கைசிகப் புரட்சி! "கீழ்க்குலத்தான்" அந்தணனுக்குக் காட்டிய வழி! (மீள்பதிவு)
கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)
இன்று கைசிக ஏகாதசி (Nov-21, 2007). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!
சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!
ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!
அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான்! - இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று!
தொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு? அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....
நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்!!
அவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்!
வைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் "நம்" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் இறைவனை "நம்பெருமாள்" என்றே அழைக்கின்றனர்! அதே போல் நம்பாடுவான்! அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்!
இப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று! பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு!
இங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.
குறுங்குடி நம்பி | அரையர் சேவை |
அன்று ஒரு நாள், ஏகாதசி. இரவுப் பூசைக்கு பெருமானைப் பாடி வணங்கக் கோவிலுக்குச் சென்றான். வழியிலும் பாடிக் கொண்டே சென்றதால் அவன் எதிரில் வந்து நிற்கும் பயங்கரத்தை முதலில் கவனிக்க வில்லை!
ஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;
என்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்!!
அந்தணனாகவோ இல்லை உயர் பொறுப்பிலோ இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள்! நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;
ராட்சசன்: அடே, பாடிக் கொண்டா போகிறாய்? சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...!
நம்பாடுவான்: இன்று ஏகாதசி அல்லவா?....
ராட்சசன்: அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது?"
உயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;
வந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;
நம்பாடுவான்: அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே! நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா?
ராட்சசன்: "டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது!"
என்ன செய்வான் நம்பாடுவான்? பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ? அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.
ஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே!
அடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.
தீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்!
வேறு யார்? நம் குறுங்குடிப் பெருமாள் தான்!
"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை! நீ தப்பிச் சென்று விடு", என்று ஆசை காட்டினார் கிழவர்!
நம்பாடுவான்: "என்ன சொன்னீர்கள் தாத்தா? பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, என்னை நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா? அடியான் சொன்ன சொல் தவறலாமா?"
விடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். "பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று? இதோ வாக்கு மாறவில்லை! புசித்துக் கொள்", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
மனம் மாறியது பேய்! இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை முதலில் விட்டது!
ராட்சசன்: "உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக்குக் கொடுத்து விடு! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.
நான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்!
"சரி நீயே விரும்பிக் கேட்பதால், கடைத்தேற இதோ", என்று தன்னுடைய புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான். பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;
"கீழ்க்குல" நம்பாடுவானை அந்த "அந்தணன்" விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.
(Re-enactment) |
ஆண்டுதோறும் திருக்குறுங்குடி கோவிலில் இது நாடகமாக நடிக்கப்படுகிறது! (Re-enactment) . இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ். அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். இந்தக் கிராமியக் கலை பற்றி, இந்தச் சுட்டியில் காணலாம்!
இன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது! இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்!
இந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை!
விளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, "புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்" என்றெல்லாம் ஆடாமல்,
இறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்!
இறைவனைத் துதிக்கச் சாதியில்லை!
அடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும்! இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் ராமானுஜர்!
என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்! யார் தெரியுமா? அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்! இதுவல்லவோ செயலில் புரட்சி!
அமர ஓர் அங்கம் ஆறும், வேதம் ஓர் நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,
நுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே
இந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள்!
வாருங்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்!
(சென்ற ஆண்டு, கைசிக ஏகாதசிக்கு இட்ட பதிவை, மீள்பதிவாக இடுகிறேன்...இந்த ஆண்டும்! - பழைய பதிவுக்கும், பின்னூட்டக் கருத்துகளுக்கும் க்ளிக்கவும்)
போன ஆண்டு இதை தவறவிட்டேன். இப்போது படிப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. பதிவுகளைப் பார் என்றால் காத தூரம் ஓடும் என் வீட்டம்மா இதை நின்று நிதானமாக படித்தது இன்னொரு அதிசயம்.
ReplyDeleteஅடுத்த ட்ரிப் அவ்வூருக்குத்தான் என ஆணையும் போட்டு விட்டார். :))
அன்புடன்,
டோண்டு ராகவன்
அட ஒருவருடம் ஓடிவிட்டதா?.. போன வருடம் இந்த பதிவு தான் நான் படித்த உங்களுடைய முதல் பதிவு....படித்து அனானியா பின்னூட்டம் போட்டு, பின்னர் பழைய பதிவுகளையெல்லாம் படித்தது நினைவுக்கு வருகிறது....
ReplyDeleteகண்ணபிரான்,
ReplyDeleteசுவையாக எழுதி இருக்கிறீர்கள், தங்களுக்கே உரிய "தனி வழியில்" (நடையில்:))!
கைசிக நடனம் பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருந்தேனே, வாசித்தீர்களா என்று தெரியவில்லை!
http://balaji_ammu.blogspot.com/2007/01/289.html
நன்றி.
Dondu Sir,
You can also read that posting in the given link :)
என்றென்றும் அன்புடன்
பாலா
SAKO...
ReplyDeleteManitharkal evvalavuthan padithalum avaravar avaravar vazhikalilthaan payanikirarkal..
kaaranam..naam thaan..PARENTS...
avarkal thaan manitharkalil uyarvu/thaalvu kalai patti sariyana oru vizhupunarchiyaiyum nalla pothanaiyum eduthuraikkavendum..but avarkal enna solkirarkal..nam parambarai ithuthaan ippadithaan...ithil irunthu aam pirala koodathu..paavam entallavaa pothikirarkal..pillai kal pin enna pannum....ilamaiyilae pathinthu vidukirathu..unless avarkal unmaiyai unarnthal oliya...
avarkal yaen unmaiyai unaravendum..
they feel so comfortable being so... ..more over...nam society set up pum appadithan irukirathu..
who is to blame...muthalil elders maaravendum...unmai nilamaiyai unarnthu..pirarukkum unartha vendum.. AVAN oruvanae Uyarnthavan.. anaithu padaippukalum avanukku adimaithaan..naam ellorumae antha NATURE rin kattupaatukkul thaan irukirom enta unmaiyai unaravendum..e.g. Tsunami...Cyclon.. nee yaar entru paarpathillai...nee uyarnthavan entu avanai viduvathum illai...avan thaalnthavan entru avanai kapalikaram pannuvathum illai.. Iyarkkaiku ellaam ontuthaan. ithai manitharkal therinthum...veembukku uyarvu thaalvukalai kadaipidikiraarkal..main reason is they want some slaves to serve them...thalnthavan thalnthavanakavum..padiparivu illathavanagavum.. irukkumvaraithaan avarkal aathikkam selutha mudiyum..very fact.... ithil..KARMA vai vaera ilupparkal.. avanukku eluthiyathu avvalavuthan..athu avan karma / thalai eluthu.. intha mooda palakkam oliyanum...muthalil...
IRAIVA...VAAA ... UNMAIYAI EDUTHURAI... ENGKU IRUKIRAAI INTHA KODUMAIKALAI ELLAM PAARTHUKONDU...NEEE IRUKIRAAYAA...
UN PAERILUM...VITHI ENTA PAERILUM INKU KODUMAI NADAKIRATHU...IYARKKAYAE YAEN INTHA MOUNAM..
MANITHANUKKU IYARKKAI...BRAIN ENTA POKKISATHAI VAZHANGI IRUKIRATHU...ATHUTHAN..IRAIVAN...
NAAM THAAN ATHAI PAYANPADUTHI NANMAI THEEMAIKALAI UNARVATHAI POLA ANAITHAIYUM UNARNTHU SINTHITHU SEYALAPADA VENDUM...ATHU THAAN IRAIVAN "MANITHANUKKUTHAAN MOOLAIYAI KODUTHUVITTOMAE ..AVAN SEYAL PADATTUM" ENTU MOUNAM KAAKIRANO.... thaalnthavanukku yaethu IRAIVAN...avanukku therinthathellaam ulaippu, adimaithanam..saapadu thookam..pin kadum ulaippu.. veru sinthanai yaethu...kaalaiyil..vayalukku pokira ulavan...kulithuvittaa sella mudiyum...malai vantha pen avasara avasaramaka yaetho ontai samaithu koduthuvittu...yaethu kulithu...pin enkae naeram..suthamaka irukka..kadum..ulaippum oru reason noh..asuthamaka irukka..UYAR KULATHU PENKALUKKU VAERU VELAI...KULITHU..ALANKARITHU..
POOJAI PUNASKARAM ENTU...POLUTHU POKUM... KUTTA YAEVALKAL SEYA velai aal...then yaen suthamaka irukka mudiyathu...ulaikkum oru penmani seevi singarithu...kovilukku poykondu irunthaal..saapaattukku yaar tharuva...iraivana tharuvaan.. already namakku PUTHUYAI koduthirukkanae...sorry...
கண்ணன், அருமையான பதிவு. பதிவுக்கு நன்றி.
ReplyDeleteடோண்டு ஐயா,
//அடுத்த ட்ரிப் அவ்வூருக்குத்தான் என ஆணையும் போட்டு விட்டார். :))//
அந்தக் கோயில் தென்கலை ஐய்யங்கார்களுக்ககானது என்று 'புலிநகக் கொன்றை' நாவலில் படித்தேன். உங்களுக்குப் பரவாயில்லையா?
(சும்மா ஜாலிக்காக மட்டுமே கேட்டேன். தவறாக நினைக்காதீர்கள்.)
ஓகை ஐயா. நீங்கள் ஜாலிக்காகக் கேட்டதில் ஒரு கேள்வி எனக்கு. திருக்குறுங்குடி கோவில் தென்கலையாருக்கானதா தென்கலை ஐயங்காருக்கு மட்டும் ஆனதா? அடியேன் தென்கலை, வடகலை என்பார்களில் எல்லா சாதியினரும் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். சரி தானா?
ReplyDelete//dondu(#11168674346665545885) said...
ReplyDeleteபோன ஆண்டு இதை தவறவிட்டேன். இப்போது படிப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது.//
நன்றி டோண்டு சார்.
இறைவனைத் துதிக்க சாதிகள் தேவையில்லை என்பது மனதில் நிறையுமாறு செய்தவன் தானே குறுங்குடி நம்பி!
//பதிவுகளைப் பார் என்றால் காத தூரம் ஓடும் என் வீட்டம்மா இதை நின்று நிதானமாக படித்தது இன்னொரு அதிசயம்.
அடுத்த ட்ரிப் அவ்வூருக்குத்தான் என ஆணையும் போட்டு விட்டார். :))//
மிக்க மகிழ்ச்சி! போய், வணங்கி வாருங்கள்!
அப்படியே அந்த நாடகக் கலைஞர்களிடம் முடிந்தால் பேசி வாருங்கள்!
//மதுரையம்பதி said...
ReplyDeleteஅட ஒருவருடம் ஓடிவிட்டதா?.. போன வருடம் இந்த பதிவு தான் நான் படித்த உங்களுடைய முதல் பதிவு....//
ஆமாங்க மெளலி...இந்தப் பதிவைத் தான் நீங்க linkஉம் கொடுத்தீங்க, மதுரையம்பதி வலைப்பூவில்!
//படித்து அனானியா பின்னூட்டம் போட்டு, பின்னர் பழைய பதிவுகளையெல்லாம் படித்தது நினைவுக்கு வருகிறது....//
ஓ நீங்க தானா அந்த அனானி! :-)))
//அந்தக் கோயில் தென்கலை ஐயங்கார்களுக்ககானது என்று 'புலிநகக் கொன்றை' நாவலில் படித்தேன். உங்களுக்குப் பரவாயில்லையா?//
ReplyDeleteதென்திருப்பேறை மகரநெடுங்குழைகாதனின் பக்தனிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//enRenRum-anbudan.BALA said...
ReplyDeleteகண்ணபிரான்,
சுவையாக எழுதி இருக்கிறீர்கள், தங்களுக்கே உரிய "தனி வழியில்" (நடையில்:))!//
வாங்க பாலா! ரொம்ப நாளாச்சு ஒங்க கிட்ட உரையாடி!
தனி வழியா? - ஹிஹி - அதெல்லாம் தலைவர் படத்துல! :-)
//கைசிக நடனம் பற்றி நான் ஒரு பதிவு எழுதியிருந்தேனே, வாசித்தீர்களா என்று தெரியவில்லை!
http://balaji_ammu.blogspot.com/2007/01/289.html//
ஓ வாசித்தேனே! திருக்குறுங்குடி - Model Village உம் வாசித்தேன் பாலா!
//ஓகை said...
ReplyDeleteகண்ணன், அருமையான பதிவு. பதிவுக்கு நன்றி.//
தாங்கஸ் தலைவரே!
//டோண்டு ஐயா,
அந்தக் கோயில் தென்கலை ஐய்யங்கார்களுக்ககானது என்று 'புலிநகக் கொன்றை' நாவலில் படித்தேன். உங்களுக்குப் பரவாயில்லையா?
(சும்மா ஜாலிக்காக மட்டுமே கேட்டேன். தவறாக நினைக்காதீர்கள்.)//
ஹிஹி
என்ன இது ஓகை ஐயா! கலாய்க்கறீங்க!
ஆனா கோவில் பொதுவானது தான்!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஓகை ஐயா. நீங்கள் ஜாலிக்காகக் கேட்டதில் ஒரு கேள்வி எனக்கு. திருக்குறுங்குடி கோவில் தென்கலையாருக்கானதா தென்கலை ஐயங்காருக்கு மட்டும் ஆனதா?//
அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை குமரன்.
தென்கலை/வடகலையில் ஐயங்கார்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று ஒன்றுமே கிடையாது!
அனைத்துச் சாதியனருமே தென்கலை/வடகலைப் பிரிவுகளில் இருக்கிறார்கள்!
திருக்கச்சி நம்பிகள் நகரத்தார் குலத்தவர்!
பழைய வானமாமலை ஜீயர் ஒருவர் பிற்பட்ட வகுப்பினர்-தென்கலைப் பிரிவில் இருந்தவர்.
இத்தலம் திருக்குறுங்குடி ஜீயர் உறையும் தலம் மற்றும் இதற்கும் வானமாமலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு! அவ்வளவு தான்! தென்கலை வடகலை பேதங்கள் எல்லாம் கோவிலில் இல்லை!
//Anonymous said...
ReplyDeleteSAKO...
Manitharkal evvalavuthan padithalum avaravar avaravar vazhikalilthaan payanikirarkal..//
இதில் தவறே இல்லீங்க சகோதரரே!
அவரவர் அவரவர் வழிகளைத் தேடிக் கொள்வது தான் சிறந்தது!
அடிப்படை மாறவில்லை ஆனாலும் கருத்துக்கள் மாறிக் கொண்டே தான் இருக்கும்! இதற்கு பெற்றவர் உற்றவர் யாரும் பொறுப்பாக முடியாது! Walk the talk என்று தந்தை நடந்து காட்டலாமே தவிர எதையும் திணிக்க முடியாது!
//avarkal yaen unmaiyai unaravendum..
they feel so comfortable being so//
சரியே
//ATHU THAAN IRAIVAN "MANITHANUKKUTHAAN MOOLAIYAI KODUTHUVITTOMAE ..AVAN SEYAL PADATTUM" ENTU MOUNAM KAAKIRANO//
ஒரே தத்துவ முத்துகளை உதிர்க்கின்றீகள்! நன்றி!
உங்கள் கருத்துக்கள் பலவும் பேசலாம், ஆனால் இந்தப் பதிவில் இது தொடர்பாக மட்டும் பேசலாமே!
//kaalaiyil..vayalukku pokira ulavan...kulithuvittaa sella mudiyum...//
ஹிஹி! அவசியமே இல்லை!
//UYAR KULATHU PENKALUKKU VAERU VELAI...KULITHU..ALANKARITHU..
POOJAI PUNASKARAM ENTU...POLUTHU POKUM//
எங்கள் கிராமத்து பெண்மணிகள், so called உயர் குலப் பெண்களை விடச் சுத்தம், பக்தி எல்லாம் உண்டு!
வரப்பறுக்கப் போகும் போது அவர்கள் சுத்தத்தைப் பாக்கணுமே! செய்யும் தொழிலே தெய்வம்!
இங்கு தேவைப்படுவது மானுடம் சார்ந்த அன்பும் ஆன்மீகமும் தானே தவிர, படோபடங்கள் இல்லை!
உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது!
இன்னொரு நாள் பேசலாம்!
First of all I shd. thank you for having read ..then understanding the things
ReplyDeleteஅடியவர்கள் ஒருவரோடு ஒருவர், இறைவனை அனுபவித்து, அவன் குணானுபவங்களைப் பேசியும் உணர்ந்தும் திளைப்பது இன்பம் தான்!
paesuvatharkku ontum illai sago purithal thaan mukkiyam..athu ungkalidathil - avanin adiyavaridathi irupathaga pattathu yaetho eluthivittaen avvalavuthaan
a section of people are also a part of this socieity that's all -mattapadi AVANAI MANATHIL NIRAITHU KONDAL NAM ARPA PUTHIKKU ELLAM PURIYUMO ENNAVO அடியவர்கள் ஒருவரோடு ஒருவர், இறைவனை அனுபவித்து, அவன் குணானுபவங்களைப் பேசியும் உணர்ந்தும் திளைப்பது இன்பம் தான்!
Ithu aathangam theriya villai but I wanted to tell the other side fact bex. I consider u a good human.
once again ungkal purithalukku nanti..
புலையரை விட தாழ்ந்தவர் என்றால் என்ன..அர்த்தம் அய்யா...புலையர்கள் தாழ்ந்தவர்கள்...என்று பொருள் வரவில்லையா...இதை நீங்கள்..இப்படி கூவி கூவி கொண்டாடத்தான் வேண்டுமா..
ReplyDelete@KRS, போன வருஷம் படிக்கலை.(இந்த வருஷம் மட்டும் என்ன வாழுதாம்?னு கலாய்க்க கூடாது) நன்றி ஹை! :)))
ReplyDelete//தென்திருப்பேறை மகரநெடுங்குழைகாதனின் பக்தனிடம் கேட்க வேண்டிய கேள்வியா இது?
//
"என் உள்ளங்கவர் கள்வன்" இந்த வரியை விட்டுடீங்களே சார். :p
unga moolama kaisika egadesi pathi therinjuthu.. romba santhoshamnga.... intha niraya vishayangal.ezhuthunga
ReplyDeleteகுமரன், கண்ணபிரான்,
ReplyDeleteசும்மா டோண்டு ஐயாவை கொஞ்சம் கலாய்க்கத்தான் தென்கலைப் பற்றிக் கேட்டிருந்தேன். இதுபற்றி விவாதித்தால் பதிவு திசை மாறிப் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. வேறு பதிவில் பேசலாம். புலிநகக் கொன்றை மிகச்சிறந்த நாவல். இதில் ஏராளமான செய்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் குவிந்து கிடகின்றன. படித்து மகிழ்வீர்களாக!
//TBCD said...
ReplyDeleteபுலையரை விட தாழ்ந்தவர் என்றால் என்ன..அர்த்தம் அய்யா...புலையர்கள் தாழ்ந்தவர்கள்...என்று பொருள் வரவில்லையா...//
ஹூம்...
வாங்க TBCD தல!
பதிவின் தலைப்பைப் பாருங்களேன்! கீழ்க்குலத்தான் என்று சொல்லி "", மேற்கோள் குறி போட்டிருப்பேன்!
"அப்படின்னா கீழ்க்குலம்-னு ஒன்னு இருக்குன்னு சொல்ற இல்லையா நீ", என்று என்னிடம் யாராச்சும் கோபித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கு!
ஆனா நீங்க என் நண்பர், அப்படிங்கறதனால உங்களுக்குத் தெரியும் நான் அப்படி சொல்ல வரலை என்று! சோ கால்ட்டு கீழ்க்குலம்-னு தான் அதுக்குப் பொருள்!
அதே போல,
"அடே, நீங்க சொல்லுறீங்களே, so called புலையர், அவர்களைத் தாழ்ந்தவர்-ன்னு தானே சொல்லுறீங்க! நீங்க அவர்களை விடத் தாழ்ந்து போய் விட்டீர்களே" என்று தான் ஆழ்வாரும் சொல்ல வருகிறார்!
நாம பாட்டில் word by word literal-aa எடுத்துக் கொள்ள முடியாது. அதன் நோக்கம் என்னன்னு தான் பாக்கணும்!
அப்பர் சுவாமிகள்
ஆவுரித்து தின்று உழலும் புலையர் ஏனும்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!
அப்படின்னு பாடுவார்!
"புலையரேனும்" சொல்லிட்டாரேன்னு வருத்தப்படுவோமா? அவங்களே எனக்குக் கடவுள்-னு சொல்லுறாரே-ன்னு மகிழ்ச்சி தானே அடைவோம்!
என்னால் இயன்ற வரை, உங்க ஐயத்தை விளக்கி இருக்கேன்னு நினைக்கிறேன் தலைவா! ஓக்கேவா?
//ambi said...
ReplyDelete@KRS, போன வருஷம் படிக்கலை.(இந்த வருஷம் மட்டும் என்ன வாழுதாம்?னு கலாய்க்க கூடாது) நன்றி ஹை! :)))//
அட,
கலாய்க்க சான்ஸ் கொடுக்காம,
நாங்க கலாய்க்கலாம் என்று நினைப்பதையும், நீங்களே சொல்லிட்டு....
எங்கள் பதிவுலக கலாய்த்தல் உரிமையின் குரல்வளையை நசுக்கும் அம்பியின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! :-))))
//dubukudisciple said...
ReplyDeleteunga moolama kaisika egadesi pathi therinjuthu.. romba santhoshamnga.... intha niraya vishayangal.ezhuthunga//
வாங்க சுதாக்கா!
நீங்க கொடுக்கும் ஊக்கத்தில் இன்னும் இது பற்றி எல்லாம், குமரன், ஜிரா, நானு - எல்லாரும் இன்னும் எழுதறோம்!
அன்புள்ள கண்ணபிரான்,Kaisiki Natakam என்ற பதிவு பணக்காரர் பாராட்டுபெற விரும்பி தமிழை தமிழ்மக்களை மறந்து ஆங்கிலத்தில் அரையர் சேவையை வெளியிடும் காலநிலையில் தமிழில் ஆர்வம் கொண்ட உங்கள் பணி போற்றும்படி அமைகிறது. வாழ்க நலமுடன் வளமுடன்.
ReplyDeleteஅன்பன் ராதாகிருஷ்ணன்.
நவம்பர் 22, 2007
தரும வியாதர்,உதங்கர் கதைகளிலும்
ReplyDeleteஇருக்குல்லையா?
அதைத்தான் 'குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'னு பாடியிருக்கார்
நம்ம பாரதி.
சரி..நீங்கள் விரும்பி தாழ்ச்சி சொல்லவில்லை..நிகழ்வை சொல்ல விரும்புகிறீர்கள்.
ReplyDeleteஇந்த நிகழ்வை பதிய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது(உங்களைச் சொல்லவில்லை..ஆழ்வரை )..இழிவான (என்று சொல்லப்படும்) மக்கள் கூட இறை நம்பிக்கையால், அந்தனர்களூக்கு சாப விமோசனம் கொடுக்கலாம்..என்று சீனி தடவிய மிட்டாய் தருவதற்கு தானே..
..இதிலும் இது அந்தனர்களை மட்டுமே பேசுகிறது..மற்றைய மக்களுக்கு இல்லை..அந்தனர்கள் தங்கள் நிலையில் இருந்து வழுவினால், புலையர்களை விட கீழானவர்கள் ஆவார்கள் என்று தானே சொல்லுகிறது..
ஒரு உதாரணத்துக்கு...கண்ணபிரான் xxxxxxxx இருந்தாலும், அவர் இறைவனை பத்தி பதிவிடுவதால், அவர் எனக்கு நல்லவர் என்று சொன்னல், xxxxxx என்று சொல்வது அடிப்பட்டு விடுமா.. (xxxxxx-என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்..)
பழைய பாடல்களிலே, பேதம் பாராட்டி பாடிய பாடலகளை நாம் அங்கிகரிக்கும் போது, நாம் பின்னோக்கி போகின்றோம்.
புரிதலுக்கு நன்றி..!!
//TBCD said...
ReplyDeleteஇந்த நிகழ்வை பதிய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது (உங்களைச் சொல்லவில்லை..ஆழ்வரை )..//
வாங்க தல! விளக்கத்துக்கு நன்றி!
அவசியம் ஏன் ஏற்பட்டது என்றால்,
தங்களை "உயர் குலம்" என்று கருதிக் கொண்டு, உள்ளன்புடன் வரும் உண்மையான அடியவர்களைத் தாழ்த்திச் சொன்னார்கள். செயலில் காட்டினார்கள்!
இது கண்டு ஆழ்வாருக்கு ஏற்பட்ட அறச் சீற்றத்தின் வெளிப்பாடே அந்தப் பாட்டு!
//இழிவான (என்று சொல்லப்படும்) மக்கள் கூட இறை நம்பிக்கையால், அந்தனர்களூக்கு சாப விமோசனம் கொடுக்கலாம்..என்று சீனி தடவிய மிட்டாய் தருவதற்கு தானே..//
இல்லை!
சீனி தடவிய மிட்டாய் இல்லை!
அப்படி மிட்டாயை யாருக்குத் தர வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது? யோசித்துப் பாருங்கள்!
அவர் வேண்டுமானால் கண்டு கொள்ளாமலேயே போய் இருந்திருக்கலாம்! அந்தக் கால கட்டத்தில் யாரும் அவரைப் பிடித்து உலுக்கி இருக்கப் போவதில்லை! அவர் செய்தது ஒரு எச்சரிக்கை என்று தான் நான் கருதுகிறேன்!
அவர் இதை இறைவனைப் பார்த்துத் தான் பாடுகிறார்! "அரங்க மாநகர் உளானே, இவர்கள் என்ன தான் வேதம் ஓதினாலும், வேள்வி செய்தாலும், உன் அடியவர்களை இழித்துப் பேசினால், இவர்களைப் போலத் தாழ்ந்தவர் உண்டா?" என்று அரங்கனிடம் தான் கேட்கிறார்.
இவர் விடுப்பது எச்சரிக்கை தான்!
//அந்தனர்கள் தங்கள் நிலையில் இருந்து வழுவினால், புலையர்களை விட கீழானவர்கள் ஆவார்கள் என்று தானே சொல்லுகிறது..//
இல்லை இல்லை!
தங்கள் நிலையில் இருந்து வழுவினால் என்று சொல்லவில்லை!
அவர்கள் செய்யும் வேள்விகளை எல்லாம் விட்டால் இப்படி ஆகி விடுவார்கள் என்று சொல்லவில்லை!
பாடலை இன்னொரு முறை படியுங்கள்!
நீங்கள் என்ன தான் வேள்வி செய்தாலும்...அடியவரைப் பழித்தால்...? என்று தான் சொல்கிறது, எச்சரிக்கிறது!
//xxxxxx என்று சொல்வது அடிப்பட்டு விடுமா.. (xxxxxx-என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்..)//
உங்களுக்கு அந்த ஒரு சொல் மிகவும் உறுத்தி விட்டது போலும்!
காலக் கண்ணோடத்தோடு பார்த்தால், உங்களுக்குப் புரிந்து விடும்.
அன்று ஒடுக்கபட்ட அடியாருக்குக் குரல் கொடுக்க யாருமில்லை! அப்போது இவர் வந்து இப்படி ஆணித்தரமாகப் பேசுகிறார்.
சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால், ஆழ்வார் மட்டுமில்லை, அப்பர் சுவாமிகள், குமரகுருபரர், அருணகிரி, சித்தர்கள், அவ்வளவு ஏன் கருணையே உருவான வள்ளலார் என்று எல்லாரும் இப்படி பொய்யான ஆசாரத்தை இடித்துரைத்து உள்ளார்கள்!
அவர்கள் இடித்ததை விடுத்து, சொல்லைப் பிடித்தால், அவர்கள் எல்லாரும் அருளற்றவர்கள் என்றல்லவா ஆகி விடுவார்கள்?
//பழைய பாடல்களிலே, பேதம் பாராட்டி பாடிய பாடலகளை நாம் அங்கிகரிக்கும் போது, நாம் பின்னோக்கி போகின்றோம்//
பாடல்களை வைத்துக் கொண்டு பேதம் வளர்த்தால் அது மாபெரும் தவறு தான்!
ஆனால் பாடல்களில் உள்ள சமதர்மத்தை வலியுறுத்தி, இறைவனைச் சாதியால் எவரும் உரிமை கொண்டாட முடியாது என்று நிலைநாட்டினால், அது தவறில்லை தானே?
உங்கள் புரிதலுக்கும் நன்றி TBCD..!!
//R. said...
ReplyDeleteஆங்கிலத்தில் அரையர் சேவையை வெளியிடும் காலநிலையில் தமிழில் ஆர்வம் கொண்ட உங்கள் பணி போற்றும்படி அமைகிறது.//
நன்றி ராதாகிருஷ்ணன்.
அரையர் சேவை, முற்றிலும் தமிழ்ச் சேவை! வடமொழி கூட இருக்காது!!
முழுக்க முழுக்க ஆழ்வார்களின் தீஞ்சொல் தமிழ் அமுது!
//துளசி கோபால் said...
ReplyDeleteதரும வியாதர்,உதங்கர் கதைகளிலும்
இருக்குல்லையா?//
ஆமாம் டீச்சர்! இருக்கு!
நீங்க ஒரு பதிவு போடுங்களேன் தருமவியாதர் பற்றி!
அரவிந்த் (TBCD),
ReplyDeleteநீங்கள் சொல்வதைப் போன்ற உணர்வைப் பல முறை நானும் பெற்றிருக்கிறேன். பாரதியார் 'நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நானிலத்தில் இல்லை' என்று சொன்னதைப் படித்த போதும் ஒளவையார், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மற்ற புலவர்கள், அருளாளர்கள் என்று எல்லோரும் சாதியையும் சாதிக் கொடுமையையும் இழித்துக் கூறும் போது இந்த வகையில் சொல்லியிருப்பதைப் படிக்கும் போது ஒரு மாதிரியாக இருக்கும். இன்றும் அப்படிப்பட்ட உணர்வுகள் தோன்றுவதுண்டு. இன்றைக்கு இப்படி நமக்குத் தோன்றுவதற்குக் காரணம் 'சாதி வேறுபாடு சொல்லக்கூடாது' என்ற உணர்வும் 'சாதி வேறுபாட்டை சொல்வது கேவலம்' என்ற உணர்வும் குறைந்த பட்சம் பேச்சளவிலாவது படித்த மக்களிடையே இன்று இருப்பது தான். அதுவே முற்போக்கான கருத்தும் உணர்வும் என்ற எண்ணமும் இருப்பதும் ஒரு காரணம். அப்படி இல்லாத அந்தக் காலத்தில் இப்படி சொன்னது சரியாக இருந்திருக்குமோ என்னவோ?
சாதி வேறுபாட்டைப் போல் இன்னொரு வேறுபாட்டும் நம்மிடையே இருக்கிறது - ஏழை பணக்காரன் என்னும் வேறுபாடு. ஆனால் இந்த ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டிற்கு எதிராக நம்மிடையே இருக்கும் கருத்தாக்கங்களும் இயக்கங்களும் எண்ணிக்கையளவிலும் வீச்சின் அளவிலும் சாதி வேறுபாட்டிற்கு எதிராக நம்மிடையே இருப்பவற்றை விடக் குறைவாக இருக்கிறது. நீங்கள் அதனை ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்', 'மனத்தில் அன்பு உள்ளவனே பணக்காரன்; அன்பு இல்லாதவன் ஏழை', 'மனத்தில் அமைதி உடையவனே பணக்காரன்; மற்றவன் ஏழை' என்று சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் நம் மனத்தில் இடறுதலை ஏற்படுத்துவதில்லை. இங்கும் அன்பு, அமைதி, நோயற்ற வாழ்வு என்பவற்றை உயர்த்திக் கூற வேண்டி மறைமுகமாக ஏழை என்றால் கீழ்; பணக்காரன் என்றால் மேல் என்ற கருத்து சொல்லப்படுகிறதே. எதிர் காலத்தில் அப்படி மறைமுகமாகச் சொல்லப்படுவதை கேள்வி கேட்கும் காலம் வரலாம். ஆனால் இன்றோ இவை நமக்கு அவ்வளவு இடறுதலை ஏற்படுத்துவதில்லை. அதே போல் தான் இந்த அருளாளர்கள் பாடிய பாடல்களும்.
அப்படி அந்தக் காலத்தில் இருந்த ஏற்றத்தாழ்வினை எதிர்த்துக் கேள்வி கேட்கும் போது 'போடா. உன்னை விட அவன் தான் மேல். நீ கீழ் தான்' என்று சொல்வது தான் இயற்கையாக வந்திருக்கும். அதனால் நீங்கள் சொன்ன நெருடல் மனத்தில் ஏற்படும் போதெல்லாம் இதனை நினைவில் கொள்ளுங்கள். நெருடல் குறைந்துவிடும்.
அரவிந்த் (TBCD), இன்னொன்றையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இந்தப் பாடலை இப்போது கொண்டாடத்தான் வேண்டுமா என்று கேட்கிறீர்கள். ஆமாம் கொண்டாடத் தான் வேண்டும். இந்தப் பேதங்கள் எல்லாம் ஒழிய அருளாளர்கள் ஒன்றுமே சொல்லவில்லை; செய்யவில்லை என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாக வரலாற்றை மறந்து மறுத்து எழுத சிலர் முயலும் போது, 'ஐயா. நீங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை. முயற்சிகளும் செயல்களும் வெற்றிகளும் என்றுமே இருந்திருக்கின்றன. பாருங்கள்' என்று சொல்லும் முயற்சி தான் இவை.
ReplyDeleteஇரவிசங்கர் சொன்னது போல் இவற்றை வைத்து பேதத்தை மேலும் வளர்த்தால் தான் அது தவறு. இங்கு கொண்டாடப்படும் நோக்கம் அது இல்லை என்பதால் அதில் எள்ளளவும் தவறில்லை.
//'மனத்தில் அமைதி உடையவனே பணக்காரன்; மற்றவன் ஏழை' என்று சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் நம் மனத்தில் இடறுதலை ஏற்படுத்துவதில்லை///
ReplyDeleteநல்ல ஒப்புமை குமரன்!
வள்ளலார் தாழ்ந்த என்ற ஒரு சொல்லை ஆளும் போது எனக்கும் ஒரு நெருடல் வரும்! ஏழையீர் அறிவிலீர் என்றெல்லாம் சொல்லும் போதும் இப்படித் தான் முதலில் நினைத்துக் கொள்வேன்!
ஆழ்வார்/நாயன்மார்கள் அடிக்கடி தம்மை "நாயினும் கீழேன்" என்று சொல்லிக் கொள்வார்கள். எனக்குக் கோபம் கோபமா வரும். என் செல்ல வளர்ப்பு பிராணியைத் தாழ்த்தறாங்களே என்று!
நான் விவிலியம் (பைபிள்) படிக்கும் போது, சில வாசகங்கள் வந்து நெருடல் போலத் தோன்றும்! "ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம்! ஆனால் பணக்காரன் சொர்கத்துக்குள் நுழைய முடியாது!" என்று வரும்!
ஆனால் இயேசு பெருமான் சொல்வது பணம் படைத்தோம் என்று கர்வம் கொண்டவர்களைத் தான்! உண்மையான தனவந்தர்களை அல்ல!
என்று பள்ளியில் ஃபாதர் சொல்லுவார்!
அப்படித் தெளியும் போது நெருடல் குறைந்து விடும்!
2 nd year readind & enjoying ur post on Kaisika Ekadesi..
ReplyDeletethere is a multimedia post about the events at srirangam in prtraveller.blogspot.com.
very timely and well written for ur notice.
sundaram
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை
ReplyDeleteநலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணர்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே.
நம்மாழ்வார் (நா.தி.பி - 3195)