விருந்துக்கு அழைத்து வெட்டிப் போட்ட சிவ "பக்தர்"!
"பதிவு எழுதி ரொம்ப நாளாச்சி! எப்படி எழுதணும்-ன்னே மறந்து போச்சி! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :)"
"என்னாது? எப்படி எழுதணும்-ன்னே மறந்து போச்சா? ஆனா எப்படி தலைப்பு வைக்கணும்-ன்னு மட்டும் மறந்து போகலை போல?" :)
"ஹா ஹா ஹா! இன்னிக்கி பதிவு போட்டே ஆகணும்! ஏன்-ன்னா, இரண்டு நாயன்மார்களின் நினைவு நாள்!"
"ஓ! சரி...அது என்ன 'விருந்து கொடுத்து வெட்டிப் போட்ட நாயன்மார்'? - யாரு? சிறுத்தொண்டரா? பிள்ளைக் கறி எல்லாம் கொடுத்தாரே? அவரா?"
"இல்லையில்லை! இவரு வேற! அவரும் விருந்தினரை வெட்டி எல்லாம் போடலையே! விருந்தினரா வந்த சிவபெருமானுக்குத் தன் மகனையே அல்லவா கொடுக்கத் "துணிஞ்சார்"! ஆனா, நாம இன்னிக்கு பார்க்கப் போறது வேற ஒருவரை! உம்ம்ம்...சரியாச் சொல்லணும்-ன்னா வேற இருவரை!"
1. கோட்புலி நாயனார்
2. கலிய நாயனார்
இருவருக்கும் இன்று தான் குரு பூசை(நினைவு நாள்)! ஆடியில் கேட்டை (Jul-22-2010)! பார்க்கலாமா....என்ன விருந்து, என்ன வெட்டு-ன்னு? :)
இன்றைய "குடும்ப" அரசியல் தலைவர்கள் பலருக்கும், இந்த நாயன்மார் கதை, ஒரு நல்ல பாடம்!
நாட்டியத்தான் குடி என்னும் ஊர்! திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழியில் உள்ளது! அதில் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர் கோட்புலி!
பிள்ளைப் பருவத்திலேயே வீரம் அதிகம்! அதனால் விவசாயத்தில் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை! சோழன் படையில் சேர்ந்தார்!
கொஞ்ச நாளிலேயே சில பல போர்கள்! விறு விறு என்று உச்சத்துக்குப் போய்விட்டார்! சேனாதிபதியாகவும் ஆகி விட்டார்!
ஆனால் மனத்தில் மட்டும் சிவ-பக்தி! சரியாச் சொல்லணும்-ன்னா சிவ-அன்பு!
கோட்புலிக்கு ஒரு முறை வெளியூர் செல்ல வேண்டி வந்தது! எதுக்கு? போருக்குத் தான்! ஆனா இந்த முறை கொஞ்சம் கடுமையான போர், அதனால் திரும்பி வர நாளாகும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்டார்! அதனால் போகும் முன்னே, ஒரு கூடு கட்டினார்!
என்ன கூடு? நெல் கூடு தான்!
குதிர்-ன்னு கிராமத்தில் சொல்லுவாய்ங்க! நெல்லுக் குதிர்! நெல்லு, ஈரம் பூத்துப் போகாமல், குதிரில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்!
திரும்பி வரும் வரை ஆலயத்துக்கான நெல்லுப் படி! அதைத் தான் கூடு கட்டி வைத்தார்! அவனவன், தான் ஊருக்குப் போகும் போது, தனக்குக் கட்டுச் சாதம் கட்டிக்கிட்டுப் போவாங்க! இவரு ஈசனுக்குக் கட்டுச் சாதம் கட்டுறாரு! ஏன்? = எது வந்தாலும் ஈசனுக்குப் பசி வரக் கூடாது!!
அட, ஈசனுக்குப் பசி வருமா? உலகத்துக்கே படி அளக்கறவனுக்குப் பசியா??-ன்னு அறிவாளர்கள் கேட்பாங்க! ஆனா அன்பாளர்கள்?
அதான் முன்பே சொன்னேன்! "சைவ-பக்தி" வேறு! "சிவ-அன்பு" வேறு!
அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லவே இல்லை! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
Even "simple" looks "beautiful", when seen through "Eyes of Love"!
Even the Lord may look hungry, when seen through "Eyes of Love"!
ஆலயத்தில் ஈசனுக்கு அமுதுபடியாகும் நெல்லைக் கூடு கட்டி வைத்தவர், அப்படியே போயிருக்கக் கூடாதா? தன் சுற்றத்தாரை எல்லாம் கூப்பிட்டார்!
தான் சரியா இருந்தாலும், குடும்பம் நடுவால புகுந்து அரசியல் பண்ணுடிச்சின்னா? அப்பவே இந்தப் பயம் அரசியலாருக்கு இருந்திருக்கு போல! :)
"இது ஈசன் அமுதுப்படிக்கு அளந்து விட்ட நெல்! இதில் இருந்து தான் அடியார்களுக்கான தினப்படி அன்ன தானமும் நடத்தப்படுகிறது! எனவே எக்காரணம் கொண்டும் இதில் நீங்கள் கை வைக்கக் கூடாது!
உங்கள் ஆத்திர-அவசரத் தேவைக்கு என் குடும்பக் களஞ்சியத்தில் இருந்து கடனாக எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் இது திரு இறையாக் கலி! பொதுச் சொத்து! இதில் உங்களுக்கு உரிமை இல்லை! அறவே இல்லை!"
கோட்புலி போன முன்றே மாதத்தில், ஊரில் பஞ்சம் வந்து விட்டது! நாள்பட நாள்பட பற்றாக்குறை அதிகரித்தது!
இதே இந்தக் காலம்-ன்னா.....சுற்றத்தார் பலருக்கு சும்மாவே பத்திக்கும்! பத்தாக்குறையின் போது பத்திக்கலீன்னா எப்படி?
ஆலயத்துக்குச் சென்று அந்த நெல்லை அடவாடியாக அள்ளிக் கொண்டு வந்தார்கள் குடும்ப உறவினர்கள்!
ஆலயப் பூசைக்குப் பின், மக்களுக்குத் தரப்படும் உணவை, வரிசையில் நின்று அவங்களும் வாங்கிச் சாப்பிட்டு இருக்கலாம் தான்! ஆனால் பற்றாக்"குறை"யிலும் கெளரவம் "குறை"யக்கூடாது நினைச்சிட்டாங்க போல!
"நம்ம ஆளு அளந்து விட்ட நெல்லு தானே! நமக்கில்லாத உரிமையா? :) வேணும்-ன்னா பஞ்சம் தீர்ந்தாப் பிறகு, இதே அளவைத் திருப்பிக் கொடுத்துக்கலாம்! ஆனா இப்போ குடும்ப உரிமையை நிலைநாட்டி எடுத்துக் கொள்வோம்!" - இப்படி எடுத்து விட்டனர் சுற்றமும், நட்பும்!
கோட்புலி, பல மாதங்கள் கழித்து, திரும்பி வந்து பார்த்தால்...
சிவபூசைக்கு உணவு இல்லை!
ஆலயத்தில் வழிபாடு இல்லை!
பிரசாதமாச்சும் உண்டு பசியாறிய பல அடியவர்கள் பஞ்சத்தால் இறந்து கிடந்தார்கள்!
ஆனால்.....நம்ம சுற்றமும் நட்பும், அப்பவும் "குடும்ப நியாயம்" பேசிக் கொண்டிருந்தார்கள்!
இவர்களைப் பேசிச் சரிபடுத்த முடியாது என்று புரிந்து கொண்டார் கோட்புலி!
எடுத்ததும் இல்லாமல் எகத்தாளம் வேறு!
அத்தனை பேரையும் விருந்துக்கு அழைத்தார்! வெற்றி விருந்து!
"பஞ்சத்தில் நீங்கள் அனைவரும் ருசியாகச் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்! உணவை அயலூரில் இருந்து தருவிக்கிறேன்! அப்படியே போரில் வென்ற பரிசுப் பொருட்களில் கொஞ்சம் பெற்றுச் செல்லுங்கள்! என் வெற்றியைக் கொண்டாட அனைவரும் விருந்துக்கு வாருங்கள்! சிவ சிவ!!"
உள்ளே திரண்ட அத்தனை பேரும் விருந்தில் களித்து இருக்க...
வெளியே வாயில் காப்போரிடம்...
அத்தனை கதவுகளையும் அடைக்கச் சொன்னார் கோட்புலி!
மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி, மாமி, அக்கா பெண், அக்கா பிள்ளைகள்-மருமகன்கள்...அண்ணன்-தம்பி...பேரப் பிள்ளைகள்....
இன்னும் குடும்பம்-ன்னு சொல்லி ஒட்டியும் உறவாடியும் உண்டவர்கள் அத்தனை பேரையும் வாள் வீசி வெட்டினார்!
உண்டவர் எல்லாம் கண்டம் துண்டம்!!
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்
இவரோ வேண்டியவர்களே தனக்கு வேண்டாம் என்றல்லவா முடிவு கட்டி விட்டார்! இனமாவது? புணையாவது??
இப்படித் தன் குடும்பமே தவறு இழைத்து, ஊருக்கு இட்ட உணவை அபகரித்து, இன்று தன் சினத்தால் ஒட்டு மொத்தமாய்த் தழைக்காமல் போய் விட்டதே என்று தன்னந்தனியாக கோட்புலி அழ...
ஈசன் அவரை அங்ஙனயே தோன்றி, அவ்வண்ணமே அணைத்துக் கொண்டான்!
"உன் கை வாளினால் உறுபாசம் அறுத்த சுற்றத்தவர், பிற உலகம் முதலிய பூமிகளிற் புகுந்து, கருமம் தொலைத்து, பின்னர் நம் உலகம் அடைய,
நீர் இந்நிலையிலேயே நம்முடன் அணைக, நம் உலகம் அடைக!" என்று மொழிஞ்சருளினார்!
விருந்துக்கு அழைத்து வெட்டிப் போட்டவர்! = கோட்புலி "நாயனார்" ஆனார்!
இதற்கெல்லாம் முன்பே, நன்றாக வாழ்ந்த காலத்தில்....
கோட்புலி, சுந்தரரைத் தம் ஊருக்கு அழைத்து வந்து, தம் ஊர் இறைவன் மேல் அவரைப் பாட வைத்து, சிங்கடி-வனப்பகை என்ற தன் இரு மகள்களையும் சுந்தரரின் சைவப் பணிக்குக் காணிக்கை ஆக்கினார்!
பிள்ளை இல்லாத சுந்தரரோ, அவ்விருவரையும் தன் சொந்த மகள்களாகப் பாவித்து, தம்மைத் தாமே, சிங்கடி அப்பன், வனப்பகை அப்பன் என்று பாடிக் கொண்டார்! (ஏழாம் திருமுறை-திருநாட்டியத்தான் குடி)
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத்தான் குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற்று அறுமே!
பின்னாளில்...கோட்புலி, இவ்வாறு சுற்றத்தைக் கொன்று தானும் இறந்த பின்பு...சுந்தரர் பழசை எல்லாம் நினைத்து மீண்டும் அவரைப் பதிக்கிறார்!
"அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்"
என்று நாயன்மார்களுக்கு எல்லாம் தலைமையாகக் கருதப்படும் சுந்தரர், திருத்தொண்டத் தொகையில் கோட்புலியைப் பாடிப் பரவுகிறார்!
(பின் குறிப்பு: இங்கு பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் பலவும், சேக்கிழாருடைய பெரிய புராணத்தின் படியோ, வெளியிற் கிடைக்கநாயன்மார் கதைப் புத்தகங்களின் படியோ இருக்காது!
சேக்கிழார் நூலில் வேறு பல காரணங்களுக்காக, சில நாடகத் தன்மை கலந்து, வன்மையாக இருக்கும்! இக்காலப் பார்வைக்கும் சரியாகப் படாது! நான் இங்கு எடுத்துக் கொண்டது மூல நூலான திருத்தொண்டர் திருவந்தாதி மட்டுமே)
கலிய நாயனார் குரு பூசையும் இன்னிக்கு தான்-ன்னு சொன்னேன் இல்லையா?
கலிய நாயனார், நம்ம சென்னைக்காரர் - திருவொற்றியூர் பக்கம்!
கிடைக்கும் வருவாயில், திருவொற்றியூர்க் கோயிலில் தினமும் விளக்கேற்றி, பெரிய ஆலயத்தின் இருளில் பக்தர்கள் சிக்கிக் கொள்ளாமல், விளக்கு வெளிச்சத் தொண்டு செய்து வந்தவர்!
பொருளெல்லாம் கரைஞ்ச பின்னும், இதுக்குன்னே ஓரு எண்ணெய் ஆலையில் வேலை வாங்கிக் கொண்டு, விளக்கு கைங்கர்யம் மட்டும் விடாமல் செய்து வந்தார்!
ஒரு நாள்....
துளி எண்ணெய்க்கும் காசில்லாமல் போகவே, ஒரு கட்டத்தில் ஆலயத்தில் இருள் பரவக் கண்டு, பதபதைத்துப் போனார்!
சின்ன பிச்சுவாக் கத்தியால், தன் கழுத்து இரத்தம் குபுகுபு என்று எடுத்தாச்சும் விளக்கில் ஊற்றுவோம் என்று கீறிக் கொள்ள....
"நில்லு கலியா நில்லு!"....என்று ஒரு கரம் தடுக்க...அந்தக் கரத்தில் மானும் மழுவும் சோதியும் ஆதியும்...
இப்படியும் ஒரு ஜீவனா?....... என்று அந்தச் சீவனைச் சிவமே தாங்கிக் கொண்டது!
* பொன்னம்பலத்தில், "சைவப் பிடிப்பாளர்கள்"....எண்ணெயும் ஊற்றி வழுக்கி விழச் செய்வார்கள்!
* மன-அம்பலத்தில் "சிவ அன்பாளர்கள்"....தன் இரத்தமேயும் எண்ணெயாய் ஊற்றித் தருவார்கள்!
ஒன்று சமயப்-பிடிப்பு! இன்னொன்று சிவப்-பிடிப்பு! நாம் சிவத்தைப் பிடிப்போம்!
ஆர் வல்லார் காண், அரன் அவனை? அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தி அமைத்து - சீர்வல்ல
தாயத்தால் நாமும், தனி நெஞ்சினுள் அடைத்து,
மாயத்தால் வைத்தோம் மறைத்து!!!
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? என்று பெருமாள், ஈசன் மேல் கொண்ட "அன்புடைமையை" மாணிக்கவாசகர் வியந்து வியந்து பாடுகிறார்!
ஆழியான் அன்புக்குரிய ஈசனை....
நாமும் தனி நெஞ்சினுள் அடைத்து....
மாயத்தால் வைப்போம் மறைத்து...
நேயத்தால் வைப்போம் நிலைத்து!!
கலிய நாயனார் திருவடிகளே சரணம்!
கோட்புலி நாயனார் திருவடிகளே சரணம்!
"என்னாது? எப்படி எழுதணும்-ன்னே மறந்து போச்சா? ஆனா எப்படி தலைப்பு வைக்கணும்-ன்னு மட்டும் மறந்து போகலை போல?" :)
"ஹா ஹா ஹா! இன்னிக்கி பதிவு போட்டே ஆகணும்! ஏன்-ன்னா, இரண்டு நாயன்மார்களின் நினைவு நாள்!"
"ஓ! சரி...அது என்ன 'விருந்து கொடுத்து வெட்டிப் போட்ட நாயன்மார்'? - யாரு? சிறுத்தொண்டரா? பிள்ளைக் கறி எல்லாம் கொடுத்தாரே? அவரா?"
"இல்லையில்லை! இவரு வேற! அவரும் விருந்தினரை வெட்டி எல்லாம் போடலையே! விருந்தினரா வந்த சிவபெருமானுக்குத் தன் மகனையே அல்லவா கொடுக்கத் "துணிஞ்சார்"! ஆனா, நாம இன்னிக்கு பார்க்கப் போறது வேற ஒருவரை! உம்ம்ம்...சரியாச் சொல்லணும்-ன்னா வேற இருவரை!"
1. கோட்புலி நாயனார்
2. கலிய நாயனார்
இருவருக்கும் இன்று தான் குரு பூசை(நினைவு நாள்)! ஆடியில் கேட்டை (Jul-22-2010)! பார்க்கலாமா....என்ன விருந்து, என்ன வெட்டு-ன்னு? :)
இன்றைய "குடும்ப" அரசியல் தலைவர்கள் பலருக்கும், இந்த நாயன்மார் கதை, ஒரு நல்ல பாடம்!
நாட்டியத்தான் குடி என்னும் ஊர்! திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழியில் உள்ளது! அதில் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர் கோட்புலி!
பிள்ளைப் பருவத்திலேயே வீரம் அதிகம்! அதனால் விவசாயத்தில் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை! சோழன் படையில் சேர்ந்தார்!
கொஞ்ச நாளிலேயே சில பல போர்கள்! விறு விறு என்று உச்சத்துக்குப் போய்விட்டார்! சேனாதிபதியாகவும் ஆகி விட்டார்!
ஆனால் மனத்தில் மட்டும் சிவ-பக்தி! சரியாச் சொல்லணும்-ன்னா சிவ-அன்பு!
கோட்புலிக்கு ஒரு முறை வெளியூர் செல்ல வேண்டி வந்தது! எதுக்கு? போருக்குத் தான்! ஆனா இந்த முறை கொஞ்சம் கடுமையான போர், அதனால் திரும்பி வர நாளாகும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்டார்! அதனால் போகும் முன்னே, ஒரு கூடு கட்டினார்!
என்ன கூடு? நெல் கூடு தான்!
குதிர்-ன்னு கிராமத்தில் சொல்லுவாய்ங்க! நெல்லுக் குதிர்! நெல்லு, ஈரம் பூத்துப் போகாமல், குதிரில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்!
திரும்பி வரும் வரை ஆலயத்துக்கான நெல்லுப் படி! அதைத் தான் கூடு கட்டி வைத்தார்! அவனவன், தான் ஊருக்குப் போகும் போது, தனக்குக் கட்டுச் சாதம் கட்டிக்கிட்டுப் போவாங்க! இவரு ஈசனுக்குக் கட்டுச் சாதம் கட்டுறாரு! ஏன்? = எது வந்தாலும் ஈசனுக்குப் பசி வரக் கூடாது!!
அட, ஈசனுக்குப் பசி வருமா? உலகத்துக்கே படி அளக்கறவனுக்குப் பசியா??-ன்னு அறிவாளர்கள் கேட்பாங்க! ஆனா அன்பாளர்கள்?
அதான் முன்பே சொன்னேன்! "சைவ-பக்தி" வேறு! "சிவ-அன்பு" வேறு!
அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லவே இல்லை! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
Even "simple" looks "beautiful", when seen through "Eyes of Love"!
Even the Lord may look hungry, when seen through "Eyes of Love"!
ஆலயத்தில் ஈசனுக்கு அமுதுபடியாகும் நெல்லைக் கூடு கட்டி வைத்தவர், அப்படியே போயிருக்கக் கூடாதா? தன் சுற்றத்தாரை எல்லாம் கூப்பிட்டார்!
தான் சரியா இருந்தாலும், குடும்பம் நடுவால புகுந்து அரசியல் பண்ணுடிச்சின்னா? அப்பவே இந்தப் பயம் அரசியலாருக்கு இருந்திருக்கு போல! :)
"இது ஈசன் அமுதுப்படிக்கு அளந்து விட்ட நெல்! இதில் இருந்து தான் அடியார்களுக்கான தினப்படி அன்ன தானமும் நடத்தப்படுகிறது! எனவே எக்காரணம் கொண்டும் இதில் நீங்கள் கை வைக்கக் கூடாது!
உங்கள் ஆத்திர-அவசரத் தேவைக்கு என் குடும்பக் களஞ்சியத்தில் இருந்து கடனாக எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் இது திரு இறையாக் கலி! பொதுச் சொத்து! இதில் உங்களுக்கு உரிமை இல்லை! அறவே இல்லை!"
கோட்புலி போன முன்றே மாதத்தில், ஊரில் பஞ்சம் வந்து விட்டது! நாள்பட நாள்பட பற்றாக்குறை அதிகரித்தது!
இதே இந்தக் காலம்-ன்னா.....சுற்றத்தார் பலருக்கு சும்மாவே பத்திக்கும்! பத்தாக்குறையின் போது பத்திக்கலீன்னா எப்படி?
ஆலயத்துக்குச் சென்று அந்த நெல்லை அடவாடியாக அள்ளிக் கொண்டு வந்தார்கள் குடும்ப உறவினர்கள்!
ஆலயப் பூசைக்குப் பின், மக்களுக்குத் தரப்படும் உணவை, வரிசையில் நின்று அவங்களும் வாங்கிச் சாப்பிட்டு இருக்கலாம் தான்! ஆனால் பற்றாக்"குறை"யிலும் கெளரவம் "குறை"யக்கூடாது நினைச்சிட்டாங்க போல!
"நம்ம ஆளு அளந்து விட்ட நெல்லு தானே! நமக்கில்லாத உரிமையா? :) வேணும்-ன்னா பஞ்சம் தீர்ந்தாப் பிறகு, இதே அளவைத் திருப்பிக் கொடுத்துக்கலாம்! ஆனா இப்போ குடும்ப உரிமையை நிலைநாட்டி எடுத்துக் கொள்வோம்!" - இப்படி எடுத்து விட்டனர் சுற்றமும், நட்பும்!
கோட்புலி, பல மாதங்கள் கழித்து, திரும்பி வந்து பார்த்தால்...
சிவபூசைக்கு உணவு இல்லை!
ஆலயத்தில் வழிபாடு இல்லை!
பிரசாதமாச்சும் உண்டு பசியாறிய பல அடியவர்கள் பஞ்சத்தால் இறந்து கிடந்தார்கள்!
ஆனால்.....நம்ம சுற்றமும் நட்பும், அப்பவும் "குடும்ப நியாயம்" பேசிக் கொண்டிருந்தார்கள்!
இவர்களைப் பேசிச் சரிபடுத்த முடியாது என்று புரிந்து கொண்டார் கோட்புலி!
எடுத்ததும் இல்லாமல் எகத்தாளம் வேறு!
அத்தனை பேரையும் விருந்துக்கு அழைத்தார்! வெற்றி விருந்து!
"பஞ்சத்தில் நீங்கள் அனைவரும் ருசியாகச் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்! உணவை அயலூரில் இருந்து தருவிக்கிறேன்! அப்படியே போரில் வென்ற பரிசுப் பொருட்களில் கொஞ்சம் பெற்றுச் செல்லுங்கள்! என் வெற்றியைக் கொண்டாட அனைவரும் விருந்துக்கு வாருங்கள்! சிவ சிவ!!"
உள்ளே திரண்ட அத்தனை பேரும் விருந்தில் களித்து இருக்க...
வெளியே வாயில் காப்போரிடம்...
அத்தனை கதவுகளையும் அடைக்கச் சொன்னார் கோட்புலி!
மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி, மாமி, அக்கா பெண், அக்கா பிள்ளைகள்-மருமகன்கள்...அண்ணன்-தம்பி...பேரப் பிள்ளைகள்....
இன்னும் குடும்பம்-ன்னு சொல்லி ஒட்டியும் உறவாடியும் உண்டவர்கள் அத்தனை பேரையும் வாள் வீசி வெட்டினார்!
உண்டவர் எல்லாம் கண்டம் துண்டம்!!
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்
இவரோ வேண்டியவர்களே தனக்கு வேண்டாம் என்றல்லவா முடிவு கட்டி விட்டார்! இனமாவது? புணையாவது??
இப்படித் தன் குடும்பமே தவறு இழைத்து, ஊருக்கு இட்ட உணவை அபகரித்து, இன்று தன் சினத்தால் ஒட்டு மொத்தமாய்த் தழைக்காமல் போய் விட்டதே என்று தன்னந்தனியாக கோட்புலி அழ...
ஈசன் அவரை அங்ஙனயே தோன்றி, அவ்வண்ணமே அணைத்துக் கொண்டான்!
"உன் கை வாளினால் உறுபாசம் அறுத்த சுற்றத்தவர், பிற உலகம் முதலிய பூமிகளிற் புகுந்து, கருமம் தொலைத்து, பின்னர் நம் உலகம் அடைய,
நீர் இந்நிலையிலேயே நம்முடன் அணைக, நம் உலகம் அடைக!" என்று மொழிஞ்சருளினார்!
விருந்துக்கு அழைத்து வெட்டிப் போட்டவர்! = கோட்புலி "நாயனார்" ஆனார்!
இதற்கெல்லாம் முன்பே, நன்றாக வாழ்ந்த காலத்தில்....
கோட்புலி, சுந்தரரைத் தம் ஊருக்கு அழைத்து வந்து, தம் ஊர் இறைவன் மேல் அவரைப் பாட வைத்து, சிங்கடி-வனப்பகை என்ற தன் இரு மகள்களையும் சுந்தரரின் சைவப் பணிக்குக் காணிக்கை ஆக்கினார்!
பிள்ளை இல்லாத சுந்தரரோ, அவ்விருவரையும் தன் சொந்த மகள்களாகப் பாவித்து, தம்மைத் தாமே, சிங்கடி அப்பன், வனப்பகை அப்பன் என்று பாடிக் கொண்டார்! (ஏழாம் திருமுறை-திருநாட்டியத்தான் குடி)
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத்தான் குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற்று அறுமே!
பின்னாளில்...கோட்புலி, இவ்வாறு சுற்றத்தைக் கொன்று தானும் இறந்த பின்பு...சுந்தரர் பழசை எல்லாம் நினைத்து மீண்டும் அவரைப் பதிக்கிறார்!
"அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்"
என்று நாயன்மார்களுக்கு எல்லாம் தலைமையாகக் கருதப்படும் சுந்தரர், திருத்தொண்டத் தொகையில் கோட்புலியைப் பாடிப் பரவுகிறார்!
(பின் குறிப்பு: இங்கு பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் பலவும், சேக்கிழாருடைய பெரிய புராணத்தின் படியோ, வெளியிற் கிடைக்கநாயன்மார் கதைப் புத்தகங்களின் படியோ இருக்காது!
சேக்கிழார் நூலில் வேறு பல காரணங்களுக்காக, சில நாடகத் தன்மை கலந்து, வன்மையாக இருக்கும்! இக்காலப் பார்வைக்கும் சரியாகப் படாது! நான் இங்கு எடுத்துக் கொண்டது மூல நூலான திருத்தொண்டர் திருவந்தாதி மட்டுமே)
கலிய நாயனார் குரு பூசையும் இன்னிக்கு தான்-ன்னு சொன்னேன் இல்லையா?
கலிய நாயனார், நம்ம சென்னைக்காரர் - திருவொற்றியூர் பக்கம்!
கிடைக்கும் வருவாயில், திருவொற்றியூர்க் கோயிலில் தினமும் விளக்கேற்றி, பெரிய ஆலயத்தின் இருளில் பக்தர்கள் சிக்கிக் கொள்ளாமல், விளக்கு வெளிச்சத் தொண்டு செய்து வந்தவர்!
பொருளெல்லாம் கரைஞ்ச பின்னும், இதுக்குன்னே ஓரு எண்ணெய் ஆலையில் வேலை வாங்கிக் கொண்டு, விளக்கு கைங்கர்யம் மட்டும் விடாமல் செய்து வந்தார்!
ஒரு நாள்....
துளி எண்ணெய்க்கும் காசில்லாமல் போகவே, ஒரு கட்டத்தில் ஆலயத்தில் இருள் பரவக் கண்டு, பதபதைத்துப் போனார்!
சின்ன பிச்சுவாக் கத்தியால், தன் கழுத்து இரத்தம் குபுகுபு என்று எடுத்தாச்சும் விளக்கில் ஊற்றுவோம் என்று கீறிக் கொள்ள....
"நில்லு கலியா நில்லு!"....என்று ஒரு கரம் தடுக்க...அந்தக் கரத்தில் மானும் மழுவும் சோதியும் ஆதியும்...
இப்படியும் ஒரு ஜீவனா?....... என்று அந்தச் சீவனைச் சிவமே தாங்கிக் கொண்டது!
* பொன்னம்பலத்தில், "சைவப் பிடிப்பாளர்கள்"....எண்ணெயும் ஊற்றி வழுக்கி விழச் செய்வார்கள்!
* மன-அம்பலத்தில் "சிவ அன்பாளர்கள்"....தன் இரத்தமேயும் எண்ணெயாய் ஊற்றித் தருவார்கள்!
ஒன்று சமயப்-பிடிப்பு! இன்னொன்று சிவப்-பிடிப்பு! நாம் சிவத்தைப் பிடிப்போம்!
ஆர் வல்லார் காண், அரன் அவனை? அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தி அமைத்து - சீர்வல்ல
தாயத்தால் நாமும், தனி நெஞ்சினுள் அடைத்து,
மாயத்தால் வைத்தோம் மறைத்து!!!
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? என்று பெருமாள், ஈசன் மேல் கொண்ட "அன்புடைமையை" மாணிக்கவாசகர் வியந்து வியந்து பாடுகிறார்!
ஆழியான் அன்புக்குரிய ஈசனை....
நாமும் தனி நெஞ்சினுள் அடைத்து....
மாயத்தால் வைப்போம் மறைத்து...
நேயத்தால் வைப்போம் நிலைத்து!!
கலிய நாயனார் திருவடிகளே சரணம்!
கோட்புலி நாயனார் திருவடிகளே சரணம்!
//அதான் முன்பே சொன்னேன்! சைவ-பக்தி வேறு! சிவ-அன்பு வேறு!
ReplyDeleteஅன்புக்கு அடைக்கும் தாழ் இல்லவே இல்லை!
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?//
:))
//இப்படித் தன் குடும்பமே தவறு இழைத்து, இன்று மொத்தமாய்த் தழைக்காமல் போய் விட்டதே என்று தன்னந்தனியாக கோட்புலி அழ...
ReplyDelete//
இதைத்தான் சிவ சொத்து குல நாசம்-னு சொல்றாங்களோ...
எழுத மறந்ததே இப்படி என்றால் நன்றாக எழுதினால் ... அருமை...:)
இரு நாயன்மார்களின் திருக்கதைகளையும் தந்ததற்கு நன்றி இரவி.
ReplyDeleteஎழுத மறந்ததே இப்படி என்றால் நன்றாக எழுதினால் ... அருமை...:)
ReplyDeleteவழிமொழிகிறேன்.
கடன் இருக்குன்னு சீனா ஐயா சொன்னாங்க. பெரியவங்க சொன்ன சொல்லைக் கேக்கணும்ல. :-)
ReplyDeleteவிருந்து கொடுத்து வெட்டி போடும் அளவுக்கு அப்படி என்னங்க? ஏதோ பசியால பாவம் பண்ணிட்டாங்க. கருணையே உருவான சிவத்தை வணங்குபவர்கள் அந்த கருணையின் பெயரால் அந்த சுற்றத்தாரை மன்னித்து விட்டிருக்கலாமே? சிவன் சொத்து குல நாசம் என்றால் அது தானாக நடந்தால் சரி; இப்படி விருந்துக்குக் கூப்பிட்டா குல நாசம் செய்வார்கள்?
ReplyDeleteஅருட்பெரும்சோதி ஆண்டவனின் ஆலயத்தில் ஓர் இரவு விளக்கில்லையேல் என்னாகும்? அதற்காக தன் உதிரம் கொட்ட வேண்டுமா? இது என்ன வன்றொண்டரை விட வன்மையான பக்தியாக இருக்கிறதே! :-(
ReplyDeleteஇரண்டு நாயன்மார்களின் கதைகளும் கொஞ்சம் டெரர்ராத்தான் இருக்கு :(
ReplyDeleteசிவபக்தி, அன்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கோட்புலி நாயனார் சிறு குழதையையும் விடாது வெட்டினார் என்பது சரியல்ல என்றே தோன்றுகிறது.
தொடர்ந்து பதிவு போடுங்க. அப்படியே Text அனுப்பினா பதிலாவது அனுப்ப முயற்சி செய்யுங்க :)
அவனவன், தான் ஊருக்குப் போகும் போது, தனக்குக் கட்டுச் சாதம் கட்டிக்கிட்டுப் போவாங்க!:)
ReplyDelete::)))))) )))
மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி, மாமி, அக்கா பெண், அக்கா பிள்ளைகள்-மருமகன்கள்...அண்ணன்-தம்பி...பேரப் பிள்ளைகள்....
ReplyDeleteஇன்னும் குடும்பம்-ன்னு சொல்லி ஒட்டியும் உறவாடியும் உண்டவர் அத்தனை பேரையும் வாள் வீசி வெட்டினார்!:)) உண்டவர் எல்லாம் கண்டம் துண்டம்!!
::)))))
Ippo intha maathiri senjaarunna adutta naal peparla varum. Vijay tv oru nigazhchiye pannuvaanga!sun tv live!
அச்சோ என் ஈசனுக்கு உணவில்லையே என்ற பாசத்தின் உச்சகட்டம் தானே வெறியாக மாறியது.
கலிய நாயனார் திருவடிகளே சரணம்!
கோட்புலி நாயனார் திருவடிகளே சரணம்!
சின்ன பிச்சுவாக் கத்தியால், தன் கழுத்து இரத்தம் குபுகுபு என்று எடுத்தாச்சும் விளக்கில் ஊற்றுவோம் என்று கீறிக் கொள்ள....:)))
ReplyDeleteகலிய நாயனார், talaiyil tee vaitthu kondaathaagave naan padittuvullen.
That’s ok
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ReplyDeleteபெருமாள், ஈசன் மேல் கொண்ட "அன்புடைமையை" வியந்து வியந்து பாடுகிறார் மாணிக்கவாசகர்):))
Thanks
மாயத்தால் வைத்தோம் மறைத்து!!!::))
ReplyDeletemayam - i can't understand this line
தல வழக்கம் போல கலக்கல் கதைகள் ;-))
ReplyDelete\\\மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி, மாமி, அக்கா பெண், அக்கா பிள்ளைகள்-மருமகன்கள்...அண்ணன்-தம்பி...பேரப் பிள்ளைகள்....
இன்னும் குடும்பம்-ன்னு சொல்லி ஒட்டியும் உறவாடியும் உண்டவர் அத்தனை பேரையும் வாள் வீசி வெட்டினார்\\\
இந்த பத்தியை படிக்கும் போது சிட்டிசன் ஆஜீத் ஞாபகம் வருது ;-))))
//இன்றைய அரசியல் தலைவர்கள் பலருக்கும், இந்த நாயன்மார் கதை, ஒரு நல்ல பாடம்//
ReplyDelete;-)))
//எழுத மறந்ததே இப்படி என்றால் நன்றாக எழுதினால் ... அருமை...:)//
அதே KRS ஸ்டைல்...
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅந்த கருணையின் பெயரால் அந்த சுற்றத்தாரை மன்னித்து விட்டிருக்கலாமே? சிவன் சொத்து குல நாசம் என்றால் அது தானாக நடந்தால் சரி; இப்படி விருந்துக்குக் கூப்பிட்டா குல நாசம் செய்வார்கள்?//
என்ன குமரன், இப்படிக் கேள்வி எல்லாம் கேக்கறீங்க? :)
ஸ்வாமி ஓம்கார் தான் உதவிக்கு வர வேண்டும்! :)
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅருட்பெரும்சோதி ஆண்டவனின் ஆலயத்தில் ஓர் இரவு விளக்கில்லையேல் என்னாகும்? அதற்காக தன் உதிரம் கொட்ட வேண்டுமா? இது என்ன வன்றொண்டரை விட வன்மையான பக்தியாக இருக்கிறதே! :-(//
ஹிஹி! அடுத்த கேள்வியா??
அப்படிப் பார்த்தா பல நாயன்மார்கள் கதை இப்படித் தான் இருக்கும்!
* பிள்ளைக் கறி கொடுத்தல்
* சுற்றத்தை அழைத்து வெட்டிப் போடல்
* மலரை முகர்ந்த அரசியின் மூக்கை ஒருவரும், கையைக் கணவரும் அறுத்தல்
* விளக்கு எண்ணெய்க்கு தன் உதிரம் கொட்டல்
* சந்தனத்துக்குப் பதிலாகத் தன் கையைத் தேய்த்தல்
இப்படி பல...இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க? :)
ஆனால் காரணமில்லாமல் நாயன்மார்கள் கதைகள் இப்படி இடம் பெறாதே! என்ன காரணம்-ன்னு நினைக்கறீங்க?
ஒசாமாவிற்கும் இந்த ஆளுக்கும் என்ன வித்தியாசம்? மேல நீங்க சொல்லியிருக்கறதுங்க எல்லாமே அப்படி தான் தெரியுது...
ReplyDeleteபக்திங்கற பேர்ல டெரரிசம் வளர்க்கறது எல்லா மதத்திலும் இருக்கு...
எவ்வளவு உயர்ந்த லட்சியத்திற்காகவும் ஒரு உயிரைப் பறிப்பதை ஏற்க முடியாது... மகாத்மா காந்தி...
//In Love With Krishna said...//
ReplyDeleteஎன்னங்க, கண்ணனைப் போல ஒத்தை ஸ்மைலி-ல சிரிக்கிறீங்க? :)
//ஸ்வாமி ஓம்கார் said...
ReplyDeleteஇதைத்தான் சிவ சொத்து குல நாசம்-னு சொல்றாங்களோ...//
சிவனின் உண்மையான சொத்து நாம் தான் சுவாமி!
நம்மளை அவனிடம் அடையவொட்டாமல்...
நம்மை நாமே அபகரித்துக் கொள்வது = ஆத்மாபகாரம்!
இது தான் சிவன் சொத்தை அபகரித்துக் கொள்வது-ன்னு அடியேன் நினைக்கிறேன்!
மத்தபடி சிவன் "சொத்து", நூறு ஏக்ரா, சிவன் கோயில் பூமாலையை வீட்டுக்கு எடுத்துட்டு வந்தாக் கூட சிவன் சொத்து தான் என்பதெல்லாம் பீதியும் கிளப்பும் பழமொழி என்பதோடு சரி! :)
//எழுத மறந்ததே இப்படி என்றால் நன்றாக எழுதினால் ... அருமை...:)
//
:)
நன்றாக எழுத முயற்சி செய்கிறேன் சுவாமி! :)
என்ன குமரன்? என்ன கடன்? என்ன சீனா ஐயா சொன்னாரு? இப்படி கேள்வி கேட்டு வெளுத்து வாங்கறீங்க? :) உங்க பின்னாடியே வெட்டி வேற வெட்டி வெட்டி வந்திருக்காரு? :))
ReplyDelete//ஸ்ரீதர் நாராயணன் said...
ReplyDeleteஇரண்டு நாயன்மார்களின் கதைகளும் கொஞ்சம் டெரர்ராத்தான் இருக்கு :(//
என்னாங்க ஸ்ரீதர் அண்ணாச்சி? இம்புட்டு ரத்தக் கிளறி நடந்திருக்கு? "கொஞ்சம்" டெர்ரர்-ன்னு கொஞ்சமாச் சொல்றீங்க? :)
ஒரு வேளை நான் சரியா திரைக்கதை எழுதலீயோ? :)
//சிவபக்தி, அன்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கோட்புலி நாயனார் சிறு குழதையையும் விடாது வெட்டினார் என்பது சரியல்ல என்றே தோன்றுகிறது//
திருடித் தின்றவளிடம் பால் குடித்த குழந்தையையும் வெட்டிக் கொன்றார் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று!
நந்தனார் உள்ளே வருவதில் எங்களுக்கு ஆனந்தம் தான்! ஆனால் தீயில் இறங்கி ஜோதி சொரூபம் மின்ன வரவேண்டும் என்பது சிவக்கட்டளை என்று தீட்சிதர்கள் நந்தனாரை வரவேற்றார்கள் என்பது போல மிகைப்படுத்தப்பட்ட ஒன்று! :)
கோட்புலி கொன்றது, அவ்வாறு பிடுங்கித் தின்ற ஒரு கும்பலை! அவ்ளோ தான்! அவர்கள் சுற்றமே ஆனாலும், அதை எல்லாம் பார்க்கவில்லை என்பது தான் நிகழ்வு! மீதியெல்லாம் மிகையான புனைவு என்றே கொண்டுவிடலாம்!
//தொடர்ந்து பதிவு போடுங்க. அப்படியே Text அனுப்பினா பதிலாவது அனுப்ப முயற்சி செய்யுங்க :)//
ஹிஹி!
நீங்க Text அனுப்பிச்சா...நான் Drawing அனுப்பறேன் அண்ணாச்சி! :)
//நரசிம்மரின் நாலாயிரம் said...
ReplyDeleteIppo intha maathiri senjaarunna adutta naal peparla varum. Vijay tv oru nigazhchiye pannuvaanga!sun tv live!//
ஹா ஹா ஹா
சன் டிவி இதையெல்லாம் லைவ் பண்ண மாட்டாங்க! கொஞ்சம் கிளு கிளு இருந்தால் மட்டுமே லைவ் ஆகும்! :)
//அச்சோ என் ஈசனுக்கு உணவில்லையே என்ற பாசத்தின் உச்சகட்டம் தானே வெறியாக மாறியது//
ஈசனுக்கு மட்டுமல்ல! அவன் தொண்டில் அடியார்களும் பஞ்சத்தால் வாடி இறக்க, இந்தச் செல்வந்தர்களே திருடிச் சாப்பிட்டால் எப்படி என்ற கோபமும் தான்...கோட்புலி ஒரு சேனாதிபதி என்பதையும் மறக்காதீர்கள்!
//
ReplyDeleteகலிய நாயனார், talaiyil tee vaitthu kondaathaagave naan padittuvullen.
That’s ok//
இல்லீங்க!
நீங்கள் சொல்வது கலிய நாயனார் அல்ல!
அவர் கணம்புல்ல நாயனார்!
கணம் புல்லை விற்று அதில் கிடைக்கும் வருவாயில் விளக்கேற்றியவர்! கணம் புல் விற்காது போக, புல்லையே ஏற்றியவர், அடுத்த நாள் ஒன்றுமே இல்லாமல், தலை முடியையே வைத்து எரித்தவர் இவர்!
//மாயத்தால் வைத்தோம் மறைத்து!!!::))
ReplyDeletemayam - i can't understand this line//
மாயத்தால் வைத்தோம் மறைத்து - பற்று என்னும் மாயத்தால் உன்னை மறைத்து வைத்தோம்!
அன்பு என்னும் போர்வையை உன் மேல் வீசிப் பிடித்து, நெஞ்சத்துள் அடைத்து வைத்தோம்!
இது காரைக்கால் அம்மையார் பதிகம்!
உலகமே மாயை! சம்சார துக்கம்! பற்றை விட வேண்டும்! ஞானமே சிறந்தது-ன்னு எல்லாம் வேதாந்தம்-அத்வைதம் பேசத் தலைப்பட்ட காலம்! அதை வெளிப்படையாக மறுத்துரைக்காது, மாயம்-மாயைன்னு சொல்றீங்களே...அதே பற்றால்-மாயத்தால் (ஞானத்தால் அல்ல) அவனை மறைத்து வைத்து விட்டோம் பாருங்கள் என்ற தொனியில் பேசுகிறார் அம்மையார்!
தன் வாழ்வு பறி போனவராச்சே! அதன் சாயலும் ஏக்கமும் தொனிக்க, பற்று என்பதை மாயம்-ன்னு தானே சொல்றீங்க! நாங்கள் பற்றை விடவில்லை! ஆனால் அதே பற்றால்/மாயத்தால் அவனைப் பிடித்து மறைத்து வைத்து விட்டோம்! இனி அவனை யார் காண்பார்? அன்பென்னும் போர்வைக்குள் வந்து தான் நீங்களும் காண வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் அம்மையார்!
//கோபிநாத் said...
ReplyDeleteதல வழக்கம் போல கலக்கல் கதைகள் ;-))//
அது என்னா கோபி..."வழக்கம் போல்"? :)
//இந்த பத்தியை படிக்கும் போது சிட்டிசன் ஆஜீத் ஞாபகம் வருது ;-))))//
அடப் பாவி! நக்மா ஞாபகம் வரலையா? :)
//Logan said...
ReplyDeleteஅதே KRS ஸ்டைல்...//
:)
ஒரு ஸ்டைலும் இல்லை! Colloquial ஸ்டைல் தான் இருக்கு லோகன்! :)
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஒசாமாவிற்கும் இந்த ஆளுக்கும் என்ன வித்தியாசம்?//
இந்த "ஆளா"? :)
நாயன்மார் மேல் என்ன பாலாஜி இம்புட்டு காரம்?
அதே வெட்டி ஸ்டைல்! :)
//ஒசாமாவிற்கும் இந்த ஆளுக்கும் என்ன வித்தியாசம்?//
ஓசாமா அப்பாவி உயிர்களைக் கொல்லுவார்!
கோட்புலி நாயனார் அப் பாவி உயிர்களைக் கொன்றார்! :)
//மேல நீங்க சொல்லியிருக்கறதுங்க எல்லாமே அப்படி தான் தெரியுது...
பக்திங்கற பேர்ல டெரரிசம் வளர்க்கறது எல்லா மதத்திலும் இருக்கு...//
டெரரிசமா?
இந்தக் கதையில் டெரரிசம் எங்கே வந்தது?
தற்கொலைப் படை எல்லாம் அனுப்பி, பொது மக்களுக்கு பாம் வைச்சா மாதிரி தெரியலையே!
//எவ்வளவு உயர்ந்த லட்சியத்திற்காகவும் ஒரு உயிரைப் பறிப்பதை ஏற்க முடியாது... மகாத்மா காந்தி...//
உயர்ந்த லட்சியமாகிய விடுதலைக்காக, தடையாய் நிற்கும் உயிர்களைப் போராட்டத்தில் பறிப்போம்...நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்! :)
//பக்திங்கற பேர்ல டெரரிசம் வளர்க்கறது எல்லா மதத்திலும் இருக்கு..//
ReplyDeleteபக்திங்கிற பேர்-ல மட்டும் தானா?
இனம், மொழி-ங்கிற பேர்ல டெரரிசம் வளர்க்கலையா?
இன விடுதலை, மொழி மேன்மை, சுய மரியாதை, இன மானம் என்றெல்லாம் கூட, அண்மையில் கூட வளர்க்கப்பட்டதே! அது "டெரரிசத்தில்" வராதா? :)
கோட்புலி நாயனார் மட்டும் தான் "டெரரிஸ்ட்டா"? :)
அருளாளர்களை டெரரிஸ்ட் என்று சொன்னாலும் அவர்கள் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதால் முகாந்திரமே இல்லாமல் அவர்களைச் சொல்லி விடுவதா? :(
This comment has been removed by the author.
ReplyDelete@வெட்டி பாலாஜி
ReplyDelete* கோட்புலி நாயனார் காலம் கிட்டத்தட்ட கிபி ஏழாம் நூற்றாண்டு! அன்றைய கால கட்டத்தில், இது போன்ற தண்டனைகள் வழக்கத்தில் உண்டு என்று நாம் அறிவோம்! இன்றைய கருத்துச் சட்டத்தை அன்றைய ஆட்கள் மேல் பாய்ச்ச முடியாது! You can never go back into History and apply today's correction for yesterday's mistake!
* மேலும் கோட்புலி ஒரு சேனாபதியும் கூட! தண்டிக்கும் அதிகாரமும் அவர் கையில் இருந்தது!
* அவர் பொது மக்களைத் தண்டிக்கவில்லை! பாம் வைத்துக் கொல்லவில்லை!
தன் சொத்தைப் பொதுச் சொத்துக்கு எழுதி வைத்த பின், அந்தப் பொதுச் சொத்தைத் தன் சொத்தாக்கிக் கொள்ள நினைத்தவர்களையே (அதுவும் தன் குடும்பத்தையே) தண்டித்தார்!
* அப்படித் தண்டிக்கும் போது, தன் உறவினர்கள், மாமா-மச்சான் என்று பேதம் பார்க்கவில்லை! ஈசன் பணியில், அடியவர் பணியில்...பேதம்/சுயநலம்/குடும்ப முனைப்பு பார்க்காமல் நடந்து கொண்டார் - இதுவே அவர் வாழ்வின் பாடம்! அவ்ளோ தான்!
* தன்னை நாயன்மார் என்றெல்லாம் கோட்புலி சொல்லிக் கொள்ளவில்லை! அது பின்னாளில் ஆக்கப்பட்டது! His was an immediate response to the mis-deeds of his own family!
* எவ்வளவு உயர்ந்த லட்சியத்திற்காகவும் ஒரு உயிரைப் பறிப்பதை ஏற்க முடியாது-ன்னு சொல்ற நீங்க...அப்படிப் பார்த்தால் இராஜராஜ சோழன் முதற்கொண்டு பலரையும் தான் "டெரரிஸ்ட்" என்று சொல்ல வேண்டும்! :)
அரசியல்-போர் என்றால் மட்டும் விதிமுறைகள் வேறாகி விடுமா என்ன?
எந்த "உயர்ந்த லட்சியத்துக்காக" இராஜேந்திர சோழன் சாளுக்கிய கைக் குழந்தையைத் தூக்கி எறிந்து கொன்றான்? கம்பு பிடித்து வந்த சின்னஞ் சிறு பிள்ளையின் கையை வெட்டினான்?
அரசியல் என்றால் உங்களால் பேச முடியாது! கேட்டால் அது அப்படித் தான் என்று சொல்லி விடுவீர்கள்!
ஆனால் "பக்தி" என்பதால் மட்டும், இங்கு உங்கள் அளவைகளைக் கொண்டு அளக்க ஓடோடி வருகிறீர்கள்!
நான்...பக்தி என்ற போர்வையில், மதம் என்ற வெறியாட்டத்தில், இந்நாளில் நடத்தும் அராஜகங்களைக் கண்டிக்கிறேன்! அவற்றில் சுயநலம் ஒளிந்துள்ளது! பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிப்பது!
ஆனால் ஏழாம் நூற்றாண்டுக்குப் போய், அதிலும் சுயநலம் இல்லாத ஒரு செயலில், பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்காத ஒரு செயலில், மதவெறி போன்றவற்றைப் பரப்பாத ஒரு செயலில்...ஒரு சேனாபதி செய்த செயலில்...
அது சிவ பக்தியின் பால் செய்தது என்ற ஒரே காரணத்துக்காக...
நாயன்மாரை, "டெரரிஸ்ட்" என்றும், "இந்த ஆள்" என்றும், "மேல நீங்க சொல்லியிருக்கறதுங்க" என்ற அஃறிணையிலும்...நீங்கள் முத்திரை குத்துவது பெரும் தவறு!
அடியார்கள் பற்றிய உங்கள் சொற் பிரயோகம் சரியானது அல்ல! எனது கண்டனங்கள்!
////ஒசாமாவிற்கும் இந்த ஆளுக்கும் என்ன வித்தியாசம்?//
ReplyDeleteஓசாமா அப்பாவி உயிர்களைக் கொல்லுவார்!
கோட்புலி நாயனார் அப் பாவி உயிர்களைக் கொன்றார்! :)//
சரி. இனி அனைவருக்கும் மரியாதைக் கொடுத்துப் பேசுகிறேன். சத்தமாகப் பேசுவதால் மட்டும் நான் பேசுவது நியாயமில்லை என்று ஆகிவிடுகிறது :)
அப்"பாவி" என்பது அவர் அவரைப் பொறுத்தது. ஒசாமாவைக் கேட்டால் அவருக்கும் ஒரு நியாயம் இருக்கும். அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசு தான் எங்களை சுறண்டுகிறது. அவர்களின் வரிப் பணத்தில் வாங்கிய குண்டுகள் தான் எங்கள் மீதுப் போடுகிறார்கள். அதனால் அப்பாவி, அப் பாவி எல்லாம் செல்லாது.
////மேல நீங்க சொல்லியிருக்கறதுங்க எல்லாமே அப்படி தான் தெரியுது...
ReplyDeleteபக்திங்கற பேர்ல டெரரிசம் வளர்க்கறது எல்லா மதத்திலும் இருக்கு...//
டெரரிசமா?
இந்தக் கதையில் டெரரிசம் எங்கே வந்தது?
தற்கொலைப் படை எல்லாம் அனுப்பி, பொது மக்களுக்கு பாம் வைச்சா மாதிரி தெரியலையே!//
தற்கொலைப் படை அனுப்பி பாம் வெச்சி கொன்றால் தான் டெரரிசமா? ஜெனரல் டயர் செய்ததைப் போல படை வீரர்களை வைத்து, வெளியே செல்ல விடாமல் கொலை செய்தாலும் அது டெரரிசம் தான். உடனே துப்பாக்கி, பீரங்கி எல்லாம் பயன்படுத்தினால் தான் டெரரிசம் என்று சொல்லிவிடாதீர்கள். பொது மக்களைக் கொன்றால் தான் டெரரிசம், சொந்தக் காரர்களை கொன்றால் இல்லை என்று ஆகிவிடாது. மதத்தீவிரவாதிகளுக்கு சொந்த பந்தம் எதுவும் இல்லை என்பது தான் இங்கே நிருபனமாகியிருக்கிறது.
////எவ்வளவு உயர்ந்த லட்சியத்திற்காகவும் ஒரு உயிரைப் பறிப்பதை ஏற்க முடியாது... மகாத்மா காந்தி...//
ReplyDeleteஉயர்ந்த லட்சியமாகிய விடுதலைக்காக, தடையாய் நிற்கும் உயிர்களைப் போராட்டத்தில் பறிப்போம்...நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்! :)//
அதனால் தான் பாரத தேசம் மகாத்மாவின் பின்னால் நின்றது. அவர் தேசத் தந்தை ஆனார்.
//பக்திங்கிற பேர்-ல மட்டும் தானா?
ReplyDeleteஇனம், மொழி-ங்கிற பேர்ல டெரரிசம் வளர்க்கலையா?//
ஆமாம். ஆனால் இந்த பதிவு பக்தி என்ற பெயரில் டெரரிசம் வளர்க்கத்தான்.
கோட்புலி நாயனார் மட்டும் தான் "டெரரிஸ்ட்டா"? :)
ReplyDelete//
இல்லை. நிறையப் பேர் இருக்கலாம். ஆனால் இந்தப் பதிவு பக்தி என்ற போர்வையில் தீவிரவாதத்தை வளர்ப்பது தான்.
//கோட்புலி நாயனார் காலம் கிட்டத்தட்ட கிபி ஏழாம் நூற்றாண்டு! அன்றைய கால கட்டத்தில், இது போன்ற தண்டனைகள் வழக்கத்தில் உண்டு என்று நாம் அறிவோம்! இன்றைய கருத்துச் சட்டத்தை அன்றைய ஆட்கள் மேல் பாய்ச்ச முடியாது! You can never go back into History and apply today's correction for yesterday's misடகெ//
ReplyDelete:)
இதற்கு முன்பே ஒரு பெண் "தேரா மன்னா செப்புவதுடையேனு" மன்னனையேக் கேள்வி கேட்டது தமிழ் மண்ணில் நடந்துள்ளது. அதனால் அந்த காலத்தில் நீதி முறை எல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.
முறையாக விசாரித்து தண்டிப்பது வேறு, வீட்டிற்கு வரவழைத்து கதவை மூடி, குழந்தைகள், பெண்கள் என்றுக் கூட பார்க்காது கொலை செய்வது வேறு.
சொந்த பந்தம் என்று பார்க்கவில்லை என்பதை விட கேலிக் கூத்தான ஒன்று இல்லை. நீதிமன்றத்திற்கு போய் பார்த்தால் பெரும்பாலான வழக்குகள் சொந்த பந்தத்திற்குள் தான்.
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteசரி. இனி அனைவருக்கும் மரியாதைக் கொடுத்துப் பேசுகிறேன்//
:)
அட! என்ன பாலாஜி நீங்க?
நீங்க மரியாதை "தெரிந்தவர்" என்பது எங்களுக்குத் தெரியாதா?
சுக்ரீவன் = மரியாதை "தெரிந்தவர்" :)
அனுமன் = மரியாதை "கொடுப்பவர்" :)
//சத்தமாகப் பேசுவதால் மட்டும் நான் பேசுவது நியாயமில்லை என்று ஆகிவிடுகிறது :)//
:)
அட...நீங்க பேசறதே நியாயம் இல்லீன்னா...அப்போ யார் பேசறது தான் நியாயமாம்? :)
நேர்மை-ன்னா ஹமாம்!
நியாயம்-ன்னா பாலாஜி! :))
என்ன, இன்னிக்கு பந்தல்-ல இப்படி வான வேடிக்கை நடக்குது? :)
பாவம் ரங்கன் அண்ணா! இத்தினி நாள் நரசிம்மா நரசிம்மா-ன்னு Quiet-ஆ இருந்துச்சி!
நான் ஏதோ தோனி துலங்கி ஒரு பதிவு போட்ட நேரம்...Vetti Back to Form :)
//ஆனால் ஏழாம் நூற்றாண்டுக்குப் போய், அதிலும் சுயநலம் இல்லாத ஒரு செயலில், பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்காத ஒரு செயலில், மதவெறி போன்றவற்றைப் பரப்பாத ஒரு செயலில்...ஒரு சேனாபதி செய்த செயலில்...//
ReplyDeleteஅவர் செய்தது கொலை. நீங்கள் செய்வது மதவெறியைப் பரப்புவது. சுயநலம் இல்லை என்பதால் ஒரு காரியம் மதிப்பை பெற்றுவிடாது. பல கோடிகள் வைத்திருக்கும் ஒசாமா ஓடி ஒளிந்து வாழுவதில் என்ன சுயநலம் இருக்கிறது என்று நீங்கள் வாதாட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்காத செயலா???? பல குடும்பங்களை கொன்று குவித்தது பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்காத செயலா? இதற்குப் பெயர் தான் தீவிரவாதத்தை பரப்புவது.
சேனாபதி விசாரித்து தண்டனை வழங்குவது வேறு.. வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து கொலை செய்வது வேறு. அவர் மதவெறியைப் பரப்பவில்லை. நீங்கள் தான் மதவெறியைப் பரப்புகிறீர்கள்.
இந்தப் பதிவைப் படித்து எவராவது நாளை பிரசாதத்தை படைப்பதற்கு முன் சாப்பிட்டது என்று தன் குழந்தையை, "பக்தியின்" காரணமாக, சுயநலமில்லாமல், சமுதாயத்தை பாதிக்காமல், கொன்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
ReplyDeleteஅவரையும் கோவிலில் வைத்து பூஜீப்பீர்களா?
//இந்தப் பதிவைப் படித்து எவராவது நாளை பிரசாதத்தை படைப்பதற்கு முன் சாப்பிட்டது என்று தன் குழந்தையை, "பக்தியின்" காரணமாக, சுயநலமில்லாமல், சமுதாயத்தை பாதிக்காமல், கொன்றால் ஏற்றுக் கொள்வீர்களா?//
ReplyDeleteபகத்சிங் படத்தைப் பார்த்து, எவராவது நாளை, "ஊழல் ஒழிப்பு" காரணமாக, "நல்லாட்சியின்" பொருட்டு, சமுதாயத்தைப் பாதிக்காமல், திமுக அரசின் அதிகாரிகளையோ, அதிமுக அரசின் அதிகாரிகளையோ கொன்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
//அவர் மதவெறியைப் பரப்பவில்லை. நீங்கள் தான் மதவெறியைப் பரப்புகிறீர்கள்//
"நீங்கள்" என்று நீங்கள் குறிப்பிடுவது யாரை?
* இந்தப் பதிவு எழுதியவரையா?
* இங்கு அருமை என்று பின்னூட்டிய வாசகர்களையா?
* இந்தக் கதைகளை ஏடுகளில் இருந்து எடுத்த உ.வே.சா அவர்களையா?
* இந்த நிகழ்வை முதலில் சொல்லி, கோட்புலியை நாயன்மார் பட்டியலில் வைத்த, சமயக் குரவர் நால்வருள் ஒருவரான, சுந்தரமூர்த்தி நாயனாரையா?
* அல்லது இப்படிப்பட்ட "தீவிரவாதியை" அடியார் என்று ஏற்றுக் கொண்ட சிவபெருமானையா?
- யார் மதவெறியை இங்கு பரப்பியது?
//ஆமாம். ஆனால் இந்த பதிவு பக்தி என்ற பெயரில் டெரரிசம் வளர்க்கத்தான்//
ReplyDelete@பாலாஜி
மதவெறி பரப்புதல் என்பது இ.பி.கோ சட்டப்படி குற்றம்!
எனவே மதவெறி பரப்பும் என் மீது, அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனே புகார் அளிக்கவும்! அது வரை இந்தப் பதிவை அழிக்காது, சாட்சிக்கு வைத்து இருக்கிறேன்!
மேலும்...தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் வாயிலாக மதவெறி பரவுதல் பெரும் தீங்கை விளைவிக்கும்! Pl report this post as objectionable and to be removed with immediate effect!
//அதனால் தான் பாரத தேசம் மகாத்மாவின் பின்னால் நின்றது. அவர் தேசத் தந்தை ஆனார்//
ReplyDeleteபாரத தேசம் மகாத்மாவைத் "தேசத் தந்தை" என்று ஆக்கி இருக்கலாம்!
ஆனால் அதே பாரத தேசம், நேதாஜியை "டெரரிஸ்ட் தந்தை" என்று இதுவரை வர்ணிக்கவில்லை!
//சுயநலம் இல்லை என்பதால் ஒரு காரியம் மதிப்பை பெற்றுவிடாது//
என்றோ "தீவிரம்" இருந்தது என்பதால் மட்டும் ஒரு அடியவர், ஒரு தேசத் தலைவர், மதிப்பை இழந்தும் விடமாட்டார்!
//ஜெனரல் டயர் செய்ததைப் போல படை வீரர்களை வைத்து, வெளியே செல்ல விடாமல் கொலை செய்தாலும் அது டெரரிசம் தான்//
ReplyDeleteAgreed!
But when the same British Officers were locked inside the office and devastated by Indians - அது "டெரரிசம்" என்று அழைக்கப்படுவதில்லை! மீரட் முதல் சுதந்திரப் போர் என்று தான் அழைக்கப்படுகிறது!
Each action
1. starts from a Motive and
2. ends with an audience
* In Jallianwala Bagh, Motive = insult & suppress, Audience = peaceful innocent demonstrators!
* In Meerut, Motive = freedom and oppose tyranny, Audience = cunning and wild british officers
* In kOtpuli naayanar, Motive = accountability for trespassing public good done by Siva perumaan's institution, Audience = Stealing & Greedy relatives, who caused the deaths of other public!
நோக்கத்தின் பொருட்டும், நடந்த காலத்தின் பொருட்டும்...நாயன்மாரின் கதை...
"டெரரிசம்" என்ற உங்கள் தான் தோன்றித்தனமான "தீர்ப்புக்குள்" வராது என்பது மட்டுமே அடியேன் வாதம்!
மற்றபடி, நாயன்மார், அவர்களைக் கொல்லாது, வேறு வழியில் தண்டித்து இருக்கலாம்,
அல்லது அத்தனை பேரும் செய்த கொள்ளைக்குக் கழுவாயாக, கூலி இல்லாமல், சிவாலயத்தில் அன்னதான வேலையில் ஈடுபடுத்தி இருக்கலாம் என்பது தான் என்னளவில் மிகவும் ஏற்புடைத்த ஒன்றாகும்!
ஆனால் என்ன செய்வது? இதுவே நாயன்மாரின் கதை! அதை மாற்றி எழுத முடியாதே!
ReplyDeleteநாயன்மாரின் குடும்பச்சுயநலம் இல்லாத பணியை ஒரு உதாரணமாகக் கொள்ளும் அதே வேளையில், அவரைப் போல் வீறு கொண்டு பின்னர் வேதனைப்படாது இருக்கவும் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்!
அதனால் தான் பதிவில்,
* கோட்புலி கொன்றதை மட்டும் சொல்லாமல்
* பிற்பாடு தனிமையில் கிளையின்றி அழுததையும் சொல்லி உள்ளேன்!
சமய எதிரிகளை வீழ்த்தினார் என்பதற்கெல்லாம் அவரை நாயன்மார் என்று சொல்லவில்லை! Hero Worship/வீர வணக்கமும் செய்யவில்லை! அவர் "பாரபட்சமின்மை" மட்டுமே இங்கு நோக்குபொருள்!
அதனால் தான் பதிவில்...
* "சைவ-பக்தி" என்று இது சமய பக்தியாக இது போய்விடக் கூடாது!
* "சிவ-அன்பு" என்ற எல்லையில் மட்டுமே இது நிகழ்ந்தது! என்றும் எழுதினேன்!
* இதை வைத்துக் கொண்டு மத அடிப்படைவாதம் பேச முடியாது என்பதற்காகத் தான் அதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னேன்!
வெளியே காணலாகும் நாயன்மார்கள் கதைப் புத்தகங்களிலோ...
அல்லது கிழக்கு பதிப்பகத்திலோ...
இப்படியெல்லாம், "சைவப் பிடிப்பு வேறு, சிவ அன்பு வேறு" என்று கூடக்கூட எடுத்துச் சொல்லித் தான் நாயன்மார் வரலாறு சொல்லி உள்ளார்களா??? - அவர்களையோ அல்லது உங்கள் அடிமனத்தையோ விசாரித்துக் கொள்ளவும்!
//பகத்சிங் படத்தைப் பார்த்து, எவராவது நாளை, "ஊழல் ஒழிப்பு" காரணமாக, "நல்லாட்சியின்" பொருட்டு, சமுதாயத்தைப் பாதிக்காமல், திமுக அரசின் அதிகாரிகளையோ, அதிமுக அரசின் அதிகாரிகளையோ கொன்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
ReplyDelete//
Perfect...
Bhagath Singh was charged for Murder and he was hanged. The same will be applied to the person who does so...
But the person who murdered people is considered sacret and kept inside the temple.
//வெட்டிப்பயல் said...
ReplyDeletePerfect...
But the person who murdered people is considered sacret and kept inside the temple//
Perfect
But the person who was charged for murder named Bhagat Singh, is considered a devout nationalist and kept in the pages of Indian History! (even though will not be followed in current day standards)
இது போன்ற கதைகளை, இன்றைய நிலைக்கு ஏற்றவாறு காட்டி, எதை மையப்படுத்த வேணுமோ, அதை மட்டுமே மையப்படுத்த வேணும்!
ReplyDeleteநேதாஜியின் வழி இன்றைக்குப் பொருந்தாது இருக்கலாம்! ஆனால் அதற்காக நேதாஜியின் வரலாற்றையே இன்று பேசவோ/ எழுதவோ/ திரைப்படம் எடுக்கவோ தேவை இல்லை என்று சொல்வீர்களா?
நேதாஜி படம் எடுத்தால், அதைப் பார்த்து நக்சலைட்டுகள் இன்னும் கெட்டுப் போவார்கள் என்றா சொல்வீர்கள்? :)
அல்லது பகத்சிங் பற்றி இன்று எழுதுபவன் எல்லாம் "டெரரிசம் வளர்க்கிறான்" என்று சொல்வீர்களா?
தயவு செய்து அடியவர்களுள் ஒருவரான நாயன்மாரை "டெரரிஸ்ட்"
என்று...
உங்கள் தான்தோன்றித்தனமான பதிவுப் பேனாவால் தீர்ப்பு எழுதாதீர்கள்...
என்று கேட்டுக் கொள்கிறேன் Your Honor, Justice Vettipayal!
//"நீங்கள்" என்று நீங்கள் குறிப்பிடுவது யாரை?
ReplyDelete* இந்தப் பதிவு எழுதியவரையா?
* இங்கு அருமை என்று பின்னூட்டிய வாசகர்களையா?
* இந்தக் கதைகளை ஏடுகளில் இருந்து எடுத்த உ.வே.சா அவர்களையா?
* இந்த நிகழ்வை முதலில் சொல்லி, கோட்புலியை நாயன்மார் பட்டியலில் வைத்த, சமயக் குரவர் நால்வருள் ஒருவரான, சுந்தரமூர்த்தி நாயனாரையா?
//
முதல் மத தீவிரவாதி இந்த கதையை கேட்டு நாயன்மார் பட்டியலில் வைத்தவர். ஏடுகளில் இருந்து எடுத்து எழுதியவரை குறை சொல்ல முடியாது. இங்கு பின்னூட்டியவர்களையும் எதையும் சொல்ல முடியாது. கனி இருப்ப காய் கவர்ந்தது உங்கள் தவறு. அதையும் அழகு தமிழால் நியாயப்படுத்துவது மிக தவறு.
அதைப் போல் இதைப் படித்தது என் தவறு.
//அல்லது இப்படிப்பட்ட "தீவிரவாதியை" அடியார் என்று ஏற்றுக் கொண்ட சிவபெருமானையா?//
சிவபெருமான் யாரை அடியவர்னு ஏற்றுக் கொண்டார் என்று யாரிடமும் லிஸ்ட் இல்லை.
கரும்பின் சுவையை உணரத்தான் முடியும்.
ReplyDeleteமலரின் வாசனையை உணரத்தான் முடியும்.
ஈசனையும் அவரது அடியவர்களின்(நாயன்மார்கள்) பக்தியையும் உணரத்தான் முடியும்.
வார்த்தையால் விவரிக்க முடியாது.
"எள்ளும் கரும்பும் ஏழு மலரும் காயமும் போல்
உள்ளும் புறமும் நின்றது உற்றறிவதெக்காலம்?"
பத்திரகிரியார்.
"எங்கும் உள்ள ஈசன் எம்முடல்புகுந்தபின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்றே அனுகிளார்"
சிவவாக்கியார்
//முதல் மத தீவிரவாதி இந்த கதையை கேட்டு நாயன்மார் பட்டியலில் வைத்தவர்//
ReplyDeleteதம்பிரான் தோழரான சுந்தர மூர்த்தி நாயனாரே! நீரே முதல் "டெரரிஸ்ட்"! அவ்வண்ணமே ஆகுக!
//கனி இருப்ப காய் கவர்ந்தது உங்கள் தவறு//
வாழைப்பழம் இருக்க, வாழைக்காயை இனி யாருமே வாங்க வேண்டாம்! :)
//அதையும் அழகு தமிழால் நியாயப்படுத்துவது மிக தவறு//
தமிழ் அழகு மட்டுமல்ல! அறமும் கூட!
அநியாயத்தைத் தமிழால் மூடி வைத்தாலும், அது நெடுநாள் நில்லாது!
//அதைப் போல் இதைப் படித்தது என் தவறு//
உங்கள் புரிதலில் தவறு!
உங்கள் படித்தலலில் அல்ல!
சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு தீர்ப்பு மட்டுமே எழுதுவேன் என்ற கருத்து கந்தசாமி மனோநிலையில் படித்தால் இதே கதி தான்!
தீர்ப்பு எழுதத் துடிக்கும் அதே கரம், தவறைச் சரி செய்யவும்...சிறு பங்காவது ஆற்ற வேண்டும்!
உங்களுக்குத் தார்மீகம்/பொறுப்பு என்ற ஒன்று இருந்தால்,
வெறுமனே பதிவு வீரம் காட்டாமல்...
* இந்தப் பதிவை "Objectionable" என்று திரட்டியில் Flag செய்யுங்கள்!
* "தீவிரவாதத்தைத்" தூண்டியதாக இந்தப் பதிவை எழுதியவர் மேல் காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்!
* தீவிரவாத நூல்களை அச்சிடுவதாக கிழக்கு பதிப்பகம் மேல் புகார் தெரிவியுங்கள்!
குறைந்த பட்சம், இது போன்ற நூல்களை இனி அச்சிட வேண்டாம் என்று கிழக்கு பதிப்பகத்தாருக்கு முன் வையுங்களேன் பார்ப்போம்!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//உண்மையான பக்தி நாக்க வெட்டிக் கொண்டா...தலைய வெட்டிக் கொண்டான்னா கேக்கும்? அதுக்குப் பேரு பக்தியா. உண்மையான பக்தி என்ன தெரியுமா செய்யும். அது உண்மையிலேயே ராமர் பாலம்னு நம்புனா...அதுல விழுகுற வெட்டைத் தன்னோட கழுத்த மொதல்ல வாங்கும்//
ஜிரா
நீங்கள் சொல்வது மிகவும் சரி!
ஓகை ஐயா, இங்கே பக்தியில் யாரும் தாழ்ச்சி, உயர்ச்சி காணவில்லை என்றே நினைக்கிறேன்!
தொன்று தொட்டு இன்று வரை பக்தி என்பது கருணையுடன் சேர்ந்தே தான் வந்திருக்கு. அதனால் தான் இன்றும் நிலைத்திருக்கு!
திருவரங்கத்தில் அரங்கனைக் காக்க தன் மீது தான் அடி தாங்கிக் கொண்டார்கள் பக்தியாளர்கள். நாவுக்கரசர் கல்தூண் கட்டித் தன்னை மூழ்கடித்த அரசனை மாறுகால் மாறுகை வாங்கு என்றெல்லாம் சொல்லவில்லை! :-)
அதைத் தான் ஜிரா இங்கு குறிப்பிடுகிறார். பக்தியில் காட்டுமிராண்டித்தனமும் அடாவடித்தனமும் துளி கூடச் சேரவே சேராது! பக்தியே தோற்கும் நிலை வந்தால் கூட, நோற்கும் குணம் அதை விட்டுப் போகவே போகாது!
அதனால் தான் அரசர்கள் போய், மொகாலாயர்கள் வந்து, ஆங்கிலேயர் வந்து, இன்று டிஸ்கொத்தே வந்தாலும் கூட, பக்தி உள்ளம் என்பது அனைவரும் மதிக்கத்தக்க ஒன்றாய் உள்ளது!
எனவே பக்திப் போர்வையில், இது போன்ற சில வீராவேசங்களை அனுமதித்தால் நாளைய தலைமுறைக்கு ரத்தம் தான் மிஞ்சும்!
ராமர் பாலம் போனால் எம்பெருமான் இன்னொரு ராமவதாரம் எடுத்து மீண்டும் பாலம் கட்டிக் கொள்வார்! ஆனால் தலைமுறைக்கு பக்தியும் கருணையும் இல்லாது போய் விட்டால் மிகவும் கடினம்! ராமனின் சிந்தனையே பலரின் மனத்தை விட்டு நீங்கி விடும்! கருணா மூர்த்தி ராமனைக் காவு கொடுத்து விட்டு, அவன் பாதுகைகளுக்கும் பாலங்களுக்கும் கோவில் கட்டி ஒன்றும் வரப் போவதில்லை!
இந்துத்துவ அமைப்புகள் இதை மனத்தால் உணர்ந்தால், போராட்டத்துக்கு வேறு பல நல் வழிகளை நாடுவார்கள்!
பாலாஜியின் இந்தப் பதிவு காமராசரைக் கொண்டு கலைஞரை மட்டம் தட்ட எல்லாம் இல்லை!
கலைஞர் நா காத்திருந்தால் நெருப்பு பல இடங்களுக்குப் பரவாமல் இருந்திருக்கும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இப்பதிவு! அவ்வளவே!
பாருங்கள், இப்போது கலைஞர் பேச, அவர்கள் இன்னும் தீவிரவாதம் பேச, பதிலுக்கு இவர்கள் கல்வீச்சு, கலாட்டா என்று இறங்க,....
இப்படியே பரவிக் கொண்டு தான் போகுது...தவிர ஆக்கப்பூர்வமாய் ஒன்றும் கிடையாது, இரண்டு தரப்புக்குமே!
//
Can you pls explain what KARUNAI means in your comment?
This is from your comment in
http://vettipaiyal.blogspot.com/2007/09/blog-post_22.html
பக்தியில் காட்டுமிராண்டித்தனமும் அடாவடித்தனமும் துளி கூடச் சேரவே சேராது! பக்தியே தோற்கும் நிலை வந்தால் கூட, நோற்கும் குணம் அதை விட்டுப் போகவே போகாது!
ReplyDeleteWhat does this mean?
I think the discussion is still going on. Let us discuss on the action item after that.
ReplyDeleteதொன்று தொட்டு இன்று வரை பக்தி என்பது கருணையுடன் சேர்ந்தே தான் வந்திருக்கு. அதனால் தான் இன்றும் நிலைத்திருக்கு!
ReplyDelete:))))))))))))))))))))))))))))))))))))))))))
என் மனதிற்கு உகந்த அடியவர்களிடம் மட்டும் தான் கருணை செய்வேன். என் பெயரை பயன்படுத்தி ஏமாற்றியவர்களிடம் கருணை இல்லை. அப்படி தானே? குழந்தைகள் பெண்கள் என்று கூட பாராமல் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து (சிறந்த ப்ளானிங்) கதவை மூடி கொலை செய்பவர் மனதில் கருணை என்பது சிறிதும் இல்லை.
ReplyDelete//தொன்று தொட்டு இன்று வரை பக்தி என்பது கருணையுடன் சேர்ந்தே தான் வந்திருக்கு. அதனால் தான் இன்றும் நிலைத்திருக்கு//
அப்படியென்றால் இங்கே கருணையில்லாதது பக்தி இல்லை. அப்படி ஒரு கொலைகாரன் அடியவரும் இல்லை.
//இன்னொரு முறை ஆழமாகப் பதிக்கிறேன்: "பக்தியில் காட்டுமிராண்டித்தனமும் அடாவடித்தனமும் துளி கூடச் சேரவே சேராது!"//
ReplyDeleteபெற்றவர்கள் செய்த குற்றத்திற்கு பிள்ளைகளையும் சேர்த்து கொள்வது காட்டுமிராண்டித்தனமா இல்லையா?
Ha Ha Ha! Balaji is now really exploring! :)
ReplyDelete//Can you pls explain what KARUNAI means in your comment?//
கருணை இன்மை = கோட்புலி நாயனாரின் உறவினர்கள், ஊரில் அடியவர்களும் மற்றவர்களும் பஞ்சத்தால் சாக...தன் சொந்தக்காரன் கோட்புலி முன்பு கொடுத்த நன்கொடை தானே என்று, அதைத் திருடி வந்து, தாங்கள் மட்டும் தின்றது!
கருணை இன்மை = இவ்வாறு செய்த உறவினர்களை, கோட்புலி திரும்பி வந்து விளக்கம் கேட்ட போது, எடுத்ததும் இல்லாமல் எகத்தாளமாய்ப் பேசியது!
கருணை இன்மை = இதைப் பொறாது, ரெளத்திரம் பழகு என்று, அவசரப்பட்டு அத்தனை பேரையும் கொன்று போட்டது! "பாரபட்சம் பாராமை" என்று சொல்லலாமே அன்றி, இது கருணை இல்லை!
* கருணை = பல அடியவர்கள் பஞ்சத்தால் இறக்க, தன் குடும்பம் பிடுங்கி உண்டு களித்ததே என்று கலங்கி நின்றது!
* கருணை = அனைத்தும் முடிந்த பின், தன் குடும்பம் செய்த தவறுகளை எண்ணி, அதற்காகத் தன் செயலை எண்ணி, கண்ணீர் மல்கியது!
- இதைப் பதிவில் வெளிப்படையாகக் குறித்து உள்ளேன்! சுவாமி ஓம்கார் அதை Cut & Paste செய்து பின்னூட்டியுள்ளார்!
- வழக்கமான நாயன்மார் கதைப் புத்தகங்களில், சைவ மட அச்சீடுகளில் குறித்துள்ளார்களா என்பதை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளவும்!
இன்னொரு முறை ஆழமாகப் பதிக்கிறேன்: "பக்தியில் காட்டுமிராண்டித்தனமும் அடாவடித்தனமும் துளி கூடச் சேரவே சேராது!"
//* கருணை = பல அடியவர்கள் பஞ்சத்தால் இறக்க, தன் குடும்பம் பிடுங்கி உண்டு களித்ததே என்று கலங்கி நின்றது!//
ReplyDeleteதன் குடும்பம் என்பது தன்னுடைய மனைவி, பிள்ளைகள் தான். மாமன், மச்சான், பங்காளி எல்லாம் சொந்தக்காரர்கள்.
//* கருணை = அனைத்தும் முடிந்த பின், தன் குடும்பம் செய்த தவறுகளை எண்ணி, அதற்காகத் தன் செயலை எண்ணி, கண்ணீர் மல்கியது!
//
செம காமெடி.. இது கருணை இல்லை. குற்ற உணர்ச்சி.
கருணையின்மை = பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கொன்று குவித்தது...
அவருடைய உறவினர்களுக்கு கருணை இருக்கிறது என்று எங்காவது நான் சொன்னேனா? அவர்களுக்கு கருணையில்லை. அதனால் அவர்கள் அடியவர்கள் இல்லை. அடியவர்களிடமும், கருணையுள்ளம் கொண்டவர்களிம் மட்டும் தான் கருணை செலுத்துவேன் என்று சொல்வது ஏமாற்று வேலை.
ReplyDeleteஅவர்களுக்கும் கருணை இல்லை. அவர்களை கொலை செய்த கொட்புலிக்கும் கருணை இல்லை.
//செம காமெடி.. இது கருணை இல்லை. குற்ற உணர்ச்சி//
ReplyDeleteகுற்றம் என்று குற்றத்தை உணர்வதே கருணையுள்ள மனத்தில் தானே துளிர்க்கும்?
செய்துவிட்டு, ஆமாம் செய்தேன் என்று அடாவடிகளும் உண்டு!
இல்லை மாட்டிக் கொள்வோமோ என்று பயப்படுவோரும் உண்டு!
இங்கு கோட்புலிக்கு இரண்டுமே இல்லை!
சேனாபதி என்ற அதிகாரம் இருந்தும் வருந்தினார்!
அடாவடி அடிக்கவில்லை! "உணர்ந்தார்"!
அதனால் தான் "நாயன்மார்" என்று இன்றும் நின்றார்!
இன்றே, நீங்கள் இவ்வளவு கேட்டீர்களானால்...
நாளை, இன்னும் இன்னும் வரும் தலைமுறைகள் பலவும் கேட்கும்!
இது போன்ற கதைகளை, இன்றைய நிலைக்கு ஏற்றவாறு காட்டி,
எதை மையப்படுத்த வேணுமோ, அதை மட்டுமே மையப்படுத்த வேணும்!
அதற்கான பெரும்பங்கு சமயப் பணி செய்வார்க்கும், சைவ மடங்களில் உள்ள அன்பர்களுக்கும், அன்மீகம் எழுதுகிறேன் என்று சொல்லிக் கொள்ளும் பலருக்கும் உள்ளது! "மேன்மை கொள் சைவ நெறி உலகமெல்லாம் பரவ வேண்டும்" என்று பாடுவதில் மட்டுமல்ல!
அடிக்கடி சொல்வது போல்...
ஆன்மீகம் = ஆண்டவனுக்கு அல்ல!
ஆன்மீகம் = அடியவர்களுக்கே! (நாளை வரும் அடியவர்கள் உட்பட)
நேதாஜியின் வழி இன்றைக்குப் பொருந்தாது இருக்கலாம்!
ஆனால் அதற்காக நேதாஜியின் வரலாற்றையே இன்று பேசவோ/ எழுதவோ/ திரைப்படம் எடுக்கவோ தேவை இல்லை என்று சொல்வீர்களா?
அதே போல்...
கோட்புலி நாயன்மார் கதையும் மறைக்கப்பட வேண்டிய ஒன்றல்ல! அது சொல்லப்பட வேண்டும்!
அது கோட்புலிக்காக அல்ல!
அது சமயப் பெருமைக்காக அல்ல!
அது ஆண்டவனுக்காக அல்ல!
அது அடியவர்களுக்காக!
//சிவபெருமான் யாரை அடியவர்னு ஏற்றுக் கொண்டார் என்று யாரிடமும் லிஸ்ட் இல்லை//
ReplyDeleteஅடா அடா அடா!
முதலில் சிவபெருமான்-ன்னு ஒருவர் இருக்காரா என்ற லிஸ்ட்டே யாரிடமும் இல்லை! அதைச் சொல்லுங்களேன்! :)
உங்கள் அடிப்படைப் புரிதலே பிழையானது!
* அடியவர் யார்? என்று இறைவன் லிஸ்ட் போட்டு ஏற்றுக் கொள்வதில்லை!
* இறைவனைத் தான் அடியவர்கள் பல விதமாக லிஸ்ட் போட்டு ஏற்றுக் கொள்கிறார்கள்!
அடியைப் பற்றிக் கொண்டவர்கள் எல்லாம் = அடியவர்கள்
லிஸ்ட்டில் இருக்கோமா, இல்லையா என்றெல்லாம் அடியவர்கள் பார்ப்பதில்லை!
அடியைப் பற்றிக் கொண்டவர்கள் எல்லாம் = அடியவர்களே!
எனவே அடியவர் யார்? என்று ஈசன் போட்ட லிஸ்ட் என்பதே முதற்கண் தவறு!
ஈசன் அப்படி லிஸ்ட் போடுவதில்லை!
இந்த அடியவர்களில், இவர்களின் உள்ளத்துக்காக, இவர்களை உகக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுவான்! சொன்னதாக இதிகாசங்கள் சொல்லும்! ஆனால் எந்தப் பிள்ளையையும் லிஸ்ட்டில் இருந்து தள்ளி வைப்பதில்லை = நீங்கள் உட்பட!
அதனால் தான்...
* நாயன்மார் = அறுபத்து மூவர் என்பது மனிதர்கள் போட்ட லிஸ்ட்!
* ஆழ்வார்கள் = பன்னிருவர் என்பது மனிதர்கள் போட்ட லிஸ்ட்!
** ஒன்பதே பேர் என்பது இறைவனின் குறிப்பு!
தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ?
இந்த ஒன்பதில் மொத்தமும் அடங்கும்!
"கொலைகார டெரரிஸ்ட்" கோட்புலி நாயனார் உட்பட
"கொலைவெறி" புடிச்ச வெட்டிப்பயல் உட்பட! :)
நேதாஜி, பகத் சிங் போன்றவர்கள் போராளிகள். போராளிகளுக்கு வீரம் முக்கியம். அவர்கள் அடிமைப் பட்ட கூட்டத்திலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள். வீரம் இல்லாத காட்டி கொடுக்கும் ஒருவரை போராளிகளாக என்றுமே உலகம் ஏற்காது. ஒரு கொழையை என்றுமே பெருமையாக போராளிகள் பேச மாட்டார்கள்.
ReplyDeleteகோட்புலி கருணையில்லாது தன் உறவினர்களை கொன்றார். பாராபட்சம் பார்க்காதது ஒரு சிறந்த நிர்வாகிக்கு வேண்டிய குணமாக கொள்ளலாம். அதுவும் விசாரணைக்கு பிறகு. ஆனால் பக்திக்கு இலக்கணமாகாது. அவருடைய கருணையில்லாத பக்தி பெருமைக் கிடையாது.
////அல்லது இப்படிப்பட்ட "தீவிரவாதியை" அடியார் என்று ஏற்றுக் கொண்ட சிவபெருமானையா?//
ReplyDeleteசிவபெருமான் யாரை அடியவர்னு ஏற்றுக் கொண்டார் என்று யாரிடமும் லிஸ்ட் இல்லை.
//
U said Sivaperuman has accepted his as Adiyar? I asked you how do you know whether he has accepted him or not?
Similarly I can say Sivaperuman didnt accept him as adiyar.
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteதன் குடும்பம் என்பது தன்னுடைய மனைவி, பிள்ளைகள் தான். மாமன், மச்சான், பங்காளி எல்லாம் சொந்தக்காரர்கள்//
அது இன்றைக்கு நீங்கள் பார்க்கும் இன்றைய காட்சி! ஏழாம் நூற்றாண்டுக் கூட்டுக் குடும்பக் காட்சி அல்ல!
புரிந்ததா வெட்டி?
இதுவே நீங்கள் செய்வது! புரிந்து கொள்ள வன்மையாக மறுப்பது! இது தான் இலக்கணம் என்று நீங்களாக வரையறுத்துக் கொண்டு, அதற்கு மாறான ஒன்று தோன்றும் பட்சத்தில், அதை உங்கள் இலக்கணத்துக்கு ஏற்ப எடைபோடத் துடிக்கும் நீதிபதி-த்தனம்! Judgemental but not Evaluative!
//நேதாஜி, பகத் சிங் போன்றவர்கள் போராளிகள். போராளிகளுக்கு வீரம் முக்கியம்//
நேதாஜி போல் வீரதீரச் செயல் காட்டாத பலரும் கூட சுதந்திரப் போராட்ட "வீரர்கள்" தான்!
போராளிகளுக்கு வீரத்தை விட "உறுதி" முக்கியம்!
என் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லை! இன்றைய அகிம்சை வழிச் சமூகத்துக்குத் தேவையில்லாத நேதாஜி படம் ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்பீர்களா? நேதாஜி பற்றி எழுதுபவர்களை "வன்முறை"-க்கு துணை செல்பவர்கள் என்று சாடுவீர்களா?
//ஆனால் பக்திக்கு இலக்கணமாகாது//
யாருடைய இலக்கணம் ஆகாது? உங்கள் இலக்கணமா? நீங்கள் மட்டுமேவா?
//அவருடைய கருணையில்லாத பக்தி பெருமைக் கிடையாது//
நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்! ஆனால் ஒவ்வொரு சிவாலயத்திலும், அறுபத்து மூவருள் ஒருவராக இன்றும் கோட்புலி இருக்கிறாரே! அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? செய்யப் போகிறீர்கள்? :)
//
ReplyDeleteகரும்பின் சுவையை உணரத்தான் முடியும்.
மலரின் வாசனையை உணரத்தான் முடியும்.
//
சரக்கின் போதையையும் உணரத்தான் முடியும்.
அதே போல் மதம் என்னும் போதை தான் கருணையில்லாமல் குழந்தைகள் பெண்கள் என்ற கொலை செய்த கொலைக்காரனையும் பக்திமானாக ஏற்கும்.
//அவருடைய கருணையில்லாத பக்தி பெருமைக் கிடையாது//
ReplyDeleteதனக்குப் "பெருமை" வர வேண்டும் என்று அடியவர்கள் கவலைப்படுவதில்லை! அதற்காகப் பக்தி செய்வதும் இல்லை!
அடியவர்கள் வாழ்வு இன்னொரு அடியவருக்குப் பாடம்! ஒரு அடியவரின் பக்தி இன்னொரு அடியவரை இறைவனிடம் தானாகவே இட்டுச் செல்லும், அவ்வளவே! அதற்கு மேல் ஒரு "பெருமையும்" தேவையில்லை!
//தனக்குப் "பெருமை" வர வேண்டும் என்று அடியவர்கள் கவலைப்படுவதில்லை! அதற்காகப் பக்தி செய்வதும் இல்லை!
ReplyDeleteஅடியவர்கள் வாழ்வு இன்னொரு அடியவருக்குப் பாடம்! ஒரு அடியவரின் பக்தி இன்னொரு அடியவரை இறைவனிடம் தானாகவே இட்டுச் செல்லும், அவ்வளவே! அதற்கு மேல் ஒரு "பெருமையும்" தேவையில்லை!//
So this is a lesson how one "Bhakthar" should not be.
//சரக்கின் போதையையும் உணரத்தான் முடியும்//
ReplyDeleteஹிஹி! பாவம் ராஜேஷ்! அவரை விட்டுருங்க! அவர் ஒரு ஒப்புமைக்காகச் சொல்லிட்டாரு!
//அதே போல் மதம் என்னும் போதை தான் கருணையில்லாமல் குழந்தைகள் பெண்கள் என்ற கொலை செய்த கொலைக்காரனையும் பக்திமானாக ஏற்கும்//
கோட்புலி நாயனார் மத வெறிக்கோ, மதப் பரப்பலுக்கோ எல்லாம் துணை போகவில்லை! நிறுவனப்படுத்தல் என்பதிலும் ஈடுபடவில்லை! அவர் மதவாதியும் அல்ல! அவர் நாயன்மார், அவ்வளவே!
உண்மை, மதம் என்னும் போதை, கொலைகாரனை அடையாளப்படுத்தி ஊக்குவிக்கும்! எதற்கு? = பரப்பலுக்காக!
ஆனால் இங்கே கோட்புலி எதையும் ஊக்குவிக்கவில்லை! எதையும் பரப்பவும் இல்லை!
கோட்புலி நாயன்மாரைப் பார்த்து, தாங்களும் கொலை செய்தார்கள், அதனால் சமயத்தில் போற்றப்பட்டார்கள் என்று காட்டுங்களேன் பார்ப்போம்!
மதம் என்னும் போதை கொலைகாரனையும் பக்திமானாக ஏற்கும்!
மத எதிர்ப்பு என்னும் போதை, நாயன்மார்களையும், டெரரிஸ்டுகளாகக் காட்டும்!
//அது இன்றைக்கு நீங்கள் பார்க்கும் இன்றைய காட்சி! ஏழாம் நூற்றாண்டுக் கூட்டுக் குடும்பக் காட்சி அல்ல!
ReplyDeleteபுரிந்ததா வெட்டி?
இதுவே நீங்கள் செய்வது! புரிந்து கொள்ள வன்மையாக மறுப்பது! இது தான் இலக்கணம் என்று நீங்களாக வரையறுத்துக் கொண்டு, அதற்கு மாறான ஒன்று தோன்றும் பட்சத்தில், அதை உங்கள் இலக்கணத்துக்கு ஏற்ப எடைபோடத் துடிக்கும் நீதிபதி-த்தனம்! Judgemental but not Evaluative!
//
கூட்டுக் குடும்பமாக இருந்தால் விருந்திற்கு எதற்கு தனியாக அழைக்க வேண்டும்?
கூட்டுக் குடும்பமாக இருந்தால் ஒரே சமையலாக அல்லவா இருந்திருக்கும். அப்பொழுது இவர் பெண்ணையும் சேர்ந்தல்லவா கொன்றிருக்க வேண்டும்?
எனக்கு புரிய வைப்பதாக நினைத்துக் கொண்டு உங்கள் இஷ்டத்திற்கு உளறுவது.
என்னைப் பற்றி நீங்கள் தீர்ப்பு கூறுவதையும் நிறுத்தவும்.
////நேதாஜி, பகத் சிங் போன்றவர்கள் போராளிகள். போராளிகளுக்கு வீரம் முக்கியம்//
ReplyDeleteநேதாஜி போல் வீரதீரச் செயல் காட்டாத பலரும் கூட சுதந்திரப் போராட்ட "வீரர்கள்" தான்!
போராளிகளுக்கு வீரத்தை விட "உறுதி" முக்கியம்!
என் கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லை! இன்றைய அகிம்சை வழிச் சமூகத்துக்குத் தேவையில்லாத நேதாஜி படம் ஏன் எடுக்க வேண்டும் என்று கேட்பீர்களா? நேதாஜி பற்றி எழுதுபவர்களை "வன்முறை"-க்கு துணை செல்பவர்கள் என்று சாடுவீர்களா?
//
உறுதி முக்கியமாக இருக்கலாம். ஆனால் கோழையாக இருப்பவரை போராளியாக ஏற்க மாட்டார்கள். அதே போல் கருணையில்லாதவரை பக்தராக ஏற்க முடியாது.
//ஆனால் பக்திக்கு இலக்கணமாகாது//
ReplyDeleteயாருடைய இலக்கணம் ஆகாது? உங்கள் இலக்கணமா? நீங்கள் மட்டுமேவா?
//
பக்தியில் காட்டுமிராண்டித்தனமும் அடாவடித்தனமும் துளி கூடச் சேரவே சேராது! பக்தியே தோற்கும் நிலை வந்தால் கூட, நோற்கும் குணம் அதை விட்டுப் போகவே போகாது!
தொன்று தொட்டு இன்று வரை பக்தி என்பது கருணையுடன் சேர்ந்தே தான் வந்திருக்கு. அதனால் தான் இன்றும் நிலைத்திருக்கு!
இது யாருடைய இலக்கணம்???
////அவருடைய கருணையில்லாத பக்தி பெருமைக் கிடையாது//
ReplyDeleteநீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்! ஆனால் ஒவ்வொரு சிவாலயத்திலும், அறுபத்து மூவருள் ஒருவராக இன்றும் கோட்புலி இருக்கிறாரே! அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? செய்யப் போகிறீர்கள்? :)//
சமூகத்தில் இவர்களைப் போல் யாரும் இனிமேல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஈசனை வேண்டி வருவேன்.
//கூட்டுக் குடும்பமாக இருந்தால் விருந்திற்கு எதற்கு தனியாக அழைக்க வேண்டும்? கூட்டுக் குடும்பமாக இருந்தால் ஒரே சமையலாக அல்லவா இருந்திருக்கும்
ReplyDeleteஎனக்கு புரிய வைப்பதாக நினைத்துக் கொண்டு உங்கள் இஷ்டத்திற்கு உளறுவது//
"கூட்டுக் குடும்பமாக இருந்தால் ஒரே சமையல்" என்று மீண்டும் உங்கள் அளவையை வைத்துக் கொண்டே அளக்கறீர்கள் ஜஸ்டிஸ் வெட்டிப்பயல்!
கடம்பூர் மாளிகையில் ஒரே குடும்பமாக வாழ்ந்தாலும், தனித்தனி சமையலோ, விருந்தோ காட்டும் இலக்கியங்களைத் தாங்கள் பார்க்கவில்லையோ?
பெரிய அளவுக் குடும்பங்களில், உண்ணும் அறைகளும், சமையல் அறைகளும் கூட வெவ்வேறு இடங்களில் இருந்ததைக் காட்டும் காட்சிகள் வரும் போது, கண்களை மூடிக் கொண்டீர்களோ?
//என்னைப் பற்றி நீங்கள் தீர்ப்பு கூறுவதையும் நிறுத்தவும்//
நீங்க நிறுத்துங்க! நான் நிறுத்தறேன்! :)
* "இது தான் இலக்கணம் என்று நீங்களாக வரையறுத்துக் கொண்டு, புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்" என்றால் அது Observation!
* "நீ ஒரு டெரரிஸ்ட்!" என்றால் அது தீர்ப்பு!
இப்போ...யார் தீர்ப்பு கூறுகிறார்கள் என்று தீர்ப்பு கூறுங்கள் யுவர் ஆனர்! :)
//கோட்புலி நாயனார் மத வெறிக்கோ, மதப் பரப்பலுக்கோ எல்லாம் துணை போகவில்லை! நிறுவனப்படுத்தல் என்பதிலும் ஈடுபடவில்லை! அவர் மதவாதியும் அல்ல! அவர் நாயன்மார், அவ்வளவே//
ReplyDeleteமனதில் கருணை இல்லாது பெண்கள், குழந்தைகளைக் கொன்றார். அப்படி பக்தி என்ற போர்வையில் கொலை செய்பவர்கள் தான் நாயன்மார் என்றால், அவர் அது தான்.
////கூட்டுக் குடும்பமாக இருந்தால் விருந்திற்கு எதற்கு தனியாக அழைக்க வேண்டும்? கூட்டுக் குடும்பமாக இருந்தால் ஒரே சமையலாக அல்லவா இருந்திருக்கும்
ReplyDeleteஎனக்கு புரிய வைப்பதாக நினைத்துக் கொண்டு உங்கள் இஷ்டத்திற்கு உளறுவது//
"கூட்டுக் குடும்பமாக இருந்தால் ஒரே சமையல்" என்று மீண்டும் உங்கள் அளவையை வைத்துக் கொண்டே அளக்கறீர்கள் ஜஸ்டிஸ் வெட்டிப்பயல்!
கடம்பூர் மாளிகையில் ஒரே குடும்பமாக வாழ்ந்தாலும், தனித்தனி சமையலோ, விருந்தோ காட்டும் இலக்கியங்களைத் தாங்கள் பார்க்கவில்லையோ?
பெரிய அளவுக் குடும்பங்களில், உண்ணும் அறைகளும், சமையல் அறைகளும் கூட வெவ்வேறு இடங்களில் இருந்ததைக் காட்டும் காட்சிகள் வரும் போது, கண்களை மூடிக் கொண்டீர்களோ?
//
Do you have proof that they stayed together?
Even if they stay together, it doesnt matter. He didnt kill "HIS FAMILY".
Does Killing Women and Children means Karunai?
//உலகம் ஏற்காது//
ReplyDeleteஅன்று, உலகம் ஏற்காத பலவையும் செய்து காட்டிய அருளாளர்களை...
இன்று உலகம் ஏற்றுக் கொண்டு தான் உள்ளது! :)
நம்மாழ்வார், வள்ளலார், நடனகோபால நாயகி சுவாமிகள் என்று பலப்பல ஏர்வை ஆவாதவர்கள்! :)
//ஆனால் பக்திக்கு இலக்கணமாகாது//
பக்திக்கு நீங்கள் நினைப்பது மட்டுமே இலக்கணம் ஆகி விடாது! அதற்குப் பல இலக்கணங்கள்! கருணை என்பது அதில் தலையாய ஒன்று!
கோழையை, வீரர்கள் உலகம் ஏற்காது!
அறிவில்லாதவனை, ஞானிகள் உலகம் ஏற்காது!
அவரவர் உலகத்துக்கு அவரவர் இலக்கணங்கள்!
ஆனால்...
என்னைப் போன்று
பெற்றோர் சொல் கேளாதவனையோ...
ஒவ்வாத கருத்து உடையவனையோ...
ஏதோவொரு வெட்டி வாழ்வு வாழ்பவனையோ கூட
அல்லது...கோழை, அறிவு கெட்டவன்(ள்), கருணை இல்லாதவன்(ள்) என்ற காரணங்களைக் காட்டி, பக்தி எவரையும் புறம் தள்ளுவதில்லை!
கொலைகார வால்மீகிகளும் இருக்கிறார்கள்! கருணையே உருவான இராமானுசர், வள்ளலார் போன்றோரும் இருக்கிறார்கள்! ஞானமே உருவான விவேகானந்தர் போன்றோரும் இருக்கிறார்கள்!
* நாயன்மார் கொலை செய்தார் என்பதை மட்டுமே அடித்து அடித்துப் பேசி விட்டு...
* தீங்கு இழைத்தவர்களைக் கொன்ற பின்னால், தன்னந்தனியாக அவர் அழுது, வருந்தி, திருந்தியதைக் கண்டு கொள்ளாமல் விடுவது...
* பின்பு செய்ததைப் பாரவே பாராமல், முன்பு செய்த ஒன்றையே பேசிப் பேசி, அவன் தலையை வாங்குவது...
இது பக்தியில் இல்லை!
இன்னொரு முறை ஆழமாகப் பதிக்கிறேன்:
* பக்தியில் காட்டுமிராண்டித்தனமும் அடாவடித்தனமும் துளி கூடச் சேரவே சேராது!
* தொன்று தொட்டு இன்று வரை பக்தி என்பது கருணையுடன் சேர்ந்தே தான் வந்திருக்கு!
* கருணையற்ற செயல்களைச் செய்தவரிடத்தும், செய்ததையே சொல்லிச் சொல்லி அடாவடித்தனம் செய்யாமல், அவர்கட்கும் உணர்வித்து, கருணையுடனே தான் வந்திருக்கு! அதனால் தான் இன்றும் நிலைத்திருக்கு!
- அஸ்மத் குருர் பகவதோஸ்ய, "தயை"க சிந்தோ..
- காரேய்க் கருணை இராமானுசா, சீரே உயிர்க்கு உயிராம், அடியேற்கு இன்று தித்திக்கின்றதே...
- அருட் பெரும் சோதி, தனிப் பெரும் கருணை!
தனிப் பெரும் கருணை! தனிப் பெரும் கருணை!!
//அதே போல் கருணையில்லாதவரை பக்தராக ஏற்க முடியாது//
நீங்கள் ஏற்காது போகலாம்! ஆனால் பக்தி ஏற்கும்!
ஏற்காது போகிற உங்களையும் பக்தி ஏற்கும்!
//So this is a lesson how one "Bhakthar" should not be//
ReplyDeleteThis is a lesson - how a bhakthar should be, after he realized how he should not be!
//சமூகத்தில் இவர்களைப் போல் யாரும் இனிமேல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஈசனை வேண்டி வருவேன்//
சமூகத்தில் கோட்புலி நாயனாரின் கதையைக் கேட்டு, தீவிரவாதிகளாக மாறி, அப்படி மாறியவர்கள் கொண்டாடப்படுகிறார்கள் என்று யாரும் இல்லை!
இருந்தாலும், "இப்படி ஒரு டெரரிஸ்ட்டை, நாயன்மார் என்று உன் கண் முன்னேயே வைத்துள்ளாயே, ஈசா! இதைக் கண்டு யாரும் டெரரிஸ்ட் ஆகாமல் இருக்க வேண்டும்" என்றும் முடிந்தால் வேண்டி வாருங்கள் வெட்டி!
அப்படியே வலம் வரும் போதும், நாயன்மார்களையும் சேர்த்தே அல்லவா வலம் வர வேண்டி இருக்கும்? அப்போது, "டேய் கோட்புலி, உனக்கு வந்த வாழ்வு, இனி எந்தக் *கொலைகாரனுக்கும்*, வராமல் இருக்கட்டும்" என்றும் வேண்டி வாருங்கள்!
//பக்திக்கு நீங்கள் நினைப்பது மட்டுமே இலக்கணம் ஆகி விடாது! அதற்குப் பல இலக்கணங்கள்! கருணை என்பது அதில் தலையாய ஒன்று!
ReplyDelete//
தொன்று தொட்டு இன்று வரை பக்தி என்பது கருணையுடன் சேர்ந்தே தான் வந்திருக்கு. அதனால் தான் இன்றும் நிலைத்திருக்கு
பக்தியில் காட்டுமிராண்டித்தனமும் அடாவடித்தனமும் துளி கூடச் சேரவே சேராது!
//இந்த இலக்கணத்தை வகுத்தது நீங்கள் தானே?
சுத்தி வளைத்து பேச வேண்டாம்.
குழந்தைகளையும், பெண்களையும் கொலை செய்தது காட்டுமிராண்டித்தனமா இல்லையா?
This is a lesson - how a bhakthar should be, after he realized how he should not be!
ReplyDelete//how a bhakthar should be//
He felt bad (Cried) after killing Children and Women? what is the lesson in that? That we should cry after Murdering Kids and Women...
//முன்னாளில், கோட்புலி, சுந்தரரைத் தம் ஊருக்கு அழைத்து வந்து, தம் ஊர் இறைவன் மேல் அவரைப் பாட வைத்து, சிங்கடி-வனப்பகை என்ற தன் இரு மகள்களையும் சுந்தரரின் சைவப் பணிக்கே அப்போது காணிக்கை ஆக்கினார்//
ReplyDeleteor you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list.
* கருணை இருந்தும்,
ReplyDelete* பல அடியவர்கள் பஞ்சத்தால் இறக்க, தன் குடும்பம் பிடுங்கி உண்டு களித்ததே என்று கலங்கி,
* கணத்தில் கருணை மறைந்து,
* தவறிழைத்த உறவினர்களை ஆத்திரத்தால் கொன்று,
* பின்பு அதற்கு வருந்தி, தன்னந்தனியாக அழ...
* அதற்கு மேல் வாழாமல், ஈசனுடன் அணைந்து கொண்டது...எதுவாகிலும்...
குற்றம் இழைத்தவன் கடைசி வரை குற்றம் இழைத்தவனே!
அவனைச் சாகும் வரை "குற்றவாளி" என்றே குட்டிக் கொண்டே இருக்க வேண்டும்!
கருணை இருந்தும் கணத்தில் கருணை மறந்தவன் காட்டுமிராண்டியே! அவன் முன்போ, பின்போ செய்த எந்தத் தொண்டும் ஏர்வையாகாது! = அதுவே பக்திக்கு இலக்கணம் என்று வகுப்பவர்கள் வகுத்துக் கொள்ளலாம்!
இனி, இங்கு பின்னூட்டம் இடுபவர்கள், நாயன்மாரை "டெரரிஸ்ட்" என்றே தாராளமாகக் குறிப்பிட்டுக் கொள்ளுங்கள்!
அவ்வாறு வேண்டாம் என்று நான் இதுவரை வாதாடியது, கோட்புலி என்ற தனிப்பட்ட நாயன்மார் ஒருவருக்காக அல்ல! அடியவர்கள் என்ற பொருண்மைக்குள் மட்டுமே!
பெரியவர்கள், வலைப்பதிவில் சைவப் பெருமக்கள், ஆர்வலர்கள் எவரேனும், இந்த வழக்கில் தெளிவுறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் தெளிவின் பொருட்டேனும் முன்வரட்டும்!
வெட்டி, "action part"-க்குச் சென்று, புகார் மற்றும் கிழக்கு பதிப்பகம் போன்றவற்றை முன்னெடுக்கட்டும்!
இப்போ நான் போய் கொஞ்சம் சாப்பிட்டு வந்துடறேன்! மணி இப்பவே மதியம் 2:30! இன்னிக்கு-ன்னு பார்த்து ரொம்ப பசிக்குது! சாப்பிடப் போற இடத்தில் என்னைய யாரும் "வெட்டி" போடாம இருந்தாச் சரி! :)
//பாடு சாந்தா, பாடு! Commentu சாந்தா, Commentu! :)//
ReplyDeleteஇப்படி எல்லாம் பாடு(baadu) பாடுன்னு வாசகர்களைத் திட்டினா.. எப்படி பின்னூட்டறதாம்? வழக்கம்போல பதிவைப் படிக்கலை
//ILA(@)இளா said...
ReplyDeleteஇப்படி எல்லாம் பாடு(baadu) பாடுன்னு வாசகர்களைத் திட்டினா..எப்படி பின்னூட்டறதாம்?//
உங்க பேரு சாந்தா-வா, இளா? :)
//வழக்கம்போல பதிவைப் படிக்கலை//
ஓ! பாஸ்டன் போயும் திருந்தலை-ன்னு சொல்றீங்களா இளா? :)
உம்ம்ம்...இதை இப்ப தான் சாப்பாடு வாங்கிக்கிட்டு வந்து பார்த்தேன்!
ReplyDelete//or you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list//
அது அவரவர் வசதி மற்றும் ஆசையைப் பொறுத்தது!:(
மேலும் பெற்ற பெண்ணும் உடன்பட வேணும்! :((
என்ன ஆயிற்று பாலாஜி? ஏன் இப்படித் தரம் தாழ்கிறது?? நீங்களா? வியப்பாக-வருத்தமாக உள்ளது!
சரியாக ஒரு முறை வாசியுங்கள்!
முன்பே ஊருக்கு வந்த போது, சுந்தரர் திருமடத்தில் சேர்த்து விட்ட பெண் பிள்ளைகள் தான் அவர்கள்!
அவர்களை முன்னிட்டு, அவர்கள் தந்தை ஊருக்கு ஆற்றும் அன்னதான நெல்லுப்படியை முன்னிட்டு...
தன்னை அவர்களின் "தந்தையார்" என்று தான் பாடுகிறார் சுந்தரர்! அதற்கா இப்படி ஒரு பின்னூட்டம் இடுகிறீர்கள்? :(
திருமடங்களுக்குச் செல்லும் பெண்பிள்ளைகளை ஒட்டுமொத்தமாக என்னவென்று நினைத்தீர்கள்?
மேலும், சுந்தரர் இப்படித் தந்தையாக எண்ணிப் பாடிய பின், பல ஆண்டுகள் கழித்துத் தான், கோட்புலியாரின் வாழ்வில் இப்படி ஒரு கோரச் சம்பவம் நிகழ்ந்தது! அதற்கு அப்புறம், உடனேயே அவரும் இறைவனடி சேர்ந்தார்!
//இப்படித் தன் குடும்பமே தவறு இழைத்து, இன்று மொத்தமாய்த் தழைக்காமல் போய் விட்டதே என்று தன்னந்தனியாக கோட்புலி அழ...
ஈசன் அவரை அங்ஙனயே தோன்றி, அவ்வண்ணமே அணைத்துக் கொண்டான்!
"உன் கை வாளினால் உறுபாசம் அறுத்த சுற்றத்தவர், பிற உலகம் முதலிய பூமிகளிற் புகுந்து, கருமம் தொலைத்து, பின்னர் நம் உலகம் அடைய,
நீர் இந்நிலையிலேயே நம்முடன் அணைக, நம் உலகம் அடைக!" என்று மொழிஞ்சருளினார்!//
//or you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list//
:((((((
தலை குனிகிறேன்!
////or you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list//
ReplyDeleteஅது அவரவர் வசதி மற்றும் ஆசையைப் பொறுத்தது!:(
மேலும் பெற்ற பெண்ணும் உடன்பட வேணும்! :((
என்ன ஆயிற்று பாலாஜி? ஏன் இப்படித் தரம் தாழ்கிறது?? நீங்களா? வியப்பாக-வருத்தமாக உள்ளது!//
What Kotpuli did after the incident to learn lesson from his life?
என்னால் இதற்கு மேல் புரிய வைக்க முடியவில்லை! இந்நேரம் பார்த்து குமரனும் ஊரில் இல்லை! ராகவன்...ராகவன்...இப்போது இல்லை!
ReplyDeleteவாத்தியார் ஐயா, ஸ்வாமி ஓம்கார், ஜீவா, SK, திவா சார், கைலாஷி ஐயா, கவிநயா அக்கா, கீதாம்மா அல்லது கோவி. கண்ணன், அல்லது சைவப் பனுவல்கள் அறிந்த வேறு எவராயினும்...பொதுக் கடமையாகக் கருதி, தெளிவு சொல்ல முன்வர வேண்டும்!
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteThis is a lesson - how a bhakthar should be, after he realized how he should not be!
//
how a bhakthar should be?
He felt bad (Cried) after killing Children and Women? what is the lesson in that? That we should cry after Murdering Kids and Women...
This is my question... What is the lesson from the life of Kotpuli?
////or you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list//
ReplyDelete:((((((
தலை குனிகிறேன்!//
இந்த இடத்தில உங்களுக்கு கண்ணீர் வந்திருக்கணுமே? இல்லைனா கண்ணு கலங்கியிருக்கும். உண்டா இல்லையானு உண்மையா சொல்லுங்க.
வணக்கம்,
ReplyDeleteபாலாஜி அண்ணா,
என்ன நடக்குது இங்க??? சரி விடுங்க நீங்கள்ல்லாம், நல்லவங்க, வல்லவங்க நாலும் தெரிஞ்சவங்க என்னன்னெம்மோ பேசிக்கிறீங்க....
எனக்கு ஒன்னுமே புரியல... :-)
இருந்தாலும் தெரிஞ்சத சொல்றேன்!
ReplyDeleteஅரனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்;
அரனடிக்கு அன்பிலாதார் புண்ணியம் பாவமாகும்;
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி,
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மையாயிற்றே!
-சித்தியார், 2 வது சூத், பாடல் 29
அறம் வளர்த்த மறத்தமிழர் வாழ்வில் தீவிரவாதம் என்றுமே இருந்ததில்லை.
கோயிலுக்கு மானியம் கொடுப்பதெல்லாம், இறைவன் உறையும் இறையடியவர்களுக்குத்தான்..
பஞ்சம் ஒன்றும் இவர்கள் குடும்பத்திற்கு மட்டும் வந்துவிடவில்லை, அனைவருக்கும் தான். அப்படியிருக்க, இவர்கள் செய்தது வழிப்பறிப் போல்தானே.. பஞ்சக் காலத்தில் இவர்கள் மட்டும் உண்டுயிர்த்து மற்றவர்கள் மாண்டுப் போலாமா... அதுவும் அவர்களுக்கென்று உணவு அளிக்கப்பட்டிருந்த போதும்...
இது வீரமோ, தீவிரவாதமோ, கருணையின்மையோ இல்லை. அதீத அன்பு, பக்தி,காதல்!
இக்காலங்களில், எதையும் அறிவியல் பூர்வமாக நோக்கி, நிரூபனமில்லாத ஒன்றை ஏற்றுக் கொள்ளாத மனநிலையில் நாம் எல்லோரும் வளர்க்கப்பட்டுவிட்டோம்.
அறிவு இயல் சாராத, மனதளவில் மட்டும் உணரக்கூடிய உயிரோ உருவமோ அற்ற பலவற்றை கண்டுகொள்வதில்லை.
அதில் ஒன்றுதான், இறைவன். இறைவனும் பக்தியும் நம் மூதாதையர்களிடமிருந்து காற்றில் பரவும் தூசிகளைப் போல, காலத்தில் சிறு படலமாகக் கடத்திவரப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. அதன் முழுமையையும் நாம் அறியவும் இல்லை, உணரவும் இல்லை. அதனால் பக்தி என்பது, பல தாருமாறான வடிவங்களைப் பெற்றிருக்கிறது. அவற்றை இறையடியவர்கள் என்ற போர்வையில் எத்தனையோ கயவர்கள், கபட வேடதாரிகள்!
உண்மையான பக்தர்களுக்கு, உலகில் எந்த இன்பமும் வேண்டியதில்லை. உண்மையான பக்தர்கள் அவற்றை வேண்டுவதுமில்லை. உடல், உயிர்,உறவு, உலக இன்பமும் துன்பமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு எல்லாமே இறைவனும், இறைநிலை மட்டும் தான். இதை சொன்னாலும் சரி, பின்பற்றினாலும் சரி மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று நெருங்கவும் மாட்டோம்.
காதலைப் போல பக்தியும் தவம்! காதலர்கள் போல அடியவர்களும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அ-து. இறை அடியவர்களுக்கோ, இறைவனாய் அவர்கள் என்னும் உருவத்திற்கோ துன்பம் என்று வரும் வேளையில். இறைவன் மட்டுமே அவர்களுக்கு எல்லாமும். உற்றார் உறவினர்கள் அல்லர். மனைவி மக்கள் அல்ல. செல்வமும் புகழும் அல்ல.
மிதவாதம், தீவிரவாதம் என்றால் என்ன? மனிதர்களுக்குத் தீங்கு விளைவித்தால் தீவிரவாதம். மனிதன் பால் மட்டும் அன்பு செலுத்தினால் மிதவாதம். என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
ஒவ்வொரு மனிதனும் அடிப்படையில் தீவிரவாதிதான். குழந்தையைக் கொன்றால் பாவம் என்றால், lamb biryani ஆட்டுக் குட்டியைக் கொல்லாமல் கிடைக்கிறதா?? கோழி முட்டை! கோழியின் வம்சத்தையே அழிக்கிறோமே! தாவரங்கள்... நாம் அனைவரும் உயிரைக் கொன்றுதான் உடல் வளர்க்கிறோம். அப்படியென்றால் நாமெல்லாம்.........??
என்னப்பா இது, கஷ்டப்பட்டு கமென்ட் போட்டா, too long to process ன்னு வருது. அப்படியே இருந்துருந்தா copy யாவது செஞ்சிருப்பேன்.
ReplyDeleteசரி விடுங்க இன்னொரு முறை அத டைப் செஞ்சு post பண்றேன்.
வணக்கம் ப்பா எல்லாருக்கும்,
ReplyDeleteஅரனடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமதாகும்;
அரனடிக்கு அன்பிலாதார் புண்ணியம் பாவமாகும்;
-சித்தியார், சூத் 2; பாடல் 29
அறத்தினை வளர்த்த மறத்தமிழர் வாழ்வில் அன்பு மட்டும்தான் என்றுமே மேலோங்கி நிற்கும்.
இந்நாள்களில் எதையும் நிரூபணமின்றி ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு மனநிலையில் நாம் எல்லோரும் வளர்க்கப்பட்டுவிட்டோம். உருவம், உணர்வு அற்ற எதையும் நாம் ஏற்றுக் கொள்வதே இல்லை.
அப்படி ஒதுக்கப்பட்ட பலவற்றில் ஒன்றுதான், இறைநிலை.
இறைநிலை இறைபக்தி என்பது காதலைப் போன்றது. வீரம், காதல், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைப் போன்று பக்தியும் ஒரு உணர்வு.
இறையடியவர்கள் எதையும் வேண்டுவது இல்லை. அவர்களுக்கு எதுவும் வேண்டியதுமில்லை. உடல், உயிர், உறவு, செல்வம், புகழ் என்று இவ்வுலக இன்பம் எதையும் வேண்டாது, உயிரால் மட்டும் உணரக்கூடிய பக்தி உணர்வை மட்டுமே வேண்டுபவர்கள். இவ்வாறு எவரேனும் சொன்னால், செய்தால் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று ஒதுக்கிவைத்து, அருகில் செல்லக்கூட அஞ்சுகிறோம்.
இதுவே, தமிழர்கள் அறிந்து உணர்ந்து வந்த பக்தி. காலப்போக்கில், காற்றில் பறந்து வந்து படரும் தூசியினைப் போன்று, பக்தியும் மேலோட்டமான அளவில், மூடநம்பிக்கைகள் பலவற்றின் கலப்படம் அதிகம் கலந்து தாருமாறாக உருவெடுத்து நிற்கிறது.
மனிதனின் பகுத்தறிவு வளரவளர அறியாமையும் வளருகிறது. நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க புதுப்புது நோய்கள் வருவதைப் போன்று...
காதலைப் போன்று பக்தியும் உலகைப் பற்றிக் கவலைப்படாது. வேறு எதைப் பற்றியும் கூட....
ReplyDeleteகாதலர்களைப் போல் இறைஅடியவர்களும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அவர்கள் பக்திநிலைக்கு இடையூறு தோன்றும் போதும். அவர்கள் வண்ங்கும் இறைநிலைக்குத் துன்பம் நேரும் போதும்.
வெறும் கல்தானே சிவலிங்கம், அதற்கு எதுக்கு கண் கொடுத்தான், மாமிசம் படைத்தான்?? கண்ணப்பர்.
இறைவனை, உண்மையான இறைபக்தி உள்ளவர்கள் மட்டுமே உணரமுடியும். மற்றவர்களால் அதை அறியக்கூட முடியாது, அதனால் மற்றவர்களுக்கு அவர்கள் செய்வது அறிவீனமானதாகத்தான் தோன்றும்.
எதிலும் மிதவாதம் என்றும், தீவிரவாதம் என்றும் எதையும் சொல்ல முடியாது.
மிதவாதம், தீவிரவாதம் என்றால் என்ன?
மனிதர்கள் பால் அன்பு செலுத்துவது -மிதவாதம்; மனிதர்களுக்குத் துன்பம் விளைவிப்பது -தீவிரவாதம்
ReplyDeleteஅப்படியா??
குழந்தையைக் கொன்றது பாவம் என்றால், நாம் எத்தனை பேர் lamb biryani சாப்பிடுறோம். அதுல ஆட்டுக்குட்டியக் கொன்னுதானே போடுறாங்க...
ReplyDeleteகோழி முட்டை! - கோழியோட ஒரு வம்சத்தையே அழிக்கிறோமே. அப்ப இதுல்லாம் கொலை இல்லாம கலையா.
ஏன், கொலை என்றால் உயிர்களைக் கொல்வது எல்லாமே கொலைதான். தாவரங்கள் உட்பட.
வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன் ன்னு வள்ளலார் சொன்னார். பசு தன் இரத்தத்தையே உருக்கித் தான் பாலாக்குடுக்குது. அத கன்னுக்குட்டிக்குக் கூட குடுக்காம மனிதர்கள்தானே அபகரிச்சுக்கிறோம்.
மனித நலம், மனித உரிமை ன்னு என்னென்னமோ பகுத்தறிவுல பேசுறோம் நாம!
பாவம், பகுத்தறிவு இல்லாததால, மற்ற உயிரினங்கள் நமக்கு உணவாகிறது. அவைகளை எல்லாம் நாம் கொலை செய்கிறோம்!!
உயிருக்கு ஆபத்து விளைவிக்குதுன்னு எத்தனை உயிர்களைக் கொன்னுருப்போம். நமக்குத் துன்பம் வரும்போது தற்காப்புன்னு சொல்லி செய்ற கொலை கொலையாகக் கருதப்படாதுன்னு சொல்வாங்க.
நாம மனிதர்கள் நம்மள நேசிப்போம், நம்ம உடலைப் பாதுகாப்போம். உயிருக்கோ, உடலுக்கோ துன்பம் வரும்போது எப்படி செயல்படுவோமோ, அதே மாதிரிதான், கோட்புலி நாயனார் அவருக்கு உடலா உறவா இருந்த சிவப்பெருமானுக்கும், சிவபெருமானோட சேவைக்கும் ஊறு விளைவித்தவர்களிடம் நடந்து கொண்டிருந்தார்.
இந்த உலகில் எதுவும் இது முழுமையாக நியாயமானது, இது முழுமையாக அநியாயமானது என்று எதுவுமே இல்லை. எல்லாமே அவரவர்களின் பார்வைக்கோணங்களைப் பொறுத்தது மட்டுமே!
கனியிருப்பக் காயை ஏன் கவர வேணும்?? தமிழர்கள் வாழ்விலும் வரலாற்றிலும் எத்தனையோ அறங்களைச் சொல்லியுள்ளனர். வாழ்க்கை முறையிலும் பின்பற்றி உள்ளனர். அவை எல்லாம் வரலாற்றில் உள்ளன.
ReplyDeleteஇந்நாளில் உள்ள பகுத்தறிவாளர்கள் அவற்றை எல்லாம் பகுத்து அறிந்து, பின்பற்ற வேண்டியதுதானே.
ஆனால், இன்று எல்லாம் வியாபாரம், எல்லாம் சுய இலாபம், எல்லாரும் தன் மக்கள், தன்பிள்ளை, தன்வீடு என்று மட்டுமே வாழ்கிறோம்.
....
ReplyDeleteஅந்நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று
உன்னுடைய கை வாளால் உறுபாசம் அறுத்த கிளை
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணையப் புகழோய் நீ
இந்நிலை நம்முடன் அணைக என்றே எழுந்து அருளினார்
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்தாகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த
கொத்து அலர் தார்க் கோட்புலியார் அடிவணங்கிக் கூட்டத்தில்
பத்தராய் பணிவார் தம் பரிசிணையாம் பகருவாம்
-பெரியபுராணம்
இப்பாடலில் உள்ளவற்றை எவ்வாறு உணர்ந்து அறிகிறீர்கள் என்பது படிப்பவரைப் பொறுத்தது.
-நன்றி,
முகிலரசிதமிழரசன்
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஎன்னால் இதற்கு மேல் புரிய வைக்க முடியவில்லை! இந்நேரம் பார்த்து குமரனும் ஊரில் இல்லை! ராகவன்...ராகவன்...இப்போது இல்லை!
வாத்தியார் ஐயா, ஸ்வாமி ஓம்கார், ஜீவா, SK, திவா சார், கைலாஷி ஐயா, கவிநயா அக்கா, கீதாம்மா அல்லது கோவி. கண்ணன், அல்லது சைவப் பனுவல்கள் அறிந்த வேறு எவராயினும்...பொதுக் கடமையாகக் கருதி, தெளிவு சொல்ல முன்வர வேண்டும்!
//
கோவியார் வழக்கமாக கேட்பதையெல்லாம் பாலாஜி கேட்கிறார் :)
வைணவ புராணத்தைப் பற்றி எழுதி இருந்தால் பாலாஜி கேட்டிருக்கமாட்டார். சைவக் கதைகளைப் போல் வைணவக் கதைகள் அவ்வளவு ஒன்றும் கொடுரமான புனைவுகள் என்பதாக நானும் கருதுவதில்லை :)
*****
வேண்டுதலில் வருத்திக் கொள்வது எனபது பழங்குடிகளாக இருந்து நாகரீகம் பெற்ற சமூகத்தில் செடில், அலகுக் குத்திக் கொள்வது என்பதாக இன்றும் தொடர்கிறது, இவை புனைவுகள் எனும் போது சைவப் பிண்ணனியில் இதுபோன்ற பிள்ளைக் காவுக் கதைகள் எனக்கு வியப்பாகத் தெரியவில்லை. பெருமாள் கோவில்களுக்கு அலகுக்காவடி எடுப்பதை நான் பார்த்தது கிடையாது, வைணவம் (பிந்தைய மதம் என்பதால், ஒப்புக் கொள்ளவில்லை என்றால் வெகு பின்னால் ஒழுங்குக்கு வந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்) முழுக்க முழுக்க தத்துவத் தேடலின் நீட்சியாக அமைக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன். அதில் உயிர்பலி, வருத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை பக்தியின் கூறுகளாகக் காட்டிக் கொள்ளாமல் இருக்க இதுவே காரணம், சைவக் கதைகளில் பிள்ளைக்கறி ஆகிய கொடுரங்கள் காட்டப்பட்டாலும் கதை முடிவில் எல்லோரும் உயிருடன் எழுந்ததாக சுப முடிவு இருக்கும்.
//வைணவ புராணத்தைப் பற்றி எழுதி இருந்தால் பாலாஜி கேட்டிருக்கமாட்டார். சைவக் கதைகளைப் போல் வைணவக் கதைகள் அவ்வளவு ஒன்றும் கொடுரமான புனைவுகள் என்பதாக நானும் கருதுவதில்லை :)
ReplyDelete//
எனக்கு சைவம், வைணவம் தெரியாது. அதைப் பற்றி எனக்குக் கவலையும் இருந்ததில்லை. எனக்கு நாராயணனும், ஈசனும் தான் தெரியும்.
எனக்கு ராமானஜுரையும் தெரியாது, அப்பரும் தெரியாது.
.............
ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பே தொல்காப்பியமும், திருக்குறளும் வந்துவிட்டது. தமிழ் சமூகம், சமூக அமைப்பில் மிக உயர்ந்த நிலையிலே அன்று இருக்கிறது. பழங்குடி என்று சொல்லி தப்பிக்க முடியாது. சமணமும், பௌத்தமும் தமிழ் மண்ணில் பரவி விட்டிருந்தது. அதனால் உயிர் கொலை சிறந்ததென்று அன்றைய தமிழ் சமூகத்தில் எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை.
அப்படி இருந்திருந்தால் இங்கே கோட்புலி வருந்தி அழுதிருக்கவும் தேவையில்லை. வெற்றி பவனி தான் வந்திருப்பார்.
.............
கோட்புலி என்றே ஒருவர் இல்லை. எல்லாம் புனைவு என்று சொல்லிவிட்டால் மொத்தமாக தப்பித்து விடலாம் :)
//அறத்தினை வளர்த்த மறத்தமிழர் வாழ்வில் அன்பு மட்டும்தான் என்றுமே மேலோங்கி நிற்கும்.
ReplyDeleteஇந்நாள்களில் எதையும் நிரூபணமின்றி ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு மனநிலையில் நாம் எல்லோரும் வளர்க்கப்பட்டுவிட்டோம். உருவம், உணர்வு அற்ற எதையும் நாம் ஏற்றுக் கொள்வதே இல்லை.//
இல்லை. என்றுமே மனித மனம் நிரூபணமின்றி எதையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலையிலே இருந்திருக்கிறது.
கீதா உபதேசத்திற்கு பிறகும், விஸ்வ ரூப தரிசனத்திற்கு பிறகும் கண்ணன் மேல் முழுமையான நம்பிக்கையை அர்ச்சுணன் வைக்கவில்லையே.
அன்று இருந்தவர்கள் எல்லாம் நல்லவர்கள், இது தான் கலி காலம். கெட்டவர்கள் நிறைந்து உள்ளார்கள் என்ற எண்ணம் தான் சிலர் மனதில் இருக்கிறது. மனிதன் என்றும் இப்படி தான்.
...........
//இறைநிலை இறைபக்தி என்பது காதலைப் போன்றது. வீரம், காதல், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைப் போன்று பக்தியும் ஒரு உணர்வு.//
ReplyDeleteமிக சரி...
எனக்கு வீரம் இருக்கிறது என்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் சண்டைக்கு இழுப்பது பெருமை தராது.
காதலர்கள் தங்களுடைய கேலிக்கைகளை ஊரார் முன் அரங்கேற்றினால் அது அசிங்கம்.
அதே போல் பக்தி அதிகமாகி கொலை செய்யும் அளவுக்கு சென்றால் அது கோடூரம்.
//இறையடியவர்கள் எதையும் வேண்டுவது இல்லை. அவர்களுக்கு எதுவும் வேண்டியதுமில்லை. உடல், உயிர், உறவு, செல்வம், புகழ் என்று இவ்வுலக இன்பம் எதையும் வேண்டாது, உயிரால் மட்டும் உணரக்கூடிய பக்தி உணர்வை மட்டுமே வேண்டுபவர்கள். இவ்வாறு எவரேனும் சொன்னால், செய்தால் அவர்கள் பைத்தியக்காரர்கள் என்று ஒதுக்கிவைத்து, அருகில் செல்லக்கூட அஞ்சுகிறோம்.
ReplyDeleteஇதுவே, தமிழர்கள் அறிந்து உணர்ந்து வந்த பக்தி. காலப்போக்கில், காற்றில் பறந்து வந்து படரும் தூசியினைப் போன்று, பக்தியும் மேலோட்டமான அளவில், மூடநம்பிக்கைகள் பலவற்றின் கலப்படம் அதிகம் கலந்து தாருமாறாக உருவெடுத்து நிற்கிறது.
மனிதனின் பகுத்தறிவு வளரவளர அறியாமையும் வளருகிறது. நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க புதுப்புது நோய்கள் வருவதைப் போன்று..//
அப்படி ஒரு நோய் தான் இங்கே கொலைகளுக்கு காரணம்...
//காதலைப் போன்று பக்தியும் உலகைப் பற்றிக் கவலைப்படாது. வேறு எதைப் பற்றியும் கூட....
ReplyDeleteகாதலர்களைப் போல் இறைஅடியவர்களும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அவர்கள் பக்திநிலைக்கு இடையூறு தோன்றும் போதும். அவர்கள் வண்ங்கும் இறைநிலைக்குத் துன்பம் நேரும் போதும்.//
உணர்ச்சி வசப்பட்டு தெருவில் அசிங்கம் செய்யும் காதலர்களை கண்டதுண்டா? காதல் தன்னை சுற்றி இருப்பதை கவனிக்க வைக்கும். விழிப்பு நிலையில் எப்பொழுதும் தன்னை வைத்திருக்கும்.
காதலுக்கு உயிர்விட்டவர் பலர். கொலை செய்தவர் மிக அரிது. அப்படி கொலை செய்பவரின் காதலை உலகம் மதிப்பதில்லை. அதற்கு பெருமையும் சேர்ப்பதில்லை.
//வெறும் கல்தானே சிவலிங்கம், அதற்கு எதுக்கு கண் கொடுத்தான், மாமிசம் படைத்தான்?? கண்ணப்பர்.
ReplyDelete//
தன்னுடைய உணவையும், தன்னுடைய கண்ணையும் தான் கண்ணப்பர் கொடுத்தார். வேறு யாரையும் அழைத்து வந்து அவருடைய கண்ணை பிடுங்கி கொடுக்கவில்லை.
//இறைவனை, உண்மையான இறைபக்தி உள்ளவர்கள் மட்டுமே உணரமுடியும். மற்றவர்களால் அதை அறியக்கூட முடியாது, அதனால் மற்றவர்களுக்கு அவர்கள் செய்வது அறிவீனமானதாகத்தான் தோன்றும்.
//
உண்மையான இறைபக்தி என்றால் என்ன?
//மனிதர்கள் பால் அன்பு செலுத்துவது -மிதவாதம்; மனிதர்களுக்குத் துன்பம் விளைவிப்பது -தீவிரவாதம்
ReplyDeleteஅப்படியா??//
ஒரு லட்சியத்திற்காக உயிர்களை துன்புறுத்தி லட்சியத்தை அடைய பெறுவது தீவிரவாதம் என்று கொள்ளலாம்.
உணவுக்காக மானை வேட்டையாடும் புலியை தீவிரவாதி என்று யாரும் சொல்வதில்லை.
//நாம மனிதர்கள் நம்மள நேசிப்போம், நம்ம உடலைப் பாதுகாப்போம். உயிருக்கோ, உடலுக்கோ துன்பம் வரும்போது எப்படி செயல்படுவோமோ, அதே மாதிரிதான், கோட்புலி நாயனார் அவருக்கு உடலா உறவா இருந்த சிவப்பெருமானுக்கும், சிவபெருமானோட சேவைக்கும் ஊறு விளைவித்தவர்களிடம் நடந்து கொண்டிருந்தார்.
ReplyDelete//
அப்படினா ஒசாமா பின்லேடனும் அப்படி தான் நடந்து கொள்கிறார். கோடிக் கணக்கில் பணம் இருந்து அவர் ஓடி ஒழிய வேண்டிய தேவை என்ன?
நான் வணங்கும் கருணைக் கடலான ராமனுடைய கோவிலை இடித்து பாபருக்கு மசூதி கட்டிவிட்டார்களே என்ற “அதீத” பாசத்தால் தானே இந்து மத தீவிரவாதிகள் பாபர் மசூதியை இடித்து தள்ளினார்கள்.
இதுவும் கோட்புலிக்கு வழங்கும் நியாயம் போல உங்களால் நியாயம் வழங்க முடியுமா?
அதீத அன்பு என்றால் உங்களை துன்பப்படுத்தி கொள்ளுங்கள். ஏன் உங்கள் கடவுளின் பெயரால், நம்பிக்கையால் மற்றவர் உயிரை வாங்குகிறீர்கள்.
மீண்டும்...
ReplyDelete//வெட்டிப்பயல் said...
This is a lesson - how a bhakthar should be, after he realized how he should not be!
//
how a bhakthar should be?
He felt bad (Cried) after killing Children and Women? what is the lesson in that? That we should cry after Murdering Kids and Women...
This is my question... What is the lesson from the life of Kotpuli?
மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. காந்தி சிறுவயதில் திருடியிருக்கிறார். வால்மீகி திருடனாக இருந்திருக்கிறார். இவர்கள் அதை நினைத்து வருந்தியதால் பெருமை இல்லை. அதற்கு பிறகு என்ன செய்தார்கள் என்பதால் தான் பெருமை.
ReplyDeleteஇங்கே கோட்புலி அதை நினைத்து வருந்தினார் என்பதோடு முடிகிறது. இவர்கள் பெருமையாக சொல்ல நினைப்பது, குடும்பம் என்றும் பார்க்காமல் சிவனடியார்களுக்கு தீங்கு விளைவித்தவர்களை கொன்றார் என்பதை தான்.
அதனால் காந்தி, வால்மீகியுடன் கோட்புலியை சமமாக சொல்ல முடியாது. இவர்கள் பெருமையாக சொல்வதே கருணை இல்லாத, கொடூரமான ஒரு செயலைத் தான்.
நாளை எந்த அரசாவது திருடர்களின் மனைவி, பிள்ளைகளை தூக்கில் இட வேண்டும், கொல்ல வேண்டும் என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா?
அதீத பக்தி, அதீத பாசம் என்று சைக்கோத்தனமாக ப்ளான் செய்து கொள்வது பக்தி என்று கொண்டாடினால் உங்களை காக்க அந்த ஈசன் தான் வர வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு நாம் இதை தான் பக்தி என்று சொல்லிக் கொடுத்தால் இந்தியாவில் இந்து மதம் இருக்கும் வரை அமைதி இருக்கப் போவதில்லை.
வெட்டிப்பயல் said...
ReplyDeleteஇறைபக்தி என்றால் என்ன?///
பின்னூட்டத்தில் கேட்பதை விட கோவிலுக்கு சென்று அந்த ஈசனிடம் சென்று கேளுங்கள்.
அவர் சொல்லி தருவார். மானசீகமாக!
உங்களால் முடியுமா!
This comment has been removed by the author.
ReplyDelete//ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பே தொல்காப்பியமும், திருக்குறளும் வந்துவிட்டது. தமிழ் சமூகம், சமூக அமைப்பில் மிக உயர்ந்த நிலையிலே அன்று இருக்கிறது. பழங்குடி என்று சொல்லி தப்பிக்க முடியாது. சமணமும், பௌத்தமும் தமிழ் மண்ணில் பரவி விட்டிருந்தது. அதனால் உயிர் கொலை சிறந்ததென்று அன்றைய தமிழ் சமூகத்தில் எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை.//
ReplyDelete200 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய வரலாறு ஒட்டி கருத்து கூறும் ஒருவர் "பெரியாரின் தாக்கம் இருந்த தமிழ்நாட்டில், திராவிட இயக்கங்களின் ஆட்சி நடந்தபோதும் தமிழ் நாட்டில் கோவில்கள் திறந்திருந்திருந்து, பூசைகள் நடைபெற்றன என்பதை நம்ப முடியாது" ன்னு யாரும் கருத்து கூறினால் நாமும் அந்தக் கூற்றுச் சரியாகக் கூட இருக்கும் என்று நினைப்போம் :)
@வெட்டிப்பயல்...
ReplyDeleteஇல்லை. என்றுமே மனித மனம் நிரூபணமின்றி எதையும் ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலையிலே இருந்திருக்கிறது.
கீதா உபதேசத்திற்கு பிறகும், விஸ்வ ரூப தரிசனத்திற்கு பிறகும் கண்ணன் மேல் முழுமையான நம்பிக்கையை அர்ச்சுணன் வைக்கவில்லையே.
அன்று இருந்தவர்கள் எல்லாம் நல்லவர்கள், இது தான் கலி காலம். கெட்டவர்கள் நிறைந்து உள்ளார்கள் என்ற எண்ணம் தான் சிலர் மனதில் இருக்கிறது. மனிதன் என்றும் இப்படி தான்.//
எப்போதுமே மனிதர்கள் எதையும் நிரூபனமின்றி நம்பமாட்டார்கள் என்ற நிலை மட்டும் மாறாமல் இருக்கும் போது, நல்லவர்கள் மட்டும் நிறைந்திருந்த்து அந்த காலம், இன்று அனைவரும் மாறிவிட்டிருக்கின்றனர் என்பது மட்டும் எப்படி மாறியது.
தருக்க ரீதியாக எல்லாவற்றையும் பேசலாம்... ஆனால், உண்மையில் உலகம் அப்படி அல்ல. அது பலவகைகளில் நெகிழ்வுத்தன்மை கொண்டது.
வெட்டிப்பயல் said...
ReplyDelete//இறைநிலை இறைபக்தி என்பது காதலைப் போன்றது. வீரம், காதல், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைப் போன்று பக்தியும் ஒரு உணர்வு.//
மிக சரி...
எனக்கு வீரம் இருக்கிறது என்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் சண்டைக்கு இழுப்பது பெருமை தராது.
காதலர்கள் தங்களுடைய கேலிக்கைகளை ஊரார் முன் அரங்கேற்றினால் அது அசிங்கம்.
அதே போல் பக்தி அதிகமாகி கொலை செய்யும் அளவுக்கு சென்றால் அது கோடூரம்.//
வீரமோ, பேச்சாற்றலோ... எந்த திறமையாய் இருந்தாலும், எதுவாயினும் தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்துவேண்டும் என்ற அறிவு மாக்களுக்கே இருக்கின்றது.
காதல் என்றால், ஆணும் பெண்ணும் இருவருக்குமான உணர்வுதான் காதல் என்பது தவறான புரிதல். தன் தந்தை, கணவர், மற்றும் பிள்ளைகள் பலரையும் போருக்கனுப்பி, இறுதியாகத் தானே போருக்குச் சென்ற தமிழ்ப்பெண்ணுக்கு வீர உணர்வினை விட காதல் உணர்வு அதிகமிருந்ததால் தான் அவளால் செல்ல முடிந்தது. அவள் நாட்டின் மேல் அவளுக்கிருந்த காதல்.
காதலை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயானது என்ற குறுகிய உணர்வைத் தவிர்த்து விட்டுப் பார்த்தல் நலம்.
பக்தி அதிகமானால் தான் கொலை செய்யும் நிலையைத் தூண்டும் என்று சொல்வது சரியானதாகத் தோன்றவில்லை.
தேர்வில் பார்த்து எழுத வேண்டாம் என்பது விதிமுறை. அதையும் மீறி எழுதினால் அவர்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை.
இங்கு தண்டனை அவர்கள் பார்த்து எழுதியதற்காக அல்ல. விதிமுறைகளை மீறியதற்காக. அதுபோல்தான், கோட்புலியாரும்.
@வெட்டிப்பயல்...,
ReplyDeleteகாதலுக்கு உயிர்விட்டவர் பலர். கொலை செய்தவர் மிக அரிது. அப்படி கொலை செய்பவரின் காதலை உலகம் மதிப்பதில்லை. அதற்கு பெருமையும் சேர்ப்பதில்லை.//
காதல் நீங்கள் பார்க்கின்ற ஒரு பார்வையில் மட்டும் பார்த்தால்... நான் என்ன செய்ய??
தேச விடுதலைக்காக, எத்தனையோ பேர் அந்நியர்களை எதிர்த்துப் போராடி இருக்கின்றனர். அவர்களைக் கொன்றும் இருக்கின்றனர். எவரும் போய் தற்கொலை செய்து கொண்டதில்லை. இது எல்லா நாட்டு வரலாற்றிலும் இருக்கின்றது.
வெட்டிப்பயல் said...
ReplyDelete//மனிதர்கள் பால் அன்பு செலுத்துவது -மிதவாதம்; மனிதர்களுக்குத் துன்பம் விளைவிப்பது -தீவிரவாதம்
அப்படியா??//
ஒரு லட்சியத்திற்காக உயிர்களை துன்புறுத்தி லட்சியத்தை அடைய பெறுவது தீவிரவாதம் என்று கொள்ளலாம்.
உணவுக்காக மானை வேட்டையாடும் புலியை தீவிரவாதி என்று யாரும் சொல்வதில்லை.//
மானும், புலியும் மனிதர்கள் அல்லவே. அவைகளுக்கு மிதவாதியும் தெரியாது, தீவிரவாதியும் தெரியாது.
ஆனால், நாம் மனிதர்கள். ஒன்றை சரி என்றால் அது முழுவதும் சரியானதாக இருக்க வேண்டும். நான் உணவுக்காக ஒரு உயிரைக் கொன்றேன் என்ற அளவில் சரி என்னும் போது, தன் சொல்லை மீறியவர்களைக் கொன்றது எப்படி சரி இல்லாமல் போகும். எப்படி இருந்தாலும் அது கொலை தானே. ஒருகால், உணவுக்காகக் கொன்றால் அது இலட்சியக்கொலையோ...
தன் கற்பிற்கோ, தன் பிள்ளைகளுக்கோ, கணவருக்கோத் தீங்கு நேரும் வேளையில் பெண்களே கொலை செய்திருக்கிறார்கள். தற்காப்புக்கு செய்தால் அதுவும் இலட்சியக் கொலையோ... இலட்சியக் கொலைகளிலும் உயிர்கள் இறக்கத்தானே செய்கின்றன.
வெட்டிப்பயல் said...
ReplyDelete//நாம மனிதர்கள் நம்மள நேசிப்போம், நம்ம உடலைப் பாதுகாப்போம். உயிருக்கோ, உடலுக்கோ துன்பம் வரும்போது எப்படி செயல்படுவோமோ, அதே மாதிரிதான், கோட்புலி நாயனார் அவருக்கு உடலா உறவா இருந்த சிவப்பெருமானுக்கும், சிவபெருமானோட சேவைக்கும் ஊறு விளைவித்தவர்களிடம் நடந்து கொண்டிருந்தார்.
//
அப்படினா ஒசாமா பின்லேடனும் அப்படி தான் நடந்து கொள்கிறார். கோடிக் கணக்கில் பணம் இருந்து அவர் ஓடி ஒழிய வேண்டிய தேவை என்ன?
நான் வணங்கும் கருணைக் கடலான ராமனுடைய கோவிலை இடித்து பாபருக்கு மசூதி கட்டிவிட்டார்களே என்ற “அதீத” பாசத்தால் தானே இந்து மத தீவிரவாதிகள் பாபர் மசூதியை இடித்து தள்ளினார்கள்.
இதுவும் கோட்புலிக்கு வழங்கும் நியாயம் போல உங்களால் நியாயம் வழங்க முடியுமா?
அதீத அன்பு என்றால் உங்களை துன்பப்படுத்தி கொள்ளுங்கள். ஏன் உங்கள் கடவுளின் பெயரால், நம்பிக்கையால் மற்றவர் உயிரை வாங்குகிறீர்கள்.//
பக்தியானது அக்காலத்தில் இருந்த பரிமாணத்தில் இப்போது இல்லை. பக்தியாளர்கள் அனைவரும் இவ்வாறு நடந்து கொள்ளவில்லையே. ஒரு சில விதிவிலக்குகள். மனிதர்கள் அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. எல்லா மலரும் ஒரே மாதிரியான மணம் வீசுவதில்லை.
சமய இலக்கியங்களில் எத்துனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனவே. இறைஅடியவர்கள் எத்தனையோ பேர் நல்லவர்களாக, அன்பை மட்டும் போதித்தவர்களாக, அறவாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். அவர்களைப் பற்றியுந்தான் இலக்கியங்களில் இருக்கின்றது.
சுற்றி வளைத்து ஏன் பேச்சை எங்கெங்கோ கொண்டு போகனும். உங்களுக்கு என்ன, உயிர்க்கொலை செய்த ஒருவரை அடியவராக எண்ணி வரலாற்றில் வைத்தால் சந்ததிகளும் அதைப் பின்பற்றிக் கெட்டுப் போவார்கள் என்பது தானே!
ReplyDeleteஅவர் செய்தது தவறுதான். உறவினர்களைக் கொன்றிருக்கக் கூடாதுதான். ஏதோ உணர்ச்சிவசப்பட்டுட்டார்.
இன்று எத்தனையோ அநியாயங்கள் கோயில்களில் நடக்கின்றன. இறைவன் பெயரால் எவ்வளவோ மோசடிகள். இவை எல்லாம் எந்த இலக்கியங்களிலும் இல்லையே. பின்னர் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது. இன்றைய உலகில் நடப்பதைப் பார்த்துக் கெட்டுப் போவதை விட, இலக்கியங்களைப் படித்துத்தான் கெட்டுப் போவார்கள் என்பது சரியானதாக இல்லையே.
படித்தவர்களோ, படிக்காதவர்களோ, வரலாறு அறிந்தவர்களோ, அறியாதவர்களோ எவரும் படித்ததை அப்படியே பின்பற்றுவதில்லை. அந்த சூழலில் அவர்கள் நடந்துகொள்வது அவர்களது EQ வைப் பொறுத்தது.
தனக்கு இல்லாவிட்டாலும், கோயில் தானதர்மங்களுக்கென்று கொடுத்தது அந்தக்காலம்.
ReplyDeleteதனக்குத் தேவையானவற்றிற்கும் மேல் பணம் சம்மாதிக்க, குறுகிய வழியில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கத்தான் கோயிலும் கடவுளும் என்பது இந்தக்காலம்.
அக்கால அடியவர்கள் எதையும் பேர், புகழ், ஆடம்பரம், சுகபோக வாழ்வு ஆகியவற்றிற்காக எதையுமே செய்ததில்லை. ஆனால், இன்றைய நாள்களில் இறை அடியவர்கள் என்ற போர்வையே அத்தகைய ஒரு வாழ்க்கைக்காகத்தான். இது ஆன்மீகம்.
தான் அரசாட்சியை விரும்பாவிட்டாலும், தன் சந்ததிகளால் கூட வாரிசுரிமை போர் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் துறவு பூண்டவர் - இளங்கோவடிகள். இன்றைய சூழல்...?? இது அரசியல்.
சாவா மருந்தாயினும் விருந்தினர் உண்டது போக மிச்சமுண்ட தமிழர்கள், இன்று...?? இது இல்லறம்.
எந்த நிலையிலயும் அக்கால வாழ்வைப் பின்பற்றாத நாம், அக்கால வாழ்க்கை முறையை முழுமையாக அறிந்துணராத நாம், அக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு இக்காலத்திற்கேற்ற விளக்கம் தருவது எப்படி சரியானதாகும்??
//காதல் என்றால், ஆணும் பெண்ணும் இருவருக்குமான உணர்வுதான் காதல் என்பது தவறான புரிதல். தன் தந்தை, கணவர், மற்றும் பிள்ளைகள் பலரையும் போருக்கனுப்பி, இறுதியாகத் தானே போருக்குச் சென்ற தமிழ்ப்பெண்ணுக்கு வீர உணர்வினை விட காதல் உணர்வு அதிகமிருந்ததால் தான் அவளால் செல்ல முடிந்தது. அவள் நாட்டின் மேல் அவளுக்கிருந்த காதல்.
ReplyDelete//
நானும் என் அண்ணனும் சின்ன வயசுல இருந்து காதலிச்சிட்டு இருக்கோம்னு சொன்னா அதுக்கு அர்த்தம் வேற. எங்க அண்ணனுக்கு சின்ன வயசுல இருந்தே என் மேல பாசம்னு சொன்னா அதுக்கு அர்த்தம் வேற.
ஆங்கிலத்துல தான் Loveனு ஒரு வார்த்தைல அடைச்சிட்டான். தமிழ்ல காதல், அன்பு, பாசம், பற்று அப்படினு நிறைய வார்த்தைகள் இருக்கு.
காதலுக்காக அப்படி போருக்கு போன பெண் யாரையாவது காதலுக்கு எடுத்துக்காட்டா சொல்லுங்க பார்ப்போம்.
லைலா மஜ்னு, சலீம் அனார்க்கலி, தேவதாஸ் பார்வதி இப்படி காவியக் காதல் யாராவது சொல்லுங்க.
அந்த பெண்களை வீரத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்வார்கள். காதலுக்கு அல்ல :)
//சுற்றி வளைத்து ஏன் பேச்சை எங்கெங்கோ கொண்டு போகனும். உங்களுக்கு என்ன, உயிர்க்கொலை செய்த ஒருவரை அடியவராக எண்ணி வரலாற்றில் வைத்தால் சந்ததிகளும் அதைப் பின்பற்றிக் கெட்டுப் போவார்கள் என்பது தானே!
ReplyDeleteஅவர் செய்தது தவறுதான். உறவினர்களைக் கொன்றிருக்கக் கூடாதுதான். ஏதோ உணர்ச்சிவசப்பட்டுட்டார்.
இன்று எத்தனையோ அநியாயங்கள் கோயில்களில் நடக்கின்றன. இறைவன் பெயரால் எவ்வளவோ மோசடிகள். இவை எல்லாம் எந்த இலக்கியங்களிலும் இல்லையே. பின்னர் எப்படி இவர்களுக்குத் தெரிந்தது. இன்றைய உலகில் நடப்பதைப் பார்த்துக் கெட்டுப் போவதை விட, இலக்கியங்களைப் படித்துத்தான் கெட்டுப் போவார்கள் என்பது சரியானதாக இல்லையே.
படித்தவர்களோ, படிக்காதவர்களோ, வரலாறு அறிந்தவர்களோ, அறியாதவர்களோ எவரும் படித்ததை அப்படியே பின்பற்றுவதில்லை. அந்த சூழலில் அவர்கள் நடந்துகொள்வது அவர்களது EQ வைப் பொறுத்தது.//
நாளைக்கு நித்யானந்தாவை அடியவர்கள் லிஸ்டில் சேர்ப்பீர்களா? ஏதோ ஒரு தவறு தானே செய்திருக்கார்.
கோவிலில் தான் பல பாவங்கள் நடக்குது. நித்யானந்தா யாரையாவது கொன்றாரா, கொள்ளை அடித்தாரா?
அவரையும் அடியவர்கள் லிஸ்டில் சேர்த்து கோவிலில் வைத்து பூஜிக்கலாமா?
அதான் எல்லாருக்கும் EQ இருக்கிறதே.
இறைபக்தி என்பது இதுதான்.. இது இத்தனை அடி உயரம், இத்தனை அடி நீளம், இத்தனை அடி அகலம் கொண்டது என்று எவராலும் சொல்ல இயலாது. உங்களால் இறைவனை, எந்த சுயநலமில்லாத, புறகாரணிகளால் பாதிக்கப்படாமல், முழுமையாக இறைவனை உணர முடிந்தால்... இறைபக்தி உங்களுக்குத் தானாகவே வந்துவிடும்.
ReplyDeleteசுவரில்லாமல் சித்திரம் வரையமுடியாது... இறைவனை உணராமல், இறைபக்தியை அறிந்துணர இயலாது.
அது சரி, இறைவன் என்பவன் யார்??
இதுக்கும் விளக்கம் நம்ம திருவள்ளுவர் ஐயாவே சொல்லியிருக்கார். அவரை விடத் தெளிவா விளக்கமா சொல்ல எனக்கு ஞானம் இல்லை.
வெட்டிப்பயல் said...
ReplyDeleteமீண்டும்...
//வெட்டிப்பயல் said...
This is a lesson - how a bhakthar should be, after he realized how he should not be!
//
how a bhakthar should be?
He felt bad (Cried) after killing Children and Women? what is the lesson in that? That we should cry after Murdering Kids and Women...
This is my question... What is the lesson from the life of Kotpuli?
நன்றி முகில், இது வரை களம் காத்தமைக்கு! :)
ReplyDeleteவெட்டி கேட்பதில் பெரிய தவறொன்றும் இல்லை! இது யாருக்கும் தோனக் கூடிய ஒன்றே!
பந்தலில் எந்தக் கேள்விக்கும் தடை சொல்லியது கிடையாது - அது ஆத்திகமோ/நாத்திகமோ! கோவி.கண்ணனோ/மெளலி அண்ணாவோ!
ஆனால்...
தடை சொல்லாமல் விடுவது என்பது ஒன்று!
வந்த கேள்வியைக் கண்டுகொள்ளாமல் போவது ஒன்று - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையோடு போய் விடலாம்! இது பதிவுலகில் பலரும் செய்வது தான்!
ஆனால் அது ஆன்ம ரீதியான ஆன்மீகத்துக்கு அழகல்ல! இயன்ற வரை கூட்டாகப் பதில் தேடுவது தான் "தேடல்"! கூடி இருந்து குளிர்ந்தேலோ!
கூடக்கூட விவாதிக்க வேண்டும், வாதத்தில் வெற்றி போன்ற நோக்கம் அல்ல! நல்ல ஆன்மீகத்தில் "தேடல்" என்பது தடைபடக் கூடாது என்பது தான் நோக்கம்! அதனால் தான் முன்பெல்லாம் பல கேள்விகளுக்கும் இதே approachஐ பின்பற்றி வந்தேன்!
ஆனால் இப்போது அது தவறான அணுகுமுறையோ என்ற சந்தேகம் மனசுக்கு தோனுது!
ஏனென்றால்...கேள்விகளில் முதலில் நியாயம் இருந்தாலும், போகப்போக...அதில் தேடல் குறைந்து, சாடல் எழுகிறது!
//or you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list//
இந்த வாசகம் - தேடலா? சாடலா?
இதே, இதை இன்னொருவர் எழுப்பி இருந்தால், மன்னிப்பு கேட்கும் வரை ஓய மாட்டார்கள்!
* இந்த வாசகம் - தேடலா? சாடலா?
அது சைவமோ, வைணவமோ, கிறிஸ்துவமோ, இஸ்லாமோ, பகுத்தறிவோ...பந்தலில் அனைத்துமே பவனி வந்துள்ளன! "தேடல்" என்பதன் அடிப்படையில்! "அடியார்கள்" என்ற அடிப்படையில்!
"அடியவர்கள்" = எவராயினும், அடியைப் பற்றிக் கொண்டவர்கள்! அதனால் இந்த வாசகம் கண்டு கலங்கியது என்னவோ உண்மை!
அதனால் தான், அதை அறியும் வரை, நேற்றில் இருந்து இந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் இருந்தேன்! தேடலா? சாடலா? என்பதை அறிந்த பின், தேடலுக்கு மீண்டும் வருகிறேன்!
அது வரை, இன்ன சில பெரியவர்கள் வந்து விளக்குமாறு மின்னஞ்சலில் கேட்டுக் கொண்டுள்ளேன்!
////or you should bring some Saamiyar to your place and give your daughter to him so that he will add you to Naayanmaar list//
ReplyDeleteஇந்த வாசகம் - தேடலா? சாடலா?
இதே, இதை இன்னொருவர் எழுப்பி இருந்தால், மன்னிப்பு கேட்கும் வரை ஓய மாட்டார்கள்! //
அடியவர்களை தவறாக சொல்லியதற்கே உருகும் உங்கள் நெஞ்சம், ஈவு இரக்கம் இல்லாமல் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை எப்படி ஏற்கிறது?
அடியவர்களின் கற்பு முக்கியம் ஆனால் மற்றவர்களின் உயிருக்கு மரியாதை இல்லை. அப்படி தானே?
இது வேண்டுமென்றே நான் எழுப்பிய கேள்வி தான். இப்பொழுது எனக்கு கண்டனம் சொல்லி தலை குனிகிறேன் என்று சொல்லும் உங்கள் உள்ளம் ஏன் அந்த குழந்தைகளுக்காக உருகவில்லை? இதே அடியவர்களின் பிள்ளைகள் என்றால் மட்டும் தான் உருகுமா?
பெற்றவர்களின் தவறுக்கு அவர்கள் குலத்தையே அழிப்பது எவ்வளவு கொடூரம் என்று இன்னும் புரியவில்லையா?
கற்பை விட உயிர் எந்த விதத்தில் குறைந்தது? நான் தரம் தாழ்ந்ததாக சொல்லும் உங்கள் நெஞ்சம், கோட்புலி தரம் தாழ்ந்ததாக ஏன் சொல்லவில்லை?
அடியைப் பற்றியவர்கள் எவராயினும் அடியவர்கள் என்றால் ஒசாமா அடியவரா? பாபர் மசூதியை இடித்தவர்கள் அடியவர்களா? அவர்களை இறைவன் ஏற்பானா?
நாங்கள் எல்லாம் பக்தியாளர்கள், எங்கள் கூட்டத்தினரைப் பற்றி பேசினால் எங்கள் உள்ளம் உருகும், அவர்கள் பிள்ளைகளைப் பற்றி பேசினால் நாங்கள் உருகுவோம். மற்ற உயிர்களுக்கு எங்களிடம் மரியாதை இல்லை என்பதைப் போல் தோன்றுகிறது...
கோட்புலி நாயனார் சொந்தம் பந்தம் என்று பார்க்காமல் சிவபெருமான் மேல் எவ்வளவு அன்பு
ReplyDeleteவைத்துள்ளார்.
அன்பே சிவம்!
kk
உங்கள் முரண்பாடுகள் இதோ:
ReplyDelete//அடியவர்களை தவறாக சொல்லியதற்கே உருகும் உங்கள் நெஞ்சம், ஈவு இரக்கம் இல்லாமல் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை எப்படி ஏற்கிறது?//
கோட்புலி செய்த கடைசிக் கட்டத் தண்டனைக் கொலைகள் ஏற்புடைத்து அல்ல என்று முன்னரே சொல்லி விட்டேன்! அதற்குப் பதிலாக அன்னதானக் கூடத்தில் அவர்களைக் கூலி இல்லாமல் வேலை செய்ய வைத்து, பசிக் கொடுமையை உணர்த்தி இருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்னதே நான் தான்!
ஏற்கவில்லை என்ற சொன்ன பின்பும், "உங்கள் நெஞ்சம் எப்படி ஏற்கிறது, எப்படி ஏற்கிறது" என்று திரும்பத் திரும்பக் கேட்டு, அதே அரசியல் தான் செய்கிறீர்கள்!
//அடியவர்களின் கற்பு முக்கியம் ஆனால் மற்றவர்களின் உயிருக்கு மரியாதை இல்லை. அப்படி தானே?//
கற்பை விடவும் உயிர் முக்கியம்...அது அடியவரோ, கொடியவரோ!
தற்கொலைக்கு முயன்று, பிழைத்து, இன்றும் வாழாமல் வாழ்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்! தெரிய வரும்!
//பெற்றவர்களின் தவறுக்கு அவர்கள் குலத்தையே அழிப்பது எவ்வளவு கொடூரம் என்று இன்னும் புரியவில்லையா?//
ReplyDeleteஇதற்கும் முன்பே சொல்லியாகி விட்டது! கோட்புலி தவறிழைத்த சுற்றத்தாரைக் கொன்று, பின்னர் தானும் மாண்டார் (சிவகதி அடைந்தார்) என்பது மட்டுமே மூலநூல் சொல்லுவது - திருத்தொண்டத் தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி!
குழந்தையைக் கூடப் பாராமல் வாளால் வெட்டினார் என்பதெல்லாம் பின்னாளைய பெரிய புராணப் புனைவு! சேக்கிழார் முதலானவர்கள் எழுதியது! இதற்கான முன்னிகை திருத்தொண்டத் தொகையில் இல்லவே இல்லை! இதை ஸ்ரீதர் நாராயணனுக்கு அளித்த பதிலில் முன்னரே சொல்லி விட்டேன்! அதையும் வாசித்துப் பாருங்கள்!
//அடியைப் பற்றியவர்கள் எவராயினும் அடியவர்கள் என்றால் ஒசாமா அடியவரா?//
இல்லை!
//பாபர் மசூதியை இடித்தவர்கள் அடியவர்களா? அவர்களை இறைவன் ஏற்பானா?//
இல்லை!
அடியைப் "பற்றினவர்கள்" தான் அடியவர்கள்!
"பற்றினவர்கள்" என்பதற்கும் "தொட்டுக் கொண்டவர்கள்" என்பதற்கும் வித்தியாசம் உள்ளது!
"பற்றுதல்", "பற்றுக" பற்றற்றான் பற்றினை = அடியைப் "பற்றுதல்" - அவ்வாறு வருவது!
பற்றினவர்கள் யார்? = விடுவன எல்லாம் விட்டு, தன்னையும் விட்டவர்கள்! அவன் ஒருவனையே "பற்றிக்" கொண்டவர்கள்! தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளாது, அதையும் அவனுக்கே விட்டவர்கள்!
மேற்கூறிய "பற்றுதல்"-இல் இருந்து, ஓசாமா, பாபர் மசூதி இடிப்பாளர்கள், அடியைப் பற்றினவர்களா? என்பதைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளவும்!
கோட்புலி "பற்றினார்" என்பதால் தான், இந்தக் கோரச் சம்பவத்துக்குப் பிறகு அவர் வாழவே இல்லை!
இத்தனை நாள் அன்னதானத் தொண்டும், இப்படி ஒரு கோரத்தில் முடிந்து விட்டதே என்று மாண்டும் போனார்! கணக்கு போட்டு, கணக்கு போட்டு, அடுத்த Target என்ன என்று மதத்தின் பேரால் அரசியல் செய்யவில்லை! தன் செயலுக்கு ஒரு அமைப்பு உருவாக்கி விட்டும் செல்லவில்லை! கண நேரத்தில் "பற்றுதலை" மறந்தவர், அந்தப் பற்றை மீண்டும் எண்ணி, மாண்டே போனார்!
//நாங்கள் எல்லாம் பக்தியாளர்கள், அவர்கள் பிள்ளைகளைப் பற்றி பேசினால் நாங்கள் உருகுவோம். மற்ற உயிர்களுக்கு எங்களிடம் மரியாதை இல்லை என்பதைப் போல் தோன்றுகிறது...//
ReplyDeleteஒன்றை ஏற்கவில்லை என்று சொன்ன பின்பும், பேசிற்றே பேசிப்பேசி, பத்துமுறை அடித்தால் ஒரு முறையாவது நிலைத்து விடும் என்ற சைவ-வைணவக் கும்மி...பந்தலில் சிலர் முன்பு செய்தது தான்! இதைப் போல் வார்த்தை இடுக்குகளில் ஒளிந்து கொண்டு, வரிக்கு வரி அரசியல் செய்வதற்கு மிகுந்த திறமை வேண்டும்! வாழ்த்துக்கள்!
சாம்பிளுக்கு...உங்கள் வரியில் இருந்து கூட ஆரம்பிக்கலாம்!
//அடியவர்களை தவறாக சொல்லியதற்கே உருகும் உங்கள் நெஞ்சம், ஈவு இரக்கம் இல்லாமல் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை எப்படி ஏற்கிறது?//
குழந்தைகளையும், பெண்களையும்....என்று மட்டும் விட்டு விட்டீர்களே! ஏன் மற்ற உயிர்கள், உயிர்கள் இல்லையா? உயிருக்கு ஆண் ஏது? பெண் ஏது? உடலுக்கு மட்டும் தானே அதெல்லாம்? எதற்கு குழந்தைகளையும், பெண்களையும்...குழந்தைகளையும், பெண்களையும்...என்பதை மட்டும் வரிக்கு வரி சொல்கிறீர்கள்? அப்படியென்றால் மற்ற உயிர்கள் என்ன Cheapஆ? How dare u have an order of priority for lives?
இப்படி நானும் கேட்டுக் கொண்டே போகலாம்! Just Hypothetical! இது தான் நீங்கள் செய்து கொண்டிருப்பது!
உங்கள் நோக்கம் என்ன?
= தேடலா? சாடலா??
தேடல் என்று தான் இது வரை உங்களை நம்புகிறேன்! அதனால் தான் உடல் வலியிலும் இத்தனையும் எடுத்துக்காட்டப் புகுந்தேன்!
நான் இங்கு நாயன்மாரைப் பற்றிச் சொன்னது பலவும், சைவ நூற்களில் இருக்காது!
அவர் அழுது மாண்டு போனார் என்பதைக் கூட பின்னாளைய புனைவுகளில் சொல்லாமல் விடுத்து, குழந்தையைக் கூடக் கொன்றார் என்று சிலர் சிலாகித்தும் இருப்பார்கள்! சிவனை விலைபேசி விட்டுச் சைவத்தைக் காப்பாற்றத் துடிப்பது போல்...கண் இரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கி்னாற் போல் :((
ஆனால் மூல நூலைப் பார்த்தால், அடியவர் யார் என்று ஒருவாறு விளங்க வரும்!
"அடியார்கள் வாழ" என்று முதலில் சொல்லி விட்டுத் தான்...
"அரங்கநகர் வாழ",
"சடகோபன் தன் தமிழ்நூல் வாழ"
என்று சொல்லி...
அடியவருக்குப் பின்னரே, அழகு தமிழை நிறுத்தி,
அதன் பின்னர் தான் ஆண்டவனையே நிறுத்தும் மரபை மனத்தால் போற்றுபவன் நான்! அதனால் தான் அடியவர் என்னும் விஷயத்தில் இத்தனை மெனக்கெடுகிறேன் - அது சைவமோ, வைணவமோ...
அடியவர் திருக்கதைகள், புனைவுகள் அதிகம் இன்றி, இயல்பாக, உள்ளது உள்ளபடியே...
இன்றும் நாளையும் உள்ள தலைமுறைகளுக்கும் இயன்றவாறு சேர்ப்பிக்க வேண்டும் என்பதே ஆவல்! பந்தலில் இதுவரை வந்த நாயன்மார் பதிவுகள் அந்த அடிப்படையில் தான்!
* காரைக்கால் அம்மையார்-பெண்கள் ஆன்மீக/இலக்கியத் துறைகளில் வெற்றி (Icon Poetry)
* நீலநக்க நாயனார் மனைவி-சிவலிங்கம் மேல் ஊதி, எச்சில் பட்டாலும், சாஸ்திரம் வேறு, சிவ-அன்பு வேறு...
இப்படியெல்லாமான Focus வழக்கமான புத்தகங்களில் இருக்காது! சைவ மடப் பதிப்பகங்களில் இருக்காது! ஆனால் இந்தப் பதிவுகளில் இருக்கும்!
மற்றபடி, எனக்கு அடியவர் உயிர் மட்டுமே பெரிது, மற்ற உயிர்கள் எக்கேடு போனால் என்ன என்ற மனப்பான்மை இல்லை, ஜஸ்டிஸ் வெட்டிப்பயல் அவர்களே!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
அது திருவாரூர் சிவ ஸ்தலத்தில் பிறந்தாலும் சரி...
Illegitimate Child என்று முத்திரை குத்தினாலும், ஆசிர்வதிக்கப்பட்ட அந்தக் குழந்தை ஆனாலும் சரி...
முருகா!
என்னளவில் முத்தாய்ப்பாகச் சொல்லி முடிக்கிறேன்...Have to go now for an appointment!
ReplyDeleteமீதியை, வலையுலகில் உள்ள சைவப் பெரியவர்கள் வந்து மேல் விளக்கம் தரலாம், பொதுக் கடமையாக! மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்!
இது என்னளவில் மட்டுமே! மூல நூலில் இருந்து! புனைவுகளில் இருந்து அல்ல!
(சேக்கிழாரின் பெரியபுராணத்தில் இவ்வளவு புனைவுகள் தேவையே இல்லை என்று முன்பே சொல்லி, வாங்கிக் கட்டிக்கொண்டும் உள்ளேன்! திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடித்து மண்டையை உடைத்ததை உள்ளவாறு காட்டுகின்றார்களே! ஆனால் நந்தனாரைப் பூர்ண கும்பத்துடன் வரவேற்று தீக்குளிக்கச் சொன்னார்கள் என்று எழுதும் போது புனைவு அப்பட்டமாகத் தெரிந்து, நல்ல கருத்தும் அதனால் அடிபட்டு போகிறது, வரும் தலைமுறைகளும் ஏற்க மறுக்கும் என்று சொல்லி...அப்போது அதுவும் வைணவக் கும்மியாகவே பார்க்கப்பட்டது! :) இருப்பினும் அடியார்கள் வாழ...அவர்தம் திருக்கதைகள் நம்மை வாழ்விக்க...இதோ...என்னளவில்...
* "கொன்று குவித்த பெருமைக்காக", கோட்புலியை நாயன்மார் என்று கொண்டாடவில்லை!
* அவர் முன்பே சிவத் தொண்டிலும், அடியார் தொண்டிலும் ஈடுபட்டு, பலரின் பசிப்பிணி ஆற்றியவர்! அதனால் தான் அவர் நாயன்மார்!
இங்கே நான் சொல்வதெல்லாம்...
1. கோட்புலி, அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, தவறிழைத்த சுற்றத்தைக் கொன்றது தவறு! அவ்வளவு தொண்டில் ஈடுபட்டுவர், கடைசியில் இப்படிச் செய்திருக்க வேண்டாம் தான்! He did it in a fit of rage! Not a worthy act!
2. ஆனால், அதற்காக, அவரை, "இவன் எல்லாம் நாயன்மாரா? இது என்ற அஃறிணை, இவன் ஒரு டெரரிஸ்ட்" என்று சொல்லத் தேவையில்லை என்பதே...நான் உங்களுக்கு முன் வைத்தேன்!
கடைசியில், fit of rage-இல் செய்தது குற்றம் குற்றமே!
ஆனால் அதற்காக அவர் முன்பு செய்த தொண்டெல்லாம் பாழாகி விடாது! அவர் நாயன்மார் என்பதில் இருந்து de-promote ஆகி விடவும் மாட்டார் என்பதே காட்ட விழைவது!
இந்தக் கொலைகளைக் கொண்டாடி, அவர் நாயன்மார் ஆகிடவில்லை!
பசிப்பிணி ஆற்றிய தொண்டில் அவர் என்றும் நாயன்மாரே!
To make it very simple...
1. நாயன்மார் கடைசியில் செய்தது தவறு!
2. தவறு செய்ததாலேயே அவர் அடியவர் என்னும் முந்தைய தகுதியையும் இழந்திடவில்லை!
உங்கள் நோக்கம் என்ன?
1. இவர் செய்தது தவறு என்று காட்டுவதா?
2. இவர் அடியவர் அல்ல! இவரை நாயன்மார் வரிசையில் இருந்து தூக்க வேண்டும் என்பதா?
If it is 1st option, even before you raised, I myself told, his last action (fit of rage) wasn't right!
If it is 2nd option, then instead of just speaking like a vaai chol veeran, you have to act!
Do the needful, or atleast make some positive efforts, so that he is dethroned from naayanmar and his story will not go to future generations!
1. Write to publications like kizhakku, to stop publishing such stories!
2. Discuss with saivap perumakkaL and adheenams, and evoke their sensitivity, so that future generations will not be misguided by such "bad examples"!
We saw u in words, so far!
Can we see u in action now?
Walk the talk!
சிவ சிவ!
நற்றுணையாகப் பற்றினேன் அடியேன் நாரணா என்னும் நாமம்!
அறிஞர் அண்ணா அவர்கள், முன்பு பெரியபுராணத்தைக் கொளுத்த வேண்டும் என்று துவங்கி, "தீ பரவட்டும்" என்ற குறு நூலை எழுதினார்! அதில் கூட அல்குல், முலை வர்ணனை, ஆபாசச் சொற்கள், புனைவு என்பதைத் தான் காட்டினாரே அன்றி, "மனிதம்" என்ற நோக்கில் தொட்டுச் செல்லவில்லை!
ReplyDeleteஆனால் இந்த விவாதத்தில், "மனிதம்" என்பதை மட்டும் கருப்பொருளாக்கிய உங்களுக்கு என் வந்தனங்கள் பாலாஜி!
மேன்மைகொள் சைவநெறி உலகெலாம் ஓங்க வேண்டும் என்று சொல்லுவார்கள்!
ஆனால், "நெறி" உலகெலாம் ஓங்கினாலே போதும்!
அதற்கு நாயன்மார்களின் வரலாறு, நல்லபடியாக, வரும் தலைமுறைகளைச் சென்றடைவதில் பெரும்பங்கு உள்ளது!
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ்நூல் வாழ - கடல்சூழ்ந்த
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
பாலாஜி சிவனடியார் கதைகளை ஆதரிக்கவில்லை. ஆனால் இதே தொனியில் காலம் காலமாக கதைகள் சொல்லப்பட்டுவருகிறது, மாடு மணி அடிச்சதாகச் சொல்லி மகனை தேர்காலில் கொன்றான் சோழன் என்று சொல்லுவார்கள், ஒரு மாட்டுக்காக மகனை கொல்வது கூட பகுத்தறிவினால் ஏற்க முடியாது, ஆனால் மனித உயிரைவிட மற்ற உயிர்களுக்கும் மதிப்பு இருக்கிறது என்பதாகத்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ReplyDeleteநமக்கு தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லைன்னு சொல்லுவாங்க, அதையே பிரகலாதன் சொல் வேண்டும் என்பதாக நாராயணன் எடுத்துரைக்கவில்லை, தனது நாமம் சொல்வதற்கு தடைவிதித்தான் என்பதற்காகத்தான் இரணியன் கொல்லப்பட்டான் என்று புரிந்து கொண்டாலும் கூட நாராயண நம கூட நாரசமாகத்தானே இருக்கும்.
அரசு சொத்துக்கு ஊருவிளைவிப்பது தன் மக்களே என்றாலும் தண்டனை கொடுப்பவன் நடுநிலையாளன் என்று ஒப்புக் கொள்வோம், அப்படியாகத்தான் கோட் புலி கதை கூட தெய்வ சொத்தை உண்டார்கள் என்பதற்காக தண்டனைக் கொடுத்தான் என்பதாக புரிந்து கொள்ளப்படவேண்டும் மற்றபடி அதையே பிறருக்குமான வழிமுறையாகக் காட்டப்படுவதாக நினைத்து விமர்சிப்பது பொருத்தமான விவாதமாகத் தெரியவில்லை.
கோவி,
ReplyDeleteமனுநீதி சோழன் தவறு செய்த தன் மகனுக்கு, மன்னனாக தண்டனை அளித்தான். அனைத்து உயிருக்கும் ஒரே மதிப்பு என்பதாக அந்த கதையில் இருந்து நமக்கு பாடம் கிடைக்கிறது.
பிரகலாதன் கதையை விளக்கினால் இங்கே சைவ, வைணவ பிரச்சனை தான் வரும். பக்த சாம்ராஜ்யத்தின் அரசனாக அவனை நாராயணனே வைக்கிறான் என்றால் அதன் சாரம் என்னவாக இருக்கும் என்பதை படித்து அவரவர் புரிந்து கொள்ளட்டும். பக்த பிரகலாதன் படம் பார்த்து அல்ல.
பெரிய புராணத்தை வைத்து கோட்புலியின் செயல்களைப் பார்த்தால், உயிர் பிழைத்த குழந்தையையும் தூக்கிப் போட்டு வாளால் வெட்டினான் என்பது எனக்கு கம்சனையே நினைவூட்டுகிறது. தவறு செய்யாதவருக்கு தண்டனை என்பது என்னால் ஏற்க முடியவில்லை. அவ்வளவே!
பெரிய புராணத்திலிருந்து ஒரு படி மேலே சென்று திருத்தொண்டர் புராணத்தைப் பார்த்தால் அதில் அப்படி எல்லாம் சொல்லப்பட வில்லை. அதில் சிவன் சொத்தை கொள்ளை அடித்த தன் சொந்தங்களைக் கொன்றான் என்பதோடு நிறுத்தி விடுகிறார்கள். அதைப் பெருமையாக விளக்கவில்லை. ஆனால் பெரிய புராணம் உயிர் பிழைத்த குழந்தையைக் கூட விடாமல் தூக்கி போட்டு இரு துண்டுகளாக வெட்டினான் என்று பெருமைப் பேசுகிறது. இதைத் தான் மத தீவிரவாதம் என்கிறேன். சிவ பக்தியால், ஒரு கணம் நிதானம் இழந்து தவறிவிட்டான் என்று சொன்னால் எனக்கு அதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதுவல்லவோ பக்தி என்றால் நான் இதிலிருந்து முரண்படுகிறேன்.
//தெய்வ சொத்தை உண்டார்கள் என்பதற்காக தண்டனைக் கொடுத்தான் என்பதாக புரிந்து கொள்ளப்படவேண்டும் //
ReplyDeleteஇந்த புரிதல் தான் தவறு என்று சொல்கிறேன். தெய்வத்திற்கு ஏது சொத்து? இந்த உலகில் தெய்வத்திற்கு சொந்தமில்லாத ஒரு பொருளைக் காட்ட முடியுமா?
நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் தெய்வத்தின் சொத்து தான். நாமும் அவனின் சொத்து தான். உணர்ந்தாலும் சரி. உணரா விட்டாலும் சரி.
KRS:
ReplyDeleteI sent you an email to your gmail address on July 27. Will you read it and respond? It was about Thamizh phonetics.
இன்னிக்கி ஒருகா முழுக்க வாசிச்சேனா? வெட்டி பாலாஜியின் டகால்ட்டி ஆட்டம் நல்லாவே புரிஞ்சுது! :)
ReplyDelete//வெட்டிப்பயல் said...
நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் தெய்வத்தின் சொத்து தான். நாமும் அவனின் சொத்து தான்//
இதை, ஆரம்பித்திலேயே சொல்லி விட்டேன்! //சிவனின் உண்மையான சொத்து நாம் தான் சுவாமி!// சிவன் சொத்து குல நாசம்-ன்னு சொன்ன ஸ்வாமி ஓம்காருக்குச் சொன்ன பதிலில்!
இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வெட்டி, வேப்பிலை அடிச்சி ஆடி, அவர் பேயை அவரே எறக்குற வரைக்கும் ஓய மாட்டாரு-ன்னு அப்போ தெரியாமப் போச்சு!:)
//எனக்கு ராமானஜுரையும் தெரியாது, அப்பரும் தெரியாது. எனக்கு நாராயணனும், ஈசனும் தான் தெரியும்//
ஆமா! வெட்டி பாலாஜி...காலையில் நாராயணன் வீட்டுல ஒரு வாய் காபி, சாயுங்காலம் ஈசன் வீட்டுல ஒரு வாய் காபி சாப்பிடுவது தான் வழக்கம்! அவருக்கு அவிங்களைத் தான் நல்லாத் தெரியும்:)