திருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூதமும்!
சரி, அதுக்கு முன்னாடி திருக்கோவிலூர் மண்ணின் மகிமையைக் கொஞ்சம் பார்ப்போம், வாங்க! பார்த்தால், நீங்களும் கொஞ்சம் ஆடித் தான் போயிடுவீங்க!
ஒரு வைணவ மடத்தில், பார்ப்பனர் அல்லாதார் தான் தலைவர் (ஜீயர்).
அவரின் பல சீடர்களும் பார்ப்பனர் அல்லதார் தாம்!
தமிழில் ஆழ்வார் அருளிச் செயல்களையும், வடமொழி வேதங்களையும் பார்ப்பனர்களைக் காட்டிலும் சிறப்பாக ஓதுகிறார்கள்! சாதி வேறுபாடுகள் இன்றிக் கோவிலில் அர்ச்சகர் பணி செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது!
ஜோசப் பாகவதர், புருசோத்தம நாயுடு என்று சில அன்பர்கள் காலட்சேபம் (அருட் பேருரை) செய்கிறார்கள்! அந்தக் கோஷ்டியில் (குழுவில்), பார்ப்பனர்களும் அமர்ந்து கொண்டு, இறைவனின் வைபவத்தைக் கேட்கிறார்கள்!
இந்த மடத்தை, மற்ற மடங்கள் மதித்து நடத்துகின்றன. மற்ற ஜீயர்களும், இந்த ஜீயரும் ஒன்றாகக் கைகோர்த்து சமூகப் பணிகள் செய்கிறார்கள்!
பல்லக்கில் சுவாமி உலாவின் போது, ஊர் மக்களே சாதி வித்தியாசம் இன்றி, நெருங்கிக் கொண்டாடுவதையும் படத்தில் காணலாம்!
இப்படி எல்லாம் செய்து விட்டு, புரட்சி புரட்சி என்று கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கிறார்களா? ஆண்டுக்கு ஒரு முறை கொடி பிடித்து, வெற்றி விழாவில் வீரவாள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களா?வாய்ச்சொல் புரட்சியா? வாழ்வில் புரட்சியா? - எது வேண்டும்?
இறைப்பணி அமைதியாக நடைந்து கொண்டு தான் இருக்கிறது! இராமானுசர் வகுத்துக் கொடுத்த வழியில், வந்த ஆலய நிர்வாக ஜீயர்கள் இவர்கள்!
அரசின் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டங்கள் எல்லாம் இப்போது வந்தவை! ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி ஒரு மெளனப் புரட்சி, நடந்து கொண்டு தான் இருக்கு!
இது எல்லாம் எந்த ஊர்-லன்னு கேட்கறீங்களா? பதிவின் தலைப்பைப் பாருங்க! :-)
1. தமிழ் வேதங்களான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தோன்றக் காரணமாக இருந்த ஊர் எது?
2. பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே-ன்னு கொல்ல வந்தவனிடத்தும் கருணை காட்டிய மெய்ப்பொருள் நாயனாரின் ஊர் எது?
3. மூவேந்தர்களின் சதியால், வள்ளல் பாரி கொலையுண்டான்! அவன் ஆருயிர் நண்பர் சங்கப் புலவர் கபிலர். பாரியின் மகள்கள் அங்கவை-சங்கவையைக் காப்பாற்றி, பல எதிர்ப்புகளையும் மீறி, "திருக்கோவிலூர்" மலையமானுக்கு மணம் முடித்தார்.
பின்னர் நட்பின் ஆழம் உந்த, தென்பெண்ணை ஆற்றுக் குன்றில், வடக்கிருந்து உயிர் துறந்தார்! இப்படி நட்புக்கு இலக்கணமான ஊர் எது?
4. சம்பந்தர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர் போற்றிப் பாடிய வீரட்டானத் தலம் எது?
5. தபோவனம், ஞானாந்த சுவாமிகள் பக்தி-ஞான யோகங்களை ஒன்றாக்கிக் காட்டிய ஊர் எது?
6. பஞ்ச கிருஷ்ண தலங்களில் (ஐந்து கண்ணன் தலங்கள்) ஒன்றான ஊர் எது?
7. பெருமாள் சங்கை வலக்கையிலும், சக்கரத்தை இடக்கையிலும் மாற்றி வைத்து நிற்கும் வாமன அவதாரத் தலம் எது?
அத்தனைக்கும் ஒரே பதில் தான்!
திருக்கோவிலூர்! - திருக்கோவலூர் என்பது பழைய பெயர்!
(பூங் "கோவல்" நாச்சியார் என்ற அழகிய தமிழ்ப்பெயர் தாயாருக்கு! அந்தக் கோவல் என்ற பெயரில் தான், திருக்கோவலூர் என்று ஊர் பெயரும் முன்பு இருந்தது!
தமிழில் இருந்து கடன் வாங்கி, புஷ்பவல்லித் தாயார் என்று வடமொழிப் பெயர் ஆக்கினாலும், இன்றும் பூங்கோவல் நாச்சியார் என்று அழகிய தமிழில் தான் சொல்கிறார்கள்! பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன்!)
புறநானூற்றிலும் திருக்கோவலூர் சொல்லப்படுகிறது! (முரண்மிகு கோவலூர் நூறி, நின்னிரண்டு திகிரி ஏந்திய தோளே) - 108 திவ்ய தேசங்களில் ஒன்று!!
எங்க கிராமத்துக்கு உண்டான ஜில்லா ஆபிஸ் (மாவட்ட அலுவலகம்) திருவண்ணாமலை. அதுக்கு அருகில் உள்ளது தான் இந்தத் தலம்!
கடலூர், விழுப்புரம் போன்ற ஊர்கள் இன்னும் கிட்டக்க! காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று காவிரிக்கு அடுத்ததாக, இந்த ஊர் தென்பெண்ணை ஆற்றைத் தான் அடுக்குகிறான் பாரதி!
எதுக்கு திருக்கோவிலூருக்கு, இன்னிக்கி இவ்ளோ பில்டப்பு-ன்னு பாக்கறீங்களா? - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது! (ஐப்பசியில் திருவோணம், அவிட்டம், சதயம்)
அவங்க மூன்று பேரு = பொய்கை, பூதம், பேய்!
அவங்க தான் முதன் முதலில் வந்த ஆழ்வார்கள்! முதலாழ்வார்கள் என்றே பெயர்! அவங்க மூவரும் ஒன்னா அருளிய பாட்டு தான், இன்னிக்கி Me the First! ஆக நிக்குது :-)
இப்படி தமிழ் வேதங்களுக்குக் காரணமான ஊர்-னு, திருக்கோவிலூர் பெயர் தட்டிக் கொண்டது!
திவ்யப் பிரபந்தம் எப்படி உருவாச்சு? அப்பறம் அது எப்படி மறைஞ்சி போச்சி?
திரும்பி எப்படிக் கிடைச்சது?
திருவரங்கத்தில் தமிழ் ஆட்சி மொழியானது எப்படி? - இப்படி ஒவ்வொரு கதையா இனிமேல் வரும் பதிவுகளில் பார்க்கலாம், வாங்க!
திருக்கோவிலூரில் அன்னிக்கி ஒரே அடை மழை! கும்மிருட்டு வேறு!
பெருமாளிடத்தில் மிகவும் ஆழ்ந்து போன பக்தர் ஒருவர் காஞ்சிபுரம்-திருவெக்கா என்னும் ஊரில் இருந்து புறப்பட்டு, திருக்கோவலூரை வந்து அடைகிறார்! அவர் பெயர் பொய்கையார்.
பொய்கை: உஷ்...அப்பாடா...உணவில்லாமல் ரொம்ப தூரம் நடந்து விட்டோமே! இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம்! இதுக்கு மேல் மழையில் பயணம் செய்ய முடியாது!
உலகளந்த பெருமாள்-ன்னு இந்த ஊருக் கடவுளைச் சொல்றாங்க! உலகத்த அளந்தவரு, என்னைக்கி நம்ம மனத்தை அளக்கப் போறோரோ, தெரியலையே!
அது ஒரு பக்தரின் வீடு போலும்! எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள்! அந்த வீட்டின் கதவைத் தட்டுகிறார்!
அந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்ஷ்டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை போலும்! திவ்யப் பிரபந்தம் தன் வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன?
பொய்கை: ஐயா, மழை அதிகமா இருக்கு! குளிரத் தொடங்கி விட்டது! இன்று இரவு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா? உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை! திண்ணை இருந்துச்சுன்னா அங்கேயே தங்கிப்பேன்.
அதுவும் இல்லை! அதனால் இப்படி தேகளியில் தங்கிக் கொள்கிறேனே!
(தேகளி=இடைக்கழி; ரேழி, நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசப்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்!)
நாளை காலை தரிசனம் முடித்துக் கிளம்பி விடுவேன்! நான் நம்பிக்கையான ஆள் தான்! பெருமாளுக்கு அடியவன், பெயர் பொய்கை, ஊர் காஞ்சி!
சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம் நான் கதவைச் சாத்திக் கொள்கிறேன்!
வீட்டில் உணவு தீர்ந்து விட்டது! பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி!
பொய்கை: வேண்டாம்-ப்பா, மிக்க நன்றி! நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன்! வீட்டில் அனைவருக்கும் என் ஆசியைச் சொல்லுங்க!
ஹூம்...என்னமோ தெரியலை இன்னிக்கி!
பசியும் எடுக்குறா மாதிரி இருக்குது! ஆனா ரொம்ப பசிக்கவும் இல்லை!
ஐப்பசியில், அவன் பசி தான், என் பசியையும் மிஞ்சுகிறது! இறைவா!
கையை அவர் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டது தான் தாமதம்!
டக் டக் டக்!
- இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! அவரும் பார்க்க அடியவர் போல் தான் உள்ளார்!
பூதம்: சுவாமி அடியேன் பெயர் பூதம்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்கு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா?
பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க!
இங்கு இடங் கொடுத்தவர் உறங்கப் போய் விட்டார்!
இவ்வுலகில் இடங் கொடுத்தவனும் அரங்கத்தில் உறங்கப் போய் விட்டான்!
நாம் தான் இடைக்கழியில் கிடந்து அல்லாடுகிறோம்!
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! (உட்காரலாம்)
இருவரும் அமர்ந்து, பேசத் தொடங்கலாம் என்று எண்ணுகிறார்கள்!
மீண்டும் டக் டக் டக்!
இன்னொருவர் தட்டுகிறார்! அவரும் அடியவர் போல் தான் உள்ளார்!
பேய்: சுவாமி அடியேன் பெயர் பேய்; நான் திருமயிலையில் இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக் கொள்கிறேனே!
பொய்கை: வாங்க, சாரலில் நனையாதீங்க! இன்று என்ன விசேடமோ தெரியவில்லையே!
இது அடியேனுக்கு உரிமை இல்லாத இடம்; இங்கு போய் அடியவருக்கு இடவசதி செய்து தரக் கட்டளையா?
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! மூவர் நிற்கலாம்!!!
மூவரும் நின்று கொண்டே, இறைவனின் குணானுபவங்களைப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்!
குறுகலான இடம்! ஆனால் மூவரின் மனத்தில் எந்தக் குறுகலும் இல்லை!
நீங்க என்ன சாதி, அவங்க என்ன கோத்திரம் என்றெல்லாம் ஒருவரை ஒருவர் எதுவும் கேட்கவுமில்லை!
கூடும் அன்பினால் கும்பிடல் அன்றி, வேறெந்த எண்ணமும் அங்கு இல்லை!
திடீரென்று...கும்மிருட்டில்...
மூவருக்கும் மூச்சு திணறுகிறது!
மூவர் நிற்கும் இடத்தில், இப்போது ஒருவருக்குக் கூட இடமே இல்லாதது போல் ஒரு உணர்வு!
யாரோ பிடித்து நெருக்கறாங்க! அச்சோ வலிக்கிறதே!!! - கள்வனோ?
(நாளை தொடரும்...)
திருக்கோவிலூர் பற்றி நல்ல தகவல்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள் ரவி.
மிகவும் அருமையான தகவல்கள், நன்றி.
ReplyDeleteரவி,
ReplyDeleteவீரட்டானம் என்றால் திருக்கோவலூரா?? நான் திருவதிகை என்று அறிந்திருந்தேன்..
வீரட்டானத்துறை அம்மானே என்று தேவாரத்தில் திருவதிகையில் பாடியதாக படித்திருக்கிறேன்..
விளக்க இயலுமா?? நன்றி.. வாழ்த்துக்கள்..
sambradhayankal naam vaguthukondathu thaanae anti IYARKKAI alla..so ...manithakulam thalaikka manam onti selvathu nam samuthayathukkum ini varum santhathirkalukkum nanmaiyae undagum..pirivinaiyal paathikapaduvathu naamum, nam naatin munnertamum thaan..
ReplyDeleteottumaiyaga pakirnthu vazha mana pakkuvam thaan thaevai..intha mannil pirantha ovvoru manithanukkum ella urimaikalum undu..purinthukondal pagai yaethu innum oru RAMANUSAR varanuma...yaen naam ovvorvarukkulum Ramanusarai paarka pazhakikondal..intu mattumalla ini varum naalum iniyavaiyae
appa padippom entirukirathu...
ReplyDeleteseekiram...
//சிங்கம்லே ACE !! said...
ReplyDeleteரவி,
வீரட்டானம் என்றால் திருக்கோவலூரா?? நான் திருவதிகை என்று அறிந்திருந்தேன்...//
வாங்க சிங்கம்லே ACE! நலமா?
நீங்கள் சொல்லும் திருவதிகையும் வீரட்டானத் தலங்களுள் ஒன்று தான்! அங்கு தான் அப்பர் சுவாமிகளின் அக்கா திலகவதியார் வேண்டிக் கொண்டு, அவரைச் சமணத்தில் இருந்து சைவத்துக்கே மீட்பார்!
மொத்தம் எட்டு தலங்கள்! அட்ட (அஷ்ட) வீரட்டானத் தலங்கள் ன்னு பேரு! ஈசன் வீரச் செயல்கள் புரிந்த இடங்கள். ஒவ்வொன்றிலுமே வீரட்டானேஸ்வரர் தான்!
1 திருக்கண்டியூர்
2 திருக்கோவலூர்
3 திருவதிகை
4 திருப்பரியலூர்
5 திருவிற்குடி
6 திருவழுவூர்
7 திருக்குறுகை
8 திருக்கடவூர்
நல்லா இருக்குங்க கதை. மேல சொல்லுங்க.
ReplyDeleteஇந்தத் தொடரைத் தொடங்கியதற்கு மிக்க நன்றி இரவிசங்கர்.
ReplyDeleteவைணவத்தை விட சைவத்தில் தமிழ்ப்பனுவல்கள் அதிகம் என்று ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நம் அருமை நண்பர் மனத்துக்கினியான் சொன்னார். பின்னர் 'வைணவத்தைக் கரைத்துக் குடித்தவரா நீங்கள்?' என்று கேட்டபின் 'உண்மை. கொஞ்சம் கருவத்துடனேயே பேசிவிட்டேன்' என்றார். அவரைப் போன்று அறியாததை எடுத்துச் சொன்னால் தெரிந்து கொண்டோம் என்று மகிழும் நண்பர்களும் இருக்கிறார்கள்.
நீர் என்ன தான் சொன்னாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று நிற்கும் நண்பர்களும் இருக்கிறார்கள்.
இரண்டு விதமாகவும் இல்லாமல் 'இன்று புதிதாய் அறிந்தோம்' என்று மகிழும் பெரும்பான்மையான நண்பர்களும் இருக்கிறார்கள்.
'ஆகா. இறையனுபவம் செய்ய இன்னொரு வாய்ப்பு' என்று கோதுகலம் (குதூகலம்) கொள்ளும் நண்பர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரின் சார்பாகவும் மீண்டும் என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
இராமானுஜர் தொடங்கி வைத்த சமுதாயப் புரட்சி அவருக்குப் பின்னாலும் பரவியிருக்க வேண்டும். அப்படிப் பரவியிருந்தால் பல நன்மைகள் உண்டாகியிருக்கும். அப்படி நடக்காதது வருத்தமே. அவர் தொடங்கி வைத்த புரட்சியாவது மௌனப் புரட்சியாக இவ்வளவு நாட்களும் தொடர்ந்து நடந்து வருகிறதே! அதுவே பெரிய விதயம்.
ReplyDeleteதிருக்கோவலூரைப் பற்றி பல இடங்களில் பல செய்திகளைப் படித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் ஒருங்கே ஒரே இடத்தில் இங்கு படிக்கும் போது கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கிறது. :-)
1. முதல் ஆழ்வார்கள் மூவரும் பாசுரங்கள் பாடத் தொடங்கிய இடம் என்பதால் திருக்கோவலூரை 'தமிழ் வேதங்களான திவ்ய பிரபந்தங்கள் தோன்றிய ஊர்' என்று தாராளமாகச் சொல்லலாம்.
2. மெய்ப்பொருள் நாயனாரின் ஊரும் இது தானே. மறந்து போய்விட்டது. நினைவூட்டியதற்கு நன்றி.
3. நேற்று தான் 'கபிலக்கல்'லைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். இராஜராஜ சோழனின் தாயார் மலையமான் பரம்பரையில் வந்தவர் என்பதால் மலையமான் குடும்பத்தில் பாரி மகளிரை கபிலர் மணமுடித்துக் கொடுத்ததையும் பின்னர் இந்தக் கபிலக்கல்லில் வடக்கிருந்து துஞ்சியதையும் இராஜராஜன் கல்வெட்டிச் சொல்லியிருக்கிறானாம்.
4. இதுவும் புதிய செய்தி. சைவத் திருமுறைகளில் பயிற்சி இல்லாதது காரணம்.
5. இது நன்கு தெரியும். உண்மையில் திருக்கோவலூர் என்றவுடன் ஞானானந்தகிரி சுவாமிகளும் உலகளந்த பெருமாளும் தான் நினைவிற்கு வருகிறார்கள். :-)
6. திருக்கண்ணபுரம் தெரியும். பஞ்ச கிருஷ்ண தலங்கள் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அவை எந்த தலங்கள் என்று தெரியாது.
7. அட ஆமாம். உலகளந்த பெருமாள் சங்கு சக்கரங்களை கைகளில் மாற்றித் தான் வைத்திருக்கிறார். கவனிக்கவில்லையே இதுவரைக்கும். :-)
ஆகா. பொய்கையார், பூதத்தார், பேயார் மூவரும் வந்தாகிவிட்டதா. அடைமழையிலும் கும்மிருட்டிலும் ஒன்றும் தெரியவும் இல்லை; கேட்கவும் இல்லை. விரைவில் சுடர்விளக்குகளை ஏற்றச் சொல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் 'கண்டேன். கண்டேன்.' என்று பாட வேண்டுமே.
ReplyDeleteஞானானந்தகிரி சுவாமிக்கும் உலகளந்த பெருமாளுக்கும் நடுவே வழியில் மற்றொருவர் இருக்கிறார். அவர் ரகோத்ம தீர்த்தர். மத்வாச்சாரியார் துவக்கிய த்வைதம் வழியில் வந்த பெரிய மகான். அவருடைய ஆராதனையும் கார்த்திகை-மார்கழி சமயத்தில் வரும். இந்தியாவில் இருந்தால், தவறாமல் திருக்கோவிலூர் செல்வதுண்டு...மலரும் நினைவுகள்.....:-(
ReplyDelete@குமரன்
ReplyDelete//6. திருக்கண்ணபுரம் தெரியும். பஞ்ச கிருஷ்ண தலங்கள் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அவை எந்த தலங்கள் என்று தெரியாது//
திருக்கண்ணங்குடி
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணன்-கபித்தலம்
திருக்கண்ணமங்கை
திருக்கோவலூர்
//7. அட ஆமாம். உலகளந்த பெருமாள் சங்கு சக்கரங்களை கைகளில் மாற்றித் தான் வைத்திருக்கிறார். கவனிக்கவில்லையே இதுவரைக்கும். :-) //
அது ஏன் தெரியுமா குமரன்?
வாமன அவதாரத்தில் தான் அழித்தருளல் இல்லையே! காத்தருளல் தானே! அதான் ரெண்டும் எடம் மாறிக்கிச்சாம்! :-)
பெருமாளு Right Hander போல!
உலகளந்த பின் சங்கநாதம் செய்ய விரும்பினாராம்! அதான் சங்கு Right Hand-க்கு ஒச்சேஸ்தானு! :-)))
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஆகா. பொய்கையார், பூதத்தார், பேயார் மூவரும் வந்தாகிவிட்டதா.//
மூவரா?
நால்வரே வந்துட்டாங்க! அதான் நாலாமவர் வலிக்கும் அளவுக்கு நெருக்கறாரே! :-)
//சுடர்விளக்குகளை ஏற்றச் சொல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் 'கண்டேன். கண்டேன்.' என்று பாட வேண்டுமே//
எனக்குத் தெரியும்! இந்த விளக்கு உங்களுக்கு மிகவும் பிடிக்கப் போகுதுன்னு! விளக்கைப் பற்றி மேலோட்டமாச் சொல்லிடறேன்! நீங்க வந்து பின்னூட்டத்தில் விளக்கை விளக்குங்க!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஇராமானுஜர் தொடங்கி வைத்த சமுதாயப் புரட்சி அவருக்குப் பின்னாலும் பரவியிருக்க வேண்டும். அப்படிப் பரவியிருந்தால் பல நன்மைகள் உண்டாகியிருக்கும். அப்படி நடக்காதது வருத்தமே.//
ஆமாம் குமரன்! ஆனா ரொம்ப வேகமாப் பரவலையே தவிர, ஒரு நல்ல அளவுக்காச்சும் பரவித் தான் இருக்கு! அதன் விளைவு தான், இன்றைக்கும் தமிழ் நுழையவே பாடுபடும் மற்ற ஆலயங்களுக்கு மத்தியில், வைணவ ஆலயங்களில் எல்லாம் தமிழ் கொடிகட்டிக் கோலோச்சுகிறது!
திருக்கோவிலூர் மட்டுமில்லை! திருவரங்கத்தில் கருவறை உட்பட சில இடங்கள், திருவில்லிபுத்தூர், திருக்குருகூர் என்று இன்னும் சில இடங்களில் சாதிகள் கடந்த அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்!
//திருக்கோவலூரைப் பற்றி பல இடங்களில் பல செய்திகளைப் படித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் ஒருங்கே ஒரே இடத்தில் இங்கு படிக்கும் போது கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கிறது. :-)//
நம்ம Popeye மாப்பிள்ளைப் பையனின் சொந்த ஊரு திருக்கோவிலூர்! ரொம்ப நாளாய் எழுதச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்காரு! அதான் அவரு ஊருக்குக் கெளம்பும் முன்னாடி ஒரு பதிவு!
என்ன மாப்ள! சந்தோசமா? :-)
பத்திரமாய் போய் வாங்க! அப்படியே கண்ணாலத்துல மொதப் பந்தியில ஒரு சீட் போடுங்க! நாங்களும் மொய்ப் பணத்துக்குப் பதிலா பின்னூட்டமா போட்டுடறோம்! :-))
//கோவி.கண்ணன் said...
ReplyDeleteதிருக்கோவிலூர் பற்றி நல்ல தகவல்கள்.
பாராட்டுக்கள் ரவி//
நன்றி கோவி அண்ணா!
இது போல சாதிகள் கடந்த அர்ச்சகர்கள் ஊரு இன்னும் கொஞ்சம் இருக்கு! ஒவ்வொண்ணா எழுதறேன்!
//குசும்பன் said...
ReplyDeleteமிகவும் அருமையான தகவல்கள், நன்றி//
நன்றி குசும்பா!
ஏதேது பந்தலுக்கு திடீர் விஜயம்? :-))
அருமை! அருமை!!
ReplyDeleteஎன்ன இருந்தாலும் பிறந்தாத்து பெருமை இருக்கத்தான் செய்கிறது...
இந்த கோவில் பின்னாடி தான் எங்க வீடு இருந்ததாம். எங்க அப்பா அந்த கோவில் கோபுரத்துலதான் ஏறி உக்கார்ந்து படிப்பாராம்.
அதே மாதிரி அந்த கோவில்ல படிச்சி வர பிரமாணர்கள் கூட பேதம் பார்ப்பதில்லை.
ஜின் மாசம் நான் போயிருந்தப்ப தைல காப்பு நடந்துட்டு இருந்துச்சு. அதனால ஸ்வாமியோட திருவடி பார்க்க முடியல :-(
இந்த தடவையும் கண்டிப்பா இந்த ஊருக்கு போகிறேன். அப்பறம் இந்த ஊர் பக்கத்துல இருக்குற "ஆதி திருவரங்கம்"ல தான் உலகத்திலேயே பெரிய பெருமாள் இருக்காரு.
(பள்ளி கொண்டிருக்கிறார்)
பரமரிக்க யாரும் இல்லாம கோவில் ரொம்ப சிதிலமடைஞ்சிருக்கு :-((
திருக்கோவிலூர்ல இருந்து பஸ்ல போனா அரை மணி நேரம் தான்.
//Anonymous said...
ReplyDeletemanithakulam thalaikka manam onti selvathu nam samuthayathukkum ini varum santhathirkalukkum nanmaiyae undagum..pirivinaiyal paathikapaduvathu naamum, nam naatin munnertamum thaan..//
அருமையாச் சொன்னீங்க தலைவா!
//mana pakkuvam thaan thaevai..innum oru RAMANUSAR varanuma...yaen naam ovvorvarukkulum Ramanusarai paarka pazhakikondal..//
ஹூம்;
காரேய் கருணை இராமானுச என்பார்கள்!
அந்தளவுக்கு கருணையை வளர்த்துக் கொள்ளா விட்டாலும்...புரிந்து கொள்ள முற்பட்டால், நன்மை பெருகும்! அடுத்த பகுதியும் படித்துச் சொல்லுங்க! உங்கள் பெயர் என்னவோ? நன்றி!
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteநல்லா இருக்குங்க கதை. மேல சொல்லுங்க//
சொல்றேன் தல! ஒவ்வொண்ணாச் சொல்லறேன்!
//Boochandi said...
ஞானானந்தகிரி சுவாமிக்கும் உலகளந்த பெருமாளுக்கும் நடுவே வழியில் மற்றொருவர் இருக்கிறார். அவர் ரகோத்ம தீர்த்தர். மத்வாச்சாரியார் துவக்கிய த்வைதம் வழியில் வந்த பெரிய மகான்.//
ஆகா...மறந்து போனேனே! எடுத்துக் கொடுத்தீங்களே, மிகவும் நன்றி Boochandi! ரகோத்தம் தீர்த்தர் ஆராதனை பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கேன்!
பாருங்க அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்-னு மூனுமே இருக்கு திருக்கோவிலூரில்!
சைவ/வைணவத் தலமாகவும் இருக்கு! அட்ட வீரட்டானம்-பஞ்ச கிருஷ்ண தலம்!
முருகனைப் பற்றிய அருணகிரி பாடலும் இருக்கு!
பெருமாள் கோவிலில் எங்குமில்லாத அதிசயமா, துர்க்கைக்கு ஒரு பெரிய சன்னிதியும் இருக்கு!
//பெருமாள் கோவிலில் எங்குமில்லாத அதிசயமா, துர்க்கைக்கு ஒரு பெரிய சன்னிதியும் இருக்கு!//
ReplyDeleteஆமா.. அதுக்கு ஏதோ கதை கூட சொன்னாங்களே.. மறந்து போயிட்டனே :-((((
அவுங்க பேரு விஷ்ணு துர்கைனு நினைக்கிறேன்...
பெண்ணையாத்து பக்கத்துல ஒரு பாறை இருக்கு. பேரு பஞ்சனாம் பாறை.
ReplyDeleteபஞ்ச பாண்டவர்கள் வனவாசமப்ப அங்க வந்து தங்கியதா வரலாறு. அதுல பீமனோட காலடியச்சும் இருக்கு. ரொம்ப பெருசு பெருசா இருக்கும்.
அடுத்து அங்க ஏதோ தேவதைகள் அடிக்கடி வந்து போவாங்கனும் பேசிக்குவாங்க. (யாரோ 8 அக்கா தங்கச்சிங்கனு சொல்லுவாங்க). அந்த சமயத்துல அந்த பக்கம் போக கூடாதுனும் சொல்லுவாங்க.
அந்த பாறைல இருந்து பார்த்தா திருவண்ணாமலை தீபம் தெரியும்...
dear KRS,
ReplyDeletemeendum oru arumaiyana-aavalai-thoondum kovil pathivu..pl continue..
ARAYANINALLUR-il Maharishi Ramanrin episode-um ,THIRUVANNAMALAI thirukatchi vaibhavumum undda/varuma?
Avaludan..
sundaram
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஆமா.. அதுக்கு ஏதோ கதை கூட சொன்னாங்களே.. மறந்து போயிட்டனே :-(((( //
ஹிஹி! நீங்க ஊருக்குக் கிளம்பின அப்புறம் அந்தக் கதையைப் பதிவுல சொல்லறேன்! :-)
//அவுங்க பேரு விஷ்ணு துர்கைனு நினைக்கிறேன்...//
அப்பிடிப் போடுங்க வெட்டியானந்தா!
ஆமாம் விஷ்ணு துர்க்கை தான்!
பட்டீஸ்வரத்தில் சிவதுர்க்கை
திருக்கோவலூரில் விஷ்ணுதுர்க்கை!
துர்க்கை இங்கு கோவலூரின் காவல் தெய்வமாய் நிற்கிறாள்!
கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கோவலூர் என்பது திருமங்கை பாசுரம்!
கண்ணன் தோன்றும் போது கோகுலத்தில் உடன் தோன்றியவள் துர்க்கை! விஷ்ணு மாயை! கம்சன் கையில் இருந்து எகிறிப் பறந்தவள்!
தங்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தை தங்களிடம் வளராமல் தெய்வமாகிப் போனதால், கன்னிப் பெண்களுக்குப் படையல் வைக்கும் பழக்கம் ஆயர் சேரிகளில் இன்றும் உண்டு!
கீதோபதேசத்துக்கு முன்னர், கண்ணன் அஞ்சி நடுங்கும் அர்ச்சுனனைப் பார்த்து, துர்க்கையைப் பிரார்திக்கச் சொல்கிறான்!
எங்கள் வீட்டில் பூவாடைக்காரி என்று கும்பிட்டுவார்கள்; அம்மா வருடா வருடம் மாட்டுப் பொங்கல் அன்று, புடவையை ஒரு பெண் குழந்தை போல் மடித்து வைத்து, இன்றும் வணங்குவார்கள்!
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteஎன்ன இருந்தாலும் பிறந்தாத்து பெருமை இருக்கத்தான் செய்கிறது...//
என்னாது? பிறந்த ஆத்தா?
பெண்ணை ஆத்தைத் தானே சொல்லுறீங்க மாப்ளே! :-)
//இந்த கோவில் பின்னாடி தான் எங்க வீடு இருந்ததாம். எங்க அப்பா அந்த கோவில் கோபுரத்துலதான் ஏறி உக்கார்ந்து படிப்பாராம்.//
சூப்பரு! ஒங்களுக்காக கோபுரம் படத்தையும் பதிவுல போட்டாச்சி!
உபரித் தகவல்: தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கோபுரம் அது!
பின் பிரகாரத்தில் உள்ள கோபுரம், ஆழ்வார் கட்ட முனைந்து, பாதியிலேயே நின்ற விட்ட ஒன்று!
//ஜின் மாசம் நான் போயிருந்தப்ப தைல காப்பு நடந்துட்டு இருந்துச்சு. அதனால ஸ்வாமியோட திருவடி பார்க்க முடியல :-(//
ஹூம்!
உலகளந்த பெருமாள் திருவுருவம், மரத்தால் ஆனது! கற்சிலை அல்ல!
அதனால் வருடா வருடம், காப்பு செய்தே ஆக வேண்டும்! அப்போ தான் பாதுகாக்க முடியும்!
//இந்த தடவையும் கண்டிப்பா இந்த ஊருக்கு போகிறேன்//
சூப்பர்!
ஓங்கி உலகளந்த உத்தமனைத் தம்பதி சமேதரா சேவிச்சிட்டு வாங்க! :-)
எதுனா தெரியலீன்னா, அண்ணியைக் கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க! :-)
//"ஆதி திருவரங்கம்"ல தான் உலகத்திலேயே பெரிய பெருமாள் இருக்காரு.
(பள்ளி கொண்டிருக்கிறார்)
பரமரிக்க யாரும் இல்லாம கோவில் ரொம்ப சிதிலமடைஞ்சிருக்கு :-((//
நீங்க முன்பு சொன்னதுக்கு அப்புறம் விசாரிச்சேன்! திருப்பணிகள் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றன!
ஏனுங்க ரவி..எப்ப உங்க வீட்டுக்குவந்தாலும் போட்டி வைச்சே மெரட்டுரீங்களே.. ஹிஹி..
ReplyDeleteஉங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.
//ரசிகன் said...
ReplyDeleteஏனுங்க ரவி..எப்ப உங்க வீட்டுக்குவந்தாலும் போட்டி வைச்சே மெரட்டுரீங்களே.. ஹிஹி..//
அட வாங்க ரசிகன் வாங்க!
போட்டிக்கு ஒரு கை கொறையுதே-ன்னு பார்த்தேன்! வந்து இப்பிடிக்கா குந்துங்க! :-))
ஏனுங்க, இந்தப் பதிவுல என்னாங்க போட்டி இருக்கு? திருக்கோவிலூர் பத்தி தானே இருக்கு! அந்த ஊர்-ல எல்லாரும் போட்-ல போயி டீ குடிக்கிறாங்க-ன்னு சொன்னாலாச்சும் போட் டீ-ன்னு சொல்லலாம்! :-))
//உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும்,
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
//Anonymous said...
ReplyDeletedear KRS,
meendum oru arumaiyana-aavalai-thoondum kovil pathivu..pl continue..//
நன்றி சுந்தரம் சார்!
//ARAYANINALLUR-il Maharishi Ramanrin episode-um ,THIRUVANNAMALAI thirukatchi vaibhavumum undda/varuma?//
லேசாகத் தொட்டுச் செல்கிறேன் சுந்தரம் சார்! ஆழ்வார்கள் கதை என்பதால், ரமணர் பற்றி நிறைய சொல்ல முடியாது!
ஆனா, திருக்கோவிலூரில் தான் அவருக்குத் திருவண்ணாமலை செல்லும் வழியே தெரிந்தது! பெருமாள் அருளால் சிவனிடம் சேர்ந்தார்! :-)
சூப்பர் பதிவு. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். திருக்கோவிலூர் என்றாலே மனதில் ஆன்மீக உணர்வுகள் வரும். நானும் ஆதிரங்கம் பற்றி கேள்விப்பட்டிரிக்கின்றேன் நேரம் வரும்போது செல்ல வேண்டும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteஷோபா
அருமையான தகவல்கள்!!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்!!
அருமையான ஆராய்ந்த தகவல்களுடன் கூடிய பதிவு, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவை கண்டவுடன் மிக்க மகிழ்சி அடைந்தேன்.
ReplyDeleteதிருக்கோவிலூர், என் சகளையின் ஊரானதால் 2001இல் இருந்து அடிக்கடி செல்லும் வாய்ப்பு. உலகளந்த பெருமாளின் மோகனச் சிரிப்பை விவரிக்க வார்த்தைகளில்லை. ஆளை மயக்கும் புன்னகை. ஆயிரம் வருடங்களுக்கு முன் மேரு மரத்தில் வடிவமைத்து செதுக்கிய சிற்பி ஒரு மகானாகத்தான் இருந்திருக்க வேண்டும். வாழ்க்கையில் மிக மிக சந்தோசத்தையும், மன நிறைவையும் திருக்கோவிலூர் பெருமாள் சந்நதியில்தான் அடைந்தேன் / அடைகிறேன்.
இருக்கிற கடவுள்களிலேயே பெருமாளுக்குதான் நகைச்சுவை உணர்வு அதிகம். வாமண அவதாரத்தில் மாகபலி மன்னனிடம் பெற்ற முன்றடி நிலத்திற்க்கு, ஏழுலகத்தைய்ம் ஒரே அடியில் அளந்துவிட்டு, மந்தகாச புன்னகையுடன் அடுத்த அடியயை எங்கு வைப்பது என்று வினவும் கோலம்...
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteவைணவத்தை விட சைவத்தில் தமிழ்ப்பனுவல்கள் அதிகம் என்று ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நம் அருமை நண்பர் மனத்துக்கினியான் சொன்னார்.//
ஹிஹி
மனத்துக்கினியான் பேரு நான் வேற ஒருத்தருக்குச் சொன்னேன்! அவரு கிட்ட இருந்து இப்ப இவரு கிட்ட வந்துருச்சா? சூப்பர்!
//பின்னர் 'வைணவத்தைக் கரைத்துக் குடித்தவரா நீங்கள்?' என்று கேட்டபின் 'உண்மை. கொஞ்சம் கருவத்துடனேயே பேசிவிட்டேன்' என்றார். அவரைப் போன்று அறியாததை எடுத்துச் சொன்னால் தெரிந்து கொண்டோம் என்று மகிழும் நண்பர்களும் இருக்கிறார்கள்.//
உண்மை தான் குமரன்!
அறிய அறியத் தான் அறியாமை தெரிகிறது! அவ்வாறு தெரியும் போது, ஒப்புக் கொள்பவர்கள் மேலும் தெரிந்து கொள்கிறார்கள்! :-)
நம்ம நண்பரு எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்கிற நல்ல நண்பர் தான்! ஐயமே இல்லை!!
//நீர் என்ன தான் சொன்னாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று நிற்கும் நண்பர்களும் இருக்கிறார்கள்//
முயலின் நாலாவது கால், கட்டுப்போட்டு இருக்கு! அதான் மூனு கால்! :-)
காயம் ஆறிடுச்சுன்னா, அவங்களும் நாலு காலு ன்னு சொல்லிடுவாங்க :-)
//இவர்கள் அனைவரின் சார்பாகவும் மீண்டும் என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்//
ஆகா!
இறைவனின் குணானுபவம் பற்றிப் பேசியும் சிந்தித்தும் மகிழ, இப்படி அனைத்து நண்பர்களும் வராங்களே! அவங்களுக்கு அடியேன் தான் நன்றி சொல்லணும்!
எந்தரோ நம் நண்பர்களு!
அந்தரிகி வந்தனமுலு!!
//Shobha said...
ReplyDeleteதிருக்கோவிலூர் என்றாலே மனதில் ஆன்மீக உணர்வுகள் வரும். நானும் ஆதிரங்கம் பற்றி கேள்விப்பட்டிரிக்கின்றேன் நேரம் வரும்போது செல்ல வேண்டும்//
போய் வாங்க ஷோபா!
எனக்கும் பாலாஜி சொல்லித் தான் தெரியும்! அடுத்த முறை ஊருக்குச் செல்லும் போது, கட்டாயம் போக வேண்டும்!
உங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ரவி!
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிறைய எழுதி இருள் ஒழித்து, ஒளியேற்ற வாழ்த்துக்கள்.
'பொன்னியன் செல்வனில்' வரும் திருக்கோவிலூர் மலையமான் தாத்தா, நிவைவு இருக்கா?
அன்புடன்,
ஜீவி.
புதிய செய்தி புதுமையான முறையில்.
ReplyDeleteநன்றி கேஆர்ஸ்
மூன்றாவது ஆச்சார்யர் ஆன மத்வாசாரியாரின் சீடர்களுக்க்கும் இங்கு அதிகமாக பிருந்தாவன்ம் உள்ளது. ஆக மூன்று மதாசார்யர்களும் வந்த ஊர் இது.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete'இரண்டாம் திருவந்தாதி'யில் பூதத்தாழ்வார் :
ReplyDelete"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா- நன்புகழ்சேர்
ஞானச்சுடர் விளக்கேற்றினென் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்"
ஆழ்வார் பாசுரங்களுக்கு ஒரு அருமையான வழிகாட்டி :
சுஜாதாவின்
'ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்'
விசா பதிப்பகம், சென்னை.
//K.R.அதியமான். 13230870032840655763 said...
ReplyDelete'இரண்டாம் திருவந்தாதி'யில் பூதத்தாழ்வார் :
"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக//
வாங்க அதியமான்.
அருமையான பாசுரம் கொடுத்திருக்கீங்க! தொடரின் அடுத்த பாகத்தில் வையம் தகளியா, அன்பே தகளியா ரெண்டுமே வரும் பாருங்க!
அது வரைக்கும் சஸ்பென்ஸ்! :-)
//ஆழ்வார் பாசுரங்களுக்கு ஒரு அருமையான வழிகாட்டி :
சுஜாதாவின்
'ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்'
விசா பதிப்பகம், சென்னை.//
ஹூம்.
சுஜாதாவின் இந்தப் புத்தகம் அதன் தலைப்பைப் போலவே ஆழ்வார்களைப் பற்றி எளிய அறிமுகம் தான்! ஆனா சாண்டில்யனும் ஒரு புத்தகம் போட்டுள்ளார் இராமானுசர் மற்றும் ஆழ்வார்கள் பற்றி! அது இதை விட எளிமையா இருக்கும்! தற்கால இளைஞர்களும் விரும்பிப் படிப்பாங்க! :-)
//குட்டிபிசாசு said...
ReplyDeleteஅருமையான தகவல்கள்!!
தீபாவளி வாழ்த்துக்கள்!!//
வாங்க குட்டிபிசாசு!
தீபாவளி எப்படிப் போச்சுது? இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
//ஜெயஸ்ரீ said...
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ரவி!//
நன்றி ஜெயஸ்ரீ! இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
ரவி ஷங்கர்,
ReplyDeleteதிருக்கோவிலூர் ஒரு முறை சென்றுள்ளேன். அங்குள்ள பெருமாள் சன்னிதியில், பெருமாளுக்குப் பக்க வாட்டில் ஏதோ ஒரு காட்சி அர்ச்சகரால் தீபம் காட்டப்பட்டு விளக்கமும் சொல்லப்பட்டது. முதல் முறையாக அதை அக்கோவிலில் தான் கண்டேன். காலங்கள் கழிந்ததனால் மறந்து விட்டேன். அக்காட்சி பற்றி விளக்க முடியுமா ??
( ஏதொ ஒரு தசாவதாரக் காட்சி என நினைக்கிறேன்.)
குமரனின் நீண்ட மறு மொழியும் அதன் விளக்கங்களும் அருமையாகச் செல்கின்றன.
திருக்கோவிலூரை பற்றிய ஒரு அருமையான பதிவு. புகைப்படங்கள் அருமை.
பாலாஜியின் ஊர் என்றால் - அபரின் திருமணத்திற்கு முன்னரே ஒரு சிறப்பு பதிவா ?? மற்ற சங்க உறுப்பினர்கள் கவனிப்பார்களா ??
திருக்கோவிலூர், தென்பெண்ணை ஆற்றின் வடக்கில் இருக்கும் அரங்கண்டநல்லூரில், ஆற்றோரத்தில், ராகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. மிக அழகான, அமைதியான இடம்...
ReplyDeleteகர்நாடகாவில்ருந்து பக்தர்கள் பெருந்திரளாக வருவர்.
மந்த்ராலயம் ராகவேந்தர சுவாமிகளின் குரு இவர்தான் என்று கேள்விப்பட்டேன். சரியாக தெரியவில்லை. யாரவது விளக்கமுடியுமா ?
மிக அருமையான பதிவு. நான் அடிக்கடி சென்று வருகிற ஒரு மிக அழகான ஊர். தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDelete//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஅருமையான ஆராய்ந்த தகவல்களுடன் கூடிய பதிவு, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//
நன்றி கீதாம்மா! உங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
பட்சணப் பார்சல் எங்கே? இன்னும் இங்க வந்து சேரலை! ஒழுங்கா போஸ்ட் பண்ணீங்களா? (பதிவு போஸ்டிங்கை சொல்லல! :-)
//K.R.அதியமான். 13230870032840655763 said...
ReplyDeleteஉலகளந்த பெருமாளின் மோகனச் சிரிப்பை விவரிக்க வார்த்தைகளில்லை. ஆளை மயக்கும் புன்னகை.//
அதியமான், அடுத்த பதிவில் படமும் இடுகிறேன். ரசித்து ருசிங்க :-)
//ஆயிரம் வருடங்களுக்கு முன் மேரு மரத்தில் வடிவமைத்து செதுக்கிய சிற்பி ஒரு மகானாகத்தான் இருந்திருக்க வேண்டும்//
மிகவும் உண்மை!
மரச் சிலையைத் தைலக் காப்பு செய்து செய்து பாதுகாத்து வருகிறார்கள். லேசுப்பட்ட விடயம் இல்லை! கற்சிலை/சுதையைக் காட்டிலும் பராமரிப்பு தேவை!
//வாழ்க்கையில் மிக மிக சந்தோசத்தையும், மன நிறைவையும் திருக்கோவிலூர் பெருமாள் சந்நதியில்தான் அடைந்தேன் / அடைகிறேன்.//
ஆகா, கேட்கவே இன்பமா இருக்கு!
உங்களை மட்டும் இல்லை!
ஆண்டாளைக் கவர்ந்தவனும் அவன் தான்!
தன் காதலன் கண்ணனைத் தவிர, முதன் முதலாக வேறொரு அவதாரத்தை பாடுகின்றாள் என்றால், அது "ஓங்கி உலகளந்த உத்தமன்" தான்!
வாமன அவதாரத்துக்கு மட்டும் வேதங்களிலும் யாகங்களிலும் ஏன் அவ்வளவு முக்கியதுவம்-னு இங்கே சொல்லி இருக்கேன்! பாருங்க!
//இருக்கிற கடவுள்களிலேயே பெருமாளுக்குதான் நகைச்சுவை உணர்வு அதிகம்.//
ஹிஹி!
சூப்பர் ஐடியாவா இருக்கே!
பெருமாளும் நகைச்சுவையும்-னு தனியாவே ஒரு பதிவு போடலாம்! நீங்க ட்ரை பண்ணுங்களேன்!
மந்தகாசம், புன்னகை-ன்னா அது பெருமாள் தானே எப்போதும்! :-)
/////இருக்கிற கடவுள்களிலேயே பெருமாளுக்குதான் நகைச்சுவை உணர்வு அதிகம்.//
ReplyDeleteஹிஹி!
சூப்பர் ஐடியாவா இருக்கே!
பெருமாளும் நகைச்சுவையும்-னு தனியாவே ஒரு பதிவு போடலாம்! நீங்க ட்ரை பண்ணுங்களேன்!
மந்தகாசம், புன்னகை-ன்னா அது பெருமாள் தானே எப்போதும்! :-)//
அது மட்டுமில்லை. அலங்காரப்பிரியர், வாசனாதி திரவியம், etc. நல்ல நக்கல், மற்றும் சிரித்தே காரியதை சாதிப்பார். (க்ரிஷ்ணர்) ; பல மனைவியர் உண்டு. சுகமாக சந்தோஷமா வாழனும்னா பெருமாள சரண்டைந்தா போதும். சிவ்னைபோல், மற்ற கோபமான, ஆயூதம் ஏந்திய கடவுள்களைப் போல் ருத்த்ரம் கிடையாது. திருவிளையாடல் படம் மாதிரி பக்தர்களை கடுமையா சோதிக்க மாட்டார்.மூட் இருந்தா instant grant. கடுமையான விரதங்கள், 15 மைல் வெறுங்காலில் பாதயாத்திரை, etc தேவையில்லை. ஜாலியா கார்ல போலாம். அதனால தான் பாரதி, ஜாலியா, கண்ணன் என்
தோழன், காதலன், வேலைக்காரன் என்று பல ரூபாமா பார்த்தார்.
சுக்கிர திசைனா அது பெருமாளுக்குதான் நடக்கிது !! பக்தர்களுக்கும் கொஞ்சம் போட்டு குடுப்பார். உலத்திலேயே பணக்கார சாமி நம்ம திருபதி பெருமாள்தான். எவ்வளவு நக வச்சுருக்கர்....
ஆனாலும் கல்யானத்துக்க குபேரனிடம் வாங்கிய கடன இன்னும் கட்ரார். கடவுளே இப்படி வழிகாட்னா என்ன ஆகரது ? பக்த கோடிகளும் இன்றும் தங்கள் கல்யாணத்த ஆடம்பரமா செய்ய கடன் வாங்கி, பிற்பாடு வட்டி கட்டுகின்றனர்....
//ஜீவி said...
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நிறைய எழுதி இருள் ஒழித்து, ஒளியேற்ற வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் ஜீவி!
//'பொன்னியன் செல்வனில்' வரும் திருக்கோவிலூர் மலையமான் தாத்தா, நிவைவு இருக்கா?//
ஓ! நல்லா நினைவிருக்கு! அவரைத் தானே பொடிப்பசங்க கரிகாலனும் பார்த்திபேந்திரனும் முதலில் கிண்டல அடிப்பாங்க :-) ஆனா அந்தக் கிழவரின் வீரமும் பற்றும் கதையில் நல்லா சொல்லப்படும்!
//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteபுதிய செய்தி புதுமையான முறையில்.
நன்றி கேஆர்ஸ்//
வாங்க திராச
தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மாவுக்கும்!
//மூன்றாவது ஆச்சார்யர் ஆன மத்வாசாரியாரின் சீடர்களுக்க்கும் இங்கு அதிகமாக பிருந்தாவன்ம் உள்ளது. ஆக மூன்று மதாசார்யர்களும் வந்த ஊர் இது//
ஆமாம்! அதியமான் கேட்கும் கேள்விக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்! ராகவேந்திர சுவாமிகளின் குருநாதர் பற்றிக் கேட்கிறார் பாருங்க!
//Anonymous said...
ReplyDeleteஎங்கட ஊரைப்பத்தி தொடரா ? வெரிகுட்...//
அடடா!
தழலாரா இது? வாங்க!:-)
//உங்கள் மின்னஞ்சல் தாருங்க...கபிலர் குன்று / கோவில் / மூலப்பிருந்தாவனத்தில் நடைபெறும் திருவிழாக்கள் பற்றிய புகைப்படங்கள் அனுப்புகிறேன்...//
ஏதேது! ஒரு கலெக்சனே வச்சிருக்கீங்க போல!
மாலையில் மடல் அனுப்புகிறேன்!
நன்றி ரவி!
//ஓகை said...
ReplyDeleteமிக அருமையான பதிவு. நான் அடிக்கடி சென்று வருகிற ஒரு மிக அழகான ஊர். தொடரட்டும் உங்கள் பணி//
நன்றி ஓகை ஐயா!
இனிய தீபாவளி வாழ்துக்கள்!
//K.R.அதியமான். 13230870032840655763 said...
ReplyDeleteராகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. மிக அழகான, அமைதியான இடம்...//
ரகோத்தம சுவாமிகள் உத்தராதி மடத்து தீர்த்தர்-ன்னு நினைக்கிறேன். இவரும் மாத்வ வழி வந்தவர் தான்! ஆனால் ராகவேந்திரரின் குரு இல்லை!
//மந்த்ராலயம் ராகவேந்தர சுவாமிகளின் குரு இவர்தான் என்று கேள்விப்பட்டேன். சரியாக தெரியவில்லை. யாரவது விளக்கமுடியுமா?//
இராகவேந்திர சுவாமிகளின் குரு சுதீந்திர தீர்த்தர். கும்பகோணத்தில் தான் இவர் பிருந்தாவனம் உள்ளது! ரஜினியின் ராகவேந்திரா படத்திலும் சோமையாஜுலு குருவாக நடித்திருப்பார்.
இந்தாங்க தீர்த்தர்களின் வரிசை!
http://www.gururaghavendra1.org/brindavan.htm
//cheena (சீனா) said...
ReplyDeleteதிருக்கோவிலூர் ஒரு முறை சென்றுள்ளேன். அங்குள்ள பெருமாள் சன்னிதியில், பெருமாளுக்குப் பக்க வாட்டில் ஏதோ ஒரு காட்சி அர்ச்சகரால் தீபம் காட்டப்பட்டு விளக்கமும் சொல்லப்பட்டது....
அக்காட்சி பற்றி விளக்க முடியுமா??//
அர்ச்சகர் என்ன வைபவத்தைத் தீபங் காட்டி உங்களுக்குச் சொன்னார்-ன்னு தெரியலை!
ஆனா நான் அறிந்த வரை சொல்கிறேன்!
அர்ச்சகர் சொன்னது வாமனாவதாரம் தான்!
கருவறையில் பெருமாள் பிரம்மாண்டமாகத் தெரிவார். ஆனால் அவருடன் பல பேர் கருவறையில் சின்னதாக இருக்கிறார்கள்!
மகாபலி, சுக்கிராச்சாரியார், மிருகண்டு முனிவரும், மனைவியும் இந்தப் பக்கம்!
முதலாழ்வார்கள் மூவரும் அந்தப் பக்கம்!
இரு மருங்கும் பிரம்மாவும், நமுசி என்ற மகாபலியின் மகனும் அர்ச்சிப்பது போல் இருப்பார்கள்!
பெருமாள் மூன்றாம் அடிக்கு இடம் எங்கே என்று மகாபலியை ஒற்றை விரலில் வினவுவது போல் இருக்கும்!
மகாபலி தன் தலையைக் குனிந்து காட்டும் காட்சி அது...குனிந்து ஊன்றிப் பார்த்தால் தான் மகாபலி, சுக்கிராச்சாரியார் தெரிவார்கள். அதைத் தான் அர்ச்சகர் உங்களுக்குத் தீப ஒளியில் காட்டி இருப்பார்-ன்னு நினைக்கிறேன்!
//குமரனின் நீண்ட மறு மொழியும் அதன் விளக்கங்களும் அருமையாகச் செல்கின்றன//
அது தானே குமரனின் மகத்துவம்!!
//பாலாஜியின் ஊர் என்றால் - அபரின் திருமணத்திற்கு முன்னரே ஒரு சிறப்பு பதிவா ?? மற்ற சங்க உறுப்பினர்கள் கவனிப்பார்களா ??//
ஹிஹி
நவ 15 சங்கத்தில் கச்சேரி இருக்கும் போல! :-)
நன்றி ரவி, விரிவான தகவலுக்கு நன்றி - மிகத் தெளிவாக எனக்குத் தெரிகிறது - அன்று அக்கோவிலில் அர்ச்சகர் காட்டிய காட்சி வாமனாவதாரம் தான். மீண்டும் நன்றி
ReplyDeleteஒரு சந்தேகம் KRS,
ReplyDeleteமகாபலி மன்னனின் நெற்றியில் பதிந்த பெருமாளின் பாதச்சுவடே, பின்னர் நாமம் ஆகியதா ?
நாமம் போட்ட வைணவர்களை கண்டாலே எதோ ஒரு சந்தோசம், பெருமாளையே பார்த்த மாதிரி...
பெருமாளுகும் எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல தோனுது. இப்ப நான் குடியிருப்பது திருமலை நகர். வீட்டுக்காரர் பெயர் : வெங்கடாச்சாரி ; கம்பெனி இருப்பது திருமலை நகர் ; புது விடு வாஙக் லோன் போட்டு இருப்பது சுந்தரம் கோம் பைனான்ஸ் (பிரதிநிதி பெயர் : பத்மநாபன்) ; திருக்கோவிலூரில் இருக்கும் சகளை பெயர் வேணுகோபால் ; கரூரில் எங்கள் முன்னால் பார்ட்னர் பெயர் : கோவிந்தராஜ பெருமாள் ; எனது நெருங்கிய நணபர்கள் : ராமமூர்த்தி, லோகனாதன், ஜகன்நாதன், வார வாரம் நெட் சாட்டில் உரையாடி, நேரில் சந்தித்து பழகிய, எனது அபிமான எழுத்தாளர் : 'சுஜாதா' ரங்கராஜன் ; தமிழி பதிவர் உலகிற்கு வர தூண்டுதாலய் இருந்த நண்பர் : டோண்டு ராகவன் ; எனது கொள்ளுத்தாத்தா பெயர் : சிரீரங்கராஜ ; தகப்பனார் பெயர் : ரங்கசாமி ; தொழிலுக்கு மிகவும் உதவிய மாமா பெயர் : ராமசாமி ; இப்போது செய்யும் தொழிலிற்கு வரக் காரணமாய இருந்த அன்பரின் பெயர் : ஜெயராமன் ; சென்னை வந்த போது ஆதரவளித சித்தப்பா பாலக்கிருஷ்ண்ன் ; 1994இல் திருப்பூரில் பயிற்சி பெற்ற நிருவனத்தின் உரிமையாளர் : கிட்டு மாமா என்னும் கிருஷ்ண்சசாமி ; கோவையில் 1991இல் பங்கு மார்க்கெட் தொழிலில் ஈடுபட காரணமாய் இருந்த கே.ஜி.பாலக்கிருஷ்ணன் ; தொழிலை விரிவு படுத்த லோன் கொடுத்து உதவிய பேன்க் மெனெஜர் பெயர் : குமார கிருஷ்ணன் ; ஜோதிடத்திலும் வாழ்க்கையிலும் மானசீக குருவாக போற்றுவது : குமுதம் ஜோதிடம் ஆசிரியர் : ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள்...
எல்லாம் பெருமாள் பெயர்களாகவே வரும் ஆச்சர்யம்.....!!!! ??
As usual informational!
ReplyDeleteஇன்றுதான் படிக்க முடிந்தது.....
ReplyDeleteநான் அடிக்கடி சென்று வருகிற ஒரு மிக அழகான ஊர். தொடரட்டும் உங்கள் பணி.
ரகோத்தம ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தில் எனக்கு பல நேரங்களில் ஆனந்தானுபவம் கிடைத்திருக்கிறது.
// இப்படி ஒவ்வொரு கதையா இனிமேல் வரும் பதிவுகளில் பார்க்கலாம், //
ReplyDeleteஆகா!, காத்திருக்கிறேன்....
இதே திருகோவிலூர் கோபுரத்தில் ஏறி தானே ராமானுஜர் குருவின் பேச்சை மீறி ஊருக்கே உபதேசம் செய்தார்?
ReplyDeleteதகவல் சுரங்கமா இருக்கு உங்க பந்தல். :))
//பெருமாளு Right Hander போல!//
அப்ப, சிவன் லெப்ட், ரைட்னு ஆடி இருக்காரே, அவர் ஆல் ரவுண்டரா? :))
தல தீபாவளி எல்லாம் சூப்பரா போச்சு! (எப்படியும் என் வாய கிண்டுவீங்க, அதான் நான் முந்திகிட்டேன்) :p
ReplyDelete//
ReplyDeleteதிருக்கோவிலூர் ஒரு முறை சென்றுள்ளேன். அங்குள்ள பெருமாள் சன்னிதியில், பெருமாளுக்குப் பக்க வாட்டில் ஏதோ ஒரு காட்சி அர்ச்சகரால் தீபம் காட்டப்பட்டு விளக்கமும் சொல்லப்பட்டது. முதல் முறையாக அதை அக்கோவிலில் தான் கண்டேன். காலங்கள் கழிந்ததனால் மறந்து விட்டேன். அக்காட்சி பற்றி விளக்க முடியுமா ??
( ஏதொ ஒரு தசாவதாரக் காட்சி என நினைக்கிறேன்.)////
சீனா...நானும் அதனை பார்த்துள்ளேன்...
நான் பார்த்தபோது பொறுமையாக காட்டப்பட்டது...விளக்கு வெளிச்சம்தான் என்றாலும் நன்றாக பார்க்கமுடிந்தது...
இந்த பதிவின் இரண்டாவது பாகத்தில் உள்ள படத்தினை பார்த்தீர்கள் என்றால் புரியும்...
மேலும் குறிப்பிட்ட கருவறையின் படம் என்னிடம் ஹார்ட் காப்பியாக உள்ளது..
அதனை வலையேற்றலாமா இல்லையா என்று தெரியவில்லை...கேட்டால் செய்கிறேன்...
மற்றபடி அங்கவை சங்கவையின் எடைக்கு எடை பொன் கொடுக்கப்பட்டதாக ஏற்பட்ட வரலாற்றுக்கு சான்றாக தராசு மேடை என்ற இடம் கோவிலுக்குள்ளே உள்ளது...(அதில் திருவிழாக்களில் உபயோகப்படுத்தப்படும் புதிய தராசு தான் இப்போது உள்ளதென்றாலும், குறிப்பிட்ட சம்பவத்தில் இடம்பெற்ற தராசு அங்கே வைக்கப்பட்டு காலப்போக்கில் சிதைந்ததால் மாற்றப்பட்டிருக்கலாம்...)
மேலும் இந்த கோவிலுக்கு கருனாடகத்தில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வரும் காரணம் எனக்கு புரியாத ஒன்று...
கன்னட மாத்வா பிரிவினை சேர்ந்த பலர் இந்த ஊரில் விரும்பி குடியேறியிருக்கிறார்கள்...
மூலப்பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் ரகோத்தமஸ்வாமி பிருந்தாவனத்தின் முழுமையான வரலாறு எனக்கு தெரியவில்லை என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் சுவாமிகளின் கல்லறை தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் புதைக்கபட்ட நிகழ்ச்சி நடந்தது...அச்சமயம் பி.பி.சி மற்றும் சி.என்.என் போன்ற சானல்களின் வருகையும் நடந்தது...(ஒளிபரப்பட்டதா என்பது தெரியாது)
தபோவனம் என்ற அமைதியான இடமும் உள்ளது...கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஐந்து கி.மி தொலைவில் இருக்கும்...
அங்கே மிகப்பழமை வாய்ந்த கோவில் உள்ளது...அது பற்றி பிறகு எழுதுகிறேன்....
கொசுறு செய்தி : மூலப்பிருந்தாவனத்தில் வருடத்துக்கொருமுறை நடைபெறும் திருவிழாவின்போது, தெய்வீகப்பொருட்கள் விற்கும் பல விற்பனையாளர்கள் (காஷ்மீரிலிருந்து கன்னியாக்குமரி வரை) கிளம்பி வருவார்கள்...
நான் விலை கேட்ட உருத்திராட்ச கொட்டை ஒன்றின் விலை ஒரு லட்சமாம்...(ஏதோ ஸ்பெஸிபிக்கேஷன் சொன்னார், சரியா நியாபகம் இல்லை)
//செந்தழல் ரவி said...
ReplyDeleteமேலும் குறிப்பிட்ட கருவறையின் படம் என்னிடம் ஹார்ட் காப்பியாக உள்ளது..
அதனை வலையேற்றலாமா இல்லையா என்று தெரியவில்லை...கேட்டால் செய்கிறேன்...//
ரவி...மன்னிச்சிகோங்க!
வேலை மிகுதியில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப மறந்தே போனது. Will do it right now. மற்ற படங்களை அனுப்பி வையுங்க!
கருவறையின் படம் ஓவியமா? இல்லை நிழற்படமா?
பொதுவா மூலவரைப் படம் எடுக்கக் கூடாதுன்னு சொல்லுறதெல்லாம் உளவியல்/தத்துவக் காரணம் தான் - அரு உருவம் என்பார்கள்.
ஆனா அது இந்தக் காலத்தில் அப்படியே மாறிப் போயி, சக்தி கொறைஞ்சிடும் என்று கப்சா கதையா ஆக்கிட்டாங்க! :-)
ஓவியமா வரையும் போது கூடச் சில மாற்றங்களைச் செய்தே வரைவார்கள்! அச்சு அசலா வரைய மாட்டார்கள்!
காரணம்: ஆலயத்தில் உருவத்தில் காணும் கடவுளை, வீட்டுக்கும் அப்படியே எடுத்து வந்து விட்டால், சில நாளில் அதுவும் மற்ற புகைப்படங்களைப் போல அலுப்பு தட்டி விடும்! மீண்டும் சென்று காணும் ஏக்கம் இராது.
உருவமாய் கண்டதை, மனதில் அருவமாய் அசை போடும் போது, அது வேறு ஒரு அனுபவம்! அதனால் தான் இந்த ஆகம விதி! இது கருவறை மூலவருக்கு மட்டும் தான்!
இயன்ற வரை மூலவரைப் படம் பிடிக்காமல் இருப்பது நல்லது. ஆனால் படம் பிடித்து விட்டால் அதற்கு வருந்த எல்லாம் தேவை இல்லை! It's only a self regulation!
//K.R.அதியமான். 13230870032840655763 said...
ReplyDeleteஒரு சந்தேகம் KRS,
மகாபலி மன்னனின் நெற்றியில் பதிந்த பெருமாளின் பாதச்சுவடே, பின்னர் நாமம் ஆகியதா ? //
இல்லை அதியமான்.
நாமம் என்பது இறைவன் திருவடிகள்!
வளைந்த இரு பாதங்களின் வடிவம் போல் இருக்கு அல்லவா?
அதன் நடுவில் திருச்சூர்ணம், அன்னை திருமகளின் இருப்பு!
மகாபலிக்கு முன்பே நாமம் இருந்ததே! பிரகலாதன் இட்டுக் கொள்வதும் நாமம் தானே!
நாமம் என்பது அவதாரத்தால் வந்தது அன்று! அதற்கெல்லாம் முன்பே உள்ள தத்துவம் தான்!
இறைவன் திருவடிகளை என் சிந்தையில் எப்போதும் இருத்துகிறேன் என்பது தான் நாமம்!
உங்களுக்கு வாய்ப்பது எல்லாம் பெருமாள் பெயரிலேயே இருப்பதும் ஒரு வரம் தான்! வாழ்த்துக்கள்!
//Dreamzz said...
ReplyDeleteAs usual informational!//
நன்றி தல!
//மதுரையம்பதி said...
ரகோத்தம ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தில் எனக்கு பல நேரங்களில் ஆனந்தானுபவம் கிடைத்திருக்கிறது//
ஓ..மெளலி திருக்கோவிலூருக்கு frequent flyerஆ?
//ambi said...
ReplyDeleteஇதே திருகோவிலூர் கோபுரத்தில் ஏறி தானே ராமானுஜர் குருவின் பேச்சை மீறி ஊருக்கே உபதேசம் செய்தார்?
தகவல் சுரங்கமா இருக்கு உங்க பந்தல். :))//
வாய்யா பழைய மாப்ளே!
புது மாப்ளே, இப்ப வெட்டி தான்! :-)
இல்ல அம்பி
அது திருக்கோட்டியூர் கோபுரம்! மதுரை மாவட்டம்!
இது திருக்கோவிலூர்! இது வேற!
//பெருமாளு Right Hander போல!//
அப்ப, சிவன் லெப்ட், ரைட்னு ஆடி இருக்காரே, அவர் ஆல் ரவுண்டரா? :))//
ஹிஹி! வுட்டா கிரிக்கெட் டீம்ல சேத்துடுவீங்க போல! இடது காலைத் தூக்கி, வலது காலைத் தூக்கி-ன்னு பெளலிங் போடச் சொல்லாம இருந்தா சரி! :-))
//ambi said...
தல தீபாவளி எல்லாம் சூப்பரா போச்சு! (எப்படியும் என் வாய கிண்டுவீங்க, அதான் நான் முந்திகிட்டேன்)//
ஆமா, இவர் வாயி அல்வா! கிண்டறத்துக்கு! :-)
சூப்பரா போயிருக்கும் அது தெரியாதா!
என்னென்ன கவனிச்சாங்க! என்னென்ன பலகாரம் - எல்லாம் சொல்லுய்யா!
இங்கிருந்தே பசி ஆத்திக்கிறோம்! :-)
//செந்தழல் ரவி said...
ReplyDeleteமற்றபடி அங்கவை சங்கவையின் எடைக்கு எடை பொன் கொடுக்கப்பட்டதாக ஏற்பட்ட வரலாற்றுக்கு சான்றாக தராசு மேடை என்ற இடம் கோவிலுக்குள்ளே உள்ளது...//
ரவி...
சும்மா பிச்சு உதற்றீங்க! என்னமா தகவல் களஞ்சியம்! திருக்கோவிலூர்ப் பாசம் உங்க ஒவ்வொரு எழுத்திலும் தெரியுது!
//அங்கே மிகப்பழமை வாய்ந்த கோவில் உள்ளது...அது பற்றி பிறகு எழுதுகிறேன்....//
கோவில் பற்றி ரவி எழுதி, அதை நாங்க படிக்க...ஆகா என்னவொரு அனுபவம்! சீக்கிரம் எழுதுங்க தல!
//நான் விலை கேட்ட உருத்திராட்ச கொட்டை ஒன்றின் விலை ஒரு லட்சமாம்...(ஏதோ ஸ்பெஸிபிக்கேஷன் சொன்னார், சரியா நியாபகம் இல்லை)//
வாங்கினீங்களா இல்லையா? :-))
ஹூம்...அதெல்லாம் கலெக்டர்ஸ் வாங்கிப்பாங்க!
அந்தப் பணத்துல இன்னும் நாலு குழந்தைகளுக்கு உயர்நிலைக் கல்வியே கொடுத்துடலாம்!
//கருவறையின் படம் ஓவியமா? இல்லை நிழற்படமா? ///
ReplyDeleteகருவறையை படம் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் எடுக்கவில்லை...ஆனால் பல அளவுகளில் கருவறையின் படம் அச்சிடப்பட்டு, ப்ரேம் செய்யப்பட்டு அங்கேயே விற்பனை செய்யப்படுகிறது, பல பக்தர்கள் வாங்கிச்செல்வதுண்டு...
என்னுடன் வந்த பக்தரும் அதை வாங்கினார், எனக்கும் சேர்த்து...ஆகவே அந்த படம் என்னிடம் உள்ளது...ப்ரேமில் இருந்து பிரித்து ஸ்கேன் செய்தால் படம் ஆன்லைன் வந்துவிடும்...அதற்குத்தான் கேட்டேன்....
ஆனால் படத்தை வாங்கிய அதே பக்தர் மீண்டும் பலமுறை கோவிலுக்கு சென்றுவந்தார்...அவரிடம் இன்று விசாரித்தேன்...நேரில் பார்ப்பதில் அவருக்கு கிடைக்கும் இறை அனுபவம் படத்தை பார்ப்பதில் இல்லையாம்...
ஏற்கனவே சொல்லியபடி பூஜிப்பவர் பல தீபம் கொண்ட பெரிய விளக்கை ஏந்தியபடி கருவறையில் மேலும் கீழுமாக - இது மாபலி மன்னன், இது வானத்தை தொடும் காட்சி, இவர்கள் ஆழ்வார்கள் (இடது ஓரம்) என்று காட்டும் காட்சி புதிய அனுபவமாகத்தான் இருந்தது முதல்முறை பார்த்தபோது எனக்கு...
ஸ்ரீ ஞானானந்த தபோவனம் மற்றும் அங்கே வாழ்ந்து மறைந்த சுவாமிகள் பற்றித்தான் நான் எழுதுவதாக ஒப்புக்கொண்டேன்...அப்படி எழுதினால் இதுவரை வலைப்பதிவு படிக்காத எனது தந்தையாரும் படிக்கக்கூடும்...
காரணம் நாற்பதாண்டுகளுக்கு முன் சுவாமிகள் வாழ்ந்துகொண்டிருந்தபோது தினமும் தபோவனம் வழியாகத்தான் நடந்து வந்து திருக்கோவிலூர் பள்ளியில் படித்தாராம் என்னுடைய தந்தையார்...அப்போதெல்லாம் சாலையோரம் அமர்ந்து - ஒரு பானையில் நீர்மோரை வைத்துக்கொண்டு வழிப்போக்காக செல்லுபவரையெல்லாம் அழைத்து உபசரிப்பாராம் சுவாமிகள்..
பசி என்று வருபவர்களை உள்ளே அழைத்து "முறம்சோறு படிகுழம்பு" விருந்து செய்வாராம்...
அதாவது முறத்தில் சாதத்தை கொண்டுவந்து இலையில் கொட்டி, படியில் குழம்பை ஊற்றுவாராம்...
சமீபகாலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் அவரது நினைவை போற்றும் வகையில் இதே போல் அன்னதானம் செய்வது வழக்கம்...
இவரது பாடசாலையில் தான் முதல் முதலில் பார்ப்பணரல்லாதோர் அர்ச்சகர் பயிற்சி பெற்றார்கள் !!!!!
சமீபகாலத்தில் பக்தர்களால் பெரிதும் அறியப்பட்டு போற்றப்பட்ட யோகி.ராம் சுரத் குமார் மற்றும் ரமணர் ஆகியோரின் காலத்தில் இருந்த இந்த சுவாமிகள் அதிகம் அறியப்படாதவர், என்னுடைய பங்களிப்பை நான் எழுதி செய்வேன்...
//அவரிடம் இன்று விசாரித்தேன்...நேரில் பார்ப்பதில் அவருக்கு கிடைக்கும் இறை அனுபவம் படத்தை பார்ப்பதில் இல்லையாம்...//
ReplyDeleteஹிஹி...இதைத் தான் சொன்னேன்! சில அனுபவங்களை மனசுக்குள் தவிர வேறு எதிலும் அடக்கவே முடியாது தல! :-)
//இது மாபலி மன்னன், இது வானத்தை தொடும் காட்சி, இவர்கள் ஆழ்வார்கள் (இடது ஓரம்) என்று காட்டும் காட்சி புதிய அனுபவமாகத்தான் இருந்தது//
எனக்கும் அப்படித் தான் இருந்துச்சு ரவி! மாபலியின் மகன் நமீசி, குரு சுக்கிராச்சாரியார் கூட அருகே இருப்பார்கள்!
//அப்படி எழுதினால் இதுவரை வலைப்பதிவு படிக்காத எனது தந்தையாரும் படிக்கக்கூடும்...//
அருமை! எழுதுங்கள்!
//பசி என்று வருபவர்களை உள்ளே அழைத்து "முறம்சோறு படிகுழம்பு" விருந்து செய்வாராம்...//
இதை நானும் கேள்விப்பட்டுள்ளேன்!
//இவரது பாடசாலையில் தான் முதல் முதலில் பார்ப்பணரல்லாதோர் அர்ச்சகர் பயிற்சி பெற்றார்கள் !!!!!//
உம்...மிகவும் நல்ல விடயம்!
திருக்கோவலூர் ஜீயரிடமும் இதே போல் பயில்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்!
//யோகி.ராம் சுரத் குமார் மற்றும் ரமணர் ஆகியோரின் காலத்தில் இருந்த இந்த சுவாமிகள் அதிகம் அறியப்படாதவர், என்னுடைய பங்களிப்பை நான் எழுதி செய்வேன்...//
அவசியம் செய்யுங்க ரவி! ஞானானந்தரின் சீடர் ஹரிதாஸ் கிரி அவர்கள், தமது குரு பற்றிய நூல்களைச் செய்துள்ளார்! Reference வேண்டுமென்றால் பாருங்க!
உங்கள் தகவல்கள் அனைத்துக்கும் நன்றி!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteரவி
ReplyDeleteஎப்படி இருக்கீங்க? நலமா?
நீங்கள் சொன்ன வண்ணம் மின்னஞ்சல் முகவரி உள்ள அந்தப் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்! அடுத்த முறை "பிரசுரத்துக்கு அல்ல"-ன்னு சொல்லிப் போடுங்க! :-)
//அது திருக்கோட்டியூர் கோபுரம்! மதுரை மாவட்டம்!
ReplyDelete// Now it is in Sivagangai district
செந்தழல் ரவி அவர்களே. வணக்கம். இதை நான் இப்பொழுதுதான் பார்த்தேன் - 26-9-2019. 12 வருடம் கழிந்துவிட்டது. ஞானானந்த ஸ்வாமிகளிடம் உங்களுக்கு பழக்கம் உண்டா என்னிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா ? நன்றி. N.R.Ranganathan. 9380288980. nrpatanjali@yahoo.com
ReplyDelete