Wednesday, October 22, 2008

சீடனின் மனைவிக்கு விவாகரத்து செய்து வைப்பாரா?

சரி போகட்டும், உன் மனைவியை எனக்குத் தந்து விடுகிறாயா சீடனே? - ச்ச்சீய்...என்ன கேள்வி இது? கேவலமாக இல்லை? அதுவும் கேட்பது யார்? கோபுரம் ஏறி மட்டுமே கூவத் தெரிந்த ஒரு குரு!
இந்த இப்பிறவிக்கு மட்டும் வழிகாட்டும் மந்திரம் எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா? அடுத்தவன் பெண்டாட்டியைத் தனக்குத் தந்து விடுகிறாயா என்று கேட்கிறார் இராமானுசர்!

இந்தக் காலத்துப் துறவிகள் பலர் சொல்கிறார்களே....
இகத்தைப் பார்த்தாலே சுகத்தைப் பெறலாம்;
அந்தப் பர-த்தை, பரத்தை வீட்டில் பெற்றுக் கொள்ளலாம் என்று!
அது மாதிரியா, இந்தத் துறவி?

மனைவிக்குக் குடை பிடித்து வந்த தனுர்தாசனை, என்னமோ ஏதோ சொல்லிக் குழப்பி, அரங்கன் கண்ணைக் காட்டி மயக்கி...

எல்லாம் இதற்குத் தானா? அழகில் அழகு வாய்ந்த சிவப்புச் சிரிப்பழகி பொன்னாச்சிக்காகத் தானா? இவரா ஆசார்யர்? ஹூம்!

தம்பதிகள் என்பதால், இராமானுச மடத்தில் தங்காமல், வெளியே தங்கி இருந்தார்கள் பொன்னாச்சியும், தனுர்தாசனும்.
அவர்களுக்குள் சில நாளாகவே கருத்து வேறுபாடு! சண்டை! ஒருவருக்கொருவர் பேசிக் கூட கொள்வதில்லை! எல்லாமே சைகை பாஷை தான்!

அன்பு மிக்க நண்பர்களிடையே கூட, சண்டைன்னு வந்துட்டா, ஒன்னு உடனே போயிடும்; இல்லை போகாமல் அந்த அன்பைச் சுற்றியே திரும்பித் திரும்பி வரும்! :)
இங்கோ கருத்தொருமித்த காதல் தம்பதிகள்! யார் கண்ணு பட்டதோ...ஆண்மகன் தனுர்தாசன் மனமிரங்க மறுக்கிறான்!

அப்படி என்ன தான் செய்து விட்டாளாம் இந்தப் பொன்னாச்சி?
செல்வச் செழிப்பிலே வளர்ந்தவள், பழைய சுபாவம் மாறாமல், அடியார்களிடத்திலே "தான்" என்ற அகம்பாவம் காட்டி விட்டாளாம்! அதுவும் எப்படி-ங்கிறீங்க?

ஒரு நாடகத்துக்காக அந்தணர்கள் தம் வீட்டில் திருட வந்த போது, சரி பாவம்...பிழைக்க வழி இல்லாதவர்கள்; எடுத்துக் கொண்டு போகட்டும், என்று திரும்பிப் படுத்து விட்டாளாம்! அவள் திரும்பிய சத்தம் கேட்டு, அவர்கள் பயந்து ஓடி விட, வீட்டுக்கு வந்த தனுர்தாசன், விஷயம் அறிந்து கொள்கிறான்.

"தன்" நகை, "தான்" கொடுக்கிறோம், "தான்" தந்து அடியார்கள் பிழைக்கட்டும் - என்று அவளுக்குத் "தான்" ரொம்பவே இருக்குதாம்!
ஹிஹி! தனுர்தாசன் சொல்லும் காரணம் பாருங்கள்!
இதனால் கொஞ்ச நாளாகவே இருவருக்கும் சண்டை. ச்சே சண்டையில்லை! பாவம், "பாவம்" புரியவில்லை! சு-பாவம் புரியவில்லை!

விஷயம் இராமானுசர் காதுகளுக்கு அரசல் புரசலாக வருகிறது. துறவி தானே? எதுக்குத் தேவையில்லாமல் கணவன்-மனைவி விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்க வேண்டும்?
பொன்னாச்சியின் மனமும் நன்கு அறிந்தவர், தனுர்தாசன் உறுதியும் நன்கு அறிந்தவர். அதான் சமயம் வரும் போது பயன்படுத்திக்கப் பாக்கறோரா?
ஆசை யாரை விட்டது-ன்னு கேக்கறீங்களா? ஆமாம், ஆசை தான்! மேலே படிங்க!



"அப்பா துனுர்தாசா, ஏன் உனக்குப் பொன்னாச்சியிடம் இவ்வளவு விரக்தி? நானும் பாத்துக்கிட்டு தான் இருக்கேன்; பூசைகளில் கூட ரெண்டு பேரும் எட்டி எட்டி நிற்கிறீர்கள்?"

"சாமி, நானே சொல்லணும்-னு நினைச்சேன்! எனக்கு ரொம்ப விரக்தியாகி விட்டது சுவாமி! அவள் அகங்கார-ஆணவமெல்லாம் வெளியில் தெரிவதில்லை! ஆனா புத்தியில் ரொம்பவே இருக்கு!"

"நிச்சயமாகத் தெரியுமா?"

"தெரியும் சாமி! அவளுக்கு எப்பமே "தான்" தான்! சரியான கர்வி! பொன்னாச்சி இனி எனக்கு வேணாம் சாமி!"

"வேணாமா? என்ன உளறுகிறாய் தனுர்தாசா? வேணாம்-னா என்ன அர்த்தம்?"

"வேணாம்-னா வேணவே வேணாம்! பேசாம எனக்கும் சந்நியாசம் கொடுத்துருங்க! அவளோடு குடும்பம் நடத்த எனக்கு இஷ்டமில்லை! இனி அவள் அடியேனுக்கு வேணாம் சாமீ"

"ஓ...அப்ப வேணாம்-னு உறுதியா இருக்க! ஹூம்ம்ம்ம்!
சரி, அப்படி வேணாம்-ன்னா அவளை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?"

(சுற்றிலும் உள்ள மக்கள், அடியார்கள், அந்தணர்கள், கோயில் அலுவலர்கள் எல்லாம் வாயடைத்துப் போகிறார்கள்! பொம்பளை பொன்னாச்சி நடுங்குகிறாள்! ஆம்பிளை தனுர்தாசன் மட்டும் அப்போதும் சிலை போல நிற்கிறான்!

ஆலயத்தில் தமிழ் ஓங்கிக் கொண்டு வருவதைப் பிடிக்காத சில நல்ல உள்ளங்களுக்கு மட்டும்...வாயெல்லாம் சிரிப்பு! இதை எப்படியாவது ஊதிப் பெருசாக்கி, இராமானுசருக்குக் களங்கம் கற்பித்து விடலாம், எல்லாம் அந்த அரங்கன் தானாக எப்படி ஒரு வாய்ப்பைக் கொடுக்குறான் பாரு! - என்று உள்ளூரக் குதூகலித்துப் போகிறார்கள்)



"ஓ...அப்ப வேணாம்-னு உறுதியா இருக்க! ஹூம்ம்ம்ம்! சரி, அப்படி வேணாம்-ன்னா அவளை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?"

"சாமீ...என்ன கேள்வி இது? எப்ப நாங்க ரெண்டு பேரும் உங்க திருவடிகளில் வந்து சேர்ந்தோமோ, அன்னிக்கே நாங்க உங்களுக்குச் சொந்தமாயிட்டோமே!
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு, நின் அருளே புரிந்து இருந்தேன்; இனி என்ன திருக்குறிப்பே?-ன்னு நேத்து தானே பாடம் நடத்தினீங்க?"

"ஓ...அப்படி வரியா? சரி! என்னுடையவளை நான் எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? நான் யாருக்குப் பிரியப்படுகிறேனோ, அவர்களுக்கும் கொடுத்து விடலாம் அல்லவா?"

(ஓ...பொன்னாச்சியைத் தேவதாசியாக்க திட்டம் போடுகிறாரோ இந்த இராமானுசர்? யப்பா, பலே ஆளா இருப்பாரு போல இருக்கே! - என்று சிலர் யோசிக்கவே தொடங்கி விட்டார்கள்!)

"ஆமாம் குருவே! உங்களுக்கு யார் பிரியமானவரோ, அவர்களுக்கு அவளைக் கொடுத்து விடலாம்! ஏன் இந்தக் கேள்வியெல்லாம் சாமீ?"

"யப்பா தனுர்தாசா! எனக்கு இந்த கோஷ்டியிலே பல பிரியமானவர்கள் இருக்கிறார்கள்;
ஞான யோகத்துக்குக் கூரத்தாழ்வான்,
கர்ம யோகத்துக்கு முதலியாண்டான்,
பக்தி யோகத்துக்கு திருமலை அனந்தாழ்வான்,

ஆனால் ஏனோ தெரியலை,
பிரியத்துக்கு மட்டும் பிள்ளை உறங்கா வில்லி என்னும் தனுர்தாசன் தான் இருக்கான்!
தனுர்தாசன் என்னும் நீயே இந்த இராமானுஜனுக்குப் பிரியமானவன்!
அதனால் உனக்கே பொன்னாச்சியைக் கொடுக்கிறேன்! புதுசா கொடுக்கறேன்
!"

"சாமீஈஈஈ"

"இது நாள் வரை அவளை உன் மனைவி-ன்னு நினைச்ச!
இப்ப நான் அவளைப் பெற்றுக் கொடுக்கிறேன்!
இனி அவளை இந்த இராமானுசன் மகள்-ன்னு நினைச்சிக்கோ!"

"சாமீ...."

"என் மகளின் பிழைகளுக்கெல்லாம் இந்த இராமானுஜன் உன் திருவடிகளில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்! என் மகளோடு வாழ்வாய் அல்லவா?"

"அச்சோ.....ஓஓஓஓ....இறைவா!" (உடையவர் வாயை ஓடோடி வந்து மூடுகிறான் தனுர்தாசன்!)
(குரு, மகான், ஆசார்யர் அப்படி-ன்னா பத்தடி தள்ளி நிக்கணும், கை கட்டி, வாய் பொத்தி, தொடாமப் பேசணும் - இதெல்லாம் இந்த இராமானுசரிடம் இல்லையோ?)

"தனுர்தாசா! பொன்னாச்சியை நான் அறிவேன்! அவளுக்கு ஆணவம் எல்லாம் இல்லை! அவள் செய்தது "தான்" என்பதில் சேர்த்தியாகாது!
அப்படிப் பார்த்தால், நீ கூடத் தான் அவளை எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக்குங்க-ன்னு சொன்ன? அது என்ன "நீ" சொல்வது? உனக்கென்ன அப்படி ஒரு உரிமை? அப்போ உனக்கும் "தான்" என்பது இருக்கு தானே?"

(மெளனம்)

"துறவிக்கு எது கூடினாலும், உறவு மட்டும் கூடவே கூடாது! துறவிகள் தங்கள் பழைய உறவினர்களை அதிகாரத்தில் அண்ட விடவே கூடாது! ஆனாலும், இந்தத் திருவரங்கமே சாட்சியாகச் சொல்கிறேன்!
இனி இவள் என் உறவு! இராமானுஜன் மகள்! இவள் இராமானுஜ தயா பாத்ரம்!
என் பாத்திரம், அவள் பத்திரம்! சரியா?"

இராமானுஜ தயா பாத்ரம், கருணா வத்சல குணார்னவம்!
வில்லீ சர்வ மங்கள நாயகீம், வந்தே வைஷ்ணவ வனிதா மணிம்!

(பொருள்: இராமானுசனின் தயைக்கு உகந்தவள்; கருணையும் வாத்சல்யமும் கொண்டவள்!
வில்லியின் மங்கள மனைவி! அம்மா, வைணவ வனிதா மணியே! உனக்கு வந்தனங்கள்!)

தயா பாத்ரம் என்பது பின்னாளில் வரும் குருமார்களுக்கு, முன்னாள் ஆச்சார்யர்களின் பெயரை ஒட்டிக் கொடுக்கும் பட்டம்! தன் ஆச்சார்ய சம்பந்தத்தைக் காட்ட அவரவருக்கு உள்ள சுலோகம் தான் இந்த தயா பாத்ரம்!
இராமானுசருக்குப் பின்னால் வந்த வேதாந்த தேசிகருக்கு, "இராமானுஜ தயா பாத்ரம், வந்தே வேதாந்த தேசிகம்" - அப்படி-ன்னு தயா பாத்ரம் இருக்கு!

அப்படிப்பட்ட ஒன்றை,
குலம் அறியாத, ஞான-கர்ம-பக்திகளைச் செய்யாத ஒருவருக்கு,
அதுவும் மாதம் சில நாள் தீட்டாகும் என்று சொல்லப்படும் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்படுகிறது என்றால்? அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு?
அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்! பேச எவர்க்கும் வாய் வரவில்லை! எல்லாரும் உடையவர்-வில்லி-பொன்னாச்சியையே பார்க்கிறார்கள்!

தொட்டதெற்கெல்லாம் குடும்பச் சண்டை, மண முறிவு என்று காலம் ஆகிப் போயிற்று! அவரவர் கருத்தில் உறுதிப்பாடு அதிகம் ஆகிறது!
இதில், கணவன்-மனைவி விஷயத்தில் எல்லாம் கூட மூக்கை நுழைத்து, அவரவர் கோப தாபங்களைக் கிளறாமல், புதைந்து போன அவர்களின் அன்பை மீண்டும் பதமாய் வெளிக்கொணரனும்-னா எப்படி?



யோவ், இந்த வேலையெல்லாம் ஒரு ஆன்மீகவாதிக்குத் தேவையா?
இந்த இராமானுசர் சமயப் பணி செய்ய வந்தாரா இல்லை சமூகம்-குடும்பம்-னு பணி செய்ய வந்தாரா? எதுக்கு இவருக்கு இந்த வீண் வேலை?
இப்படி ஒரு கருணைக் குணம் ஆன்மீகத்துக்கும், ஆன்மீகப் பணி செய்வபர்களுக்கும் அவசியம் தேவை தானா?

ஞான உச்சியின் மேல் அளியில் விளைந்தது, ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி!
இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு?
என்ன இருக்கணும்? ஞானமா? கர்மமா? பக்தியா? - ஹிஹி....கருணை இருக்கணுமாம்! அதைத் தான் கந்தர் அலங்காரம் பதிவில் முன்பு சொல்லி இருந்தேன். புயலும் சண்டையும் கிளம்பியது! :)

இராமானுசருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ துறவிகள், குருமார்கள், ஆச்சார்யர்கள் வந்திருக்கிறார்கள்!
அத்தனை பேரையும் கருணை என்னும் தராசுத் தட்டில் வைத்து, அவர்கள் கூடவே இறைவனையும், அதே தட்டில் வைத்து, எதிர்த் தட்டில் உடையவரை நிறுத்தினால், பெருமாள் உட்பட அவர்கள் எல்லாம் உயர்ந்து இருக்க, தராசில் இவர் தாழ்ந்தே இருப்பார்!

இதை எதையோ நிறுவுவதற்காகச் சொல்லவில்லை! இதை நானும் சொல்லவில்லை! இதைச் சொல்பவள் சாட்சாத் மகாலக்ஷ்மி-அரங்கநாயகித் தாயார்!

திருமலை வேங்கடவன் பெருமாளே என்று ஊர் அறிய உறுதி செய்தாயிற்று! பின்னால், குழப்பம் விளைவித்த எல்லாரையும் கழுவில் ஏற்றத் துணிந்தான் மன்னன். ஆனால் அத்தனை பேரையும், மன்னன் ஆணையை மீறி விடுவித்த கருணை! - தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!

கடலில் போட்ட தில்லை கோவிந்தராசப் பெருமாளை, மீண்டும் அதே இடத்தில் நிறுவி, வீம்பு காட்ட வேண்டுமா? மதப் போட்டிகளால் மக்களுக்கு அல்லவா வீண் பிரச்சனை? வேணாம்!
திருப்பதி அடிவாரத்தில் சிலையை வைத்துக் கொள்ளலாம்!
தில்லையின் ஈசனைச் சிந்தையில் வைத்துக் கொள்ளலாம்!
யாருக்கு வரும் இந்தக் கருணை? - தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!

காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் உன் அருளாம் தன்மை? -
என்று அதனால் தான் பின்னாளில் ஒரு பாட்டு எழுந்தது!
அவர் கூரை ஏறிக் கோபுரம் ஏறிக் கூவியதும் போதும்! அவர் சொன்ன மந்திரம் இப்பிறவி மட்டும் அறுக்குதோ, எப்பிறவியும் அறுக்குதோ? யாருக்கு வேணும் பிறவி அறுக்கும் மந்திரங்கள்?

மோட்சத்தை அஜாமிளன் போன்ற பாவிகளுக்குக் கொடுத்துக் கொள்!
ஆனால் பிறவிகளை அடியார்களுக்குக் கொடுத்து விடு!
மோட்சத்தைக் கேட்டு வாங்காது, பிறவியைக் கேட்டு வாங்கி, இன்றும் ஒரு ஓரத்தில் குணானுபவம் செய்து கொண்டிருக்கிறானே சிறிய திருவடி ஆஞ்சநேயன்? அவனுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்,
"உன்" தன்னோடு, உற்றோமே ஆவோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று!

தனிப் பெருங் "கருணை"! அருட் பெருஞ் சோதி!

PS: I would be out of country for a day...Will return and reply to your comments, morrow mid nite :)

46 comments:

  1. Vanakkam sir,
    Very nice to read,swami Ramanujarin karunaikku alavillai,vazgha,valarga.
    ARANGAN ARULVANAGA.
    Anbudan
    srinivasan.

    ReplyDelete
  2. //கோபுரம் ஏறி மட்டுமே கூவத் தெரிந்த ஒரு குரு!
    இந்த இப்பிறவிக்கு மட்டும் வழிகாட்டும் மந்திரம் எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா?//

    விடமாட்டிங்களே..... :()

    *****

    திருநீல கண்டரின் சைவ சமயக் கதையை உல்டா பண்ணியது போல் இருக்கு. எனக்கு ஒரு குழப்பம், எந்த கதை ஒரிஜினல் ?

    இராமானுஜர் சேக்கிழாருக்கும் முற்காலத்தில் இருந்தவர் தானே.

    ReplyDelete
  3. வழக்கம் போல அரிய தகவல்கள். அருமையான கதை. கலக்குங்க தல.

    பதிவு மிகவும் அருமை. :-)

    ReplyDelete
  4. காரேய் கருணை இராமானுஜரை, அகிலமெல்லாம் கருணை காட்டும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி படம் மிக அருமை. என் கண்களை விட்டு அகலவே இல்லை.

    அவனை ஆயிரம் நாமங்கள் சொல்லி அழைப்பதை விட அவன் கருணை பொலிகின்ற திருமுகத்தை கண்டாலே போதும் போல.

    ReplyDelete
  5. //என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு //

    பஞ்ச சம்ஸ்காரங்களில் ஒன்றான சங்கு, சக்ர முத்திரையை குறிக்கிறீர்களா ?

    ReplyDelete
  6. //குரு, மகான், ஆசார்யர் அப்படி-ன்னா பத்தடி தள்ளி நிக்கணும், கை கட்டி, வாய் பொத்தி, தொடாமப் பேசணும். //

    இவை ஏன் என்று சொல்ல முடியுமாண்ணா?. சன்யாசம் வாங்கியவர்களை நாம் ஏன் தொடக்கூடாது. ஸ்ரீவில்லிபுத்தூரில், வீதிகளி ஆண்டாளுடன் கோஷ்டி எழுந்தருளும் போது, அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் ஜீயர் அவர்களை நோக்கி சேவிப்பர். அவர் அருகில் சென்று சேவிப்பது கிடையாது

    ReplyDelete
  7. Alrightie...from the airport...mexico city is boring :))

    ReplyDelete
  8. // Anonymous said...
    Vanakkam sir,
    Very nice to read//

    nandri srinivasan sir!

    //swami Ramanujarin karunaikku alavillai,vazgha,valarga.
    ARANGAN ARULVANAGA.//

    athaan
    yaare arivar un arul-aam thanmai, kaareiy karunai ramanusa-nu,
    avaroda muNNal opponent paadi irukaare! :))

    ReplyDelete
  9. //கோவி.கண்ணன் said...
    விடமாட்டிங்களே..... :()//

    ஹா ஹா ஹா!
    இதுல விடறதுக்கு என்னாண்ணா இருக்கு?
    அன்னிக்கி அப்படிச் சொன்னதுக்கு அவருக்குத் நன்றி தான் சொல்வேன்! அது தான் இந்தக் கதையைப் பதிவிடத் தூண்டியது!

    ஒன்றைக் குத்திக் காட்டணும்-னு நோக்கம் வச்சி அந்த வரிகளை எழுதலை. ஐயாவின் வரிகளின் மீது தான் மோட்சம் கூடம் வேண்டாத கருணை அப்படிங்கிற கொடியைப் படர விட்டேன்! :)

    //திருநீல கண்டரின் சைவ சமயக் கதையை உல்டா பண்ணியது போல் இருக்கு. எனக்கு ஒரு குழப்பம், எந்த கதை ஒரிஜினல் ?//

    ஹா ஹா ஹா!
    இரண்டுமே ஒரிஜினல் தான்!
    திருநீலகண்ட தம்பதிகளை இறைவன் வந்து ஆட்கொள்ளுறான்.
    இங்கே மக்களோடு மக்களா கலந்து உறவாடும் ஒரு தலைவரே ஆட்கொள்ளுறார்...அவ்ளோ தான்!

    //இராமானுஜர் சேக்கிழாருக்கும் முற்காலத்தில் இருந்தவர் தானே//

    ஆமாம்
    இராமானுசர் பதினோராம் நூற்றாண்டு (1017-1137)
    சேக்கிழார் சுவாமிகள் அரங்கேற்றம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு (1150)

    ReplyDelete
  10. //Sridhar Narayanan said...
    வழக்கம் போல அரிய தகவல்கள். அருமையான கதை. கலக்குங்க தல//

    சிறுகதைச் சிற்பியே வாங்க!
    அறிபுனை அண்ணலே வாங்க!

    வெற்றிக் கோமகன்,
    ரசவாத ரத்தினம்....
    தங்கள் திருவடி பட அடியேன் பதிவு என்ன புண்ணியம் செய்ததோ? :)

    //பதிவு மிகவும் அருமை. :-)//

    சிரிப்பானா? சரி!
    நான் கதையை அளிப்பவன் மட்டூமே அண்ணாச்சி!நீங்க கதையை எழுதறவரு!

    ReplyDelete
  11. //Raghav said...
    //என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு //

    பஞ்ச சம்ஸ்காரங்களில் ஒன்றான சங்கு, சக்ர முத்திரையை குறிக்கிறீர்களா ?//

    இருக்கலாம் ராகவ்!
    குமரன் வந்து சொன்னா நாம எல்லாரும் விளங்கிக் கொள்ளலாம்.

    என்னைச் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு-ன்னா சரி!
    என் உடைமையும் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு-ன்னு வருது. உடைமைக்கு சங்கு சக்கர முத்திரை ஒத்துவாங்களா?

    ReplyDelete
  12. //Raghav said...
    காரேய் கருணை இராமானுஜரை, அகிலமெல்லாம் கருணை காட்டும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி படம் மிக அருமை.//

    பார்த்தசாரதிக்கு வேண்டிக் கொண்டு பிறந்த சைவமாரு குழந்தை அல்லவா இராமானுஜர்? :)

    //அவனை ஆயிரம் நாமங்கள் சொல்லி அழைப்பதை விட அவன் கருணை பொலிகின்ற திருமுகத்தை கண்டாலே போதும் போல//

    காதல்-ல தான் இதெல்லாம்!
    முகத்தை மட்டுமே பாத்துக்கிட்டு இருக்குறது!
    கல்யாணத்துக்கு அப்பறம் நாமங்களைப் பேசித் தான் ஆகணும்!:))

    ReplyDelete
  13. ஹோ...ராகவ், உன் கதைசிக் கேள்வி அப்பறம்...இப்போ போர்டிங் கால்...ஆத்தா கூப்டிங்! மீ தி எஸ்ஸ்ஸூ! :))

    ReplyDelete
  14. மனம் நெகிழச் செய்யும் கதை; கருணை. 4-வது படம் நல்லாருக்கு. 5-வது எப்பவும் ரொம்பப் பிடிக்கும் :) ஆஞ்சநேயரைப் போல் எவருண்டு? அருமையான பதிவுக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  15. //"என் மகளின் பிழைகளுக்கெல்லாம் இந்த இராமானுஜன் உன் திருவடிகளில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்! என் மகளோடு வாழ்வாய் அல்லவா?"//

    when I read this lines, really shocked, Thanks my dear Frined

    ReplyDelete
  16. \\என் மகளின் பிழைகளுக்கெல்லாம் இந்த இராமானுஜன் உன் திருவடிகளில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்! என் மகளோடு வாழ்வாய் அல்லவா?"\\

    ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...அருமையான பதிவு ;)

    நன்றி தல ;)

    ReplyDelete
  17. //Raghav said...
    இவை ஏன் என்று சொல்ல முடியுமாண்ணா?. சன்யாசம் வாங்கியவர்களை நாம் ஏன் தொடக்கூடாது.//

    யார் சொன்னா தொடக் கூடாது-ன்னு?
    Generally when it comes to not much known people, Touching is a Taboo in western countries.
    ஆனா நம் பண்பாட்டில் அப்படி இல்லை!

    குகனை இராமன் வலியச் சென்று தொடவில்லையா?
    சரி குகன் துறவியல்ல! ஆனால் சபரி? சரபங்க மகரிஷி?
    வீதியுலா வரும் ஆசார்யர்களுக்கு பாதபூஜை செய்யும் போது, இப்போதும் தொடுகிறோமே!

    கோயில்களில் சந்தானகிருஷ்ணனைத் தம்பதிகளின் கைகளில் எழுந்தருளப் பண்ணுகிறார்களே!

    தொடுதல் வேறு!
    ஸ்பரிச தீட்சை வேறு!
    ஆசார்யனை அவர் அனுக்ரஹத்தோடு தொடலாம்! அவர் "தீண்டத்தகாதவர்" அல்ல! :))

    //ஸ்ரீவில்லிபுத்தூரில், வீதிகளி ஆண்டாளுடன் கோஷ்டி எழுந்தருளும் போது, அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் ஜீயர் அவர்களை நோக்கி சேவிப்பர். அவர் அருகில் சென்று சேவிப்பது கிடையாது//

    இது வெறும் ஒரு லோக்கல் வழக்கம் தானே தவிர எந்த சாஸ்திரப் பிரமாணமும் இல்லை!
    சாத்திரம் வேறு! சம்பிரதாயம் வேறு!

    ReplyDelete
  18. //கவிநயா said...
    மனம் நெகிழச் செய்யும் கதை; கருணை.//

    ஆமாம்-க்கா! இதை இந்தியப் பயணத்தின் போது விமானத்தில் டைப்பினேன். ஊர் வந்தவுடன் மூடி வச்சிட்டேன்! :))

    //4-வது படம் நல்லாருக்கு. 5-வது எப்பவும் ரொம்பப் பிடிக்கும் :) //

    எனக்கும் 5-வது படம் ரொம்ப பிடிக்கும்-க்கா! இராமன் கட்டி அணைத்துக் கொண்ட அத்தனை பேர் படமும் இருக்கு!
    அனுமன், இலக்குவன், பரதன், குகன், சுக்ரீவன், விபீஷணன்!
    & சீதை ஆல்சோ! (தஞ்சை ஓவியம்) :)))

    ReplyDelete
  19. //Mani Pandi said...
    when I read this lines, really shocked, Thanks my dear Frined//

    நன்றி மணி பாண்டி!
    இராமானுசர் ஒரு முறை திருப்பதிக்கு வழி தவறிப் போக, வயல்-ல இருந்த விவசாயி ஒருவன் வழி சொன்னான்.
    அவனைக் கீழே விழுந்து வணங்கினார்.

    அவர் சொன்ன காரணம்:
    தன் திருவடிகளைக் குறிப்பால் உணர்த்தி,
    மோட்சத்துக்குத் வழிகாட்டுகிறான் வேங்கடவன்.
    அவனுக்கு வழிகாட்டுகிறான் இவன்! :)

    உண்மையான "பெரியவர்கள்" பணிவார்கள்!
    பணியுமாம் என்றும் பெருமை!

    ReplyDelete
  20. //கோபிநாத் said...
    \\என் மகளின் பிழைகளுக்கெல்லாம் இந்த இராமானுஜன் உன் திருவடிகளில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்! என் மகளோடு வாழ்வாய் அல்லவா?"\\

    ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...அருமையான பதிவு ;)//

    ஆகா
    உனக்கும் அதே வரிகள் தான் பிடிச்சிருக்கா கோபி? :)
    நன்றி தல ;))

    ReplyDelete
  21. அத்தனை பேர் பிழைகளுக்கும் இராமனுஜர் பொறுப்பெடுத்துக் கொள்ளுவது போல அமைகிறது. ஆசார்யன் திருவடிகளுக்கு தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

    எல்லோருக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. //என் உடைமையும் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு-ன்னு வருது. உடைமைக்கு சங்கு சக்கர முத்திரை ஒத்துவாங்களா? //

    பஞ்ச சம்ஸ்காரத்தில் வரும் முத்ரா தாரணத்தை இங்கே குறிப்பதாகத் தான் சொல்வார்கள். உடைமைகளிலும் திருமண், சங்கு, சக்கரங்களை வரைந்து வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்களே. வீட்டின் நிலைப்படியிலிருந்து அந்த சங்கு சக்கர முத்திரைகளைப் பார்க்கலாமே.

    ReplyDelete
  23. உடையவர் திருக்கதைகளை நீங்கள் சொல்லிப் படிப்பதில் தான் எத்தனை இன்பம். இன்னுமொரு நூற்றாண்டிரும்!

    ReplyDelete
  24. அன்பு மிக்க நண்பர்களிடையே கூட, சண்டைன்னு வந்துட்டா, ஒன்னு உடனே போயிடும்; இல்லை போகாமல் அந்த அன்பைச் சுற்றியே திரும்பித் திரும்பி வரும்//

    ஆமாம்!! அதான் பார்த்தேனே ஊடலை!!

    //ஆலயத்தில் தமிழ் ஓங்கிக் கொண்டு வருவதைப் பிடிக்காத சில நல்ல உள்ளங்களுக்கு மட்டும்...வாயெல்லாம் சிரிப்பு!
    இதை எப்படியாவது ஊதிப் பெருசாக்கி, இராமானுசருக்குக் களங்கம் கற்பித்து விடலாம், எல்லாம் அந்த அரங்கன் தானாக எப்படி ஒரு வாய்ப்பைக் கொடுக்குறான் பாரு! - என்று உள்ளூரக் குதூகலித்துப் போகிறார்கள்)//

    எல்லாகாலத்திலும் இப்படி ஒரு மக்கள்கூட்டம் இருந்திருக்கு!

    //"யப்பா தனுர்தாசா! எனக்கு இந்த கோஷ்டியிலே பல பிரியமானவர்கள் இருக்கிறார்கள்;
    ஞான யோகத்துக்குக் கூரத்தாழ்வான்,
    கர்ம யோகத்துக்கு முதலியாண்டான்,
    பக்தி யோகத்துக்கு திருமலை அனந்தாழ்வான்,
    ஆனால் ஏனோ தெரியலை,
    பிரியத்துக்கு மட்டும் பிள்ளை உறங்கா வில்லி என்னும் தனுர்தாசன் தான் இருக்கான்..//

    ஆஹா! பிரியத்தைப்பெற என்ன தவம் செய்திருக்கணும்?

    //
    "என் மகளின் பிழைகளுக்கெல்லாம் இந்த இராமானுஜன் உன் திருவடிகளில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்! என் மகளோடு வாழ்வாய் அல்லவா?"//

    என்னே அடக்கம் கருணைவள்ளலுக்கு!

    //மோட்சத்தை அஜாமிளன் போன்ற பாவிகளுக்குக் கொடுத்துக் கொள்!
    ஆனால் பிறவிகளை அடியார்களுக்குக் கொடுத்து விடு!
    மோட்சத்தைக் கேட்டு வாங்காது, பிறவியைக் கேட்டு வாங்கி, இன்றும் ஒரு ஓரத்தில் குணானுபவம் செய்து கொண்டிருக்கிறானே சிறிய திருவடி ஆஞ்சநேயன்?
    அவனுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்//

    சேர்ந்து சேவிக்கிறோம்.

    கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து
    செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாயகண்களை உடைய அரங்கனின் அன்புக்கு உடையவனைப்பற்றிய இந்தப்பதிவு எழுதிய பெருமையினால் ரவி, நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
  25. //கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து
    செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாயகண்களை உடைய அரங்கனின் அன்புக்கு உடையவனைப்பற்றிய இந்தப்பதிவு எழுதிய பெருமையினால் ரவி, நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! //

    Super akka.. Repeating 1008 times...

    ReplyDelete
  26. கதை மனதை இதமாக வருடியது. இந்த கதையின் ஒரிஜினல் லிங்க் ஏதாவது தர முடியுமா?

    ReplyDelete
  27. மிக‌வும் ந‌ன்றாக‌ இருந்த‌து.

    ஆனால் ஒரே ஒரு குறை. உங்க‌ள் ந‌டை "இதோ பார். உனக்கொன்றும் தெரியாது. நான் சொல்கிறேன். கேட்டுக் கொள்" என்ப‌து போல‌ அதிகார‌மாக‌ தெரிகிற‌து. ஒருவேளை எனக்குத்தான் அப்படி தெரிகிறதோ என்னவோ?

    ம‌ற்ற‌ப்ப‌டி மிக‌ ந‌ல்ல‌ நிக‌ழ்ச்சியை த‌ந்து இருக்கிறீர்க‌ள். உள்ள‌ம் இராமானுஜ‌ரின் திருவ‌டியில் தானாக‌ வ‌ண‌ங்கிக் கொள்கிற‌து.

    ReplyDelete
  28. //vidhya (vidhyakumaran@gmail.com) said...
    மிக‌வும் ந‌ன்றாக‌ இருந்த‌து.
    ஆனால் ஒரே ஒரு குறை. உங்க‌ள் ந‌டை "இதோ பார். உனக்கொன்றும் தெரியாது. நான் சொல்கிறேன். கேட்டுக் கொள்" என்ப‌து போல‌ அதிகார‌மாக‌ தெரிகிற‌து. ஒருவேளை எனக்குத்தான் அப்படி தெரிகிறதோ என்னவோ?//

    ஹா ஹா ஹா
    வாங்க வித்யா. முதல் வருகைக்கு நல்வரவு! விமர்சனத்தை ஒளித்து வைக்காமல் உள்ளபடிச் சொன்னமைக்கு நன்றி! பதிவில் எந்த இடங்களில் அது போன்று தொனித்தது என்று காட்டி உதவினால், அடியேன் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். அறியத் தாருங்களேன்.

    //ம‌ற்ற‌ப்ப‌டி மிக‌ ந‌ல்ல‌ நிக‌ழ்ச்சியை த‌ந்து இருக்கிறீர்க‌ள். உள்ள‌ம் இராமானுஜ‌ரின் திருவ‌டியில் தானாக‌ வ‌ண‌ங்கிக் கொள்கிற‌து//

    நன்றி. உள்ளம் தானாக‌ வ‌ண‌ங்கிக் கொள்கிற‌து என்ற நீங்க சொன்னது மிகவும் சரி!
    இராமானுசரின் உள்ளம் அப்படி! அதான் அவரை அண்டியவர்களும் அவ்வண்ணமே ஆட்பட்டார்கள்!

    ReplyDelete
  29. //Sekaran said...
    கதை மனதை இதமாக வருடியது.//

    நன்றி சேகரன்.

    //இந்த கதையின் ஒரிஜினல் லிங்க் ஏதாவது தர முடியுமா?//

    ஒரிஜினல் லிங்க்-ஆ? அப்படி-ன்னா? :)
    இராமானுஜ வைபவம் என்ற நூலில் இருக்கலாம் சேகரன். சுவாமி சிவானந்தர் எழுதியது.

    பல இராமானுச வராலாற்றுப் புத்தகங்களில் இவ்வளவு விரிவாக, ஒவ்வொரு சம்பவமாய்ச் சொல்ல முடியாது; கடினம்! ஆனால் திருவரங்கக் கோயிலொழுகு என்ற நூல் இன்னும் பழமையானது. அதில் ஒரு டயரிக் குறிப்பு போலச் சொல்லியிருப்பார்கள்.

    அது இணையத்தில் இல்லை. புத்தகம் தான் இருக்கு. திருவரங்கம், ஸ்ரீ-ரங்க-ஸ்ரீ பதிப்பகத்தில் கிடைக்கும்!

    ReplyDelete
  30. //வல்லிசிம்ஹன் said...
    அத்தனை பேர் பிழைகளுக்கும் இராமனுஜர் பொறுப்பெடுத்துக் கொள்ளுவது போல அமைகிறது//

    அவர்களும் பெருசா பிழை எல்லாம் செய்யவில்லை வல்லியம்மா! இராமானுசர் தம் செயல்களால் அவர்களுக்கு இப்படியும் இதைப் பார்க்கலாம் என்று ஒரு பார்வையைக் காட்டுகிறார். ஆன்மீகமே ஒரு "பார்வை" தானே. "பார்க்கத் தெரிந்தால்" பரமன் தெரிவான் அல்லவா?

    //ஆசார்யன் திருவடிகளுக்கு தண்டம் சமர்ப்பிக்கிறேன்//

    உங்களுடன் சேர்ந்து அடியேனும் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

    //எல்லோருக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்//

    கார்த்திகை தீப வாழ்த்துக்கள் தான் நான் சொல்லணும். சாரி வல்லியம்மா. லேட் ரிப்ளைக்கு! :)

    ReplyDelete
  31. //குமரன் (Kumaran) said...
    உடைமைகளிலும் திருமண், சங்கு, சக்கரங்களை வரைந்து வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்களே. வீட்டின் நிலைப்படியிலிருந்து அந்த சங்கு சக்கர முத்திரைகளைப் பார்க்கலாமே//

    சூப்பர். நல்ல எடுத்துக்காட்டு குமரன். நகைகள், திருமாங்கல்யத்தில் கூட சங்கு சக்கர முத்திரையைப் பாத்திருக்கேன். பொங்கல் பானைகளில் கூட கிராமத்தில் வரைவார்கள்.

    ReplyDelete
  32. //குமரன் (Kumaran) said...
    உடையவர் திருக்கதைகளை நீங்கள் சொல்லிப் படிப்பதில் தான் எத்தனை இன்பம். இன்னுமொரு நூற்றாண்டிரும்!//

    :)
    நன்றி குமரன்!

    ReplyDelete
  33. //ஷைலஜா said...
    //அன்பு மிக்க நண்பர்களிடையே கூட, சண்டைன்னு வந்துட்டா, ஒன்னு உடனே போயிடும்; இல்லை போகாமல் அந்த அன்பைச் சுற்றியே திரும்பித் திரும்பி வரும்//

    ஆமாம்!! அதான் பார்த்தேனே ஊடலை!!//

    ஹா ஹா ஹா!
    அடியேன் மீதுள்ள குற்றச்சாட்டில் இதுவும் ஒன்னு-க்கா! கதைக்குப் பொருத்தமான இடத்தில் இப்படிப் பொதுவான ஒரு கருத்தை வைக்கும் போது, அதை அண்மைய நிகழ்வுகளினால் தான் வைக்கிறேன் என்று கருதப்படுவதும் உண்டு :)

    மனத்தின் நிலையைப் பொறுத்து மனத்தின் மொழிகளை பொதுப்படையான கருத்துகளாகக் கதையில் சொல்வது படைப்பாளிகளுக்கு வழக்கம் தானே-க்கா?

    //
    //"என் மகளின் பிழைகளுக்கெல்லாம் இந்த இராமானுஜன் உன் திருவடிகளில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்! என் மகளோடு வாழ்வாய் அல்லவா?"//

    என்னே அடக்கம் கருணைவள்ளலுக்கு!
    //

    அடக்கம் அமரருள் உய்க்கும்!

    //கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து
    செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாயகண்களை உடைய அரங்கனின் அன்புக்கு உடையவனைப்பற்றிய இந்தப்பதிவு எழுதிய பெருமையினால் ரவி, நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!//

    அப்படியே பாசுரம் கொட்டுது நீங்க பின்னூட்டம் போட்டா!
    நன்றி தமிழ்மண நட்சத்திரமே! :)

    ReplyDelete
  34. //Raghav said...
    Super akka.. Repeating 1008 times...//

    yov, unnai nera vanthu adikkaren, iru! :)

    ReplyDelete
  35. //ஒரிஜினல் லிங்க்-ஆ? அப்படி-ன்னா? :)
    இராமானுஜ வைபவம் என்ற நூலில் இருக்கலாம் சேகரன். சுவாமி சிவானந்தர் எழுதியது.//

    இராமகிருஷ்ணா மடத்து நூலான இராமானுஜர் சுவாமி இராமகிருஷ்ணானந்தாவால் எழுதப்பட்டது. அதிலும் இது இல்லை என்றே நினைக்கிறேன். சுவாமி சிவானந்தர் எழுதியதிலும் படித்தாற்போல் ஞாபகம் இல்லை.

    உறங்காவில்லி தாசனுக்கு நேத்ர தரிசனம் காண்பித்தது மாத்திரம் அனைவரும் சொல்லி இருக்கிறார்கள்.

    நீங்கள் எழுதிய விஷயம் எங்கிருந்து கொண்டீர்கள் என்று சொன்னால் நானும் இறை விஷயத்தை பேசும்போது பிறரிடம் சொல்ல வசதியாக இருக்கும்.

    ச‌ம‌ர்த்த‌ இராம‌தாச‌ர் சிவாஜியின் இராஜ்ஜிய‌த்தை இப்ப‌டி பெற்று திரும்பி கொடுத்த‌ வ‌ர‌லாறு உண்டு. இராமானுஜ‌ர் வ‌ர‌லாற்றில் உண்டா என‌ தெரிய‌வில்லை. உங்க‌ளுக்கு நினைவு வ‌ந்தால் சொல்லவும். என‌க்கு உப‌யோக‌மாக‌ இருக்கும்.

    அன்புட‌ன்,

    சேக‌ர‌ன்

    ReplyDelete
  36. //ஹா ஹா ஹா
    வாங்க வித்யா. முதல் வருகைக்கு நல்வரவு! விமர்சனத்தை ஒளித்து வைக்காமல் உள்ளபடிச் சொன்னமைக்கு நன்றி! பதிவில் எந்த இடங்களில் அது போன்று தொனித்தது என்று காட்டி உதவினால், அடியேன் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். அறியத் தாருங்களேன்.//

    நான் சொன்னதை தவறாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு முதலில் என் நன்றியை சொல்லி விடுகிறேன்.

    இந்த‌ இட‌ம் அந்த‌ இட‌மென்று இல்லை ர‌விஷ‌ங்க‌ர்! மொத்த‌த்தில் ந‌டையே அப்ப‌டித்தான் என‌க்கு தெரிந்த‌து. என‌க்கு ந‌ன்றாக‌த் தெரியும், நீங்க‌ளும் தெரிந்துக் கொள்ளுங்க‌ள் என்ப‌து போன்ற‌ தொனி தெரிந்த‌து. அத‌னால் கொஞ்ச‌ம் எழுத்தில் ஒன்ற‌ முடியாம‌ல் போய் விட்ட‌து. ஒருவேளை என் பார்வை த‌வ‌றாக‌ இருக்க‌லாம். என் எண்ண‌த்தை சொன்னேன், அவ்வ‌ள‌வுதான். :)

    ReplyDelete
  37. //இந்த‌ இட‌ம் அந்த‌ இட‌மென்று இல்லை ர‌விஷ‌ங்க‌ர்! மொத்த‌த்தில் ந‌டையே அப்ப‌டித்தான் என‌க்கு தெரிந்த‌து. என‌க்கு ந‌ன்றாக‌த் தெரியும், நீங்க‌ளும் தெரிந்துக் கொள்ளுங்க‌ள் என்ப‌து போன்ற‌ தொனி தெரிந்த‌து. //

    வித்யா குமரன்.. தங்கள் கருத்துக்கு என்னுடைய மனத்தில் பட்டதை சொல்லலாம் தானே..

    ரவி அண்ணாவின் பதிவுகள் அனைத்தையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. இவை ரவி அண்ணா... வெறுமனே படித்து.. நான் தெரிந்து கொண்டதை எல்லோரும் அறியட்டும் என்பதற்காக எழுதி வரவில்லை. உணார்வு பூர்வமாக எம்பெருமானாரை பர்றி சொல்லும் போது அவர் மனத்தில் உடையவரே குடி கொண்டு சொல்வதை போன்றே எனக்கு தோன்றும்.

    இராமானுசர் காலத்திலே நாம் இருந்து கொண்டு அவரின் தெய்வீக திருப்பணிகளை நேரில் நாம் கண்டு சேவிப்பது போல் இருக்கும்..

    ReplyDelete
  38. உடையவரை பற்றி ரவி அண்ணா மூலமாக உருவகப் படுத்தி வைத்துள்ளேன்.. “காரேய் கருணாஇ ராமானுசன்” சம்பந்தம் உள்ள ரவி அண்ணாவின் பதிவில் தான் அறிந்த விஷயம் என்ற தொனி இருப்பதாக உங்களுக்கு பட்டது ஆச்சர்யமே..

    நன்றி.

    ReplyDelete
  39. //Sekaran said...
    உறங்காவில்லி தாசனுக்கு நேத்ர தரிசனம் காண்பித்தது மாத்திரம் அனைவரும் சொல்லி இருக்கிறார்கள்.//

    ஆமாம்! கதையின் மெயின் ஹைலைட் அது!
    அது இல்லாமல்
    *பொன்னாச்சி மகளிர் அணித் தொண்டாற்றியது,
    *உறங்காவில்லியின் தோள் பிடித்து நடந்தது,
    *உறங்காவில்லி இராமயண விரிவுரையில், வீடண சரணாகதியின் போது இராமனைச் சந்தேகப்பட்டது....
    இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கு!

    சிலவற்றை அடியேன் சில பதிவுகளில் முன்னரே சொல்லி இருப்பேன்!

    //நீங்கள் எழுதிய விஷயம் எங்கிருந்து கொண்டீர்கள் என்று சொன்னால் நானும் இறை விஷயத்தை பேசும்போது பிறரிடம் சொல்ல வசதியாக இருக்கும்//

    திருவரங்கம் கோயில் ஒழுகு நூலையும், குரு பரம்பரை-இராமானுச வைபவம் நூலையும் முன்னரே குறிப்பிட்டு இருந்தேனே!

    //ச‌ம‌ர்த்த‌ இராம‌தாச‌ர் சிவாஜியின் இராஜ்ஜிய‌த்தை இப்ப‌டி பெற்று திரும்பி கொடுத்த‌ வ‌ர‌லாறு உண்டு. இராமானுஜ‌ர் வ‌ர‌லாற்றில் உண்டா என‌ தெரிய‌வில்லை. உங்க‌ளுக்கு நினைவு வ‌ந்தால் சொல்லவும்//

    இராமானுசர் அப்படி ராஜ்ஜியங்களை வாங்கி மீண்டும் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு ஏதும் அடியேன் அறிந்தவரை இல்லை!

    சிவாஜி-இராமதாசர், கிருஷ்ணதேவராயர்-வித்யாரண்யர் என்று நீங்கள் சொல்லும் சம்பவங்கள்/கதைகள் உள்ளன!

    ReplyDelete
  40. //vidhya (vidhyakumaran@gmail.com) said...
    அத‌னால் கொஞ்ச‌ம் எழுத்தில் ஒன்ற‌ முடியாம‌ல் போய் விட்ட‌து//

    உடையவர் பற்றிய எழுத்தில், தாங்கள் ஒன்ற இயலாது போனதற்கு அடியேன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் வித்யா!

    //இந்த‌ இட‌ம் அந்த‌ இட‌மென்று இல்லை ர‌விஷ‌ங்க‌ர்! மொத்த‌த்தில் ந‌டையே அப்ப‌டித்தான் என‌க்கு தெரிந்த‌து. என‌க்கு ந‌ன்றாக‌த் தெரியும், நீங்க‌ளும் தெரிந்துக் கொள்ளுங்க‌ள் என்ப‌து போன்ற‌ தொனி தெரிந்த‌து//

    :)
    பல நேரங்களில் பேச்சு நடையாகவும், லோக்கல் பாஷைகளாகவும், அது கூடவே பாசுரங்களும், சுலோகங்களும், கலந்தடித்தாற் போலே தருவது அடியேன் வழக்கம்!
    இளையவர்கள் சூக்திகளில் ஆர்வங் காட்ட இப்படி ஒரு உபாயம்!
    அதனால் அப்படி உங்களுக்கு ஒரு வேளை தோன்றி இருக்கலாம்!

    ஆனால் அடியேன் பதிவுகளைத் தொடர்ந்து படித்தால் இதுவே உங்களுக்குப் பழகிப் போய், இதெல்லாம் ஒன்னுமே இல்லை-ன்னு ஆகி விடும்! :)))

    நீங்க அடிக்கடி வந்தா அப்படியே ஆகிடும்! அதனால் அடிக்கடி வரணும்-னு அன்புடன் அழைக்கிறேன்! நன்றி வித்யா! :)

    பிகு:
    என‌க்கு ந‌ன்றாக‌த் தெரியும் என்பது இது தான்:
    அடியேனுக்கு ஒன்றும் தெரியாது என்பதே அது! :)
    கந்தரநுபூதி சொல்வது போல், யாமோதிய கல்வியும்....தாமே பெற வேலவர் தந்ததினால்!
    இங்கு அடியேன் மட்டும் பதிவில் பேசுவதை விட,
    அனைவரும் பின்னூட்டத்தில் பேசிக், கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  41. @Raghav
    Vidya's was a casual observation. Nothing to get excited about it. Feedback is the best tool for process alignment. Ensoy maadi!

    உடையவரை கற்பனை எல்லாம் செய்து வைத்து இருக்கீங்களா? ஆகா! அப்போ ஒரு சினிமா படம் எடுத்தால், உங்களை இயக்குனராப் போடலாம்-னு சொல்லுங்க! சூப்பரு! :)

    ReplyDelete
  42. ///உடையவரை பற்றி ரவி அண்ணா மூலமாக உருவகப் படுத்தி வைத்துள்ளேன்.. “காரேய் கருணாஇ ராமானுசன்” சம்பந்தம் உள்ள ரவி அண்ணாவின் பதிவில் தான் அறிந்த விஷயம் என்ற தொனி இருப்பதாக உங்களுக்கு பட்டது ஆச்சர்யமே../// Raghav

    எனக்கு அப்படி தெரிந்ததால் சொன்னேன். ரவிஷங்கர் என் பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதால் அவருக்கு என் மனதில் பட்டதை சொன்னேன்.

    ராகவ்! உங்களுக்கு தோன்றியது எனக்கு தோன்ற வேண்டுமென்பது இல்லையல்லவா? அதே போல் எனக்கு தோன்றியது பிறருக்கு தோன்ற வேண்டுமென்பதும் அவசியமில்லை.

    நல்ல பதிப்பில் எனக்கு தென்பட்ட ஒரு பிழையை அல்லது குறையை தெரிவித்தேன். அவ்வளவுதான். கூடுமானவரை யார் மனதும் புண்படாமல் என் கருத்தை தெரிவிக்க நினைத்தேன்.

    என்னை போல ஒரு சிலர் பார்வையில் அப்படி தெரிவது எழுதுபவருக்குத் தெரிவது நல்லதுதானே! :)

    ReplyDelete
  43. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    Vidya's was a casual observation. Nothing to get excited about it. Feedback is the best tool for process alignment. Ensoy maadi! //

    ரவி அண்ணா..Enjoy பண்ணிக்கிட்டு தானே இருக்கேன். :).. பின்னூட்டம் போடும் போது.. இரு சிரிப்பான் போட மறந்துட்டேன்.. மத்தபடி ஒண்ணுமில்லை..

    உங்களாஇப் பத்தி ஒருத்தர் சொன்னா.. உங்களைத் தானே சொல்றாங்கன்னு சும்மா போக முடியுமா. :)).. அதான்..

    ReplyDelete
  44. //vidhya (vidhyakumaran@gmail.com) said...
    Raghav
    எனக்கு அப்படி தெரிந்ததால் சொன்னேன். ரவிஷங்கர் என் பேச்சை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதால் அவருக்கு என் மனதில் பட்டதை சொன்னேன்.//

    வித்யாகுமரன், உங்கள் கருத்தை பார்த்து என் மனதில் உடனே சொல்ல வேண்டும் என்று தோன்றியதை சொன்னேன்.. அவ்வளவு தான்... :)
    ஒரு சிரிப்பானை மறந்து விட்டேன்.. ரவி அண்ணா பதிவில் ஆரோக்கியமான விவாதங்கள் மட்டும் தான் நடக்கும்.. அப்பப்போ கும்மியும் நடக்கும்.. :)

    ReplyDelete
  45. //நல்ல பதிப்பில் எனக்கு தென்பட்ட ஒரு பிழையை அல்லது குறையை தெரிவித்தேன். அவ்வளவுதான். கூடுமானவரை யார் மனதும் புண்படாமல் என் கருத்தை தெரிவிக்க நினைத்தேன்.

    என்னை போல ஒரு சிலர் பார்வையில் அப்படி தெரிவது எழுதுபவருக்குத் தெரிவது நல்லதுதானே! :) //

    ரொம்ப பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. :).. நான் உங்கள் கருத்துக்கு மறுப்பு மட்டுமே தெரிவித்தேன்.. வேறு ஒன்றும் இல்லை.. :) அடிக்கடி வாங்க.. :)

    ReplyDelete
  46. திருவரங்கக் கோயிலொழுகு நூல் கிடைக்குமா? எங்கு கிடைக்கும்? என்ன விலை?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP