Thursday, May 14, 2009

தமிழ்மணம்-5000! எந்த வலைப்பூ?

தமிழ்மணத்தில் 5000-வது வலைப்பூ...திரட்டப்பட்டுள்ளது! அது யாருதா இருக்கும்? எந்த வலைப்பூவா (பதிவா) இருக்கும்?
தமிழ்மணத்தின் 5000-வது பதிவு ஒரு ஆன்மீகப் பதிவு டோய்! :)
Hip Hip! Hurrah! Cheers! அரச மீனவன் பாட்டிலை ஓப்பன் பண்ணி ஆன்மீகப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்து சொல்லுங்க மக்கா!:)))


5000 வலைப்பதிவுகள் கொண்ட முதல் திரட்டி (தமிழில்) தமிழ்மணம் தான்! - இது வியத்தகு வளர்ச்சி! பெருமை மிக்க வளர்ச்சி!

இதனுடன் வளர்ந்தது வெறும் தமிழ்மணம் என்னும் ஒரு திரட்டி மட்டுமல்ல!
* தமிழ் வளர்ந்தது!
* தமிழில் எழுதும் பழக்கம் வளர்ந்தது!
* தமிழில் படிக்கும் பழக்கம் வளர்ந்தது!
* சண்டையிட்டாலும், தமிழில் சண்டையிடும் பழக்கமுமாய் வளர்ந்தது! :)

தமிழ் இணையச் சமூகம்! நிஜ சமூகத்தில் என்ன இருக்கோ, நல்லதோ, அல்லதோ, எல்லாமே இங்கும் இருக்கும்! ஆனால் தொடர்ந்து இனிமையான, சுவாரஸ்யமான பயணம் செய்வதில் தான் எல்லாமே இருக்கு!

60% சினிமா,
20% சிறுகதை,
10% தொடர்கதை,
5% துணுக்கு,
5% ஆறு வித்தியாசம் இத்யாதிகள்....
என்று மட்டுமே இருந்த தமிழ்ப் பத்திரிகை உலகில்...வருடும் தென்றலாய் ஒரு மாற்றம்!
அந்தந்தத் துறைஞர்கள், அதில் வல்லுநரோ இல்லையோ, துறை தோறும், துறை தோறும் தமிழில் எழுதுவது என்பது....ஒரு மகத்தான மாற்றம் அல்லவா?!!!

தமிழில் பல துறைகளும் ஒன்று சேரும் இடமாய் அல்லவோ இது வளர்ந்தது!
* ஆன்மீகம் முதல் அறிவியல் வரை...
* புகைப்படக் கலை முதல் பதிவர் புத்தகங்கள் வரை...
பல கப்பல்கள், படகுகள் ஒன்று சேர்ந்த இடம்! True Tamizh Portal! தமிழ்மணம் மெய்யாலுமே ஒரு தமிழ்த் துறைமுகம்!

பின்னாளில் பல திரட்டிகள்...தேன்கூடு, சங்கமம், தமிழிஷ் என்று பலவும் வந்தாலும்...தமிழ்மணம் ஒரு முன்னோடி!
இன்று தான் பல பிரபல பத்திரிகைகளும் நாளிதழ்களும் பின்னூட்டம் காண்கின்றன! ஆனால் அது பிளாக்கரில் இருந்தாலும், பின்னூட்டம்-ன்னா தமிழ்மணம் என்பது தானே ஆதி கால அரிச்சுவடி? :))

தமிழ்மணம் இன்னும் வளர்ச்சி பெற வேண்டும்! அதற்கு வாழ்த்துக்கள்!
முன்னோடிகள் முன்னாடி தான் ரெண்டு பெரிய சவால்கள் எப்பமே வரும்!
1. ஓய்வு பெறும் வயது :)
2. புதிய ஜனனம்! புதிய பிறப்பு!

தமிழ்மணம் என்பது நடிகர் திலகம் போலவோ சச்சின் டெண்டுல்கர் போலவோ தனி ஆள் கிடையாது, முதலாம் தெரிவைக் கைக்கொள்ள!
இரண்டாம் தெரிவான புதுமையைக் கைக்கொள்ள வேண்டும்! புதிய திரட்டிகளைத் தூக்கிச் சாப்பிட என்னென்ன செய்யலாம் என்று 2020 கணக்கைப் போட்ட வண்ணம் தமிழ்மணம் இருக்க வேண்டும்! அதற்கும் வாழ்த்துக்கள்!

பதிவர் பட்டறை, கருத்தரங்கு, FETNA என்பதை எல்லாம் தாண்டி, தமிழர்களின் ஒட்டு மொத்த குரலாய் தமிழ்மணம் மாற முடியுமா?
ஈழத்தில் இறுதிக் கட்டத்தைக் காணும் இந்த அவல நேரத்தில்...
இணைய உலகில் சாதிக்க முடிந்த தமிழனால், நிஜ உலகில் சாதிக்க முடியாமல் போனதே! - இது ஏன்?


* ஒரு திரட்டி பதிவுகளை மட்டும் தான் திரட்ட முடியுமா?
* வெள்ளை மாளிகை முன்போ, ஜார்ஜ் கோட்டை முன்போ, உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வைத் திரட்ட முடியாதா?
* ஒரு நாளைக்கு ஒரு பதிவர் என்ற முறையில் உண்ணாவிரதச் சங்கிலியை, உலகத்தின் அதிகார மையங்கள் முன் அரங்கேற்ற முடியாதா?
* அண்ணாவின் நூற்றாண்டில், தமிழர்கள் தினம் பத்து பேராய், இந்திக்கு மதம் மாறுவோம் என்று தமிழக அரசை மிரட்ட முடியாதா?
* பல திரட்டிகளும் ஒன்று சேர்ந்து, வெறுமனே உணர்ச்சிகளை மட்டுமன்றி, வசைபாடல்கள் மட்டுமன்றி, வெற்றிக்கான யோசனைகளைத் திரட்டித் தர முடியாதா?

திரட்டி - எழுத்தை மட்டுமே திரட்டுமா?
இந்தக் கேள்விக்கான விடை தெரியும் போது, தமிழர்களின் ஒட்டு மொத்த இணைய வெற்றிக்கு, தமிழ்மணம் போலவே, அந்தப் பதிலும் ஒரு முன்னோடியாய் இருக்கும்! அது வரை, ஈழம் இதயத்தில் முள்ளாய் இருக்கும்!


தமிழ்மணம் வலைப்பதிவுகளின் புள்ளிவிபரம்: (May 14, 2009, 20:00:00)

மொத்தப் பதிவுகள்: 5006
கடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 9150
கடந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 2308
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 316
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 305
பின்னூட்ட நிலவரம் காட்டப்படும் பதிவுகள்: 1599
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்: 1749

தமிழ்மணத்தில் 5000வது வலைப்பூ...திரட்டப்பட்டுள்ளது! அது யாருதா இருக்கும்?-ன்னு கேட்டோம்-ல்ல? ஹிஹி!
தமிழ்மணத்தின் 5000வது பதிவு ஒரு ஆன்மீகப் பதிவாய் அமைஞ்சதில் என்னா ஒரு ஒற்றுமை பாத்தீங்களா? இனி எவனாச்சும் "ஏன் கேஆரெஸ்,ஆன்மீகப் பதிவு மட்டுமே எழுதறீங்க?"-ன்னு கேட்கட்டும் பார்க்கலாம்! :))

நம்ம அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார், தமிழ்மண ஆரம்ப காலகட்டப் பின்னூட்டப் பிதாமகர், குமரனே அந்தப் பெருமைக்கு உரியவர்! :)

தமிழ்மணத்தின் 5000வது வலைப்பூ = உடையவர்!

கருவறைக்குள் தமிழையும், தமிழரையும் திரட்டிய ஒரு திரட்டி!
1000 ஆண்டுகளுக்கு முன்பே, ஆன்மீக அரசாங்கத்தில், ஒடுக்கப்பட்ட ஒரு மொழியையும் அதன் மக்களையும், அதே அரசாங்கத்துக்குள் நுழைத்துக் காட்டி, திருப்பு முனை ஏற்படுத்தியவர்!
இராமானுசர்!
அன்னார் பற்றிய வலைப்பூவே, 5000ஆவது வலைப்பூவாக அமைந்தது மட்டிலா மகிழ்ச்சி!
அவரைப் போலவே இதுவும் தமிழ்மணத் திருப்புமுனையாய் அமைய வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

Windows 7.0 இல், ஓம் என்னும் பிரணவத்தை, ஒருங்குறியில் ஓரெழுத்தாக கொண்டு வர முயன்ற நம் நா.கணேசன் ஐயா, தமிழ்மணம்-5000 பற்றிய சேதி சொன்னதில் இருந்து மட்டிலா மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

11 comments:

 1. வாழ்த்துக்கள்!

  தமிழ்மணத்திற்கும்

  5000வது வலைப்பூவாய் வந்து அமைந்த உடையவருக்கும் :)

  ReplyDelete
 2. 5000+ வலைப்பூக்கள் இருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 305 கட்டுரைகளே எழுதப்படுகின்றன. மகிழ்வான நேரத்தில் இன்னும் மகிழ வேண்டுமெனில் எழுதப்படும் இடுகைகள் அதிகரிக்க வேண்டும்.

  நன்றி

  //ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 305

  ReplyDelete
 3. குமரனுக்கும் தமிழ்மணத்திற்கும் வாழ்த்துகள்.

  இங்கே ஒரு சந்தேகம். Blog என்றால் ‘பதிவு’. Post என்றால் ‘இடுகை’. இதுதான் சரியான கலைச்சொற்கள். அது என்ன வலைப்பூ? பல வலைத்தளங்களின் ‘ஓடை’யை (RSS Feed) திரட்டிக் காட்டும் Portal-ஐத்தான் ‘வலைப்பூ’ என்று சொல்வது பொருத்தம்.

  5000-மாவது ’பதிவு’ என்று சொல்வதே சரியாக இருக்கும். ‘வலைத்தளம்’ என்றும் சொல்லலாம்.

  ReplyDelete
 4. தமிழ்மணமே அதிக நண்பர்களை பெற்று தந்தது என்றால் மிகையில்லை..

  எத்தனை திரட்டி வந்தாலும் பின்னூட்டம் மற்றும் விவாதம் என்றால் அது தமிழ்மணம் தான்

  தமிழ்மணம் மென்மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. தமிழ்மணத்துக்கும் & குமரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 6. வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 7. KRS, தமிழ்மணம் (டி எம் ஐ) நண்பர்களின் சார்பாக, உங்களின் இந்த இடுகைக்கும், தமிழ்மணத்திற்கான வாழ்த்துக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 8. குமரனுக்கு எனது நல்வாழ்த்துக்கள்..

  மென்மேலும் படைக்கட்டும்..

  அவர்தம் படைப்புகள் புகழ் பெறட்டும்.

  மிகச் சரியான நபரிடமிருந்து சரியான பதிவுதான் தேர்வாகியிருக்கிறது..

  எல்லாம் அப்பன் முருகன் செயல்..!

  ReplyDelete
 9. உடையவர் எல்லாததையும் உடையவர் ஆகிட்டார்.


  இனிய வாழ்த்து(க்)கள் எல்லாருக்கும்.

  ReplyDelete
 10. வாழ்த்துகள் :)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP