சங்கத் தமிழ் "விஜய வருஷத்" தமிழ்ப் புத்தாண்டு!
அனைவருக்கும் "விஜய வருஷத் தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்!
சென்ற ஆண்டின் "தமிழ்ப் புத்தாண்டு" பதிவு பத்தி, ரெண்டு-மூனு பேரு, மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டுக்கிட்டே இருக்காங்க;
தமிழன்பர்கள் போலத் தான் தெரியுறாங்க; Dunno, why ppl. drill down in panthal & getting old posts;
அந்தப் பதிவைப் படிக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்;
அப்போ, ஏதோ "தெரியாத்தனமா" எழுதிட்டேன்;
I don't have much internet in this camp; So a real quickie below;
* "ஜயம்" = வெற்றி;
* "விஜயம்" = "பிரமாண்டமான" வெற்றி;
உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி வேணுமா? வேண்டாமா?
வேணும்-ன்னா, "விஜய வருஷம்" தான் = தமிழ்ப் புத்தாண்டு!
இந்த "விஜய வருஷத்தில்" எந்தக் "காரியம்" துவக்கினாலும், அது "க்ஷேமமா" நடக்கும்;
"சத் காரியங்களும்" வரிசை கட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் வாக்கு;
மண்ணில் விஜய , வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங்கள் எங்குமே - நண்ணும்
பயம்பெருகி நொந்த பரிவாரம் எல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு
- இது "சர்வ முகூர்த்த பஞ்சாங்க" வெண்பா(ம்)
இது எட்டுத் தொகையா? எட்டாங் கிளாஸ் தொகையா?.. யாரு எழுதினது?-ன்னு எல்லாம் கேட்கப் படாது;
பாருங்க, "வருஷத்துக்கு" தமிழ் வெண்பாவே இருக்கு; இதுல இருந்தே தெரியலையா? - "விஜய வருஷமும்" தமிழ் ஆண்டு தான் ஐயா;
"ஜிம்"-க்குப் போவதற்குக் கூட வெண்பா(ம்) இருக்கு; உடல் "ஆரோக்கியம்";
ஜிம்மிலே ஓடிபின், ஜம்மென்று கண்டதையும்
சும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ
உப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி
தப்பான வாழ்வைத் தவிர்
- இதுல இருந்தே தெரியலையா?- "ஜிம்" சங்கத் தமிழிலேயே இருந்துச்சி-ன்னு?
புத்தாண்டு, புத்தாண்டு-ன்னு கூறு கெட்ட "டுமீல் & டுமீலன்ஸ்" பேத்திக்கிட்டு இருக்காங்க; "ஓவரா"த் தமிழார்வம் தலை விரிச்சி ஆடுது;
1st of all, தமிழை, எழுத்துப் பிழை இல்லாம எழுத முடியுமா, இவனுங்களால?
2nd of all, "அனர்த்தம்" வந்துறாம, தமிழ் பேசத் தெரியுமா, இவங்களுக்கு?
இலக்கணம் முக்கியமா? தமிழுணர்ச்சி முக்கியமா?
= எலக்கணம் தான்-யா முக்கியம்; சகரிக-மநிநிச;
= ரீதி கெளளையில், "நிஷாதத்தை" அசைக்கலாமோ?
சின்னக் கண்ணன் "அசைக்கிறான்":))
இந்த "விஜய வருஷத்தின் ராஜா" = "குரு பகவான்";
குரு பார்க்க, கோடி "தோஷம்" விலகும்;
வாழ்க்கை-ல்ல நல்லா இருக்கணும்-ன்னு ஆசை இருக்கு தானே? எதுக்கு வீணா, "குரு பகவானை", பகைச்சுக்கிட்டு?
எவர் ஒருவர், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், தமிழ்ப்-"பஞ்சாங்கம்" வாசிப்பதைக் கேட்கிறாரோ,
* அவருக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது "ஐதீகம்"
* அவர்களின் "விரோதிகள்" அழிவார்கள்;
* "துஷ்ட" கனவுகள் ஏதும் இல்லாமல் வாழ்வார்கள்;
* "கங்கா ஸ்நானம்" பண்ணின பலன் கிடைக்கும்;
இந்த ஆண்டு "ஆதாயம் 53, விரையம் 56" எனக் கூறப்பட்டுள்ளது;
"ஆதாயத்தை" விட "விரையம்" கூடுதலாக இருப்பதால் அரசுக்கு வருவாய் குறையும்; (even better than CAG forecast)
எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் இருந்தாலும், ஆளும் கட்சியை பாதிக்காது; கருப்புப் பணம் கிடைக்கும்;
நல்ல மழை பெய்யும். அரசாங்க "கஜானா" நிறையும்;
சுக்ல பட்சம், சதுர்த்தி திதி,
ரிஷப ராசி, மகர லக்னம்,
நவாம்சத்தில் மேஷ லக்னம்
= இப்படித் தான், "தமிழ்ப்" புத்தாண்டு பிறக்கிறது; ஒங்க கண்ணுக்குத் தெரிகிறதா?
"தன் மானம்" மிகுந்தவர் நீங்கள் (??) ;
உங்களுக்கு 2-வது ராசியில் "வருஷம்" பிறப்பதால், பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்;
பணப் புழக்கம் கூடும்; உங்களின் "பூர்வ புண்யாதிபதி" சாரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்கள் "அந்தஸ்து" கூடும்;
இதெல்லாம் வாழ்க்கை நன்மைக்கே!
ஏற்கனவே வாழ்க்கையில் ஆயிரம் "கஷ்டங்கள்"; இதுல, நல்லா வாழறதை விட்டுட்டு....
தமிழ்ப் புத்தாண்டு எது? -ன்னு யாராச்சும் கேள்வி கேட்டுக்கிட்டு இருப்பாங்களோ?
தரவு குடுத்தாலே / ஆதாரம் காட்டினாலே...
* ட்விட்டர் பெரிய மனுஷங்க பகையைச் சம்பாதிச்சிக்க வேண்டி இருக்கும்;
* வசவாப் பேசினாக் கூடத் தப்பில்லை; பொண்ணு கூடச் சேந்து, போலீசில் மாட்டி விட்டாக் கூடத் தப்பில்லை; அவங்க கிட்ட கூட உறவாடுவோம்;
ஆனா, வெறுமனே தரவு குடுக்குறவனை?
* ஆயுசுக்கும் மன்னிக்க மாட்டோம்;
* துன்ப காலத்தில் கூட நலம் விசாரிக்க மாட்டோம்;
என் தமிழ்ப் பதிவுகள் = தப்பு தான்!
பெரியவங்க எல்லாரும் மன்னிக்கணும்;
வெறுமனே, "காகைக்கா காகூகை" -ன்னு சொல் விளையாட்டுப் பதிவுகளா/ கம்ப ரசங்களா இட்டிருக்கணும்; அது மட்டும் தானே தமிழ்??
தமிழ் உணர்ச்சி/ தமிழ் அன்பு -ன்னு, "உணர்ச்சி"யைப் பற்றும் பதிவுகள் தவறல்லவா? உள்-மனதைத் தேடுதலில் ஈடுபடுத்தலாமோ?
அது மட்டுமா? "பகவான் பார்வை - குரு பார்வை".. இதெல்லாம் எனக்கும் வேணும்;
வாழ்க்கையில் நல்லா இருக்கத் தானே ஆசைப்படுவாங்க? பட்ட "கஷ்டம்" எல்லாம் போதும்;
இனிமேல், "சம்போகம்", "சந்தோஷம்" -ன்னு எனக்கு ஒரு வாழ்வைக் குடு முருகா!
இப்பிடி மாறுபட்ட மனசா என்னைப் படைச்சிட்டியே; ஒன்னையே நம்பி வந்துட்டேனே... முருகவா;
மேலே, சிவப்புச் சிவப்பா எழுத்து எதுக்கு? -ன்னு பாக்குறீங்களா?
= அவையெல்லாம் தமிழ்ச் சொற்களே!
நல்லாப் பாருங்க.... சர்வ முகூர்த்த விஜய விருஷம் = இது தமிழ் தானே?
(மனசாட்சி): "இல்ல..."ஸர்வ/ முகூர்த்த/ விஜய/ வருஷ" தமிழ் மாதிரி தெரியல; அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு";
தயக்கமா??? என்ன ஸ்வாமி பேசறீரு?
*சங்கத் தமிழ்க் கடவுள், மாயோன் (எ) திருமால் = முன்னை மரபின் முதுமொழி முதல்வ!
= ஷ் போட்டு-ஷ் போட்டே, "விஷ்ணு" -ன்னு வெற்றிகரமா மாத்தீட்டோம்-ல்ல?
*சங்கத் தமிழ்க் கடவுள், சேயோன் (எ) முருகன் = அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!
= இவனைத் தான் இன்னும் "பரிபூர்ணமா" மாத்தலை;
ஆனாலும் சுப்ரமணிய ஸ்வாமி தேவஸ்தானம் -ன்னு அறுபடை வீடெல்லாம் எப்பவோ ஆயிருச்சே!
*சங்கத் தமிழ்க் கடவுள், கொற்றவை (எ) சமயபுரத்தாள்;
கொற்றம் + அவ்வை; அவ்வா-ன்னு தெலுங்கிலும் உண்டு = முதுமகள்;
பூர்வகுடி/ நாட்டார் வழக்கமா? போயே போயிருச்சி; "ஸமயபுர ஸ்தல புராணம்" உருவாகி, அங்கும் அஷ்டோத்திர அர்ச்சனை தானே?
Wait Wait Wait, சமயபுர-ஆத்தாளா?
"ஆத்தாள்"??? = ட்விட்டரில் செட்டு (set) சேர்த்துக்கிட்டு... பேசிப் பேசியே நாம தான் அதை bad word ஆக்கிட்டோமே; "அம்பாள்" -ன்னு சொல்லுங்க!
லேசு மாசா, தமிழ் இலக்கணம் எதுக்குப் படிச்சிருக்கோம்?
எவனாச்சும் தமிழ் உணர்ச்சி-ன்னு பேசி, அறியாமல் எழுத்துப் பிழை பண்ணினா, விளாசீற மாட்டோம்?
" டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா, அப்பறம் டுமீல் கோஷம் போடப் போவலாம்"
சுப்ரமணியன் = தமிழ் இல்லீயா?
அப்படீன்னா தமிழ்க் கடவுள் = தமிழ் இல்லீயா?
-ன்னு கேட்டு "பேஜார்" பண்ணீறலாம் ஓய்; ஆடிப் பூடுவாங்க;
* திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி = தமிழ் தான்!
* அதே போல், சர்வ முகூர்த்த விஜய விருஷம் = தமிழ் தான்; அதுவே தமிழ்ப் புத்தாண்டு!
(மனசாட்சி:) இல்ல... அது அப்பிடியில்ல; தொல்காப்பியம், தொன்மம் -ன்னு தரவு... அதெல்லாம் உண்மை போலத் தான் தெரியுது; அதான்...
யோவ்..
ஆயிரம் "தரவு" இருக்கு ஈழத்துக்கு; ஆனா, எதுனா "புடுங்க" முடிஞ்சுதா?
.......... புரிஞ்சிக்கோ!
சர்வ முகூர்த்த - விஜய வருஷ - "தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்;
Read more »

சென்ற ஆண்டு, இங்கே = "தமிழ்ப் புத்தாண்டு" பற்றி ஏதோ "அறியாமையில்" எழுதிட்டேன்;
இன்றைய "இலக்கிய" உலகில்: மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் எல்லாம் தேவையில்லை;
= "வணிகத் தமிழ்" அறிஞர்களே, ’அறி’ஞர்கள்!
"விஷ்ணுபுரம்" தான் தமிழின் ஒரே நாவல்-ன்னு ட்வீட்டத் தெரிஞ்சிருக்கணும்;
= தமிழ் முனைப்பை விடத், "தன் முனைப்பே" பெரிது;