ஆண்டாள் கல்யாண வைபோகம் - விருந்து சாப்புடலாம் வாங்க!!
பாவை: என்ன! இப்போதாவது, நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு என்னன்னு புரிஞ்சதா, இல்லே, இப்பவும் தூங்கிட்டயா?
தோழி: ம்ம்! மேலே சொல்லு!
பாவை: புரோகிதர்கள், கோவிந்தனை, என் வலது கால் கட்டை விரலைப் பிடிக்கச் சொல்லினர். உடனே கோவிந்தனின் உறவினர்கள், 'பெண்ணின் காலைப் பிடிக்காதே' என்றனர்! என் உறவினர்களோ, 'காரியம் நிறைவேற வேண்டுமென்றால், அவள் காலைப் பிடித்தே தீரவேண்டும்' என்றனர்!
இப்படி இரு தரப்பினரும் (விளையாட்டோ, நிஜமோ, தெரியாது) விவாதம் செய்து கொண்டிருந்த போது, கோவிந்தன், சடக்கென்று குனிந்து, தன் சிவந்த (செம்மை உடைய) வலது கையால் (திருக்கையால்), என் வலது கால் கட்டை விரலைப் பற்றி (தாள் பற்றி), அம்மியின் மேல் வைத்து (அம்மி மிதிக்க), இன்னொரு வேத மந்திரம் சொன்னான்!
தோழி: எதுக்குடீ அவன், உன் காலைப் பிடிக்கணும்?
பாவை: உறவினர்களின் மனதில், 'யார் உசத்தி?' என்ற எண்ணமே இருந்தது! ஆனால், கோவிந்தனோ, அவனிடம் சரணாகதி செய்த அடியார்க்கு அடியவன்! எனவே, உறவினர்களின் முடிவு பற்றிக் கவலைப் படாமல், அடியாரின் காலைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டதனால், என் காலைப் பிடித்தான்!
கோபப்பட்டு ஸ்ரீதேவி வசிக்கும் நாராயணன் மார்பை உதைத்த துர்வாசரின் கால்களையே பிடித்து வருடியவனாயிற்றே இவன்? எத்தனை பேருக்கு இந்தக் குணம் இருக்கும்?
இப்படி, கௌரவம் பாராது, சரணடைந்தவர்களின் காலையே பிடிக்கும் அந்தக் கைகள் மட்டுமே 'செம்மை உடைய திருக்கை'! மற்ற கை எல்லாம் 'வெறும் கை' தான்!
தோழி: சரி, உன் காலைப் பிடித்தால் மட்டும் போதாதா? அம்மியில் ஏன் வைக்க வேண்டும்?
பாவை: நீ, கனவிலே, வருங்கால 'TV'-யிலே 'எங்கே பிராம்மணன் I' பார்த்திருந்தால் உனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்திருக்கும்! இருந்தாலும் சொல்றேன், கேட்டுக்கோ! இதன் அர்த்தம் இது தான்!
- 'நீ இந்த நிலையான அம்மியின் மேல் நில்!
- நீ, இந்தக் கல்லைப் போல, எப்போதும் நிதானமாக, நிலையாக நில்!
- நீ, எந்தப் பிரச்சனை வந்தாலும், இந்தக் கல்லைப் போல், நிதானமாக, எதிர் கொள்!
- நீ, எத்தனை பேர் மிதித்தாலும், தாங்கிக் கொண்டு பொறுமையாக இருக்கும் இந்தக் கல்லைப் போல் இருந்து, என் குடும்பத்தை நடத்திச் செல்!
- நீ மட்டும், இந்தக் கல்லில் மற்றவர் இடறித் தடம் புரண்டாலும், இந்தக் கல் போல, தடம் புரளாது நிதானமாக இரு!'
என்று விஷ்ணுவை வேண்டியும், எனக்கு அறிவுரை சொல்லியும் தான்!
தோழி: டீ! எனக்கு ஒரு சந்தேகம்!
பாவை: என்ன?
தோழி: முதல் இரண்டு வரிகளில், சரணாகதியைப் பற்றிச் சொல்லி, பின் ஏன் அம்மியைப் பற்றிச் சொல்கிறாய்?
பாவை: நல்ல கேள்வி! வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் அம்மியைப் போல், நிதானமாக இரு என்று ஒரு பொருள்! இது, கல்யாணத்தில் மணப்பெண்ணுக்குச் சொல்வது!
ஆனால், எல்லோருக்கும் பொதுவாக,
'ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், எப்போதும் (திருமணத்திற்கு முன்னும்), எந்தப் பிரச்சனை வந்தாலும், நாராயண பக்தியில் இருந்து, தடம் புரளாது, அந்த அம்மியைப் போல இரு'
என்று எல்லோருக்கும் சொல்லத்தான், இந்தப் பாசுரத்தில் சரணாகதியைப் பற்றிச் சொல்லி, பின் அம்மியைப் பற்றிச் சொன்னேன்!
தோழி: நீ 'அருந்ததி பார்க்க'வில்லையா?
பாவை: எங்கடீ, கேக்கலையேன்னு நினைச்சேன்!
மண நாளின் இரவில், சாந்தி முகூர்த்தத்தின் முன் தான், நாங்கள் இருவரும் வானத்தில் இருக்கும் நட்சத்திரமான துருவனைப் பார்த்து, 'அவனைப் போல் சக்தியுடனும் வைராக்கியத்துடனும்', இன்னொரு நட்சத்திரமான அருந்ததியைப் பார்த்து, 'நான் அவளைப் போல் கற்புக்கரசியாக இருக்க வேண்டும்' என்று வேண்டுவோம்! துருவனும், அருந்ததியும் நம் கண்ணுக்குத் தெரிவது, இரவில் தான்!
அம்மி மிதித்து, ’பகலிலேயே அருந்ததி பார்க்கும்' வழக்கம், பின்னாடி, ஒரே நாளில் கல்யாணம் முடிக்கும் வழக்கம் வந்தவுடன் தான் வந்தது! எனவே தான் இதைப் பற்றி இப்போது நான் பாடவில்லை!
***
அநேகமாக, ஒவ்வொரு திவ்வியப் பிரபந்தத்திலும் ஒரு சரணாகதித் தத்துவப் பாசுரம் இருக்கும் - திருப்பாவையில், 'சிற்றஞ்சிறுகாலே' போல! ஒரு சிலர், 'நாச்சியார் திருமொழியில், ஆண்டாளின் சரணாகதிப் பாசுரம் இது' என்று கூறுவர்!
'நம்மை உடையவன் நாராயணன் நம்பி' என்று ஆண்டாள், அவனை மங்களாசாசனம் செய்கின்றாள்!!
அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும், 8-வது பாசுரத்தில் ஆண்டாள் சொல்வது, இன்னொரு தனிச் சிறப்பு!
அவனன்றி நமக்கு வேறு வழி இல்லையாதலால், நாமும், குலசேகரனைப் போல, ஆண்டாளைப் போல, நரசிம்மனிடம் சரணாகதி அடைவோம்!
***
பாவை: அடுத்து, லாஜ ஹோமம் நடைபெற்றது!
தோழி: ஏய்! எனக்கு வடமொழி புரியாது! தமிழில் சொல்லுடீ!
(நம் பாவை, ஒரு தமிழ்ப் பாட்டு பாடுகிறாள்)
வரிசிலை வாள் முகத்து* என்னைமார் தாம் வந்திட்டு*
எரிமுகம் பாரித்து* என்னை முன்னே நிறுத்தி*
அரிமுகன் அச்சுதன்* கைம்மேல் என் கை வைத்து*
பொரிமுகந் தட்ட* கனாக் கண்டேன்!தோழீ நான்.
நாச்சியார் திருமொழி 6-9
தோழி: ஒண்ணு வடமொழி, இல்லேன்னா பழம் பாட்டு! தமிழ்ல சொல்லறயா?
பாவை: அழகிய வில் போன்ற புருவத்தையும் (வரி சிலை), ஒளி பொருந்திய முகத்தையும் உடைய (வாள் முகம்) என் அண்ணன் இராமாநுஜன் (என்னைமார்) ஹோம குண்டத்தின் அருகில் வந்து அமர்ந்து (தாம் வந்திட்டு), ....
தோழி: நிறுத்து, நிறுத்து! ஆரம்பமே குழப்புதே? பாசுரத்தில் அண்ணன் எங்கு வருகிறான்?
பாவை: 'என்னைமார்' என்று சொன்னேனே? 'என்னைமார் = என் + ஐ + மார்'! 'ஐ' என்றால், 9-வது உயிரெழுத்து மட்டுமல்ல (9-ம் பாசுரத்தில் 9-வது உயிரெழுத்து சம்பந்தமான கருத்து, இன்னொரு சிறப்பு!)!
'ஐ' எனும் 'வார்த்தைக்கு', மென்மை, நுண்மை, கப வியாதி (Bronchitis), அரசன், தலைவன், ஆசான், தந்தை, தமையன், இரண்டாம் வேற்றுமை உருபு என்ற 9 (!!!) பொருள்/உபயோகம் உண்டு!
தோழி: போதுமடி தமிழ் இலக்கணம்! ஆனால் உனக்கு சொந்தத்தில் சித்தப்பா, பெரியப்பா முறையில் அண்ணன், தம்பி யாருமே கிடையாதே? திடீரென்று ஏதோ பேரைச் சொல்லி, அண்ணன் என்கிறாயே?
பாவை: எல்லாமே உனக்குச் சொல்லிக் கொடுக்கணுமா? முதலில், தமையன் என்றால், 'சும்மா அப்பாவின் சொத்தை வாரிசு என்ற பெயரில் அள்ளிக் கொண்டு போகலாம்' என்ற உரிமை உள்ளவன் மட்டும் இல்லை!
அப்பாவின் பின், அப்பா தன் பெண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாது, தொடர்ந்து, அப்பாவின் இடத்தில் இருந்து செய்பவனே தமையன் ('தம் அய்யன்' என்று பிரித்தும் சொல்வதுண்டு)! உண்மையில் அப்படிச் செய்பவன், வயதில் சிறியவனாயாக இருந்தாலும், அவன் அண்ணனே!
(எனவே, தம்பியாக இருந்தாலும், பொரியிடலாம் - ஆனால், பின்னால் கடமை அழைக்கும்!)
(எனவே, தம்பியாக இருந்தாலும், பொரியிடலாம் - ஆனால், பின்னால் கடமை அழைக்கும்!)
வயதில் இளையவனாக இருந்தாலும், இராமாநுஜன் என் தந்தை செய்ய வேண்டிய கடமையைச் செய்ததால், அவனை 'அண்ணன்' (ஐ) என்றேன்! அவன் என் கல்யாணத்தில், ஹோம குண்டத்தின் அருகே வந்து உட்கார்ந்து, பொரியிட்டதாகவே கனவு கண்டேன்!
தோழி: 'உனக்கு அண்ணன்' என்று சொல்லுமளவுக்கு இந்த இராமாநுஜன் உனக்கு அப்படி என்ன செய்தான்?
***
(பாவை, மிகவும் உற்சாகமாகச் சொல்கிறாள்)
பாவை: இவனைப் பற்றிச் சொல்லி முடியாது! இவன், அஷ்டாக்ஷர மந்திரத்தை சாமானியருக்கும் உபதேசிக்கப் போகிறவன்; கலியுக தெய்வமான வேங்கடவனை நாராயணனாக நம் எல்லோருக்கும் காட்டிக் கொடுக்கப் போகிறவன்! கலியுகத்தில் வைணவம் தழைக்க ஆணிவேராக நிற்கப் போகிறவன்!
(ஆண்டாள் சொல்லாவிட்டாலும், என் போன்ற சாப்பாட்டு ராமன்கள் சொல்வது இது ... வைணவக் கோயில்களில் புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் நன்கு விளங்கச் செய்தவன் இவனே .. ஹி .. ஹி ..)
பின்னால் ஒரு பாசுரத்தில் நான், திருமாலிருஞ்சோலை அழகருக்கு (நாறு நறும்பொழில் மாலிரும் சோலை நம்பிக்கு), 'மந்த்ர புஷ்பம்' போல், நூறு தடாக்கள் நிறைந்த வெண்ணெயும் (நூறு தடாவில் வெண்ணெய்), இன்னும் நூறு தடாக்களில் (நூறு தடா நிறைந்த) அக்கார அடிசிலையும் (அக்கார அடிசில்), வாயாலே சொல்லிச் (வாய் நேர்ந்து) சமர்ப்பித்தேன் (சொன்னேன்)!
பாவை (மீண்டும், வருத்ததுடன்): ஆனால், உண்மையில் அங்கு போய் இதைச் செய்ய முடியவில்லை! என் அப்பாவாலும் செய்ய முடியவில்லை!
தோழி: அப்புறம்?
பாவை: இந்தப் பாசுரத்தைப் பின்னாளில் படித்த இராமாநுஜன், என்னால் இதைச் செய்ய முடியாததைக் கேள்விப் பட்டு, என் மணாளனான அழகருக்குச் செய்து வைத்தான், இந்த ராமாநுஜன்!
ஒரு கிலோ வெண்ணெய் 250/- ரூபாய் விற்கிற காலத்திலே, நூறு தடாவில் வெண்ணெயையும், நூறு தடாவில் அக்கார அடிசிலும், சொந்த அண்ணன் கூடக் கொடுக்க மாட்டான்! எனவே, இப்படி எனக்குச் சீர் செய்தவன், என் உடன் பிறவாவிட்டாலும், எனக்கு அண்ணன் தானே?
அதனாலேயே, பின்னர் ஒரு நாள் இராமாநுஜன் வில்லிபுத்தூர் வந்திருந்த போது, அவனை (விக்கிரகமாக இருந்தாலும்) ஒரு அடி முன்னே வந்து வரவேற்றேன்!
(ஆண்டாளுக்கு, தமையன்கள் இருந்ததாக, எந்தச் சான்றும் இல்லை. பாசுரத்தில் தமையன்கள் வந்தாலும், அது கனவில் தான்! இங்கு, இராமநுஜன் உட்கார்ந்ததாகச் சொன்னது அடியேன் சுவாரஸ்யத்திற்காகச் செய்த கற்பனையே!
ஆனால், திருமாலிருஞ்சோலை அழகருக்கு, இந்தப் பாசுரத்தைப் படித்து விட்டு, சீர் செய்ததன் காரணமாகவே குரு பரம்பரையும், திவ்விய சூரி சரிதமும், இராமாநுஜரை, ஆண்டாளுக்கு 'அண்ணன்' என்று குறிப்பிடுவது உண்டு!
'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!' என்று ஆண்டாளைப் பற்றிய வாழித் திருமொழியின் உள்ளர்த்தமும் இதுதான்!
சர்க்கரைப் பொங்கல் எம்பெருமானுக்கு அமுது செய்யும் போது, இந்தப் பாசுரத்தை 2 முறை சொல்வது, இன்றும் பல வைணவ இல்லங்களில் நடைபெறுகின்றது - நீங்களும் சொல்லலாமே!)
***
(பாவை, தொடர்கிறாள்)
பாவை: இராமாநுஜன், நன்கு தீயை வளர்த்து (எரி முகம் பாரித்து), அக்னியின் முன் என்னை அமர வைத்தான் (முன்னே என்னை நிறுத்தி). இராமாநுஜன் என் கையில் பொரியை அள்ளி இட (பொரி முகந்து), நரசிம்மன் அதில் நெய் விட, நரசிம்மன் (அரிமுகன்) கைகளின் மேல் நான் என் கைகளை வைக்க (கைம்மேல் என் கை வைத்து), நான் பொரியை ஹோமத்தில் இட்டேன் (அட்ட)!
தோழி: ஏன் கோவிந்தன் திடீரென்று நரசிம்மனான்?
பாவை: 'அச்சுதன்' என்றால், கைவிடாதவன் என்று அர்த்தம்! இராமானுஜன் பொரியிட்டவுடன், என்னை கோவிந்தன் கையில் பிடித்துக் கொடுத்து, தன் கையை விட்டு விட்டான்! இவ்வாறு, மற்றவர்கள் எல்லோருமே கை விட்டாலும், கைவிடாதவன் இவன் ஒருவனே! நரசிம்மன் ஒருவனே, அடியவனைக் கைவிடாது, தூணிலே தோன்றியவன்!
இப்படி, அடியவர்களின் கைகளின் கீழே தன் கையை வைத்து (கைம்மேல் என் கை வைத்து), அடியவர்களைத் தாங்குபவனும் அவனே!
(அடியவர்களுக்கு அபயம் அளிப்பதில், எம்பெருமானை விட, தாயாருக்குத் தான் அதிக ஆர்வம் உண்டு என்பதையே, 'அவன் கைகளின் மேல் தன் கை உள்ளது' ’கைம்மேல் என் கை வைத்து’ என்று ஆண்டாள் சொல்வதாகப் பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்!)
எனவே தான், என்னைக் கைவிடாத இவனை, 'அரிமுகன்' என்று அழைத்தேன்! ‘அச்சுதன்' என்றும் அழைத்தேன்!
தோழி: ஏன் பொரியை இட வேண்டும்? வேறு ஏதாவது தானியத்தை இட்டிருக்கலாமே?
பாவை: பரவாயில்லையே! உனக்குக் கூட நல்ல கேள்வி கேட்க வருகிறதே!
'இதுவரை, எங்கள் வீட்டுப் பெண்ணை, நாங்கள் நெல்லில் உள்ள அரிசியைப் போன்று, பொத்திப் பொத்தி வளர்த்தோம்! இன்று முதல், இவள் பொரிந்த நெல்லைப் போன்று, முதிர்ந்து, திருமணமாகி, உங்கள் வீட்டுப் பெண் ஆகி விட்டாள்!'
என்று, பொரியிடுவதன் மூலம் மறைமுகமாக என் அண்ணன்களும் இந்தக் கல்யாணத்தை ஒப்புக் கொள்கின்றனர்!
தோழி: பொரியிடும்போது மந்திரம் சொன்னார்களா?
பாவை: நீண்ட திருமண வாழ்க்கைக்காகவும், நல்ல குழந்தைகளுக்காகவும், பொறுமைக்காகவும், அக்னியை வேண்டியும், மந்திரம் சொன்னோம். கடைசியில், நான் அக்னியிடம், 'இனிமேல் பிறந்த விட்டுப் பந்தங்களை விட்டு, புகுந்த வீட்டுப் பந்தகளை ஏற்க, என்னை ஆசீர்வாதம் செய்!' என்று வேண்டினேன்!
இத்துடன், என் 'திருமணம்' முடிந்தது. என் இடுப்பில் கட்டியிருந்த தர்ப்பையை - 'வருண பாசத்தை' - எடுத்து விட்டேன். இப்போது நான், 'தர்ம பத்தினி' ஆனேன்!
***
தோழி: இருடீ! பந்தி போட்டுவிட்டார்கள்! சாப்பிட்டு வருகிறேன்!
பாவை: கனவிலும் இந்தப் புத்தி போகாதே உனக்கு? அடுத்த பாசுரத்தில் உனக்கு ஒரு Role உண்டு!
தோழி: நான் சாப்பிடுவதைத் தடுக்க இப்படி ஒரு வழியா?
பாவை: இவ்வளவு நேரம் பெரிய அலங்காரங்களுடன் அக்னியின் அருகே உட்கார்ந்திருந்ததால் வாடியிருந்த மென்மையான என் மேனியைக் குளிர்ச்சி அடையச் செய்ய, குங்குமமும், சந்தனமும் நீ தடவினாய் (குங்குகம் அப்பி, குளிர் சாந்தம் மட்டித்து)!
பின்னர், உறவினர்களும், மற்ற விருந்தினர்களும் புடை சூழ, நாராயணன் வந்திருந்த யானையின் மேல் (அங்கு, ஆனை மேல்), நானும் அவனும் ஏறி அமர்ந்து (அங்கு, அவனோடும் உடன் சென்று), ஊர்வலமாக அலங்கரித்த வீதிகளைச் சுற்றி (மங்கல வீதி வலம் செய்து), வசுதேவர் திருமாளிகைக்குச் சென்றோம்! இப்படியாக, கோலாகலத்துடன் எங்கள் க்ருஹப்ரவேசம் நடைபெற்றது!
அங்கு, எங்கள் இருவரையும், நல்ல வாஸனைத் திரவியங்கள் கலந்த நீரினால் (மண நீர்) என் புடவை நுனியையும், அவன் வஸ்த்திர நுனியையும் முடித்து வைத்து, எங்களை மண நீராட்டம் செய்தனர் (மஞ்சனம் ஆட்ட).
(யானையில் செல்லும்போதே ‘மண நீராட்டம்’ நடைபெற்றதாகவும் கேள்விப் பட்டதுண்டு! படமும் அதையே சொல்கின்றது!)
(யானையில் செல்லும்போதே ‘மண நீராட்டம்’ நடைபெற்றதாகவும் கேள்விப் பட்டதுண்டு! படமும் அதையே சொல்கின்றது!)
எங்கள் ஊர்வலத்தின் பின்னே, புரோகிதர்கள், புது வீட்டில் நான் நன்றாக வழ வேண்டும் என்று, ரிக் வேதத்தில் இருந்து பல மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு வந்தனர்.
தோழி: போதுமடி உன் புராணம்! சீக்கிறம் முடிடி! பசிக்கிறது!
பாவை: சரிடி! இதற்கப்புறம், ப்ரவஸ்ய ஹோமம் (13 மந்திரங்கள் கொண்டது), ஜயாதி ஹோமம், சேஷ ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இந்த ஹோமங்கள் மூலம், நாங்கள் தம்பதியராக 100 வருடங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அக்னியையும், விஷ்ணுவையும் பிரார்த்தித்தோம்!
இதன் பிறகே, நான் அவன் இடப் பாகமானேன் (அதுவரை, அவன் வலது புறமே அமர்ந்திருந்தேன்)!
பின்னர், ஒரு குழந்தையை மடியில் வைத்து, அதற்குப் பாலும் பழமும் நான் கொடுத்தேன்.
அதன் பின்னர், பிராயச்சித்த ஹோமம் நடைபெற்றது.
***
தோழி (திடீரென்று): ஏய்! பாருடீ! எல்லோரும் எழுந்து போய்விட்டார்கள்! திருமண வாத்தியார்கள் கூட சாப்பிடப் போய்விட்டனர்! நாமும் போலாமடி?
பாவை: நீ போ! நான், கோவிந்தனுடன் வரேன்!
தோழி: பாத்தியா! தமிழ் சினிமா மாதிரி, கனவுல காதலன் வந்தவுடன் என்னைக் கழட்டி விடறயே!
பாவை: ஸாரிடி! ...
பாவை (மீண்டும்): என் கனவை இவ்வளவு பொறுமையாகக் கேட்ட உனக்கு, நல்ல குழந்தைகள் பிறக்கும்!
தோழி: ஏய்! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை! அதுக்குள்ள எப்படிடீ குழந்தை பிறக்கும்? இது என்ன மேல் நாடா - Your Children and My Children Are Playing With Our Children - என்று சொல்வதற்கு?
பாவை: இந்த நக்கல் தானே வேணாம்கிறது! நான் சொன்னதற்கு அர்த்தம், 'உனக்கு நல்ல வரன் கிடைக்கும்! திருமணத்தின் பின், பிறகு நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பாய்! (வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே)' என்பதே!
உனக்கு மட்டுமல்ல! வில்லிபுத்தூரில் வாழும் பெரியாழ்வரின் (வில்லிபுத்தூர் விட்டுசித்தன்) புதல்வியாகிய நான் (கோதை) கண்ட கனவினை (தான் கண்ட கனாவினை) வர்ணிக்கும் இந்தத் திருமொழியை (தூய தமிழ் மாலை) யார் சொல்லி வந்தாலும் (ஈரைந்தும் வல்லவர்) அவர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும்!
(திருமணம் நடைபெற வேண்டுமென்றாலும், நல்ல குழந்தைகள் வேண்டுமென்றாலும், இந்தத் திருமொழியை ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் பலன் உண்டு என்று கூறப்படுகிறது!)
உனக்கு மட்டுமல்ல! வில்லிபுத்தூரில் வாழும் பெரியாழ்வரின் (வில்லிபுத்தூர் விட்டுசித்தன்) புதல்வியாகிய நான் (கோதை) கண்ட கனவினை (தான் கண்ட கனாவினை) வர்ணிக்கும் இந்தத் திருமொழியை (தூய தமிழ் மாலை) யார் சொல்லி வந்தாலும் (ஈரைந்தும் வல்லவர்) அவர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும்!
(திருமணம் நடைபெற வேண்டுமென்றாலும், நல்ல குழந்தைகள் வேண்டுமென்றாலும், இந்தத் திருமொழியை ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் பலன் உண்டு என்று கூறப்படுகிறது!)
(இதை, மிகவும் பொறுமையாகப் படித்த அனைவருக்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமைய, நரசிம்மனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்)
- நரசிம்மன் வருவான்!
ஆண்டாள் கல்யாண வைபோகமே!
ReplyDeleteரங்கா கல்யாண வைபோகமே!
திரு ரங்கன், இந்த பதிவை படித்து முடித்தவுடன் ஆண்டாள் திருமணத்தை ஒரு திரைப்படமாக பார்த்த உணர்வு. திருமணத்தில்
ReplyDeleteஅம்மி/அருந்ததி/பொரி ஆகியவற்றின் பெருமைகளை தெரிந்து கொண்டேன், நன்றி
//பாவை: கனவிலும் இந்தப் புத்தி போகாதே உனக்கு? அடுத்த பாசுரத்தில் உனக்கு ஒரு Role உண்டு!
தோழி: நான் சாப்பிடுவதைத் தடுக்க இப்படி ஒரு வழியா?//
:-)
//இது என்ன மேல் நாடா - Your Children and My Children Are Playing With Our Children - என்று சொல்வதற்கு?//
இந்தியாவிலும் இத சொல்ல ஆரம்பிச்சாச்சு....
இங்கு, இராமநுஜன் உட்கார்ந்ததாகச் சொன்னது அடியேன் சுவாரஸ்யத்திற்காகச் செய்த கற்பனையே!::))
ReplyDeleteஎன்னைமார் என்று சொல்வது லட்சுமன் என்று இத்தனை நாள் நினைத்து இருந்தேன்.
ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை
ஆண்டாளே சொல்வதாகவே இருந்தது.
கற்பனை என்று தோன்றவில்லை.
no no no ... கற்பனை அல்ல
'பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!'
//என் கனவை இவ்வளவு பொறுமையாகக் கேட்ட உனக்கு, நல்ல குழந்தைகள் பிறக்கும்//
ReplyDeleteThanks Dee Kothai :)
புருஷனோட சந்தோஷமா இருக்கணும்-ன்னு வாழ்த்தறது ஒருவகை!
ஆனா நீ தான் எதுலயும் வித்தியாசமான பொண்ணாச்சே! :)
* கணவனோடு மகிழ்ச்சியா இருந்ததுக்கு அடையாளமா = மக்கள்!
* சமூகத்தில் தலைநிமிர்ந்து மகிழ்ச்சிக்கு = நன்+மக்கள்
* இரண்டுமே ஒன்றாய் வாய்க்கும்! வாயும் நன் மக்களைப் பெற்று...
சரி...கண்ணாலம் ஆனா, குழந்தை என்பது பெரும்பாலும் நடப்பது தானே? அது எப்படி கணவனோடு மகிழ்ச்சிக்கு அடையாளம்? ஏதோ எப்படியோ நடந்து விடவும் கூடும் அல்லவா? :))
அதனால் தான் "வாயும் நன் மக்களைப் பெற்று" வாழ்வரே-ன்னு சொல்லாது, Expilicit-ஆ "மகிழ்வரே"-ன்னு முடிக்கறா!
உம்...இவரைக் கட்டிக்கிட்டு என்ன சுகம் கண்டேன்...தோ ரெண்டு புள்ளையும் வந்துருச்சி-ன்னு பேச வாய்ப்பே இல்லாது....
என்னாளும் கண்ணாலமாய்....
வாயும்...
நன் மக்களைப் பெற்று...
"மகிழ்வரே", "மகிழ்வரே"!
இப்படியெல்லாம் வாழ்த்த உன்னால தான்டீ முடியும்! :)
இப்படித் தான் அங்க கூட "இன்புறுவ" ரெம்பாவாய்-ன்னு முடிச்சடீ! :)
//உடனே கோவிந்தனின் உறவினர்கள், 'பெண்ணின் காலைப் பிடிக்காதே' என்றனர்! என் உறவினர்களோ, 'காரியம் நிறைவேற வேண்டுமென்றால், அவள் காலைப் பிடித்தே தீரவேண்டும்' என்றனர்!//
ReplyDelete:))
பசங்களுக்குத் தான் எத்தனை சங்கடம் பாருங்க!
பொண்ணு-ன்னா பொறந்த வீட்டுல சொல்றதைக் கேட்டுக்கலாம், கேட்டுக்காமலும் போகலாம்! No Issues! புகுந்த வீட்டுல சொல்றதைக் கேட்டுக்கவே வேணாம்! :))
ஆனாப் பசங்க? அவங்க சொல்றதையும் கேட்டுக்கணும்! இவிங்க சொல்றதையும் கேட்டுக்கணும்!
அவிங்க சொல்றதைக் கேக்கலீன்னா, இவ ஏங்க ஏங்க-ன்னு ஏங்குவா!
இவிங்க சொல்றதைக் கேக்கலீன்னா, பொண்டாட்டி தாசன், தலையணை மந்திரம்-ன்னு கேக்க வேண்டி இருக்கும்! :))
அதான் பசங்களுக்கு எல்லாம் பாதை காட்டிட்டுப் போறான் கண்ணன்!
//சடக்கென்று குனிந்து, என் வலது கால் கட்டை விரலைப் பற்றி//
காலைப் புடிச்சா தானே இந்த Debate?
கட்டை விரலைப் புடிச்சா?
அதான் டபக்குன்னு கால் கட்டை விரலைப் புடிச்சி, அடுத்த விரல்-ல, கை மோதிரமா இல்லாம, கால் மோதிரமா மாட்டி வுடறான்! :)
//செம்மை உடைய திருக்கையால்//
இதுக்கு இன்னொரு பொருளும் இருக்கு ரங்கன் அண்ணா!
செம் + மை உடைய திருக்கையால்!
அதாச்சும் அவன் கையில் சிவப்பா மருதாணி பூசி விட்டுருக்குங்க! மாப்பிள்ளைக்கு மருதாணி பூசுற வழக்கம் இருக்கு பாருங்க!
அருமையாக ஒரு வைதீகத் திருமணத்தை வலைப்பதிவில் நடத்திவிட்டீர்கள் ரங்கன் அண்ணா.
ReplyDeleteகே ஆர் எஸ்
ReplyDelete//செம் + மை உடைய திருக்கையால்!
அதாச்சும் அவன் கையில் சிவப்பா மருதாணி பூசி விட்டுருக்குங்க! மாப்பிள்ளைக்கு மருதாணி பூசுற வழக்கம் இருக்கு பாருங்க!//
இந்த அர்த்தம் இல்லீங்க!
நாராயணன், நம் ஒவ்வொருவருடைய பேப்பரையும் சிவப்புப் பேனாவால் திருத்தும்போது, அவர் பேனாவில் இருந்த மை கையில் ஒழுகியதால் அவர் கை சிவப்பாக ஆகிவிட்டது. அதனால் தான், அது செம் ‘மை’ உடைய கை ஆயிற்று :-))
kumaran
ReplyDelete//அருமையாக ஒரு வைதீகத் திருமணத்தை வலைப்பதிவில் நடத்திவிட்டீர்கள் ரங்கன் அண்ணா.//
Thanks.
Logan
ReplyDelete//திரு ரங்கன், இந்த பதிவை படித்து முடித்தவுடன் ஆண்டாள் திருமணத்தை ஒரு திரைப்படமாக பார்த்த உணர்வு. //
Thanks.
அருமை! அருமை! வர்ணனை மிக மிக அருமை. நன்றி
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
//செம் + மை உடைய திருக்கையால்!
ReplyDeleteஅதாச்சும் அவன் கையில் சிவப்பா மருதாணி பூசி விட்டுருக்குங்க! மாப்பிள்ளைக்கு மருதாணி பூசுற வழக்கம் இருக்கு பாருங்க!//
--------
இந்த அர்த்தம் இல்லீங்க!
நாராயணன், நம் ஒவ்வொருவருடைய பேப்பரையும் சிவப்புப் பேனாவால் திருத்தும்போது, அவர் பேனாவில் இருந்த மை கையில் ஒழுகியதால் அவர் கை சிவப்பாக ஆகிவிட்டது. அதனால் தான், அது செம் ‘மை’ உடைய கை ஆயிற்று :-))
--------
செம்மையுடைய திருக்கையால் ----
----கொடுத்து கொடுத்து சிவந்த கைகள்.
செழுமையான கைகள்
ஒரு கல்யாணத்திற்க்கு வந்து கலந்து கொண்ட திருப்தி
ReplyDeleteஅதுவும் எனது Roll Modeல் ஆன ஆண்டாள் நாச்சியார் கல்யாணத்திற்க்கு வந்தது இன்னும் சந்தோசமா இருக்கு கண்ணன்
இதை பாராயணம் செய்தால் நல்ல கல்யாணமும், குழந்தையும் பிறக்குமுனு வேற ஆண்டாள் சொல்லியாச்சு, அப்ப எனக்கு சீக்கிரம் ஒரு கேர்ள் பிரண்டு கிடைக்குமுனு நம்புரேன்.........
Mani Pandi
'கோபப்பட்டு ஸ்ரீதேவி வசிக்கும் நாராயணன் மார்பை உதைத்த துர்வாசரின் கால்களையே பிடித்து வருடியவனாயிற்றே இவன்? எத்தனை பேருக்கு இந்தக் குணம் இருக்கும்?'
ReplyDeleteவிளக்கம் அருமையாக இருந்தது.
துர்வாசரா அல்லது பிருகு மஹரிஷியா?
விருத்தகிரி
சிதம்பரம்
கோபப்பட்டு ஸ்ரீதேவி வசிக்கும் நாராயணன் மார்பை உதைத்த துர்வாசரின் கால்களையே பிடித்து வருடியவனாயிற்றே இவன்? எத்தனை பேருக்கு இந்தக் குணம் இருக்கும்?
ReplyDeleteIs it Bruhu muni or Dhurvasar
//Anonymous said...
ReplyDeleteIs it Bruhu muni or Dhurvasar//
பிருகு முனிவர் தான் அது!
பிருகு தான் மும்மூர்த்தி சத்வ குணப் பரீட்சை செய்ய புறப்படுவதும், எம்பெருமான் திருமார்பைக் காலால் உதைப்பதும், பெருமாள், முனியின் காலை வருடிக் கொடுத்து காலின் ஆணவக் கண்ணைப் பிடுங்குவதும் ஆகும்! :)
வினா எழுப்பும் போது, தங்கள் பேரையும் சொல்லலாமே? :))
அன்பரே
ReplyDelete//Is it Bruhu muni or Dhurvasar//
இருகு முனிவர் தான் அது. தவறு செய்து விட்டேன். மன்னிக்கவும்.
கடந்த பத்து நாட்களாக வீட்டில் பல விருந்தினர்கள். அலுவலகம் செல்லக்கூட நேரமில்லை!! அதனால் தான் உடனேயே பதில் எழுத முடியவில்லை! மன்னிக்கவும்!
அன்புடன்
ரங்கன்
//Sanjana said...//
ReplyDeleteஇது எப்போ...சுட்டிப் பொண்ணு சஞ்சனா எல்லாம் என் பந்தலுக்கு வந்து பின்னூட்டம் போட ஆரம்பிச்சா? :))
Hoi Sanju...Wht u doing in Panthal? U shd be playing Darts or Crossword or Monopoly...Shall we, now? :)
'அச்சுதன்' என்றால், கைவிடாதவன் என்று அர்த்தம்! இராமானுஜன் பொரியிட்டவுடன், என்னை கோவிந்தன் கையில் பிடித்துக் கொடுத்து, தன் கையை விட்டு விட்டான்! இவ்வாறு, மற்றவர்கள் எல்லோருமே கை விட்டாலும், கைவிடாதவன் இவன் ஒருவனே! நரசிம்மன் ஒருவனே, அடியவனைக் கைவிடாது, தூணிலே தோன்றியவன்!
ReplyDeleteWow! After hearing that, when I went to the Narasimhar Sannathi in Parthasarathy temple (Chennai) that day, I was crying beyond myself.
Azzhagiya Singar!!!
Great Work on that!!!
BTW, I'm crying now also coz I'm abroad and missing Lord Parthasarathy badly!!!
First of all, i'd like to express how thankful I am for these wonderful posts. I have enjoyed the whole, blissful post (Incidentally, I found your blog while searching for thirupaavai)
ReplyDeleteJust one doubt:
//என் கனவை இவ்வளவு பொறுமையாகக் கேட்ட உனக்கு, நல்ல குழந்தைகள் பிறக்கும்!//
"Is it for this that i listened to Your wonderful speech?
Is it for this that i stand in front of Him, and talk to Him?
O Krishna! is that what i seek??
Aren't You diluting my whole idea by stating this, O Foremost of Women?
Ofcourse, i live by His grace, and am thankful for everything He has given me.
But given that i have a notorious habit of asking Him for everything, and He has been amazingly patient throughout, do i need to end these wonderful 10 songs with a petition of this kind?
Isn't it like saying: You promised me this, so My Lord, it is for 'that reason' that i offer this prayer of mine unto You??
"etraikum ezhel piravikkum undhanodu ottromeyavom unakke naam aatseiyvom,
matrunamkaamangal maatrelor empaavai!'
After telling me to ask Him for that highest gift from 'Kadhir madhiyam pol muhathaan', why evn talk of something like this??
I am too small, and i know practically nothing; yet i am bound here by love for You, and for Your 'Acchudhan', so do tell me: i have no such prayer unto You. i prayed for that 'Kamala Kannan' alone.
Then, why is it that Your words that speak about Saranaagathi end with such a puzzling note?
i do not caim that i know much. But for some one who has relished your great poetry, that too by Your grace, isn't it fair that You make clear this puzzling footnote?
'manathukkiniyaanai padavum nee vaai thiravaay'
That is why i spoke! if i made a mistake,then forgive me in His name."
ippadi andha (tiru)paavai kitta niraya time kettirukken.
Somehow, my question remains a question till today.
Pls. if anyone knows what Thaayar might answer me, pleez reply.
-Padma
Padma,
ReplyDeleteLemme reply to you on behalf of Rangan Anna, the author of this particular posting.
//manathukkiniyaanai padavum nee vaai thiravaay'
That is why i spoke! if i made a mistake,then forgive me in His name//
நீங்க இப்படிக் கேள்வி கேட்டதே தப்பு! மகா தப்பு! :)
வேதம் அனைத்துக்கும் வித்து என்று போற்றப்படும் கோதைத் தமிழை, Is it fair to end like this?-ன்னு கேட்கலாகுமோ? ச்ருதி வாக்கியம்/வேத வாக்கியத்தின் முடிவு மேல் அவநம்பிக்கை கொள்வதாய் ஆகாதோ? :)
If I made a mistake-ன்னு உங்களுக்கே உறுத்தலா இருக்குற ஒன்னைக் கேள்வியாக் கேட்கலாமா? :)
ஹிஹி! சும்மா சொன்னேன்! டென்ஷன் ஆவாதீங்க! :)
There is absolutely nothing wrong in your question! கேள்வியே வேள்வி! The more u seek, the more u hold onto! :)
சரி, உங்க கேள்விக்கு வருவோம்!
உங்க கேள்வி தப்பில்லை-ன்னு உங்க மனசுக்கே நல்லாத் தெரிஞ்ச பின்னும், ஏன் "தப்பிருந்தால் மன்னியுங்கள்"-ன்னு முடிச்சீங்க? சொல்லுங்க பார்ப்போம்! கிட்டத்தட்ட அதே காரணத்துக்காகத் தான் கோதையும் அப்படி முடிக்கிறாள்!
//do i need to end these wonderful 10 songs with a petition of this kind?//
ReplyDelete//Then, why is it that Your words that speak about Saranaagathi end with such a puzzling note?//
You have something called the Rolling Shield in School, for the best student!
We learn for our sake, learning sake, future sake! Then why all this shield? Is it not materialistic? Will it not create competition between students? If one student wins that shield, means, all others are not good students??? :))
அதே லாஜிக் தாங்க இங்கும்!
அருமையான இறைத் தமிழ்க் கவிதை - பத்து பாடல்கள்! அதை முடிக்கும் போது இந்த சுழற் கோப்பை!
இது எதற்கு? இது தேவையா? இது "சுயநலம்" ஆகாதா? = ஆகாது!
உங்கள் கேள்வியில் தான் "சுயநலம்" ஒளிந்துள்ளது! :)
நீங்க, உங்களுக்கு மட்டும் கண்ணனைக் கேட்டீங்க! "எனக்கு" எல்லாம் அவனே! அதனால் "எனக்கு" அவனே வேணும்! ** i have no such prayer unto You. i prayed for that 'Kamala Kannan' alone ** வேற பலன்களெல்லாம் ஏதும் தேவையில்லை! இப்படிப் பாட்டுக்குப் பலன் சொல்லி முடித்து, "என்னை" insult பண்ண வேணாம்! :)) => இப்படி உங்க விருப்பத்தில் நிறைய "என்" இருக்கு! :))
ஆனா, தோழி கோதை அப்படி அல்ல! அவளுக்கு அவள் மட்டும் கண்ணனை அடைந்தால் போதாது! அத்தனை பேரும் கண்ணன் கழலினை அடைய வேணும்! அதுக்குத் தான் இந்தச் சுழற் கோப்பையை வைக்கிறாள்!
சுழற்கோப்பை என்பது ஒரு பொது அடையாளம் மட்டுமே! அது ஒருவரிடம் மட்டும் தங்கி விடுவதில்லை! சுழன்று கொண்டே இருக்கும்! கையில் மட்டுமல்ல, பல மாணவர்களின் எண்ணங்களிலும் சுழன்று கொண்டே இருக்கும்! ஆர்வம் இல்லாத மாணவர்கள் கூட, குறைந்த பட்சமாவது ஈர்க்கப்படுவார்கள்! தன் நண்பனுக்காகவேனும் அணி திரள்வார்கள்! அதற்கான ஊக்கம் தான் கோதையின் அந்த நூற்பயன்/பல சுருதி!
* திருப்பாவையில் = எங்கும் திருவருள் பெற்று இன்பு உறுவர் எம்பாவாய்-ன்னு பொதுப் பலனாகத் தான் முடித்தாள்!
* ஆனால் இது கல்யாணக் கனவு! = அதனால் சிறப்புப் பலனாக வைத்து முடிக்கின்றாள்!
முன்னது சரணாகதி! அதனால் பொதுப் பலன்! சரணாகதி ஆன அடுத்த நிமிடமே, உலகை விட்டே யாரும் தடார்-ன்னு போயிடுவதில்லையே! அந்தப் பிறவி வரை வாழுகிறார்கள் அல்லவா? அந்த வாழ்வுக்கும் பலன், பற்றுக் கோடு வேண்டுமே! அதான் இந்தச் சிறப்புப் பலன்!
//வாயும் நன் மக்களைப் பெற்று - மகிழ்வரே//
இங்கே நன்+மக்கள் என்பது நல்ல குழந்தைச் செல்வம் என்பது கல்யாணக் கனவுக்கான சிறப்புப் பலன்! மகிழ்வரே என்னும் இன்பப் பலன்!
ஆனால் அது மட்டுமே பொருளல்ல! அப்படிப் பார்த்தா, இந்தப் பாட்டைத் துறவிகள், ஜீயர்கள் கூடத் தான் ஓதுகிறார்கள்! அவிங்களுக்கு என்ன சொல்வது? :)
நன் மக்கள் = குழந்தைச் செல்வம், நல்ல நட்பு, நல்ல இனம், அடியார் குழாம் என்று பலவும் குறிக்கும்!
The Focus is not on "நன்மக்கள்", but on "வாயும்-மகிழ்வரே"!
நன்மக்கள் என்பது ஒரு Rolling Shield மட்டுமே! :)
ஆர்வம் உடையவர்கள் = Padma = நாராயணைக் கேட்பது "தன்"னளவில்!
ஆர்வம் இல்லாதவர்களும் நாராயணனை அடைய வேணும் அல்லவா! அதற்கான பொறியே கோதைத் தமிழ் = வேதம் அனைத்துக்கும் வித்தாகும்!
So, Padma, Please pardon me for directly referring your name in the reply! :)
ReplyDeleteஆர்வம் உடையார்கள், ஆர்வம் இல்லாதவர்களுக்காக, "நன்மக்கள்" போன்ற சொற்களைத் தாங்கிக் கொண்டே ஆக வேணும்! :) ஏன்-ன்னா கோதைத் தமிழ் ஆண்டவனுக்கு அல்ல! அடியார்களுக்காக! :))
Btw, Padma, Did u read the thiruppaavai posts in panthal, from a relishing perspective? herez the link, or u can find more from the labels listed on right bar!
http://madhavipanthal.blogspot.com/search/label/திருப்பாவை
@kannabiran, RAVI SHANKAR: First of all, tnx a lot 4 the reply.
ReplyDelete//You have something called the Rolling Shield in School, for the best student!//
Adhu eppadinga, u found out i'm a school student!!!:)
//உங்க விருப்பத்தில் நிறைய "என்" இருக்கு! :))
Padma = நாராயணைக் கேட்பது "தன்"னளவில்!//
well, yes, the perspective wasn't exactly selfless. :):):)
so, tnx 4 giving a diff. perspective:
//The Focus is not on "நன்மக்கள்", but on "வாயும்-மகிழ்வரே"!//
//So, Padma, Please pardon me for directly referring your name in the reply! :)//
Why r u adding a 'formal' footnote?
Aandal talked to the whole world, fine, but even if your reply to the q is on world-wide web, it was meant 4 me, na?
Ungal thozhiyin example follow panradhu-la romba gavanama irukeenga. :)
Jokes apart, i'm real thankful 4 the reply, so there was no need 4 that.
//Btw, Padma, Did u read the thiruppaavai posts in panthal//
Yes, i'm doing that. as i told u already, i found this blog while googling 'thirupaavai', and the name of ur blog got me hooked.
பாசுரங்களின் விளக்கமும், அதற்கேற்ற படங்களும், ஒரு கல்யாணத்தின் போது நடைபெறும் சடங்குகளின் விளக்கமும் அருமையோ அருமை. மிக்க நன்றி
ReplyDelete:))
ReplyDelete:))
:))
ஐயா!
ReplyDeleteமாதவி பந்தல் நரசிம்மருக்கும் சம்மர் லீவு விட்டுடீங்களா!
அண்ணே
ReplyDeleteநரசிம்மருக்கு லீவு இல்லை! நரசிம்மர் தொடர்ந்து சில உறவினர்களையும் நண்பர்களையும் அனுப்பி, அவர்கள் இல்லாத போது சில பிரச்சனைகளையும் அனுப்பு, ’இவற்றையெல்லாம் கவனி’ என்று சொல்லி, அவர் எனக்கு லீவு விட்டுட்டார்!
அடுத்த பதிவு எழுத ஆரம்பித்துவிட்டேன்! சனிக்கிழமைக்குள் நரசிம்மர் மீண்டும் வர்ராருங்கோ!