Monday, August 20, 2007

பூரம்3: கருடா செளக்கியமா?

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு என்ன கேட்டது? - கருடா செளக்கியமா? அதற்குக் கருடன் என்ன பதில் சொன்னது?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே! - கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது என்று பாடுவார் கண்ணதாசன்.
அந்நியன் படத்திலும் கருட புராணம் அடிக்கடி தோன்றி பயமுறுத்தும்! :-)

பாம்பு பரம்சிவன் கழுத்தில் இடம் பெற்று விட்டது - அதனால் அது செளக்கியமே!
ஆனால் பாவம், கருடனின் நிலை? பார்க்கலாம் வாங்க, கருடனின் இடம் எங்கே என்று? கருடன் எப்போதும் பெருமாளின் வாகனம் (ஊர்தி) மட்டும் தானா? இறைவனைச் சுமக்கும் வேலை மட்டும் தானா கருடனுக்கு?
கருட பஞ்சமி இப்ப தான் வந்து போனது! (Aug 18, 2007) - அதே நாள் தான் நாக பஞ்சமியும் கூட!

பெரியாழ்வார் கருடனின் அம்சம் என்று சொல்லப்படுபவர். இருவருமே சுவாதி நட்சத்திரம் தான்! அதனால் தான் வில்லிபுத்தூரில் கருடனுக்கு மிகவும் ஸ்பெஷல் இடம். அது என்ன இடம்?
பெருமாளுக்கு நிகரான ஆசனம்! - சரி நிகர் சம ஆசனம்!

பொதுவாக கை கூப்பிய படி, பெருமாளின் முன்னே கருடன் நிற்பது தான் எல்லாக் கோவில்களிலும் வழக்கம்! ஆனால் வில்லிபுத்தூரில் மட்டும்,
ஆண்டாளும் பெருமாளும், மனைவியும் கணவனுமாய் நிற்க,
அவர்களுடன் ஜோடியாய் அதே ஆசனத்தில் கருடன்! - இது எப்படிச் சாத்தியம்?

பணியாளும் பரமனும் தோளோடு தோள் நிற்கும் அளவுக்கு சோஷியலிசமா என்ன வில்லிபுத்தூரில்? முதலாளியும் தொழிலாளியும் காம்ரேடுகள் (Comrade) ஆகி விட்டார்களா என்ன? :-)


பதிவர்கள் யாராச்சும், கருடனை வானில் பார்த்திருக்கீங்களா? கழுத்தில் வெள்ளைப் பட்டை - இல்லை தலையில் வெள்ளைப் பட்டை இருக்கும்! கருடனுக்கும் கழுகுக்கும் என்ன வேறுபாடு? சொல்லுங்க பார்ப்போம். அமெரிக்காவின் தேசியப் பறவை Bald Eagle எனப்படும் கருடன் தான்!
புத்த மதத்திலும், இலங்கை, ஆங்கர் வாட்-கம்போடியா, தாய்லாந்திலும் இந்தக் கருடன் உண்டு!

பெருமாளின் வாகனம் கருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்! கருட சேவை எப்போதும் மிகவும் விசேடம் தானே! "ஆழ்வார்" என்ற சிறப்புப் பெயர் கருடாழ்வாருக்கு உண்டு!
பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக!
பெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாகனமாக!

காச்யப முனிவருக்கும், வினதைக்கும் பிறந்தவர் தான் அருணனும், கருடனும்.
அருணன் சூரியனின் தேரோட்டி. கருடனோ பகவானுக்கே வாகனம்!
ஆனால் முதலில் இறைவனுக்கும் கருடனுக்குமான உறவு சண்டையில் தான் தொடங்கியது, இக்காலக் காதலர்களைப் போல! :-)
கருடன் பெருமாளிடமே சண்டையிட்டுத் தோற்றார்.

கத்ருவும், வினதையும் காச்யபரின் மனைவிகள்.
கத்ருவுக்கு ஆயிரம் குழந்தைகள், அனைத்தும் நாகங்கள். வினதைக்கு இரண்டு மகன்கள். அருணன், கருடன்.
சூழ்ச்சியால் வினைதையை அடிமை ஆக்கிக் கொண்டாள் கத்ரு. காமதேனுவின் நிறம் வெள்ளை என வினதை சொல்லினாள்; தன் நாகப் புதல்வர்களை அனுப்பி அதைச் சூழ வைத்துக் கருப்பாக்கி பொய்யாக வென்று விட்டாள் கத்ரு. வினதையை அடிமை ஆனாள்.
தாயின் சாபம் தீர்க்க வேண்டுமானால், அமிர்த கலசம் எடுத்து வர வேண்டும் என்று, சிற்றன்னையால் ஏவப்பட்டான் கருடன்.

அமிர்த கலசத்தை எடுத்து வரும் போது, இந்திரனிடம் போரிட்டான் கருடன். கருடனின் ஆற்றல் தாளாமல் இந்திரன் தவிக்க, அமிர்தத்தைக் காப்பாற்ற, பெருமாளே போருக்கு வந்தார். பெருமாளிடம் தோற்ற கருடன், அவர் திருவடிகளில் பணிந்து, அவருக்கே வாகனம் ஆனான். சிறிதளவு அமுதமும் பெற்று தாயின் சாபமும் தீர்த்தான்.


விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என்று பல பெயர்கள் கருடனுக்கு உண்டு!
கருடன் வேதங்களின் அம்சம், மங்கலச் சின்னம் என்று சொல்லுவார்கள்.
பல கோவில் நிகழ்ச்சிகளில், கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும், மங்களகரமான ஒன்று!
இது பெருமாள் ஆலயங்கள் மட்டும் அல்ல! எல்லா ஆலயங்களுக்கும் பொருந்தும்! கருடத்வனி என்ற ஒரு ராகமே உண்டு, சாம கீதம் இசைப்பதற்கு!
கிராமங்களில் கருடக் கிழங்கு என்ற ஒரு கிழங்கு உண்டு. அதை மாவிலை போல் வீட்டு வாசலில் சொருகி வைப்பார்கள், பூச்சி பொட்டுகள் வராமல் இருக்க! மேலே பறக்கும் கருடனின் நிழல், பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புவார்கள்!

கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.
எதிரிகளை வெல்வதற்கும், விஷமங்களை முறிக்கவும், மந்திர தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவதற்கும், வாதங்களில் வெல்வதற்கும் கருட மந்திரம் ஜபிப்பார்கள்!
கடலூருக்கு அருகில் உள்ள திருவந்திப்புரம் (திவஹீந்தரபுரம்) என்னும் ஊரில், கருட மந்திரம் ஜபித்து தான், சுவாமி தேசிகன் என்னும் ஆசார்யர், சகல கலா விற்பன்னராகத் திகழ்ந்தார். கருட தாண்டகம் என்னும் நூலையும் பாடினார்!

பாண்டவர்கள் கூட கருட வியூகம் அமைக்கும் போது தான் முதல் வெற்றி பெறுகிறார்கள்!
நீதி விளக்கமும், தண்டனைகள் மற்றும் திருத்தங்களைச் சொல்வது கருட புராணம்!
கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கிப் பிடித்துள்ளதால், கருடன் சனி பகவானின் விளைவுகளை மட்டுப்படுத்துவர் என்றும் சொல்லுவார்கள்!

அது சரி....
உலகத்தில் எங்காச்சும் வாகனத்துக்கே வாகனம் இருக்கா?
முருகனுக்கு மயில் வாகனம், ஆனா மயிலுக்கு வாகனம் உண்டா?
பாருங்க...கருடனுக்கு ஒரு வாகனம் உண்டு! சுபர்னோ வாயு வாகனா என்பார்கள்!
வாயு பகவான் தான் கருடனுக்கு வாகனமாய் அமைகிறார்!


பெருமாளுக்கு நிகரான ஆசனம்! - சரி நிகர் சம ஆசனம், கருடனுக்கு என்று பார்த்தோம்!
அது ஏன் என்றும் பார்க்கலாம் வாங்க!

வில்லிபுத்தூரில் ஊர் அறியத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்த அரங்கன், திருமண நாள் அன்று வரத் தாமதம் ஆகிறது. ஏற்கனவே அவனுள் கலந்து விட்ட ஆண்டாளும் அவனோடு வரத் தாமதம் ஆனதால் பெரியாழ்வார் துடிக்கிறார். திருவரங்கத்தில் காணாத காட்சியை, வில்லிபுத்தூரில் காணக் கூடி விட்டனர் ஊர்மக்கள். ஆனால் பெருமாள் வருவதாகத் தெரியவில்லை!

அப்போது கருடன், ஆழ்வார் நிலை அறிந்து ஓடோடி வருகிறான். பறப்பதில் வேகம் கூட்டுகிறான்.
அன்று கஜேந்திர மோட்சத்தில் பெருமாளுக்கு எப்படி உறுதுணையாக கருடன் இருந்தானோ, அதே துடிப்போடு பறக்கிறான்!
ஆண்டாளையும் இப்போது சேர்த்து சுமப்பதால் அவனுக்கு வியர்க்கிறது. இருந்தாலும் வாயு வேகமாகப் பறந்து வந்து, குறித்த நேரத்தில் வில்லிபுத்தூரில் தம்பதிகளைச் சேர்க்கிறான் கருடன்!

பெரியாழ்வார் கலக்கம் நீங்கி அமைதி அடைகிறார். பெண்ணின் தந்தைக்கு உதவிய பிள்ளை வீட்டுக்காரன் அல்லவா கருடன்?
இதற்கு நன்றியாகவே, ஆண்டாள் பெருமாளிடம் பேசி, தங்களோடு கருடனுக்கும் அதே ஆசனத்தில் இடம் அளித்தாள்! அதுவே வில்லிபுத்தூரில் இன்றும் அழகிய காட்சி!

மேலால் பரந்த வெயில்காப்பான்
"வினதை சிறுவன்" சிறகென்னும்,
மேலாப்பின் கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
என்று நாச்சியார் திருமொழியில், மாப்பிள்ளையான பெருமாள் மேல் வெயில் படாது, கருடன் தன் சிறகால் மேலாப்பு விரித்து, மாப்பிள்ளையை அழைத்து வருவதாகப் பாடுகின்றாள்.


ஓம்காரப் பிரணவ தத்துவம் இந்தக் காட்சியில் ஒளிந்துள்ளது.
ஓம் = அ + உ + ம்
அகாரம் = பரமாத்மா = பெருமாள்
மகாரம் = ஜீவன் = கோதை
இவர்கள் இரண்டையும் ஒன்று சேர்ப்பது எது?

"அ"வும், "ம"வும் சேர்ந்து "ஓம்" என்று ஆக வேண்டுமானால், அதற்கு அ-வுக்கும், ம-வுக்கும் இடையே "உ" தேவை!
உகாரம் = சரணாகதி சம்பந்தம் = இவனே கருடன்!
பெருமாளையும் ஆண்டாளையும் ஒன்று சேர்க்க ஓடோடிப் பறந்து வந்த உகார மூர்த்தி இவன். உகாரமே சரணாகதி. அது ஒன்று தான் பரமனையும் ஜீவனையும் சேர்க்கின்றது!
அதுவே வில்லிபுத்தூரில் மூவராய் நாம் காணும் காட்சி!
(வேறொரு பதிவில், ஓங்காரம் பற்றி விரிவான விளக்கம் பேசலாம்...)

கல்யாணம் ஆகும் வரை மைனர் முறுக்கில் வலம் வந்த தலைவன், தொண்டர்களைச் சரியாகக் கவனிக்கவில்லை போலும்!
அதான் கல்யாணமானவுடன், வந்து சேர்ந்த புண்ணியவதி, புருஷனிடம் பரிந்து பேசி...
என்னங்க, பாவம் அவரும் எவ்வளவு தான் வேலை செய்வாரு? கொஞ்சம் ஊதியத்தை உயர்த்திக் கொடுங்கள் என்று சொல்வது போல, தொண்டனுக்கும் சரி நிகர் ஆசனம் வாங்கிக் கொடுத்து விட்டாள்! அது தான் தாயாரின் கருணை!
புள்ளரையன் கோவிலில், வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ என்று திருப்பாவையிலும் புள் அரையன் (பட்சி ராஜன்) பெயரை நிரந்தரமாகப் பதித்து விட்டாள்!

கருடாழ்வார்=பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
அரங்க நகரப்பன் திருவடிகளே சரணம் சரணம்!!!


இத்துடன், திருவாடிப்பூரம் தொடர் முற்றிற்று!

37 comments:

  1. பாத்தீங்களா இதுக்குத் தான் உங்களையே விளக்கம் சொல்லச் சொன்னேன். இவ்வளவு விரிவாகவும் அழகாகவும் அடியேனால் சொல்லியிருக்க முடியாது. சூரியன் சூரியன் தான் நட்சத்திரம் நட்சத்திரம் தான். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற வகையில் தான் 'நட்சத்திரங்கள்' எல்லாம் இருக்கின்றன. இல்லையா? :-)

    ReplyDelete
  2. எங்கிருந்து கலக்கலாக படம் எடுத்துப் போடுறிங்க. அசத்தலாக ப்ரேம் போட்டு மாட்டிலாம் போல இருக்கு.

    ReplyDelete
  3. dear krs (a) patchirajan.

    Vazhiyeve Pallandu Kalam.... ... GARUDAPURANAM Solli padiya KRSm Idhai Padipavargalum VAZHIYEVE.....

    THALLE, last time kuttu(Modiriakkai hit) strong-aa vizhudhutudichu.Meduva kuttungo...

    Villupattu mahimiayum mudinthal ezhuthavum..

    sundaram

    ReplyDelete
  4. Cuddaloreil Gedila Nadhi(aka Garuda nadhi) karayil yella Vyazhananrum Garuda darisanthirkaga kaathiruppor undu. This may be true of other riversides but I've seen in Cuddalore.
    Vazhakkampol Sooper post.
    Shobha

    ReplyDelete
  5. //புள்ளரையன் கோவிலில், வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ//

    "இணையத்தில் கண்ணபிரான்
    கோதையின் பெருமையை
    சொல்லக் கேட்டிலையோ"

    கருடாழ்வார்=பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
    ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
    அரங்க நகரப்பன் திருவடிகளே சரணம் சரணம்!!!

    கண்ணபிரானின் தமிழின் இனிமைக்கு அனைவரும் சரணம்.

    ReplyDelete
  6. பட்சிராஜனின் மகிமையை இதைவிட அருமையாய் சொல்லவும் இயலுமோ? அருமை! அருமை ரவி! தெரியாத பலவிஷயங்களைத் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.படங்கள் கண்ணிலேயே நிற்கின்றன.. என்ன சொல்ல, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதன், பொன்னிசூழ் திருஅரங்கத்து அண்ணலின் அருள் ரவிக்கு என்றும் கிடைக்க வேண்டுவதைதவிர?

    ReplyDelete
  7. வேறொரு பதிவில், விரிவான விளக்கம் பற்றி பேசலாம்...
    இதுவே உண்மைத்தமிழன் பதிவு போல் தான் இருக்கு. :-)
    எழுத்தழகு,பட அழகு இருக்கும் போது விரிவான விளக்கம் படிக்க கசக்குமா?
    தொடருங்கள்.

    ReplyDelete
  8. //சுபர்னோ வாயு வாகனா //

    அருமையா எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.....

    எழுத்தாற்றல் இறைவன் தந்தது, அதிலும் அவனைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் அவனருளன்றி வராது.....

    உங்களுக்கு அது நிறம்ப இருக்கிறது..... வாழ்க நீ எம்மான்.

    ReplyDelete
  9. Wow! supera solli irukeenga! chance illa! thanks for the info!

    ReplyDelete
  10. //குமரன் (Kumaran) said...
    இவ்வளவு விரிவாகவும் அழகாகவும் அடியேனால் சொல்லியிருக்க முடியாது.//

    சொல்லாமலே சொல்வர் பெரியர்! -இல்லையா குமரன் ? :-)

    பெரியர் பெரியர் தான்.
    என் போல் சிறியர் சிறியர் தான்! :-)

    கருடன் தகவல்கள் எல்லாம் ஓகே தானே குமரன்? வேறு முக்கியமான ஏதாச்சும் மிஸ் பண்ணவில்லையே, அடியேன்?

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் said...
    எங்கிருந்து கலக்கலாக படம் எடுத்துப் போடுறிங்க. அசத்தலாக ப்ரேம் போட்டு மாட்டிலாம் போல இருக்கு//

    நட்சத்திரக் கண்ணா வாருங்கள்! :-)
    படங்கள் நிறைய பர்சனல் கலெக்சன் GK!
    மற்றபடி இராமானுச தாசர்கள் படங்கள் தளத்துக்கு pic credit வலைப்பூவில் ஒட்டு மொத்தமாகக் கொடுத்து விடுகிறேன்!
    http://pbase.com/svami

    ReplyDelete
  12. //Anonymous said...
    dear krs (a) patchirajan.
    Vazhiyeve Pallandu Kalam.... ... GARUDAPURANAM Solli padiya KRSm Idhai Padipavargalum VAZHIYEVE.....//

    வாழியே சுந்தரம் சார் மற்றும் நல்லடியார் எல்லாம்!
    அடியார்கள் வாழியே, அரங்கநகர் வாழியே!
    சடகோபன் தண்தமிழ் நூல் வாழியே!

    //time kuttu(Modiriakkai hit) strong-aa vizhudhutudichu.Meduva kuttungo...//

    அச்சச்சோ...நான் போய் குட்டுவேனா?
    பிட்டு வேணும்னா சாப்பிடுவேன்
    குட்டு வேணும்னா ஓடியே போயிடுவேன்! :-)

    உங்கள் அன்பான புகழுரையால் அடியேன் நாணிச் சொன்னது தான் அது, முந்தைய பதிவில். மன்னிக்கவும் சுந்தரம் சார், தப்பாச் சொல்லியிருந்தா.

    ReplyDelete
  13. //Shobha said...
    Cuddaloreil Gedila Nadhi(aka Garuda nadhi) karayil yella Vyazhananrum Garuda darisanthirkaga kaathiruppor undu.//

    வாங்க ஷோபா!
    கருடன் குருவின் அம்சம். அதனால் தான் வியாழன் போலும்.

    //This may be true of other riversides but I've seen in Cuddalore.//

    நீங்க கடலூரா?
    திருக்கோவிலூர் பற்றிய பதிவு சிறிது நாளில் இட எண்ணம்!

    ReplyDelete
  14. //ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
    //புள்ளரையன் கோவிலில், வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ//
    "இணையத்தில் கண்ணபிரான்
    கோதையின் பெருமையை
    சொல்லக் கேட்டிலையோ"//

    அச்சோ, கூச்சப் பட வைக்கறீங்க!
    கோதையை புஷ்பலதா போன்ற அடியார்கள் வாசிக்க கேட்டிலையோ? அருள் யாசிக்கக் கேட்டிலையோ?.

    ReplyDelete
  15. மற்றொரு அற்புதமான தொடர்!!
    வாழ்த்துக்கள் அண்ணா!! :-)

    ReplyDelete
  16. நிஜமாகவே அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ரவி. கருடனைப் பற்றி இவ்வளவு விஷயம் எனக்கு தெரியாது, இப்பொழுது நன்றாகவே புரிந்து விட்டது. படங்கள் அருமை. இது சம்பந்தமா இன்னும் எழுதுங்க. பல பேர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  17. அருமை அருமை...

    விரிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    பெருமால் அவதாரம் எடுக்கும் போது கருடாழ்வார் ஏதாவது அவதாரம் எடுத்தாரா? (நம்ம ஆதிசேஷன் மாதிரி)

    ReplyDelete
  18. //ஷைலஜா said...
    தெரியாத பலவிஷயங்களைத் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.படங்கள் கண்ணிலேயே நிற்கின்றன..//

    நன்றி ஷைலஜா. பல விஷயங்கள் நூலில் தேடித் தான் எழுதினேன். தேசிகரின் கருட தாண்டகம் கருடனைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்கிறது.

    ReplyDelete
  19. //வடுவூர் குமார் said...
    இதுவே உண்மைத்தமிழன் பதிவு போல் தான் இருக்கு. :-)//

    ஆகா...உண்மைத் தமிழன் பதிவு போல விரிவா இருக்கா, பெரிசா இருக்கா, அழகா இருக்கா? எதைச் சொல்லுறீங்க குமார் சார்? :-)

    ReplyDelete
  20. //மதுரையம்பதி said...
    //சுபர்னோ வாயு வாகனா //
    அருமையா எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.....//

    நன்றி மெளலி சார்.

    //எழுத்தாற்றல் இறைவன் தந்தது, அதிலும் அவனைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் அவனருளன்றி வராது.....//

    ஹூம்....
    இறைவன் சர்வ பரிபூர்ண அழகுடன் இருப்பதால், அவனைப் பற்றி எழுதும் போது, ஒன்னுமில்லாத எழுத்தும் இனிக்கத் தானே செய்கிறது.
    பூவோட சேர்ந்த நார் தான் அடியேன் பதிவுகள், மெளலி சார்!

    ReplyDelete
  21. //Dreamzz said...
    Wow! supera solli irukeenga! chance illa! thanks for the info!//

    தலைவா..நன்றி!
    தினேஷூக்கு கதைகள்-னா பிடிக்குமா?

    ReplyDelete
  22. //CVR said...
    மற்றொரு அற்புதமான தொடர்!!
    வாழ்த்துக்கள் அண்ணா!! :-)//

    தொடர் தொடரும் அண்ணா, வேற வேற தலைப்புகளில்! :-)
    உங்களைப் பற்றிக் கூட ஒரு தொடர் போடலாம்-னு எண்ணம், உங்க வாழ்க்கை வரலாற்றை :-)

    ReplyDelete
  23. //அன்புத்தோழி said...
    கருடனைப் பற்றி இவ்வளவு விஷயம் எனக்கு தெரியாது, இப்பொழுது நன்றாகவே புரிந்து விட்டது. படங்கள் அருமை. இது சம்பந்தமா இன்னும் எழுதுங்க. பல பேர்களுக்கு உபயோகமாக இருக்கும்.//

    நீங்க கொடுத்த கூகுள் தேடு வசதியும் செய்து பார்க்கிறேன் அன்புத் தோழி!
    பூரம் தொடரைப் பல நண்பர்கள் (Not bloggers) படித்து பார்வர்ட் செய்தார்கள் என்று நண்பர் சொன்னார்!
    ஆண்டாள் தமிழில் மயங்காதர் உண்டோ?

    ReplyDelete
  24. //வெட்டிப்பயல் said...
    விரிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...//

    உங்க கிட்ட கலந்து பேசி, பின்னர் தான் பதிவிடப் போகிறேன் பாலாஜி.
    ஓம்காரமும், நாராயணனும் எப்படிப் பிரிக்கவே முடியாதவர்கள்..மற்றும்
    ராமானுசர் "ஓம் நமோ நாராயணாய" -வுக்கு ஊர் அறியச் சொன்ன விளக்கத்தை, அப்படியே தரப் போகிறேன்!

    ReplyDelete
  25. //பெருமாள் அவதாரம் எடுக்கும் போது கருடாழ்வார் ஏதாவது அவதாரம் எடுத்தாரா? (நம்ம ஆதிசேஷன் மாதிரி)//

    இல்லை!
    இது ஒரு ஆழமான விளக்கம்.
    அவதார காலங்களில் மானுடத்துக்கு உண்டான சுக துக்கங்கள் உண்டு. அதனால் பெருமாளைச் சார்நத அனைவருமே அவரோடு அவதரிப்பதில்லை! ஓரிரு நித்ய சூரிகள் அவதாரம் செய்யாமல் பரமனின் ஆணைக்காக வைகுந்தம் தன்னிலேயே இருப்பார்கள் (like backup)!

    சொல்லப் போனா பெருமாளுக்கு உண்டான இரு மனைவியர் கருத்தும் கூட இதில் முளைத்தது தான்!

    கருடாழ்வார் ஆதிசேடன் போல் அவதாரங்கள் செய்யவில்லை.
    ஆனால் ராமாயணத்தில் நாக பாசம் முறிக்க வருவார்
    கிருஷ்ணாவதாரத்தில் பானாசுரன் அழிவுக்குப் பெருமாளுக்கு உதவ வருவார்.

    பெரியாழ்வார் கருடனின் அம்சம் தான்! கருடன் வேத சொரூபம். அதனால் குருவுக்குச் சமமானவர்!

    ReplyDelete
  26. நீங்க கடலூரா?
    திருக்கோவிலூர் பற்றிய பதிவு சிறிது நாளில் இட எண்ணம்!

    Looking fwd to Thirukovilur padhivu. Thrivikramanaya? Attaveerattama illai Gnananandaripatriya?
    Naan Cuddalore illai siruvayathil 2varudam vasithen. Appa TN Govt. serviceil irundadal' Yaadum Oore Yaavarum Kelir'
    Regards
    Shobha

    ReplyDelete
  27. Ravi,
    karudan arumai. padangaL mika Arumai.

    villiputhooril mattume Garudan perumaaL thaayaarodu kaatchi aLikkiRAr illaiyaa.

    Andal,aazhvaar,arangan udan uRaiyum Garudan kathai manathil nilaikkac seythuvittirkaL.

    ReplyDelete
  28. சுபர்னோ வாயு வாகனா என்பார்கள்!

    இந்தோனேஷியாவில் சுபர்னோ என்ற பெயர் மிகவும் அதிகம். அவர்கள் விமானச்சேவைக்கு கருடா ஏர்லைன்ஸ் என்றுதான் பெயர்.ஜாகர்த்தாவில் நடுநாயகமாக ஒரு பெரிய கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

    கல்கருடனைப்பற்றியும் அவர் கோவிலிலிருந்து வெளியே போகும்போதுஎவ்வாறு எடை கூடிக்கொண்டே போவார் என்ற அதிசியத்தை பற்றியும் சொல்லமுடியுமா?

    @குமரன் சூரியனையும் நக்ஷ்த்திரத்தைப் பற்றியும் பேசிவிட்டீர்கள் என்போன்ற ச்ந்திரன் நிலை என்ன என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.ஏதோ நாமும் பிளாக் போடுகிறொம் என்ற நிலைதான்

    ReplyDelete
  29. வானத்தில் மேலே பறக்கும் கருடனை கீழே கூட்டிவந்து அவனுக்கு மரியதை செய்து அமர்களப்படுத்தி விட்டீர்கள் கேஆர்ஸ்.நல்ல விஷ்யங்களை நல்லவிதமாக எழுதும் நீங்கள் நல்லபடியாக வாழ என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. Garuda Prathapadhukka dano ennamo
    Garudan's innoru name = Periya thiruvadi .

    கல்கருடN sevai yum touch pannirukalam. probably you are planning it for another day .

    ReplyDelete
  31. //வல்லிசிம்ஹன் said...
    Ravi,
    karudan arumai. padangaL mika Arumai.
    villiputhooril mattume Garudan perumaaL thaayaarodu kaatchi aLikkiRAr illaiyaa.//

    ஆமாம் வல்லியம்மா!
    ஏகாசனம்!

    ReplyDelete
  32. //தி. ரா. ச.(T.R.C.) said...
    இந்தோனேஷியாவில் சுபர்னோ என்ற பெயர் மிகவும் அதிகம்//

    அட, ஆமாம்!
    அவங்க அரசியல் தலைவர் பேரு கூட சுகர்னோ என்று வரும்!

    //அவர்கள் விமானச்சேவைக்கு கருடா ஏர்லைன்ஸ் என்றுதான் பெயர்.ஜாகர்த்தாவில் நடுநாயகமாக ஒரு பெரிய கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது//

    இதுக்குத் தான் திராச வேணும்ங்கிறது!
    நல்லா எடுத்துக் கொடுத்தீங்க!

    //கல்கருடனைப் பற்றியும் அவர் கோவிலிலிருந்து வெளியே போகும்போஎவ்வாறு எடை கூடிக்கொண்டே போவார் என்ற அதிசியத்தை பற்றியும் சொல்லமுடியுமா?//

    ஆகா..நாச்சியார் கோவில் பற்றி தனிப் பதிவு தான் போட வேண்டும்! நீங்க இடுங்க திராச. குமரன் சொன்னாலும் சூப்பரா இருக்கும்!
    கும்பகோணம், மாயவரம், நாகைக் காரங்க யாராச்சும் இடலாமே!!

    //@குமரன் சூரியனையும் நக்ஷ்த்திரத்தைப் பற்றியும் பேசிவிட்டீர்கள் என்போன்ற ச்ந்திரன் நிலை என்ன என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது//

    ஆகா...கடைசியில் இப்படியா? திராசவும் இப்படிக் குமரன் கட்சியல சேர்ந்தா நான் என்ன பண்ணுவேன்! சந்திரன் ஒவ்வொரு கோளுக்கும் உண்டே! அப்படிப் பார்த்தா பல இடங்களில் நிலைத்திருப்பது சந்திரன் தான் - திரா.ச! :-)))

    ReplyDelete
  33. //தி. ரா. ச.(T.R.C.) said...
    வானத்தில் மேலே பறக்கும் கருடனை கீழே கூட்டி வந்து அவனுக்கு மரியதை செய்து அமர்களப்படுத்தி விட்டீர்கள் கேஆர்ஸ்.நல்ல விஷ்யங்களை நல்லவிதமாக எழுதும் நீங்கள் நல்லபடியாக வாழ என் நல் வாழ்த்துக்கள்//

    தங்கள் அன்பும் ஆசியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருபவை திராச ஐயா!

    ReplyDelete
  34. //Madhusoodhanan said...
    Garuda Prathapadhukka dano ennamo
    Garudan's innoru name = Periya thiruvadi//

    பெரிய பெருமாள் அரங்கனின் வாகனம் என்பதால் - கருடன் பெரிய திருவடி!

    அவனை வணங்கிய சிறிய பெருமாள் இராமனின் வாகனம் என்பதால் - அனுமன் சிறிய திருவடி!

    பெரிய/சிறிய பெருமாளுக்குத் தான்! தொண்டருக்கு இல்லை! :-))

    //கல்கருடN sevai yum touch pannirukalam. probably you are planning it for another day .//

    ஆமாங்க மதுசூதனன்! கல் கருடன் படம் மட்டும் இட்டு விட்டேன்! அதை பற்றிய பதிவு போடணும்னா தனிப்பதிவாத் தான் போடணும்!

    ReplyDelete
  35. //Shobha said...
    Looking fwd to Thirukovilur padhivu. Thrivikramanaya?//

    ஆமாம் ஷோபா!
    கூடவே ஒரு கதையும்! இராமானுசர் திருக்கோவிலூர் விஜயம் பற்றி!

    //Attaveerattama illai Gnananandaripatriya?//

    அட்டவீரட்டானமும் வீரட்டேச்வரர்-சிவானந்த வல்லி பற்றியும்,
    தபோவனம் -ஞானாந்தர் பற்றியும் பிற்பாடு எழுத வேணும்.

    //Appa TN Govt. serviceil irundadal' Yaadum Oore Yaavarum Kelir'//

    இங்கும் அப்படியே தான் ஷோபா! திருச்சி தஞ்சை மதுரை வில்லிபுத்தூர் என ரவுண்டு கட்டி அடிக்க வேண்டியது தான்! :-)

    ReplyDelete
  36. engernthu ippadi ella infovum gather panreengalo theriyala hats off to you.. sila samayam engala ellam ninaicha varuthama iruku..ippadi eduvume theriyama irukomenu..
    ungaluku kodi namaskaram...

    ReplyDelete
  37. அருமையான பதிவு. :))

    கருங்குளம் கல் கருடன் பாத்து இருக்கீங்களா?

    வல்லி சிம்ஹன் மேடம் அந்த ஊர் தான்னு நினைக்கிறேன்.
    பெருமாளோடு அவரை மலையிலிருந்து தூக்கி வரும் போது ஒரு எண்ணிக்கையிலும், மலைக்கு மீண்டும் ஏறும் போது ஒரு எண்ணிக்கையிலும் அடியவர்கள் மாறுவார்களே! :)

    கொல்லன் பட்டறையில் ஊசி விக்கறேனோ? :p

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP