எவனோ "வாலியாம்"! மட்ட ரகமா எழுதறான்:)
வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி = அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!
அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!
அதென்ன "வாழ்ந்தவர்"? ...இன்னும் பல நாள் வாழ்வார் - தமிழொடு!
அவர் பொன்னுடலுக்கு மட்டும்..நம் கரம் கூப்பிய அஞ்சலி! என் கண்மலர் வணக்கம்!
அது போன்ற துன்பமே இப்போதும்!
அடுத்தடுத்து... மணிவண்ணன், TMS, வாலி -ன்னு...
வாலியிடம் எனக்குச், சிற்சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டென்றாலும், மாறுபட்ட தமிழ் என்பது கிடையவே கிடையாது!
அவரின் அரசியல் சார்ந்த "துதி நடை" தவிர்த்து..
அவரின் கவிதை ஒவ்வொன்றிலும் தனித்துத் தெறிக்கும் = "சொற்செட்டு"!
பற்செட்டுக் கிழவனும், பக்கோடா தின்ன வல்ல நற்செட்டு!
விற்செட்டாம் தமிழ் வில்லில்...
வீறிட்டுக் கிளம்பும் சொற்செட்டு! = அதுவே வாலி!
** கண்ணதாசன் பாட்டில் = "கருத்தழகு" = தானாக வந்து விழும்
** வாலியின் பாட்டில் = "சொற்செட்டு" = தானாக வந்து விழும்
இரண்டுமே, மனத்தைக் குத்தி நிக்கும்!
எவனோ "வாலியாம்"! - பதிவின் தலைப்புக்கான கதை:
அப்போ தான், வாலி புகழ் பெற ஆரம்பிச்சிருக்கும் வேளை...
ஆனா, சென்னையில், இந்த "மூஞ்சி" தான் வாலி-ன்னு, பல பேருக்குத் தெரியாது!
உறவினர் ஒருவரின் வற்புறத்தலால், புதுசா அடைஞ்ச புகழை வச்சி...
சி.எஸ்.ஜெயராமன் என்ற பிரபல பாடகரை அணுகி... (வீணைக் கொடி உடைய வேந்தனே fame)...
திருச்சியில் ஒரு கச்சேரிக்கு, அழைத்து வருமாறு ஏற்பாடு! வாலி, அவரைக் காரில் அழைச்சிக்கிட்டு வராரு..
பயணத்தில், சி.எஸ்.ஜெயராமன் சில பாடல்கள் பாட... வாலி, அதன் இராகங்களை எல்லாம் கண்டுபுடிக்க... ஒரே கும்மாளம் தான்!
வாலியின் இசை அறிவை வியந்த ஜெயராமன்..
"ஒங்களுக்கு என்ன தம்பி வேலை?" -ன்னு கேட்டு வைக்க...
-எமக்குத் தொழில் கவிதை-
"பாட்டெழுதும் வேலை" -ன்னு வாலியும் சொல்லி வைக்க...
(சினிமா அல்லாத Album Songs எழுதறவங்க பேரு = பரவலாக வெளியில் தெரிவதில்லை!
"உள்ளம் உருகுதய்யா" பாடலை எழுதியது ஒரு பெண்மணி = ஆண்டவன் பிச்சை -ன்னு பேரு; நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?)
"கற்பனை என்றாலும்", "ஓராறு முகமும்" போன்ற Murugan Album Songs எழுதியது இந்தத் தம்பி தான் -ன்னு அறிந்து கொண்டார் ஜெயராமன்;
ஆனால் அதே தம்பி தான் "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" பாட்டையும் எழுதியது -ன்னு தெரியாது ஜெயராமனுக்கு!
"தம்பீ, ஒங்களுக்கு நல்ல தமிழில், நல்லாப் பாட்டெழுத வருதே! நீங்க சினிமாவுக்கு வரலாமே?
ஒன்னுமே தெரியாதவனெல்லாம், கண்ட தமிழில் எழுதித் தள்ளுறானுங்க!...
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" -ன்னு அரசியல் கலந்து எழுதுறானுங்க!
எவனோ வாலியாம்! மட்ட ரகமா எழுதறான்!
புது ஆளு -ன்னு இந்த MSV, போயும் போயும் அவனைச் சேத்துக்கிட்டு இருக்காரு!..."
இதைக் கேட்ட வாலிக்கு, செம Shock! :)
ஜெயராமனுக்கோ, அவரு தான் வாலி -ன்னே தெரியாது!:)
பயணத்தில், இது பத்தி மூச்சே விடாம,
திட்டு வாங்கிக்கிட்டே வாலி தொடர...
ஊரு வந்து இறங்கிய போது, அனைவரும் "வாலி வாலி" எனக் கொண்டாட...
சி.எஸ்.ஜெயராமன் + வாலி = ரெண்டு பேரு மூஞ்சியும் பாக்கணுமே!:)))
குபுக் -ன்னு சிரிச்சிட்டாங்க, ரெண்டு பேரும்! ஜெயராமன், வாலியின் கையைப் பற்றிக் கொண்டு..
"முன்னாடியே சொல்லி இருக்கலாம்-ல்ல தம்பீ?
காவிரித் தண்ணிக்கு எப்பமே குசும்பு ஜாஸ்தி" -ன்னு இடிச்சாராம்:)
= இதான் வாலி!
"ஒரு கருத்து சொல்லிட்டானே" -ன்னு மனசுள் கறுவாத குணம்! = Legends are Legends!
வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்";
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;
* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...
(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே:
சில திருப்புகழ்ப் பாடல்களை விட.. வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்.. ஏனோ என் உள்ளத்தை.. உருக்கி எடுக்கும்!)
அதுவே இன்று...
* முருகன் (சினிமா) பாட்டு வலைப்பூவில் = வாலி அஞ்சலி!
* கண்ணன் (சினிமா) பாட்டு வலைப்பூவிலும் = வாலி வணக்கம்!
பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!
அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)
தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)
பூனை நாயும், கிளியும் கூட, மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)
வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
எல்லாருக்கும் தெரிந்த தகவல் = குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
அது மட்டுமில்லை! இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி = "குழந்தைக் குரல்" பாட்டுக்கென்றே சொந்தமானவரு தமிழ்ச் சினிமாவில்!
ஆனா, இந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;
என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அணைத்த அவன் கையும் கோத்துக்கிட்டு.. அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!
= வாலி (வலி) வரி!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
கருணையே இல்லையாடா முருகா? = (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..

Hey Raam - Vaali |
முன்பொரு முறை... ஒரே மாசத்துல... பாடகி சொர்ணலதா மறைந்தார்; இசையமைப்பாளர் சந்திரபோஸ் மறைந்தார்!
அது சமயம், அஞ்சலிப் பதிவு கூட என்னால எழுத முடியல!அது போன்ற துன்பமே இப்போதும்!
அடுத்தடுத்து... மணிவண்ணன், TMS, வாலி -ன்னு...
iLayaraja - iLaya vaali |
வாலியிடம் எனக்குச், சிற்சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டென்றாலும், மாறுபட்ட தமிழ் என்பது கிடையவே கிடையாது!
அவரின் அரசியல் சார்ந்த "துதி நடை" தவிர்த்து..
அவரின் கவிதை ஒவ்வொன்றிலும் தனித்துத் தெறிக்கும் = "சொற்செட்டு"!
பற்செட்டுக் கிழவனும், பக்கோடா தின்ன வல்ல நற்செட்டு!
விற்செட்டாம் தமிழ் வில்லில்...
வீறிட்டுக் கிளம்பும் சொற்செட்டு! = அதுவே வாலி!
** கண்ணதாசன் பாட்டில் = "கருத்தழகு" = தானாக வந்து விழும்
** வாலியின் பாட்டில் = "சொற்செட்டு" = தானாக வந்து விழும்
இரண்டுமே, மனத்தைக் குத்தி நிக்கும்!
எவனோ "வாலியாம்"! - பதிவின் தலைப்புக்கான கதை:
அப்போ தான், வாலி புகழ் பெற ஆரம்பிச்சிருக்கும் வேளை...
ஆனா, சென்னையில், இந்த "மூஞ்சி" தான் வாலி-ன்னு, பல பேருக்குத் தெரியாது!
உறவினர் ஒருவரின் வற்புறத்தலால், புதுசா அடைஞ்ச புகழை வச்சி...
சி.எஸ்.ஜெயராமன் என்ற பிரபல பாடகரை அணுகி... (வீணைக் கொடி உடைய வேந்தனே fame)...
திருச்சியில் ஒரு கச்சேரிக்கு, அழைத்து வருமாறு ஏற்பாடு! வாலி, அவரைக் காரில் அழைச்சிக்கிட்டு வராரு..
பயணத்தில், சி.எஸ்.ஜெயராமன் சில பாடல்கள் பாட... வாலி, அதன் இராகங்களை எல்லாம் கண்டுபுடிக்க... ஒரே கும்மாளம் தான்!
வாலியின் இசை அறிவை வியந்த ஜெயராமன்..
"ஒங்களுக்கு என்ன தம்பி வேலை?" -ன்னு கேட்டு வைக்க...
-எமக்குத் தொழில் கவிதை-
"பாட்டெழுதும் வேலை" -ன்னு வாலியும் சொல்லி வைக்க...
(சினிமா அல்லாத Album Songs எழுதறவங்க பேரு = பரவலாக வெளியில் தெரிவதில்லை!
"உள்ளம் உருகுதய்யா" பாடலை எழுதியது ஒரு பெண்மணி = ஆண்டவன் பிச்சை -ன்னு பேரு; நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?)
"கற்பனை என்றாலும்", "ஓராறு முகமும்" போன்ற Murugan Album Songs எழுதியது இந்தத் தம்பி தான் -ன்னு அறிந்து கொண்டார் ஜெயராமன்;
ஆனால் அதே தம்பி தான் "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" பாட்டையும் எழுதியது -ன்னு தெரியாது ஜெயராமனுக்கு!
"தம்பீ, ஒங்களுக்கு நல்ல தமிழில், நல்லாப் பாட்டெழுத வருதே! நீங்க சினிமாவுக்கு வரலாமே?
ஒன்னுமே தெரியாதவனெல்லாம், கண்ட தமிழில் எழுதித் தள்ளுறானுங்க!...
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்" -ன்னு அரசியல் கலந்து எழுதுறானுங்க!
எவனோ வாலியாம்! மட்ட ரகமா எழுதறான்!
புது ஆளு -ன்னு இந்த MSV, போயும் போயும் அவனைச் சேத்துக்கிட்டு இருக்காரு!..."
இதைக் கேட்ட வாலிக்கு, செம Shock! :)
ஜெயராமனுக்கோ, அவரு தான் வாலி -ன்னே தெரியாது!:)
பயணத்தில், இது பத்தி மூச்சே விடாம,
திட்டு வாங்கிக்கிட்டே வாலி தொடர...
ஊரு வந்து இறங்கிய போது, அனைவரும் "வாலி வாலி" எனக் கொண்டாட...
சி.எஸ்.ஜெயராமன் + வாலி = ரெண்டு பேரு மூஞ்சியும் பாக்கணுமே!:)))
குபுக் -ன்னு சிரிச்சிட்டாங்க, ரெண்டு பேரும்! ஜெயராமன், வாலியின் கையைப் பற்றிக் கொண்டு..
"முன்னாடியே சொல்லி இருக்கலாம்-ல்ல தம்பீ?
காவிரித் தண்ணிக்கு எப்பமே குசும்பு ஜாஸ்தி" -ன்னு இடிச்சாராம்:)
= இதான் வாலி!
"ஒரு கருத்து சொல்லிட்டானே" -ன்னு மனசுள் கறுவாத குணம்! = Legends are Legends!
All Young - MSV, Vaali, P Susheela, TMS! Vaali has that "inquisitive" face, always!:) |
வாலி, Train Station -இல் எழுதிக் காட்டிய முருகன் பாட்டு = "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்";
அதைப் படித்த TMS, அந்தச் சொற்செட்டில், தானாவே இசையும் அமைந்து விடுவதை வியந்து.. இன்னும் பல அறிமுகங்களை உருவாக்கித் தந்தார்;
* கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் = எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு என்றாலும்...
* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே = வாலியின் முருக முத்தில்.. அரும்பெரும் முத்து...
(என் தனிப்பட்ட கருத்து மட்டுமே:
சில திருப்புகழ்ப் பாடல்களை விட.. வாலியின் இந்த முருகச் சினிமாப் பாடல்.. ஏனோ என் உள்ளத்தை.. உருக்கி எடுக்கும்!)
அதுவே இன்று...
* முருகன் (சினிமா) பாட்டு வலைப்பூவில் = வாலி அஞ்சலி!
* கண்ணன் (சினிமா) பாட்டு வலைப்பூவிலும் = வாலி வணக்கம்!
பாடலைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!
அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!
(அம்மாவும் நீயே!)
தந்தை முகம், தாயின் முகம், கண்டறியோமே!
மனச் சாந்தி தரும் இனிய சொல்லைக் கேட்டறியோமே!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)
பூனை நாயும், கிளியும் கூட, மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
முருகா முருகா முருகா முருகா
(அம்மாவும் நீயே!)
வரி: வாலி
படம்: களத்தூர் கண்ணம்மா
இசை: ஆர்.சுதர்சனம்
குரல்: எம்.எஸ்.ராஜேஸ்வரி
எல்லாருக்கும் தெரிந்த தகவல் = குழந்தை கமலஹாசன் நடித்த முதல் படம் இதுவென்று!
அது மட்டுமில்லை! இதைப் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரி = "குழந்தைக் குரல்" பாட்டுக்கென்றே சொந்தமானவரு தமிழ்ச் சினிமாவில்!
ஆனா, இந்தப் பாட்டை வாலியா எழுதினார்?
- என்ற சந்தேகம் வரும் அளவுக்கு...
- அவர் Trademark சொற்செட்டே அதிகம் இல்லாமல்..
- நேரடியாக, மனசோடு பேசும் பாட்டு;
என் முருகனின் சட்டையை உலுக்கி, டேய் முருகா ஆஆ -ன்னு அவன் கன்னத்தில் அறைந்து,
அறைந்த என் கையும், அணைத்த அவன் கையும் கோத்துக்கிட்டு.. அவன் தோளில் சாய்ந்து கொள்வேன்... கீழ்க்கண்ட ரெண்டே வரியில்!
= வாலி (வலி) வரி!
எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே?
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
-----
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?
கருணையே இல்லையாடா முருகா? = (சேவல்) "கொடியவா"!
இன்றும்.. அதே ரீங்காரத்தில்.. நான்..
* வாலிக்கு = அரங்கன் மேல் இனம் புரியாத காதல்! முருகனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்றார்!
* எனக்கோ = முருகன் மேல் "இனம் புரிந்த" காதல்! அரங்கனை = அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்பேன்!
இப்படி... என்....
மன வரியின் முகவரி = வாலி வரி;
வாலி வாழ்க!
அருமையான பதிவு! நீங்கள் மீண்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி!
ReplyDelete//(சேவல்) "கொடியவா"!// - தூள்!
வாலி அவர்களின் இழப்பில் பெரிய துக்கம் என்னவெனக் கேட்டால், கடைசி வரை அவருடைய எழுத்துவன்மை குன்றவில்லை என்பதுதான். எழுத்துவன்மை குன்றி, வயதான காலத்தில் ஏதோ பேருக்குப் பாட்டெழுதிக் கொண்டிருந்திருந்தால் அவர் இழப்பைச் செரித்துக் கொள்ளலாம். அண்மையில் கூட, 'நங்காய்! நிலாவின் தங்காய்! மங்காய்! நீதானே செங்காய்!' என்றெல்லாம் இலக்கியத்தனமாகப் பின்னியெடுத்தார். அப்பேர்ப்பட்டவரை இழந்துவிட்டதுதான் பொறுக்க முடியவில்லை!
வணக்கம் ஞானப்பிரகாசன்..
Deleteசில தனிப்பட்ட துன்பங்களால், முன்பு போல் அதிகம் எழுதுவதில்லை!
//கொடியவா"!// - தூள்//
ஐய்யய்யோ.. நான் ஏதோ ஒரு ஆத்தாமை ஊடலில் முருகனைத் திட்டுவேன்; அதுக்காக நீங்களும் அப்படியே சொன்னா எப்படி?:) பாவம் அவன்!
//அவருடைய எழுத்துவன்மை குன்றவில்லை என்பதுதான்//
மிக்க உண்மை!
சங்கு எவ்வளவு சுட்டாலும் வெண்மை தரும்!
வயது ஆக ஆக... எம்.எஸ்.அம்மா குரல் லேசாகக் குன்றலாம்; சில நாட்டியக் கால்கள் தடை படலாம்!
ஆனால் நல்ல தமிழ் என்றுமே தடைபடாது!
அதான் "சீர் இளமைத்" திறம் வியந்து, செயல் மறந்து வாழ்த்துதுமே!
என் கருத்துக்கு மதிப்பளித்துப் பதிலளித்தது மகிழ்வளிக்கிறது! நன்றி! உங்களுக்கு இருக்கும் அதே ஆற்றாமைதான் எனக்கும். மே18-ஓடு எனக்கு இருந்த இறைப்பற்று எனும் ஓடு விட்டுவிட்டது! நான், கடவுள் இல்லையெனச் சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் சொல்லவில்லை, கடவுள் இருக்கிறான், ஆனால் அவன் கொடியவன், அவனை நம்பாதீர்கள் என்பதுதான் என் கொள்கை! ஆனால், என்னுடைய இந்தக் கொள்கைகளுக்கும் அந்த வரியை நான் ரசித்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் ரசித்தது அதிலிருந்த அந்த இரட்டைக் கிளவியை! உங்கள் புலமையை!
Deleteஇதே போல் இன்னோரிடத்தில், 'கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா' என்று வர்ணித்திருந்தீர்களே, அபாரம், அசத்தல், இதற்கெல்லாம் மேலாகத் தமிழில் ஏதேனும் சொல் இருப்பின் அதைச் சொல்லித்தான் அதைப் பாராட்ட வேண்டும்! மலைத்து விட்டேன்!
'தமிழ்மணம்' பட்டையில் வாக்களிக்க முயன்றேன். ஆனால், 'புதிதாகத் திரட்ட இடுகைகள் ஏதும் இல்லை' எனப் பதில் வருகிறது. இந்த வலைப்பூவில் மட்டுமில்லை, பல தமிழ் வலைப்பூக்களில் இதே பதில்தான் வருகிறது. ஒருவேளை, இது ஏதும் தொழில்நுட்பச் சிக்கலாக இருப்பின் சரி செய்து கொள்வீர்கள் என்பதற்காகத் தெரிவிக்கிறேன். நன்றி!
Deleteநன்றி ஞானப்பிரகாசன்;
Deleteதமிழ்மணம் பட்டை சரி செய்ய முயல்கிறேன்; இப்போதுள்ள நிலையில், தமிழ்மணம்/வாக்கெல்லாம் பார்ப்பதேயில்லை:)
//மே18-ஓடு எனக்கு இருந்த இறைப்பற்று எனும் ஓடு விட்டுவிட்டது!//
//அவன் கொடியவன், அவனை நம்பாதீர்கள்//
ha ha ha!
//'கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா' என்று வர்ணித்திருந்தீர்களே//
முருகனை நான் மதிக்கவே மாட்டேன்:)
"கடவுளாகவே" அவனைப் பார்ப்பதில்லை!:) அதான் இப்பிடியெல்லாம் = கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா:)
மிக்க நெருங்கிய காதல்/உயிர்த் தோழமை போலத் தான் அவன்!
தமிழ்த்தொன்மம் என்பதால், கூடுதலாய்த், தமிழ் சார்ந்த உறவு!
ஆனா "முருகனின் சமயமா? தமிழா?" என்றால்..
என் "விசுவாசம்" தமிழுக்கே! முருகனுக்குக் கூட இல்லை!
ஆனா "முருகனின் சமயமா? தமிழா?" என்றால்..
Deleteஎன் "விசுவாசம்" தமிழுக்கே! முருகனுக்குக் கூட இல்லை! - வாழ்க நீ எம்மான்!
A moving tribute !
ReplyDeleteநன்றி குலசேகரன்! தங்கள் மூலமாக, ஆழ்வாரையும் காணுற்றேன்!
Delete//பூனை நாயும், கிளியும் கூட, மனிதர் மடியிலே
ReplyDeleteபெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே!//
இது......டாப்!!!!!
எங்கள் அஞ்சலிகளும்.
ஆமாங்க டீச்சர்..
Deleteபூனை/நாய் வளர்க்கும் அன்பர்களை (ஒங்களையும் தான்) எத்தனை நுட்பமா Note பண்ணி இருக்காரு வாலி!
I have a copy of Vaali's last book Srimadh Azhagiyasingar for you. Will give it to you when I see you.
ReplyDeleteCome more often to write your posts, not just to offer your condolences.
amas32
நன்றிம்மா! நலமா? இன்னொருத்தர் நலமா-வையும் ஒங்க மூலமாவே கேட்டுக்கறேன் (வடபழனியான்:)
Deleteசிறிது சிறிதாக எழுத முயல்கிறேன்! முருகனருள் பாடல் வலைப்பூவில், ஒவ்வொரு செவ்வாயும் ஒரு பாடல் இடுறேனே:)
---
அழகிய சிங்கர் = இதான் வாலியின் கடைசிப் புத்தகமா?
sure! will get & read from u!
தசாவதாரம் படத்தில், கமல் dialogue! அழகிய சிங்கர் = யாரு Madonna-வா?:))
Actually, அழகிய சிங்கர் = ஆள்+அரி (நரசிங்க) பெருமாள்!
ஆனா, இப்படிக் கமல் கிண்டல் அடிச்சாலும், அதுக்காகவெல்லாம் மனசுக்குள் கறுவாத குணம் படைச்சவரு வாலி -ன்னு நினைக்கும் போது...
அஞ்சலிகள் வாலிக்கு அருமையாக பதிவு செய்து இருக்கின்றீர்கள்! தொடர்ந்து எழுதுங்க பாஸ்§
ReplyDeleteநன்றி தனிமரம்!
Deleteஅருமையான பதிவுங்க இரவி சார்..
ReplyDeleteவாலி ஐயாவுக்கு சங்கீத ஞானம் இருப்பதாலேயோ என்னவோ, அவர் எழுதுற பாடல்கள் இராகத்தோடு பொருந்தி வர்ற மாதிரி இருக்கும் ..வெறும் மெட்டுக்கு மட்டும் இயைந்து வராமல்... கரடுமுரடான சொற்களால் பாட்டின் மெட்ட சிதைக்காம இராக இலட்சனங்களுக்கு வளைந்துத் தரக்கூடிய சொற்களப் பயன்படுத்தியிருப்பார்...
”முருகனருள் பாடல் வலைப்பூவில், ஒவ்வொரு செவ்வாயும் ஒரு பாடல் இடுறேனே”
ஆகா..இது தெரியாம இருந்துட்டனே...உங்கள அங்கயும் தொடர்வேன் :-)
இவண்,
அருண்
கண்டிப்பா! வாலி ஒரு இராகக் கவிஞரு!
Deleteமெட்டுக்குப் பாட்டு-ன்னு வந்த போது, கண்ணதாசன் மொரண்டு புடிச்சாரு; வாலி ஒடனே ஏத்துக்கிட்டாரு!:)
குன்னக்குடி வயலினில் மெட்டு போட்டுக் காட்ட, என்னய்யா ஒரே தலைவலியாப் போச்சே -ன்னு...
தத்தத் ததரின தத்தத் ததரின - ததா
சத்தித் திருமகன் முத்துக் குமரனை - மறவேன்
முணுமுணுத்துக்கிட்டே.. முருகன் பாட்டு போட்டவரு கண்ணதாசன்:)
//இராக இலட்சனங்களுக்கு வளைந்துத் தரக்கூடிய சொற்களப் பயன்படுத்தியிருப்பார்...//
ஆமா! இல்லீன்னா இருசீர்-ல்ல எழுதுவாரா? புல்லாங்குழல் Flapக்கு வரா மாதிரி?
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்தச் சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம்உந்தன் நெஞ்சமம்மா
கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள்படக் கூடும்என்று
பொட்டுஒன்று வைக்கட்டுமா
அட்டகாசம் முருகா
ReplyDeleteகாபி வருக, காபி பருக:)
Deleteநலமா காபி?
ஆஹா அருமை முருகா !உங்கள் இன்மை தமிழ் டிவிட்டருலகம் மிகவும் உணர்கிறது ..
ReplyDeleteஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ ?மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ ...?:)
நலமா உமா?
Deleteஐயோ! "இன்மை"யெல்லாம் ஒன்னுமில்ல; சில முகாம் பணிகள் அப்படி - Ethiopia & Chad - Child Prostit***** rescue camp!
மேலும், தமிழ்க்-"கருத்து"களுக்காக, மனிதக்-காழ்ப்பு கொள்ளுமிடத்தில், அமைதி காக்கவே, அமைந்து இருக்கிறேன்!
சினமெல்லாம் ஒன்னுமில்ல:) சினத்தை விடச் சிரிப்பே முருகனுக்குப் பிடிக்கும்; அவனுக்குப் பிடிச்சதே எனக்கும் பிடிக்கும்:)
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
...
சேரிடம் அறிந்து சேர்
சையெனத் திரியேல்:)))
யோவ், அடப்போயா!
ReplyDeleteஎங்கே போவச் சொல்லுற மயிலு?:)
Deleteசொல்லு, போயீருவோம்!:)
உங்களை எங்க போகச்சொல்றது, ம்ம், அதுவும் நாங்க சொன்னாத்தான் போறீரா என்ன, அப்டியே பிச்சுக்கின்னு ஓடிடுறீரே உம்ம முருகன் மாதிரி :)
Deleteஅட்டகாசமான பதிவு, நீங்க ரொம்ப வருஷமா எழுதுற தமிழ் பிளாக்கர்ன்னு இப்ப தான் தெரிந்து கொண்டேன். அடிக்கடி எழுதுங்க.
ReplyDelete:) dank u
Deleteme = long time blogger? ha ha ha! may be.. muruganaruL
என் பள்ளிக்கூடத்துல, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், கந்தனே உனை மறவேன்"- என்னும் பாடலை மனமுருகிப் பாடி முதல் பரிசு பெற்றது ஞாபகம் வருகிறது...
ReplyDeleteஎன்ன பாலா, ஒனக்குப் பாடத் தெரியும் -ன்னு சொல்லவே இல்ல? அதும் முதல் பரிசுப் பாடகரு!
Deleteஅடுத்த தபா, பாடிக் காட்டுறீக:)
Beautiful song: Ammavum Neeye, Appavum Neeye! Remember loving it as a kid, thirumbavum nyaabaga paduthiteenga! :) Nanri! :)
ReplyDeleteWelcome back to Panthal, ILWK!
DeleteWelcome back to me too:)
i remember "ammavum neeye, appavum neeye" from when i was a kid! :) Thirumbavum nyaabaga paduthiyadhukku nanri! :)
ReplyDeleteமீண்டு(ம்) வந்தமைக்கு மகிழ்ச்சி ரவி... எல்லாமே கடந்துபோகும் கவலை வேண்டாம்!
ReplyDeleteபந்தல் என்றால் நாலுபேர் வந்துபோகவேண்டாமோ ஓனரே அப்பப்போ அப்ஸ்காண்ட் ஆகிட்டா எப்படி?:)(ச்சும்மா கிட்டிங்:)
வாலிபற்றிய பதிவு அருமை..காவிரிக்கரைகலைஞரைப்பற்றி நீங்க எழுதறபோது இன்னமும் சுவைதான்! என் அப்பாவோடு பலமுறை அவரை நேரில்பார்த்துப்பழகி இருப்பதால் அந்த நினைவுகளின் தாக்கம் இன்னமும் இருக்கிறது.. அவர் எழுதிய ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாட்டையும் நீங்கள் இங்கே அளித்திருக்கலாம்,முருகன் எப்போதும் முந்திக்கொள்கிறான் என்றாலும்!!
//என் அப்பாவோடு பலமுறை அவரை நேரில்பார்த்துப்பழகி//
DeleteAS Ragavan & Vaali - Photo! பாத்துருக்கேனே-க்கா ஒங்க வீட்டுல!
//அவர் எழுதிய ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாட்டையும் நீங்கள் இங்கே அளித்திருக்கலாம்
முருகன் எப்போதும் முந்திக்கொள்கிறான் என்றாலும்!!//
:)
அவுங்க அவுங்களுக்கு அவிங்க அவிங்க ஆசை:)
என் மனத்துக்கு நெருக்கமான பாடல்.. (திருப்புகழை விடவும்) என்பதால் இங்கு இட்டேன்-க்கா!
சீரங்க ரங்க நாதனின் பாதம் - கண்ணன் பாட்டிலே இட்டிருக்கேனே; U didnt see; Thatz it:)
http://kannansongs.blogspot.com/2013/07/vaali-anjali.html
office-la mail anuppa mattum computer use panra puthisaali naan..blog- nu onnu irukurathe 1 varushathukku munnadi than ,,,theriyum..athuvum "marathai maraithathu maamatha yanai" google thedum pothu..unga blog-la nuzhinchu..2005 muthalna athanaiyum padichitaen..(including comments)..unga writing style is additive..
ReplyDeleteungala enakku ippo Muruganai rombavum pidikkuthu..ungalaiyum pidikkuthu.
Konja naalaga en ezhuthalai..? please keep on writing abt TAMIL.
நன்றி ரவி! (என் பேருக்கே நன்றியா?:)))
Deleteபழைய பதிவுகள் அத்தனையும் தேடிப் படிச்சதுக்கு! நடுவில் சில காலம், எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தேன்! அதான்! sorry!
//ungala enakku ippo Muruganai rombavum pidikkuthu..ungalaiyum pidikkuthu//
என்னைப் பிடிக்க வேண்டாம்:)
முருகனை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள்:))
அமரர் வாலியைப் பற்றிய மிகையில்லாத
ReplyDeleteதகவல்களுடன் கேஆர்எஸ்ஸின் மனமார்ந்த அஞ்சலி !
மனமொன்றி வாசித்தேன். வாழ்க !
அரிய கலைஞர், ஏனோ அரசியல் சார்புக்கு
இடமளித்து விட்டார்