Wednesday, September 12, 2007

புதிரா? புனிதமா?? - மகாபாரதம்!

விடைகள் கீழே Bold செய்யப்பட்டுள்ளன. விளக்கங்கள் எல்லாம் வெட்டிப்பயல் கொடுத்துள்ளார். இன்னும் விரிவான விளக்கம் வேணும்னா, பின்னூட்டத்தில்!

வின்னர்கள்:
வெட்டிப்பயல், கெக்கேபிக்குணி - 10/10
பராசரன், குமரன் - 8/10


வென்றவர்க்கும், போட்டியில் நின்றவர்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அடுத்த புதிரா புனிதமாவில் என்ன கேக்கலாம்-ணு போட்டியில் பங்கு பெற்று வரும் நீங்களே சொல்லுங்க! (இது வரை வந்த தலைப்புகள்: தமிழக ஆலயங்கள், சைவம், ராமாயணம், முருகன், பொன்னியின் செல்வன்) - இல்லை விளையாட்டு முறையை வேறு மாதிரி மாற்றலாமா? என்ன நினைக்கிறீங்க?

இந்தப் போட்டியின் பரிசு இதோ! அள்ளிக்கோங்க!
(Blowup Pictures என்பதால் சற்று தாமதம ஆகலாம்!)

1. பார்த்தசாரதி - திருமுக மண்டலம்
பார்த்தனுக்காக, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தானே ஏற்றுக் கொண்டான்;
முகமே புண்ணாகிப் போன, பொன்னன் கண்ணன் - ஒத்தை ரோஜா மாலையில் ஏகாந்த சேவை! திரு அல்லிக்கேணி கண்டேனே
2. திருவல்லிக்கேணியில், மீசையோடு் ஆசைக் கண்ணன் - ஆலய ஓவியம்



மகாபாரதத்துக்கு மட்டும் தான் "மகா" அடைமொழி உண்டு! மகா ராமாயணம், மகா கந்தபுராணம் என்றெல்லாம் சொல்வது கிடையாது! ஏனென்றால் உலகின் நீதிகள் அனைத்தும் பொதிந்த நூல் மகாபாரதம்.
காலத்தால் பிந்திய காப்பியம் ஆதலால், எல்லா நீதிகளும், கதைகளும் இதில் அடங்கி விட்டன! அதனால் "மகா" பாரதம் என்று பெருமை பெற்றது - வாரியார் சுவாமிகள்.

நல்லவர்கள் பேராசை பீடிக்க எப்படித் தீயவர்களாக மாறுகிறார்கள், தர்மத்தின் பாதையில் நடக்கும் போது வரும் தர்ம சங்கடங்கள், அதை எதிர் கொள்வது எப்படி, இறையருள் யாரிடம் அமையும் என்று பலப்பல தத்துவங்கள்!
திருக்குறளில் இருக்கும் ஒவ்வொரு குறட்பாவுக்கும் ஒரு கதையைக் காட்டலாம் இக்காவியத்தில்! அவ்வளவு பரந்த காவியம்!
குழந்தை, வளர்ப்பு, கல்வி, கல்யாணம், இல்லறம், தொழில், போட்டி, ஆன்மீகம், தர்மம், மறைவு என்று வாழ்வின் எல்லாக் கட்டங்களும் கொண்ட காவியம்!

ராமாயணம் போல் அல்லாது, அனைத்துமே நிறை குறை, இரண்டுமே உள்ள பாத்திரங்கள்!
சைவ, வைணவ பேதங்கள் இல்லாத நூல். விநாயகப் பெருமானின் எழுத்தாணி பட்ட காவியம்! கண்ணன் கதையும் ஒன்றாய்க் கலக்கும் நூல்!
கதைக்குள் கதை, அதற்குள் இன்னொரு கதை....
என்று இதில் ஆழம் மிகுதி! பார்க்கலாம் நமக்கு எவ்வளவு தெரிகிறது என்று! :-))

இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு வேத வியாசர்!



1

பாரதப் போரில், உணவுப் பொருட்கள் வழங்கி உதவி செய்ததாகக் கூறப்படும் தமிழ் மன்னன் யார்?

1

அ) பாண்டியன் சோற்றுணை வழுதி
ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்
இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன்
ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

2பீஷ்மர் தெரியும்! பீஷ்மகர் யார்?

2

அ) துரியோதனன் மாமனார்
ஆ) பீஷ்மரின் தந்தை
இ) கண்ணனின் மாமனார்
ஈ) அர்ச்சுனனின் மாமனார்

3

மகாபாரதப் போரில் முதலில் அம்பு எய்த வீரன் யார்?

3

அ) நகுலன்
ஆ) துச்சாதனன்
இ) சால்வன்
ஈ) புரோசனன்

4போரில், பாண்டவர் படையில் முதலில் உயிர் துறந்த வீரன் பெயர் என்ன?

4

அ) கடோத்கஜன்
ஆ) அரவான்
இ) அபிமன்யு
ஈ) உத்தர குமாரன்

5போரின் முடிவில் நூறு கெளரவர்களில் ஒரே ஒருவன் மட்டும் மிஞ்சினான். அவன் யார்?

5

அ) விகர்ணன்
ஆ) துச்சலா
இ) யுயுத்சு
ஈ) அஸ்வத்தாமன்

6

விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த போது, அந்நாட்டு அரசி சுதேசனையின் சகோதரனால் பாஞ்சாலி வம்பிழுக்கப்பட்டாள்? அவன் பெயர் என்ன?

6

அ) கங்கன்
ஆ) பிருகந்நளை
இ) கீசகன்

ஈ) ஜெயத்ரதன்

7கீதை உபதேசிக்க, அதை நேரிடையாகக் கேட்டவர்கள் (live) நான்கு பேர் தான். அர்ச்சுனன், சஞ்சயன், திருதிராஷ்டன்; அந்த நான்காம் நபரின் பெயர் என்ன?

7


அனுமன்

8

துரோணரின் நூற்றியோரு வில்லையும் அவர் ஒரு அம்பு விடுவதற்குக் கூட விடாமல், அதற்கு முன்பே ஒடித்த வீரன் யார்?

8

அ) அபிமன்யு
ஆ) சாத்யகி
இ) சிகண்டி
ஈ) திருஷ்டத் துய்மன்

9கர்ணனின் வளர்ப்புத் தாயார் பெயர் என்ன?

9

அ) அதிரதை
ஆ) ஷோன்
இ) ராதை
ஈ) பானுமதி

10பாண்டவர் வம்சத்துக் குழந்தைகளில் ஒன்றே ஒன்று மட்டும் உயிர் தப்பியது, அதுவும் கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே! அந்தக் குழந்தையின் குழந்தை பெயர் என்ன?

10

அ) பரீட்சித்து
ஆ) யுயுத்சு
இ) ஜனமேஜயன்
ஈ) சித்ராங்கதன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!

1 அ) பாண்டியன் சோற்றுணை வழுதி ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன் ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

2 அ) துரியோதனன் மாமனார் ஆ) பீஷ்மரின் தந்தை இ) கண்ணனின் மாமனார் ஈ) அர்ச்சுனனின் மாமனார்

3 அ) நகுலன் ஆ) துச்சாதனன் இ) சால்வன் ஈ) புரோசனன்

4 அ) கடோத்கஜன் ஆ) அரவான் இ) அபிமன்யு ஈ) உத்தர குமாரன்

5 அ) விகர்ணன் ஆ) துச்சலா இ) யுயுத்சு ஈ) அஸ்வத்தாமன்

6 அ) கங்கன் ஆ) பிருகந்நளை இ) கீசகன் ஈ) ஜெயத்ரதன்

7 ______________________

8 அ) அபிமன்யு ஆ) சாத்யகி இ) சிகண்டி ஈ) திருஷ்டத் துய்மன்

9 அ) அதிரதை ஆ) ஷோன் இ) ராதை ஈ) பானுமதி

10 அ) பரீட்சித்துஆ) யுயுத்சு இ) ஜனமேஜயன் ஈ) சித்ராங்கதன்

74 comments:

  1. 1 அ) பாண்டியன் சோற்றுணை வழுதி ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன் ஈ) சோழன் உண்டி கொடுத்தான்

    - தெரியலை :(

    2 அ) துரியோதனன் மாமனார் ஆ) பீஷ்மரின் தந்தை இ) கண்ணனின் மாமனார் ஈ) அர்ச்சுனனின் மாமனார்

    - தெரியலை :(

    3 அ) நகுலன் ஆ) துச்சாதனன் இ) சால்வன் ஈ) புரோசனன்

    - தெரியலை :(

    4 அ) கடோத்கஜன் ஆ) அரவான் இ) அபிமன்யு ஈ) உத்தர குமாரன்

    ஆ) அரவான்

    5 அ) விகர்ணன் ஆ) துச்சலா இ) யுயுத்சு ஈ) அஸ்வத்தாமன்

    ஆ) துச்சலா

    6 அ) கங்கன் ஆ) பிருகந்நளை இ) கீசகன் ஈ) ஜெயத்ரதன்

    இ) கீசகன் ( கீசக வதம்)
    7 ______________________

    8 அ) அபிமன்யு ஆ) சாத்யகி இ) சிகண்டி ஈ) திருஷ்டத் துய்மன்

    அ) அபிமன்யு

    9 அ) அதிரதை ஆ) ஷோன் இ) ராதை ஈ) பானுமதி
    :(

    10 அ) பரீட்சித்துஆ) யுயுத்சு இ) ஜனமேஜயன் ஈ) சித்ராங்கதன்
    இ) ஜனமேஜயன்

    ReplyDelete
  2. ஆகா...கோவி தான் முதல் போணியா? சூப்பர் :-)

    6,10 கரீட்டூ GK!
    அதுவும் பத்தாம் கேள்வியில் பொடி வைச்சும், கரெக்டாச் சொல்லீட்டீங்க!

    முதல் கேள்விக்கு ஒங்களுக்குப் பதில் தெரியாது என்று சொல்லி இருக்கீங்களே! வியப்போ, வியப்பு! :-)

    ReplyDelete
  3. 1 ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன் (மத்த பேரு சூப்பர்!)
    2 இ) கண்ணனின் மாமனார்
    3 ஆ) துச்சாதனன்
    4 ஆ) அரவான்
    5 அ) விகர்ணன்
    6 இ) கீசகன்
    7 _வ்யாசர் / ஹனுமான்_? (தேவர்கள்/மஹேஸ்வரன்/பார்வதி:-))
    8 ஆ) சாத்யகி
    9 இ) ராதை
    10 அ) பரீட்சித்து

    ReplyDelete
  4. நான் வரலை!! எனக்கு ஒரு பதிலும் தெரியாது என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. நான்... சுத்தம்.
    இவ்வளவு தூரத்துக்கு படிக்கலை,கேட்டதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லை.
    :-(

    ReplyDelete
  6. வாங்க கெக்கேபிக்குணி

    முதல் கேள்விக்கு மத்த பேரு சூப்பரா? :-) எல்லாம் குழப்பி வேடிக்கை பாக்கத் தான்!

    4, 10 கொஞ்சம் tricky! :-)

    4,5,10 தவிர உங்கள் பதில்கள் எல்லாமே சரி - 7/10!

    ReplyDelete
  7. பதில் எல்லாம் தெரிஞ்ச மாதிரி தொண்டைக்குழியில் இருக்கு... வர மாட்டேங்குது :D

    கல்க்கல் ஃபார்மாட்

    ReplyDelete
  8. 1. இ) பாண்டியன் பெருஞ் சோற்று உதியன்

    2. அ) துரியோதனன் மாமனார்

    3. ஈ) புரோசனன்

    4. ஆ) அரவான்(களபலி தான் முதலில் வரும்னு நினைக்கிறேன் ;))

    5. இ) யுயுத்சு

    6. இ) கீசகன்

    7.

    8. அ) அபிமன்யு

    9. இ) ராதை

    10. அ) பரீட்சித்து

    ReplyDelete
  9. (1)சேரன் பெருஞ் சோற்று உதியன்
    (4)அரவான்
    (5)துச்சலா(only sister of kauravas)
    யுயுத்சு(he was not part of 100 kauravas).He was son of dhiritharashtran and maid servant of palace(not Gandari's son)

    (6)கீசகன்
    (7)Hanuman - because he was in arjuna's chariot(?)
    (9)ராதை
    (10)பரீட்சித்து

    ReplyDelete
  10. நான் என்னமோ டாக்டர் மாத்ருபூதம் சப்ஜட்னு நெனச்சில்ல வந்தேன்.

    எனக்கு ஒரு பதிலும் தெரியாது என்பதை வருத்தத்துடன் ரிப்பீட் செய்கிறேன்.

    என்ன சங்கத்தை இழுத்து சாத்திபுட்டீங்க. எவ்வளவு நாளா மெயிண்டனன்ஸ் பண்ணுவீக??


    மங்களூர் சிவா

    ReplyDelete
  11. 1 ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்

    2 இ) கண்ணனின் மாமனார்

    3 ஆ) துச்சாதனன்

    4 ஈ) உத்தர குமாரன்

    5 இ) யுயுத்சு

    6 இ) கீசகன்

    7 பீஷ்மர்

    8 ஆ) சாத்யகி

    9 இ) ராதை

    10 அ) பரீட்சித்து

    ReplyDelete
  12. 1. ஈ) சோழன் உண்டி கொடுத்தான் (கூகிளாரின் அருள்வாக்கு)

    2. இ) கண்ணனின் மாமனார் (ருக்மிணியோட தந்தை)

    3. ஆ) துச்சாதனன்

    5. ஈ) அஸ்வத்தாமன் (திரௌபதியின் மகன்களைக் கொன்றவன்)

    6. இ) கீசகன்

    7. பரமாத்மா/கிருஷ்ணன்? :)))

    8. அ) அபிமன்யு

    9. இ) ராதை

    10. அ) பரீட்சித்து

    ReplyDelete
  13. வாங்க மோகன்தாஸ்! 5,6,9 கரெக்டுங்க!

    ReplyDelete
  14. Nadopasana
    1,5,6,7,9 சரியே!

    5 ஆம் கேள்விக்கு எக்ஸ்ட்ரா குறிப்பு கொடுத்திருக்கீங்க...இருங்க பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. ஆகா பராசரன்!
    7,10 தவிர மற்ற எல்லாமே சரி!
    இப்போதைக்கு நீங்க தான் டாப் ஸ்கோர்! :-)

    ReplyDelete
  16. இராமநாதன்!
    உங்களுக்கு ரொம்பவே குசும்பு;
    கீதையைக் கேட்ட நாலாம் ஆள் கண்ண பரமாத்மா என்று அடிச்சு ஆடறீங்க! :-)

    அது சரி, சொல்பவன் செவிடாக இருந்தால் கேட்க முடியாதே! ஸோ, கண்ணனும் கேட்டவன் தான்! ஒங்க பதிலைப் பார்த்த பின்னர், கேள்விய மாற்றி அமைக்கிறேன்...
    :-)))

    கீதை சொன்ன கண்ணனைத் தவிர...
    கேட்ட நால்வரில் இன்னொருவர் யார்?

    ReplyDelete
  17. ஆங் மறந்துட்டேனே....
    இராமநாதன் உங்க 2,3,6,9 சரி!

    ReplyDelete
  18. Ravi,
    my answer to
    10- parikshit is wrong? I am surprised.
    Krishna will save parikshit from the brahma astra of ashwathama inside uttara's(abimanyu wife) womb.
    the foetus will be seeing krishna fight inside the womb and will try to find out who was that after being born.that is why he was named parikshit(one who always questions trying to find who fought for him inside womb)

    ReplyDelete
  19. Bheeman will kill every single brother in 100 kauravas.not even one is spared.Yuyutsu is dhirtharashtra's maid servant's son and he switches over to Pandavas side in the war because he is disgusted with kaurava's behaviour.

    After the war ,when pandavas depart towards heaven, yuyutsu will be temporary king till parikshit becaomes mature

    ReplyDelete
  20. 1. பெருஞ்சோற்று உதியன்

    2.துரியோதனன் மாமனார்

    3.புரோசனன்?

    4.அரவான்

    5.விகர்ணன்

    6.கீசகன்

    7.ம்ம்ம்ம் பீஷ்மர்?

    8.சிகண்டி

    ? ராதை? குழப்பம் வந்துடுச்சே?

    பரீட்சித்து
    முடிவு சொல்லி இருப்பீங்கனு நம்பறேன் ரொம்பவே தாமதமாப் பார்த்துட்டேன். :(((( ம்ம்ம் ஆனாலும் தப்பு நிறைய இருக்குன்னு மனசிலே படுது!

    ReplyDelete
  21. துரோணர்தானே அந்ட்த நாலாம் நபர்?
    கர்ணனின் வளர்ப்பு தாய் ராதை. அபிமன்யுதானே வில்லை ஒடித்தவன். சின்ன முயற்சிதான் ரவி.

    ReplyDelete
  22. Nadopasana

    10ஆம் கேள்வியை நீங்க அவசரமாப் படிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்.
    நீங்கள் சொல்லும் நபர் சரியே, ஆனா கேள்வியை இன்னொரு முறை படிச்சிடுங்க...நபரின் நபர்? :-))))

    ReplyDelete
  23. கீதாம்மா
    6,9 சரி.
    முதல் கேள்விக்குப் பதில் சரியாச் சொல்லுங்க. பாதி சொல்லி இருக்கீங்க...ஆனால் சேர, சோழ, பாண்டிய அடைமொழியைச் சேர்த்து சொல்லலையே!

    ReplyDelete
  24. வாங்க பத்மா

    மூன்று கேள்விக்குப் பதில் சொல்லியிருக்கீங்க!
    கர்ணனின் வளர்ப்புத் தாய் பெயர் சரியே!

    ReplyDelete
  25. Nadopasana

    http://en.wikipedia.org/wiki/Kauravas

    நூறு பேரின் பெயர்கள் இங்கு உள்ளன!
    அதில் ஒருவன் மட்டுமே போரில் இறவாமல் தப்பிக்கிறான். அவன் அணி மாறியதும், அவன் பிறப்பு குறித்து நீங்கள் சொன்னதும் சரியான தகவல்களே! ஆனால் நூறில் அவனும் ஒருவன்!

    ReplyDelete
  26. 1. ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்
    2. இ) கண்ணனின் மாமனார் - ருக்மிணி பிராட்டியின் தந்தை.
    3. ஈ) புரோசனன்
    4. ஆ) அரவான்
    5. இ) யுயுத்சு - மகாபாரதத்தின் வீடணன். :-)
    6. இ) கீசகன்
    7. வேதவியாசன்
    8. ஆ) சாத்யகி
    9. இ) ராதை
    10. அ) பரீட்சித்து

    ReplyDelete
  27. குமரன்
    3,4,10 தவிர எல்லாமே சரி தான்!
    10இல் சூட்சுமம்:-))

    7க்கு நீங்கள் சொன்ன விடை அப்படியும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது! நான் கேள்வியை வேண்டுமானால் சற்று மாற்றி, வைத்திருக்கலாம்.

    கீதையைக் கேட்கும் வாய்ப்பு பெற்ற இந்தப் பாத்திரம், மகாபாரதப் பாத்திரம் அன்று என்று சொல்லியிருக்கலாம். அப்போ சுவை கூடி இருக்கும். :-))

    ReplyDelete
  28. 3,4 விடை சரியாகத் தெரியவில்லை. மற்ற விடைகளைக் கழித்து ஓரளவு சரி என்று தோன்றும் விடையைச் சொல்லலாம். ஆனால் சொல்ல மனம் இல்லை. :-)

    10ன் சூட்சுமம் புரியவில்லை. கேட்கப்பட்ட கேள்விக்கு நான் சொன்ன விடை சரியென்றே தோன்றுகிறது.

    7ம் கேள்வி நீங்கள் இடுகையில் கேட்ட விதத்தில் நான் சொன்ன விடை சரி தான். இந்தப் பின்னூட்டத்தில் கொஞ்சம் மாற்றிக் கேட்டதால் இன்னொரு விடை மனத்தில் தோன்றியிருக்கிறது. அடுத்தப் பின்னூட்டத்தில் அந்த விடையைச் சொல்கிறேன். (அப்பத் தான் இந்த பின்னூட்டத்தை நீங்கள் உடனே வெளியிட முடியும். :-) )

    ReplyDelete
  29. 7. பாண்டவனின் கொடியில் இருந்த அனுமன்

    ReplyDelete
  30. குமரன்

    10.
    அந்தக் குழந்தையின் குழந்தை பெயர் என்ன?
    :-)

    ReplyDelete
  31. 7ஆம் கேள்விக்கு நீங்க சொன்ன இரண்டு விடைகளுமே சரி தான் குமரன்!

    நீங்கள் சொன்ன முன்னவர், திவ்ய திருஷ்டியை இன்னொருவருக்கு வழங்கினாலும், போரை அவர் நேரடியாகப் பார்த்ததாகக் குறிப்பு ஏதும் வருகிறதா? ஒரு வேளை பார்த்திருக்கலாம் ஆனால் சொல்லப்படவில்லை!

    இரண்டாம் விடை மிகவும் சரி! சொல்லவும் பட்டுள்ளது!

    ReplyDelete
  32. சார், பேப்பர திரும்ப கொடுங்க.. சரி செய்யணும்:-))))
    4 ஈ) உத்தர குமாரன்
    5 இ) யுயுத்சு
    10 அ) பரீட்சித்து (http://moralstories.wordpress.com/2006/05/25/anger-is-ones-greatest-enemy/).... இல்ல எனக்கு தான் பொடி/பொறி 'புரி'படலியா?

    ReplyDelete
  33. ஓ. குழந்தையின் குழந்தை என்று இரண்டு முறை சொன்னதை நான் எத்தனை முறை படித்தாலும் சரியாகப் படிக்காமல் விட்டுவிட்டேன். கவனக்குறைவு. :-)

    சரி. மகாபாரதக் கதையைக் கேட்ட அந்த மன்னனின் பெயரை அடுத்த பின்னூட்டத்தில் சொல்கிறேன்.

    ReplyDelete
  34. மகாபாரதக்கதையை முழுதாகச் சொன்னவரும் கீதையை நேரடியாகக் கேட்டதாகப் படித்திருக்கிறேன் இரவிசங்கர்.

    ReplyDelete
  35. 5 இ) யுயுத்சு
    6 இ) கீசகன்
    9 இ) ராதை
    10 இ) ஜனமேஜயன்
    this is all I could answer. Hope they are rt.
    Shobha

    ReplyDelete
  36. கெக்கேபிக்குணி

    பட்டைய கெளப்பறீங்க!
    இப்ப 4,5 கரெக்டாச் சொல்லிட்டீங்க - 9/10
    10ஆம் கேள்விக்குப் பொடி எங்கேன்னு குமரன் சொல்லி இருக்கார் பாருங்க :-)

    ReplyDelete
  37. ஷோபா சொன்ன நான்கு பதில்களூமே சரி தான்! மற்ற கேள்விகளுக்கு கெஸ்-ஸில் அடிச்சு ஆடுங்க ஷோபா!

    ReplyDelete
  38. 1. ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன
    2. இ) கண்ணனின் மாமனார்
    3. ஆ) துச்சாதனன்???
    4. ஈ) உத்தர குமாரன்
    5. இ) யுயுத்சு
    6. இ) கீசகன்
    7. அனுமன்
    8. ஆ) சாத்யகி
    9. இ) ராதை
    10. இ) ஜனமேஜயன்

    ReplyDelete
  39. 1. ஆ. சேரன் பெருஞ்சோற்று உதியன் (ஆனா இதுக்கு ஆதாரம் எதுவும் இருக்குறதா எனக்குத் தெரியலை. பாரதத்துலயும் எதுவும் சொல்லலை. வேற எந்த நூல்லயும் சொல்றாப்புல தெரியலை)

    3. புரோசனன். நகுலன் அம்பு விடுறவனில்லை. வாட்சண்டைல பெரியாள்னு நெனைக்கிறேன். துச்சாதனன் கதைல பெரிய ஆளு. நெடுங்கதை, சிறுகதைன்னு கலக்குற ஆளு. சால்வன் இல்லைன்னு நெனக்கிறேன். புரோசனன் பேரு கேட்டாப்புல இருக்கு. அவராத்தான் இருக்கனும்.

    4. அரவாந்தான். வேற யாரு. மத்தவங்கள்ளாம் உயிரழந்தாங்க. இவரு மட்டுந்தான உயிர் துறந்தாரு. அது சரி...அரவானோட பேரு பாரதத்துல உண்மையிலேயே இருக்கா? படிச்சு ரொம்ப நாளாச்சு. அதான் கேக்குறேன். படிச்ச நெனைவே இல்லை.

    5. இந்தக் கேள்வீல தப்பு இருக்குன்னு நெனைக்கிறேன். நூறு கவுரவர்கள்ல ஒரே ஒருவன் மட்டும் மிஞ்சினான்னு சொல்லீட்டு துச்சலையோட பேரக் குடுத்திருக்கீங்க. அது பொருந்தாது. ஏன்னா அது பொண்ணு. அதுவுமில்லாம நூத்தியொன்னு. விகர்ணன் பிழைக்கலை. அவனைக் கொல்லும் போது பீமனே அழுகுறான். ஒன்னையும் கொல்ல வேண்டியதாப் போச்சேப்பான்னு. யுயுத்சு எப்படிக் கௌரவர்கள் வரிசைல வந்தான்? அசுவத்தாமன் கௌரவரே கெடையாதே. ஆனா பொழைச்சவன் அவந்தான். கேள்விப்படி பாத்தா நூறுவர்ல ஒருவர் கூடப் பிழைக்கலை.

    6. கீசகந்தான். வேற யாரு.

    7. அதான் திருட்டுராஷ்டிரன்...சாரி..திருதிராட்டிரன் பக்கத்துலயே ஒரு அம்மா கண்ணக் கட்டிக்கிட்டு உக்காந்திருக்காங்களே. அவங்கதான். பாரதத்த எழுதுனவருன்னும் சொல்லலாம். ஆனா அவருக்குத்தான் எல்லாம் தெரியுமே. ஆகையால விடை காந்தாரி

    8. அபிமன்யுதான். சிகண்டி வீரந்தான். ஆனா நூறு வில்லையும் ஒடைக்கிற அளவுக்கு வீரர் இல்லை. திட்டத்துய்மன் தவத்துல இருந்தவரு கழுத்தை அறுத்தான். அவனை எப்படிச் சொல்ல முடியும். அபிமன்யுதான் விடை.

    9. வளர்ப்புத்தாயார்னு சொல்லலாமா? வளர்ப்புத் தெய்வம்னு சொல்ல வேண்டாமா? கவுந்தேயன் பட்டம் கர்ணனுக்குக் கடைசி வரைக்கும் கெடையாது. அவன் ராதேயன். என்னென்னைக்கும் ராதேயன். பெத்து ஆத்துல போட்டவளும் உண்டு. ஒரல எடுத்து வயித்துல இடிச்சவளும் உண்டு. பிள்ளைங்க போனாலும் ரத்தம் தேச்சுத்தான் சடை போடுவேன்னு சொன்னவளும் உண்டு. ஆனா...ஆத்துல வந்தத நெஞ்சுலயும் கண்ணுலயும் தூக்கி வெச்சி வளர்த்தாளே ராதை. அம்மா...நீ தெய்வம். பானுமதி துரியோதனன் மனைவி. கர்ணனுக்குச் சகோதரின்னு சொல்லலாம். இந்த அதிரதையும் ஷோனும் ஒங்க கற்பனையா?

    10. பரீச்சித்து. தன்னுடைய அத்திரத்தை ஏவினான் அசுவத்தாமன். எல்லாத்தையும் அது அழிச்சது. பாண்டவர் வம்சத்தையே மூழுக்க முழுக்க. உத்தரை வயிற்றுல இருந்த பரீச்சித்தையும் பரீட்சித்தது. ஆனால் கண்ணன் அதை இங்குபேட்டரில் வைத்துப் பிழைக்க வைத்து விட்டார்.

    ReplyDelete
  40. நான் ரொம்ப ஸ்லோஓஓஓஓஓஓஓஓ!! உங்கள் குறிப்பு உதவியது.
    10.இ) ஜனமேஜயன்
    en.wikipedia.org/wiki/Kuru_Kingdom

    கூகிளாண்டாவருக்கு நமஸ்காரம்!

    நான் நான் நான் நான் (ஹிஹி) தானே டாப் ஸ்கோர் (இப்போதைக்கு)??

    ReplyDelete
  41. 2. ருக்மணியின் தந்தை தானே பீஷ்மகர்?

    3. துரியோதன சொல்ல துச்சாதனன் துவக்கினானென்றே படித்த ஞாபகம்...

    4. இது ஃபிராடு தனம் பண்ண கேட்ட கேள்வி. கேள்வி விளக்கமா சொன்னா யாரா இருந்தாலும் கண்டு பிடிச்சிடுவாங்க. முதல் நாள் போரில் விராட நாட்டு இளவரசன் உத்திரக்குமாரன் வீரமாக போரிட்டு சால்வனால் கொள்ளப்படுவான்.

    ReplyDelete
  42. 5. யுயுத்சு (சைனிஸ் பேரு மாதிரி இருக்கு), துரியோதனனுக்கும் துச்சாதனனுக்கும் இடையில் பிறந்தவன். இவனுக்கும் விதுரருக்கும் இருக்கும் ஒற்றுமை/வேறுபாடு என்னனு சொல்லுங்க...

    6. கீசகன். கீசக வதம் அங்க தான் நடக்கும். பீமன் கீசகனை கொல்வதை டீவி மகாபாரதத்தில பார்த்தது இன்னும் நியாபகமிருக்கு

    7. இது நீங்க எனக்கு நிறைய தடவை சொல்லியிருக்கீங்க :-))))

    மேல கொடில இருந்து பார்த்தா கீழ கிருஷ்ணர் சொல்றது தெரியுமா/கேக்குமா?

    8. சாத்யாகி - இவ்வளவு பெரிய வீரனுக்கு ஏன் பெருசா பேர் இல்லாம போச்சு?

    9. அதிரதன் அப்பா. ராதை அம்மா.

    10. ஜனமேஜயன் சர்ப்பங்களை அழிக்க நடத்தும் யாகத்தை தடுக்க வரும் வியாசரின் சீடர் (பேர் நியாபகமில்லை) சொல்வது தானே பாரதம்...

    (சித்ராங்கதன் பிதாமகரின் தம்பி தானே?)

    ReplyDelete
  43. வந்தாரைய்யா ஒருத்தர்!
    மொதல் மொறையிலேயே பத்தையும் தட்டிச் சென்றார் அந்தப் பையல்!
    தட்டிச் சென்ற தட்டிப் பையல் யாருன்னு தெரியுதா? :-)

    ReplyDelete
  44. ஜிரா-ன்னாலே கலக்கல் தானா?
    இன்ட்ர்யூவுக்குப் போனாக் கூட, நேர்காணல் அணியில இருக்குறவங்கள இவரு தான் கேள்வி கேட்பாரு போல! :-)))

    ஜிரா
    ஆனா 1,5,9 தான் சரி!
    நூறு பேர் லிஸ்ட்டின் சுட்டி கொடுத்திருக்கேன் பாருங்க!

    கர்ணனின் தாயார் பற்றிக் குறிப்பிடுகையில் ஜிரா உணர்ச்சி மயமாகி விட்டார்! உண்மை தான் ஜிரா!
    எல்லாப் பெண்ணும் தாயல்ல! எக்கணமும்
    செல்லாப் பெண்ணே தாய்!

    கடைசிக் கேள்வியின் பொடியில் நீங்களுமா சிக்கி விட்டீர்கள்? ஆகா!

    ReplyDelete
  45. கெக்கேபிக்குணி...பிச்சிப்புட்டீங்க!
    ஆனா வெட்டிப்பையல் முதல் அட்டெம்ப்டில் எல்லாத்தையும் பிச்சிட்டார். ஸோ, முதல் இடத்தில் ரெண்டு பேரு!

    ReplyDelete
  46. ஓ நோ... பின்னூட்டங்களை படிச்சிருந்தா ரொம்ப சுலபமா எல்லாத்துக்கும் விடை சொல்லிடலாம் போல :-))

    ReplyDelete
  47. 7. Hanuman
    10. பரீட்சித்து

    ReplyDelete
  48. வெளக்கம் எல்லாம் வெட்டிப்பயலே கொடுத்துட்டாரு! so i am the escape.
    மாலையில் வடைகளைப் பதிப்பித்து விடலாம்! :-)

    4ஆம் கேள்வியில் நான் ஃபிராடு பண்ணேனா? அய்யகோ! என் தம்பியிடம் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா? :-))

    ReplyDelete
  49. அனானி...
    7ஆம் கேள்விக்கு ஒங்க பதில் மிகவும் சரி. ஏன் ரெண்டே கேள்வி மட்டும் அட்டெம்ப்ட் பண்ணீங்க? guess பண்ணி ஆடுங்க! :-)

    ReplyDelete
  50. //அதுவும் பத்தாம் கேள்வியில் பொடி வைச்சும், கரெக்டாச் சொல்லீட்டீங்க!//

    கேஆர்எஸ்,
    சிறுவயதில் வில்லிபாரதம் கதையாடல்( கலேசேபம்) கேட்டு இருக்கிறேன். பாண்ட வாரிசுகளில் எஞ்சி இருக்கும் அந்த பெயர் உள்ளவர்தான் மகாபாரத கதையை சொல்லச் சொல்லி கேட்பார். அதில் தான் கதை (ப்ளாஸ் பேக்) ஆரம்பமாகும் அதனால் எனக்கு இது உறுதியாக தெரியும்.

    :)

    ReplyDelete
  51. 1, 4, 10 மூன்றும் ஃபிராடுத்தனம் பண்ற மாதிரி கேள்வி.

    //
    4ஆம் கேள்வியில் நான் ஃபிராடு பண்ணேனா? அய்யகோ! என் தம்பியிடம் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா? :-))//
    ரொம்ப சந்தோஷப்படுவாரு ;)

    ReplyDelete
  52. //மாலையில் வடைகளைப் பதிப்பித்து விடலாம்! :-)


    வடைகளை

    இதுக்குமட்டும் நான் வரிசையில் முன்னாலெ நிக்கறேன்:-)

    ReplyDelete
  53. 1. பாரதப் போரில், உணவுப் பொருட்கள் வழங்கி உதவி செய்ததாகக் கூறப்படும் தமிழ் மன்னன் யார்?
    ஆ) சேரன் பெருஞ் சோற்று உதியன்

    சிலப்பதிகாரத்திலும், புறநானூற்றிலும் இது பற்றிய குறிப்பு வருகிறது.
    பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
    பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
    திணை: பாடாண்.
    துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
    பாடல்: மண் திணிந்த நிலனும்

    அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
    நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
    ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

    மற்ற பெயர்கள் (options) எல்லாம் சும்மா:-)

    ReplyDelete
  54. 2. பீஷ்மர் தெரியும்! பீஷ்மகர் யார்?
    இ) கண்ணனின் மாமனார்

    ருக்மணியின் தந்தை பெயர் பீஷ்மகர். விதர்ப்ப நாட்டு அரசன்.
    தன் மகன் ருக்மியின் பேச்சை மீற முடியாமல் சுயம்வரம் ஏற்பாடு செய்தாலும், தன் மகளின் மனத்தில் கிருஷ்ணன் தான் என்பதை அறிந்து கொண்டவர். அதனால் கண்ணன் தங்குவதற்கு மறைமுகமாக ஏற்பாடுகளும் செய்தார்.

    கூட்டாளிகள் ஜராசந்தன், சிசுபாலன், இவர்களோடு ருக்மி சேர்ந்து கொண்டு தன் சொந்த தங்கையைத் தாரை வார்க்க எண்ணினாலும், தக்க சமயத்தில் கண்ணன் வந்து மனத்துக்கு இனியாளைக் கவர்ந்து சென்றான்.

    துரியனின் மாமனார் பெயர் பானுமான். பீஷ்மரின் தந்தை சந்தனு. அர்ச்சுனனின் மாமனார் வசுதேவர். (பல மாமனார்கள் என்பது தனிக் கதை :-)

    ReplyDelete
  55. 3. மகாபாரதப் போரில் முதலில் அம்பு எய்த வீரன் யார்?
    ஆ) துச்சாதனன்

    சேனைத்தலைவர் பீஷ்மரின் காப்பாளன் துச்சாதனன். அவனே முதலில் அம்பு எறிகிறான். தருமன் குலப் பெரியோரை வணங்கி முடித்த பின்னர், இனியும் பொறுக்க மாட்டாது, முதல் நாள் போர் துவக்கம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது!

    திருதிராஷ்டன் போரை முதலில் துவக்கியது யார் பாண்டவரா இல்லை கெளரவரா என்று கேட்க, சஞ்சயனும் இவ்வாறே சொல்கிறான்.

    நகுலன் கொஞ்சம் சாது.
    சால்வன் இன்னொரு அரசன் - நகுல சகாதேவர்களின் தாய் மாமன் - துரியோதனின் சூழ்ச்சியால், போர் துவங்கும் முன்னரே துரியனின் பக்கம் சேரவேண்டிய கட்டாயம்.

    புரோசனன் அரக்கு மாளிகை கட்டியவன்

    ReplyDelete
  56. 4. "போரில்", பாண்டவர் படையில் முதலில் உயிர் துறந்த வீரன் பெயர் என்ன?
    ஈ) உத்தர குமாரன்

    விராட நாட்டு இளவரசன் உத்தர குமாரன். இவன் தான் "போரில்" முதல் நாள் உயிர் துறக்கிறான். பாண்டவர் படையும் பீஷ்மரால் பலத்த சேதப்படுகிறது. இவனை ஈட்டி எறிந்து கொன்றது சால்யன்.

    அரவான் - களப் பலியாவது, போர் துவங்குவதற்கு முன்னரே! போரில் அல்ல!
    மூல நூலில் இவன் இரவான் என்று குறிக்கப்படுகிறான். அர்ச்சுனன்-உலூபி என்ற நாக கன்னிகைக்குப் பிறந்தவன் இவன்.
    கடோத்கஜன் கர்ணனாலும், அபிமன்யு பல பேர் தாக்கவும் பின்னர் தான் மடிகிறார்கள்!

    ReplyDelete
  57. 5. போரின் முடிவில் நூறு கெளரவர்களில் ஒரே ஒருவன் மட்டும் மிஞ்சினான். அவன் யார்?

    இ) யுயுத்சு

    நூறு பேரில் யுயுத்சுவும் ஒருவன் தான்! தாதி ஒருத்தியின் மகனாக திருதிராஷ்டனின் வாரிசாகப் பிறந்தவன்.
    பார்க்கவும்: http://en.wikipedia.org/wiki/Kauravas
    ஆனால் போருக்கு முன் இவன் பாண்டவர் பக்கம் போய் விடுகிறான்.

    அசுவத்தாமன் - இவன் கெளரவரே இல்லை. துரோணரின் மகன்.

    துச்சலா - திருதிராஷ்டனின் பெண் வாரிசு - இவளோடு சேர்த்தால் 101.

    விகர்ணன் - இவனும் நூறு பேரில் ஒருவனே! ஆனால் பாஞ்சாலி மான பங்கத்தின் போதும், இன்னும் சில நிகழ்வுகளின் போதும் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறான். அதனால் கர்ணனின் கோபத்துக்கு ஆளாகிறான். ஆனால் அணி மாறவில்லை. பீமனால் கொல்லப்படுகிறான். பீமனே அதற்கு வருந்துகிறான்!

    ReplyDelete
  58. 6) விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த போது, அந்நாட்டு அரசி சுதேசனையின் சகோதரனால் பாஞ்சாலி வம்பிழுக்கப்பட்டாள்? அவன் பெயர் என்ன?
    இ) கீசகன்

    கீசக வதம் பிரபலமானது. பீமன் முரட்டுத்தனமாகக் கொல்வது.
    கங்கன் = விராட நாட்டில், தருமனின் புனைப் பெயர்
    பிருகந்நளை = அதே போல, அர்ச்சுனனின் புனைப் பெயர்
    ஜெயத்ரதன் = சிந்து நாட்டு அரசன். பாஞ்சலியைக் கவர எண்ணி மானபங்கப்பட்டவன்; போரில் ஒட்டு மொத்த கெளரவர்களும் இவனைக் காப்பாற்ற எண்ணியும் முடியாமல், மாலை வேளை இறுதியில் அர்ச்சுனனால் கொல்லப்படுகிறான்.

    ReplyDelete
  59. 7. கீதை உபதேசிக்க, அதை நேரிடையாகக் கேட்டவர்கள் (live) நான்கு பேர் தான். அர்ச்சுனன், சஞ்சயன், திருதிராஷ்டன்; அந்த நான்காம் நபரின் பெயர் என்ன?

    அனுமன்.
    அர்ச்சுனன் (கபித்துவஜன்) கொடியில் இருந்து கண்ணன் மொழிந்த கீதையை live-ஆகக் கேட்டவன் ஆஞ்சநேயன்!

    முன்னொரு முறை உத்தரகாண்டத்தில் இராமனுக்கும் இலக்குவனுக்கும் நடைபெற்ற உரையாடலின் போது ராம கீதை வெளிப்பட்டது. அதை அனுமன் கேட்க இயலவில்லை. அதனால் அண்ணலிடம் தொண்டன் மிகவும் வேண்டிக் கொள்ள,

    சிரஞ்சீவியான அனுமனை அர்ச்சுனனுடன் கடற்கரையில் சந்திக்க வைத்து, அவனைக் கொடியும் ஆக்கி, அண்ணலின் மொழியைத் தொண்டன் கேட்க வழி வகுத்தான் கண்ணன்.

    கீதைக் காட்சியைக் கண்டதும் கேட்டதும் மூவர் மட்டுமே என்பது சம்பிரதாயம். அனுமன், அர்ச்சுனன், சஞ்சயன்.
    கண்ணனும் கேட்டானே என்று ஜாலிக்கு சொல்லிக் கொள்ளலாம்!
    திருதிராஷ்டன் சஞ்சயன் சொல்லச் சொல்லக் கேட்டான் அவ்வளவே!
    வியாசர் கீதையை நேரடியாகக் கேட்டது பற்றி சம்பிரதாயத்தில் உண்டா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  60. 8) துரோணரின் நூற்றியோரு வில்லையும் அவர் ஒரு அம்பு விடுவதற்குக் கூட விடாமல், அதற்கு முன்பே ஒடித்த வீரன் யார்?

    சாத்யகி
    - பலராமன், கண்ணனின் தம்பி
    இவனே துரோணரை நூற்றியோரு வில்லையும் அவர் ஒரு அம்பு விடுவதற்குக் கூட விடாமல் திணற அடித்தது! துரோணரே, ஆகா இவன் ஸ்ரீராமன், கார்த்த வீர்யன், பீஷ்மன் போல் வில் வித்தையில் சிறந்தவனாய் இருக்கிறானே என்று வியக்கிறார்.

    பூரிசிரவசைத் தவறாகக் கொன்றவனும் இவனே! கோபம் அதிகம் இருந்ததால் வீரம் இருந்தும் மிளிரவில்லை!

    ReplyDelete
  61. 9. கர்ணனின் வளர்ப்புத் தாயார் பெயர் என்ன?
    ராதை என்பவள் தான் கர்ணனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தது. ராதேயன் என்றே கர்ணனுக்குப் பெயர்.

    ராதை வளர்ப்புத் தாய். வளர்ப்புத் தந்தை அதிரதன். ஷோன் என்பவன் இந்தத் தம்பதிகளுக்குப் பிறந்த பிள்ளை. கர்ணனின் வளர்ப்புத் தம்பி எனக் கொள்ளலாம்.

    பானுமதி துரியனின் மனைவி.

    ReplyDelete
  62. 10.
    பாண்டவர் வம்சத்துக் குழந்தைகளில் ஒன்றே ஒன்று மட்டும் உயிர் தப்பியது, அதுவும் கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே! அந்தக் "குழந்தையின் குழந்தை" பெயர் என்ன?

    ஜனமேஜயன் - இவன் தான் அந்தக் "குழந்தையின் குழந்தை" :-))))
    பலரைக் குழப்பிய கேள்வி!

    பரீட்சித்து என்பவன் தான் கண்ணன் அருளால், கர்ப்பத்துக்குள்ளேயே சுதர்சன சக்கரத்தால் காப்பாற்றப்பட்டவன். அபிமன்யு-உத்தர குமாரியின் பிள்ளை. பாண்டவருக்கு மிஞ்சிய ஒரே வாரிசு.

    இந்த வாரிசின் மைந்தன் தான் ஜனமேஜயன். சர்ப்பயாகம் செய்யப் போய்...வியாசரின் சீடர், வைசம்பாயன முனிவரால் ஆட்கொள்ளப்படுகிறான். அவர் தான் பாரதக் கதையை இவனுக்குச் சொல்கிறார்.

    ReplyDelete
  63. ரவி
    இப்போது கீசகன் முதல் எல்லா விடைகளும் நினைவுக்கு வருகிறது. ஆனால், துரியோதனன் அணியில் இருந்து பிதாமகரும் துரோணரும் மிகவும் உன்னிப்பாக கண்ணன் ஏன் போர தாமதப்படுத்துகிறான் என்ற கவலையில் கீதையை கேட்டதாக படித்திருக்கும் நினைவு. அனுமந்தான் கோடியிலேயே இருக்கிறானே. அது நினைவிற்கு வரவில்லை. மூளைக்குஇது ஒரு பயிற்சி, எனவே அதிகமான புதிர் பதிவுகள் இடுங்கள்.

    ReplyDelete
  64. எனக்கு இதில் திருப்தியில்லை :-((

    கேள்விகள் முதலிலிருந்து (சாந்தனு) கடைசி வரை வரும் மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

    இது பெரும்பாலும் பிற்பகுதியையே (போர், அதற்கு பிறகு) நினைவுபடுத்துகிறது...

    அபிமன்யூவை பற்றியும், பிதாமகர் பற்றியும் இல்லாதது பெரும் வருத்தம்... (கர்ணனையாவது சேர்த்துக்கிட்டீங்க)

    இன்னோரு மகாபாரத புதிரா புனிதமா வைங்க...

    ReplyDelete
  65. // வெட்டிப்பயல் said...
    எனக்கு இதில் திருப்தியில்லை :-((//

    அண்ணே! வணக்கம்ணே!
    பாரதம் பாடி முடிச்சாப்பாரு, வியாசருக்கே திருப்தி இல்லியாம்ணே! அப்பறம் நாரதர் சொல்லி, ஸ்ரீமத் பாகவதம் பாடினாப்பாரு தான் திருப்தியே வந்துச்ச்சாம்! அந்தக் கணக்கா நீங்க சொல்றீங்கண்ணே!

    //கேள்விகள் முதலிலிருந்து (சாந்தனு) கடைசி வரை வரும் மாதிரி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...//

    அப்படீன்னா மொத்தம் அம்பது கேள்வி ஆகும்! :-)

    //இது பெரும்பாலும் பிற்பகுதியையே (போர், அதற்கு பிறகு) நினைவுபடுத்துகிறது...//

    பல பேருக்கு முற்பகுதி, ஊடுகதைகள் எல்லாம் அவ்ளோவா தெரியாது இல்லை மறந்திருக்கும். ஆனா சண்டையும், பாண்டவ-கெளரவ பகுதி மட்டும் நல்லாத் தெரிஞ்சிருக்கும்! அதாண்ணே கொஞ்சம் ஈசியா ஆரம்பிச்சு, அப்பறம் பாத்துக்கிடலாம்னு இப்படித் துவங்கியாச்சு!

    //அபிமன்யூவை பற்றியும், பிதாமகர் பற்றியும் இல்லாதது பெரும் வருத்தம்... (கர்ணனையாவது சேர்த்துக்கிட்டீங்க)//

    அபி ஆப்ஷன்-ல வரானே! பீஷ்மர்/பிஷ்மகர் வராரே!

    //இன்னோரு மகாபாரத புதிரா புனிதமா வைங்க...//

    தங்கள் உத்தரவு தலைவா!
    பரிசு ஆச்சும் திருப்தியா இருந்திச்சா?

    ReplyDelete
  66. //இலவசக்கொத்தனார் said...
    நான் வரலை!! எனக்கு ஒரு பதிலும் தெரியாது என்பதை வருத்தத்துடன் ஒத்துக் கொள்கிறேன்.//

    கொத்ஸ் இதுக்கு எதுக்கு வருத்தம்? அடுத்த முறை அடிச்சி ஆடுங்க!

    //வடுவூர் குமார் said...
    நான்... சுத்தம்.
    இவ்வளவு தூரத்துக்கு படிக்கலை,கேட்டதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லை.//

    ஆகா, அடுத்த ஆட்டம் ஈசியா வச்சிடறேன் குமார் சார்! கூகுளாண்டவரைக் கேட்டா கொட்டுவாரே! ட்ரை பண்ணியிருக்கலாம் நீங்க!

    ReplyDelete
  67. //Boston Bala said...
    பதில் எல்லாம் தெரிஞ்ச மாதிரி தொண்டைக்குழியில் இருக்கு... வர மாட்டேங்குது :D//

    என்ன பாபா, ரேவதி கணக்கா, வெறும் காத்து தாங்க வருதுன்னு சொல்றீங்க? :-)

    //கல்க்கல் ஃபார்மாட்//

    அடுத்த முறை ஆடியோ, வீடியோ, படம்-னு கலக்க திட்டம் இருக்குங்க தல!

    ReplyDelete
  68. //mglrssr said...
    நான் என்னமோ டாக்டர் மாத்ருபூதம் சப்ஜட்னு நெனச்சில்ல வந்தேன்.//

    ஹிஹி
    சிவா, ஒங்களப் போலப் பல பேரு நெனச்சி வந்தாங்க, ஒரு காலத்துல! ஆனா அதெல்லாம் பழசாச்சே! புதிரா புனிமா ஒரு அஞ்சாறு போட்டாச்ச்சே...
    இன்னுமா மாத்ருபூதம்-னு ஆசைப்படறீங்க? :-)))

    //என்ன சங்கத்தை இழுத்து சாத்திபுட்டீங்க. எவ்வளவு நாளா மெயிண்டனன்ஸ் பண்ணுவீக??
    //

    சங்கத்தின் சிங்கங்களைக் கேட்டேன். புது மாதத்தில் புதுப்பொலிவுடன்! :-)

    ReplyDelete
  69. //துளசி கோபால் said...
    //மாலையில் வடைகளைப் பதிப்பித்து விடலாம்! :-)
    வடைகளை
    இதுக்குமட்டும் நான் வரிசையில் முன்னாலெ நிக்கறேன்:-)//

    ஹிஹி
    டீச்சர்...பிரம்மோற்சவம் ஆரம்பிக்கப் போவுது! வடை கவுண்ட்டரில் நீங்க இல்லாமலா? :-))))

    ReplyDelete
  70. //புரோசனன் அரக்கு மாளிகை கட்டியவன்//

    அதைக்கட்டியது மயன் கிடையாதா?

    இல்லை மயனின் சான்ஸ்கிரீட் பெயர் தான் ப்ரோசனனா?

    ReplyDelete
  71. ஆகா பார்க்காமல் போயிட்டேனே. என்ன செய்ய..........;-(

    ReplyDelete
  72. மோகன்தாஸ் said...
    //புரோசனன் அரக்கு மாளிகை கட்டியவன்//
    அதைக்கட்டியது மயன் கிடையாதா?
    இல்லை மயனின் சான்ஸ்கிரீட் பெயர் தான் ப்ரோசனனா?//

    இல்லீங்க
    மயன் வானுலகச் சிற்பி
    ப்ரோசனன் சகுனி அனுப்பும் ஆள்!

    //Dreamzz said...
    aahaa! miss panniten//
    //அன்புத்தோழி said...
    ஆகா பார்க்காமல் போயிட்டேனே. என்ன செய்ய..........;-(//

    next time dreamzz, anbuthozhi...mail anupparen pottikku munnadi.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP