Friday, September 14, 2007

காங்கிரஸ்காரர் கனவை நனவாக்கிய திமுக-காரர் - தமிழ்நாடு தீர்மானம்!

அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று (Sep 15th). நூற்றாண்டு விழாவுக்கு ஓராண்டு முன்னோடி (99).
அவர் இன்னும் சற்று நாள் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதி எப்படி ஆகி இருக்குமோ இல்லையோ, நிச்சயம் இப்படி ஆகியிருக்காது என்று சொல்வாரும் உண்டு!

அவர் பிறந்த நாள் அஞ்சலியாக இந்தப் பதிவு! - அவர் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டசபை தீர்மானத்தைப் பார்க்கலாம் வாங்க!

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம் என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு
- இப்படி தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பாரதி கூவி விட்டுப் போனாலும், தமிழ்நாடு என்னவோ மதறாஸ் ராஜதானியாகவே இருந்தது!

இனி, அந்த நாள் ஞாபாகம் - பத்திரிகைக் குறிப்பை, History Channel போல அப்படியே பார்ப்போம்! நன்றி - மாலை மலர்!



"தமிழ்நாடு" பெயர் மாற்றக் கோரிக்கை. காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்; 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்
மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் அழைக்கப்பட்டது.

"சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும்" என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957ல் உண்ணா விரதம் இருந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர்.

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.
விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.

காமராஜர் பதில்
இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார். மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார்.
"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே" என்று அண்ணா கூறினார்.

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.
நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.
அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 76_வது நாளில் (1957 அக்டோபரில்) அவர் மரணம் அடைந்தார்.

தமிழில் "தமிழ்நாடு" ஆங்கிலத்தில் "மெட்ராஸ்"
இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின.
இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.
இதுபற்றிய அறிவிப்பை 24_2_1961_ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம்.

இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும்.

எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.
இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.

தி.மு.க. வலியுறுத்தல்
எனினும், "ஆங்கிலத்திலும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.


18_7_1967
"தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது

"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ்நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது.

சட்டசபையில் தீர்மானம்:
இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18_7_1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார்.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக்கூடாது" என்று கூறினார்.
ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார்.

தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:
"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக _ உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந் தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.
பாரதிக்கு தாய்நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா?

முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக்கொண்டேன்.
தமிழ்நாடு என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."
இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.

அண்ணா பதில்
விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:
"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.

இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ்நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் "டமில்நாட்" (தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி. தமிழ ரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.

மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.
சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

"தமிழ்நாடு வாழ்க"
பின் அண்ணா எழுந்து, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.
எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.
சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.

25 comments:

  1. நல்ல பதிவு. அந்த நாள் நிகழ்வுகளை என் போன்ற இளைஞர்கள் தெரிந்து கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்ததிற்கு நன்றி அண்ணா. (நிகழ்வுக்குக் காரணமான அந்த அண்ணாவுக்கும் அதைத் தந்த இந்த அண்ணாவுக்கும்!)

    ஏன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் பெயர் இன்னும் அப்படியே இருக்கிறது?

    சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதா?

    ReplyDelete
  2. நல்ல பதிவு!

    தமிழ் நாடு வாழ்க!
    தமிழ் நாடு வாழ்க!
    தமிழ் நாடு வாழ்க!


    (படிக்கும்போது மெய்சிலிர்க்கத்தான் செய்தது)

    ReplyDelete
  3. அடடா இது ரவிசங்கரின் பதிவுதானா?:-))
    ஆன்மீகப் பதிவுகளை மட்டுமே எழுதுபவர் என நினைத்திருந்தேன்.:-))

    முதலில் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

    தமிழகத் தமிழர்களால் மட்டுமல்ல , கடல்கடந்து வாழும், குறிப்பாக ஈழத் தமிழர்களாலும் தலைவராக மதிக்கப்படும் உன்னத தலைவன். வாழ்க அவர் புகழ்.

    ரவி, நல்ல அருமையான பதிவு. பல வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்டேன்.

    இதில் முன்னாள் பிரதமர் நேருவையும் பாராட்ட வேண்டும். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க நேரு விரும்பாவிட்டாலும் இச் சிக்கலை அவர் ஒரு சிறந்த தலைவராக[statemanship] கையாண்டார் என இலங்கையின் அரசியல் அறிஞர் பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் தெரிவித்திருந்தார்.

    நேரு அவர்கள் மொழிவாரி மாநிலங்கள் அமைக்க ஒப்புக்கொண்டது போல இலங்கையின் அன்றைய சிங்களத் தலைவர்களும் செயற்பட்டிருந்தால் இலங்கையில் இன்று இனப் பிரச்சனை இல்லாது இருந்திருக்கும். நேருவிடமிருந்தும், இந்தியாவிடமிருந்தும் சிங்களத் தலைவர்கள் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டனர் எனவும் பேராசிரியர் வில்சன் எழுதியிருந்தார்.

    பதிவுக்குத் தொடர்பில்லாவிடினும், இந்தியாவிடமிருந்து சிங்களத் தலைவர்கள் கற்றுக் கொள்ளாத்தை பேராசிரியர் வில்சன் சொன்னதை இங்கே உங்கள் தகவலுக்காத் தருகிறேன்.

    ...This record of Ceylon's Sinhalese leadership is unimpressive...Neighbouring India had passed through the convulsions of partition. An attempt was made to impose Hindi as the only official language, which Jawaharlal Nehru resisted. In 1955 riots and violence compelled Nehru, much against his will, to create the separate Telugu-speaking state of Andhra Pradesh; the next year he constituted a States Reorganisation Commission to redraw the linguistic map of India. India during this period was threatened by secessionist movements(e.g.the D.M.K) and plagued by internal strife. Yet the country's rulers were able to stabilise the polity and keep it unified. If there was a model Ceylon could have emulated, it was neighbouring India... The pre-Independence struggle in India left Sinhalese leaders unaffected. The deliberations of India's constituent assembly; the fast to death of Potti Sri Ramulu and the subsequent creation of the linguistic Telugu state of Andra Pradesh; the appointment of the States Reorganisation Commission in 1955 -- all these virtually went unnoticed in the local press. Indian national leaders such as Gandhi and Nehru did not excite admiration among the Sinhalese bourgeoisie or Sinhalese rural households. Most Ceylon Tamils looked on India's national heroes as household gods.
    [Dr.Alfred Jeyaratnam Wilson, The Break-Up of Sri Lanka, p.92]

    ReplyDelete
  4. நல்ல தகவல். அறியக் கொடுத்தமைக்கு நன்றி ரவி.

    // இலவசக்கொத்தனார் said...
    ஏன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் பெயர் இன்னும் அப்படியே இருக்கிறது? //

    ஒருவேளை அது கட்டப்படும் பொழுதே அந்தப் பெயரில் கட்டப்பட்டதனால் இருக்கலாம்.

    // சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதா? //

    ஆம் என்றே நினைக்கிறேன். தியாகி சங்கரலிங்கனார் என்று எங்கேயே படித்திருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம். நினைவுச் சின்னம் விருதுநகரிலேயே கூட இருக்கலாம்.

    பொட்டி ஸ்ரீ ராமுலு என்றால் ஆந்திராவில் எல்லாருக்கும் தெரியும். சங்கரலிங்கனார் என்றால் தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்!!!! தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு.

    ReplyDelete
  5. //இலவசக்கொத்தனார் said...
    நல்ல பதிவு. அந்த நாள் நிகழ்வுகளை என் போன்ற இளைஞர்கள் தெரிந்து கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம்//

    இது வரைக்கும் சரி!

    //அப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்ததிற்கு நன்றி அண்ணா. (நிகழ்வுக்குக் காரணமான அந்த அண்ணாவுக்கும் அதைத் தந்த இந்த அண்ணாவுக்கும்!)//

    யோவ் கொத்சு அண்ணா!
    நான் என்னமோ நேர்ல பாத்தா மாதிரியும் அதை இளைஞர் ஒங்களுக்கு சொல்றாப் போலவும் இருக்கா? - என் போன்ற இளைஞர்களுக்கு நியாயமா இதெல்லாம் நீங்க தான் சொல்லோனும்! நீங்க சொல்லாததால நான் போயி ஆர்கைவ்-ல தேடி எடுத்தேன்!

    //ஏன் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் பெயர் இன்னும் அப்படியே இருக்கிறது?//

    ஹிஹி...இது கொஞ்சம் ஓவர்! :-)
    மபொசி உணர்ச்சி வேகத்துல சொல்லியிருப்பாரு!

    ///சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதா?//

    ஜிரா பதிலைப் பாருங்க!

    ReplyDelete
  6. //நாமக்கல் சிபி said...
    நல்ல பதிவு!
    தமிழ் நாடு வாழ்க!
    தமிழ் நாடு வாழ்க!
    தமிழ் நாடு வாழ்க!
    (படிக்கும்போது மெய்சிலிர்க்கத்தான் செய்தது)//

    நன்றி தல!
    மெய்சிலிர்க்கிறா மாதிரி எல்லாம் இப்ப சட்டசபையில் பேசறாங்களா என்ன சிபி? :-)

    ReplyDelete
  7. //மெய்சிலிர்க்கிறா மாதிரி எல்லாம் இப்ப சட்டசபையில் பேசறாங்களா என்ன சிபி? :-)//

    மவனே வகுந்திருவேன். வெளிய வாடா பாத்துக்கறேன்.

    இப்படி எல்லாம் பேசினா மெய் சிலிர்க்காவது (பயத்திலாவது)? :)))

    ReplyDelete
  8. சிறப்பான பதிவு.
    உங்கள் பங்களிப்புக்கு, கட்டுரைக்கு பாராட்டு.
    வாழ்க வளமுடன் மகிழ்வுடன்
    ராதாகிருஷ்ணன்
    ஹூஸ்டன்
    செப்டம்பர் 15, 2007

    ReplyDelete
  9. நிறைய விஷயங்கள் இந்த பதிவு மூலமாக அறியப்பெற்றேன்!!
    சூப்பர் பதிவு!

    வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  10. கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படங்களெல்லாம் போட்டு கலக்கிட்டீங்க கே.ஆர்.எஸ்.

    ReplyDelete
  11. //மவனே வகுந்திருவேன். வெளிய வாடா பாத்துக்கறேன். இப்படி எல்லாம் பேசினா மெய் சிலிர்க்காவது (பயத்திலாவது)? :)))//

    நல்ல காமெடி.. உண்மையாக இதைத்தான் முன்பே சொல்லியிருக்க வேண்டும்..

    ReplyDelete
  12. //வெற்றி said...
    அடடா இது ரவிசங்கரின் பதிவுதானா?:-))
    ஆன்மீகப் பதிவுகளை மட்டுமே எழுதுபவர் என நினைத்திருந்தேன்.:-))//

    வவாச பதிவுகள் ஒரு பக்கம்-னா இதுவும் இன்னொரு பக்கம் வெற்றி! :-)

    //ரவி, நல்ல அருமையான பதிவு. பல வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்டேன்//

    அண்ணாவைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களைச் சரியாக அறிந்து கொள்வதே நல்ல அஞ்சலி; அதான் இப்பதிவை இட்டேன் வெற்றி!

    //நேரு அவர்கள் மொழிவாரி மாநிலங்கள் அமைக்க ஒப்புக்கொண்டது போல இலங்கையின் அன்றைய சிங்களத் தலைவர்களும் செயற்பட்டிருந்தால் இலங்கையில் இன்று இனப் பிரச்சனை இல்லாது இருந்திருக்கும்//

    இதை என் இன்னொரு ஈழத்து நண்பரும் சொல்லக் கேட்டிருக்கேன் வெற்றி! நேருவுடன், படேல் போன்ற தலைவர்களும் கருத்து மாறுபாடுகள் தாண்டி ஒத்துழைப்பு கொடுத்தனர். அதனால் பல சிக்கல்களைச் சமாளிக்க முடிந்தது! இலங்கையில் அப்போது யார் அதிபர் என்று அறியேன்! (பண்டாரநாயக-வோ?)
    ஓரளவு புரிந்து கொண்ட அதிபர்-னு யாராச்சும் இருக்காங்களா வெற்றி?

    //பதிவுக்குத் தொடர்பில்லாவிடினும்//

    பதிவுக்குத் தொடர்பு இருக்கு வெற்றி! ஒரு தேசத்தின் வரலாறு இன்னொரு தேசத்துக்குப் படிப்பினை. இலங்கை அதிபர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தான் தவறு போல! வேறென்ன சொல்ல!

    ReplyDelete
  13. Wow, ithu pathi ippo thaan enakku theriyum. romba unarchi poorvama iranthathu :) thanks for the info!

    ReplyDelete
  14. //G.Ragavan said...
    நல்ல தகவல். அறியக் கொடுத்தமைக்கு நன்றி ரவி.

    // சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதா? //
    ஆம் என்றே நினைக்கிறேன். தியாகி சங்கரலிங்கனார் என்று எங்கேயே படித்திருக்கிறேன்.//

    நினைவுச் சின்னம் எழுப்பப்படவில்லை போலும். அவருக்குச் சிலை அமைக்கப்பட்டு, July 17 - ‘Thiyagigal Dhinam’ Thiyagi Sankaralinganar - அன்று அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படுவதாக அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது!
    http://www.tntdpc.com/government/information_publicity1.php

    //பொட்டி ஸ்ரீ ராமுலு என்றால் ஆந்திராவில் எல்லாருக்கும் தெரியும். சங்கரலிங்கனார் என்றால் தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்!!!! தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு//

    அவர்க்கோர் குணமுண்டு தானே ஜிரா?
    அதற்கோர் குணமுண்டு என்று ஆதங்கம்/கோபமாச் சொல்லறீங்களா?

    ReplyDelete
  15. //R. said...
    சிறப்பான பதிவு.
    உங்கள் பங்களிப்புக்கு, கட்டுரைக்கு பாராட்டு.//

    நன்றி ராதாகிருஷ்ணன். பழைய மாலை மலர் கோப்புகளில் இருந்து சில்வற்றைப் பகிர்ந்து கொண்டேன்! அவ்வளவே!

    ReplyDelete
  16. //CVR said...
    நிறைய விஷயங்கள் இந்த பதிவு மூலமாக அறியப்பெற்றேன்!!//

    நன்றி CVR! நம்மைப் போன்று அறியாத தலைமுறைக்கு,
    அறிந்த தலைமுறை சொல்ல வேண்டும்!
    இங்கு நாமே நமக்குச் சொல்லிக் கொள்கிறோம்! பரவாயில்லை.

    பதிவுலகச் சண்டைகளுக்குப் பதிலாக, இப்படி பல அரிய அறியாத் தகவல்களைத் திரட்டித் தர வேண்டும் தமிழ்ப் பற்றாளர்கள்!

    ReplyDelete
  17. //மதுரையம்பதி said...
    கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படங்களெல்லாம் போட்டு கலக்கிட்டீங்க கே.ஆர்.எஸ்.//

    மெளலி சார்
    ஆனந்த விகடன் அப்போ 40 பைசா!

    படத்துல கவனிச்சீங்களா யாராச்சும்? :-))

    ReplyDelete
  18. //இரண்டாம் சாணக்கியன் said...
    //மவனே வகுந்திருவேன். வெளிய வாடா பாத்துக்கறேன். இப்படி எல்லாம் பேசினா மெய் சிலிர்க்காவது (பயத்திலாவது)? :)))//

    நல்ல காமெடி.. உண்மையாக இதைத்தான் முன்பே சொல்லியிருக்க வேண்டும்..//

    :-)))

    ReplyDelete
  19. //Dreamzz said...
    Wow, ithu pathi ippo thaan enakku theriyum. romba unarchi poorvama iranthathu :) thanks for the info!//

    வாங்க அண்ணாத்த!
    உணர்ச்சிப் பூர்வமா இல்லாக்காட்டினா கூட பரவாயில்ல! ஆனால் நம் தலைமுறை நிச்சயம் அறிய வேண்டிய தகவல்!

    ReplyDelete
  20. தமிழ் நாடு வாழ்க!
    தமிழ் நாடு வாழ்க!
    தமிழ் நாடு வாழ்க!

    ReplyDelete
  21. //ILA(a)இளா said...
    தமிழ் நாடு வாழ்க!
    தமிழ் நாடு வாழ்க!
    தமிழ் நாடு வாழ்க!//

    சிபிக்கு அடுத்து நீங்களா இளா? அப்படியே சட்டசபைக்கும் போயிடுவீங்க போல! :-)

    ReplyDelete
  22. இப்ப இருக்கும்
    அரசியல்வா(ந்)திகளும்
    அறிய வேண்டிய
    அரிய தகவல்.

    அன்புடன், கி.பாலு

    ReplyDelete
  23. இலவசக்கொத்தனார் said...
    // சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதா? //
    G.Ragavan said...
    ஆம் என்றே நினைக்கிறேன். தியாகி சங்கரலிங்கனார் என்று எங்கேயே படித்திருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் சொல்லலாம். நினைவுச் சின்னம் விருதுநகரிலேயே கூட இருக்கலாம்.//
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //நினைவுச் சின்னம் எழுப்பப்படவில்லை போலும்.//

    உண்மை தான் விருது நகரில் தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னமோ,
    சிலையோ இல்லை.
    அத்துடன் இந்த தலைமுறையினருக்கு
    அவரைப் பற்றிய அறிதலும் இல்லை என்பதும் உண்மையே.
    சென்னையில் வசிக்கும் எனது சொந்த ஊர் விருதுநகராகும்.

    ReplyDelete
  24. //மடல்காரன் said...
    இப்ப இருக்கும்
    அரசியல்வா(ந்)திகளும்
    அறிய வேண்டிய
    அரிய தகவல்//.

    அறிஞ்சி தான் இருப்பாங்க!
    உணர்ந்தாங்களான்னு தான் தெரியலை! :-(

    ReplyDelete
  25. //ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
    உண்மை தான் விருது நகரில் தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னமோ,சிலையோ இல்லை//

    தகவலுக்கு நன்றி புஷ்பலதா!
    சங்கரலிங்கனாருக்கு சிலை தான் இருக்கு, நினைவுச் சின்னம் இல்லைன்னு அரசுக் குறிப்பும் சொல்லுது. அந்தச் சுட்டி தமிழக அரசு தகவல் துறைச் சுட்டி!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP