சங்கத் தமிழில் காவடி இருக்கா?
பங்குனி உத்திரம் (Mar 27, 2013)
அவன் திருமண நாள் -ன்னு "புராணம்"
புராணம் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை;
எது-ன்னாலும், அவனுக்கும் அவளுக்கும் = திருமணம்! Happy 1st Night, Muruga:)
இன்று, பழனி மலை முழுதும், பலப்பல காவடிகள்;
* சாஸ்திரம் அறியாத எளிய மக்களுக்கும்-முருகனுக்கும் உள்ள நேரடித் தொடர்பு = "காவடி"!
* காவடியை, ஆச்சாரக்காராள் தூக்குவதில்லை; எளிய அன்பர்கள் மட்டுமே தூக்குறாங்க!
வாங்க, இன்னிக்கி... காவடியின் "உண்மையான" கதையைப் பார்க்கலாமா? = சங்கத் தமிழில் காவடி!
* என்னாது, சங்கத் தமிழ்-லயே காவடி இருக்கா?
* அதியமானை எதிர்த்து, ஒளவை காவடி தூக்கினாளா?:)
ஆமாம்!
இலங்கை அரசாங்கத்துக்கு, இந்தியா "காவடி தூக்குது" -ன்னு பொருளே -veஆ மாறிப் போச்சி, இன்னிக்கி;
ஆனா, அன்று?
தன் எதிர்ப்பைக் காட்டவே, ஒரு தமிழச்சி, காவடி தூக்கினாள்!
எதிர்ப்பைக் காட்ட, மாணவர்கள், தங்கள் மனசாட்சிக் கொந்தளிப்பை இன்று தூக்குகிறார்கள்;
முருகா, எத்தனை நாள்...? நான் மடிவதற்குள், ஈழத்தின் மானத்தை ஒரு துளியேனும் காண்பேனோ?
ஈழத் தவிப்பு = உலகம் அறிஞ்ச உண்மை; ஆனாலும் நிலை நாட்ட முடியலையே;
வெளித் தேசம் கூட வேணாம்; சொந்த பாரத தேசத்திலேயே நிலைநாட்ட முடியலையே!
*"சமயப் பொய்"-யெல்லாம் நிலை நாட்ட முடியுது; ஆனா ஒரு உண்மையை நிலைநாட்ட இத்தனை பாடா?
*ஆயிரம் தரவுகள் இருந்தும், நிலைநாட்ட இத்தனை மெனக் கெடணுமா?
= இதுவொரு மனத் தோல்வி-இனத் தோல்வி... தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும்!
= கந்தனுக்குப் பதிலாக, கண்டுகொள்ளாமைக்கு நாம் "காவடி தூக்கி" விட்டோமோ?:(
("காவடி" பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை, murugan.org -இல், ஆசிரியர் Patrick Harrigan கேட்டுக் கொள்ள எழுதியது; அங்கே பதிப்பித்து உள்ளார்கள்)
அரும்பெறல் "மரபின்" = பெரும்பெயர் முருக!
அந்த "மரபின்" தனித்த அடையாளம் = காவடி!

* மொட்டை போடுதல் = திருப்பதியிலும் உண்டு; சமணக் குடும்பங்களில் கூட உண்டு;
* அலகு குத்தல் = அம்மன் கோயில்களில் உண்டு; வெறியாடலும் உண்டு!
* ஆனா காவடி??? = வேற எங்காச்சும் இருக்கா?
நீங்களே யோசிச்சிப் பாருங்க!
இந்த நாட்டார் வழக்கம் = முருகனோடு மட்டும் உறவாடுவது ஏனோ?
இடும்பன் (எ) அசுரன், அகஸ்திய மகரிஷியின் இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான்;
பாதி வழியில் கீழே வச்சிட்டுத் தூங்கும் போது...
அது மேல மாம்பழச் சுப்பிரமணியன் aka முருகன், ஏறி நின்னுக்கிட்டான்;
தூங்கி எழுந்த அசுரனோ, மறுபடியும் தூக்க முடியாமல், முருகனை இறங்கச் சொல்ல, Caretaker of the Mountain = ஆளு "க்ளோஸ்";
இன்னொருத்தர் சொத்து மேல முருகன் ஏறி நின்னதும் இல்லாம, அவனைச் சாவடித்தலே = "தர்மம்"":)
அசுரன் சாகும் போது, தன்னைப் போலவே, பக்தர்களும் காவடி தூக்கிட்டு வரணும்-ன்னு வேண்டிக்கிட்டான்; டொட்ட டொய்ங்க்... End of Puranam:)
இதனால் தான் முருகனுக்குக் காவடியா???
= எத்தனை சுலபமா, பூர்வகுடி மக்களின் வாழ்வியல் - தொன்மவியல், அடிபட்டுப் போயிருச்சே???:(
= பண்டைத் தமிழ் மக்களின்/ குறிஞ்சி நில மக்களின் தொன்மம் = காவடி; தமிழ்க் கடவுளின் முருகவியல்!
நினைவில் நிறுத்துங்க:
"புராணம்" -ன்னு கதையைக் கட்டினா, தமிழ்த் தொன்மம் அழிஞ்சீரும்!:(
போதாக் குறைக்கு, ஒளவை (எ) பெருமை மிக்க சங்கத் தமிழ்ப் பெண்;
ஆனா அவ மேலயும் "புராணக்" கப்சா;
மொத்தம் 6 ஒளவையார்கள், தமிழ் இலக்கியத்தில் (Refer here)
அதிலே, முதலாம் ஒளவை = அதியமான் காலம் (3rd BCE - 2nd CE);
அதியமான் காலத்தில், எப்படி ஒருவர் கைலாஸத்துக்குப் போய், "பழம் நீ அப்பா" பாட முடியும்? அப்படீன்னா...
...இயேசு பிறந்து, கிபி 2 க்குப் பிறகு தான், முருகனே வளர்ந்தான்; பெரியவன் ஆனான்-ன்னு ஆயீருமே?:))
ha ha ha; "புராணத்துக்கு" அம்புட்டு Continuity போதாதுங்க:))
தப்பில்லை! புராணம், புராணமா இருக்கட்டும் (Mythology)! ஆனா, அதை, வாழும் தமிழ்ச் சான்றோர் மேல், "இட்டுக் கட்டக்" கூடாது;
Will you include Great English Poet, Shakespeare in Harry Potter "story" & make him do pooja for Potter?:)
நக்கீரர், ஒளவை = சங்கத் தமிழ் மாண்பு; அதை நாம மதிச்சி நடக்கணும்! "மனசில்" ஓரமா இருத்துவோம்;
(Pl Note: Only the movie is based on such "puranams"; We cannot blame KBS amma for this; She just 'acted' in the movie; She is so immaculate; Her life repeats in my life)
-----
= (திருவிளையாடற் புராணம்);
அ to ஹ = 48 சம்ஸ்கிருத எழுத்தும் 48 சங்கப் புலவரா ஆச்சி; கூடவே 49ஆவதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு;
= Are all my great tamizh poets formed from Sanskrit??
இப்படியெல்லாம், தமிழைப் பின்னுக்குத் தள்ளும் "சமயக் கதைகள்"?
அதுவும் கருணை வள்ளலான ஈசனின் பேரைச் சொல்லி? இந்தச் சமயப் போக்கு, மனசுல ஒட்டவே மாட்டேங்குது முருகா...
ஈசனா? மதமா? = எனக்கு ஈசனே போதும்;
= Sorry da Muruga, Even if it is You or Your dubakoor stories, Not at the cost of Tamizh Dignity! அன்றில் இருந்து இன்று வரை, இப்பிடியே இருக்கேனே:( எதுக்கு ஊரார் பகை? என்னை மாத்திறக் கூடாதா, முருகய்யா?
-----
அப்போ, "காவடி" -ன்னா என்னய்யா?
அது எப்படி, தமிழ்த் தொன்மமான முருகனுக்கே உரியதாச்சு? பார்க்கலாமா?
புறநானூற்றில் காவடி?
தமிழ் அகராதியில் சும்மா போயி, பொருள் பாருங்க; காவுதல் = தூக்குதல்;
காவு + அடி = காவடி!
அதாச்சும், தூக்கும் தண்டு = "காவும்" தடி!
மலையில் பாரம் சுமக்க, பூர்வ குடி மக்களுக்கு, இது ஓர் எளிய கருவி (Simple Machine)
Physics-ல படிச்சிருப்பீங்களே? Fulcrum, Lever -ன்னுல்லாம் நெட்டுரு போட்ட ஞாபகம் இருக்கா?:)
A lever is a beam connected to a hinge, called a fulcrum;
Human Fulcrum ஆகும் போது = அதே Lever காவடி ஆகின்றது! இரு புறமும் (எடை) சமன் செய்தல் = Balancing!
Mechanical Advantage of a lever (MA) = Balance of Torque, about the fulcrum = m1/m2 = a2/a1
பயந்துறாதீக; ஒங்கொப்பராண, ஒங்கள 8th Std கூட்டிப் போவ மாட்டேன்:)
இப்படி, எடையைச் சமன் செய்யும், பூர்வ குடிகளின் கருவியே = காவடி!
குறிஞ்சி மக்கள், பாரம் தூக்கிக்கிட்டு, மலை ஏறுவது கடினம்; அதான் எடையைப் பரவி, பின்பு சுமந்து செல்லுதல்!
(மலைப் பிரதேசங்களில், ரெண்டு ஆளுங்களையே இரு புறமும் உட்கார வச்சி, எளிதாகச் சுமந்து விடலாம், காவடியின் உதவியால்)
சரி புரிஞ்சுது; ஆனா காவடி = ஏன் முருகனுக்கு மட்டுமே ஆனது?
* ஏன்னா, முருகன்= குறிஞ்சிக் கடவுள் = மலையும் மலை சார்ந்த இடமும்!
* திருமால்= முல்லைக் கடவுள் = காடும் காடு சார்ந்த இடமும்!
மலைப் பாதையில், இம்புட்டு நீளமாத் தூக்கிச் செல்லலாம்;
ஆனா அடர்ந்த காட்டிலே? = அந்த நீளத்துக்கு வழியெல்லாம் செடிகொடியில் முட்டும்:)
(#jokeonly: காதலன் முருகன் முட்ட மாட்டான்; அப்பா திருமால் முட்டுவாரு:))
செங்குத்தான மலை; நடந்தாலே மூச்சு வாங்கும்; அதில் பாரம் சுமக்க, எளிய வழி!
அந்த மரபே, அந்த மக்களின் கடவுள் = சேயோன் (எ) முருகனுக்கும் ஆனது;
மற்ற இரண்டு தமிழ்க் கடவுளான திருமாலுக்கோ/ கொற்றவைக்கோ, காவடி ஆகவில்லை! "மலைத்" தெய்வத்துக்கு மட்டுமே ஆனது!
காவடியின் பல்வேறு பெயர்கள், தமிழ் இலக்கியத்தில்!
* காமரம்,
* காத் தண்டு, காவடித் தண்டு,
* காவணப் பத்தி
* காவுப் பொருட்டு
புறநானூற்றிலும் காவடி வருகிறது; தூக்குறது யாரு? = ஒளவை-யாரு!:)
அதியமான் நாடு = தகடூர் (மலை நாடு);
அதனால், ஒளவையாரும் காவடி எடுக்கின்றார்!
ஒளவையைத் தன் நாட்டிலேயே இன்னும் கொஞ்சம் நாள் வச்சிக்கிடணும்-ன்னு அதியனுக்கு ஆசை;
So, அவளுக்கு மட்டும் இன்னும் பரிசில் குடுக்கலை:)
இது தெரியாமல், ஒளவைக்கோ கோவம்; "போடா, உன் பரிசிலே வேணாம்; நீயாச்சி, நானாச்சி;
கெளம்புறேன்" -ன்னு மூட்டை கட்டுறா, தன் Luggage-ஐ! எதில்? = ஒரு காவடியில்:)
வாயி லோயே வாயி லோயே
பரிசிலர்க்(கு) அடையா வாயி லோயே
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!
(புறநானூறு 206; வாயில் நீட்டித்த அதியமான் நெடுமான் அஞ்சியை, ஒளவை பாடியது)
* எத்திசை செலினும் அத்திசைச் சோறே = நான் எங்கிட்டு போனாலும் சோறு கெடைக்கும்டா; ஒன்னைய நம்பி என் தமிழ் இல்லை!
* காவினம் கலனே = என் பொருட்களையெல்லாம் காவுகிறேன் (தூக்குகிறேன்); காவு தடியில் (காவடியில்) இதோ தூக்குறேன்; Tata; Bye:)
என்ன வீறாப்பு பாருங்க, செந்தமிழ்க் கிழவிக்கு:)
* இன்னிக்கி "காவடி தூக்குறான்" -ன்னா பொருளே வேற:( டில்லிக்குக் காவடி எடுக்கும் அமைச்சர் -ன்னா, குனிந்து குனிந்து கெஞ்சுதல்!
* ஆனா, அன்னிக்கி பாருங்க... "காவடி எடுக்கறேன்" -ன்னா, ஒன்னை நம்பி நான் இல்ல, கெளம்பறேன் -ன்னு மான உணர்ச்சி!
ஒளவை மட்டுமா காவடி? பின்னாளில், கம்பனும் காவடி எடுக்குறான்!
அரத்த நோக்கினர். அல் திரள் மேனியர்.
பரித்த காவினர். பப்பரர் ஏகினார் -
திருத்து கூடத்தைத் திண் கணையத்தொடு
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே
(பால காண்டம் - எழுச்சிப் படலம் 768; தயரதன், திருமணத்துக்கு வரும் வழியிலே கண்ட மலைக் காட்சிகள்)
* "பரித்த கா"வினர் = காவடித் தண்டைச் சுமந்து சென்றார்கள்;
* யார்? = பப்பரர் என்னும் மலைவாழ் மக்கள்;
* அரத்த நோக்கினர் = சிவந்த கண்கள்;
* அல் திரள் மேனியர் = கருத்த உடம்பு;
காவடியில் பாரம் தூக்கிக்கிட்டு மலையேறுகின்றனர்;
இது தாங்க, "புராணம் கலவாத", தமிழ்க் காவடியின் கதை!
வாங்க, நாம காவடிச் சிந்துக்குப் போவோம்!
அங்கே தானே என் மனசுக்குப் பிடிச்ச = இசை = இருக்கு?:)
"பால் மணக்குது, பழம் மணக்குது" -என்னும் பாட்டில், ரமணி அம்மாள், பல காவடிகளின் பேரைப் பட்டியல் போடுவாங்க; செம குத்துப் பாட்டு:)
பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்!
சக்கரக் காவடி, சந்தனக் காவடி, சேவற் காவடியாம்!
சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்!
இது இல்லாம...
பூங் காவடி, காசுக் காவடி, அன்னக் காவடி, விபூதிக் காவடி -ன்னு சுமந்து செல்வார்கள், அவரவர் மனசு வேண்டுதலின் படி!
இப்பல்லாம் பறவைக் காவடி-ன்னு ஒன்னு பிரபலம் ஆயிருச்சி, குறிப்பா மலேசிய - சிங்கையில்;
அதாச்சும் தான் எதுவும் சுமக்காமல், முழுக்கக் குத்திக் கொண்டு, அவரை Crane (அ) Machine சுமக்கும்; பறவை போல் இவர் ஊசலாடுவதால், பறவைக் காவடி!
இப்படியான "அதீத உடல் வருத்திக் கொள்ளல்" பற்றி நான் ஒன்னும் தப்பாச் சொல்லலை;
ஆனா இதிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமாச்சும் விலக்கு அளித்து விடுங்கள், Please...
முருகனை, மனசால் எண்ணியெண்ணிச் "சுமக்கும்" இன்பத்தை விட, பேரின்பம் வேறு இல்லை!
மனசால் "சுமந்து" செல்லுதலே நலம்; மெஷின் நம்மைச் சுமத்தல் அத்தனை நலம் அன்று; (என் தனிப்பட்ட கருத்து மட்டுமே; மன்னிக்க)
காவடியாட்டம் இரண்டு வகை:
1) பக்திக் காவடி
2) ஆட்டக் காவடி
பக்திக் காவடி பற்றி மேலே பேசினோம்;
ஆட்டக் காவடி அப்படியல்ல! அது ஒரு நாட்டுப்புறக் கலை!
ஒரு தண்டிலே, அலங்காரமாக் கூடு கட்டியிருக்கும்; மயில் இறகுகள் சொருகியிருக்கும்; விதம் விதமாய் ஆட்டம்!
* தலை, நெற்றி, தோள்
* முதுகு, கழுத்து, வயிறு
இப்படிப் பல உறுப்பிலும் வச்சி வச்சி, முன்னும் பின்னும் ஆட்டும் கலை!
நாதசுரம்-தவில் இசை!
சில சமயம்... பம்பை, கிடுகிட்டி, தமுக்கும் அடிப்பாங்க; ஆனா மெட்டு எப்பமே அந்தப் புகழ் பெற்ற மெட்டு தான் = காவடிச் சிந்து;
தோளில் தான் காவடியை நிறுத்துவாங்க;
கையால அடவு செஞ்சிக்கிட்டே, காவடியைத் தலைக்குக் கொண்டாந்து, சுழற்று சுழற்று -ன்னு சுழற்றுவாங்க;
கையில் பிடிக்காமலேயே, இத்தினி சுத்து சுத்தினாலும், அது கீழே விழாது!
என்னால இப்பிடியெல்லாம் ஆட முடியாது:)
கிராமத்துப் பூசையில், ஆயா(பாட்டி) பாடி, ஊருக்கே எடுத்துக் குடுப்பாங்க போல;
ஒவ்வொருத்தராச் சுமந்து போறதோட சரி;
தோழனோடு எப்பவாச்சும் ஒரு முறை போகும் போது, முருகனுக்குக் காவடி எடுக்கணும்-ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை!
* பின்னாளில் வந்த சிற்றிலக்கியங்கள் = ஒன்னுல கூடக் காவடி பற்றிப் பேச்சில்லை!
* சந்தம் செய்யவே வந்த நம் சொந்தக் கவி = அருணகிரியும், ஏனோ காவடி பற்றி ஒன்னுமே பாடலை;
அதனால் என்ன?
19th CE-இல் புண்ணியம் கட்டிக் கொண்டார் ஒரு "தெலுங்கர்" = தமிழ்க் கடவுளை!
அவர் பேரு = அண்ணாமலை ரெட்டியார்;
காவடிச் சிந்தைப் பாடிப் பாடிப், பிரபலம் ஆக்கினார்;
* அதுக்காக, காவடி பிறந்ததே = 19th CE-இல் தான்-ன்னு அவசரப்பட்டு முடிவு கட்டீறக் கூடாது;
* அதற்கும் முன்பே, எளிய மக்கள் - நாட்டார் வழக்கில் இருந்தது தான்; ஆனா இலக்கிய எல்லைக்குள் வரலை;
திருமங்கை என்ற முன்னாள் கள்வன் - பின்னாள் ஆழ்வார் (7th-9th CE); இதை இலக்கியத்துக்குள் கொண்டு வந்து கொடுத்தார்;
நந்திபுர விண்ணகரம் என்னும் ஊருக்குப் போவும் போது, வழியில் அலுப்பு தட்டாம இருக்க, எசப்பாட்டாய், பெருமாள் மேல் பாடிய "சிந்துப் பாடல்கள்"!
= இதுக்குப் பேரு வழிநடைச் சிந்து!
= இதையே, காவடி தூக்கிக்கிட்டு பாடினா, காவடிச் சிந்து!
"சிந்து" என்றால் 3x3 சீராய், அடுக்கும்!
= குறளடி, சிந்தடி, அளவடி, நெடில் அடி, கழிநெடில் அடி -ன்னு தமிழிசைக் கூறுகள்; யாப்பு இலக்கணமும் கூட;
செந்திலில் பொங்கிடும் அலைகள் (3) - திருச்
செந்தூர் முருகனின் கலைகள் (3) - கந்த
வேல் ஆனது சூரா திபன் (4),
மேல் ஆனதைக் கூறா க்கிய (4)
வீரா அதி தீரா (3)
பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) -ன்னு "சாஸ்த்ரீயமா" இருக்காது; நேரடியாச் சரணம்; முருகனே சரணம்:)
இந்த மெட்டு பிரபலமாகி விட்டதால், இன்று கர்நாடக இசையிலும் பாடுறாங்க; ஆனா, உன்னி கிருஷ்ணன் முதலான பல பேரும் "இழுத்து இழுத்து"ப் பாடுறாங்க; அந்தோ!
காவடிச் சிந்தின் அடிநாதமே அந்த "வேகம்" தான்; சும்மாக் குத்துப் பாட்டு கணக்கா, காலு தானாவே ஆடணும்!:)
சென்னிக் குளநகர் வாசன் - புகழ்
தேறும் அண்ணாமலைத் தாசன் - செப்பும்
செகம் மெச்சிய மதுரக்கவி
அதனைப்புது வரையில் புனை
தீரன் அயில் வீரன்!
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழி போதினில்
அமராவதி இமையோர் செவி
அடைக்கும் அண்டம் உடைக்கும்!
"உடைக்கும்" -ன்னு உடைக்குறா மாதிரிப் பாடணும்; இழுக்கக் கூடாது:)
ரெட்டியார், அப்படித் தான் மெட்டு போட்டாரு!
கழுகுமலை முருகன் மீதும், சென்னிக்குள முருகன் மீதும், அவரு போட்டுள்ள பாடல்கள், சும்மா "கும்"-ன்னு இருக்கும்!
பின்னால் வந்த தமிழ்த்-தேசியக் கவி, நம்ம சுப்பிரமணிய பாரதியும், இந்த மெட்டில் சில கண்ணிகளைச் செஞ்சிருக்கான்;
எல, ரெட்டியாரு-பாரதியாரு எல்லாரும் ஒரே ஊர்க்காருவக தானே-ல்ல?:)
பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கெளமாரன்
பணிசுப்பிர, மணியற் கருள் அணிமிக் குயர், தமிழைத் தரு
பக்தர்க் கெளிய சிங்காரன் ...
தூக்கு மேடையில் ஒரு காவடிச் சிந்து:
"ஆர்மோனியம்" காதர் பாட்சா -ன்னு ஓர் இசைக் கலைஞர்;
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாட்டிலே அவருக்கு ஓர் ஈர்ப்பு;
இசுலாமியர் தான்; ஆனாலும், கழுகுமலை முருகன் மீது ஈடுபாடு;
"காதர்" பாட்சா = "காவடிச் சிந்து" பாட்சா ஆகிவிட்டார்:)
ஆனா, பாவம் ஏதோவொரு வழக்கில் சிக்கிக்கிட்டாரு போல; அப்பாவிக்குத் தூக்குத் தண்டனை;
"உன் கடைசி விருப்பம் என்ன?" = தூக்கு மேடையில் அதிகாரி கேட்ட போது,
"காவடிச் சிந்தை ஆர்மோனியத்தில் ஆசை தீரப் பாடணும்" என்றார் பாட்சா;
சுருளிமலை மேவும் சீலா - உனைத்
தோத்தரித்தேன் சுப்ரமண்ய வேலா - பசுந்
தோகை மயில் - மீதில் ஏறி
வாகுடனே - காத்(து) அருளும்
துய்யா முரு கைய்யா!
கேட்டார்கள், மனம் மயக்கும் தமிழிசையை; ஒரு தாள வாத்தியமும் இல்லாம, தானாவே இசை கூட்டும் சந்தம்!
நேரம் கடந்து போனதே தெரியாமல், அதிகாரிகள் ரசித்துக் கொண்டிருக்க... முடிவில் தூக்கு மேடை ஏறினார் காதர் பாட்சா!
ஆனால், உடன் இருந்த வழக்கறிஞர், ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்பினாரு...
"காதர் பாட்சா என்னும் இவரை, மாலை சரியாக 6:00 மணிக்குக், உயிர் பிரியும் வரை, தூக்கில் தொங்க விடுங்கள்" - இதுவே நீதிபதியின் தீர்ப்பு;
ஆனால் காலம் கடந்து விட்டது; 6:45 pm
"தண்டனை உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால், ஒன்று ரத்து செய்ய வேண்டும், இல்லை அப்பீல் செய்ய வேண்டும்"
- விதிகளை அந்த அலுவலர் சுட்டிக் காட்ட... அன்று "தலை" தப்பிய பாட்சா, பின்பு நீதிமன்றத்திலும் "தலை" தப்பினார்!
என் "தலை" வைத்து... உன் இணையடி காக்க!
முருகா, என் தலையை வைத்தாச்சும், உன்னை நான் காப்பேன்-டா, நீ என்னைக் காக்காவிடினும்...
பங்குனி உத்திரக் காவடிப் பதிவு இதுவே;
காவும் = (தூக்கும்)
காவு + தடி = காவடி!
அந்தக் காவடிக்கு நாயகனே! என் காதலுக்கும் நாயகனே!
* அரும் பெறல் மரபின் பெரும் பெயர் = காவடி!
* பூர்வ குடிகளின் தமிழ்த் தொன்மம் = காவடி!
சங்கத் தமிழ்க் கடவுளாம் முருகனின்,
சங்கத் தமிழ்க் காவடி வாழி!
Read more »

மொத்தம் எத்தனை விதமான காவடிகள்?

![]() |
கழுகுமலைக் கோயிலின் முன்பு... |