங்களுக்கு இந்தச் "சொருகு" வேலை? வெட்கமாயில்லை? உடம்பு கூசலை?
'சுயம்' பிடித்த அஹங்கார உங்களுக்கா, Bhagawan மோட்சம் குடுப்பான்?
குடுக்கவே மாட்டான்! உழன்று அழிந்து சாகுங்கள்! ந தர்ம நிஷ்டோஷ்மி!

ஆதிபகவன் = தமிழ்ச் சொல்லே!
*ஆதி= பல்லுயிரும், ஆவதால் ஆதி
*பகவன்= பல்லுயிரும், பகுப்பதால் பகவன் (Pagavan)



4. கடைசிச் சொல் = உலகு

உலகம் என்னும் தமிழ்ச் சொல் = “லோகம்” என்ற உங்கள் வடசொல் அல்ல!:)
சம்ஸ்கிருதம்: “லோக்” = லோக+ஈகம்= லெளகீகம்
ஆனா, தமிழில், “உலகீகம்”-ன்னு ஏதாச்சும் இருக்கா என்ன?:) அப்பறம் எப்படி உலகம் = லோகம்-ன்னு சொல்றீங்க?

தொல்காப்பியக் காலம் தொட்டே, “உலகம்” எ. தமிழ்ச் சொல்!
மாயோன் மேய காடு உறை உலகம்
சேயோன் மேய மை வரை உலகம்

உலகு = உல் + அ + கு
உல்லுதல் = "திரண்டு" உருளல்; உல்லும் தோள் = திரண்ட தோள்
உல்லுவதால்= உலகம்!

போலவே..
*ஞால்வதால் (தொங்குவதால்)= ஞாலம்
*வைப்பதால்= வையம்
*நிலைப்பதால்= நிலம்

Sanskrit லோக் = ஆங்கில Look ஆகாது!
விட்டா ஆங்கிலமே, Sanskrit போட்ட பிச்சைன்னு கூடச் சொல்வேள் போலயே?:)
English Look =  West German Luogen/ Lagud என்ற வேர்ச்சொல்லில் வருவது!
Lagud = Eyes என்று பொருள்படும்!
காஞ்சிப் (போன) பெரியவா, அடிச்சி விடுவதெல்லாம் மொழியியல் / வேர்ச் சொல்லாய்வில் நில்லாது;
நீங்க மட்டும் தான் "நம்ம பெரியவா பெரியவா"-ன்னு மெச்சிக்கணும்:)

लोक/ லோக் தான் Look ஆச்சு-ன்னா,
"அந்தக லோகம்" = பார்வையில்லாத லோகம் எப்படி ஓய், Look விடும்?
பொய்யைப் பொருந்த ஷொல்ல மாட்டேளா?:)

இப்படி, பொய்யைப் பொருந்தச் சொல்லாம தான், ஆத்திசூடியில் கை வைச்சி, காஞ்சி பெரியவா அசிங்கப்பட்ட நிகழ்வு = https://goo.gl/41QZQY
தேவையா இது, மஹா ஞானி, மஹா பெரியவாளுக்கு? பாவம்:(

உலகம் = தமிழ்ச் சொல்லே! அது लोक அல்ல!
பல தமிழ் இலக்கியங்களும், “உலகம்”-ன்னே துவங்கும் மரபு.. பலப்பல காலமாய்!
இவை அத்தனையுமே சம்ஸ்கிருதம் ஆயிடுமா? ரொம்பவே ஒங்க பேராசை:)

* ஆதி பகவன் முதற்றே "உலகு" – திருக்குறள்
* நனந்தலை "உலகம்" வளைஇ நேமி – முல்லைப்பாட்டு
* "உலகம்" உவப்ப வலனேர்பு திரிதரும் – திருமுருகாற்றுப்படை
* திங்களைப் போற்றுதும்.. "உலகு" அளித்தலான் – சிலப்பதிகாரம்
* "உலகம்" திரியா ஓங்குயர் விழுச் சீர் – மணிமேகலை

மதம் பிடிப்பதை விட, "உலகம்" பிடிப்பதே உவப்பானது, சங்கத் தமிழுக்கு!
அவரவர் அகம்-புறம் Truthful வாழ்வு தானே தவிர,
Imaginary சொர்க்கமோ/ நரகமோ கண்டு அஞ்சாத தமிழ்!

அதான் "உலகம்" என்ற சொற்-பொருளை முதற்சொல்லாய் வைத்து, இலக்கியம் படைத்தது!
உலகம் = தமிழ்ச் சொல்லே!
Thus Proved, quod erat demonstrandum (Q.E.D)
அகர முதல ஆதி பகவன் உலகு= தமிழ்ச் சொற்களே!



முடிப்புரை:

இன்றைய தமிழ் மொழியில், “சம்ஸ்கிருதக் கலப்பே” இல்லை-ன்னு நான் சொல்லமாட்டேன்! 30% சொற்கள் Parasite தான் உறிஞ்சித் தின்கிறது:(
அவாளே வாத்திகளாய் உட்கார்ந்து..
தமிழில், Sanskrit கலந்து கலந்து பரப்பிய 'லட்சணம்' இது:(

நம்மை அறியாமல் பயன்படுத்தும் Sanskrit சொற்களுக்கு மாற்றாக,
அன்றாட வாழ்வில் எளிய தமிழ்ச் சொற்கள், அகராதி இங்கே= https://goo.gl/cbm2nY

Sanskrit Parasite என்பது பின்னாளில்= மதம்/பண்பாட்டுக் கலப்பு மூலமா,
அரசியலில்.. அரசர்களை வலைக்குள் வீழ்த்தி நுழைந்தவை!
ஆதித் தமிழ் நிலத்துக்கு... "மதம்" பிடித்த கதை, இங்கே = https://goo.gl/9dKl0L

என்ன தான்.. "மதம்" காட்டி, Emotional Blackmail மூலமாக, பிராமணீயம் தமிழகத்தில் கடை விரித்தாலும்,
சங்கத் தமிழ் இலக்கியங்களில், பிராமணீய மதத்துக்கும்/ சம்ஸ்கிருதக் கலப்புக்கும்,
சான்றோர்/ மக்களின் எதிர்ப்பு ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டே உள்ளது!

*இன்றைய பொது மக்கள், அது பற்றி நிறைய அறியலீன்னாலும்,
*தங்களின் சமயமே அல்லாத ஒரு மதத்தில், போலியாய்க் கட்டுண்டு கிடந்தாலும்..
*எது தமிழ்ச் சொல்-பொருள்? / எது சம்ஸ்கிருத வார்த்தை-அர்த்தம்? என்றே பிரித்தறிய முடியாதபடி, Parasite ஒட்டப்பட்டு விட்டாலும்..

மெய்த் தமிழைப் படிக்கப் படிக்க = உண்மைகள் தானே வெளி வந்துரும்!


இக் காலம் = அறிவியல் காலம்!
முன்பு போல், (பிராமணீய) வாத்திகளின் கையில், தமிழ் இல்லை!
பொதுமக்கள் நினைத்தால், உண்மைத் தமிழைத் தோண்டி எடுக்க முடியும்!
Technology Integrated Tamizh!

அதைப் பொறுக்க முடியாமல் தான், இணையத்தில் இத்தனை கூத்து!
பொய்யாய் எழுதி வைக்கிறார்கள்!
அதற்கு, "ஸ்வாமி பக்தி" என்ற போர்வை போர்த்துகிறார்கள்!

வாத்திகள் கைவிட்டுப் போன தமிழை,
இணைய பிராமணீயம் கைக்கொண்டு, 
திருக்குறள் = Sanskrit என்று 'ஜோடிச்சி', விதம் விதமாய் 'விஷம்' பரப்புகிறது!

தரவு கேளுங்கள்! தர மாட்டார்கள்:)
ஆனாலும் தமிழ் இலக்கணம் = 'லக்ஷணம்' எ. இடைவிடாது பரப்பிக் கொண்டே இருப்பார்கள்!
நீங்களோ, நட்பு கருதி கண்டு கொள்ளவே மாட்டீர்கள்:( தமிழை அடகு வைத்துப் போய் விடுவீர்கள்!
இதனால் தான்... இன உணர்வே இல்லாமல், இன ஒற்றுமை இன்றி, ஈழத்தில் ஒரேயடியா முடிஞ்சி போனீங்க:(

பெரியார் சமூக இயக்கம்/ தமிழ் இயக்கம்/ அறிவியல் பரவல்களால் தான்
இன்று பழைய ஜாதிச் சிறைகளைக் கடந்து, 
"படிப்பு" எ. கல்விக் கதவுகள் திறந்து, சற்றே மேல்வந்து உள்ளீர்கள்!

ஆனால், இன்னும் நீங்கள் அடிமைகளே!
*கல்வி/ பொருளாதாரம் மட்டும் தான் வென்று உள்ளீர்கள்!
*மொழி/ சமயம்/ சமூகம்/ பண்பாடு = பலவற்றிலும், இன்னும் அடிமைகளே!
ஆனால், அடிமைகள் என்று கூட உங்களுக்கே தெரியாது:( அதான் கொடுமை!

*உங்கள் தமிழ் மொழியில்= Sanskrit ஆதிக்கம், இன்றும் நிறைய உண்டு!
*உங்கள் சமயத்தில்= பிராமணீய ஆதிக்கம் இன்றும் உண்டு!
*உங்கள் சமூகத்தில்= பகவத்கீதா விதைத்த ஜாதிபேதம் இன்றும் உண்டு!
*உங்கள் பண்பாட்டில்= கல்யாணம் முதல் கருமாதி வரை, தமிழல்லாத பிராமணீய வழக்கமும், Emotional ஆதிக்கமும் இன்றும் உண்டு!

இதையெல்லாம், ஒரு பெரியாரால்/ ஒரு வள்ளலாரால் மாற்ற முடியாது!
இஃது, இடைவிடாத தொடர் இயக்கம்!

இந்த இயக்கத்தில், உங்கள் தமிழ் வேர்களை, அறியவாச்சும் முயலுங்கள்!
1. ஜாதியை, மனத்தால் துறந்து விடுங்கள்
2. மதம் கடந்து, தமிழை அணுகுங்கள்
3. அறிவியல் தமிழாக.. தரவுகளை நாடுங்கள்!
இதோ, உங்கள் கூர்வேல் ஆயுதம்! பெருஞ்சித்திரனாரின்.. "ஆதி பகவன்" முதலான.. ஆழமான பல திருக்குறள் ஆய்வு= https://goo.gl/jtxAjT
பெருசா ஒன்னும் வேணாம்; 
திருக்குறள் = உங்கள் 2500+ ஆண்டு இனத்தின் பெருமிதம்!
குறளின் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்= Sanskrit அல்ல!
இதை உரக்கச் சொல்லுங்கள்! அஃதே போதும்; முதல் படி!

Sanskrit புல்லுருவிகள், மாறப் போவதில்லை!
ஆனால், நீங்கள் மாற முடியும்! "திரள" முடியும்!
இதோ, இந்தக் கயமைக் கீச்சின் மேல் Quote செய்து,
https://twitter.com/amas32/status/817569021767729152

தமிழின் தன்மானப் பெருமிதம்= திருக்குறள்! 
அகர முதல ஆதி பகவன்= Sanskrit Parasite அல்ல! தமிழே! 
இதோ ஆதாரம்= https://goo.gl/ehvVZi
என்று அனைவரும் ஒன்று திரண்டு, நாடும் நகரமும் நன்கறிய, ஊருக்கு உரையுங்கள்! 
அப்போ தான், அவங்களுக்கு அச்சம் வரும்! தமிழுக்கு ஒற்றுமை வரும்!

போலியான நட்புக்கு அஞ்சாது, அறம் துணிந்து,
திருக்குறள் = Sanskrit அல்ல! என்றாச்சும் சொல்வீர்களா?
இளமை மிகு தமிழ்ப் பெண்களே/ஆண்களே,
நீங்கள் உரக்கச் சொல்வீர்களா? சொல்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
(உங்கள் உலகு/ உங்கள் தலைமுறை உலகு/ தமிழ் உலகு!)

55 comments:

  1. அருமை அட்டகாசம் அற்புதம் ஆனந்தம்

    ReplyDelete
  2. தமிழாக எம்மை உணர்த்த சமயம்.
    பதிலுரைப்போம்
    தமிழால் என உணர்வுகளை தீண்டிய சமயம்.
    நனி நன்றி என மட்டுமே கூற இயலும்.


    ReplyDelete
  3. நன்று செய்தீர் கரச.. நல்லவேளை, ஆதி பகவன் என்றால் ”ஷாட்ஷாத்” அந்த ஆதி சங்கரர் “ பெரியவா ” தான்னு சொல்லாம விட்டாளே.. மகாபாவி ”நோக்”கெல்லாம் “விமோஷனமே” கிடையாதுடா.. தொடரட்டும் உங்கள் பணி ... வாழ்த்துகளுடன். தமிழ் பண்பலை.

    ReplyDelete
  4. கலக்கிட்டீங்க..செம அடி..எவ்வளவு வாங்கினாலும் உறைக்காது..

    ReplyDelete
  5. அருமை ஐயா.. சிறப்பான பதிவு.

    ReplyDelete
  6. எளிதில் திருந்தாத, மொழிச் சிதைப்பில் ஈடுபடும் தரம்கெட்ட பிறவிகளுக்கு நல்ல செருப்படி, சாணியடி...

    ReplyDelete
  7. செய்தாயிற்று முருகா

    ReplyDelete
  8. வணக்கம் கண்ணபிரான். எப்படி இருக்கீங்க? :-) நீண்ட மாதங்களுக்குப் (வருடம்) காண்கிறேன்.

    தமிழில் வட மொழிச் சொற்கள் அதிகளவில் கலந்து விட்டன, இனி அதைப் பிரிப்பது என்பது இயலாத காரியம். ஏனென்றால், வட மொழிச் சொல் என்றே தெரியாத அளவுக்கு அவை தமிழ்ச் சொற்களாகி விட்டன என்பது கசப்பான உண்மை.

    கடந்த வருடம் இது குறித்து நான் எழுதியது http://www.giriblog.com/2016/10/is-it-tough-to-write-in-tamil-without-mixing-english-words.html

    நீங்கள் கூறிய பகவான்.. அது அப்படி அல்ல.. ஹே! பக்(g)வான் :-) :-)

    நீங்கள் கூறியது போலப் பண்டைய ஆசிரியர்களிடம் இருந்து தான் வட மொழிக் கலப்பு ஏற்பட்டு இருக்க வேண்டும் அதோடு தமிழ்த் திரைப்படங்கள் இவற்றில் பெரும் பங்கு ஆற்றியுள்ளன.

    இது போல் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete
  9. ரொம்ப அருமையான பதிவு முருகா. Sanskrit=Parasite.. ரொம்ப ஆழமான கருத்து.. உழைக்காமல் உடல் வளர்க்கும் அவாளுக்கு சரியான பதில்.. I like this word: காஞ்சி (போன) பெரியவா..😁😁😁😁😁
    Your contribution and time invaluable.. 🙏🙏🙏🙏

    ReplyDelete
  10. அருமை முருகா. டீச்சர் பதிவிலிருந்து இன்று தான் படித்தேன். நன்றி.

    ReplyDelete
  11. சிறப்பான பதிவு.அருமை .இது போல் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுத வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. தமிழ்ச் சிதைப்பை எதிர்க்க வேண்டியதின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி முருகரே.

    வட அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா புராணங்களில் சொல்லப்படும் பாதாள லோகம் என்கிறார் இந்த காஞ்சி (போன) பெரியவா. கபில ரிஷியின் ஆசிரமம் இருந்த இடம் என்பதால் கபிலரண்யம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் கலிபோர்னியா ஆகி விட்டதாம். முடியல.

    இந்த கூட்டம் தங்களை முன்னிறுத்திக் கொள்ள எந்த கீழ்மையையும் தயங்காமல் செய்யும். அதிலும் நீங்கள் சுட்டிக் காட்டும் கும்பல் நட்பு போர்வையில் தமிழ் சிதைப்பை கண்டிப்பாக தொடரும்.

    ReplyDelete
  13. Love you Muruga. Nalla pathil. Seruppadi.

    ReplyDelete
  14. இருக்கின்ற நாள் மற்றும் வார இதழ்கள் நடத்துவோர் பெரும்பாலும் அவாள்தான்.
    நாம வெறும் படிப்பு மெளவுனிகள் தானே.எதிர்வினையாற்றலும் மிகக் குறைவே.
    ஆலயங்களில் அந்த ”தேவ....பாஷை” அகன்று முழுதும் நந்தமிழ் நுழைந்தாலன்றி மொழியுணர்வு தலைதூக்காது.

    ReplyDelete
  15. தெளிவான பதிவு. மிக்க நன்றி!

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. அன்பிற்குரிய கண்ணபிரான் இரவிசங்கர்,

    உங்கள் வலைப்பதிவிற்கு வந்து நெடுநாட்கள் ஆகிவிட்டன. எப்படியிருக்கிறீர்கள்? நலமா? உங்களுடைய இந்த நல்லபணியைத் தொடர்ந்துசெய்யுங்கள்.

    “கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!

    இது இந்துத்துவக்காலம். சங்கதக் கூத்துக்கள் இனிக் கூடவே நடக்கும். இணையத்தில் இவர்களின் கூப்பாடு அதிகம். தமிழை நிலைநிறுத்துவோர் சிலரே. உங்களைப் போன்றவர் இடைவிடாது செய்யவேண்டும்.

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  18. Hey Dear Ravi,
    This is Srivatsan. I am typing as appA is dictating his feelings that you enthused in this post.

    Kannabiran Ravikku, un AchAryan AsErvAdham.
    nee sonna vishayangaL ellAmE satyam satyasya satyam.
    kObam irukkum idathil thAn Gunam irukkumnu solvAnga. un kObangaL nyAyamAnavaiye.
    Tamizh mozhiyai, Samskrutha GrahaNam seivathAl thAn bAshA bEthangaL varudhu. Idhai purinthu koLAmal, Samskrutha bAshaikkum ketta peyar vAngith thandhu, indRu SamskruthAsthamaname seidhu vittArgaL.

    ThirukkuRaL, Tamizh mozhiyin kaTTaLai kal.
    adhil koNdAnthu, Samskrutha grahaNam seidhal mahA pApam.
    Tamizh ilakkaNam thanithe iyanga valla yugAndhara sakthi udaiyadhu. adhai lakshaNam endRu poi solludhal, bAshA nirmUla pApamE labikkum.

    PerumAL Dravida Veda Ugappan.
    Vedam pin vara, TamizhE mun vara, ELa ezhundharuLum Singam.
    un Gunam adiyEn aRivEn. BrAhamana dUshanai endRu solvadhu madamai. Dharmam thavaRi nadanthAl dUshanai spurikkumE thavira BAshanai spurikkAdhu.

    Pirattiyum PerumALum unakku Dheerga sampaththu aruLa vEndugiREn.
    un muruganum, nam perumALum unnai rakshikka pattinam kAppu.
    Booma matRum ennOda AchArya AseervAdhangaL. bhaktha vatsalam kshEmam.
    innum perithAga indha Tamizh paNiyai eduthu sei.

    -U. Ve. VEnkatakrishnamAchAri

    ReplyDelete
    Replies
    1. Hey Dear Ravi,
      This is Srivatsan. I am typing as appA is dictating his feelings that you enthused in this post.

      கண்ணபிரான் ரவிக்கு , உன் ஆசார்யன் ஆசீர்வாதம் .
      நீ சொன்ன விஷயங்கள் எல்லாமே சத்யம் சாத்தியஸ்ய சத்யம் .
      கோபம் இருக்கும் இடத்தில தன குணம் இருக்கும்னு சொல்வாங்க . உன் கோபங்கள் நியாயமானவையே .
      தமிழ் மொழியை i, சம்ஸ்க்ருத கிரஹணம் செய்வதால் தன பாஷா பேதங்கள் வருது . இதை புரிந்து கொள்ளாமல் , சம்ஸ்க்ருத பாஷைக்கும் கேட்ட பெயர் வாங்கித் தந்து , இன்று ஸம்ஸ்க்ருதஸ்தமனமே செய்து விட்டார்கள் .

      திருக்குறள் , தமிழ் மொழியின் கட்டளை கல் .
      அதில் கொண்டாந்து , சம்ஸ்க்ருத கிரஹணம் செய்தல் மகா பாபம் .
      தமிழ் இலக்கணம் தனித்தே இயங்க வல்ல யுகந்தர சக்தி உடையது . அதை லக்ஷணம் என்று பொய் சொல்லுதல் , பாஷா நிறமுள்ள பாபமே லாபிக்கும் .

      பெருமாள் திராவிட வேதா உங்கப்பன் .
      வேடம் பின் வர , தமிழே முன் வர , ஏல எழுந்தருளும் சிங்கம் .
      உன் குணம் அடியேன் அறிவேன் . பிராம்மண தூஷண i என்று சொல்வது மடமை . தர்மம் தவறி நடந்தால் தூஷனை ஸ்புரிக்குமே தவிர பாஷனை ஸ்புரிக்காது .

      பிராட்டியும் பெருமாளும் உனக்கு தீர்க்க சம்பத்து அருள வேண்டுகிறேன் .
      உன் முருகனும் , நம் பெருமாளும் உன்னை ரக்ஷிக்க பட்டினம் காப்பு .
      பூமா மற்றும் என்னோட ஆச்சார்யா ஆசீர்வாதங்கள் . பக்த வட்சலாம் க்ஷேமம் .
      இன்னும் பெரிதாக இந்த தமிழ் பணியை எடுத்து செய் .

      -உ . வே . வேங்கடகிரிஷ்ணமாச்சாரி

      Delete
  19. அருமை, கேஆர்எஸ். தேவையான அவசியமான அருமையான பதிவு. வாழ்த்துகள் இந்தப் பதிவிற்காக..

    ReplyDelete
  20. They do every thing secretively and cunningly. Pack of wolfs. You are doing a good job and bring out their bad side.

    இந்த கூட்டம் தங்களை முன்னிறுத்திக் கொள்ள எந்த கீழ்மையையும் தயங்காமல் செய்யும். அதிலும் நீங்கள் சுட்டிக் காட்டும் கும்பல் நட்பு போர்வையில் தமிழ் சிதைப்பை கண்டிப்பாக தொடரும்.

    ReplyDelete
  21. சிறப்பான பதிவு,வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. அகர முதல
    சம்ஸ்கிருதம் அல்ல
    ஆதி பகவன் சம்ஸ்கிருதம் அல்ல என்று தலைப்பை மாற்றுங்கள்.

    ReplyDelete
  23. அன்புள்ள KRS தங்கள் பதிவிற்கு நன்றி.வார்த்தை , அர்த்தம் என்பது தமிழ் இல்லை என்பதறிந்து ஆச்சரியம் அடைந்தேன். இவ்வளவு தூரம் ஆராய்ந்து விளக்கியது நிறைய பேருக்கு சென்று சேர வேண்டும். இங்கு கருத்திட்ட அனைத்து அன்பர்களும் இந்த link அல்லது இங்கு சொல்லப்பட்டதை தங்கள் முகநூல் மற்றும் WA போன்றவற்றின் மூலம் பகிர வேண்டுகிறேன்.நன்றி.
    அன்புடன்
    JayManika

    ReplyDelete
  24. Technology Integrated Tamizh!
    இது காலத்தின் தேவை

    ReplyDelete
  25. வாத்தியாரே! வழக்கம் போலவே நார் நாராய்க் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விட்டு விட்டீர்கள் ஐயா! ஆனால் நான்தான் மிகத் தாமதம்.

    'ஆதி' தவிர மற்ற மூன்று சொற்களும் தமிழ்தாம் என்பதற்கான சான்றுகளை முன்பே படித்திருக்கிறேன். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, 'ஆதி' பற்றி நீங்கள் தந்திருக்கும் இதே விளக்கம் எனக்கும் பல நாட்களாகத் தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் இவ்வளவு தெளிவாக அதை எழுத்தாக்கும் வல்லமை எனக்கு இல்லை.

    'பகவன்' பற்றிய உங்கள் விளக்கம் இதுவரை அறியாதது. ஆனால் இதற்கு வேறு ஒரு விளக்கம் அண்மையில் படித்தேன். அறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதியது. பகம் என்றால் தமிழில் 'ஆறு' என ஒரு பொருள் உண்டு இல்லையா? அதன் அடிப்படையில்தான் 'பகவன்' என்கிற சொல் உருவாகியிருக்கிறது என்கிறார் அவர். அதாவது, "ஆறு நல்ல பொருள் அமைந்தவன் என்பதே பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், ஐசுவரியம், கீர்த்தி, அறம் ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவான். இந்த ஆறினுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக ஒருவனுக்கு அமைந்துவிடுமானால் அவனே பெருமகன் ஆகிவிடுகிறான். ஆறும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் குடியிருக்குமானால் அவன் கடவுளே ஆகிவிடுகிறான். இப்படி எண்ணியிருக்கிறான் தமிழன் தமிழ்நாட்டுக் கலைஞன். அப்படி தமிழன் கற்பனை பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன்" என்பது அவர் கூற்று. காண்பதற்கரிய நூல்களிலிருந்தும் இதழ்களிலிருந்தும் தமிழமுதைத் தொடர்ந்து கடைந்தெடுத்து வழங்கி வரும் பசுபதி ஐயா அவர்களின் 'பசுபதிவுகள்' தளத்தில் இதைப் படித்தேன்.

    பேசுவதற்கு வாயைத் திறக்கையிலேயே அகரம் தானாக எழும் என்கிற உங்கள் விளக்கம் படித்து விட்டுச் செய்து பார்த்ததும் சிலிர்த்து விட்டது ஐயா! களிகூர்ந்த நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. ஐசுவரியம் - சமக்கிருதச்சொல்
      பா'ஸ்'கர தொண்டைமான் - பெயரிலேயெ மொழிக்கலப்பு - குழப்பம்
      "அப்படி தமிழன் 'கற்பனை' பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன்" = கற்பனையா? முருகன் - சேயோன்(நல்விளக்கம் பெற, கரச-வின் முந்தைய தொகுப்புரைகளை காணவும்)

      Delete
  26. தமிழ்க்கடவுள் முருகனே தமிழின் சிறப்பை எடுத்தியம்பியதாக உணர்கிறேன்.
    நீர் புலவர்!... ஐயா, நீர் புலவர்!...வாழி!.. வாழி!..

    ReplyDelete
  27. //பாளி/ பிராகிருத மொழியிலிருந்து //

    பாலி யா? பாளி யா?லவும் இழுத்துக் கொண்டாலும்,


    //ஒரு பெரும் தொல்-மொழியின் மரபை, "சிறுமை" செய்து,//

    தொல் மொழியா? தொன்மொழியா?

    ReplyDelete
  28. நன்றி. முதல் முறையாக உங்கள் எழுத்தை வாசிக்கிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படி ஒரு நண்பரையே பல காலமாக தேடி வருகிறேன். நண்பர் மா.அரங்கநாதனிடம் உரையாடியது போலவே இருக்கிறது.

    ReplyDelete
  29. Thamilai yaaralum alikk mudiyaathu. tamil ivarkali aram paadattum. keer keer enru likithu yeriyattum.

    ReplyDelete
  30. இடைவெளியை சற்று குறைத்தால் நலம் ஐயா.....

    ReplyDelete
  31. பழ.பொய்யாமொழி11:23 PM, March 19, 2017

    மிகச்சிறப்பு நன்றி ஐயா. தங்கள் தமிழ் தொண்டு வளர்க

    ReplyDelete
  32. அந்த டூமிலன்களை சும்மா விடாதிங்க குருநாத

    ReplyDelete
  33. வணக்கம் KRS. நலமா? எதேச்சையாக உங்களுடைய Blog இன் அறிமுகம் கிடைத்தது. கிடைத்த நாளில் இருந்து இன்று வரை உங்களுடைய blog ஐ தினமும் படிக்கிறேன். Twitter இலும் உங்களை stalk செய்கிறேன். பல பல புது தகவல்களை அறிந்து கொண்டேன்/கொண்டுள்ளேன். மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

    தமிழின் மேலும் சித்தர்களின் மேலும் தீராத காதல் கொண்டவன் நான். அதிலும், சித்த மருத்துவத்தின் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். 300 சித்தர் புத்தகங்களும், ஆயிரத்துக்கும் மேல் ஆன்மீக மின்-புத்தகங்களும் சேர்த்து வைத்துள்ளேன், (அதில் பாதிக்கும் மேல் புராணங்கள் தான் :)). கொடுமை என்னவென்றால், சமஸ்க்ருதமும் தமிழும் இணை என்று இவ்வளவு நாள் நம்பி கொண்டிருந்தேன்.

    உங்களுடைய பதிவுகளை படித்தபின் எனக்கு சங்க தமிழ் மேல் புது மரியாதையும், எல்லா பாடல்களையும் படிக்க வேண்டும் என்ற வெறியே வந்து விட்டது. ஆனாலும் என்னுடைய சில சந்தேகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அதற்கு உங்களிடமோ, மற்ற வாசகர்களிடமோ பதில் கிடைத்தால் மகிழ்வேன்.

    ReplyDelete
  34. சிவன் பற்றி 'வேதமும் சைவமும்' என்ற புத்தகதில் கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது, சிந்து சமவெளி நாகரீகத்தின் போது பசுபதி யாக அறிமுகமாகிறார், பின்னர் தெற்கே சைவம் பரவுகிறது. ஒரிசா பாலு என்ற ஆராய்ச்சியாளர் 'சிவன் தான் பாண்டிய நாட்டின் முதல் மன்னன்' என்று சொல்கிறார். Tamil Chinthanaiyalar Peravai என்ற Youtube பதிவாளர் சிவன் ஒரு சிறு தெய்வமாக இருந்து பின்னர் பெரிய கடவுள் ஆக்கப்பட்டார் என்று சொல்கிறார். உங்களுடைய கருத்து இதில் என்ன?

    'சித்தர்கள் அனைவரும் சிவனடியார்கள், தமிழர்கள், அனைவரும் உருவ வழிபாட்டை எதிர்த்தார்கள்' எல்லாம் சரி. ஆனால் அவர்களுடைய பாடல்கள் எல்லாவற்றிலும் வடமொழி கலப்பு உள்ளனவே? அப்போ அவர்களுடைய உண்மையான பாடல்கள் இவை இல்லையா? அகத்தியர் பேரில் மட்டும் என்னிடம் 200 நூல்கள் உள்ளன. தலை சுற்றுகிறது.

    போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை உண்மையா? பொய்யா? சித்த வைத்தியம், தேரையர் பதார்த்த குண சிந்தாமணி, திருமூலர் திருமந்திரம், இவைகளும் பொய்யா?

    ReplyDelete
  35. இணையத்தில் ஒரு தமிழ் சொல்லின் பொருளை தேடப்போய் தற்செயலாக உங்களின் இந்த பதிவை பார்த்தேன். மிக அருமையான விளக்கம். ‘அவாளுக்கு” சரியான பிரம்படி. உங்கள் பணி தொடர வேண்டும்

    ReplyDelete
  36. இத்தனை காலமும் நான் பேசியது,எழுதியது தமிழா ??என்ற சந்தேகம் எழுகிறது....எதார்தமாகவே உங்களது twitter செய்திகளை பார்த்து நேற்று இரவு முதல் மிக ஆழமாக உங்களது தகவல்களை அறிந்து கொண்டிருக்கிறேன்...மிகவும் மன வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது....அதே சமயத்தில் தமிழின் பெருமையை கண்டு கர்வமாகவும் உள்ளது....தங்களது தமிழ் தொண்டிற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்....

    ReplyDelete
  37. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since Tamil Books

    ReplyDelete
  38. நல்ல பதிவு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  39. Some really great articles on this site, thanks for contribution.

    ReplyDelete
  40. Good post. I learn something new and challenging on blogs
    I stumbleupon every day. It's always helpful to read through
    articles from other writers and practice a little something from their websites.

    ReplyDelete
  41. It's nearly impossible to find well-informed people about
    this subject, however, you sound like you know what you're talking about!
    Thanks

    ReplyDelete
  42. https://www.amazon.in/Tamizhanin-Thathuvam-Thirukkural-Parimel-Thiruthapadugirar/dp/9386073749/ref=pd_ecc_rvi_2

    பரிமேலழகர் திரிபுகளை நீக்கிய உரை

    ReplyDelete
  43. Wow, this paragraph is fastidious, my sister is analyzing such things, thus I am going to convey her.

    ReplyDelete
  44. பாரதிக்கு எது சரி BHARATHI OR PARATHI

    ReplyDelete
  45. நன்றி நல்ல விளக்கம் தந்தமைக்கும் நன்றி,தங்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  46. அன்பின் KRS,

    திருவள்ளுவர் ஒரு சமணர் என்ற வாதமும் உண்டு, நானும் அவ்வாறே நம்புகிறேன். ஒரு சமணரின் உருவத்திற்கு நேர் எதிராக ஜடா முடி தாடி மீசை எல்லாம் வைத்து நெற்றியில் பட்டையும் போட்டு, அவருக்கு ஒரு மத வடிவம் கொடுத்து நம்மவா ஆக்கிட்டா. இது ஒரு பக்கம்.

    தமிழிலாவது பரவாயில்லை மற்ற 3 பெரும் திராவிட மொழிகள் தங்கள் நிலை என்னவென்றே தெரியாமல் நிற்பதாகவே உணருகிறேன். திராவிட மொழிகளின் தாய் தமிழ் என்பதை இவர்கள் யாரும் ஏற்பதாகவும் இல்லை.

    உதா. தெலுங்கு/கன்னட மக்களின் விழாவான உகாதி வாழ்த்தும்போது சுபா காண்க்ஷலு என சமஸ்கிருதத்தில் வாழ்த்திக்கொண்டு இருந்தார்கள். பெங்களுருவில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் என் உறவினர் ஒருவரிடம். இதன் கன்னட வார்த்தை என்ன எனக் கேட்டபோது பதில் இல்லை. அப்படி ஒரு வார்த்தை இருப்பதாகவும் அவருக்குத் தெரியவில்லை.

    ழகரம் ஒன்று மட்டுமே போதும் தமிழின் தொன்மம் காக்க.

    ReplyDelete
  47. ஐயா உங்க கருத்துக்கு மிகவும் நன்றி ஆதி பகவன் அப்படிங்கிற வார்த்தைக்கு நல்ல விளக்கம் கொடுத்து இருந்தீங்க நன்றி ஐயா அதே மாதிரி திருக்குறளில் உள்ள முதல் திருக்குறள் ஆன அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற முதல் திருக்குறளுக்கு நானறிந்த பொருள் என்னவென்றால் ஆதிபகவன் என்ற சொல்லானது முதலில் தோன்றிய ஒரு பொருளிலிருந்து அல்லது ஒரு உயிரிலிருந்து அகர முகர எழுத்துக்கள் மற்றும் அனைத்து உயிரினங்கள் அதுபோக இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் உருவாகி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறியிருக்கலாம் ஆதிபகவன் என்ற சொல்லுக்கு சூரியன் அல்லது வெப்பம் என்ற பொருள் கொள்ளலாம் நாம் திருக்குறளை ஒரு அறிவியல் நூலாக கருத வேண்டும் அதுமட்டுமல்லாது தமிழ் மொழியையே நாம் அறிவியல் மொழியாகத் தான் கருத வேண்டும் மற்றும் சமஸ்கிருத மொழி ஒரு மொழியே அல்ல என தமிழ் சங்கம் 4 நிகழ்ந்த பொழுது சில மொழி ஆய்வாளர்கள் கூறியிருந்தனர் சங்கம்4 நிகழ்ச்சியை தாங்கள் காணொளி மூலமாக வலையொலி யில் உங்களால் தற்போது கூட காண இயலும் தமிழ் மொழியிலிருந்து தான் சமஸ்கிருத மொழி உருவாகி இருக்க வேண்டும் சமஸ்கிருதம் என்ற வார்த்தைக்கு கூட அர்த்தம் தமிழ் மொழியில்தான் இருக்கிறது நன்றி வணக்கம்

    ReplyDelete
  48. Sir, why there is no new post for last few years, Awaiting for your new post. Kindly reply for this, thanks.

    Regards
    Shankar

    ReplyDelete
  49. @kryes
    என் மகளுக்கு *அச்சிரா* என்று பெயர் சூட்டினேன்

    அச்சிரம் - என்கிற சொல் குறுந்தொகை 82ஆம் பாடல் "குறிஞ்சி-தலைவி கூற்று"இல் உள்ளது,
    அதிலிருந்தே இருந்தே அச்சிரா பிறந்தது,

    ஆனால் இது அரபு மொழி பெயர் என்று ஒரு இணையத்தில் சொல்கிறார்கள்,

    அச்சிரா தமிழ் பெயர்தானே? ஐயம் போக்குங்கள்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP