Monday, March 29, 2010

மாதவிப் பந்தலுக்கு கல்யாணமே! சீதா கல்யாண வைபோகமே!

என்னது? மாதவிப் பந்தலுக்குக் கல்யாணமா? எப்போ? எங்கே? ஹா ஹா ஹா! இதோ, இங்கே! போய் ஆசீர்வாதம் பண்ணிட்டு வரீங்களா? :)

* என் தோழி கோதைக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
* மாதவிப் பந்தலுக்கும், என் முருகனுக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!

இன்று பங்குனி உத்திரம்! (Mar-29,2010) !
பழனி மலையில் தைப்பூசக் காவடிகளை விட, பங்குனி உத்திரக் காவடிகள் அதிகம்!...காவடிக் கடல்!
அப்படி என்ன இருக்கு பங்குனி உத்திரம் அன்னிக்கு?-ன்னு யோசிக்கறீங்களா? கீழே படத்தைப் பாருங்க! சொல்ப சொல்ப, நூகே அர்த்தா கொத்தாகும்! :)



* தோழி கோதைக்கும் - அரங்கனுக்கும் திருவில்லிபுத்தூரிலே திருமணம் ஆகும் நாள்!
* என் ஒரு திரு முருகன், அவன் வள்ளியை மணக்கும் நாள்!
* சீதா கல்யாண வைபோகமே என்று சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்!

* பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்!
* ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்!
* பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்!

இப்படித் திருமணத்துக்கென்றே தோன்றிட்ட திருநாள் பங்குனி உத்திரம்!
இரு மனம், ஒரு மனம் ஆகி, திரு மணம் ஆகும் திருநாள் = பங்குனி உத்திரம்!

இன்று...முருகனருள்-150 ஆம் பதிவு உதிக்கப் போகின்றது! சென்று சேர்மின்கள்!




சரி, நாம மாதவிப் பந்தல் கல்யாணப் பதிவுக்கு வருவோமோ? :)
இன்று மனத்துக்கினிய இராகவனுக்கும்-சீதைக்கும் கல்யாணம்-ன்னு சொன்னேன்-ல்ல?
சீதை கல்யாணம்-ன்னா என்ன பாட்டு? = சீதா கல்யாண வைபோகமே!

இந்தப் பாட்டைத் தொடாத சினிமா, மேடை, வீடே இல்லை! அப்படி மர்ம ஜாலங்கள் இருக்கு இந்தப் பாட்டில்! பதிவின் முடிவில் சினிமா, இசை என்று பலர் பாடிய தொகுப்பும் இருக்கு, பாருங்க!

இதை மெல்லிசா பாடும் போது...கல்யாணம் முடிஞ்ச கையோட...ரெண்டு பேரும் கைகோர்த்து, இணைபிரியாத அன்னங்கள் போல்,
அப்படியே, அடி எடுத்து வச்சி வராப் போலவே இருக்கும்! அவ்ளோ ஒரு Softness இந்தப் பாட்டில்!

இவ்ளோ மெல்லீசா, ஒரு பாட்டை யார் எழுதினா-ன்னு கேட்கறீங்களா? = நம் அனுமன் தான்!
தெலுங்கில் எழுதியது வேணும்-ன்னா = தியாகராஜரா இருக்கலாம்!
ஆனால், இது மூலமா சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் நடத்தி வச்சதே நம் அனுமன் தான்!

அட, அது எப்படிப்பா? அனுமார் காட்டுல தான் அறிமுகமே ஆவுறாரு?
அதுவும் சீதையத் தொலைத்த பின்பு?
அவர் எப்படி ரெண்டு பேருக்கும் கண்ணாலம் செஞ்சி வைச்சாரு-ன்னு கேட்கறீங்களா? இவனுக்கு டகால்ட்டி பண்றதே வேலையாப் போச்சு-ன்னு பாசமாத் திட்டறீங்களா? :)

ஹிஹி! கல்யாண நாள் அதுவுமா என்னைத் திட்டலாமா? பதிவின் இறுதியில் அனுமன் நடத்தி வைத்த கல்யாணம் பற்றிச் சொல்கிறேன்! இப்போ பாடலைக் கேட்போம்!


வழக்கம் போல் ஜீவனும்+மெட்டும் மாறாது, தமிழில் மொழியாக்க முயன்றுள்ளேன்! படிச்சி-கேட்டுப் பார்த்துட்டு பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!

இதைத் தமிழில் அழகாகப் பாடிக் கொடுத்தவர் யாரு-ன்னு நினைக்கறீங்க? = மீனாட்சி சங்கரன்!
ஞாபகம் இருக்கா? அம்மன் பாட்டு-100 க்கு பாடிக் கொடுத்தாரே! அவரே தான்!
தமிழாக்கச் சொற்களின் கோர்வையை, அழகாப் பாட்டில் கொண்டாந்து கொடுத்த அவருக்கு, அடியேன் இனிய நன்றி! இதோ...நீங்களே...கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

To Download

வரிகள்: தியாகராஜர்
ராகம்: குறிஞ்சி (அ) சங்கராபரணம்
குரல்: பலரும்

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!

பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர

அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!

(சீதா கல்யாண)

பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால

தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!

(சீதா கல்யாண)

பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம

அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!

(சீதா கல்யாண)

சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீர

பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!

(சீதா கல்யாண)

நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதார

ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!

(சீதா கல்யாண)

பரமேச நுத கீத, பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத, தியாக ராஜ நுத

சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!

(சீதா கல்யாண)

பாடலின் பொருள் புரிவதற்காகத் தமிழில் கேட்டீர்கள்! மூலப் பாடலைத் தெலுங்கில் கேட்கலீன்னா எப்படி?
இதோ, தம்பி ராகவ் அனுப்பி வைத்த சுட்டி! குழுவாகப் பாடினாலும், கூச்சலாப் பாடாம, எவ்ளோ அனுபவித்து பாடுறாங்க-ன்னு நீங்களே பாருங்க!
கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அவ சொன்னது சரியாத் தான் இருக்கு!

இதுக்குப் பேரு தான் குணானுபவம் = கூடி இருந்து குளிர்தல்!
பாடலின் முடிவில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த முகத் திருப்தி...
Dont miss this Mesmerizing Effect of Seetha Kalyana Vaibhogame! Just Watch it!





படங்களில் - சீதா கல்யாண வைபோகமே!

மலையாளம்:
படம்=பைத்ருகம்; குரல்=யேசுதாஸ்

அதே படத்தில், அதே பாடல் - சித்ரா


விளம்பரம்:
தனிஷ்க் நகைகள்; குரல்=ஹம்ஸிகா



இசைக் கருவிகளில் - சீதா கல்யாண வைபோகமே!

சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்:


நாதஸ்வரம்:


கீ-போர்ட் - சத்யா:



பாடகர் குரலில் - சீதா கல்யாண வைபோகமே!

விசாகா ஹரி:


பாலமுரளி கிருஷ்ணா:


யேசுதாஸ்:


மகராஜபுரம் சந்தானம்:


விஜய் சிவா:


ராஜா ராம வர்மா



சரீரீரீ...அது என்ன அனுமன் நடத்தி வச்ச சீதா-ராம கல்யாணம்?
இராமாயணத்தில், மொத்தம் மூன்று இடங்களில் சீதை-இராமன் கல்யாணம் வருகிறது!
1. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் - மிதிலையில், தாய் வீட்டில் நடந்த திருமணம்!

2. அத்ரி மகரிஷியின் மனைவியான அனுசூயைக்கு, சீதையே தன் வாயால் விவரிக்கும் கல்யாணம் - சித்ரகூடம், காட்டில் "நடந்த" திருமணம்!

3. அன்னையை முதல் முதலாகக் காணும், நம் அன்பன் ஆஞ்சநேயன்...
தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போன நிலையில்...
வாடிய உடலும், முகமும், உள்ளமுமாய்...
அசோக மரத்தடியில், அந்தக் கொடி, இராகவம் என்னும் கற்பனைக் கொம்பில் படர்ந்து உயிர் வாழ...

அந்தச் சூழ்நிலையை, சுந்தர காண்டமாக ஆக்கி வைக்கிறான்...இந்தச் சுந்தர ஆஞ்சநேயன்!

தன் மனம் என்னும் மேடையில், அவளையும் அவனையும் ஏற்றி,
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ரா = அனுமானும் துதி செய்யும் புண்ணிய சரிதா!
* அன்று நடந்த கல்யாணத்தை, இன்று நடத்திக் காட்டி,
* அன்று நடந்த கல்யாணத்தை எல்லாம், இராகவன் சொல்லக் கேட்டு
* இன்று நடந்த கல்யாணம் போல், ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லி...
* அவளுக்கு, போன உயிரை இழுத்துப் பிடித்துப் பெற்றுத் தந்து...

கல்யாண நிறைவிலே...இதோ...அனுமன் என்னும் ஜீவன் தரும் கல்யாணப் பரிசு = கணையாழி! அவள் இணையாழி! துணையாழி! உடலாழி! உயிராழி! ஆழி ஆழி! உனக்கே நான் ஆழ ஆழி!

சீதா கல்யாண வைபோகமே! இராமா கல்யாண வைபோகமே!
பந்தல் கல்யாண வைபோகமே! கந்தன் கல்யாண வைபோகமே!!

26 comments:

  1. ஆண்டாளுக்கும் அரங்கனுக்கும் திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!
    முருகருக்கும் வள்ளி தெய்வானை தம்பதியருக்கு திருமண நல் வாழ்த்துக்கள்!
    மயிலை ஈசனுக்கும் கற்பகாம்பாளுக்கும் திருமண நல் வாழ்த்துக்கள்!
    கெட்டி மேளம்! கெட்டி மேளம்!.

    ReplyDelete
  2. அனைவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் ;-))

    ReplyDelete
  3. படம்=பைத்ருகம்; குரல்=தாசெட்டன்
    என்ன‌வோ ப‌ண்ணுது.
    க‌த்ரி‍ அவ்வ‌ள‌வாக‌ ர‌சிக்க‌ முடிய‌வில்லை.மீதியையெல்லாம் கேட்க‌ இப்ப‌ நேர‌ம் இல்லை.

    ReplyDelete
  4. வடுவூர் - ராமன் அழகே அழகு
    கண்கொள்ளா காட்சி.
    ஆம் இன்று தான் பௌர்ணமியும், உத்திர நட்சத்திரம் பங்குனி உத்திர விழாவின் சிறப்பை கூட்டுகிறது.
    ஆமாம் டெலுகு FM ராலண்டி????
    கேட்கமுடியவில்லை.
    அன்புடன் ராகவன்.வ

    ReplyDelete
  5. //Sri Kamalakkanni Amman Temple said...
    ஆண்டாளுக்கும் அரங்கனுக்கும் திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!//

    என்ன ராஜேஷ்...கெட்டி மேளம் எல்லாம் பலமாக் கொட்டறீங்க? :)
    ஆண்டாளுக்கும் அரங்கனுக்கும் திருமண வாழ்த்துக்களா?
    தோழிக்கு மட்டுமல்ல! மாதவிப் பந்தலுக்குக் கூட வாழ்த்துக்கள் தான்! :)

    ReplyDelete
  6. //கோபிநாத் said...
    அனைவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் ;-))//

    ரொம்ப நன்றி கோபி!
    மொய் எங்கே? :)

    ReplyDelete
  7. //வடுவூர் குமார் said...
    படம்=பைத்ருகம்; குரல்=தாசெட்டன்
    என்ன‌வோ ப‌ண்ணுது//

    மன்னிக்கவும் குமார் சார்! அது தாசெட்டன்-ன்னு பதிவில் தப்பாச் சொல்லி இருந்தேன்! யேசுதாஸ் தான் அப்படி வித்தியாசமாப் பாடுறாரு! பதிவில் திருத்தி விட்டேன்!

    //க‌த்ரி‍ அவ்வ‌ள‌வாக‌ ர‌சிக்க‌ முடிய‌வில்லை//

    ரொம்ப கத்திரிக்கிறாரோ? :)

    //மீதியையெல்லாம் கேட்க‌ இப்ப‌ நேர‌ம் இல்லை//

    :)
    எனக்கும் தான்!

    2:43 AM, March 29, 2010

    ReplyDelete
  8. //Raghavan said...
    வடுவூர் - ராமன் அழகே அழகு
    கண்கொள்ளா காட்சி//

    வடுவூர் குமார் சாரைக் கேளுங்க! சொல்லுவாரு!

    //ஆம் இன்று தான் பௌர்ணமியும், உத்திர நட்சத்திரம் பங்குனி உத்திர விழாவின் சிறப்பை கூட்டுகிறது//

    சித்திரை பெளர்ணமிக்கு மதுரையில் கோலாகலம்!

    //ஆமாம் டெலுகு FM ராலண்டி????
    கேட்கமுடியவில்லை//

    ஆகா! என்ன ராகவன்! இந்தப் பதிவில் Telugu fm சுட்டியே இல்லையே! எல்லாமே youtube தானே! சென்ற பதிவைச் சொல்றீகளோ?

    ReplyDelete
  9. கல்யாணம் அருமை. கல்யாணம் முடிந்தவுடன் மாலையில் நலங்கு பாடணுமே! இங்கே எப்படி இணைக்கிறதுன்னு தெரியல்லே! அதனாலே தனியா அனுப்பியுள்ளேன். குரலாலே மெஸ்மரைஸ் பண்ணிய திருமதி மீனாட்சியை அதையும் பாடச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  10. மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக உள்ளது ரவி. ஜீவனும் மெட்டும் பொருளும் மிகவும் இதம்! பாடியவர் குரல் எனக்கு இங்கு க்ளிக்கினால் வரவில்லை மறுபடி முயற்சி செய்து கேட்டுவிட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  11. என்னங்க நீங்களே இந்த இடுகைக்கு வாக்கு செலுத்தலைன்னா எப்படி? அப்புறம் இந்த இடுகையை தமிழிசில் இணைச்சது நான் தான்.

    ReplyDelete
  12. சீதா கல்யாண வைபோகம் அருமை !!
    எல்லாரையும் பாட வைத்து கல்யாணம் கலை கட்டுகிறது.. மீனாட்சி சங்க்ரனுக்கு சுத்திப்போடச் சொல்லுங்க.. ரொம்ப நல்லா பாடிருக்காங்க..

    ReplyDelete
  13. குழுவாகப் பாடுபவர்கள் என்ன அருமையாப் பாடுறாங்க.. மெய்மறந்து கேக்க வைக்கும் குரல்.. தினமும் கேட்கிறேன்..

    ReplyDelete
  14. அனைவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. //குறும்பன் said...//
    எப்படி இருக்கீங்க குறும்பன்?

    //என்னங்க நீங்களே இந்த இடுகைக்கு வாக்கு செலுத்தலைன்னா எப்படி?//

    :)
    வாக்கு, மக்கள் தானே போடணும்? நாமே போட்டுக்கலாமா என்ன?

    //அப்புறம் இந்த இடுகையை தமிழிசில் இணைச்சது நான் தான்//

    நன்றி! நன்றி!
    என்னம்மோ தெரியலை, அப்படியே பதிப்பித்து விட்டுட்டேன்!
    கண்ணன் பாட்டில் சினிமா தொடர்புள்ள பதிவுகளை மட்டுமே இப்பல்லாம் தமிழிசில் இணைக்கிறேன் போல! :)

    ReplyDelete
  16. சரி, சரி, கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் 240 பக்க நோட்டு & கல்லா பொட்டியோட உக்காந்துட்டு இருக்கும் தக்குடுகிட்ட மறக்காம மொய் எழுதிட்டு போங்கப்பா!!...:)

    ReplyDelete
  17. //தக்குடுபாண்டி said...
    சரி, சரி, கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாரும் 240 பக்க நோட்டு & கல்லா பொட்டியோட உக்காந்துட்டு இருக்கும் தக்குடுகிட்ட//

    தக்குடு...ஒரே ஒரு வித்தியாசம்!
    இராமனின் கல்யாணத்துக்கு...
    வந்தவங்க மொய் வைக்கலையாம்!
    வந்தவங்களுக்குத் தான் பரிசுப் பொருள் கொடுத்தாங்களாம்! இராமன் சார்பாக!

    அதே போல, 240 பக்க நோட்டு & கல்லா பொட்டியோட உக்காந்துட்டு இருக்கும் நீங்களே பந்தலுக்கு வந்தவங்க எல்லாருக்கும் பரிசு கொடுத்துறீங்களா? :)

    ReplyDelete
  18. //thiruthiru said...
    கல்யாணம் அருமை. கல்யாணம் முடிந்தவுடன் மாலையில் நலங்கு பாடணுமே! இங்கே எப்படி இணைக்கிறதுன்னு தெரியல்லே! அதனாலே தனியா அனுப்பியுள்ளேன்//

    நலங்கு pdf கிடைச்சுது-ண்ணா!
    எவ்ளோ பெரிய நலங்கு பாட்டு! ஐஞ்சு பக்கம் நலங்கு பாடினா...தம்பதிகளுக்கு அதுக்கெல்லாம் பொறுமை இருக்குமா தெரியலையே! :))

    //குரலாலே மெஸ்மரைஸ் பண்ணிய திருமதி மீனாட்சியை அதையும் பாடச் சொல்லுங்கள்//

    :)

    ReplyDelete
  19. //ஷைலஜா said...
    மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக உள்ளது ரவி. ஜீவனும் மெட்டும் பொருளும் மிகவும் இதம்!//

    நன்றி-க்கா!
    மெட்டு வரணுமே-ன்னு நானும் பாடி/பேசிப் பார்த்து தான் எழுதினேன்! :)

    //பாடியவர் குரல் எனக்கு இங்கு க்ளிக்கினால் வரவில்லை மறுபடி முயற்சி செய்து கேட்டுவிட்டு சொல்கிறேன்//

    உம்...Download link-உம் உங்களுக்காக அப்பறம் சேர்த்தேன், பாருங்கள்!

    ReplyDelete
  20. //Raghav said...
    சீதா கல்யாண வைபோகம் அருமை !!
    எல்லாரையும் பாட வைத்து கல்யாணம் கலை கட்டுகிறது..//

    மீனாட்சி மேடம் மட்டும் தான் நான் சொல்லிப் பாடினாங்க!
    அந்தப் பெண்கள் பாடும் பயிற்சிக் காணொளி...நீங்க சொல்லிப் பாடுனது போல! :)
    யேசுதாஸ், விசாகா ஹரி, கத்ரி எல்லாரையும் நான் பாட வைக்கலப்பா! :)

    //மீனாட்சி சங்க்ரனுக்கு சுத்திப்போடச் சொல்லுங்க.. ரொம்ப நல்லா பாடிருக்காங்க..//

    மேடம்...கேட்டுக்கோங்க! இனி நீங்க தான் பந்தலுக்கு ஆஸ்தான வித்வான்! :)

    ReplyDelete
  21. //Raghav said...
    குழுவாகப் பாடுபவர்கள் என்ன அருமையாப் பாடுறாங்க..//

    ஆமா ராகவ்! மகராஜபுரம் சந்தானம் பாடுவது கூட கேட்டிருக்கேன்! But this one stands different & unique & mesmerizing!

    அதுவும் கும்பலாகப் பாடும் போது, செல்லச் செல்ல, "கூச்சல்" தொனிக்கும்! திருவையாறு ஆராதனையில் கூட அப்படி ஆகி விடுகிறது! :(
    ஆனால், இங்கு, மெல்லீசா, ஏகாந்தமா, ஒருவரை ஒருவர் மிஞ்சாம, ஆழ்ந்து பாடுகிறார்கள்!

    //தினமும் கேட்கிறேன்..//

    Me too - on the bus! :)
    BTW, தினமும் கேட்பதால்...சீக்கிரமேவ கல்யாணப் பிராப்திரஸ்து! :)

    ReplyDelete
  22. //மன்னார்குடி said...
    அனைவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்//

    நன்றி மன்னார்குடி! திருமண நாள் மட்டுமில்லை! ஒரு திருமணமும் கூட! :)

    ReplyDelete
  23. //மேடம்...கேட்டுக்கோங்க! இனி நீங்க தான் பந்தலுக்கு ஆஸ்தான வித்வான்! :)//

    'ஆஸ்தான' வித்வான் அப்படீன்னா அரசவை நாற்காலி, சாமரம் எல்லாம் உண்டா? :-))

    எவ்வளவு அழகான பாட்டு! பாட நான் தான் கொடுத்து வச்சிருக்கணும். எப்ப பாட்டு வேணுமோ கேளுங்க, எனக்கு தெரிஞ்சா நிச்சயம் பாடி தருவேன்.

    ReplyDelete
  24. நல்ல வேளை நீங்க பாடாம விட்டீங்க இரவி! :-) மீனாட்சி சங்கரன் அம்மா/அக்கா ரொம்ப ரொம்ப அருமையா பாடியிருக்காங்க!

    ReplyDelete
  25. //Meenakshi Sankaran said...
    'ஆஸ்தான' வித்வான் அப்படீன்னா அரசவை நாற்காலி, சாமரம் எல்லாம் உண்டா? :-))//

    மீனாட்சி மேடம்,
    ஆஸ்தான நாற்காலி நிச்சயமா உண்டு! ஆனா சாமரம் கொஞ்சம் கஷ்டம்! :)
    ஏன்னா அதை வீசுற பொண்ணுங்க மேல எனக்கு எப்பமே கொஞ்சம் இரக்க சுபாவம்! :)

    //எவ்வளவு அழகான பாட்டு! பாட நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்//

    தியாகராஜர் பாடல்கள் அழகே அழகு மேடம்!

    அவர் இசையைப் பற்றி மேதைகள் சிலாகிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்!
    ஆனா, அவ்வளவு மனப்பூர்வமான கருத்தை, எளிய மொழியில் சொல்லீருவாரு!

    இதை மொழியாக்கும் போது எனக்கு ஒரு பக்கம் பயமாவே இருக்கும்! பொருள் + மெட்டு மட்டுமில்லாமல், எளிமையும் சேர்த்தே ஆக்க முடியுமா?-ன்னு!
    அப்போது எனக்குக் கை கொடுப்பது எல்லாம் தோழி கோதை தான்!

    பரித சர ஜால-ன்னு வரும் போது, தாழாதே சர மழையால்-ன்னு திருப்பாவையை அப்படியே போட்டுருவேன்!
    ரவிசோம = ஹை! என் பேரு! ஆனா கதிர்மதியம் போல் முகத்தான்! :)
    இப்படி Kothai Effect நிறைய! :))

    ReplyDelete
  26. //குமரன் (Kumaran) said...
    நல்ல வேளை நீங்க பாடாம விட்டீங்க இரவி! :-)//

    ஆகா என்ன சொல்லு சொல்லிட்டீங்க? அடுத்த மதுராஷ்டகம் பாட்டு நான் தான் பாடப் போறேன்!
    உங்க தலை விதி! உறுத்து வந்து ஊட்டும்! பாட்டும் :)

    //மீனாட்சி சங்கரன் அம்மா/அக்கா ரொம்ப ரொம்ப அருமையா பாடியிருக்காங்க!//

    ஆமாம் குமரன்! அவர்கள் பாடிய தமிழ்நீ தமிழ்நீ (ஜனனி ஜனனி) - அம்மன் பாட்டு 100, இன்னும் எனக்கும் துளசி டீச்சருக்கும் ஒலிச்சிக்கிட்டு இருக்கு!

    வலைப் பதிவர் மாதிரி,
    நம்ம மீனாட்சி மேடம் வலைப் பாடகர்! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP