Wednesday, July 18, 2007

நீங்க குளிக்கணும்னா உக்கமும் தட்டொளியும் தேவையா?

உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி! நீங்கள் குளிப்பதற்கு இவை இரண்டும் தேவையா? ஆம் என்றால் ஏன்? - இது தான் இன்றைய கேள்வி!
கேள்வியை வேணும்னா கொஞ்சமா மாற்றி யோசிச்சுப் பாருங்க! நம்மைக் காலங் கார்த்தால அம்மா எழுப்பி விடறாங்க...என்ன செய்வீங்க?

அடப் போம்மா-ன்னு முரண்டு புடிச்சித் திரும்பிப் படுப்பீங்க! விடாப்பிடியா எழுப்பறாங்க!...........சரி...எழுந்தாச்சு!
எத்தனை பேர், நேராக் கண்ணாடி முன்னாடி போய் நின்னு, தலைமுடியை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவீங்க?
டேய் சங்கரா, சந்து முனையில் போய் ஒரு குடம் தண்ணீர் புடிச்சிக்கிட்டு வாடா-ன்னு சொல்லுறாங்க! இப்ப என்ன செய்வீங்க? கண்ணாடி முன்னாடி போவீங்களா, மாட்டீங்களா? மறைக்காம உண்மையச் சொல்லுங்க! :-)


இன்னும் காய்ச்சல் தீரலையா? இன்னுமா உளறிக் கொண்டு இருக்கே? என்று கேட்கத் தோணுகிறதா? பொறுமை! பொறுமை!!
நம்ம நாமக்கல் சிபி, திருப்பாவைப் பாசுரங்கள் பொங்கப் பொங்க, ஒரு தொடர் கதை போட்டிருக்காரு! அவசியம் பாருங்க! அதைப் பார்த்தவுடன், என் உள்ளம் ஏனோ கிறங்கத் தொடங்கி விட்டது! இனிய தமிழ் என் உள்ளத்தில் பொழிந்து வழிகிறது!

அது ஏனோ தெரியவில்லை, ஆண்டாள் என்றாலோ, திருப்பாவை என்றாலோ, அப்படி ஒரு ஈர்ப்பு, காந்த சக்தி!
காதலா? பக்தியா?
இன்பத் தமிழா? இறை அன்பா? இசையா?
ஒரு பெண்ணின் கனவா? கதையா? அழகா? அலங்காரமா? - எது? எது?
இன்று பூர நட்சத்திரம் (ஆடிப் பூரம், அவள் பிறந்த நாள், அடுத்த மாதம்...) ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காணலாம் வாங்க!


எல்லாப் பெண்களும், சிற்றஞ் சிறுகாலே, மார்கழி நீராடப் போறாங்க!
ஒருவர் இன்னொருவரை அழைக்க, இன்னொருவர் இன்-இன்னொருவரை அழைக்க....
இப்படியே எல்லாரும் பாடிக்கிட்டே போறாங்க...போயி கண்ணன் வீட்டு வாசலில் நிக்கறாங்க!
பலமாக் குரல் கொடுத்து, எல்லாரையும் எழுப்பறாங்க!

கேள்வி நம்பர் 1:
பெண் அடியவர்கள், அன்பர்கள் எல்லாம் இன்னும் நீராட வில்லை!
நீராடாமலேயே, தமிழ் வேதமான, பிரபந்தத்தை ஓதுகிறார்கள்! கண்ணன் ஆலய வாசலிலும் குளிக்காமலேயே நிற்கிறார்கள்! - ஆண்டாளே இப்படிச் செய்யலாமா? இது சரியா? சொல்லுங்கள்!:-)))
நீங்க உங்க வீட்டில் இப்படிப் பண்ணா, குளிக்காம கோவிலுக்கு வந்தா, அம்மா அப்பா மனைவி உங்களை சும்மா விடுவார்களா?:-)))


எல்லாரும் கண்ணனின் காதலி, நப்பின்னையை எழுப்பறாங்க! எழுப்பி.....
நப்பின்னை நங்கையே, கண்ணன் எங்கள் தலைவன்! உமக்கும் எமக்கும் அவனே நாயகன்!
அவன் தன்னுடைய அன்பினால் எங்களை எல்லாம் நீராட்ட வேண்டும்!
எங்கள் பிறவி என்னும் பிணியை அவன் அருள் என்னும் நன்னீர் கொண்டு கழுவி, எங்களைக் கடைத்தேற்ற வேண்டும்.
அவனை எழுப்பி, எங்களுடன் அனுப்பி வையம்மா...
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

(திருப்பாவை - 20ஆம் பாசுரம் - முப்பத்து மூவர் என்று தொடங்கும் கவிதை - பாடலைக் கேட்க, சொடுக்கவும்)


உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி!
விசிறியும் கண்ணாடியும் கையில் கொடுத்து, எங்களை நீராட்ட அவனை அனுப்பி வை, தாயே!
கேள்வி நம்பர் 2:
நீராடுவதற்கு எதற்கு விசிறியும் கண்ணாடியும்?
கேள்வி நம்பர் 3:
அப்படியே தேவை என்றாலும், இந்தக் கண்ணாடியும் விசிறியும் யாருக்குத் தேவை?
அவனுக்கு நீ கொடுத்து அவனை அனுப்பி வை என்கிறார்களே!
அப்படிக் கொடுத்து அனுப்பி வைப்பது, அவனுக்கா? எங்களுக்கா??

இது பற்றிப் பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே! நீங்கள் அறிந்தவரை உங்கள் கருத்து என்ன என்று சொல்லி தெளிவு படுத்துங்களேன், ப்ளீஸ்!
அன்புக்கு நன்றி!
Kannabiran Ravi Shankar


இது பற்றி அன்பு நண்பர் ஜி.ராகவன், ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட திருப்பாவை தொடரில், பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறுத்த குறுக்குடைய நப்பின்னை நாயகியே துயில் எழுவாய்! அப்படியே உனது மணவாளன் கண்ணனுக்கு விசிறிடுவாய். அந்தக் குளிர் காற்று தீண்டவும் அவன் எழுவான். அப்படி எழுகையில் அவன் முகம் காட்டக் கண்ணாடியைத் தருவாய். அவன் இப்பொழுதே எழுந்தால் தான் பாவை நீராடி அருள் பெறுவாய் எம்பாவாய்!

ராகவனின் இந்தச் சிந்தனை வித்தியாசமான ஒன்று! - அது மிக நன்று!
இருப்பினும் சீர் தூக்கிப் பார்த்தேன்! ஏனோ சரியாகப் பிடிபடவில்லை!

1. நீங்க தூங்கும் போது உங்களுக்கு விசிறினா, நீங்க மேலும் தூங்குவீங்களா? இல்லை எழுந்து கொள்வீர்களா? - ஹிஹி...குளிர் காற்றில் இன்னும் இழுத்துப் போர்த்தித் தான் தூங்குவீங்க இல்லையா? அப்படியிருக்க, ஒருவரை விசிறி எழுப்ப முடியுமா?

2. எழுப்பி விட்டவுடன், கண்ணாடி பார்த்து தலை திருத்திக் கொள்வீர்களா?

3. எழுந்தவுடன் தருவதற்குப் பல பொருட்கள் உள்ளன! பெட் காபி (:-), பல் விளக்கம், குளிக்க எண்ணெய் இல்லை முகப் பூச்சு, நெற்றித் திலகம்....இதை எல்லாம் சொல்லாமல், உக்கமும் தட்டொளியையும் மட்டும் ஏன் ஆண்டாள் சொல்ல வேண்டும்?

4. நோன்புக்கு வேண்டிய நெய்யுண்ணோம், பாலுண்ணோம் எல்லாம் பட்டியல் இட்டுச் சொல்கிறாள். கோல விளக்கு, கொடி, விதானம், ஆலின் இலை எல்லாம் அருளேலோ என்று வாய் விட்டுக் கேட்கிறாள்! அப்படி இருக்க உக்கமும் தட்டொளியும் கேட்பது கூட நோன்புக்குத் தானா?

இதுக்கு மேல நண்பர்கள் நீங்க தான் வந்து சொல்லணும்! அம்மா கோதை! எதுக்கும்மா இதையெல்லாம் நீ கேட்ட?
உக்கம் = விசிறி = Hair Dryer
தட்டொளி = கண்ணாடி = Hand Mirror, அதான் சின்னப் பெண் Makeup kit போலக் கேட்டிருப்பாள் என்று வீட்டில் சொல்லறாங்க! இத நான் எங்க போய் சொல்ல! நீங்களே சொல்லுங்க! :-)))

72 comments:

  1. ஆஹா!!
    நல்ல கேள்வி!! நீங்கள் கண்டுபிடித்து எனக்கும் சொல்லுங்கள் அண்ணா!!!!
    Iam really curious!! :-)

    ReplyDelete
  2. உங்க வீட்டம்மா சொன்னதுதான் சரி...
    (அப்பாடி, நாளை-பின்ன கேஆர் எஸ் வீட்டுக்குப் போனா ஒருவாய் காப்பி கண்டிப்பாக உண்டு :-))

    எல்லோரும் கருத்துக்களை சொல்லுங்க திரும்ப வந்து தெரிந்துகொள்கிறேன்....ஹிஹிஹி....

    ReplyDelete
  3. ஊரில் இருந்தால் திரு.வேலுக்குடி வரதாச்சாரியின் மகனிடம் கேட்டிருக்கலாம்?தொலைபேசி / மின் அஞ்சல் கிடைத்தால் கேட்டு சொல்கிறேன்.
    எனக்கு தெரியாது.

    ReplyDelete
  4. siva gnanam to me
    show details 6:48 am (1 minute ago)


    pls continue
    i dont know why the computer reject my comments on yr articles
    i am yr regular visitor right from yr artcles on PAAVAI( last Margazhi)
    sivagnanam.g.

    ReplyDelete
  5. //CVR said...
    ஆஹா!!
    நல்ல கேள்வி!! நீங்கள் கண்டுபிடித்து எனக்கும் சொல்லுங்கள் அண்ணா!!!!
    Iam really curious!! :-)//

    அஹோ...வாரும் பிள்ளாய்!
    அடியேன் உம்மைக் கேட்டால்...நீர் எம்மையே கேட்டுச் சோதிப்பது சத்குருவாகிய உங்களுக்கு அழகாகுமா?

    அது என்ன க்யூரியஸ்? அதுவும் பெண்கள் நீராடும் பொருட்களில்? இதைக் கேட்பார் யாருமில்லையா? :-)

    ReplyDelete
  6. //மதுரையம்பதி said...
    உங்க வீட்டம்மா சொன்னதுதான் சரி...
    (அப்பாடி, நாளை-பின்ன கேஆர் எஸ் வீட்டுக்குப் போனா ஒருவாய் காப்பி கண்டிப்பாக உண்டு :-))//

    ஆகா, வாங்க மெளலி சார்!
    அது என்ன ஒரு வாய் காபி? பலவாய் காபி, பல வாய் தரோம்! வாங்க!
    ஏலக்காய் தட்டி ஒரு முறை, சுக்கு போட்டு ஒரு முறை, காப்பச்சீனோ ஒரு முறை....

    //எல்லோரும் கருத்துக்களை சொல்லுங்க திரும்ப வந்து தெரிந்துகொள்கிறேன்....ஹிஹிஹி//

    இப்படி எஸ்கேப் ஆனா எப்படி?
    மதுரையார் நீங்க சொன்னா, வில்லிபுத்தூர் விரும்பிடுமே! இன்னொரு மதுரையாரை இன்னும் காணோம்! தூத்துக்குடியாரையும் காணவில்லை! :-)

    ReplyDelete
  7. //வடுவூர் குமார் said...
    ஊரில் இருந்தால் திரு.வேலுக்குடி வரதாச்சாரியின் மகனிடம் கேட்டிருக்கலாம்?//

    வேளுக்குடி அண்ணாவின் இசைப்பேருரை வலையில் இருக்கிறதா என்று நானும் தேடிப் பார்க்கிறேன்!

    //தொலைபேசி / மின் அஞ்சல் கிடைத்தால் கேட்டு சொல்கிறேன்//.

    நன்றி குமார் சார்!

    ReplyDelete
  8. பொதிகைச் சானலில்
    ஸ்ரீ வேளுக்குடி சொல்லி, நான் கேட்ட பிரகாரம் சொல்லணும்னா,
    ஆண்டாள் இதையெல்லாம் நோன்பு நோற்பதற்காகத்தான் கேட்கிறாள்


    என்று நினைக்கிறேன்.
    இன்று ஆடிப்பூரமா.ரொம்ப நன்றி.ரவி.
    (அக்கார வடிசலுக்கு இன்னுமொரு )(காரணமாய் )பூரத்தில் வந்துஉதித்தாள்
    தாள் வாழியே.

    ReplyDelete
  9. //siva gnanam to me
    pls continue
    i dont know why the computer reject my comments on yr articles
    i am yr regular visitor right from yr artcles on PAAVAI( last Margazhi)//

    நன்றி சிஜி சார்!
    இந்தக் கேள்வி என் மனத்துள் ரொம்ப நாள் கேள்வி! இன்னிக்கு போட்டு உடைத்து விட்டேன்! :-)

    ReplyDelete
  10. //வல்லிசிம்ஹன் said...
    பொதிகைச் சானலில்
    ஸ்ரீ வேளுக்குடி சொல்லி, நான் கேட்ட பிரகாரம் சொல்லணும்னா,
    ஆண்டாள் இதையெல்லாம் நோன்பு நோற்பதற்காகத்தான் கேட்கிறாள்//

    மரபு வழி விளக்கம் - அப்படித் தான் உள்ளது வல்லியம்மா! ஆனால் பரனூர் அண்ணா இதை வேறு மாதிரி விளக்கிய நினைவு! ஆனால் நினைவுக்கு வரவில்லை! ஏன்னா அப்போ நான் பள்ளி மாணவன்!

    //இன்று ஆடிப்பூரமா.ரொம்ப நன்றி.ரவி.//

    இல்லை இன்று பூரம் - அவ்வளவு தான்!
    ஆடிப்பூரம் - Aug 15th
    (ஆடிப் பூரம், அவள் பிறந்த நாள், அடுத்த மாதம்...) என்று பதிவில் போட்டிருந்தேனே!

    ReplyDelete
  11. sri KRS,

    the exposition, as given in Desikan's web site ,under SRIVISHNAVAM as follows:

    The girls approach Krishna and Nappinnai individully. Andal first praises Krishna’s courage and power in war then Nappinnai’s beauty and wealth really seeking her permission to enjoy Krishna’s company. Nappinnai yields; this is a major success for Andal, celebrated by Parasara Bhattar in his Sanskrit Tanian. ( Fan and Mirror are symbols of Proprietary love)]

    sundaram

    ReplyDelete
  12. இரவி. அடியேன் நீங்க இடுகையை இட்டவுடனேயே படித்துவிட்டேன். மற்றவர்கள் வந்து சொல்லட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். (ஹி.ஹி. பதில் தெரியாதுன்னு எப்படி சமாளிக்கிறது?)

    யாருப்பா அது சத்தம் போடறது? என்ன? மார்கழி மாசம் குளுருதா? காத்தாடியைப் போட்டதால அணைக்கச் சொல்லிச் சத்தம் போடறியா? சரியா போச்சு போ! நல்லா போத்திக்கிட்டுப் படுப்பியா? எந்திரிச்சு உக்காந்து என்ன விவரம்ன்னு கேக்குற?

    என்ன? இம்புட்டு பொண்ணு புள்ளைங்க வந்துருக்காங்களா? ஆகா. விளக்கெண்ணெய் அப்புன மாதிரி இருக்குமே மூஞ்சி. அந்தக் கண்ணாடியைக் குடு. கொஞ்சம் பாத்துக்கறேன்.

    ReplyDelete
  13. Hella KRS
    KVB anbudan ezhudhugiren.nalam engum
    nirka, Thiruppavaikku varuvom.
    ukkam,thattoli yavum nonbukku aana
    upakaranangal.
    ukkam enbathal kainkaryathil ahangaram illmaiyum,thattoli enbathal svroopa gnanamum sollapadugirathu.
    Nappinai nagaikku kannan sulabamaga kariyam seyvan.enave avalai azhithu
    merpadi kainkaryathaiyum gnanamum kodithu athodu kannanaiyum kodukka
    vendugirargal enbadhe thertha porul

    ReplyDelete
  14. Get Sri Velukudiyar's explanation here
    http://www.ibiblio.org/ramanuja/thiruppavai/
    SR

    ReplyDelete
  15. //Anonymous said...
    Nappinnai yields; this is a major success for Andal, celebrated by Parasara Bhattar in his Sanskrit Tanian. ( Fan and Mirror are symbols of Proprietary love)]
    sundaram//

    சுந்தரம் சார்! நல்ல விளக்கம்! நன்றி!
    ஆக, விசிறியும், கண்ணாடியும் காதலியின் ஏக போக உரிமை!
    அதை நப்பின்னையிடம் இருந்தே ஆண்டாள் கேட்டுப் பெறுகிறாள் என்று சொல்ல வருகிறீர்கள்!

    "நப்பின்னை...நீ தான் அவனை மணாளனாக ஆக்கிக் கொண்டாயே! இனி அவை உனக்கு எதற்கு?
    எங்களிடம் கொடுத்தாலாவது, நாங்கள் அதைக் கொண்டு, அவன் அன்பைப் பெற முயல்வோம்!" என்று ஆண்டாள் உரிமையுடன் கேட்டுப் பெறுகிறாளா?

    ஹூம்...மற்றவர்கள் வந்து என்ன சொல்கிறார்கள் என்றும் பார்ப்போம்!

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    இரவி. அடியேன் நீங்க இடுகையை இட்டவுடனேயே படித்துவிட்டேன். மற்றவர்கள் வந்து சொல்லட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். (ஹி.ஹி. பதில் தெரியாதுன்னு எப்படி சமாளிக்கிறது?)//

    குமரன்
    பதில் தெரியாது-ன்னா ஒரே வழி...சடால்-னு பதிவு போட்டுறது தான்! என்னை எடுத்துக்கங்க! :-)
    ஹைய்யா நான் எஸ்கேப்!

    //காத்தாடியைப் போட்டதால அணைக்கச் சொல்லிச் சத்தம் போடறியா...சரியா போச்சு போ! நல்லா போத்திக்கிட்டுப் படுப்பியா? எந்திரிச்சு உக்காந்து என்ன விவரம்ன்னு கேக்குற?//

    அதே அதே!
    ஜிரா எங்கப் போனாரு? சீக்கிரம் வாங்க ஜிரா!

    //என்ன? இம்புட்டு பொண்ணு புள்ளைங்க வந்துருக்காங்களா? ஆகா. விளக்கெண்ணெய் அப்புன மாதிரி இருக்குமே மூஞ்சி. அந்தக் கண்ணாடியைக் குடு. கொஞ்சம் பாத்துக்கறேன்//

    இது முற்றிலும் உண்மை! நான் கூட இப்படித் தான் செய்வேன்! :-)

    அய்யோ...திருப்பாவை மயக்கத்தில் ஏதாச்சும் உளறிட்டேனா? யார் காதிலும் நான் சொன்னது விழலையே! :-)

    ReplyDelete
  17. நான் எங்கயும் போகலை. இங்கதான் இருக்கேன். நடக்கட்டும் நடக்கட்டும். எல்லாரும் பேசட்டும். நான் கேட்கிறேன்.

    //காத்தாடியைப் போட்டதால அணைக்கச் சொல்லிச் சத்தம் போடறியா...சரியா போச்சு போ! நல்லா போத்திக்கிட்டுப் படுப்பியா? எந்திரிச்சு உக்காந்து என்ன விவரம்ன்னு கேக்குற?//

    :))))))))) இப்பிடித் தூங்குறவங்களுக்கும் விசிறி வேணும். ஆனா திருப்பிப் பிடிக்கனும். கண்ணன் எழுந்திருக்கிறவன்னுதான் நப்பின்னை ஒழுங்கா பிடிக்கிறாங்க.

    ReplyDelete
  18. அடியவர்களுக்கு விசிறி, கண்ணாடி, மற்றும் பொருட்கள் கொடுத்து உபசரிப்பது மரபு. அந்த மரபுப்படி ஆண்டாள் நப்பின்னையிடம் உக்கமும், தட்டொளியும் கேட்டிருக்கிறாளோ? கண்ணனையும் கூடவே அனுப்பக் கேட்டிருப்பதால் கண்ணனைப் பாடிப் பணிந்து அவனுக்கு உபசரிக்கவும் கேட்டிருப்பாளோ? குழப்பமா இல்லை? வரேன், நீங்களே கேட்டுட்டுச் சொல்லுங்க, மெதுவா வந்து பார்த்துக்கறேன்.

    ReplyDelete
  19. இங்கே பலரும் அழகிய கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள்! ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு சுவை! எது மிகுந்த சுவையுடன் இயைந்து வருகிறது என்று எல்லாரும் வந்து சொன்ன பின் பார்க்கலாம்!

    முதலில் சுந்தரம் சார் சொன்னதைக் கொஞ்சம் யோசிக்கலாம்.
    //ஆக, விசிறியும், கண்ணாடியும் காதலியின் ஏக போக உரிமை!
    அதை நப்பின்னையிடம் இருந்தே ஆண்டாள் கேட்டுப் பெறுகிறாள்//

    பொதுவா நம்ம ஊர்களில் ஒரு வழக்கம் இருக்கு! எதையாச்சும் மங்கலப் பொருளா வாங்கணும்னா, அதை இன்னொரு மங்கலமானவர் கையாலே வாங்குவாங்க!

    எடுத்துக்காட்டா, வளைகாப்பின் போது தாயாகப் போகிறவளுக்குப் போடப்படும் வளையல்கள்! அதை பிள்ளைப் பேறு நிகழ்ந்த பின் அவள் வீட்டில் இருந்து வாங்கி, தன் வீட்டுப் புதுப்பெண்களுக்குப் போடுவாங்க!

    அது போல, இங்கு ஏற்கனவே பேறு பெற்ற விட்டாள் நப்பின்னை. கண்ணனை அடைந்து விட்டாள்!
    அதனால், ஆண்டாள் அவளிடம் இருந்து வாங்கிக் கொள்ள ஆசைப்படுகிறாள் போலும்!

    ReplyDelete
  20. ஆகா...இன்னொரு சூப்பரான விளக்கம்! நாம் எல்லாரும் சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து!...
    இவர் ஒரு பதிவர் இல்லை!
    ஆனால் பதிவரின் தந்தையார்!!


    நம்ம பதிவை பாத்து CVR வீட்ல கேட்டதுக்கு அவரு அப்பா சொன்ன விளக்கத்த கீழே பாருங்க!

    உக்கமும் தட்டொளியும் தந்து உன் மனாளனை, என்ற பாசுரத்திற்கு விவரம் அறிய முதலில் அதற்கு அதன் முன் பாட்டை அறிந்து கொள்ள வேண்டும்.
    குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல், என்ற பாசுரத்தில்,
    ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ நப்பின்னைத் தாயார் கதவை திறக்க முடியாமல்,
    அவளை ஸ்ரீ கண்ணன் அணைத்துப் படுத்துக் கொண்டு இருக்கிறான்.

    ஸ்ரீ கண்ணனை எவ்வளவு எழுப்பினாலும் அவன் கண் திறந்து காண மாட்டேன் என்கிறான். ஹே நப்பின்னைத் தாயே, நீயாவது எழுந்திருந்து எங்களுக்கு இரங்கக் கூடாதா? வசுக்கள் - 8, ருத்திரர்கள் - 11 ஆதித்தியர்கள் - 12, அச்வினீ குமாரர்கள் - 2
    இவ்வாறு 33 கோடி தேவர்களைக் காக்க ஓடிய எம்பெருமான் எங்களைக் காக்கக் கூடாதா?

    ஹே, செப்பன்ன மென் முலை-செவ்வாய்-சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்
    திருவே துயிலெழாய்; நீயும் எழுந்து உன் மணாளனையும் எழுப்பி,அவனைச் சாந்தப்படுத்தி,
    (அதாவது அந்தக் காலத்தில் மனைவியானவள் தான் சீக்கிரமே எழுந்து
    தன் புருசனின் பாதம் பணிந்து உக்கமும் தட்டொளியும்,
    அதாவது தன் முந்தனையால் புருசன் முகத்தை விசிறி,
    தன் இனிய முகத்தை (தட்டொலியாகிற கண்ணாடி போன்ற முகத்தை காட்டி),
    பறையாகிற தன் வளையல் சத்தத்தை ஒலியாக எழுப்பி எழுப்புவார்கள்.

    அது போல், உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை,
    இப்போதே எம்மை நீராட்டேலோ, எம்பாவாய்.
    அதே போல எங்களையும் அவன் திருவடி என்கிற மோட்ச நிழலில்,
    எங்கள் சாபம் இழிந்து, ஆனந்த சமுத்திரத்தில் நீராட்டேலோ எம்பாவாய்..
    என்று ஸ்ரீ ஆண்டாள் மிக அழகாகக் கூறுகிறாள்.

    திருப்பாவை முப்பதும் அறிந்தாலே வேதம் முழுவதயும் அறிந்தாற் போல் ஆகும்.
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    - அப்பா

    ReplyDelete
  21. இராகவன் சொன்னது சரியென்று சொல்லும் விதமாகச் மேலே இருப்பதைச் சொன்னேன். மார்கழியில் விசிறினால் கொஞ்சம் அதிகமாகப் போர்த்திக் கொண்டு படுப்பதற்கும் வாய்ப்புண்டு; எழுந்து 'என்ன விவரம்' என்று கேட்பதற்கும் வாய்ப்புண்டு. கண்ணன் இரண்டாவது வகை இராகவனின் பார்வையில்.

    அப்படி எழுந்தவன் கோதையையும் அவள் தோழியர்களையும் கண்டவுடன் கண்ணாடி கேட்கிறான்.

    ஆண்டாள் கண்ணனை நன்கு அறிந்தவள். அது தான் இரண்டையும் கொடுத்து கண்ணனை எழுப்பி எங்களோடு நீராட அனுப்பு நப்பின்னை என்கிறாள்.

    இது மரபு வழி விளக்கம் இல்லை. மரபு வழி விளக்கம் மற்றவர்கள் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  22. எனக்கு கேள்வியே புரியல...

    யார் கைல விசிறி, கண்ணாடி கொடுத்து அனுப்ப சொல்றாங்க?

    கேள்விய சரியா சொல்லுங்க பதிலை நச்சுனு நான் சொல்றேன்...

    ReplyDelete
  23. // G.Ragavan said...
    இப்பிடித் தூங்குறவங்களுக்கும் விசிறி வேணும். ஆனா திருப்பிப் பிடிக்கனும்//

    மட்டையில் அடிச்சி் எழுப்பினா வலிக்குமே ஜிரா!
    ஓங்க வீட்டுல இப்பிடித் தான் ஒங்களை எழுப்புவாங்களா? ஏன்னா நீங்க கண்ணன் இல்லையே! கண்ணன் விசிறினாலே எழுந்து விடுவான். நீங்க ராகவனாச்சே! :-)

    ReplyDelete
  24. //கேள்வி நம்பர் 2:
    நீராடுவதற்கு எதற்கு விசிறியும் கண்ணாடியும்?//

    இந்த கேள்விய எனக்கு போன் பண்ணி கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்...

    விசிறி மட்டை கைப்பிடில அடி வாங்கியிருக்கீங்களா? செமயா வலிக்கும். யாராவது குளிக்காமா அடம் பண்ணா நல்லா அடிக்க விசிறி கொடுத்துவிட சொல்லியிருக்காங்க.

    கண்ணாடி எதுக்குனா, அவுங்க மூஞ்சிய கண்ணாடில காட்டி "பார், முழுசா சந்திரமுகியா மாறி இருக்க கேவலமான உன் மூஞ்ச பார். இதுக்கு மேலயும் நீ குளிக்கலனா ஊர்ல இருக்கற ஒரு லூசுப்பய கூட உன் பின்னால வர மாட்டானு" சொல்லி குளிக்க வைக்கத்தான் கண்ணாடி.

    இது கூட தெரியாம நீங்க எப்படி பதிவெழுதறீங்க...

    ReplyDelete
  25. @வெட்டி
    //யார் கைல விசிறி, கண்ணாடி கொடுத்து அனுப்ப சொல்றாங்க?//

    அதுதான்யா கேள்வியே!!! :-D

    ReplyDelete
  26. //குமரன் (Kumaran) said...
    இராகவன் சொன்னது சரியென்று சொல்லும் விதமாகச் மேலே இருப்பதைச் சொன்னேன்//

    ஜிரா சொல்வதில் இருந்து அடியேன் முற்றிலும் மாறுபடுகிறேன், குமரன்!
    அவர் சொல்வது....அதிக விளக்கங்கள் எதுவும் தேவைப்படாது, எளிமையா இருப்பது போல ஒரு தோற்றத்தைத் தருகிறது!
    மரபு வழி விளக்கத்துக்கு ஒரு மாற்று போல் தோற்றம் காட்டுகிறது!
    ஆனால் அது கருத்துக்கு இயைந்ததாக இல்லையே!

    1. இலக்கியங்களில் வேறு எங்கும் விசிறி கொண்டு எழுப்புவதாக இல்லை! திருப்பள்ளி எழுச்சி, சுப்ரபாதங்களில் கூட இப்படி இல்லை!
    சைவ/வைணவ பள்ளி எழுச்சிகளில் கூட இப்படி இருப்பதாகத் தென்படவில்லை!

    2. முன்னுதாரணங்கள் கூடத் தேவை இல்லை! விசிறி வீசி எழுப்புவது என்பது நடைமுறையில் எங்கும் பார்க்க முடியாத ஒன்று! ஜிரா சொல்லும் கண்ணாடி விளக்கம் ஏற்புடைத்தே! ஆனால் விசிறி விளக்கம் அன்று!

    3. ஆண்டாள் கண்ணனை நன்கு அறிந்தவள்! நப்பின்னையும் அப்படியே! பாட்டை இன்னொரு முறை நல்லாப் பாருங்க!

    உக்கமும் தட்டொளியும் "தந்து", என்று தான் வருகிறது!
    உக்கம் வீசி, தட்டொளி தந்து என்று வரவில்லை!

    "உக்கமும் தட்டொளியும்" என்று "உம்" போடுகிறாள் கோதை!
    இவை இரண்டையும் சேர்த்து "தரச்" சொல்கிறாள்!

    நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் - இன்னும் நப்பின்னை கூட எழுந்திருக்கவில்லை!
    முதலில் அவளை எழுப்புகிறாள்! இதற்கு முந்தைய பாசுரத்திலும் மலர் மார்பா வாய் திறவாய் என்று அவனையும் எழுப்புகிறாள்!

    இப்படித் தலைவன், தலைவி இருவருமே எழுப்பப்படுகின்றனர்!
    எத்தனை போதும் துயில் எழ வொட்டாய் காண் என்று நப்பின்னையைக் கேள்வி கேட்கிறாள்!
    உன் புருஷனை எழ விட மாட்டாய் போல இருக்கே! இது தத்துவமன்று! என்று "நச்" என்று சொல்கிறாள் :-)

    தலைவன், தலைவி எழுந்தவுடன்...
    உக்கமும், தட்டொளியும் "தந்து" - உன் மணாளனை அனுப்பி வைக்கச் சொல்கிறாள்! "தந்து" என்ற சொல் இங்கு மிகவும் முக்கியம்! அவனிடம் இவை இரண்டையும் கொடுத்து, அவனை எங்களை நீராட்ட அனுப்பி வை என்பதே ஆண்டாளின் கோரிக்கை!

    ஏன் இவை இரண்டும் "தந்து"?
    இவை இல்லாமல் எங்களை அவனால் நீராட்ட முடியாதா? - இதன் விளக்கம் பின்னால் வரும்! மற்ற அன்பர்கள் கருத்தையும் பார்ப்போம்!

    ReplyDelete
  27. என் மனசுல பட்டதை சொல்கிறேன். ஆனால் இது முழுவதும் கற்பனை.

    காலையில் தூக்கத்தில் வீசினால் இன்னும் சுகமாக தூக்கம் தான் வரும். இது தெரிந்து தான், நப்பின்னை அவர்கள், கண்ணனை மற்ற பெண்களுடன் அனுப்ப ஆசைப்படாமல், ஒரு கையில் விசிறியால் வீசி கண்ணனை தூங்க வைக்கிறாள். மறு கையில் கண்ணாடியை வைத்து தன் அழகை ரசித்துக் கொண்டிர்ருக்கிறாள். இது தெரிந்து தான் ஆண்டாளும், மற்ற பெண்களும், கண்ணனை எழுப்புவதற்காக இவை இரண்டையும் நப்பின்னையிடமிருந்து கேட்டு வாங்கிக் கொண்டு விடுகிறார்கள். இது இரண்டும் கண்ணன், தனக்கு தான் சொந்தம் என்ற ஆசையைக் குறிக்கம் பெண்ணின் இயல்பான குணங்கள். இது எப்படி இருக்கு. ஆண்டாவா மன்னிச்சுக்கோப்பா.

    ReplyDelete
  28. rangeaana kelvi! CVR sonnathu pol, answer neenga thaan kandupidichu sollanum!


    good post!

    ReplyDelete
  29. //Kooram Varadarajan said...
    ukkam enbathal kainkaryathil ahangaram illmaiyum,
    thattoli enbathal svroopa gnanamum sollapadugirathu.//

    வாங்க KVB அண்ணா!

    விசிறுவது - திரு ஆலவட்டக் கைங்கர்யம் - இதில் ஈடுபடும் போது அடியார்களுக்கு எல்லாம் எந்தப் பேதமும் இன்றி விசிறுவது -அதனால் தொண்டில் அகங்காரம் வராது - சரியா அண்ணா?

    தட்டொளி = சொரூப ஞானம்
    இதற்குக் கொஞ்சம் விளக்கம் வேண்டும் அண்ணா!

    //enave avalai azhithu
    merpadi kainkaryathaiyum gnanamum kodithu athodu kannanaiyum kodukka
    vendugirargal enbadhe thertha porul//

    பெருமாளைத் தாயார் மூலமாகப் பற்றிச் சரணாகதி செய்வது!
    தாயார் புருஷகாரம் செய்து, நம்மை ஆட்கொள்ளுமாறு பெருமாளிடம் பரிந்து பேசுபவள்! அதனால் நப்பின்னையை வேண்டி அவள் மூலமாகக் கேட்டுப் பெறுகிறார்கள்!

    ReplyDelete
  30. //Shobha said...
    Get Sri Velukudiyar's explanation here
    http://www.ibiblio.org/ramanuja/thiruppavai/
    SR//

    வாங்க ஷோபா...அருமையான தளம்! அழகான உபன்னியாசம்!
    சுட்டி தந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  31. //கீதா சாம்பசிவம் said...
    அந்த மரபுப்படி ஆண்டாள் நப்பின்னையிடம் உக்கமும், தட்டொளியும் கேட்டிருக்கிறாளோ? கண்ணனையும் கூடவே அனுப்பக் கேட்டிருப்பதால் கண்ணனைப் பாடிப் பணிந்து அவனுக்கு உபசரிக்கவும் கேட்டிருப்பாளோ?//

    ஆக மொத்தம் இவை இரண்டும் கண்ணனுக்கு அல்ல! அடியவர்களுக்குத் தான்! அதை அவர்கள் வாங்கிக் கொண்டு பின்பு அதைக் கண்ணனுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்ல வரீங்களா கீதாம்மா? :-))))

    ReplyDelete
  32. ////வெட்டிப்பயல் said...
    எனக்கு கேள்வியே புரியல...
    யார் கைல விசிறி, கண்ணாடி கொடுத்து அனுப்ப சொல்றாங்க?//

    பாலாஜிக்கு என்ன குழப்பம்-னா...நப்பின்னை என்றால் யார் என்று! தொலை பேசினார்!
    தற்சமயத்துக்கு
    தலைவன் = கண்ணன் (இறைவன்)
    தலைவி = நப்பின்னை (இறைவி)
    என்று வைத்துக் கொள்ளுங்கள் பாலாஜி!

    ஆண்டாள், இவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து, கண்ணனைத் தங்களுடன் அனுப்பி வைக்குமாறு இறைவியை வேண்டுகிறாள்! சும்மா அனுப்பி வைக்கச் சொல்ல வில்லை! விசிறியும், கண்ணாடியும் கூடவே கேட்கிறாள்!

    அதான் கேள்வி!
    1. நீராட ஏன் இந்த விசிறி/கண்ணாடி தேவை?
    2. இந்த விசிறி/கண்ணாடி யாருக்காக - கண்ணனுக்கா இல்லை பெண்களுக்கா (அடியாருக்கா)?

    //கேள்விய சரியா சொல்லுங்க பதிலை நச்சுனு நான் சொல்றேன்...//

    இப்ப நச்சுன்னு சொல்லுங்க! :-)

    ReplyDelete
  33. // வெட்டிப்பயல் said...
    யாராவது குளிக்காமா அடம் பண்ணா நல்லா அடிக்க விசிறி கொடுத்துவிட சொல்லியிருக்காங்க.

    குளிக்கலனா ஊர்ல இருக்கற ஒரு லூசுப்பய கூட உன் பின்னால வர மாட்டானு" சொல்லி குளிக்க வைக்கத்தான் கண்ணாடி//

    "அடியேன்"-னு சொல்லுறது, விசிறியால் "அடிப்பேன்"-னு அர்த்தமா? கலக்கறீங்க பாலாஜி! கண்ணாடிக்கு நல்ல காரணம்! ஓகோ! :-))))

    //இது கூட தெரியாம நீங்க எப்படி பதிவெழுதறீங்க...//

    அதானே! என்னைப் போல ஆளுங்களை எல்லாம் என்ன பண்ணலாம் பாலாஜி! நீங்களே சொல்லுங்க! :-)

    ReplyDelete
  34. //Dreamzz said...
    rangeaana kelvi! CVR sonnathu pol, answer neenga thaan kandupidichu sollanum!//

    என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க...
    ஆண்டாளும் கனவு கண்டாள்...கனாக் கண்டேன் தோழீன்னு
    நீங்களும் Dreamzz-கனவு காணறிங்க!
    நீங்களூம் தான் கண்டுபிடிக்கணும்! நல்லாப் பிடிச்சி சொல்லுங்க! ஏதாச்சும் ஐயம்-னா சத்குரு CVRஐ கேட்டுகுங்க! :-)

    ReplyDelete
  35. //அன்புத்தோழி said...
    இது தெரிந்து தான் ஆண்டாளும், மற்ற பெண்களும், கண்ணனை எழுப்புவதற்காக இவை இரண்டையும் நப்பின்னையிடமிருந்து கேட்டு வாங்கிக் கொண்டு விடுகிறார்கள்//

    நல்ல அழகான சுவையான கற்பனை, அன்புத்தோழீ! :-) ஆனா நீங்க பதிலுக்கு ரொம்ப நெருங்கி வந்துட்டீங்க...எதிர் திசையில் :-)

    //கண்ணன், தனக்கு தான் சொந்தம் என்ற ஆசையைக் குறிக்கம் பெண்ணின் இயல்பான குணங்கள்//

    பெண்ணின் குணமாய் இருக்கலாம் அன்புத்தோழி! ஆனால் இவள் நப்பின்னை! தாயார்!
    பல உயிர்களின் குற்றம் நீக்கி, எம்பெருமானிடம் சேர்த்து வைப்பவள் இவள் தானே! அதனால் இவளுக்கு இதில் "பொறாமை" என்றெல்லாம் ஒண்ணும் கிடையாது! அதான் பாசுரத்தில் அவனை வேண்டாமல், இவளை வேண்டுகிறார்கள்!

    இருந்தாலும் சும்மா உலக வழக்குக்காக.....தத்துவம் அன்று...தகவேலோ! அனுப்பி வை என்று கேட்கிறார்கள்...

    //இது எப்படி இருக்கு. ஆண்டாவா மன்னிச்சுக்கோப்பா//
    இதுல பெருமாளுக்கு இன்பம் தான் அன்புத்தோழீ! இதுல மன்னிக்க என்ன உள்ளது? அவன் வைபவத்தைப் பலவாறு அசைபோடுவதும் அழகு தானே அன்றி், அஃபென்ஸ் எதுவும் கிடையாது! :-)

    ReplyDelete
  36. நான்: எல்லாரும் காமடி பண்ணிட்டிருங்காங்க. 'செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா' கொஞ்சம் வந்து என்னனு பாரு.

    மிஸ்டர் எம்(அதுதான் Maஹாவிஷ்னு): முப்பத்து மூவர் அமரர்க்கும் முன்சென்று கப்பம் தவிக்க போய்ட்டிருக்கேன்.நீயே பதில் சொல்லிக்கோ..

    நான்: சரி எம்.
    _____________
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மனாளனை இப்போதே எம்மை நீ ராட்டேலோர் எம்பாவாய்
    _____________
    இப்போதே எம்மை(அதாவது Maஹாவிஷ்னுவை) அதாவது உன் மனாளனை நீராட்டி, முடித்தவுடன் தலை துவட்டி, தலை காயறத்துக்கு fanஐ போட்டு, என்னது கரன்ட் போயிருச்சா சரி, விசிறியால விசிறி, கண்ணாடில காமிச்சு அழகு படுத்தி
    அனுப்பி வைம்மா வெளில..

    என்ன புரிஞ்சிடுச்சா? ;-). சரி சரி வெப்பம் கொடுக்க விமலன் வரான்.. அதுனால விஷயத்துக்கு வரேன்.
    ______

    இதுல குழப்பமே எம்மை நீராட்டி அப்பிடிங்கறது தான். இந்த கடைசி வரி function overloading..(ஆண்டாள் &கோ குளிச்சிட்டுதான் போயிருக்காங்க.) இதுக்கு 2 அர்த்தம். ஒண்ணு; கண்ண்னை குளிப்பாட்டி, கண்ணாடி காமிச்சு தலை விசிறி அனுப்பி வை.. இரண்டாவது அர்த்தம் அப்பிடி வெளில வந்து கண்ணா எங்களை பிறவிப்பெருங்கடல் போக்க எம்மை உன் அருளால் நீராட்டு அப்பிடிங்கறாங்க கோதையம்மா..

    ReplyDelete
  37. காய்ச்சல் வந்தாலும் வந்தது ஒரே கேள்வி மேல கேள்வி கேட்டு பதிவு போடறீங்களே )))

    //நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்!
    உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய் //

    உக்கமும்(சாமரமும்), தட்டொளி(கண்ணாடியும்) பாவை நோன்பிற்கான சாதனங்கள். சாமரம் மாயையை விரட்டுவதற்கும் கண்ணாடி ஞானத்துக்கும் அடையாளம் - இப்படி ஒரு கருத்து உண்டு.

    நப்பின்னை நங்காய், திருவே, இதில் திருவே என்ற பதம் கவனிக்கத்தக்கது. கண்ணாடி, சாமரம் , கொடி, பேரிகை திருவிளக்கு முதலிய மங்கள சின்னங்கள் திருமகளுக்குரியவை. திருமகளின் பாதங்களுக்கடியில் இவை இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. "தந்துன் மணாளனை" என்பதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம்.

    ReplyDelete
  38. இப்போது, CVR-இன் தந்தையார் அவர்கள் சொன்ன கருத்துக்களைக் கொஞ்சம் சுவைத்துப் பார்ப்போம்! அவர் சொன்ன சொற்களில், இதற்கான பாதி விடை ஒளிந்துள்ளது!

    //அதாவது தன் முந்தனையால் புருசன் முகத்தை விசிறி,
    தன் இனிய முகத்தை (தட்டொலியாகிற கண்ணாடி போன்ற முகத்தை காட்டி)//

    இதில் மிகுந்த நயம் உள்ளது!
    இந்தப் பாசுரம் கண்ணனுக்கு அல்ல! அவன் இல்லத் தலைவிக்குத் தான்! அதனால் தான் "தந்து உன் மணாளனை" அனுப்பு என்று தலைவியைப் பார்த்து ஆண்டாள் பாடுகிறாள்!

    ஒரு பெண், தனியாக ஆணைச் சந்தித்து, வா என்றால் அவன் வரப் போகிறான்! அதை விட்டு விட்டு, எதற்கு இன்னொரு பெண்ணிடம், அதுவும் அவன் தலைவியிடமே, அவனை அனுப்பச் சொல்ல வேண்டும்? அங்கு தான் சூட்சுமம்!

    கண்ணன் கூர் வேல் கொடுந் தொழிலன் மகன். அவனும் கொடுந் தொழிலன் தான்! அவனை அரைகுறையாக எழுப்பி, அனுப்பி வைத்தால் என்ன ஆகும்? சீறி விழுவான்!

    நம்மையே நல்ல தூக்கத்தில் தேவை இல்லாமல் எழுப்பினால் முகம் சுளிக்கிறோம்! இங்கு கண்ணன் குத்து விளக்கு எரிய, மெத்து என்று இருக்கிற சயனத்தில், தலைவியைத் தடவிக் கொண்டு தூங்குகிறான்! இப்ப போயி அவனை எழுப்பினால்?...ஒரு வேளை வேண்டா வெறுப்பாகப் போய் அவர்களைப் பார்த்து விட்டு வரலாம். ஒப்புக்குப் போய் வரலாம்!

    ஆண்டாளுக்குக் கண்ணனை நல்லாத் தெரியும். அவனை விடத் தாயாரின் பரம கருணை தெரியும். தான் அவன் திருமார்பில் வாழ்வது போலவே, எல்லா உயிர்களும் அவனை அடைந்து இன்புற வேண்டும் என்று மனதார விரும்புபவள்! அதனால் தான் தாயாரைப் பற்றிப் பெருமாளைச் சரணாகதி செய்கிறோம். அவளும் குற்றங்களை மறைத்து, குணத்தை மட்டும் பெருசாக் கூறி, நம்மை ஏற்க அவனைத் தூண்டுகிறாள்!

    அதனால் தான் ஆண்டாள் தலைவனை விட்டு விட்டுத் தலைவியைப் பிடித்துக் கொண்டாள்! சும்மா போலியாக..."இன்னும் உன் கணவனை எழவிட மாட்டாயா? இது தத்துவம் அன்று!", என்று சொல்வது போல் சொல்லி விட்டு, உடனே...நப்பின்னை நங்காய் "திருவே" என்று பாசமாக விளிக்கிறாள்!

    தாயாரும், கண்ணனை இப்படியே வெளியில் அனுப்பினால், தூக்கக் கலக்கத்தில், அறியாச் சிறுமியரைக் கடிந்து கொள்வானோ என்று நினைத்து, அவனைச் சாந்தப் படுத்தி, அனுப்பி வைக்கிறாள்!

    எப்படிச் சாந்தப் படுத்துகிறாள்?
    தன் சேலைத் தலைப்பால் விசிறி, முகம் துடைத்து,
    தன் முகம் என்னும் கண்ணாடியை, அவனுக்கு அருகில் கொண்டு போய்..."பார்த்துங்க, நல்லபடியா அருள் செய்து விட்டு வாருங்க", என்று பார்வையாலேயே சொல்லி அனுப்பி வைக்கிறாள்...

    சும்மா அனுப்பி வைக்கிறாளா? இல்லை! அவனைக் கொடுத்ததோடு மட்டும் இல்லாது, கூடவே உக்கமும், தட்டொளியும் கொடுத்து, இதையும் கொடுத்து விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறாள்!

    - இப்படிப் பார்ப்பதில் அவ்வளவு நயம் உள்ளது...அதுவும் நப்பினைக்கு என்றே உரிய இந்தப் பாசுரத்தில்!

    சரி, கண்ணாடி/விசிறி கொடுத்து விட்டால், அதை வைத்து பெண்கள் எல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்? அதை மீண்டும் வந்து சொல்கிறேன்!

    CVR அவர்களின் தந்தையாருக்கு....
    இந்த நய விளக்கத்துக்கு, மிக்க நன்றிகள் ஐயா! அடியோங்கள் மிக்க மகிழ்ந்து அனுபவித்தோம்!

    ReplyDelete
  39. ரவி,
    நல்ல பதிவு. சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    இப் பாடல் எந்தக் காலப்பகுதியில் இயற்றப்பட்டது? ஏன் கேட்கிறேன் என்றால், இந்த பாடல்கள் இயற்றப்பட்ட காலங்களிலேயே எம் முன்னவர்கள் தட்டொளியைப் பயன்படுத்திருக்கிறார்கள்...

    ReplyDelete
  40. //அது என்ன ஒரு வாய் காபி? பலவாய் காபி, பல வாய் தரோம்! வாங்க!//

    எப்படிய்யா இப்படி சொல்லால் வீடுகட்டுகிறீர்கள்?....

    மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் CVRன் தந்தை, அதனையும், ஜெய்ஸ்ரீ சொன்னதையும் இணைத்தால் அருமை...

    அதாவது நப்பின்னை/தாயாரே பாவை நோன்பிற்கு தனது ஆசிகளுடன் கண்ணாடி, விசிறியினை கொடுத்தனுப்பிட வேண்டுகிறார்...

    ReplyDelete
  41. ஆண்டாள் ஒரு வைஷ்ணவச் சிறுமி.
    வைஷ்ணவர் வீட்டில் பிறந்து வளர்ந்தவள்.
    தந்தை செய்கின்ற நித்திய கர்மானுஷ்டானங்களைக் கவனித்து வளர்ந்தவள்.

    குளித்தவுடன், உடல் சற்று வேர்க்கும்.
    குளிப்பதற்கு முன்னரும், எண்ணை தேய்த்து ஊறும் போது, உடலின் வியர்வைத் துவாரங்கள் அடைபடுவதால் சற்று குப்பென வெக்கையாக இருக்கும்.

    அதற்கு விசிறிக் கொள்வதற்காக ஏசி இல்லாத ஃபேன் இல்லாத அக்காலத்தில் விசிறி!

    குளித்து முடித்ததும் ஒரு வைஷ்ணவர் செய்வது திருமண் இடுதல்.

    இதைச் சிரத்தையுடன் பயன்படுத்தும் அனைவரிடமும் ஒரு கண்ணாடி இருப்பதைக் கவனித்திருக்கலாம்.

    எனவே கண்ணாடி.

    அத்னாலதான், உக்கமும், தட்டொளியும் தந்து நீ உன் மணாளனை எழுப்பு எனச் சொல்கிறாளோ, ஆண்டாள்?

    ReplyDelete
  42. இப்ப உக்கமும் தட்டொளியும் நப்பின்னை மிகவும் கருணையுடன் கண்ணனிடம் கொடுத்து அனுப்புகிறாள், என்று பார்த்து விட்டோம். போதாதென்று கண்ணனையும் தயார்படுத்தி அவர்களிடம் அனுப்பி வைக்கிறாள்!

    இதில் இருந்து தெரிவது என்ன?
    கண்ணன் வேண்டுமென்றால் தாயாரைச் சரணம் அடைய வேண்டும்!
    உக்கமும் தந்து
    தட்டொளியும் தந்து
    மணாளனாம் கண்ணனையும் தருபவள் தாயார்


    உக்கமும் தட்டொளியும் நோன்புப் பொருட்கள் தான்! ஜெயஸ்ரீ, SK மற்றும் பலர் சொல்லி உள்ளார்கள்!

    விசிறி = எண்ணெய் நீராட்டுக்குத் தேவை. குளித்தவுடன், உடல் சற்று வேர்க்கும். வேர்த்தால் திலகம் அழியும்! அதற்கு விசிறிக் கொள்வதற்காக விசிறி!

    தட்டொளி = திலகமும் திருமண் காப்பு (நாமம்/ஸ்ரீசூர்ணம்) நெற்றியில் இட்டுக் கொள்ளத் கண்ணாடி தேவை.

    இவை இரண்டும் அன்றாடப் பொருட்கள். அதையே தான் நோன்பிலும் வைத்தார்கள்!
    தமிழர் பண்பாட்டு விழாக்கள் எல்லாம் வாழ்வியல் தொடர்பாகவே இருக்கும். பொங்கல் என்றால் பானை, புத்தரிசி, மஞ்சள், கரும்பு, மாடு!
    அது போலவே நோன்பிலும் உக்கம், தட்டொளி!

    ReplyDelete
  43. ஜிரா
    உங்கள் விளக்கத்தை மறுத்த அடியேனுக்கு இன்னொன்றும் தோன்றியது..கவனியுங்கள்.


    முன்பே சொன்னது போல் உக்கம்-உம், தட்டொளி-உம் இரண்டும் தரப்படுகின்றன.
    "உக்கம் வீசி, தட்டொளி தந்து" என்று கவிதை வரவில்லை!

    பாடலின் வரிகளில் எதுகையில்....
    முப்பத்து-கப்பம்
    செப்பம்-வெப்பம்
    செப்பன்ன-நப்பின்னை
    உக்கமும்-இப்போதே
    ...இதில், உக்கம்...மட்டும் இடிக்கிறது பாருங்கள்!

    வெறுமனே கவிதைச் சுவைக்குப் பாடி இருந்தால், தெப்பமும்-தட்டொளியும்-னு போட்டு, அதே போல் ரைமிங்கா முடிச்சிருக்கலாம்! நீராடத் தெப்பம் கேக்கறாங்க-ன்னு நாமளும் ஒரு விளக்கத்த சொல்லி எஸ்கேப் ஆயிடலாம்!

    ஆனால் ஆண்டாளுக்கு இங்கு உக்கத்தைச் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம்! ஏன்? - ஏன்னா தாயாரின் கருணையை அவள் சொல்லியே ஆக வேண்டும்.

    திருப்பாவை முழுதும் அவன் பேச்சு தான் அதிகம். தாயார் பெருமையைச் சொல்ல ஆண்டாளுக்கு இதை விட்டால் வேறு இடம் கிடைக்காது போலும்!:-)

    ReplyDelete
  44. உக்கம், தட்டொளி யாருக்கு?

    முதலில் அடியவர்க்கு...பின்பு தான் கண்ணனுக்கு!
    திரு ஆலவட்டம் என்ற விசிறி வீசுதலைத் திருக்கச்சி நம்பிகள் என்பவர் காஞ்சிபுரத்தில் செய்வாராம்!
    விசிறியும், கண்ணாடியும் தொண்டின் அடையாளங்கள்!

    நீராட்டத்துக்குப் பின் விசிறியும், கண்ணாடியும் தேவை என்று SK சொல்லி இருந்தார்! அது அடியவருக்கு மட்டும் அல்ல!
    ஆண்டவனுக்கும் தான்!

    இன்றும் பல ஆலயங்களில், இறைவன் திருமஞ்சனத்தின் போது, அவனுக்கு
    விசிறி வீசுதலும்
    கண்ணாடி பார்த்தலும் காட்டப்படுகின்றன!

    ஆகக் கூடி,
    உக்கமும், தட்டொளியும்
    அடியார்கள் தாயார் மூலமாக முதலில் பெறுகிறார்கள்!

    அவளிடம் பெற்றதைக் கொண்டே, அவனுக்குத் திருத்தொண்டு செய்து அவனை அடைகிறார்கள்!

    அவளில் தொடங்கி, அவனை அடைவதைக் காட்டும்...
    எளிய ஆனால் "உயரிய நோன்புச் சின்னங்கள்" தான் உக்கமும், தட்டொளியும்!

    அம்மா கோதை நீ எதையும் சும்மா ஒப்புக்குக் கேட்க வில்லை! எங்களை எல்லாம் உய்விக்கவே கேட்டுள்ளாய் போலும்!
    - ஆண்டாள் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  45. KVB அண்ணா, CVR அப்பா,
    குமரன், ஜிரா, SK, ஜெயஸ்ரீ, தேசிகன், கண்ணன் சார், ஷைலஜா, சத்தியா, அன்புத்தோழீ, வெட்டி, மற்றும் எல்லா நண்பர்களும் விளக்கங்களைச் சரி பார்த்து, இயைந்ததா என்று சொல்லவும்!

    ReplyDelete
  46. கண்ணபிரான்: இன்னொரு மதுரையும் வந்தாச்சு :-)

    வியாக்கியான மரபு வருவதற்குக் காரணமே தமிழரின் திண்ணைப் பேச்சு முறைதான். இலக்கிய அலசல் என்பது தொண்டு தொற்று வரும் தமிழர் பழக்கம். ஒரு இலக்கிய மாணவனுக்கு சாகித்ய கர்த்தாவின் உளக்கிடைக்கை முழுமையாய் புரியும் வரை தூக்கம் வராது. இதனால்தான் 'ஆச்சார்ய ஹிருதயம்' பிறந்தது. அந்த மரபு இந்த நிமிடம்வரை, நிழல்வெளியிலும் தொடர்வது கண்டு உள்ளம் மகிழ்கிறது. ஆர்வமுடன் எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர். எவ்வளவு அழகான விளக்கங்கள். வைணவமும், தமிழும் ஒன்றெனக் கலந்தவை. பாவை நோற்றல் கூட தமிழ் மரபே. மரபு சார்ந்த இலக்கிய மாணவனுக்கும், பக்தியில் திளைக்கும் பாகவதனுக்கும் இயைந்து போகுமாறு பாசுரம் அமைவதுதான் அதன் சிறப்பு. இதுவே பாசுரம் காலம் கடந்து நிற்பதற்குக் காரணம்.

    மேல்விளக்கம் சொல்ல இடமே இல்லாமல் எல்லோரும் விளக்கியாகிவிட்டது. ஆயினும் கண்ணாடி ஏன் சொரூப லட்சண குறியீடு ஆகிறது என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரவில்லை. எனவெ...கொஞ்சம். கீதைக்கு பாஷ்யம் எழுதிய ஆதிசங்கரர் ஜீவனை நன்றாகப் புரிந்து கொண்டால் ஈஸ்வரனைப் புரிந்து கொண்டுவிடலாம் என்கிறார். எனவே ஜீவன் முதலில் தன் சொரூபத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணாடிதான் முகம் காட்டுகிறதே. பிறகென்ன? அந்த முகவொளி எங்கிருந்து வருகிறது என்று யோசித்தால் பரமாத்வாவின் அந்தர்யாமித்துவம் புரிந்துவிடும்.

    சொரூப லட்சணம் என்பதை சேஷத்துவம் என்றே வைணவர்கள் புரிந்து கொள்கின்றனர். எனவே தொண்டு செய்ய வரும் உக்கம் எனும் குறியீடு இயைந்தே போகிறது.

    இப்படி நாம் இணைந்து செல்வதே பாவை நோன்பு. உங்கள் கைங்கர்யம் வைணவ லட்சணம்.

    ReplyDelete
  47. இது வரை திருப்பாவையில் இந்த பாடலை படிக்கும் போது உக்கமும் தட்டொளியும் நோன்பிற்கு தேவையான பொருட்கள் என்ற வகையில் மட்டும் தான் அறிந்திருந்தேன் தங்கள் பதிவும், அதற்கு நண்பர்கள் தந்த விளக்கமும் , அதை அழகாக நீங்கள் தொகுத்ததும் மிக அருமை :) நன்றி :)

    ReplyDelete
  48. //Sathia said...
    நான்: எல்லாரும் காமடி பண்ணிட்டிருங்காங்க. 'செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா' கொஞ்சம் வந்து என்னனு பாரு//

    ஹிஹி...சத்தியா...பின்னிப் பெடல் எடுக்கறீங்களே தலைவா!
    மிஸ்டர் எம், அவர்களின் பர்சனல் செக்ரட்டரி கணக்கா...புட்டு புட்டு வைச்சிருக்கீங்க! :-)

    //என்ன புரிஞ்சிடுச்சா? ;-). சரி சரி வெப்பம் கொடுக்க விமலன் வரான்..//

    வெப்பம் கொடுக்க சத்தியா வராரு-ன்னு நினைச்சா...விமலன் வராறா? யார் அந்த விமல் boy?:-)

    //function overloading..//

    c++? or we all have to see++? :-)

    //இரண்டாவது அர்த்தம் அப்பிடி வெளில வந்து கண்ணா எங்களை பிறவிப்பெருங்கடல் போக்க எம்மை உன் அருளால் நீராட்டு அப்பிடிங்கறாங்க கோதையம்மா..//

    பின்னாடி ஒரு பாசுரத்தில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு என்று பிறவிப் பெருங்கடலை கேட்டு வாங்கிக்கறாளே கோதை? :-)

    ReplyDelete
  49. //ஜெயஸ்ரீ said...
    காய்ச்சல் வந்தாலும் வந்தது ஒரே கேள்வி மேல கேள்வி கேட்டு பதிவு போடறீங்களே )))//

    ஹிஹி...கேள்வி கேட்க இதெல்லாம் ஒரு சாக்கு ஜெயஸ்ரீ! :-))

    //சாமரம் மாயையை விரட்டுவதற்கும் கண்ணாடி ஞானத்துக்கும் அடையாளம் - இப்படி ஒரு கருத்து உண்டு//

    உண்மை தான் ஜெயஸ்ரீ!
    அதனால் தான் இவை யாருக்கு என்று கேட்டிருந்தேன். மாயை விரட்டச் சாமரம் ஏன் பெருமாளுக்கு வீச வேண்டும்! மாயனுக்கே மாய விரட்டா? :-)

    அதான் இந்த நோன்புப் பொருட்கள் யாருக்காக, யாரிடம் இருந்து யார் பெறுகிறார்கள்...என்று விளக்கங்கள் தொகுத்தேன் இறுதியாக!
    சரியாக இருந்துச்சுங்களா ஜெயஸ்ரீ?

    ReplyDelete
  50. // வெற்றி said...
    இப் பாடல் எந்தக் காலப்பகுதியில் இயற்றப்பட்டது? ஏன் கேட்கிறேன் என்றால், இந்த பாடல்கள் இயற்றப்பட்ட காலங்களிலேயே எம் முன்னவர்கள் தட்டொளியைப் பயன்படுத்திருக்கிறார்கள்...//

    ஆகா, ஈழத்திலும் தட்டொளி உண்டா? அருமை அருமை!
    ஒரு பதிவு போடுங்க வெற்றி!

    தட்டொளி படம் ஒண்ணு கிடைச்சுது வில்லிபுத்தூர் ஆலயத்தில் இருந்து! பின்னர் பதிவிடுகிறேன்!

    திருப்பாவை காலம் கிபி ஏழாம் நூற்றாண்டு என்பது அறிஞர்கள் துணிபு, வெற்றி! அவள் ஒரு பாட்டில் குறித்து வைப்பது போல, வெள்ளி எழுதலும், அதே சமயம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 731 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் அந்த மார்கழி பௌர்ணமியே திருப்பாவை தோன்றியதாக கூறப்படுகிறது.

    ReplyDelete
  51. //மதுரையம்பதி said...
    அதாவது நப்பின்னை/தாயாரே பாவை நோன்பிற்கு தனது ஆசிகளுடன் கண்ணாடி, விசிறியினை கொடுத்தனுப்பிட வேண்டுகிறார்...//

    அதே அதே!

    ReplyDelete
  52. //VSK said...
    குளித்து முடித்ததும் ஒரு வைஷ்ணவர் செய்வது திருமண் இடுதல்.
    இதைச் சிரத்தையுடன் பயன்படுத்தும் அனைவரிடமும் ஒரு கண்ணாடி இருப்பதைக் கவனித்திருக்கலாம்.
    எனவே கண்ணாடி.
    //

    அருமையாச் சொன்னீங்க SK!
    உங்கள் விளக்கமும், CVR அப்பா சொன்ன விளக்கமும் சேர்த்துத் தான் தொகுத்துள்ளேன். பார்த்தீங்களா?

    ReplyDelete
  53. // நா.கண்ணன் said...
    ஒரு இலக்கிய மாணவனுக்கு சாகித்ய கர்த்தாவின் உளக்கிடைக்கை முழுமையாய் புரியும் வரை தூக்கம் வராது. இதனால்தான் 'ஆச்சார்ய ஹிருதயம்' பிறந்தது//

    சூப்பர்...அப்படியே கப்-பென்று பிடிச்சீங்க கண்ணன் சார்!

    //ஆர்வமுடன் எத்தனை பேர் பங்கேற்றுள்ளனர். எவ்வளவு அழகான விளக்கங்கள். வைணவமும், தமிழும் ஒன்றெனக் கலந்தவை//

    இது போல் ஒரு இலக்கிய வட்டமும், சத் சங்கமும் உண்ண உண்ணத் தெவிட்டாதவை!

    //ஆயினும் கண்ணாடி ஏன் சொரூப லட்சண குறியீடு ஆகிறது என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரவில்லை.
    கண்ணாடிதான் முகம் காட்டுகிறதே. பிறகென்ன? அந்த முகவொளி எங்கிருந்து வருகிறது என்று யோசித்தால் பரமாத்வாவின் அந்தர்யாமித்துவம் புரிந்துவிடும்//

    மிகவும் நன்றான விளக்கம் கண்ணன் சார்!

    //இப்படி நாம் இணைந்து செல்வதே பாவை நோன்பு. உங்கள் கைங்கர்யம் வைணவ லட்சணம்.//

    மிக்க நன்றி கண்ணன் சார்!
    தங்கள் பணி மிகுதியிலும் அழைப்பை ஏற்று, ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிக்க விளக்கம் தந்தமைக்கு!

    இங்குப் பரிசுரைத்த அனைத்து நண்பர்களுக்கும்.....
    எங்கும் திருவருள் பெற்று "இன்புறுவர்" எம்பாவாய்!

    ReplyDelete
  54. // வேதா said...
    தங்கள் பதிவும், அதற்கு நண்பர்கள் தந்த விளக்கமும் , அதை அழகாக நீங்கள் தொகுத்ததும் மிக அருமை :) நன்றி :) //

    நன்றி வேதா...
    திருப்பாவையைப் பாடக் கூட வேண்டாம்! பேசினாலே தேன் சொட்டுமே!

    ReplyDelete
  55. ந.ஜெ.ஜெய புஷ்ப லதா3:09 AM, July 22, 2007

    மிக அற்புதம்.சொல்ல வார்த்தைகள்
    சிக்கவில்லை.இலக்கியச் சொல்லாடல்
    பதிவின் மதிப்பை அதிகப் படுத்துகிறது.

    ReplyDelete
  56. எல்லா பின்னூட்டங்களையும் மீண்டும் ஒரு முறை படித்தேன் இரவிசங்கர். எழுதாமல் நிற்கும் திருப்பாவைப் பதிவில் உடனே இடுகைகள் இடத் தொடங்கிவிட வேண்டும் போல் தோன்றுகிறது இந்த இடுகையால். :-)

    ReplyDelete
  57. அருமையான விளக்கம். சொற்சிலம்பம் ஆடும் கண்ணனைப் பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை. இதே மாதிரியான பதிவுகளைத் தொடர்ந்து கொடுக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  58. //ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
    மிக அற்புதம்.சொல்ல வார்த்தைகள்
    சிக்கவில்லை.இலக்கியச் சொல்லாடல்
    பதிவின் மதிப்பை அதிகப் படுத்துகிறது.//

    நன்றி புஷ்ப லதா. நீங்கள் கொடுக்கும் ஊக்கமும், நண்பர்கள் பின்னூட்டங்களில் கருத்துக்களைக் கொட்டினார்களே! அது தான் பதிவின் மதிப்பைக் கூட்டியது!

    ReplyDelete
  59. //குமரன் (Kumaran) said...
    எல்லா பின்னூட்டங்களையும் மீண்டும் ஒரு முறை படித்தேன் இரவிசங்கர். எழுதாமல் நிற்கும் திருப்பாவைப் பதிவில் உடனே இடுகைகள் இடத் தொடங்கிவிட வேண்டும் போல் தோன்றுகிறது இந்த இடுகையால். :-) //

    ஹிஹி...
    திருப்பாவை is very contagious! தொற்றிக் கொள்ளும் அல்லவா குமரன்!:-)

    சீக்கிரம் கோதைத் தமிழைத் தொடருங்கள்! உங்க நடையில் காணக் காத்திருக்கிறோம்! நீங்க இங்கேயே உங்கள் இனிய நடையில் விளக்கங்களை அள்ளித் தெளிப்பீர்கள் என்று ஆசையுடன் இருந்தேன்(தோம்) - சரி தானே ஜிரா? :-)

    ReplyDelete
  60. //கீதா சாம்பசிவம் said...
    அருமையான விளக்கம். சொற்சிலம்பம் ஆடும் கண்ணனைப் பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை. இதே மாதிரியான பதிவுகளைத் தொடர்ந்து கொடுக்க வாழ்த்துகிறேன்//

    நன்றி கீதாம்மா..நிச்சயம் இது போன்று பட்டிமன்றப் பதிவுகளைத் தருகிறேன்!

    சிலம்பமா? - அம்மாடியோவ்... எனக்குச் சிலப்பதிகாரம் பிடிக்கும், ஆனால் சிலம்பால் அதிகாரம் செய்வது கண்டாலே பயம்!

    சிலம்பம் போட்டியில் ஒரு பையன் என்னைத் தள்ளி விட்டான், ஊரில்!
    என்ன வா(வீ)ங்கியிருப்பேன்னு உங்களுக்கே தெரியும்-னு நினைக்கிறேன்! :-)

    ReplyDelete
  61. HELLO krs
    How r u ?.The link for webshots is
    COMMUNITY.WEBSHOTS.COM/USER/KOORAMVARADARAJAN
    BYE
    KVB

    ReplyDelete
  62. //உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி! நீங்கள் குளிப்பதற்கு இவை இரண்டும் தேவையா//
    krs,
    எனக்கு தெரிந்த வரைக்கும் எல்லோருக்கும் சோப்பு அவசியம்

    ReplyDelete
  63. //ulagam sutrum valibi said...
    krs,
    எனக்கு தெரிந்த வரைக்கும் எல்லோருக்கும் சோப்பு அவசியம்//

    வாங்கம்மா..
    நல்லா சோப்பு போட்டீங்க போங்க! :-)
    சரி...சோப்பு இல்லாத காலத்துல என்ன யூஸ் பண்ணியிருப்பாங்க?
    சீயக்காய்??

    இன்னோரு விஷயம்!
    நம்மூருக்கு வந்து கீறிங்க போல! காத்துல மாடப்புறா சேதி கொண்டாந்துச்சு! :-)
    நேரம் கிடைச்சா, நம்ம profileஇல் இருந்து ஒரு மெயில் தட்டி வுடுங்க.

    ReplyDelete
  64. //உக்கம் = விசிறி = Hair Dryer
    தட்டொளி = கண்ணாடி = Hand Mirror, அதான் சின்னப் பெண் Makeup kit போலக் கேட்டிருப்பாள் என்று வீட்டில் சொல்லறாங்க//

    சொல்லிட்டாங்க இல்ல அப்புறம் என்ன?no comments. நீங்க எதுவும் கேட்கபடாது.!!

    ReplyDelete
  65. //சோப்பு இல்லாத காலத்துல என்ன யூஸ் பண்ணியிருப்பாங்க//

    அந்த காலத்துல நறுமணப்பொடி உபயோகித்தார்கள்.கிராமல்களில் இலுப்பைப் பொடி தான்.

    ReplyDelete
  66. //இன்னோரு விஷயம்!
    நம்மூருக்கு வந்து கீறிங்க போல! காத்துல மாடப்புறா சேதி கொண்டாந்துச்சு//
    ஓ ஓ புறா சொல்லுச்சா,2000லிருந்து இங்குதான் டேரா அப்பப்ப அட்லாண்டிக்கையும் அரபிக்கையும் தாண்டிகினுதாகிறே அப்பால அறியவயசுல அல்லா ஊர்ல சுத்திகினு தால நம்ம பசங்க நமக்கு பட்டபோருவச்சு.நல்லாகிதா நம்ம போரு.அப்பால உன்ய கண்டுகிறே.நல்லாருபா!!!!

    ReplyDelete
  67. இன்று என்னமோ தெரியலை, தம்பி CVR ஞாபகம் ரொம்ப வந்துரிச்சி! :)
    CVR அப்பா போன முறை உக்கம்-தட்டொளிக்கு கொடுத்த விளக்கம் தான் காரணம்! :))

    ReplyDelete
  68. //குமரன் (Kumaran) said...
    இராகவன் சொன்னது சரியென்று சொல்லும் விதமாகச் மேலே இருப்பதைச் சொன்னேன். மார்கழியில் விசிறினால் கொஞ்சம் அதிகமாகப் போர்த்திக் கொண்டு படுப்பதற்கும் வாய்ப்புண்டு; எழுந்து 'என்ன விவரம்' என்று கேட்பதற்கும் வாய்ப்புண்டு. கண்ணன் இரண்டாவது வகை இராகவனின் பார்வையில்//

    குமரன்
    இதுக்குப் போன முறை சரியா விளக்கிச் சொல்லலை போல நானு!

    ராகவன் சொன்னது முற்றிலும் தவறு-ன்னு ஏன் சொல்றேன்-னா:
    இப்படி விசிறியால் விசிறி, இருக்குற குளிர்-ல இன்னும் குளிரக் குளிர எழுப்பினா, கோவம் தான் வரும்! கோவத்தோடவா கண்ணனை அனுப்பி வைப்பாங்க இவங்க கிட்ட?

    கண்ணனை நல்ல மூட்-ல அனுப்பி நீராட்டம் கேட்கிறாங்க பெண்கள்!
    எனவே அதுக்கு வேற மாதிரி எழுப்பணும்! மூஞ்சில தண்ணி கொட்டி எழுப்பறது, விசிறி விட்டு எழுப்பறது எல்லாம் மத்த இடங்களில் ஓக்கே தான்! ஆனா இங்கு கிடையாது! எழுந்த பின் இன்முகத்துடன் அருள் செய்யறாப் போல கனிவா எழுப்பணும்! அதுக்குத் தான் நப்பின்னையின் உதவியை நாடுறாங்க!

    தம்பி சீவீஆர் அப்பா குடுத்த விளக்கமும் பாருங்க! மரபு+இயைந்த விளக்கமா எடுத்துக் கொள்வதே சிறந்தது!

    ReplyDelete
  69. [url=http://firgonbares.net/][img]http://firgonbares.net/img-add/euro2.jpg[/img][/url]
    [b]buy dreamweaver in, [url=http://firgonbares.net/]buy cheap software reviews[/url]
    [url=http://firgonbares.net/][/url] discount software for you review discount software house review
    3rd grade educational software [url=http://firgonbares.net/]nero 9 vista[/url] emperor nero
    [url=http://firgonbares.net/]french educational software[/url] price checking software
    [url=http://firgonbares.net/]sell computer software[/url] microsoft software list
    adobe creative suite 4 design premium upgrade [url=http://firgonbares.net/]microsoft windows vista download[/b]

    ReplyDelete
  70. [url=http://sunkomutors.net/][img]http://sunkomutors.net/img-add/euro2.jpg[/img][/url]
    [b]emperor nero, [url=http://sunkomutors.net/]home and office software[/url]
    [url=http://sunkomutors.net/][/url] dreamweaver software for sale education software store
    discount software san [url=http://sunkomutors.net/]medical office billing software[/url] get oem software
    [url=http://sunkomutors.net/]eye candy 5 for mac photoshop cs[/url] sms discount software
    [url=http://sunkomutors.net/]academic software projects[/url] microsoft software contact
    profit software discounts [url=http://sunkomutors.net/]software ottawa canada[/b]

    ReplyDelete
  71. [url=http://bariossetos.net/][img]http://vonmertoes.net/img-add/euro2.jpg[/img][/url]
    [b]adobe photoshop extended cs4 student for mac, [url=http://bariossetos.net/]adobe photoshop extended cs4 student for mac[/url]
    [url=http://hopresovees.net/][/url] nero 9 patch software prices australia
    windows vista software downloads [url=http://hopresovees.net/]to buy old software[/url] buy macromedia
    [url=http://hopresovees.net/]coreldraw viewer[/url] WinZip 12 Pro
    [url=http://hopresovees.net/]Edition Mac Retail Price[/url] free download nero 9
    selling software with [url=http://hopresovees.net/]software sold in canada[/b]

    ReplyDelete
  72. [url=http://hopresovees.net/][img]http://bariossetos.net/img-add/euro2.jpg[/img][/url]
    [b]cheapest software prices, [url=http://hopresovees.net/]is roxio creator 2009 better than nero 9[/url]
    [url=http://vonmertoes.net/][/url] software for academic research kaspersky labs
    adobe acrobat pro 9 free training [url=http://vonmertoes.net/]cheapest software[/url] software on sale
    [url=http://vonmertoes.net/]3 oem software[/url] point software price
    [url=http://hopresovees.net/]buy chess software[/url] macromedia software flash player
    office 2003 product key [url=http://vonmertoes.net/]windows xp update[/b]

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP