பகுத்தறிவு: பாரதிதாசனும் இராமானுசரும்
இன்று இரு பெரும் தலைவர்கள் தோன்றிய நாள்!
* ஆதிசங்கரர் - வேதாந்தக் கடல்!
* இராமானுசர் - இறையன்புக் கடல்! சாதியால் ஒதுக்கப்பட்ட/மொழியால் ஒதுக்கப்பட்டவர்களைத் துணிந்து முன்னிறுத்தி தமிழும் சமயமும் வளர்த்தார்!
சித்திரைத் திருவாதிரை - ஈசனுக்கு உகந்த திருவாதிரையில் தோன்றிய தோன்றாத் துணைவர்கள்! இருவருக்கும் வணக்கம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
சரி, அது என்ன பதிவின் தலைப்பிலே பாரதிதாசன்? கடவுள் கடவுள்.. என்று எதற்கும் கதறுகின்ற மனிதர்காள்
கடவுள் என்ற நாமதேயம், கழறிடாத நாளிலும்
உடைமை யாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்ததாம்
கடையர் செல்வர் என்ற தொல்லை, கடவுள் பேர் இழைத்ததே!
-ன்னு பாடிய உணர்ச்சிக் கவிஞர்! அவருக்கும் இராமானுசருக்கும் என்ன தொடர்பு? * அவரோ பகுத்தறிவுக் கொள்கையின் கூடாரம்! இவரோ பக்தி என்னும் சரணாகதிச் செம்மல்! * அவரோ தந்தை பெரியாரிடம் பேசுபவர்! இவரோ எம்பெருமானையே பேசுபவர்! * அவரோ பாரதிக்குத் தாசன்! இவரோ கோதைக்குத் தாசன்! இவர் பால் அவருக்கு என்ன பெருசா தொடர்பும் ஈர்ப்பும்? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்! முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ் நாடு இருந்தவப் பயனாய் இராமா னுசனை ஈன்ற தன்றோ்? இந்நாடு வடகலை ஏன் என எண்ணித் தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ? ( - பாரதிதாசன் கவிதைகள்) இப்படி, நாத்திகர்களையும், பகுத்தறிவுவாதிகளையும் கூடக் கவர்ந்த ஒரு சமயத் தலைவர் உண்டென்றால், அது உடையவர் என்னும் இராமானுசரே! எப்படித் தமிழ்க் கடவுளான முருகனை மட்டும் அவர்கள் அரைமனதாகப் பேசுகிறார்களோ, அதே போல் இராமானுசரையும் கொள்கிறார்கள்! :) ஏன்? = அடியவர்கள் யாராயினும், அவர்களைக் குலம் விசாரிப்பவன்...பெற்ற தாயை, யோனி விசாரித்தவன் ஆகின்றான்! - இப்படித் தாய்மையைத் தடாலடியாகப் பெரியார் கூடச் சொன்னதில்லை :) அதனால் தான்!
ரெண்டு நாளாக் காய்ச்சல்! பதிவு எழுத இயல வில்லை! அதனால் சுருக்கமாக இராமானுசரின் பிறந்த நாள் பதிவு! ரெண்டு வருசம் முன்னாடி, நண்பர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், ஒரு தாலாட்டுப் பாட்டைப் "பாடி" வைச்சேன்! அதை மட்டும் இங்கே பிறந்த நாள் குழந்தைக்கு இட்டு வைக்கிறேன்! வர்ட்ட்டா? :) மன்னுபுகழ் காந்தி மதி, மணி வயிறு வாய்த்தவனே தென் பொருநல் மாறனடி, சேர்ப்பித்தாய் செம்பொன் சேர் கன்னி நன்மா மதில்புடை சூழ், அரங்கநகர்க்கு அதிபதியே என்னுடைய இன்னமுதே, இராமனுசா தாலேலோ! தாலே தாலேலோ, உன் முப்புரிநூல் தாலேலோ! தாலே தாலேலோ, உன் முக்கோலும் தாலேலோ! தாலே தாலேலோ, உன் முறுவல்நிலா தாலேலோ! தாலே தாலேலோ, உன் கண்வளராய் தாலேலோ! உறங்காதே சக்கரமே, உடனிருந்து காத்திடுவாய்! உறங்காதே வெண்சங்கே, பால்கொடுத்து ஊட்டிடுவாய்! உறங்காதே கோபுரமே, குளிராமல் போர்த்திடுவாய்! உறங்காதே காவேரீ, கால்வருடி விட்டிடுவாய்! சங்கரனும் ராகவனும், சடுதியில் ஓடிவந்தோம்! தங்கையவள் கோதையுடன், தமிழோதி ஓடிவந்தோம்! திங்களொளி ராத்திரியில், தாலாட்ட ஓடிவந்தோம் பங்கயத்தின் சிவப்பழகே, பதறாமல் கண்ணுறங்கு! கண்ணுறங்கு கண்ணுறங்கு, இலட்சுமணா கண்ணுறங்கு! கண்ணுறங்கு கண்ணுறங்கு, இராமனுஜா கண்ணுறங்கு! நீயுறங்கு நீயுறங்கு, நிர்மலனே நீயுறங்கு! நானுறங்கு நானுறங்கு, நானிலமும் தானுறங்கு! ஆரீ-ராரீ-ரோஓஓஓஓஓஓ!

//ரெண்டு நாளாக் காய்ச்சல்! பதிவு எழுத இயல வில்லை!//
ReplyDeleteஇப்போ உடம்பு பரவல்லியா அண்ணா...
அமெரிக்கையில் சீதோஷ்ணம் சரியில்லையோ?...
சின்ன பதிவுன்னாலும் நல்லா இருக்கு. தாலாட்டும்... ஒரு தரம் பாடிப் பார்த்தேன். ஆனா தலைப்பைப் பார்த்துவிட்டு இன்னும் உங்கட்ட இருந்து நெறைய (சூடா) எதிர்பார்த்தேன்... இவ்வளவு சின்ன பதிவா ... அமெரிக்க சீதோஷ்ணத்தில் இடி விழ . . .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி
ReplyDeleteகுறுகத்தரித்த பதிவு!
சங்கரரின் நினைவில் மூழ்கி இருந்த என்னைத் தட்டி எழுப்பி ராமானுஜரின் மேன்மையை நினைவுபடுத்திய பதிவு!!
தாலாட்டை நானும் மனத்தில் பாடி தலைவரை நமஸ்கரிக்கிறேன்.
GET WELL SOON!
நன்றி
ReplyDeleteஇராமானுஜர் திருவடிகளே சரணம் :)
enna... udambukku sugamillaiya.. paattu nalla irunthathu thambi...
ReplyDeleteஉடல விரைவில் நலமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteதாலாட்டுத் தேனாய் இனிகிறது. பாராட்டுக்கள்.
அருமை ஆன தாலாட்டு. உடல் நலம் சரியானவுடன், சமயம் கிட்டும் போது இப்பதிவை வந்து படித்து வாழ்த்துங்கள்.
ReplyDeletehttp://natarajar.blogspot.com/2011/04/blog-post_19.html
hope you are back to normal, god is blessing you, thanks
ReplyDelete