Thursday, July 25, 2013

தமிழ்ச் சினிமாவில் முருகன் சினிமாக்கள்!

70s & 80s = தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்!

அந்தப் பொற்-காலத்தில், வெள்ளித்-திரைக்கு "முருகக் காய்ச்சல்" பிடித்துக் கொண்டது!:)
கந்தன் கருணை,  தெய்வம், 
திருவருள்,  துணைவன், 
வருவான் வடிவேலன்,  முருகன் அடிமை, 
கந்தர் அலங்காரம்,  வேலும் மயிலும் துணை etc etc... so many murugan films!

தேவர் பிலிம்ஸ் = இதுக்கு ஒரு முக்கியக் காரணம்!
சிறந்த இயக்குநர்களான (என் அபிமான) ஏ.பி. நாகராஜன் & கே. சங்கர் = மற்றொரு காரணம்!

எம்.ஏ. திருமுகம் & ஆர். தியாகராஜன் போன்ற இயக்குநர்களையும் சொல்லி ஆகணும்!
இவர்கள் அனைவரும், ஒரு தலைமுறைக்கே, "முருக அலை" கொண்டு மனம் வருடினார்கள்! சினிமா (எ) மந்திர மயக்கத்தில் நாமும் கட்டுண்டோம்!

இதில் பலவும், "புராணக் கதைகள்" தான் (உண்மை அற்றவை);
தமிழ்க் கடவுளாம் முருகனின், "தமிழ்த் தன்மையை" உணர்த்தாது, சம்ஸ்கிருத புராணங்களின் அடிப்படையில் அமைந்த "கதைகளே"!

எனினும், காட்சியின் பிரம்மாண்ட விரிவால், சினிமா மூலமாக, முருகனைக் கொண்டு சென்றது!
சினிமா வாகனம், மயில் வாகனத்தை விட வேகம் அல்லவா?:))

இன்னிக்கும் பலருக்கு...
மனத்திலே, முருகன் மாயம் செய்கிறான் என்றால்...
= சிறு வயதில் பார்த்த, இந்தச் சினிமாக்களின் பங்கு மிக மிக உண்டு!



நமக்கு, மெய்யான சங்கத் தமிழ்த் தரவுகள், அதிகம் தெரியாது!

அதியமான் காலத்து ஒளவை, எப்படி மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
அப்படீன்னா, அதியமானுக்குப் பின்னால் தான் (2nd Century, After Christ) , முருகனே வளர்ந்து பெரியவன் ஆனான் -ன்னு ஆயீருமே??:))
இந்த "Logic" எல்லாம் சினிமா முன் = செல்லாது; செல்லாது:)

சங்கத் தமிழ் முருகன் = நடுகல் தொன்மம்! 
பூர்வ குடிகளின் தொன்மம்!
அதுவொரு அரும் பெரும் மரபு; "இயற்கை வழிபாடு"! அவ்வளவே!

இதர "புராணக் கதைகள்" = வடமொழி ஆதிக்கத்தால் வந்தவை;
= வீரபாஹூ!
(பாஹூ = தோள்; சுந்தர பாஹூ = அழகிய தோளன்); கஜபாஹூ (கயவாகு) -ன்னு ஒரு சிங்கள மன்னனைச் சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டும்;

ஆனா, வீரபாஹூவை -> வீரபாகு -ன்னு ஆக்கி, அவனைத் "தமிழ் வீரன்" -ன்னு காட்டிக் கொண்டு இருக்கிறோம்!
சம்ஸ்கிருத புராணத்தை வைத்தா, "தமிழ்க் கடவுள்"-ன்னு நிலைநாட்டுவது?:))

ஐயகோ முருகா!:(
-----------

திருவிளையாடல் கதையும் இப்படியே!
"கொங்கு தேர் வாழ்க்கை" எனும் எழிலார் சங்கத் தமிழின் மேல் "ஏற்றப்பட்ட புராணம்"!

பொண்ணு கூந்தலை மோப்பம் புடிச்ச "செண்பகப் பாண்டியன்" வரலாற்றிலேயே இல்லை:)
நக்கீரர் காலத்துப் பாண்டியன் = நன்மாறன் (இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்)


“அ முதல் ஹ” = 48 சம்ஸ்கிருத எழுத்து; அவையே 48 சங்கப் புலவர்கள் ஆச்சாம் (கபிலர்/பரணர்...)
அவங்க கூட, சிவபெருமானே 49-வதா, சங்கத்தில் உட்கார்ந்தாராம்! சொல்லுறது: அதே “தருமி-திருவிளையாடல்” தான்!:)

So..., சங்கப் புலவர்களுக்கே 
= சம்ஸ்கிருத எழுத்து தான் மூலம்? புரியுதோ?:(

Proof: திகழ்தரு அகார ஆதி , ஹாகாரம் ஈறாச் செப்பிச்
புகழ் தரு நாற்பத்து எட்டு, நாற்பத்து எண் புலவர் ஆகி

சங்க மண்டபம் உண்டாக்கித், தகைமை சால் சிறப்பு நல்கி,
அங்கு அமர்ந்து இருத்திர் , என்ன இருத்தினான் அறிஞர் தம்மை!
(- சங்கப் பலகை கொடுத்த படலம்; தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்)

அடக் கொடுமையே! ஒரு சைவத் "தமிழ் இலக்கியமே", தனக்கு வடசொல்லு தான் மூலம்-ன்னு சொல்லுதே!:(

இங்கு வந்தமர்ந்து, தமிழில் "பாண்டித்யம்" பெற்று, இங்கேயே மாற்றி எழுதும் சில தமிழ் "வாத்திகள்"!
அதை உணராது... "இழிவையே பெருமை" -ன்னு, நாமும் "இலக்கியம்" பேசிக் கொண்டு வாழ்கிறோம்!

Let mythology be mythology! No issues!
But to mix it on living Tamizh Poets & harming Tamizh = A Big NO!

இதே, ஒரு வடமொழி இலக்கியத்திலாச்சும், தமிழ் போய் "ஏத்தி" இருக்கா?
அ முதல் -ன் வரை 30 எழுத்து; இந்த முப்பது  தான் முப்பது-முக்கோடி தேவர்கள் ஆச்சு!
ஆய்த எழுத்து தான் "ஆயுத மோகினி - விஷ்ணு பகவான்" ஆச்சு -ன்னு நாம ஏத்தி இருக்கோமா?

ஏன், தமிழுக்கு மட்டும் இப்படியொரு நிலைமை?:(
* "மதி மயக்கம்" கூடத் தீர்ந்து விடும்
* "மத மயக்கம்" - தீரவே தீராது!


(குறிப்பு:  மேற்சொன்னவை அவரவர் மனசாட்சிக்கான கேள்விகளே!

நாம, இயக்குநர்களைக் குறை சொல்ல முடியாது; So called "தமிழ் இலக்கியத்தில்" உள்ளதைத் தானே, படமாக எடுக்கிறார்கள்?
தமிழ் இலக்கியத்தில், "புராணத்தை" நுழைத்தது, அவர்கள் பிழை அல்லவே!)

நாம சினிமாவுக்கு வருவோம்! 
KBS amma = both in Sumangali form & Immaculate form!

முருகன் படங்களில் கோலோச்சிய குரல் = KBS Amma (எ) கே.பி. சுந்தராம்பாள்;
அம்மாவின், காதல் வாழ்வு பற்றிய என் தனிப்பதிவு இங்கே = http://murugan.org

KBS = முருக இசை ஊற்று என்றால்...
மூவர் அணி = TMS, Susheelamma, Seergazhi... முருக இசை அருவிகள்!

இவர்களோடு, வாரியார் சுவாமிகளே, இந்தப் படங்களில் தோன்றி நடித்தார்..
* சில படங்களில் முன்னுரை மட்டும்!
* துணைவன் படத்தில் பலப்பல காட்சிகள்! - அன்றாட வாழ்வில் வருவது போல் வருவாரு;
புராணப் படமாய் இல்லாம, அன்றாட வாழ்வில் "முருக-அன்பு" சொல்லும் படங்கள், எனக்குப் பிடிக்கும்!

பல பின்னாள் முருகன் படங்களில் = AVM Rajan தான் கதை நாயகன்!

அட, MR Radha அவர்களே முருக பக்தனா வேசங் கட்டி இருக்காரு;
வேலும் மயிலும் துணை -எனும் படத்தில், பகுத்தறிவுப் பேச்சாளராத் தோன்றி, முருகனை ஒரு கலக்கு கலக்கி எடுப்பாரு:)

கந்தர் அலங்காரம் -ங்கிற படத்தில், "லொள்ளு கதா காலட்சேபம்" செய்யும் முருக பக்தர்:)

ஆதி தேவனின் மைந்தா நமோ நமோ!
ஆறு வீட்டுக்கு  ராஜா  நமோ நமோ!:)) - Remix of MR Radha!

May be under this inspiration, I wrote in a birthday post: முருகன் = கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா:)
கோ= அரசன்; கோக்கோ= அரசர்க்கு அரசன்
வேல் பிடிச்சா= வேலா; ஆண்டிக் கோல் பிடிச்ச = கோலா:)
கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா!:) Sorry muruga chellam! Love u honey:)

வாலிப முருகன் -ன்னா = அது எப்பவும், சிவகுமார் மட்டுமே!
குழந்தை முருகன்-கள் = மாஸ்டர் ஸ்ரீதர் (அ) பேபி ஸ்ரீதேவி;

I like Sridevi! Master Sridhar will talk too much:)
I deeply wish, if my dearest "Silk" had acted in a Murugan Role:)
வேல் ஒத்த கண்ணாள்!
ஆனா, முருகனே விரும்பினாலும், ஆச்சார சினிமாக்காரங்க விட்டிருக்க மாட்டாங்க:( 

முருகன் செய்த புண்ணியம் = அவனுக்கு 3 இசை மேதைகள் வாய்த்தார்கள்!
= கேவி. மகாதேவன், எம்.எஸ்.வி, குன்னக்குடி
இவர்கள் இசையில் தான், முருகனின் கொடி, பட்டொளி வீசிப் பறந்தது!

இறுதியாக ஆனால் உறுதியாக...
= கண்ணதாசன் & வாலி!
இவர்களின் முருக வரிகள், மனத்திலே முகவரிகள் போட்ட வரிகள்!

இன்றைய தேதிக்கு, இப்படியொரு முருகச் சினிமா வருமா?
ரொம்பக் கஷ்ட்ட்ட்டம்:) Jai Ho!
அப்படியொரு கூட்டணி அமைய, முருகன் மனசு வச்சாத் தான் உண்டு!



இன்றைய பாடல் = "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே"!

திருவருள்-ன்னு ஒரு படம் வந்துச்சி!
தேவரின் மருதமலையைச் சிறப்பித்தென்றே வந்த படம்!

தேவர் பிலிம்ஸ்! சீர்காழி-குன்னக்குடி இருவருமே தோன்றுவார்கள்!
வாரியார் சுவாமிகளும் படத்தில் தோன்றி, மருதமலை பற்றிப் பேசுமாறு ஏற்பாடு செய்தார் சின்னப்ப தேவர்!

AVM ராஜன் ஒரு முருக பக்தர்! "முருக வெறியர்" -ன்னு கூடச் சொல்லலாம்! :) நல்ல குரல் வளம் அவருக்கு!
அவர் பாடுவதைக் கேட்ட ஒரு கம்பெனி முதலாளி, தன் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க...
வெறும் பாடகர் AVM ராஜன் -> பெரும் பாடகர் ஆகி விடுகிறார்! 

* ஒன்று வந்தால் -> இன்னொன்றைக் கை கழுவி விடுவார்கள் பலர்!
* ஆனால் "மனத்தால் மெய்யான" அன்பர்கள்??

AVM ராஜன் "காதலை" விடவே இல்லை! பழசை மறக்கவில்லை!
அவர் காதலி-மனைவி அப்படி இல்லை போலும்! முன்பு, கோவிலில் பூக்கட்டி வாழ்ந்த பூக்காரி!

பூக்காரி -> புதுக்காரி ஆகி விட்டாள்!
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! அவளுக்கு முருகனிலேயே மூழ்கி இருப்பது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை!

முருகன் Vs ஆசை -ன்னு வந்துட்டா...
முருகனா முக்கியம்? தத்தம் "ஆசை" தானே முக்கியம்?:)

* முருகனையே எண்ணிக் கைப் பற்றியவன் *
*  பணத்தின் எண்ணிக்கை பற்றுபவள்
இவர்கள் உறவு முறிந்ததா? = முருகன் "முறிப்பானா"??

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக -ன்னு தயவு செஞ்சி சொல்லாதீங்க; என் முருகன், யார் குடியும் கெடுப்பவனோ/ முறிப்பவனோ அல்லன்!
அவன் மனது வைத்தால்.... நடவாதனவும் நடந்திடாதா?
இசையாதனவும் இசைந்திடாதா? = பிரிந்தவர் சேர்ந்தனர்!

படம் முழுக்க TMS ஆட்சி தான்!
* மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...
* கந்தன் காலடியை வணங்கினால்...
* உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே...
-ன்னு அத்தனையும் TMS-இன் கணீர்ச் சொத்து!

சுசீலாம்மாவும் மாலை வண்ண மாலை -ன்னு பாடி இருப்பாங்க!
சீர்காழியும் ஒரு சூப்பர் பாட்டு பாடி இருப்பார்! இருப்பினும், எனக்குப் பிடித்தமான பாடல்...
= உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே... 
= ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

என்ன?.... நம்மை "அதிகாரம்" செய்யுற Autocratஆ முருகன்?
அல்ல!
இந்த "அதிகாரம்" = திருக்குறளின் "அதிகாரம்" / சிலப்"பதிகாரம்" போல..

ஒவ்வொன்றும் நமக்காக பார்த்துப் பார்த்துச் செய்யும் அதி-காரம் இல்லா அதிகாரம்!
= கதிகாரம்! விதிகாரம்!
= அவனே எனக்குப் பதியான பதிகாரம்!
என் உடம்பு/உள்ளம்; அதிகாரம் = "அவனுக்கே"!

பாடலின் வரிகளை, Murugan (Cinema) Songs வலைப்பூவில் காணுங்கள்! = Here

படம்: திருவருள்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரி: கண்ணதாசன்
குரல்: TMS

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே... 
தமிழ்ச் சினிமாவிலும் = உந்தன் அரசாங்கமே!

26 comments:

  1. சகாதேவன் 9:12 AM, July 23, 2013
    முருகா

    ReplyDelete
    Replies
    1. Sahadevan, Sorry, I posted this earlier and had to delete it, for want of few evidence & videos!
      But, within few mins of publishing u commented; So had to carry fwd your comment; Sorry:)

      Delete
  2. தொகுப்பு சிறப்பு... நன்றி...

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியும் ரசித்துப் படிக்கும் படி இருந்தது.
    திருவருள் முழுப்படமும் யுடியுபில் உள்ளது. சிறுவயதில் பக்திப் பெருக்கோடு பார்த்தப்படம், திரும்ப அண்மையில் பார்க்கும் பொழுது அவ்வளவாக ஈர்க்கவில்லை, ஆனால் பாடல்கள் எப்போது கேட்டாலும் சிலிர்கிறது. டி எம் எஸ்ஸின் கணீர் குரலும் ஒரு காரணம்.

    சிறப்பான இடுகை கே ஆர் எஸ்.

    ReplyDelete
    Replies
    1. நலமா கோவி அண்ணா?

      //சிறுவயதில் பக்திப் பெருக்கோடு பார்த்தப்படம், திரும்ப அண்மையில் பார்க்கும் பொழுது அவ்வளவாக ஈர்க்கவில்லை//
      ha ha ha! Over acting?:)
      But songs we carry forever - That too Kannadasan+TMS combo

      //ஒவ்வொரு வரியும் ரசித்துப் படிக்கும் படி இருந்தது//
      Dank u:) My long time wish to write on Murugan Cinemas; This is just a tip of cone ice cream:)

      Delete
  4. அருமையான பதிவு!
    //அதியமான் காலத்து ஒளவை, எப்படி மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
    அப்படீன்னா, அதியமானுக்குப் பின்னால் தான் (2nd Century, After Christ) , முருகனே வளர்ந்து பெரியவன் ஆனான் -ன்னு ஆயீருமே??:))// - பின் மண்டையிலடிக்கும் உண்மை! இதெல்லாம் ஏங்க உங்களை மாதிரி ஆளுங்களுக்கு மட்டும் தோணுது? எங்களை மாதிரி ஆளங்களுக்கெல்லாம் ஏன் தோண மாட்டேங்குது? அப்படித் தோணனும்னா என்ன செய்யணும்?
    [நான் இதுவரை கொச்சைத் தமிழில் ஒரு வரி கூட எங்கேயும் எப்பொழுதும் எழுதியதில்லை. இவ்...வளவு தமிழறிவு கொண்ட நீங்களே இப்படி எழுதுவதைப் பார்த்து, அதுவும் கொச்சைத் தமிழிலேயே இவ்வளவு இனிமை சொட்ட எழுத முடியும் என்பதைப் பார்த்து இதோ இப்பொழுது நானும். இந்தப் பாவமெல்லாம் உங்களுக்கே! :-)]

    தமிழில், தமிழ்க் கடவுளில் கலந்து விட்ட வடமொழி, மதமோகக் கலப்பு பற்றிய தங்கள் கருத்துக்கள் அனைத்தும் அசத்தல்! நன்றி! சிந்திக்க வேண்டிய பரப்பப்பட வேண்டிய பதிவு!
    (புதிதாக, சமூக வலைத்தளங்களின் பொத்தான்களை இணைத்திருப்பதற்கு நன்றி!).

    ReplyDelete
    Replies
    1. //இதெல்லாம் ஏங்க உங்களை மாதிரி ஆளுங்களுக்கு மட்டும் தோணுது? எங்களை மாதிரி ஆளங்களுக்கெல்லாம்.. //

      எனக்காத் தோனுது?
      முருகன் "புராணத்துக்கு" எதிரா முருகனே தோன வைக்குறான்:))

      //நான் இதுவரை கொச்சைத் தமிழில் ஒரு வரி கூட எங்கேயும் எப்பொழுதும் எழுதியதில்லை. இவ்...வளவு தமிழறிவு கொண்ட நீங்களே இப்படி எழுதுவதைப் பார்த்து//

      ஆகா!
      ஞானப்பிரகாசன், உங்கள் மூலமா ஒன்று தெரிவிக்க ஆசை!
      எனக்குத் தமிழறிவு எல்லாம் இல்லை;
      ஆனா, தமிழன்பு ரொம்ப உண்டு!
      தமிழ் வெறும் மொழி மட்டுமே அல்ல; அதுவொரு பண்பாடு-உயிர்ப்பு;

      //கொச்சைத் தமிழ் - ஆங்கிலம் கலந்து//
      ஏன் எழுதறேன்-ன்னா, அப்படி எழுதினாத் தான், ஓரளவாச்சும், "என்ன தான் சொல்லுறான்-ன்னு கேட்போமே" -ன்னு படிக்க வராங்க!

      அப்படி அவர்கள் வரும் போது, "தமிழும், அதன் அழகான உயிர்ப்பும்,
      மதம் கலவாமல்,
      மனம் கலந்து படிக்கும் போது,
      தமிழால், நம்ம மனசே அழகாகும், உணர்ச்சியில் மேம்படும் -ன்னு சொல்ல முடியுது!

      அதுக்குத் தான் கொச்சையும், நடுவால சில ஆங்கிலமும்!
      உள்ளே அழைத்து வருவதற்கான முகமன்கள்!

      இல்லீன்னா, ஏதோ தமிழ்-ன்னாலே "பண்டிதர்கள் விஷயம்", "இலக்கியமெல்லாம் நமக்கெதுக்கு"? போன்ற மனப்பான்மை வந்து விடுகிறது;

      அப்படி இருப்பவர்களிடமும், தமிழ்த் தொன்மத்தை / இயற்கை வழிபாடு-வழிமுறைகளைக் கொண்டு செல்லணும்-ன்னா...
      We gotto adjust for the தமிழ் எளியோர், Not தமிழ் வல்லோர்:)

      நான் தமிழ் எளியன்; அறிஞன் அல்லன்!
      அப்படி இருக்கவே விரும்புகின்றேன்!:)

      //இந்தப் பாவமெல்லாம் உங்களுக்கே! :-)//

      போச்சுறா; டாய் முருகா, Minus this paavam from my account:)

      Delete
    2. ஆகா! நீங்கள் என் கருத்துக்கு அளித்திருக்கும் இந்தப் பதிலை இத்தனை நாள் நான் எப்படிப் பார்க்காமல் விட்டேன்!

      உங்கள் நடைக்கு நீங்கள் கூறும் விளக்கம் புரிகிறது. ஆனால் அதற்காக... நீங்கள் என்னதான் விளக்கமளித்தாலும்... நீங்கள்... தமிழ் அறிஞர் இல்லை என்றெல்லாம் என்னால் ஒப்புக்கொள்ள முடியாது! :-D இங்க வேற யாராவது கண்ணபிரானின் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்கிறீர்களாப்பா?...

      Delete
  5. ஔவையாரைப் பற்றி..
    மக்கள் அறிவாளிகளாகி கேள்வி கேட்கும் போது நாங்கள் அறிவியல் விளக்கம் கொடுப்போம். அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் இடையில் இதற்கென்றே இருக்கும் ஆட்கள் மூலம் [பணம் பண்ணுவதற்கே என்று இருக்கும்] பக்தி பத்திரிக்கைகள் மூலம் கதை புனைய சொல்லி அதை [புளுகு] புரானாமாக்குவோம்.

    அதியமான் காலத்து ஒளவை, எப்படி மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்? - அப்படீன்னா, அதியமானுக்குப் பின்னால் தான் (2nd Century, After Christ) , முருகனே வளர்ந்து பெரியவன் ஆனான் -ன்னு ஆயீருமே??:))

    மொத்தம் ஆறு அவ்வையார்கள் வாழ்ந்தார்கள் என்று நவீன புராணம் புளுகு ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன் படி..

    மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
    ---இது முதல் அவ்வையார்!

    அதியமான் காலத்து ஒளவை!
    ---இது ஆறாவது அவ்வையார்!

    It is so simple as 1-2-3! இதான் இந்த புதிருக்கு விடை!

    இனி மேலும் ஏதாவது அறிவு பூர்வமான கேள்வி வந்தால் அவ்வையார் எண்ணிக்கை ஏறலாம். நாங்களும் ஆராய்ச்சி பன்னுவோமில்லே!

    Latest count: இப்ப பத்து திருவள்ளுவர்கள் வாழ்ந்ததாக அதியமான் காலத்து ஒளவை, பின்னப்பட்டு வருகிற கதை உன்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நம்பள்கி! ரசித்தேன்:)

      //மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
      ---இது முதல் அவ்வையார்!
      அதியமான் காலத்து ஒளவை!
      ---இது ஆறாவது அவ்வையார்!//

      ha ha ha! இப்படியெல்லாம் "புதுப் புராணம்" உருவாக்கீற முடியாது; ஏன்னா வரலாறும் இலக்கியமும் அறிவியல்பூர்வமா ஒத்துப் போவுது:)

      அந்த "அதியமான் காலத்து ஒளைவையாரு" தான்-ப்பா முதல் ஒளைவையே!:))
      அதுக்கு முன்னாடிய ஒளவை இல்ல! "ஆறுவது சினம்" -ன்னு இருக்குற இலக்கியமும் அதுக்குப் பின்னாடி வந்ததே!:) So gol-mals are tightly restricted:)

      நீங்க சொன்ன 6 ஒளவையார்கள் = ஓரளவு உண்மையே!
      * 2nd CE முதலாம் ஒளவை (சங்க காலம்) = அதியமான் நண்பர்
      * அங்கவை – சங்கவைக்குத் திருமணம் செய்து வைத்த ஒளவை = இது கதை! அப்படியொரு ஒளவையே இல்லை! கபிலரே அந்தப் பாடுபட்டவர்
      * 9th CE = விநாயகர் அகவல் பாடிய ஒளவை (சுந்தரர் – சேரமான் காலத்து ஒளவை)

      * 12th CE = ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை
      * 17th CE = பேய் விரட்டிப் பாடிய ஒளவை
      * 18th CE = பந்தன் அந்தாதி பாடிய ஒளவை
      http://dosa365.wordpress.com/2012/08/15/7/
      ------------

      சங்க கால ஒளவை வேறு! விநாயகர் அகவல் பாடிய ஒளவை வேறு!
      (சங்க காலத்தில் விநாயகர் எல்லாம் சுத்தமாக் கிடையாது, தமிழ் நிலத்தில்:)))

      தமிழ் இலக்கியம் & அறிவியல்
      = கால ஆராய்ச்சி have now been scientifically established with radio carbon dating & lotsa techniques!
      = முன்பே சொன்னது போல், எழுத்தில் என் "விசுவாசம்" தமிழுக்கே! முருகனுக்குக் கூட இல்லை!

      Delete
    2. ஆக, அதியமான் காலத்து ஔவையார்தான் முதல் ஔவையார் என நீங்களும் உறுதிப்படுத்துகிறீர்கள் இல்லையா கண்ணபிரான் அவர்களே!

      அப்படியானால், இஃது ஏன் இப்படி இருக்கக்கூடாது? அதாவது, அதியமான் காலத்து ஔவையார் 18ஆம் நூற்றாண்டு வரை, அத்தனைக் காலம் எப்படி வாழ்ந்திருக்க முடியும் என்பதால்தானே இத்தனை ஔவையார்கள் இருப்பதாக நீங்கள் முடிவு கட்டுகிறீர்கள்? ஏன், வெகு காலம் வாழ்வதற்காக அதியமான் கொடுத்த அந்த அதிசயக் கருநெல்லிக்கனியால் அந்த முதல் ஔவையாரே அத்தனைக் காலம் வாழ்ந்திருக்கக்கூடாதா? இப்படி ஏன் யாருமே சிந்திக்கவில்லை?

      Delete
    3. //அந்த அதிசயக் கருநெல்லிக்கனியால் அந்த முதல் ஔவையாரே அத்தனைக் காலம் வாழ்ந்திருக்கக்கூடாதா? இப்படி ஏன் யாருமே சிந்திக்கவில்லை?//

      sooperu!:)
      ஞானப்பிரகாசன், நீங்களே "புராணம்" எழுதப் போயிருக்கலாம்! என்னவொரு சிந்தனை! சும்மா பிச்சி ஒதறி இருப்பீங்க:)

      From 2nd CE to 18th CE - 1600 வருசம் ஒளவை வாழ்ந்தாள்! ஆகா! ஓகோ! நெல்லிக்கனி பிரசாத விநியோக சித்திரஸ்து:))

      Delete
    4. சந்தேகமாகத்தானே கேட்டேன்? அதற்குப் போய் இப்படித் திட்டினால் எப்படி வாத்தியாரே? நான் இந்த ஆண்டுக் கணக்கெல்லாம் போட்டுப் பார்க்கவில்லை. இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதே என்றுதான் சொன்னேன்! தவறு புரிந்தது! நன்றி!

      Delete
    5. //சந்தேகமாகத்தானே கேட்டேன்? அதற்குப் போய் இப்படித் திட்டினால் எப்படி வாத்தியாரே?//

      சேச்சே! ஒங்களப் போயித் திட்டுவேனா? பாருங்க, ஒங்களையும் நம்பள்கியும் புகழ்ந்து தான் சொல்லிருக்கேன்:)
      ஒங்க கற்பனை வளத்தை மெச்சினேன்! அஷ்டே:)
      I really liked it - Best way to defeat puraNams is = we shd tell more than them & "shock" them:)))

      Delete
    6. //சேச்சே! ஒங்களப் போயித் திட்டுவேனா? பாருங்க, ஒங்களையும் நம்பள்கியும் புகழ்ந்து தான் சொல்லிருக்கேன்// - நன்றி வாத்தியாரே!

      Delete
  6. நான் இதை சொன்னதிற்கு காரணம்....ஒரு கூட்டம் சமீப காலங்களில் தமிழ்ப் புலவர்களை இழிவு படுத்தக் கிளம்பியிருக்கு. நீங்கள் சொன்ன விளக்கத்தை மறைத்து விட்டு, சொல்கிறவர்கள் சொன்னால் மக்கள் கேள்வி கேட்காமல் நம்புகிறார்கள் என்பதே உண்மை. இதை தமிழ் அறிஞர்களும் (சம்ஸ்க்ரித்த பாஷை தெய்வ பாஷை என்று ஒப்புக்குளோம் ஆன்மீகவாதிகள்) ஒத்துக்கொள்வது கொடுமை.

    பத்து திருவள்ளவர் இருந்தார்கள் என்று சமஸ்க்ரிததை விரும்புவர்கள் சொல்கிற கதை தெரியுமா? அதாவது...ஒரு திருவள்ளவர் என்றால் அறிவாளி! அதையே பத்து பேர் சேர்ந்து எழுதினா? அதான் இந்த பத்துக்கு காரணம்!

    இதற்க்கு முன் திருமூலரை அசிங்கம் செய்தார்கள். திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்தாராம்; 3000 பாட்டுக்கள் எழுதினாராம். அப்ப வருடத்துக்கு ஒரு பாட்டா? என் தமிழ் சுத்தம்! நானே ஒரு மணியில் இரு பாட்டு எழுதிவிடுவேனே?

    நானே காலை ஆட்டிக்கிட்டு தூங்கிக்கொண்டு...மூன்று வருடத்தில் 3000 பாட்டுக்கள் எழுதுவேவேனே?

    திருமூலர் என்னை விடவா மோசம்...இந்த ஆறு அவ்வையார், பத்து திருவள்ளுவர், 3000 திருமூலர் வாருடங்கள் வாழ்ந்தது எல்லாம் தமிழ் அறிஞர்களை சிறுமைப் படுத்தவே!

    எப்படி தீட்ரென்று இந்த கண்டு பிடிப்புக்கள்?

    இப்படி சொல்லிப்பாருங்கள்: 12 கம்பர் வாழ்ந்தார்கள்; 27 வால்கீகி வாழ்ந்தார்கள் என்று--உங்களை குதறி விடுவாரகள்:

    ReplyDelete
    Replies
    1. //இப்படி சொல்லிப்பாருங்கள்: 12 கம்பர் வாழ்ந்தார்கள்; 27 வால்கீகி வாழ்ந்தார்கள் என்று--உங்களை குதறி விடுவாரகள்//

      ha ha ha; very true!

      //இதை தமிழ் அறிஞர்களும் (சம்ஸ்க்ரித்த பாஷை தெய்வ பாஷை என்று ஒப்புக்குளோம் ஆன்மீகவாதிகள்) ஒத்துக்கொள்வது கொடுமை//

      Yes! I have seen this in twitter also!
      "தமிழ் வல்லுநர்" என்ற போர்வையில், தமிழுக்கே வேட்டு வைக்கும் போக்கு

      * "தமிழ் இலக்கணம்" -ன்னு பேசிப் பேசியே,
      * "தமிழ் உணர்ச்சி" என்பது வந்து விடாமல், காரியமாற்றும் நவீன பண்டிதர்கள்!

      சான்றாக, உங்கள் பின்னூட்டத்தையே எடுத்துக்கறேன்!
      அதில், ஒரு வேகத்தில், சிற்சில எழுத்துப் பிழைகள் உள்ளன; //உங்களை குதறி விடுவாரகள்// - க் வரணும்
      ஆனா என்ன சொல்ல வரீங்க -ன்னு எனக்குப் புரிகிறது; ஒங்களைக் கேலி பேச மாட்டேன்!

      ஆனால், "டுமீலை மொதல்ல ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்" போன்ற ஆட்கள்!
      எள்ளி எள்ளி, ஒங்க தமிழ் உணர்ச்சியையே கூசிப் போகச் செய்வார்கள், பிழை திருத்தம் என்கிற போர்வையில்;

      //பத்து திருவள்ளவர் இருந்தார்கள் என்று சமஸ்க்ரிததை விரும்புவர்கள் சொல்கிற கதை தெரியுமா?//

      :))
      The movie ஒளவையார் was also done like this only! வாசன் & சுப்பு:)
      திருக்குறளையே, "விநாயக பக்தை" ஒளவை தான் அரங்கேற்றினாள் - என்பது போன்ற கப்சாக்கள், சினிமா (எ) சக்தி வாய்ந்த ஆயுதம் மூலமாக!

      ஆனால், சமயம் சாரா, மெய்யான தமிழார்வலர்கள் சுட்டிக் காட்டிய போது...
      மீடியா பலத்தால், அவர்களையே "கப்சா கண்ணு ஸ்வாமிக்கள்" என்று முத்திரை குத்தி விட்டார்கள்:(

      மீடியா-ஆள் கூட்டுப் பலத்திலெல்லாம் துவண்டு விடாமல்..
      அப்பர் அடிகள் போல்... "என் கடன் பணி செய்து கிடப்பதே" மனசு வேணும்; அதையே கொடு முருகா!

      Delete
  7. நம்பள்கி & ஞானப்பிரகாசன் = அருமையா எடுத்துக் கொடுக்குற நண்பர்கள்!
    அவர்கள் தூண்டிய விளக்கால் இதைச் சொல்கிறேன்! = தமிழ் உணர்ச்சிக்கும் & "புராண" உணர்ச்சிக்கும் உள்ள வேற்றுமை!
    ---------------------

    ஒளவை பெற்ற நெல்லிக் கனி = "அதிசய" நெல்லியெல்லாம் இல்ல!
    ஒளவை வாயாலேயே கேட்போமா? புறநானூறு!

    பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
    சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,

    ஆதல் நின் அகத்து அடக்கி,
    சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே!
    ---------------------

    அதாச்சும் தோட்டத்துல வளரும் நெல்லியை விட, "மலை நெல்லி", தரம் மிக்கது!

    நெல்லிக்காய், நட்டு வச்சா, காய்க்கவே 4-5 வருசம் மேல ஆவும்! அதுவும் மலை நெல்லி -ன்னா கேட்கவே வேணாம்! யாராச்சும் மலை ஆளுங்க, போற்றி வளர்த்தாத் தான் உண்டு!

    = அதான் "பெரு மலை விடர் அகத்து + அரு மிசைக் கொண்ட + சிறி இலை நெல்லி"

    பொதுவாவே, நெல்லிக்கு, மருத்துவ குணங்கள் உண்டு!
    Gooseberry ன்னு விக்கியில் தேடிப் பாருங்க;
    Protein, Vitamin, Minerals -ன்னு ஒவ்வொன்னுத்தலயும் ஒம்போது வகை காட்டி இருப்பாங்க, நெல்லிக்கு மட்டும்! அதும் "மலைநெல்லி" -ன்னாக் கேட்கவே வேணாம்!

    அதான், கிடைத்தற்கு அரிய "மலைநெல்லி"யை, யாரோ வேடுவன் மூலமாப் பெற்ற அதியமான்...
    அதை நட்பின் மிகுதியால் ஒளவைக்குக் குடுத்து மகிழ்ந்தான்!

    ஏன்?
    ---------------------

    "ஆதல் நின், அகத்து அடக்கி,
    சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே"

    மனுசனாப் பொறந்தா, சாதல் உண்டு!
    Max recorded Life Expectancy = approx 120 years!
    அப்பறம் என்ன "சாதல் நீங்க"? சாதல் = துன்பம்! சாக்காடு -ன்னு சொல்லுறோம்-ல்ல?

    துன்பம் நீங்கிய, உடல் உபாதை இல்லா வாழ்வு; ஆரோக்கியம் காக்கும் மலை நெல்லி; அவ்ளோ தான்!

    ஓங்க கிட்ட, "சாவே வராத திருப்பதி லட்டு" / ஸ்பெசல் விலை: அம்பது லட்ச ரூபாய்-ன்னு குடுத்தா வாங்குவீங்களா?

    ஏதோ சாமியார் பிரசாதம் -ன்னு டாம்பீகத்துக்கு வாங்கினாலும் வாங்குவீங்களே தவிர,
    சாவே வராது -ன்னுல்லாம் வாங்கவே மாட்டீங்க:) பொய் -ன்னு நல்லாவே மனசாட்சிக்குத் தெரியும்:)
    ---------------------

    எனக்குப் பிடிச்ச "அதிரசம்"!
    தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை நோன்பு; சிவபெருமான் விரதம்! "கேதார கெளரி"
    அன்னிக்கு மட்டுமே வீட்டுல அம்மா சுடுவாங்க!

    ஆனா பொங்கல் சமயத்தில் யாருக்கோ திருமணம்; அதனால் அதிரசம் சுட்டுக் குடுத்து இருக்காக!
    அந்தச் சமயம் பாத்து நான் இந்தியா வரேன்; இன்னும் ஒரு வாரத்துல வந்துருவேன்...

    கிடைச்ச கொஞ்சம் அதிரசத்தை, அம்மா சாப்பிடாமலேயே வச்சிருக்காங்க!
    = எனக்குப் பிடிக்கும்! எனக்குக் குடுக்கணும் -ங்கிறத்துக்காக!

    அப்படித் தான் அதியமான் குடுத்தான் ஒளவைக்கு!
    * நின், அகத்து அடக்கி = "திங்குற மனசை" அடக்கினானாம்! ஆகா!
    * எமக்கு ஈத்தனையே = தமிழ் அன்பால், எனக்குக் குடுத்தாயே!

    இவ்ளோ தான் இதன் பின்னணி!
    இதில் இருப்பது.. "தமிழ் உணர்ச்சி + மன அன்பு"
    ---------------------

    இதே, இந்த நிகழ்ச்சி மதத்தில் நடந்திருந்தா?
    * இந்நேரம் "நெல்லிக்காய் பிரசாதம்" ஆகி இருக்கும்! கோயில் விற்பனை கன ஜோர்
    (மதுரை ஆதீன ஞானப் பால் விநியோகம் பாத்தீங்க-ல்ல?)

    இதான் தமிழுக்கும், புராணத்துக்கும் உள்ள வேறுபாடு!
    * தமிழ் = "உள்ளம்" (எ) உணர்ச்சியை அழகு பெறச் செய்யும்!
    * சம்ஸ்கிருத புராணம் = உங்கள் நம்பிக்கையைக் கொள்முதல் செய்யும்

    You decide, which is good for you!

    * முருகன் (எ) தமிழ்த் தொன்மம் = பொய்யான "பழம் நீ" புராணத்தில் இல்லை! பஞ்சாமிர்த அபிஷேகத்தில் இல்லை;
    * முருகன் (எ) தமிழ்த் தொன்மம் = உங்கள் மனம் காதலால் கசியும் கண்ணீர் "அபிஷேகத்தில்" தான் இருக்கான்!

    ReplyDelete
    Replies
    1. //நம்பள்கி & ஞானப்பிரகாசன் = அருமையா எடுத்துக் கொடுக்குற நண்பர்கள்!// - மிக்க நன்றி ஐயா!

      வேறு யாராவதாக இருந்தால், இந்த விளக்கத்தையே ஒரு தனிப் பதிவாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் நீங்களோ, ஒரு பதிலையே ஆராய்ச்சிக் கட்டுரை போன்ற தரத்துக்கு வழங்கியிருக்கிறீர்கள்!!!

      Delete
  8. kannabiran, RAVI SHANKAR:
    அம்மா சுட்டது...அதிரசமா அல்லது கச்சாயமா? சிறு வேறுபாடு உண்டு...சிவ பெருமானுக்கு என்று சொன்னதால் இந்த கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. அதிரசம் & கச்சாயம் = உடன்பிறப்புக்கள்:)

      அதிரசம்
      = எப்பமே அரிசி மாவு தான் (எனக்குத் தெரிஞ்சி)! தட்டையா இருக்கும்!

      கச்சாயம்
      = மைதா/ அரிசி -ன்னு பல மாவில் சுடலாம்; கொஞ்சம் உப்பலா இருக்கும்! ரவை போட்டா மொறு மொறு-ன்னு கூட வரும்!

      அம்மா, நோன்பு எடுப்பது அதிரசம் வச்சித் தான்!
      அதுவும் கருப்பு அதிரசம் (வெல்லம்) மட்டுமே!

      (காரடையான் நோன்பு இல்ல! ஆனா அது மாதிரி-ன்னு வச்சிக்கோங்களேன்!
      தன்னை ஏறெடுத்தும் பாராத ஈசனை,
      அன்னை, இருப்பினும் அவரையே கணவனாக அடைய நோன்ற நோன்பு!)

      பொதுவா இனிப்பு அதிகம் தின்னாத "கார-வாய்" என்னோடையது! (கார-வாயி தான், நாற-வாயி ன்னு படிக்காதீக:)))
      இருப்பினும், அதிரசம் ரொம்பப் பிடிக்கும்!

      கச்சாயம் = கீழ்க் கொங்கு நாட்டுப் பக்கம்/ கரூர்ப் பக்கம் இன்னும் பிரபலம்! அவுங்க யாராச்சும் வந்து சொன்னா, மேலும் தெரிஞ்சிக்கடலாம்:)

      Delete
  9. இரண்டும் உண்டு எங்கள் வீட்டில்...
    திருவாதிரை அன்று அதிரசம்! மற்ற நாட்களில், பொதுவாக சமூக வெளி விசேஷங்களில் (குலதெய்வம் பூஜைகள், அப்படி) கச்சாயம் தான். எனக்கு இனிப்பு பிடிக்காது.

    என் மகள் என் மனைவி இருவரும் என் அம்ம சுடும் கச்சாயம் மிகவும் பிடிக்கும். வாழைப்பழம் சேர்த்தும் என் அம்மா கச்சாயம் சுடுவார்கள்; இதை மட்டும் விரும்பி சாப்பிடுவேன்...

    கச்சாயம் விஷேசத்திற்கு சுடுவது...ஈரோடு, கரூர், காங்கேயம், தாராபுரம், பழனி பகுதிகளில் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. sooper!
      நீங்களே கச்சாய நிபுணர் தானா? ஆகா:) வாழைப்பழம் போட்டுச் சுடும் கச்சாயம் பத்தி, படத்தோட பதிவொன்று இடுங்களேன்! புண்ணியமாப் போவும்:)

      நீங்க ஈரோடு/ கரூரா? "கீழ்க் கொங்கு" -ன்னு சொன்னது சரி தான் போல! கச்சாயம் அவிங்களோட பெருஞ் சொத்து:)

      கச்சு + ஆயம்; மார்புக் கச்சு -ன்னு சொல்லுறோம்-ல்ல? திரண்டு (உப்பலா) இருத்தலைக் குறிக்கும்; ஆயம் = சேர்க்கை!
      கச்சாயம் = என்னவொரு அழகான தமிழ்ப் பேரு; உணவுப் பேரு! தமிழ் உணவுகள் பற்றித் தனியா ஒரு பதிவெழுதணும் எப்பவாச்சும்:)

      Delete
  10. ஆஹா பழனி பஞ்சாமிர்தம் சாப்பிட்டமாதிரி இனிய பதிவு எத்தனை விஷயங்கள் ரவி எத்தனை தகவல்கள் !! நெல்லிக்கனி விவரம் கச்சாய ஆராய்ச்சி!! !! பாராட்ட வார்த்தை இல்லை மறுபடிவரேன் வார்த்தை கிடைத்ததும்:)

    ReplyDelete
    Replies
    1. :)
      கச்சாயம் = நம்பள்கி அவர்களுக்குச் சொந்தம்;
      அவர் இசைவு பெற்று எடுத்துச் சாப்பிடுங்க-க்கா:))

      Delete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP