திருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா? - 2
என்னவென்றே புரியவில்லை மூவருக்கும்! நெருக்குதல் அதிகரிக்க அதிகரிக்க, மூவருக்கும் மூச்சு முட்டுகிறது! அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது! திருட்டுப் பயமோ திருக்கோவிலூரில்? முந்தைய பதிவு இங்கே!
யாருப்பா அந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான்? வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல் வருவது? ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே! கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே!
ஓசையும் இல்லை! ஒளியும் இல்லை!
பேய்: இது ஏதோ மனித வாசனை மாதிரியே தெரியல்லையே! மிருகமும் இல்லை! விளக்கு கிடைச்சாலாச்சும் யாருன்னு கண்டுபிடிக்கலாம்! இந்த அர்த்த ஜாமத்தில் யாரிடம் போய் விளக்கு கேட்பது?
(ஹூம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க! ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே! என்ன செய்ய :-)
பூதம்: ஹூம்! இது தான் சரி! நம் யோகத்தில் நாமே ஒரு விளக்கேற்றலாம்!
விளங்க முடியாததைக் கூடி விளக்கிக் காட்டுவது தானே விளக்கு! - அதுக்குத் தானே விளக்கு-ன்னே பெயர்!
நாமே ஏற்றலாம்! பார்ப்போம் ஏதாச்சும் தெரிகிறதா என்று! சரி, எதை வச்சி ஏற்றுவது?
அகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை!
பொய்கை: இல்லை இல்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
இல்லை-யை வைத்துக் கொண்டு ஏதாச்சும் ஏற்ற முடியுமா? முடியும்!!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - இந்த "இல்லை இல்லை"-யை வைத்துக் கொண்டு ஏற்ற முடியுமே!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ, கர்மாவிற்கோ, ஏதோ ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்டது!
யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா?
பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க! - இப்படி எல்லாமே, கிடைச்சதும் அடைஞ்சதும் தானே!
இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்!
ஓம் நமோ நாராயணாய!
நமோ என்று சொல்லும் போது, நம என்றே அவருக்குத் தெரிகிறது!
ந ம
= ந (இல்லை) !
= ம (எனது)!!
= எனதில்லை! எனதில்லை!
ஓம் நமோ நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
அனைத்தும் பரம்பொருள் தந்தது! அனைத்தும் பரம்பொருள் தந்தது!
ஆகா! தோன்றி விட்டது திவ்யப் பிரபந்தம்! தமிழ் வேதம்!
பொய்கையார் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகிறார்!
அவருக்கு உலகம் என்னும் நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார். - அரும்பெரும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உலகம் என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல், வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, திவ்யப் பிரபந்தம் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!
உலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,
உயிர் காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...
சக்கரம் ஏந்தியவன் திருவடிக்குச், சொல் மாலை சூட்டினேனே! மனித குலத்தின் இடர் என்னும் இருள் நீங்காதா?
முதல் விளக்கு ஏற்றியாகி விட்டது. அதன் ஒளி, இருளைக் கிழித்து விட்டது!
ஒரே ஒரு சுடர் போதாதா கும்மிருட்டை நீக்க! இனி ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே!
விளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தாழ்வார்!
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்
அன்பை வாழ்வைத் தாங்கும் அகல் ஆக்கினேன், இறைவனிடத்தில் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,
இன்பமாய் உருகி மகிழும் சிந்தனையையே திரியாக்கினேன்...
ஞான விளக்கு ஏற்றினேன்! நாராணனுக்கு ஞானத் தமிழில்(வேதம்) சொன்னேனே!
என்று அன்புக் கண்ணீர் பெருக, பூதத்தாழ்வார் ஏற்றி வைத்த இரண்டாம் விளக்கும் ஜொலிக்கின்றது!
(உலகத்தை ஒரு விளக்காகவும், அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்க வேண்டும்?
ஒன்றில் கதிரவனையும், இன்னொன்றில் நம் சிந்தனையையும் ஏன் திரியாகப் போட வேண்டும்?
முதல் விளக்கு புற அழுக்கு அகற்ற! - அதான் உலகமும், சூரியனும்!
இரண்டாம் விளக்கு அக அழுக்கு அகற்ற! - அதான் அன்பும், சிந்தனையும்!!
இறை தரிசனம் வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்!!!
இதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு வழி காட்டினார்கள்!)
முதல் இருவர் ஏற்றிய விளக்குகள்...மொத்தமாய் இருள் போக்கி விட்டன!
இப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று!
ஆகா...பெருந்திருடன் தான் அவன்! அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது?
பொய்கையும், பூதமும் ஏற்றிய விளக்கின் ஒளியில், கடைசியா அங்கு வந்த பேயாழ்வார் அந்தக் கள்வனை அப்படியே வர்ணிக்கிறார்!
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
விளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார்? கடவுளா? இல்லை! - ஒரு பெண்! - ஆமாம்! கள்வனின் காதலி, அவன் மார்பில் இருக்கிறாள்! மின்தடை ஏற்பட்டு, பின்னர் வெளிச்சம் வந்ததும், குழந்தைக்கு ஆசையா விளையாடின விளையாட்டுச் சாமானா முதலில் தெரியும்?
இருள் நீங்கி, ஒளி கண்டதும், அம்மாஆஆஆ என்று தாயைத் தானே ஓடிப் போய்க் கட்டிக் கொள்ளும்!
ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்குக் கிடைப்பார்கள்!ஆனால் எல்லாப் பிறவியிலும், வரும் ஒரே ஒரு அன்னை யார்?
அவளே இவள்! - திருக் கண்டேன் - உலகம் அனைத்துக்கும் அன்னை!
திரு! மகாலக்ஷ்மி! அவளைக் கண்டேன்!
திருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்!
பொன்மேனி கண்டேன்! - அடுத்து அப்பனைக் காண்கிறார்! தன் ஒப்பார் இல் அப்பன் - அவன் பொன் மேனியைப் கண்டேன்!அட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன?
பொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே! பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு இசைத்து என்பதல்லவா பாட்டு!
பெருமாள் நீல மேனியன் ஆயிற்றே! நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும்! - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே! ஒரு வேளை, விளக்கின் ஒளி போதவில்லையா என்ன?
பொய் விளக்கல்லவே இது!
மெய் விளக்க வந்த மெய் விளக்கு ஆயிற்றே! அப்பறம் எப்படி இப்படி?
(அடுத்த பகுதியில் நிறையும்)
இன்று கைசிக ஏகாதசி! (Nov 21, 2007)
தறி கெட்டுப் போன பார்ப்பனன் ஒருவனுக்கு, கீழ்க் குலத்தவன் ஒருவன், உபதேசம் செய்து, மோட்சத்துக்கு வழிகாட்டிய நாள்!
சென்ற ஆண்டு இது பற்றி விளக்கமாக, மாதவிப் பந்தலில் ஒரு பதிவு இட்டிருந்தேன்!
//இந்த ஆண்டு வேறு ஒரு திடீர் பதிவுக்குக் காத்திருங்கள்! :-)// - குமரனின் பரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும்! அடியேன் சென்ற ஆண்டு இட்ட பதிவை மீள் பதிவாக, சில நிமிடங்களில் இடுகிறேன்!
இந்நாளில், இறைவன் திருக்கதைகளைச் செவி குளிரக் கேட்பது, சிந்தைக்கு அமைதி தரும்!
முதலாழ்வார்கள் கதையை இன்று நன்னாளில் சொன்னதும் ஒரு சிறப்பு தான்!
முதலாழ்வார்கள் மூவரோடும் அடியேனும் திருவின் மணாளனை - என் ஆழி வண்ணனைக் கண்டு கொண்டேன்.
ReplyDeleteசென்ற ஆண்டு நீங்கள் இட்ட கைசிக ஏகாதசி இடுகையையே இன்னொரு முறை படி என்று பெருமாள் கட்டளை. அந்த இடுகையின் சுட்டியையும் கொடுத்துவிடுங்கள். :-)
இன்னொருமுறை படின்னு எம் பெருமா(ள்)ன் சொன்னபடிக்கே படிச்சாச்சு இந்தப் பதிவையே மூணு முறை..
ReplyDeleteஓம் நம நாராயணா
Ayya neengal yaar.... AVAN ungalai anupinaanaaa....Kaikoopi thozukiren ayya... IRAIVANIN Paarvaikku neengal pattuvitteerkal entaal neengal saraasari alla...
ReplyDeleteOru ilangnanin (young man) ullam eppadi irukkum enpathu ellorukkum therinthathu...but you are excepetional....ellaam AVAN seyal polum.. thanakku unmaiyana aathmavin moolam uraithukondirukiraano...kaedpavar kaekattum... yaaraiyaa neer...
Great soul....padithathai thaan eluthukiren entu sollalaam...padipavarkalukkellam solla theriyavendum..secondly...nam aathmaavirkku eedupaadu vendum..then purithal vendum..etc. etc.. ungalukku antha paakiyam irukirathu ental...really you are gifted person..
AVAN illamal ontum millai.. nammai thavira intha IYARKKAIYIN Padaipukal ellam...
manithanum great.vanangathakuthiyanavaene.avan manithanaka irukkum pachathil but tthan arpa puthiyinalum..paeraasaiyinaalum patharaakiraan
kaalaiyilae AVANAI ninaikum paakiyam aruliyatharkku kodi namaskaram...
adiyan already vanthupokiravanthan... thavaraka ethuvum eluthi irunthaal mannikkavum..
இல்லை இல்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
ReplyDeleteஇல்லை-யை வைத்துக் கொண்டு ஏதாச்சும் ஏற்ற முடியுமா? முடியும்!!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - இந்த "இல்லை இல்லை"-யை வைத்துக் கொண்டு ஏற்ற முடியுமே!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ, கர்மாவிற்கோ, ஏதோ ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்டது!
யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா?
பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க! - இப்படி எல்லாமே, கிடைச்சதும் அடைஞ்சதும் தானே!
இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்!
ஓம் நமோ நாராயணாய!
IALLAI ETHUVUMAE ILLAI...AVANAI THAVIRA...IRUPATHAKA NINAIPATHELLAAM ILLAI ILLAVAE ILLAI
azhagaka sollapattirukirathu...
naan enta ontai vittozhithaalea pothumae
உள்ளேனய்யா....
ReplyDeleteவாவ்! அருமையான விளக்கங்கள்! சூப்பரு!!
ReplyDeleteஎட்டெழுத்து மந்திரத்தின் பொருளைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் இரவிசங்கர். நாராயண என்ற திருப்பெயரின் பொருளினை 'சடாரி, தீர்த்தம்' இடுகையில் தொட்டுச் சென்றீர்கள். இங்கே நம என்ற சொல்லிற்குப் பொருள் சொன்னீர்கள். பிரணவத்திற்கும் இன்னொரு இடத்தில் பொருள் சொன்னதாக நினைவு. எல்லாவற்றையும் சேர்த்து எட்டெழுத்து மந்திரப் பொருளை விவரித்து ஒரு இடுகை இடுங்களேன். திருக்கோட்டியூர் கோபுரமாக உங்கள் பதிவு மாறட்டும்.
ReplyDelete//அரும்பெரும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உலகம் என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல், வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, திவ்யப் பிரபந்தம் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!//
ReplyDeleteநச்சினார்க்கினியரின் திருமுருகாற்றுப்படை உரையில் இதனை விவரிக்கிறார். உலகம் என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் சில இலக்கியங்களைச் சொல்லிவிட்டு உலகம் என்ற பெயர் கொண்ட மற்ற சொற்களுடன் துவங்கும் சில இலக்கியங்களையும் காட்டுகிறார். இங்கே வையம் என்ற சொல்லில் தொடங்கும் பொய்கையாழ்வார் பாசுரங்களைப் பற்றிச் சொல்லிவிட்டீர்கள்.
//வையம் தகளியா வார்கடலே நெய்யாக
ReplyDeleteவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!
//
முதல் விளக்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறது. பெரியதில் பெரியதான இந்த உலகத்தையும் இங்கிருந்து தெரியும் பகலவனையும் வைத்து இந்த சுடர்விளக்கை ஏற்றிவிட்டார் பாருங்கள். தகளிக்குள் தானே நெய் தங்கி சுடர் விளக்கு ஏற்றப்படும். உலகைச் சூழ்ந்து ஏழு கடல்கள் இருக்கின்றன என்ற கருத்து வலுப்பெற்றிருந்த காலத்தில் உலகத்தில் தான் கடல் இருக்கிறது என்ற இன்றைய அறிவியல் கருத்தைச் சுட்டுவது போல் இருக்கிறது வையமெனும் தகளியில் வார்கடல் நெய்யாவது.
வையமும் கடலுமாவது இணைந்து இருக்கிறது. வெய்யக் கதிரோன் அப்படியா? எங்கோ தொலைவில் இருக்கிறானே? இங்கிருக்கும் தகளிக்கும் நெய்க்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? எல்லாவற்றையும் இணைக்கும் பொருள் ஒன்று உண்டு என்பதைக் காட்டுகிறதோ வையத்தகளிக்கும் வார்க்கடல் நெய்க்கும் வெய்யக்கதிரோன் என்னும் விளக்கிற்கும் தொடர்பு காட்டுவது?
ஆழி என்ற சொல்லின் இரண்டு பொருள்களையும் எவ்வளவு நன்றாக இந்தப் பாடலில் பொய்கையாழ்வார் பயன்படுத்துகிறார் பாருங்கள். சுடராழி என்னும் போது சுடர்வீசும் சக்கரத்தையும் இடராழி என்னும் போது இடர்கள் என்னும் கடலையும் குறிக்கிறார்.
இங்கே சொல்லும் இடர் எது? நாம் சுயநலமாகச் செய்யும் சிறு சிறு முயற்சிகளுக்கு இடையூறாக வருகின்றதே அந்த இடர்களா? பொய்கையார் சுயநலமான காரியங்களைப் பற்றியா பேசுகிறார்? இல்லையென்றால் எந்த இடர்களைப் பற்றிப் பேசுகிறார்?
Post Super... As usual...
ReplyDeleteWaiting for the next part...
//வெட்டிப்பயல் said... //
ReplyDeleteவாங்க புது மாப்பிள்ளை. எங்க இருந்து இந்த பின்னூட்டம்? இப்ப எந்த ஊருல இருக்கீங்க?
//வெட்டிப்பயல் said...
ReplyDeletePost Super... As usual...
Waiting for the next part...//
அலோ! புது மாப்பிள்ளை!
இங்க என்ன பண்ணறீங்க! ஒதை படப் போறீங்க! :-)
//குமரன் (Kumaran) said...
//வெட்டிப்பயல் said... //
வாங்க புது மாப்பிள்ளை. எங்க இருந்து இந்த பின்னூட்டம்? இப்ப எந்த ஊருல இருக்கீங்க?//
குமரன்
அவன்(ர்) சென்னையில சுகமா, மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ ன்னு பாடிக்கிட்டு இருக்கான்(ர்) போல! :-)
நல்ல விளக்கங்கள். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteமிக மிகச் சிறப்பான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDelete//குமரன் (Kumaran) said...
ReplyDeleteசென்ற ஆண்டு நீங்கள் இட்ட கைசிக ஏகாதசி இடுகையையே இன்னொரு முறை படி என்று பெருமாள் கட்டளை. அந்த இடுகையின் சுட்டியையும் கொடுத்துவிடுங்கள். :-)//
பெருமாள் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் வழியாக இட்ட கட்டளையை உங்க மின்னஞ்சல் பார்த்து தெரிந்து கொண்டேன், குமரன்! :-)
பரவாயில்லை விடுங்க, ஒரு மணி நேர முயற்சி! கடைசியில் draft mode சொதப்பி விட்டது!
அடுத்த ஆண்டு, கைசிக நாடகம் நீங்க தான்!
//துளசி கோபால் said...
ReplyDeleteஇன்னொருமுறை படின்னு எம் பெருமா(ள்)ன் சொன்னபடிக்கே படிச்சாச்சு இந்தப் பதிவையே மூணு முறை..//
மூணு முறையா?
//ஓம் நம நாராயணா//
கரெக்டா பிடிச்சீங்க டீச்சர்!
//வேதா said...
ReplyDeleteதமிழ் வேதம் தோன்றியது பற்றி ஓரளவு தெரியும் தான் என்றாலும் அதை உங்கள் விவரனையில் படிக்கும் போது மீண்டும் மீண்டும் படிக்க தோன்றுகிறது. நாரணன் செயல் தான் இதுவும் :)//
வாங்க வேதா!
எல்லாம் இறைவன் செயல்!
அடியேன் விவரணை என்பதை விட, அவன் விவரம் தான், விவரணையை மணக்கச் செய்கிறது!
//அருமையா இருக்கு இதை படிக்கும் போது ஸ்ரீ நேரில் வந்தது போல் :)//
ஆகா...வரலட்சுமி உங்களைத் தேடி நேரில் வந்து விட்டாளா? :-)
//Anonymous said...
ReplyDeleteAyya neengal yaar.... AVAN ungalai anupinaanaaa....Kaikoopi thozukiren ayya... IRAIVANIN Paarvaikku neengal pattuvitteerkal entaal neengal saraasari alla...//
அச்சோ...அனானி ஐயா!
நீங்க சொல்லறது எல்லாம் உணர்ச்சிப் பெருக்கால்! பதிவின் சாராம்சம் மட்டும் கொள்ளலாமே! பதிவரை விட்டூ விடுங்களேன்!
ஏற்கனவே என்னைப் "புனித பிம்பம்"-னு சில நண்பர்கள் கிண்டல் அடிக்கறாங்க! :-)
//yaaraiyaa neer...//
ReplyDeleteஎன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளப் பெரிதா ஒன்றும் இல்லை ஐயா!
அடியேன் சிற்றஞ் சிறு ஞானத்தன்!
Profile-il ஊரும் பேரும் இருக்கு பாருங்க; அவ்ளோ தான்!
அதனால் இப்படி அதீத புகழுரைகள் தேவை இல்லையே! ப்ளீஸ்!!
//padithathai thaan eluthukiren entu sollalaam//
ஹூம்.
இந்தச் சமயத்தில் இதையும் சொல்லி விடுகிறேன்!
வாரியார் சுவாமிகள், பரனூர் அண்ணா இவர்களின் விரிவுரைகளைக் கேட்டாலோ, படித்தாலோ உள்ளம் கொஞ்சம் தெளியும். அன்பு வயப்பட்டு விடும்.
அன்பு வந்துடுச்சுன்னா மத்தது எல்லாம் ஒன்னுமே இல்லை! ஆர்வம் தானா வந்து விடும்!
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு! - இதுவே குறள் வாக்கு.
மேற்சொன்ன இரு பெரியவர்களும் பல முறை பொழிந்த அமுதத்தின் சில வாசனையைத் தான் இங்கு லேசாக் காண்கிறீர்கள்! பூவோடு சேர்ந்த நார் மணம் வீசுவது போலத் தான் இந்த வலைப்பூ!
காலத்துக்கு ஏற்றாற் போல நகைச்சுவையா கலந்து சொன்னா, நம் சக இளைஞர்கள் எதையும் கிரகித்துக் கொள்வார்கள். அந்த அளவு பக்தியும், செயலில் நேர்மையும் அவங்க கிட்ட இருக்கு!
அவர்களுக்கு நம் முதுபெரும் சொத்தைக் கொண்டு சேர்ப்பது மிக மிக அவசியம்.
பெற்றோரின் பழுதில்லா அன்பும், அடியேனுக்கு வாய்த்த பல ஆசிரியர்கள் ஆசியும், அடியவர்கள் நற்சேர்க்கையும் தான் இங்கு முதற்பொருள். இங்கு பதிவுலக நண்பர்களின் ஆதரவும் அன்பும் சொல்லில் சொல்ல மாளாது!
உங்களுக்குச் சொல்லப் போய், இன்று எல்லாரையும் நன்றியோடு நினைச்சிப் பாத்துக்கறேன்!
//adiyan already vanthupo kiravanthan...
thavaraka ethuvum eluthi irunthaal mannikkavum..//
ஓ பதிவுக்கு அப்பப்ப வருவீங்களா? தங்கள் பெயர் என்னவோ? அனானிமஸாக பின்னூட்டினாலும், கீழே உங்கள் பெயரைச் சொல்லுங்கள்!
மிகவும் ஆழ்ந்து வாசிப்பவர் என்று தெரிகிறது!
அடியவர்கள் ஒருவரோடு ஒருவர், இறைவனை அனுபவித்து, அவன் குணானுபவங்களைப் பேசியும் உணர்ந்தும் திளைப்பது இன்பம் தான்!
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
//IALLAI ETHUVUMAE ILLAI...AVANAI THAVIRA...IRUPATHAKA NINAIPATHELLAAM ILLAI ILLAVAE ILLAI
ReplyDeleteazhagaka sollapattirukirathu...
naan enta ontai vittozhithaalea pothumae//
ஹிஹி
நன்றி ஐயா!
இல்லை இல்லைன்னு உலகமே இல்லை-ன்னு எல்லாம் நான் சொல்ல வரல!
எல்லாம் இருக்கு தான்!
எல்லாம் உண்மை தான்!
ஆனால் எல்லாம் எனது எனது என்ற மனோபாவம் கொள்ளத் தான் ஒன்னுமில்லை-ன்னு சொல்லப்பட்டது!
எதுவுமே இல்லை! எதுக்கு முயற்சி செய்யணும் என்று சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்ள அது சொல்லப்படவில்லை!
எல்லாமே உண்டு தான்! ஆனால் அத்தனையும் எனக்கே என்பது தான் கிடையாது! அது தான் இல்லை-இல்லை தத்துவம்! :-)
//மதுரையம்பதி said...
ReplyDeleteஉள்ளேனய்யா....
//
அட்டெண்டன்ஸ் போட்டாச்சே! :-)
//Dreamzz said...
வாவ்! அருமையான விளக்கங்கள்! சூப்பரு!!//
வாங்க தினேஷ் தல!
பிடிச்சு இருந்துச்சா! மகிழ்ச்சி தான்! :-)
//G.Ragavan said...
ReplyDeleteநல்ல விளக்கங்கள். மிகவும் ரசித்தேன்//
என்ன ஜிரா
மிகவும் ரசித்தேன்னு சொல்லிட்டுப் போயிட்டீங்க!
மூன்று தமிழ் வேதப் பாட்டுக்கும் நயம் பாராட்டுவீங்க, குறிப்பு நயம் எடுத்துச் சொல்லலையா?
இன்னொரு தபா வாங்க! ஒங்கள வுட மாட்டோம்! :-)
//
ஓகை said...
மிக மிகச் சிறப்பான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.
//
நன்றி ஓகை ஐயா!
செந்தழல் ரவி, திருக்கோவிலூர் படங்கள் அனுப்பி உள்ளார்
ReplyDeleteஅடுத்த பதிவில் ஒவ்வொன்றா இடுகிறேன்!
நன்றி ரவி!
கேட்கும் முன்னரே வரம் கொடுத்துட்டீங்க! :-)
அன்பு ஈனும் ஆர்வம் என்றா வள்ளுவர் சொல்கிறார்?! பூதத்தாழ்வார் சொல்வதைக் கேளுங்கள்.
ReplyDeleteஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக - பார்த்தீர்களா? அன்பும் ஆர்வமும் இரண்டுமே மிக முக்கியம் போல. இந்த இரண்டும் சேர்ந்தால் தானே சிந்தை இன்பத்தில் திளைத்து உருகி விடாதோ? அது தானே இடு திரியாகி விட்டது இங்கே. இப்படி அன்பும், ஆர்வமும், இன்பத்தில் திளைத்து உருகும் சிந்தையும் இருந்தால் தானே ஞானச் சுடர் விளக்கு ஏற்றப்பட்டுவிடும் போலும். பொய்கையார் உச்சரித்த நாரண நாமம் இவருக்கு உடனே கை கொடுத்து விட்டது. நாரணற்கு இந்த ஞானச் சுடர் விளக்கினை ஏற்றினாராம். 'ஐயா. இவர் வேத வேதாந்தங்களை எல்லாம் கரைத்துக் குடித்தவரோ - இந்தப் போடு போடுகிறாரே' என்று கேட்கிறீர்களா? அதற்கும் அவரே சொல்கிறார் பாருங்கள். ஞானத் தமிழ் புரிந்த நான் என்று பெருமையோடு. 'ஆகா. நான் என்ற அகங்காரமா?' என்று கேட்கத் தோன்றுகிறதா? அவசரம் வேண்டாம். இந்த நான் அந்த 'நான்' இல்லை. இந்த நான் 'அடியேன்' என்று சொல்லும் நான். நம: என்று சொல்லும் நான். இந்த நான் ஞானத் தமிழ் புரிந்த நான்.
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteநாராயண என்ற திருப்பெயரின் பொருளினை 'சடாரி, தீர்த்தம்' இடுகையில் தொட்டுச் சென்றீர்கள்.
இங்கே நம என்ற சொல்லிற்குப் பொருள் சொன்னீர்கள்.
பிரணவத்திற்கும் இன்னொரு இடத்தில் பொருள் சொன்னதாக நினைவு.//
யாராச்சும் தொடர்பு படுத்திப் பார்த்துச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன்!
குமரன் என்னிக்கும் கைவிட மாட்டார்-ன்னு கரெக்டா வந்து சமயத்துல சொன்னீங்க பாருங்க!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//எல்லாவற்றையும் சேர்த்து எட்டெழுத்து மந்திரப் பொருளை விவரித்து ஒரு இடுகை இடுங்களேன். திருக்கோட்டியூர் கோபுரமாக உங்கள் பதிவு மாறட்டும்//
அச்சோ! அது மிகப் பெரும் பணி ஆச்சே குமரன்! கோட்டியூர் கோபுரமா?
அம்மாடியோவ்!
அது மார்கழி மாதத்தில் கதையோடு சொல்லிச் செஞ்சா இன்னும் ஈசியா புரியும்!
அப்போது முயற்சிக்கிறேன்! இறைவன் திருவுள்ளமும், குமரன்-இராகவன் கனிவும் தேவை!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஉலகம் என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் சில இலக்கியங்களைச் சொல்லிவிட்டு உலகம் என்ற பெயர் கொண்ட மற்ற சொற்களுடன் துவங்கும் சில இலக்கியங்களையும் காட்டுகிறார். இங்கே வையம் என்ற சொல்லில் தொடங்கும் பொய்கையாழ்வார் பாசுரங்களைப் பற்றிச் சொல்லிவிட்டீர்கள்//
ஆமாம் குமரன்! ரத்னேஷ் கூட உங்க இடுகையில் இது பற்றிக் கேட்டிருந்தார் இல்லையா?
உலகம் என்று துவங்குவது தமிழுக்கே உரிய உயர்ந்த மரபு!
வேறு மொழிகளில் இருக்கா-ன்னு தெரியலை!
இடுகை நன்றாக இருக்கு, இங்கே இன்னிக்கு எதும் இல்லை. தலைவெடிச்சுடுமா ?
ReplyDeleteநாராயணா நாராயணா
:)
//குமரன் (Kumaran) said...
ReplyDelete//உலகத்தில் தான் கடல் இருக்கிறது என்ற இன்றைய அறிவியல் கருத்தைச் சுட்டுவது போல் இருக்கிறது வையமெனும் தகளியில் வார்கடல் நெய்யாவது.//
சூப்பர்! அருமையான சிந்தனை! இப்படி நான் யோசிக்கவே இல்லை குமரன்! உலகில் கடல் அடங்குவது போல், அகலில் நெய் அடங்கி விட்டது!
//வையமும் கடலுமாவது இணைந்து இருக்கிறது. இங்கிருக்கும் தகளிக்கும் நெய்க்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? எல்லாவற்றையும் இணைக்கும் பொருள் ஒன்று உண்டு என்பதைக் காட்டுகிறதோ//
உம்ம்ம்ம்.
கடலும் உலகமும் கீழே இருப்பது.
கதிரவன் மேலே இருப்பது.
கீழும் மேலும் இணைந்தால் தான் ஒளி கிடைக்கும் என்று சொல்கிறாரோ?
எப்படி இணையும்?
திரி தானே அகலையும் சுடரையும் இணைக்கிறது! அது போல் கீழும் மேலும் இணைக்கும் திரி எது?
அடுத்த பாட்டில் சொல்லப்படும் திரி, இங்கு வெளிப்படையாச் சொல்லப்படவில்லை! ஆனால் உலகம் என்று சொல்லி விட்டதால், உலகில் வாழும் உயிர்களே அந்தத் திரி!
உலகில் கொடுக்கப்பட்ட வளங்களை எடுத்துக் கொண்டு, உயிர் என்னும் திரி, சுடர் ஏற்றிக் கொள்ளவேண்டும். திரிக்கும் தூண்டுதல் தேவை! உயிருக்கும் தூண்டுதல் தேவை!!
அப்பா...என்ன மறை பொருள் ஆழ்வார் பாட்டில்! தமிழ் மறை என்று சொன்னதில் வியப்பேதும் இல்லை!
//சுயநலமான காரியங்களைப் பற்றியா பேசுகிறார்? இல்லையென்றால் எந்த இடர்களைப் பற்றிப் பேசுகிறார்?//
நமக்கு வரும் இடர்களும் நம்மை அலைக்கழிக்கும் அல்லவா? விளக்கு அலையாடுவது போல! அதையும் தான் சொல்கிறார் குமரன்!
இறைவனை அடையவொட்டாது குறுக்கே நிற்கும் தன்னலத்தால் விளைந்த பல இடர்கள்!
அந்த இடர் ஒவ்வொன்றாய் நீங்க வேண்டும்னு கேட்கலை!
மொத்தமா சூழ்ந்து நிற்கும் இடராழி நீங்கிட வேண்டும் என்று தான் கேட்கிறார்!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅன்பு ஈனும் ஆர்வம் என்றா வள்ளுவர் சொல்கிறார்?! அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக - பார்த்தீர்களா? அன்பும் ஆர்வமும் இரண்டுமே மிக முக்கியம் போல//
அட, அனானி ஐயாவுக்கு தந்த பதிலில் இரண்டாம் பாட்டையும் விளக்கி விட்டீர்களே!
அன்பு ஆர்வத்தை ஈனும்!
இங்கு அன்பென்னும் தகளி, ஆர்வம் என்னும் நெய்யை ஈன்று கொண்டே இருக்கும்!
//ஆகா. நான் என்ற அகங்காரமா?' என்று கேட்கத் தோன்றுகிறதா? அவசரம் வேண்டாம். இந்த நான் அந்த 'நான்' இல்லை. இந்த நான் 'அடியேன்' என்று சொல்லும் நான். நம: என்று சொல்லும் நான்//
அருமை!
"நான்" என்பது இங்கு அகங்காரம் தொனிக்கும் "நான்" அல்ல!
ஞானத்தமிழ் "புரிந்த நான்" என்பதில் "புரிந்த" வையும் சேர்த்துப் படிக்க வேணும்!
கைங்கர்யம் புரிந்த நான், தொண்டு புரிந்த நான் என்று தொண்டு நோக்கில் சொல்வதால், இந்த நான்=அடியேன்!
இந்த நானில் பணிவு தான் தொனிக்கிறது!
இங்கே உள்ள படம் போல அல்லாமல் திருக்கோவிலூர் பெருமாள் சந்நிதி கருவறையில் உள்ள சிலையின் கீழே உள்ள கால் ஒருவரை வதம் செய்வது போல் அமைந்திருந்தது...
ReplyDeleteயார் என்று பூஜித்துக்கொண்டிருந்தவரை வினவியபோது, அது மாபலி மன்னன் என்று பதில் வந்தது...
எல்லாம் இருக்கு தான்!
ReplyDeleteஎல்லாம் உண்மை தான்!
ஆனால் எல்லாம் எனது எனது என்ற மனோபாவம் கொள்ளத் தான் ஒன்னுமில்லை-ன்னு சொல்லப்பட்டது!
Neengal solvathu Unmaithan but one should lead a detattached life
"Thamarai Ilai Thanneerpola"
Nalla mana pakkuvam varavendum
Avatharangalin nokkamae UNMAIYAI puriyavaipatharkkakathanae but avarkal ethai koorinarkal enpathai maranthuvittu avarkalukku oru adaiyalam koduthu marttathai maranthuvidukiromo - athanaal thaan intha ulakil kulappam
ungkalai maathiri niraya youngesters unaravendum
aanalum ungkalukku IRAIVAN AASI irukirathu - ungkal thannadakkam perumaikuriyathu - ungkal work oru aachariyamthan..pathaviyil /
panathil mayangkamal - of course manithan thannudaiya puthiyai nal vazhiyil payanpaduthavendum.
UNGKALAI MAATHIRI ELUTHA VARALAI
nanba naan yaar thedukiren... therinthaal sollunkal punniyamagum
அடியவர்கள் ஒருவரோடு ஒருவர், இறைவனை அனுபவித்து, அவன் குணானுபவங்களைப் பேசியும் உணர்ந்தும் திளைப்பது இன்பம் தான்!
ReplyDeleteaam tholarae - nijathilum nijam..antha kanangal sollavonna inbam - athai anupavithavarkalukkuthan puriyum antha kanangal ORU THAVAM - ungkal pathivai athil koorapattirukkum vilakkangkal / saaramsam padipatharkku koduthuvaithirukirathu -
nalla arivumathi ungkalukku - this is not simply flattering - anupavithu varum vaarthaikal - thodarattum ungkal thondu..pakiyavaanae
Hi
ReplyDeleteThis has been fablous post. Iam now longging to go back to srirangam my native a fabulous post once post great job done
//செந்தழல் ரவி said...
ReplyDeleteதிருக்கோவிலூர் பெருமாள் சந்நிதி கருவறையில் உள்ள சிலையின் கீழே உள்ள கால் ஒருவரை வதம் செய்வது போல் அமைந்திருந்தது...
யார் என்று பூஜித்துக்கொண்டிருந்தவரை வினவியபோது, அது மாபலி மன்னன் என்று பதில் வந்தது...//
வாங்க ரவி!
அவதாரங்களில் வதம் என்று நிகழாத ஒரே ஒரு அவதாரம், இது மட்டுமே! (வாமன அவதாரம்)
அது மகாபலி தான்! பூமிக்கு அடியில் அழுத்தும் காட்சி தான் அது!
//Anonymous said...
ReplyDeletethodarattum ungkal thondu..//
ஆசிக்கு நன்றி ஐயா! அப்படியே செய்கிறோம்!
//Anonymous said...
Hi
This has been fablous post. Iam now longging to go back to srirangam//
:-)
நன்றி! நன்றி!!
பாடல் திரட்டை முழுவதும் எழுத வேண்டும் என்ற ஆசை உங்கள் முந்தைய பதிவுகளைப் பார்த்து ஏற்பட்டது.
ReplyDeleteஇப்பதிவைப் படித்து மனம் நெகிழும் வேளையில் பதிவின் கனமும் அழுத்துகிறது. உங்களுக்கு வரப்பெற்ற உணர்வில் பாதி வந்தாலே அம்முயற்சி வெற்றி தான். என்னால் ஆன அளவு முயன்று பார்க்கிறேன்.
//முகவை மைந்தன் said...
ReplyDeleteபாடல் திரட்டை முழுவதும் எழுத வேண்டும் என்ற ஆசை உங்கள் முந்தைய பதிவுகளைப் பார்த்து ஏற்பட்டது//
எழுதுங்க முகவை மைந்தன்!
திருவாய்மொழி-திராவிட வேதம் ன்னு நீங்களும் சத்தியாவும் தொடங்கி இருப்பதைப் பார்த்தேன்! மகிழ்ச்சி! சீக்கிரம் தொடங்குங்க!
//இப்பதிவைப் படித்து மனம் நெகிழும் வேளையில் பதிவின் கனமும் அழுத்துகிறது.//
பதிவு கனக்கிறதா?
அச்சோ! இன்னும் எளிமையாச் சொல்லணுமோ?
தமிழ் வேதம் பற்றி தன்னிகரில்லத் தமிழில், தனக்கே உரிய தளிர்நடையில், ஆழ்வார் பசுரங்களை எடுத்து, அன்போடும், அக்கறையோடும் சொல்லியிருக்கும் பாங்குக்கு ஒரு பெரிய நன்றி கலந்த வணக்கத்தைச் சொல்லி, விட்ட பதிவுகளையெல்லாம் போய்ப் படிக்கிறேன், ரவி!:)
ReplyDeleteகுமரனின் விளக்கங்களும் மேலும் சிறப்பூட்டுகின்றன.....வழக்கம் போல்!
இரட்டைப் புலவர்கள் போல் ஒருவர் விட்டதில் இருந்து அடுத்தவர் தொடுப்பதும், அதற்கு மற்றவர் மெருகூட்டுவதும் மனமகிழ்ச்சி அளிக்கிறது!
நன்றி.
ஓம் நம நாராயண!
////செந்தழல் ரவி said...
ReplyDeleteதிருக்கோவிலூர் பெருமாள் சந்நிதி கருவறையில் உள்ள சிலையின் கீழே உள்ள கால் ஒருவரை வதம் செய்வது போல் அமைந்திருந்தது...
யார் என்று பூஜித்துக்கொண்டிருந்தவரை வினவியபோது, அது மாபலி மன்னன் என்று பதில் வந்தது...//
வாங்க ரவி!
அவதாரங்களில் வதம் என்று நிகழாத ஒரே ஒரு அவதாரம், இது மட்டுமே! (வாமன அவதாரம்)
அது மகாபலி தான்! பூமிக்கு அடியில் அழுத்தும் காட்சி தான் அது!//
Sorry Thala,
wrong info...
Athu yaaraiyum vatham seivathu poal irukathu. atharku keezh paninthu oruvar irupaar. avar maabaliyin mainthanu kovil gurukal sonnaru... last week thaan poayirunthen.
innum antha kovila Krishnar Venugopalana katchi tharaar.. kollai azhagu... kandipa chance kidaichaa paarunga...
//வெட்டிப்பயல் said...//
ReplyDeleteVaanga Maapillai! Thangachi nalama?
Maapillai Murukku ellam poyiducha? :-) Innikku enna samaicheenga vootla?:-)
//Sorry Thala,
wrong info...//
Balaji..sontha oor kaararu! avaru sonna right info thaan! Nandri thala, neenga angu kettathai udane ingeyum vanthu chonnatharkku!
//Athu yaaraiyum vatham seivathu poal irukathu. atharku keezh paninthu oruvar irupaar. avar maabaliyin mainthanu kovil gurukal sonnaru...//
Hmmm...
Mahabaliyin payyan peru Namuchi!
naan sonnathu pol athu nichayama vatham kidayathu thaan! neengalum athai solli irukeenga!
aana athu mahabaliyaa illai namuchiyaa nu thaan doubtu!
Unga punniyathala ippo clear aayiduchu!
Perumal kaal adiyil mahabali, namuchi rendu perume utkarnthu irukaanga. aana kaalai pidipathu namuchi thaan! (painting paarthen. thelivaa irukku)
Perumalukku arugil pala per nirpaargal. (painting paarunga)
Intha pakkam mahalakshmi, brahma, mahabali-avan manaivi
Antha pakkam mrigandu munivar, avar manaivi, namuchi, sukracharyar, garudan, mudal aazhvargal
//innum antha kovila Krishnar Venugopalana katchi tharaar.. kollai azhagu... kandipa chance kidaichaa paarunga...//
adutha murai, unga koodave unga veetukku varuvom! engala ozhunga kooti poyi kaatunga! okvaa :-)
Thank you very much for enlightening us on these topics. The narration is very wonderful. Keep up your noble service.
ReplyDelete