Wednesday, April 11, 2012

"தமிழ்ப் புத்தாண்டு" ங்கிற ஒன்னே கிடையாது!:)

Crux of this Post:
1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது! Itz a latter day practice!
2. சித்திரை / ருத்ரோத்காரி வரு'ஷ'ம் etc = மதம் மூலமாகவே, "தமிழ்ப்" புத்தாண்டு எனப் பரவியது!
3. தமிழறிஞர்கள் சொல்வது என்ன-ன்னா: தமிழின் அடையாளம் = தமிழ் மூலமா இருக்கட்டும், மதம் மூலமா வேணாம்!

Tamizh aRignars devised a Notation for Tamizh, in this context...

* Year = Use 'வள்ளுவர் ஆண்டு' as Tamizh Numbering Sequence!
* Month = Use 'தை', which is the most famous month in tamizh literature!

This is NOT claimed as vaLLuvar's exact day of birth etc etc; 
Itz only a "notation" for tamizh related standards; 
For General life = Common Era (2012 CE) applies for all, world over!

You can still celebrate ருத்ரோத்காரி வரு'ஷ'ம் & do poojas at home!

But pl DONT brand it as a "Tamizh" Year!
You are free to call it Hindu New Year, Sanskrit New Year, Nandana Year or whatever! Dot!

.....Now, the full post, with literary evidences & some logical reasoning



பந்தல் வாசகர்களுக்கு இனிய (Sanskrit/ பிராமணப்) புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

இன்னிக்கி, தமிழின் அடிப்படைக்கே சென்று பாக்கப் போறோம் = எது புத்தாண்டு-ன்னு? போய்ப் பார்த்தா.....
"தமிழ்ப் புத்தாண்டு"-ங்கிற ஒன்னே கிடையாது போல இருக்கே?:) அடி ஆத்தீ....மேல வாசிங்க:)

எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?
ன்னு பல விவாதங்கள்/ சண்டைகள் எழுந்து.....ஓரளவு ஓய்ந்தும் விட்டன! தமிழக அரசியலில் ஜெ.அரசாணைகளும் மாறி விட்டன! ஜெ.வே மாறீட்டார்!

இப்போது மீண்டும் ஜெ - கலைஞர் போர்:)
"சித்திரையில் முத்திரை" -ன்னு ஒரு கட்சி!
"சித்திரையில் நித்திரை"   -ன்னு இன்னொரு கட்சி!
முத்திரையோ, நித்திரையோ....அளப்பறை மட்டும் இருக்கு:)
2007 இல் கலைஞரே..."பரவாயில்லை, தமிழனுக்கு 2 புத்தாண்டுகள் இருந்துட்டுப் போகட்டுமே " ன்னு சொன்னவரு தான்!:) கழகத் தொலைக்காட்சி - நிகழ்ச்சி வரும்படி - அதை நிறுத்திடுவாங்களா என்ன?:)

இது ஏதோ கருணாநிதி ஆரம்பித்து வைத்தது -ன்னு சிலர் நினைத்துக் கொண்டு, அதற்காகவே எதிர்க்கிறார்கள், விவரம் புரியாமல்:(

ஆனா,  கருணாநிதிக்கும் முன்னமேயே...
* மென்மையே உருவான திரு.வி.க போன்ற அப்பழுக்கில்லாத் தமிழறிஞர்கள் துவக்கி வைத்தது;
* ஈழத்தில்.....அப்போது புலிகள் கோலோச்சிய யாழ்ப்பாணத்திலே, இது வே.பிரபாகரனால் நடைமுறைக்கு வந்தது தான்!

ஒரு வேளை, அறிஞர் அண்ணா முதலமைச்சராய் இருந்த போதே, மதறாஸ்->தமிழ்நாடு பெயர் மாற்றம் போல், இந்தப் புத்தாண்டு மாற்றமும் வந்திருந்தால், இன்னிக்கி இம்புட்டு பேச்சு இருந்திருக்காதோ என்னமோ?:)

எது எப்படியோ.....இது karunanidhi formula அல்ல! இது tamizh aRignar formula!

1. இதெல்லாம் அரசாங்கச் சட்டம் போட்டு, மக்களைக் "கொண்டாட" வைக்க முடியாது! இது என்ன ஹர்ஷவர்த்தனர் காலமா?:)
2. மக்களிடம் - விழிப்புணர்வு மட்டுமே ஏற்படுத்த முடியும்!! - இதை நல்ல தலைவர்களால் / தொடர்ந்த முயற்சிகளால் மட்டுமே ஏற்படுத்த இயலும்.

பின்பு எதற்கு இந்தக் கட்டுரை? ன்னு கேக்குறீங்களா?
= அதே விழிப்புணர்வுக்குத் தான்!
அரசியலை ஒதுக்கிட்டு, "உண்மை" ஆவல்! பதிவின் நீளம் அதனால் தான்!

சற்று, உன்னிப்பா நோக்குங்க:
* தை என்பவர்கள் = தனித் தமிழ்க் கொள்கை உடையவர்கள் (அ) பகுத்தறிவு இயக்க வழி வந்தவர்கள்!
* சித்திரை என்பவர்கள் = பெரும்பாலும் ஹிந்து மதப் பற்று கொண்டவர்கள் (அ) வடமொழியோடு ’அனுசரித்து’ போகிறவர்கள் (அ) மடாதிபதிகள்

ஆக, 2 கட்சிகள்!
எந்தக் கட்சி சரி? ன்னு புகுந்தால், புலி வாலைப் பிடித்த கதை தான்! முடிவே இல்லை!:)
தங்களுக்குச் சாதகம் இல்லாதவற்றை மறைத்தும்,
தங்களுக்குச் சாதகமானதை "ஆதாரம் போல்" காட்டியும்...
அவர் சொன்னார்/ இவர் சொன்னார் என்று வெட்டிப் பேச்சுக்கள்!

ஆனால்...
தமிழ் இலக்கியம் = அது என்ன சொல்கிறது?
"அடிப்படைக்கே" சென்று பார்த்தால்??? = அதுவே இந்தக் கட்டுரை!




குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

*நமக்கு "விருப்பமான உண்மைகள்" என்பது வேறு!
*"உண்மையான உண்மைகள்" என்பது வேறு!
சில நேரம் இரண்டும் ஒன்றுபடலாம்! சில நேரம் மாறுபடலாம்!

ஆனா.....நம் "விருப்பத்துக்கு" மாறாகவே அமைந்தாலும்....
* தமிழ் = தொன்மம்!
* தொன்மத்தில், நம் சுய விருப்பு-வெறுப்புகளை ஏற்றி விடக் கூடாது!
(முன்பு - "யார் தமிழ்க் கடவுள்?" என்று வந்த பதிவும், இந்த எண்ணத்தில் தான்!)

* இன்று இன்றாக இருக்கட்டும்! 
* தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்!

அதுக்காக...விருப்பு வெறுப்பே கூடாது-ன்னு சொல்லலை! விருப்பு-வெறுப்பு உள்ளவன் தான் மனிதன்!
அதை நம் சொந்த வாழ்வில் வச்சிக்கணும்! அனைவருக்கும் பொதுவான தமிழில் அல்ல!
(*** இலக்கியத்தில் மட்டுமே கொள்கை, என் சொந்த வாழ்வில் bye bye-ங்கிற "koLgai kundrus" பற்றிப் பேச்சில்லை:))

தமிழைத் தமிழாக அணுகும் முயற்சி
எது தமிழ்ப் புத்தாண்டு = தையா? சித்திரையா?



முன் குறிப்பு:

1) தமிழறிஞர்கள் பலர் 1935 இல், பச்சையப்பன் கல்லூரியில் (அதன் பின்பு திருச்சியிலும்) ஒருங்கே கூடினார்கள்...
வள்ளுவரின் காலம் பற்றி, ஆய்ந்து அறிவித்தார்கள்!

யார் யார் இந்த முயற்சியில்?
*மறைமலை அடிகள்,
*உ.வே. சாமிநாத (ஐயர்),
*திரு.வி. க,
*நாவலர். ந.மு. வேங்கடசாமி நாட்டார்,
*நாவலர். சோம. சுந்தர பாரதியார்,
*தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
*பாவேந்தர் பாரதிதாசன்
*பெரியார் ஈ.வெ.ரா
*கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர், உமா மகேசுவரனார்
*முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் 
*மற்றும் பலர்!

ஆனா, அவர்கள் என்னென்ன விவாதித்தார்கள், அந்த ஆய்வுக் குறிப்புக்கள் என்னென்ன? = இன்று வாசிக்கக் கிடைக்கவில்லை!
இறுதி அறிக்கை மட்டுமே கிடைக்கிறது! அது என்ன சொல்கிறது?

* திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினைப் பின்பற்றல் நலம்! - அதையே "தமிழ் ஆண்டு" என இனிக் கொள்ள வேண்டும்!
* திருவள்ளுவர் காலம் ~ கி.மு. 31 = எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு!

நல்லாக் கவனிங்க:
வள்ளுவர் ஆண்டு முறை தான் பேச்சே ஒழிய, சித்திரையா? தையா? -ன்னு பேசினாங்களா? = இல்லை (அ) குறிப்பு கிடைப்பதில்லை!
தரவு: (Scanned Copy) பச்சையப்பன் கல்லூரி அறிக்கை: 1935 செந்தமிழ்ச் செல்வி இதழ் https://goo.gl/ebjTBV
------------
  

ஆனால், பின்னாளில்... மறைமலை அடிகளின் மாணவரான நாவலர் சோமசுந்தர பாரதியார்,
வள்ளுவர் ஆண்டை உறுதி செய்ததோடு, தை-02 ஆம் நாளை = வள்ளுவர் திருநாள் - எனவும் வகுத்து அளித்தார்!

அதற்குத் தமிழறிஞர்களும் இசைவு தந்தனர்; அதுவே 1971இல் அரசு விழாவாகவும் ஆனது!
தரவு: (Scanned Copies) : நாவலர் சோமசுந்தர பாரதியார் : தை-02 குறிப்பு https://goo.gl/SSy5fV
------------

திருக்குறளுக்கு, இன்று பலரும் பின்பற்றும் உரை எழுதிய தமிழறிஞர். டாக்டர். மு.வ.. என்ன நவில்கிறார் பாருங்கள்: இதோ, 1971 பொங்கல் விழா மலர்;

“இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? 
சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால் தான், நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால் அவர்களும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். 
இன்னொரு காரணமும் உண்டு. முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை! தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்!
அந்த நாள் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை; புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். இப்படிப் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்”

(இதற்கான தரவு: 1988 கோலாலம்பூர் பொங்கல் மலரில், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு)

முது பெரும் தமிழ் அறிஞர்கள், ஏன் இப்படிச் செஞ்சாங்க? அதைத் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம்!
------------

2) பிரபவ-விபவ என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல! அத்தனையும் சம்ஸ்கிருதப் பெயர்கள்!
வராஹமிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை = 60 சம்வத்ஸரங்கள். பிருஹஸ்பதி சம்வத்ஸரச் சுழற்சி முறை.

அவற்றுக்கு நாரத-கிருஷ்ண ஆபாசக் கதைகளை, ’புராணம்’ என்ற பெயரில் கோத்துச் சொல்வாரும் உண்டு!
அபிதான சிந்தாமணி (எ) பின்னாள் ’கலைக் களஞ்சியமும்’ இந்தப்பொய்க் கதைகளை உறுதி செய்கிறது!

இந்த Sanskrit/ ஆபாசக் கதைகளால், எல்லாரும் கேக்கறாங்களே?-ன்னு கூச்சப்பட்டாங்களோ என்னவோ
60 சம்ஸ்கிருத வருஷங்களையும்.. "வலிந்து" தமிழில் மொழிபெயர்த்து, முழிபெயர்த்து, திருட்டுத்தனமாப் பரப்பி விட்டிருக்காங்க, அண்மைக் காலங்களில்:) இது சத்தியவேல் முருகனார் என்பவர், அண்மைக் காலத்தில் வலிந்து செய்த தமிழாக்கம் மட்டுமே! இவை, தமிழ் மரபிலே இல்லை!

விகாரி ஆண்டு (விகாரமான) என்ற சம்ஸ்கிருதப் பதத்தை, ’எழில் மாறல்’ என்று கொஞ்சும் ழகரத் தமிழில் பேர் மாற்றி விட்டால் மட்டும், அசிங்கம் -> அழகு ஆகி விடுமா என்ன? மதச் சடங்குகளுக்காக, இப்படியெல்லாம் வலிந்து மொழியாக்கம் செய்வது, நற்பலன் தராது; கெடுதியே செய்யும்:( மதப் பாசம் விட முடியாத தமிழ்ப் பண்டிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

*புள்ளை= Sanskrit Parasiteக்குப் பொறந்தது
*Initial= தமிழில் போட்டா, தமிழுக்குப் பிறந்ததா ஆயீருமா?
வெட்கமாய் இல்லை?:(
எந்தவொரு தமிழ் இலக்கியத்திலும், இப்பிடி "முழிபெயர்த்த" பெயர்கள் இருக்காது:) இது திருட்டு வேலை!

ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி ன்னுல்லாம் பேரு வரும்! = டேய், இதெல்லாம் தமிழா?:))
(ஆமாம்....தமிழே! தோஷம், கோஷம்லாம் = "பரிசுத்தமான" தமிழே-ன்னு பேசும் இணையக் கொத்தனார்-நாத்தனார்கள் நம்மிடையே உண்டு! அவர்கள் பற்றி இங்கு பேச்சில்லை!:)

Please Note:  ஜ-ஷ புகுந்து பரவலாகி விட்டாலும், 
அவை உயிர்-மெய் எழுத்துக்கள் அல்ல! They are just "add-ons"

=>அவற்றைத் "தமிழ் எழுத்துக்கள்" ன்னு யாரும் சொல்வதில்லை! அவை "கிரந்த எழுத்துக்கள்"
=> போலவே: ருத்ரோத்காரி, ரக்தாக்ஷி = தமிழ் ஆண்டுகள் அல்ல! அவை ஹிந்து/ சம்ஸ்கிருத ஆண்டுகள்!

இதே 60 பெயர்கள் தான்.. தெலுங்கு/ கன்னடத்திலும்! ஏன்னா, அங்கும் சம்ஸ்கிருதக் கலப்பு! 
இந்தச் சம்ஸ்கிருதத் "திணிப்பு" செய்தது யார்? குஜராத்திகளா? பீகாரிகளா? அல்ல! நம்மோடு வாழும் தென்னாட்டுப் பிராமணர்களே!

மதத்தின் துணைகொண்டு, அந்தந்த ஊர்களில், அந்தந்த மொழிகளில் Sanskrit Parasite புகுத்தினார்கள்! குஜராத்தி/ வங்காளி எளிய மக்களைக் கேளுங்கள்; எவனும் இந்த 60 ஆண்டுப் பெயர்களைச் சொல்ல மாட்டான்:)

Hindu Calendar! or Sanskrit Calendar or Brahmin Calendar!
http://en.wikipedia.org/wiki/Hindu_calendar
https://en.wikipedia.org/wiki/Samvatsara
Salivahana Sagam or Vikarama Sagam...whatever!
= But Dont call them "Tamil Years" | Tamizh is not only Hindu; It is Much More!

மதம் மதமாக இருக்கட்டும்! 
அதை மொழி அமைப்பில் புகுத்தி, திணிக்க வேண்டாமே!
= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே கருதுகிறேன்!



3) சரிப்பா, பிரபவ/விபவ-ன்னு 60 ஆண்டுப் பெயர்கள் வேணாம்; ஆனா "சித்திரை" தானே புத்தாண்டுப் பிறப்பு?
அதை எதுக்கு தை மாசத்தில் மாத்தி வைக்கணும்? -ன்னு சிலர் "வேறு ரூபத்தில்" கேட்கத் தலைப்படுகிறார்கள்!:)

இவர்களின் வாதம் = சோதிட அடிப்படையில் அமைந்துள்ளது;
மேஷம் (Aries) தான் முதல் ராசி!
சூரியன், மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது = சித்திரை! எனவே அது தான் புத்தாண்டு-ன்னு இவர்கள் வாதம்!

Okay, Agreed! சித்திரை = மேஷம் புகும் மாதம் தான்! ஆனால் மேஷம் புகுந்தாத் தான் = "ஆண்டின் துவக்கம்" என்பதற்கு என்ன ஆதாரம்? ன்னு கேட்டா....பதில் இல்லை!:)

ஒரு இனத்தின்/ பண்பாட்டின் ஆண்டுப் பிறப்பு
= ஜோதிட அடிப்படையில் தான் இருக்கணுமா?

பொதுவா, சித்திரை = வசந்த காலம் (இளவேனில்)
"வசந்த காலத்தில்" துவங்குதல் தானே ’மரபு’?-ன்னு நம்பப்படுகிறது, கருதப்படுகிறது, கூறப்படுகிறது..
படுகிறது, படுகிறது-ன்னு இவங்களா அடிச்சி விட ஆரம்பிச்சிருவாங்க!:) ஆனா தரவு? ஆதாரம்??:))

Aries/ மேஷத்தில் தான், உலகெங்கும் புத்தாண்டு துவங்குதா? 

Aries = கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் -ன்னு பல பண்பாடுகளில் இருக்கே! அங்கெல்லாம் Aries/ Mar-Apr தான் புத்தாண்டா? இல்லையே?
Zodiac / ராசிச் சக்கரத்தில் தான் ஒரு புத்தாண்டு துவங்கணும் என்பதற்கு, உலகெங்கும் எந்த ஆதாரமும் இல்லை! அறுவடை ஒட்டியோ, அவரவர் பண்பாடு ஒட்டியோ தான், புத்தாண்டு நிறுவிக் கொண்டுள்ளார்கள்!


சொல்லப் போனால், Old New Year என்ற ஒன்று கூட உலகெங்கும் உண்டு! அது Jan-14 ஒட்டி வரும்/ தை-01 கூடப் பொருந்திப் போகும்:)
*Greece
*Rome
*Macedonia
*Russia
*Scotland
*Georgia
*Bulgaria/ Serbia/ Ukraine
இன்னும் பல Orthodox பண்பாடுகளில்= தை-01 தான் என்று சொல்வோமா?:)))

Orthodox New Year பற்றி மேலும் அறிய= https://en.wikipedia.org/wiki/Old_New_Year
விக்கிப்பீடியா தரவு ஆகாது; அது மேலோட்டமான அறிதலே!
அதனால், இங்கு சென்று காண்க= https://goo.gl/OBmUE0 | உலகில் இன்றும் கொண்டாடப்படும் Orthodox/ Old New Year; Julian Calendar:)

சம்ஸ்கிருத பாசம் மிக உடைய பிராமணீயர்காள்,
உங்கள் சாலிவாஹன/ விக்ரம சகம் உங்களோடு; வாழ்த்துக்கள்:)
ஆனா, அதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலையிலும் திணிக்காதீர்கள்!


சரி, சம்ஸ்கிருதம்/ ஜோஸ்யம் = இதெல்லாம் வேணாம்!
நாம, அடிப்படையிலேயே கையை வைப்போம், வாங்க! :))
"புத்தாண்டு நாள்" ங்கிற ஒன்னு..
தமிழ் இலக்கியத்தில் இருக்குதா?-ன்னு பார்ப்போமா?

1. தொல்காப்பியம்:

தொல்காப்பியம் - அதானே முதல் நூல் - அங்கிருந்தே துவங்குவோம்!
** புத்தாண்டு = தொல்காப்பியத்தில் இல்லை!
ஆனால், எதை முதல் பருவமாகத் தொல்காப்பியம் சொல்கிறது?

மாயோன் மேய, காடு உறை உலகமும்,
சேயோன் மேய, மை வரை உலகமும்,
....
காரும் மாலையும் = முல்லை   
குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!

கார் காலம் (மழைக் காலம்) தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!
* முதல் திணை = முல்லை!
* முதற் காலம் = மழைக் காலம்!

பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே"
= முதன்மையாக/ மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

இது திணை வரிசை மட்டுமே!
ஆனா, இதான் புத்தாண்டு நாள்-ன்னு வெளிப்படையாக் குறிக்கலை!
ஆனா, இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர்...
கார்காலமே ஆண்டின் துவக்கம்-ன்னு வெளிப்படையாக் காட்டிச் செல்வார்!

(நச்சினார்க்கினியர் உரை:
ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை (ஆவணி) முதலாக,
தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை (ஆடி) ஈறாக..
வந்து முடியுந் துணை ஓர் ஆண்டாம்)




உரையாசிரியர், நச்சினார்க்கினியர் சொல்வது போலவே, இன்றும் மலையாளப் புத்தாண்டு அமைந்துள்ளது, அறிவீர்களா?
சிங்க மாதமே (ஆவணி) = மலையாள முதல் மாதம்!
மலையாளப் புத்தாண்டு/ கொல்லம் ஆண்டு= சித்திரை மாத விஷூக் கணி (கனி) அல்ல! ஆவணிச் சிங்க மாதத்தில் வரும் ஓணமே! அறுவடை நாள்!

*சித்திரை விஷூக் கணி= மற்றுமொரு விழாவே
*ஆவணிச் சிங்க மாதமே= புத்தாண்டு;
*அம் மாதத்தில் வரும் ஓணமே= பெருவிழா; விஷூ அல்ல

முன்பே சொன்னது போல், கார் காலம்= மழை வரும் காலமே, மங்கலம் கருதி.. முதற் காலமாக அமைந்தது! மலையாளத்தில் மட்டுமல்ல! நம் ஆதித் தமிழ்த் தொல்காப்பியத்திலேயே!
------------

2. சங்க காலம்: எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுக்கு வருவோம்!

பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன! அதையே பல தமிழ் அன்பர்களும், "தைஇத் திங்கள், தைஇத் திங்கள்" -ன்னு இணையத்தில் ரொம்ப எழுதுறாங்க;

ஆனா அதான் "ஆண்டின் துவக்கம்" -ன்னு சங்கத் தமிழ் சொல்லுதா?
= இல்லை!
= தமிழ் என்பதற்காக, நான் Raw Data-வை மறைக்க/ மாற்ற மாட்டேன்:)

*நற்றிணை =தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள்

*குறுந்தொகை = தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

*புறநானூறு = தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்

*ஐங்குறுநூறு = நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் போல

*கலித்தொகை = தையில் நீராடித் தவம் தலைப்படுவாயோ?

ஒரு மாசத்தோட பேரு, இம்புட்டு அதிகமா இலக்கியங்களில் வருவது
= தை மாதம் மட்டுமே!
ஆனா, தை = "ஆண்டின் துவக்கம்" -ன்னு எங்கும் நேரடியாச் சொல்லலை!

*தையொரு திங்களும் தரை விளக்கி
ஐயநுண் மணற் கொண்டு தெருவணிந்து 
-ன்னு, அதே சங்கத் தமிழ் மரபில், பின்னாளில் வந்த ஆண்டாளும் பாடுகிறாள்!

தையொரு திங்கள் = சிறப்பான விழா! தமிழில் சிறப்பான மாசம்! அவ்வளவே!
------------

3. அடுத்து... ஜெயலலிதா-வுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கும் அடிமை "அறிஞர்" முதற்கொண்டு வேறு சிலரும் காட்டுவது:

"ஆடு தலை" = நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை!

ஆடு தலை = ஏதோ ஆட்டுத் தலைக்கறி/ தட்டி உறிஞ்சும் மூளைப் பகுதி-ன்னு நினைச்சிக்காதீக:)) | தலை = தலையாய/ முதன்மையான!
திண் நிலை மருப்பின் "ஆடு தலை" யாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
.....
ஆடு தலை = மேஷம் தான் முதல்!
நக்கீரரே சொல்லிப்புட்டாரு!
எல்லாரும் ஜோராக் கைத்தட்டுங்க!:)) Wait Wait Wait.....

மேஷம் முதல்-ன்னு சொல்றாரு! ஆனா எதுக்கு "முதல்"?
* ஆண்டுக்கு முதல்??? = இல்லை!
* ராசி மண்டலத்துக்கு முதல்! = "வீங்கு செலல் மண்டிலத்து"

அடங்கொப்புரானே! இது எனக்கே தெரியுமே! எல்லாப் பத்திரிகை/ ராசி பலன்-லயும் ஆடு தானே மொதல்ல போடுவாய்ங்க!!:) இதைப் போயி, நக்கீரர் சொன்னதா ஏத்தி வுட்டு... அடேய்களா!

அடேய், பாட்டு குடுத்தாலே ஆதாரம் ஆயிடாதுடா! மொதல்ல, பாட்டின் பொருள் பொருந்துதா? -ன்னு பாத்துட்டு, அப்பறம் பொய் சொல்லுங்க:)
பாவம் நக்கீரர்! திருவிளையாடல் பொய்ப் புராணம் போல், ஒரு மானமிகு சங்கப் புலவன் மேல் எத்தினி தான் ஏத்தி வுடறது? விவ'ஸ்'தையே இல்லீயா? :)

சித்திரை = இதர "ஆதார"ங்களாக ஜோடிக்கப்படுபவை:

1) சிலப்பதிகாரம் - இந்திர விழா
இது இளவேனில் காலத்தில் நடந்தது; உண்மை தான்; சிலப்பதிகாரமே சொல்லுது!

நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில்
சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென,

ஆனா, சித்திரையில், காமவேள் விழா/ காதல் விழா -ன்னு தான் சொல்லுதே தவிர....
"புத்தாண்டு"-ன்னு சொல்லலையே! ஆண்டின் முதல் மாசம்-ன்னும் சொல்லலையே!

ஏதோ, சித்திரை-ன்னு வரும் ரெண்டு வரியைச் சொல்லிட்டா, அப்பாவிப் பொதுமக்கள் பயந்துருவாங்களா?அப்படியெல்லாம் பயப்பட, சிலம்பின் வரிகள் ஒன்னும் "சகஸ்ரநாம" வரிகள் அல்ல:)

2) பிரபவ-விபவ = 60 ஆண்டுகளின் sanskrit names, சோழர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருக்குப்பா!

இப்பல்லாம் கல்வெட்டை வச்சி நடக்கும் Comedyக்குப் பஞ்சமே இல்ல:) 23ஆம் புலிகேசி தனக்குத் தானே வெட்டிக்கொண்ட கல்வெட்டு ஞாபகம் வருதா? - வரலாறு முக்கியம் அமைச்சரே!:)

நல்ல தொல்லியல் அறிஞர்கள், ஆய்ந்து சொல்வதே கல்வெட்டு முடிவுகள்! அதுவும், விவாதத்துக்கு உட்பட்டே! சோழர் கல்வெட்டில் இருந்தாலும், அவை = மிகவும் "பிற்காலம்" தான்! சங்க காலம் அல்ல!

சோழர் கல்வெட்டு பலவும், கிரந்த எழுத்தில் தான் வெட்டப்பட்டு இருக்கு!
ஒடனே, "பாத்தீங்களா? பாத்தீங்களா? அப்பவே எல்லாப் பொது மக்களும் Grantha Alphabet தான் எழுதினாங்க; அம்மா வை= "சம்மா" -ன்னு எழுதினாங்களா?:) | அ = சd in grantham notation!

பிற்காலச் சோழர் காலத்தில், கலப்புகள் பல நிகழ்ந்து விட்டன! சோழ அரசாங்கத்தில் வேலை பார்த்த "உயர்சாதிப் பண்டிதாள்", வருஷ - சம்வத்ஸரங்களின் பேரை, அவா Style-இல், "ஸ்வஸ்திஸ்ரீ" -ன்னு பொறிக்கச் செய்தார்கள்! அவ்வளவே!

3) புட்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று இருக்கிறது!
பேருலயே தெரியலையா? = பு"ஷ்"ப விதி! :) இதெல்லாம் தரவாகாது!

இதை எழுதியது = கமலை ஞானப் பிரகாச ஸ்வாமிகள்! அதுவும் சுமார் 500 yrs முன்னாடி தான்!
பலருக்கு, இவரு பேரு கூடத் தெரியாது = சைவ சித்தாந்த சந்தானாச்சாரியார், தருமபுர ஆதீனத்தின் குரு!

இவர் சமயம் சார்ந்து சொல்வதே, ஒட்டுமொத்த தமிழினத்தின் "ஆண்டு" ஆகி விடாது!
ஆழ்வார்கள் = கலியுகத்துக்கும் முன்னால்- ன்னு கூடத் தான் சில வைணவ மடங்கள் புராணம் எழுதி வச்சிருக்காய்ங்க?:)

அப்பிடிப் பாத்தா ஆண்டாளுக்கு அப்பறம் தான் வள்ளுவரே வருவாரு:)
நான் ஆண்டாளின் ரசிகன் என்பதற்காக... அது உண்மையாகி விடுமா என்ன?:))
வள்ளுவரே = தலைமகன்; பின்பே = ஆண்டாள்!

அறிவியல்:

இன்னொன்றும் சொல்கிறேன், குறிச்சிக்கோங்க; 
இது ஜோதிடம் (Astrology) அல்ல! விண்-வெளி அறிவியல் (Astronomy); 

சித்திரையே = "மேஷம் புகும் மாதம், மேஷம் புகும் மாதம்".. என்று குதிக்கும் பல பேர், அறிந்து கொள்க! முதற்கண், உங்கள் சித்திரை = மேஷம் புகும் மாதமே அல்ல! மீனம் புகும் மாதம் :)   



பூமியின் Precessional Wobbling (உருட்டு) என்ற ஒன்றுண்டு; 73 ஆண்டுகளுக்கு 1 degree மாறும் சூரியப் பாதை; 120 BCEஇல், சித்திரை = 'மேஷம்' புகும் மாதமாக (Aries) இருந்தது; அது எப்பவோ மாறிப் போய், இன்று சித்திரை = 'மீனம்' புகும் மாதமாக (Pisces) மாறியாச்! Apr 14 = மீனம் தான்; மேஷம் அல்ல!

இன்னும் 600 ஆண்டு கழிச்சி, 2597 CEஇல், இதே சித்திரை = 'கும்பம்' புகும் மாதமாக (Aquarius) மாறி விடும்; அப்போ என்ன செய்வீங்க? எந்த மேஷத்தில் புகுவீங்க? :)


12 ராசிக் கட்டங்கள், உலகெங்கும் உண்டு; ஆதி மனிதன், இரவில் வானத்தின் தோற்றம் கண்டு, அதில் மாதாமாதம் நட்சத்திரக் கூட்டங்களின் கும்பலான தொகுப்பைக் கொண்டு, ஆடு / மாடு / நண்டு என்று.. பல கற்பனை வடிவங்கள் செய்து கொண்டான்; அதான் மேஷம் / Aries, ரிஷபம் / Taurus எனும் Constellation (ராசி).
 
ஆண்டின் Calendar (நாட்காட்டி) அறியும் பொருட்டு அவன் செய்து கொண்ட Approximationஐ, இன்றும் 'ஜோதிடம்' என்ற பேரில் புனைவுகள் பல பேசித் தொங்கிக்கிட்டு இருக்கீங்க :) ஆனால் அதெல்லாம் எப்பவோ மாறிப் போய், பூமி வேறு ராசி மண்டலத்துக்குள் வந்தாச்! 

ஒவ்வொரு 2,665 ஆண்டுக்கும், உங்கள் சித்திரை = மேஷம், மீனம், கும்பம், மகரம், துலாம்-ன்னு Reverse-இல் மாறிக்கிட்டே இருக்கப் போவுது; நவகிரஹ மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணாலும், உங்களால் அதை மாற்ற முடியாது :) பேசாம, அறிவியலுக்கு மாறிடுங்க! அதான் உங்களுக்கு நல்லது! தலைமுறைக்கே நல்லது!



முடிப்புரை - Final Inference:

1. தமிழ் இலக்கியங்களில் = இது தான் "புத்தாண்டு"-ன்னு நேரடியாக இல்லை!

* சித்திரை = "மதம்" சார்ந்த படியால்... பய+பக்தியோடு, பரப்பப்பட்டு ஊன்றுகிறது!
* ஆனா, மழை துவங்கும் "கார் காலம்" எனும் ஆவணி (அல்லது) "பனி முடங்கல்" எனும் தை
= முதன்மைக் காலம்/ சிறப்பு மாதமாகக் கொள்ளும் திணை மரபு, தொல் தமிழில் உள்ளது!

2. பண்டைத் தமிழர்கள் - ஆண்டுக்கென்று எந்தப் பெயரோ/ எண்ணோ வைக்கலை! 
= கண்டிப்பாக பிரபவ-விபவ-ருத்ரோத்காரி ன்னு வைக்கல:)

ஒவ்வொரு ஆண்டுக்கும், தொடர்ச்சியா, எண்ணைக் குறிக்கும் வழக்கம் இருந்ததாத் தெரியலை!
ஒரு பெரிய தலைவரின் பிறப்பை ஒட்டி/ மன்னன் ஆட்சிக் கட்டில் ஏறிய ஆண்டையொட்டி, எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்பு எழுந்ததே!

அதுக்காக, தமிழர்களுக்குக் கால அளவே தெரியாது-ன்னு முடிவு கட்டிறாதீங்கோ...
உலகெங்கும், பல பண்பாடுகளில்.. ஆண்டுகளுக்குப் பெயர்கள் இல்லை; எண்ணால் குறிக்கும் வழக்கம், பின்னாள் பழக்கம்!

* Tamil Season Measurements/ பெரும்பொழுது
= கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில், முதுவேனில் = 2 months each*6 = 12 months!
* Tamil Daily Measurements/ சிறுபொழுது
= மாலை, யாமம், வைகறை, காலை, பகல், எற்பாடு = 4 hrs each*6 = 24 hours!

*ஆண்டுப் பெயர் தான் தமிழில் இல்லை!
(கிரேக்கம் / வேறு பல பண்பாடுகளிலும் இப்படியே ஆண்டுப் பெயரில்லை)


3. தமிழ் மரபில் & இலக்கியங்களில், மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் = தை!
"தைஇத் திங்கள்" பாடல்களைப் பார்த்தோம்; புத்தாண்டு -ன்னு அல்ல! சிறப்பான மாதமாய்!

4. ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்/ மேஷம் புகும் போதே துவங்கணும் = இதுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தரவுகள் இல்லை!
------------


5. சரி, பிரபவ-விபவ ன்னு சம்ஸ்கிருதப் பேரு மட்டும் வேணாம்பா; 
ஆனா சித்திரையிலேயே இருந்துட்டுப் போகட்டுமே, என்பவர்களுக்கு...

சித்திரை-ன்னாலே....இந்த 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்கின்றன!
*This is Hindu Calendar! = நந்தன, ரக்தாக்ஷி, ருத்ரோத்காரி
*இதே போல் Islamic Calendar கூட உண்டு! = ஜமாதில்-அவ்வல்!
*சமண சமய Calendar உம் உண்டு = சமண சம்வத்சரி!

ஆனா, தமிழ்-இஸ்லாமிய சமூகத்தினர் யாரும்,
* தமிழ் ஆண்டின் முதல் நாளா, ஹிஜ்ரி நாளை வைங்கோ, நாங்களும் தமிழர்கள் தானே? -ன்னு கேக்குறாங்களா?:) இல்லையே?

நாம மட்டும் ஏன், மொழியில் மதத்தைப் புகுத்தி, அடாவடி அடிக்கிறோம்?? :)

இது இன்று நேற்றல்ல! பல காலங்களாய்!
இல்லீன்னா, சமயம் சாராத சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு பின்னாளில் எழுதிச் சொருகி வைப்போமா?:)
டேய் செல்லம்...முருகா, இதெல்லாம் நீ கண்டுக்கவே மாட்டீயாடா?:))

* மொழியில், சமய இலக்கியங்கள் வரட்டும்! ஆனா சமய இலக்கியமே = மொழி -ன்னு "வகுத்து" விடக் கூடாது!
* அதே போல் தான் புத்தாண்டும்! சமய ஆண்டே = மொழி ஆண்டு ன்னு "வகுத்து" விடக் கூடாது!

மதம், மதமாக இருக்கட்டும்!
மொழி அமைப்பில் திணிக்க வேண்டாம்!

= இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது -ன்னே கருதுகிறேன்!
------------

6. தமிழறிஞர்கள், மறைமலை அடிகள் தலைமையில் கூடிச் சொன்னது 
= Tamil Year Standardization மட்டுமே; 
= புத்தாண்டு துவங்கும் மாதத்தை அல்ல!

இதில் தையா? சித்திரையா? என்பது பற்றிய முடிவுகள் இல்லை! ஆனால்,
* இந்த 60 ஆண்டு அசிங்கத்தில் இருந்து ஒழியவும்
* தொடர்ச்சியான எண் முறைக்கும் (Continuous Numbering Scheme) வித்திட்டது;

நிச்சயமா.....இது "புதிய" முறை தான்!
ஆனால் நம் தமிழினத் தலைமகன் வள்ளுவரை அடிப்படையாக வைத்து....ஒரு புதிய கணக்கிடும் முறை!

This is only a "notation" for Tamizh related Standards;
But Common Era (2012 CE) applies for all of us!


கிமு/ கிபி அல்ல; அதிலும் மதம் கடந்தாகி விட்டது!
BCE= Before Common Era | CE= Common Era
BC/ AD என்று எழுதாதீர்கள்; BCE/ CE என்றே புழங்கவும்!

7. ஒரே கேள்வி தான் மிச்சம் இருக்கு!
= வெட்டு 1, துண்டு 2 -ன்னு சொல்லு = தையா? சித்திரையா?:)

தை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை;
சித்திரை'யே'-ன்னு சொல்லவும் தரவு இல்லை! ஆனா...

* சித்திரை = வேண்டாம்!
* சித்திரை-ன்னாலே, மதம் வந்து ஒட்டிக் கொள்ளும்! 60 சம்ஸ்கிருதப் பெயர்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்!

* தை = தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் சிறப்பு மாதம்!
* தை -ன்னாலே.... மதம் கலவாமல்.... தமிழ் மட்டும் தனித்துத் தெரியும்!

தமிழ் குறித்த ஒன்றில், தமிழ் தானே அடையாளம் தெரிய வேண்டும்?
When it comes to "defining a notation" for Tamizh = Let Tamizh be the focal point; NOT religion!
For that......Thai would be the best choice!
* Starting Year = based on Valluvar (Great Tamizh Person) &
* Starting Month = based on Thai (Great Tamizh Month) - gotcha?:)

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு = இதுவே தமிழுக்கு நலம்!!
இத்துணை நாள், மத மாயை..

இனியாச்சும், மானம் கொள்வோம்!

உங்க ஆத்துல.... பஞ்சாங்கம் வச்சி, வர்ஷ ஆரம்ப பூஜை பண்ணனும்-ன்னா, சித்திரையில் தாராளமாப் பண்ணிக்கோங்கோ!
ஆனா உங்க தனிப்பட்ட அக்ரஹார பூஜையை = "தமிழ்ப்" புத்தாண்டு -ன்னு, தமிழக மக்களுக்கே ஒட்டுமொத்தம் ஆக்காதீக! Please...
------------

8. இல்லவே இல்லை! ஆதாரம் இருக்கோ/ இல்லீயோ....
சித்திரையே = தமிழ் "வருஷப்" பிறப்பு -ன்னு பிடிவாதம் பிடிச்சா?.....

Okay, நானே இறங்கி வரட்டுமா?
சித்திரை-க்கே ஒத்துக்கட்டுமா? .... but two small conditions!

a) "வருஷப்" பிறப்பு -ன்னு சொல்லாதீங்க; ஆண்டுப் பிறப்பு ன்னு சொல்லுங்கோ:))
b) ருத்ரோத்காரி -ன்னு அசிங்கம் புடிச்ச புராணக் கதை |  60 சம்ஸ்கிருதப் பெயர்களை, அறவே நீக்கி விடுங்கள்; 
தினத்தாள், Calendar, Marriage Invitations.. எல்லாக் குறிப்பில் இருந்தும் Sanskrit Parasite நீக்குவீங்களா?

அதெல்லாம் நீக்க மாட்டேன்; 
அதான் "தமிழ்" வருஷப் பிறப்பு!
சம்ஸ்கிருதம் தான் டா, தமிழ்! -ன்னு நீங்க சொன்னா..
இதுக்குப் பேரு தான் போங்கு! போங்கடா டோய்:))))

9. வரும் Apr-13, 2012 = நந்தன வருஷம்.....

அனைவருக்கும் "ஹிந்துப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(அ) பிராமணப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
(அ) Sanskrit Parasite ஆண்டு வாழ்த்துக்கள்
(அ) இனிய நந்தன "வருஷ" வாழ்த்துக்கள்!


உசாத் துணை: (References)


1. தமிழறிஞர், இராம. கி. ஐயா - தமிழர் திருநாள் = http://valavu.blogspot.com/2007/01/blog-post.html
2. சமூக ஆய்வாளர், திரு. எஸ். இராமச்சந்திரன் ஐயா - சித்திரையே புத்தாண்டு = http://www.sishri.org/puthandufull.html

3. சங்க இலக்கிய வரலாறு & தமிழர் மதம் = மொழிஞாயிறு, ஞா. தேவநேயப் பாவாணர்
4. பாட்டும் தொகையும் (பத்துப் பாட்டு - எட்டுத் தொகை உரை) = டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர்
5. தெய்வங்களும் சமூக மரபுகளும் = பேரா. தொ. பரமசிவன்

6. Jayashree Saranathan (writer at tamilhindu.com) -  (She is a known person to me by way of blogs, but I was "SHOCKED" to see her line //only those who continue to stick to Hinduism can be considered as Tamils//) 
http://jayasreesaranathan.blogspot.com/2011/08/big-thanks-to-ms-jayalalithaa-for.html





Read more »

Sunday, April 08, 2012

இயேசுநாதர் & நம்மாழ்வார் - ஏலி ஏலி லாமா சபக்தானி?

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! - Happy Easter! Happy Sunday!

* "ஏலி ஏலி லாமா சபக்தானி "? (என் தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) = இயேசுநாதப் பெருமான் சொன்ன கடைசி வார்த்தை இது!
* "என்னைப் போர விட்டிட்டாயே "? = நம்மாழ்வார் சொன்ன கடைசி வார்த்தை இது!

என்ன ஆச்சரியம்! ரெண்டு வாய்மொழியும் ஒன்னு போலவே இருக்கு-ல்ல?
இயேசு பிரானின் இனிய நாளான இன்று.....
நசரேயன்-மாறன், இருவரின் அகவியலையும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா?

(பிரேசில் சென்ற போது கண்ட Jesus Christ - Redemeer on the Mount)
(அவர் அழகே அழகு!)


பள்ளிக் காலத்திலே.....என் நண்பராய், என்னுடன் பலவும் கதைத்த, Fr. Rosario Krishnaraj அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன்!

என்னை முதல்வெள்ளிப் பூசையில் (First Friday Mass), முதன்முதலில் பாட வைத்ததும் அவரே! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எனக்குத் தான் வந்து சேரும்!
சங்கத் தமிழ் பற்றியும், தமிழ்க் கடவுளர் யார்? என்றும் அவரிடம் அப்பவே விவாதம்:) ஆனாலும் தபால்தலை தருவது மட்டும் நிற்கவே இல்லை:)

சரி...பதிவின் மையத்துக்குப் போகும் முன்னர்...
கதை போல் இருக்கும் சில நல்ல சுவிசேஷங்களை வாசித்துப் பாருங்களேன், வாயளவில் அல்ல! உங்கள் மனத்தளவில்!


மத்தேயு:27 (ஏலி ஏலி லாமா சபக்தானி)
28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,

29. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி,

30. அவர் மேல் துப்பி...

40. "தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைத் தூஷித்தார்கள்.

46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.


மாற்கு:16 (முதல் தரிசனம் மரியா மகதலேனாவுக்கு)


9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்.

கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனார்கள்.
தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

14. அதன் பின்பு பதினொரு சீஷருக்கும் போஜன பந்தி இருக்கையில் தரிசனமாகி.....நம்பாமற் போனதின் நிமித்தம், அவர்களுடைய இருதய கடினத்தைக் குறித்தும், கடிந்துகொண்டார்.

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்றார்.

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். ஆமென்!!!


என்ன மக்களே, விவிலியம் என்னும் பைபிள் வசனத்தை வாசித்தீர்களா?
இப்போ நாம் பேசு பொருளுக்கு வருவோம்!

* இயேசுநாதப் பெருமான் = நசரேயன் (Son of Nazareth, a town in Israel)
* மாறன் நம்மாழ்வார் = குருகேயன் (Kurugoor, a town in Nellai)

இருவருமே இளைஞர்கள்! இருவருக்குமே 32 வயது தான்! அத்துடன் முடித்துக் கொண்டார்கள்!
முன்னவர் 02 BC - 30 CE; பின்னவர் 5th-7th நூற்றாண்டு!

இயேசு பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறன் படவில்லை! ஏன்-ன்னா இயேசுவின் பிரச்சாரம், நேரடிப் பிரச்சாரம்! = மக்களிடையே கலந்து போதித்தார்!
அதனால் "மேலாதிக்க" மனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்! "நாலாம் வருணத்து" நம்மாழ்வார் அப்படி நேரடியாக இறங்காததால் தப்பித்தார் போலும்:)

* இருவருமே குல முதல்வர்கள்! - இயேசு இல்லாமல் கிறித்தவம் இல்லை! மாறன் இல்லாமல் தமிழ்-வைணவம் இல்லை!
* எல்லாத் தேவாலயத்திலும் சிலுவை உண்டு! எல்லாக் கோயில்களிலும் சடாரி உண்டு! (நம்மாழ்வாரே சடாரி - இறைவனின் திருவடி)


இருவருமே அடித்தட்டு மக்களிடம் சேர்பிக்க வந்தார்கள்!
* இயேசு, இறைவனின் வசனங்களை அனைவருக்கும் பொதுவில் பொழிந்தார்! மாறனோ, ஒரு சிலரின் கட்டுக்குள் மட்டுமே இருந்த வேதங்களை, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம், தமிழாக்கி வைத்து விட்டார்! - "வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்"

* முன்னவர், வேசிப் பெண்ணுக்கும் மீட்சிப் பாதையைக் காட்டினார்! பின்னவர், பெண்களும் "திராவிட வேதம்" ஓத வழி வகுத்தார்!
எய்தற்கு அரிய மறைகளை, ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபன்!

* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!
* மாறனும் தம் கையால் எதுவும் எழுதவில்லை! அவர் சீடரான மதுரகவியே, அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்தார்! பின்னாளில் மதுரைச் சங்கப் புலவர்களைச் சந்தித்து அரங்கேற்றி, பின்பு ஊர் ஊராகப் பரப்பியும் வைத்தார்!

ஒற்றுமை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? வேற்றுமை என்னான்னு பார்க்கலாமா?

* முன்பே சொன்னபடி, முக்கியமான வேற்றுமை என்னன்னா, நம்மாழ்வார் கொடுமைக்கு உள்ளாகவில்லை!
இயேசுபிரானுக்கு நடந்த கொடுமைகளோ, கற்பனை செய்து பார்க்கவும் மனம் வலிக்கும்!

* இன்னொரு முக்கிய பரிமாணம் இருக்கு! அதான் இயேசுநாதர் / நம்மாழ்வாரின் "சாதி"!

** மாறன் (எ) நம்மாழ்வார் = பிறப்பால், நான்காம் வருணம்! "கீழ்ச் சாதி"!
ஆனாலும் அவருடைய திருவாய்மொழியை எல்லாப் பெருமாள் கோயில்களிலும்...அதுவும் கருவறைக்குள்ளேயே...அதுவும் அர்ச்சகர்களே...ஓதித் தான் ஆக வேண்டும்!
"நாங்க கருவறையில் வடமொழி சொல்லிக்கறோம்; நீங்க வேணும்-ன்னா, ஓதுவாரை வைச்சி, வெளியில் ஒரு ஓரமா இருந்து தமிழ் ஓதிக்கோங்க-ன்னுல்லாம் சொல்ல முடியாது! அடி பின்னிருவாங்க! :))

** இயேசுபிரான் = பிறப்பால் யூதர்!
ஆனால், இன்று வரை எந்த யூதரும், இயேசுவின் வசனங்களை ஏற்பதில்லை!
வேறு பல இனத்தவர்/நாட்டவர் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒருவரை......சொந்த இனம் மட்டும் இன்றும் மறுதலித்துக் கொண்டு தான் இருக்கிறது!
பொதுவான வசனங்களைக் கூட ஏற்காமல் மறுதலிக்கிறார்கள்! ஏனோ? :(((


சரி, வெளி ஒப்பீடுகள் ரொம்ப வேண்டாம்! அக ஒப்பீடுகள் தான் முக்கியம்! இயேசுபிரானின் வசனம்-மாறனின் பாசுரத்துக்கு வருவோமா?



* இயேசுபிரானின் வசனங்கள்-ன்னு பார்த்தால், அனைத்திலும் மகுடமாய், மனமாடத்திலே தீபமாய் ஒளிர்வது = Sermon on the Mount (மலைப் பொழிவு)!
* நம்மாழ்வாரின் நான்கு தமிழ் நூல்களில், ஈரம் பொலிந்து நிற்பது = திருவாய்மொழி!.........திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!

மலைப்பொழிவிலும், திருவாய்மொழியிலும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இன்னிக்கி பார்ப்போம்!

பாசுர விளக்கமெல்லாம் சொல்லாம,
புரியும் படி பத்தி பிரித்து,
அதே வண்ணத்தில் கொடுத்திருக்கேன்!
பொருள் புரியலீன்னா பின்னூட்டத்தில் கேளுங்க! மற்ற அன்பர்கள் பதில் சொல்லுவாய்ங்க:)

மத்தேயு 5:16 - பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் "வெளிச்சம்" அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.
திருவாய்மொழி 3:3:1 - எழில்கொள் "சோதி", எந்தை தந்தை தந்தைக்கே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்!

மத்தேயு 11:25 - பிதாவே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
திருவாய்மொழி 3:3:4 - ஈசன் வானவர்க்கு அன்பன் என்றால், அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே!
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:7 - நீயோ ஜெபம் பண்ணும் போது, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

திருவாய்மொழி 1:2:7 - அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று--"அடங்குக உள்ளே"
திருவாய்மொழி 1:2:8 - உள்ளம் உரை செயல்--உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--"உள்ளில் ஒடுங்கே"
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:25 - ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;
திருவாய்மொழி 6:7:1 - உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றே....

மத்தேயு 23:9 - பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாது இருங்கள்; பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாய் இருக்கிறார்.
திருவாய்மொழி 3:9:1 - என் நாவில் இன்கவி, யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன், என் அப்பன், எம்பெருமான் உளன் ஆகவே.
-----------------------------------------------------------------------------

மத்தேயு 4:17 - அதுமுதல் இயேசு: மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
திருவாய்மொழி: - பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், கலியும் கெடும், கண்டு கொண்மின்!

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக......இரு பெரும் தத்துவங்களும் சங்கமிப்பது இந்த ஒரு புள்ளியில்......
* நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! = * ஆறும் நீ, பேறும் நீ!
சாதனமும் நற்பயனும் நானே ஆவன்! என் ஒருவனையே சரணம் எனப் பற்று!



பதிவின் துவக்கத்தில் சொன்னேன் அல்லவா? "ஏலி ஏலி லாமா சபக்தானி? தேவனே தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?" - இது தான் இயேசுநாதரின் இறுதி வார்த்தைகள்!

கிட்டத்தட்ட அதே போல் தான் நம்மாழ்வாரும், உலக வாழ்வை நிறைவு செய்து கொள்கிறார்! வைகுந்தம் புகும் தருவாயில், கடைசிப் பொழிவாக, "என்னைப் போர விட்டிட்டாயே" என்று பாடுகிறார்!
இயேசுபிரானும், நம்மாழ்வாரும், இறுதிக் கட்டத்திலே இறைவனைச் சந்தேகப்பட்டு விட்டார்களா என்ன?

ஹா ஹா ஹா! அப்படியில்லை! அன்பு அதீதமாக மிகுந்துவிடும் போது, அவன் தன்னைக் கைவிடவில்லை-ன்னாலும், அவள், என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே-ன்னு கேட்பது போலத் தான் இதுவும்!

இயேசுபிரான், தான் உயிர்த்தெழப் போவதை, முன்னமே சீடருக்குச் சொல்லி விட்டார்! ஆக, அவருக்குத் தெரிந்தே தான் இருக்கு, தான் எழுவோம் என்று! அப்பறம் ஏன் "என்னைக் கைவிட்டீரே" என்று சோகம்?
தான் உள்ளான அவமானங்கள் உள்ளத்தை வாட்டியெடுக்க, இவர்கள் என்று தான் புரிந்து கொண்டு நடப்பார்களோ? என்ற பாவனையில், அப்படி இறைவனைக் கேட்கின்றார்! - "நீரே என்னைக் கைவிடலாமா?"


நம்மாழ்வாரும் அப்படியே!
"முனியே. நான்முகனே, முக்கண்ணப்பா" என்ற கடைசித் திருவாய்மொழியை வைகுந்தம் புகும் தருணத்தில் பாடுகிறார்!
அப்போது மறக்காமல்...சிவபெருமானையும், நான்முகனையும் நினைத்துக் கொள்கிறார்! ஆனால் பெருமாளைப் பார்த்து, ஐயனே என்னை நீயே போர விட்டு விட்டாயோ? என்று கேட்கிறார்!

உம்பர் அந்தண் பாழேயோ? அதனுள் மிசை நீயேயோ?
எம்பரம் சாதிக்கல் உற்று, என்னைப் போர விட்டிட்டாயே??
தீர இரும்பு உண்ட நீர் - அது போல எந்தன் ஆருயிரை
ஆரப் பருக, எனக்கு என்றும் ஆரா அமுது ஆனாயே!!!

நல்லாச் சுடச் சுடக் காய்ச்சிய இரும்பு; தகதக-ன்னு மின்னுது! அந்த இரும்பு தண்ணி குடிச்சா எப்படி இருக்கும்?:) = இரும்பு உண்ட நீர்!
உஸ் உஸ்-ன்னு சத்தம் பொங்க, தண்ணி இருந்த இடமே தெரியாது ஆவி ஆயிரும்-ல்ல? அது போல என் உயிரைக் குடித்த இரும்பா, என் கரும்பா, அடே "இரும்பு மண்டையா"-ன்னு எம்பெருமானைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்!

என்ன மக்களே, நசரேயன்-மாறனின் வசன ஒப்பீடுகள் எப்படி இருந்துச்சி? :)


எல்லாத்தையும் விட சுவாரஸ்யமான ஒப்பீடு ஒன்னும் பாக்கி இருக்கு! அதான் "நாயகி பாவம்" (Bridal Mysticism)!"

எதுக்கு ஒரு சிலர் தன்னை இறைவனிடத்திலே பெண்ணாய் பாவித்துக் கொள்ள வேணும்? தான் தானாய் இருப்பது தானே Natural?
இதுல என்னமோ இருக்கு டோய்!
Bridal Mysticism (அ) நாயகி பாவம் என்பது Homosexuality என்னும் ஓரினச் சேர்க்கை பாவனையோ?" என்று கூட ஒரு சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள் - நண்பர்கள் உட்பட :))

ஆழ்வாரின் "நாயகி பாவம்" (எம்பெருமானிடத்திலே தன்னைப் பெண்ணாய் ஏறிட்டுக் கொள்வது) என்பது கிறிஸ்துவத்திலும் உண்டு!
ஆகா.....! "கிறிஸ்தவத்தில் நாயகி பாவனையா"? அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாமா?.......

இயேசுநாதப் பெருமான் திருவடிகளே சரணம்!
மாறன்-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
Read more »

Friday, March 30, 2012

ஆண்டாள் என்னும் "பறை"ச்சி! பறை என்றால் என்ன?

(முன்குறிப்பு: "தீவிரமான" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவிர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

கோதையை "ஆன்மீகமாக" மட்டுமே புரிந்து கொள்ளாமல், 
அவள் "ஆன்மா"-வாகவும் புரிந்து கொள்ளும் பதிவே இது!
நான் இப்போதுள்ள நிலையில்... தோழியின் மனப்பாங்கு, முன்னெப்போதை விடவும் "மெல்லியலாகப்" புரிகிறது்)



"பறை" என்றால் என்ன?

மிக உயர்ந்த சங்கத் தமிழ்ச் சொல்லான = "பறை",
ஆதிக்க மனப்பான்மை கொண்டோரின் செயல்களால், இன்று, தாழ்வான சொல் போல் பிறழ்ந்து விட்டது!
பாணன் ""பறையன்" துடியன் கடம்பன்
இந்நான்(கு) அல்லது குடியும் இலவே
- என்பது புறநானூறு! நெறிகளை, அரசுக்கே "பறை"ந்த பறையர் என்ற தமிழ் ஏற்றம்!

ஆனால்... சிறந்த ஒன்றைக், கும்மியடித்து கும்மியடித்தே, தவறாகப் பலுக்கிப் பலுக்கி, இழிவு பெறச் செய்தல் என்பது ஆதிக்கப் புத்தி!
சிறுபான்மையினரும் தங்கள் மரபுச் சிறப்பைப் பேணிக் கொள்ளலாம், ஆனால் எங்களுக்கு உட்பட்டே/அடக்கி வாசித்தே... = இதுவொரு மேலாளப் போக்கு:(

இதுக்கெல்லாம் போராடித் தான் மீளணும்!
போராட்டங்களுக்குப் பின் நிலைமை மாறி, இப்போது அப்படியெல்லாம் இல்லை என்று ஆகிவிட்டாலும்,
"பறை" என்ற அழகான தமிழ்ச் சொல்லு போனது போனது தானே?

நெருடல் இல்லாமல் நம்மாலேயே பலுக்க முடிகிறதா? யோசித்துப் பாருங்கள்?
இன்று: பறையன்/பறைச்சி = வசைச்சொல்! சொல்லாடினால் சட்டப்படிக் குற்றம்!


ஆனால் என் தோழியை நான் "பறைச்சி"-ன்னு சொல்லலாமா?
இதற்காக, கோதை என் தோழமையை மறுதலிப்பாளா என்ன?

அப்படிப் பார்த்தா, என் கிட்ட தினப்படி திட்டு வாங்குறான் முருகன்:)
"Hey PoRkki Muruga" என்பதற்காக அவன் என்னை மறுதலித்து விடுவானா?
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் என்ற பந்தமாகி விட்டதே!

என்னடா இது, ரொம்ப நாள் கழிச்சி, இப்படி ஒரு பதிவு-ன்னு பாக்குறீங்களா?
பந்தலின் புதிய வாசக அன்பர் ஒருவர்...
நேற்றிரவு, என்னையப் பார்த்து,  திடீர்-ன்னு இப்படிக் கேட்டுட்டாரு:

"பந்தலில் (2008-09) வந்த திருப்பாவைப் பதிவுகள் இப்போது தான் பார்த்தேன். ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன். 
ரொம்ப எளிமையா, அப்படியே மனசிலேயே தங்கி விட்டது. ஆனால் ஒரே ஒரு குறை. 
பறை என்பது பற்றி ஒன்றுமே சொல்லாமல் திருப்பாவை விளக்கம் எப்படி ரவி பூர்த்தி ஆகும்?
நீ (ங்க)முழு ’ஜஸ்டிஸ்’ பண்ணலை"

ஆகா! இப்படியொரு கணையா?
அப்படி என்ன எழுதி இருந்தேன் -ன்னு எனக்கே ஞாபகம் இல்லை! சரி, பொடிநடையா போய்ப் பார்த்தாக்கா...
Yes! வாசகர் சொல்வது சரியே! போதையில் தான் எழுதி இருக்கேன்:)

How did I forget lime and salt, when drinking Tequila?
Only, if I was already under the influence of my beloved's salty tamizh lips, I wud have forgotten :)

திருப்பாவைப் பதிவுகளில் என்னென்னமோ சொல்லிட்டு,
"பறை" பற்றி மட்டும் பொத்தாம் பொதுவாத் தான் சொல்லி இருக்கேன்; என் தவறு தான்!

"பறை" என்ற குறிப்புச் சொல்லாட்சி, வேறு எந்த ஆழ்வார்-நாயன்மார் பாட்டிலும் காண முடியாது!
ஒரு பெண்-கவிஞராக அவள் மட்டுமே செய்து காட்டிய Poetical Abstraction - கவிதை மறைக்கரு!

எதையோ மறைபொருளாச் சொல்லி வைக்கிறா = என்ன அது?
"வாய்ச்சுவையும் நாற்றமும்" எல்லாம் வெளிப்படையாச் சொன்னவ... இதை மட்டும் மறைபொருளா வைக்கிறாளே? ஏன்?
ஒரு பெண், தன் ஆணிடம் மிக விரும்பும் ஒன்றைத் தானே = மறைபொருளாச் சொல்லுவா?

* உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியில்....
* அவனே அவனே என்று ஊறித் திளைக்கும் ஒருத்திக்கு...
* அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே, தன் சம்பந்தமாகக் கொண்டு வாழ்பவளுக்கு...
"அவனுடைய" பறை -ன்னா என்ன?

தோழிக்குக் குறை வைக்க மனசு வருமா?
இதோ இரவிலே எழுதி, காலையில் "பறை"ந்து விடுகிறேன்! வாருங்கள்!


ஏய்.....இரு, இரு, ரவீ! அதுக்கும் முன்னாடி ஒரு கேள்வி!
ஆண்டாளை எப்படி நீ "பறைச்சி"-ன்னு சொல்லலாம்? அவள் ஒரு பிராமணப் பொண்ணு அல்லவா? :)

ஹிஹி! இன்றைய நிலைமைகளை அன்றைய உள்ளங்களின் மேல் ஏற்றிட முடியாது!
மேலும் ஆண்டாள் என்பவள் பிராமணப் பெண்ணல்ல! அப்படியான வீட்டில் வளர்ந்தவள் மட்டுமே!

கோதை, பிராமண வீட்டில் வளர்கிறாளே தவிர, அவள் ஒரு "இடைச்சி" போலவே தான் வளர்கிறாள்!
அவள் ஓர் அனாதைக் குழந்தை! "அயோனிஜை" என்று சமயத்தவர் சொல்லுவார்கள்! = யோனி தெரியாதவள்!
"அப்பன் பேர் தெரியாதவள்" என்ற கேலியும் இருந்திருக்குமோ என்னவோ?
= பட்டர்பிரான். கோதை, விட்டுசித்தன். கோதை
என்று வரிக்கு வரி, தன் இனிஷியலைப் போட்டுக் கொள்ள அவள் தவறுவதே இல்லை! வேறெந்த ஆழ்வார்களும் இப்படிச் செய்யவில்லை! (பிறப்பறியா முதலாழ்வார்கள் உட்பட)

* ஆன்மீக அன்பர்களுக்கு மட்டுமின்றி..
* தமிழ் அன்பர்களுக்கு மட்டுமன்றி..
* காதல் அன்பர்களுக்கு மட்டுமன்றி..
"உளவியல்" அன்பர்களுக்கும் அவள் வாழ்வு = ஒரு பெரும் பொக்கிஷம்!

"இதே சொந்த மகளாக இருந்திருந்தா, பெரியாழ்வார் இப்படித் திருமணப் பேச்சு எடுக்காமல் விட்டு வைப்பாரா?" - என்று திருமால் பெருமை படத்தில், ஊர் கேலி பேசுவது போல் ஒரு காட்சி காட்டுவார்கள்!
என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமலேயே, கண்ணனை ஊட்டி ஊட்டி வளர்த்தாகி விட்டது!
தோழனாய்த் துவங்கிய பாவனை, அறுக்க முடியாத காதலாகவே மாறி முடிந்து விட்டது! :(

ஆண்டாளின் கதை 
= இன்று வேண்டுமானால் ஒரு Fairy Tale போல இருக்கலாம்! 
= ஆனால் அவள் காலத்தில்?

காரைக்கால் அம்மை (எ) புனிதாவை, "பேய் மகளிர்" ஆக்கிச், சுடுகாட்டுக்குத் துரத்தியது போல் துரத்தவில்லையே தவிர,
கோதையின் வித்தியாசமான மனப் போக்குக்கு, அவளை என்ன கேலி பேசினார்களோ, நாம் அறியோம்!
அவள் தன் வாழ்வை எப்படி எதிர் கொண்டாளோ, நாம் அறியோம்!
தன் உள்ளத்தே தங்கி விட்ட மாசில்லாத காதலின் உயர்வு!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்" என்பது சமயப் பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டு விட்டது.. இன்று!
ஆலயம் தோறும் அவள் தான்! முன்பு நப்பின்னையைத் தொலைத்த தமிழ்க்குடி.. நல்ல வேளை, கோதையாவது மீட்டுக் கொண்டது!

அரங்கனில் ஏறிக் "கலந்தாள்"
* ஆனால், அவள் "கலந்தாளா"?...
* ஒருத்தன் நினைப்பிலேயே "கரைந்தாளா"?

யார் அந்த "ஒருத்தன்"?
வெளியிற் சொல்ல வழியின்றி, இறையை ஏறிட்டுக் கொண்டாளா?
சரி, "இறையை" ஏறிட்டுக் கொண்டவள், "பறையை" ஏன் ஏறிடுகிறாள்??

அவள் கடைசிப் பாட்டு இங்கே இனியதில் இருக்கு; பாருங்க; அவள் மனப்போக்கை உங்களுக்கு எடுத்துக்காட்டக் கூடும்!
மருந்தாம் என்று தன் மனத்தே, 
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்..
அவனைப் பிரியாது, என்ன்ன்றும் இருப்பார்களே!

மனசாலேயே வைச்சிக்கிட்டு வாழ்ந்தால் = அவனைப் பிரியாது இருக்கலாம்
..... என்று தன் கவிதை அனைத்தையும் முடித்து விடுகிறாள்!

அரங்கன் சிலையில் கலந்தாளா?
= இப்படி எழுதுவதால், ஆன்மீக அன்பர்கள், சில வைணவ அன்பர்கள் கூட என் மேல் கோவித்துக் கொள்ள வாய்ப்புண்டு!
"நீயே இப்படியெல்லாம் எழுதலாமா ரவி?" என்று கேட்கவும் கூடும்! :)

ஆனால் என்னையத் தான் இப்படியான "நிறுவன"க் கட்டுகளில் கட்டிவைக்க முடியாதே! தோழனும் நண்பர்களும் நன்கு அறிவார்களே!
கோதையை, அவள் "ஆன்மாவை" ஒட்டியும் புரிந்து கொள்வோம் வாருங்கள்!

கோதை, பிராமண வீட்டில் வளர்ந்தாலும், ஒரு "இடைச்சி" போலத் தான் வளர்ந்தாள்-ன்னு சொன்னேன் அல்லவா?
(இன்றளவும் அவள் ஊரிலே, கண்டாங்கிச் சேலை கட்டி, இடைச்சி போலவே அலங்காரம் செய்து வைக்கிறார்கள்)

இடைச்சியா? என்ன ஆதாரம்? என்ன தரவு? = அவள் கவிதையே ஆதாரம்!
கீழ்வானம் வெள்ளென்று "எருமைச் சிறுவீடு"
மேய்வான் பரந்தன காண்...

இதில்... எருமைச் சிறுவீடு மேய்தல்-ன்னா என்ன?

எதுக்கு எருமை மாட்டை மட்டும் சொல்லுறா கோதை?
பசு தானே "புனிதம்"?:)
எருமையைப் போய், "வேதம் அனைத்துக்கும் வித்தாகும்" திருப்பாவையில் கொண்டாந்து வைக்கலாமா? ha ha ha:)

பசு மாட்டை அவிழ்த்து விடணும்-ன்னு அவசியம் இல்லாமல் வைக்கோலைப் போட்டாலேயே அது திங்கும்!
ஆனால் எருமை அப்படி அல்ல! அதுக்கு மேய்ந்தே ஆகணும்!

அதுக்காக அவ்வளவு அதிகாலையில் மேய்ச்சலுக்குக் கூட்டிப் போக முடியுமா? அதான் சேரி வீட்டுக்குள்ளேயே ஒரு "சிறுவீடு"!
கொல்லையை ஒட்டிய மேய்ச்சல் புல்! அங்கேயே மேய விடுவாங்க!

உங்கள்-ல்ல எத்தனை பேருக்குச் "சிறுவீடு" பற்றித் தெரியும்? சின்ன வீடு-ன்னா தெரியும்:)
நகரத்தை விடுங்க! கிராமங்களில் இருந்து வந்தவர்கள்?
அவிங்களுக்குச் "சிறுவீடு" தெரிவது கூடக் கொஞ்சம் கஷ்டம் தான்!

பறைச் சேரி/ஆயர்ச் சேரிக்கே உரிய வழக்கத்தை...
எப்படி ஒரு "பிராமண வீட்டில்" வளரும் ஆண்டாள்...
தெரிந்து வைத்துக் கொண்டுப் புழங்குகிறாள்? வியப்பிலும் வியப்பு!

இது மட்டுமல்ல..
* பறைச்சேரிக்கே உரிய பிற சொற்களும்,
* கண்ணாலம் போன்ற பாமரச் சொற்களும்,
* கணவனை, "மைத்துனன்/மச்சான்" என்று அழைக்கும் முறையும்,
அவள் திருமொழியில் மறைக்காமல் அப்படியே வரும்!

= யார் அந்த ஒருத்தன்?

கண்டாங்கிச் சீலையும், கோடாலி முடிச்சும்,
உடம்பிலே வெண்ணைய் வீச்சமும், பறைச்சேரிப் பேச்சுமாய்...
அவனையே நினைச்சி நினைச்சி,
தன்னையும் அவன் குடும்பமாகவே பாவித்து பாவித்து,

அவளும் அப்படியே ஆயிட்டாள்!
= பாவனை அதனைக் கூடில்,அவனையும் கூடலாமே!

பறை:
பறை = Drums!
பறை தருவான்-ன்னா Drums தருவான்-ன்னா பொருள்? :)
பசங்க மட்டும் தான் பறையடிச்சி குத்துப்பாட்டுக்கு ஆடலாமா? நாங்களும் எறங்கறோம் பாரு-ன்னு இறங்கிட்டாளா? :)

* பறை = மோட்சம்      (ஆன்மீக ரீதியில்)
* பறை = பேரின்பம்    (இலக்கிய ரீதியில்)
* பறை = அவன் இன்பம்! (உண்மையா, காதல் ரீதியில்)

அட, வெறுமனே ஒரு வாத்தியக் கருவி..
அது எப்படிங்க மோட்சத்தை/ இன்பத்தை எல்லாம் குறிக்கும்???

சங்கத் தமிழரோடு நெருங்கிய தொடர்புள்ள இசைக்கருவி = பறை!

பிறப்பு முதல் முடிவு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் பறை இருக்கும்!
போர், உழவு, கூத்து-ன்னு ஒவ்வொரு திணை/துறையிலும் பல்வேறு பறைகள்!
அரிப் பறை, செருப் பறை, ஆகுளிப் பறை என்றெல்லாம் சங்கத் தமிழில் வரும்!

அப்பேர்ப்பட்ட சங்கத்தமிழ்க் கருவியைத் தான், நோன்புக் கருவியாக கொண்டாந்து வைக்கிறா கோதை!
(வேற எந்த இந்து மத-"உயர் வகுப்பு" விரதத்திலாச்சும் பறை இருக்கா?
இதெல்லாம் வீட்டுல தான் விடுவாங்களா? இதென்ன கோதை செய்யும் பழக்கம்?)

மலையாளத்தில் "என்ன பறையும்"-ன்னு கேக்கறோம்-ல்ல?
பறை = சொல்!
இசையால் அடித்துச் சொல்வது = பறை!
ஆனால், பறை என்பது வெறுமனே இசைக்கருவி மட்டும் தானா?
= இல்லை! சமூக வழக்கிலே அது "அளக்கும் கருவி"யாகவும் மாறி விட்டது!

மேலே படத்தைப் பாருங்க! தட்டைப் பறை;
அதைக் கவிழ்த்தால், பறை ஒரு கொள்-கலன் (container) ஆகி விடும்!

கூத்து முடிந்த பின், பறையைக் கவிழ்த்து, அதிலேயே காசுகள் பெறும் தெருவோரக் கலைஞர்களைப் பார்த்திருக்கோம் அல்லவா?

முற்காலத்தில், பறையடித்து முடிந்ததும், அளந்துவிடும் நெல் கூலியைப் பறையிலேயே வாங்கிக் கொள்ளலாம்! = பறைக் கூலி!
* அதே போல், தெய்வம் தரும் கூலி = மோட்சம் = பறை!
* காதலன் தரும் கூலி = பேரின்பம் = பறை!

காதல் ரீதியில்:
அவனுக்கு என்னையே குடுத்து, அவன் தரும் கூலியையும் என்னுள்ளேயே வாங்கிக் கொள்வேன்!
(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

ஆன்மீக ரீதியில்:
* பிறவி கொடுத்து, அதன் கூலியான மோட்சத்தையும், பிறவியின் முடிவிலேயே கொடுத்து விடுகிறான் இறைவன்!
(எப்படி பறையடித்து, கூலியும் அதிலேயே வாங்குறாங்களோ.. அது போல)

சரணம் ஆகும் தன-தாள் அடைந்தோர்க்கு எல்லாம்,
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
என்று மாறன்-நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஒப்பு நோக்குங்கள்!



இப்படி, கூலி கொடுக்கும்/படியளக்கும் ஐயன்! இந்தப் படியளத்தலே = பறை!
* யார் தருவார் பறை? = நாராயண"னே"!
* யாருக்குத் தருவார் பறை? = நமக்"கே"!
நாராயணனே, நமக்கே, பறை தருவான்!! என்று முதல் பாட்டைத் துவங்கி விட்டாள்!

"பறை" என்பது "உள்ளுறை உவமம்" | Abstraction in Poetry

* வேறு எந்தவொரு ஆழ்வாரோ, நாயன்மாரோ குறியீடு காட்டாத...
* ஒரு பெண் மட்டுமே சாதித்துக் காட்டிய...
* அவள் அப்பாவின் கவிதையிலும் காணமுடியாத உள்ளுறை! இப்படி ஒரு தனித்தன்மை இந்தப் பெண்ணுக்கு!

"பறை" எங்கெல்லாம் வருகிறது? = மொத்தம் 11 இடங்களில்
---------------------------------------------------------------------------------------

1. நமக்கே "பறை" தருவான் (தி:1 - மார்கழித் திங்கள்)
2. பாவாய் எழுந்திராய், பாடிப் "பறை" கொண்டு (தி:8 - கீழ்வானம் வெள்ளென்று)

3. போற்றப் "பறை" தரும் புண்ணியனால் (தி:10 - நோற்றுச் சுவர்க்கம்)
4. அறை "பறை" மாயன் மணிவண்ணன் (தி:16 - நாயகனாய் நின்று)

5. வேல் போற்றி! உன் சேவகமே ஏத்திப் "பறை" கொள்வாம் (தி:24 - அன்று இவ்வுலகம்)
6. உன்னை அருத்தித்து வந்தோம் "பறை" தருதியாகில் (தி:25 - ஒருத்தி மகனாய்)

7. சாலப்பெரும் "பறை"யே பல்லாண்டு இசைப்பாரே (தி:26 - மாலே மணிவண்ணா)
8. பாடிப் "பறை"கொண்டு யாம்பெறும் சம்மானம் (தி:27 - கூடாரை வெல்லும்சீர்)

9. இறைவா நீ தாராய் "பறை"யேலோ ரெம்பாவாய் (தி:28 - கறவைகள் பின்சென்று)
10. இற்றைப் "பறை" கொள்வாம், அன்று காண்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு (தி:29 - சிற்றஞ் சிறுகாலே)

11. அங்கு அப்"பறை" கொண்ட ஆற்றை,
பட்டர்பிரான் கோதை சொன்ன =(தி:30 - வங்கக் கடல்கடைந்த)
---------------------------------------------------------------------------------------

திருப்பாவையில் மட்டுமேயான சொல்லாட்சி = பறை!
அதுவும் Last 7 Songs = தொடர்ச்சியா வரும் சொல்லாட்சி! (24-30)

* துவக்கத்திலே, பறை=நோன்புக்கான இசைக்கருவி என்பது போல் காட்டி விட்டு...
* நடுவிலே, பறை=யாம்பெறும் சன்மானம் என்று, படியளந்து கிடைச்ச பரிசைச் சொல்லி...
* இறுதியிலே, பறை=பேரின்பக் கூலி...

இற்றைப் பறையெல்லாம் வேணாம்,
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே! உன் உறவே"-ன்னு முடிக்கிறாள்!

இப்போது தெரிகிறதல்லவா?
பறை = அவள் தனித்துவமான கவிதை!
ள்ளுறை உவமம்! கவிதை மறைக்கரு (Poetical Abstraction)

* பறை = இசைக்கருவி
* பறை = அதில் படியளந்து பெறும் கூலி
* பறை = "எனக்கு-அவனே" என்ற பேரின்பக் கூலி! = பேறு

ஒரு காதல் உள்ளத்துக்கு, 
 "அவன்" கொடுக்கும் உச்ச கட்ட இன்பம் | இன்பக் கூலியே=பறை!
என் தோழி ஆண்டாளின் அடிமனசே...
அவன் பெருமாளோ? பெருமாள் என்று ஏறிட்டுக் கொண்டு வேறு யாரோ? எவனாயினும்...
"உனக்கு-அவனே" என்னும் "பறை" ஏல்-ஓர் எம்பாவாய்!!!

Read more »

Tuesday, February 07, 2012

தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!

(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan.orgஅதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா? என்று ஆசிரியர் திரு. Patrick Harrigan கேட்க...அதற்கான பதிவு இது!

Murugan.org -இல் இன்று பதிப்பித்து உள்ளார்கள்! அதன் சுட்டி இதோ)


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!

தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
...இப்படி பல விழாக்கள்!
என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி...
அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் ஏந்திய நாளே = தைப்பூசம்! -ன்னு "புராணம்" சொல்லும்

ஆனா, இட்டுக் கட்டிய புராணமா இல்லாம, இயற்கைத் தமிழாக...
 "வேல்" என்றால் என்ன? -ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!

வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது-ன்னு இந்த ஆய்வுக் கட்டுரையில் சிறிது காண்போம்!


1. வேல் - பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

2. வேல் - தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!

வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு!
திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

3. வேலின் அமைப்பு:

வேல் எப்படி இருக்கும்?
அட, இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ?
ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?

பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!
எஃகு ஒரு கலப்பு உலோகம்!
இரும்பு + கரிமம் (Carbon) குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி!

மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்!

ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க,
வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்!

ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல் - இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா!
தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் = எஃகு வேலே!



4. வேலின் தோற்றம்!

வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)
எறிந்தால், காற்றைக் கிழித்து வேகமாகச் செல்லக்கூடிய லேசான பளுவில் தான் வேல் செய்யப்படும்!
* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடு அற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது! அதெல்லாம் சினிமாவில் தான்!:))
ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும்!
ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவரான Aborigines பயன்படுத்திய Boomerang போலே!
சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்!

5. வேலும் ஈட்டியும் ஒன்றா?

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!
வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது 
என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு= அம்பு, யானைக்கு= வேல்!

6. வேலின் சிறப்புப் பெயர்கள்:
கூர் வேல், நெடு வேல்
சுடர் வேல், கொற்ற வேல்
வீர வேல், வெற்றி வேல்...
-ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்!

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை

- இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா!

வேல் வழிபாடு:

சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவாய்ங்க!
இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி
-ன்னு அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே
(ஐங்குறுநூறு, கபிலர்)

* அதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து,
அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி
அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!
வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறி புடிச்சி ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன், என்னைத் திடீரென்று ஒதுக்கும் போக்கிலே துடிச்சிப் போய் நானே நொந்து போய் வாழுறேன்!
இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா!
உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தை?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை!
மடவை முருகா (மடப்பயலே முருகா)...
நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"
-ன்னு...இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி....

இதை நினைக்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல், கண்ணில் தண்ணி தளும்பி நிக்கும்!


அவன் வேடத்தில் அவள்!

முருகன் வேடத்தில், வேலொடு வள்ளி!

இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது என்று அறிந்தோம்!
இன்றும், தமிழ்க் குடியினர்/கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

சிலப்பதிகாரத்தில் வேல்:
பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொல்லுவாரு; அதை ஈடுகட்டவோ என்னவோ....
சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக விரிவாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
-ன்னு முருக பக்தரான நக்கீரரே, இரண்டு அடிகள் மட்டுமே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?
- என்று வேல் விருத்தத்தை, அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே!
-ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, நம்ம அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
....
இணை இன்றி, தான் உடையான் - ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் - திருக் கை வேல் அன்றே!

-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, ’பாட்டு மடை’யாகப் பெருகி வரும்!

வேல் பற்றிய பக்தி-இலக்கிய நூல்கள்:

பின்னாளில், வேல் பற்றிய பல பக்தி-இலக்கிய நூல்கள் வந்துள்ளன!
* இதற்கு முக்கிய காரணம் = அருணகிரி!
தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி செய்த முயற்சிகள் சொல்லில் அடங்கா!

ஆலயங்களில், வடமொழி அதிகம் புழங்கத் துவங்கி விட்ட காலத்தில், வடமொழியைப் பகைத்துக் கொள்ள விரும்பாது,
அதனொடு கூடவே சென்று, சிறுகச் சிறுகத் தமிழை நுழைக்க, அவர் செய்த முயற்சிகள் பலப்பல!

இதற்கு, அவருக்கு முக்கிய ஊக்க சக்தி = இன்னொரு தமிழ்த் தெய்வமான திருமாலின் ஆலயங்களில், சில நூற்றாண்டுக்கு முன்பு தான், தமிழ் பரவலாகத் தழைக்கத் தொடங்கியிருந்த புரட்சியைக் கண்டார்!

வேதங்களுக்கு நிகராக ஆழ்வார் அருளிச் செயல் கருவறைகளில் ஓதுதல்!உற்சவங்களில் வேதங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆழ்வார்களின் தமிழை முன்னே ஓதிச் செல்ல....
இறைவனே தமிழின் பின்னால் வரும் காட்சிகளைக் கண்ட அருணகிரி, அதிலே மனம் பறிகொடுத்து,

திருமால் "வண்டமிழ் பயில்வார் பின்னே திரிகின்றவன்"-ன்னு பாடினார்!
இதே நிலை முருகன் ஆலயங்களிலும் வர வேண்டி, அவர் செய்த ஆரம்ப வேலைகள் பலப்பல!

அதில் ஒன்று தான், வேல் வழிபாடு!
* வேல் வகுப்பு
* வேல் விருத்தம்
= இவை வேல் வழிபாட்டை முன்னிறுத்த அருணகிரியார் செய்த பனுவல்கள்!
தனித்து வழி நடக்கும் என 
திடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணை அதாகும் 


திருத்தணியில் உதித்தருளும் 
ஒருத்தன்மலை விருத்தன் என 
உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே !!
(- வேல் வகுப்பு, அருணகிரிநாதர்)

அந்த வழியில் பின்னர் பாம்பன் சுவாமிகளும், வள்ளிமலை சுவாமிகளும், "வேல் மாறல்", "வேற் பதிகம்" போன்ற பனுவல்களை, வேலின் மீது செய்துள்ளனர்!

பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்!
பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!-அங்கோர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவா!!


சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

"புராணப்படி" முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று கிளப்பிச் சொல்வாரும் உளர்!

முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!
எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கிளப்பிக் கூறுவர்!:)

முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு! பார்த்து இருக்கீங்களா?

இன்னிக்கு பார்த்தீங்கன்னா....பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்....நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!
என்னவனைப் போலவே, உயரமும் - நெடிதும் - அழகும் - அறிவுமான = வேல்!
தழுவ இனியது வேல்!
அவனைத் தழுவும் போது அவன் நழுவினால்.. போடா-ன்னு..
அவன் அந்தரங்க வேலைத் தழுவிக் கொள்வதில், இன்னும் சுகம்!:)

வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து.....முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

வெஞ்சமரில் அஞ்சேல் என "வேல்" தோன்றும்...
முருகா என்று ஓதுவார் முன்!

உசாத் துணை (References):

1. தமிழ் இலக்கிய வரலாறு - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
2. முருகன் (அ) அழகு - திரு.வி.க
3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை (கழக வெளியீடு)
4. சிலப்பதிகாரம் - நாவலர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்
5. வேல் விருத்தம், வேல் வகுப்பு - அருணகிரிநாதர் (kaumaram.com) & Reforms of Arunagiri - Pongi Publications, Vallimalai
6. Tamil Traditions on Murugan - Dr.Kamil Zvelebil
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP