சினிமா சினிமா! - எந்தப் பதிவர்களை வைத்துப் பக்திப் படம் எடுக்கலாம்?
இந்தப் பதிவைப் படிச்ச பின் ஏற்படும் பயங்கரமான பின் விளைவுகள், பாவங்கள் எல்லாமே கா.பி. அண்ணாச்சி, என் தம்பி வெட்டி பாலாஜி, இவர்களையே போய்ச் சேர வேண்டும் என்று சொல்லிக்கிட்டு என்னோட திருவிளையாடலை ஆரம்பிக்கிறேன்!
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த அடுத்த ரெண்டு வாரத்திலேயே Break The Rules பண்ணி,
* நண்பனோடு பார்த்தது = விக்ரம் (ஒன்னுமே புரியலை :)
* நண்பன் மற்றும் வாடகை வீட்டில் குடியிருந்த நண்பியோடு பார்த்தது = புது வசந்தம் (வித்தியாசமான அழகான கதை)
* தனியாப் பார்த்தது (ஆறாங் கிளாஸ்) = நாயகன்
சுமார் ஆறு மாசக் குழந்தையா இருக்கும் போது சினிமா பாக்க ஆரம்பிச்சேன் போல! அப்படித் தாங்க சொல்லுறாங்க!
எனக்குச் சோறு ஊட்டணும்-னா ரொம்பவே போக்கு காட்டணும். ஷோக்குப் பேர்வழி நானு! விளையும் பயிர் முளையிலே தெரியும் தானே?
அம்மாவும், அத்தையும், திருவண்ணாமலைக் கோயில்-ல இருக்குற ஒவ்வொரு சாமியும் சிற்பத்தையும் காட்டிக் காட்டி, ஒரு ஒரு வாய் ஊட்டுவாங்களாம்!
சீக்கிரமே ஆல் சாமீஸ் & சிற்பம்ஸ் தீர்ந்து போயிரிச்சு. ஆயிரம் கால் மண்டபம் கட்டுன ராசா, ஒரு பத்தாயிரம் கால் மண்டபமா கட்டி வச்சிருக்கலாம்-ல?
அப்போ தான் அத்தை ஒரு புது சோறூட்டும் வித்தையைக் கண்டுபுடிச்சாங்க! அதான் சினிமா போஸ்டரைக் காட்டிச் சோறூட்டும் பழக்கம்! :)
படத்தோட இயக்குனரே அசந்து போகும் அளவுக்கு, ஒரே போஸ்டருக்கே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான கதைகள் தயாராகும்.
இப்படியாக என் சினிமாக் கண்ணைத் தொறந்த முதல் குருநாதர்...பாலச்சந்தர் இல்லீங்க...எங்க அத்தை தான். (அவிங்க பேரு ஆண்டாள் என்பது உப-குறிப்பு :)))
நிலாவைக் காட்டிச் சோறூட்டிய காலம் போய்
கலாவைக் காட்டிச் சோறூட்டிய ஞானக் குழந்தை அடியேன்! :)
நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா:
ஐட்டம் வாரியா முன்னாடியே சொல்லிட்டேன். ஆனால், ரெண்டாங் கிளாஸ் படிக்கச் சொல்ல, வாழைப்பந்தல் தெய்வா டாக்கீஸ்-ல ஒரு சிவராத்திரிக்குப் போட்டாங்க - திருவருட்செல்வர்!
படத்தைப் பாத்துப்போட்டு, பேஸ்தடிச்சா மாதிரி இருந்தேனாம்! அதுல வர "தாள் திறவாய், கதவே தாள் திறவாய்" பாட்டு தான் ரொம்பவே ஃபீலிங்கஸ் ஆகிப் போயி, இன்னிக்கும் மனசுல நிக்குது. அதுவும் சிவாஜியின் வயதான அப்பர் சுவாமிகளின் நடுநடுங்கும் நடிப்பை, எந்தவொரு மேக்-அப் போட்டும், எந்தவொரு தசாவதாரக் கமலும் இன்று செய்ய முடியுமான்னு தெரியவில்லை!
இந்தியன் தாத்தா மேக்கப்பில் ஒரு விதமான செயற்கைத்தனம் தெரியும். அப்பர் மேக்கப்பில் அப்படி ஒரு செயற்கைத்தனம் தெரியுதா-ன்னு நீங்களே பார்த்துக்குங்க.
செயற்கைத்தனம் இல்லாததைப் பார்த்த பிறகும் எப்படி சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங்-ன்னு சொல்றாங்க-ன்னு தான் புரியலை! உண்மையான உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் எதிர்பார்ப்போ?
அவர் ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!
பாத்திரத்துக்கு நடிகனா? நடிகனுக்குப் பாத்திரமா என்பது காலம் காலமாய் உள்ள கேள்வி தான்! கொஞ்சம் பாத்திரத்தையும் முன்னுக்குத் தள்ளுங்கய்யா! பாட்டுல பமீதா நமீதா-வை எல்லாம் அப்பறம் தள்ளிக்கலாம்!
சரி விடுங்க! ஓப்பன் சீசேம்-ன்னா தொறந்துட்டுப் போவுது! எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு, தாள் திறவாய், கதவே தாள் திறவாய்-ன்னு பாடணும்-னு? பொடிப்பையன் அப்பவே "நாஸ்திகமாய்" கேட்டு அடி வாங்குனேனாம். அது தனிக்கதை! :)
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ஹிஹி...இப்போ சென்னை போன போது நாக்க மூக்க, நாக்க மூக்க -ன்னு காதலில் விழுந்தேன்! பார்த்தேன்! நாக்க மூக்க நாக்க மூக்க-ன்னு கேட்கும் போது.....நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க-ன்னு கந்த சஷ்டிக் கவசம் மாதிரியே இல்ல? அய்யோ, அடிக்க வராதீங்க! :)
போன வாரம், சென்னையில் இருந்து திரும்பி நியூயார்க் வந்தவுடன் பார்த்தது = Body of Lies! டி-காப்ரியோ or ரஸ்ஸல் க்ரோவா? கலக்குவது யாரு?
My Vote is for DiCaprio! நடுநடுவில் குருதிப் புனலை நினைச்சிக்கிட்டேன்!
ரஸ்ஸல் எப்பமே கலக்குவாரு! ஆனால் டி-காப்ரியோ கிட்ட இருந்து இப்படி ஒரு சீரியஸ் ரோலை நான் எதிர்பார்க்கவே இல்ல!
Ferris பாத்திரம் கனக் கச்சிதம்! Hoffman பாத்திரத்தில் ரஸ்ஸல் க்ரோவ் கெட்டப் கலக்கல்! டி-காப்ரியோ காதலிக்கும் அயிஷா, கொஞ்சம் கொஞ்சம் மனிஷா கொய்ராலா முகம்! :)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அதுவும் இப்ப தான் சாமீ! பாரீஸ் போயிருந்த போது என் ஆருயிர் நண்பன் என்னை ஒழிச்சிக் கட்டறத்துக்குன்னே இந்த சிடி பரிசாகக் கொடுத்தான் போல. என்ன பண்ணுறது? அவனுக்காகவே முழுசும் பார்த்தேன் :)
ஏபி நாகராஜன் படம். சிவகுமாரை முருகனாவே பார்த்து பார்த்து, இளமையான கண்ணனாகப் பார்க்கும் போது...ஹூம்! :) பேசாம சூர்யாவைக் கண்ணனா நடிக்கச் சொன்னா என்னா? வாரணமாயிரம் எப்பப்பா ரிலீசு?
படத்தோட பேரு: ஸ்ரீ கிருஷ்ண லீலா! என் தோழனோட பேரு என்னா? :)
4. மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா
சத்தியமா ரமணாவும் இல்ல! பாய்ஸூம் இல்ல! :)
ஜிரா சொன்ன கல்யாண அகதிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதைப் பார்த்த கால கட்டத்தில், படத்தின் முடிவைக் கண்டு அதிர்ந்தும் போயிருக்கேன்.
ஆனால் நினைவில் அடிக்கடி வந்து நிழலாடுவது இரண்டு படம். ஒன்னு அபூர்வ ராகங்கள். இன்னொன்னு மகாநதி. இரண்டுமே கட்டமைப்புகளை நாகரீகமாக உடைக்கும் படங்கள்.
தவமாய் தவமிருந்து = பெரிய ஹிட் இல்லை என்றாலும் என்னை மிகவும் பாதித்த படம். அப்பாவோ, பிள்ளையோ, நண்பனோ, ஒவ்வொரு மனிதனின் ஆசையிலும் ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால் வாழ்வின் மொத்த நியாயத்துக்கும்னும் தனியா ஒரு நியாயம் உண்டு. அதை ஓவர் சென்ட்டி போடாது, அழகாகக் காட்டும் படும்.
எந்த ஒரு ஊடகத்திலும் தனி மனிதச் சிந்தனை, பொது வாழ்க்கை மேம்பாடு என்ற இரண்டுமே உண்டு! பொதுவுக்கு அதிக முக்கியதுவம் அளிப்பது இயற்கை தான்! அதே நேரத்தில் தனிச் சிந்தனை மேம்பாட்டுக்கும் இன்னும் மெனக்கெட வேண்டியிருக்கு! ஆயிரம் தனிச் சிந்தனைகள் சேர்ந்து தான் ஒரு பொதுச் சிந்தனை அல்லவா!
ஆன்மீகப் பதிவுகள் எல்லாம் இந்தத் தனிச் சிந்தனை மேம்பாட்டை மையமாகக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. தவமாய் தவமிருந்தில் வரும் ராம லிங்கங்களின் பார்வைகள் இதனால் இன்னும் கெட்டிப்படும்!
ஆன்மீகம் பாதை காட்டத் தேவையில்லை! பார்வை காட்டினாலே போதும்!
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்பு ஒரு கருத்து சொல்ல, உலக உத்தமர்கள் எல்லாம் தமிழ்ப் பண்பாடு காத்திட பொங்கி எழுந்த நிகழ்ச்சி தான்! இவர்கள் எல்லாம் பதிவுலகம் வந்தா, அடுத்த கட்டத்துக்கு ஈசியாப் போகலாமோ? :)
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
இந்தக் கொஸ்டின் சாய்சில் விடப்படுகிறது! :)
தசாவதாரம் படத்தில் பூவராகவன் இறக்கும் போது, கடல் நீர் போல மிதப்பது தெரிந்தாலும், அது நீர் அல்ல, காற்று என்பதைக் கேட்டு அசந்து போனேன். சின்னச் சின்னக் காமிரா டெக்னிக்குகள் ரொம்ப பிடிக்கும்! அலை பாயுதே படத்தில் காதல் சடுகுடு பாட்டில், காமிரா அப்படியே ஏறி இறங்கி டான்ஸ் ஆடும். இது போலச் சின்னச் சின்ன பார்வை!
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
யூ மீன் கிசு-கிசு? :)
குமுதம்-ல லைட்ஸ்-ஆன் தானே? விகடன்-ல ஒன்னும் இல்லையா?
MSV-இன் விகடன் தொடர் வாசிச்சி இருக்கேன். வைரமுத்து கட்டுரைகள் படித்தது உண்டு. ஒரு நடிகையின் கதை படிப்பதற்காகவே Id ஓப்பன் பண்ணதும் உண்டு!:)
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்-ன்னு ஒருத்தர் தமிழ்ச் சினிமா behind the scenes எல்லாம் எழுதுவாரு! அரிய புகைப்படங்கள் எல்லாம் இருக்கும். சேமிச்சி வச்சிக்குவேன்! அவர் எழுதிய புத்தகம் "சாதனை படைத்த தமிழ் சினிமா வரலாறு", கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று!
7.தமிழ்ச் சினிமா இசை?
இதுக்குத் தனியா ஒரு தொடர் விளையாட்டு தான் போடணும் நீங்க!
இல்லீன்னா றேடியோஸ்பதி, வீடியோஸ்பதி, வனஸ்பதிக்குப் போங்க! இசை இன்பம் வலைப்பூவில் சினிமா இசை இப்போது குறைந்து விட்டது. இன்னும் வரணும்!
இசை அமைப்பாளர்கள் MSV, ராஜா, ரஹ்மான் இவர்கள் எல்லாம் ஒவ்வொரு மைல்கல்! அம்புட்டுத் தான்! அதுக்கு மேல அவர்கள் இல்லீன்னா ஒன்னுமே இல்ல, திரையிசையே ததிகணத்தோம் போட்டிருக்கும்-னு பேசறது எல்லாம்....
இசை என்னும் இன்பமயமான மதுவுடன் கூடவே வரும் போதை போலத் தான்!
மொத்தத்தில்
* பாடல் வரிகளை ஆத்மாவாக வைத்த இசைக்கு MSV.
* இசைக்குப் பாட்டை வைத்த இசைக்கு இளையராஜா.
* இசைக்கு இசையையே வச்சவரு ரஹ்மான்.
திரையிசையில் இப்பவெல்லாம் காலத்தால் அழியாத கானங்கள் வருவதில்லை! வெறும் இரைச்சல் தான் அதிகம் என்பது ஒரு சிலர் கருத்து! ஆனால் ஒப்புக் கொள்ள முடியாது! நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய், அற்றைத் திங்கள் வானிடம், அல்லிச் செண்டோ நீரிடம் போன்ற பாடல்கள் வராமலா போகிறது?
இப்போ கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா-ன்னு பாட்டு வந்தா, அப்போ நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானூங்கோ பாட்டு வந்தது.
இரைச்சலும் இசைக்குத் தேவை! இரைச்சல் மட்டுமே இசையாகிப் போகாமல் பார்த்துக் கொள்வது இயக்குனர் கிட்ட தான் இருக்கு. ஷங்கர் படங்களுக்கு மட்டும் எப்படி வைரமுத்து பாட்டும் கொடுக்காரு? ரஹ்மான் இசையும் கொடுக்காரு?
சுருக்கமாச் சொல்லணும்-னா, MSV, ராஜாவுக்கு இருந்த இயக்குனர்கள் இப்போ இல்லை! அம்புட்டு தான்! :)
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இசைக்கு மொழி கிடையாது-ன்னு சொல்லுறாங்களே! சினிமாவுக்கும் அப்படித் தானுங்களே? :)
தெலுங்கில் கோதாவரி நான் இன்றும் அசை போடும் படம். ஹிந்தியில் தேவதாஸ் (ஷாருக்), தாரே ஜமீன் பர். மலையாளத்தில் சில படம் சொல்லுவேன்! அடிக்க வருவீங்க! புரசைவாக்கம் மோட்சம் தியேட்டர் பக்கத்திலேயே இருக்கும் போது, நான் என்ன செய்வதாம்? :)
பை தி வே, லயனம் என்கிற படம் பார்த்து இருக்கீங்களா? சில்க் ஸிமிதாவின் "நடிப்பை" அதில் பார்க்கலாம்!
உலகத் தரம் வாய்ந்த படமெல்லாம் நீங்க கப்பியைத் தான் கேக்கோணும்!
எனக்கு மியூசிக்கல் ரொம்ப பிடிக்கும். Singing in the Rain எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்! உங்க வீட்டுக்கு வந்தா, இந்தப் படமோ இல்லை The Chicago - இரண்டில் ஒன்னு போட்டு விட்டீங்கன்னா போதும், ரொம்ப சாப்பாடு எல்லாம் கேட்டு தொந்திரவு செய்ய மாட்டேன்-ன்னு மட்டும் வாக்குமூலம் கொடுக்கறேன்! :)
Love in the time of Cholera! அருமையான காதல் ப(பா)டம்! Garcia Márquez அவர்களின் நாவலை முதலில் திரைக்குக் கொண்டு வந்த படம்! பாடகி ஷகிரா நடிக்கவும் இருந்தார். ஆனால் ஒரு நிர்வாணக் காட்சி இருந்ததால் ஒதுங்கி விட்டார்!
காதலைக் காலரா நோய்க்கு ஒப்பிடும் துணிவு, பப்ளிக்கா இங்க யாருக்காச்சும் வருமா? கணவனின் இறுதிச் சடங்குகள் முடிந்த கையோடு 50 வருடப் பழைய டெலிகிராம் பையன் முன்னே தோன்றுகிறான்; எத்தனை வருஷம் காத்திருக்க முடியும் காதலுக்கு? ஒரு அம்பது வருஷம்? அது வரை பெண்களோடு ஒப்புக்குச் சல்லாபம். மற்றபடி அவனுக்குக் காதல் தேடும் உள்ளம். அவன் காமுகனா? காதலனா?
9. தமிழ்ச் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச் சினிமா மேம்பட அது உதவுமா?
அட, என்ன இப்பிடிக் கேட்டுப்புட்டீங்க? அடுக்குமா இது?
எனக்கு வெட்டிப்பையல் தெரியும்
எனக்கு திவ்யா தெரியும்
எனக்கு ஜிரா தெரியும்
எனக்கு ராயல் ராம் தெரியும்
எனக்கு சீவீஆர் தெரியும்
எனக்கு அருட்பெருங்கோ தெரியும்
எனக்கு பாஸ்டன் பாலா தெரியும்
எனக்கு குசும்பன் தெரியும்
எனக்கு கோவி கண்ணன் கூடத் தெரியும்!
இப்படி வருங்கால இயக்குனர்கள், திரைக்கதையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கவிஞர்கள், திரைத் தொகுப்பாளர்கள், நகைச்சுவை வல்லுநர்கள் என்று இத்தனை பேரின் அறிமுகம் இருக்கும் போது, சேச்சே...இப்படிக் கேக்கலாமுங்களா? :)
எனக்கு கேஆரெஸ் கூடத் தெரியும்! தேவர் பிலிம்ஸ் மாதிரி கேஆரெஸ் பிலிம்ஸ்! யானைகளைத் தேடும் பணியில் இருக்கேன்!
தமிழ்த் திரையின் அடுத்த கட்டம் ஆன்மீகச் சினிமா தான்! தலைவர் கால்ஷீட் கூட 2020க்கு இப்பவே கிடைச்சாச்சி! :)
10. தமிழ்ச் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
* இதுவும் கடந்து போகும்! மசாலா என்பது ஒரு சில பிரியாணிப் படங்களுக்கு மட்டுமே என்று ஆகும்!
எப்பமே பரியாணி தின்ன முடியுங்களா?
எப்பமே ஆன்மீகப் பதிவு படிக்க முடியுங்களா என்ற கேள்வியில் உள்ள அதே நியாயம் தானே இதிலும்? :)
நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் மின்னிடுகிறார்கள். சேரன் அவர்களுள் ஒருவர். சுசி கணேசன் இன்னொருவர். விக்ரம், சூர்யா இருவரும் எல்லாம் முடிந்தது என்று ஒதுங்காமல், இன்னும் இன்னும் நிறைய செய்ய வேண்டும்!
* இன்றைய தமிழ்த் திரைக்கு எல்லாம் வாய்த்தும், ஆரோக்யமான போட்டி போட்டு, நடிப்பை வெளிக் கொணரவல்ல நல்ல இயக்குனர்கள் வாய்க்கவில்லையோ?
* பெண்களுக்கு ஏன் இப்போதெல்லாம் திரையுலகில் தனியான தனித்துவம் இல்லை?
பெண்ணுரிமைக் கொடி பறக்காத காலங்களில் கூட பத்மினி என்றாலோ, பானுமதி என்றாலோ, சரிதா என்றாலோ.....ஒரு தகைமை இருந்ததே! இன்று அது எங்கே?
சில பெண் நடிகர்கள் விலகிக் கொண்டாலும், தங்கள் முத்திரைப் பதிப்புகளை இன்னும் முன்னெடுத்துச் செல்ல உதவ வேண்டும்!
பெண்கள் மனது வைத்தால், தமிழ்த் திரையின் மசாலாவை மாற்ற முடியும்! முடியும்! முடியும்!
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பிரிக்க முடியாதது என்னவோ? = தமிழும் - சுவையும்! அட அதைக் கூட அரசியல்-ல பிரிச்சிறலாம்!
ஆனா பிரிக்கவே முடியாதது, தமிழும் - சினிமாவும்!
முத்தமிழ்-ன்னா அது = இயல், இசை, சினிமா!
எல்லாரும் பதிவு போட்டாச்சி! யாரய்யா கூப்பிட?
மாலன்
சாரு நிவேதிதா
அண்ணா கண்ணன்
வாசந்தி
கனிமொழி
சரி...சினிமாவை மாறுபட்ட கோணத்தில் பார்க்க வல்ல இருவரை அழைக்கிறேன்! - இவிங்க இப்ப தான் ஒரு தொடர் ஆடி முடிச்சாங்க! அதுக்குள்ள இன்னொன்னு!
மதுமிதா அக்கா & கொல்கத்தா நிர்மலா - முன்னாள் டீச்சர்
பி.கு:
சரி...ஏன் புகழ் பெற்ற நாவல்களைத் தழுவி அதிக தமிழ்ப் படங்கள் எடுப்பதில்லை? இல்லை வெற்றி அடைவதில்லை?
பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்களுக்குத் தான் இந்த கதியா?
மோக முள், இரும்புக் குதிரைகள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், என் இனிய இயந்திரா (இப்போ எந்திரன்-ன்னு வரப் போகுது?)...இதெல்லாம்?
மக்கள் அதிகம் வாசித்த நாவல்கள் தானே! எடுத்தா ஓடாதா? ஹாலிவுட் ஹிட்டான நாவல்களை எல்லம் படமாக்கிக் கொழிக்கும் போது, கோலிவுட் மட்டும் கோலி விளையாடிக் கொண்டே இருப்பதுக்கு காரணம் ஏனோ? நல்ல கதைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் தமிழ் நாவல்கள் எக்கச்சக்கமா இருக்கே!
உ.கு:
ஏன் இப்ப எல்லாம் ஏபி நாகராஜன் டைப் ஆன்மீகப் படங்களே வருவதில்லை? வந்தால் ஓடாதா?
அதெல்லாம் ஹரிதாஸ் காலம்-பா ன்னு சொன்ன போது, ஒரு கந்தன் கருணை ஓடவில்லையா? தேவர் படம் ஓடவில்லையா? தாய் மூகாம்பிகை ஓடவில்லையா?
அதுக்காக இராம நாராயணன் மாதிரி படம் எடுக்கச் சொல்லலை! குஷ்பு சொன்ன போது மட்டும் கலாச்சாரம் பேசினோமே? தமிழ்க் கலை பண்பாட்டுப் பொக்கிஷங்களை எல்லாம் இன்றைய மக்கள் ரசனைக்கு ஏற்றவாறு தருவார்கள் யார்?
சரி, எனக்கு நம்மாழ்வார்-இராமானுசரை வச்சிப் படம் எடுக்க ஆசை! பதிவர்களில் யாரைக் கண்ணனா போடலாம்? யாரை இராமானுசரா போடலாம்? யாரைக் குலோத்துங்க சோழனா போடலாம்...சொல்லுங்க பார்ப்போம்! நாரதர் வேசம் ஏற்கனவே ஒருவர் துண்டு போட்டாச்சி :))
சுபம்!

இப்போதைக்கு நன்றி மட்டும் வேலை முடிஞ்சு வச்சுக்கிறேன் ;)
ReplyDeleteசினிமா தொடர் பதிவை வெகு சிரத்தையுடன் தரமாக எழுதி உள்ளீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.
//செயற்கைத்தனம் இல்லாததைப் பார்த்த பிறகும் எப்படி சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங்-ன்னு சொல்றாங்க-ன்னு தான் புரியலை! உண்மையான உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் எதிர்பார்ப்போ?
ReplyDelete//
இது கேள்வி!
கே ஆர் எஸ், நல்ல கொசுவத்தி! அதுவும் ஆன்மிக வாசனை தூக்கலா:-) க்ளோப் ட்ராட்டிங் ஆன்மீகப் பதிவர் என்ற பட்டம் பெறுவீராக!
ReplyDelete//அவர் ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!//
ReplyDeletehehehehehehehe :P:P:P
\\சரி, எனக்கு நம்மாழ்வார்-இராமானுசரை வச்சிப் படம் எடுக்க ஆசை! பதிவர்களில் யாரைக் கண்ணனா போடலாம்? யாரை இராமானுசரா போடலாம்? யாரைக் குலோத்துங்க சோழனா போடலாம்...சொல்லுங்க பார்ப்போம்! நாரதர் வேசம் ஏற்கனவே ஒருவர் துண்டு போட்டாச்சி :))
ReplyDeleteசுபம்! \\
தல
நம்ம "தல" கானாவோட படம் என்ன ஆச்சு...அதை சொல்லுங்க முதல்ல ;)
கலக்கீட்டீங்க தலை.. அதுலயும் கே.ஆர்.எஸ் பிலிம்ஸ் சூப்பர்.. ஒளிப்பதிவாளர் வேலைக்கு என்னை தேர்ந்தெடுத்ததுக்கு விரைவில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்றேன், மறக்காம கலந்துக்கங்க..
ReplyDeleteஅன்பு, அமைதி, ஆனந்தம்தன்னை
ReplyDeleteஅகிலமெங்கும் நிறைத்திடும்
ஆன்மீகம் செழித்திட
எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்,
வாழ்க வையகம் !
வளமுடன் வாழ்க!!
இந்தியன் தாத்தா மேக்கப்பில் ஒரு விதமான செயற்கைத்தனம் தெரியும். அப்பர் மேக்கப்பில் அப்படி ஒரு செயற்கைத்தனம் தெரியுதா-ன்னு நீங்களே பார்த்துக்குங்க
ReplyDeletevery well said. :)
Shobha
//கானா பிரபா said...
ReplyDeleteவேலை முடிஞ்சு வச்சுக்கிறேன் ;)//
ஐயோ! பயமாயிருக்கே!
அண்ணாச்சி, இளையராஜா பத்தி நான் ஏதாச்சும் தப்பாச் சொல்லிட்டேனா என்ன? :)
//குடுகுடுப்பை said...
ReplyDeleteசினிமா தொடர் பதிவை வெகு சிரத்தையுடன் தரமாக எழுதி உள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.//
நன்றி குடுகுடுப்பை.
இன்னும் நிறைய விரித்துச் சொல்லலாம். அடுத்த ஆட்டத்தில் வச்சிக்குவோம்! :)
//ஜோ / Joe said...
ReplyDelete//நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் எதிர்பார்ப்போ?
//
இது கேள்வி!//
ஜோ அண்ணே
இது பின்னூட்டம்! :)
மார்க் பண்ணிச் சொன்னமைக்கு நன்றி.
//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteகே ஆர் எஸ், நல்ல கொசுவத்தி! அதுவும் ஆன்மிக வாசனை தூக்கலா:-)//
ஆகா...இதுல எங்கே ஆன்மீக வாசனை வந்துச்சி-க்கா?
//க்ளோப் ட்ராட்டிங் ஆன்மீகப் பதிவர் என்ற பட்டம் பெறுவீராக!//
இன்னொரு பட்டமா?
க்ளோப் ட்ராட்டிங்-காஆஆஅ?
க்ளோப்-ஜாமூன் வேணும்னா கொடுங்க! வாங்கிக்குறேன்! :)
//கீதா சாம்பசிவம் said...
ReplyDelete//அவர் ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!//
hehehehehehehe :P:P:P//
கீதாம்மா...
இது உங்க சிரிப்பா இல்லை அங்க்கிள் சிரிப்பா? :)
//கோபிநாத் said...
ReplyDeleteநம்ம "தல" கானாவோட படம் என்ன ஆச்சு...அதை சொல்லுங்க முதல்ல ;)//
ஹா ஹா
அதை இன்னும் நீ மறக்கலையா கோபி?
சென்னைப் பயணம் சென்றதால் அது தள்ளிப் போச்சு ராசா. அதான் இப்ப இங்க குளிர் வந்துருச்சே! உட்கார்ந்து எழுதிற வேண்டியது தான்! :)
//Raghav said...
ReplyDeleteகலக்கீட்டீங்க தலை.. அதுலயும் கே.ஆர்.எஸ் பிலிம்ஸ் சூப்பர்..//
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல ராகவ்!
//ஒளிப்பதிவாளர் வேலைக்கு என்னை தேர்ந்தெடுத்ததுக்கு விரைவில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்றேன், மறக்காம கலந்துக்கங்க..//
மேடையில் நயன் இல்லீன்னா கூடப் பரவாயில்லை! நம்ம பாவனா இருக்காப் போல பாத்துக்குங்க! :)
//Anonymous said...
ReplyDeleteஆன்மீகம் செழித்திட
எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்,
வாழ்க வையகம் !
வளமுடன் வாழ்க!!//
அப்படியே ஆகட்டும்!
ததாஸ்து!
ஆமென்!
நன்றி அனானி ஐயா!
//Shobha said...
ReplyDelete//இந்தியன் தாத்தா மேக்கப்பில் ஒரு விதமான செயற்கைத்தனம் தெரியும். அப்பர் மேக்கப்பில் அப்படி ஒரு செயற்கைத்தனம் தெரியுதா-ன்னு நீங்களே பார்த்துக்குங்க//
very well said. :)
Shobha//
யூ டூ லைக்ட் இட் ஷோபாக்கா? :)
கொஞ்சம் நேரம் கொடுங்க ரவி. வந்து எழுதறேன். சரியா?
ReplyDeleteபாரீசில் ஜீராட்ட நான் சொன்ன விஷயம் சொல்லியாச்சா:)
இங்கே வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாக எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் ரவி.
வருங்கால கலைப் பொக்கிஷத்தைக் குறிப்பிட மறந்துட்டீங்க. கேஆரெஸ் பிலிம்ஸில் கூடவா 2020 வரைக்கும் ஒரு
இடம் இல்லை.
சாம் ஆன்டர்சன் படம் வர முக்கியமான காரணியாய் இருந்த அக்காவை மறந்த தம்பியை வேறென்ன சொல்ல:) (கல்லெறி எதுவும் விழலியே)
நாரதரும் நீரே
ReplyDeleteநா ரதரும் நீரே
சினிமா பதிவு நன்றாக இருக்கிறது.
// எனக்கு மியூசிக்கல் ரொம்ப பிடிக்கும். Singing in the Rain எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்! //
இல்லையே... நீங்க American in Parisல பாக்கனும்!!!!! எங்கயோ தப்பா சொல்லீருக்கீங்க போல இருக்கே!
காலம் எடுத்து சிறப்பான பதில்களையும் விளக்கங்களையும் அளிச்சிருக்கீங்க, இன்று தான் முழுமையா படிச்சேன். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
ReplyDelete//மதுமிதா said...
ReplyDeleteகொஞ்சம் நேரம் கொடுங்க ரவி. வந்து எழுதறேன். சரியா?//
ஓக்கே-க்கா!
//பாரீசில் ஜீராட்ட நான் சொன்ன விஷயம் சொல்லியாச்சா:)//
சொல்லிட்டேன்! நீங்க கொடுக்கச் சொன்ன அடியும் கொடுத்துட்டேன்! :)
//இங்கே வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாக எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் ரவி.//
வன்முறை தப்பாச்சே-க்கா? :)
//வருங்கால கலைப் பொக்கிஷத்தைக் குறிப்பிட மறந்துட்டீங்க. கேஆரெஸ் பிலிம்ஸில் கூடவா 2020 வரைக்கும் ஒரு இடம் இல்லை//
ஹிஹி! அப்படி வாரீங்களா?
உங்களுக்கு இல்லாத இடமா?
கதாநாயகி...ஐ மீன்...கதைகள் எழுதும் நாயகி நீங்க தான்! கதைகளைத் தேர்ந்தெடுக்கும் இலாகாவும் நீங்க தான்! போதுமா?
//சாம் ஆன்டர்சன் படம் வர முக்கியமான காரணியாய் இருந்த அக்காவை மறந்த தம்பியை வேறென்ன சொல்ல:) (கல்லெறி எதுவும் விழலியே)//
ஓ...சாம் ஆண்டர்சன் கொடுமையின் ஆணி வேர் உங்க பதிவில் முளைச்சது தானாக்கா? :))
கல்லெறீஞ்சீங்க-ன்னா, கல்லை மட்டும் கண்டால்-னு தசாவதாரம் பாட்டை எடுத்து விடுவோம்! அப்புறம் பதிவர்கள் கொந்தளிச்சிருவாங்க! ஸோ, பாத்துக்கா, பாத்து! :)
திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் மறைவுச் செய்தி! அன்னாருக்கு இந்தச் சமயத்தில், என் நினைவஞ்சலி!
ReplyDeleteஎல்லாருக்கும் அவரின் காதலிக்க நேரமில்லை இல்லீன்னா கல்யாணப் பரிசு தான் நினைவுக்கு வரும்!
ஆனா எனக்கு மிகவும் பிடிச்சது இளமை ஊஞ்சல் ஆடுகிறது தான்!
எங்காவது சிவாஜி என்ற மூன்றெழுத்தைப் பார்த்தால் ஜோ அங்கு வந்துவிடுவார் !
ReplyDelete:)
//ஷோக்குப் பேர்வழி நானு! //
ReplyDeleteசொல்லித்தான் தெரியனுமா?
யாராவது சோடா குடுங்கப்பா..
///ஓ...சாம் ஆண்டர்சன் கொடுமையின் ஆணி வேர் உங்க பதிவில் முளைச்சது தானாக்கா? :))///
ReplyDeleteஇல்லை. இல்லை. இல்லவே இல்லை.
ஆணிவேர் கரு, என்னுடைய பாடலில் முளைச்சது:)
நம்ம கண்ணன் பாட்டில் முதல் பதிவு நினைவிருக்கிறதா தம்பி! அந்த பாடலுக்கு இசையமைத்த்வர் எடுத்து வெளியிட்ட முதல் படம் அது. என்னுடைய இன்னுமொரு கண்ணன் பாட்டில் நாயகனும் நாயகியும் கண்ணனாகவும் ராதையாகவும் பாடுவர்.
அந்தப் பாட்டால வந்த வினை இது:)
///கதைகள் எழுதும் நாயகி நீங்க தான்! கதைகளைத் தேர்ந்தெடுக்கும் இலாகாவும் நீங்க தான்! போதுமா?///
ReplyDeleteஇலாகா ஒதுக்கிய கண்ணபிரான் வாளுக:)
///சாம் ஆன்டர்சன் படம் வர முக்கியமான காரணியாய் இருந்த அக்காவை மறந்த தம்பியை வேறென்ன சொல்ல:) (கல்லெறி எதுவும் விழலியே)//
ஓ...சாம் ஆண்டர்சன் கொடுமையின் ஆணி வேர் உங்க பதிவில் முளைச்சது தானாக்கா? :))
கல்லெறீஞ்சீங்க-ன்னா, கல்லை மட்டும் கண்டால்-னு தசாவதாரம் பாட்டை எடுத்து விடுவோம்! அப்புறம் பதிவர்கள் கொந்தளிச்சிருவாங்க! ஸோ, பாத்துக்கா, பாத்து! :)///
நல்லா பாருங்க ரவி. நான் கல்லெறியவில்லை.
ஏன்னா, பத்ரி என்னிடம், 'என்ன கொடுமைம்மா இது' ந்னு கேட்டுவிட்டு இப்படின்னு யாருட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்னு கேட்டுக்கொண்டான்:)
அதனால என் மேல யாரும் கல்லெறியலியேன்னு செக் பண்ணிட்டு உங்களையும் கேட்கிறேன்.
இயக்குனர் ஸ்ரீதருக்கான அஞ்சலி சரியா இந்த இழையில் போட்டிருக்கிறீங்க. நீங்க குறிப்பிட்டது தவிர எனக்கு 'வெண்ணிற ஆடை' யும் பிடிக்கும். சூப்பர் ட்விஸ்ட். சூப்பர் பாடல்கள்.
ஜெயலலிதா, ஸ்ரீ காந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என அனைவருக்கும் முதல் படம் என்பார்கள்.
///நாரதரும் நீரே
ReplyDeleteநா ரதரும் நீரே
சினிமா பதிவு நன்றாக இருக்கிறது.///
நம்ம இலாகாவில கதை, வசனமும் ஜீராக்கே குடுத்துடுங்க.
நாரதரும் நீரே
நா ரதரும் நீரே
சூப்ப்ப்ப்ப்பர்.
//அப்பர் மேக்கப்பில் அப்படி ஒரு செயற்கைத்தனம் தெரியுதா-ன்னு நீங்களே பார்த்துக்குங்க//
ReplyDeleteநடிப்புன்னு சொன்னீங்கன்னா சரி. ஏன்னா தலைவர் கை, முகம் எல்லாம் நல்லா மேக்கப் போட்டுட்டு, முதுகை பள பளன்னு விட்டுருந்தாங்க. அது அன்னைக்கே கொஞ்சம் உறுத்தலா பட்டுது !
//தருமி said...
ReplyDeleteநடிப்புன்னு சொன்னீங்கன்னா சரி.//
வாங்க தருமி ஐயா! அப்பர் நடிப்பில் செயற்கைத்தனம் இல்லவே இல்லை தான்!
//ஏன்னா தலைவர் கை, முகம் எல்லாம் நல்லா மேக்கப் போட்டுட்டு, முதுகை பள பளன்னு விட்டுருந்தாங்க. அது அன்னைக்கே கொஞ்சம் உறுத்தலா பட்டுது !//
வாவ்...இம்புட்டு நோட் பண்ணியிருக்கீக!
முதுகுக்கும் ஏதாச்சும் மேக்கப் போட்டிருக்கலாம் தான்! முன்னிலும் பின்னே அழகு என்பார்கள் பெருமாள் கோயிலில்! :)
ஆனா பொதுவாகவே முன்புறம் தளரும் அளவுக்கு, முதுகு தளராது-ன்னு தான் நினைக்கிறேன். மார்பு கருக்கும் அளவுக்கு முதுகு அவ்வளவா கருக்காது. வெயிலில் ஏர் உழுத குடியானவனுக்கும் கொஞ்சம் பளபள-ன்னு இருக்கும். அப்பர் நிறத்தால் கொஞ்சம் வெளுப்பு தான். திருத்தொண்டர் புராணத்தில் வரும்.
ஆனா இதெல்லாம் பாத்து தான் மேக்கப் போட்டிருப்பாங்க-ன்னு சொல்லவே முடியாது :)
//G.Ragavan said...
ReplyDeleteநாரதரும் நீரே
நா ரதரும் நீரே//
ஹா ஹா ஹா
இதிலிருந்தே தெரியலையா யார் நா-ரதர்-ன்னு! :)
//சினிமா பதிவு நன்றாக இருக்கிறது//
நன்றி ராகவா!
//இல்லையே... நீங்க American in Parisல பாக்கனும்!!!!! எங்கயோ தப்பா சொல்லீருக்கீங்க போல இருக்கே!//
அது நம் தம்பி சீவீஆர் பதிவுல!
Singing in the Rain was a trend setter in musicals.
but that doesnt mean, thatz the only one that stands the time.
American in Paris, a contemporary, was also a big box-office hit...
Oklahoma, Sound of Music....
and recently Moulin Rouge, Chicago என்று பேர் சொல்லும் மியூசிக்கல்கள் ஒரு கைப்பிடி இருக்கு! அதான் அப்பவும் சொன்னது! இப்பவும் சொல்லறது :)
//கானா பிரபா said...
ReplyDeleteகாலம் எடுத்து சிறப்பான பதில்களையும் விளக்கங்களையும் அளிச்சிருக்கீங்க//
எனக்கு இன்னும் திருப்தியே இல்லை அண்ணாச்சி.
கோதாவரி தெலுங்குப் படம் பத்தி நாலு வரி எழுதினேன்.
பதிவு நீண்டுகிட்டே போதுன்னு எடுத்திட்டேன் :))
//இன்று தான் முழுமையா படிச்சேன். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா//
எல்லாம் கானா பாடச் சொன்ன கானம்!
குறை ஒன்றும் இல்லை கானா! :))
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteஎங்காவது சிவாஜி என்ற மூன்றெழுத்தைப் பார்த்தால் ஜோ அங்கு வந்துவிடுவார் !
:)//
ஜோ சம்பவாமி யுகே யுகே! :)
கமல் என்பதும் மூன்றெழுத்து தான்! அங்கும் ஜோ ஆஜர்! :)
//ILA said...
ReplyDelete//ஷோக்குப் பேர்வழி நானு! //
சொல்லித்தான் தெரியனுமா?
யாராவது சோடா குடுங்கப்பா..//
இளாவுக்கு சோடா குடுங்க!
எனக்குச் சோடி குடிங்கப்பா! :))
என்ன இளா, நம்ப மாட்டீங்களா நான் ஷோக்குப் பேர்வழி-ன்னு?
//மதுமிதா said...
ReplyDeleteஎன்னுடைய இன்னுமொரு கண்ணன் பாட்டில் நாயகனும் நாயகியும் கண்ணனாகவும் ராதையாகவும் பாடுவர்.
அந்தப் பாட்டால வந்த வினை இது:)//
அக்கா...நீங்க நிஜமாலுமே பெரிய ஆளு தான்-கா!
அடுத்து சினிமா சான்ஸ் உங்க கிட்ட தான்! கேஆரெஸ் பிலிம்ஸ் ஓனரே இனி நீங்க தான்!
சரி, அந்தக் கண்ணன் பாட்டு,
நீங்க எழுதினது,
"செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா-வா"? இல்லை வேற ஒரு ஜோடிப் பாட்டா?
@மதுமிதா-க்கா
ReplyDelete//ஏன்னா, பத்ரி என்னிடம், 'என்ன கொடுமைம்மா இது' ந்னு கேட்டுவிட்டு இப்படின்னு யாருட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்னு கேட்டுக்கொண்டான்:)//
ஹா ஹா ஹா
உண்மை ஒவ்வொன்னா மாதவிப் பந்தல்-ல வரணும்-னு இருக்கு! :)
//இயக்குனர் ஸ்ரீதருக்கான அஞ்சலி சரியா இந்த இழையில் போட்டிருக்கிறீங்க. நீங்க குறிப்பிட்டது தவிர எனக்கு 'வெண்ணிற ஆடை' யும் பிடிக்கும். சூப்பர் ட்விஸ்ட். சூப்பர் பாடல்கள்//
வெண்ணிற ஆடை பாடல்களும் நடனமும் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
சிவந்த மண் படமும் அவரது தானே? அதையும் கூர்ந்து பாத்திருக்கேன்!
//மதுமிதா said...
ReplyDeleteநம்ம இலாகாவில கதை, வசனமும் ஜீராக்கே குடுத்துடுங்க//
என்னாக்கா நீங்க? எங்க ராகவனை இப்படியாக் கொறைச்சி மதிப்பிடறது? படத்துக்கு ஹீரோ-வா போடத் தான் எனக்கு எண்ணம். கையில் புல்லாங்குழல் கொடுத்து ட்ரையல் பாத்துட்டேன்! :)
//நாரதரும் நீரே
நா ரதரும் நீரே
சூப்ப்ப்ப்ப்பர்.//
நவரச நாயகன் ராகவன்
வசனம் எழுதித் தானே நடிக்கும்...
கேஆரெஸ் பிலிம்ஸ்
பொருநைத் துறைவன்....
திரைக்கதை=குமரன்
இசை=ஷைலஜா
இயக்கம்=மதுமிதா
சிறப்பு அப்சரஸ் வேடத்தில் நமீதா & நயன்தரா :))
பதில் போட்டாச்சு:)
ReplyDeletehttp://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_21.html
செம்பவளவாய் திறந்து பாட்டு இல்லை ரவி . அதுவேற ஒரு ஜோடிப்
ReplyDeleteபாட்டு.
என்னுடைய அந்த பாட்டுக்கு ட்யூன் போட்ட பிறகு அந்த தாக்கத்துல (கவனிக்கவும் இங்கே தாக்கம்னா அதிர்வு) திரைக்கதை, வசனம் எழுதி என் பாட்டில் ரென்டு லைன் எடுத்து அவரே முழு பாட்டு, இசை, இயக்கம்னு அசத்திடாருப்பா:)
////கோவி.கண்ணன் said...
ReplyDeleteஎங்காவது சிவாஜி என்ற மூன்றெழுத்தைப் பார்த்தால் ஜோ அங்கு வந்துவிடுவார் !
:)//
அட! அது பூ- வண்டு ஈர்ப்பு. இதிலென்ன அதிசயம்!!
//இப்போ சென்னை போன போது நாக்க மூக்க, நாக்க மூக்க -ன்னு காதலில் விழுந்தேன்! பார்த்தேன்!
ReplyDeleteநாக்க மூக்க நாக்க மூக்க-ன்னு கேட்கும் போது,
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க-ன்னு கந்த சஷ்டிக் கவசம் மாதிரியே இல்ல? அய்யோ, அடிக்க வராதீங்க! :)///
anna...why anna WHYYYYYYY!!!
ungalai poi naan youth nu solli ragavan annakitta support panninen.adikadi ippadi aanmegam nu pesi pesi u r killing youth like us!ithu ellam nalla illai solliten.
//எங்க அத்தை தான். (அவிங்க பேரு ஆண்டாள் என்பது உப-குறிப்பு :)))
ReplyDelete//
more aanmeegam !!!
ithu cinema post mathiri illai.etho saamiyar cinema pathi ezuthura mathiri irruku
//
ReplyDeleteஏபி நாகராஜன் படம். சிவகுமாரை முருகனாவே பார்த்து பார்த்து, இளமையான கண்ணனாகப் பார்க்கும் போது...ஹூம்! :) பேசாம சூர்யாவைக் கண்ணனா நடிக்கச் சொன்னா என்னா? வாரணமாயிரம் எப்பப்பா ரிலீசு?//
avaru thambiya balaramana nadika solluvoma!!!
yean anna ippadi ellam think pannuringa...
//துர்கா said...
ReplyDeleteavaru thambiya balaramana nadika solluvoma!!!
yean anna ippadi ellam think pannuringa...//
he he
vaama thangachi. wow, enna oru idea? kaarthiya balaraman-aa potturuvom! paruthi veeran maathiri kalappai veeran!
ithukku thaan oru thangachi venumgirathu!
btw, kannan thambi balaraman-nu cholli en arivu kannai thoranthutta ma thoranthutta! :))
//துர்கா said...
ReplyDeleteanna...why anna WHYYYYYYY!!!
ungalai poi naan youth nu solli ragavan annakitta support panninen.//
athu unmai thaane? why jister, ragavan othukkalaiyaa enna?
//adikadi ippadi aanmegam nu pesi pesi u r killing youth like us!ithu ellam nalla illai solliten.//
he he.
aanmeegam pesina sambanthar vaaliba payyan thaan ma.
aadi shankarar-nu oruthar. fair-aa, cool-aa irupaaru. sema youth.
avar aadi shankaran, naan ravi shankaran! :))
//தருமி said...
ReplyDeleteஅட! அது பூ- வண்டு ஈர்ப்பு. இதிலென்ன அதிசயம்!!//
சிவாஜி=பூ சரி!
ஜோ அண்ணாச்சி வண்டா? அண்ணே கொஞ்சம் பறந்து வாங்க! :)
//
ReplyDeletebtw, kannan thambi balaraman-nu cholli en arivu kannai thoranthutta ma thoranthutta! :))//
ada paavi ravi anna :(
ippadiya kathaiyai change panurathu..
what I meant was we can surya thambi karthik to be balaraman!they are sibiling in real life but too bad suryva was the eldest!
ennakum puranam theriyum ok va...ennai ippadi public ah damage pannathuku ungaluku irruku
//
ReplyDeletehe he.
aanmeegam pesina sambanthar vaaliba payyan thaan ma.
aadi shankarar-nu oruthar. fair-aa, cool-aa irupaaru. sema youth.
avar aadi shankaran, naan ravi shankaran! :))//
anna ithu antha kaalathu youth :)
appadithaan irrupanga..can u be youth of present time plz...?
btw neega old man nu oore solluthu..konjam youthfula topic thedi kandu pudichu post poda try pannunga ;)
//துர்கா said...
ReplyDeletebut too bad suryva was the eldest!//
and you the youngest :))
//ennakum puranam theriyum ok//
good...nammai pola youth-kku kooda puranam ellam theriyuthu paathiyaa?
//va...ennai ippadi public ah damage pannathuku//
public damage-aa? ayyago! athellam krs-nu oru payyanai, thurgah ennum sirumi thaane pannuvaa? ragavan thunaiyoda?
//ungaluku irruku//
ayyo venam ma venam!
naan surrender!
thurgah ma ki jai ho! :)
//துர்கா said...
ReplyDeleteanna ithu antha kaalathu youth :)
appadithaan irrupanga..can u be youth of present time plz...?//
ha ha ha!
sure, sure!
//btw neega old man nu oore solluthu..//
why ma? antha oor-la ellame old men-aa?
//konjam youthfula topic thedi kandu pudichu post poda try pannunga ;)//
cheri...romayanam ezutha vaikka ennai thoondura!
gopi, un aasaiyai niraivetha, thangachiye eduthu kodukkara! I will! get-set-go!
கேஆர் யெஸ் ஃபில்ம்ஸ் எப்போ ஆரம்பிக்கப் போகிறது. ஏதாவது அவ்வையார் பாட்டுப் பாட சான்ஸ் கிடைக்குமா;)
ReplyDeleteஸ்ரீதர் மறைவு துயரே. எங்கள் இளமைக்கால கனவுகளைத் தூண்டியதே அவர் படங்கள் தான்.
மதுமிதா திரைப் பாடல் வேற எழுதி இருக்கீங்களா. சொல்லவே இல்லையே!!
சினிமாத்தொடர் எழுதிய உலகம் சுற்றி வந்த பாரீசுக்குப் போய் வந்த, ஜிரா நண்பர் ரவி வாழ்க:)
ReplyDelete//good...nammai pola youth-kku kooda puranam ellam theriyuthu paathiyaa? //
ReplyDeleteநான் யூத் :D
நீங்க.....ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை.புராணம் கதை தெரியனும்ன்னா பாட்டி இருந்தாலே போதும் :))
என் பாட்டி கதை சொல்லிதான் இது எல்லாமே எனக்குத் தெரியும்
//public damage-aa? ayyago! athellam krs-nu oru payyanai, thurgah ennum sirumi thaane pannuvaa? ragavan thunaiyoda? //
ReplyDeleteஇது என்ன ஒரு பொய்.நானும் ராகவன் அண்ணாவும் சின்ன குழந்தைகள்.இந்த மாதிரி எல்லாம் நாங்க பண்ணவே மாட்டோம்.ரவின்னு ஒரு தாத்தாதான் மகாபாரத கதை எல்லாம் ரிமேக் பண்ணுறேன்னு சொல்லி பதிவுலகத்தையே டெமெஜ் பண்ணுவார்
கமலின் மேக்கப்பில் செயற்கைத்தனம் தெரிவதும் உண்மை. சிவாஜியின் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிவதும் உண்மை.
ReplyDeleteகாரணம் சிவாஜியே சொல்லியிருக்கிறார். அது பெரிய சங்கராச்சாரியாரின் சாயலில் செய்தது என்று. பெரிய சங்கராச்சாரியாரின் ஒவ்வொரு மேனரிஸத்தை இமிடேட் செய்யும் போது பெரியவரை நேரில் பார்த்த என் போன்றவர்களுக்கு சிவாஜியின் செய்கை சற்று செயற்கைத்தனமாக தெரிந்தது.
சில சமயம் நமக்கு ஒன்று பிடித்து விட்டால் அதில் குறைகள் தெரியாமல் போவது இயல்பு. எனக்கு சலங்கை ஒலி கமலஹாசன் நடிப்பில் குறை தெரியாது. நாயகனில் ஏகப்பட்டது தெரியும். :)
//vidhya (vidhyakumaran@gmail.com) said...
ReplyDeleteசிவாஜியின் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிவதும் உண்மை.
காரணம் சிவாஜியே சொல்லியிருக்கிறார். அது பெரிய சங்கராச்சாரியாரின் சாயலில் செய்தது என்று//
அது வந்துங்க வித்யா...
பெரியவரை மனத்தில் வைத்து செய்தேன்-ன்னு தான் சிவாஜி சொல்லி இருக்காரு. ஆனா அது செயற்கைத்தனம்-ன்னு சொன்னா மாதிரி எதுவும் தெரியலையே!
நம் எல்லாருக்குமே மனசுக்குள்ள சில அடையாளங்களை வச்சிக்குறது வழக்கம் தான்! அது மாதிரி அப்பரின் பணிவுக்கு மனசுக்குள்ளார இவரை நினைச்சிக்கிட்டாரு போல!
//பெரிய சங்கராச்சாரியாரின் ஒவ்வொரு மேனரிஸத்தை இமிடேட் செய்யும் போது பெரியவரை நேரில் பார்த்த என் போன்றவர்களுக்கு சிவாஜியின் செய்கை சற்று செயற்கைத்தனமாக தெரிந்தது//
இதைச் சிவாஜி சொல்லாமலேயே இருந்திருந்தா, அப்போ பெரியவரோட ஒப்பிட்டு இருப்பீங்களா? :)
இன்னொன்னும் கேட்கிறேன்:
பெரியவரை "நேரில் பார்த்த" நீங்கள், அவர் அங்க அசைவுகள் எல்லாம் தெரிந்த பாக்கியம் பெற்றவராக இருந்திருப்பீர்கள்.
சிவாஜி சொல்லாமலேயே, அவர் அசைவுகள், பெரியவரின் சாயலில் இருந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா?
சிவாஜி சொன்னது நடிப்பின் போது அவரை மனத்தால் இருத்திக் கொண்டேன் என்பது தான்! அவரைக் காப்பியடிக்க ட்ரை பண்ணேன்-ன்னு சொன்னதா நீங்க நினைச்சிக்கிட்டீங்க போல!
பெரியவர் தலை ஆடாது! சிவாஜியோ, தலை கைகளை வயதானவரின் உதறல் போல ஆட்டுவார்! பணிவுக்கு மட்டுமே சிவாஜி பெரியவரை உள்ளிறுத்திக் கொண்டார்!
பார்க்கும் பார்வையில் தான் இத்தனையும் வித்யா! நீங்க இராமானுசர் பதிவில் சொன்னதும் கூட! :)
அதான் ஆன்மீகத்தைத் "தரிசனம்"-ன்னு சொன்னாங்க! :)
//துர்கா said...
ReplyDeleteபுராணம் கதை தெரியனும்ன்னா பாட்டி இருந்தாலே போதும் :))
என் பாட்டி கதை சொல்லிதான் இது எல்லாமே எனக்குத் தெரியும்//
எனக்கும் கூட என் பாட்டி சொல்லித் தான் தெரியும்! துர்காப் பாட்டி! :)
//துர்கா said...
ReplyDeleteநானும் ராகவன் அண்ணாவும் சின்ன குழந்தைகள்.//
ராகவன் குழந்தை தான்!
பாரீசில் கூட ஃபீடிங் பாட்டில்-ல தான் கேப்பச்சினோ குடிச்சான்!
ஆனா நீ அப்படியா? அன்னிக்கிக் கூட தட்டைவடை சாப்புடும் போது, பாத்து துர்கா-ன்னு சொன்னேன்! நோ ப்ராப்ளம்-ன்னு பல் செட்டைக் கழட்டினியே! :)))
//வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteகேஆர் யெஸ் ஃபில்ம்ஸ் எப்போ ஆரம்பிக்கப் போகிறது. ஏதாவது அவ்வையார் பாட்டுப் பாட சான்ஸ் கிடைக்குமா;)//
எங்க ஆஸ்தானப் பாடகி நீங்க தான் வல்லியம்மா! மொதல் பாடகியாச்சே! :)
// உலகம் சுற்றி வந்த பாரீசுக்குப் போய் வந்த, ஜிரா நண்பர் ரவி வாழ்க:)//
இதுக்கு ஜிரா தான் வந்து சொல்லணும்!
பாரீசுக்குச் சென்றேன்! ஜிராவிடம் தோற்றேன்! :)
@ kannabiran, RAVI SHANKAR (KRS)
ReplyDelete//இதைச் சிவாஜி சொல்லாமலேயே இருந்திருந்தா, அப்போ பெரியவரோட ஒப்பிட்டு இருப்பீங்களா? //
கண்டிப்பாக கண்டு பிடித்திருக்கலாம். சில படங்களில் கண்ணை சுருக்கி பாடல் காட்சிகளில் தேவானந்த் போல செய்வார். சில படங்களில் கிஷோர் குமார் போல செய்வார். கமலஹாசன் சத்யா படத்தில் ஸ்டண்ட் நடிகர் அழகை பார்த்து செய்தேன் என்று சொல்லியும் மிக தெளிவாக ரிச்சர்ட்டை போல செய்கிறார் என்று புரிந்து விட்டதல்லவா!
//சிவாஜி சொல்லாமலேயே, அவர் அசைவுகள், பெரியவரின் சாயலில் இருந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா?//
உடல் மொழியில் அவர் உட்கார்ந்த விதம், நரைத்த முடி, தலையில் கையை வைக்கும் விதம் என நிறைய விஷயம் அப்படியே இருந்தது. ஆனால் நிறைய முக்கியமான கட்டங்களில் மஹாத்மாக்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என ஸ்டடி பண்ண தவறி விட்டார் என்பது தெரிந்தது. ஒரு வயதான பண்பட்ட குடும்ப பெரியவரின் செய்கையாக அது இருந்தது.
//பெரியவர் தலை ஆடாது! சிவாஜியோ, தலை கைகளை வயதானவரின் உதறல் போல ஆட்டுவார்! பணிவுக்கு மட்டுமே சிவாஜி பெரியவரை உள்ளிறுத்திக் கொண்டார்!
பார்க்கும் பார்வையில் தான் இத்தனையும் வித்யா! //
அது சரி. :))))))))))))))))
நீங்கள் சிவாஜியினுடையது அதில் எப்படி ஒவர் ஆக்டிங்க் இல்லைன்னும் சொல்லலியே! உங்கள் பார்வையில் ரொம்ப ரியலா இருந்திருக்கு. என் பார்வையில் அப்பரின் பக்தியை, இறை நினைப்பை, பக்தி ரசத்தை கான்ஸன்ட்ரேட் பண்ணுவதற்கு பதில் சராசரி வயோதிகரது உடல் அசைவுகளையும், உடல் மொழியையும் அளவுக்கு அதிகமாக கவனம் கொடுத்து கெடுத்து விட்டார் போல் இருந்தது.
பட்டினத்தாரில் ஓரளவிற்கு டி.எம்.எஸ் சித்தரின் வெளிப்பாட்டை கொண்டு வந்திருப்பார். நாகையா சக்ரதாரியில் கோராகும்பரின் தன்மையை கொண்டு வந்திருப்பார். கன்னடத்தில் ஸ்ரீநாத் என்பவர் ராகவேந்தரராய் நடித்திருப்பார். அவரால் முடிந்த வரை அற்புதமாக வாழ்ந்திருப்பார். பெங்கால் படமான (மிக பழைய படம்) ராணி ராஸமணியில் ஒருவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸராய் அருமையாய் நடித்திருப்பார்.
சிவாஜியின் நடிப்பை பல படங்களில் இரசித்திருக்கிறேன். ஆனால் அவை பக்தி படங்கள் கண்டிப்பாய் அல்ல. திருவிளையாடலில் மாத்திரம் இறையனாராய் வரும் போது இரசித்திருக்கிறேன். ஆனால் அதை விட ஏ.பி. நாகராஜன் அசத்தியிருப்பார்.
சிவாஜியின் இயல்பான நடிப்பை பல படங்களில் கண்டு ரசித்திருக்கிறேன். பக்தி படங்களில் ம்ஹூம்.
//சிவாஜி சொன்னது நடிப்பின் போது அவரை மனத்தால் இருத்திக் கொண்டேன் என்பது தான்! அவரைக் காப்பியடிக்க ட்ரை பண்ணேன்-ன்னு சொன்னதா நீங்க நினைச்சிக்கிட்டீங்க போல!//
இல்லை. அவரை காப்பியடித்திருந்தால் கூட பரவாயில்லை. அவரோடு இவரது கற்பனையையும் கலக்க ஒரு மாதிரி கெட்டு விட்டது.
//பெரியவர் தலை ஆடாது! சிவாஜியோ, தலை கைகளை வயதானவரின் உதறல் போல ஆட்டுவார்! பணிவுக்கு மட்டுமே சிவாஜி பெரியவரை உள்ளிறுத்திக் கொண்டார்!//
உதறல் வயதான ஆன்மீகம் அல்லாதோருக்கும் இருக்கும். அந்த நடிப்பு இங்கே போதாது. அப்பரின் பணிவு தெரியவில்லை. உலக மக்கள் காண்பிக்கும் பணிவுதான் தெரிந்தது.
//நீங்க இராமானுசர் பதிவில் சொன்னதும் கூட! :)////
பார்க்கும் பார்வையில் பல உண்டு. அதில் என் போன்றவரின் பார்வை சரியில்லை என்று நீங்கள் கருதினால் தாராளமாக என் கருத்தை ஒதுக்க உங்களுக்கு உரிமை உண்டு. என் போன்றவரின் பார்வையையும் கருத்தில் கொள்ள நீங்கள் எண்ணினால் என் கருத்தை சொல்ல வருவேன். :)
//அதான் ஆன்மீகத்தைத் "தரிசனம்"-ன்னு சொன்னாங்க! :)//
அதுதான் பிரச்சனையே. எது தரிசனம் என்று புரியாமலேயே..தாங்கள் தரிசனம் பெற்று விட்டதாய் கருதி மனித அறிவில் ஆன்மீகத்தை விளக்க ஆரம்பித்து விடுகிறோமல்லவா?
யார் தரிசனம் பெற்றார் என்று எப்படி அறிவோம்? தரிசனம் பெற்றவரது சொல்லில் இருகும் மெய் தானாக கேட்பவர் மனதில் பணிவை ஏற்படுத்தும் என இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார். மற்றப்படி சாத்தியமில்லை.
This comment has been removed by the author.
ReplyDelete//vidhya (vidhyakumaran@gmail.com) said...
ReplyDeleteஆனால் நிறைய முக்கியமான கட்டங்களில் மஹாத்மாக்கள் எப்படி நடந்துக் கொள்வார்கள் என ஸ்டடி பண்ண தவறி விட்டார் என்பது தெரிந்தது. ஒரு வயதான பண்பட்ட குடும்ப பெரியவரின் செய்கையாக அது இருந்தது//
:)
அப்பரும் வயதான பண்பட்ட குடும்பப் பெரியவர் தானே?
மஹாத்மாக்களுக்கு "அங்க" லட்சணங்களைக் காட்டிலும் "அக" லட்சணங்கள் தான் அதிகம்!
வெளியில் பார்க்க "மஹாத்மா" என்றே தெரியாது! வயதான பண்பட்டவர் போலத் தான் இருப்பார்கள்!
எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!
//அப்பரின் பக்தியை, இறை நினைப்பை, பக்தி ரசத்தை கான்ஸன்ட்ரேட் பண்ணுவதற்கு பதில் சராசரி வயோதிகரது உடல் அசைவுகளையும், உடல் மொழியையும் அளவுக்கு அதிகமாக கவனம் கொடுத்து கெடுத்து விட்டார் போல் இருந்தது//
ஹா ஹா ஹா! அதாச்சும் அப்பர் என்றால் சராசரி வயோதிகர் போல் இருக்க மாட்டார்! இன்னும் "தேஜஸோடு" இருப்பார் என்ற உங்கள் கற்பனை தான் காரணம்!
//பட்டினத்தாரில் ஓரளவிற்கு டி.எம்.எஸ் சித்தரின் வெளிப்பாட்டை கொண்டு வந்திருப்பார். நாகையா சக்ரதாரியில் கோராகும்பரின் தன்மையை கொண்டு வந்திருப்பார்//
எத்தனை மக்கள் நாகையாவின் கோராகும்பரை நினைவில் வைத்துக் கொண்டார்கள்? எத்தனை பேர் சிவாஜியின் அப்பரை நினைவில் வைத்துக் கொண்டார்கள்?
அப்பரோ, கோராகும்பரே - அவரின் அசைவுகள் இப்படித் தான் என்று யாரும் சொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் காலத்தால் முந்தையவர்கள்! பாத்திரத்தின் நடிப்பே அவர்களைச் சாதாரண பொது மக்களின் மனத் திரையில் பதிக்கிறது!
//திருவிளையாடலில் மாத்திரம் இறையனாராய் வரும் போது இரசித்திருக்கிறேன். ஆனால் அதை விட ஏ.பி. நாகராஜன் அசத்தியிருப்பார்//
தருமி இன்னும் அசத்தி இருப்பார்! :)))
//சிவாஜியின் இயல்பான நடிப்பை பல படங்களில் கண்டு ரசித்திருக்கிறேன். பக்தி படங்களில் ம்ஹூம்//
Exactly Opposite!
சிவாஜி குடும்ப கதாபாத்திரங்களில் தான் ஓவர் ஆக்டிங் செய்வதாகப் பரவலான குற்றச்சாட்டு! ஏன் என்றால் அவை தற்காலத்தையவை!
புராணப் படங்களில் அவர் "ஓவர்" ஆக்டிங் செய்யவில்லை என்றால், ஆக்டிங்-கே செய்யவில்லை என்று சொல்லி விடுவார்கள்! :)
//பார்க்கும் பார்வையில் பல உண்டு. அதில் என் போன்றவரின் பார்வை சரியில்லை என்று நீங்கள் கருதினால் தாராளமாக என் கருத்தை ஒதுக்க உங்களுக்கு உரிமை உண்டு//
அதான் ஒதுக்கி விட்டேனே! :)
உங்கள் கருத்தை அல்ல! நேரத்தை!
அதை "ஒதுக்கித்" தானே உங்களுக்கு இம்புட்டு நேரம் பதில் அளிக்கிறேன்? :))
//அதுதான் பிரச்சனையே. எது தரிசனம் என்று புரியாமலேயே..தாங்கள் தரிசனம் பெற்று விட்டதாய் கருதி மனித அறிவில் ஆன்மீகத்தை விளக்க ஆரம்பித்து விடுகிறோமல்லவா?//
அது தான் பிரச்சனையே!
மனித அறிவு கீழ்நிலை! ஆன்மீகம் மேல் நிலை என்று எண்ணி விடுவதால் வரும் பிரச்சனையே இது!
அப்படி அல்ல என்று தரிசிப்பதே தரிசனம்!
மனித அறிவினால் ஆன்மீகத்தைத் தாராளமாக விளக்கலாம்! தினப்படி வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டே, ஆன்மீகப் பெரும் தத்துவங்களை ஒப்பு நோக்க முடியும்! பீடாரோஹணம் செய்து தான் தரிசிக்க வேண்டும் என்பது இல்லை! இராமகிருஷ்ணர் செய்ததும் இதுவே!
//தரிசனம் பெற்றவரது சொல்லில் இருகும் மெய் தானாக கேட்பவர் மனதில் பணிவை ஏற்படுத்தும் என இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார்//
அவர் காலத்தில் அவர் சொல் கேட்டு பணிவு கொண்டவர் சிலரே! மற்ற பலரும் அவர் தரிசனத்தைக் கேலி தான் பேசினார்கள்! நீங்கள் சொன்ன அதே காரணம் வைத்து தான் அந்தக் கேலி! - எது தரிசனம் என்று புரியாமலேயே தரிசனம் பெற்று விட்டதாய் கருதிக் கொள்கிறார் இராமகிருஷ்ணர்! மனித அறிவில் ஆன்மீகத்தை விளக்க ஆரம்பித்து விட்டார் பித்தர் என்று தான் அன்றைக்கு அவருக்கு ஏச்சு!
Lets agree to disgaree, Vidhya! :)
//இருவரையும் விட தருமியே அசத்தி இருப்பார்! :)))//
ReplyDeleteநன்றி.
:-)
@ K.R.S
ReplyDeleteமேற்கொண்டு பேச ஒன்றுமில்லை கே.ஆர்.எஸ்! :)
உடலை வளைத்து, சேஷ்டை பண்ணி, உரக்க சொக்கா என்று கத்தி, குதிப்பதை நகைச்சுவை நடிப்பில் சற்று மிகை வகை என்பார்கள். ஆக தருமி வேடத்தில் நாம் பேசும் 'நடிப்பு' இல்லை.
எது நடிப்பு என்பதிலேயே உங்களுக்கும் எனக்கு கருத்து உடன்பாடு இல்லை.
அப்பர் முகத்தில் தேஜஸ் வேண்டுமா வேண்டாமா என்பது அப்புறம் இருக்கட்டும், ஒரு மஹாத்மாவின் முக பாவனைகள்,உடல் அசைவுகள் அவ்வளவு சாதாரணமாக இருக்காது. இறைநிலையை சதா தரிசிப்பவரது மன, உடல் தன்மைகள் பெருத்த வித்தியாசமாக இருக்கும். அங்கே சிவாஜி ஒரு நல்ல குடும்ப பெரியவர் போல உடல் அசைவுகளையும், மனதின் தன்மைகளையும் வெளிக்காட்டி இருந்தார். இதற்கு பிறகு விளக்க ஒன்றுமில்லை.
இராமகிருஷ்ணரை பித்தர் என்று அவர் தரிசனத்திற்காக சொல்லவில்லை. அவர் தரிசனம் பெற்றாரா இல்லையா என்று கூட வெளி உலகத்திற்கு அவ்வளவாக தெரியாது. தட்சிணேஸ்வரத்தில் இருந்த காவல்காரரான ஹல்தார் என்பவர் போன்ற ஒரு சிலர் இவர் மாதுர்நாத் பிஸ்வாஸ்க்கு வசியம் செய்து விட்டார் என நம்பி இவரை துன்புறுத்தினர். (ஆதாரம்: குருதேவர் ஸ்ரீ இராமகிருஷ்ணர் புத்தகம், இராமகிருஷ்ணா மட வெளியீடு)
இளைஞர்கள் வேலைக்கு போகாமலும், திருமணம் புரியாமலும் சந்நியாச தர்மத்தில் இவர் தள்ளிவிடுவதாகவும் இவரை குற்றஞ்சொல்லினர். இவரது நிர்விகல்ப சமாதியை சிவ்நாத் போன்றவர்கள் மூளைக்கோளாறு என்றனர். அந்த நிலையில் இவர் செல்வதை தான் மூளைக்கோளாறு என்றனரே தவிர, இவர் கண்ட தூல, சூக்ஷூம தரிசனங்களை அல்ல.
நிர்விகல்ப நிலையில் காண்பான், காணப்படுபவன் இல்லாததால் அதை தரிசனம் என்ற சொல்லால் குறிப்பது சரியில்லை என்பர்.
ஆக தரிசனம் பெற்றவர்களின் அடையாளங்களை உண்மையாக இருக்கும் பக்தரால், பயிற்சியாளரால் நிச்சயம் அறிய முடியும். இதையும் அனைத்து பெரியவர்களும் சொல்லி இருக்கின்றனர்.
ஆகவே மேற்கூறிய உங்கள் வாக்கியம் ஒன்றிலும் எனக்கு உடன்பாடில்லை!
இருப்பினும் மாற்றுக் கருத்தை நட்புடன் கேட்டு, பதிலும் அளித்த உங்கள் நல்ல மனதிற்கு பாராட்டுக்கள்!
நல்லது வித்யா! நாகேஷின் நகைச்சுவையைச் சீரியஸ்னஸ் தணிக்கவே குறிப்பிட்டேன்! :)
ReplyDelete//ஒரு மஹாத்மாவின் முக பாவனைகள்,உடல் அசைவுகள் அவ்வளவு சாதாரணமாக இருக்காது//
அப்பேர்ப்பட்ட மகாத்மாவின் உடல் அசைவை இன்னொரு மகாத்மாவால் தான் காட்ட முடியுமே அன்றி, சிவாஜி போல ஒரு நடிகனால் காட்ட முடியாது!
ஒரு நடிகனால் "நடிக்கவே" முடியும்! "நடிப்பு" என்னும் போதே அது செயற்கைத்தனம் ஆகி விடுகிறது! எது "ஓரளவு" இயற்கையான செயற்கைத்தனம் என்று வேண்டுமானால் யோசிக்கலாம் :)
The "Graceful walk" with which mahatmas move around, can never be acted or re-enacted.
//நிர்விகல்ப நிலையில் காண்பான், காணப்படுபவன் இல்லாததால் அதை தரிசனம் என்ற சொல்லால் குறிப்பது சரியில்லை என்பர்//
Do pardon me for my technical term usage.
தரிசனம் = வரையறைகள்/ இலக்கணங்கள் தாண்டிய "எவ்வுயிர்க்கும் நன்றாம் பார்வை" என்ற அளவில் மட்டுமே புழங்கினேன்.
சம "தரிசனம்" என்று தான் பிரஹ்லாத சம்ஹிதையும் பேசும்!
தரிசனம் பெற்றவரது சொல்லில் இருகும் மெய் தானாக கேட்பவர் மனதில் பணிவை ஏற்படுத்தும் என்று நீங்கள் குறிப்பிட்டதால்,
இராமகிருஷ்ணரின் சொல், அப்படிப் பலர் மனத்தில் "தானாக" பணிவை ஏற்படுத்தவில்லையே என்ற அளவில் மட்டுமே குறிப்பிட்டேன்!
//ஆகவே மேற்கூறிய உங்கள் வாக்கியம் ஒன்றிலும் எனக்கு உடன்பாடில்லை!//
:)
நன்றி வித்யா!
உடன்பாடில்லை என்பதில் எனக்கு உடன்பாடே! :)
இன்னும் சில நாட்களில் அத்வைத/த்வைத உரையாடல் பதிவு ஒன்று இட எண்ணம்! அவசியம் வாங்க!
//தருமி said...
ReplyDelete//இருவரையும் விட தருமியே அசத்தி இருப்பார்! :)))//
நன்றி. :-)
//
தருமி ஐயாவுக்குத் தான் எம்புட்டூ சந்தோசம்! :)
//இன்னும் சில நாட்களில் அத்வைத/த்வைத உரையாடல் பதிவு ஒன்று இட எண்ணம்! அவசியம் வாங்க!//
ReplyDeleteSure. Thanks.
//இன்னும் சில நாட்களில் அத்வைத/த்வைத உரையாடல் பதிவு ஒன்று இட எண்ணம்! அவசியம் வாங்க!//
ReplyDeleteஎனக்கும் இந்த அழைப்பு வந்ததாக வச்சிக்கிறேன். நன்றி