Tuesday, December 28, 2010

இவன், எந்த முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்!

பந்தலில், மார்கழி மாசம் அதுவுமா, ஒரு பதிவு கூடவா இல்லை?-ன்னு என்னிடம் இமெயிலில் குறைபட்டுக் கொண்ட உள்ளங்களுக்காக...இந்தப் பதிவு! :)
மன்னிக்க வேண்டுகிறேன், தனித்தனியா பதில் அனுப்பாமைக்கு! முடிஞ்சா, ஒரேயொரு புதிரா புனிதமா மட்டும் அப்பாலிக்கா போடுறேன்! :)

சென்ற ஆண்டு...இதே நாள் - Dec 28 - மோட்ச ஏகாதசி!
யாரோ ஒரு முகம் தெரியாத குருவாயூர் யானையின் கதை!
.....நினைவுகளில் இப்போ இருக்கேன்!
So, just for a post, here we go,...Can you tell which ooru murugan boy is this?

இவன், எந்த ஊரு முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்! - குடை கவிக்க வரும்....இவன் தலையில் சடை, ஜடை, கொண்டை....தோள் மாலை....வேல்...இவன்? இவன்? இவன்?




(one day later....)

என்ன கண்டுபுடிச்சிட்டீங்களா?
இதோ...இந்தத் திருவரங்க "முருகன்"! :) கையில் வேல் வச்சிக்கிட்டு, ஆனா நாமம் போட்டுக்கிட்டு இருக்காரு பாருங்க! :))

மேற்கண்ட படங்கள், கோயில் என்று சிறப்பித்துப் பேசப்படும் திருவரங்கம், அங்கே இந்த ஆண்டு (2010) தமிழ் விழாவில் (இராப் பத்தில்) எடுத்தது! - படங்களுக்கு நன்றி: திருக்கோவிலூர் ஜீயர்!

பெரும்பாலும் வடமொழி உற்சவங்களுக்கிடையே,
இந்தத் தமிழ்ப் பெரும் விழாவை,
ஆயிரத்து முன்னூறு ஆண்டுக்கு முன்பே
துவக்கி வைத்து, பெருமை பெற்ற "முருகன்" இவன்!


நீலன் என்பது இயற்பெயர்!
பரகாலன் என்பது பட்டப் பெயர்!

1. ஆலிநாடன்
2. அருள்மாரி
3. அரட்டமுக்கி
4. அடையார் சீயம்
5. கொங்குமலர் குழலியர் வேள்
6. மங்கை வேந்தன்
7. பரகாலன்
8. கலியன்

என்பதோடு...
9. திருமங்கை ஆழ்வார் என்று சொன்னால் அனைவரும் அறிவார்கள்! :)



கள்ளர் குல முனையரையர் - பிறப்பால் சைவர் - குமுதவல்லியின் காதலுக்காகப் பெருமாளைப் பிடித்துக் கொண்டார்! :)
ஆனால்....அதற்கு அப்புறம்....பெருமாளோ இவரைப் பிடித்துக் கொண்டார்! :)

இவரால் அவரை விடவே முடியவில்லையாம்!
குமுதவல்லியைக் கூட மறக்கத் துணிவு வந்ததாம்! ஆனால் அவரை மறக்க முடியவே இல்லையாம்! :)


இவர் எப்படி "முருகன்" ஆவான்(ர்)? = கையில் வேல் இருப்பதாலா? :)

கூர் "வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்! - திருப்பாவை 01
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி! - திருப்பாவை 24

முருகன்=அழகன்!
இவர் வடிவழகு, தமிழழகு அப்படி! அதனால் இவரை "முருகு+அன்" என்று சொல்வது பாதகமில்லை!
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை, "பெருமாளே=பெரும்+ஆளே" என்று வரிக்கு வரி அருணகிரி பாடவில்லையா?
அதே போல் தான் இதுவும்! திருமங்கை அழகோனே-முருகோனே! :)

* இவரே கருவறைக்குள் தமிழை முதன்முதலில் புகுத்தினார்!
* இவரே தமிழுக்கென்று தனிப்பெரும் விழாவை, தலைநகராம் அரங்க நகரில் எடுப்பித்தார்!
* இவரே தமிழ் வேதமான மாறன் மொழியை, (திருவாய்மொழியை), அரங்கன் முன்னிலையிலே, ஓதுவார்கள் ஒதுங்கி இருந்து ஓதாமல், ஓதுவார்கள்-அர்ச்சகர்கள் உட்பட, அத்தனை பேரையும் ஓதச் செய்தார்!

தமிழுக்கு வாழ்வு என்னும் போது, அங்கே தமிழ்க் கடவுளாம், என் முருகனின் வாசனை வீசாதா என்ன?

* திருமங்கையின் பிறந்த நாள் = முருகன் உகந்த, கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம்!
* திருமங்கையின் கையில் = வேல்!
* காவடிச் சிந்தின் மெட்டை, வழிநடைச் சிந்தாக...முதன் முதலில் இலக்கியத்தில் பாடிச் சேர்த்தார்!
- இப்படி "தெரிந்தோ/தெரியாமலோ" திருமங்கை வரலாற்றில் முருக வாசம் வீசுகிறது!


முருகன் என்றால் அழகு! இந்த மங்கை மன்னனின் முருகை - வடிவழகு என்றே இசைக் கவிதையாக எழுதியுள்ளார் மணவாள மாமுனிகள்!

அணைத்த "வேலும்", தொழுத கையும்,
அழுந்திய திரு நாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும்,
குளிர்ந்த முகமும், பரந்த விழியும்.
...
என்றெல்லாம் போகும்! பின்னர் ஒரு நாள் எழுதுகிறேன்! அதன் கடைசிப் பத்தியை மட்டும் இப்போது பாருங்கள்!

"வேல்" அணைத்த மார்பும், விளங்கும் திரு எட்டெழுத்தும்,
மால் உரைக்கத் தாழ்த்த வலச்செவியும் - தாள் இணைத்த
தண்டையும், வீரக் கழலும், தார்க் கலியன் நன் முகமும்
கண்டு களிக்கும் எந்தன் கண்!

இதுவோ திருவரசு? இதுவோ திருமணங் கொல்லை?
இதுவோ எழிலாலி என்னும் ஊர்? - இதுவோ தான்
வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டு எழுத்தும் பறித்த இடம்!!!

எப்படி, எப்படி? = எட்டெழுத்தைப் "பறித்தாராம்"!
"வேலை"க் காட்டிப் பெருமாளையே பயங் கொள்ளச் செய்து,
எட்டெழுத்தைப் பறித்து,
அதை நமக்கெல்லாம் கொடுத்த திருமங்கை அழகே "முருகு"!


சரி, இவர் கையில், வேல் எப்படி வந்துச்சாம்?

அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்! பார்ப்போமா?
ஆனால் இது ஒரு "போலிக்" கதை! சுவைக்கு மட்டும் வாசியுங்கள்! :)

திருஞான சம்பந்தர் = தந்தையைக் காணோமே என்ற மலைப்பால் முலைப்பால் உண்ட தமிழ்ப்பால்!

இவரை முருகனின் அம்சமாகவே/அடையாளமாகவே சைவ சித்தாந்தத்தில் சொல்வது வழக்கம்! அருணகிரியும் அப்படியே பாடியுள்ளார்! முன்பெல்லாம், சம்பந்தர் கையிலும் ஒரு வேல் இருக்கும்!

இவரின் சொந்த ஊர் சீர்காழி! பக்கத்து ஊரோ, திருமங்கை மன்னனின் ஊரான திருவாலி! இருவருமே தலம் தலமாகச் சென்று பாடிய அடியார்கள்!

ஒரு முறை, திருமங்கை மன்னன், சீர்காழித் தலத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வர (காழிச் சீராம விண்ணகரம்), கூடவே அவர் குழாமும் வந்தது! விருதுகளைக் கூவிக் கொண்டே வந்தது! அழகன் திருமங்கை, அவன் ஆடல் மா என்னும் குதிரை மேல் வரும் அழகை எண்ணிப் பாருங்கள்!

வீதியில், சம்பந்தப் பிள்ளையின் மடத்தைத் தாண்டிச் சென்றாக வேண்டும்!
என்ன இருந்தாலும் சொந்த ஊர் அல்லவா! தலைவர் அடக்கமாக இருந்தாலும், தலை இருக்க வால்கள் ஆடுமே! சம்பந்தர் மடத்தில் உள்ளவர்கள், சம்பந்தர் வீதியில் மட்டும் கோஷம் போடாமல் மவுனமாகப் போகச் சொன்னார்களாம்!

நம்ம திருமங்கை தான் எதிலுமே பொசுக் பொசுக்-கென்று செயல்படுபவர் ஆயிற்றே! இதென்ன நாட்டாமைத்தனம்-ன்னு நினைச்சாரோ என்னவோ, அவரிடமே கேட்டு விடுவோம் என்று, விறுவிறு-சுறுசுறு...சைவ மடத்துக்குள் வைணவர் நுழைந்தே விட்டார்! :)

உள்ளே சென்றால்...பச்சிளம் பாலகன்! அன்னையின் முலைப்பால் உண்டவன், அவனை மலைப்பால் பார்த்த இந்தக் கள்ளர் குலத் தலைவன்...என்ன இருந்தாலும், கற்றாறைக் கற்றாரே காமுறுவர் அல்லவா?

இருவரும் அன்புடன் முகமன் கூறிக் கொள்ள...நம் திருமங்கை, "உம்ம ஆட்களின் அதிகாரம் பார்த்தீரா" என்று கேட்க...
ஆளுடைய பிள்ளையான சம்பந்தப் பிரான் குறும்பாக, "எம் ஆட்களுக்கு உம்மை நிரூபித்துத் தான் காட்டுங்களேன் பார்ப்போம்" என்று சொன்னாராம்!

இரு பெரும் தமிழ் மலைகள்!
சம்பந்தர் முதலில் பாட...

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா!

படியுண்ட பெருமானைப் பறித்துப் பாடி
பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே!

ஆலிநாடரான திருமங்கை மன்னா, எம் பெண்ணை மயக்கிக் கொண்டு போய் விட்டீரே, நியாயமா? என்று ஒரு தாய் பாவனையில் சம்பந்தர் கேட்க....
திருமங்கை, தம்மையே தலைவியாகப் பாவித்து, அதே சூட்டில் மறுமொழி உரைக்கிறார், ஞானக் குழந்தைக்கு! :)

வருக்கை நறுங்கனி சிதறிச் செந்தேன் பொங்கி
மருக்கரையின் குளக்கரையில் மதகில் ஓடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்

அருட்குலவு மயிலை தன்னில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே!

நீர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்தது போல், நான் இவளுக்கு உயிர் கொடுத்தால் மட்டும் ஏலாதா என்ன? என்று எதிர்க்கவிதை, எசப்பாட்டு :)
இப்படி வீசியவுடன் சிரித்தே விட்டார் சம்பந்தர்! தம்மையே மடக்கிய மங்கை மன்னனுக்கு, நாலுகவிப் பெருமான் என்று பட்டம் சூட்டி, அதுகாறும் தான் வைத்திருந்த வேலை, கொடுத்துவிட்டதாகக் கதை சொல்கிறார்கள்!


கதை நல்லாத் தான் இருக்கு.....ஆனாலும், கே.ஆர்.எஸ் இதுகெல்லாம் மயங்கீற மாட்டான்! :)
அது வைணவமே ஆனாலும் சரி! பெருமாளே ஆனாலும் சரி, வாய்மையே வெல்லும்! :)

என்னைப் பொருத்தவரை, இதை ஏன் "கட்டுக்கதை", உண்மைக் கதை அல்ல என்று சொல்கிறேன் என்றால்...

1. வரலாற்றின் படி, சம்பந்தர் காலத்தால் முந்தியவர்! மகேந்திர வர்ம - நரசிம்ம வர்ம பல்லவன் காலம் என்றும் சொல்வார்கள்! 640-656 CE!
திருமங்கையோ, நந்தி வர்ம பல்லவன் காலம்! 730-800 CE! குறைந்தது நூறு ஆண்டாச்சும் பின்னால் வந்தவர்! அப்படி இருக்க, இருவரும் எப்படிச் சந்தித்து இருக்க முடியும்? :)

2. திருமங்கை ஆழ்வாரின் வைபவத்தைச் சொல்லும் வைணவ நூல்கள்/குரு பரம்பரை கூட, இந்த நிகழ்ச்சியைச் சொல்லவில்லை!

3. ஐயோ! அப்போ இந்த ரெண்டு பாட்டு? எசப்பாட்டு மாதிரி கொடுத்தியே-ன்னு கேக்குறீங்களா? ஹிஹி! அந்தப் பாட்டெல்லாம் யாரோ பின்னாளில் எழுதியது போலத் தான் இருக்கு! சந்த அமைப்பிலோ/நடையிலோ, ஆழ்வாரைப் போலவும் இல்லை! சம்பந்தரைப் போலவும் இல்லை!
மிகவும் முக்கியம்: அந்தப் பாடல்கள் தேவாரத்திலும் இல்லை! திவ்ய பிரபந்தம் என்னும் அருளிச் செயலிலும் இல்லை!

இப்படி, வைணவ நூல்களே குறிப்பிடாத ஒரு நிகழ்ச்சியை, யாரோ கதை கட்டி விட,
அதையே அங்கொன்றும் இங்கொன்றுமாக, "பகூத் அறிவுள்ள" சிலர் எழுதி வைக்க,
தரவே தராமல்.....பத்து முறை சொன்னதையே சொன்னால், வெறுமனே கும்மி அடித்தால், பொய்யும் "மெய் போல்" ஆகும் அல்லவா நம்ம பதிவுலகில்?

அப்படித் தானே "தொல்காப்பியத் திருமால் தமிழ்க் கடவுள் இல்லை! முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள்" என்று கும்மியடித்து கும்மியடித்து, நம்ப வைக்கப்பட்ட கூட்டம்? :)

* ஏபி நாகராஜன் சினிமாவில், "தமிழ்க் கடவுள்" என்று பத்து முறை வசனம் வருவது தான் தரவு,
* எங்கோ சிவன் கோயில் யானைக்கு ஓம் போட்டு பார்த்து இருக்கேன் என்ற சிங்கைத் தரவு! :))
அது போலத் தான் இதுவும்! திருஞான சம்பந்தர் - திருமங்கை சந்தித்தார்கள்! திருமங்கை வாதில் வென்று, வேலைப் பெற்றார் என்பதெல்லாம்!

அது வைணவமே ஆனாலும்.......தவறான தகவல் என்று ஓப்பனாகச் சொல்லும் அறத் துணிவு, எனக்கு உண்டு! :)
எப்பொருள், "எத்தன்மைத்" தாயினும் - அப்பொருள்
"மெய்ப்பொருள்" காண்பது அறிவு!

இதுக்கு, நான் ரெண்டு பக்கமும் வாங்கிக் கட்டிக் கொள்வேன்-ன்னு நல்லாவே தெரியும்! :) சைவத்திலும் பிடிக்காமல் போகலாம்! வைணவத்திலும் பிடிக்காமல் போகலாம்! :) இருப்பினும்......
சமயம் கடந்து, தமிழைத் தமிழாகவே பார்த்தால், தமிழ் தழைக்கும்!



எல்லாஞ் சரி, இவர் கையில், வேல் எப்படி வந்துச்சாம்? அதைச் சொல்லவே இல்லீயே?

பண்டைத் தமிழ் மறவன் - கள்ளர் குலத் தலைவனான நீலன், திருமங்கை ஆனான்! இவன் பெருநில மன்னன் அல்ல! மிகவும் குறு நில மன்னன்! இவனுக்கு யானை கூடக் கிடையாது! வெறும் குதிரை மட்டுமே! அது போல் தான் வேலும்!

பெரிய வாள் என்பதை விட, கத்தி தான் இருக்கும்! கேடயம் இருக்கும்! வேல் இருக்கும்! அப்படித் தான் வைணவ ஆலயங்களிலும் சிலையாக வடித்துள்ளார்கள்! தொலைவில் இருந்து எறிய வல்ல வேல்! நேருக்கு நேர் வாள் வீசிச் சண்டை போடும் பெருநில மன்னன் அல்ல! கள்ளர் குலத் தலைவன்! ராபின்ஹூட்! :)

இவன் கையில் வேலும், கத்தியும், கேடயமும் தானே!
அப்படித் தான் "வேல்" தாங்கிற்றே அன்றி..........
சம்பந்தரை வென்று வாங்கிய வேலாக இருக்கச் சாத்தியமே இல்லை!

* முருகப் பெருமானின் திருக்கை ஆயுதம் "வேல்" என்பதாலும்,
* இவர் தோன்றிய கார்த்திகை நட்சத்திரத்தாலும்,
* ஆழ்வார் தமிழுக்கு ஆற்றிய தொண்டு கருதியும், - தமிழ்க் கடவுளான முருகனோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்! அவ்வளவே!

"வேல்" அணைத்த மார்பும், விளங்கு திரு எட்டெழுத்தும்,
மால் உரைக்கத் தாழ்த்த வலச் செவியும் - தாளின் இணைத்த
தண்டையும், வீரக் கழலும், தார்க் கலியன் நன் முகமும்
கண்டு களிக்கும் எந்தன் கண்!


ஆழ்வார்கள் ஈரத் தமிழ் வாழ...ஆலயக் கருவறைக்குள்ளும் தமிழ் வாழவென்றெ வாழ்ந்த............திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்!

அந்தத் தமிழுக்குக் குறிஞ்சித் தலைவனாய் நிற்கும்.............என் காதல் முருகப் பெருமான் இணையடிகளே சரணம்!!

60 comments:

  1. எந்த முருகன் என காட்டிக்கொடுப்பதா? அது நம்ம பரம்பரைக்கே இழுக்காச்சே.. அதனால முடியாது முடியாது முடியாது

    ReplyDelete
  2. oh...iLa-vaa muthal pinnoottam? eppdi irukkenga iLa? :)

    "kaati kodukka" chollalaiye..
    "kaNdu pidikka" thaan chonnOm :)

    ReplyDelete
  3. இது அல்லும்பு ஆட்டம்
    Choice இல்லாம கேள்வி கேக்க கூடாது ....

    ReplyDelete
  4. Choice எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கனும்...
    Example
    Option 1. _______முருகன்
    Option 2. மலைக்கோட்டை விநாயகர்
    Option 3. ஸ்ரீரங்கம் அரங்கநாதர்
    Option 4. மதுரை மீனாட்சி

    அப்ப தான் நான் நல்லா யோசிச்சி பதில் சொல்ல முடியும்.

    ReplyDelete
  5. பிரசாத்
    கலக்குறீக :)

    அதான் வேலோடு படத்தில் காட்டிட்டேனே! அப்பறம் என்ன மலைக்கோட்டை, மீனாட்சி-ன்னு choice? :) பொதுவா, புதிரா புனிதமா விளையாட்டு எல்லாம் சாய்ஸோடு தான் இருக்கும்! இங்கே பாருங்க!

    ஆனால் இது விளையாட்டு அல்ல! அதான்! :)

    ReplyDelete
  6. இவரு கலியன் (திரு மங்கை ஆழ்வார் ) தானே ?

    ReplyDelete
  7. @kumaran
    rendu line kooda illa, ithu post-aa? ithukku glad-aa? :)

    ReplyDelete
  8. @anony
    ennathu? aazhwar-nu ellam cholreenga? athuvum kumaran pinnadiye vanthu? :)
    kay-il vEl irukke, paakaliyaa?

    ReplyDelete
  9. பின் பக்கம் பார்த்தா பெருமாள் மாதிரி இருக்கு..

    கொண்டைய பார்த்தா ஆண்டாள் மாதிரி இருக்கு..

    வேலை பார்த்தா திருமங்கையார் மாதிரி இருக்கு..

    மொத்ததுல இவரு முருகரான்னு சந்தேகமா இருக்கு..

    கொஞ்ச வெட்கபடாம அவரை முகத்தை காட்ட சொல்லுங்க!
    முருகரான்னு Conform பண்ணிட்டு அப்பாலிக்கா பதில் சொல்றேன்.:)

    பதில் தெரியாததற்கு எப்படிஎல்லாம் சமாளிக்கிறாங்கப்பா! ச்சே ச்சே:)

    ReplyDelete
  10. நரசிம்மர் பந்தலில் என்னைக்கு வருவார் என்று சுதாமன் கணக்கா காத்திருக்க வைத்த பந்தல் குழுவிற்கு நன்றி:)

    ReplyDelete
  11. இந்த வருடமும் உங்கள் மார்கழி ஆண்டாள் பாசுர பதிவுகள் எமக்கு பெரிதும் பயன்படுகிறது. பாசுரத்தை முந்தின நாளே மாதவி பந்தலில் படித்து விட்டுதான் அடுத்த நாள் பஜனைக்கு செல்கிறேன். நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை:))

    ReplyDelete
  12. At least there are few lines in the post. There are people who just post video without any lines in the post and call it a blog post. :-)

    ReplyDelete
  13. நிச்சயமா தமிழ் நாட்டில் இருக்கற முருகர் தான்.
    திருச்செந்தூர் ??

    ReplyDelete
  14. ராஜேஷ் இங்க இவ்ளோ பேசறார். நேர்ல பார்த்த ரொம்ப ரொம்ப யோசிச்சி முத்து உதிர்வது போல பேசறார். என்னை பார்த்து பயந்துட்டார்னு நினைக்கறேன். :-)

    ReplyDelete
  15. தல சீக்கிரம் சொல்லிடுங்க இல்லைன்னா இது முருகனா இல்லை வேற யாரோன்னு பிரச்சனை வந்துட போகுது ;))

    ReplyDelete
  16. சரியா சொன்னீங்க கோபிநாத். ஏற்கனவே திருப்பதில இருப்பது பெருமாள் இல்லை "காளி"ன்னு ( பெருமாளுக்கு பின்னல் இருக்காம்) ஒரு கூட்டம் "பகுத்தறிவு"ன்னு பேர்ல புதுசா சொல்லி அலையுது..

    ReplyDelete
  17. ஒத்த (One) படத்த போட்டு புட்டு என்னமாஆஆஆஆஆ.... பில்டப்புஊஊஊ... Philip Kotlet (Marketing Guru) கெட்டாரு

    ReplyDelete
  18. //ஒத்த (One) படத்த போட்டு புட்டு என்னமாஆஆஆஆஆ.... பில்டப்புஊஊஊ... Philip Kotlet (Marketing Guru) கெட்டாரு//

    :)
    முருகா முருகா...நானே ரொம்ப நாள் கழிச்சி பதிவு போடறேன்! அதுக்குள்ள இந்த பிரசாத் வந்து மிரட்டறாரு! :) கந்தர் அலங்காரப் பதிவுகள் படிச்சாலும் படிச்சாரு! முருகா, உன்னைய மாதிரியே கேள்வி கேக்குறாரே! :)

    ReplyDelete
  19. //Narasimmarin Naalaayiram said...
    இந்த வருடமும் உங்கள் மார்கழி ஆண்டாள் பாசுர பதிவுகள் எமக்கு பெரிதும் பயன்படுகிறது. பாசுரத்தை முந்தின நாளே மாதவி பந்தலில் படித்து விட்டுதான் அடுத்த நாள் பஜனைக்கு செல்கிறேன்//

    :)
    ராஜேஷ், பழைய பதிவுகள் எல்லாம் தூசி தட்டிப் போகாமல், இப்பவும் பயன்படுவது கண்டு மகிழ்ச்சி! அடியார்கள் இன்புற்று இருக்கும் இன்பத்தைக் காண்பதுவும் ஒரு இன்பம்! மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  20. //குமரன் (Kumaran) said...
    At least there are few lines in the post//

    பந்தலின் மிகச் சிறிய இடுகை இதுவாத் தான் இருக்கும் குமரன்! உண்மைத் தமிழன் பார்த்தா மயக்கம் போட்டு விழுந்துருவாரு! :)

    //There are people who just post video without any lines in the post and call it a blog post. :-)//

    ஓ...நீங்க கூடல் குமரனைச் சொல்றீங்களா? :)
    அவரு அ.உ.ஆ.சூ! அவர் என்ன செஞ்சாலும் ஏலும்! ஆனா நாங்க? - சரி தானே ராகவா? :)

    ReplyDelete
  21. //Radha said...
    நிச்சயமா தமிழ் நாட்டில் இருக்கற முருகர் தான்.//

    ஓ...ராதாவே தப்பு தப்பா பதில் சொன்னா, எங்க கதி? :)

    ReplyDelete
  22. @ராஜேஷ்
    //மொத்ததுல இவரு முருகரான்னு சந்தேகமா இருக்கு..//

    என்னது? என் முருகனைச் சந்தேகப்படுறீங்களா? என்னையே சந்தேகப்பட்டா மாதிரி! :)

    //கொஞ்ச வெட்கபடாம அவரை முகத்தை காட்ட சொல்லுங்க!
    முருகரான்னு Conform பண்ணிட்டு அப்பாலிக்கா பதில் சொல்றேன்.:)//

    என் முருகனுக்கு கொஞ்சம் வெட்கம், என்னைய மாதிரியே! அதுனால, இருங்க, மெல்ல மெல்லக் காட்டுவான்(ர்) :)

    ReplyDelete
  23. //Radha said...
    ராஜேஷ் இங்க இவ்ளோ பேசறார். நேர்ல பார்த்த ரொம்ப ரொம்ப யோசிச்சி முத்து உதிர்வது போல பேசறார்//

    முத்தைத் தரு பத்தித் திரு"நகை" :)

    //என்னை பார்த்து பயந்துட்டார்னு நினைக்கறேன். :-)//

    ஆமா! நானே பயந்தேன்-ல்ல! பாவம் ராஜேஷ் என்ன செய்வாரு! :)

    இந்த முறை மருத்துவப் பயணம் என்பதால் அதிகம் யாரையும் பார்க்கவில்லை! அடுத்த முறை ராஜேஷைச் சந்திச்சிருவோம்! அதுக்குள்ள அவரும் பாசுரம் பாடக் கத்துக்கிட்டு, அப்படியே எனக்கும் சொல்லிக் கொடுப்பாரு!

    ReplyDelete
  24. //கோபிநாத் said...
    தல சீக்கிரம் சொல்லிடுங்க இல்லைன்னா இது முருகனா இல்லை வேற யாரோன்னு பிரச்சனை வந்துட போகுது ;))//

    :)
    கையில் வேல் பார்த்துமா இந்தச் சந்தேகம் கோபி? :)

    ReplyDelete
  25. //Prasad said...
    சரியா சொன்னீங்க கோபிநாத். ஏற்கனவே திருப்பதில இருப்பது பெருமாள் இல்லை "காளி"ன்னு ( பெருமாளுக்கு பின்னல் இருக்காம்)//

    ஹா ஹா ஹா
    அப்போ திருப்பதிப் பெருமாள் முருகன் இல்லையா? :) காளிக்கு மாறிட்டாரா? :))

    திருவேங்கடமுடையான் திருமாலே என்று இளங்கோ அடிகள் ரெண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே காட்டி விட்டார்!

    நடுவில் இராமானுசர், மறுபடியும் தரவுகளோடு காட்டினார்!

    அதை, சிறந்த முருக பக்தரான அருணகிரி, ஐநூறு ஆண்டுக்கு முன்னும் உறுதிப்படுத்தி விட்டார்!

    இதோ...பதிவு! சிலப்பதிகாரத்தில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்

    //ஒரு கூட்டம் "பகுத்தறிவு"ன்னு பேர்ல புதுசா சொல்லி அலையுது..//

    அது பகுத்தறிவு இல்லை பிரசாத்! "பகூத்" அறிவு :)

    ReplyDelete
  26. //கந்தர் அலங்காரப் பதிவுகள் படிச்சாலும் படிச்சாரு! முருகா, உன்னைய மாதிரியே கேள்வி கேக்குறாரே!//

    கந்தர் அலங்காரப் பாடல்களை
    நீங்கள் அனுபவித்து எழுதியதை
    நான் உருகி உருகி படிக்கிறேன்.

    நிற்க,

    கண்ணபிரான் ராசா (ரா -Ravi சா- Shankar) பதிவுகள் படித்தால்
    பகுத்தறிவுவாதிக்கும் பக்தி வரும் தமிழ்நாட்டு 'PETER'களுக்கும் தமிழ் பிடிக்கும். :-))

    ReplyDelete
  27. சரி, பதிலைச் சொல்லீறலாமா?

    //Radha said...
    நிச்சயமா தமிழ் நாட்டில் இருக்கற முருகர் தான்.
    திருச்செந்தூர் ??//

    திருச்செந்தூர் இல்லை!
    திருவரங்க முருகன்! :)

    ReplyDelete
  28. குடையைப் பாத்தா திருவரங்கம் மாதிரி தான் இருக்கு. ஆனா எந்த திருவிழாவில இந்த வேஷம்னு தெரியலையே?! அதை நீங்களும் சொல்லலையே!

    ReplyDelete
  29. யப்பாடா.....பதில் சொல்லியாச்சி! வழக்கம் போல நீளமா பதிவில் சேர்த்து விட்டேன்!

    இனி, குமரன் அண்ணா தான் வந்து, மத்ததுக்கு எல்லாம் தரவு கொடுக்க வேணும்! :)

    ReplyDelete
  30. அடப்பாவி ! நான் இந்த டகால்டி வேலையை புரிஞ்சிக்காம, முருகனருள்-ல இருந்த முருகர் படமெல்லாம் பார்த்துட்டு இருந்தென். :-)

    ReplyDelete
  31. @KRS:
    i know it is stupid when i post this now, after you have put up the answer in the post itself.
    But, when i saw the post, the starting, i was reminded of PSP. :))
    Adhu PSP illai, KP-nnu apram dhaan purinjidhu. :))

    ReplyDelete
  32. அணைத்த "வேலும்", தொழுத கையும்,
    அழுந்திய திரு நாமமும்,
    ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும்,
    குளிர்ந்த முகமும், பரந்த விழியும்....

    அச்சோ! என்ன அழகு என்ன அழகு . திருமங்கை ஆழ்வான் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  33. நகைகளை அணிந்த தம்பதியரின் நகைகளை பறித்து காலின் மெட்டியை கழட்ட முடியாமல் வாயால் கடித்து எடுத்த பின்,

    பெரும் கலியனப்பா நீ என்று அந்த பெரியவர் கூறி தன் சுய ரூபத்தை காட்ட பெருமாளும் மகாலட்சுமியையும் பார்த்த திருமங்கை,

    வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
    பெருந்துயர் இடும்பையில் பிறந்து

    கூடினேன்
    கூடி இளையவர் தம்மோடு
    அவர்தரும் கலவியே கருதி

    ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
    உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

    நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
    நாராயணா என்னும் நாமம் !

    உடல் புல்லரிக்க அப்பப்பா என்ன பக்தி! என்று இந்த காட்சியை பல வருடங்களுக்கு முன் முதன் முறையாக டிவியில் பார்த்ததை மறக்கவே முடியாது. திருமங்கை ஆழ்வானே எமக்கு முதலில் அறிமுகமான ஆழ்வார், Sweeeeeeeeeeeeeeeeeet Tirumangai aazhvaar

    ReplyDelete
  34. ராஜேஷ் இங்க இவ்ளோ பேசறார். நேர்ல பார்த்த ரொம்ப ரொம்ப யோசிச்சி முத்து உதிர்வது போல பேசறார்:)

    என்ன செய்வது ஆத்மா சொல்வதை 30% வாய் பேசுது 70% கை பேசுது:)

    ReplyDelete
  35. என்னை பார்த்து பயந்துட்டார்னு நினைக்கறேன். :-)

    ஆமாமா TR மாதிரி இருக்காரே இவரிடம் எப்படி பேசுவது என்று முதலில் பயந்தேன்:))summaa .

    ReplyDelete
  36. காரில் உட்கார்ந்த பின் என் முன் பெரிய மீசை வச்சிருக்கிற, புள்ள புடிக்கிற மாதிரி ஒருத்தர நிக்க வச்சிடீங்க! எங்க போனாலும் இவன் கூடவே வரானே என்று எண்ணி கொண்டு வந்தேன். உங்களுக்கும் இவனுக்கும் நெருக்கம் ரொம்ப அதிகம் போல என்றும் எண்ணினேன் :)

    ReplyDelete
  37. ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
    உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
    தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்
    சரணமே சரணம் என்றிருந்தேன்.

    எனக்கு பிடித்த ஒரு திருமங்கை ஆழ்வான் பாசுரங்களில் ஒன்று
    திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  38. @Narasimmarin Naalaayiram:
    //உடல் புல்லரிக்க அப்பப்பா என்ன பக்தி! என்று இந்த காட்சியை பல வருடங்களுக்கு முன் முதன் முறையாக டிவியில் பார்த்ததை மறக்கவே முடியாது.//
    :))
    Enakkum romba naal munnadi romba chinna vayadhil partha memories.

    That's y i searched and found this on the Net. You can watch the movie in the below link.

    http://www.tamilpeek.com/videos.php?id=1331&cat=30

    ReplyDelete
  39. @KRS:
    Pls. see the link i gave "Narasimmarin Naalayiram".
    Why don't you put it up in kannan pattu or here so that people get to know about it being available on the Net? :)

    ReplyDelete
  40. @Narasimmarin Naalayiram:@KRS:
    okay, this is the better link.
    i saw through this link recently on Vaikuntha Ekadashi day.
    //http://www.tamilpeek.com/watch/6896/Thirumal-Perumai-Part-1-of-1///

    ReplyDelete
  41. //என் முன் பெரிய மீசை வச்சிருக்கிற, புள்ள புடிக்கிற மாதிரி ஒருத்தர நிக்க வச்சிடீங்க! எங்க போனாலும் இவன் கூடவே வரானே என்று எண்ணி கொண்டு வந்தேன். உங்களுக்கும் இவனுக்கும் நெருக்கம் ரொம்ப அதிகம்//
    -------
    @Narasimmarin Nalayiram:
    i am sorry to "interupt" the conversation, but who is this???

    ReplyDelete
  42. In Love With Krishna said...//http://www.tamilpeek.com/watch/6896/Thirumal-Perumai-Part-1-of-1///

    Thanks for this link:)

    ReplyDelete
  43. @Narasimmarin Nalayiram:
    enjoy watching!:)
    pls. answer my question also!

    ReplyDelete
  44. In Love With Krishna said...
    i am sorry to "interupt" the conversation, but who is this???

    மீச கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா!
    ரோஷம் அதிகம்டா அதை விட பாசம் அதிகம்டா!
    நாம பழகினட மறக்கலையே:)

    இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்*
    நல் புவி தனக்கு இறைவன்*

    தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை*
    மற்றையோர்க்கு எல்லாம்
    வன் துணை*

    பஞ்ச பாண்டவர்க்காகி* வாய் உரை தூது சென்று இயங்கும்
    என் துணை*

    எந்தை தந்தை தம்மானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*

    Tirumangai aazhvaar :)

    ReplyDelete
  45. @Narasimmarin Nalayiram:
    Ninaithen!
    Adhaan ketten!
    unga mela "case" podanum!
    Aniyaayam! Akramam! Indha anniyaayam inge Aandal-in Madhavi Panthalil nadakuthaaa???
    kelvi ketka yaarum illaiyaa??
    ---
    //மற்றையோர்க்கு எல்லாம்
    வன் துணை*

    பஞ்ச பாண்டவர்க்காகி* வாய் உரை தூது சென்று இயங்கும்
    என் துணை* //
    ippadi reply panreengle, konjam yosichu avarai describe pannavendama?
    --
    Friend-kkaga azhagana thirukarangalaal "saattai" (whip) pidithu sivandhu poyidichu..
    mugathilo en bhaktan-kkaga "anything ok", adhuvum en friend-na "everything ok" nnu face ellam scars scars scars- rathakaayam ellam...
    idhai ellam vidunga, friend-ai encourage panna thaan kodutha vaakai kuda meerirupaaru...
    appadi patta nallavarai, vallavarai,
    vrindavana vasigal-kkaga govardhanagiri dhaari-yaga irundha gunam avarkku...
    Sudama-kku "3 worlds" kudukkum alavukku oru generosity...
    nam elloraiyum kaakum avarai...
    ----
    "புள்ள புடிக்கிற மாதிரி ஒருத்தர " nnu solliteengle!!!!!!
    Mahabharatham niraiya kaayangal kuduthirichu PSP-kku!!
    Innuma???
    Avarai pol oru perazhagan kidaiyaathu.
    Andha meesai azhagu meesai!
    Adhai neenga ippadi describe panradhu ennal thaangikolla mudiyadhu!!!

    ReplyDelete
  46. "புள்ள புடிக்கிற மாதிரி ஒருத்தர " nnu solliteengle!!!!!!

    அனைத்து பிள்ளைகளையும் தன் அழகால் கவர்ந்து வசீகரிப்பவன் என்று பொருள்:)
    This meaning kannan knows. Avarin lover ungalukku teriyalayaa kk:))

    ReplyDelete
  47. அச்ச்சோ கண்ணா நல்லா மாட்டிக்கிட்டேன் காப்பாத்துங்க:)

    ReplyDelete
  48. மாதிரி என்ன?
    இப்பவும் சொல்கிறேன்
    கண்ணன்(தன் அழகாலும் நல்ல குணங்களாலும்) பிள்ளைகளை (தன் அன்பு பிடியில்) பிடிப்பவன் தான்:)

    ReplyDelete
  49. @narasimmarin naalayiram:
    //அச்ச்சோ கண்ணா நல்லா மாட்டிக்கிட்டேன் காப்பாத்துங்க//
    Aamam, kannan ungalai kaapathavum vara vendum,
    Neengal sollum aniyaaya descriptions-um ketkanum...
    En PSP enna ellorkkum ilichavaayana theriyiraara?
    Avar sirikkuraaru, azhaga...
    Avarai ilichavaayan-nu ninaichuatheenga...
    Bhaktan endraal "pullai"yum kaakum Perumal,
    appadi avar "thoonilum iruppar thurumbilum iruppar"-nu puriyaadhavargalai-um karunai-odu kaakum en iniya Perumal
    avarai poi
    //"புள்ள புடிக்கிற மாதிரி// nnu solliteenga sir!!!
    ----
    //அனைத்து பிள்ளைகளையும் தன் அழகால் கவர்ந்து வசீகரிப்பவன் என்று பொருள்//
    appadi paarthal, "Supreme Puppeteer"-ana avar "pidi"yil dhaan naam ellam...
    Aanalum, neenga solra reason not acceptable!
    --
    Naam ellam pillaigalai irukka, nammai ellam kaakum Perumal-ai solliteengle!
    If He wants, avar purinjikittum neenga sollra "meaning"
    Avarai "Ranachora"-nnu sonnapaiyum (ranachora means one who runs from the battlefield) punnagai pootha mugathudan avar sonnar - "Bhaktargal koopital enakku endha peyar-um inikkum"-nnu
    ---
    But, i cannot accept!!
    Neenga "kappathunga!"-nnu koopidira en PSP-ai poi ippidi solliteengle!!
    Unga mel naan case potte theeruven! :))
    Enna, PSP court-il unga side dhaan judgement mudiyum. Bhaktar-aa irukeenga!!
    Court kandipiducchu case podren!

    ReplyDelete
  50. @Narasimmarin Nalayiram:
    //மாதிரி என்ன?
    இப்பவும் சொல்கிறேன்
    கண்ணன்(தன் அழகாலும் நல்ல குணங்களாலும்) பிள்ளைகளை (தன் அன்பு பிடியில்) பிடிப்பவன் தான்:)//
    thoda...vaapas vangureenga partheengla sir?
    unga statement-ai? :))
    "madhiri"-nnu neenga sonnadhu andha azhagu "meesai".
    Bhaktanukkaga meesai soodi azhagu paarkkum perumal,
    inikku bhakti niraindha kangalukku kooda "kadathalkaaran"-a vaa theriyiraaru???
    anegamaaga, neenga thirumangai azhwar-in magimai-yil romba aazhnthu poiteenga!
    adharkaaga, andha alwar paadiya azhagu Parthasarathy-yai vambukku iluppadha??
    ---
    adhai paarthu "meesai-yai rasippor" sangathin mukkiya urippinar-aana naan, chumma irupadha?? :))

    ReplyDelete
  51. //அச்ச்சோ கண்ணா நல்லா மாட்டிக்கிட்டேன் காப்பாத்துங்க:)
    //
    :)))))

    ReplyDelete
  52. ராஜேஷ், அடுத்த வருடம் மீசை இல்லாத பார்த்தசாரதி தரிசனம் செய்து விடுவோம். :-)

    ReplyDelete
  53. :)
    நான் தூங்கி எழுந்து வருவதற்குள் இம்புட்டு கும்மி நடந்திருக்கா?
    அதுவும் KK பாய்ஞ்சிங் after நரசிம்மரின் நாலாயிரம்! :))

    //Narasimmarin Naalaayiram said...
    அச்ச்சோ கண்ணா நல்லா மாட்டிக்கிட்டேன் காப்பாத்துங்க:)//

    ஹா ஹா ஹா
    இதோ வந்து விட்டேன்!
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி என்னும் மீசைக்காரன் புள்ள புடிக்கறவனே தான்! மீசையைப் பார்த்தாலே தெரியலை? :)

    "ஒருவனுக்காக ஊரை வளைக்குமாப் போலே" என்பார்கள் ஆழ்வார் அருளிச் செயலுக்குப் பொருள் எழுதியவர்கள்!
    திருடிய ஒருவனைப் பிடிக்க, மொத்த ஊரையும் காவல்துறை வளைப்பது போலே, மிஞ்சிய ஒரு பக்தனைப் பிடிக்க, மொத்த ஊரையும் வளைக்கிறான் இந்த பார்த்தனுக்குச் சாரதி!

    இவன் புள்ள பிடிக்கிறவனே தான்! எந்தெந்தப் புள்ள புடிச்சான்-ன்னு எல்லாக் காவல் துறையிலும் FIR கூட இருக்கு!
    * பிரகலாதப் பிள்ளை
    * துருவப் பிள்ளை
    * பகழிப் பிள்ளை
    * அணிற் பிள்ளை
    இப்படி எத்தனையோ பிள்ளைகளைப் பிடித்த மீசைக்காரனே, உனக்கு இந்த KK ஒரு சப்போர்ட்டா? ஆயுதம் ஏந்தா அழகா, எடு வாளை! பாத்துருவோம் இன்னொரு புள்ளையாகிய என்னையும் பிடிக்கிறாயா என்று! :)))

    ReplyDelete
  54. //@KRS:
    Pls. see the link i gave "Narasimmarin Naalayiram".
    Why don't you put it up in kannan pattu or here so that people get to know about it being available on the Net? :)//

    :)
    போடலாம் கண்ணன் பாட்டில், அப்படியே தமிழாக்கமும் குடுங்க!

    சரி....Narasimmarin Naalayiram-ன்னு நீட்டி முழக்கறீங்களே KK! உங்க Shorthand Magic-ஐ இவர் கிட்ட காட்டலையா இன்னும்? :)
    Narasimmarin Naalayiram = NN or Na-Na? :)))

    ReplyDelete
  55. பதிவைப் படிக்க ஆரம்பிக்கும்போதே கொஞ்சூண்டு சந்தேகம், இவரை கூடல் பக்கம் பார்த்த மாதிரி இருக்கேன்னு... பிறகு confirm ஆயிடுச்சு :) மாதவிப்பந்தலில் வந்து (இப்பவாவது) கூவிய கிளிக்கு நன்றி :)

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  56. //எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)//

    :)))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP