Wednesday, August 15, 2007

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்! அறுபதாண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன தான் சர்ச்சை என்று பார்க்கலாம் வாங்க!
அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!

அதற்கு முன் நீங்கள் எல்லாரும், சர்வேசன் கேட்டபடி பாடி விட்டீர்களா?
பாடவில்லை என்றால், மனசுக்குள்ளவாச்சும் ஒரு முறை பாடிப் பாருங்களேன்! இதோ உதவிக்கு ராணுவத்தின் இசை முழக்கம். 52 விநாடிகள்!தாகூர் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களுக்குச் சொந்தக்காரர்!
உலகில் வேறு எவர்க்கும் இந்தப் பெருமை உள்ளதா என்று தெரியவில்லை!
ஒன்று, நம் இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கன மன
இரண்டு, பங்க்ளாதேஷ் எனும் வங்காள தேசத்தின் கீதம் - அமர் ஷோனார் பாங்க்ளா

யாருக்கும் ரவீந்தரநாத தாகூரின் கவித்துவத்தின் மீதோ, தேச பக்தியின் மீதோ ஐயம் கிடையாது!
ஜாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டித்து, தமக்குக் கொடுக்கப்பட்ட சர் பட்டத்தை உதறி எறிந்தவர் தான் தாகூர்.
தாகூரின் சாந்தி நிகேதன் பலகலைக் கழகத்துக்கு, அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட்டது தான் ஆங்கிலேய அரசு!
பின் ஏன் இந்த சர்ச்சை? இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரம் அப்படி!

Dec 1911-இல் இது எழுதப்பட்டது! இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட பாடல் ஜன கன மன!
அந்த நேரம் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் கூட! அந்தக் காலக்கட்டத்தில் இருந்த காங்கிரசின் நிலை வேறு! பூர்ண சுதந்திரம் எல்லாம் அப்போது கிடையாது! அப்போது தான் வங்காளப் பிரிவினையை (Partition of Bengal), காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் வாங்கயிருந்த நேரம்!

அப்போது தான் கல்கத்தாவில் (கொல்கத்தாவில்) காங்கிரசின் மாநாடு நடந்தது! Dec 27, 1911 அன்று இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்த ஜன கன மன பாடல் துவக்க வணக்கமாகப் பாடப்பட்டது.
அந்த நாளில், ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் வரவேற்று, வரவேற்புப் பத்திரம் வாசித்தார்கள்! வங்காளப் பிரிவினையின் வாபசுக்கு நன்றி தெரிவித்தார்கள்! கூடவே ராம்புஜ் சவுத்தரி என்பவர் மன்னரை வரவேற்றுப் பாடிய ஹிந்திப் பாடலையும் பாடினார்கள். போதாதா?
பனை மரத்தின் கீழே நின்று பாலையே குடித்தாலும்...கள் என்று சொல்வார்களே...அந்தக் கதை ஆகி விட்டது!

அன்றைய ஆங்கில அரசுப் பத்திரிகைகள் ஸ்டேட்ஸ்மேன், இங்க்லீஷ் மேன் போன்றவை, இந்த நிகழ்ச்சியைக் கவர் செய்யும் போது, ஏதோ மன்னர் ஜார்ஜை வரவேற்க, பிரத்யேகமாக எழுதிப் பாடப்பட்ட பாடல் என்று நினைத்து எழுதி விட்டன. வங்காள மொழி என்று கூடத் தெரியாமல், சில பத்திரிகைகள் இதை ஹிந்திப் பாடல் என்று கூட எழுதின. இதை அறிந்து தாகூரே அப்போது வருத்தப்பட்டார்.ஒரு பாடலைப் பற்றிப் பலர் விமர்சிக்கலாம்.
ஆனால் அதன் அடி நாதத்தில், யாரை வைத்துப் பாடப்பட்டது என்பது, அதனை ஆக்கிய கவிஞனின் மனசாட்சிக்குத் தான் முதலில் தெரியும். எனவே தாகூரின் மனநிலை என்ன என்பதையும் நாம் முதலில் படிக்க வேண்டும்!

ஜன கன மன, அதி நாயக = மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்யும் நாயக...அவர்கள் வாழ்வையும் விதியையும் நிர்ணயிக்கும் பாக்ய விதாதா....என்று மக்கள் மனங்களில் ஆட்சி செய்வதாக, எந்த ஒரு மானிட அரசனையும் பாடியதாக இல்லை.

அரசனையும் அரசியையும் சேர்த்தே தான் எல்லா இடத்திலும் வரவேற்றார்கள். ஆனால் இங்கோ பாடலில் அரசியைப் பற்றிய குறிப்பே இல்லை!
நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்தி தான். மொத்தம் ஐந்து பத்திகள் தாகூர் எழுதினார்!
மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் - அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் பற்றிப் பேசுகிறார்.

ஆங்கிலக் கவிஞர் யீட்ஸ் (Yeats) பின்னாளில் தன் பெண் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜன கன மன ஆக்கப்பட்டதின் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழிலும் வெளிவந்தது!
"அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட தாகூர், அருமையான பாடல் ஒன்றை இயற்றினார்.
இறைவனை நோக்கி எழுதப்பட்ட பாடல் இது. காங்கிரசாரிடம் கொடுங்கள். மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று தாகூர் சொன்னார்".
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், யீட்ஸ்-இடம் இந்தத் தகவலைச் சொன்னதை பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள்!
ஆனால், குற்றக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்ட பின், மனதுக்குச் சமாதானம் ஆவது? ஒன்றாவது!

கேட்வே ஆப் இந்தியா (Gateway of India) என்ற இந்தியாவின் நுழைவாயில், மும்பையில் உள்ளது.
இது ஜார்ஜ் மன்னரையும், மேரி அரசியையும் வரவேற்கக் கட்டப்பட்டது தான்! அந்த வாயிலில் அவ்வாறே எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு இருக்கும்!
"Erected to commemorate the landing in India of their Imperial Majesties King George V and Queen Mary on the Second of December MCMXI"
இதைப் போய், எப்படி "இந்தியாவின் நுழைவாயில்" என்று சொல்லலாம்? என்று பேசிக் கொண்டா இருக்கிறோம்?

1911-இல் பாடப்பட்டாலும், இதற்கு இசை அமைக்கப்பட்டது என்னவோ 1918-இல் தான்!
தாகூரும், ஆந்திரா-மதனப்பள்ளியில் உள்ள தியோசாபிகல் கல்லூரி தம்பதிகள் - ஜேம்ஸ் எச் கசின் (James H Cousin) இருவரும், சேர்ந்து தான் பாடலுக்குப் பண் அமைத்தார்கள் (Notation)! அதற்குப் பின்னர் தான் பாடல் பெரும் ஹிட் ஆனது!
சுருக்கமான அதே சமயம் கம்பீரமான இசை கொண்ட பாடல் என்பதால் மேலும் பிரபலமானது. ஜெயஹே ஜெயஹே என்பது இன்னும் தூக்கிக் கொடுத்தது.

நேதாஜியின் இந்திய தேசியப் படை (INA), இதைத் தனது கீதமாகக் கொண்டது!
1946-இல் காந்தியடிகளும் ஜன கன மன, துதிப்பாடல்களைப் போல தேசியத்துடன் இணைந்த பாடலாக ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தார்.


Capt Ram Singh Thakur playing the National Anthem
in the presence of Mahatma Gandhi.
அதே நேரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் எழுதிய வந்தே மாதரம் பாடலும் நல்ல ஹிட்! தாகூரே இந்தப் பாடலை வரவேற்று பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆனால் அதில் மதம் குறித்த சில வெளிப்படையான சொற்கள் இருப்பதால், தேசிய கீதமாக அதை ஆக்கக் கூடாது என்று சில தேசியவாதிகள் பிரச்சனை எழுப்பினார்கள்.
இதனால் வலதுசாரி தேசபக்தர்கள் சிலரும், எதையோ எதிர்க்கப் போய், தாகூரின் கீதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது தான் பரிதாபம்!

மேலும் Band வாத்தியத்தில் வந்தே மாதரம் இசைப்பது சற்றே கடினம்.
Band இசை என்பது ராணுவத்துக்கு மிகவும் தேவையான ஒன்று! நாட்டின் கீதத்தை உள்நாடு, வெளிநாடு என்று பல இடங்களில், Band-இல் வாசிப்பது இன்றியமையாத வழக்கம்!

கவிஞர் இக்பாலின் சாரே ஜஹான் ஸே அச்சா என்ற அருமையான பாடலும் போட்டியில் இருந்தது. அது சற்றுப் பெரிய பாடல். ஆனால் இசையோ அமர்க்களம்!

சுதந்திரம் பெற்ற பின், இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), தேசிய கீதத்தை முடிவு செய்தது!
இதோ சபை விவாதங்களின் சுட்டி!
ஜன கன மன தேசிய கீதமாக உதித்தது!
அதே சமயம், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் ஆத்ம நாதம் - எனவே இது தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது!

இன்று உலகின் பல இசைக்கருவிகளில் நம் தேசிய கீதத்தை இசைக்க இயலும்! அதுவும் Band இசை! அதில் வெளுத்த வாங்க நம் தேசிய கீதத்தை மிஞ்ச எந்த கீதத்தாலும் முடியாது!
அமெரிக்க கடற்படை (US Naval Band) நம் கீதத்தை வாசிப்பதை இங்கு கேளுங்கள்!


2005இல், தேசிய கீதத்தில் இன்னொரு புதிய சர்ச்சை முளைத்தது.
சிந்து என்று கீதத்தில் வருகிறதே! அது இப்போது பாகிஸ்தானில் அல்லவா உள்ளது? அதைப் போய் நாம் எப்படிப் போற்றிப் பாட முடியும்?
"சிந்துவை" எடுத்து விட்டு, "காஷ்மீரம்" என்ற சொல்லைப் போட்டு விடுங்கள் என்று வாதிட்டார்கள்!

உச்ச நீதிமன்றம் வழக்கைக் கேட்டு விட்டு,
சிந்து என்பது கலாச்சாரம், பண்பாடு, மக்கள் ஆகிய இவற்றைத் தான் குறிக்கும்.
வெறும் பல ஆயிரம் ஏக்கர்கள் கொண்ட மண்ணை மட்டும் அல்ல!
சிந்து நதியும், சிந்தி மக்களும் இந்தியக் கலாச்சாரத்தில், பெரும் பங்கு வகிப்பவை!
எனவே தேசிய கீதத்தைத் துளியும் மாற்றத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்தது!


ஒரு பாடலின் ஆத்மா-வைப் பார்ப்பதை நாம் அனைவரும் கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

அதில் வரும் வார்த்தைகளையோ, இல்லை கால கட்டத்தையோ "மட்டும்" பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை!

வரும் தலைமுறையை, அது எப்படி உற்சாகப்படுத்தும் என்ற சிந்தனை இங்கு மிகவும் முக்கியம்! அப்படி எல்லாம் பார்த்தால்,
ஜன கன மன அதி நாயக - மக்களின் மனங்களில் அதி நாயகமாக, என்றென்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டு தான் இருக்கும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே!!!சில சுட்டிகள்:
தேசிய கீதம் - தமிழில், பொருளுடன்! நண்பர் குமரன், முன்னொரு முறை இட்ட இடுகை
வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!


சியாச்சென் (Siachen) பனிப்பாறைகளில் - ஜன கன மன முழக்கம்!


ஜன கன மன - பல வாத்தியங்களில் முழக்கம்!


References:
Meaning of the National Anthem at Nation Portal of India, Government of India.
http://india.gov.in/knowindia/national_anthem.php


Are we still singing for the Empire? - by Pradip Kumar Datta
http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/pkDatta092004.html

How the anthem was set to music? - An article from The Hindu -
http://www.hindu.com/mag/2006/03/19/stories/2006031900120400.htm

Tagore's undying allegiance to India & Jana Gana Mana
http://homepages.udayton.edu/~chattemr/janaganamana.html

Capt Ram Singh Thakur playing the National Anthem in the presence of Mahatma Gandhi.
http://www.tribuneindia.com/2002/20020504/windows/main2.htm

41 comments:

 1. ஆகா ஆகா ஆகா!!
  அட்டகாசமான பதிவு!!!

  சூப்பரு!!
  very comprehensive and informative!!!
  Kudos!!!!

  ReplyDelete
 2. தேசிய கீதத்தைப்பற்றி நல்ல விளக்கங்களுடன் போதிய ஆதாரங்களுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி kannabiran, RAVI SHANKAR (KRS).

  ReplyDelete
 3. A fiting tribute on the 60th Independence Day. The Siachen video
  is a reminder to Thank our soldiers and appreciate their selfless sacrifice.

  Shobha

  ReplyDelete
 4. Super pathivu. Already knew these things, but was hesitating to write. It is very glad to know you wrote about it. Thanks for the sharing.

  ReplyDelete
 5. நல்ல பதிவு! மிகவும் நல்ல பதிவு!

  ReplyDelete
 6. அருமையான பதிவு


  வாழிய பாரத மணித் திரு நாடு.

  ReplyDelete
 7. மக்கள் கூட்டத்தின் இதய தெய்வமே!
  பாரதத்தின் பெருமைக்குக் காரணமே!
  பாஞ்சால சிந்து கூர்ஜர மராட்டிய
  திராவிட கலிங்க வங்காள
  விந்திய இமய யமுனை கங்கை
  என இவை கடலலை எனக் கூடியே
  உன் இனிய பெயர்களைச் சொல்கின்றன
  உன் புனித ஆசிகளை வேண்டுகின்றன
  உன் வெற்றியைப் பாடுகின்றன
  மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சிக்கு காரணமே!
  பாரதத்தின் பெருமைக்குக் காரணமே!
  உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
  வெற்றி வெற்றி வெற்றி வெற்றி!

  ReplyDelete
 8. தெரிந்த சில விஷயங்கள் . தெரியாத பல விஷயங்கள்.

  பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 9. அர்த்தம் தெரியாமலேயே (சொல்லிக்கொடுக்காமலேயே!!) பாடிக்கொண்டு இருந்தோம் பள்ளிக்காலங்களில்.
  விவரமாக தெரிந்துகொள்ள உதவியது இந்த பதிவு.

  ReplyDelete
 10. ரவிசங்கர்,
  நம்ம மினி ப்ளாக்கர் மீட் ப்ளான் என்ன ஆச்சு..

  உங்க கிட்டேருந்து இ-மெயில் வரும்னு எதிர் பார்த்துக்க்கிட்டிருக்கேன்..

  நால்வர் குழு சந்திக்கிறோமில்ல..?

  அன்புடன்
  சீமாச்சு

  ReplyDelete
 11. அட்டகாசம் நிறைவான தகவலுடன் தேசிய கீதம் இசைத்திருக்கிறீர்கள். மிக அருமை !

  பாராட்டுக்கள் !

  ReplyDelete
 12. Excellent details.

  கலக்கிபுட்டீங்க. நன்றி!

  ReplyDelete
 13. Ravi sir,vanakkam.
  golden words from u,and thanks to mr.Kumaran sir also.
  JAI HIND.VANDE MATHARAM.
  ARANGAN ARULVANAGA.
  ANBUDAN
  k.srinivasan.

  ReplyDelete
 14. நீங்கள் சொல்கிற மாதிரி, நம்ம தேசிய கீதத்தின் இசை நரம்பின் வழி ஓடி உயிரின் உச்சத்தைத் தொடுவது. அதை மிஞ்ச ஆளில்லை எனச் சொல்லலாம். அதுவும் ரகுமான் இசையில் சில துளி கமகங்கள் கொடுக்கிறார் பாருங்கள். இதயத்தைத் தொடுகிறது. ஆனாலும் இதைப் பாடறது ரொம்ப கஷ்டங்க. ஏதோ ஜல, புல என்று கூட்டத்தோடு கோவிந்தா போடத்தான் நம்மால் முடியும். தமிழுக்கும் அமுதென்று பேர்! பாரதியின் பாடல் தேசிய கீதமாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் (ஹிந்தி புளோக்கில் இது போல எவனாவது எழுதிக்கொண்டு இருப்பான்). சரி விடுங்க, நம்மாளு 60 வயது இளைஞர். வாழ்த்தி வணங்குவோம்!

  ReplyDelete
 15. //வெட்டிப்பயல் said...
  நல்ல பதிவு தலைவா...//

  நன்றி பாலாஜி

  // CVR said...
  சூப்பரு!!
  very comprehensive and informative!!!
  Kudos!!!!//

  Dank u CVR. எல்லாம் ஒங்க ஆசி! :-)

  ReplyDelete
 16. //மாசிலா said...
  தேசிய கீதத்தைப்பற்றி நல்ல விளக்கங்களுடன் போதிய ஆதாரங்களுடன் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்//

  நன்றி மாசிலா
  இன்னும் ஆதாரங்கள் இருக்கு. நான் தான் நீளம் கருதி குறைத்துக் கொண்டேன்!

  ReplyDelete
 17. //சிவபாலன் said...
  Wow! Good Post!
  Thanks KRS for Sharing!//

  வாங்க தமிழ்மண நட்சத்திரமே!
  நன்றி சிபா

  ReplyDelete
 18. //Shobha said...
  A fiting tribute on the 60th Independence Day. The Siachen video
  is a reminder to Thank our soldiers and appreciate their selfless sacrifice.//

  நன்றி ஷோபா...
  பனியில் சும்மா ரெண்டு நிமிஷம் என்னால நிக்க முடியுமா? இங்கு பனி பெய்யும் போது? அவங்க நிக்கறதும்...தேசிய கீதம் இசைக்கிறதும் அப்படியே மனசில் தங்கிடுச்சு!

  ReplyDelete
 19. //கீதா சாம்பசிவம் said...
  Super pathivu. Already knew these things, but was hesitating to write. It is very glad to know you wrote about it. Thanks for the sharing.//

  தலைவிக்குத் தெரியாத விடயமா?
  பாருங்க தலைவியின் தயக்கம் தொண்டனுக்கு வசதியாப் போச்சு! :-)

  //Anonymous said...
  நல்ல பதிவு! மிகவும் நல்ல பதிவு!//

  நன்றி அனானி

  ReplyDelete
 20. //துளசி கோபால் said...
  அருமையான பதிவு
  வாழிய பாரத மணித் திரு நாடு//

  நன்றி டீச்சர்.
  பசங்க இன்னிக்கி கிளாஸ்ல கொடி குத்திகிட்டு வந்தாங்களா? என்ன ஸ்வீட் கொடுத்தீய்ங்க?

  ReplyDelete
 21. // குமரன் (Kumaran) said...
  மக்கள் கூட்டத்தின் மகிழ்ச்சிக்கு காரணமே!
  பாரதத்தின் பெருமைக்குக் காரணமே!
  உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!
  வெற்றி வெற்றி வெற்றி வெற்றி!//

  மிக்க நன்றி குமரன்
  நேர் வரி விளக்கம் + ஆக்கம்.
  எவ்வளவு எளிமையான ஆனால் ஆழமாக ஒருங்கிணைக்கும் கீதம்!

  ReplyDelete
 22. //வடுவூர் குமார் said...
  அர்த்தம் தெரியாமலேயே (சொல்லிக்கொடுக்காமலேயே!!) பாடிக்கொண்டு இருந்தோம் பள்ளிக்காலங்களில்.
  விவரமாக தெரிந்துகொள்ள உதவியது இந்த பதிவு.//

  பள்ளியில் பொருள் சொல்லி விளையாட்டு முறையில் சொல்லிக் கொடுக்கலாம் குமார் சார். அந்த வெள்ளக்காரப் பொண்ணு வீடியோவைப் பாருங்க!

  ReplyDelete
 23. //Anandha Loganathan said...
  தெரிந்த சில விஷயங்கள் . தெரியாத பல விஷயங்கள்.
  பகிர்ந்தமைக்கு நன்றி.//

  நன்றி அனந்த லோகநாதன்.
  நீங்களும் பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

  ReplyDelete
 24. //கோவி.கண்ணன் said...
  அட்டகாசம் நிறைவான தகவலுடன் தேசிய கீதம் இசைத்திருக்கிறீர்கள். மிக அருமை !//

  நன்றி GK.
  ரொம்ப நாளா நினைப்பு, இந்தப் பதிவைப் போடணும்ம்னு!
  Aug 15 புண்ணிய்ம கட்டிக் கொண்டது!

  ReplyDelete
 25. //Anonymous said...
  ரவிசங்கர்,
  உங்க கிட்டேருந்து இ-மெயில் வரும்னு எதிர் பார்த்துக்க்கிட்டிருக்கேன்..
  நால்வர் குழு சந்திக்கிறோமில்ல..?
  அன்புடன்
  சீமாச்சு//

  தலைவா...இன்னிக்கி மாலை ஃபோன் செய்கிறேன். நால்வர் குழு, மூவர் குழு ஆகும் போல இருக்கு! :-)

  ReplyDelete
 26. //SurveySan said...
  Excellent details.
  கலக்கிபுட்டீங்க. நன்றி!//

  நன்றி ஒங்களுக்குத் தான்.
  நீங்க பாடுற போட்டி வச்சதால வந்த எண்ணம் தான் சர்வேசன், இது!

  ReplyDelete
 27. //
  Anonymous said...
  Ravi sir,vanakkam.
  golden words from u,and thanks to mr.Kumaran sir also.
  JAI HIND.VANDE MATHARAM.
  //

  நன்றி ஸ்ரீநிவாசன் சார்!
  வாழிய பாரத மணித்திரு நாடு!

  ReplyDelete
 28. //நா.கண்ணன் said...
  நீங்கள் சொல்கிற மாதிரி, நம்ம தேசிய கீதத்தின் இசை நரம்பின் வழி ஓடி உயிரின் உச்சத்தைத் தொடுவது. அதை மிஞ்ச ஆளில்லை எனச் சொல்லலாம். அதுவும் ரகுமான் இசையில் சில துளி கமகங்கள் கொடுக்கிறார் பாருங்கள்//

  ஆமாங்க கண்ணன் சார்.
  ரகுமான் தரும் கமகங்கள்...சும்மா அப்படியே சுண்டி இழுக்குது!


  //ஆனாலும் இதைப் பாடறது ரொம்ப கஷ்டங்க. ஏதோ ஜல, புல என்று கூட்டத்தோடு கோவிந்தா போடத்தான் நம்மால் முடியும்.//

  ஐயோ, ரெண்டு முறை முயற்சி பண்ணா தானா வந்துடும் சார்.
  இதுக்கே இப்படிச் சொல்றீங்கனா...அமெரிக்காவின் star spangled banner பற்றி சொல்லவே வேண்டாம்...
  அமெரிக்கரில் பாதிப் பேருக்கு பேர் தான் தெரியுமே ஒழிய பாட்டே சுத்தமாத் தெரியாது!

  சும்மா 12ஏ வரிகள் தானே! இவ்வளவு சிம்பிளா பல கீதங்கள் உலகில் இருக்கா-ன்னு தேடணும்!

  //பாரதியின் பாடல் தேசிய கீதமாகியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்//

  நான் பல முறை யோசித்ததுண்டு!
  தேசிய கீதங்கள்-னே பாரதி பல பாடல்கள் பாடியுள்ளார்...
  ஆனால் அவை எதுவுமே starting roundக்கு கூட எடுத்துக் கொள்ளப்பட்டதா-ன்னு தெரியலை!

  தாயின் மணிக்கொடி பாரீர்
  பாரத சமுதாயம் வாழ்கவே
  -இவை இரண்டும் சற்று எளிய, சின்ன பாடல்கள் தான். இவற்றை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா தெரியவில்லை!

  ReplyDelete
 29. Wow! Damn useful information! ivlovum thedi engalukaaga sonnamaiku mikka nandrigal!

  ReplyDelete
 30. Ravi,
  read about the heated arguement that went along abt a year back. that our Dhesiya Geetham was abt KINg George.

  But after reading yr post,I feel peace.
  Thank you and it is really very fortunate and heartening you chose to post this right now on our 60th Independance day.
  VANDHEMATHRAM.

  ReplyDelete
 31. //Dreamzz said...
  Wow! Damn useful information! ivlovum thedi engalukaaga sonnamaiku mikka nandrigal!//

  டீரீம்ஸ்ஸ்
  தேடுதல் கொஞ்ச நேரம் பிடித்தாலும்
  இத்தனைப் பேருக்கும் பிடித்திருக்கு என்பதைப் பார்க்கும் போது...மன மகிழ்ச்சியே! சர்வேசனுக்கு பாட்டு பாடி அனுப்பிச்சீங்களா, நண்பா?

  ReplyDelete
 32. //வல்லிசிம்ஹன் said...
  Ravi,
  read about the heated arguement that went along abt a year back. that our Dhesiya Geetham was abt KINg George.//

  ஆமாம் வல்லியம்மா...சொன்னாங்க..ஆனா அப்போ நான் ப்ளாகுக்கு எல்லாம் வராத காலம்!

  //But after reading yr post,I feel peace.
  Thank you and it is really very fortunate and heartening you chose to post this right now on our 60th Independance day.//

  தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
  தாழ்ந்து புகழ்ந்து பணிந்திட வாரீர்!

  ReplyDelete
 33. அருமையான பதிவு தலைவா.

  தேசிய கீதம் பத்தின பதிவு அப்படின்றதால முழு பதிவையும் நின்னுக்கிட்டேதான் படிச்சேன். :)

  ReplyDelete
 34. மிக அழகான நடையில்
  தேசிய உணர்வு.

  ஜெய்ஹிந்த்.

  ReplyDelete
 35. //அரை பிளேடு said...
  அருமையான பதிவு தலைவா.
  தேசிய கீதம் பத்தின பதிவு அப்படின்றதால முழு பதிவையும் நின்னுக்கிட்டேதான் படிச்சேன். :) //

  ஆகா
  நீங்க சொன்னதுக்கப்புறம் செய்யலைன்னா எப்படி?
  அதான் உங்க பின்னுட்டத்தை எழுந்து நின்று கொண்டே பபளிஷ் பண்னேன் தல! :-)

  ReplyDelete
 36. //ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
  மிக அழகான நடையில்
  தேசிய உணர்வு.//

  நன்றி புஷ்ப லதா
  ஜெய்ஹிந்த்.

  ReplyDelete
 37. அழகானமுறையில் தெளிவான விளக்கம். தேசிய கீதத்தின் ஆதியை அறிய செய்ததற்கு நன்றி

  ReplyDelete
 38. அழகானமுறையில் தெளிவான விளக்கம். தேசிய கீதத்தின் ஆதியை அறிய செய்ததற்கு நன்றி

  ReplyDelete
 39. அருமையான விளக்கக்கட்டுரை

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP