ரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?
இந்தச் செய்தித் துணுக்கைப் படித்தவுடன் சிரிப்பு தான் வந்தது! ஏன்னு கேக்கறீங்களா?
சும்மா ஒரு கப்சாவுக்காக கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க!
திருமலை நாயக்கர், மதுரையில் உங்க தாத்தாவின் தாத்தாவுக்கு, நாலு மாசி வீதியை எழுதி வச்சாரு! அதுனால இப்ப அது எல்லாம் உங்களுக்குத் தான் சொந்தம். அதுனால நீங்க அங்கிட்டு போயி எல்லாரையும் காலி பண்ணச் சொன்னா, உங்களைக் காலி பண்ணுவாய்ங்களா? :-)
அதே சமயம், ஒரு சீரியஸ் டவுட்டு.
பாரதியாருக்கோ, பாரதிதாசனுக்கோ அரசு சார்பில் வழங்கப்பட்ட இடமோ பொருளோ, இன்னும் நாலைஞ்சு தலைமுறைக்குப் பிறகு, இதே கதி தான் ஆகுமா?
காலம் - அதற்குள் எந்த விதியையும் அடக்கும் நண்பர் கோவி கண்ணனைக் கேட்டாக்கா, ஏதாச்சும் விடை கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்! :-)
நன்றி: தினமணி.
நகரி, செப். 29:
திருப்பதி திருமலையில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான அன்னமாச்சார்யாவின் சொத்துக்கள் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருமலையில் உள்ள 28.58 ஏக்கர் நிலம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும், அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் இத்தீர்ப்பு கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் சார்பில் வழக்கை நடத்திய முன்னாள் தேவஸ்தான நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, அவற்றை அரசர்களின் உதவியுடன் ஓலைச் சுவடிகளில் பாதுகாத்து வந்தவர் ஏழுமலையான் பக்தர் தாளபாக்கம் அன்னமாச்சார்யா.
அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படம் மூலமும் அவரது வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.
இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்த மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை அன்னமாச்சார்யாவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அன்னமாச்சார்யா வம்சாவளியை சேர்ந்தவர்கள் அச்சொத்துக்கள் எங்களுக்கு சேர வேண்டும் என்று 1990-ல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கு சாதகமாக இருந்தது.
அதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து அன்னமாச்சார்யா வம்சாவளியைச் சேர்ந்த டி.கே. ராகவன் 2007 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
புதன்கிழமை அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது என்றார் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம்.
சும்மா ஒரு கப்சாவுக்காக கற்பனை பண்ணிப் பாத்துக்குங்க!
திருமலை நாயக்கர், மதுரையில் உங்க தாத்தாவின் தாத்தாவுக்கு, நாலு மாசி வீதியை எழுதி வச்சாரு! அதுனால இப்ப அது எல்லாம் உங்களுக்குத் தான் சொந்தம். அதுனால நீங்க அங்கிட்டு போயி எல்லாரையும் காலி பண்ணச் சொன்னா, உங்களைக் காலி பண்ணுவாய்ங்களா? :-)
அதே சமயம், ஒரு சீரியஸ் டவுட்டு.
பாரதியாருக்கோ, பாரதிதாசனுக்கோ அரசு சார்பில் வழங்கப்பட்ட இடமோ பொருளோ, இன்னும் நாலைஞ்சு தலைமுறைக்குப் பிறகு, இதே கதி தான் ஆகுமா?
காலம் - அதற்குள் எந்த விதியையும் அடக்கும் நண்பர் கோவி கண்ணனைக் கேட்டாக்கா, ஏதாச்சும் விடை கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்! :-)
நன்றி: தினமணி.
நகரி, செப். 29:
திருப்பதி திருமலையில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான அன்னமாச்சார்யாவின் சொத்துக்கள் திருப்பதி ஏழுமலையானுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருமலையில் உள்ள 28.58 ஏக்கர் நிலம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும், அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் இத்தீர்ப்பு கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் சார்பில் வழக்கை நடத்திய முன்னாள் தேவஸ்தான நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திருப்பதியில் நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, அவற்றை அரசர்களின் உதவியுடன் ஓலைச் சுவடிகளில் பாதுகாத்து வந்தவர் ஏழுமலையான் பக்தர் தாளபாக்கம் அன்னமாச்சார்யா.
அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படம் மூலமும் அவரது வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.
இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்த மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை அன்னமாச்சார்யாவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அன்னமாச்சார்யா வம்சாவளியை சேர்ந்தவர்கள் அச்சொத்துக்கள் எங்களுக்கு சேர வேண்டும் என்று 1990-ல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு அன்னமாச்சார்யா வம்சாவளியினருக்கு சாதகமாக இருந்தது.
அதையடுத்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து அன்னமாச்சார்யா வம்சாவளியைச் சேர்ந்த டி.கே. ராகவன் 2007 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
புதன்கிழமை அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஹைதராபாத் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது என்றார் நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம்.
//ரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?//
ReplyDeleteஇருந்தாலும் மொதோ மொதோ படிக்கிறச்ச பக்குனு தூக்கி வாரி போட்டுதுபா!
காலாங் காத்தால இப்டியா?
;-D
அன்னமாச்சார்யாவின் நிஜ படத்தையே போட்டிருக்கலாமே?!
ReplyDeleteநான் அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப் படுறது இல்லீங்க. யாருக்கு வேணுமின்னாலும் குடுங்க- தலைப்புக்கு மட்டுமே பின்னூட்டம்
ReplyDeleteஇரவிசங்கர். தலைப்பும் இடுகையின் முதல் பகுதியும் மொக்கை போல் தோன்றியிருந்தாலும் நீங்களும் இந்த இடுகையை அப்படியே குறித்திருந்தாலும் அந்த முதல் பகுதியின் மூலம் கோவி.கண்ணனுக்கு ஏதோ செய்தி சொல்ல நினைத்ததைப் போல் தோன்றுகிறதே?! :-)
ReplyDeleteஇரண்டாவது பகுதியான செய்தியை அறிந்து கொண்டேன். நன்றி.
Anda 28.58 acres ithanai kalam yaar possessionil irundadu?
ReplyDeleteCase pottavar Annamayya parambarai yendru nichayamaga theriyuma?
Yellam Yezhu malayanukke velicham :)
//காலம் - அதற்குள் எந்த விதியையும் அடக்கும் நண்பர் கோவி கண்ணனைக் கேட்டாக்கா, ஏதாச்சும் விடை கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்! :-)//
ReplyDeleteகேஆர்எஸ்,
உங்களை, என் காலம் தலைப்பான "எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !" தலைப்பு ஈர்த்திருக்கா / பாதித்து இருக்கா ? என்று புரியவில்லை.
எல்லா நிகழ்வுகளும் காலம்(டைம்) என்ற எல்லைக் கடந்த சொல்லில் அடைக்கப்பட்டதில் அடங்கும் என்பது அதன் பொருள். எதுவும் மாறக்கூடியது என்றும் சொல்லி இருக்கிறேன்.
"எதுவும் எவருக்கும் சொந்தமில்லை...அது ஏழுமலையானாக இருந்தாலும் சரி" ஏழுமலைகள் கூட கால ஓட்டத்தில் காணாமல் போக 'காலம்' வரும்.
:))
இதென்ன கூத்து...தாத்தா சொத்து பேரனுக்குத்தான். ஒழுங்கா கோயில் கிட்ட இருந்து பிடுங்கி அன்னமய்யா சந்ததியினருக்குக் குடுங்க. கோயில்கள்ள ஏற்கனவே பெருச்சாளிகள் நெறைய இருக்கு. இதுல இதையும் குடுத்தா முடிஞ்சது கதை.
ReplyDeleteஅட என்னப்பா
ReplyDeleteசீரியஸ் டவுட்டுக்கு யாருமே பதில் சொல்ல மாட்டேங்குறாங்க?
//பாரதியாருக்கோ, பாரதிதாசனுக்கோ அரசு சார்பில் வழங்கப்பட்ட இடமோ பொருளோ, இன்னும் நாலைஞ்சு தலைமுறைக்குப் பிறகு, இதே கதி தான் ஆகுமா?//
//மாசிலா said...
ReplyDeleteஇருந்தாலும் மொதோ மொதோ படிக்கிறச்ச பக்குனு தூக்கி வாரி போட்டுதுபா!//
வாங்க மாசிலா!
நண்பர் ஒருவர் ஜிடாக்கில் என்னடா மொக்கை போடவே ஒனக்குத் தெரியலையே என்று பயங்கரமாகத் திட்ட.....
அதான்... :-))
//ஜீவா (Jeeva Venkataraman) said...
ReplyDeleteஅன்னமாச்சார்யாவின் நிஜ படத்தையே போட்டிருக்கலாமே?!
//
மொதல்ல நானும் அந்தப் படத்தைத் தான் தரவிறக்கினேன். ஆனா...
வேணாங்க ஜீவா..ப்ரம்மம் ஒக்கடே-ன்னு பாடியவரை, மொக்கைப் பதிவுல போட மனசே வரலீங்க!
//ILA(a)இளா said...
ReplyDeleteநான் அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப் படுறது இல்லீங்க.//
வாங்க இளா!
உங்க பொன்னான மனசு தெரியாதா என்ன? :-))
//யாருக்கு வேணுமின்னாலும் குடுங்க//
இளாவுக்கே கொடுங்கப்பா!
//தலைப்புக்கு மட்டுமே பின்னூட்டம்//
அட, அதான் சூடான இடுகைல்லாம் போயிருச்சே! அப்பறம் என்ன?
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteகோவி.கண்ணனுக்கு ஏதோ செய்தி சொல்ல நினைத்ததைப் போல் தோன்றுகிறதே?! :-)//
ஐயோ சாமீ...ஒரு சேதியும் இல்லீங்க! நான் இன்னா கட்சித் தலைவரா நாட்டு மக்களுக்கு காந்தி ஜெயந்தி சேதி சொல்லறதுக்கு? :-))
கோவியின் பதிவு லோகோ-வின் எஃபெக்ட்...அதனால் தான்! :-)
//கேஆர்எஸ்,
ReplyDelete"எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !" தலைப்பு ஈர்த்திருக்கா / பாதித்து இருக்கா ? என்று புரியவில்லை.//
ஈர்த்திருக்கு GK! ஈர்த்திருக்கு!
அதான் மெய்யியல் உண்மையும் இறையியல் ஞான ரகசியமும் கூட!
//எல்லா நிகழ்வுகளும் காலம்(டைம்) என்ற எல்லைக் கடந்த சொல்லில் அடைக்கப்பட்டதில் அடங்கும் என்பது அதன் பொருள்//
மகாபாரதம் கதை தொலைக்காட்சியில் வந்த போது சக்கரம் சுத்துமே! அதுவும் உங்களைப் போலவே தான் சொல்லும்! :-)
அதனால் தான் எனக்கு அந்த ஐயம் தோன்றியது! இன்று நாம் ஆதரிக்கும் கவிஞர்களின் குடும்பங்கள், நாலைந்து தலைமுறைக்கு அப்புறம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது!
//"எதுவும் எவருக்கும் சொந்தமில்லை...அது ஏழுமலையானாக இருந்தாலும் சரி" ஏழுமலைகள் கூட கால ஓட்டத்தில் காணாமல் போக 'காலம்' வரும்.//
மலைகளின் மாற்றமும் ஏற்றமும் தானே புவியியலின் அடிப்படைக் கோட்பாடு!
கண்டு போவதும், காணாமல் போவதும் கால ஓட்டம் என்று கருதித் தான் ஆழ்வார்கள் மலையுளான் என்று குறிக்காது மனத்துளான் என்று குறித்தார்கள் :-)
காணாதவர் கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே!
//Shobha said...
ReplyDeleteAnda 28.58 acres ithanai kalam yaar possessionil irundadu?
Case pottavar Annamayya parambarai yendru nichayamaga theriyuma?//
வாங்க ஷோபா! எது எப்படியோ, பதிவின் நோக்கம் என்னான்னா, இதே நிலைமை பல தலைமுறைகள் கழித்து நாம் ஆதரித்த கவிஞர்களுக்கு வருமா என்ற கேள்வி தான்!
//Yellam Yezhu malayanukke velicham :)//
அதே அதே!
சகலத்துக்கும் மெளன சாட்சி அல்லவா அவன்!
சம்பந்தி பெரிய ஆளா இருப்பார் போல இருக்கே நாளைக்கே நிச்சயம் பண்ணிட வேண்டியதுதான் இனிமே தாங்காது
ReplyDelete:)
சில சந்தேகங்கள்...
ReplyDeleteஅந்த படத்துல இருக்கறவற நாகர்ஜினாவா பாக்கறதா இல்லை அன்னமய்யாவா பாக்கறதா?
அந்த காலத்துல மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மன்னர்கள் கொடுத்த அன்பளிப்ப எல்லாம் இப்ப மக்கள் ஏத்துக்க முடியுமா?
கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதும் புலவர்களுக்கு மன்னர்கள் பரிசலித்ததும் ஒன்றா?
பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் அரசாங்கம் நிலம் அளித்ததாக ஏதாவது சான்று இருக்கிறதா இல்லை கொடுத்தால் அது கணக்கில் வருமா என்று கேட்கிறீர்களா?
மொக்கைனா என்னனு இவருக்கு யாராவது டியூஷன் எடுங்கப்பா...
//
ReplyDeleteILA(a)இளா said...
நான் அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப் படுறது இல்லீங்க. யாருக்கு வேணுமின்னாலும் குடுங்க- தலைப்புக்கு மட்டுமே பின்னூட்டம்
//
ரிப்பீட்
அண்ணே வ.வா சங்கம் என்ன ஆச்சு?
closed for maintenance னு ரொம்ப நாளா வருது??
இதென்ன கூத்து...தாத்தா சொத்து பேரனுக்குத்தான். ஒழுங்கா கோயில் கிட்ட இருந்து பிடுங்கி அன்னமய்யா சந்ததியினருக்குக் குடுங்க. கோயில்கள்ள ஏற்கனவே பெருச்சாளிகள் நெறைய இருக்கு. இதுல இதையும் குடுத்தா முடிஞ்சது கதை.
ReplyDelete// இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு பரவசம் அடைந்த மன்னர் ஸ்ரீகிருஷ்ண தேவராயர் திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை அன்னமாச்சார்யாவுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. //
ReplyDeleteஆக...இது பரிசாக வழங்கப்பட்டது. இத எப்படியும் பயன்படுத்தும் உரிமை அன்னமய்யாவுக்கு உண்டு. அவரு உயில் எதுவும் எழுதீருக்காரா? அதுல ரெண்டு சாச்சிக் கையெழுத்து இருக்கா? அப்படி எதுவும் இல்லைன்னா சொத்து பேரக்கொழந்தைகளுக்குத்தான்.
என்ன சொன்னீங்க? திருமலைநாயக்கரு மகாலா? சந்ததியினர் இருந்திருந்தாங்கன்னா அது அவங்களுக்குத்தான் சொந்தம். தஞ்சாவூர் அரண்மனையில இன்னும் மராட்டிய சர்ஃபோஜியின் வம்சாவளியினர் இன்னும் இருக்காங்க. அது தெரியும்தானே. மைசூர் அரண்மனையிலும் அப்படித்தான். இன்னும் அது உடையாரோட சொத்துதான். கழுகுமலைக் கோயில் எட்டையபுரம் ஜமீந்தார் குடும்பத்தோட பராமரிப்புலதான் இருக்கு. கோயில் அவங்களுக்குத்தான் சொந்தம். ஜமீந்தார் பதிவியும் பவிசும் அவங்களுக்கு இல்லைன்னாலும் கோயில் அந்தக் குடும்பத்தினரோட பராமரிப்புதான்.
ஆகையால சொத்த மொதல்ல திருப்பதி கோயில்ல இருந்து பிடுங்கி....உண்மையான வாரிசுகள் கைல குடுக்கலைன்னா....கருவரை நுழைவுப் போராட்டம் நடத்தப்படும்.
// வெட்டிப்பயல் said...
சில சந்தேகங்கள்...
பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் அரசாங்கம் நிலம் அளித்ததாக ஏதாவது சான்று இருக்கிறதா இல்லை கொடுத்தால் அது கணக்கில் வருமா என்று கேட்கிறீர்களா? //
கிண்டலாயிருக்கா? பாரதியாருதான் சோத்துக்கில்லாமச் செத்தாரே. அப்புறம் என்னத்த நெலம் குடுக்குறது. பாரதிதாசனுக்குத் தெரியலை. ஒருவேளை வீடு கீடு இருந்திருந்தா...அரசாங்கம் அவங்க சந்ததியினருக்கு நல்ல விலை கொடுத்து...பொதுவுடைமையாக்கலாம். அதையும் கூட நீதிமன்றத்துல தடுக்க முடியும்னுதான் தோணுது.
//மகேந்திரன்.பெ said...
ReplyDeleteசம்பந்தி பெரிய ஆளா இருப்பார் போல இருக்கே நாளைக்கே நிச்சயம் பண்ணிட வேண்டியதுதான்//
வாங்க மகேந்திரன்
அதில் என்ன சந்தேகம்? எவ்ளோ பெரிய ஆளு அவரு! சீக்கிரம்...அது என்ன நாளைக்கே?
இப்ப, இங்கனவே நிச்சயம் பண்ணிடுங்க! :-))
//G.Ragavan said...
ReplyDeleteஇதென்ன கூத்து...தாத்தா சொத்து பேரனுக்குத்தான். ஒழுங்கா கோயில் கிட்ட இருந்து பிடுங்கி அன்னமய்யா சந்ததியினருக்குக் குடுங்க//
ஜிரா
இது என்ன MC??
தாத்தா சொத்து பேத்திக்கு கிடையாதா?? பேரனுக்கு மட்டும் தானா?
//கோயில்கள்ள ஏற்கனவே பெருச்சாளிகள் நெறைய இருக்கு//
ருத்திராட்சப்/துளசிமணிப் பூனைகள் இருக்கும் போது பெருச்சாளி தொல்லை எப்படி இருக்கும் ஜிரா? :-))
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteமொக்கைனா என்னனு இவருக்கு யாராவது டியூஷன் எடுங்கப்பா...//
மாஸ்டர்...நீங்களே எடுங்க மாஸ்டர்!
//அந்த படத்துல இருக்கறவற நாகர்ஜினாவா பாக்கறதா இல்லை அன்னமய்யாவா பாக்கறதா?//
பார்க்கும் பார்வை தானய்யா பாலாஜி!
நமக்குத் தான் சக மனிதர்களைப் பார்க்கும் போது அவர்கள் செய்த நல்லது கண்ணுக்குத் தெரியாதே! நாகார்ஜூனாவைப் படத்தில் பார்க்கும் போது மட்டும் தானே அன்னமய்யா-ன்னு நினச்சிப்போம். வெளியே வந்தவுடன் ரொமான்ஸ் ஹீரோ-ன்னு தானே தோணும்! :-)
அது சரி! வீட்டில் கண்ணன் படத்துக்குப் பதில் என்.டி.ஆர் படத்தை வச்சி, வணங்க எத்தனை பேர் ரெடி?
//அந்த காலத்துல மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மன்னர்கள் கொடுத்த அன்பளிப்ப எல்லாம் இப்ப மக்கள் ஏத்துக்க முடியுமா?//
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத என்பது எல்லாம் கிடையாது!
மக்கள் ஏற்றுக் கொண்டவர்கள் தானே மன்னர்கள்! அதுவும் ராஜராஜ சோழன், கிருஷ்ண தேவ ராயர் போன்றவர்கள்!
இதுக்கு அடிப்படை அரசியல் சட்டம்.
நாலு தலைமுறைக்குப் பின் சட்டங்கள் திருத்தப்படலாம். அப்போ நம் கவிஞர்களின் குடும்பங்களுக்கு, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு அளித்த கொடைகள் கதி என்ன?
//பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் அரசாங்கம் நிலம் அளித்ததாக ஏதாவது சான்று இருக்கிறதா இல்லை கொடுத்தால் அது கணக்கில் வருமா என்று கேட்கிறீர்களா?//
ஆமா..கொடுத்தால் கணக்கில் வருமா? கண்டிப்பா பட்டா கொடுப்பாங்க! அதே போல தான் அப்போ பட்டயம் கொடுத்திருக்காங்க! ஆனா நெலமை? :-)
//மங்களூர் சிவா said...
ReplyDeleteஅண்ணே வ.வா சங்கம் என்ன ஆச்சு?
closed for maintenance னு ரொம்ப நாளா வருது??//
இளா..
சிவா கேக்குறாருல்ல? சொல்லுங்கப்பு சொல்லுங்க!
//kaverishankar said...
ReplyDeleteஇதென்ன கூத்து...தாத்தா சொத்து பேரனுக்குத்தான். ஒழுங்கா கோயில் கிட்ட இருந்து பிடுங்கி அன்னமய்யா சந்ததியினருக்குக் குடுங்க.//
ஜிரா
நீங்க kaverishankar ன்னு இன்னொரு Id வைச்சிருக்கீங்களா?
இல்லீன்னா
காவேரிசங்கரரே! - ஜிராகவன்-னு ரொம்ப நாளா எழுதறது நீங்க தானா?
:-)))
ஒரே மாயையால்ல இருக்கு!
//மகாபாரதம் கதை தொலைக்காட்சியில் வந்த போது சக்கரம் சுத்துமே! அதுவும் உங்களைப் போலவே தான் சொல்லும்! :-)//
ReplyDeleteகேஆர்எஸ்,
மகாபாரதம் முன்பு ஒலி/ஒளி (பர)பரப்பானபோது அந்த வசனங்களுக்காகவே அதை பார்த்து இருக்கிறேன். இந்தியில் அந்த தொடருக்கு ஒரு இஸ்லாமிய வசனகர்த்தாவின் வசனங்களுக்கு, தமிழில் வெங்கட் மிக அழகான மொழிப்பெயர்ப்பு செய்திருப்பார். (துக்ளக்கில் அதே வாரத்தில் வெளிவந்திருக்கிறது) பின்னனி குரலும் அசரிரி போன்று இருக்கும். எனது 'காலம்' தலைப்பிற்கு அதுதான் காரணம் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை. :)
எந்த உயரிய தத்துவமாக இருந்தாலும் காலம் தான், அது எவ்வளவு காலம் நிலைபெற்று இருக்கும் என்பதை தீர்மாணிக்கிறது. நிகழ்வுகள், நடப்புகள், நம்பிக்கைகள் எல்லாமும் அதில் தோன்றி அதில் அடங்கி மீண்டும் எழும் என்றிருந்தால் காலச்சுழலில் திரும்பவும் வரும் என்றும் என்னளவில் நினைக்கிறேன்.
எல்லையற்று இருந்து கொண்டு காலம், எதற்கும் எல்லைகளை நிர்ணயிக்கிறது. இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன ? காலம் கவலைப்படுவதில்லை. கோட்பாடுகள் எல்லாம் காலத்தில் அடக்கம். ஆனால் காலத்திற்கு ஆன கோட்பாடு என்று நான் நினைப்பது "அது என்றுமே இருக்கிறது" என்பதைத்தான்
:))
//கழுகுமலைக் கோயில் எட்டையபுரம் ஜமீந்தார் குடும்பத்தோட பராமரிப்புலதான் இருக்கு. கோயில் அவங்களுக்குத்தான் சொந்தம். //
ReplyDeleteஒப்புக்க முடியாது ஜிரா! ஒப்புக்க முடியாது!
கோவில் மக்களுக்காக ஏற்பட்ட ஒரு அமைப்பு! அதை ஜமீன் கட்டிக் கொடுத்து வேணும்னா இருக்கலாம்.
ஆனா அதுக்காக சொந்தம் எல்லாம் கொண்டாட முடியாது! எப்போ கட்டி முடிச்சப்பறம் முருகனைக் கொண்டாந்து கோயில்லுக்குள்ளாற வச்சாங்களோ, அப்பவே அது பொது சொத்து ஆயிடிச்சு!
இதே போலத் தான் தில்லையில் தீட்சிதர்களும் சொந்தம் கொண்டாடுறாங்க. ஒப்புக்கறோமா?
நீங்க பெங்களூர்-ல ஃபிகருங்க வெயில்ல நிக்குதே-ன்னு மனசிரங்கி காலேஜ் வாசல்ல பஸ் ஸ்டாண்ட் கட்டிக் கொடுத்திருக்கீங்க! ஆனா அதுக்காக பஸ் ஸ்டாண்டு ஒங்களுக்குச் சொந்தமாயிடுமா? :-)
பஸ் ஸ்டாண்டை ஜிரா தான் பராமரிக்கணும்னு உடனே நீங்க கெளம்பிற மாட்டீங்க? :-))
//ஆகையால சொத்த மொதல்ல திருப்பதி கோயில்ல இருந்து பிடுங்கி....உண்மையான வாரிசுகள் கைல குடுக்கலைன்னா....கருவரை நுழைவுப் போராட்டம் நடத்தப்படும்//
ReplyDeleteஅப்படிப் போடுங்க அருவாள!
என்னடா சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தேன்...:-)
நம்ம ஜிராவுக்கு ரொம்ப நாளா திருமலைக் கருவறையில் நுழைந்து, பெருமாளைக் கட்டி அணைத்துச் சேவிக்கணும்னு ஒரு காதல்!
அதை நிறைவேத்திக்க இப்படி எல்லாம் ரூட் போடறாரு மனுசன்!
//கிண்டலாயிருக்கா? பாரதியாருதான் சோத்துக்கில்லாமச் செத்தாரே. அப்புறம் என்னத்த நெலம் குடுக்குறது//
பாரதியார் குடும்பத்துக்கு அரசு கொடுத்த நிலத்தைச் சொல்றாரு வெட்டி!
//பாரதிதாசனுக்குத் தெரியலை. ஒருவேளை வீடு கீடு//
பாரதிதாசன் துணைவியார் பழனியம்மாளுக்கும் அரசு நிலம் வழங்கி உத்தரவிட்டது!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//கழுகுமலைக் கோயில் எட்டையபுரம் ஜமீந்தார் குடும்பத்தோட பராமரிப்புலதான் இருக்கு. கோயில் அவங்களுக்குத்தான் சொந்தம். ////
கழுகுமலைய விடுங்க. திருமலைக்கு வருவோம். நான் எவ்வளவோ சொன்னேன். அதையெல்லாம் விட்டுட்டு கழுகுமலைல குற்றம் சொல்ல வந்துட்டீங்க. வசதியா தஞ்சாவூரையும் மைசூரையும் ஒதுக்கீட்டீங்க.
நிலபுலன் யாருக்குக் குடுத்தது? அன்னமய்யாவுக்கு. யாரு குடுத்தது? அரசரு. குடுத்தப்புறம் அது அரசருக்குச் சொந்தமில்லை. அன்னமய்யாவுக்குச் சொந்தம். ஏன் குடுத்தாரு. பாட்டுல மயங்கிக் குடுத்தாரு. ஆக அந்தச் சொத்து அன்னமய்யாவின் சுயசம்பாத்யம். அதை எப்படியும் செலவிட அன்னமய்யாவுக்கு உரிமையுண்டு.
அன்னமய்யா...அத கோயிலுக்கு எழுதி வெச்சாரா? அதுக்கு ஆதாரம் எதுவும் இருக்கா? உயிலு குயிலு? அப்படி அன்னமய்யா கோயிலுக்கு எழுதி வெச்சிருந்தா நீங்க சொல்றது சரி. ஆனா கோயிலுக்கு அவர் எழுதி வெச்ச மாதிரி தெரியலையே. அதுக்கு ஆதாரம் இருக்குற மாதிரியும் தெரியலையே. அன்னமய்யா பாட்டுல அனைத்தும் இறைவனுக்கேன்னு சொல்லீருக்காருன்னு புரட்டு விடாதீங்க.
அப்படி அன்னமய்யா இப்படித்தான் இந்தச் சொத்தைப் பயன்படுத்தனும்னு உரிமை சொல்லாததால அது அவருடைய வழிவந்தவர்களுக்கு உரிமையாகுது.
இதுக்கு விளக்கம் சொல்லுங்க. கழுகுமலைக்கு அப்புறம் போவோம்.
அட ஆண்டவா கிடேசன் பார்க் ஃபண்ட் ரெய்ஸ்க்குஅவசர அவசரமா கோவி கண்ணனுக்கு ஒரு மெயில் தட்டிட்டனப்பா:-))
ReplyDelete//G.Ragavan said...
ReplyDeleteகழுகுமலைய விடுங்க//
விடமாட்டோம்! :-)
//நான் எவ்வளவோ சொன்னேன். அதையெல்லாம் விட்டுட்டு .... வசதியா தஞ்சாவூரையும் மைசூரையும் ஒதுக்கீட்டீங்க//
அண்ணே, தஞ்சாவூரும், மைசூரும் அரண்மனைங்கண்ணே! ராசா வூட்டுல வாழ்ந்த எடம்!
ஆனா கோயில் அப்படி இல்லீங்கண்ணே! பல லட்சம் மக்கள், ஒன்றன் பின் ஒன்றான தலைமுறைகள் வந்து வழிபட்ட இடம்!
அதுனால தான் தற்சமயத்துக்கு அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, கோயிலை மட்டும் எடுத்துக்கிட்டோங்கண்ணே!
//நிலபுலன் யாருக்குக் குடுத்தது? அன்னமய்யாவுக்கு. யாரு குடுத்தது? அரசரு. குடுத்தப்புறம் அது அரசருக்குச் சொந்தமில்லை. அன்னமய்யாவுக்குச் சொந்தம். ஏன் குடுத்தாரு. பாட்டுல மயங்கிக் குடுத்தாரு. ஆக அந்தச் சொத்து அன்னமய்யாவின் சுயசம்பாத்யம்//
லாஜிக்கு எல்லாம் நல்லாத் தான் இருக்கு ஜிரா. ஆனா கவனிக்கவும் "திருப்பதி-திருமலையில் 28.58 ஏக்கர் நிலத்தை"
இதை வேற எங்கோ ஒரு கிராமத்தில் கொடுத்திருந்தா பிரச்சனை வேற!
இங்கன மலை மேல, கோவிலும் கோவில் சார்ந்த இடமும் கொடுத்ததால் வந்த பிரச்சனை! அதுனால தான் உச்ச நீதி மன்றம் சொத்தை மீண்டும் அரசுக்கே கொடுத்து விட்டது!
//அப்படி அன்னமய்யா இப்படித்தான் இந்தச் சொத்தைப் பயன்படுத்தனும்னு உரிமை சொல்லாததால அது அவருடைய வழிவந்தவர்களுக்கு உரிமையாகுது.//
இந்திரா காந்தி, அரசர் மான்யம், அது இதுன்னு பலதை ஒழிச்சாங்க! அதையே தட்டிக் கேட்க முடியலை!
இங்க மலைமேல் இருக்கும் நிலபுலன்களைச் சர்வே எடுத்து, குளம் அதுக்குள்ள வருது, அருவி அதுக்குள்ள வருது...இனிமே திருமஞ்சனத் தீர்த்தம் எடுத்தாக்கா எங்களுக்கு ராயல்டி கட்டணும்-னு ஒரு சாரார் சொன்னாங்கன்னா அப்போ என்ன பண்ணுவீங்க!
Hypothetical கேள்வி தான். ஆனால் மேலாண்மையில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் கருத வேண்டும் அல்லவா? என்ன சொல்லறீங்க?
அரசர், அன்பருக்கு உணர்ச்சி மேலீட்டால் பக்தியுடன் கொடுத்த போது, இது எல்லாவற்றையும் உத்தேசித்திருக்க முடியாது!
ஆனா காலத்துக்கு ஏற்றவாறு அதில் திருத்தம் செய்வது தவறாகி விடாது. மாற்று நிலங்கள் வழங்கி ஈடு கட்டலாம்! ஆனால் மலையிலேயே வேண்டும் என்று அடம் பிடிக்க எல்லாம் முடியாது!
அதனால் தான் முற்காலம் தற்காலம் பிற்காலம் எல்லாம் உத்தேசித்து, பொதுவான நோக்கம் தடையின்றி நடக்க, தனிப்பட்ட நோக்கத்தைப் பின்னுக்குத் தள்ளியிருக்கு நீதிமன்றம்-னு நான் நினைக்கிறேன்!
சரி...அதெல்லாம் விடுங்க! பதிவின் நோக்கம் என்ன? காலத்தால் மாறும் கொடைகள்! இது போல பாரதிக்கோ பாரதிதாசன் குடும்பத்தார்க்கோ நானூறு ஆண்டுக்குப் பின் நடந்தால் என்ன சொல்லுவீங்க? பொதுநலம் கருதி, தமிழ் வாழ வந்த பாரதிக்குத் தரப்பட்ட கொடையை, வருங்கால அரசு ஒன்று எடுத்துக்கிட்டா?
அதுக்குப் பதில் சொல்லுங்க!
/இதை எதிர்த்து அன்னமாச்சார்யா வம்சாவளியைச் சேர்ந்த டி.கே. """""ராகவன்""""" 2007 ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்//
ReplyDeleteஓ...இப்ப புரியுது
அந்த ராகவன் நீங்க தானா ஜிரா?
:-)))
அப்படின்னா...300 கோடி சொத்து உங்களுக்குத் தான் ஜிரா! உங்களுக்குக் கொடுத்தா உங்க நண்பர்கள் எங்களுக்கும் அதில் பங்கு உண்டே! ஜாலி தான்! :-)
பந்த், உண்ணாவிரதம் எதாவது செய்யலாமா? :))
ReplyDeleteராமானுஜர்- ராமர் பாலம் பதிவுக்குப் பின், மீண்டும் ஒரு ஆஅப்பிள்-ஆரஞ்சு பதிவு!
ReplyDeleteஎன்ன ஆயிற்று ரவி!@
அடுத்த தலைமுறைக்கு என்ன ஆகும் என்பதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டுமே!
கடவுளோட சொத்துல தான் நாமே வாழரோம். அதை கடவுளுக்கே திருப்பி கொடுக்க இந்த மனிதர்களுக்கு ஏன் தான் மண்ணாசையொ தெரியலை. இதற்கு இவ்வளவு தாமதமா?
ReplyDelete