Wednesday, September 19, 2007

திருமலை பிரம்மோற்சவம் 5 - கருட சேவை!

"கருடா செளக்கியமா" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று!
கருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது? அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் "வைநதேயன்" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. "பெரிய திருவடி" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்!

இவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு ஏக சிம்மாசனம் அளித்தாள். இன்றும் வில்லிபுத்தூரில், அரங்கன், ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் இருந்து தான் காட்சி தருகிறார்கள்.

பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் முக்கியமான வாகனம்.
கருடன் பறக்கும் வேகம் என்ன தெரியுமா?
'பரம பக்தன், துன்பத்தில் ஆழும் போது, "பெருமாளே" என்று கூவி அழைக்க, இறைவன் ஏறி அமர்ந்து விட்டாரா என்று கூடப் பாராமல், பறக்கத் தயாரானான்', என்று சத்குரு தியாகராஜர் பாடுகிறார். சங்கீதத்தில், கருடனுக்கு ஒரு தனி ராகமே உண்டு! பேர் கருடத்வனி!

அன்று முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன், மரிக்கும் தருவாயில் கூட, குளத்தில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்து, "ஆகா, பெருமாளுக்கு இதைச் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்" என்று தான் எண்ணம் போனது. கருட சேவையாக, இறைவன் தோன்றி, கஜேந்திரனைக் காத்ததை எண்ணினாலும் மனம் தான் இனித்திடாதோ?

முன்பே சொன்னது போல, திருமலையில் மிக முக்கிய வாகனம் இந்த கருட சேவை!
இன்று மட்டும் தான், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், அணிகள், வெளியே கொண்டு வரப்பட்டு, கருட வாகனத்தில் இருக்கும் உற்சவருக்கு அணிவிக்கப்படுகின்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லக்ஷ்மி ஆரம் ஆகிய இந்த இரு அணிகலன்கள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை. இன்று மட்டும் கருட வாகனத்தின் மேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன.

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பேரிகைகள் முழங்க, இதோ கிளம்பி விட்டான் திருமலை வாசன், கருடாழ்வாரின் மீது!


எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற பக்தி முழக்கம்.
இரு கரம், சிரம் மேல் கூப்பி, எம்பெருமானே, திருவடி சரணே! என்று அடியார்கள் வணங்குகிறார்கள்!
'ராஜ கம்பீர நாடாளும் நாயகன்', கருட கம்பீரமாக, ராஜ நடையில்,
'தொம் தொம்' என்று உலா வரும் அழகைச் சேவிப்பார்க்கு உண்டோ பிறவிப்பிணி!
சரணம் சரணம் கோவிந்தா சரணம்!!



இன்று மாலை,
பெரியாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய். உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே?

"உயர்ந்த சிகரங்களைக் கொண்டு, குளிரும் வேங்கட மலையை உடையானே,
உலகம் வாழ வேண்டி, 'குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய்' கண்ணா, தாமோதரா, காளிங்க நர்த்தனா!

என்னையும், இப்பிறவியில் எனக்கு வாய்த்த என் உடைமைகள் அத்தனையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டேன். (அதாவது)
உனக்கு வழுவிலா அடிமை செய்வதாக உறுதி பூண்டு, உன் சக்கரச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டேன். பொறித்தால் மட்டும் போதுமா?
உன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்!
இனி என்னை என்ன செய்யப் போகிறாய்?

உன் திருக்குறிப்பு என்னவோ?
எதுவாக இருப்பினும் சரி, உன்னை அன்றிப் பிறிதொருவர் எனக்கில்லை, வேங்கடவா! " என்று பெரியாழ்வார் பரிபூரண சரணாகதி அடைகின்றார் அவனிடத்தில்.


யாருப்பா அது, அங்க பிரசாதம் கேட்டது? வாங்க வாங்க! நம்ம நண்பர் ஜிரா என்று விளிக்கப்பெறும் ராகவன் தான் பிரசாத ஸ்டால் இன்சார்ஜ். அவரிடம் நயந்து பேசி பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும்!
இன்றைய பிரசாதங்கள்: கல்யாண லட்டு (பெரிய லட்டு)
அன்னப் பிரசாதங்கள்: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, ததியோதனம்(தயிர்ச்சோறு), சகாரா பாத், வெண் பொங்கல்
பிற பிரசாதங்கள்: பாயசம், சுகி, அப்பம், தோசை

மு.கு (முக்கியமான குறிப்பு
):
பிரசாதங்கள் விற்பனைக்கு அல்ல! :-)
பக்தியுடன் வருவார்க்கு சிறிது வழங்கப்படும்! :-))

அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!



இப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவையின் மீள்பதிவு. மற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்!

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாப் படங்கள் உடனுக்குடன் tirumala.orgஇலும் தினமலர் நாளிதழிலும் தரவேற்றப்படுகின்றன!
இதோ சுட்டிகள்:
தேவஸ்தானப் படங்கள் - tirumala.org
தினமலர் படங்கள்

14 comments:

  1. சிங்கப்பூரில் இருந்து கருட சேவை தெரியவில்லை, உங்களுக்கு அங்கிருந்து எப்படி தான் தெரிகிறதோ?
    உங்க கண்ணாடி தூசியில்லாமல் இருக்கிறதோ என்னவோ! (உபயம்: குமரன் பதிவு)
    காலை ரொட்டி சாப்பிட்டு வந்த பின்பும் ஜீரா விடம் எப்படி பிராசதம் கேட்கிறது?
    படம் பார்த்தவுடனே பசிக்கிறது.

    ReplyDelete
  2. பதிவினை படிக்கையில் "கருடத்வனி மந்த்ர மாதா" என்பது மனதில் வந்தது....

    தேவரு ப்ரசாதகளு பாகவுந்தி.....

    ReplyDelete
  3. Garuda Sevai romba joru !Prasadasevai adhai vida joru, pasivelayil (1.00p.m.) prasada padamellam pottu pasi innom adhigamachu :)
    Shobha

    ReplyDelete
  4. Garuda Sevai romba joru !Prasadasevai adhai vida joru, pasivelayil (1.00p.m.) prasada padamellam pottu pasi innom adhigamachu :)
    Shobha

    ReplyDelete
  5. பிரசாதம் இருக்கிறது தெரிஞ்சதும் உடனேயே வந்துட்டேன், எல்லாம் நல்லாவே இருக்கு, பார்க்க!ம்ம்ம்ம்ம்ம், சாப்பிடணும் போலேயும் இருக்கே! :))))

    அருமை! உங்களுக்குக் கருட சேவை கிட்டியதுக்கு, எனக்கு இன்னும் கிட்டவில்லையே! :((((

    ReplyDelete
  6. இன்னிக்குத்தான் கருட சேவை டிவியில் வந்தது.
    ஆண்டாள் மாலை, அரசாங்க மாலை என்று சாற்றிக்கொண்டார் பெருமாள். வார்த்தைகள் உபயம் ஸ்ரீ வேங்கடக்ருஷ்ணன்.
    அத்தோடு பிரசாதமும் அனுப்பிட்டீர்கள்.

    நாங்கள் இங்அ இருக்கிற திருப்பதிக்குப் போகவில்லை.\நீங்கள் அங்கிருந்தும் திருப்பதியை விடவில்லை. அற்புதம் ரவி. நன்றி.

    ReplyDelete
  7. //வடுவூர் குமார் said...
    சிங்கப்பூரில் இருந்து கருட சேவை தெரியவில்லை, உங்களுக்கு அங்கிருந்து எப்படி தான் தெரிகிறதோ?//

    ஹிஹி...கூகிளாண்டவரே துணை!

    //உங்க கண்ணாடி தூசியில்லாமல் இருக்கிறதோ என்னவோ! (உபயம்: குமரன் பதிவு)//

    இருங்க. எதுக்கு ஒரு தபா துடைச்சிக்கறேன்

    //படம் பார்த்தவுடனே பசிக்கிறது//

    ஜிரா...இப்படி ஒருத்தர் சொன்ன பின்பும் பிரசாதம் கொடுக்கலீன்னா எப்படி? சீக்கரம் கொடுங்கண்ணா!

    ReplyDelete
  8. //மதுரையம்பதி said...
    பதிவினை படிக்கையில் "கருடத்வனி மந்த்ர மாதா" என்பது மனதில் வந்தது....//

    அதானே! பாருங்க! க்ரெக்டாப் புடிச்சீங்க பாயிண்டை! :-)

    ReplyDelete
  9. //Shobha said...
    Garuda Sevai romba joru !Prasadasevai adhai vida joru,//

    அதே அதே!
    பிரசாத சேவையே சேவை! :-))

    ReplyDelete
  10. //கீதா சாம்பசிவம் said...
    பிரசாதம் இருக்கிறது தெரிஞ்சதும் உடனேயே வந்துட்டேன், எல்லாம் நல்லாவே இருக்கு, பார்க்க!ம்ம்ம்ம்ம்ம், சாப்பிடணும் போலேயும் இருக்கே! :))))//

    ஆகா...நம்ம ஜிரா தானே!
    எக்ஸ்ட்ரா தொன்னை வாங்கிக்குங்க கீதாம்மா!

    //அருமை! உங்களுக்குக் கருட சேவை கிட்டியதுக்கு, எனக்கு இன்னும் கிட்டவில்லையே! :((((//

    ஏன். அதான் பதிவில் கருடாழ்வார் மின்னுகிறாரே!

    ReplyDelete
  11. //வல்லிசிம்ஹன் said...
    நாங்கள் இங்க இருக்கிற திருப்பதிக்குப் போகவில்லை.\நீங்கள் அங்கிருந்தும் திருப்பதியை விடவில்லை. அற்புதம் ரவி//

    வல்லியம்மா!
    திருமலையை நாம விட்டாலும், அது நம்மள விடாது! என்ன சொல்றீங்க:-)

    ReplyDelete
  12. பெரியாழ்வாருக்கு மட்டும் தான் சரணாகதி தத்துவம் தெரியுமா?
    இதோ சேர மன்னர் குலசேகர பெருமாள் ஆழ்வாரின் பெருமாள் திருமொழியிலிருந்து
    ........... .......... ......... .........
    கூன்ஏறு சங்கம் இடத்தான்தன் வேங்கடத்துக்
    கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. (குருகு-நாரை)

    ............. ........ .......... .........
    தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
    மீனாய் பிறக்கும் விதி உடையவன் ஆவேனே.

    .............. .......... ........ ........
    பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துச்
    செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவனே.

    ............ ............... ............. .......
    எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல்
    தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவனே. (தம்பகம்-ஒன்றுக்கும் உதவாத புதர்,மரத்தூண்)

    .............. ............... ..................
    தென்னஎன வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
    அன்னனைய பொற்குவடு ஆம் அருந்தவத்தன் ஆவேனே.
    (அன்னனைய பொற்குவடு-ஒப்புயர்வற்ற அழகிய சிகரம்)

    ..................... ................ .................
    தேன்ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல்
    கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே.(கானாறு-காட்டாறு)

    ................... ..................... ....................
    வெறியார் தண்சோலைத் திருவேங்கட மலைமேல்
    நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே.(நெறி-வழி)

    ..................... ....................... .................
    அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
    படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.

    ............................. .......................
    செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும்
    எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே.

    எவ்வளவு நிறைந்த பக்தியிருந்தால் ஏதாவது ஓன்று ஆகிவிடுகிறேன்
    என்பார் பாருங்கள்.

    ReplyDelete
  13. //உன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்!
    இனி என்னை என்ன செய்யப் போகிறாய்?//

    மிகவும் நல்ல கருத்து.

    எல்லொருக்கும் வீட்டிலேயே கருடசேவையை காட்டிவிட்டீர்கள். உங்களுக்கு ரொம்ப தான் நல்ல மனசு.

    ஆகாஹா எனக்கும் பிரசாதம் வேண்டும். எந்த வரிசையில் நிக்கணும்னு
    சொல்லுங்க.

    ReplyDelete
  14. மடப்பள்ளிய எங்கிட்ட ஒப்படைச்ச ஒங்க நல்ல மனசைப் பாராட்டினாலே தகும்.

    புளியோதரையும் சோறு
    வெகு பொருத்தமாய்ச் சாம்பாரு
    பூரிக்கிழங்கு பாரு ஹஹா ஹஹா ஹஹா

    படத்தப் பாத்ததும் பெங்களூர்ல எங்க தெலுங்கு அக்கா ஒருத்தங்க செய்ற புளிஹாரா நெனைவுக்கு வருது. அடடா! அடடடடா!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP